- சுவனப்பிரியன்

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது' - குர்ஆன் - 17 :37

Wednesday, April 26, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இஸ்லாத்துக்கும், இந்து மதத்துக்கும் உள்ள வேற்றுமைகள் நமக்கு முன்பே தெரியும். இரணடு மார்க்கத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை சில ஆதாரங்களோடு பார்ப்போம். இஸ்லாமியனான உனக்கு இந்து மத ஆராய்ச்சி ஏன்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நான் பிறந்த மண்ணில் தோன்றிய மதம். நான்கைந்து தலைமுறைக்கு முன்பு என் மூதாதையர் பின் பற்றிய மதம். இதைப் பற்றி நான் ஆராயாமல் வேறு யார்தான் ஆராய முடியும்?

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14 :4

'இது முந்தய வேதங்களிலும் இப்றாகிம் மூஸாவுக்கு அருளிய வேதங்களிலும் உள்ளது.'

-குர்ஆன் 87 : 18,19

மேற் கண்ட வசனங்களின் மூலம் உலகம் முழுவதற்கும் கொடுக்கப் பட்ட வேதங்களின் உரிமையாளன் ஒருவனே என்பது விளங்குகிறது. அந்த உரிமையாளனை இறைவன், கடவுள்,அல்லாஹ், கர்த்தர் என்று பல்வேறு பெயர்களில் அழைத்து வருகிறோம்.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.'

-குர்ஆன் 2 :75

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'

-குர்ஆன் 4 : 46

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களை மாற்றி விட்டனர் என்று சொல்லும் குர்ஆன் மாற்றப் பட்ட அந்த வேதங்களை பின் பற்றக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறது.நம் நாட்டில் இருக்கும் பிராமணர்களும் இஸ்ரவேல் சமூகத்திலிருந்து தோன்றிய ஒரு பிரிவினர்கள் தான். எகிப்து,ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாட்டு பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள், தோற்றம் போன்றவை நம் நாட்டு பிராமணர்களை ஒத்திருப்பதன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே தான் பிராமணர்களுக்கு எப்போதுமே யூதர்களின் மீது ஒரு பிரியம் இருக்கும். திரு டோண்டு அவர்களின் பதிவுகளிலிருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹிந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது?

சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதம் ஆகையால் சிந்துக்கள் என்றாகி நாளடைவில் மறுவி இந்துக்கள் என்றாகி விட்டது. இதைத்தான் மொகலாயர்களின் குறிப்புகளிலிருந்தும், நேருவின் குறிப்பிலிருந்தும், மற்ற ஆதாரங்களின் மூலமும் அறிகிறோம். ஹிந்து என்ற பெயர் தாங்கிய இந்த மதம் ஆரம்ப காலங்களில் ஒரு இறைவனைத் தான் வழிபடச் சொல்கிறது. நாளடைவில் ஊர் பெரியவர்கள்,மகான்கள்,அரசர்கள் அனைவரையும் கடவுளின் அவதாரமாக்கி, இன்று நாம் பார்க்கும் பல ஆயிரம் தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். இதற்கு ஒரு சில ஆதாரங்களை இந்து மத கிரந்தங்களிலிருந்தே எடுத்தாய்வோம்.

உபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறை வேதமாகிய குர்ஆனோடு எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆனின் சிறிய அத்தியாயமாகிய 'குல ஹீ அல்லாஹீ அகத்' என்று வரும் வசனங்களை மனனம் செய்யாத முஸ்லிம்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபல்யமான ஓரிறைக் கொள்கையையும் உளத் தூய்மையையும் பேசும் இந்த அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பைப் பாருங்கள்:

'இறைவன் ஒருவன் என்று முகம்மதே கூறுவீராக!'
'இறைவன் தேவையற்றவன்'
'யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை'
'அவனுக்கு நிகராக யாருமில்லை'


குர்ஆன் - 112 :1,2,3,4

'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'

-குர்ஆன் 41 ;37

'குறிப்பிட்டுச் சொல்லப் படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'

-குர்ஆன் 76 : 1,2

'அவனைக் கண்கள் பார்க்காது.அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்.'

-குர்ஆன் 6 : 103

மேற் கூறிய வசனங்கள் எந்த அளவு முந்தய வசனங்களோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். அனைத்தையும் சொன்னது ஒரே இறைவன் தான் என்பது நமக்கு விளங்குகிறது. ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.

நேரம் கிடைக்கும் போது மற்ற ஆதாரங்களையும் அலசுவோம். இந்து மத வேதங்களில் வசன எண்கள் அல்லது பொருள் ஏதும் தவறாக இருந்து அதனைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

சுவனப் பிரியன்.

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இஸ்லாத்துக்கும், இந்து மதத்துக்கும் உள்ள வேற்றுமைகள் நமக்கு முன்பே தெரியும். இரணடு மார்க்கத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை சில ஆதாரங்களோடு பார்ப்போம். இஸ்லாமியனான உனக்கு இந்து மத ஆராய்ச்சி ஏன்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நான் பிறந்த மண்ணில் தோன்றிய மதம். நான்கைந்து தலைமுறைக்கு முன்பு என் மூதாதையர் பின் பற்றிய மதம். இதைப் பற்றி நான் ஆராயாமல் வேறு யார்தான் ஆராய முடியும்?

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14 :4

'இது முந்தய வேதங்களிலும் இப்றாகிம் மூஸாவுக்கு அருளிய வேதங்களிலும் உள்ளது.'

-குர்ஆன் 87 : 18,19

மேற் கண்ட வசனங்களின் மூலம் உலகம் முழுவதற்கும் கொடுக்கப் பட்ட வேதங்களின் உரிமையாளன் ஒருவனே என்பது விளங்குகிறது. அந்த உரிமையாளனை இறைவன், கடவுள்,அல்லாஹ், கர்த்தர் என்று பல்வேறு பெயர்களில் அழைத்து வருகிறோம்.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.'

-குர்ஆன் 2 :75

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'

-குர்ஆன் 4 : 46

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களை மாற்றி விட்டனர் என்று சொல்லும் குர்ஆன் மாற்றப் பட்ட அந்த வேதங்களை பின் பற்றக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறது.நம் நாட்டில் இருக்கும் பிராமணர்களும் இஸ்ரவேல் சமூகத்திலிருந்து தோன்றிய ஒரு பிரிவினர்கள் தான். எகிப்து,ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாட்டு பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள், தோற்றம் போன்றவை நம் நாட்டு பிராமணர்களை ஒத்திருப்பதன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே தான் பிராமணர்களுக்கு எப்போதுமே யூதர்களின் மீது ஒரு பிரியம் இருக்கும். திரு டோண்டு அவர்களின் பதிவுகளிலிருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹிந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது?

சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதம் ஆகையால் சிந்துக்கள் என்றாகி நாளடைவில் மறுவி இந்துக்கள் என்றாகி விட்டது. இதைத்தான் மொகலாயர்களின் குறிப்புகளிலிருந்தும், நேருவின் குறிப்பிலிருந்தும், மற்ற ஆதாரங்களின் மூலமும் அறிகிறோம். ஹிந்து என்ற பெயர் தாங்கிய இந்த மதம் ஆரம்ப காலங்களில் ஒரு இறைவனைத் தான் வழிபடச் சொல்கிறது. நாளடைவில் ஊர் பெரியவர்கள்,மகான்கள்,அரசர்கள் அனைவரையும் கடவுளின் அவதாரமாக்கி, இன்று நாம் பார்க்கும் பல ஆயிரம் தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். இதற்கு ஒரு சில ஆதாரங்களை இந்து மத கிரந்தங்களிலிருந்தே எடுத்தாய்வோம்.

உபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறை வேதமாகிய குர்ஆனோடு எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆனின் சிறிய அத்தியாயமாகிய 'குல ஹீ அல்லாஹீ அகத்' என்று வரும் வசனங்களை மனனம் செய்யாத முஸ்லிம்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபல்யமான ஓரிறைக் கொள்கையையும் உளத் தூய்மையையும் பேசும் இந்த அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பைப் பாருங்கள்:

'இறைவன் ஒருவன் என்று முகம்மதே கூறுவீராக!'
'இறைவன் தேவையற்றவன்'
'யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை'
'அவனுக்கு நிகராக யாருமில்லை'


குர்ஆன் - 112 :1,2,3,4

'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'

-குர்ஆன் 41 ;37

'குறிப்பிட்டுச் சொல்லப் படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'

-குர்ஆன் 76 : 1,2

'அவனைக் கண்கள் பார்க்காது.அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்.'

-குர்ஆன் 6 : 103

மேற் கூறிய வசனங்கள் எந்த அளவு முந்தய வசனங்களோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். அனைத்தையும் சொன்னது ஒரே இறைவன் தான் என்பது நமக்கு விளங்குகிறது. ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.

நேரம் கிடைக்கும் போது மற்ற ஆதாரங்களையும் அலசுவோம். இந்து மத வேதங்களில் வசன எண்கள் அல்லது பொருள் ஏதும் தவறாக இருந்து அதனைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

சுவனப் பிரியன்.

பூமி உங்களுக்கு தொட்டில்!

பூமி உங்களுக்கு தொட்டில்!

'அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான்.'

-குர்ஆன் - 20 :53

'பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும நாம் ஆக்கவில்லையா?'

-குர்ஆன் - 78 :6,7

திருக் குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்க ராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப் படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்க ராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை.

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும் நித்திரை தரக் கூடியதாகவும் இருக்கும்.

பூமி வேகமாக சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத் தான் இறைவன் குறிப்பிடுகின்றான்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு அமைப்பு இருப்பதை எல்லாம் மனிதனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

----------------------------------------

'மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?'

-குர்ஆன் - 78 : 6,7

இது பற்றி வரும் வேறு வசனங்கள்: 15 :19, 16 :15, 21 :31, 27 :61, 41 :10, 50 :7, 78 :7, 79:32.

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான்.

ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப் படுவதே முளைகளாகும். இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப் பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.

வேகமாக பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருடகளும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.

இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப் படுவார்கள். கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானபல் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப் பட வேண்டும். அதைத்தான் மலைகள் செய்கின்றன.

ஆங்காங்கே நிறுவப் பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும் கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.

பூமி முதலில் உருவாகி பிறகு தான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மலைகள் முளைகளாக நாட்டப் பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.

முதல் இரண்டு நாட்களில் பூமியைப் படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்ததாகவும் திருக் குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக் குர்ஆன் 41:10)

இது போன்ற அறிவியல் உண்மைகளை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழதப் படிக்கத் தெரியாத முகமது நபியால் தன் சொந்த கற்பனையில் இந்த குர்ஆனை உருவாக்கியிருக்க முடியுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறதல்லவா?

நன்றி : திரு பி.ஜெய்னுல்லாபிதீன்

கடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு

கடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு

'அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும் கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.

குர்ஆன் - 25 : 53

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. அவை ஒன்றையொன்று கடக்காது.

குர்ஆன் - 55 : 19

'(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.'

குர்ஆன் - 27 :62

இரண்டு கடல்கள் சேரக் கூடிய இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பையும் தடையையும் ஏற்படுத்தியிருப்பதாக மேற்ச் சொன்ன வசனங்கள் அமைந்துள்ளன.

அரபிக் கடலையும் செங் கடலையும் பார்க்கும் போது இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இரண்டின் வண்ணத்திலும் வித்தியாசம் தெரியும். ஜோர்டான் நாட்டு எல்லையில் அமைந்துள்ள DEAD SEA சாக் கடல் இதற்கு மேலும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கடலில் உப்பின் அடர்த்தி மிகவும் அதிகம்.இது போல் உலகில் உள்ள பல கடல்களின் நிறம் சுவை அதிகம் மாறுபட்டிருக்கிறது. நம் நாட்டில் முக்கடல் சங்கமம் ஆகும் கன்னியாக் குமரியிலும் இதே போன்ற வேறுபாட்டை நாம் காண முடியும்

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமம் ஆகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும் அடர்த்தியிலும் உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

'அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றெரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போதுஅதை கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.

குர்ஆன் - 24 : 40

இந்த வசனத்தில் கடலைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும், அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.

கடலின் மேற் பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது. கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது. எனவே இந்த வசனமும், இதற்கு முன்பு சொன்ன வசனங்களும் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பது மேலும் நிரூபணம் ஆகிறது.

பூமியின் எடை குறைந்து வருகிறது!

பூமியின் எடை குறைந்து வருகிறது!

'அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம்'
-குர்ஆன் 50;4

'அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்'
-குர்ஆன் 71;17

மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற உண்மை சொல்லப் பட்டிருக்கிறது.இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அதற்குரிய எடை வெளியிலுருந்து கிடைப்பதில்லை. பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக,மிருகங்களாக,மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற,வளருகின்ற எல்லாப் பொருட்களுமே தங்களின் எடையை பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.

எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் படைத்த போது இருந்த எடை தான் இருக்கும்.இதற்கு மாற்றமாக பூமியின் எடை கூடினால் பவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைந்து மற்ற கோள்களோடு மோதும் அபாயமும் உண்டு. மனிதன் குரங்கு போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் மூலம் மண்தான் என்ற உண்மையும் வெளியாகிறது. பரிணாமத் தத்துவம்(மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தான் -டார்வின்) பொய் என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கின்றன என்ற அறிவியல் உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கியதன் முலம் இது இறைவனின் வேதம்தான் என்பது நிரூபணம் ஆகிறது.

'மனிதர்களுக்கு தங்குமிடமும் ஒப்படைக்கப் படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்துக்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்'

-குர்ஆன்6:98

இந்த வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும் ஒப்படைக்கப் படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப் படக் கூடிய இடம் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஒப்படைக்கப் படும் இடம் என்று தேர்ந்தெடுத்து பயன் படுத்தியிருக்கின்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.

மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பெடுத்த போதுஇருந்த அளவை விட பலப் பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கிறான். அவன் பிறப்பெடுக்கும் போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிலிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.

மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள்,பருப்புகள்,இன்ன பிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான். அய்ம்பது கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து அய்ம்பது கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த அய்ம்பது கிலோ எடையைப் பெற்றிருக்கிறானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கப் படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடமையான ஒரு பொருளாக இருக்கிறான்.ஏனெனில் அங்கிருந்துதான் இவன் எடுக்கப் பட்டிருக்கிறான் என்பது கருத்து.மனிதன் பூமியிலுள்ள பொருளை நேரிடையாக ச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி ஒப்படைக்கப் படுகின்ற இடம் என்ற சொல்லை இறைவன் மிகப் பொருத்தமாக பயன் படுத்தியிருக்கிறான். இதுவும் ஒரு அறிவியல் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Thanks Mr P. Jainullabdeen.

திருக் குறள் - எனக்குள் எழும் கேள்விகள்!

திருக் குறள் - எனக்குள் எழும் கேள்விகள்!

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்' - குர்ஆன் 14;4

'மனிதர்களாகிய நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும். இது முந்தைய வேதங்களிலும், இப்றாகிம்,மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. - குர்ஆன் 87- 16,17,18

மேற் கண்ட குர்ஆன் வசனத்தின் படி செம் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியிலும் நிச்சயமாக வேதமும், தூதரும் வந்திருக்கலாம். அது திருக் குறளும், திருவள்ளுவரும் ஆக கூட இருக்கலாம். ஆனால் கடைசி வேதமான குர்ஆன் இறங்கிய பிறகு இதற்கு முன் அருளப் பட்ட வேதங்களின் சட்டங்களை பின் பற்ற வேண்டும் என்ற கட்டளை முஸ்லிம்களுக்கு இடப் படவில்லை. அவர்களை கட்டுப் படுத்தக் கூடிய வேதம் குர்ஆன் ஒன்றுதான். இனி மேலே திருக் குறளைப் பற்றிப் பார்ப்போம்.

நன்றி மறப்பது நன்றன்று - நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் - ஆறாதே
நாவினால் சுட்ட வடு

மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன்தந்தை
என்னோற்றான் கொல் என்சொல்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் - தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

படிக்கும் காலங்களில் மனனம் செய்ததை எடுத்து எழுதியுள்ளேன். ஏதும் தவறுகள் இருப்பின் திருத்தி வாசிக்கவும. இது போன்ற பல குறள்களை நான் படிக்கும் போது இவ்வளவு எளிமையாக இரண்டு அடிகளில் சொல்ல வந்த கருத்தை திருக்குறள் எவ்வளவு அழகாக விளக்குகிறது என்று வியந்து போவேன். அதிலும் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதன் சட்டங்கள் பலதும் அமைந்துள்ளது இதற்கு மேலும் சிறப்பு. திருக்குறளின் பல கருத்துகள் குர்ஆனோடு ஒத்துப் போவதையும் பல இடங்களில் பார்க்கிறோம். குர்ஆனில் இறைவன் சொல்லக் கூடிய பல உதாரணங்கள் திருக் குறளிலும் வருவதைப் பார்த்து நான் சில நேரம் ஆச்சரியப் பட்டுப் போவேன்.

இது போன்று எண்பது சதவீத குறள்கள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும் படியாக அமைந்துள்ளது. இதில் குறைந்த எண்ணிக்கையில் சில குறள்கள் உலகத்தார் அனைவருக்கும் பொருந்தாததாகவும், சில அறிவியல் கருத்துக்களோடு மோதுவதாகவும் உள்ளது.எனவே அது போன்று வரக் கூடிய கருத்துக்கள் திருவள்ளுவருக்குப் பிறகு சேர்க்கப் பட்ட இடைச் செருகலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. ஒருக்கால் என் எண்ணம் தவறாக கூட இருக்கலாம் பைபிள்,தௌராத்,ஜபூர் போன்ற இதற்கு முன் அருளப் பட்ட வேதங்களை நம்பச் சொல்லும் குர்ஆன், அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து மாற்றப் பட்டதால் அதை பின் பற்றக் கூடாது என்றும் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறது.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளை செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.' - 2;75

'இது இறைவனிடமிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவன் பெயரால் பொய் கூறுகின்றனர்.' - குர்ஆன் 3;78

மேற்கண்ட வசனங்களின் மூலம் இறை வேதங்கள் பலவும் மனிதக் கரங்களால் மாசு படுத்தப் பட்டுள்ளன என்று விளங்க முடிகிறது. ஆது போன்று நான் நினைக்கும் ஒரு சில குறள்களை பட்டியலிடுகிறேன். குறளை புரிந்து கொண்ட விதத்தில் ஏதும் தவறுகள் என்னிடம் தென் பட்டு நண்பர்கள் சுட்டிக் காட்டினால் தவறை திருத்திக் கொள்கிறேன்.

தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

வேறு தெய்வங்களை தேடி அலையாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதி வாழும் மனைவி நினைத்தால் மழை வேண்டும் போது அப் பெண்ணினால் பெய்விக்கச் செய்ய முடியும்.
இது பெண்ணடிமையை வலியுறுத்துகிறது. கணவன் அவன் எவ்வளவு அரக்கனாக இருந்தாலும் அவனை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்று கூறுவதை நடை முறைப் படுத்த இயலாது. இத்தகைய பெண்களால் மழை பெய்விக்க முடியும் என்றால் உலகில் வறட்சி நிலவும் இடங்களில் இவர்களை பயன் படுத்திக் கொள்ளலாம் அல்லவா! இறைவனை வணங்க வேண்டும் என்று பல குறள்களில் சொல்லும் அறிவுறுத்தும் வள்ளுவர் இந்த குறளில் கணவனை வணங்கினாலே போதும் என்று தன் கருத்திலேயே மாறு படுகிறார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.
உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.
சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.
பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.
அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.
புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.
விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.

இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை,சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.

அம்பேத்காரும் இஸ்லாமும்!

அம்பேத்காரும் இஸ்லாமும்!
் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'’ என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.
(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)
நன்றி: கீற்று
// இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள்.//

உண்மைதான்! கை வைப்பதற்கு என்ன அவசியம் வந்து விட்டது? இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் மனித சட்டங்கள் அல்லவே!குர்ஆன் நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்று நம்புபவர்கள் முஸ்லிம்கள். இந்த நாட்டுக்கு, இந்த மக்களுக்கு,அல்லது இந்த காலத்துக்கு குறிப்பிட்ட இந்த சட்டம் பொருந்தாது என்று ஏதாவது ஒன்றைக் காட்ட முடியுமா? பிறகு மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்திருக்கிறது? ஜீவனாம்சம்,தலாக் போன்ற பிரச்னைகள் கூட முஸ்லிம்கள் குர்ஆனை சரியாக பின் பற்றாததினால் வந்த கேடுதானே ஒழிய, இதிலும் குர்ஆனை குறை சொல்ல முடியாது.

// இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும்.//

இதுவும் தவறாக பெரியாரால் விளங்கப் பட்டிருக்கிறது. குர்ஆனுக்கும் முகமது நபியின் போதனைக்கும் மாற்றமாக எவ்வளவு பெரிய மௌலானா தன் கருத்துக்களைச் சொன்னாலும் தங்கள் காலடியில் போட்டு மிதித்து விடுவார்கள் முஸ்லிம்கள். முகமது நபிக்குப் பிறகு ஆன்மீகத் தலைமை என்று ஒன்று கிடையாது. கிறித்துவத்துக்கு ஒரு போப், இந்துக்களுக்கு சங்காராச்சாரியார் போன்று முஸ்லிம்களுக்கும் மௌலானாக்கள் என்று தவறாக நினைத்து விட்டார் பெரியார். அன்றே அம்பேத்கார் விருப்பத்துக்கு விட்டிருந்தால் பல லட்சம் ஹரிஜனங்கள் அன்று பலனடைந்து இருப்பார்கள். அதன் முழுபலனையும் இன்று அவர்களின் பிள்ளைகள் அடைந்திருப்பார்கள்.

ஆனால் இஸ்லாத்தைப் பற்றி அவர் கொண்டிருந்த கொள்கை பிறகு மாறுதலடைந்தது.தமிழ் நாட்டில் முதல் முதலாக மதம் மாறிய கிராமம் - 63 ஆண்டுகளுக்கு முன்னால் -சீலயம்பட்டி கிராமம்தான். அரிஜனங்கள் கூட்டாக இஸ்லாத்தை தழுவிய போது அந்த கிராமத்துக்கு பெரியார் சென்றிருந்தார். அவர்களை நோக்கி 'நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்நததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கி விட்டு மனிதனாகி இருக்கிறீர்கள். நான் எந்த ஊருக்கு பிரச்சாரத்துக்கு சென்றாலும் பெட்ரோலுக்கான காசை அந்த ஊர்க் காரர்களிடம் வாங்கி விடுவேன்.ஆனால் இன்று என் சொந்த செலவில் உங்களைப் பார்க்க வந்துள்ளேன். இஸ்லாத்துக்கு மாறிய உங்கள் அனைவரையும் பார்த்து மிகுந்த சந்தோஷமடைகிறேன்' என்று பெரியார் சொன்னார்.

'கடவுள் இல்லை' என்ற ஒரு கொள்கை தான் பெரியாரை இஸ்லாத்திலிருந்து தூரமாக்கி வைத்திருந்தது. இந்த முடிவுக்கு வந்தது கூட தன் சொந்த மதத்தின் மேல் உள்ள வெறுப்பினால் தான். இந்த ஒரு கொள்கையை விடுத்து மற்ற நடவடிக்கை எல்லாம் பெரியாரை ஒரு இஸ்லாமியராகவே மாற்றி விட்டது.

ஆனால் அவரின் சீடர்கள் இன்று அந்த பெரியாருக்கு ஊருக்கு ஊர் சிலைகளை எழுப்பி வருகிறார்கள். மாலைகளும் போட ஆரம்பித்தாகி விட்டது. உயிரற்ற சிலைக்கு மாலை போட்டால் அந்த சிலையால் அதை உணர முடியுமா? என்று இந்த பகுத்தறிவாளர்கள் சிந்திப்பதில்லை. இன்னும் சூடம் சாம்பிராணிதான் பாக்கி. சில நாட்களுக்குப் பிறகு அதுவும் ஆரம்பமாகி விடும். நாத்திகத்தை போதித்த புத்தர் எப்படி கடவுளாக்கப் பட்டாரோ அதே போல் பெரியாரும் நம் பேரப் பிள்ளைகளின் காலத்தில் கடவுளாக்கப் படும் அபாயம் உள்ளது. திரு கி. வீரமணி அவர்கள் இதை கவனித்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

'திருவள்ளுவர் ஒரு தத்துவ ஞானி, பொருளாதார மேதை. நான் நாத்திகனாயினும் வள்ளுவன் என்ற தெய்வத்தை ஏற்றுக் கொள்கிறேன்'
- கருணாநிதி உரை, முரசொலி, 1-1-2000

நம் நாட்டில் இத்தனை தெய்வங்கள் வந்ததன் காரணம் இப்போது விளங்குகிறதல்லவா! பகுத்தறிவாதியான கலைஞருக்கே இப்படி தடுமாற்றம் என்றால் படிக்காத பாமரனுக்கு சொல்லவா வேண்டும். வள்ளுவர் கோட்டம், அண்ணா அறிவாலயம் என்று வணங்குதற்கு ஏற்றாற்போல் வழி செய்தாகி விட்டது. இனி ஸ்டாலின் காலத்தில் சூடம்,சாம்பிராணி ஏற்ற வேண்டியதுதான் பாக்கி.

குர்ஆனில் மனிதக் கைகள் புகாததனால்தான் மேலே சொன்னது போன்ற குளறுபடிகள் எதுவும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது.

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8

திருக் குர்ஆனின் 13;8 வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது.நாம் சாப்பிடும் உணவுகளையும் ஜீரணித்துக் கொண்டு பிறகு கழிவாக வெளியேற்ற முயற்ச்சிக்கிறது. நம் கண்களை எடுத்துக் கொள்வோம். கண்களில் ஏதேனும் தூசிகள் விழுந்து விட்டால்அதை எப்படியாவது வெளியேற்றவே கண் முயற்ச்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் தனக்குள் விந்துத் துளியை கருவாக வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்ச்சிக்கிறது. இவ்வாறு முயற்ச்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகிறது.இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ் வசனம் கூறுகிறது.

'ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது' என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இயற்கைக்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் குழந்தையை வெளியேற்றுவதற்கு முயற்ச்சிக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தை நானே தீர்மானித்தேன் என்று இறைவன் கூறுகிறான்.

அன்னிய பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இயற்கைக்கு மாறாக இறைவன் தன் வல்லமையை புகுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயித்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி தன் கற்பனையால் இத்தகைய அறிவியல் உண்மைகளை சொல்ல முடியாது. இது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

Friday, April 21, 2006

சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்!

சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்!

கேள்வி : பௌத்த - சமண சமயங்களை இந்து மதம் வீழ்த்தியதற்கும், இஸ்லாம் கிறித்தவ சமயங்கள் இந்து மதத்தை வீழ்த்துவதற்கும் என்ன வித்தியாசம்?

சோ பதில் : இந்து மதம் - பௌத்த, சமண மதங்களை வாதம் செய்து வீழ்த்தியது. இஸ்லாம்,கிறிஸ்தவ சமயங்கள் மதமாற்றம் செய்து இந்து மதத்தை வீழ்த்துகின்றன.

துக்ளக் - 26.10.2005

மக்களை மடையர்களாக கருதி மனம் போன படி கருத்துக் கூறி உண்மைகளை உருக்குலைத்து, பொய்மைகளைப் புகழேணியில் ஏற்றலாம் என்பது சோ கண்டு வரும் சொப்பனம்.

பௌத்த சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்பது உண்மையின் கலப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத இமாலயப் பொய். எவரும் சொல்லத் துணியாத பொய்.

இந்து மதம் பௌத்த சமண சமயங்களோடு அறிவுப் பூர்வமாக, நளினமான முறையில் த்ததுவ அடிப்படையில் விவாதம் செய்து மேற்படி மதங்களைப் பொய்ப்பித்தது போலவும்: இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களில் தத்துவ வறட்சி இருப்பதால், அறிவு பூர்வமான விவாதங்கள் மூலம் பிற மதத்தினரை ஈர்க்காமல் ஆசை காட்டி மதம் மாற்றம் செய்வது போலவும் ஒரு போலிச் சித்திரத்தைத் தீட்டுகிறது துக்ளக் சோவின் துடுக்குப் பேனா...

இந்து மதத்தின் கொள்கை எது? என்று கேட்டால் துக்ளக் சோவால் பதில் கூற முடியுமா? அப்படியே அவர் பதில் சொன்னாலும் அதை எல்லா பிரிவு இந்துக்களும் ஏற்பார்களா?

இந்து மதம் என்ற பெயரே பிற் காலத்தில் வைக்கப் பட்ட பெயர்தான். வைதீக மதங்களான சைவம் வைணவம் ஆகியவற்றோடு சிறு தெய்வ வழிபாடுகளையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்கி 'இந்து மதம்' எனப் பிற்காலத்தில் ஒரு பொதுப் பெயர் சூட்டப் பட்டது.

பௌத்தத்தையும் சமணத்தையும் இந்து மதம் வாதங்களின் மூலம் வீழ்த்தியது என்பதில் அணுவளவும் உண்மையில்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்து மதம் சமணத்தையும் பௌத்தத்தையும் வன்முறையின் முலம் அழித்ததை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தமது 'சமணமும் - தமிழும்' என்ற நூலில் வரலாற்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏராளமான பௌத்த ஊர்கள், பக்தி இயக்கம் பரப்பிய வன்முறையால் அழிக்கப் பட்டுள்ளதை மிகத் துல்லியமான ஆதாரங்களோடு புலவர் ஜெ. ஆனந்த ராசன் தமது 'பௌத்தமும், பழந் தமிழ்க் குடி மக்களும்' என்ற நூலில் விளக்கியுள்ளார்.

குருவிக் கரம்பை வேலு எழுதிய 'சிந்து முதல் குமரி வரை' என்ற நூலும் ஆரியர்களின் அடாவடிகளை விவரிக்கிறது.

நாகப் பட்டினத்தில் இருந்த மிகப் பெரிய புத்த விகாரத்தில் தஙகத்தாலான புத்தர் சிலை இருந்துள்ளது.இதனை வைணவப் பிரிவைச் சேர்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இரவோடிரவாகச் சூறையாடினார். அப்படி சூறையாடிய தங்க புத்தர் சிலையையும் ஆபரணங்களையும் எடுத்துச் செல்லும் போது வழியிலேயே பொழுது விடிந்து விட்டது. ஆகவே பொருள்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்தனர். அந்த ஊர் தான் இப்போது சிக்கலுக்கும்- மஞ்சக் கொல்லைக்கும் இடைப் பட்ட 'பொரவச் சேரி' என்றழைக்கப் படும் முஸ்லிம் ஊராகும். பொருள் வைத்த சேரி - பொரவச்சேரி என மருவி விட்டது.

நாகை புத்த கோவிலை சூறையாடிய பணத்தில்தான் ஸ்ரீரங்கம் கோவில் புணரமைக்கப் பட்டது என்பதை 'குரு பரம்பரைப் பிரவாகம்' என்ற வைணவ நூலும் குறிப்பிடுகிறது.

காஞ்சிபுரத்தில் வன்முறைகள்

பௌத்த நகரமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தில் வன்முறையால் பௌத்த அடையாளங்கள் அடியோடு அழிக்கப் பட்டுள்ளன. காஞ்சிபுரத்தின் கச்சீஸ்வர் கோவில், கைலாச நாதர் கோவில் ஆகியவை பௌத்த கோவில்களாக முன்பு இருந்தவை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

காஞ்சியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்ரவர்த்தி எழுப்பிய பிரம்மாண்டமான புத்த தூபி இருந்ததாக கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

சைவ வன்முறைகள்

சீர்காழி அருகே ஆறாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றி கொடுமையாக கொலை செய்த பெருமை சைவத்திற்கு உண்டு.

சோ குறிப்பிடும் இந்து மத வாதம் எப்படிப் பட்டதென அறிந்தால் மிரண்டு போக வேண்டும். சமணர்களோடு சைவர்கள் அனல் வாதம், புனல்வாதம் என இருவகை வாதங்களை நிகழ்த்துவார்கள்.'உண்மைக்கு அழிவில்லை' எனக் கூறும் சைவர்கள் சமண நூல்களை தீயிலிடச் சொல்வார்கள். எல்லா நூலும் தீயில் எரியும் சமண நூலும் எரியும். தீயில் எரிந்து போனதால் சமணம் உண்மையல்ல எனத் தீர்ப்பாகும். சைவர்கள் தங்கள் நூல்களைத் தீயில் போடுவதில்லை. இது அனல்வாதம்.

காட்டாற்று வெள்ளத்தில் புத்தகங்களை வீச வேண்டும். எது எதிர் நீச்சல் போட்டுக் கரையேறுகிறதோ அது சத்தியம். இது புனல் வாதம். சமண நூல்களை எரிவார்கள். அவை ஆற்றோடு போய் விடும். அவை பொய்யானவை என உறுதியாகி விடும். சைவம் சமணம் இவற்றிற்கிடையேயான வாதத்தில் சமணம் பொய்யானது என நிரூபணமாகி விட்டதால் சைவத்தைப் பரிசோதிக்க அவசியமில்லை. வாதத்தில் தோல்வியடைந்த சமணர்கள் கழுமரத்தில் (கூர்மையான ஈட்டி) ஏற்றிக் கொல்லப் படுவார்கள்.

சிவத் தொண்டர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறை விளக்கும் பெரிய புராணம்:

'வாதில் அமணர் வலி தொலைய வண் கழுவில் தைத்த மறையோன்'

சமணர்களை வாதத்தில் வென்று, அவர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்ற மறையோன் திருஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகிறது.

கழுத்தை அறுக்கக் கட்டளையிடும் கவிதை

சமணர்களையும், பௌத்தர்களையும் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யுமாறு ஒரு பக்தி இலக்கியப் பாடல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற வைணவ நூலில் திருவரங்கப் பதிகம் என்ற பகுதியின் 879 ஆம் பாடலைப் பாருங்கள்.

'வெறுப்பொடு சமணர், முண்டர்
விதியில் சாக்கியர் நின்பால்
பொறுப்பரி யங்கள் பேசில்
போவதே நோய தாகிக்
குறிப்பெனக் கடையு மாஇல்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
அரங்கமா நகருளானே'

'வெறுக்கத் தக்க சமணர்களும், பௌத்தர்களும் உன்னிடம் வந்து பொறுப்பற்ற செய்திகளைப் பேசினால் அவர்களின் தலைகளை அறுத்து விடுவதே நல்லது. அரங்கமா நகரில் உள்ளவனே அது உன் கடமை'

- இது ஆன்மீக வாதமா? இல்லை பயங்கர வாதமா?

தேவாரத்தில் 360 க்கும் மேற்பட்ட பாடல்கள் பௌத்த, சமண சமயத்தவரை மிகக் கீழ்த்தரமாக வர்ணிக்கின்றன.

இவை யாவும் இன்றைய தலை முறைக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் பவுத்த,சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்கிறார் சோ.

வைதீக மதம் வாதம் செய்ததா? அல்லது பிற மதத்தினரை வதம் செய்ததா? என்பதை வரலாற்றெங்கிலும் காண முடிகிறது.

இஸ்லாமும், கிறித்தவமும் இந்துக்களை மதம் மாற்றுகின்றன எனக் கூக்குரலிடும் சோ, ஏன் மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதை சிந்திக்கட்டும்.

-மக்கள் உரிமை - 24-18-2005

Tuesday, April 18, 2006

சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!

சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!

மன்னர் அப்துல்லா என் தாய் நாட்டுக்கு அரசு முறைப் பயணத்தை முடித்து விட்டு வந்திருக்கும் இந்த தருணத்தில் என் எண்ணங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் வி.ஆர்.சோன்டி. இந்து மதத்தைச் சேர்ந்தவன்.. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.

முதலாவதாக 1955 ஆம் வருடம் மதிப்பிற்குரிய மன்னர் அப்துல் அஜீஸ் இந்தியா விஜயம் செய்திருந்தார். மும்பை நகரத்தில் திறந்த காரில் வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு நிறைய தங்க காசுகளை இலவசமாக அளித்தார். ஏழை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாங்கிச் சென்றார்கள. அது போல் தங்க நாணயம் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்களோடு மக்களாக அனைவரையும் ஒன்றாக நினைத்து அன்பு செலுத்தியது என் மனக்கண் முன் இன்றும் நிழலாடுகிறது.

இரண்டாவது நிகழ்வு 1976 ஆம் ஆண்டு நடந்தது. உலக வங்கி துங்கபத்ரா அணையின் பாக்கி உள்ள கட்டுமான பணிகளை முடிப்பதற்கு 120 மில்லியன் டாலரை இந்திய அரசிடம் கேட்டது. இதை கேள்விப் பட்ட மன்னர் காலித் அப்போதய இந்திய தூதரை அழைத்து அதற்கான ஒரு மாபெரும் தொகைக்கான காசோலையை தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். இந்த தொகை சவூதி மக்கள் இந்திய மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்பு என்று மன்னர் காலித் அப்போது கூறினார். அவருக்கு இந்திய மக்களின் பால் உள்ள அன்பை எண்ணி அப்போது வியந்தேன்.

அந்த அணை உள்ள நிலப் பரப்புக்கு பக்கத்தில் தான் என் கிராமம் உள்ளது. அந்த அணையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மன்னர் குடும்பத்தின் அந்த அன்பளிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்த அணையினால் எத்தனையோ ஆயிரம் பேர் தற்போது பயனடைகிறோம்.

சமீபத்தில் இறந்த மன்னர் பஹதுக்காக சொர்க்கம் கிடைப்பதற்காக இறைவனைப் பரார்த்திக்கிறேன். தற்போதய மன்னர் அப்துல்லாவின் ஆட்சியும் சிறப்புற பிரார்த்தித்து, தீராத தலைவலியாய் இருக்கும் இந்தியா காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வர பிரார்த்தித்தவனாக இம் மடலை முடிக்கிறேன்.


வி.ஆர்.சோண்டி, இந்தியானா

வாசகர் கடிதம், அரப் நியூஸ், 1-2-2006

இது போன்ற நல்ல உள்ளங்களைப் பெற்றதால்தான் இந்தியா இன்றும் உலகில் தலை சிறந்த நாடாக மிளிர்கிறது.



.