Followers

Wednesday, August 04, 2010

"டார்வின் கோட்பாடு தவறு" என்பது உண்மைதானே!

"டார்வின் கோட்பாடு தவறு" என்பது உண்மைதானே!

டார்வினிஷ்டுகள் "ஓரு செல் உயிரினம் தானாக உருவாகி பிறகு பல லட்சம் வருடங்கள் பரிணாமம் ஏற்ப்பட்டு படிப்படியாக குரங்கு வரை வந்து பிறகு மனிதனாக உருவெடுத்தான்" என்று கதை விடுகின்றனர்.

பல காலமாக பலருக்கும் ஓரு சந்தேகம் உள்ளது. "கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா"

இங்கிலாந்தின் ஷெப்பீல்டு மற்றும் வார்விக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கோழி முட்டையை சமீபத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

முட்டையின் ஓட்டுப்பகுதியை உருவாக்க OVOCLEIDIN (OC-17) என்ற புரோட்டீன் மிகவும் அவசியம் என்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இந்த புரோட்டீன் கருவுற்ற கோழியின் சினைப்பையில் உற்பத்தியாகிறது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இவர்கள் தொழில் நுட்பம் வாய்ந்த HECTOR என்ற கம்யூட்டரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். முட்டை ஓட்டின் அணுக்களின் கட்டமைப்பை ஆய்வு செய்தனர்.

புரோட்டீன் OC-17 இங்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. கோழியின் உடம்பில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற ரசாயன பொருளை கால்சைட் என்ற படிமங்களாக மாற்ற OC-17 உதவுகிறது. இந்த கால்சைட் தான் கடினமான முட்டை ஓடாக மாறுகிறது. கோழிக்குஞ்சு உருவாவதற்க்கு தேவையான கரு மற்றும் அதனைப் பாதுகாக்கும் திரவம் ஆகியவற்றை முட்டை ஓடு தன்னுள் வைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்குழுவுக்கு செப்பீல்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் காலின் ப்ரீமேன் தலைமை வகித்தார்.

இந்த ஆய்வின் மூலம் ஓவ்வொரு படைப்புக்கும் படைப்பாளன் இருந்தே ஆக வேண்டும் என்பது உறுதியாகிறது.

"மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? அவனே உன்னைப் படைத்து, உன்னை சீராக்கி, உன்னைச் செம்மைப் படுத்தினான். அவன் விரும்பிய வடிவில் உன்னை அமைத்தான்."
-குர்ஆன் 82- 6,7