Followers

Thursday, May 31, 2012

உடலுக்கு ஒன்பது வாசல் - ஆரோக்கியம்.



'நர்ஸ் கொடுத்த மருந்தை மட்டும் சாப்பிடாம ஸ்பூனையும் சேர்த்து ஏன்யா முழுங்குனே! கொஞ்சம் இருய்யா! எடுத்துர்ரேன்'

'ஐயோ டாக்டர்'

---------------------------------------------------------------------

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. சிறிய தலைவலி, சிறிய தும்மல், சிறிய காய்ச்சல் என்று எது நம்மை தாக்கினாலும் உடன் ஒரு சாரிடானையோ, கால்பாலையோ போட்டு அந்த நேரத்துக்கு சுகமாகிக் கொள்கிறோம். எனது பாட்டி 'எந்த வியாதியுமே மூன்று நாட்கள் தான். பிறகு அதுவே நம் உடலை விட்டு சென்று விடும்' என்று சொல்லி கடைசி வரை மருத்துவ மனையை நாடாமலேயே இருந்து விட்டார். அவர் சிறு வயதில் சொன்ன ஆலோசனையை இன்று வரை கடைபிடித்து வருகிறேன். சவுதி வந்து இருபது வருடம் ஆகிறது. மூன்று அல்லது நான்கு முறைதான் மருத்துவமனைக்கே சென்றுள்ளேன். ஒரு முறை எலியை அடிக்க ஆக்ரோஷமாக ஓடி மேலிருந்து தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டேன். ஒரு மாதம் கையில் கட்டுடனே! ஒரு சாதாரண எலி என்னை அந்த சிரமத்துக்கு ஆளாக்கி விட்டது. :-) மற்றபடி ரத்த தானம் கொடுப்பதற்காக இரண்டு முறை மருத்துவமனை சென்றுள்ளேன். இவ்வளவு நாளும் ஆரோக்கியமாக எனது உடலை கொண்டு செல்ல சக்தி தரும் அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எனக்கும் அவ்வப்போது சிறு சிறு தொந்தரவுகள் வருவதுண்டு. தலைவலி தொடர்ந்து இருந்தால் வலுக்கட்டாயமாக வாந்தி எடுத்து சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு வந்து விடுவேன். தும்மல் தொடராக வந்தால் ஐஸ் தண்ணி குடிப்பதை நிறுத்தி விடுவேன். எக்காரணத்தை முன்னிட்டும் தும்மலை நிறுத்த மருந்தோ மாத்திரைகளோ உட் கொள்ள மாட்டேன். தும்மல் வந்து சில நிமிடங்களில் உடல் புத்துணர்ச்சி ஏற்படுவதை நான் உணர்ந்துள்ளேன். எனவே தும்மல் நம் உடலில் நமக்கு நாமே பார்த்துக் கொள்ளும் மருத்துவம். அதனை தடுக்காமல் தொடர்ந்து தும்மி உடலை சகஜ நிலைக்கு கொண்டு வாருங்க்ள.

ஆனால் பன்றிக் காய்ச்சல் இது போன்று தொற்று வியாதிகள் பரவி வரும் நேரங்களில் நமக்கு தும்மலோ இருமலோ வந்தால் உடன் மருத்துவரை அணுக வேண்டும். குறைந்த பட்சம் துணிகளை கொண்டு தும்மும் போது அழுத்தி காற்றில் கிருமிகள் பரவாமல் தடுக்க முயற்ச்சிக்க வேண்டும். நமக்கு வரும் தும்மல் எந்த மாதிரியான தும்மல் என்பதை நாமே அறிவோம்.

அதே போல் காய்ச்சலும் மூன்று நாட்கள் முடிந்தும் தொடர்ந்தால் உடன் மருத்தவரை அணுக வேண்டும். எனவே நான் சொல்லும் காய்ச்சலும் தும்மலும் சாதாரண நாட்களில் நம்மைத் தாக்கும் போது அது போக்குக்கே விட்டு விடுவதே சரியானதாகும். மேலும் வயிற்றுப் போக்கு எப்போதாவது ஏற்பட்டால் வயிறு காலியாகும் வரை எதையும் சாப்பிட மாட்டேன். வெறும் தண்ணீர் அல்லது மோர்தான்: ஓரளவு வயிற்றுப் போக்கு நின்றவுடன் பழங்கள் தயிர்சாதம்தான் எனது மூன்று வேளை உணவாக இருக்கும். இரண்டு நாளில் அனைத்தும் சரியாகி விடும்.

மேலும் பசித்தால் சாப்பிடுங்கள். அதையும் அளவோடு சாப்பிடுங்கள். உப்பு, புளிப்பு, எரிப்பு, இனிப்பு இந்த நான்கையும் அளவுக்கதிமாக அதிகரிப்பது தப்பு. எனவே குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்து சாப்பிட்டவுடன் குறட்டை விட ஆரம்பித்து விடுகின்றனர். மதியம் சாப்பிட்டு உடன் படுக்கைக்கு செல்பவர்களை பார்த்துள்ளேன். இது தவறு. ஒரு மணி நேரம் நன்றாக தூங்கி விட்டு ஒரு குளியலை போட்டு விட்டு பிறகு சாப்பிடுங்கள். நன்கு பசியும் எடுக்கும். உடன் வேலைக்கும் சென்று விடுங்கள். சாப்பாடும் உடன் செரித்து விடும். தொப்பையும் வராது.

சமீபத்தில் ஒரு நண்பர் எனக்கு அனுப்பிய மெயிலில் திரு பாஸ்கரின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். கிட்டத் தட்ட இன்று வரை நான் எவ்வாறு எனது உடலை பராமரிக்கிறேனோ அவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாக இந்த விளக்கவுரை அமைந்திருந்தது. நீங்களும் பார்த்து பயன் பெறுங்கள்.




தும்மலில் பல வகைகள். எவ்வளவு சுகமாக தும்முகிறார்கள். :-)




-----------------------------------------------------------------

உடல் ஆரோக்கியத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்:


இறைவன் தும்மலை விரும்புகிறான்.கொட்டாவியை வெறுக்கிறான். (உங்களில்ஓருவர்) தும்பி அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் இறைவனுக்கே! ) என்று கூறினால்அவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் (இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக)என்று கூறுவது அதை கேட்ட ஓவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.கொட்டாவி ஷைத்தானிடமிருந்த தான் ஏற்படுகிறது. முடிந்த அளவு அதை அவர்அடக்கிக்கொள்ளட்டும். ஏனெனில் கொட்டாவியால் ஹா என்று அவர் சப்தமிடும்போது அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கின்றான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6223

உங்களில் ஒருவர் தும்பினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும்அல்லாஹ்வுக்கு) என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அல்லது அவரதுநண்பர் அவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் (இறைவன் உங்களுக்குஅருள்புரிவானாக) என்று கூறட்டும். எர்ஹமுக்கல்லாஹ் என்று அவர் கூறினால்(தும்பியவர்) அவருக்கு யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் (இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக. உங்கள் நிலையை சீர்செய்வானாக.) என்றுகூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6224

ஒரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.
1. சலாமிற்கு பதில் சொல்லுதல்.
2. நோயாளியை நலம் விசாரித்தல்.
3. இறந்த உடலை பின்தொடர்ந்து செல்லுதல்.
4. விருந்தின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல்.
5. தும்பியவருக்கு எர்ஹமுக்கல்லாஹ்(இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக) என்று கூறுதல்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (1240)

இறைவனின் தூதர் சொன்னார்கள்:"மனிதன் தன் வயிற்றைவிட மோசமான எப்பாத்திரத்தையும் நிரப்புவதில்லை. ஆதமின் மகன் தன் முதுகை நிமிர்த்தி வைத்துக்கொள்ள சில கவளங்களே போதுமானவை. இதைவிட அதிகமாக உண்ண வேண்டியிருந்தால் மூன்றிலொரு பாகம் உணவும், மூன்றிலொரு பாகம் தண்ணீரும் உட்கொண்டு மீதி மூன்றிலொரு பாகத்தைக் காற்றாக (காலியாக) விட்டு விடட்டும். (நூல்: மஸ்னத்)

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்" (குறள்)
நோய் வந்த பின் சிகிச்சைக்காக போவதை விட வராமல் வழிமுறைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


Wednesday, May 30, 2012

விந்து, சினை முட்டை கடன் பெறுவதிலும் சாதி பார்க்க வேண்டுமா?

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனிருத் மல்பானி தனக்கு ஒரு உயர் குல தம்பதியிடமிருந்து கோரிக்கை வந்ததாக சொல்லுகிறார். என்ன கோரிக்கை?

மன்ஷி கோக்ஷி - ஷர்மிளா கணேசன் என்ற இந்த தம்பதியினருக்கு குழந்தை பேறு இல்லை. எனவே டாக்டரை அணுகி தங்களுக்கு விந்து அல்லது கருமுட்டை தானமாக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். அப்படி கோரிக்கை வைக்கும் போது தங்களின் சாதியை சேர்ந்தவர்களிடமிருந்து தானமாக பெற வேண்டும் என்ற கண்டிஷனையும் அந்த தம்பதிகள் மருத்துவரிடம் வைத்துள்ளனர். படித்த தம்பதியிடமிருந்து இப்படி ஒரு கோரிக்கை வந்தது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாக டாக்டர் அனிருத் மீடியாவிடம் கூறியுள்ளார்.

பாட்னாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சவ்ரங் குமார் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது 'குழந்தையில்லாத தம்பதியர் தன்னிடம் விந்து கொடையோ அல்லது கரு முட்டை கொடையோ கேட்கும் போது சம்பந்தப்பட்டவர்களின் சாதியை கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு வாங்கிச் செல்கின்றனர்' என்கிறார்.



திலிப் பாட்டீல் இது பற்றிக் கூறும் போது 'மும்பையில் பிராமணர்களின் விந்தையோ கருமுட்டையையோ வாங்குவதற்கே பலரும் பிரியப்படுகின்றனர்' என்கிறார். பிறக்கும் குழந்தைகள் அறிவார்ந்த முறையில் இருக்க வேண்டும் வளர வேண்டும் என்ற நம்பிக்கை இதற்கு காரணமாக இருக்கலாம்.


ஆனால் இந்திய மருத்துவ கழகம் விந்து தானம் செய்பவர்களின் மதத்தை மட்டுமே பதிந்து கொள்கிறது. சாதியை அவர்கள் குறிப்பெடுத்துக் கொள்வதில்லை. சில முஸ்லிம்கள் கூட தானம் கொடுப்பவர் ஷியா பிரிவா சுன்னி பிரிவா என்று விசாரித்து பிறகு ஏற்றுக் கொள்வதாக திலிப் பாட்டீல் கூறுகிறார்.
http://www.siliconindia.com/news/general/Indians-Shopping-for-Brahmin-Sperm-nid-116478-cid-1.html

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் –மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி

-இது ஔவையாரின் நல்வழி என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பொன்மொழி. சிறு வயதில் பள்ளியில் படித்த இந்த பழமொழி இன்றும் மனனமாக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் இன்னும் நடைமுறைக்குத்தான் வரவில்லை.


------------------------------------

மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்... இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.


‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’

இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.


‘‘வலுவில்லாத சினைமுட்டை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. இப்படி குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு, நடுத்தர மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதை சில மருத்துவ வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள்தான் சினைமுட்டை குறைபாடுள்ளவர்களுக்கு குழந்தைப் பேற்றை உருவாக்க வேறொரு பெண்ணிடமிருந்து சினைமுட்டையை பணம் கொடுத்து தானமாக பெறுகிறார்கள்.

ஆனால், இப்போது தானம் என்ற பெயரில் இது வியாபாரமாகிவிட்டதுதான் கொடுமை. சினைமுட்டையை தானமாகப் பெறுவதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சில் சில சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறது. சினைமுட்டை கொடுக்கும் பெண்ணிற்கு ஆஸ்துமா, இதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, ரத்த சோகை போன்ற நோய்கள் அல்லது பரம்பரை நோய் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே சினைமுட்டையை எடுக்கவேண்டும். காரணம், ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து சினைமுட்டை எடுத்தால்தான், அதைப் பெறும் பெண்ணுக்குப் பிறக்கக்கூடிய குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஆனால், பணத்தாசை பிடித்த டாக்டர்கள், சினைமுட்டை தரும் பெண்களிடம் சுகர், ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. மாதிரியான சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, சினைமுட்டைகளை எடுத்து விற்கிறார்கள்’’ என்றார் வேதனையோடு. அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரோ, “இந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்களில் பலர் சொந்தமாக கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் பணிபுரியும் நர்ஸ்கள், கம்பவுண்டர்களையே
சினைமுட்டை புரோக்கர்களாக பயன்படுத்துகிறார்கள்.

சினைமுட்டை கொடுக்கும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் விதவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், சிவப்பான இளம் பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையும், அழகான காலேஜ் பெண்களுக்கோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையும், கேரளப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று
லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுகிறது.

சினைமுட்டையை விற்பதில் பெரும்-பாலோர் காலேஜ் பெண்கள்தான். இது-போன்ற சினைமுட்டை விற்பதால், உடம்பில் வெளிப்படை-யாக எந்த மாற்றமும் தெரியாது என்பதால் இடைவெளி விட்டு இந்த பெண்கள் சினைமுட்டைகளை தொடர்ந்து விற்றுவருகிறார்கள். சினைமுட்டையை, ஒரு பெண்ணிடமிருந்து எடுப்பதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே தொடர்ந்து ரூ. 600 மதிப்புள்ள ஹார்மோன் ஊசிகளைப் போடவேண்டும். அந்த ஊசிகளையும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓசியில் போடுகிறார்கள். பிறகு தங் களுடைய கிளினிக்குக்கு வரச் சொல்லி, சினைமுட்டையை எடுத்துவிடுகிறார்கள். சினைமுட்டை கொடுப்பவர்களிடம் முதலில் பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்கிற டாக்டர்கள், பின்பு குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

புதுச்சேரியை அடுத்துள்ள ஒரு கிராமத்துப் பெண்ணிடம் சினைமுட்டை பெறுவதில் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களான ஒரு பெண் டாக்டருக்கும் ஒரு ஆண் டாக்டருக்கும் கடந்த வாரம் பிரச்னை வெடித்து, அது வடக்கு பகுதி எஸ்.பி. வரை போய், அவர் தலையிட்டு ஒரு வகையாக அமுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.

இதுபற்றி புதுவையின் பிரபல பாலியல் குறைபாடு சிறப்பு மருத்துவரான பீட்டர் பால் அல்போன்-ஸிடம் பேசினோம். “சினைமுட்டை தானம் வெளிநாடுகளில் சாத்தியம். அங்கு சினைமுட்டை தானம் பண்ணுகிற பெண்களே இன்டர்நெட்டில் தன்னோட கூந்தல், தோல் நிறம், உருவ அமைப்பு போன்றவற்றையெல்லாம் சொல்லி விளம்பரம் செய்வார்கள். அதேபோல, இங்கே அந்த வேலையைச் செய்ய புரோக்கர்கள் இருப்பது வேதனையான விஷயம்.

திருமணமாகாத பெண்கள் பணத்திற்காக சினைமுட்டை கொடுக்க, அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால்... பிற்காலத்தில் அப்பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்படுவதோடு, அவர்களுக்கு பிள்ளை பிறக்கிற வாய்ப்புமில்லாமல் போகலாம்...’’ என்று எச்சரித்தார்.

இந்தச் சினைமுட்டை வியாபாரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். “சினைமுட்டை பிஸினஸ் பற்றி எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இனி கவனமாக செயல்படுவோம்...” என்றார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம் பேசினோம். “இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, இம்முறைகேட்டைத் தடுக்க
நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’ என்றார்.

இளம் பெண்களின் எதிர்-காலத்தையே ‘முட்டை’யாக்கக் கூடிய இந்த சினைமுட்டை வியாபார விபரீதத்தை உடனடியாக தடுக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் துரோகம்!
நன்றி : தமிழக அரசியல்

------------------------------------------

இது பற்றிய இஸ்லாமிய பார்வை என்ன?


கணவனின் விந்தையும் மனைவியின் கருமுட்டையையும் டெஸ்ட் ட்யூபில் வளர விட்டு குழந்தை பெற்றுக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் ஒரு பெண் தனது கருமுட்டையுடன் - கணவனல்லாத - அன்னிய ஆணின் உயிரணுவைச் சேர்க்க அனுமதிக்கலாமா? என்றால் அதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை!

மார்க்க சட்டதிட்டங்களை அறிந்து கொள்வதில் அன்றைய இஸ்லாமிய பெண்கள் எந்த அளவு ஆர்வமாக இருந்தனர் என்பதற்கு பின் வரும் நபி மொழிகள் சிறந்த எடுத்துக் காட்டுகளாக உள்ளது.

*உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளிப்புக் கடமையாகுமா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''ஆம்'' (விழித்தெழும்போது தன்மீது) அவள் நீரைக் கண்டால் (அவள் மீது குளிப்புக் கடமைதான்)'' என்று பதிலளித்தார்கள். உடனே நான், ''அல்லாஹ்வின் தூதரே! பெண்ணக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''உனது கை மண்ணைக் கவ்வட்டும்! பிறகு எப்படி அவளது சாயலில் குழந்தை பிறக்கிறது?'' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.*

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) இதேக் கருத்தில் ஆயிஷா (ரலி) உம்மு சுலைம் (ரலி) அனஸ் (ரலி) ஆகியோரின் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. (நூல்கள் - புகாரி,முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்)


*''ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது, ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை) ஆணின் நீரை
(விந்து உயிரணுவை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.*(நபிமொழியின் சுருக்கம். நூல் - முஸ்லிம்)


உண்மையில் வந்த கட்டுரை ஒன்று இந்த பதிவு சம்பந்தமாக மேலதிக விபரங்களைச் சொல்கிறது.



Monday, May 28, 2012

மரம் செடி கொடிகளை மனிதனால் உருவாக்க முடியுமா?

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும, கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் இறைவன்- எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
-குர்ஆன் 6:95

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? உங்கள் செவிப்புலன் மீதும், உங்கள் பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? அகிலங்களின் அனைத்துக் காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று நபியே! நீர் கேளும். உடனே அவர்கள் “இறைவன்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
-குர்ஆன் 10:31

'நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றி சிந்தித்தீர்களா? அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?'
-குர்ஆன் 56:71,72


இந்த மூன்று வசனங்களையும் ஒரு மனிதன் ஆழ்ந்து சிந்தித்தான் என்றால் இறைவனின் ஆளுமையை உணரத் தொடங்கி விடுவான். நாம் பார்க்கும் விதைகள் அனைத்தும் கிட்டத் தட்ட இறப்பு நிலைக்கே சென்று விடுகிறது. பல மாதங்கள்: பல வருடங்கள் கழித்து நீங்கள் ஒரு விதையை பூமியில் போட்டு சிறிது தண்ணீரை ஊற்றினால் நிலத்தை பிளந்து கொண்டு செடிகளாகி பின்னர் மரங்கள் வெளியாவதை நாம் பார்ப்போம். இது எவ்வாறு சாத்தியமாகிறது? இத்தனை நாளும் சூரிய ஒளி கூட படாது இருட்டறையிலே இருந்த இந்த விதைக்கு எவ்வாறு உயிர் வந்தது? யார் கொடுத்தது? என்றாவது சிந்தித்திருக்கிறோமா?




அடுத்து மரங்களின் கட்டுமான பொருட்களில் பிரதானமானது லிக்னோ செல்லுலோஸ் என்ற வேதிப் பொருளாகும். லிக்னைனும் மற்றும் மரத்துக்கு கடினத் தன்மை கொடுக்க செல்லுலோஸ் என்ற பொருளும் சேர்ந்து கலவையாக மரங்கள் பரிணாமம் அடைகின்றன. வேதியியல் பாஷையில் சொல்வதாக இருந்தால் மரம் என்பது 50 சதவீதம் செல்லுலோசாலும், 25 சதவீதம் ஹெமி செல்லுலோசாலும், 25 சதவீதம் லிக்னைனாலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கார்பனும் கலந்த கலவைகளே நாம் மேலே பார்த்த தனிமங்கள். ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கார்பனும் வளி மண்டலத்தில் மிகவும் கணக்கிலடங்காமல் பரந்து கிடப்பதை நாம் அறிவோம். இந்த மூன்றும் சேர்ந்துதான் லிக்னோ செல்லுலோஸ் என்ற பொருளை உருவாக்குகிறது. இந்த பொருள்தான் மரங்கள் விரிந்து படரக் காரணமாக அமைகிறது. ஆச்சரியமாக அறிவியல் அறிஞர்கள் லிக்னோ செல்லுலோஸை செயற்கையாக உருவாக்க பலமுறை முயன்றும் தோல்வியையே தழுவியுள்ளனர். இவ்வளவுக்கும் நமது வளி மண்டலத்தில் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும், கார்பனும் கணக்கிலடங்காமல் கிடைத்தும் அறிவியல் அறிஞர்களால் செயற்கையாக உருவாக்க முடியவில்லை.



நம்மைச் சுற்றியுள்ள அத்தனை மரங்களும் பல மில்லியன் வருடங்களாக ஆக்சிஜன், கார்பன், தண்ணீர், சூரிய ஒளி போன்ற கலவைகளினால் கூட்டுத் தயாரிப்பாக தயாரிக்கப்பட்டு நம் கண் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் கலந்த கலவையான தண்ணீரை ஊற்றி நாம் மரத்தை வளர்க்கிறோம். நெருப்பை அணைக்கும் தண்ணீரை ஊற்றி நெருப்பால் எரிக்கப்படும் மரத்தை வளர்க்கின்றோம். இது ஒரு முரண்பாடான நிகழ்வு அல்லவா? இது எவ்வாறு சாத்தியமாகிறது? இறைவன் நாடினால் எதுவும் முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.



இந்த மரங்கள் எவ்வாறு உருவாகின்றது? இதன் செல்கள் எப்படி பரிணமிக்கின்றன? என்று ஆராய்ந்து சோர்ந்து போய் உள்ளனர் நமது விஞ்ஞானிகள். இது வரை நடந்த ஆராய்ச்சிகளில் எந்த முடிவும் இறுதியாக இதுவரை எட்டப்படவில்லை.

காடுகளைப் பற்றி ஆராய்ந்து வரும் ஒரு பிரிட்டன் நிறுவனம் 'மரம் கொடிகளைப் பற்றிய பல அரிய தகவல்கள் இன்று வரை நமக்கு அரிதாகவே கிடைத்து வருகிறது' என்கிறது.

Despite the knowledge resulting from earlier and ongoing research, there still exists a lack of information on the chemistry and structure of wood fibres. Large variations can be found within a single tree, from the pith to the bark and from the base to the top of a tree. Often the chemistry and structure of a wood cell are extremely heterogeneous and difficult to investigate with conventional techniques.2

A paper in the scientific journal Plant Physiology titled "Our Understanding of How Wood Develops is not Complete" describes the limited knowledge of the subject that scientists possess:

Considering the important role that wood is foreseen to play in the near future, it is surprising to see that our understanding of how wood develops is far from complete. With a few exceptions, very little is known about the cellular, molecular, and developmental processes that underlie wood formation. Xylogenesis represents an example of cell differentiation in an exceptionally complex form. This process is controlled by a wide variety of factors both exogenous (photoperiod and temperature) and endogenous (phytohormones) and by interaction between them. It is driven by the coordinated expression of numerous structural genes (some of known function) involved in cell origination, differentiation, programmed cell death, and heartwood (HW) formation and by virtually unknown regulatory genes orches trating this ordered developmental sequence. The presence of gene families and the extreme plasticity of the metabolism involved (as exemplified by the unusual behavior of plants with transformed cell walls; for review, see Fagard et al., 2000) add a further complexity to our understanding of the process of wood formation.3




The extraordinary creation in wood is emphasized thus in another scientific journal, Annals of Botany:
Wood formation is a highly complicated process involving an unbelievable variety of metabolic steps in the roots, stem and crown of shrubs and trees. At the centre of these processes is cambial activity which results in the release of young woody cells that undergo maturation until autolysis of the protoplast, indicating the final developmental stage. Later on, in various tree species, woody cells become further modified by an additional process called heartwood formation. The properties of wood that make it an appropriate raw material for many purposes are largely determined by the specific architecture of the cell walls. Difficulties in investigating these many developmental stages appear when routine techniques, which work well for soft plant tissues, are applied. Therefore, in most cases, these techniques need modification or the use of completely revised protocols to yield good results for woody tissues.4
In terms of absorbing the energy of low-speed blows and reducing the damage therefrom, wood is a most important material. The Second World War plane known as the “Mosquito” was made by compressing wood between strips of fiber board, making it the most damage-resistant plane of its time. The hardness and resistant nature of wood make it a very reliable material. Because wood breaks or cracks slowly enough to be visible from the outside, and that gives people enough time to take the necessary precautions .5


7.As seen in the picture to the left, wood consists of tube or straw-shaped cells. By combining one on top of the other, these cells, which make up the roots and trunks of plants, serve as channels that carry water and minerals right through the plant. This tisue, known as “xylem,” also constitutes a powerful structure that enables the plant to remain upright. To the right can be seen a slice of dry wood in cross-section. When dried out, the tube-like channels become hollow, as shown in the illustration.

The iron concentration inside plant cells is 1,000 times greater than that in the soil outside.8 Under normal condition, an exchange of matter from a high density region to a lower density one will take place. But exactly the opposite happens in plant roots, and the ions in the soil are easily able to pass into the root cells.9

Photosynthesis: The Superior Technology in a Miniature Factory
It is not only the wood and root parts of trees that cannot be obtained by artificial means, but also the leaves. Most important of the features that make leaves inimitable is their ability to make photosynthesis. Photosynthesis, one of the systems that scientists still do not fully understand, may be summarized as plants manufacturing their own nutrients. Thanks to the structure in plant cells that makes them able to make direct use of solar energy, they store solar energy, at the end of various complex processes, in the form of energy that can be used by human beings and animals. In addition, the photosynthetic energy stored in trees is also given off during burning. For example, the energy emitted by wood burned to heat a house is actually energy from the Sun stored during the formation of wood.10


1 http://www.forestpathology.org/wood.html; Wood Chemistry and Anatomy, 2005.
2 http://www.forestresearch.gov.uk/fr/INFD-6FMCUS; The Research Agency of the Forestry Commission, 2007.
3 Christophe Plomion, Gregoire Leprovost, Alexia Stokes, "Wood Formation in Trees", Plant Physiology, December 2001, Vol. 127, pp. 1513–1523.
4 Uwe Schmitt, "Chaffey, N.J. ed. Wood formation in trees—cell and molecular biology techniques", Annals of Botany, 2002, Vol. 90, no. 4, pp. 545-546.
5 Julian Vincent, "Tricks of Nature", New Scientist, 17 August 1996, Vol. 151, no. 2043, p. 39.
6 Julian Vincent, "Tricks of Nature", New Scientist, 17 August 1996, Vol. 151, no. 2043, p. 40.
7 http://www.smddrums.com/woodcell.htm
8 Malcolm Wilkins, Plantwatching, Facts on File Publications, New York, 1988, p. 119.
9 William K. Purves, Gordon H. Orions, H. Craig Heller, Life, The Science of Biology, 4th edition, W.H. Freeman and Company, p. 724.
10 http://www.montana.edu/wwwpb/pubs/mt8405.html; Michael Vogel, "Heating with Wood: Principles of Combustion", 2003.


Saturday, May 26, 2012

விவாகரத்தில் முதல் 10 இடத்தை பெற்ற நாடுகள்!

சமீபத்திய இந்த செய்தியை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். 30 சதவீதம் 40 சதவீதம் சில நாடுகள் 50 சதவீதம் விவாகரத்தால் அவதிப்படும் நாடுகளாக உள்ளது கவலை தரும் விஷயம். இதனால் மனதால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது? ஒன்றுபட்ட கூட்டு குடும்பம் சிதைந்து மனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் குறைந்து விட்டது. நானும் சம்பாதிக்கிறேன்: நீயும் சம்பாதிக்கிறாய். உனக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். உன் பேச்சை நான் எதற்கு கேட்க வேண்டும் என்ற ஈகோ தான் இன்று உலகின் பல குடும்பங்களை பிடித்து ஆட்டுகிறது.

-------------------------------------------



'இனி உன் பேரு மலர்விழி இல்லே! கூகுள்'

'என் பேரை எதுக்கு மாத்துரீங்க!'

'நான் எங்கே போனாலும் கண்டுபிடிச்சுடுரியே! அதான்.'

------------------------------------------

கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தானே
கணவன்:- அதை துவைக்கிறது நான்தானே! எனக்குல்லே வலி தெரியும?

------------------------------------------


முதல் இடம் ரஷ்யா:
லெனினும் ஸ்டாலின் தங்களின் கனவு தேசமாக உருவாக்கிய ரஷ்யாதான் இன்று குடும்பங்களில் நடக்கும் விவாகரத்தில் உலகின் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 5.30 சதவீத மக்கள் ரஷ்யாவில் விவாகரத்துப் பெற்றுக் கொள்கின்றனர். மேற்கத்திய கலாசாரமும் நாத்திகமும் இதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. ஊழலால் விளைந்த பொருளாதார தேக்க நிலையும் மக்களை தனியாக பிரிந்து செல்ல தூண்டுகிறது.



இரண்டாவது இடம் அருபா:

கரிபியன் பகுதியைச் சேர்ந்த அரூபா என்ற இந்த தீவு விவாகரத்தில் உலகின் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 5.27 சதவீத மக்கள் இங்கு விவாகரத்தைப் பெற்றுக் கொள்கிறார்களாம். வறுமை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மூன்றாம் இடம் அமெரிக்கா:

நம்ம பெரியண்ணன் அமெரிக்கா விவாகரத்தில் மூன்றாவது இடத்தில் இருக்காக! :-) அண்ணாச்சி 4.19 சதவீதம் பெற்று சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தனது மக்களுக்கு நிம்மதியான வாழ்வை தர லாயக்கற்ற அரசு உலகைக் கட்டுப்படுத்தப் போகிறதாம். மக்களின் மன நிம்மதியின்மையே விவாகரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.



நான்காவது இடம் பனாமாவுக்கு:

நான்காவது இடத்தை பெற்றுள்ள பனாமா பெற்ற புள்ளி விபரம் 3.80. கிட்டத்தட்ட அமெரிக்காவை நெருங்கி வருகிறது. முன்பெல்லாம் இது போன்ற விவாகரத்துக்கெல்லாம் சர்ச் அனுமதி கொடுப்பதில்லை. கலாசார மாற்றங்களின் விளைவாக இன்று மிகப்பெறும் அச்சுறுத்தலாக விவாகரத்து இந்நாட்டை உலுக்கி எடுக்கிறது.

ஐந்தாவது இடம் உக்ரைனுக்கு:

ஐந்தாவது இடத்தில் உள்ள உக்ரைன் பெற்ற புள்ளி விபரங்கள் 3.79. ரஷ்யாவோடு ஒன்றாக இருந்த போது குடும்பங்களும் ஓரளவு ஒன்றாக இருந்தன. ரஷ்ய குடியரசிலிருந்து பிரிந்தவுடன் மேற்கத்திய கலாசாரம் இங்கும் குடும்பங்களை பிரித்து விட காரணமாகிறது. பல பெற்றோர்கள் குழந்தை பெறுவதையே தவிர்க்கின்றனர். அதற்கு காரணமாக நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர். குழந்தை பிறக்காததும் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆறாவது இடத்தில் இருப்பது பெலாருஸ்:

ரஷ்ய குடியரசுக்கு உட்பட்ட பெலாருஸ் நாடு ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார தேக்கமும் மேற்கத்திய கலாசாரம் இந்நாட்டில் புகுந்ததும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

ஏழாவது இடத்தில் இருப்பது மால்டோவா:

பொருளாதார தேக்க நிலையும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதும் காரணமாக சொல்லப்படுகிறது.

எட்டாவது இடம் கியூபாவுக்கு:

கியூபாவில் நடக்கும் விவாகரத்தின் சதவீதம் 3.16 ஆக உள்ளது. இங்கு திருமணத்தை தங்களின் பொரளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் ஒரு மார்க்கமாகப் பார்க்கின்றனர். பல மொழிகள் கலந்திருப்பதும் இது போன்ற விவாகரத்துகள் அதிகரிக்க காரணமாகின்றன.

ஒன்பதாவது இடம் செக்கோஸ்லோவாகியா:

விவாகரத்துகள் 3.11 சதவீதம் நடந்து உலகின் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பத்தாவது இடத்தில் இருப்பது தென் கொரியா:

சுனு என்ற தென் கொரியாவின் திருமண வரன் தேடும் ஏஜன்சியின் தலைவர் நியூயார்க் டைம்ஸூக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்னதாவது: 'இதற்கு முன்பு இவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டதில்லை. வருடா வருடம் விவாகரத்துகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. எங்களுக்கென்று தனி பாரம்பரிய பெருமை உண்டு. அதை நாங்கள் இழந்து வருகிறோம்' என்கிறார்.

நம் பாரத நாட்டிற்கென்று தனிப் பாரம்பரியம் பெருமை உண்டு. ஆனால் மேற்கத்திய மோகத்தால் அதனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். ஆங்கில மொழி மோகமும் ஆங்கில கலாசாரத்தை சுவீகரித்துக் கொள்வதிலும் மேற்கண்ட நாடுகளோடு போட்டி போடுகிறோம். நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம்.

இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் இஸ்லாமியர்கள் தலாக் தலாக் தலாக் என்று அநியாயத்துக்கு பெண்களை விவாகரத்து பண்ணி கொடுமைபடுத்துகிறார்கள் என்று கூறுவோர் உண்டு. அதிசயமாக இந்த பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடு கூட வராததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். விவாகரத்தை சிரமாக்கிய ஒரு சமூகம் சதவீதத்தில் அதிகமாக இருக்கிறது. விவாகரத்தை மிக இலகுவாக்கிய இஸ்லாமியர்களிடம் விவாகரத்து குறைந்துள்ளதை இந்த நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

http://www.siliconindia.com/news/general/10-Countries-With-the-Highest-Divorce-Rates-nid-117138-cid-1.html


--------------------------------------------------------------------------

(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் இறைவனின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் இறைவனின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை இறைவன் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் இறைவனின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
-குர்ஆன் (2:229)

மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் இறைவனின் வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை இறைவனின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
-குர்ஆன்(2:230)

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் இறைவனின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) இறைவன் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
-குர்ஆன்(2:232)


ஆம் முஸ்லிம்களிடம் விவாகரத்தின் சதவீதம் குறைவாக இருக்க காரணம் அவர்களிடம் உள்ள இறைபக்தி என்றால் மிகையாகாது. அநியாயமாக ஒரு பெண்ணை தலாக் சொன்னால் அதன் பலனை மறுமையில் தண்டனையாக பெறுவான்: அதே போல் மனைவியும் பெறுவாள் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் மறுமையை நம்புவதும் மேற்கத்திய கலாசாரத்துக்கு அடிமையாகாமல் இருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.



Thursday, May 24, 2012

ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் கேலிக் கூத்து!

நமது நாட்டு ஜனநாயக முறையை நாம் எப்போதும் புகழ்ந்த வண்ணமே உள்ளோம். நமது அண்டை நாடுகளில் ராணுவ ஆட்சியும் சர்வாதிகார ஆட்சிகளும் நடந்து வரும் போது 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நம் நாடு இன்று வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதை நானும் நீங்களும் பெருமிதத்தோடே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நம்நாட்டு தற்போதய தேர்தல் முறை சரியானதுதானா! இதில் உள்ள குறைகளை எவ்வாறு நீக்குவது என்பதை அலசுவதே இந்தப் பதிவு.

வழமையாக நமது தேர்தலில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் ஒரு தொகுதியில் 100000 லட்சம் வாக்கு பெறுவதாக வைத்துக் கொள்வோம். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிரணி வேட்பாளர் 99999 வாக்குகளே பெறுகிறார். நமது நாட்டு சட்டத்தின்படி 100000 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கும் சென்று விடுகிறார். மற்றொரு வேட்பாளருக்கு 99999 வாக்குகளை கிடைத்ததால் அவர் தோல்வியுறுகிறார். 99999 பேர் போட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் அவர்களின் எண்ணங்கள் சட்டமன்றத்தில் ஒலிக்காமலும் நீர்த்து விடுகிறது. இது ஜனநாயகமா? 99999 பேரின் எதிர் வாக்குகளைப் பெற்றவர் எவ்வாறு மக்கள் பிரதிநியாக சட்ட மன்றம் செல்ல முடியும்?

அதேபோல் ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் உள்ளதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம். இந்த அனைத்து தொகுதிகளிலும் அதிமுக 501 ஓட்டுகளும் திமுக 499 ஓட்டுகளும் பெறுவதாகக் கொள்வோம். இப்போது நூறு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நாம் பின்பற்றும் பிரிட்டனின் ஜனநாயக முறை. அதாவது அதிமுகவுக்கு 100 எம்எல்ஏக்கள் கிடைக்க திமுகவுக்கு ஒரு எம்எலஏ கூட கிடைக்கவில்லை. இரண்டு கட்சிகளும் பெற்ற மக்களின் வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் மொத்தமாக 200 வாக்குகள்தான் வித்தியாசம் வருகிறது.

அதிமுக நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 50100. திமுக நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 499900. மொத்தமாக 200 வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆட்சியும் அமைத்து விடுகிறது. இது நியாயமான தேர்தலாகுமா? மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த முடிவு பிரதிபலிக்கிறதா? கண்டிப்பாக இல்லை.


“கவலைப் படாதீங்க! உங்களுக்கு சிரமம் கொடுக்கப்படாதுன்னுதான் நாங்களே உங்களைத் தேடி வந்துட்டோம். வாங்க வந்து ஓட்டை போடுங்க!”

இந்த தேர்தல் முறையில் உள்ள குளறுபடிகள் தற்போது நமக்கு விளங்கியிருக்கும். சரி இதற்கு மாற்று ஏற்பாடு உண்டா? அதைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.

ஜெர்மன் ஜனநாயக முறை:

இந்த தேர்தல் முறையில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம் அல்லது கட்சி போன்றவைதான் போட்டியிட முடியும். ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அந்த கட்சிக்கு என்று நிர்ணயிக்கப்படும்.

நூறு தொகுதியில் அதிமுக மேலே சொன்னது போல் 50100 வாக்குகள் பெற்றால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அதிமுகவுக்கு ஐம்பது உறுப்பினர்கள் அரசால் ஒதுக்கப்படும். உறுப்பினர்களை அந்தக் கட்சியே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதே போல் 49900 வாக்குகள் பெற்ற திமுக 49 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும். திமுகவும் தனது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இதனால் வாக்களித்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. இந்த முறையினால் எம்எல்ஏக்களையும் எம்பிக்களையும் விலைக்கு வாங்கும் குதிரை பேரமும் கட்டுக்குள் வரும். அடுத்து வானளாவிய அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைப்பவர்களுக்கும் இந்த முறை ஆப்பு வைக்கும்.

அதேபோல் சிறு சிறு லெட்டர்பேட் கட்சிகளெல்லாம் எங்களுக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்று மிரட்டி அதிக எம்பிக்களையும் எம்எல்ஏக்களையும் பெறும் போக்கு மாறும். ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி எத்தனை ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்து விடும். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற உண்மையான பயம் இருக்கும். இதற்கு முன் நடந்த இடைத் தேர்தலில் எந்த அளவு ஓட்டுக்கள் விலை பேசப்பட்டன என்பதை பார்த்தோம். தற்போது புதுக்கோட்டையிலும் இந்த நாடகம் அரங்கேறப் போகிறது.


நேற்று மதுரை ஆட்சியர் திரு சகாயம் எந்த காரணமும் சொல்லப்படாமல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கோஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளாராம். கண்டிப்பானவர். ஊழல் செய்யாதவர். கிரானைட் குவாரிகளில் சோதனையிட்டு பல வரி ஏய்ப்புகளையும் கண்டு பிடித்து அரசுக்கு லாபம் பார்த்தவர். விடுவார்களா நம் அரசியல்வாதிகள். எங்கு கவனிக்க வேண்டுமோ அங்கு செம்மையாக கவனித்தவுடன் நேர்மையான அதிகாரி இன்று பிரச்னையில்லாத கோஆப்டெக்ஸூக்கு மாற்றப்பட்டுள்ளார். இது நான் நம் நாட்டு ஜனநாயகம். எந்த கேள்வியும் இல்லை. ஊழல் செய்ய மறுத்ததால் இன்று தடாலடியாக மாற்றப்பட்டுள்ளார். கட்டுக்கடங்காமல் அதிக எண்ணிக்கையை அரசு பெற்றதால்தான் இத்தகைய மோசடிகளை எவரும் தட்டிக் கேட்பதில்லை. விகிதாச்சார அடிப்படையில் கணக்கு பண்ணி பார்த்தோமானால் ஜெயலலிதாவுக்கு 60 அல்லது எழுபது எம்எல்ஏக்கள் கிடைப்பதே சிரமம். எல்லா அரசியல் கட்சிகளின் நிலையும் இதே லெவலில்தான் இருக்கும்.

அடுத்து பல மொழிகள் பல மதங்களைக் கொண்ட தமிழகம் இலங்கை போன்ற இடங்களுக்கும் ஜெர்மனைப் போன்ற ஜனநாயக தேர்தலே சிறப்பானதாக இருக்க முடியும். உதாரணத்துக்கு இலங்கையை எடுத்துக் கொள்வோம். தனி ஈழம் கிடைக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி கிடைத்து அந்த மக்கள் சுபிட்சமாக வாழ நாமும் வாழ்த்துவோம். அது அல்லாமல் சிங்களமக்கள், தமிழ் மக்கள் இந்த இரு சாராரும் தங்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு பிரதிநிதிகள் அமைத்துக் கொள்ள ஜெர்மன் தேர்தல் முறை மிக உதவிகரமாக இருக்கும். இனத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம்கள் கலாசாரத்தால் முற்றிலுமாக இந்து சகோதரர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். இவர்களும் தங்களின் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். இந்த முறையில் எவரையும் குறை சொல்லவும் வாய்ப்பு ஏற்படாது. ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களும் பாதிக்கு மேல் தனி ஈழத்தை ஆதரிக்காதபோது அதிலும் பிரச்னைகள் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கை தமிழ் மக்களும் தனி ஈழத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வரை இந்த ஜெர்மன் ஜனநாயக முறையை பின் பற்றினால் தற்கால பிரச்னைகள் ஓய வாய்ப்பிருக்கிறது.

எதையோ சொல்ல வந்து பதிவின் சாரம் எங்கெங்கோ சென்று விட்டது. எனது புரிதலில் இப்பொழுது உள்ள தேர்தல் முறையை நீக்கி விட்டு ஜெர்மன் மாடலில் விகிதாச்சார அடிப்படையில் ஆட்சி அமைந்தால் தற்போதய குளறுபடிகள் குறைய வாய்ப்பிருப்பதாகவே எண்ணுகிறேன். இதைப்பற்றி நமது அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.




Tuesday, May 22, 2012

'சுன்னத்'(கத்னா) பண்ணிக் கொள்ளும் ஜிம்பாப்வே எம்பிக்கள்!



'என்னய்யா....காலையிலேயே தலையில துண்டை போட்டுக்கிட்டு சோகமா திரியறே!'

'சொந்தக் கதை சோகக் கதைப்பா! இன்னைக்கு தினமலர் படிச்சியா? ஜிம்பாப்வேலே அந்த நாட்டு எம்பிக்கள் 170 பேர் சுன்னத்(கத்னா) செஞ்சுக்கப் போறாங்களாம்!'

'அதுக்கென்ன இப்போ?'

'அதுக்கென்னாவா! இத்தனை நாளும் சுன்னத் பண்றது வேஸ்ட். எய்ட்ஸை அது தடுக்காதுன்னு பிரசாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். இந்த நேரத்துல பாழாய்ப் போன இந்த சேதி வந்தா சோகமா இல்லாம சந்தோஷமாகவா இருக்க முடியும்?'

-----------------------------------

லண்டன்: எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். முஸ்லிம் மத பெரியவர்களை கொண்டு, இந்த சடங்கு செய்வதற்கு பதில், மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-Dinamalar 22-05-2012

-------------------------------

Are there benefits from circumcision?

There are several:

1 Many older men, who have bladder or prostate gland problems, also develop difficulties with their foreskins due to their surgeon's handling, cleaning, and using instruments. Some of these patients will need circumcising. Afterwards it is often astonishing to find some who have never ever seen their glans (knob) exposed before!

2 Some older men develop cancer of the penis - about 1 in 1000 - fairly rare, but tragic if you or your son are in that small statistic. Infant circumcision gives almost 100% protection, and young adult circumcision also gives a large degree of protection.

3 Cancer of the cervix in women is due to the Human Papilloma Virus. It thrives under and on the foreskin from where it can be transmitted during intercourse. An article in the British Medical Journal in April 2002 suggested that at least 20% of cancer of the cervix would be avoided if all men were circumcised. Surely that alone makes it worth doing?

4 Protection against HIV and AIDS. Another British Medical Journal article in May 2000 suggested that circumcised men are 8 times less likely to contract the HIV virus. (It is very important here to say that the risk is still far too high and that condoms and safe sex must be used - this applies also to preventing cancer of the cervix in women who have several partners.)

A BBC television programme in November 2000 showed two Ugandan tribes across the valley from one another. One practised circumcision and had very little AIDS, whereas, it was common in the other tribe, who then also started circumcising. This programme showed how the infection thrived in the lining of the foreskin, making it much easier to pass on.

5 As with HIV, so some protection exists against other sexually transmitted infections. Accordingly, if a condom splits or comes off, there is some protection for the couple. However, the only safe sex is to stick to one partner or abstain.

6 Lots of men, and their partners, prefer the appearance of their penis after circumcision, It is odour-free, it feels cleaner, and they enjoy better sex. Awareness of a good body image is a very important factor in building self confidence.

7 Balanitis is an unpleasant, often recurring, inflammation of the glans. It is quite common and can be prevented by circumcision.

8 Urinary tract infections sometimes occur in babies and can be quite serious. Circumcision in infancy makes it 10 times less likely.
http://www.circinfo.com/benefits/bmc.html

Monday, May 21, 2012

அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!



சூசன் பஷீர்! இதுதான் இந்தப் பேறு பெற்ற பெண்மணியின் பெயர். அண்மையில் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரை வியப்பில் ஆழ்த்திய முஸ்லிம் பெண் இவர்! இவருக்கு என்ன நிகழ்ந்தது? இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்மணிகள் அனைவருக்கும் நிகழ்ந்துவரும் சோதனைகள்தாம் இவருக்கும் நிகழ்ந்தன.

‘The Kansas City Star’ என்ற பத்திரிக்கை தரும் தகவல்களின்படி, இப்பெண் கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான AT&T யில் முக்கியப் பொறுப்பில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார்.

2005 ஆம் ஆண்டில் இவர் இஸ்லாத்தைத் தழுவியபோது, வடக்குக் கான்சாஸ் சிட்டியில் வசித்துவந்தார். அப்போது முதல் தொடங்கியதுதான், இவருக்கு எதிரான religious discrimination என்னும் மதப் பாகுபாட்டுத் தொல்லைகள்! இருப்பினும் என்ன? ஈமானின் உறுதியால் எதிர்நீச்சல் போட்டுவந்தார் சூசன்.

உடலை முழுவதுமாக மறைத்து, தலைச்சீலை (headscarf) அணிந்துதான் அலுவலகத்திற்கு வந்து தனது பணியை முறையாகச் செய்துவந்தார். இவருக்கு எதிரான தொல்லைகள், இவர் இஸ்லாத்தைத் தழுவச் சில மாதங்கள் முன்பிருந்தே தொடங்கிவிட்டனவாம். அதற்கு முன், இவருடைய சிறப்பான சேவைகளுக்காக AT&T நிறுவனம் இவருக்குப் பல பாராட்டுச் சான்றுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளதாக அறிகின்றோம்.

ஆனால், எப்பொழுது இவர் முஸ்லிமாக மாறி, ‘ஹிஜாப்’ அணிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கினாரோ, அன்று முதல் இவருடன் பணியாற்றியவர்கள் இவரைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினராம். கண் சாடையால் ‘that thing on her head’ என்று கூறிச் சிரித்து மகிழ்ந்தனராம்.

“என்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது! அதிர்ச்சியுற்றேன்! இதற்கு முன் நான் எப்படியெல்லாம் உடலின் பெரும் பகுதிகள் தெரிய உடை அணிந்து வந்தபோதெல்லாம் இது போன்ற கிண்டல்கள் இல்லை! கண் சிமிட்டல்கள் இல்லை! குத்தலான பேச்சுகள் இல்லை! யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை, என் உடையைப் பார்த்து! இப்போது இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் முழு உடலையும் மறைத்து உடையணிந்தபோது…..?” என்று வியக்கிறார்; வேதனைப் படுகிறார்.

சகோதரி சூசனின் அலுவலக மேஜை மீது, தலையை மறைத்த தோற்றத்தில் கன்னி மேரியின் படமும், அதனுடன் பைபிளின் வசனம் ஒன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது! அந்த வசனத்தையும் தோற்றத்தையும் பார்க்கும்போதெல்லாம், சூசனுடன் பணியாற்றும் பெண்களும் ஆண்களும் கேட்கும் கேள்வி, அவரை வேதனைப் பட வைக்கிறது! “ஏண்டி! நீ தீவிரவாதியா? இந்தக் கட்டடத்தை வெடி வைத்துத் தகர்க்கப் போகிறாயா? Towel-headed Terrorist!” திட்டித் தீர்த்தார்கள்.

மார்ச் 2008 வரை பொறுத்துப் பார்த்தார் சகோதரி சூசன். அதன் பின்னர், Equal Employment Opportunity Commission என்ற சட்டப் பாதுகாப்புத் துறையிடம் தன் முறையீட்டை வைத்தார். அந்தத் துறையும் தனது புலனாய்வைத் தொடங்கிற்று. இதன் பிறகே, எதிரி ஏவுகணைத் தாக்குதல்கள் கடுமையாயின! இதையொட்டி நிகழ்ந்ததுதான் climax எனும் உச்ச கட்டச் சோதனை! அதுவே சூசனை வன்மையாக இயக்கிற்று!

சூசனின் மேலதிகாரி ஒரு நாள் அவரருகில் வந்து நின்று, ஆத்திரத்துடன் அவருடைய ஹிஜாபைப் பிடித்திழுத்தார்! அவ்வளவுதான்! பெண் சிங்கம் கர்ஜிக்கத் தொடங்கிற்று! AT&T நிறுவனத்தை எதிர்த்துக் குரலெழுப்பினார் சகோதரி சூசன் பஷீர்!
“இந்த மேலதிகாரியைப் பணி நீக்கம் செய்யவேண்டும். அல்லது என்னை இந்த அலுவலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவேண்டும்.” நியாயமான கோரிக்கை. இவற்றுள் ஒன்றும் நிகழவில்லை. ஆண்டுச் சம்பளம் 70,000 டாலர் கிடைத்துவந்த தனது பணியைத் தொடர மனமின்றி, ஒன்பது மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டார் சூசன். அதன் பின் ஒரு நாள் அலுவலகம் வந்தவருக்கு, தன்னையே பணி நீக்கம் செய்த எழுத்தாணை ஆயத்தமாக இருந்தது!

அடுத்து சூசன் செய்தது, நீதிமன்ற முறையீடு! இதைச் செய்துவிட்டு, அமெரிக்காவின் கடைக்கோடிக்குப் போய், ‘ஆன்கரேஜ்’ என்ற ஊரில் ஒரு சிறு பணியில் அமர்ந்து, தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

“என்னைப் பணி நீக்கம் செய்ததுகொண்டு, தான் விரும்பிப் பணி செய்துவந்த ஊழியர் ஒருத்தியை இழந்துவிட்டது, AT&T நிறுவனம். நான் எனது வேலையை விட விரும்பவில்லை. ஏனெனில், அவ்வளவுக்கு என் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தேன். எனக்கே ஓர் ஆத்ம திருப்தி, நான் எனது நாட்டு முன்னேற்றத்தில் என் பங்களிப்பை முறையாகச் செய்கிறேன் என்று. இப்போது அந்த மோசமான நிர்வாகத்தின்கீழ் வேலை செய்யவில்லை என்பதுகொண்டு, நான் மகிழ்கின்றேன்.

ஆனால், எனது நாட்டின் பொருளாதாரச் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், எனது வாழ்க்கையை எத்துணைப் போராட்டத்துடன் மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று நினைக்கும்போது, என் இதயம் கணக்கிறது.” வேதனைப்படுகிறார் சகோதரி சூசன் பஷீர்.

வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்று, அவருடைய இல்லற வாழ்விலும் விரிசல் கண்டுள்ளது! ஆம், கணவர் பஷீரிடமிருந்து விவாக ரத்துக் கோரி இப்போது விண்ணப்பமும் செய்துள்ளார் சூசன்!

வந்தது ‘ஜாக்சன் கவுன்டி’ நீதித் துறையின் சட்டத் தீர்ப்பு! AT&T நிறுவனம் சகோதரி சூசனுக்கு ஐந்து மில்லியன் டாலர் இழப்புத் தொகை கொடுக்கவேண்டும்! அது மட்டுமன்று. சூசன் இழந்த வேலைக்குப் பகரமாக அந்த நிறுவனம் 1,20,000 டாலர் சூசனுக்குக் கொடுக்க வேண்டும்; இது தவிர, வழக்கறிஞருக்குக் கொடுக்கவேண்டிய தொகை பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்!

AT&T இத்தீர்ப்பை எதிர்த்து மறு முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளது. அது தோல்வியடைந்து, இறுதி வெற்றி உண்மைக்கே என்று நாமனைவரும் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோமாக!

நன்றி :அதிரை, tntj tabuk maa.

--------------------------------------




அசத்தும் எகிப்திய மாணவி ஆயிஷா முஸ்தபா...

எகிப்தை சேர்ந்த 19-வயது மாணவியான ஆயிஷா முஸ்தபா, விண்வெளி ஓடங்களுக்கான புதிய உந்து யுக்தியை (Propulsion device) கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்காக காப்புரிமையையும் பெற்றுள்ளார்..! மாஷாஅல்லாஹ். சகோதரி ஆயிஷாவின் இந்த கண்டுபிடிப்பானது, விண்வெளி பயணங்கள் பாதுகாப்பானதாக, எளிதாக, விலை குறைவானதாக, வேகமானதாக அமைய வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சுப்ஹானல்லாஹ்.....இது குறித்து மேலும் படிக்க...

இது குறித்த லிங்கை கொடுத்து விளக்கமளித்த அஹமது ஆஷிக், முஹம்மது ஆஷிக்குக்கு நன்றி!


http://thenextweb.com/africa/2012/05/18/19-year-old-girl-in-egypt-invents-a-spacecraft-propulsion-device/

Saturday, May 19, 2012

ஜெயாவின் ஓராண்டு கால சாதனை!

'வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி.

-குறள் 55:542

என்கிறார் வள்ளுவர். அதாவது உலகில் எல்லா உயிர்களும் வானத்திலிருந்து பொழியும் மழையை நம்பி வாழ்கின்றனர். அதே போல் அரசனது நடுவுநிலையான நீதி நெறியை நம்பிக் குடி மக்கள் வாழ்கிறார்கள். மழை இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை. அரசனது செங்கோல் சரியில்லை என்றால் குடி மக்கள் துன்பத்தை அனுபவிப்பர் என்கிறார் வள்ளுவர்.



தனது அரசின் ஓராண்டு கால சாதனையை விளக்கி ஜெ அரசு இந்தியா முழுக்க பத்திரிக்கை விளம்பரம் கொடுத்ததில் அரசுக்கு செலவு 25 கோடி ரூபாயாம். சென்னை டெல்லி மும்பை போன்ற பெரு நகரங்களில் வெளியாகும் தேசிய பத்திரிக்கைகளுக்கு முழு பக்க விளம்பரத்தைக் கொடுத்து பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. அடுத்த பிரதமராக டெல்லியில் உட்காரும் ஆசை அம்மையாருக்கு வந்து விட்டதோ என்னமோ தெரியவில்லை. :-(.




இவர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த முதல் சாதனை புதிய சட்டமன்றத்தை மாற்றி பழைய சட்டமன்றத்துக்குள் குடியேறியது. இதில் எத்தனை கோடி வீணாக்கப்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. பால் உயர்வு, பேரூந்து கட்டண உயர்வு, மின் தடை, விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், என்று இவரது சாதனை பட்டியல் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. நேற்று கூட நமது மரியாதைக்குரிய நித்தியானந்த சுவாமிகளும் அம்மாவின் ஆசியோடுதான் தான் மதுரை ஆதீனமாக பதவி ஏற்றுள்ளேன் என்று அம்மாவின் அடுத்த சாதனையையும் பட்டியலிடுகிறார்.

மற்றொரு சாதனையாக இலவசங்களை வாரி வழங்குகிறார். இதனால் அரசு கஜானா அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதே என்ற கவலை எல்லாம் இவருக்கு இல்லை. காலியான கஜானாவை நிரப்ப நமது குடி மகன்கள் தயாராகவே இருக்கின்றனர். ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாகி சமூகத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது.



இன்று வந்த பத்திரிக்கை செய்தியை பாருங்கள்:

விழுப்புரம்: குடிபோதையில் டிரைவர் லாரியை ஓட்டியதால் 2 மாணவர்கள் பலியானார்கள். விழுப்புரம் அருகே டி என் 27 இ 7565 என்ற பதிவெண் கொண்ட லாரி அதிவேகத்தில் சென்று டிரான்ஸ்பார்மர்கள் மீது உரசியது. பின் நிற்காமல் தறி கெட்டு சென்ற லாரி யமஹா வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேல்முருகன் என்ற பாலிடெக்னிக் மாணவன் மீது மோதி விட்டு சென்றது. இதில் சம்பவ இடத்தில் வேல்முருகன் பலியானார். சிறிது தொலைவு சென்ற லாரி நடந்து கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த சிவ வடிவேல் என்ற ஐ.டி.ஐ., மாணவன் மீது மோதியது. வடிவேலுவும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் லாரியை நிறுத்த முயற்சி செய்தனர். இருந்தபோதிலும் அங்கிருந்து தப்பி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. டிரைவர் தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் பொது மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் டிரைவர் காங்கேயத்தை சேர்ந்த மணி என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. வில்லியனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த அந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர் பெற்ற அந்த இழப்பை எத்தனை லட்சம் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியுமா?

டாஸ்மார்க் கடைகளை இன்னும் எந்த அளவு லாபத்தில் இயக்கலாம் என்று தற்போது அரசு யோசித்து வருகிறதாம். ரேஷன் கடைகளிலும் இனி சாராயம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

வறுமைக் கொட்டுக்கு கீழ் உள்ள மக்களை அதிகமாகக் கொண்ட ஒரு மாநிலத்தின் ஆட்சியாளர் இவ்வாறு ஊதாரித் தனமாக செலவுகள் செய்யலாமா என்றும் சாராயக் கடைகளை இந்த அளவு பெருக விடலாமா என்றும் கேட்க வேண்டியவர்கள் சட்டமன்றத்தில் கேட்கட்டும். இது தான் நம்மால் முடிந்தது.

ஊதாரித் தனமாகச் செலவுகளை செய்து விட்டு துண்டு விழும் பட்ஜெட்டுக்கு உடன் உலக வங்கியில் வட்டிக்கு பணம் வாங்கி சரி கட்டும் நமது அரசுக்கு எச்சரிக்கையாக வருகிறது இந்தக் கட்டுரை.

திவாலாகும் யூரோ தேசங்கள்!





இந்த நிலை நீடித்துக் கொண்டே போனால் இன்னும் ஒரு 20 அல்லது 30 ஆண்டுகளில் வட நாட்டு பாலை நிலங்கள் போல் நமது தமிழ்நாடும் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அந்த நிலை நான் பிறந்த மண்ணான தமிழகத்துக்கு வராது இருக்க எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறையிடம் பிரார்த்திக்கிறேன்.



இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்’ “நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டும் சுகங்களிலேயே பதவிப் பால் தான் இன்பமானது. பாலை மறக்க வைப்பதன் துன்பத்திலேயே பதவிப் பாலை நிறுத்துவதுதான் மோசமானது.”

- (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, புகாரி 7148)

Thursday, May 17, 2012

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

-குர்ஆன் 10:5


என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. 'லியா அன்' என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் 'வெளிச்சம்' என்றும் பன்மையில் 'வெளிச்சங்கள்' என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம்.

அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும்.

சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் 'நிறமாலை' (spectrascope) நோக்கி என்கிறோம்.

இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே 'லியாஅன்' என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.

குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'அஸ்ஸ்ம்ஸ லியாஅன்' என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் 'நூர்' என்ற வார்த்தையும் 'லியாஅன்' என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட 'நூர்' என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும்.

ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.




இனி குர்ஆன் சந்திரனுக்கு 'நூர்' என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தியது என்பதையும் பார்ப்போம். அதற்கு முன்பாக எதிரொளிப்பு என்பதற்கு விக்கி பீடியா தரும் விளக்கத்தையும் பார்ப்போம்.

எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.

இனி 'நூர்' என்ற அரபி வார்த்தைக்கு அரபு அகராதியில் வரும் சில ஆங்கில வார்த்தைகளைப் பார்ப்போம்.
Illumination- ஒளியூட்டுதல்
Glow- ஒளிர்வு, பிரகாசம்
Gleam - பிரதிபலிக்கும் ஒளி
Flare – வெளிப்பாடு




சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனிடமிருந்து பெறப்பட்ட ஒளியையே பிரதிபலிக்கிறது. இங்கு நூர் என்ற வார்த்தைக்கு கிடைக்கும் அநேக விளக்கங்களும் பிரதிலிப்புக்கு கையாளப்படும் வார்த்தைகளாகவே உள்ளதை எண்ணி வியக்கிறோம். முந்தய காலங்களில் சந்திரன் தனது ஒளியையே பிரதிபலிப்பதாகத்தான் நம்பி வந்தோம். சூரியனின் ஒளியையே சந்திரன் பிரதிபலிக்கிறது என்ற உண்மை சமீப காலமாகத்தான் அறியப்பட்டது.

'அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான்: சூரியனை விளக்காக அமைத்தான்'
-குர்ஆன் 71;16


திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.

சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். குர்ஆன் இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. இரண்டு கோள்களும் ஒளியை உமிழ்ந்தாலும் அதன் தன்மைகள் மாறுபடுவதால் அங்கு வார்த்தைகளும் மிக துல்லியமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படுகிறது. இந்த அறிவை எல்லாம் முகமது நபி தனது கற்பனையால் யூகித்து குர்ஆனை உருவாக்கியிருக்க முடியுமா என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். மேலும் தற்போது நம் வசதிக்கேற்ப குர்ஆனில் மாற்றி விட்டோம் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் முகமது நபியால் சரி பார்க்கப்பட்டு உஸ்மான் அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனின் இரண்டு பிரதிகள் இன்றும் நம் கைவசம் உள்ளது. அதை வைத்து உறுதி செய்து கொள்ளலாம்.

இறைவனே அறிந்தவன்.

Tuesday, May 15, 2012

ஏர் இண்டியா பண்ணும் ரவுசு தாங்க முடியலப்பா!

ஏர் இண்டியா பண்ணும் ரவுசு தாங்க முடியலப்பா!


இரண்டு நாட்கள் முன்பு முஜிபுர் ரஹ்மான் என்ற பெங்களூர் ஆளுக்கு ஏர்இண்டியாவில் புக் செய்து அனுப்பினேன். புக் பண்ணும் போதே 'சவுதியாவில் புக் பண்ணு பாய்! அது தான் வசதி' என்று சொன்னவரிடம் 'நம் நாட்டு ஏர் இந்தியாவை நாம் பயன் படுத்தாமல் வேறு யார் பயன்படுத்துவது' என்று தேசப் பற்றை ஊட்டியவுடன் அவரும் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு கணக்கையும் முடித்துக் கொண்டு சென்று விட்டார். ஊழியர்களுக்கு விமான டிக்கெட் எடுப்பது மற்றும் அவர்களின் கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதும் எனது வேலைகளில் ஒன்று.(ஸ்...ஸ்...ஸ் ஒரே ஆள் எத்தனை வேலையை பார்க்கிறது) :-)

மறு நாள் ஏர்போர்டிலிருந்து முஜிபுடைய போன்:

'க்யா பாய்! ஃபஸாதியேனா முஜே! அப் மே கஹா ஜாவும்? மே பைலா சவுதியா ஃபிளைட் ஆப் சே மாங்கா! ஏர்இந்தியா வாலா கொய் ரெஸ்பான்ஸ் நய்கர்ராஹே'

'என்ன பாய்! பிரச்னையிலே மாட்டி விட்டுடீங்களே! நான் அப்பவே சவுதியா பிளைட் கேட்டேன்! இப்போ ஏர் இந்தியா பிளைட் ஸ்ட்ரைக்காம். இத்தனை லக்கேஜீகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஏர் இந்தியா ஆட்கள் எந்த வித உதவியும் செய்யவில்லை".

என்று சற்று கோபத்தோடு கத்தினார். இரண்டு வருடத்துக்கு பிறகு ஊர் செல்லும் போது இது போன்ற தடங்கல் வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது? பிறகு ஏர்லைன் ஆபிஸூக்கு போன் செய்து ரூம் கொடுத்து சாப்பாடும் கொடுத்து மறுநாள் அனுப்பி வைத்தது ஏர் இந்தியா நிர்வாகம்.

ஸ்ட்ரைக் பண்ணப் போகிறார்கள் என்று தெரிந்தும் இவர்கள் டிக்கெட்டை ஏன் இஸ்யூ பண்ண வேண்டும்? இது எத்தனை பேருக்கு பிரச்னை? முதல் நாளே டிக்கெட்டை நிர்வாகம் கேன்ஸல் செய்திருந்தால் பயணிகள் வேறு விமானத்தை நாடியிருப்பார்கள் அல்லவா? இந்த ஸ்ட்ரைக் எழவை நம் நாட்டில் வைத்துக் கொள்ளக் கூடாதா? எல்லா ஏர்லைன்ஸூகளும் தங்கள் பாஸஞ்சர்களை பிரச்னையில்லாமல் கொண்டு சேர்க்க ஏர் இந்தியா பாசஞ்சர்கள் கவலையோடு ஏர்போட்டில் அமர்ந்திருப்பது எவ்வளவு இழுக்கு? டிக்கெட் ஓகே செய்தவர்களை நாட்டில் இறக்கி விட்டு அதன் பிறகு உங்கள் ஸ்ட்ரைக்கை வைத்துக் கொள்ளக் கூடாதா?

ஏற்கெனவே பல கோடிகள் நஷ்டத்தில் இயங்குகிறது ஏர் இந்தியா நிறுவனம். இதில் இவர்களுக்கு இன்னும் வசதிகளை செய்து கொடுக்க நிர்வாகத்திடம் பணம் ஏது? மற்ற அரசு ஊழியர்களோடு ஒப்பிடும் போது சிறந்த சம்பளத்தையே பெறுகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த நிறுவனத்துக்கு இந்த ஸ்ட்ரைக்கால் இன்னும் பல கோடி நட்டம். இதை எல்லாம் நானோ நீங்களோதான் வரியாக அரசுக்குக் கட்டித் தொலைக்க வேண்டும். சாமான்யன் வரிப் பணம் எந்த அளவு சீரழிக்கப்படுகிறது என்பதற்கு இது வெல்லாம் ஒரு உதாரணம்.






வேலைக்கு வராத பைலட்டுகள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்ற பொய்யான காரணத்தை வேறு நிர்வாகத்துக்கு சொல்லியிருக்கின்றனர். எந்த பைலட்டுமே வீட்டில் இல்லை. எந்த டாக்டரையும் சென்று சந்திக்கவும் இல்லை. இவர்கள் மேல் இப்போது நடவடிக்கை எடுக்கப் போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஸ்ட்ரைக்கால் நம் நாட்டு தொழிலாளர்களின் எத்தனை விசா கேன்சல் ஆனதோ தெரியவில்லை. பல வருடங்கள் வேலை செய்தவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டுமே என்று சில கம்பெனிகள் வந்த வரை லாபம் என்று திரும்ப விசாவையும் அனுப்ப மாட்டார்கள். இந்த நஷ்டத்தை எல்லாம யார் ஈடு கட்டுவது?.

இங்கு சவுதியா பிளைட் இதுவரை ஒரு நாள் கூட ஸ்ட்ரைக் ஆனதாகவோ லேட்டானதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. ஸ்ட்ரைக் செய்வதும் இங்கு தடை செய்யப்பட்டது. சம்பளப் பிரச்னை என்று எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்கும் செல்லலாம். நிர்வாகத்தோடும் பேசலாம். அனைத்தும் வேலை நடந்து கொண்டிருக்கும் போதே செயல்பாட்டுக்கு வரும். இதை ஏன் நம் அரசாங்கம் பின் பற்றக் கூடாது.

இன்னொரு முறையும் உள்ளது. அதாவது ஒரு நிறுவனத்தை தொடங்கும் போதே ஊழியர்களையும் 10 சதவீதம் அல்லது 20 சதவீதம லாபத்தில் பங்கு என்று அவர்களையும் பங்குதாரர்களாக்கி விட்டால் பிரச்னை முடிந்தது. லாபம் நஷ்டம் இந்த இரண்டிலும் நிறுவனமும் ஊழியர்களும் பங்கு கொள்வதால் தேவையற்ற ஸ்ட்ரைக்குகள் தொழிலாளர்களாலேயே முடக்கப்படும். சம்பளத்தையும் தொழிலாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்தி கேட்டுவிட முடியாது. ஏனெனில் லாபத்தை அனுசரித்தே சம்பளமும் உயரும். இதை ஏன் ஏர் இந்தியா நிர்வாகம் செயல்படுத்திப் பார்க்கக் கூடாது?. ஊழியர்களை வேலையில் சேர்க்கும் போதே ஸ்ட்ரைக் செய்ய மாட்டோம் என்ற உறுதி மொழியையும் அவர்களை பங்குதாரர்களாக ஆக்கும் ஆவணமும் பெற்றுக் கொண்டால் பிறகு எங்கிருந்து முளைக்கும் ஸ்ட்ரைக்?

தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த கம்யூனிஸ சித்தாந்தம் இன்று பல தொழிலாளிகளின் வயிறு காய்வதற்கு உலகம் முழுக்க காரணமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. எனது கேரள நண்பர் ஜார்ஜ் என்னிடம் 'தமிழகத்தில் சேர்ந்து தொழில் பண்ணலாமா?' என்று முன்பு கேட்டார். 'ஏன் கேரளாவில் காடுகள் அதிகம். அங்கு தொடங்குவதுதானே நல்லது' என்றேன். 'மனுஷன் அங்க தொழில் பண்ண முடியுமா? ஒரு வருடம் நன்றாக நிறுவனம் ஓடினால் மறுவாரமே கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்வார்கள். பணம் போட்ட நானும் நீயும் வயிறு எரிந்து முளையில் உட்கார வேண்டியதுதான்' என்றார். பல மலையாளிகள் நம் தமிழகத்தில் தொழில் தொடங்குவதின் சூட்சுமம் தற்போது விளங்குகிறதல்லவா? கம்யூனிஸ்டுகளான இவர்கள் தாங்களும் வாழ மாட்டார்கள். மற்றவர்களையும் வாழவும் விட மாட்டார்கள்.

தற்போது பள்ளி விடுமுறை நாள். அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளோடு தாயகத்துக்கு திரும்பும் நேரம். அடுத்து உம்ராவுக்காக மெக்கா வருவதற்கு பல ஆயிரம் பேர் தங்களின் சேமிப்புகளோடு காத்திருப்பர். இவை எதையும் கணக்கில் எடுக்காது சிறு பிள்ளைத்தனமான இந்த ஸ்டிரைக்கினால் இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். அரசால் சமாளிக்க முடியவில்லை என்றால் உடன் தனியார் வசம் கொடுப்பதே சிறந்தது. இதற்கு வழக்கம்போல் கம்யூனிஸ்டுகளும் எதிர்கட்சிகளும் கிடைக்கும் தேர்தல் கால ஓட்டை கணக்கு செய்து எதிராக திரும்புவர். இதுதான் நடக்கும்.

யஹ்யா பின் சுல்தான் என்ற அரபி நம் ஏர் இந்தியாவைப் பற்றி சொல்வதைப் பார்ப்போம்.
"This is the worst Airlines. No passenger prefers this airlines, when no other flights are available then only people choose Air India, its punctuality and service both are low and poor standard".-Arab News comment.

ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த அரபுகள் இன்று ஏர் இந்தியாவைப் பார்த்து கமெண்ட் அடிக்கும் நிலைக்கு நமது நாட்டு நிர்வாகம் சென்று விட்டது.

Times of India comments:

gail_dj (kuwait)
14 May, 2012 06:36 PM
When Air India had wet-leased air crafts long ago they were doing well. After is merged it was more misery, who is to be blamed for all this P.P. So many days strike and flights cancelled, see the amount of revenew lost. Wet-lease aircrafts and start operations is a better option. This can't go on for so long. What are you waiting for,There is a limit to everything ,the longer the delay, the worse it will get. People will soon loose faith in Air India and business will be hampered. Show them how nobody is indispensible. Wake up and start a new leaf.

Muskan (Andheri, Mumbai)
14 May, 2012 06:20 PM
what is the prime minister doing?? our flights are being cancelled and they are just sitting cool!!!!! and what is the strike for..... the pm should take a big action against them ....THEY SHOULD FIRE THOSE PILOTS WHO ARE ON ASTRIKE AND HIRE NEW AND GOOD PILOTS... they should sign a contract before hiring pilots that the cant go on a strike or take holidays unless the have a big and major reason............The PM should sew the pilots for taking a strike on such a stupid topic..........

Anna T (Hyderabad)
14 May, 2012 12:38 PM
What a fiasco? Everybody is taking people for ransom. How long should we tolerate this kind of nonsense? what is the Prime Minister doing or thinking on this subject? Can we get some response from him ? What kind of leadership is this? Silence and inaction is not good. It is time to take some responsible action.
.



.
.

Monday, May 14, 2012

ரஜினி காந்திடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சல்மான்கான்!

ரஜினி காந்திடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சல்மான்கான்!



ரஜினியின் பஞ்ச் டயலாக்!

'சச்சின் அடித்தால் சிக்ஸர்: ரஜினி அடித்தால் ஸ்ட்ரெச்சர்'

“camera does not shoot Rajini: Rajini shoots the camera”


ஹா..ஹா...ஹா...

இது எப்படி இருக்கு!:-)

------------------------------------------


80 வயதை நெருங்கும் இந்த முதியவருக்கு உள்ள வலிவு தற்கால இளைஞர்களுக்கு இருக்கிறதா என்பது கேள்விக் குறியே! குவாலியரில் காய்கறி கடையை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வரும் இந்த முதிவரைப் பார்த்து ஃபராகான் கேட்கிறார்:

ஃபராகான்: சாச்சா! இன்று என்ன ஸ்பெஷல் செய்யப் போகிறீர்கள்?

சாச்சா: இரண்டு இளைஞர்களை கீழே தள்ளி அவர்களை வெல்லப் போகிறேன், கத்தியைக் கொண்டு சில சாகஸங்களை நடத்தப் போகிறேன். கயிற்றினால் இளைஞர்களை கீழே தள்ளப் போகிறேன்.

ஃபராகான்:முதல்ல ஒரு மருத்துவரை நமது பக்கத்தில் வைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

சல்மான் கான்: சாச்சா! உங்ககிட்டே எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை இப்பொழுது நிரூபியுங்கள். தொடங்கட்டும்....

----------------------------------------


இசை அறிவை அடகு வைக்குமா?



இசை ஒரு மனிதனை ஒரு கூட்டத்தை எந்த அளவு தன்னிலை மறக்கச் செய்யும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சிறந்த உதாரணம். ராக் ஸ்டார் இசை அறிமுக விழாவில் பெரியோர் வரை சிறியவர் வரை எந்த அளவு தங்களை மறந்து இசையில் லயித்துள்ளார்கள் என்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.

unbelievable music,although i couldn't understand the words .AR rahman is a god of music..
ஒரு ரசிகரின் வெறித் தனமான பின்னூட்டம். இதுதான் கூடாது.

--------------------------------------



பஞ்சாபி மொழியில் அமைந்த பாடல்கள் எப்போதும் நமது மனதை தாலாட்டும் வகையில் அமைந்திருக்கும். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியா விட்டாலும் அந்த பாடல்களில் உள்ள மனதை தொடும் ராகங்கள் நம்மை அந்த பாடல்களை சிறிது நேரம் கேட்க வைத்து விடுகிறது. உள் மனத்தில் இருந்து வெளிப்படும் கபடமில்லாத எண்ண ஓட்டங்களை நமது கிராமிய பாடல்களில் நிறைய கேட்டிருக்கிறேன். இந்த பஞ்சாபி பாடல்களில் உள்ள சில ராகங்கள் நமது தமிழ் நாட்டு கிராமிய பாடல்களை ஒத்திருப்பதை பல இடங்களில் பார்க்கலாம். உருது மொழியிலேயே சில மாற்றங்களை செய்து ஒரு தனி மொழியாக்கியிருக்கிறார்கள். உருது மொழியைப் போலவே பஞ்சாபியும் மொகலாயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

டிஸ்கி: பதிவு வெளியிடும் அவசரத்தில் 'போலி ரஜினி' என்பதை தலைப்பில் குறிப்பிட மறந்து விட்டேன். ஹி...ஹி...ஹி....





Saturday, May 12, 2012

உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா?

உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா?


சவுதி அரேபியாவின் வெளி விவகாரத்துறை சவுதி-இந்திய இளைஞர்களின் கூட்டமைப்பின் (Saudi-Indian Youth Forum) நிறைவு நாளை வியாழக்கிழமை ரியாத்தில் இனிதே நிறைவு செய்தது. வெளி விவகாரத் துறையை கவனித்து வரும் நிஜார் மதனி, கலாசார பிரிவை நிர்வகித்து வரும் யூசுப் அல் சதோன், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் ஹமீத் அலி போன்ற முக்கியஸ்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கௌரவித்தனர். இதற்கு முன்னால் 26 பேர் அடங்கிய சவுதி அரேபிய இளைஞர் குழுமம் ஒன்று சென்ற மார்ச் மாதம் ஹைதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற முக்கிய கணிணி நகரங்களுக்கு விஜயம் அளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போன்ற நிகழ்வுகள் பல தரப்பட்ட மார்க்கங்களை பின்பற்றும் இளைஞர்கள் கலந்துரையாடி தங்களுக்கிடையே உள்ள கசப்புகளை நீக்க துணை புரிகிறது.

இந்தியாவுக்கான சவுதி தூதர் இது பற்றி கூறும் போது 'மன்னர் அப்துல்லாவின் ஏற்பாட்டின் படி இந்த இரண்டு நாடுகளின் வேறுபட்ட கலாசார இளைஞர்கள் சமூகங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த பாடுபடுவர். இஸ்லாமின் உண்மையான தத்துவம் சகல மார்க்கங்களையும் மதித்து அவர்களோடு முறுகல் நிலையை உண்டாக்காமல் சகோதரத் தன்மையோடு வாழ வேண்டும் என்று போதிப்பதே! அத்தகைய இலக்கை எட்டுவதற்கு இது போன்ற அமைப்புகள் தற்போது அவசியம்' என்கிறார்..




இந்த அமைப்பு இதற்கு முன் மூன்று கலந்தாய்வுகளை இதற்கு முன் மூன்று நாடுகளில் நடத்தி முடித்துள்ளது. சைனா, பிரேசில், ஜெர்மனி போன்ற மூன்று நாடுகளில் இந்த கூட்டம் முன்பு வெற்றிகரமாக நடத்தப் பட்டு நான்காவது மாநாடாக சவுதி அரேபியா ரியாத்திலும் சென்ற வியாழக்கிழமை நடந்து முடிந்துள்ளது.

நிஜார் மதனி தனது பேச்சில் 'இளைஞர்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும், இந்த உலகம் முழுக்க எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இந்த மாநாடு பயன்பட வேண்டும்' என்று குறிப்பிட்டார்.



யூசுப் அல் சதோன் தனது பேச்சில் 'இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் சவுதி இளைஞர் இளைஞிகளை நான் வெகுவாக பாராட்டுகிறேன். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இளைஞர்களோடு ஒரு அமைப்பாக செயல்பட்டு பல முன்னேற்றங்களை இந்த அமைப்பு பெற்றுள்ளது. இந்த அமைப்பு இவ்வளவு சிறப்பாக தனது பணியினை செய்வதற்கு உறுதணையாக இருக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இந்த விழாவில் மார்ச் மாதம் சவுதி மாணவர்கள் குழு இந்தியாவில் ஹைதரபாத், பெங்களூர், மற்றும் டெல்லி சென்று அங்கு கலந்து கொண்ட நிகழ்வுகளை எல்லாம் காணொளியாக காண்பிக்கப்பட்டது. மேலும் இந்த மாணவர்கள் குழு அரசியல் தலைவர்களையும், கணிணி வல்லுநர்களையும், சந்தித்த நிகழ்வுகளும் காணொளியாக காட்டப்பட்டது.

சவுதி அரேபியாவும் இந்தியாவும் பல துறைகளில் ஒன்றிணைய வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளும் பலன் பெற பல வாய்ப்புகள் உண்டு என்ற செய்தியை சகோதரர் தாவூத் அறிக்கையாக சமர்ப்பித்தார். ஐநாவின் பான் கி மூனுக்கும் இந்த அமைப்பின் சார்பில் உலக அமைதிக்கான கருத்துரைகள் அனுப்பப்பட்டது.

இந்த விழாவில் நமது முன்னால் ஜனாதிபதி ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாமுக்கும் புகழாரம் சூட்டப்பட்டது. பல அறிவு ஜீவிகளும் கௌரவிக்கப்பட்டதோடு விழா இனிதே நிறைவுற்றது.

-அரப் நியூஸ்
12-05-2012

இது போன்ற அமைப்புகள் இன்னும் ஊக்கப்படுத்தப்பட்டு இரு நாடுகளின் கலாசாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். இதில் இரு நாடுகளுக்குமே பலன் உண்டு. படித்த மக்கள் அதிகம் கொண்ட நமது நாடும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சவுதியும் கை கோர்த்தால் இரு நாடுகளும் பல வெற்றிகளை அடையும் சாத்தியம் உண்டு..

மேலும் ஒரு சிறந்த ஆட்சியாளரான அப்துல்லாவை அந்த நாடு பெற்றிருப்பதும் இது போன்ற முன்னேற்றங்களுக்கும் காரணம். வானளாவிய அதிகாரம் இவருக்கு இருந்தும் 'சூரா' கவுன்சில் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் அறிவு ஜீவிகளை அங்கத்தினர்களாக்கி (நம்மூர் மாநிலங்களவை போல) யுள்ளார். அந்த சூரா கவுன்சிலும் குர்ஆனின் சட்டத்தின் படி தங்களின் கருத்துக்களை சட்டமாக்குகின்றன. நவீன பிரச்னைகளையும் எதிர் கொள்கின்றன.

வஹாபியம் வளர்ந்தால் எல்லோரும் ஒரு முழத்துக்கு தாடியுடனும், ஒரு கையில் கத்தியுடனும் மறு கையில் துப்பாக்கியுடனும் வெறி கொண்டு அலைவார்கள் என்ற கருத்து பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. இது எந்த அளவு பொய்யான பரப்புரை என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன. வஹாபியத்தை அதாவது குர்ஆன் ஹதீஸின் படி முடிந்த வரை ஆட்சி செய்ய ஆசைப்பட்டு அதனை உரிய முறையில் செயல்படுத்தி வரும் சவுதி அரேபியாதான் மாற்று கலாசார மக்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற போதனையையும் பண்ணுகிறது.



இவர்கள் பாஷையில் வஹாபியம்(குர்ஆனின் வழி) வளர்ந்தால் மூடப் பழக்கங்கள் ஒழியும்: மதங்களுக்கிடையே நல்லுறவு நிகழும்: முஸ்லிம்கள் அனைவரும் படித்த மக்களாக மாறுவர்: பெண்களின் முன்னேற்றம் மிகுதமாக இருக்கும்: அறிவார்ந்த சமூகம் ஒன்று உருவாகும். அப்படி ஒரு சமூகம் நமது நாட்டில் உருவானால் இந்தியன் என்ற வகையில் அனைவரும் பெருமைப்படக் கூடிய நிகழ்வாகுமல்லவா!

-----------------------------------------

சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!

மன்னர் அப்துல்லா என் தாய் நாட்டுக்கு அரசு முறைப் பயணத்தை முடித்து விட்டு வந்திருக்கும் இந்த தருணத்தில் என் எண்ணங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் வி.ஆர்.சோன்டி. இந்து மதத்தைச் சேர்ந்தவன்.. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.

முதலாவதாக 1955 ஆம் வருடம் மதிப்பிற்குரிய மன்னர் அப்துல் அஜீஸ் இந்தியா விஜயம் செய்திருந்தார். மும்பை நகரத்தில் திறந்த காரில் வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு நிறைய தங்க காசுகளை இலவசமாக அளித்தார். ஏழை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாங்கிச் சென்றார்கள. அது போல் தங்க நாணயம் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்களோடு மக்களாக அனைவரையும் ஒன்றாக நினைத்து அன்பு செலுத்தியது என் மனக்கண் முன் இன்றும் நிழலாடுகிறது.

இரண்டாவது நிகழ்வு 1976 ஆம் ஆண்டு நடந்தது. உலக வங்கி துங்கபத்ரா அணையின் பாக்கி உள்ள கட்டுமான பணிகளை முடிப்பதற்கு 120 மில்லியன் டாலரை இந்திய அரசிடம் கேட்டது. இதை கேள்விப் பட்ட மன்னர் காலித் அப்போதய இந்திய தூதரை அழைத்து அதற்கான ஒரு மாபெரும் தொகைக்கான காசோலையை தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். இந்த தொகை சவூதி மக்கள் இந்திய மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்பு என்று மன்னர் காலித் அப்போது கூறினார். அவருக்கு இந்திய மக்களின் பால் உள்ள அன்பை எண்ணி அப்போது வியந்தேன்.

அந்த அணை உள்ள நிலப் பரப்புக்கு பக்கத்தில் தான் என் கிராமம் உள்ளது. அந்த அணையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மன்னர் குடும்பத்தின் அந்த அன்பளிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்த அணையினால் எத்தனையோ ஆயிரம் பேர் தற்போது பயனடைகிறோம்.

சமீபத்தில் இறந்த மன்னர் பஹதுக்காக சொர்க்கம் கிடைப்பதற்காக இறைவனைப் பரார்த்திக்கிறேன். தற்போதய மன்னர் அப்துல்லாவின் ஆட்சியும் சிறப்புற பிரார்த்தித்து, தீராத தலைவலியாய் இருக்கும் இந்தியா காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வர பிரார்த்தித்தவனாக இம் மடலை முடிக்கிறேன்.


வி.ஆர்.சோண்டி, இந்தியானா

வாசகர் கடிதம், அரப் நியூஸ், 1-2-2006

இது போன்ற நல்ல உள்ளங்களைப் பெற்றதால்தான் இந்தியா இன்றும் உலகில் தலை சிறந்த நாடாக மிளிர்கிறது.

-------------------------------------------

இந்த முறை உம்ராவுக்காக மெக்கா இரண்டு மாதம் முன்பு சென்றபோது ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். கஃபாவுக்கு அருகில் மன்னரின் வீடு ஒன்று இருந்தது. ஹஜ்ஜூக்கோ உம்ராவுக்கோ வந்தால் அங்குதான் மன்னர் தங்குவது வழக்கம். இந்த முறை அந்த அரண்மனை போன்ற வீடு இடிக்கப்பட்டு கஃபாவின் விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த பாகிஸ்தானியிடம் இது பற்றிக் கேட்டேன். 'நாளுக்கு நாள் உலக மக்கள் ஹஜ்ஜூக்கு வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதய இடம் போதவில்லை யாதலால் அருகில் உள்ள ஹோட்டல்கள் அரண்மனைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு உலக முஸ்லிம்களின் வசதிக்காக கஃபா விஸ்தரிக்கப்படுகிறது. எனவே மன்னர் தனது வீட்டை சற்று தூரத்துக்கு மாற்றிக் கொண்டார். அவரின் வீட்டை இடிக்கும் பணிதான் தற்போது நாங்கள் பார்த்து வருகிறோம்' என்றார்.

நம் ஊரில் ரோட்டை அகலப்படுத்தவதற்காக ஆக்கிரமித்து புறம் போக்கு இடத்தில் கட்டப்பட்ட பல வீடுகளை கடைகளை அதிகாரிகள் இடிக்கச் சென்றால் 'நான் வட்டம். நான் மாவட்டம்' என்று திமுக கொடியையோ அதிமுக கொடியையோ ஏற்றிக் கொண்டு தர்ணா செய்யும் உடன் பிறப்புக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் பணம் கொடுத்து கட்டிய வீட்டை உலக முஸ்லிம்களுக்காக இடிக்கச் சொல்லி இன்னும் சற்று தூரம் சென்று விட்ட இந்த மன்னர் குடும்பத்தையும் இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.

சவுதி அரேபியாவைப் பற்றிய சில புதிய செய்திகளை நண்பர் கலையரசன் தொகுத்துள்ளார். அதையும் பார்த்து விடுங்கள்.

டிஸ்கி: உடனே 'பாலாறும் தேனாறும் சவுதியில் ஓடுவதாக நான் பதிவிட்டு விட்டேன்' என்று எதிர் பதிவு போட வேண்டாம். சவுதியிலும் பல குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகம் இருக்கிறது. அதாவது 'பாலாறும் தேனாறும் ஓடா விட்டாலும் குறைந்தபட்சம் கூவம் ஓடுவதில்லை' என்பதே நான் சொல்ல வருவது. :-)





Friday, May 11, 2012

இந்தப் பறவை நம்மிடம் பேசினால்!





மரத்தின் வலுவை நம்பி நான்

அந்தக் கிளையில் உட்காரவில்லை.

எனது இறக்கையின் வலுவை நம்பி

அந்தக் கிளையில் உட்கார்ந்தேன்.

கிளை முறிந்து விட்டதே என்ற

கவலை எனக்கில்லை. அந்த

கிளை முறிந்தால் தான் என்ன?

என் இறக்கை எனக்கு உதவிடும்

என்றுதான் நான் நினைப்பேன்.

மனிதா! கை கால்கள் இருந்தும்

நாடு பல திட்டங்களை கொடுத்தும்

கல்வியை இலவசமாக்கி கொடுத்தும்

பிச்சை எடுத்து பொய் சொல்லி

திருடி வாழ்கிறாயே! என்னிடமிருந்து

கற்றுக் கொள்ளக் கூடாதா?

சிந்தனா சக்தி என்ற ஒன்று

உனக்கு இருந்தால்.....




--------------------------------------------



என்ன கண்ணுங்களா! கூட்டமா வந்தா பயந்துடுவேனா? ரஜினி, எம்ஜிஆர் படங்கள் எல்லாம் பார்த்ததில்லையா! ஒருத்தரே அத்தனை பேரையும் பறந்து பறந்து அடிச்சதை நான் பார்த்திருக்கேன்ல... மோதிப் பார்த்துருவமா?


ப்

Tuesday, May 08, 2012

காஷ்மீர் மாநிலத்திலிருந்து பெண் ஐஏஎஸ்!

முக்கிய அறிவிப்பு:

இன்று கழுகு தளத்தில் சென்று இஸ்லாமியர்கள் பெயரில் மைனஸ் கள்ள ஓட்டுக்களைப் போட்டு அந்த பதிவை தமிழ்மண மகுடத்திலிருந்து இறக்கி எனது பதிவில் வந்து அதே போல் கள்ள பிளஸ் ஓட்டுக்களைப் போட்டு மகுடத்தில் ஏற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் மற்ற பதிவர்களும் வாசகர்களும் இஸ்லாமிய பதிவுகளின் மீது காழ்ப்புணர்வு கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விளக்கி தமிழ் மணத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஒரு பதிவு வாசகர்களை அதிகம் சென்றடைவது அந்த பதிவின் நம்பகத் தன்மையினாலும் எழுதுபவரின் எழுத்து திறமையினாலுமே ஆகும். இது போன்ற குறுக்கு வழிகளை நானோ மற்ற எந்த இஸ்லாமிய பதிவர்களோ இதுவரை செய்ததில்லை: இனியும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

புரிதலுக்கு நன்றி!






காஷ்மீர் மாநிலத்தின் ஈஸ் அஸ்கர் என்ற 25 வயது இள மங்கை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு

'அகில இந்திய அளவில் நடக்கும் ஒரு தேர்வில் வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும். அதுவும் கடந்த 20 வருடங்களாக முழு காஷ்மீரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெண் என்ற வகையில் பாதுகாப்பும் முக்கியததுவம் பெறுகிறது. எனது பெற்றோரும் எனது உறவினர்களும் நான் இந்த நிலையை அடைய மிகுந்த உறு துணையாக இருந்துள்ளனர்.” என்றார்.

கேள்வி: காஷ்மீரைப் பொறுத்தவரை மேல் படிப்புக்கு செல்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று என்று சொல்லப்ட்டு வருகையில் உங்களின் இந்த முன்னேற்றம் எதைக் காட்டுகிறது?

பதில்: “நான் மட்டும் அல்ல. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் காஷ்மீருக்கும் இந்திய நாட்டுக்கும் திறம்பட பணியாற்றவே விரும்புகின்றனர். லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்ரீநகர் என்று அனைத்து பிரதேச மக்களும் தற்போது படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுத்தால் கண்டிப்பாக தங்களின் திறமையினால் முன்னுக்கு வருவார்கள்.”

காஷ்மீரில் நிலை கொண்டுள்ள நமது ராணுவம் எவ்வளவு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதை ஒரு ராணுவ வீரரே தரும் ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பார்ப்போம்.

-----------------------------------------------------------

இந்திய அரசு அந்த மக்களின் கசப்புகளைப் போக்கி சன்னம் சன்னமாக ராணுவத்தையும் திரும்ப அழைத்து அந்த மக்களின் அன்பைப் பெற முயற்ச்சிக்க வேண்டும். எனது கம்பெனிக்கு அருகில் வேலை செய்து வரும் காஷ்மீரியோடு நிறைய பழகியிருக்கிறேன். பாகிஸ்தான் மேல் அவனுக்கு பயங்கர கோபம். தனது நாடு இந்த நிலைககு சென்றதற்கு முழு காரணம் பாகிஸதானியர்களே என்பான். இந்தியாவின் மீது எப்போதும் ஒரு மரியாதையை அவனது பேச்சில் பார்க்க முடியும். ஆனால் இந்திய ராணுவத்தின் மீது கடுமையான கோபத்தை அவனது பேச்சில் பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் நமது ராணுவமும் தங்களது உயர் அதிகாரிகளை குஷி படுத்தவும், பதவி உயர்வுக்காகவும் எதையும் செய்ய துணிந்து விடுகின்றனர். உதாரணத்திற்கு அப்சல் குருவின் தற்போதய வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.

தற்போது தூக்கு கயிறுக்காக காத்திருக்கும் அப்சல் குருவை பகடைக் காயாக பயன் படுத்தி நாடாளுமன்ற தாக்குதலுக்கு பின்னால் நின்றது “STF” எனும் (SPECIAL TASK FORCE) காஷ்மீர் சிறப்புக் காவல் படைதான். அப்சல் குருவை இந்த பணிக்காக பயன்படுத்திக் கொண்ட சிறப்புக் காவல்படை அதிகாரியின் பெயர் திராவிந்தர் சிங். இவர் காஷ்மீர் சிறப்புக் காவல் பிரிவில் டி.எஸ்.பி என்ற துணை காவல் துறை கண்காணிப்பாளர் பொறுப்பில் சம்பவம் நடந்தபோது இருந்தவர். தற்போது இந்த சிறப்புக் காவல் பிரிவுக்கு (SPECIAL OPERATION GROUP) SOG என்று மாற்றியுள்ளார்கள்.

கஷ்மீரில் இயங்கும் இந்த எஸ்.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் படையை (CRACK COMMANDO FORCE) என்றே எழுத்தாளர்கள் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இவர்களின் அக்கிரமம் கஷ்மீரில் கொடி கட்டிப் பறக்கும். தாங்கள் நடத்த நினைக்கும் எந்த காரியத்துக்கும் முஸ்லிம்களையே கருவிகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

டி.எஸ.பி திராவிந்தர் சிங் முஹம்மது என்பவரை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்றிட வேண்டும் என அப்ஸலை கட்டாயப் படுத்தியுள்ளார். இந்த முஹம்மது என்பவர் நமது நாடாளு மன்ற தாக்குதலின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர். இதே டி.எஸ்.பி திராவிநதர் சிங்தான் முஹம்மதுக்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தந்திட வெண்டும் என்று கட்டாயப் படுத்தியுள்ளார். அத்தோடு நிற்கவில்லை முஹம்மதுக்கு ஒரு கார் வாங்கித் தந்திடவும் அப்ஸலைப் பணித்துள்ளார்.

அப்ஸல் எழுதிய கடிதம் ஒன்றில் தனக்கும் எஸ்டிஎஃப் என்ற நாடாளு மன்றத் தாக்குதலின் நாயகர்களுக்கும் எவ்வளவு நெருக்கமான தொடர்புகள் இருந்தன என்பதை நிரூபிக்க ஓர் மறுக்க முடியாத ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றார். அதுதான் அவரது செல்போன். 'என்னுடைய செல் போனை எடுத்துப் பாருங்கள். நாடாளு மன்றத் தாக்குதலுக்கு முன் நான் எத்தனை முறை காஷ்மீர் சிறப்புக் காவல் படையினரிடம் பேசி இருக்கின்றேன் என்பது தெளிவாகத் தெரிந்திட வரும். அலைபேசி எண்களை நீதி மன்றம் கவனமாகக் கவனிக்குமானால் அதில் எஸடிஎஃப் என்ற கஷ்மீர் சிறப்புக் காவல்படையின் எண்கள் தெரிய வரும். எஸ்டிஎஃப் என்ற கஷ்மீர் சிறப்புக் காவல்படை என்னை இந்த ஈனச் செயலில் பலிகடாவாக்கி விட்டது. இந்த மொத்த கிரிமினல் நடவடிக்கையும் சிறப்புக் காவல் படையினர் மற்றும் சிலரால் திட்டமிட்டு இயக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காவல்படையினரைத் தவிர மேலும் சிலர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சிறப்பக் காவல் படையினருக்கு இதில் நிச்சயமாக முக்கியப் பங்குண்டு. நாடாளு மன்ற தாக்குதலில் நான் தாராளமாக ஈடுபடலாம். வழக்கில் எனது பங்கை பலவீனப்படுத்தி விடுவோம். அதனால் நான் சில நாட்களுக்குப் பிறகு வெளியே வந்து விடலாம் என எனக்கு உறுதி தந்தார்கள். மறுத்தால் எனது குடும்பத்தைப் பூண்டோடு அழித்து விடுவோம் என்றார்கள்.'

ஆதாரம்: “afzals letters as preserved and published by society for the protection of detainees and prisoners righ” milli gazzete 1-15nov 2006.

'நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதி மன்றத்தில் அப்ஸல் தனது தரப்பு நியாயங்களையும் வாதங்களையும் எடுத்து வைத்திட சரியான வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. மேலும் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக எந்தவித நேரடி சாட்சியமும் இல்லை. எனவே முஹம்மது அப்ஸலுடைய வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று (ராம்விலாஸ் பஸ்வான் தலைவராக உள்ள) லோக் ஜன சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

(தி ஹிந்து 23-11-2011)

நமது நாட்டு பாராளுமன்றத்தை தனது சொந்த முயற்சியில் சில கோரிக்கைகளுக்காக வேண்டி அப்சல் குரு தாக்கியிருந்தால் தூக்கில் தொங்க விட தகுதியானவனே! இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நடந்த உண்மை என்ன?

சில நாட்கள் பாகிஸ்தான் கள்ளத்தனமாக சென்று வந்ததுதான் அப்சல் செய்த குற்றம். இதனால் பிடி பட்டு தண்டனை அனுபவிக்கிறார். இவரை கைது செய்த சாக்கை வைத்து நமது பொலீசாரும் ராணுவமும் ஒரு இந்திய பிரஜயிடம் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத்தான் நர்ம் மேலே பார்த்தோம்.

தங்களின் பதவி உயர்வுக்காகவும், அப்போதய ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளின் நிர்பந்தத்திற்க்காகவும் இப்படி ஒரு ஈனச் செயலை தனது குடிமகனின் மேல் ஒரு அரசு செயல்படுத்துமானால் அந்த அரசு மக்கள் அரசாகுமா! கேவலம் திரும்பவும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அற்ப நோக்கத்திற்காக ஒருவனின் வாழ்வையே சூன்யமாக்கி விட்டார்களே! இதற்கு காரணமானவர்களின் வாழ்வு சிறக்குமா? அஃப்ஸல் குரு வைக்கும் வாதத்தில் உண்மையிருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வு இது.

--------------------------------------------------

இந்திய ராணுவத்தின் சில நடவடிக்கைகள்:

காஷ்மீரில் பரவலாக பலமுறை பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் ஒன்றான சித்திசிங்புரா படுகொலைகளுக்குப் பிறகான கொலைகள். அது உலக அளவிலான பரபரப்பான விவகாரமாக உருவெடுத்தது. அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் புது தில்லிக்கு வருவதற்கு சற்று முன்பு ஏப்ரல் 20, 2000 இரவில் சித்திசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் இந்திய ராணுவ சீருடை அணிந்த ‘அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்களால்’ கொல்லப்பட்டனர். (இந்திய பாதுகாப்புப் படைகள்தான் படுகொலைக்குக் காரணம் என்று காஷ்மீரில் பலர் சந்தேகப்பட்டார்கள்). ஐந்து நாட்களுக்குப் பிறகு பத்ரிபால் என்ற கிராமத்துக்கு வெளியில் எஸ்ஓஜியும் ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்புப் பிரிவான 7வது ராஷ்டிரிய ரைபிள்சும் கூட்டு நடவடிக்கையில் 5 பேரை கொன்றார்கள். அந்த ஆட்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்றும் அவர்கள்தான் சித்திசிங்புராவில் சீக்கியர்களைக் கொன்றவர்கள் என்றும் அடுத்த நாள் காலையில் அறிவித்தார்கள். உடல்கள் எரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்தன. (எரிக்கப்படாத) அவர்களது ராணுவ சீருடைகளுக்கு உள்ளே, சாதாரண சிவிலியன் உடைகள் இருந்தன. கடைசியில் அவர்கள் அனைவரும் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் என்றும், சுற்றி வளைக்கப்பட்டு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரிய வந்தது.

இன்னும் சிலவும் உண்டு: அக்டோபர் 23, 2003 அன்று ஸ்ரீநகரின் அல் – சபா நாளிதழ், ஒரு ராணுவ முகாமைத் தாக்க முயற்சித்தபோது தங்களால் கொல்லப்பட்ட ‘பாகிஸ்தானி போராளி’ என்று ராஷ்டிரிய ரைபிள்சினரால் சொல்லப்பட்டவரின் படத்தை வெளியிட்டிருந்தது. குப்வாராவைச் சேர்ந்த பேக்கரி தொழில் செய்யும் வாலிகான், படத்தைப் பார்த்து விட்டு அது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிப்சி வண்டியில் வந்த படை வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தன் மகன் பாரூக் அகமது கான் என்று அடையாளம் கண்டு கொண்டார். ஒரு ஆண்டுக்குப் பிறகு, ஒரு வழியாக, அவரது உடல் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது.

ஏப்ரல் 20, 2004 அன்று, லோலாப் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டிருந்த 18வது ராஷ்டிரீய ரைபிள்ஸ் படையினர், ஒரு கடும் சண்டையில் நான்கு வெளிநாட்டு போராளிகளைக் கொன்றதாக தெரிவித்தார்கள். அந்த நான்கு பேரும் ஜம்முவிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டு குப்வாராவுக்கு ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட சாதாரண தொழிலாளர்கள் என்று பின்னர் தெரிய வந்தது. அனாமேதய கடிதம் ஒன்று தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் குப்வாராவுக்குப் போய் உடல்களை வெளியில் எடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

நவம்பர் 9, 2004 அன்று ராணுவம் ஜம்முவின் நக்ரோதாவில் 47 சரணடைந்த ‘போராளிகளை’ பத்திரிகையாளர்களுக்கு முன் காட்டியது. XVI படை அணியின் ஜெனரல் கமாண்டிங் ஆபிசரும் ஜம்மு காஷ்மீர் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீசும் உடன் இருந்தனர். அவர்களில் 27 பேர் வேலையில்லாத ஆட்கள் என்றும் போலி பெயர்களும் போலி அடையாளங்களும் கொடுக்கப்பட்டு, இந்த நாடகத்துக்கு ஒத்துழைத்தால் அரசு வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டவர்கள் என்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை பின்னர் கண்டறிந்தது.

காஷ்மீரில் நமது ராணுவம் நடந்து கொள்ளும் விதம் பற்றி மேலும் அறிய

http://suvanappiriyan.blogspot.com/2009/01/blog-post_15.htm
http://suvanappiriyan.blogspot.com/2008/12/blog-post_14.html
http://www.vinavu.com/2011/10/28/afzal-guru/

மேற்கண்ட இடுகைகளுக்குச் செல்லுங்கள்.