Followers

Saturday, November 30, 2013

இஸ்லாத்தின் மேல் பிரான்சு எடுக்கும் தவறான முடிவு!



தனது உடை எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஒரு தனி மனிதனின் உரிமை என்று ஒரு புறம் சொல்லிக் கொள்வார்கள். மறுபுறம் ஹிஜாப் அணிந்து ஒழுக்கமாக ஒரு பெண் சென்றால் 'மத சார்பின்மைக்கு எதிரானது' என்று கைதும் பண்ணுவார்கள். ஒரு இஸ்லாமிய பெண்மணி தனது உடலை கண்ணியமாக மறைத்து சென்றதை பொருத்துக் கொள்ளாத பிரான்ஸ் காவல் துறை அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றுவதைத்தான் நாம் மேலே பார்க்கிறோம்.

இது போன்ற உதவாக்கறை சட்டங்களை வைத்து இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று பிரான்சு அரசு நினைக்கிறது போலும். ஏனெனில் நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாத்தின் வளர்ச்சியானது பிரான்சு அரசையே நடுங்க வைக்கிறது.

முன்பெல்லாம் வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக குடியேறிய மக்கள்தான் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுபவர்களாக இருந்தனர். ஆனால் இன்றோ பிரான்சின் பூர்வ குடிகள் இஸ்லாத்தை ஏற்பது தற்போது மிக அதிகரித்துள்ளது. மேற்கத்திய கலாசாரம் அந்த மக்களை நிம்மதியிழக்க வைத்தது. இணையத்தின் மகத்தான தொடர்பால் இன்று அனைத்து வீடுகளுக்குள்ளும் சர்வ சாதாரணமாக இஸ்லாம் புகுந்து விடுகிறது. இதனால் இஸ்லாத்தை விளங்கவும் அதன் சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளவும் அந்த மக்களுக்கு சிறந்த வழிகாட்டிகள் மிக சுலபமாக கிடைத்து விடுகின்றனர்.

வெளியூர் கேம்ப் ஒன்றில் சில இஸ்லாமிய மாணவர்கள் ரமலான் மாதத்தில் பகல் நேரத்தில் உணவை எடுக்காதது பெரும் பிரச்னையாக்கப்பட்டது. மாணவர்கள் பலகீனமாகி விடுவார்கள் என்ற சொத்தை காரணம் சொல்லப்பட்டது.

ஒரு பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஒருவர் உடலை மறைத்து கண்ணியமாக கல்லூரிக்கு வந்தது பெரும் பிரச்னையாக்கப்பட்டது. தற்போது அந்த பெண்ணின் பெற்றோர் அந்த கல்லூரியின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

கிறித்தவர்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மீன் உணவை கேட்கின்றனர். அது அவர்களுக்கு புனிதமாக படுகிறது. இதை எல்லாம் மதசார்பற்ற இந்த அரசு எப்படி கையாளப் போகிறது?

சீக்கியர்களின் குழந்தைகள் தலையில் தலைப்பாகையோடுதான் வருகின்றனர். இங்கும் பிரச்னை அரசுக்கு காத்திருக்கிறது.

மதசார்பற்ற அரசு எப்படி செயல்பட வேண்டும்?

பல மக்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக சூழ்நிலையில் அந்த மக்களின் மத சடங்குகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எந்த ஒரு மதத்தையும் சாராமல் செயல்படும் ஒரு அரசே மதசார்பற்ற அரசாக இருக்க முடியும். இருக்கும் மத அடையாளங்களை முற்றாக தடை செய்கிறேன் என்று அரசு போனால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் நாத்திகத்திலிருந்து இன்று ஆத்திகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதை உதாரணமாகக் கொள்ளலாம்.

எனவே உலகில் பிறந்த எந்த மனிதனும் ஏதோ ஒரு நம்பிக்கை, ஒரு கலாசாரத்தை பின்பற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அதை அனுசரித்து அரசுகள் நடந்து கொண்டாலே அனைத்து மக்களும் குழப்பமின்றி தங்களின் வாழ்வை ஓட்ட முடியும். இதனை பிரான்சு, இந்தியா போன்ற பலதர மக்கள் வாழும் நாடுகளின் அரசுகள் புரிந்து செயல்படுவார்களாக!

அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

குர்ஆன் 61:8




தகவல் உதவி சவுதி கெஜட்.

Friday, November 29, 2013

தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்!- ஜெயமோகன்

மறைந்த என் தந்தை எதைப் பற்றிப் பேசினாலும் ‘சயன்டிஃபிக்கா பாத்தோம்னா...’ என்று சொல்லும் வழக்கம் கொண்டிருந்தார். அந்தத் தலைமுறையின் மனநிலையை அது பிரதிபலித்தது என நான் நினைப்பதுண்டு.

இந்தியாவின் மரபான கல்விமுறை இரண்டு. மதக்கல்வி, தொழில்கல்வி. அவை குருகுல முறைப்படி கற்றுக்கொடுக்கப்பட்டன. ஐரோப்பியக் கல்விமுறை இங்கே ஆங்காங்கே அறிமுகமாகியிருந்தது. ஆனால், 1937-ல் இந்திய தேசியக் காங்கிரஸ் மாகாண சபைகளுக்கான தேர்தலில் பங்கேற்று, நாடெங்கும் காங்கிரஸ் அரசுகள் அமைந்தபோதுதான் தேசியப் பொதுக்கல்வி பற்றிய விழிப்புணர்ச்சி உருவாகியது.

சுதேசிக் கல்வி

ஒருங்கிணைந்த கல்விக் கொள்கைகள் விவாதித்து உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் அமைப்பு இந்தியாவெங்கும் சுதேசிக் கல்வி என்ற கோஷத்தைக் கொண்டுசேர்த்தது. கிராமங்கள்தோறும் ஆரம்பப் பாடசாலைகள் அமைந்தன. இந்தியாவின் பொதுக்கல்வியின் உண்மையான தொடக்கம் அதுதான்.

என் தந்தை அந்த எழுச்சியின் விளைவாகப் பள்ளிக்குச் சென்ற தலைமுறையினரில் ஒருவர். அவரது ஊரில் தேசியவாதி ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்விக்கூடம் ஒன்று அமைந்ததுதான் அப்பா கல்வி கற்பதற்கான காரணம்.

அந்தக் காலகட்டத்தின் சில அடிப்படை மனப்பதிவுகள் அவரிடம் கடைசிவரை இருந்தன. அதில் முக்கியமானது, அறிவியல் நோக்குதான் நவீனக் கல்வியின் அடிப்படை என்ற எண்ணம். இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு ஐரோப்பாவில் வளர்ந்துவரும் நவீன அறிவியலைக் கற்றுக்கொள்வது மிக அவசியமானது என்ற சிந்தனை அன்றைய தேசியவாதிகள் அனைவரிடமும் வேரூன்றியிருந்தது; அந்தக் காலக் கல்வியில் அது பிரதிபலித்தது.

நிகழ மறுத்த கொந்தளிப்பு

நவீன அறிவியல் என்று அவர்கள் நம்பியது நிரூபணவாதத்தைத்தான் (எம்பீரிசிஸம் -empiricism). புறவயமான சோதனைகள் மூலம் கண்ணுக்கும் கருத்துக்கும் நிரூபித்துக்காட்டப்படுவதே உண்மை என நம்புவதைத்தான் அவர்கள் அறிவியல் என்று சொன்னார்கள். படித்தவர்கள் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினர்.

எவ்வளவு விரைவாக அலோபதி மருத்துவம் இந்தியாவில் காலூன்றியது என்பதே இதற்கு ஆதாரம். நுண்கிருமிகள் மூலம் நோய்கள் பரவுகின்றன என்ற கருத்து, இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு மருத்துவ ஞான மரபுக்கு முற்றிலும் புதியது. நோய் என்பது உடலின் சமநிலைக் குறைவின் விளைவு என்றே நாம் நம்பிவந்தோம். அவ்வாறு ஒரு புதுக் கருத்து நம்முடைய சிந்தனையை வந்து மோதும்போது எவ்வளவு பெரிய கொந்தளிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்… எவ்வளவு விவாதங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்!

ஒன்றுமே நிகழ வில்லை. வெறும் 20 ஆண்டுகளில் இந்திய மருத்துவ மரபு கிட்டத்தட்ட முழுமையாகவே கைவிடப்பட்டு, அலோபதி மருத்துவம் ஒரே மருத்துவமுறையாக இங்கே நிலைகொண்டது. என் தந்தையின் தலைமுறை அலோபதி மருத்துவம் மீது பெரும் நம்பிக்கைகொண்டிருந்தது. பல்லக்கில் உலாவந்த ஆயுர்வேதிகளின் குடும்பங்கள் பட்டினியால் வாடுவதை என் சிறுவயதில் கண்டிருக்கிறேன்.

பகுத்தறிவின் பொற்காலம்

ஆடைகளில், ஆச்சாரங்களில் நிகழ்ந்த இந்த மாற்றத்தைப் பகுத்தறிவு என்ற சொல்லால் நாம் சுட்டிக்காட்டுகிறோம். 1950-1980 வரையிலான 30 ஆண்டு காலத்தை இந்தியாவின் பகுத்தறிவியக்கத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். இந்தியா எங்குமே பகுத்தறிவை முன்வைத்த இடதுசாரி இயக்கங்கள் அரசியல் செல்வாக்குபெற்றன.

பகுத்தறிவுடன் இருப்பதே அறிவுடைமை என்ற நம்பிக்கை படித்தவர்களிடையே பரவலாக இருந்தது. கடவுள் நம்பிக்கை, குலச் சடங்குகள், சாதி போன்று எளிதில் மாற்றிக்கொள்ள முடியாத விஷயங்களைக் கொஞ்சம் வெட்கத்துடன் அந்தரங்கமாக வைத்துக்கொண்டனர். ஒரு மன்னிப்புகோரும் வகையில், “என்ன இருந்தாலும் ஒரேயடியா அப்படி விட்டுர முடியாதே” என்றெல்லாம்தான் அதைப் பற்றிச் சொல்வார்கள்.

போலி அறிவியல்

80-களுக்குப் பின் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றுக்கு எளிமையான அறிவியல் விளக்கங்களை அளிக்க ஆரம்பித்தனர். குளித்த பின்னர் விபூதி பூசுவதால் சளி பிடிப்பதில்லை என்பதுபோல எழுதப்பட்ட ‘அர்த்தமுள்ள மத’விளக்கங்கள் வந்தன. (அதற்கு ஏன் விபூதி? டால்கம் பவுடர் போதாதா என்று கேட்கக் கூடாது.) கோயிலில் பூஜைக்கு வைத்த வெற்றிலையில் மின்னூட்டம் உருவாகியிருக்கிறது, அந்த மின்னூட்டம் கோபுரக் கலசங்கள் வழியாக இறங்கிவந்திருக்கிறது என்பதுபோல போலி நிரூபணச் சோதனைகள் பரப்பப்பட்டன.

சென்ற தலைமுறையில் பொதுக்கல்வி எழுச்சிபெற்றபோது, மதக் கல்வி முழுமையாகவே கைவிடப்பட்டது. இந்து மதத்தைப் பொறுத்தவரை அதன் மெய்யியல், தத்துவம், குறியீடுகள் ஆகியவற்றைப் பற்றிய மிக எளிய புரிதல்கள்கூட சராசரி இந்துவிடம் இருப்பதில்லை. அதே சமயம், அவற்றில் ஆழமான பக்தியும் உள்ளது. மறுபக்கம் இவர்கள் அறிந்தது மிகமிக எளிய நிரூபணவாத அறிவியலை மட்டுமே. அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கும் அடிப்படைத் தத்துவநோக்கு பற்றிய அறிமுகமே இவர்களுக்கு இல்லை.

ஆகவே, தாங்கள் அறிந்த எளிமையான நிரூபணவாத அறிவியலைக் கொண்டு தாங்கள் நம்பும் மதச் சடங்குகளையும் குறியீடுகளையும் விளக்குவதற்காக முயல்கிறார்கள். விளைவாக, அசட்டுத்தனமான போலி அறிவியல் ஒன்று உருவாகி, இன்று எங்கும் புழங்கிக்கொண்டிருக்கிறது. செல்லாக்காசுதான் அதிவேகமாகப் புழங்கும்.

இரண்டாவது மூடநம்பிக்கைக் காலம்

இந்தியாவின் நவீன வரலாற்றில் இதை இரண்டாவது மூடநம்பிக்கைக் காலம் என்று சொல்லலாம். இந்த மூடநம்பிக்கை கொண்டவர்களில் கணிசமானவர்கள் உயர்கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்மிகம், தியானம், மாற்று மருத்துவம், பல்வேறு வகையான ‘ஹீலிங்’ முறைகள், விதவிதமான சோதிடங்கள் என்று ஏராளமான வட்டங்கள் இன்றுள்ளன.

ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், அவரது குரு அவருடைய குண்டலினியைக் கையால் தொட்டுக் காட்டியதாகவும் அங்கே ஒரு பாம்பின் சலனத்தை அவர் தொட்டு உணர்ந்ததாகவும் என்னிடம் சொன்னார். நான் சொன்னேன், ‘குண்டலினி என்பது ஓர் உறுப்போ அமைப்போ அல்ல… அது ஓர் உருவகம். மனிதனின் அடிப்படை செயல்விசையான காமத்தைத்தான் அப்படி உருவகித்திருக்கிறார்கள். யோகம் என்பது நீங்கள் நினைப்பதுபோல உடற்பயிற்சி அல்ல. அது குறியீடுகள் வழியாக நிகழ்த்தப்படும் ஓர் அகப்பயணம். நீங்கள் கற்க வேண்டிய ஆதாரமான பழைய நூல்களை வேண்டுமென்றால் சொல்கிறேன். இதை மரபான முறையிலும் நவீன நோக்கிலும் 20 ஆண்டுகள் கற்றிருக்கிறேன்.’

ஆனால், அவர் என் அறியாமைக்காக இரங்கி ஒரு புன்னகையை அளித்தார். ‘நீங்க பழைய பார்வையிலே பேசிட்டிருக்கீங்க சார்... நான் சயன்டிஃபிக்கா சொல்றேன்’ என ஆரம்பித்து ‘குண்டலினி, நெற்றிக்கண் இன்ன பிறவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனைச்சாலையில் நிரூபித்துவிட்டார்கள்’ என விளக்க ஆரம்பித்தார். ‘சயன்டிஃபிக்’ என்ற சொல்லை மீண்டும் கேள்விப்படுகிறேன். முற்றிலும் வேறு சூழலில், வேறு பொருளில்!

அறிவியலும் தத்துவமும்

அறிவியல் என்பது தனக்கே உரிய தர்க்கமுறையைக் கொண்ட ஓர் அறிவியக்கம். நிரூபணவாதம் என்பது அதன் ஒரு பகுதிதான். அறிவியலின் சாரம் தத்துவத்துடன் உரையாடக் கூடியது. தத்துவம் தன்னுடைய தேடலை உருவகங்கள் மூலம் தேடிச் செல்லக்கூடிய ஒன்று. இரண்டு அறிதல் முறைகளின் அடிப்படை விதிகளையும் அறிந்தால் மட்டுமே இரண்டும் சந்திக்கும் புள்ளிகளைப் பற்றி நாம் பேச முடியும்.

இரண்டையும் புரிந்துகொள்ளாமல் குழப்பிக்கொள்ளும் இன்றைய போலி அறிவியலில் இருந்து தப்ப, இன்னொரு அறிவியக்கம் இங்கே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது பகுத்தறிவியக்கம் அது.

- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com
The Hindu.

இந்துத்வாவாதியாக அறியப்படும் ஜெயமோகனிடமிருந்து ஒரு வித்தியாசமான கட்டுரை! இந்து மதத்தின் கொள்கைகள் ஒரு வேளை சலிப்பைத் தந்து விட்டதோ என்னவோ? நமது நாட்டு கலை கலாசாரம், இறை பக்தி என்பதெல்லாம் மிக உயர்ந்த தரத்திலேயே முன்பு இருந்துள்ளன. இறைவனைப் பற்றிய பல ஆக்கங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இடையில் ஆரியர்களால் குழப்பப்பட்ட இந்து மதம் தான் தற்போது நம் கண் முன் உள்ளது. இந்த ஆரிய கருத்துக்களை நீக்கி விட்டு நமது பண்டைய இலக்கியங்களை நோக்கினால் அது ஏறக்குறைய இஸ்லாத்தை அடியொட்டியதாகவே இருக்கும். எனவே ஜெயமோகன் போன்றவர்கள் புதிதாக ஒரு பகுத்தறிவு இயக்கத்தை தேடுவதை விட்டு உங்கள் அருகிலேயே உங்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வரும் இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும், குர்ஆனையும், முகமது நபியையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுஙகள். நமது நாட்டுக்கு நிரந்தர தீர்வு இதில்தான் உள்ளது என்ற முடிவுக்கு வருவீர்கள்.

பள்ளிக் கூடங்களா? நரகக் கொட்டில்களா?



மாணவன்: எனக்கு எவ்வாறு எழுதுவது என்று தெரியாது.

ஆசிரியர்: தற்போதும் எவ்வாறு எழுதுவது என்று தெரியாதா?

மாணவன்: ஆம். எனக்கு உண்மையிலேயே எழுதத் தெரியவில்லை.

ஆசிரியர்: என்ன சொல்ற நீ....

மாணவன்: இந்த பாடத்தை நான் வீட்டில் கற்றுக் கொள்கிறேன் டீச்சர். ஓகே... வீட்டில் நான் நன்கு கற்றுக் கொள்வேன். என்னை வீட்டுக்கு செல்ல அனுமதியுங்கள். ஓகே...டீச்சர்.

ஆசிரியர்: நான் உனக்கு எப்படி எழுதுவது என்று இங்கேயே சொல்லித் தருகிறேன்.

மாணவன்: இறைவன் மீது ஆணையாக... என்னால் முடியாது.. என்னால் இங்கு எழுத முடியவில்லை....

ஆசிரியர்: நான் சொல்லிக் கொடுக்கிறேன். கரும்பலகையிலும் எழுதியுள்ளேனே பார்க்கவில்லையா...?

மாணவன்: இதனை எப்படி எழுதுவது என்று வீட்டில் கற்றுக் கொள்கிறேன். அப்படி நான் கற்றுக் கொள்ளா விட்டால் அதன் பிறகு என்னை நீங்கள் அடிக்கலாம். தயவு செய்து என்னை வீட்டுக்கு செல்ல அனுமதியுங்கள் ஆசிரியரே....(மாணவன் அழுகிறான்)

-------------------------------------------------

இது உண்மையிலேயே ஒரு வகுப்பறையில் நடந்த சம்பவம். ஒரு மாணவனுக்கு எந்த அளவு திறமை இருக்கிறதோ அதை அனுசரித்து பாடம் நடத்தாத வரை அந்த மாணவனுக்கு பாடம் ஏற வாய்ப்பே இல்லை. இதை ஆசிரியர்கள் ஏனோ புரிந்து கொள்வதில்லை. முடிவில் பலகீனமான பல மாணவர்கள் தற்கொலையை நாடுகின்றனர்.

அந்த பிஞ்சு மாணவன் எந்த அளவு இரக்கத்தோடு அந்த ஆசிரியரிடம் உரையாடுகிறான் பாருங்கள். பேசும் திறனிலிருந்து அவனுக்குள் மறைந்துள்ள பல திறமைகள் நமக்கு தெரிகின்றன. ஆனால் அந்த ஆசிரியருக்கு அந்த மாணவனை எப்படி கொண்டு செல்வது என்று தெரியவில்லை. இதில் பெற்றோர்களையும் நாம் குறை காண வேண்டும். இதே போல் பல சம்பவங்களை நாம் வகுப்பறைகளில் தினமும் பார்த்திருப்போம்.

ஒரு மாணவனுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும்: ஒரு மாணவனுக்கு படம் வரைவதில் அதிக ஆர்வம் இருக்கும்: ஒரு மாணவனுக்கு விவசாய துறையில் ஆர்வம் இருக்கும்: சில மாணவர்களுக்கு ஆராய்ச்சி துறையில் ஆர்வம் இருக்கும்: குறிப்பிட்ட மாணவனின் திறமையை அதன் பெற்றோர்கள் உன்னிப்பாக கவனித்து அவனது விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொண்டாலே வெற்றி பெற முடியும்.

எனது பள்ளி நாட்களில் என்னோடு படித்த ரமேஷ் என்ற மாணவன் அவனது விருப்பத்தை மீறி பொறியியல் துறையில் அவனது பெற்றோர்கள் சேர்த்ததால் மனமுடைந்து ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். அதுவும் அவன் எனது உடற்பயிற்சி ஆசிரியரின் மகன். இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

Wednesday, November 27, 2013

சங்கரராமன் தீர்ப்பும் நமது நாட்டு மனு நீதியும்!



சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து, புதுச்சேரி நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட்டது.

ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரின் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பை, ஜயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் தரப்பு வரவேற்றுள்ளது. அதேவேளையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள சங்கரராமனின் மகன் ஆனந்த் ஷர்மா, மேல்முறையீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த வழக்கில், சங்கரராமன் குடும்பத்தினரின் பிறழ் சாட்சியமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதற்கு காரணம் என்றும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றும் அரசு தரப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கருத்து தெரிவித்தார்.



மிகச்சரியான தீர்ப்பு :-) அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு :-(, பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து அத்வானி,உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் விடுதலை, குஜராத் கலவர வழக்குகளிலிருந்து மோடி விடுதலை,நாவரசு கொலை வழக்கிலிருந்து ஜான் டேவிட் விடுதலை: மும்பை கலவர வழக்கில் கிருஷ்ணா வின் தீர்ப்பில் பால்தாக்கரே குற்றவாளி என்று கூறியும் கூட அரசு மரியாதையுடன் அடக்கம். அது மாதிரி இதையும் நினைத்து கொள்ள வேண்டியதுதான். கடுமையான தண்டனைகளெல்லாம் அஜ்மல் சாப்புக்கும், அப்சல் குருவுக்கும் தான். ஏனென்றால் நாட்டின் மனசாட்சியை திருப்திபடுத்த வேண்டுமல்லவா!

இந்து மத நம்பிக்கை படி கோர்ட்டு வாசலில் ஆவலோடு நின்றிருந்த சங்கரராமனின் ஆவி தீர்ப்பை கேட்டு விட்டு கண்ணீர் சிந்தியிருக்கும். சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார். அந்தம்மா கண்டுக்காம இருந்தாலும் சுவாமி தரப்பு சீண்டி விட்டு திரும்பவும் அப்பீல் பண்ண வைக்கப் போறார். எப்படியோ நல்லது நடந்தா சரிதான். நம்ம மஞ்சத் துண்டு வழக்கம் போல எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார். ஏனெனில் இந்த முறை 20 எம்பிக்களை எப்படியாவது பெற்று விட பிஜேபியின் தயவை நம்பியுள்ளார். :-(

இந்த நாட்டை அம்பேத்கார் இயற்றிய சட்டங்கள் கட்டுப்படுத்துவதில்லை. மனு நீதி என்ன சொல்கிறதோ அது தான் இந்நாட்டின் எழுதப்படாத சட்டம் என்பதற்கு இந்த தீர்ப்பே சாட்சியாக உள்ளது. பட்டப் பகலில் கொடூரமாக நடந்த ஒரு கொலை: புதிய தலைமுறையில் இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் சொல்லும் போது 'மேல் முறையீடு செய்தாலும் இதே தீர்ப்புதான் வரும்' என்று சொல்லும் நிலையில்தான் நமது நீதித் துறை உள்ளது. புதிய தலைமுறை பேட்டியில் சங்கரராமனின் மனைவி சொல்லும் போது 'உண்மையை பேசினால் கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டியதாலேயே வாக்கு மூலத்தை மாற்ற வேண்டியதாகி விட்டது. அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால் மேல் முறையீட்டில் உண்மையை சொல்வோம்' என்கிறார். நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது அல்லவா!



"பார்ப்பனனுக்குத் தலையை முண்டனம்(அதாவது மொட்டையடித்தல்) செய்தல் உயிர்த் தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு" (8 : 378).

"எந்தப் பாவம் செய்த போதிலும், பார்ப்பனனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக" (8 : 379).

"பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பார்ப்பனனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது" (8 : 379)

இது போன்ற குப்பை சட்டங்களை இந்து மத சட்டங்கள் என்று இன்று வரை பலர் தூக்கி பிடிக்கின்றனர். இதனால் இந்து மதம் வளர ஏதாவது வாய்ப்புண்டா? இதனால் வெறுப்புற்று பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்களாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றால் அங்கும் வந்து தொல்லை கொடுக்கும் இந்துத்வாவினரை எந்த ரகத்தில் சேர்க்கலாம்.

சரி...இனி சங்கரராமன் மேட்டருக்கு வருவோம்.

அப்போ... சங்கரராமனை யார்தான் கொலை செய்திருப்பார்?

'சங்கரராமனை கொலை செய்தது எப்படி?' என்பதை விவரிப்பதற்காக, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய தீவிரவாதிகள், காவல்துறையால் நாளை காஞ்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம்..

உயிரின் மதிப்பு - சவுதி அரேபியா!



சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் 'ஹூதாத் சுதைர்' என்ற இடத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் ஒரு பாகிஸ்தான் நாட்டுக்காரர் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டார். 'சவுதி தீயணைப்பு துறையை' ச் சார்ந்த அன்பர்கள் அந்த நபரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை இந்த காணொளி விளக்குகிறது. ஒரு உயிரையும் வீணாக போக்காமல் அவர்களை காப்பாற்ற இந்த அரசு எடுக்கும் முயற்சிகளை நாம் பார்க்கிறோம்.



அதே நேரம் நமது இந்தியாவில் மனித உயிர்கள் மோடியின் தலைமையில் குஜராத்தில் எவ்வாறு பந்தாடப்படுகிறது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. இதுதான் சவுதி அரேபியாவுக்கும் நமது நாட்டு மக்களுக்கும் உள்ள வித்தியாசம.

Sunday, November 24, 2013

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! - சவுதி அரேபியா



சவுதி கல்வித் துறை, வியன்னாவில் இயங்கி வரும் 'மன்னர் அப்துல்லாஹ் கலாசார மையம்' இந்த இரண்டும் இணைந்து ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இந்த பாடத் திட்டமானது உலக மதங்களையும், மார்க்கங்களையும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

'இந்த புதிய முயற்சியானது அனைத்து மதங்களையும் உலக மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதன் மூலம் அமைதியும் பொறுமையும் கொண்ட ஒரு வெறுப்பற்ற சிறந்த சமூகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்' என்கிறார் இளவரசர் ஃபைசல் பின் அப்துல்லா. இவர் சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சர் ஆவார்.

அவர் மேலும் கூறும் போது 'மன்னர் அப்துல்லா உலக அமைதிக்காகவும், பல கலாசாரங்களை பேணும் மக்கள் வாழும் நாடுகளில் மக்கள் வன்மத்தை விட்டு அன்பை பேணுவதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.'

'மன்னர் அப்துல்லா ஸ்வீடன் மன்னருடன் இணைந்து 110 நாடுகளில் சில நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதனால் 20 மில்லியன் மக்களுக்கு இந்த செய்தி சென்றடையும். இந்த முயற்சியானது 'மன்னர் அப்துல்லா தொழில் நுட்ப கல்லூரி' யில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெத்தாவுக்கு அருகில் உள்ள துவல் என்ற சிற்றூரில் இந்த கல்லூரியானது நடந்து வருகிறது. இக்கல்லூரியில் 7000 மாணவர்கள் என்பது நாடுகளில் இருந்து வந்திருந்து இங்கு தங்கி படிக்கின்றனர். இவர்கள் உலகின் பல்வேறுபட்ட கலாசாரங்களையுடைய மதங்களையும் மார்க்கங்களையும் பின்பற்றக் கூடியவர்கள்.

'இந்த மாணவர்கள் வெறும் படிப்போடு நின்று விடாமல் ஆராய்ச்சியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உலக அளவில் வறுமை, உணவு தட்டுப்பாடு, ஆற்றல் பற்றாக் குறை, தண்ணீர் பிரச்னை என்று அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து இதற்கு என்ன தீர்வு என்பதை மாணவர்கள் சமர்ப்பிக்க வைக்கப்படுகிறார்கள்.'

இது போன்ற ஆய்வுகளானது உலக மதங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை களையும். பல மதத்தவரிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் சிலர் லாபம் அடைவதை இது போன்ற முயற்சிகளால் தடுக்கலாம்.

சென்ற சனிக்கிழமை 500 வெளி நாட்டு மத குருமார்கள் கலந்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியது. உலக தலைவர்கள் பலரும் இந்த சீரிய முயற்சியை பாராட்டினர். பாகிஸ்தானின் கல்வி அமைச்சர் பலிகுர் ரஹ்மான், ஆஸ்திரியாவின் கல்வி அமைச்சர் க்ளவ்டியா ஸ்கிமிட் போன்ற முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.

பல நாடுகள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலம் உலகில் அமைதி நிலவ பாடுபடுகின்றன. அதற்கு மாறாக நமது நாட்டில் தற்போது சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ள ஒரு பெரும் முயற்சியே நடத்தப்படுகிறது. ஆனால் இந்திய மக்கள் மிக புத்திசாலிகள். யாரை எங்கு வைப்பது என்பதை நன்றாகவே அறிவர்.

தகவல் உதவி

அரப் நியூஸ்



'மோடி மீது சிபிஐ விசாரணை தேவை' - பிரதீப் சர்மா ஐ.ஏ.எஸ்



இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அந்த மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து அவர் இப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனுடன் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் சிங்காலும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 150 பக்க அறிக்கையையும் அவர் இணைத்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் பெங்களூரைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பின்தொடர்ந்து வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன. குஜராத் மேலிட உத்தரவின்பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த இணையதளங்கள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், குஜராத் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரணமாகவே தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி, பெங்களூர் பெண் குறித்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன் காரணமாகவே என் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதை தவிர எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். என் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில் பிரதீப் சர்மா கோரியுள்ளார்.

இதனிடையே, தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியி ருப்பது:

2004-ம் ஆண்டில் பவ நகரில் நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில்தான் பெங்களூர் பெண் பொறியாளரை முதல்வருக்கு நான் அறிமுகம் செய்தேன். அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அவரது தந்தை அறிக்கை வெளியிட்டிருப்பதில் உண்மை இல்லை. மிரட்டலின்பேரிலேயே அவர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

தகவல் உதவி

தி ஹிந்து, என்டிடிவி

Saturday, November 23, 2013

நரேந்திர மோடியின் டிவிட்டர் கூத்து! :-)



மத்திய பிரதேச மக்களுக்கு நரேந்திர மோடி டிவிட்டரில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். 'மக்கள் காலையிலேயே எழுந்து சென்று 'ஒரு மோசமான முட்டாளுக்கு' வாக்களித்து பிஜேபியை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது அவரது கட்சியின் சின்னமான தாமரை LOTUS என்று எழுதுவதற்கு பதிலாக LOUTS என்று டைப் பண்ணி விட்டார். மத்திய பிரதேச முதல்வர் சவுகான் மேல் என்ன கடுப்போ மோடிக்கு தெரியவில்லை. நிதிஷ் குமார் எவ்வாறு மோடியை நிராகரிக்கிறாரோ அதே போல் சவுகானும் மோடியை பக்கத்தில் அண்ட விடுவதில்லை. ஒருக்கால் அந்த விரக்தியில் மோடியின் மனதில் இருந்து விழுந்த வார்த்தைகளாகவும் இருக்கலாம். அல்லது 'மோசமான முட்டாள்' என்று தன்னையே சொல்லிக் கொள்கிறாரோ? :-)

மனதில் தெளிவும், உண்மையான இறை பக்தியும் உடைய ஒரு மனிதனுக்கு சிந்தனையும் ஞாபக சக்தியும் தெளிவாகவே இருக்கும். எந்த நேரமும் பொய்: தான் முன்னுக்கு வர தனது கட்சிக் காரர்களையே பலி கொடுக்கும் தந்திரம்: நாட்டு மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் ஆட்சியை பிடிக்க நினைக்கும் குள்ளநரித் தனம்: தேசபக்தி வேடமிட்டு நாட்டு மக்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது என்று தனது வாழ்நாளில் பெரும்பாலும் ரத்த கறையோடு வாழ்ந்து வரும் ஒரு இந்துத்வவாதியிடம் இது போன்ற உளறல்களை இன்னும் எதிர்பார்க்கலாம்.

இந்துத்வாவாதிகள் பலரும் நடந்த தவறை சுட்டிக் காட்டவே உடன் டுவிட்டரில் திருத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் உலவ விட்டுள்ளனர். இந்த கோமாளி தேர்தல் நெருக்கத்தில் இன்னும் எதை எல்லாம் சொல்லப் போகிறாரோ. பொறுத்திருந்து பார்ப்போம்.


http://indiatoday.intoday.in/story/narendra-modi-twitter-typo-lotus-vs-louts-bjp-madhya-pradesh-polls/1/326162.html

---------------------------------------------------------

பித்தலாட்டத்தின் மறுபெயர் பிஜேபி!



நான் முதல் மந்திரி ஆவதற்கு முன்பு சாலைகள் மிகவும் மோசமாக போர்க் காலத்தில் குண்டு போட்ட சாலை போல் குண்டும் குழியுமாக இருந்தன. நான் மாநிலம் முழுவது பயணம் செய்தபோது இந்த அவலத்தைப் பார்த்தேன். என்னுடைய வாகனம் செல்வதுகூட பெரும் சிரமமாக இருந்தது. இவற்றையெல்லாம் சரி செய்வதென்பது எனக்கு மிகவும் பெரிய சோதனையான ஒன்றாக இருந்தது. இந்த பாழடைந்த சாலைகளை சீர் செய்ய மிகப் பெரிய யாகம் செய்வதைப் போன்று பெரிய காரியமாக இருந்தது. இப்போது நான் செய்த காரியத்தின் பலனை நீங்களே பாருங்கள்...

இந்த சாலையைப் பார்த்த பிறகு இந்தியாவே கூறும் பாதுகாப்பான மற்றும் நவீன வசதியுடைய சாலைகள் மத்திய பிரதேச சாலைகள் என்று...

இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேச பி.ஜே.பி. ஆட்சியால்.

உண்மை என்னவென்றால் இது மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் சாலையாகும்; பித்தலாட்டமே உன் பெயர்தான் பிஜேபியா?

http://www.viduthalai.in/headline/70874-2013-11-22-09-53-02.html

Friday, November 22, 2013

இந்துத்வாவினர் காம விளையாட்டில் அடிக்கடி மாட்டுவதேன்!



தினமும் பத்திரிக்கையை திறந்தால் அந்த சாமியார் கைது இந்த சாமியார் கைது: அந்த பிஜேபி தலைவர் கைது: இந்த இந்துத்வா தலைவர் கைது என்ற செய்தி வராத நாளே இல்லை எனலாம். அனைத்து கைதுகளும் பாலியல் சம்பந்தமாகவே உள்ளதை நாம் பார்க்க வேண்டும். பிரேமானந்தா, நித்தியானந்தா, காஞ்சி சங்கராச்சாரியார், ஆசாராம் பாபு, தற்போது நரேந்திர மோடி என்று தினமும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 'பாரதீய ஜனதா பார்ட்டி'யா அல்லது 'பாரதீய ஜல்சா பார்ட்டி'யா என்று பலரும் எள்ளி நகையாடும் வகையில் தான் இவரகளின் போக்கு உள்ளது. அதிலும் காசியில் பிணங்களை தின்று வாழும் அகோரிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். பலர் முழு நிரவாணமாகவே சர்வ சாதாரணமாக கடை வீதிகளில் உலா வருகின்றனர். ஏன் இப்படி? இந்துத்வாவினருக்கு இதை விட்டால் வேறு வேலையே இல்லையா? என்று நாம் ஆச்சரியப்படுவோம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவர்கள் வழி வழியாக சிறு வயதிலிருந்து எதை படித்து வந்தார்களோ அது ஆழ் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவ்வாறு படித்து வளர்ந்த இவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களை அறியாமலேயே ஏடாகூடமாக ஏதாவது செய்து வம்பில் மாட்டிக் கொள்கின்றனர். இதை ஒரு தவறாக நினைக்க அவர்களின் உள் மனது இடம் கொடுப்பதில்லை. நான் சொல்லும் இந்த கருத்துக்கள் உண்மையான இறை பக்தியோடு இறைவனை வணங்கி மற்ற மதத்தவர்களிடமும் அன்புடன் பழகி வரும் கோடானு கோடி இந்து மத நண்பர்களை பற்றி அல்ல. இந்த நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்வாதாரங்களை அழித்து அதன் மூலம் தங்களின் வாழ்வை மத வெறியின் மூலம் வளப்படுத்திக் கொண்டிருக்கும் இந்துத்வாவினரை நோக்கியே எனது கருத்துக்கள்.

திண்ணையில் சகோ ஷாலி அவர்களின் பின்னூட்டத்தை இதற்கு பதிலாக தருகிறேன். படித்துப் பாருங்கள்.

//கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனை ஏனிப்படி ஒரு காமுகனாகவே பல கவிஞர்களும் சித்திரித்து வந்துள்ளனர்? கண்ணன் உண்மையிலேயே அப்படித்தான் இருந்ததாய்ப் புராண நூல்கள் சொல்லுகின்றனவா, இன்றேல் அவை யாவும் சில காமுகர்கள் செய்த இடைச் செருகல்களா? //

கண்ணன் பற்றிய மூல நூல்களான பாகவத்திலும், மகாபாரதத்திலும்,ராதையை பார்க்க முடியவில்லை. வியாசர் எழுதிய பிரமாண்ட புராணம், வைவர்த்த புராணத்தில் உள்ள ராதா கிருஷ்ணா லீலைகளை தழுவியே ஜெயதேவர் அஷ்டபதி எனும் கீதகோவிந்தம் எழுதப்பட்டதென்பர்.

கண்ணனின் காதலியாக சொல்லப்படும் ராதை உண்மையில் அவனுக்கு அத்தை முறையானவள் மற்றுமல்ல, மாற்றான் மனைவி என்பதும் கவனிக்கத்தக்கது.

பகவான் கோபாலனுடைய லீலைகளை விரிவாய் “உபதேசிக்கும்” பகுதி பாகவதத்தில் பத்தாவது “°கந்தம்” (பகுதி). பாகவதத்தை யாக்கனத்தோடு அச்சிட்டு வெளியிட்டவர் கடலங்குடி நடேசசாஸ்திரிகள்.

இதில் கிருஷ்ணன் பர ஸ்திரீகளான (பிறர் மனைவியர்) கோபிகைகளோடு அத்யாயம் 29 ல் “ஜலக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 30 ல் “வனக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 31 ல் “ஸ்தலக் கிரீடை” செய்ததையும் மிக மிக …….. மொழியில் சொல்லப்பட்டுள்ளது. (ஜலக்கிரீடை – நீரில் விளையாடுவது, வனக்கிரீடை – காட்டில் விளையாடுவது, ஸ்தலக் கிரீடை – நிலத்தில் விளையாடுவது) அத்தியாயங்கள் 32, 3359 ஆகியவற்றிலும் “சிருங்கார கதை” தொடர்கிறது.

“கோபஸ்திரீகள் (கோபிகாஸ்திரீகள்) காமத்தை அதிகப்படுத்தும் கிருஷ்ணனின் கீதத்தைக் கேட்டு அவனிருக்கும் இடம் நாடி ஓடிவருகின்றனர். – பால் கறந்து கொண்டிருந்த சிலர் ஆசை கொண்டர்களாய் பால் கறப்பதை நிறுத்தி விட்டு ஓடிவந்தனர். – அன்னம் பரிமாரிக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், – குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், – கணவர்களுக்குப் பணிவிடை செய்பவர் அதை விடுத்தும், – உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், கணவர்கள் தடுத்தும், பிதா தடுத்தும், மாதா தடுத்தும் உடன்பிறந்தான் தடுத்தும் கட்டுக்கடங்காது, மோகத்தோடு கிருஷ்ணனை நோக்கி ஓடுகின்றனர்.

ஓடிவந்த ஒய்யாரிகளோடு கோபாலன் கண்டபடி, கண்ட இடங்களில் ஆடினான், பாடினான், இறுதியில் கூடினான்.யமுனை நதியிலும், அதையொட்டிய சோலைகளிலும், நதிக்கரை திட்டுகளிலும், மனம் “திகட்டும்” அளவுக்குக் கோபியரோடு கொஞ்சினான் கோகுல கிருஷ்ணன்.

//கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனை ஏன் காமுகனாகவே…….//

சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்களே! நீங்கள் கேட்ட கேள்வியை இதற்க்குமுன்னால் வேறொருவர் கேட்டே விட்டார்.

போர்க்களத்தில் மரண தருவாயில் இருந்த அபிமன்யுவின் மகன் பரீட்சித்து, அரசன் சுகர் (வியாசரின் மகன்) என்ற முனிவன் சொன்ன இந்த பாகவதைத் கேட்டு, ஒரு கேள்வி கேட்டான். சுகமுனிவரை நோக்கி “தர்மம் காத்து அதர்மத்தை அழிக்க வந்த கோபாலன் என்ன எண்ணங்கொண்டு வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்தார். எல்லோருக்கும் வழிகாட்ட வேண்டிய பகவான் கோவிந்தர் “பரதாராபிமர்சனம்” (பர+தார+அபிமர்சனம் = பிறர் மனைவியைக் கூடுதல்) செய்வது தவறான காரியமல்லவா?” என்று “பச்சையாகக்” கேட்டான் பாராளும் பரீட்சித்.

அவருடைய “தத்துவ விளக்க”ப் பதில் இதோ! “மன்னா, எல்லாவற்றையும் அக்னி எரித்துவிடும். அக்னியைப் போன்ற ஒளி உடையவர்களும் அப்படியே. அவர்களை எந்த பாபமும் பற்றுவதில்லை. அவர் செய்தாரே என்பதைக் காட்டி தான் செய்ய எவரும் மனதாலும் நினைக்கக்கூடாது. அப்படிச் செய்பவன் அழிந்து போவான். சிவபெருமான் விஷத்தைச் சாப்பிட்டாரே என்று தானும் சாப்பிடுபவன் அழிந்து போவான்.” என்று விளக்குகிறார் மகரிஷி சுகர்.

- நன்றி: கடலங்குடியின் ஸ்ரீமத் பாகவதம்- கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், உரைநடையில்ஸ்ரீமத் பாகவதம் – ஸ்ரீ ஆனந்த நாச்சி யாரம்மா – ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்.

காமம்-கடவுள் இதில் முதலில் வந்தது யார்? இதோ வேதம் சொல்கிறது, “ காமம் தான் உலகில் முதலில் பிறந்தது.காமம் தான் மனசுக்கு முதல் வித்து,அந்த மனசை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலம் இருக்கலுக்கும் இல்லாமல் இருத்தலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினர்.” ரிக் வேதம்.10 வது மண்டலத்தில் 129 வது சூக்தம் 4 வது மந்திரம்.

“ உலகத்தில் முதலில் தோன்றிய காமம் சக்தி வாய்ந்தது கடவுளோ,முன்னோர்களோ,மனிதர்களோ,அதற்க்கு நிகர் கிடையாது. ஓ…காமமே! நீ..எல்லையற்ற பேரழகு கொண்டவன் நீ! எல்லா உயிர்களிலிலும் நீ நிறைந்திருக்கிறாய்! சூரியன் சந்திரன்,காற்று அக்கினி ஆகிய எல்லா தேவர்களையும் விட நீ மேலானவன்…எப்போதும் நீ மேலானவன்.”
–அதர்வண வேதம் 9 வது காண்டம் 2 வது சூக்தம் 19-21 வது மந்திரம்.

வேதம் சொல்வது உண்மைதான்.காமத்தின் முன்னே எல்லா கடவுள்களும் கவிழ்ந்து விட்டதாகவே புராணம் சொல்கிறது.

இந்திரன்,சந்திரன்,அக்கினி,மனிதர்கள் அனைவரையும் காமம் வென்று விட்டது.மன்மத லீலையை வென்றார் உண்டோ? ஒருவரும் இல்லை.

“கண்ணனுக்கே ஆமது காமம்” என்கிறார் ஸ்ரீ இராமானுஜர்.

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்று இவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமனுசன் இந்த மண்மிசையே!

போற்றலும் …..தூற்றலும்….போகட்டும் கண்ணனுக்கே!

// அட! கண்ணனை விடுங்கள்.இவர்கள் இது போன்ற கதைகள் இல்லாத முருகனைக்கூட விட்டு வைக்கவில்லையே!//

முருகன் என்றால் அழகன் என்னும் அழகிய தமிழ்ச்சொல் சங்க இலக்கிய பரிபாடலில் உள்ளது.சரி!இத்துடன் முருகன் பெயர் முடியவில்லையே! கந்தன் எனும் ஸ்கந்தன்,சரவணன்,ஆறுமுகம்,கார்த்திகேயன்,சுப்பிரமணியன்.இந்தப்பெயருக்கெல்லாம் பொருள் என்ன?

புராணக்கதைகள் சொல்லும் பொருள். பார்வதியை மோகத்தோடு நெருங்கினார் பரமசிவனார்.உமையாள் அதற்க்கு மறுத்து ஒதுங்கினாள்.பரமசிவனின் ரேதஸ்(இந்திரியத் துளி௦) ஆகாயத்திலிருந்து சிதறி கங்கையில் விழுந்து நாணல் காட்டின் கரையில் ஒதுங்கி குழந்தையாகிறது.அந்த குழந்தையின் பெயர் (சமஸ்கிரதத்தில்) சரம் என்றால் நாணல் வனம் என்றால் காடு. சரவணன். ஆனின் உயிர்த்துளிகள் பெண்ணின் பாகத்தில் சேராமல் வழி தவறி விழுந்தால் அதன் பெயர்தான் ஸ்கந்தன். துளிகள் சிதறி ஆறு இடங்களில் விழுந்து குழந்தை ஆனதால் ஆறுமுகம்.அதை ஆறு கார்த்திகை நட்சத்திர பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகேயன். சரம்வனம் என்ற சரவணனின் நதி மூலம் நன்கு தெரிந்த காரணத்தால் நம்ம கவிஞர்கள் “வள்ளியே! எப்படி புடுச்சே அரோகரா! அத என்கிட்டச்சொன்னா தட்சணை தருவேன் அரோகரா!” என்று பாடுகிறார்கள்.

நம்ம கண்ணனையும் முருகனையும் இணைத்துப் பாடும் பாடலைக் கேட்போம்.

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)

அன்புடன்
ஷாலி

Wednesday, November 20, 2013

கால் மிதி வாங்குவதற்கு தட்சணை 501 ரூபாயாம்!




இவன் தான் கால்மிதி சாமியார், இவனிடம் கால்மிதியால் ஆசிர்வாதம் வாங்கினால், பாவங்கள் நீங்கி, செல்வ செழிப்புடன், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சொர்க்கம் சென்றடையலாமாம்.

குறிப்பு::- இந்த டுபாகூருக்கு தட்சனை ரூ-501.

ஃபேஸ் புக்கில் நேற்று இந்த செய்தியை நண்பர் ஒருவர் ஷேர் செய்திருந்தார். பல இந்துத்வாவாதிகளின் குற்றச்சாட்டு என்னவென்றால் 'இஸ்லாமியர்கள் இந்து இளைஞர்களை நிறைய மத மாற்றம் செய்து வருகின்றனர்: இதனை அரசு தடை செய்ய வேண்டும்' என்பதே!

மேலே உள்ள படத்தை பாருங்கள். சுய மரியாதை உடைய எவனாவது இவ்வாறு தனது தாயின் தலையில், மனைவியின் தலையில், சகோதரிகளின் தலையில் கால் வைக்க சம்மதிப்பானா? இதை பக்தி என்று நாம் சொல்ல முடியுமா? பெரியார் தனது வாழ்நாளையே இது போன்ற மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்காக செலவிட்டார். இருந்தும் இந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனாலெல்லாம் வெறுப்புற்று தானாக விரும்பியே பல இளைஞர்கள் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

இது போன்ற மன மாற்றங்களை தடுக்க வேண்டும் என்றால் இந்து மதத்தில் உள்ள சாதி வேற்றுமைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் ஒழிக்க பாடுபடுங்கள். 1000 ஆண்டுகள் மொகலாயர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் எவரும் வாள் முனையில் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அன்றும் இந்து மதம் இருந்தது: அழிந்து விடவில்லை. இன்று இந்தியாவைப் பொருத்த வரை முஸ்லிம்களுக்கு எந்த அளவு அநீதி இழைக்கப்படுகிறது என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். குஜராத்தில் 2000 க்கும் அதிகமான முஸ்லிம்களை திட்டமிட்டு கொலை செய்த நரேந்திர மோடி என்ற கயவனை பிரதமர் வேட்பாளராக பிஜேபி அறிவிக்கும் நிலையில் தான் இன்றைய இந்திய அரசியல் உள்ளது. இந்த நிலையிலும் பல இந்து நண்பர்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் எனறால் தவறு எங்கு இருக்கிறது என்பதை ராம கோபாலன், ராஜா, இல கணேசன் போன்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

---------------------------------------------------

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையில் கடந்த 15-11-2013 அன்று கிருஷ்ணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சாதிக் என மாற்றிக் கொண்டார். மேலும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் டிவிடிகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………….



-------------------------------------------------

வட சென்னை நேதாஜி நகர் கிளையில் கடந்த 15-11-2013 அன்று பாலசுப்ரமணி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது பஷீர் என மாற்றிக் கொண்டார்……………….



------------------------------------------------

வட சென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளையில் கடந்த 5-11-13 அன்று பால்பாண்டி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் காதர் என மாற்றிக் கொண்டார் இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.



-----------------------------------------------

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 10-11-2013 அன்று பானுப்பிரியா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார்………



----------------------------------------------

இந்த மன மாற்றங்கள் எல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை. இந்த அளவு ஆர்வத்தோடு தாங்களாகவே விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் தவறு எங்கிருக்கிறது என்பதை சற்று யோசியுங்கள். ஒருவன் பிறந்த மதத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தை தழுவுவது என்பதை அவ்வளவு லேசான காரியமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. திடமான மன உறுதி வேண்டும். தனது பிறந்த வீட்டை தனது சுற்றத்தார்களை எல்லாம் பகைக்க வேண்டி வரும். புதிய கலாசாரத்துக்கு இந்த அன்பர் மாறுகிறார். அரசாங்கத்தின் நெருக்குதல் வேறு அடிக்கடி இவருக்கு வரும். இத்தனையையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார் என்றால் எந்த அளவு அவரது சொந்த மதத்தில் காயப்பட்டிருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை.



Tuesday, November 19, 2013

மோடியைப் பற்றிய சஞ்சீவ் பட்டின் அழகிய பேட்டி!



2002 குஜராத் கலவரம் நடந்த அன்று ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய திரு சஞ்சீவ் பட்டைப் பற்றி நாம் நன்கு அறிவோம். நரேந்திர மோடி கோத்ரா ரயில் விபத்தை வைத்து முஸ்லிம்களை கருவறுக்க என்னவெல்லாம் செய்தார்: அதிகாரிகளுக்கு எப்படி எல்லாம் உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்த நேர்மையான அதிகாரி. தனது உயிருக்கு மோடியால் ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் இன்று வரை மோடிக்கு எதிராக எழுதியும் பேசியும் வருகிறார். ராஜ் சரண் வர்மா என்பவருக்கு சஞ்சீவ் பட் அளிக்கும் பதில்களை இனி பார்ப்போம்.

Sanjiv Bhatt, IPS officer of the Gujarat cadre has been fighting Narendra Modi on the issue of his alleged complicity in the 2002 Gujarat riots. In a free-wheeling interview with Raj Saran Varma, Bhatt speaks about his fight and the fact that he is hopeful that justice will be done one day.

Raj Saran Varma : The Gujarat riots are the biggest blot on the image of the country. We are still reeling under its impact. Do you think if Narendra Modi had acted on time, the riots or the extent of the riots could have been controlled?

Absolutely! The Gujarat carnage is classic example of complicity between the rioters and the administration.

Raj Saran Varma : You filed an affidavit with the Supreme Court requesting Modi’s role to be investigated. Despite SIT and other commissions having investigated the matter how is it that Modi has been given a clean chit?

The Modi administration has been very successful in manipulating all inquisitions into the Gujarat carnage of 2002. They have also been subverting the criminal justice system to shield the high and mighty from criminal culpability.

Advocate RS Jamur, the lawyer appointed by the Supreme Court to investigate the 2002 Gujarat riots has contended that you have forged evidence to malign the state government. How true is that?
These are completely false and misleading claims. in fact, the Modi administration has been enjoying the indulgence of the SIT headed by Mr. Raghavan. The Modi administration, with the tacit blessings of the SIT, as well as the Commission of Inquiry, has deviously destroyed all incriminating documents and records pertaining to the 2002 riots.

Raj Saran Varma : What are the other cases in which you have given evidence and the state government has not acted on it. Please specify and why?

I have deposed before the Justice Nanavati Commission as well as the National Commission for Minorities.

Raj Saran Varma : Your fight against Narendra Modi is now over a decade old. Do you think that finally justice will catch up with Modi?

I do believe that the perseverance of the victims and crusaders will pay off in the end. The wheels of justice grind slow, but grind for sure.

Raj Saran Varma : When you chose to speak the truth and decided to expose Modi and his alleged role in the 2002 riots and many other cases of fake encounters, were you aware of the consequences?

Yes! I was fully aware of the nature of the diabolic person. But, there are several occasions in life when one has to be completely and consciously unmindful of the consequences of ones actions. You just do what is required of you and leave the rest to the Almighty.

Raj Saran Varma : What kind of support did you get from your colleagues in the IPS during your fight against the state government. Or was it a lone battle?

There are a few of us who still continue to nurture the passion and fire that attracted us to the Indian Police Service. The rest have moved away from being mere public servants and have chosen to become career government servants. Such battles are always lonely battles. Any support is always a welcome blessing.

Raj Saran Varma : Your service is at stake and your security has been scaled down, do you feel a threat to your life?

Your service is always at stake if you choose the right over the expedient. That feeling is not new to me. As far as the threat to me and my family is concerned, it is a very real threat. By choosing to challenge Modi in his own lair, that is a risk we have taken of our own volition. It is the duty of the state to protect us. At the same time, it is their choice not to do so. Having said that, I have always felt that it is also the duty of the society to ensure that candles in the wind are protected.

Reminds me of a couplet by Nida Fazli:

Jin charaagon ko hawaoon ka khauf nahin
Un charaagon ko hawaoon se bachaya jaaye

Raj Saran Varma : Now, let us accept that Modi and his politics are responsible for thecarnage. In what way Congress or its politics is better? Way back in May, 2006, the delegation led by Maulana Qari Mohammad Usman, President of Jamiat Ulama-I-Hind, submitted a memorandum to Sonia Gandhi listing out the names and particulars of about 25 Congress leaders, who, they say, were directly involved in the Gujarat carnage. No action seems to have been taken by Congress against their leaders? So, what is the difference between the two then?

Firstly, let me clarify, I am an apolitical person and not a member or supporter of Congress and its politics. I strongly feel Congress has gradually moved away from its prime edifice philosophy of aggressive secularism.

As far as the comparison between BJP and Congress goes, it is a question of identifying and dealing with the larger evil. Modi and his evil politics are incomparable, unprecedented and unparalleled in the history of India. The country is facing massive threat from very clever fascist forces masquerading in the guise of Hindu nationalism and Hindu patriotism. We have to choose and choose wisely. These evil forces need to be countered. Just because the water is impure and adulterated, one cannot shun water during the times of fire.

Raj Saran Varma : A common Muslim may today prefer Modi because Modi is more direct and does not mask his mission?

How I wish this was to be true! Modi has never tendered any apology and there is no sense of remorse in his eyes and actions. In fact, there is a sense of pride. Having said this, I would also like to add that Modi is incredibly clever and is never open or direct about his communal agenda. He masquerades his real intentions under the dubious yet attractive mask of “development”, which is nothing but crony capitalism. This is more dangerous to the secular and democratic fabric of our Nation than anything else. People say, Modi is a creation of APCO. In my opinion, Modi is craftier than one hundred APCOs put together. .

Raj Saran Varma : All said, Gujarat has remained peaceful since 2002. Still you are obsessed with Modi?

First of all, I have to tell you what happened during the Gujarat riots. After the Godhra incident, the mob that had assembled in the Godhra Railway Station manhandled Modi. He had to rescued and evacuated from the scene. This completely shook Modi to the core. To save his chair, which he had earned with great difficulty and to rescue himself from the internal dissidence, the Post Godhra Riots were engineered. So, the objective was very clear and was structured to address a specific situation in which Modi found himself. Gujarat has been free of major communal conflagrations ever since BJP came to power in Gujarat in the early nineties. The process of communal polarization is complete and therefore riots have become politically passé.

Raj Saran Varma : Do you think with Modi with his brand of divisive politics, the country can gain in any way if he becomes the Prime Minister?

It will be the darkest day of our democracy if such a power-crazy person succeeds in becoming the Prime Minister of this country.

Raj Saran Varma : The disturbing thing about Modi and the BJP\RSS combine is that since he has been named the Prime ministerial candidate, the country is being split into pro-Hindu and anti-Muslim sentiments. Can we afford another partition?

A pluralistic country like India cannot afford to embark on another journey of hatred. We need to defeat these fascist hate- mongers and move towards a polity that strives towards detoxification of our hearts and minds.

http://www.thelucknowtribune.org/news.php?cat=1285#sthash.Xk6jvxQs.dpuf

Sunday, November 17, 2013

அபுல் கலாம் ஆசாத்தின் இஸ்லாமிய பார்வை!



உயரம் ஐந்து அடி ஐந்து அங்குலம்; மிகவும் ஒடிசலான உடல்வாகு; வெளுப்பான நிறம்; சுமார் 33வயது; சவரம் செய்யவதில்லை என்றாலும் முகத்தில் அநேகமாக ரோமம் ஏதும் இல்லை; நீண்ட, தீர்க்கமான முகம், எடுப்பான மூக்கு. இந்திய சுதந்திரப் போரின் மகத்தான இளைஞனாக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாதைப் பற்றி முறையாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுதான் சரியான வர்ணனை. தனது தன்னம்பிக்கை, வசீகரம், அர்ப்பணிப்பு ஆகிய குணங்களாலும் அறிவுக் கூர்மை, சிந்தனை வேகம் ஆகியவற்றாலும் ஆசாத் பெரிதும் ஈர்த்தார்.

ஆனால், பிற்காலத்தில் அவர் வரித்துக்கொண்ட தோற்றம் வேறு: அவருடைய ஆழ்ந்த கல்வியறிவுக்கும் வயதுக்கு உரிய மரியாதையைத் தரும் தோற்றம். எந்தக் குறிப்பிட்ட சிந்தனைப் போக்காலும் சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு மிகவும் அகவயமான மேதைமையையும் போக்கையும் கொண்டவர் அவர். இருப்பினும், அவருடைய எழுத்துகளும் அவர் ஆற்றிய உரைகளும் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தின; விசாலமான பார்வையும் பொறுமையின் விளைவாகப் பெற்ற கல்வியறிவும்தான் அதற்குக் காரணம்; அதனால்தான் ஆசாதை ‘நம் காலத்தின் அக்பர்’ என்று ராஜாஜி அழைத்தார்.

மரபின் மீது எரிச்சல்

ஆசாதின் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனினும், மரபு, அது விதிக்கும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மீது ஆசாதுக்கு இருந்த எரிச்சலுணர்வை நாம் அறிந்துகொள்வதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. மரபு என்று சொன்னாலே போதும்; அவருக்கு கோபம் வந்துவிடும். படைப்புத் திறனுக்கே வழியில்லாத அளவுக்கு இறுக்கத்தையும் போதனைத் திணிப்புகளையும் கொண்டவையா இஸ்லாமிய மதக் கோட்பாடுகள்? - இந்தச் சிந்தனையுடன் உடைத்தெறிந்தார் ஆசாத், இறுகிப்போயிருந்த மதக் கோட்பாடுகளின் தளைகளை.

மேலும், அறிவியல் வளர்ச்சியையும் அதன் அளப்பரிய பயன்களையும் மதக்கோட்பாடுகளில் இருக்கும் சில அம்சங்கள் தடுக்கின்றன என்று கடுமையாக விமர்சித்தார். பொருள் சார்ந்த வாழ்க்கை முறை பரவலாகிகொண்டுவருவது குறித்தும் மத அடிப்படையிலான வாழ்க்கை முறையின் தேக்கம், மந்த நிலை ஆகியவை குறித்தும் அவர் கொண்டிருந்த பார்வை யாவரும் அறிந்த ஒன்றே. ‘மதம் என்பது மூடத்தனம் அன்றி வேறில்லை’ என்று அவர் கொண்டிருந்த கருத்து சில காலம்தான் நீடித்தது. மத நம்பிக்கையாளராக அவர் மாறியதும் சீர்திருத்தக் கோட்பாடுகளும் மதத் தத்துவங்களும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு கலவையைக் கைக்கொண்டார். இந்தப் பயணத்தில் அவர் மிகவும் நீண்ட தூரம் செல்லவில்லை என்றாலும் சூழலின் அப்போதைய நிலையை அசைத்துப்பார்க்கும் அளவுக்குச் சென்றிருந்தார்.

அலிகார் பல்கலைக்கழகத்தில் உருவான புத்தறிவானது முஸ்லிம் அறிவுலகத்தில் சீர்திருத்தம், மாறுபட்ட பார்வைக் கோணம், புதுமை ஆகியவற்றுக்கு ஊட்டம் அளித்தது. சையது அகமது கான் இளம் ஆசாதின் சிந்தனையை வடிவமைத்தார். சையது அகமது கானின் எழுத்துகளைப் படித்து அவர் மேல் ஆசாத் ஈடுபாடு கொண்டார். அதேபோல், லக்னோவின் நட்வத் அல்-உலமாவை நிறுவிய ஷிப்லி நொமானியின் மீதும் ஆசாத் பெருமதிப்பு கொண்டிருந்தார்.

உள்ளார்ந்த இறை நம்பிக்கை

ஆசாதின் ஆரம்ப கால எழுத்துகளைப் படித்தால் ஒன்று தெளிவாகத் தெரியும்; அந்தக் காலத்து மதவாதிகளுக்குச் சாட்டையடி கொடுப்பதற்காக, குழப்பங்களும் நிச்சயமின்மைகளும் மிகுந்த ஒரு பிரதேசத்தில் அவர் நுழைந்திருக்கிறார். குர்ஆன், சுன்னா ஆகியவற்றின் உட்பொருளைப் புரிந்துகொள்ளாமல், ‘வேதநூல் விற்பன்னர்கள்’ அல்லது ‘மேலோட்டப் பொருள்காரர்கள்’ சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்றதை ஆசாத் எதிர்த்தார். மதத்தின் மேற்பூச்சின் மேல் அவருக்கு இருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது. அதே நேரத்தில் தனது உள்ளார்ந்த இறை நம்பிக்கையில் அவர் சற்றும் பிறழவில்லை. குர்ஆனின் முதல் அத்தியாயத்தின் வசனங்களைக் கொண்டே குர்ஆன் முழுமையையும் புரிந்துகொள்ள ஆசாத் முயன்றார். அதுபோலவே, குர்ஆன் தெரிவிக்கும் இறையுணர்வின் பரிமாணத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய அரசியலை உருவாக்கி அதையே ஆசாத் பின்பற்றினார்.

அனைத்துலக இஸ்லாமியம்

புவியியல் ரீதியிலும், மொழி, பண்பாடு ஆகியவை அடிப்படையிலும் இன்னும் சில விஷயங்களில் உட்குழுக்களின் பெரும் பிளவுகள் அடிப்படையிலும் அன்றைய இஸ்லாமியச் சமூகங்கள் சிதறுண்டு கிடந்தன. இருந்தாலும் ‘அனைத்துலக இஸ்லாமியம்’ என்ற கருத்தாக்கம் அவர்களின் உணர்வுகளைக் கொழுந்து விட்டு எரியச் செய்தது. வரலாற்றின் சக்கரங்களில் அகப்பட்டுக்கொண்டு நெடுங்காலமாக அவர்கள் நசுக்கப்பட்டபோதிலும் உலகம் முழுவதும் பரவியிருக்கும் வலிமை மிக்கச் சமூகமாக அவர்கள் தங்களைக் கருதிக்கொண்ட உணர்வுதான் ‘அனைத்துலக இஸ்லாமியம்’ என்பது.

இஸ்லாமியப் பண்பாட்டின் பொதுவான பாரம்பரியத்தோடு நெருக்கமாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் ஆசாத். ஒன்றுபட்ட இஸ்லாத்துக்கு உரிய சிந்தனைகள், உணர்வுகள் ஆகியவற்றின் செல்வங்களை அகழ்ந்தெடுக்க முயன்றவர் அவர். இஸ்லாமியச் சமூகத்தின் மேம்பாட்டுக்குக் கல்வி, சுதந்திரமான அணுகுமுறை, வளர்ச்சியில் நம்பிக்கை ஆகியவை அடிப்படை என்ற இயல்பான நம்பிக்கையின் அடிப்படையில் தன் பயணத்தை மேற்கொண்டார் ஆசாத்.

காங்கிரஸின் ஆன்மா

முதல் உலகப் போர் காலகட்டத்தில் தலைமைப் பண்பின் மாண்புக்கு இலக்கணம் வகுத்த ஆசாத், காங்கிரஸ் கட்சியின் ஆத்மாவாக உருவெடுத்தார். தன்னுடைய சகாக்கள் முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு வேண்டும் என்று முழங்கியபோது தேசப் பிரிவினையை ஆசாத் முழு மூச்சோடு எதிர்த்தார். அப்படிப் பிரிவினையை முன்னெடுத்தவர்களை வெளிப்படையாகவே வெறுத்தார். தனது பொதுவாழ்வில் என்றுமே இந்த நிலையை அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. கடந்த காலம் உருவாக்கியிருந்த மாச்சரியங்களையும் வெறுப்பையும் துணிச்சலாகப் புறம்தள்ளிவிட்டு புதுவாழ்வை நோக்கிப் பயணம்செய்யும் முனைப்பில் இந்தியர்கள் இருந்த அற்புதக் காட்சி ஆசாதுக்கு மிகுந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அதனால், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடுவதற்குத் தீவிரப் போக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்றும் பன்மைச் சமூகம் என்பதுதான் ஆதிக்கப் பிரிவினருக்கும் சரி, நலிந்த பிரிவினருக்கும் சரி ஆங்கிலேயருக்கு எதிரான மிக முக்கியமான ஆயுதம் என்றும் ஆசாத் கண்டுகொண்டார்.

ஔரங்கசீப்பின் சதி வேலைகளுக்குப் பலியான அவருடைய மூத்த சகோதரர் தாரா சிகா, ‘அறுதி உண்மைக்கான தேடலில் மசூதிகளும் கோயில்களும் சுட்டிக்காட்டுவது ஒரே திசையைத்தான்’ என்று சொல்வார். அதே நம்பிக்கை உடையவர்தான் ஆசாதும்.

மூர்க்கத்தின் எதிரி

ஒரு பக்கம், இஸ்லாத்துக்கும் இந்தியத் தேசியத்துக்கும் இடையிலான சமநிலை; மறுபக்கம் இஸ்லாத்துக்கும் உலகின் மற்ற கோட்பாடுகளுக்கும் இடையிலான சமநிலை; இரண்டையும் ஒரே நேரத்தில் பேணுவதற்கான ஒரு சூத்திரத்தை முன்வைத்ததுதான் ஆசாதின் மகத்தான திறமை. ஒருங்கிணைந்த, ஒத்திசைவான, படைப்பூக்கம் மிக்க இஸ்லாம் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ஆசாத். கூடவே, பாரசீக சூஃபிக் கவிதை மரபில் வெளிப்படும் மனிதநேயத்தின் வழியில், மதவியலாளர்-மனித நேயர் என்ற ஒரு பிம்பத்தை ஆசாத் தழுவிக்கொண்டார்.

அவர் கனவு கண்டது மூர்க்கமான பிரிவினைவாத இஸ்லாத்தை அல்ல; கலாச்சாரத்திலும் ஆன்மிகத்திலும் பன்மைத்தன்மை கொண்ட ஒரு சமூகத்துக்கு அதாவது கடுமையான பிரிவினைப் போக்கினால் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய ஒரு சமூகத்துக்கு மிகுந்த ஊக்கத்துடன் ஒத்துழைப்பை நல்கும் இஸ்லாத்தையே அவர் கனவு கண்டார்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான ஆசாத், பிரிட்டிஷ் தளையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இந்து-இஸ்லாமியச் சமூகங்கள் இரண்டும் தேளோடு தோள் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கருத்தை வலியுறுத்துவது முக்கியமென்று ஆசாதும் மற்றவர்களும் ஏன் நினைத்தார்கள்? முகலாய வம்சத்தின் கடைசி மன்னர்கள் உருவாக்கிய பன்மைத்தன்மை கொண்ட தேசியத்தை பிரிட்டிஷ்காரர்கள் அடியோடு அழித்துவிட்டதால் உருவான வருத்தத்தைப் பதிவுசெய்வதற்காக இருக்கலாம்: அல்லது, எதிர்காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அவ்வளவு எளிதில் ஒருங்கிணைந்து செயல்பட முடியாத வகையில் பிரிட்டிஷ்காரர்கள் ஆக்கிவிட்டதை எண்ணிப் புலம்புவதற்காக இருக்கலாம்.

சிறையிலே பெரும் வாழ்வு

மொத்தம் 10 ஆண்டுகளை ஆசாத் சிறையில் கழித்தார். அவர் தள்ளப்பட்ட உலகத்தின் அளவு நூறு கஜங்கள்தான் இருக்கும்; அதன் மக்கள்தொகை என்பது 15 பேர்தான். அந்த இடத்தில் காலை வெயிலிலும் மாலையிருட்டிலும் ஆசாத் திளைத்தார். அந்தோனியோ கிராம்சியைப் போலவே ஆசாதும் தன்னை மூழ்கடிக்கக் கூடியதும் தன் அகவாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கக் கூடியதுமான எழுத்துகளைப் படைக்க முற்பட்டார். அதற்காக அவர் நிறையப் படித்தார்.

துயரங்களை மீறிய நம்பிக்கை

‘விதியுடன் ஒரு சந்திப்பு’ என்ற நேருவின் பேச்சுடன் சுதந்திரம் வந்தது. ஆனால் தேசப் பிரிவினை ஆசாதின் உணர்வுகளைக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. “வெற்றியால் ஏற்படும் அரசியல் போதையை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத திறன்தான் ஒரு நல்ல அரசியல் தலைவரை நிரூபிப்பதற்கான சிறந்த சோதனை” என்று எச்.ஏ.எல்.ஃபிஷர் ‘ஹிஸ்டரி ஆஃப் யுரோப்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

மாபெரும் துயரச் சம்பவத்தால் மனமுடைந்துபோயிருந்தாலும், மன அமைதியில்லாதபோதும் தனது துயரங்களைத் துணிவுடன் சுமந்துகொண்டு ஆக வேண்டிய காரியங்களை ஊக்கமுடன் மேலும் தொடர்ந்தார் ஆசாத். இறுதியாக, உண்மையின் பொருட்டு பெரும் இடருக்குள்ளானார். “அழகுக்கும் மகத்துவத்துக்கும் அடையாளமாய்ப் பூத்த பூக்களெல்லாம் இப்போது ஒரு மூலையில் குவிந்துகிடக்கின்றன, எரிந்து சாம்பலான புதர்களைப் போலவும், மிதிக்கப்பட்ட புற்களைப் போலவும்” என்று ஆசாத் அழகாக ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அல்-ஹிலால், அல்-பலாக் ஆகிய பத்திரிகைகளின் பளிச்சென்ற நிறங்களுடன் தொடங்கிய அவருடைய கதை ஆழ்ந்த இருட்டோடு முடிவடைந்தது.

வாழ்வின் பன்முகத்தன்மையில் சாதாரண மனிதர்கள் முரண்களையே பார்ப்பார்கள். ஆனால், ஆசாத் அப்படியல்ல; அந்தப் பன்மைத்தன்மையின் அடிநாதமான ஒற்றுமையைக் காணுமளவுக்கு மகத்தானவர் அவர்; அதுமட்டுமல்லாமல், மேற்குறிப்பிட்ட ஒற்றுமையில்தான் இந்தியா முழுமைக்கும் எதிர்காலம் இருக்கிறது என்றும் உணர்ந்தவர் ஆசாத்!

முஷிருல் ஹசன், வரலாற்றாசிரியர் - இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்ட ‘ஆசாத்’ஸ் லெகசீஸ்: இஸ்லாம் ப்ளூரலிஸ்ம் அண்ட் நேஷன்ஹுட்’ என்ற நூல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

தமிழில்: ஆசை

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/article5338913.ece?ref=sliderNews

இவருடைய இஸ்லாமிய எண்ணங்களை ஆராயும் பொழுது இவர் ஒரு வஹாபியாக அதாவது தவ்ஹீதை பின்பற்றக் கூடியவராக இருந்துள்ளார். தவ்ஹீத் சிந்தனையில் அதிக ஈடுபாடு கொண்ட ஆசாத் அவர்கள் இந்தியாவின் மீது கொண்ட பற்றையும் ஒன்றுபட்ட இந்தியாவை காண ஆசைப் பட்டதையும் அவரது வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

இதற்கு மாற்றமாக முகமது அலி ஜின்னாவை எடுத்துக் கொள்வோம். பிறப்பால் இவர் ஒரு ஷியா முஸ்லிம். ஷியாவாக பிறந்து முழுவதுமாக மேற்குலக ஆடம்பர வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டவர். இந்திய முஸ்லிம்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தான் ஆள வேண்டும் என்ற ஒற்றை பார்வையில் இந்தியாவை பிரித்தார். அதற்கு பக்க பலமாக ராஜாஜி போன்ற இந்துத்வ வாதிகளும் ஜின்னாவுக்கு தோள் கொடுத்தனர்.

தற்போது தமிழகத்தில் வஹாபியிசம்(தவ்ஹீத்) வளர்வதைக் கண்டு சில இந்து நண்பர்கள் பயம் கொள்கிறார்கள். எங்கே பாகிஸ்தான் போன்று வேறு ஒரு பிரிவினையும் வந்து விடுமோ என்று. ஆனால் நடைமுறையோ வேறு விதமாக உள்ளது. தவ்ஹீத் சிந்தனை இஸ்லாமிய இளைஞர்களிடம் வளர்வதால் நாட்டுப் பற்றும் மத ஒற்றுமையும் மேலோங்கும். தவ்ஹீத் சிந்தனை வளர்ந்ததால் மூடப் பழக்கங்கள் ஒழிந்தது: வரதட்சணை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது: ரத்த தானத்தில் தமிழகத்திலேயே பல வருடங்களாக தவ்ஹீத் ஜமாத் முதலிடத்தில் நிற்கிறது: 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்து முஸ்லிம் ஒற்றுமையை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு செல்கிறது: வழி தவறி சென்று கொண்டிருந்த இஸ்லாமிய இளைஞர்களை 'போராட்டங்கள்' மூலமாக அவர்களின் எதிர்ப்பை சட்டத்துக்கு உட்பட்டு கொண்டு வந்ததில் தவ்ஹீத் ஜமாத்தின் பங்கு மகத்தானது: அரசு வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு இஸ்லாமியர்களுக்கு வாங்கிக் கொடுத்து சமூகத்தில் ஒன்றர கலக்க வைத்துள்ளது. இன்றைய இஸ்லாமிய இளைஞர்களையும் இருபது வருடங்களுக்கு முன்பிருந்த இஸ்லாமிய இளைஞர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தவ்ஹீத் ஜமாத்தின் பங்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இப்படி ஒரு மாற்றத்தை குறுகிய காலத்தில் தமிழகத்தில் ஏற்படுத்திக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

Saturday, November 16, 2013

இறைவனின் உருவம் பற்றி தாயுமானவர்

அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான
பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ.


பொருள்கள் எல்லாம் கட்புலனாகா நுண்மை நிலையில் அருவமாகவும், கட்புலனாய், உறுப்பு விளங்காப் பிழம்புநிலையில் அருவுருவமாகவும், உறுப்பு விளங்குநிலையில் உருவமாகவும் காணப்படும். இறைவன் இம் முத்திற நிலைகளையும் கடந்த முழுமுதல்வன். தானாக நிற்கும் பெரும்பொருள். அது திருவருளால் எளியேமுக்கு வந்து புலப்படுநாள் எந்நாளோ?

636:10


அருவம்: உருவமற்றது, காண முடியாத ஒன்று

அருவுருவம்: வடிவம் உண்டென்றும், வடிவம் இல்லை என்றும் சொல்ல முடியாத நடு நிலைமை

'உலகில் பொருட்கள் எல்லாம் ஆரம்ப நிலையில் கண்ணால் காண முடியாத ஒன்றாக இருந்து அது வடிவமைக்கும் போது உருவத்துக்கும் அருவத்துக்கும் இடைப்பட்ட நிலையான அருவுருவத்துக்கு வரும். அதன் பிறகு அந்த பொருள் முழுமையடைந்தவுடன் முழு உருவத்தையும் நமது கண்ணால் பார்க்க முடிகிறது.

நம்மை படைத்த இறைவனானவன் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய இந்த மூன்று நிலைகளையும் கடந்தவன். தானாக நிற்கும் அந்த பரம் பொருளான இறைவனை அவனது திருவருளால் இந்த எளியோன் காண்பது எந்நாளோ?' என்கிறார் தாயுமாவர்.

என்ன அழகாக இறைவனுக்குரிய இலக்கணத்தை தாயுமானவர் விவரிக்கிறார் என்பதை பாருங்கள். இறைவனின் உருவத்தை என்னால் கற்பனை செய்ய முடியாது என்று இவர் சொல்லும் போது நமது நாட்டில் இறைவனுக்கு எத்தனை உருவத்தை நமது சகோதரர்கள் கற்பித்து விட்டார்கள்?

இந்து மதத்தின் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.

இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103


இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். இறைவனைப் பார்க்கும் சக்தி மனிதர்களாகிய நமது கண்களுக்கு கொடுக்கப்பட வில்லை என்பதை இதிலிருந்து அறிகிறோம்.

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.

'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.

குர்ஆன் 4 :153


இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.

ஒரு முறை எங்கள் கிராமத்தில் ஒரு மௌலானா(ஆன்மீக குரு) என்ற பெயரில் ஒரு பெரியவர் வெளியூர்க்காரர் அனைவருக்கும் ஓதி விடுவதாகவும் மறைவான விஷயங்கள் பலவற்றை சொல்வதாகவும் நிறைய காணிக்கைகள் சேர்வதாகவும் கேள்விப் பட்டோம்.எங்கள் நண்பர்கள் குழு அவரை சந்திக்க சென்றோம். பெரிய தாடி. பெரிய தலைப்பாகை.கையில் மணிகள் என்று பார்த்தவுடன் மரியாதை வந்து விடும். அவரிடம் கேட்டோம் 'மௌலானா! 'உங்களை தொழுகைக்கு பள்ளிவாசலில் பார்க்க முடிவதில்லையே!' என்று கேட்டோம். அதற்கு அவர்,'நாங்கள் அத்தகைய வணக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.கேள்விகள் கேட்காதீர்கள்.' என்று சிடுசிடுத்தார். 'அடப்பாவி!நெஞ்சார பொய்தன்னை சொல்கிறானே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினோம். அடுத்த இரண்டு நாளில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் பண்ணினான் என்று ஊர்க்காரர்களே அடித்து விரட்டி விட்டனர். இது போல் பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படித்தும் மக்கள் திருந்துவதாக இல்லை.

'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. மறுமையில் இறைவன் அவர்களுடன் பேசமாட்டான்.அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான்.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'

குர்ஆன் 2 :174

போலி ஆன்மீக வாதிகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது மேற்கண்ட வசனம்.



குஜராத்தில் மோடி, அமித் ஷா பண்ணும் அட்டூழியங்கள்!



ஒரு நாட்டை ஆள்வோரிடம் காவல் துறையின் கட்டுப்பாட்டை கொடுப்பதன் நோக்கம் நாட்டை அமைதியாக நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காகவே! ஆனால் குஜராத்தில் மோடியும், அமீத் ஷாவும் இணைந்து தங்களின் எதிரிகளை பழி தீர்த்துக் கொள்ளவும், இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து என்கவுண்டர் பண்ணுவதற்கும் என்ன மாதிரியான திட்டமிடல்களை எல்லாம் செய்கின்றனர் என்பதற்கு இந்த காணொளி மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது.மாதுரி என்ற ஒரு பெண்ணுக்கு பின்னால் அமீத் ஷா காவல் துறையோடு நடத்தும் தொலைபேசி உரையாடலை இந்த காணொளியில் காணுங்கள்! மிகவும் திட்டமிட்டு தங்களின் அனைத்து காரியங்களையும் இந்த இரு கொடியவர்களும் பல ஆண்டுகளாக சட்டத்தை ஏமாற்றி நடத்தி வருகின்றனர்.

எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றி காலம் தள்ள முடியாது. எப்படிப்பட்ட திறமை சாலியாக இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு நாள் சறுக்கியே ஆக வேண்டும். அந்த நாள் வரும் போது மோடியை காப்பாற்ற இந்துத்வா வாதிகளே வராத சூழல் ஏற்படும்.

அந்த நாளுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்.

---------------------------------------------------------

காங்கிரஸ் ஊழல் செய்து வருகிறது என்று எங்கு போனாலும் மோடி தனது பிரசாரத்தில் கூவி வருகிறார். காங்கிரஸ் ஊழல் செய்வதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டும் மோடியின் குஜராத்தில் வறிய மக்களின் வரிப் பணங்கள் பண முதலைகளால் எந்த அளவு சுரண்டப்படுகிறது: அதற்கு மோடி எந்த அளவு சட்டத்தை வளைத்து ஊழல் செய்கிறார் என்பதை கெஜ்ரிவால் பட்டியல் இடுகிறார். அதையும் பார்ப்போம்.


(1) Land for Nano plant at low rate The state government allotted 1100 acres of land to Tata Motors Ltd (TML) to set up the Nano plant near Sanand. The land was allotted allegedly at Rs 900 per square metre while its market rate was around Rs 10,000 per square metre. Simply put, the government gave Tata Motors total monetary benefit of Rs 33,000 CRORE. ----

(2) Land sold cheap to Adani Group Land was allotted to Adani Group for the Mundra Port & Mundra Special Economic Zone (SEZ) at Re1 per square metre. This is grossly lower than the market rate. ----

( 3) Cheap land for industry but not for Air Force. The Gujarat Government allotted 3,76,561 square metre of land to real estate developer K Raheja at Rs 470 per square metre, while the South-West Air Command (SWAC) was asked to pay Rs 1100 per square metre for 4,04,700 square metre land. ----

(4) Agriculture University Land allotted for hotel. State Government allotted 65,000 square metres of land belonging to Navsari Agriculture University in Surat to Chatrala Indian Hotel Group for a hotel project despite objection from the institute. This deal was allegedly BROKERED BY THE CHIEF MINISTER through his office causing a loss of RS 426 CRORES ----

(5) Border land for chemical firms. A huge plot of land near the Pakistan border was allotted to salt chemical companies said to be close to BJP leader Venkaiah Naidu. ----

(7) Land given to Bharat Hotel Prime land was allotted to Bharat Hotels WITHOUT AUCTION on Sarkhej-Gandhinagar Highway in Ahmedabad. The company has been allotted 25,724 square metre land. ----

(8) Corruption in allotment of lakes State government, in 2008, awarded contracts for fishing activities in 38 lakes without inviting any tenders; bidders were ready to pay Rs 25 lakh per lake. ----

(9) Land given to L&T Larson & Toubro (L&T) was allotted 80 hectare land at Hazira at the rate of Re1 per square metre. ----

(10) Land allotted to other industries. Instead of auctioning prime land in the major cities of the state, the Gujarat government had allotted the land to some industries and industrialists who had signed MoUs in the five editions of VGGIS. --

(11) Cattle feed fraud. The Gujarat government had purchased cattle feed from a blacklisted company at Rs 240 per 5 kg whereas the market rate is just Rs120 to Rs 140 per 5 kg. --

(12) Scam in Anganwadi centres Two bidders apparently formed a cartel and bid for supplying supplementary Nutrition Extruded Fortified Blended Food (EFBF) to Anganwadi centres of the state. One company bid for three zones, while the other for only two. Guidelines were violated, causing the state exchequer a loss of RS. 92 CRORES.


MODI WAS ONCE A CHAIWALA , BUT IN HIS LIFE HE WILL NEVER BE A SACHAIWALA ...

மோடி ஒரு காலத்தில் சாய் வாலா (டீ அற்றுபவர்) வாக இருந்தார்: ஆனால் அவர் என்றுமே தனது வாழ்நாளில் சச்சாய் வாலா(உண்மை பேசுபவராக) வாக இருந்ததில்லை:

இப்படிப்பட்ட ஒரு ஏமாற்று பேரிவழிதான் பிஜேபியின் வருங்கால பிரதம வேட்பாளராம்: கேளுங்கள் தோழர்களே!

Friday, November 15, 2013

காதியானிகள் பிஜேபியில் சங்கமம்!



கோத்ராவிலிருந்து பாட்னாவரை இதுவரை நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் ஆர்எஸ்எஸ் உள்ளது என்று சங்கர்சிங் வகேலா மீடியாவுக்கு செய்தியாக தந்துள்ளார்.

காதியானிகள் என்ற ஒரு சிறு பிரிவு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருப்பது நமக்கு தெரியும். மிர்ஸா குலாமை முகமது நபிக்கு பிறகு வந்த நபியாக இவர்கள் புனைந்துரைப்பதால் இவர்களை இஸ்லாமியர்களின் கணக்கில் சேர்ப்பதில்லை. தனி வழிபாடு: தனி கொள்கை என்று உள்ளதால் பாகிஸ்தான் அரசும் இவர்களை தனி மதமாக அங்கீகரித்துள்ளது. இஸ்லாத்தில் குழப்பத்தை உண்டு பண்ண இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்ட இந்த காதியானிகள் தற்போது பிஜேபியில் அங்கம் வகிப்பதாக சங்கர்சிங் வகேலா குற்றம் சாட்டுகிறார். இவர்களை பயன்படுத்தி இஸ்லாத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பது இந்துத்வாவின் திட்டம். இதை பல இடங்களில் நிறைவேற்றியும் உள்ளனர்.

ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸில் தீவிரமாக பணியாற்றியவர் வகேலா. மேலும் அவர் கூறியது:புத்தகயா, பாட்னா குண்டுவெடிப்புகளில் குஜராத்தொடர்பை குறித்து விசாரணை நடத்தவேண்டும்.குண்டுவெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது குஜராத்தின் ஹாலோல்-காலோலில் என்பது தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ச், குஜராத்தில் உள்ள மோர்பியில் தயாரிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பைகள்,குஜராத்தில் ஹாலோலில் தயாரிக்கப்பட்டதாகும்.

இதில் இருந்து குண்டுவெடிப்பிற்குசதித்திட்டம் தீட்டப்பட்டது குஜராத்தில் தான் என்பது தெரியவருகிறது. அவ்வாறெனில் குஜராத் போலீஸ் என்னச் செய்தது? இதர மாநிலங்களில் இருந்து மோடியை கொல்ல வரும் தீவிரவாதிகளை(?) கண்டுபிடிக்கும் குஜராத் போலீசுக்கு, சொந்த மாநிலத்தில் நடக்கும் சதித்திட்டம் குறித்து எதுவும் தெரியாது என்று சங்கர்சிங் வகேலா கிண்டலாக தெரிவித்தார்.

அவ்வாறெனில் இது குஜராத் போலீசின் வேலையா? என்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஹ்மதாபாத் மாவட்ட மருத்துவமனை, எல்.ஜி மருத்துவமனை ஆகியவற்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் கரங்கள் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். அன்றைய குண்டுவெடிப்புகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை உள்ளது? என்று வகேலாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு சங்கர்சிங் வகேலா பதிலளிக்கையில்,’நான் நீண்ட காலம் அவர்களுடன் இருந்துள்ளேன்.எனக்கு அவர்களை நன்றாக தெரியும்.அவர்களின் கொள்கைகளையும் தெரியும்.’ என்று தெரிவித்தார்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் இஸ்லாமிய எதிரிகளான இந்த இரண்டும் தற்போது ஒன்றாகியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசு காதியானிகளை கண்காணித்து தேச விரோத செயல்களில் இந்துத்வாவோடு சேராது இருக்க முயற்சி எடுக்க வேண்டும். காதியானிகளும் அரபு பெயர்களை வைப்பதால் அவர்கள் செய்யும் அனைத்து தேச விரோத செயல்களுக்கும் முஸ்லிம்கள் பலிகடா ஆக்கப்படுவார்கள். இதைத்தான் மோடியும் பிஜேபியும் விரும்புகின்றனர்.


Thursday, November 14, 2013

ஆணவம் அழித்தல் - தாயுமானவர்



1400 வருடங்களுக்கு முன்பு அரபுலகம் பல தெய்வ வழிபாட்டிலும், சாதி வெறியிலும் மிகைத்திருந்த போது தமிழ் நாட்டில் நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மிக உயர்ந்த இடத்திலேயே இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சில பாடல்களை பார்த்து வருகிறோம்....

நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ.


எனக்குள் குடி கொண்ட 'நான்' என்ற அகங்காரம், ஆணவம் போன்ற துர் குணங்கள் நான் அறியாமல் என்னை விட்டு அகல வேண்டும்: அவ்வாறு நீங்கியவுடன் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் தனது அருளை நீக்கமற செலுத்தி வரும் பரம் பொருளான அந்த இறைவனை காணும் நாள் எந்நாளோ?

தாயுமானவர் பாடல்கள் 636:7

இறைவனைக் காண வேண்டும்: அவ்வாறு காணும் நேரம் எனக்குள் இருக்கும் அகந்தை அகம்பாவம் அகங்காரம் அனைத்தும் நான் அறியாமலேயே என்னை விட்டு நீங்கி விட வேண்டும் என்கிறார் தாயுமானவர். எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற இறைவனுக்கு முன்னால் அற்ப மனிதனாகிய நான் எதற்கு அகங்காரம் கொண்டு அலைய வேண்டும் என்று கேட்கிறார் தாயுமானவர்.

ஆணவம்,அகங்காரம், கர்வம் பற்றி குர்ஆன் கூறும் கருத்தையும் பார்ப்போம்.

மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'

17 : 37 - குர்ஆன்

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.

மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் முன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு மனிதன் அங்கு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.

மலைகளின் உயரத்தை....

உலகின் மிக உயரமான மலை இமய மலை ஆகும். இம் மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இமய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட்டான். ஆனால் அந்த உயரத்திற்கு பூமியை துளையிட்டு மனிதனால் செல்ல முடியுமா என்றால் முடியாது என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. வலைப் பக்கத்திலேயே ஒரு சிலர் இறைவனை விட மனிதன் சக்தி படைத்தவன் என்று நாத்திக வாதம் பேசுவதைப் பார்க்கிறோம். அப்படிப் பட்டவர்களைப் பார்த்து இறைவன், 'இது போன்று ஆணவத்தில் பிதற்றி திரியாதே! உன்னால் பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அளவை அடையவே முடியாது' என்று எச்சரிக்கின்றான்.

விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் உயரத்திற்கு போக முடியாது என்று அடித்துச் சொல்கிறது.

தன் இனத்தை விட மற்ற இனம் தாழ்ந்தது என்று இன்றும் எழுதியும் பேசியும் வருபவர்களைப் பார்க்கிறோம். அதேபோல் நான் பெரும் சிந்தனையாளன், நான் இந்த நாட்டின் அதிபதி, நான் பெரும் கோடீஸ்வரன் என்றெல்லாம் இறுமாப்போடு உலகில் வலம் வருவோரையும் இன்றும் பார்க்கிறோம். இது போன்ற எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட குர்ஆனிய வசனம் அமைந்துள்ளது.

நீ வானத்துக்கு மேலே போகலாம், கணிணித் துறையினால் உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வரலாம். ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. எனவே வீண் பெருமை பேசி கர்வத்துடன் உலகில் நடக்காதே என்பது இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம். அதே போல் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு சொன்ன இந்த கருத்து இன்றும் இனி என்றும் மெய்ப்பிக்கப் படுவதால் இது நம்மைப்படைத்த இறைவனின் வார்த்தைதான் என்ற முடிவுக்கும் வருகிறோம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Wednesday, November 13, 2013

கோமாளியாக மாறி வரும் நரேந்திர மோடி!



பிஜேபியால் பிரதமராக முன்னிறுத்தப்படும் மோடிக்கு இந்திய வரலாறு எதுவும் தெரியவில்லை என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா இந்த காணொளியில் மிக அழகாக விவரிக்கிறது. வாயை திறந்தாலே பொய்தான். இப்படி ஒரு வித்தியாசமான சைக்கோவை பிரதமராக்கிப் பார்க்க பல இந்துத்வாவினர் ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கே ஒரு காலத்தில் மிக ஆபத்தாக முடிவார் மோடி. ஏனெனில் தான் முன்னுக்கு வர தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதையும் செய்ய தயங்காதவர் மோடி. பழைய வரலாறு இதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. பொய் சொல்வது, தனது பேச்சை கேட்காதவர் இந்துத்வாவாதியாகவே இருந்தாலும் உடன் தீர்த்துக் கட்டி விடுவது என்று இவரது புகழ் அமெரிக்கா இங்கிலாந்து வரை பரவியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.!

இனி கோமாளியாக மாறிக் கொண்டிருக்கும் மோடியின் பேச்சின் தமிழாக்கத்தை ஹிந்து பத்திரிக்கையிலிருந்து பார்ப்போம்.

லண்டனில் இந்தியா ஹவுஸ் தொடங்கியதாக சியாமாஜி கிருஷ்ண வர்மாவுக்கு பதிலாக சியாமா பிரசாத் முகர்ஜியை புகழ்ந்தார் மோடி. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள கேதாவில் நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது:

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்தனையை வளர்க்கும் வகையில் பிரிட்டன் தலைநகரான லண்டனிலேயே இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத்தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்திய புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930-ம் ஆண்டு உயிரிழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியை பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் ” என்றார்.

மோடி இவ்வாறு தெரிவித்துள்ளபோதிலும், அதில் உள்ள தகவல்கள் உண்மைக்கு மாறாக உள்ளன. சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தது கோல்கத்தாவில், குஜராத்தில் அல்ல. அவர் உயிரிழந்தது 1953-ம் ஆண்டு (இந்தியா சுதந்திரமடைந்த பிறகு). 1930-ம் ஆண்டில் அல்ல. அவர் உயிரிழந்த பின் மேற்கு வங்கத்தில் தகனம் செய்யப்பட்டது அவரது உடல்.

சியாமாஜி கிருஷ்ண வர்மா

உண்மையில் மோடி கூறிய பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் சியாமாஜி கிருஷ்ண வர்மாதான். சம்ஸ்கிருத பண்டிதரான அவர், குஜராத்தின் மாண்ட்வி நகரில் 1857-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பிறந்தார். அவர்தான் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை தொடங்கினார்.

வர்மாவின் அஸ்தியை ஸ்விட்சர்லாந்தி லிருந்து 2003-ம் ஆண்டு கொண்டு வர ஏற்பாடு செய்தவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல்கள் குஜராத் மாநில சுற்றுலாத்துறை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

சியாமா பிரசாத் முகர்ஜி

ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராக பதவி வகித்த சியாமா பிரசாத் முகர்ஜி, காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜன சங்கத்தை (பாஜகவின் தாய்க் கட்சி) 1951-ம் ஆண்டு தோற்றுவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் செல்ல இந்திய தேசியவாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டார். பின்னர், சிறையில் இருந்தபோதே அவர் உயிரிழந்தார்.

உடனே திருத்திக்கொண்டார்

மோடியின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர் மணீஷ் திவாரி, “சியாமா பிரசாத் முகர்ஜி

1930-ம் ஆண்டு லண்டனில் உயிரிழந்தார் என்ற மோடியின் புதிய ஜன சங்க வரலாற்றுப் பேச்சை கேட்டு கல்லறையில் இருக்கும் முகர்ஜியே தர்மசங்கடத்துக்கு உள்ளாகியிருப்பார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதை பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “தனது உரையை முடித்த பின்பு, ஒரு நிமிடத்துக்குள் மீண்டும் மேடைக்கு வந்த மோடி, தான் தவறுதலாக கூறிவிட்டதாகத் தெரிவித்தார்” என்றார். தனது உதவியாளரிடமிருந்து வந்த குறிப்பை படித்த பின்பு, தனது தவறை ஒப்புக் கொண்டு மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் மட்டுமல்ல சில நாள்களுக்கு முன்பு தக்சசீல பல்கலைக்கழகம் இருந்தது பிகாரில் என்று மோடி கூறினார். உண்மையில் இன்றைய பாகிஸ்தான் பகுதியில்தான் அந்த பல்கலைக்கழகம் இருந்தது. - டெல்லி

பிரதமர் கனவை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, சிறுபான்மையினரை கொல்வதை தொழிலாக வைப்பதை தூரமாக்கி இந்திய வரலாறுகளை சிறிது படிக்க ஆரம்பித்தால் அது மோடிக்கும் பிஜேபிக்கும் நல்லது.

Tuesday, November 12, 2013

தமிழக அரசே..!!! இந்துத்வாவாதிகள் மீது நடவடிக்கை எடு..!!!

தமிழக அரசே..!!! இந்துத்வாவாதிகள் மீது நடவடிக்கை எடு..!!!

அ.தி.மு.க இனையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லீம்கள் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட துடிக்கும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு.

------------------------------------------

சென்னை: அ.தி.மு.க அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஊடுருவி, மோசமான வாசகங்களும் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்களும் எழுதிய நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் "பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்" என்ற குழுவால் கடத்தப்பட்டது. தளத்தினை ஊடுருவிய கடத்தல்காரர்கள், "லாங்லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத்" முதலான வாசகங்களையும் மண்டைஓடு படத்தையும் போட்டு, நாங்கள் பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் என தளத்தில் படம் போட்டிருந்தனர்.

இதனால் அ.தி.மு.க தலைமையும் தொண்டர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதனைத் தொடர்ந்து தளத்தை ஹேக் செய்த சமூக விரோத கும்பலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இப்புகாரின் மீது உடனடி நடவடிக்கை ஆரம்பித்த சைபர் க்ரைம் காவல்துறையினர், அ.தி.மு.க இணையதளத்தை மூடிவிட்டு அத்தளத்தின் சர்வரில் யார் யார் நுழைந்துள்ளனர் என்ற விவரத்தை சர்வர் லாக் ஃபைலிலிருந்து எடுத்து சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 300 க்கும் அதிகமான தடவை ஒரு குறிப்பிட்ட ஐ.பி முகவரியிலிருந்து அ.தி.மு.க இணையதளத்தினுள் நுழைந்திருந்தது தெரிந்தது. உடனடியாக அந்த ஐ.பி முகவரிக்குச் சொந்தமான கணினியினையும் நபரையும் பிடிக்க காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்தனர்.

பெங்களூருவில் ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணி புரியும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற பொறியாளரே இக்குற்றத்தின் பின்னணியில் இருந்தவர் என்பது கண்டறியப்பட்டது. 23 வயதாகும் இளைஞரான இவர், கடந்த 2011 ஆம் பொறியியல் பட்டம் பெற்றவர்.

உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறையினர், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66 -ன் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 15 நாட்கள் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், விளையாட்டுக்குத் தாம் அவ்வாறு செய்ததாக ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ஆனால், ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே மோசமாக மக்கள் கருதும் வகையிலான வாசகங்களை, பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி எழுதியது நிச்சயமாக விளையாட்டுக்குச் செய்த காரியமல்ல எனவும் இவரின் செயல் மதவெறி கூட்டத்தின் திட்டமிடப்பட்ட செயலாக இருக்கலாம் எனவும் இவரின் பின்னணியில் ஒரு சதி கூட்டம் இயங்கியிருக்க வாய்ப்புள்ளது எனவும் அது குறித்து தீவிர விசாரணையினைக் காவல்துறை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வரும் நாட்களில், இக்குற்றச் செயலின் பின்னணி குறித்து கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.inneram.com/news/tamilnadu/3225-engineer-arrested-for-hacking-admk-site.html

காவி தீவிரவாதிகள் முஸ்லிம்களை சிக்க வைக்க எப்படி எல்லாம் திட்டம் தீட்டுகின்றனர்! இந்த நாட்டை மோடி கும்பலிடமிருந்து காக்க தீவிர பிரசாரம் அவசியம். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் இந்துத்வாவாதிகளின் நாடகங்களை உடனுக்குடன் அம்பலப்படுத்தி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை உண்டு பண்ண இந்த யூத அடிவருடிகள் எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா.... தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட இந்துத்வவாதிக்கு தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும். அப்பொழுதான் இது போன்ற மோடி மஸ்தான் வேலைகள் ஓரளவு கட்டுக்குள் வரும்.

இதனை காதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது! தமிழக முதல்வருக்கு இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பை விதைக்க இப்படி ஒரு கோழைத்தனமான வேலையை யூதர்களின் வாரிசுகள் செயல்படுததியுள்ளனர். இரும்புக் கரம் கொண்டு இதனை முதல்வர் ஒடுக்குவார் என்று எதிர்பார்ப்போம்.

Monday, November 11, 2013

பாட்னா - மோடியின் அடுத்த சூழ்ச்சியும் தோல்வி கண்டது!



மோடியின் அடுத்த சூழ்ச்சியும் தோல்வி கண்டது!

பாட்னாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற தீவிரவாதிகளே காரணம் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நமது மீடியாக்கள் பொய்களை அவிழ்த்து விட்டது. ஆனால் உண்மை குற்றவாளிகள் தற்போது சட்டத்தின் பிடியில் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜூ சவோ என்ற இந்துத்வ தீவிரவாதியை போலீஸ் கைது செய்துள்ளது. இவனுக்கு பணம் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்த பவன் குமார், விகாஸ் குமார், கோபால் குமார், கணேஷ் போன்ற நான்கு இந்துத்வ தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்துள்ளது. இத் தகவலை லக்கிசரை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார். 'இந்தியன் முஜாஹிதீன்' அமைப்புக்கும் இந்த இந்துத்வ தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் அவர் தெரிவித்தார். 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பே நமது உளவுத் துறையால் ஏற்படுத்தப்பட்ட கற்பனை அமைப்பு என்று நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ உண்மைகளை அவரது தளத்தில் உரத்து கொன்னதும் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

ஆரம்பத்தில் இந்த குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம்களே காரணம் என்றவுடன் சில அம்பிகள் தின மலரில் 'இவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்' , 'வன்முறையில் வளர்ந்த இஸ்லாம்' , 'இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கொடுப்பதை அரசு நிறுத்த வேண்டும்' என்று தங்களின் பூணூலை முறுக்கிக் கொண்டு பின்னூட்டம் இட்டனர். உண்மை தற்போது வெளி வந்துள்ளது. தற்போது இந்த குற்றவாளிகளையும் பின்னூட்டமிட்ட அம்பிகளையும் வந்த வழியான கைபர் போலன் கணவாய்க்கே அனுப்பி விடலாமா? தின மலம் இந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்தை காக்குமா? ஆர்எஸ்எஸ் அபிமானியான தினமலத்திடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாதல்லவா!

அடப் பாவிகளா! கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கேவலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சொந்த இந்துக்களையே குண்டு வைத்து கொல்ல எப்படியடா மனம் வருகிறது? இப்படி உனது சகோதரனையே பலி கொடுத்து நீ ஆட்சிக்கு வந்து எதை சாதிக்க போகிறாய்? மனு தர்மத்தை கொண்டு வருவாய். பார்பனன், ஷத்திரியன், சூத்திரன் என்று மக்களை பிளவு படுத்துவாய்: இந்த உளுத்துப் போன சட்டத்தை திரும்ப எனது நாட்டுக்கு கொண்டு வர அப்பாவி இந்து சகோதரர்களையும் பழி வாங்க துணிந்து விட்டாயே! குஜராத் கலவரம், மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, தற்போது பாட்னா குண்டு வெடிப்புதனது சக அமைச்சரான ஹரேன் பாண்டியாவை போட்டு தள்ளியது, மும்பை குண்டு வெடிப்பில் ஹேமந்த் கர்கரேயை போட்டு தள்ளியது, இஷ்ரத் ஜஹானை என்கவுண்டர் செய்தது, சொராபுதீனை என்கவுண்டர் செய்தது என்று எங்கு திரும்பினாலும் இந்துத்வாவின் கைகளும் அதன் பின்னே மோடியின் ரத்த கரங்களும் வருவது தொடர்கதையாகிறதே! நேற்று அதிமுகவின் இணைய தளத்தை முடக்கி அங்கு 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று குறிப்பையும் ஒரு அம்பி கொடுத்து தற்போது காவல்துறை அந்த இந்துத்வாவாதியை கைது பண்ணியுள்ளது.

மோடியே! இன்னும் எத்தனை இந்திய ரத்தம் வேண்டும் உனக்கு? கடைசி காலங்களில் செய்த தவறுகளுக்கு நீ பெறப் போகும் தண்டனைகளை நினைத்து எனக்கு உன் மேல் பரிதாபமே மேலோங்குகிறது. உனது தண்டனை காலத்தை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

Following a tip off from the National Investigation Agency (NIA), the Bihar police have arrested a person, Raju Sao, from Jharkhand's Dhanbad district in connection with the Patna serial blasts, police said on Monday.

Raju Sao was arrested from Jharia in Dhanbad when a Bihar police team conducted raids late on Sunday in search of his brothers Jitendra Sao, Pappu Sao and Bittu Sao, who were not found, a police official said.

"Police have brought Raju Sao to the state's Lakhisarai district for interrogation," a police official said.

Three days ago, the NIA detained six people and seized dozens of bank passbooks, ATM cards and other documents in Lakhisarai, about 150 km from here, during raids at several places in connection with the Oct 27 Patna blasts.

http://www.hindustantimes.com/india-news/patna-blasts-one-more-arrested-from-dhanbad/article1-1149761.aspx

Sunday, November 10, 2013

ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்!



நரேந்திர மோடி பேசிய பேச்சு, நேருவையும் படேலையும் ஒப்பிட்டுப் பரபரப்பாக விவாதம் நடக்கத் தூண்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீனமும் ஒன்றுபட்டதும் மதச்சார்பற்றதுமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டு, இப்போது மக்கள் நினைவிலிருந்தே மறைந்துபோன இருவரைப் பற்றிப் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபி அகமது கித்வாய். தேசியத்தைக் கண்போல் மதித்த இஸ்லாமியத் தலைவர்களின் மகத்தான, கடைசித் தலைமுறையினர். பன்மைச் சமூகம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை நேரு மேற்கத்தியக் கல்வி முறையிலிருந்து பெற்றுக்கொண்டார் என்றால், இவர்களோ இந்து - முஸ்லீம் சங்கமத்திலிருந்தே அவற்றை நேரடியாகப் பெற்றுக்கொண்டனர்.

இன்றைய இந்தியாவின் இஸ்லாமியத் தலைவர்களை எடுத்துக்கொள்வோம். சகிப்புத்தன்மையின்மை, இஸ்லாமியச் சமூகத்தின் நலன்களை மட்டும் பார்க்கும் குறுகிய நோக்கு - இவைதான் அவர்களின் குணங்கள். முன்குறிப்பிட்ட தலைவர்கள் இப்படியல்ல. அவர்கள் தங்கள் சமூகத்தைப் பற்றிய வித்தியாசமான பார்வை கொண்டிருந்தவர்கள்; பெரும்பான்மைச் சமூகத்துக்கும் சிறுபான்மைச் சமூகத்துக்கும் இடையில் கணக்குவழக்கு தீர்க்கும் விஷயமாக அரசியலைக் கருதாதவர்கள்;

எனவே, இன்றைய இஸ்லாமியத் தலைவர்கள் அவர்களை நினைவுகூராமல் இருப்பதில் ஒன்றும் புதுமையில்லை. குறைந்தபட்சம் மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு இருந்த பங்கைப் பற்றி உணராமலேயே வளர்ந்தது அதன் காரணமாகத்தான். இந்த நிலையை வலதுசாரி இந்துக்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்; தேசிய நீரோட்டத்துக்கு வெளியே உள்ளவர்கள் என்றும் தேசத்தைக் கட்டமைக்க அரும்பாடுபட்ட இந்துத் தலைவர்களின் உழைப்பின் பயனைச் சுரண்டிக்கொண்டிருப்பவர்கள் என்றும் இஸ்லாமியர்களை வலதுசாரி இந்துக்கள் சித்தரிக்கிறார்கள்.

முன்மாதிரிகள் இஸ்லாமிய இளைஞர்கள் பின்பற்றும் வகையில் அரசியலில் முன்மாதிரிகள் யாருமில்லாமல் போனதுதான் இன்னும் மோசம். சுற்றிலும் பார்க்கும்போது, இஸ்லாமியச் சமூகத்தின் நலன்கள் மேல் பெரிதும் அக்கறையில்லாத, சந்தர்ப்பவாத அரசியலில் மட்டும் ஈடுபடுகிற இஸ்லாமியத் தலைவர்களே அந்த இளைஞர்களுக்குத் தென்படுகின்றனர். எனவே, வழிகாட்டுதல் இல்லாத நிலைக்கு அந்த இளைஞர்களைக் குற்றம்சாட்ட முடியாது.

ஆசாதும் கித்வாயும் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள். ஆனால், நபிகள் நாயகத்தை நிந்தனை செய்யும் உப்புச்சப்பற்ற நாவல் ஒன்றாலும், இஸ்லாமியர் மீது வெறுப்பை உமிழும் குப்பைத் திரைப்படம் ஒன்றாலும் நொறுங்கிவிடக் கூடிய அளவு பலவீனமானதல்ல அவர்களின் மதநம்பிக்கை. மதநம்பிக்கை என்றாலே அடிப்படைவாதம்தான் என்ற கருத்து, இஸ்லாத்தின் பெயரால் செயல்படுவதாகச் சொல்லிக்கொண்ட புதுவகை இஸ்லாமியத் தலைவர்களால் உருவானது. ஆனால், இந்தக் கருத்தை மறுக்கும் விதத்தில்தான் ஆசாத், கித்வாய் ஆகிய இருவரின் வாழ்க்கையும் திகழ்ந்தது.

தாடியுடனும் குல்லாவுடனும் தோற்றமளித்த இஸ்லாமிய அறிஞர்தான் ஆசாத். குர் ஆனுக்கும், ஹதிதுக்கும் அற்புதமான உரை விளக்கம் அளித்தவர் அவர். அறிவியல், கணிதம், தத்துவம் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் உருவாக்கம் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் படித்தவர்களெல்லாம் இன்று உலகம் முழுக்க வெவ்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகள் செய்துவருகிறார்கள். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களைத் தொடங்கி இந்தியாவில் உலகத் தரமான கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தது மௌலானா அபுல் கலாம் ஆசாத்தான் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.

ஆசாத், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித் துறை அமைச்சர் மட்டுமல்ல; இந்தியாவே பெருமைகொள்ளும், அறிவியல், தொழிலக ஆய்வுக் கழகம் (சி.எஸ்.ஐ.ஆர்.) போன்ற பல்வேறு நவீனக் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கிய கல்விச் சிற்பியும் அவர்தான். இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்ததும் அவர்தான்; கோடிக் கணக்கான ஏழை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியைச் சாத்தியப்படுத்தியது அந்தத் திட்டம்தான்.

ஒருமைப்பாட்டின் உருவம் ரஃபி சாஹிப் என்று பலராலும் அழைக்கப்பட்ட கித்வாய்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தகவல்தொடர்புத் துறை அமைச்சர். இந்தியாவே உணவுப் பஞ்சத்தில் தவித்தபோது கித்வாயிடம் உணவு மற்றும் வேளாண் துறை ஒப்படைக்கப்பட்டது கித்வாய் மீது நேரு கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. தனக்கு ஒப்படைத்த பொறுப்பை கித்வாய் மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அதனால்தான், வேளாண் துறையில் மகத்தான பங்களிப்பு செய்பவர்களைச் சிறப்பிப்பதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கித்வாய் நினைவாக ஒரு விருதை ஏற்படுத்தியது. அவருடைய பரந்துபட்ட இடதுசாரிப் பார்வையின் காரணமாக 'இஸ்லாமிய சோஷியலிஸ்ட்' என்று கித்வாய் அழைக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் உயர் வகுப்பு முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கென்று தனி நாடு என்ற முழக்கத்தைக் கொண்ட முஸ்லிம் லீகின் அழைப்பை ஏற்று அவர்கள் பக்கம் சாய்ந்துகொண்டிருந்தனர்; அப்படிப்பட்ட சூழலில், 'ஒருங்கிணைந்ததும் எல்லாரையும் உள்ளடக்கியதுமான இந்தியா'என்ற கருத்தை நோக்கி அந்த மாநிலத்தின் கிழக்கு மற்றும் மையப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களைச் செலுத்தியதில் கித்வாய் பெரும் பங்கு வகித்தார்.

'ஐக்கிய மாகாணங்கள்'என்று அப்போது அழைக்கப்பட்ட பகுதியில், அப்போது கித்வாய்க்கு இருந்த பிராபல்யம், செல்வாக்கு காரணமாக அவரைப் பின்பற்றியவர்களுக்கு 'ரஃபியர்கள்'என்ற பெயர் வந்தது. இந்தியாவைத் தாண்டி அனேகமாக கித்வாய் சென்றதே இல்லை. என்றாலும், உலக நாடுகளை வலம்வரும் தற்காலத்து இஸ்லாமியத் தலைவர்களைவிட சகிப்புத்தன்மை, ஒருங்கிணைக்கும்தன்மை ஆகியவற்றைச் சர்வதேசக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நன்றாகப் புரிந்துகொண்டவர் கித்வாய்.

தில்லியில் உள்ள 'ரஃபி மார்க்' கித்வாயின் நினைவாகத்தான் பெயர்சூட்டப்பட்டிருக்கிறது. அந்த ரஃபி யார் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? பாடகர் முகம்மது ரஃபியை அது குறிக்கிறதென்று பலர் நினைத்துக்கொண்டிருந்ததை, பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பொன்று அம்பலமாக்கியது. இஸ்லாமியச் சமூகத்தை நோக்கிச் சில கேள்விகள் நவீன உலகத்துக்குத் தொடர்பில்லாத, கடந்த காலத்து வெற்று நினைவுகளாக ஆசாதும் கித்வாயும் கருதப்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது. சதிவேலை என்று கூச்சலிடுபவர்கள் இஸ்லாமியத் தலைவர்களை அரசு எப்போதும் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டுவார்கள்; இஸ்லாமியச் சமூகம் மட்டும் அந்தத் தலைவர்களை நினைவுகூருகிறதா என்ன? அந்தத் தலைவர்களின் பெருமைகளை எப்போதும் பறைசாற்றும் விதத்தில் இஸ்லாமியச் சமூகம் என்ன செய்திருக்கிறது?

அந்த இரட்டையர் இந்திய இஸ்லாம் சமூகத்தின் உன்னதமான மரபுகளைப் பிரதிபலித்தவர்கள். சக வாழ்வும் கலாச்சார ஒருமைப்பாடும் இந்திய இஸ்லாம் சமூகத்தின் அடிப்படைகள்; அந்த அடிப்படைகளின் மீது இன்று தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே, அந்தத் தலைவர்களைத் 'தோண்டியெடுக்க' இதைவிடப் பொருத்தமான தருணம் அமையாது. சகிப்பின்மை, பிற்போக்குத்தனம், இன்னும் மோசமாக, பயங்கரவாதம் ஆகியவற்றின் மறுபெயர் இஸ்லாம் என்ற தோற்றம் உருவாகியிருக்கும் இந்த வேளையில், அந்தத் தலைவர்கள் மட்டும் உயிரோடு இருந்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்கள்.

படேலைப் பற்றி நரேந்திர மோடி படேல் குறித்த விவாதத்தை மோடி உருவாக்கியிருப்பது தேர்தல் நேர உத்தியாக இருக்கலாம். ஆனால், மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் விடுபடல் இல்லாமலும் அடிக்கடியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மோடியின் பேச்சு உருவாக்குமானால், அது உண்மையிலேயே உருப்படியானதாக இருக்கும்; வெறுமனே, தலைவர்களுக்குச் சிலைகள் நிறுவுவதையும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர்களை வைப்பதையும் விடுத்து, அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதிலுமே இருக்கிறது உண்மையான நினைவுகூரல். ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பித்துப் பிடித்தவர்கள்; அதற்கு நேர்மாறாக வரலாற்று உணர்வற்றிருப்பதில் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள்.

அதனால்தான், இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள். நவீன இந்தியாவின் வரலாறு பல்வேறு குரல்களின் வழியே சொல்லப்பட வேண்டிய காலம் இது. நேருவும் படேலும் சந்தேகமின்றி ராட்சசர்கள்தான், ஆனால், இந்தக் கதையில் வெறுமனே வந்துபோகாமல் பெரும் பங்கு வகித்த மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்!

ஹசன் சுரூர், பத்தியாளர், 'இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?' என்ற இவருடைய புதிய புத்தகம் 'ரூபா & கோ' பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது. தொடர்புக்கு: hasan.suroor@gmail.com

தமிழில்: ஆசை

(Hasan Suroor is an independent columnist. His forthcoming book, India’s Muslim Spring: Why is Nobody Talking About It? is being published by Rupa & Co. E-mail: hasan.suroor@gmail.com )

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5335293.ece