Followers

Friday, February 28, 2014

நரேந்திர மோடியே! உனது பொய்க்கு அளவில்லையா!

தினம் பொய்கைளையே பேசி வரும் நரேந்திர மோடி புதிதாக உதிர்த்த முத்து 'சர்தார் சரோவர் அணை இன்று வரை திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் நமது பிரதமரும், ஆளும் காங்கிரஸ் கட்சியுமே' என்று உளறி கொட்டியுள்ளார். இதன் உண்மை நிலையை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த அணை இன்று வரை திறக்கப்படாததற்கு முக்கிய காரணமே சுப்ரீம் கோர்ட். மக்கள் மத்தியில் அதனை சொல்லாமல் காங்கிரஸின் மேல் பழியைப் போட்டு தான் ஒரு ஃபேக் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இந்த அணை கட்டுமான இடத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணத்தை குஜராத் அரசு இன்று வரை அளிக்கவில்லை. நர்மதா கட்டுப் பாட்டு ஆணையம் என்பது நமது சுப்ரீம் கோர்ட் நியமித்த ஒன்று. இதற்கும் காங்கிரஸூக்கும் சம்பந்தம் இல்லை என்பதை சாதாரண பொது மக்களும் புரிந்து கொள்வர். ஆனால் அடுத்த பிரதமர் நானே என்று எங்கு சென்றாலும் உளறித் தள்ளும் நரேந்திர மோடிக்கு இது தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

In order dated 18 October 2000 in Narmada Bachao Andolan Vs. Union of India and others the then Chief Justice B. N. Kirpal, Justice Dr. A. S. Anand clearly stated :

“23. Narmada Control Authority was empowered to constitute one or more sub-committees and assign to them such of the functions and delegate such of its powers as it thought fit. Accordingly, the Narmada Control Authority constituted the following discipline based sub-groups:

(i) Resettlement and Rehabilitation sub-group under the Chairmanship of Secretary, Ministry of Welfare;

(ii) Rehabilitation Committee under Secretary, Minister of Welfare to supervise the rehabilitation process by undertaking visits to R & R sites and submergence villages.

(iii) Environment Sub-group under the Chairmanship of Secretary, Ministry of Environment and Forests;

[…]

132. It is also contended that before embarking on the Sardar Sarovar Project it was necessary that the Master Plan for rehabilitation of the families to be affected is completed.

[…]

155. On 13th November, 1996, a meeting of the Review Committee of the Narmada Control Authority chaired by the Union Minister of Water Resources was held. This meeting was attended by the Chief Ministers of all the States including Rajasthan and representatives of Ministry of Environment and Forests, Ministry of Social Justice and Empowerment, Government of India. In the meeting it was unanimously decided that the reviews of the implementation of re-settlement and rehabilitation measures will be undertaken for every five meter height of the dam jointly by the concerned R & R Sub-group and Environmental Sub-group so that work could progress pari passu with the implementation measurers.”

As the order clearly states that the reviews of the implementation of re-settlement and rehabilitation measures will be undertaken for every five meter height of the dam jointly by the concerned R & R Sub-group and Environmental Sub-group so that work could progress pari passu with the implementation measurers.

People of Gujarat should note that this “pari passu” clause is preventing the GATE installation on Sardar Sarovar Dam and the concerned authority is the Narmada Control Authority. ‘Pari Passu’ is a Latin term which roughly translated means “at an equal pace.”

I advise Mr. Modi to read this order afresh and understand it.

The Supreme Court Order further states that

“166. … The R & R Sub-group and Rehabilitation Committee of Narmada Control Authority are responsible for applying its independent mind on R & R. The Sub-group convenes its meeting regularly to monitor and review the progress of R & R while Rehabilitation Committee visits the submergence areas/relocation sites to see whether the rehabilitation is taking place physically and to hear the individual problems of the PAPs. The R & R group, keeping in view the progress of relief and rehabilitation, has not permitted the height to be raised, until and unless it is satisfied that adequate satisfactory progress has been made with regard to R & R.”

The order further clearly states that the R & R group, keeping in view the progress of relief and rehabilitation, has not permitted the height to be raised, until and unless it is satisfied that adequate satisfactory progress has been made with regard to R & R.

The order further states and clarify that

“174. … In the Narmada Control Authority, Re-settlement & Rehabilitation (R & R) Sub-group has been created for closely monitoring the R & R progress. This Sub-group is headed by the Secretary, Government of India, Ministry of Social Justice & Empowerment and is represented by Members/Invitees of participating States, academic institutions having expertise in R & R, independent socio- anthropological experts and non-Governmental Organisations. The functions of this Sub-group are as follows:

1. To monitor the progress of land acquisition in respect of submergence land of Sardar Sarovar Project and Indira (Narmada) Sagar Project (ISP).

2. To monitor the progress of implementation of the action plan of rehabilitation of project affected families in the affected villages of SSP and ISP in concerned states.

3. To review the R & R action plan from time to time in the light of results of the implementation.

4. To review the reports of the agencies entrusted by each of the State in respect of monitoring and evaluation of the progress in the matter of re-settlement and rehabilitation.

5. To monitor and review implementation of re-settlement and rehabilitation programmes pari passu with the raising of the dam height, keeping in view the clearance granted to ISP and SSP from environmental angle by the Government of India and the Ministry of Environment and Forests.

6. To coordinate states/agencies involved in the R & R programmes of SSP and ISP.

7. To undertake any or all activities in the matter of re-settlement and rehabilitation pertaining to SSP and ISP.”

At the end of the order Supreme Court clearly states that

“DIRECTIONS

250. … (ii) ensuring compliance with conditions on which clearance of the project was given including completion of relief and rehabilitation work and taking of ameliorative and compensatory measures for environmental protection in compliance with the scheme framed by the Government thereby protecting the rights under Article 21 of the Constitution. Keeping these principles in view, we issue the following directions.

1) Construction of the dam will continue as per the Award of the Tribunal.

2) As the Relief and Rehabilitation Sub-group has cleared the construction up to 90 meters, the same can be undertaken immediately. Further raising of the height will be only pari passu with the implementation of the relief and rehabilitation and on the clearance by the Relief and Rehabilitation Sub-group. The Relief and Rehabilitation Sub-Group will give clearance of further construction after consulting the three Grievances Redressal Authorities.

3) The Environment Sub-group under the Secretary, Ministry of Environment & Forests, Government of India will consider and give, at each stage of the construction of the dam, environment clearance before further construction beyond 90 meters can be undertaken.

4) The permission to raise the dam height beyond 90 meters will be given by the Narmada Control Authority, from time to time, after it obtains the above-mentioned clearances from the Relief and Rehabilitation Sub-group and the Environment Sub-group.

5) The reports of the Grievances Redressal Authorities, and of Madhya Pradesh in particular, shows that there is a considerable slackness in the work of identification of land, acquisition of suitable land and the consequent steps necessary to be taken to rehabilitate the project oustees. We direct the States of Madhya Pradesh, Maharashtra and Gujarat to implement the Award and give relief and rehabilitation to the oustees in terms of the packages offered by them and these States shall comply with any direction in this regard which is given either by the NCA or the Review Committee or the Grievances Redressal Authorities.

6) Even though there has been substantial compliance with the conditions imposed under the environment clearance the NCA and the Environment Sub-group will continue to monitor and ensure that all steps are taken not only to protect but to restore and improve the environment.

7) The NCA will within four weeks from today draw up an Action Plan in relation to further construction and the relief and rehabilitation work to be undertaken. Such an Action Plan will fix a time frame so as to ensure relief and rehabilitation pari passu with the increase in the height of the dam. Each State shall abide by the terms of the action plan so prepared by the NCA and in the event of any dispute or difficulty arising, representation may be made to the Review Committee. However, each State shall be bound to comply with the directions of the NCA with regard to the acquisition of land for the purpose of relief and rehabilitation to the extent and within the period specified by the NCA.”

Narmada has always been used for political expediency by both the political parties in Gujarat.

The NCA has recently clarified its position the SSP status report on its website. After 2006. several NCA meetings took place, but in none decision was taken to give go ahead for gate installation. The Gujarat government had at one state as a last attempt tried to get the permission to build pillars for the gate but that too was denied, as the rehabilitation compliance has not taken place.

What Gujarat government markets as a holiday package in monsoon with an overflowing dam, actually causes devastating effect when the backwaters of this overflowing dam submerges several villages in neighboring Madhya Pradesh. It was last year that Madhya Pradesh villages suffered unprecedented submergence in the Narmada Valley.

Presently the reservoir waters at the present 122 meters height are not being even fully used as the several CAG reports have pointed.

The Supreme Court clearly states in conclusion that the Relief and Rehabilitation Sub-Group will give clearance of further construction after consulting the three Grievances Redressal Authorities and permission to raise the dam height beyond 90 meters will be given by the Narmada Control Authority, from time to time, after it obtains the above-mentioned clearances from the Relief and Rehabilitation Sub-group and the Environment Sub-group and each State shall be bound to comply with the directions of the NCA with regard to the acquisition of land for the purpose of relief and rehabilitation to the extent and within the period specified by the NCA.

Rohit Prajapati

Social Activist of Gujarat

இளவரசர் சல்மானின் இந்திய பயணம்!



சவுதி இளவரசரும் துணை மன்னருமான பாதுகாப்பு அமைச்சர் சல்மான் அவர்கள் இரண்டு நாள் அரசு முறை பயணமாக 26 பிப்ரவரி அன்று இந்தியா வருகை புரிந்தார். இந்தியாவின் நான்காவது பெரும் வர்த்தக நாடாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. மன்னருக்கு அடுத்த இடத்தில் மிக முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் சல்மானின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இளவரசர் சல்மான் கூறியதாவது 'இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை அனைத்து துறைகளிலும் விரிவுபடுத்துவதே எனது பயணத்தின் நோக்கம்' என்றார். இவரை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வரவேற்றார். மன்னர் அப்துல்லாவின் வருகைக்குப் பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக சல்மானின் பயணம் பார்க்கப்படுகிறது. 2.88 மில்லியன் இந்திய நாட்டவர் சவுதியில் பல முக்கிய துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 மற்றும் 2013 ம் ஆண்டுகளில் இரு நாடுகளின் வர்த்தக பரிமாற்றம் 43 மில்லியன் டாலராக இருந்துள்ளது. இது நடப்பாண்டில் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நோக்கர்கள் கருதுகின்றனர். இந்திய நிறுவனங்கள் வருங்காலங்களில் 100 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ரெயில்வே பணிகளை சவுதியில் மேற்கொள்ள உள்ளது. ராணுவத்தை மேம்படுத்துவதிலும், ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அமைச்சர் அந்தோணியோடும் சல்மான் பேச்சு வார்த்தை நடத்துகிறார். ஹிந்து பத்திரிக்கையும் சல்மானின் பயணத்தைப் பற்றிய முக்கிய ஆர்டிக்கிளை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் தொடர்புகளை விட இந்தியாவோடு நேசத்தோடு இருக்கவே சவுதி ஆட்சியாளர்களும், அந்நாட்டு மக்களும் விரும்புகின்றனர். இது தொடர வேண்டும் என்பதே நமது விருப்பமும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியை 'உண்மையின் உரை கல்' என்ற அடைமொழியோடு தினமும் பொய்களை பரப்பி வரும் தின மலர் இதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. பெரும்பாலான ஊடகங்கள் இந்துத்வ மயமாகி வெகுநாட்களாகின்றன. இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தினசரி அவசியம் தேவை என்பதை இது போன்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 10 இஸ்லாமிய செல்வந்தர்கள் மனது வைத்தால் நாளையே உதயமாகி விடும் தினசரி. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?

Wednesday, February 26, 2014

அஹமதாபாத் நகரம் பிறந்து 604 வருடங்களாகிறது!

குஜராத்தின் மிகப் பெரும் நகரமான அஹமதாபாத் பிறந்தது 26-02-1411 ஆம் ஆண்டு. நேற்றோடு இந்நகரம் பிறந்து 604 வருடங்களாகிறது. அம்மாபெரும் நகரை உருவாக்கிய மன்னர் அஹமத் ஷா வை யாராவது நினைவு கூறுகிறார்களா? ஒரு பத்திரிக்கை செய்தியாவது உண்டா? அஹமதாபாத் என்ற அழகிய பெயரையே சிதைத்து ஆமதாபாத் என்று எழுதியும் பேசி வரும் இந்நாட்டில் எதைத்தான் நாம் எதிர் பார்க்க முடியும்?

ஒரு முஸ்லிம் சூஃபி ஞானியின் உத்தரவின் பேரில் இந்நகரின் அடிக்கல் அஹமத் ஷாவால் நாட்டப்பட்டது. மோனாக் பாபா என்று பலராலும் அறியப்படும் இந்த சூஃபி ஞானியைப் பற்றி அந்நகரத்தில் பலரும் அறிந்து வைத்துள்ளனர். முகலாயர்களின் கட்டிடக் கலை இந்நகரைச் சுற்றியும் கம்பீரமாக நிற்கிறது.

அஹமத் ஷா தனது இந்து மனைவிக்காக 'பத்ரா மந்திர்' என்ற பெரும் கோவிலையும் கட்டி இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை வளர்த்தார். அந்த கோவிலும் கம்பீரத்தோடு நிற்கிறது.




ஆனால் அஹமதாபாத் இன்று அதன் பொலிவை இழந்து காணப்படுகிறது. இந்து முஸ்லிம் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்த இந்த இடம் உருக்குலைந்து போயுள்ளது. கேவலம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக இன்று இந்த இரு சமூகங்களையும் பிரித்து வைத்துள்ளது இந்துத்வா. இதனால் அரசியல்வாதிகள் லாபம் அடைந்தனர். ஆனால் மனித மனங்கள் என்றும் மாறாத வடுவை சுமந்து கொண்டு பலரை நடைபிணங்களாக வாழ வைத்துள்ளது.

முகாம்களில் அடைபட்டுள்ளனர் லட்சக்கணக்கான முஸ்லிம்கள். இஸ்லாம் வாழ்ந்த இதே அஹமதாபாத்தில் முஸலிம்கள் மோடியின் ஆட்களால் திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறார்கள். வாடகைக்கு இடம் கிடைப்பதும், தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதும் இன்று முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

இது போன்ற திட்டமிட்ட ஒதுக்கல் அந்த மாநிலத்தின் முன்னேற்றத்துக்கே வேட்டு வைக்கக் கூடியது என்பதை ஏனோ இந்த அரசியல்வாதிகள் உணர்வதில்லை. வறுமையில் வாழ்க்கையை வெறுத்து தீவிரவாதிகளாக மாறினால் அது எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாதவரல்ல மோடி. இது போல் சமூகம் மேலும் பிளவுபட வேண்டும் என்றே இவரைப் போன்றவர்கள் விரும்புகின்றனர்.

காலம் எந்நாளும் இதே போல் பயணிக்காது. இந்நாட்டின் மிக இழிவான ஒரு அரசியல்வாதியாக மோடியை நமது வரலாறு பதிவு செய்யப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அத்தனை வலிவு உண்டு.

//Opening one after the other layer, Justice Suresh explained his point and feared that it would be dangerous for the country to have Modi as Prime Minister.//

http://www.bilkulonline.com/features/articles/4847-it-is-dangerous-for-the-country-to-see-modi-as-pm-justice-s-suresh

'மோடி போன்ற ஒரு பயங்கரவாதி நம் நாட்டின் பிரதமராக வருவது மிக அபாயகரமானது' என்கிறார் நீதிபதி சுரேஷ். இவர் முன்னால் மும்பை நீதிபதி. 'சச்சாய் குஜராத் கி' அதாவது 'குஜராத்தின் உண்மை' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை ஆம்ஆத்மி பார்ட்டி இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தை பலரும் வாங்கி பலரையும் சென்றடைய முயற்சிப்போமாக!

தாயின் பல்லை உடைத்த மகனுக்கு 2,400 கசையடி



தாயின் பல்லை உடைத்த மகனுக்கு 2,400 கசையடி

தாய்-தந்தைக்கு இஸ்லாம் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கி உள்ளது.

சீ என்றுக் கூட சொல்லி விட வேண்டாம் என்றும் கூறுகிறது இஸ்லாம்.

சீ என்றுக் கூட சொல்ல வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் கையை நீட்டி அடிப்பது என்பது ஏற்றுக் கொள்ளும் செயலா ?.

கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

சவுதி அரேபியாவில் தனது தாயுடன் காரில் சென்ற 30 வயது இளைஞர் தாயுடன் ஏற்பட்ட தகராறில் தாய் என்றும் பாராமல் அவரைத் தாக்கினார்.

இதில் தாயின் பல் உடைந்தது. சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார் தாயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மகனைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2400 கசையடியும் வழங்கித் தீர்ப்பளித்தது.

மேலும், 2,400 கசையடிகளை பத்து நாள்களுக்கு ஒருமுறை பொது இடத்தில் வைத்து 40 கசையடிகளாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இவை தவிர தாயின் பல்லை உடைத்ததற்காக, மகனின் பல்லை உடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

http://www.arabnews.com/news/529041

பெண்களுக்கு இஸ்லாத்தில் பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் செய்வோருக்கு இது சவுக்கடி.

இளமை பருவத்திலிருந்து முதுமை பருவம் வரை தாய்க்கு தனி அந்தஸ்த்து உண்டு இஸ்லாத்தில் .

'நான் அதிகம் கடமைப்பட்டிருப்பது யாருக்கு?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தாயாருக்கு' என்றார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்டார். அப்போதும் 'தாயாருக்கு' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்ட போதும் அதே பதிலையே கூறினார்கள். 'அடுத்தது யார்?' என்று அவர் மீண்டும் கேட்ட போது 'தந்தைக்கு' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5971.


நன்றி: அதிரை ஃபாரூக்.

100 வயதை பூர்த்தி செய்த பாம்பன் பாலம்!



பாம்பன் தீவை ராமேஸ்வரத்தோடு இணைக்கும் இந்த பாலம் கட்டப்பட்டது 24 பிப்ரவரி 1914. இந்த மாதத்தோடு இந்த பாலம் கட்டப்பட்டு 100 வருடத்தை நிறைவு செய்கிறது. பெரும் புயலையும் இயற்கை சீற்றங்களையும் தாங்கும் அளவுக்கு மிக நேர்த்தியாக கட்டப்பட்டது இந்த பாலம்.

இதன் பணி நடக்கும் போது இந்துத்வாவாதிகள் வெள்ளையனின் ஆட்சியில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் 'ராமன் பாலம்' போன்ற புருடாக்களை இந்த பாலத்துக்கும் அவிழ்த்து விடவில்லை. எனவே அருமையான பாலம் நமக்கு கிடைத்தது. :-)

Monday, February 24, 2014

டென்மார்க் மேற்கொள்ளும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு!



ஐரோப்பிய கண்டத்தில் ஸ்கேண்டினேவிய குழுமத்தில் வரும் நாடுகளில் ஒன்றான டென்மார்க் எப்போழுதுமே இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை எடுப்பதில் ஒரு அலாதி பிரியம் கொண்டுள்ளது. இதுவரை இஸ்லாம் காட்டும் வழி முறையில் ஆடு, மாடு, கோழிகளை அறுத்து உள்நாட்டுக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது. திடீரென்று இஸ்லாத்துக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அரிப்பெடுக்கவே தற்போது மின்சார அதிர்வு கொடுத்து அந்த உயிர்களை கொல்லப் போகிறதாம். இஸ்லாமிய முறைப்படி அறுத்தால் அந்த உயிர்கள் அதிகம் இம்சையை உணராது. ரத்தமும் வெளியேறி விடும். மனிதனுக்கு எந்த உபாதையும் தராது என்று உலக சுகாதார வல்லுனர்கள் முன்பே ஒத்துக் கொண்டும் தேவையில்லாத பிரச்னையை உண்டு பண்ணுகிறது டென்மார்க. முகமது நபியின் கேலிச் சித்திரங்களை முன்பு வெளியிட்டு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பை சம்பாதித்து மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டது. தற்போது ஹலால் பிரச்னையை கையில் எடுத்துள்ளது.

ஃபவாத் தவ்ஃபீக் என்ற மார்க்க அறிஞர் தனது செய்தியாக 'இஸ்லாம் காட்டும் முறையில் மிருகங்களை அறுப்பது அவற்றிற்கு அதிக சிரமத்தையும் கொடுக்காது. மனிதர்களுக்கு எந்த தீங்கும் இதனால் ஏற்படாது என்று பல அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன. மின்சார அதிர்வின் மூலம் கொல்வது மருத்துவ அறிக்கைக்கும் எதிரானது. இஸ்லாமிய நாடுகள் டென்மார்க்கிலிருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்' என்கிறார்.

டாக்டர் ஜாகிர் நாயக் தனது அறிக்கையில் 'இறந்த உடலில் தங்கி விடும் ரத்தத்தில் நச்சுப் பொருட்களும் பாக்டீரியாக்களும் உறைந்து விடுவதால் அது மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது. இஸ்லாமிய முறைப்படி அறுப்பதே சிறந்த முறை' என்கிறார்.

டென்மார்க் அரசானது உலகின் இந்த எதிர்ப்பை சமாளிக்க டேன் ஜார்ஜன்ஸன் விட்டு சமாளிக்க வைத்துள்ளது. இவர் அந்நாட்டு உணவு அமைச்சர். 'நாங்கள் ஹலால் முறையில் அறுப்பதை எதிர்க்கவில்லை. தடையும் செய்யவில்லை. இன்றும் பல இடங்களில் ஹலால் முறையிலேயே அறுக்கப்படுகிறது' என்கிறார்.

டென்மார்கில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். 3.7 சதவீதம் மக்கள் இந்நாட்டில் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக கொண்டுள்ளனர். இஸ்லாம் இந்நாட்டில் வளருவதை தடுக்கும் முகமாக இது போன்ற சீண்டல்களை அவ்வப்போது இந்நாடு அரங்கேற்றுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கெல்லாம் எதிர்ப்புகள் வலுக்கிறதோ அங்குதான் இஸ்லாம் வேகமாக பரவியதாக வரலாறு!

தகவல் உதவி
அரப் நியூஸ்
24-02-2014



Sunday, February 23, 2014

'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை!



கருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெயரில் படிப்பறிவில்லா மக்களை ஏமாற்றி இந்தக் கொடூரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றோர் நடத்திய சமூகப்போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத்தில் இருந்து வேரோடு அழிந்து போனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர் அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண்களுக்குப் புனிதமான ஒரு சடங்கு போலவும், ஆலயங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை காரணமாக சிலர் (பெரியார் பெயரைக்குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது பொறாமையும் மதத்தின் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப்போதே மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவரின் ஆபாசமான கூற்றை உச்சநீதிமன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் மிகப் பெரிய அவமானம் என்று கூறி இருக்கிறது. கருநாடக மாநிலம் ஹரப்பனல்லி வட்டத்தில் உத்தரங்கமல அடிவிமல நகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன்றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசுக்குத் தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம்; இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழாவாகும் இதனால் யாரும் பாதிக்கபடவில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்தச் கோவில் தேவதாசி விழாவை சிறப்பாக நடத்தி வந்தது.

போராடும் உளியம்மா

இந்தக் கோவிலின் முதிய தேவதாசியான உளியம்மா என்பவர் நீண்ட காலமாக இந்தப் பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால் நகர நிர்வாகம் மற்றும் பிரபலங்களின் தலையீடு காரணமாக அவரால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மாவிற்கு உதவமுன்வந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எஸ் எல் பவுண்டேசன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது அதில் உதரங்கமல துர்க்கையம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம்பரிய தேவதாசி முறையையும் சின்னாபின்னமாக்கப் படும் பெண்களின் வாழ்க்கைப் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் சாட்டை! சமூகத்தின் மிகவும் கொடிய பழக்கமாக இன்றும் தொடரும் இந்த அவலத்தை அறிந்ததும், உச்சநீதி மன்றமே ஒருமுறை அதிர்ந்து போனது, தேவதாசியாக மாற்றப்படும் விழா (13.02.14) அன்று இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு இந்த மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்;

இந்த சம்பவம் குறித்து கருநாடக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவில் குறிப் பிடப்படுவதாவது : இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என்பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமானச் சின்னமாகும், இந்த சம்பவம் பற்றி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறுவதைத் தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பான பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட்டுள்ளது. சமூக நீதிக்கான கி.வீரமணி விருதுவழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறோம். சமூகத்தில் பெண்கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன்றளவு குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழு வதும் தேவைப்படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அவரின் வார்த்தை உண்மையானது.

இப்பொழுதுள்ள கருநாடக முதல் அமைச்சர் சித்தாராமையா பகுத்தறிவுவாதி அவர் தலையிட்டு இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி: விடுதலை

23-02-2014

இந்த காலத்திலும் இப்படி ஒரு கொடுமையை அரங்கேற்றுவார்கள். இதற்கு வக்காலத்து வாங்க படித்த மேதாவிகள் சிலர் வெட்கமின்றி பொது மேடையில் ஆதரித்து பேசுவார்கள். இந்த கொடுமைகளை கண்ட மனம் வெம்பி இஸ்லாத்தை ஒருவன் ஏற்றால் அவனையும் ஏசுவார்கள். இதுதான் யதார்த்தமாக தற்போது நடந்து கொண்டிருக்கிறது.




Saturday, February 22, 2014

நூறு அனாதை இளைஞர்களுக்கு திருமண உதவி!



நமது இந்திய நாட்டில் பெண்களுக்கு திருமண உதவிகளை செல்வந்தர்கள் செய்வதைப் பார்த்திருப்போம். பெண்ணைப் பெற்ற தகப்பன் கோவில், பள்ளிவாசல், சர்ச்களில் 'எனக்கு நான்கு பெண் குழந்தைகள் திருமணம் முடிக்கும் வயதில் உள்ளார்கள். நான் பரம ஏழை. எனவே எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்' என்று சுய மரியாதையை விட்டு பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம். ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் இந்த விஷயத்தில் அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக உள்ளனர். வரதட்சணையை வாங்கி அனுபவிப்பதில் ஆணைப் பெற்ற பெற்றோருக்கு அவ்வளவு அலாதி பிரியம். திருமணத்துக்கு பிறகும் கூட இந்த கொடுமை தொடர்ந்து வருகிறது. வரதட்சணை பிரச்னையால் பெண்களை உயிரோடு கொளுத்தும் மாபாவிகளும் நமது இந்திய தேசத்திலே நிறைய உண்டு.

இந்து மதத்தில் வரதட்சணை ஒரு பாவமாக சொல்லப்படாததால் அதனை சர்வ சாதாரணமாக வெட்கமில்லாமல் கேட்டே வாங்குகின்றனர். ஆனால் ஒரு முஸ்லிமும் இந்துக்களைப் பார்த்து காப்பி அடித்து 'எனக்கு வீடு தா: கார் தா: நிலம்தா: நகை தா' என்று வெட்கமில்லாமல் கேட்கிறான். குர்ஆனில் இறைவன் பெண்களுக்கு மஹராக ஒரு பெரும் தொகையை கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறான். அந்த தொகையை நிர்ணயிக்கும் பொருப்பையும் அந்த பெண்ணிடமே தருகிறான் இறைவன். இந்த குர்ஆன் வசனம் சவுதியில் அனைத்து குடும்பங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 20 வருடங்களாக தவ்ஹீத் ஜமாத்தின் அயராத பிரசாரத்தால் இஸ்லாமியர்களிடத்தில் தற்போது சவுதியைப் போல் ஒரு பெரும் தொகையை மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் வழக்கம் பரவலாக நடைபெறுகிறது.

பணக்கார நாடான சவுதியில் ஒரு இளைஞன் திருமணம் முடிக்க குறைந்தது இரண்டு லட்சம் ரியாலாவது வேண்டும். கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 26 லட்சம் வரும். வசதியுடைய பெற்றோருக்கு பிறந்த இளைஞர்களுக்கு தகப்பனின் பணத்தைக் கொண்டு மஹர் கொடுக்கப்பட்டு திருமணம் முடிக்கப்படும். நான்கு சக்கர வாகனம், பெண்ணுக்கு நகை, வசிக்க வீடு, அந்த வீட்டில் அனைத்து பொருள்களையும் மணமகனே சேர்க்க வேண்டும். ஒரு சாதாரண சவுதி இளைஞன் இந்த பொருளாதாரத்தை திரட்டி முடிக்கும் போது அவனுக்கு 40 வயதை தாண்டியிருக்கும். இதை பரவலாக நாம் சவுதியில் பார்க்கலாம். இதனால் சில சவுதி இளைஞர்கள் வெளி நாட்டு பெண்களை திருமணம் முடிப்பதும் ஆங்காங்கே நடக்கிறது.

அரசாங்கம் இது போன்ற ஏழை மணமகன்களுக்கு மான்யமாக தொகைகளை அள்ளி வழங்குகிறது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் நட்சத்திர ஹோட்டலான 'ஹாலிடே இன்னில்' சென்ற வியாழக்கிழமை வறுமையில் வாடும் 100 அனாதை இளைஞர்களுக்கு கூட்டாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 'இன்சான்' என்ற தொண்டு நிறுவனம் இந்த இளைஞர்களுக்கு இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்தது. ரியாத் கவர்னர் ஹாலித் பின் பந்தர் தலைமையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இந்த திருமண தம்பதிகளுக்கு பல பரிசுப் பொருட்களும் பலராலும் அளிக்கப்பட்டது. நட்சத்திர ஹோட்டலில் மூன்று நாட்கள் தங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டனர். 'அல்ஹொகைர்' குரூப் இதற்கான ஸ்பான்சரை செய்தது.

'இன்சான்' என்ற இந்த தொண்டு நிறுவனம் இது வரை 41000 அனாதைகளுக்கு புனர் வாழ்வு அளித்துள்ளது. இந்த அமைப்பு செய்து வரும் நலத்திட்டப பணிகளை விளக்கும் டாகுமெண்டரி குறும்படம் ஒன்றும் இந்நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இந்த நிறுவனம் புது திருமண தம்பதிகளுக்கு திருமணத்திற்கு பிறகு மணமக்கள் எவ்வாறு புரிந்துணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான கவுன்சிலிங்கை இஸ்லாமிய பாடங்களோடு நடத்துகிறது.

உம் அப்துல்லா என்ற பெண்மணி கூறும்போது 'எனது மகனுக்கு தந்தை இல்லை. அவனுக்கு சரியான வருமானமும் இல்லை. எனது மகனின் கனவை நனவாக்கிய இந்த நிறுவனத்துக்கு நான் நன்றி கூறுகிறேன்' என்றார்.

ஹாமத் அல் தோஸ்ரி என்ற மணமகன் கூறும் போது 'மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணத்துக்காக முயற்சி செய்தேன். திருமண செலவு, எனது கனவை தள்ளிப் போட வைத்தது. தற்போது எனது துணைவியை தேர்ந்தெடுத்துள்ளேன். எனது கனவு நனவாகியுள்ளது. இனி எனது வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்' என்றார்.

ஃபஹத் அல் கப்பானி என்ற மணமகன் கூறும்போது ''இன்சான்' எனக்கு திருமணத்தை மட்டும் நடத்தி வைக்கவில்லை. திருமணம் என்றால் என்ன? அது நமது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டு பண்ணும்: இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்ற உண்மையையும் எனக்கு விளக்கியுள்ளார்கள்' என்கிறார்.

தனது ஒரு திருமணத்தை முடிக்கவே இத்தனை சிரமங்களை இந்த இளைஞர்கள் அனுபவிக்கிறார்களே! ஆனால் நமது நாட்டில் மூன்று நான்கு பெண் குழந்தைகளை பெற்ற வறிய தகப்பனிடம் இறைவனின் பயம் இல்லாமல் வரதட்சணை கேட்கிறோமே! கொஞ்சமாவது கேட்பவர்களுக்கு மனசாட்சி இல்லையா?

இதனை படிக்கும் திருமணம் ஆகாத இளைஞர்களே! உங்கள் திருமணத்தை மஹர் கொடுத்து முடிக்கிறேன் என்று சபதம் எடுங்கள். இறைவன் உங்களின் வாழ்வை வளமாக்குவான்!

தகவல் உதவி

அரப் நியூஸ்
22-2-2014

Friday, February 21, 2014

ஹங்கேரிய அரசியல்வாதியையும் கவர்ந்த இஸ்லாம்!



ஹங்கேரி நாட்டின் அரசியல் கட்சியான ஜோப்பிக் இயக்கம் அந்நாட்டில் மிக பிரபலமானது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 16.67 சதவீத வாக்குகளைப் பெற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. சட்டமன்றத்தில் 47 இடங்களை பெற்று சிறந்த அரசியல் கட்சியாக பரிணமித்து வருகிறது. இந்த கட்சியின் தலைவரான கேபர் ஓனா துருக்கி நாட்டுக்கு அரசு முறை பயணமாக வந்தார். இங்குள்ள பல்கலைக் கழகங்களை பார்வையிடுவது இவரது வருகையின் நோக்கம்.

இவர் பல்கலைக் கழகத்தில் நடந்த சொற்பொழிவில் பின்வருமாறு தனது பேச்சை ஆரம்பித்தார்:

'எங்களது பயணமானது துருக்கிக்கும், ஹங்கேரிக்கும் இடையிலான வர்த்தக அரசியல் பரிமாற்றத்தை நோக்கமாக கொண்டதல்ல. எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம் துருக்கியின் சகோதர சகோதரிகளை சந்தித்து உரையாடுவதே! சில மேற்குலக நாடுகள் எங்களது இந்த பயணத்தை விரும்பாது இருக்கலாம். ஆனால் துருக்கி, அஜர்பைஜான், துனீஷியா போன்ற நாடுகளில் நடக்கும் அத்து மீறல்களை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது. இஸ்லாமிய மக்களைப் பற்றியும் அதன் சட்டதிட்டங்களைப் பற்றியும் தவறான ஒரு பிம்பமே இதுவரை எங்களுக்கு இருந்தது. ஆனால் துருக்கிய மக்களின் குடும்ப அமைப்பு, கலாசார நிகழ்ச்சிகள், குடும்பத்தவர்களிடையே உள்ள பாச பிணைப்பு, இந்த மக்களின் நாட்டுப் பற்று போன்றவை ஹங்கேரிய மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மனிதாபிமானத்துக்கும் உலக பொருளாதார சிக்கலுக்கும் ஒரு சிறந்த விடையை இஸ்லாம் உலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கான தீர்வு இஸ்லாத்தில்தான் உள்ளது.

ஆப்ரிக்காவுக்கு உலக அரங்கில் எந்த பவரும் இல்லை. ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் தெளிவற்ற சிந்தனைகளையே தனது மக்களுக்கு வழங்கி வருகிறது. மன நிம்மதியற்று அலை பாயும் மனதைக் கொண்ட பெரும்பாலான உலக மக்களுக்கு ஒரே விடியல்தான் உண்டு. அதுதான் இஸ்லாம். எனது சொந்த வாழ்வில் பல முஸ்லிம்களின் நெருக்கத்தைப் பெற்றுள்ளேன். ஒரு பாலஸ்தீனியரின் திருமண விருந்தில் கலந்து கொண்டதையும் என்னால் மறக்க முடியாது.' என்று தனது அழகிய பேச்சை பல இடங்களில் பதிந்தார் இந்த ஐரோப்பியர்.

ஐரோப்பாவுக்கும் அரேபியாவுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? இரு வேறு மாறுபட்ட கலாசாரத்துக்கு சொந்தமான நாட்டிலிருந்து வந்த இந்த ஐரோப்பியரையும் இந்த இஸ்லாமிய வாழ்வு கட்டிப் போட்டுள்ளது.

அடுத்து என்ன.................?

தனது பெயரை அப்துல்லாவாகவோ, அப்துல் ரகுமானாகவோ மாற்றிக் கொண்டதாகவும், தனது வாழ்வு முறை இனி முகமது நபியை பின்பற்றியதாகவும் இருக்கும் என்ற பேட்டியை இன்னும் சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். :-) இதுதான் இஸ்லாம்.

Sources
Morocco World News

Thursday, February 20, 2014

செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழிப் பாதையாக போவது தடுக்கப்பட்டது!

செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழிப் பாதையாக போவது தடுக்கப்பட்டது!




பூமியல் மனிதன் கால் தடம் பதிக்காத இன்னும் எத்தனையோ தரைப் பகுதி இருக்க செவ்வாய் கிரகத்தில் சென்று நிரந்தரமாக தங்கிக் கொள்ள பலரும் விருப்பப்படுவது ஆச்சரியமே! மனிதனுக்கு எதையாவது வித்தியாசமாக செய்து பார்ப்பதில் அலாதி பிரியம். :-) ஆராய்ச்சி முறையில் அங்கு சென்று ஆய்வுகள் மேற் கொள்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஒரு வழிப் பாதையாக உங்களை அழைத்து சென்று அங்கே இறக்கி விட்டு விடுவார்களாம். அப்போ சாப்பாட்டுக்கு என்ன செய்வதாம்? உணவை எத்தனை நாளுக்கு உங்களால் கெடாமல் காப்பாற்றி வைக்க முடியும்? விளை நிலங்களும் இல்லை. ஒரு வழிப் பாதையாக செல்வதற்கு டிக்கெட் விலையும் மிகக் குறைவு. எனவே இதற்கு பலரும் முயற்சிக்கின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து வெளிவரும் 'கலீஜ் டைம்ஸ்' என்ற பத்திரிக்கை இவ்வாறு ஒருவழிப் பாதையாக செல்வது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமானம் என்றபடியால் இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்று மார்க்க அறிஞர்களின் 'ஃபத்வா' வை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுக்கு கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தை ஆதாரமாக்கி இந்த மார்க்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

'நீங்களே உங்களை கொன்று விடாதீர்கள். இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.'

-குர்ஆன் 4:29


கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் 400 நாடுகளிலிருந்து செவ்வாய் கிரகத்தில் தங்க விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளார்களாம். இதில் 500 சவுதி நாட்டவரும் அடக்கம். பூமியில் உள்ள மக்களின் வாழ்வு மேம்பட செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் செல்வதை எவரும் தடுக்கவில்லை. ஆனால் பணம் இருக்கிறது என்ற மமதையில் இது போல் ஆபத்தான ஒரு பயணத்தை சுற்றுலாவாக மேற்கொள்வது அதுவும் அதிக அனுபவம் இல்லாதவர்கள் இது போன்ற பயணங்கள் மேற்கொள்வதை இஸ்லாமிய அறிஞர்கள் தடுக்கின்றனர். இவர்களின் அறிவிப்பைத் தோடர்ந்து விண்ணப்பித்திருந்த பலரும் தங்களின் விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

தகவல் உதவி

அல்அரபியா
20-02-2014

----------------------------------------------------------------

பூமியைத் தவிர உலகின் மற்ற எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது: அதற்கான வசதிகள் இல்லை என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. இதைப்பற்றியும் பார்ப்போம்.

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்'

- குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

- குர்ஆன் 7;10


இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு, செவ்வாய்க்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

மேற்கண்ட இரண்டு குர்ஆன் வசனங்களிலிருந்தும் நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

Wednesday, February 19, 2014

இந்தி பிண்ணனி பாடகர் ஹான்ஸ் ராஜ் இஸ்லாத்தை ஏற்றார்!

இந்தி பிண்ணனி பாடகர் ஹான்ஸ் ராஜ் இஸ்லாத்தை ஏற்றார்!



இந்திய மாநிலமான பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் ஷாஃபிபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஹான்ஸ் ராஜ். சர்தார் ரஷ்பால் சிங் மற்றும் மாதா சிர்ஜான் கவுர் என்ற தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இசை பின்னணி இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஹான்ஸ் ராஜ். தனது இசை ஆர்வத்தால் ரியாலிடி ஷோவில் முதல் பரிசை தட்டிச் சென்றார். பல விருதுகளைப் பெற்றவர். கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர். இருந்தும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்தது. முடிவில் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தார். மன அமைதி இசையில் கிடைக்காது தூய இஸ்லாத்தில்தான் கிடைக்கும் என்று உறுதிபூண்டு தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். தனது பெயரை முஹம்மது யூசுஃப் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

பஞ்சாபி மொழியில் அமைந்த கிராமிய பாடல்களையும் சூஃபி பாடல்களையும் பாடி தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். தனியாக ஆல்பமும் மற்றும் திரைப்படங்களிலும் நிறைய பாடியுள்ளார். பாகிஸ்தான் பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானுடன் ஒரு படத்தில் பாடியும் உள்ளார். வாஷிங்டன் பல்கலைக் கழகமும் சான் ஜோஸ் மாநில பல்கலைக் கழகமும் இவரை கௌரவித்து அவார்டும் கொடுத்துள்ளது. சிரோண்மணி அகாலி தள வேட்பாளராக ஜலந்தர் லோக்சபா சீட்டுக்காக 2009ல் நின்று வெற்றியும் பெற்றவர்.

இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கும் போது "இஸ்லாம் ஒன்றில்தான் அன்பு, அமைதி, சகோதரத்துவம் என்ற அனைத்தும் எனக்கு கிடைத்தது. முகமது நபி அவர்களை நினைத்தாலே உள்ளார்ந்த ஒரு அன்பு என்னுள் மேலிடுகிறது. கூடிய விரைவிலேயே மெக்கா மதினா போன்ற புனித நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வேன். இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்த எனக்கு குர்ஆனின் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வந்தது. இறைவனைப் பற்றிய உண்மைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. எனது உள்ளம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னது. எனவே இன்று நான் உங்கள் முன் முஹம்மது யூசுஃபாக நிற்கிறேன்."

என்று மகிழ்ச்சியோடு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

என்ன ஒரு ஆச்சரியமான நிகழ்வு. இந்த அரசும், நீதித்துறையும், காவல்துறையும், பத்திரிக்கைத்துறையும், நமது நாட்டு வரலாற்றுத் துறையும் திட்டமிட்டு இஸ்லாத்துக்கு எதிராக எதிர் மறை கருத்துக்களை விதைத்து வருகின்றன. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் இந்துத்வாவாதிகளால் கொல்லப்படுகின்றனர். இனி வரும் காலங்களில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

ஆனால் இத்தனை சூழ்ச்சிகளையும், பொய்களையும் மீறி இஸ்லாம் நமது தொப்புள் கொடி உறவான இந்துக்களை அன்போடு அரவணைத்துக் கொள்கிறது. இது எப்படி சாத்தியம்?

‘அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், ‘நாம் நிச்சயமாக இவற்றை முன்னரே கேட்டிருக்கின்றோம், நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லி விடுவோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை’ என்று சொல்கிறார்கள்.

அல்குர்ஆன் 8:31

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்’

அல்குர்ஆன் 8:30


எத்தனை சூழ்ச்சிகள் செய்து இறைவனின் மார்க்கத்தை இந்த உலகை விட்டு துடைத்தெறிய வேண்டும் என்று பலரும் முயன்றாலும் நம்மை படைத்த இறைவன் அதற்கு மேல் சிறந்த சூழ்ச்சியை செய்து எதிரிகளை திகைப்புக்குள்ளாக்குகிறான். அதைத்தான் தினமும் நாம் பார்த்து வருகிறோம்.

ஒன்றை கவனித்தீர்களா? இஸ்லாத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் 'நாங்கள் குர்ஆனை படித்து இஸ்லாத்தை ஏற்றோம்' என்கின்றனர். எவருமே முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றதாக சொல்லவில்லை. அந்த அளவு முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கை இருக்கிறது. உலக முஸ்லிம்களின் வாழ்க்கை குர்ஆனாக மாறி விட்டால் இஸ்லாமிய பிரசாரத்துக்கு அவசியமே இல்லை. இஸ்லாம் தானாக வளரும்.

இது போன்ற மத மாற்ற செய்திகளை ஏன் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று பலர் கேட்கலாம். உலகம் முழுவதும் அதிலும் குறிப்பாக இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தது வாளால் என்று நமது வரலாறு முதல் நம் நாட்டு இந்துத்வாவாதிகள் வரை பொய்களை பரப்பி வருகின்றனர். நமது வரலாறு சொல்வது அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கவே இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ஹான்ஸ் ராஜூம், யுவன் சங்கர் ராஜாவும், திலீபனும் இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக முஹம்மது யூஃசுபாக, முஹம்மது ஹாலிக் யுவனாக, ஏ ஆர் ரஹ்மானாக மாறியதால் இவர்கள்தான் அந்த பெருமையை பெறுகிறார்கள்.

http://www.siasat.pk/forum/showthread.php?236206-Indian-Singer-Hans-Raj-Hans-converts-to-Islam

Tuesday, February 18, 2014

மாதங்கள் பன்னிரண்டுதான்- குர்ஆனின் அறிவியல்!

'வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்'
-குர்ஆன் 9:36


இவ்வசனத்தில் (9:36) "வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் 12 மாதங்கள்' எனக் கூறப்படுகின்றது. மக்கள் வருடத்தை 12 மாதங்களாகக் கணக்கிடுகிறார்கள் எனக் கூறாமல், 12 மாதங்கள் தான் இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இவ்வசனம் சொல்கிறது.

வானம், பூமி படைக்கப்பட்டது முதல் எல்லாக் காலத்திலும் வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மக்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கவில்லை. கி.பி. 1582ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற கத்தோலிக்க போப், நாட்காட்டிகளை ஒருங்கிணைக்கும் வரை பலவிதமான கணக்குகளில் ஆண்டுகளைக் கணித்து வந்தனர். ஒரு காலகட்டத்தில், 304 நாட்களைக் கொண்ட 10 மாதங்களே ஒரு வருடமாக இருந்துள்ளது.இன்னொரு காலத்தில் 455 நாட்களைக் கொண்ட 15 மாதங்கள் ஒரு வருடமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

வருடம் என்பதற்கு எதை அளவுகோலாக வைப்பது என்ற தெளிவான அறிவு மனிதனுக்குத் துவக்கத்தில் இல்லாததே இதற்குக் காரணம். மாதம் என்றோ, வருடம் என்றோ தீர்மானிப்பதாக இருந்தால் தெளிவான ஒரு வரையறை அதற்கு வேண்டும். ஒருவர் நினைத்தால் 10 மாதங்களை ஒரு வருடம் என்பதும், மற்றொருவர் நினைத்தால் 15 மாதங்களை ஒரு வருடம் என்பதும், இன்னொருவர் 20 மாதங்களை ஒரு வருடம் என்பதும் எந்த வரையறையின் அடிப்படையிலும் கூறப்படுவதாக இருக்க முடியாது.

நாம் வாழ்கின்ற பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை வருடம் என்று கணக்கிட்டால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டதாக இருக்கும். மனிதன் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த இந்த வரையறையை ஆறாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் கூறுகின்றது. வருடம் என்பது, அதாவது சூரியனைப் பூமி சுற்றும் கால அளவு என்பது 12 மாதங்கள் தான். இது சூரியனையும் பூமியையும் படைக்கும் பொழுதே என்னால் ஏற்படுத்தப்பட்ட முடிவு என்று இறைவன் கூறுவதைத் திருக்குர்ஆன் எடுத்துச் சொல்கிறது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

தகவல் உதவி: ஆன்லைன் பிஜே

music is haram/

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1619 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது. சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/isai_harama/
Copyright © www.onlinepj.com

Monday, February 17, 2014

ஆப்கனில் தோல்வி: ரஷ்யாவை பின்பற்றும் அமெரிக்கா!



சோவியத் யூனியன் அப்கானிஸ்தானத்தை விட்டு தனது படைகளை விலக்கிக் கொண்டு சென்றதில் கடந்த சனிக் கிழமையோடு 25 வருடம் பூர்த்தியாகிறது. இந்த நாளை அரசு விடுமுறையாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.

காரி அஹமத் யூசுப் என்ற தாலிபான் ஆதரவாளருக்கு தாலிபான்களிடமிருந்து ஒரு ஈமெயில் வந்துள்ளது. அதில் உள்ள செய்தியாவது: 'கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் சோவியத் யூனியனுக்கு என்ன கதி எங்கள் நாட்டில் ஏற்பட்டதோ அதே நிலையை அமெரிக்கா இன்று சந்தித்து வருகிறது. எங்களது நாட்டிலிருந்து எப்படியாவது வெளியேறி விட காரணத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. சோவியத் யூனியனுக்கு கொடுத்த அதே தோல்வியை அமெரிக்காவுக்கும் எங்கள் மக்கள் கொடுப்பர். இஸ்லாமிய குடியரசான ஆப்கானிஸ்தானில் காலடி வைத்த எந்த ஆக்கிரமிப்பாளர்களையும் நிம்மதியாக இங்கு வாழ விட மாட்டோம். சோவியத் ஆக்கிரமிப்பாளர்கள் கடைசியாக எங்கள் மண்ணை விட்டு சென்ற நாள் பிப்ரவரி 15 1989. எங்கள் மண்ணில் எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரு சிறு இடத்தைக் கூட விட்டுத்தர நாங்கள் சம்மதிக்க மாட்டோம். சோவியத் யூனியனைப் போலவே அமெரிக்காவும் அவமானப்பட்டு எங்கள் மண்ணை விட்டு செல்லும் நாள் தொலைவில் இல்லை. எனது நாட்டு மக்களை மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கிய அமெரிக்கர்களையும், நேட்டோ படையினரையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டோம். இறைவனின் துணை கொண்டு இந்த சுதந்திர போரில் நாங்களே வெற்றி பெறுவோம். அமெரிக்கர்கள் தங்கள் நாட்களை எண்ணிக் கொள்ளட்டும்.' என்று அந்த ஈமெயில் செய்தி சொல்கிறது.

அமெரிக்காவுக்கு தர்ம சங்கடமான நிலை. புலி வாலை பிடித்த கதையாகப் போய் விட்டது. அமெரிக்க ராணுவத்துக்கு அனுசரணையாக இருந்த பல ஆப்கன் குழுக்கள் இன்று தாலிபான்களுக்கு ஆதரவாக மாறி தாக்குதல் தொடுக்கின்றனர். தோல்வியை ஒத்துக் கொண்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு மனம் வரவில்லை. ஆனால் வெளியேறா விட்டால் இந்த சண்டை இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் முடிவுக்கு வராது என்பதும் அவர்களுக்கு தெரியும். இத்தனை உயிர்களை பலி கொடுத்து அதற்கு பகரமாக பெரும் தொகையை சுருட்டவும் முடியாது. ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் அமெரிக்கர்கள் கொள்ளையிடும் அளவுக்கு வளமானதாகவும் இல்லை. இங்குள்ள கால நிலை அமெரிக்கர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. பல அமெரிக்க ராணுவ வீரர்கள் இன்று மன நிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே அமெரிக்கா பல பில்லியன்களை இந்த சண்டைக்காக செலவழித்துள்ளது. அமெரிக்க மக்களிடத்திலும் இந்த சண்டைக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பாகிஸ்தான் அரசும், ஆப்கானிஸ்தான் அரசும் தாலிபான்களோடு மறைமுக பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் சுமூக முடிவு எட்டப்படலாம்.

தோல்வியை ஒத்துக் கொண்டு ரஷ்யாவைப் போல் அவமானத்தோடு அமெரிக்கா ஆப்கனை விட்டு வெளியேறும் காட்சியை இனி பார்க்கலாம். நம்ம பார்பன அம்பி கமலஹாஸன் இனி 'விஸ்வரூபம் 2' ன் கிளைமாக்ஸை தாலிபான்களுக்கு சார்பாக மாற்றி எடுக்க வேண்டி இருக்கும். ஆஸ்கார் விருது வாங்கும் எண்ணமும் இனி அவ்வளவுதானா! :-)

தகவல் உதவி
அல்அரபியா
15-02-2014

Sunday, February 16, 2014

ஏ ஆர் ரஹ்மானுக்கு சில ஆலோசனைகள்!



உங்களின் முன்னேற்றத்தை கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று கூறும் அந்த தன்னடக்கத்தைக் கண்டு வியந்துள்ளேன். இளையராஜா, எம் எஸ் வி என்று பல மூத்த இசையமைப்பாளர்களை மேடையில் சந்தித்தாலும் இதுவரை அவர்களின் கால்களில் விழுந்ததில்லை. சுயமரியாதைக்காரர். இறைவனுக்கு மட்டுமே எனது தலை சாயும் என்ற கொள்கையுடையுவர். கடவுள் ஸ்தானத்திற்கு உங்களை சிலர் மேடையில் உயர்த்திய போது அதனை கடுமையாக அங்கேயே எதிர்த்தவர். காலை நேர தொழுகை தவறி விடக் கூடாது என்பதற்காக ஒலிப்பதிவை இரவு முழுக்க வைப்பவர். ஐந்து வேளை தொழுகையை தவறாமல் தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்துபவர். மாற்று மதத்தவர்கள் மத்தியில் அதிகம் வேலை செய்தாலும் அனைவருடனும் எந்த முறுகலும் இல்லாமல் அன்போடு அனைவரையும் அரவணைத்து செல்பவர் என்று உங்களின் நல்ல செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவ்வளவு நல்ல செயல்களுக்கு சொந்தக்காரரிடம் சில குறைகள் இருப்பதை நான் அறிவதால் அதனை ஞாபகப்படுத்தும் முகமாக இந்த பதிவிலே சில குறைகளை பதிக்கிறேன்.

மனிதர்களுக்கு தலை வணங்காத நீங்கள் இறந்து விட்ட ஒரு சில அடியார்களின் சமாதிகளில் உங்கள் தலையை சாய்க்கிறீர்கள். நாகூர் தர்ஹா, அஜ்மீர் தர்ஹா என்று அவ்வப்போது தர்ஹாக்களுக்குச் சென்று உங்களின் வணக்கத்தைச் செலுத்துகிறீர்கள். இது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமான செயல். முகமது நபி கூட 'தனது அடக்கஸ்தலத்தில் யாரும் பிரார்த்தனை செய்ய வர வேண்டாம். இறைவனிடம் மட்டுமே தொழுது கேளுங்கள்' என்று கூறியுள்ளார். இந்த சமாதி வழிபாடு என்பது ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாய மன்னர்கள் அதிகம் பேர் ஷியாக்களாக இருந்ததால் நகர் வலம் வரும் போது ஆங்காங்கு உள்ளவர்கள் ஏதேனும் ஒரு சமாதியைக் காட்டி அரசர்களிடம் இனாமாக நிலங்களை பெறுவார்கள். இது ஒரு மறைமுக வியாபாரமாக அந்த காலத்தில் நடந்தது. அடங்கியிருப்பவர் நல்லவரா கெட்டவரா என்பது கூட பலருக்கு தெரியாது.

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை இறைவன்தான் முடிவு செய்ய முடியும். மேலும் குர்ஆனில் பல இடங்களில் தனக்கு இணையாக சிறு தெய்வ வழிபாடு செய்பவர்களை இறைவன் கடுமையாக கண்டிக்கிறான். அந்த தவறை மன்னிக்கவே மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்கிறான். தொன்மையான இந்து மதம் சீரழிந்து அதன் உண்மை முகத்தை இழந்ததற்கு முக்கிய காரணம் சிறு தெய்வ வழிபாடே. இந்த சிறு தெய்வ வழிபாட்டை இந்துக்கள் எதிர்க்காமல் அனுமதித்ததால்தான் ஏக தெய்வ வணக்கம் நமது தமிழர்களிடத்தில் மறைந்து போனது.

இஸ்லாமிய வேத நூலான குர்ஆனும், இறைத் தூதரான முகமது நபி இது போன்ற தர்ஹா வணக்கங்களை தடை செய்திருப்பதாலும் இனி வரும் காலங்களில் தர்ஹா வணக்கங்களை தவிர்த்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து நேற்று உங்கள் தளத்தில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தீர்கள். அதன் வாசகமானது "Music can change the world" - Beethoven என்று வருகிறது. அதாவது 'இந்த உலகை மாற்றும் சக்தி இசைக்கு உண்டு' என்று சொல்கிறீர்கள். பீத்தோவன் என்ற இசைக் கலைஞருக்கு இந்த செய்தி உண்மையாக தோன்றியிருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிம் இவ்வாறு எண்ண மாட்டான். இந்த உலகை மாற்றிப் போடும் சக்தி இறை வேதமான குர்ஆனுக்குத்தான் உண்டு. இசை என்பது நமது வாழ்வில் ஒரு அங்கம் அவ்வளவுதான். இசையே வாழ்க்கையாகி விடாது. இசைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால் அதற்கு சில கட்டுப் பாடுகளை விதிக்கிறது இஸ்லாம்.

உங்களின் நண்பர் யுவன் சங்கர் ராஜா சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றதை அறிவீர்கள். இசையை உருவாக்கி அதில் பல வெற்றியும் கண்டவர் யுவன் சங்கர். 100 படங்களுக்கு மேல் சொந்த இசையால் இளைஞர்களை கட்டிப் போட்டவர். ஆனால் அந்த இசையில் அவருக்கு மன அமைதி கிடைக்கவில்லை. அவருக்கு மன அமைதியைக் கொடுத்தது குர்ஆனின் வசனங்கள் தான். அதனை அவரே பத்திரிக்கை பேட்டியில் சொன்னதை பார்த்தோம்.

'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

குர்ஆன் 13:28

மேற்கண்ட இறை வசனத்தின் மூலம் இறைவன் மன அமைதி பெறுவதற்கு இறைவனைப் பற்றிய நினைவை வழியாகக் காட்டுகிறான். இரு முறை அதனை அழுத்தமாக சொல்வதிலிருந்து குர்ஆனின் வார்த்தைகள்தான் ஒரு மனிதனின் மனதை அமைதிப் படுத்தும். அதற்கு சிறந்த உதாரணம் தான் யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றம். எனவே நிரந்தர மன அமைதி இசையால் கிடைக்காது நம்மை படைத்த இறைவனின் வார்த்தைகளால்தான் கிடைக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

அடுத்து உங்களின் புதிய ஹிந்தி படமான "HIGH WAY" ல் ஒரு பாடல் வருகிறது. "PATHKHA GUDDI" என்ற பாடலில் 'நாம் ரப்புகா நாம் சாயிகா அலி...அலி...அலி' என்று வருகிறது. இது பஞசாபி பாடல். நான் விளங்கிக் கொண்ட வகையில் முகமது நபியின் மருமகன் அலியை நினைத்து பாடுவதாக நினைக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் இம்தியாஸ் அலி ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இதற்கு முந்தய படமான 'ராக்ஸ்டார்' லும் தர்ஹா வணக்கத்தை வலிந்து புகுத்தினார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதில் என்ன காட்சிகளை புகுத்தியிருக்கிறாரோ தெரியவில்லை. ஷியாக்கள் கலீபா அலியை மிக உயர்த்தி அபுபக்கர், உஸ்மான் போன்ற கலீபாக்களை மட்டம் தட்டுவர். அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் என்று பொய்யுரைப்பர். தகவல் தொடர்பு அதிகம் இல்லாத அந்த காலங்களில் இஸ்லாமிய எதிரிகள் இடையில் புகுந்து முஸ்லிம்களுக்குள் இரண்டு பிரிவுகளை உருவாக்கி விட்டனர். குர்ஆனிலோ நபி மொழிகளிலோ ஷியா என்ற வார்த்தையே கிடையாது என்பதிலிருந்து இவர்கள் புதிதாக உருவாகிய கூட்டத்தினர் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இந்த படத்தின் கதையின் நாயகன் அலி என்றும் அதனை பற்றி நீங்கள் பாடுவதாக இருந்தால் நமக்கு ஒரு பிரச்னை இல்லை. ஆனால் கலீபா அலியை உயர்த்தி நீங்கள் பாடுவதாக காட்சி அமைத்திருந்தால் இது போன்ற தவறுகளிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.

அடுத்து இஸ்லாத்தை சொல்ல எத்தனையோ வழிகள் இருக்க சினிமாவை தேர்ந்தெடுக்க வேண்டாம். ஒரு தொழில் என்ற முறையில் அதில் ஈடுபடுங்கள். இஸ்லாமும் சில கட்டுப்பாடுகளோடு இசையை அனுமதிக்கிறது. இஸ்லாமிய கருத்துக்களை சொல்ல சினிமா பாடல்களை பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பதிவை உங்கள் இன் பாக்ஸிலும் இட்டுள்ளேன். நேரமிருப்பின் படித்து நேர் வழி பெற பிரார்த்திக்கிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவாலும் நரேந்திர மோடியும்!

Saturday, February 15, 2014

இந்த படை எங்கே கிளம்பி விட்டது?



இந்த படை எங்கே கிளம்பி விட்டது?

இரட்டைக்குவளை டீக்கடைகளை அடித்து நொறுக்கவா?

ஊர்த்தெருவுக்குள் சேரிப்பிள்ளைகள் செருப்பு போட்டு நடக்க அனுமதிக்காத கிராமங்களை திருத்தவா?

சேரி மக்களை அனுமதிக்காத கோயில் கதவை திறந்து விட புறப்பட்டு விட்டதா?

சாதிகளற்ற சமுதாயம் உருவாக்கிட கலப்புத்திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளித்திட புறப்பட்டு விட்டதா?

இயற்கையின் நீர் நிலைகள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறி தலித்துகளை ஊர்ப்பொது குளத்துக்கு நீர் அருந்த அழைத்து செல்ல புறப்பட்டு விட்டதா?

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க புறப்பட்டு விட்டார்களோ!

பிறந்த பெண் குழந்தைகளை கள்ளிப் பால் கொடுத்து உசிலம்பட்டியில் உயிரோடு புதைக்கிறார்களே அதை தடுக்க புறப்பட்டு விட்டதா?

அல்லது கணவன் இறந்தவுடன் 'சதி' என்ற பெயரில் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளி குதூகலிக்கிறீர்களே அதனை தடுக்கவா?

சிதம்பரத்தில் 'நீச மொழி' என்று வந்தேறிகளால் ஒதுக்கப்படும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்து இறைவனை வழிபட புறப்பட்டு விட்டதா?

பார்பனர்கள் சூத்திரர்கள் என்று மனிதனை பாகுபடுத்தி இன்று வரை இழிவு செய்யும் வேத இதிகாசங்களை திருத்தப் புறப்பட்டு விட்டதா?

அல்லது வன்னியர்களையும், தலித்களையும் ஒன்றாக்கி சாதி மோதலற்ற சமூகத்தை உருவாக்க புறப்பட்டு விட்டதோ?

அகோரிகள் என்று சொல்லிக் கொண்டு கங்கை ஆற்றில் அடித்து வரப்படும் பிணங்களை தின்று நிர்வாணமாக உலா வருகின்றவர்களை திருத்த புறப்பட்டு விட்டார்களோ!

உண்மையான தெய்வத் தொண்டாற்றிய சங்கரராமனை போட்டுத் தள்ளியவனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தவா?

இதில் எதுவும் இல்லையென்றால் அப்புறம் என்னய்யா நாமெல்லாம் இந்துக்கள்! நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்ற கூப்பாடு?

சாதி கட்டமைப்பை பாதுகாத்து வைத்துக்கொண்டு, நாமெல்லாம் ஒன்று, நமக்குள் வேறுபாடுகள் இல்லை,இந்த நாடு இந்து நாடு,இந்து மக்கள் சொந்த நாடு என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறீர்களே.என்னய்யா ஏமாற்று வேலை இது?

இதில் புதிதாக இந்து மதத்தை காக்க நரவேட்டையாடிய நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராம்!!. வெட்கக் கேடு!


முகமது நபி மீது கொண்ட பாசம் - அபூபக்கர்

நபித் தோழர் அபுபக்கர் நபி அவர்கள் மீது இருந்த அர்ப்பணிக்கும் ஆசை அளவிட முடியாதது. நபியவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் பிரியமும் அப்படித்தான். எனவே, அவர்களுக்காகத் தங்களது கழுத்து துண்டிக்கப்படுவதையும் அவர்கள் பொருட்படுத்தியதில்லை. ஆனால், நபி அவர்களின் நகத்திற்கு ஒரு சேதம் ஏற்படுவதையோ, அவர்களுக்கு ஒரு முள் தைப்பதைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஒருமுறை அபூபக்ர் கல் நெஞ்சக்காரர்களால் கடுமையாக மிதிக்கப்பட்டார்கள்; வன்மையாக அடிக்கப்பட்டார்கள். காரணம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுதான். அந்நேரத்தில் அங்கு வந்த உத்பா, ஆபூபக்ரை செருப்பால் அடித்தது மட்டுமல்ல, அவர்களது முகத்தை செருப்பால் தேய்க்கவும் செய்தான். அவர்களது வயிற்றின் மீது ஏறி மிதித்தான். அவர்களது மூக்கு சிதைக்கப்பட்டதால் மூக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. “தைம்’ கிளையினர் அன்னாரை ஒரு துணியில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் வைத்தார்கள். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே எண்ணி இருந்தார்கள்.

அன்று பகலின் இறுதியில் அவர்கள் பேசத் தொடங்கியபோது “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்றுதான் கேட்டார்கள். இதைக் கேட்ட தைம் கிளையினர் அவரைக் குறை கூறிவிட்டு அன்னாரது தாயார் உம்முல் கைடம் "இவருக்கு உணவளியுங்கள்; ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு எழுந்துச் சென்றனர்.

அன்னாரது தாய் அனைவரும் சென்றபின் உணவு சாப்பிட அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அபூபக்ரோ “அல்லாஹ்வின் தூதர் என்னவானார்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அன்னாரது தாய் “உனது தோழரைப் பற்றி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒன்றுமே எனக்குத் தெரியாது” என்று கூறினார். “நீங்கள் கத்தாபின் மகள் உம்மு ஜமீல் (உமரின் சகோதரி) இடம் சென்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்” என்று அபூபக்ர் கூறினார்கள். தாயார் உம்மு ஜமீலிடம் வந்து “அபூபக்ர் உன்னிடம் முஹம்மது நபியைப் பற்றி விசாரித்து வர என்னை அனுப்பினார்” என்று கூற, அவர் “எனக்கு அபூபக்ரையும் தெரியாது, முஹம்மது நபியைப் பற்றியும் தெரியாது. நீங்கள் விரும்பினால் உங்களுடன் உங்கள் மகனைப் பார்க்க நான் வருகிறேன்” என்று கூறினார். அவர் “சரி” எனக் கூறவே, உம்மு ஜமீல் அவருடன் அபூபக்ரைப் பார்க்கப் புறப்பட்டார்.

உம்மு ஜமீல் அபூபக்ரை மயக்கமுற்று மரணித்தவரைப் போன்று பார்த்தவுடன் கூச்சலிட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கல் நெஞ்சம் கொண்ட இறைநிராகரிப்போரும் பாவிகளும் உங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார். அவரிடம் அபூபக்ர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்று கேட்டதற்கு “இதோ உமது தாய் (நமது பேச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறவே அவரைப் பற்றி பரவாயில்லை என்று கூறியவுடன் “நபி அவர்கள் நல்ல விதமாக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்” என்று உம்மு ஜமீல் கூறினார். “அவர்கள் எங்கிருக்கிறார்” என்று அபூபக்ர் கேட்கவே “அவர்கள் தாருல் அர்கமில் இருக்கிறார்கள்” என்றவுடன் “அல்லாஹ்வின் தூதரைச் சென்று பார்க்காமல் நான் உண்ணவுமாட்டேன், குடிக்கவுமாட்டேன். இது அல்லாஹ்விற்காக என்மீது கடமையாகும்” என்று நேர்ச்சை செய்து கொண்டார்கள்.

அன்னாரது தாயாரும் உம்மு ஜமீலும் ஆள் நடமாட்டங்கள் குறைந்து மக்களின் ஆரவாரங்கள் அமைதியாகும் வரை சற்று தாமதித்து நபி அவர்களிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். அபூபக்கர் நடக்க இயலாமல் அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து நடந்து சென்றார்கள்.

ஆதார நூல்:(அல்பிதாயா வந்நிஹாயா)

இதுதான் ஆரம்ப கால இஸ்லாமியரின் நிலை. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று கூறுபவர்கள் இந்த வரலாற்றைப் படித்து தெளிவுறவேண்டும். இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக எந்த தவறும் செய்யாத அபுபக்கர் இந்த அளவு கொடுமைபடுத்தப்படுகிறார். குரைஷி குலமான உயர் குலத்தைச் சேர்ந்து இவருக்கே இந்த நிலை என்றால் அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிலால் போன்ற நீக்ரோக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

யுவன் சங்கர் ராஜா எவரது வற்புறுத்தலும் இல்லாமல் நானாக குர்ஆனை படித்து விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்று விளக்கம் அளித்த பின்பும் நமது பத்திரிக்கைகள் எந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டன என்பதை நாம் அறிவோம். ஒரு தளத்தில் இந்துத்வா நபர் இவ்வாறு பின்னுட்டம் இட்டிருந்தார். 'எனது கையில் மட்டும் யுவன் கிடைத்தால் என் கையாலேயே கொன்று விடுவேன்'. எந்த அளவு வன்மம் இவர்களிடத்தில் உள்ளது என்பது தெரிகிறதா?

சிம்புவும், ராஜேந்தரும் குடும்பத்தோடு கிறித்தவ மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு பெரிதாக தெரியாது. ஏனெனில் இந்து மதத்தைப் போலவே கிறித்தவ மதத்திலும் வர்ணாசிரமம் நுழைந்து பல காலம் ஆகி விட்டது. பெயர் மட்டும் தான் மாறும் மற்ற சடங்குகள் அனைத்தும் இந்து மதத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் இஸ்லாத்தில் இந்த கதை நடக்காது. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே தனது வீட்டில் தனது தந்தை கொலு வைத்து வழிபடுவதை யுவன் கண்டித்ததாக பத்திரிக்கைகளில் பார்த்தோம். இளையராஜா பார்பனியத்தை சுவீகரித்துக் கொண்டார். பார்பனர்களுக்கு சேவை செய்வதை தனது கடவுள் பணியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் இளைய தலைமுறையைச் சேர்ந்த யுவனுக்கு தனது சுய மரியாதையை விட்டுத்தர மனமில்லை. இன்று உலகின் இஸ்லாமிய சகோதரர்களில் ஒருவராகியுள்ளார். அவரது தூய்மையான இந்த மன மாற்றம் எந்த சிக்கலும் இல்லாமல் தனது வாழ்வை குர்ஆனோடு இணைத்துக் கொள்ள அந்த ஏக இறையை பிரர்த்தித்தவனாக இந்த பதிவை முடிக்கிறேன்.

Thursday, February 13, 2014

சவுதியில் உண்மை மார்க்கத்தை விளங்கி வந்த 6 சகோதரர்கள்!



வாசனை திரவியங்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை எட்டிய கம்பெனி 'அரேபியன் உத்'. இந்த கம்பெனியின் முக்கிய பொருப்புகளில் பணியாற்றும் 6 வெளிநாட்டவர்கள் தங்களின் வாழ்வை இஸ்லாத்தோடு இணைத்துக் கொண்டுள்ளனர். ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் தலைமையில் இந்த மன மாற்றம் நிகழ்ச்துள்ளது. கம்பெனியின் செலவில் மார்க்க விளக்கங்களை ஓய்வு நேரங்களில் நிகழ்த்துவது வழக்கம். விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். எவரையும் கட்டாயப் படுத்துவது இல்லை.

இந்த தாவா நிகழ்ச்சியின் மூலம் குர்ஆனை படித்து விளங்கி தங்களின் வாழ்வியலாக இந்த ஆறு பேரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இது போன்று இதற்கு முன்னும் பல மாற்று மதத்தவர்கள் இதே கம்பெனியில் தூய இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இந்த கம்பெனியின் நிர்வாகிகள் சம்பளத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாது தனது வேலையாட்கள் சிறந்த வாழ்வியலை தனது நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மிக சிரத்தை எடுத்து பல ஆக்கபூர்வ பணிகளை செய்து வருகின்றனர்.

இஸ்லாத்தை ஏற்ற இந்த ஆறு பேரும் 'எங்களின் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் இவை. குர்ஆனின் அனைத்து கட்டளைகளையும் மிக சிறப்பாக பாடங்களாக கொடுக்கப்பட்டு எங்களுக்கு போதிக்கப்பட்டது. இந்த சிறந்த வாழ்வு கிடைத்தற்காக இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்' என்றனர்.

இந்த கம்பெனியின் பொது மேலாளர் பந்தர் சங்கூரா கூறும்போது 'புதிதாக தங்கள் வாழ்வை இஸ்லாத்தோடு இணைத்துக் கொண்ட இந்த சகோதரர்களை வாழ்த்துகிறோம். இந்த மாற்றமானது இவர்களின் வாழ்நாள் முழுக்க தொடர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். எங்களது நிறுவனமானது இஸ்லாமியரையும், இஸ்லாம் அல்லாதவர்களையும் இணைத்து ஒரு சகோதரத்துவத்தை உருவாக்குகிறோம். இஸ்லாத்தின் சகிப்புத் தன்மை என்ன என்பதையும் இவர்களுக்கு புரிய வைக்கிறோம்.

குர்ஆனின் கட்டளைகள் என்ன என்பதையும் நபிகள் நாயகத்தின் வாழ்வு முறை எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆறு பேரும் மிக சிறப்பாக விளங்கி வைத்துள்ளனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள எங்களது நிறுவனம் தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் எடுத்து வருகிறது' என்றார்.

தகவல் உதவி

சவுதிகெஜட்
13-02-2014

சவுதி அரசு செய்து வரும் பல நல்ல திட்டங்களில் தாவா சென்டர்களும் ஒன்று. இதற்காக கோடிக்கணக்கான டாலர்களை இந்த அரசு வருடந்தோறும் செலவு செய்து வருகிறது. இரண்டு வருடம் இந்த தாவா சென்டரில் நானும் பகுதி நேரமாக சேர்ந்து இஸ்லாத்தின் சட்டங்களை கற்றுக் கொண்டேன். இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது மிக அதிகம். இதற்காக உழைத்து வரும் பல நல்ல உள்ளங்களின் எண்ணங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

'நம்பிக்கைக் கோண்டோர் ஒட்டு மொத்தமாக புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு பகுதியினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் இதன் மூலம் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள்.'

குர்ஆன் 9:122

இந்த வசனம் கல்வி ஒரு முஸ்லிமுக்கு எந்த அளவு அவசியம் என்று விளக்கப்படுகிறது. மார்க்க கல்வி கற்க எல்லோரும் சென்று விடாமல் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் செல்லுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். மற்றவர்கள் உழைத்து கல்வி கற்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சொல்கிறான். அதன் பிறகு உழைத்தவர்கள் கல்வி கற்க செல்ல வேண்டும். இது ஒரு சுழற்சி முறையில் நடைபெற வேண்டும். முகமது நபியின் தோழர்களும் இவ்வாறு சுழற்சி முறையிலேயே முகமது நபியிடமிருந்து கல்வியைக் கற்றுக் கொண்டனர். ஆனால் தற்போது அதற்கும் அவசியம் இல்லாமல் இணையம் எனற மாபெரும் சக்தி ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டுகிறது. தினம் ஒரு மணி நேரம் இணையத்தில் இஸ்லாத்துக்காக ஒதுக்கினாலே போதும். சிறந்த மார்க்க அறிஞராக பரிணமிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த கல்வியை ஆறு மாதத்திலேயே கற்றுக் கொள்ளும் வண்ணமாக பாடங்கள் அமைக்கப்பட்டு பலரையும் ஈர்த்து வருகிறது. இந்த அமைப்பானது தொடர வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

www.onlinepj.com

www.islamkalvi.com

போன்ற இணைய தளங்கள் அடிப்படை அறிவு இல்லாத ஒரு மனிதனையும் சிறந்த மார்க்க அறிஞராக மாற்றும் திறனைக் கொண்டுள்ளன.


Wednesday, February 12, 2014

யுவன் சங்கர் ராஜாவின் மாற்றமும் ஒரு அன்பரின் எதிர் வினையும்!

யுவன் சங்கர் ராஜாவின் மாற்றமும் ஒரு அன்பரின் எதிர் வினையும்!

யுவனின் மாற்றத்தைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு ஒரு இந்து நண்பர் எனக்கு பின்னூட்டம் இட்டிருந்தார். பதில் நீண்டு விட்டதால் அதனை தனி பதிவாக இட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

//தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்து, தமிழ் கலாச்சாரத்தின் மூலம் செம்மையடைந்து இன்று அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவது என்பது இவனை போன்ற துரோகி, பரதேசி, அயோகியம், முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.....//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

இதன் அடிப்படையில்தானே இஸ்லாமே கட்டப்பட்டுள்ளது. இந்த பழமொழிகள் 2000 வருடங்களாக நமது தாயகத்தில் உலவி வருகின்றன. ஆனால் இதனை பின்பற்றும் தமிழ் இந்துக்கள் எத்தனை பேர்?

இதன்படி உங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தால் யுவனின் இந்த மாற்றம் நடந்தே இருக்காது. தமிழர்களாகிய நீங்கள் உங்கள் வேர்களை மறந்தீர்கள். யுவன் அந்த ஆணி வேரினை தேடி தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

அவர் இஸ்லாத்தை ஏற்ற ஒரு காரணத்திற்காக இவ்வாறு அவரை திட்டுவதுதான் உங்கள் மதத்தின் கொள்கையா? இன்றும் கூட சிரட்டையில் டீ தரும் தேநீர் கடைகளை மதுரையில் பார்க்கவில்லையா? இன்னும் கூட சில கிராமங்களில் செருப்பை கையில் பிடித்து பரிதாபமாக செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்ததில்லையா? சாதி மாறி காதலித்த குற்றத்திற்காக இளவரசனை இந்த இள வயதில் கொன்றது இந்த தமிழ் கலாசாரம் இல்லையா? சாமி கும்பிடக் கூட சாதி பார்த்து அனுமதிக்கும் கேவலம் இன்றும் நடைமுறையில் உள்ளதை மறுக்கப் போகிறீர்களா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு யுவனின் மன மாற்றத்தை குறை காண வந்து விட்டீர்?

//நாம் பிறப்பில் இருந்தே எம் அடையாளங்களை அழிக்க முடியாது .. அழிக்க முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ..//

இந்த வெற்று மிரட்டல்கள் கதைக்கு ஆகாது நண்பரே! இதனால் மேலும் அழிவுப் பாதைக்குத்தான் உங்களை இட்டுச் செல்கிறீர்கள். யுவன் ஏன் இந்த மாற்றத்தை அடைய வேண்டும்? அதற்கான நிர்பந்தம் என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.

//. புலம் பெயர்ந்தாலும் இடம் பெயர்ந்தாலும் .. எங்க குழந்தைகள் இங்கு பிறந்தாலும் அன்னிய மொழி மட்டுமே பேசக்கற்ருக்கொண்டாலும் ...அடையாளம் மாருமா??குணமும் + முகமும் +நிறமும் +முடியும் காட்டிக்கொடுக்கும். அதேபோல் பிறப்பில் இருந்தே தமிழர்கள் நாங்கள் எங்கமொழி தமிழ் எங்க கடவுள்...!!!//

இதை இஸ்லாமும் மறுக்கவில்லையே! தாய் மொழிக்கு உரிய அந்தஸ்தை கொடுக்கச் சொல்கிறது இஸ்லாம். இளையராஜா இந்துவாக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை யுவன் செய்ய வேண்டும்: அவரை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இந்த உலகில் தோன்றிய மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தது இறைவனே! இதனை குர்ஆனில் அழகாக எடுத்துக்காட்டுகிறான் இறைவன். தொன்மையான மொழியான தமிழ் இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் உங்கள் மதத்தில்தான் சமஸ்கிரதம் தேவ மொழி என்றும், தமிழ் நீச மொழி என்றும் அவமானப்படுத்தப்படுகிறது. அந்த பஞ்சாயத்துதான் இன்னும் சிதம்பரம் கோவிலில் தீர்க்கப்படாமல் இருக்கிறது. தமிழ் ஆர்வலரான நீங்கள் அதற்கு முயற்சிக்கலாமே! அப்படி தமிழை நீச மொழி என்று அவமானப் படுத்துபவர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.

//இஸ்லாம் என்பது நம்மை அண்டி பிழைக்க வந்த, பிறகு நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மையே ஆண்ட, மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் அரபியர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் ஒரு முறை தான் இஸ்லாம் என்ற மதம்..//

தவறான புரிதல் தோழரே! உலக மொழிகள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பி இறை வேதத்தையும் கொடுத்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. அதன்படி நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கும் வேதமும் தூதரும் வந்துள்ளனர்.

//இந்த மதத்திற்கு ஒரு பலமான வரலாறோ, இலக்கியமோ, கலாச்சாரமோ,கல்வி அறிவோ, பண்பாடோ, வளமையோ கிடையாது....//

இலக்கியம் என்று நீங்கள் தமிழில் காட்டும் எந்த ஒன்றும் நமது அறிவை விரிவுபடுத்துவதாக இல்லை. அதிக இலக்கியங்கள் சிலை வழிபாட்டையும், பெண் அடிமையையும், வர்ணாசிரம கோட்பாடுகளையும் தாங்கி நிற்கிறது. இந்த கணிணி யுகத்திலும் தீண்டாமை இந்த அளவு நமது தமிழகத்தில் வேரூன்றியிருக்க மூல காரணமே நீங்கள் குறிப்பிடும் தமிழ் இலக்கியங்கள்தான்.

கலை என்ற பெயரில் பெண்களை கோவில்களில் ஆட விட்டு ரசித்தீர்கள். ஆட்டம் முடிந்தவுடன் அந்த பெண்களை அந்தப்புரத்துக்கு கொண்டு சென்று அனுபவித்தீர்கள். முடிவில் அந்த பெண்களை 'தேவரடியார்கள்' என்ற பெயரையும் சூட்டினீர்கள். கடைசியில் அந்த பெண்கள் வாழ்வை இழந்து விலை மாதுகளாக மாற்றப்பட்ட கொடுமை தெரியுமா உங்களுக்கு? அவர்களையும் ஒரு சாதியாக பாவித்து இன்று வரை அந்த குடும்பத்து வாரிசுகள் கூனி குறுகி நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? தஞ்சையில் ராஜ ராஜ சோழனுக்கு வைப்புகளாக இருந்தவர்களின் ஒரு தெருவே இன்றும் சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இன்றும் நேபாளில் இவ்வாறு கோவிலுக்கு தேவரடியாராக நேர்ந்து விட்டு பெண்களை போகப் பொருளாக்கும் கூத்து நடந்து வருகிறது. இந்த பெருமையைத்தான் தமிழனின் கலாசாரம் என்று சொல்கிறீர்களா?

//மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பாடகர் கோடி சொத்து ஆனால் ,, தன் இனத்த்தின் நிறத்தை அவமானமாகக்கருதி வெருத்து வெள்லைத்தோலுக்கு ஆசைப்பட்டு கடைசியில் .. தோல்புற்ருநோயால் அவதிப்பட்டு வேதனையை மறக்க போதைக்கு அடிமையாகி .. மாண்டு போனார் ..//

ஆனால் மைக்கேல் ஜாக்ஸனின் அண்ணன் ஜெராமைக் ஜாக்ஸன் 'அப்துல் அஜீஸ்' ஆக முஸ்லிமாக மாறி அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது வாழ்க்கை இன்றும் சந்தோஷமாகவே சென்று கொண்டுள்ளது. இதை கடைசி காலத்தில் உணர்ந்து மைக்கேல் ஜாக்ஸனும் இஸ்லாத்தை தழுவினார். ஆனால் அதற்குள் அவரது உடல் இறப்பை எட்டியது. தவறு மைக்கேல் ஜாக்ஸனிடம் தான்.

முகமது நபி ஒரு அரேபியர். அதிலும் இங்கு பார்பனர்களைப் போல அங்கு குரைஷிகள் உயர்ந்த குலம். அந்த குலத்தில் வந்த முகமது நபி 'குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபியன் அரபி அல்லாதவனை விட சிறந்தவன் இல்லை. ஒரு கருப்பு அடிமை உங்களுக்கு தலைவராக்கப்பட்டாலும் அவரை பின்பற்றி செல்வதுதான் உண்மை முஸ்லிமுக்கு அழகு' என்று சொன்ன அந்த வார்த்தை இன்றும் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறதே! கருப்புத் தோலுக்கும் வெள்ளைத் தோளுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. தூய இறை பக்தி ஒன்றுதான் இறைவனிடம் உங்களை நெருக்கமாக்கும் என்று சொல்லி அதனை நடைமுறைபடுத்திக் காட்டியும் வருகிறது இஸ்லாம்.

//எம்மதமும் நல்வழியைத்தானே போதிக்கிது அப்புறம் சைவத்தில் இல்லாது இஷ்லாத்தில் என்ன இருக்கிது?? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யலாம் .//

இஸ்லாத்துக்கும் சைவத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதை மேலே பட்டியலிட்டுள்ளேன். அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவிகள். கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள். ராமனின் தந்தை தசரதனுக்கு 60000 மனைவிகள் இருந்ததாக ராமாயணம் சொல்கிறது. நமது முன்னால் முதலமைச்சர் எம் ஜி ஆர் பலதார மணம் செய்தவர். அதே போல் தற்போது வாழ்ந்து வரும் கலைஞர் பல திருமணம் செய்து அனைத்து மனைவிகளோடும் சந்தோஷமாகவே வாழ்ந்து வருகிறார். எனவே பலதார மணம் செய்ய இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கு இந்து மதத்திலேயே இருந்திருக்கலாம். தான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதை யுவனே தனது பேட்டியில் கூறியுள்ளார். நானும் அதனை பதிவாக்கியுள்ளேன். படித்து தெளிவு பெறுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_10.html

//இஸ்லாத்தில் சொல்லப்படும் அணைத்தும் அரேபியர்களை குறித்ததுதான், இதில் இந்தியாவையோ குறிப்பாக தமிழகத்தையோ, இந்திய முஸ்லிம்களை பற்றியோ அல்லது தமிழக முஸ்லிம்களை பற்றியோ எங்கும் ஒரு சிறு குறிப்பும் கிடையாது.//


'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையைப் பிரித்துக் காட்டும்'

-குர்ஆன் 2:185

இங்கு மனிதர்கள் என்று உலக மக்களைப் பார்த்து குர்ஆன் பேசுகிறது. இது போன்று அனேக இடங்களில் 'மனிதர்களே!' என்று இந்த மனித குலத்தில் உள்ள தமிழர்களாகிய நம்மையும் பார்த்துதான் பேசுகிறது. எனவே தான் தமிழனாகிய யுவனின் மனதை இந்த குர்ஆன் மாற்றியது. கடவுள் மறுப்பை வாழ்நாள் முழுக்க சொன்ன தந்தை பெரியாரும் 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழி' என்றார். நாத்திகனின் மனதையும் புரட்டிப் போடும் சக்தி இந்த குர்ஆனுக்கு உண்டு.

பார்பனியத்தை நமது நாட்டிலிருந்து விரட்ட பெரியார் எவ்வளவு முயன்றும் தோல்வியையே கண்டார். அவரது தம்பிகளும் கடைசியில் பார்பனியத்தின் கால்களிலேயே வீழ்ந்து விட்டனர். சுய மரியாதையை கொடுத்து உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச் செய்யும் ஆற்றல் இஸ்லாத்துக்கு உண்டு. அதனை சரியாக தேர்வு செய்த முஹம்மது ஹாலிக் யுவனை வாழ்த்தா விட்டாலும் தூற்றாமலாவது இருப்போம்.

Tuesday, February 11, 2014

அசீமானந்தா பேட்டி: என்ஐஏ மூலமாக விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை திட்டமிடுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்தலைவர்களை தான் தொடர்பு கொண்டதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசீமானந்தா பேட்டி கொடுத்துள்ளார்.

இது பற்றி என்ஐஏ மூலமாக விசாரணை நடத்தவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: அசீமானந்தா கொடுத்த பேட்டியைக் கொண்டு ஒரு பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள வெடிமருந்துகள் விவரம் பல கேள்விகளை எழுப்புகிறது.இது பற்றி விரிவாக விசாரணை நடத்தப்படவேண்டும்.

பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளை திட்டமிடும் போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்தலைவர்களை தான் தொடர்புகொண்டதாக பேட்டியில் அசீமானந்தா தெரிவித்திருக்கிறார்.

82 பேர் உயிரிழக்கக் காரணமான 3 பயங்கரவாத தாக்குதல்களில் அசீமானந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு தொடரப் பட்டுள்ளது.

பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட மேலும் சில வழக்குகளிலும் அவர் விசாரணை வளையத்தில் கொண்டுவரப் பட்டுள்ளார்.

குஜராத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பான வனவாசி கல்யாண் ஆசிரமத்துடன் இணைந்து பழங்குடிகள் வாழும் பகுதிகளில் அசீமானந்தா வசிப்பவர். சூரத்தில் 2005 ஜூலையில் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்குப் பிறகு தற்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்திரேஷ் குமார் என்பவருடன் டாங்ஸ் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றார்.

இந்தியாவில் முஸ்லிம்களை இலக்குவைத்து குண்டுவெடிப்பு நடத்திட திட்டமிடுவது பற்றி அந்த கோயிலில் விவாதிக்கப்பட்டதாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அசீமானந்தா. இப்படியொரு பேட்டி யாருக்கும் தரப்படவில்லை என அசீமானந்தா தரப்பு வழக்கறிஞர் மறுத்தாலும் தங்களிடம் பேட்டி சம்பந்தமான பதிவுகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது அந்த பத்திரிகை

சில ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அந்த பேட்டியில் தெரிவித்துள்ள விவரங்கள் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பு மூலமாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. -பி.டி.ஐ.

http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article5678578.ece?homepage=true

யுவன் சங்கரின் மாற்றத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு!

இரண்டு நாட்களாக ஊடகத் துறையில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றத்தைப் பற்றியே! இவர் ஒரு பவுத்தராகவோ அல்லது கிறித்தவராகவோ மாறியிருந்தால் இந்த அளவு எதிர்ப்புகளை சம்பாதித்திருக்க மாட்டார். ஆனால் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தது இந்துத்வாவாதிகளை ரொம்பவுமே கொதிப்படைய வைத்துள்ளது. தினமலரும் தனது பங்குக்கு இதை ஊதி பெரிதாக்க அந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டது. ஆனால் நினைத்ததற்கு மாற்றமாக இந்துக்களின் பிறபடுத்தப்பட்ட மக்களில் பெரும்பாலோர் அவரது மாற்றத்தை வரவேற்றுள்ளது தினமலருக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வெண்டும்.

உடனே மறு செய்தியாக சில நண்பர்கள் மூலம் கிடைத்ததாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மலேசியாவில் ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக இஸ்லாத்துக்கு மாறியுள்ளதாகவும், கொலு வைப்பது சம்பந்தமாக தந்தை இளையராஜாவோடு தகறாரு வந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டு தனது அரிப்பை தீர்த்துக் கொண்டது தின மலர்.

தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையான தினமலர் சம்பந்தப்பட்ட யுவனே வதந்திகள் என்று மறுத்தும் சில நண்பர்கள் கூறினார்கள் என்ற பெயரில் பொய்களை பிரசுரித்து தான் 'தினமலம்' தான் என்பதை நிரூபித்துள்ளது.

ஏன் இப்படி ஒரு எதிர்ப்பு? காலகாலமாக பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மையினரை சிறுபான்மையான பார்பனர்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர். கோவிலுக்குள் அனுமதி இல்லை: சூத்திரன் என்று அவர்களை கேவலப்படுத்துவது: சாதி மாறி கல்யாணம் செய்தால் கொலை செய்வது: ஊர் விலக்கம் செய்வது: அக்ரஹாரத்துக்குள் தலித்களை அனுமதிப்பது இல்லை: என்னதான் படித்து அரசு வேலையில் இருந்தாலும் அவனது சாதியை காட்டி மட்டம் தட்டுவது: இன்னும் வரிசையாக சொல்லலாம். இது போன்ற அவலங்கள் அனைத்தும் தொடர வேண்டும் என்று மேட்டுக்குடி நினைக்கிறது.ஆனால் ஒருவன் இஸ்லாத்தை ஏற்றவுடன் இந்த வர்ணாசிரமம் என்ற கட்டிடம் பொல பொல வென்று உதிர்ந்து மண்ணோடு மண்ணாவதை நாம் யதார்த்தத்தில் பார்க்கிறோம். தங்களின் ஆளுமை தங்கள் கையை விட்டுப் பொகிறதே என்பதால்தான் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தையும் முடிச்சுப் போட்டு தங்கள் ஊடகங்களின் மூலம் இதுவரை பொய்களை பரப்பி வந்தனர். ஆனால் இணையம் என்ற ஒரு சக்தி இன்று ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் அனாயசமாக தட்டுகிறது. மன நிம்மதி இழந்து தவிக்கும் பல ஆயிரம் இளைஞர்களின் மனதை இந்த குர்ஆன் உலுக்கி எடுக்கிறது. இன்று தமிழகத்தில் நாம் பார்க்கும் நிலைதான் அன்றைய அரபுலகத்திலும் நடந்தேறியது.

அன்றைய அரபுலகை சற்று நோட்டமிடுவாம்....

பல்லாண்டு ஊற வைத்த மதுக்குடங்கள் இருப்பது கொண்டு அன்றைய அரபுகள் பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர். தந்தைக்கு நூறு மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். வறுமைக்கு பயந்து பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர்.உயர் சாதி கீழ் சாதி என்று மனிதனை பாகுபடுத்தி அதனை கடவுளின் பெயரால் அங்கீகரித்தனர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.

இந்த முஹம்மது ஷைத்தானிடமிருந்து சில மந்திரங்களை அறிந்து கொண்டு அவற்றை மக்களிடம் ஓதிக்காட்டி மக்களை மயக்குகிறார்; வழிகெடுக்கிறார். அவர் ஒரு சூன்யக்காரர், கவிஞர், பொய்யர், சந்ததியற்றவர், பைத்தியக்காரர், மோசடிக்காரர் என்றெல்லாம் தொடர்ந்து துர்ப்பிரச்சாரம் செய்து மக்கள் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் நெருங்க விடாமல் செய்தனர். தப்பித்தவறி கூட குர்ஆன் ஓதுவதை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மக்களை காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள தூண்டினார்கள். அல்குர்ஆனை நெருங்க விடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் தாருந்நத்வா புரோகிதரர்கள் செய்தனர். அதே காரியத்தைத்தான் நமது நாட்டில் இன்றைய மேட்டுக்குடிகளும் பத்திரிக்கைகள் வாயிலாகவும், காவல்துறையினர், நீதித் துறையினர் வாயிலாகவும் முஸ்லிம்களின் மேல் அபாண்டங்களை சுமத்துகின்றனர்.

மக்காவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த ஆரம்பக் காலக் கட்டம். மக்காவுக்கு ஒரு வியாபாரி வந்தார். மக்கத்து குரைஷிகள் அவரைத் தடுத்து சொன்னார்கள்: "நீங்கள் மக்காவுக்குள்ளே செல்லவேண்டாம். காரணம், அங்கே முஹம்மது என்பவர் புதிய மார்க்கத்தைப் பரப்புகிறார். அவர் ஓதுகிற குர்ஆனிய வசனங்களை நீங்கள் கேட்டால் உடனே மதம் மாறிவிடுவீர்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்’’ என்றனர்.
அவர் மக்காவுக்குள் செல்லவில்லை. ஆனாலும் ஊருக்குத் திரும்புகிறபோது ஒருமுறையாவது கஃபாவை வலம் வந்து விட்டு செல்லலாமே என்று நினைத்தார். அதனாலே அவர் உள்ளே செல்லும்போது குர்ஆனின் வசனங்கள் காதுக்குள் விழுந்துவிடக்கூடாது என்று காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு மக்காவிற்குள் சென்றார். அப்படி இருந்தும் சில வசனங்களை கேட்டு விடுகிறார். சில வினாடிகள் நபியவர்கள் ஓதிய குர்ஆனின் வசனங்கள் அவர் காதுகளில் விழ அந்த வினாடியே உள்ளம் நடுங்கி ''சத்தியமாக இது இறைவனின் வார்த்தைகளே'' என்று கூறி இஸ்லாமைத் தழுவுகிறார்.

முஹம்மதின் தலையை தரையில் வீழ்த்தாதவரை என் வாள் உரையில் போகாது'' என்று வீரமுழக்கம் செய்து புறப்படுகிறார்கள் உமர். ஒரு மந்திர மாற்றம் நடக்கிறது. அவர்களின் சகோதரி ஓதிய ஒரு வசனத்தைக் கேட்டதின் விளைவால் அந்த மாற்றம் ஏற்பட்டு நபியிடம் சென்று கலிமா சொல்லி நபியின் பெரும் ஆதரவாளராக திரும்புகிறார்கள்.

அது போன்ற ஒரு மாற்றம் தான் இன்று இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மனதிலும் ஏற்பட்டுள்ளது. 'குர்ஆன் வசனங்கள் தான் என்னை மாற்றியது' என்று அவர் கூறுவது முற்றிலும் உண்மை. அத்தகைய சக்தி இந்த இறை வேதத்துக்கு உண்டு.

ஒரு தினமலர் வாசகரான இந்து நண்பரின் பின்னூட்டத்தை படித்துப் பாருங்கள்....

இளையராஜாவின் பாவலர் குடும்பம் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னால் பல பிராமண குடும்பங்களை தங்களது கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மூலம் காப்பாற்றி இருக்கிறது. அந்த குடும்பத்தில் ஒருவர் வெளியேறுவது மன கஷ்டம் கொடுக்கத்தான் செய்யும். தனி மனித விருப்பம் என்பது வேறு. பொது வாழ்க்கை என்பது வேறு. இடையில் சிறிது காலம் பிராமண பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதன்படி கல்யாணம் செய்து விவாகரத்து ...பின் பெரியார். ...கடவுள் மறுப்பு கொள்கையில் ஈடுபாடு ...இப்போது புது மார்க்கம். ஆனால் ஒன்று குரான் படிப்பவர்கள், அரபி மொழி மற்றும் இசை கேட்பவர்கள் படிப்பவர்கள் அதற்கு அடிமை யாகி விடுவார்கள் என்பது திண்ணம். அவைகளுக்கு அப்பேற்பட்ட சக்தி இருப்பது உண்மை. படித்து விட்டால் மீள்வது மிக கடினம். எங்கிருந்தாலும் வாழ்க

பஞ்சு மணி

தினமலர் வாசகர் கடிதம்

மாற்று மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் குர்ஆனின் ஆளுமையை மிக அழகாக வர்ணித்துள்ளார். இதுதான் உண்மை. தினமலர் சொல்வது போல் பெண்ணுக்காக என்றால் அவரிடம் உள்ள சொத்துகளுக்கு எத்தனையோ அழகிய பெண்கள் உலகம் முழுக்க கிடைப்பார்கள். எனவே தினமலர் இனியாவது இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தினமலரின் பல வாசகர்கள் இன்று ஹிந்து பத்திரிக்கையை படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது தொடர்ந்தால் கூடிய சீக்கிரம் தினமலர் தனது சர்குலேசனை மிக அதிகமாக இழக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.
-----------------------------------------------------------

ஃபேஸ் புக்கில் நான் ரசித்த ஒரு கவிதை!

என் முப்பாட்டனை சூத்திரன்
என்றாய்

என்னை தீவிரவாதி என்றாய்

இன்னும் மூன்று தலை முறை
இந்த பூமியில்
இருந்து பார்த்து விட்டு வா

உன் பூணூல் எங்கள் வீட்டு பிள்ளைகள் கையில்
வெறும் பட்டம் விடும் நூலாக
மாறி இருப்பதை

-bharatha suriyan

Monday, February 10, 2014

யுவன் சங்கர் ராஜாவின் பிரத்யேக பேட்டி!

யுவன் சங்கர் ராஜாவின் பிரத்யேக பேட்டி!

தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:

அனுபமா சுப்ரமணியன்: இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும் விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது. அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.

அனுபமா சுப்ரமணியன்: ஒரு வதந்தி நிலவுகிறதே! டைரக்டர் அமீர் தான் உங்களின் மனமாற்றத்துக்கு காரணம் என்றும் அவர்தான் உங்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று இஸ்லாத்துக்கு மாற்றியதாக ஒரு செய்தி உலவுகிறதே!

யுவன் சங்கர்: (பலமாக சிரிக்கிறார்) நீங்கள் சொல்லும் அனைத்தும் தவறான தகவல்கள். என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. இது அவரவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். உங்களின் உள் மனதில் இறை நம்பிக்கையில் ஏற்படும் சில மாற்றங்களே தற்போது என்னுள் நடந்துள்ளது. இது தான் உண்மையும் கூட.

அனுபமா சுப்ரமணியம்: உங்கள் தந்தை இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். உங்களின் இந்த மன மாற்றத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டார்?

யுவன் சங்கர்: ஒரு மகனாக, எனது இந்த மன மாற்றத்தை முதலில் எனது அப்பாவிடம் தான் சொன்னேன். ஆம். சொன்னவுடன் அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு எனது முடிவை ஒத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக் கொண்டார். தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதையே அவர் விரும்பினார். எனது தங்கை பாவனாவிடமும், எனது அண்ணன் கார்த்திக்கிடமும் இதைப் பற்றி கூறினேன். அவர்கள் இருவரும் கூட என்னை நன்கு புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கும் எனது தந்தைக்குமிடையே இந்த மன மாற்றம் சம்பந்தமாக பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி சில காலமாக மீடியாவில் உலவுகிறது. அனைத்து செய்திகளும் தவறானவை. நானும் எனது குடும்ப அங்கத்தினர்களும் எப்போதும் போலவே சந்தோஷமாக இருக்கிறோம்.

அனுபமா சுப்ரமணியம்: ஏ ஆர் ரஹ்மானை நீங்கள் பின்பற்றுவதாக சிலர் கூறுகின்றனரே!

யுவன் சங்கர்: அவரை நான் ஏன் பின்பற்ற வேண்டும்? என்னுள் ஏற்பட்ட சில மாற்றங்கள் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது. அவ்வளவுதான்.

அனுபமா சுப்ரமணியம்: நீங்கள் மூன்றாம் முறையாக ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அதுவும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்திருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறதே?

யுவன் சங்கர்: இந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றி நான் தெளிவுபடுத்தி விடுகின்றேன். எனது நண்பர் கிருஷ்ணாவின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது மீடியாக்களால் இந்த செய்தி பரப்பப்பட்டது. எனது இஸ்லாமிய நண்பரும் அவரது மனைவியும் நானும் அந்த போட்டோவில் ஒன்றாக இருப்பதை பார்த்து இந்த வதந்தி பரப்பப்பட்டது. உடனே சிலர் அந்த போட்டோவை பத்திரிக்கையில் போட்டு நான் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக பொய்களை பரப்பி வந்தனர். இதனை பலமுறை மறுத்தும் உள்ளேன். தற்போதும் அதே மறுப்பை பதிய செய்கிறேன்.

அனுபமா சுப்ரமணியம்: 'யுவன் சங்கர் ராஜா' என்ற உங்களின் இந்த பெயரும் மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா?

யுவன் சங்கர்: இது பற்றிய செய்தியை விரைவிலேயே வெளியிடுவேன்.



அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17


ஆம். இதைத்தான் யுவன் சங்கர் ராஜாவும் 'இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று அழகாக தனது பேட்டியில் சொல்லியுள்ளார். இந்த குர்ஆன் வசனத்தின்படி ஏ ஆர் ரஹ்மானோ, யுவன் சங்கர் ராஜாவோ, மைக்கேல் ஜாக்ஸனோ யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அதனால் இஸ்லாம் எந்த வகையிலும் நன்மையை அடையப் போவதில்லை. மாறாக மாறிய அந்த நபர்கள் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொள்கிறார்கள்.

வாளால் இஸ்லாம் உலகமெங்கும் பரப்பப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் பிடித்துக் கொண்டு 'எது வேண்டும?' என்று ஒளரங்கஜேப் கேட்டதாக நமது வரலாற்று புத்தகங்களில் ஏகத்துக்கும் கதை அளந்திருப்பார்கள். அந்த கதைகள் அனைத்தும் கற்பனைளே என்பதற்கு இந்த பேட்டி மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

--------------------------------------------------------

ஹூஸைனீ எனும் அன்ஸாரீ ஒருவருக்கு கிறிஸ்தவர்களான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் இஸ்லாத்தைத் தழுவும்படி அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் தொடர்ந்தும் இருக்கப் போவதாக பிடிவாதமாக இருந்தனர். எனவே, அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவ நிர்ப்பந்திக் கட்டுமா என நபி அவர்களிடம் அவர் வினவியபோது நபியவர்கள் அவரைத் தடுத்தார்கள்.அப்போது இந்த வசனம் இறக்கப்பட்டது.

“மார்க்கத்தில் பலவந்தமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழியானது தெளிவாகிவிட்டது”
குர்ஆன்: (2:256)


எனவே எவரையும் அவரின் வறுமையையும், சிரமத்தையும், இயலாமையையும் காரணமாக்கி அதன் மூலம் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தில் இணைக்க முற்படுவது குர்ஆனின் கட்டளைக்கே மாற்றமானது என்பதை விளங்குகிறோம். இதன்படி மொகலாயர்கள் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தினம் போரிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மத மாற்றம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை அதை அவர்கள் விரும்பவும் இல்லை என்பதை விளங்குகிறோம்.





Sunday, February 09, 2014

சகோதரர் தேவேந்திர வேலன் குடும்பத்துக்கு உதவலாமே!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீது நிலவட்டுமாக!

கள்ளக்குறிச்சி வட்டம் அசகளத்தூரைச் சேர்ந்த தேவேந்திர வேலன், வயது 45 மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த தமிழர், நான்கு குழந்தைகளின் தந்தை. மனைவியும் பெற்றோர்களும் பண்ணையாள்களாக, சொற்பப் பணத்துக்குப் பண்ணை வேலை செய்கின்றனர். பிழைப்பிற்காக சவூதி அரேபியா வந்த இடத்தில் மாரடைப்பால் கடந்த 2012ம் வருடம் நவம்பர் மாதம் இறந்து விடுகிறார்.

இந்நிலையில் அவர்களின் வறுமைக் காரணமாகவும் இங்கு உதவிசெய்வோர் யாரும் இல்லாத காரணத்தாலும் அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யாமல் மனதளவில் தகனம் செய்துவிட்டு இருந்துவிட்டார்கள்.



இந்நிலையில், கேட்பாரற்ற இந்தப் பிரேதம் பற்றி இந்தியத் தூதரக அலுவலர் மூலமாக தஃபர்ரஜ் அமைப்பின் செயலாளர் ஷாஜஹானுக்கு விபரம் தெரிய வருகிறது. அவர் இந்த விபரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டதன் பேரில் பலரும் முன்வந்து உதவிசெய்ய சம்மதித்து சிலர் நேரடியாக சென்று குடும்பத்தைச் சந்தித்ததில் அவர் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதையும் கடன் கொடுத்தவர்கள் இருக்கும் இந்தக் குடிசை வீட்டையும் பறித்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதையும் அறிந்து தகவல் சொன்னார்கள்.

தற்பொழுது அவரது உடலை இம்மண்ணிலேயே தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அவரின் நான்கு குழந்தைகளை படிக்க வைப்பதற்கும் அவரின் கடனை அடைப்பதற்கும் பல நல்ல உள்ளங்கள் உதவத் தயாராக உள்ளார்கள். அவ்வகையில் நாமும் நம்மாலான உதவிகள் செய்து அவரின் குடும்பத் துயர் துடைப்போம்.

'ஒரு மனிதரை வாழவைத்தவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்தவராவார்" என்ற இறைவசனத்திற்கேற்ப இறைப்பொருத்தம் மட்டுமே நாடி இறைவனுக்காக, இக்குடும்பத்தின் துயர் களைய உங்கள் பங்களிப்பை அளித்துதவுங்கள். நமது இம்மை மறுமை வாழ்க்கை நலமும் வளமும் பெறட்டுமாக.

தகவல் உதவி

சகோதரர் அஹமத் இம்தியாஸ்

மனம் மாறிய யுவன் சங்கர் ராஜா!

மனம் மாறிய யுவன் சங்கர் ராஜா!



தனது இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடியவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் யுவன். அதன் பிறகு ஒரே ஆறுதலாக இருந்த அவரது தாயாரின் மறைவு அவரை இன்னும் சோகத்திலும் தூக்கமின்மையிலும் ஆழ்த்தியது. இவரது சிரமங்களை கேள்வியுற்ற இவரது நெருங்கிய இஸ்லாமிய நண்பர் அவரிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்பை கொடுத்து 'இதனை ஆழ்ந்து படியுங்கள்! உங்கள் மன உளைச்சல் இதில் மாறலாம்' என்று சொல்லியுள்ளார். இரவில் குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார் யுவன். படிக்க படிக்க அவரையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனம் இலேசாவதை உணர்ந்தார். நிம்மதியான தூக்கமும் அவரை ஆட்கொண்டது. அன்றிலிருந்து இஸ்லாமியனாக மாறி விடுவது என்று முடிவெடுத்து நண்பர்களின் உதவியால் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தனது பெயரை அப்துல்லாவாக மாற்றியுள்ளதாக கேள்விப்படுகிறேன். 'யுவன் சங்கர் ராஜா' என்ற பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் தொடரலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் அவர் எந்த சாதி என்று அடுத்த கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் அரபு பெயராக இருந்தால் இந்த கேள்வி எழாது. இதை அனுபவத்தில் பலமுறை நாம் பார்த்திருப்போம். 'அப்துல்லாஹ்' என்ற பெயருக்கு 'இறைவனின் அடிமை' என்று பொருள் வரும். மிக அழகிய பெயர். இறைவனுக்கு பிடித்த இரண்டு பெயர்கள் அப்துல்லா, அப்துல் ரஹ்மான். அந்த இரண்டு பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்த யுவனை வாழ்த்தி வரவேற்போம்.

தனது டிவிட்டர் தளத்தில் யுவன் கொடுத்துள்ள சில செய்திகள் கீழே!

My family supports my decision and there is no misunderstanding between me and my dad.

I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah!

Without you,I'm nothing. I love you all for supporting me all though my life. Nandri endra oru varthai pathadhu. May god bless you all.

I don't hate nobody,after all we are humans n we breathe the same air.

I know God is with me.

I don't believe in awards and rewards.I believe in being righteous and doing my work properly,rest is up to GOD.

எல்லா புகழும் இறைவனுக்கே!

குர்ஆன் ஒரு மனிதனை எந்த அளவு பக்குவப்படுத்தும் என்பதற்கு மேலே உள்ள யுவனின் ட்விட்டர் செய்திகளே சாட்சி!



இசையை பொருத்த வரையில் இஸ்லாத்தில் கூடுமா? கூடாதா? என்று அறிஞர்களிடத்தில் இரு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சவுதியிலும் அறிஞர்களிடையே 'இசை நம்மை அடிமையாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்ற கட்டுப்பாட்டோடு அனுமதிக்கும் அறிஞர்களும் உண்டு.

குடி, சூது, வட்டி, விபசாரம், திருட்டு, புறம் பேசுதல், கொலை, பொய் என்று பல தவறுகளை பட்டியலிடும் குர்ஆன் இசையைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. முகமது நபியின் சில ஹதீதுகள் இசையை தடுக்கச் சொல்லி வருகின்றன. மற்றும் சில ஹதீதுகள் இசையை அங்கீகரித்து வந்துள்ளன. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்த வகையில் இசையே கதி என்று கிடக்காமல் அதற்கு அடிமையாகி விடாமல் நமது சந்தோஷமான நாட்களில் பாடல்களை கேட்பது ஆகுமாக்கப்பட்டதாகவே எண்ணுகிறேன். இறைவனே உண்மையை அறிந்தவன்.

புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த யுவன் வழமை போலவே எல்லா மதத்தவரையும், இனத்தவரையும் அதே அன்போடு அணுக வேண்டும். உலக மக்கள் யாவருமே ஆதமுடைய மக்களே! எல்லோரையும் படைத்தது அந்த ஏக இறைவன் ஒருவனே!வெறுப்பை நீக்கி அன்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த செய்தியைத்தான் இஸ்லாமும் உங்களுக்கு சொல்கிறது. வருங்காலங்களில் இசையில் ஆபாசம் இல்லாமல் மக்களை தவறுகளிலிருந்து விலக்கி விடும் சக்தியாக உங்கள் இசை இருக்க வேண்டும். ஏ ஆர் ரஹ்மானைப் போல் உலக புகழ் பெற வேண்டும். தமிழனுக்கும், இந்தியனுக்கும், உலக மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.

'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'

-குர்ஆன் 110: 1,2,3


உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு யுவனின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17

Saturday, February 08, 2014

மோடி மஸ்தானிடம் 18 கேள்விகள்......



மோடிமஸ்தானிடம் 18 கேள்விகள்......

நேற்று வண்டலூரில் வருங்கால பிரதமர் என்று ஏகத்துக்கும் பில்டப் கொடுக்கப்படும் நரேந்திர மோடியின் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. பிரியாணிக்கும், 300 அல்லது 500 ரூபாய் பணத்துக்கும் கூட்டி வந்த கூட்டம் அது என்பது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். எவ்வளவு கூடினாலும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக எந்த கட்சிகளும் காலூன்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இனி 30000, அல்லது 40000 கூடிய இந்த கூட்டத்தை லட்சங்களாக பெருக்கி செய்திகளை தினமலரும், புதிய தலைமுறையும் வெளியிடும். எஸ்ஆர்எம் விடுதி மாணவர்களையும் பச்சமுத்து வலுக்கட்டாயமாக கூட்டத்துக்கு இழுத்து வந்ததாக ஒரு செய்தி. புதிதாக நரேந்திர மோடி எந்த செய்தியையும் இந்த கூட்டத்தில் சொல்லவில்லை. காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில்தான் குறியாக உள்ளார். தான் நாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லவில்லை. இதுவரை இவர் செய்த சில சாதனைகளை நாமும் பட்டியலிடுகிறோம். வருங்கால பிரதமராகும் தகுதி இவருக்கு உண்டா என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

1. 2004 ஜூன் 15 அன்று அகமதாபாத் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதி என பட்டம் சூட்டி 19வயது இளம்பெண் இஷ்ரத் ஜகானை மற்ற நான்கு இளைஞர்களுடன் டி.ஐ.ஜி வன்சரா என்கவுண்டர் செய்தது சட்டபடி தவறு என 2009ல் அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், 2011ல் சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழு என்கவுண்டர் நாடகத்திற்கு முன்தினமே அவர்கள் கொல்லப்பட்டதை கண்டறிந்து வெளிகொண்டு வந்தது மோடிக்கு தெரியாதா?

2. 2005 நவம்பர் 23ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்த ஷொராபுதீன் அவரது மனைவி கவுசர்பீயும் குஜராத் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு, மூன்று தினங்கள் கழித்து அகமதாபாத் அருகே துப்பாக்கியால் துளைக்கப்பட்ட ஷொராபுதீன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுவும் சட்டவிரோத என்கவுண்டர்தான். பிறகு டிஜிபி வன்சரா கிராமத்தில் கவுசர்பீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதும் மோடிக்கும் சம்பந்தம் இல்லையா?

3. இந்த என்கவுண்டர் படுகொலைகளை நடத்திய டிஜிபி வன்சரா இப்போது சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து இந்த கொலைகளை முதல்வர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி கொடுத்த பிறகுதான் செய்தோம் என சொன்னது மோடியின் லட்சணத்தை காட்டவில்லையா?

4. குஜராத் மாநிலம் பிரிக்கப்பட்ட 1960 முதலே ஜவுளி, உரம், இரும்பு போன்றவை அங்கு பிரபலம். பிஜேபி கட்சியே துவக்கபடாத காலத்தில் துவக்கப்பட்ட குஜராத் மாநில பெட்ரோலிய கழகமும், மோடி பிறக்காததன் முன்பே துவக்கபட்ட அமுல் கம்பெனியும் குஜராத் வளர்ச்சியில் மக்களுக்கு சேவை செய்வதும், மோடியின் ஆட்சிகாலத்தில் புதுப்புது முதலாளிகள் வளர்ந்ததும், அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்ததும் யாருக்கும் தெரியாது என நினைக்கிறாரா மோடிஜி?

5. எஸ்ஸார், ரிலையன்ஸ், எல்.டி, போர்டு இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தண்ணீர், மின்சரம், சாலை வசதி ஆகியவை கொடுக்கப்படுகிறது. மோடிக்கு நெருக்கமான அம்பானி குழுமத்திற்கு 7500 கோடி மதிப்புள்ள 5 கோடி சதுர மீட்டர் நிலத்தை வெறும் 160 கோடிக்கு கொடுத்து கார்ப்பரேட் சேவை செய்ததும், அந்த இடத்தை அந்நிறுவனம் பிளாட் போட்டு விற்பனை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான். ஆக மோடியின் குஜராத் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான மாடல் என்பது சரிதானா?

6. இரண்டே ஆண்டுகளில் இப்படி பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு மோடி காட்டிய சட்டவிரோத சலுகைகளால் அங்குள்ள மக்களுக்கு சேரவேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கஜானாவில் சேரவில்லை என மத்திய தணிக்கைக்குழு சுட்டிகாட்டியதை தீர்க்கதரிசியான மோடியின் கள்ள மவுனம் எதைக் காட்டுகிறது?

7. கடந்த 8 ஆண்டுகளில் குஜராத்துக்கு 87 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு பெற்றதாக மோடி புளுக, இல்லை இக்காலத்தில் வந்த முதலீடு வெறும் 720 கோடிதான் என அந்த புளுகு எட்டே நாளில் ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் வெளுத்ததை காவிக் கூட்டம் சொல்ல மறந்தது ஏன்?

8. நர்மதா ஆற்றின் தண்ணீரையும், நிலத்தடி நீரையும் பெருமுதலாளிக்கு தாரை வார்க்கும் மோடி அரசை எதிர்த்து அங்கு விவசாயிகள் போராடுவதையும், அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகளையும் ஊடகங்கள் மூடி மறைப்பதும், பல லட்சம் விவசாயிகள் பலனடையும் சர்தார் சரோவர் அணை திட்டத்தை அமலாக்காமல் ஏமாற்றுவதை எழுதாமல் இருப்பதும் மோடி அரசின் விளம்பரங்களுக்காகதானே?

9. ஆண் பெண் விகிதாசாரத்தில் மிகவும் மோசமான இடத்தில் குஜராத் இருக்கிறது. 1000க்கு 919 பெண்களே உள்ளனர். ஊட்டசத்து குறைந்த பெண்கள் நிறைந்த மாநிலமும் இதுவே. இதற்கு மோடி சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நகர் புறத்து பெண்கள் சாப்பாட்டைவிட மேக்கப்பில்தான் கவனம் செலுத்துகிறார்கள் அதற்குதான் செலவு செய்கிறார்கள்” என்று நக்கல் அடித்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது பல்டி அடித்ததும் மோடியின் குரூர புத்தியின் ஒரு துளி அல்லவா?

10. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மின்மிகை மாநிலமாய் இருக்கும் குஜராத்தில் இன்றுவரை 11 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் இருகிறது. அதுமட்டுமா 1 கோடியே 20 லட்சம் குடும்பங்களில் 63 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருப்பதும், பல லட்சம் மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் அலைவதும் வளர்ச்சியின் குறியீடா மிஸ்டர் மோடி?

11. மனுநீதியை அமலாக்க ஆர்.எஸ்.எஸ் கொடுத்த பயிற்சியை குடிநீர் கொடுப்பதில்கூடவா காட்டவேண்டும். பாவ்லா தாலுகா தன்வாடா கிராமத்தில் எந்த எந்த சாதியினருக்கு எப்போது தண்ணீர் விடப்படும் என பம்பு செட்டு சுவற்றில் பட்டியல் எழுதிவைக்கும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. கடைசியாக தண்ணீர் இருந்தால் தலித் மக்களுக்கு கிடைகும் நிலைதான். வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இதை ரசித்தபடியே மோடி பவணி வருவது நியாயமா?

12. “பூரண மதுவிலக்கு அமலாக்கப்பட்ட குஜராத்தில் போன் செய்தால் சாராயம் வீடுதேடிவரும்” இது தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.. சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சியில் குழாய் மூலம் சாரயம் விற்றவர்கள் இப்போது டோர் டெலிவரி செய்கிறார்கள். மோடி அவர்களே தாங்கள் வித்தியாசமான தலைவர்தானா?

13. வறுமை ஒழிப்பில் குஜராத் மிகவும் பின்தங்கி இருக்கிறது. பழங்குடியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் வறுமையை ஒழிப்பதிலும் நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலம் குஜராத்தான். குழந்தை இறப்பை தடுப்பதில் தோல்வி, பொதுவிநியோக முறை சீரழிந்த நிலை.மக்களின் சுகாதார நலன் புறக்கணிக்கப்படுவது அதாவது கிராமப்புறத்தில் 67 சதவீத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை போன்றவை திட்ட கமிஷன் அறிக்கையின் ஆதாரங்கள். வெறும் வாய் சவடால் மூலம் இதை மூட முயற்சிப்பது நியாமதானா மோடி?

14 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு 2 லட்சம் வேலை வாய்ப்புகளை வெட்டிச் சுருக்கிவிட்டது., அனைத்து துறைகளிலும் 2500 ரூபாய் சம்பளத்தில் அத்துக்கூலிகளாக இளைஞர்களை அலைய விடுவதுதான் இந்தியாவுகான முன் மாதிரியா?

15. ஐசோதாபென் என்கிற பெண்ணை உங்களுக்கு தெரியுமா? 14 வயதான சிறுமியை 17 வயதில் திருமணம் செய்த தாங்கள் இன்றுவரை அவரை நிம்மதியாய் வாழவிடாமல், கண்காணிப்புடன் வெளியே பேசவிடமல் வைத்திருப்பது யாருக்குத் தெரியும்? ஓப்பன் என்கிற பத்திரிகை இச்சம்பவத்தை வெளியே சொல்லும் வரை. ஏனெனில் நீங்கள் பிரம்மச்சாரி என்ற பிம்பத்தை கட்டிக்காத்து வருகிறீர்கள் அப்படிதானே? தன்னை நம்பிவந்த பெண்ணை காப்பாற்றாத எந்த ஒரு மனிதனும் தன் நாட்டை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எப்படி வரும்?

16. ஆசிஷ் கேத்தானை தெரியுமா மோடி? எப்படி மறப்பீர்கள்! உங்கள் அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனையும், பாபு பஜ்ராங்கிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்த தெகல்கா நிருபர் அவர்.

2002 ல் நீங்கள் செய்த இன அழிப்பில் உங்கள் கையில் படிந்த இரத்த கரையின் சாட்சி அவர். நீங்களும் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது. ஆகவே கார்ப்ரேட் கைகளில் தஞ்சம் அடைந்து, அவர்களுக்கு சேவகம் புரிந்து, இந்த நாட்டின் உட்ச பதவியை அடைய கனவு காண்கிறீர்கள். கனவு காண்பது அனைவருக்கும் உரிமை! உங்களுக்கு என்ன தடை?

17. நவீன ஊடகங்களான இணையத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கூலிப்பட்டாளத்தை வைத்து உங்களை பின்தொடர்பவரகள் 18 லட்சம் பேர் என ஆகாசபுளுகை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தீர்கள், கூலிக்கு மார் அடிக்கும் ஐ.டி கம்பெனிகளை நீங்கள் வாடகைக்கு வைத்துதான் இணைய உலகை ஏமாற்றுகிறீர்கள் என்பதை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திவிட்டது. உண்மையை ஒருநாளும் நீங்கள் நம்பப் போவதில்லையா மோடி அவர்களே?

18 உங்கள் காவி கட்சியில் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு தொலைகாட்சியின் மூலம் லஞ்சம் வாங்கியது பழைய சம்பவமாக இருக்கட்டும். சமீபத்தில் லைம்டோன் சுரங்க வழக்கில் 54 கோடி கொள்ளையடித்த பாபு போக்கிரியாவுக்கு மந்திரி பதவி கொடுத்ததாகட்டும் எதற்காகவாவது வெட்கப்பட்டிருக்கிறீர்களா?

சொல்லுங்க மோடி... சொல்லுங்க!

(கேள்விகளுக்கு உதவிய ஆதார நூல்: நரேந்திர மோடி நாமம் - கோவி.லெனின்)

http://natputanramesh.blogspot.in/2013/12/blog-post.html