Followers

Saturday, May 02, 2015

குற்ற பின்னணி உள்ளவர்களை மணப்பது சம்பந்தமாக!

சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரும் கோடீஸ்வரர் ஃபஹத் சாத் அல் ஜோஹானி! ஏற்கெனவே மூன்று மனைவிகளோடும் குழந்தைகளோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். நான்காவதாக திருமணம் முடிக்கவும் முடிவு செய்துள்ளார். அந்த அளவு செல்வமும் உடல் ஆரோக்கியமும் அவருக்கு இருக்கிறது. அவ்வாறு நான்காவது முறையாக திருமணம் முடிக்கும் போது சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு குற்றவாளி பெண்ணை மணமுடிக்க முடிவு செய்துள்ளார். சமூகத்தில் பலரும் இதுபோன்ற செயலை செய்ய முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

'பாவம் செய்த மனிதர்களை படைத்த இறைவனே மன்னிப்பதாக குர்ஆனில் சொல்லும் போது சக மனிதர்களை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது. ஏதோ ஒரு மன அழுத்தத்தில் குற்றவாளிகளாகிப் போன அவர்களை சமூகத்தில் இரண்டறக் கலக்கச் செய்வது நம் அனைவரின் கடமையாகும். நாம் அவர்களை குற்றவாளிகள் என்று ஒதுக்கினால் விடுதலைக்கு பிறகு திரும்பவும் பழைய தொழிலுக்கே சென்று விடுவர். எனவே சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் குற்றப் பிண்ணனி உள்ள மணமகன், மணமகளை தேர்வு செய்து சமூக பணியாற்ற வேண்டும். எனது இந்த யோசனையை மார்க்க அறிஞர்களும், அரசு அதிகாரிகளும் முழு மனதாக ஒத்துக் கொண்டனர். துரித நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நமது இந்தியாவில் குற்ற பின்னணி உள்ள ஆண் பெண் குறைந்தது 20 சதமாவது இருக்கும். அரசு இவ்வாறு குற்றப் பின்னணி உள்ளவர்களை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பல உதவிகளை வழங்கி இது போன்ற திருமணங்களை ஊக்குவிக்கலாம். குற்றங்கள் மிகக் குறைவாக நடக்கும் சவுதி நாட்டவரே இது பற்றி கவலைப்படும் போது குற்றங்களே சிலரது வாழ்வாகிக் போன நம் நாட்டுக்கு இது போன்ற ஒரு மனநிலை மிக அவசியமாகும்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
28-04-2015

No comments: