நம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்
கம்மாளன் திறன் என்றாலும் கற்பாவை அதுவென்றாலும்
அம்மையே உன்னை அல்லால் அணுவும் அசையாதென்றே
நம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்
கை கூப்பி நிற்பான் அவன் கண்ணீர் உகுப்பான்
கொய்தோடி மலர்கள் அவள் கோயிலுக் களிப்பான்
வையமெல்லாம் பார்க்க வாயார அவனை வாழ்த்த
உய்விக்க வெண்டும் இன்றே உன்னடியே துணை என்றே
நம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்
நீ இருக்கையிலெ என் தாய் எதற்கென்பான்
உன் கோயில் இருக்கையில் என் குடிசை ஏன் என்பான்
கோயிலில் போயப் படுத்தான் குடும்பத்தையும் விடுத்தான்
ஆயபண்ணே படித்தான் அன்னையே துணை என்றே
நம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்
இரவினில் எழுந்தான் கோயில் எங்கும் திரிந்தான்
கருவறை நுழைந்தான் நகை கண்டே விழைந்தான்
திருத்தாலி கழுத்தில் கண்டான் திருமணி முடியும் கண்டான்
திருப்பதக்கம் புரளும் திருமார்பின் ஒளியும் கண்டான்
நம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்
(தன்) வேட்டியை அவிழ்த்தான் எதிர் போட்டு விரித்தான்
பூட்டிய நகைகள் கழற்றிப்போட்டுக் குவித்தான்
காட்டுக்கேன் மலர் ஓடை? கல்லுக்கேன் பொன்னாடை
கேட்டுக் கொண்டே நொடிக்குள் கேளாத அவள் இடுப்பில்
நம்பிக் கை வைத்தான். அவள் மேல் நம்பிக்கை வைத்தான்.
நம்பிக்கை வைத்தார் என்று நம்பிக் கை வைத்தான்
தம்பி கை வைத்தான் எனினும் தாய் கண் வைத்தாளா?
கம்பி நீட்டினான் அன்றோ கை வைத்த இடம் ஒன்றோ
நம்பாதார் நம்பிக்கையில் நம்பிக்கை வைத்தல் நன்றோ?
நம்பிக்கை வைத்தான் அவள்மேல் நம்பிக் கை வைத்தான்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்ற பெயர் உண்மையிலேயே இவருக்கு சாலப் பொருந்தும் அல்லவா!
hi nanbarea...
ReplyDeleteunggal pakkam arumayaagae irukkinrathu.
naanu oru kavithi priyan.
paghirnthu kollae
www.kavithaikalham.blogspot.com