Thursday, August 31, 2006

மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!

மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'

17 : 37 - குர்ஆன்

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.

மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் முன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.

மலைகளின் உயரத்தை....

உலகின் மிக உயரமான மலை இமய மலை ஆகும். இம் மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இமய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட்டான். ஆனால் அந்த உயரத்திற்கு பூமியை துளையிட்டு மனிதனால் செல்ல முடியுமா என்றால் முடியாது என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. வலைப் பக்கத்திலேயே ஒரு சிலர் இறைவனை விட மனிதன் சக்தி படைத்தவன் என்று நாத்திக வாதம் பேசுவதைப் பார்க்கிறோம். அப்படிப் பட்டவர்களைப் பார்த்து இறைவன், 'இது போன்று ஆணவத்தில் பிதற்றி திரியாதே! உன்னால் பூமியைப் பிளந்து மலைகளின் அளவை அடையவே முடியாது' என்று எச்சரிக்கின்றான்.

விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் உயரத்திற்கு போக முடியாது என்று அடித்துச் சொல்கிறது.

தன் இனத்தை விட மற்ற இனம் தாழ்ந்தது என்று இன்றும் எழுதியும் பேசியும் வருபவர்களைப் பார்க்கிறோம். அதேபோல் நான் பெரும் சிந்தனையாளன், நான் இந்த நாட்டின் அதிபதி, நான் பெரும் கோடீஸ்வரன் என்றெல்லாம் இறுமாப்போடு உலகில் வலம் வருவோரையும் இன்றும் பார்க்கிறோம். இது போன்ற எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட குர்ஆனிய வசனம் அமைந்துள்ளது.

நீ வானத்துக்கு மேலே போகலாம், கணிணித் துறையினால் உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வரலாம். ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. எனவே வீண் பெருமை பேசி கர்வத்துடன் உலகில் நடக்காதே என்பது இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம். அதே போல் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு சொன்ன இந்த கருத்து இன்றும் இனி என்றும் மெய்ப்பிக்கப் படுவதால் இது நம்மைப்படைத்த இறைவனின் வார்த்தைதான் என்ற முடிவுக்கும் வருகிறோம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

29 comments:

  1. varughaikku nandri Mr kadaisi pakkam.

    suvanappiriyan

    ReplyDelete
  2. Thanks for sharing, waiting for more :)

    ReplyDelete
  3. thanks for your comments Mr Pavan pictures.

    Suvanappiriyan

    ReplyDelete
  4. சுவனப்பிரியன் உங்களுடைய பல பதிவுகளை மௌனமாக படித்து வருகின்றேன், இந்த பதிவிற்கு பதிலாக இந்த சுட்டியை படியுங்கள் http://ezhila.blogspot.com/2006/09/blog-post_115836346972707202.html

    உலகில் மாறாதது எதுவுமில்லை, எந்த மதமும், எந்த போதனைகளும், எந்த ஒழுக்க குறியீடுகளும், எந்த நியாயங்களும் அந்த அந்த காலகட்டத்திற்கு அந்த அந்த மக்களுக்கு பொறுத்தமாக இருக்கும், ஆனால் அது தான் எல்லா மனிதர்களுக்கும் எல்லா நேரத்திற்கும் எல்லா இடத்திற்கும் சரி என்பதில்லை...

    மற்றபடி உங்கள் பதிவுகள் நிறைய தகவல்கள் தருகின்றன.

    ReplyDelete
  5. திரு எழிலுக்கு!

    // "'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.' 17 : 37 - குர்ஆன் " என்று ஜனாப் முகம்மது நபிகள் கூறியிருக்கிறாராம்.//

    தாங்கள் முகமது நபி கூறியதாக சொல்லியிருப்பது தவறு. குர்ஆன் முகமது நபியின் வார்த்தை அல்ல. அது உங்களையும் என்னையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

    // மிகவும் ஆழமாக போடப்பட்ட துளையின் ஆழம் 12,262 மீட்டர்கள். அதாவது சுமார் 12 கிலோமீ//

    அடுத்து நான் சொல்ல வந்தது சந்திரனுக்குப் போன மனிதன் உயரமான மலைகளின் உயரத்திற்கு பூமியை பிளந்து அங்கு அவன் செல்ல முடியுமா? என்பதுதான். நீங்கள் சொல்லும் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த செய்தி இயந்திரங்களின் துணை கொண்டு துளையிட்டுச் செல்வதைத்தான் குறிக்கிறது. குறிப்பிட்ட அந்த இடத்தை மனிதர்கள் அடைந்தார்கள் என்ற விபரம்இல்லை.

    மேலும் திருவடியான் கூறியது போல் கடல்களின் அதிசயங்களை இன்னும் நாம் முழுமையாக கண்டறியவில்லை. அங்கே புதைந்து கிடக்கும் மலைகளையும் அவற்றின் உயரங்களையும் துல்லியமாக நாம் இன்னும் கணக்கிடவில்லை. ஏன் பூமியிலேயே இன்னும் மனிதனின் கால் தடம் பதிக்காத இடங்கள் இன்னும் எத்தனையோ உண்டு. அங்குள்ள மலைகளின் அளவைப் பற்றிய அறிவு இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.எனவே மேற்கண்ட ஆய்வுகள் வெளியாகும் பட்ஷத்தில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம். இறைவனே மிக அறிந்தவன்.

    //ஜுவனப்ரியம் ஒரு மெண்டல் கேசு. அதப்போயி ஸீரியசா எட்துக்கினு...//

    பூமிப்பிரியன்!

    உலகில் உள்ள மனிதர்கள் அனைவருமே சில நேரங்களில் மெண்டல்தான். சிலருக்கு ஐந்து சதவீதம், சிலருக்கு பத்து, பதினைந்து என்று அவரவர்களின் வேலை, நடவடிக்கைக்குத் தக்கவாறு மாறுபடும். ஐம்பது சதவீதத்துக்கு மேல் போனால்தான் அவன் மற்றவருக்கு பிரச்னையாகிறான். எனவே மூளை என்று ஒன்று இருந்தால் அவன் ஏதாவது ஒரு விதத்தில் மெண்டலாக இருப்பது இயற்கை. அந்த மூளை இல்லாத தாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டாமே :-))

    ReplyDelete
  6. அசலமோன்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. அன்பு இணைய நண்பர்களுக்கு!

    என்னுடைய உறவினர்கள் குடும்பத்தோடு மெக்கா புனித யாத்திரைக்கு சவூதி வந்திருந்ததால் அவர்களோடு இந்த ஒரு வாரம் சென்று விட்டது. எனவே இணையத்தின் பக்கம் வருவதற்கு நேரமில்லாமல் இருந்தது. விருந்தினர்கள் மெக்கா சென்று விட்டதனால் இனி வழக்கம் போல் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வோம்.

    சுவனப் பிரியன்.

    ReplyDelete
  8. //மிகவும் ஆழமாக போடப்பட்ட துளையின் ஆழம் 12,262 மீட்டர்கள். அதாவது சுமார் 12 கிலோமீ//

    சில நண்பர்கள் மூலம் அறிந்த ஒரு தகவல்: எண்ணை எடுப்பதற்காக பூமியில் துளையிடப்பட்டு இறக்கப்படும் குழாய்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே செங்குத்தாக இறங்கும். அதன்பிறகு அது பக்கவாட்டில் திசை மாறி செல்வதை கட்டுப்படுத்த இயலாது. (அதனால்தான் சதாம் உசேன் ஈராக்கின் எல்லப்பகுதியில் அமைத்த எண்ணைக் கிணற்றின் குழாய்கள் குவைத்தின் எண்ணைக் கிணற்றுக்குள் ஊடுருவியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்)

    மேற்கண்ட தகவல் உண்மையென்றால், 12 கிமீ நீளமுள்ள குழாய்கள் பூமிக்குள் இறக்கப் பட்டிருந்தாலும் அவை 12 கிமீ ஆழத்திற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை.

    ReplyDelete
  9. இறைநேசன் அவர்களே,

    நெடுநாள் கழித்து பதிய ஆரம்பித்திருக்கிறீர்கள் போலும். வந்தவுடன்

    சராமாரியாக பதிவுகள் விழுகின்றனவே.

    தங்களுடைய கீழ்க்கண்ட பதிவில் என்னுடைய சந்தேகம் ஒன்று

    கேள்வியாகவே இருக்கின்றது. தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்:

    http://suvanappiriyan.blogspot.com/2006/07/blog-

    post_30.html

    ReplyDelete
  10. சுவனப்பிரியன்,

    இங்கே குறிக்கப்பட்ட வசன்ம் பற்றி, சில கேள்விகள் நண்பர் எழிலின் பதிவில் விவாதிக்கப்படுகின்றன. அனைவரும் அறிந்து கொள்ள மூல வசனத்தையும் அதன் பொருளையும் பின் வருமாறு அங்கே பதிந்துள்ளேன்:


    இதுதான் அந்த வசனத்தின் மூலம். வசனத்தின் பிற்பாடு, இரண்டாக பிரிந்து நிற்பதை காண்க. இதனுடைய பொருளை உணர்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

    Tamil:

    17:37 மேலும் நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியை (சிதிலமாக) பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

    English:

    17:37 And walk not on earth with haughty self-conceit: for, verily, thou canst never rend the earth asunder; nor canst thou ever grow as tall as the mountains!

    Arabic:

    17:37 Wala tamshi fee alardi marahan innaka lan takhriqa alarda walan tablugha aljibala toolan

    ReplyDelete
  11. குழலி!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நீங்கள் கொடுத்த சுட்டியைப் படித்தேன். அதற்கான விளக்கமும் பின்னூட்டமாக கொடுத்துள்ளேன். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பூமியை துளையிட்டு பிளந்து சென்று அங்கு மனிதன் தங்க முடியுமா? என்ற வார்த்தையை சேர்க்காமல் விட்டது என் தவறு. குர்ஆன் சொல்லும் கருத்தும் அதுதான். குர்ஆன் கூறும் கருத்துப்படி நான் மொழி பெயர்த்து இருந்தால் உங்களுக்கும் அந்த சந்தேகம் வந்திருக்காது.

    //உலகில் மாறாதது எதுவுமில்லை, எந்த மதமும், எந்த போதனைகளும், எந்த ஒழுக்க குறியீடுகளும், எந்த நியாயங்களும் அந்த அந்த காலகட்டத்திற்கு அந்த அந்த மக்களுக்கு பொறுத்தமாக இருக்கும், ஆனால் அது தான் எல்லா மனிதர்களுக்கும் எல்லா நேரத்திற்கும் எல்லா இடத்திற்கும் சரி என்பதில்லை...//

    நீங்கள் சொல்லும் வாதம் மனிதர்களின் சட்டங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். அரபியர்களுக்கு போடும் சட்டத்தை இந்தியர்கள் பின் பற்ற முடியாது. அதே போல் ஆப்ரிக்கர்களுக்கு இடும் கட்டளைகள் அமெரிக்கர்களுக்கு பொருந்தாது. அதே போல் சுதந்திரம் வாங்கிய போது நம் இந்திய அரசு போட்ட சட்டங்கள் வருடா வருடம் நம் வசதிக்கேற்ப மாற்றப் பட்டு வருகின்றன. இது அவசியமும் கூட.

    ஆனால் குர்ஆனிய சட்டங்கள் என்பது இறைவன் புறத்திலிருந்து வந்தவையாகும். உண்மையில் அது இறைவன் புறத்திலிருந்து தான் வந்தது என்பது உண்மையானால் அது எல்லா நாட்டு மக்களுக்கும், எல்லா காலத்திலும் பொருந்தி வர வேண்டும். அப்படி பொருந்தி வர வில்லை என்றால் அது இறைவன் புறத்திலிருந்து வர வில்லை என்று சொல்லி விடலாம். நீங்கள் குர்ஆன் முழுவதையும் ஆராய்ந்து பாருங்கள் அதில் ஒரு வசனம் இந்த காலத்துக்கு இந்த நாட்டுக்கு பொருந்தாது என்று எடுத்துக் காட்டுங்கள். அப்பொழுது உங்கள் வாதத்தை நான் ஒத்துக் கொள்கிறேன்.

    //மற்றபடி உங்கள் பதிவுகள் நிறைய தகவல்கள் தருகின்றன.//

    பாராட்டுக்கு நன்றி! உங்களைப் போன்ற நண்பர்களோடு கலந்துரையாட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த அந்த இறைவனுக்கு என் நன்றியை முதற்கண் கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  12. எல்லாமே மாறித்தான் ஆகவேண்டுமென்று அடம் பிடிப்பவர்களும் அறிய வேண்டிய செய்தி: 'அடிப்படையாக இருக்கும் எதுவும் மாறாது'. உதாரணமாக 1+1 = 2 என்பது ஆதாம் காலத்திலும் அஃதே. இன்றைய பில்கேட்ஸ் காலத்திலும் அங்ஙனமே.

    எது அடிப்படை என்பதை புரிந்துக்கொள்வதில் தான் கருத்து வேறுபாடுகளும் வீம்புகளும் காணப்படுகின்றன.அதுவும் ஒரு அடிப்படையான நியதியே. ஏனெனில் அப்போது தான் 'பிரச்னைகள்' பிழைக்க முடியும்.

    ReplyDelete
  13. சல்மான்!

    //இதுதான் அந்த வசனத்தின் மூலம். வசனத்தின் பிற்பாடு, இரண்டாக பிரிந்து நிற்பதை காண்க. இதனுடைய பொருளை உணர்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.//

    நான் அந்த பதிவை சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீனின் தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து எடுத்து எழுதினேன். அவருடைய மொழி பெயர்ப்பில் நான் எழுதிய வகையில் தான் அர்த்தப் படுத்தப் பட்டிருக்கிறது. அது தவறு என்றால் இது வரை மற்றவர்களால் சுட்டிக் காட்டப் பட்டிருக்கும். அது அல்லாமல் சவூதி அறிஞர்களிடமும் இது பற்றி விளக்கம் கேட்டுள்ளேன். உங்கள் கருத்துதான் மேற் சொன்ன வசனத்துக்கு என்று இவர்களும் சொன்னால் உடன் திருத்தம் வெளியிட்டு தவறை திருத்திக் கொள்கிறேன். இது போன்ற ஆராய்ச்சிகளெல்லாம் குர்ஆனில் இதை விட அதிகமாக நடை பெற வேண்டும். வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. இப்னு பஷீர்!

    //மேற்கண்ட தகவல் உண்மையென்றால், 12 கிமீ நீளமுள்ள குழாய்கள் பூமிக்குள் இறக்கப் பட்டிருந்தாலும் அவை 12 கிமீ ஆழத்திற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. ம்யூஸ்!

    //சந்தேகம் ஒன்று கேள்வியாகவே இருக்கின்றது. தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்://

    அது சந்தேகம் அல்ல! முகமது நபியைப் பற்றி கற்பனையாக (கற்பனை என்று நீங்களே ஒத்துக் கொண்டது) ஒரு கதையை எழுதி பின்னூட்டமாக இட்டு பிரசுரிக்க சொன்னால் நான் எப்படி வெளியிடுவது? ஆதார பூர்வமாக குற்றச் சாட்டுகளைக் கூறுங்கள். அவசியம் பிரசுரித்து என்னால் முடிந்த பதிலையும் தருகிறேன்.

    ReplyDelete
  16. முதல் வருகைக்கும் தருத்துக்கும் நன்றி திரு கருத்து அவர்களே!

    -சுவனப்பிரியன்

    ReplyDelete
  17. /./
    சுவனப்பிரியன் said...
    சல்மான்!

    //இதுதான் அந்த வசனத்தின் மூலம். வசனத்தின் பிற்பாடு, இரண்டாக பிரிந்து நிற்பதை காண்க. இதனுடைய பொருளை உணர்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.//

    நான் அந்த பதிவை சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீனின் தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து எடுத்து எழுதினேன். அவருடைய மொழி பெயர்ப்பில் நான் எழுதிய வகையில் தான் அர்த்தப் படுத்தப் பட்டிருக்கிறது. அது தவறு என்றால் இது வரை மற்றவர்களால் சுட்டிக் காட்டப் பட்டிருக்கும். அது அல்லாமல் சவூதி அறிஞர்களிடமும் இது பற்றி விளக்கம் கேட்டுள்ளேன். உங்கள் கருத்துதான் மேற் சொன்ன வசனத்துக்கு என்று இவர்களும் சொன்னால் உடன் திருத்தம் வெளியிட்டு தவறை திருத்திக் கொள்கிறேன். இது போன்ற ஆராய்ச்சிகளெல்லாம் குர்ஆனில் இதை விட அதிகமாக நடை பெற வேண்டும். வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

    /./

    சல்மான் சொல்வது உண்மை மாதிரி தான் இருக்கு


    http://www.tamilislam.com/tamilquran/The_Children_of_Israel.htm


    ஜான் டிரஸ்ட் நிறுவனம் வெளியீடு
    மற்றும் பல..

    ReplyDelete
  18. Sinnapulla!
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    இந்த வசனம் சம்பந்தமாக இன்னும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வில்லை. அறிஞர்களின் கருத்தை தெரிந்து கொண்டு பிறகு என்விளக்கத்தை வெளியிடுனிறேன.

    ReplyDelete
  19. /./
    சுவனப்பிரியன் said...
    Sinnapulla!
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    இந்த வசனம் சம்பந்தமாக இன்னும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வில்லை. அறிஞர்களின் கருத்தை தெரிந்து கொண்டு பிறகு என்விளக்கத்தை வெளியிடுனிறேன.
    /./

    தாங்கள் இந்த லிங்கை அவசியம் பார்த்து விட்டு எனக்கு தனி மெயில் இடவும் இங்கு விவாதிக்க வேண்டாமே

    http://www.islamkalvi.com/media/mujib7/index.htm



    என்னுடைய மெயில் :infoanony2000@yahoo.com

    ReplyDelete
  20. நண்பர்கள் சலமான், சின்னபுள்ள, எழில் ஆகியோருக்கு!

    உங்களின் பின்னூட்டங்களைப் பார்த்தவுடன் எனக்கும் ஒரு வித சந்தேகம் ஏற்பட்டு குர்ஆனை மொழி பெயர்த்த சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் சொல்வது, ' 'வலன்' என்ற அரபி பதம் வருவதால் மலைகளையும், பூமியையும் சேர்க்கும் விதமாகத்தான் இறைவன் அந்த வார்த்தையை பயன் படுத்துகிறான். இதற்கு முன்னால் மொழி பெயர்த்தவர்களின் பொருள்படி பூமியை பிளந்து விட முடியாது, மலையளவு உயர்ந்து விட முடியாது என்றால் இன்று பூமியை மனிதன் பிளக்கிறான். மலையின் உச்சியையும் அடைந்து விட்டான். இதன்படி குர்ஆனின் வார்த்தை பொய்யாகிறது. எனவே அரபி இலக்கணப்படி 'பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தை அடையவே மாட்டாய்' என்று மொழி பெயர்ப்பது தான் சரியான மொழி பெயர்ப்பாகும்.' என்கிறார்.

    மேலும் சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன் கூறும் போது, 'தென் ஆப்ரிக்காவில் உள்ள தங்க சுரங்கத்தில் மனிதன் இதுவரை மூன்று கிலோ மீட்டர் வரை நெருங்கி விட்டான். இதற்கு மேல் செல்வது மிகவும் சிரமம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஏனெனில் பூமிக்கடியில் உள்ள வெப்பம், எரிமலைக் குழம்பு, தண்ணீர் போன்ற எத்தனையோ குறுக்கீடுகள் பூமிக்கடியில் உள்ளது. எனவே ஒன்பது கிலோ மீட்டர் வரை செல்வது என்பது முடியவே முடியாது' என்று அடித்துச் சொல்கிறார்.

    எனவே நண்பர் எழில் கூகுளில் பார்த்த தூரம் மனிதன் சென்ற தூரம் கிடையாது. இயந்திரங்களினால் தான் மனிதன் பன்னிரண்டு கிலோ மீட்டர் வரை சென்றுள்ளான். இனி வரும் காலங்களிலும் மனிதனால் ஒன்பது கிலோ மீட்டர் தூரத்தை அடையவே முடியாது என்று நம்மால் அடித்து கூற முடியும். இதன் மூலம் இறைவனின் வாக்கு பொய்யாகாது என்பது மேலும் உறுதியாகிறது.

    மேலும் சின்னபுள்ள கொடுத்திருந்த இஸ்லாம் கல்வி. காம் தளத்தின் சுட்டியைப் பார்த்தேன். மொழி பெயர்ப்பில் ஏதும் தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பி,ஜே யிடமே நேரிடையாக கேட்பதை விட்டு விட்டு இது போல் பதிவு போடுவதால் சம்பந்தப் பட்டவர்கள் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்? என்பதை சின்னபுள்ள விளக்குவாரா?

    ReplyDelete
  21. நல்லவன்!
    //சுவனப்பிரியனும், திருவடியானும் அப்படிப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களா? இவர்களுக்கு அரபி மொழி பாண்டித்யம், இஸ்லாமிய வரலாற்று ஆய்வு போன்றவை உண்டா?//

    நான் என்னை அனைத்தும் அறிந்த அறிஞன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே! யாருமே அறிஞனாக பிறப்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் கற்றுக் கொள்ளும் ஆர்வம் தான் ஒவ்வொரு துறையிலும் ஒருவரை அறிஞனாக்குகிறது. இறை வாக்கை ஆராய்ந்து அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வதில் தவறொன்றும் இல்லையே!

    அனானி!

    //நீங்க எல்லாம் ஏமாந்துடுவீங்கன்னு நினைச்சு சொன்னாரு.நீங்க எல்லாம் இவ்வளவு புத்திசாலியா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா சொல்லிருக்க மாட்டாரு:-D//

    நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. நண்பர் எழிலை உண்மையிலேயே பாராட்டுகிறேன். எந்த ஒரு செய்தியையும் ஆராய்ந்து பார்த்துதான் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒன்பது கிலோ மீட்டர் அளவுக்கு மனிதர்கள் செல்ல முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

    ஞானபாண்டியன்!
    //"இறைவனின் வார்த்தைகள" என்று சுவனப்பிரியன் சொல்லிவிட்டு திருவடியான், சுவனப்பிர்யன் என்று ஆளுக்காள் மாற்றி மாற்றி எழுதுகிறார்கள்.

    இந்த லட்சணத்தில், பைபிள் வார்த்தைகளை யூதர்கள் மாற்றிவிட்டார்கள் என்று குரானில் சொல்கிறது என்று சுவனப்பிர்யன் குறைப்பட்டுக்கொள்கிறார்//

    குர்ஆன் என்பது இறைவனின் வார்த்தை! அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு வரலாறைச் சொல்லும். அதில் மக்களுக்கு படிப்பினையும் இருக்கும். மொழி பெயர்ப்பில் ஏற்படும் தவறுகள் மூல மொழியை ஒத்துப் பார்த்தலின் மூலம் சரி செய்யப் படும். எனவே தவறு மனிதர்களிடத்தில்தான் ஏற்படும் இறை வாக்கில் ஏற்படாது என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

    ஏசு நாதருக்கு அருளப்பட்ட இறை வேதம் பாதுகாக்கப் பட்டிருக்குமானால் அது முற்றிலும் குர்ஆனை ஒத்தே இருக்கும். துரதிஷ்டவசமாக பைபிளின் மூலப்பிரதி மறைக்கப் பட்டு விட்டது. பைபிளில் மனிதக் கரங்கள் புகுந்ததால்தான் பல முரண்பாடுகளை ஆங்காங்கே காண முடிகிறது. அவை என்னென்ன முரண்பாடுகள் என்றும் என்னால் ஆதாரத்தோடு விளக்கவும் முடியும் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  22. நல்லவன்!

    //அதிகாரப்பூர்வமாக ஆங்கில மொழியில் மூன்று மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. ஆங்கில மொழி மட்டுமே அறிந்த ஒருவனுக்கு எது சரியான குரான்? ஏனெனில் அவனிடம் இருக்கும் எல்லா குரான்களும் மாற்றப்பட்ட குரான்கள் தானே?//

    இறைவா! நல்லவன் போன்ற நாத்திகர்களிடமிருந்து இந்த உலகைக் காப்பாயாக! மொழி பெயர்ப்புகள் ஆயிரம் தான் வந்தாலும் மூல மொழியான அரபியில் குர்ஆன் இன்று வரை பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. முகமது நபி காலத்தில் தொகுக்கப் பட்ட குர்ஆன் இன்றும் துருக்கி மியூஸியத்திலும், ரஷ்ய மயூஸியத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. அந்த பிரதியையும் தற்போது உங்கள் கைகளில் தவழும் குர்ஆனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு வார்த்தைக் கூட மாற்றப் படாதது தெரிய வரும். அரபி மொழியை சரியாக விளங்காமல் மொழி பெயர்ப்பாளர் செய்யும் தவறுகளுக்கு குர்ஆன் எவ்வாறு பொறுப்பாக முடியும்?

    ReplyDelete
  23. நல்லவன்!

    //1400 ஆண்டுகளாக குரானை படித்து ஓதி விளக்கி வந்த அரபியர்களுக்கு தெரியாத அர்த்தத்தை ஜெயினுலாபுதீன் கண்டுபிடித்துவிட்டாரா? //

    இங்கு பிரச்னை அரபியர்களின் புரிந்துணர்வைப் பற்றியது அல்ல. அந்த அரபி வார்த்தைகளை இணைக்கும் சொற்களை மொழி பெயர்ப்பாளர்கள் புரிந்து கொண்ட விதத்தைப் பற்றி. இது வரை மொழி பெயர்த்ததற்கு மாற்றமாக புதிதாக பி.ஜெய்னுல்லாபுதீன் ஒரு கருத்தைச் சொன்னால் அவர் சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதா? என்று தான் பார்க்க வேண்டும். அரபி இலக்கணம் தெரிந்தவர்கள் அவரிடம் இது பற்றி நேரிடையாக விவாதிக்கலாம். அல்லது தொலை பேசி மூலம் கேட்டு தெளிவு பெறலாம். இதை விடுத்து 'அவர் எபபடி மாற்றமாக சொல்லலாம்' என்று வாதம் செய்வது பேதமையே!

    //அப்படி போய் விட்டால் அல்லாவின் வார்த்தை பொய்யாகிவிடும். அப்போது இதே வரிகளை மீண்டும் வேறு மாதிரி பொருள் எழுதுவீர்களா?//

    மூல மொழி பாதுகாக்கப் பட்டுள்ளதால் சமயத்துக்கு தக்கவாறு மொழி பெயர்ப்பை மாற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் குர்ஆன் சவால் விடும் ஒன்பது கிலோமீட்டருக்கு மனிதனை அனுப்பி விட்டு பிறகு இந்த கேள்வியைக் கேளுங்கள். ஆனால் மனிதன் செல்ல முடியாது என்பது தான் உண்மை.

    //அந்த ஆழத்தில் போய் குடியிருக்க வேண்டும் என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?
    அந்த ஆழத்துக்கு போக இயந்திரங்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?//

    இந்த குர்ஆனிய வசனமே 'இன்னக' என்று மனிதனை விளித்துத்தான் சொல்கிறது. 'நீ' என்று மனிதனைப் பார்த்து முன்னிலைப் படுத்துவதால் மலைகளின் உயரத்தை பூமியைப் பிளந்து மனிதன் அடைய முடியாது என்பது தான் இந்த வசனத்திற்கு அர்த்தம். இதன் மாற்றுக் கருத்துடையவர்கள் அரபி இலக்கண ஆதாரத்தோடு விளக்குங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

    //ஏன் அல்லா குரானை ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்த்து தரவில்லை? இது ஒன்றும் அவரால் முடியாது அல்லவே?//

    'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

    -குர்ஆன் 14 :4

    இதன் மூலம் உலகில்உள்ள அனைத்து மொழிகளிலும் இறைவனின் வேதம் வந்துள்ளது தெளிவாகிறது. நம் தமிழ் மொழிக்கும் வேதம் வந்திருக்கிறது. தூதரும் வந்திருக்கிறார். ஆனால் யார் அந்த வேதம்எது என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே அனைத்து மொழிகளையும் தெரிந்த இறைவன் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து அனுப்புவது இயலாத காரியம் ஒன்றும் அல்ல. ஒரு மொழியில் குர்ஆனின் மூலம் இருக்கும் போதே இத்தனை பிரிவுகளை மனிதனின் அறிவின்மையால் உண்டாக்கி விட்டான். இன்னும் உலக மொழிகள் அத்தனையிலும் ஒரே நேரத்தில் குர்ஆன் இறக்கப் பட்டால் இதை விட குழப்பமே மிஞ்சும். இறைத் தூதர்களிலும் இதே போன்ற குழப்பம் மிஞ்சும். இத்தகைய குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒரு மொழியில் குர்ஆனை இறக்கி அதை உலக மக்களுக்கு பொதுவாக்கியிருக்கலாம். இதன் உண்மையை இறைவனே அறிவான்.

    ReplyDelete
  24. தருமி!

    //பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை.//

    ஒரு சமுதாயத்திற்கு அருளப்பட்ட வேதம் மாற்றப் பட்டதனால்தான் மற்றெரு தூதரையும் வேதத்தையும் இறைவன் அனுப்புகிறான். இதன் மூலம் அந்த சமுதாயத்தில் நல்லோர் யார் இறை வேதத்தை மாற்றுபவர் யார் என்பதை தெளிவாக்குவதற்காக இறைவன் உணடாக்கிய ஏற்பாடுகள் அவை.

    மேலும் இந்து வேதங்களிலிருந்து கிறித்தவ வேதங்கள் வரை முகமது நபியின் முன் அறிவிப்பை நாம் பார்க்கிறோம். இதன்மூலம் முகமது நபியும் மற்ற தூதர்களும் வருவதையும் உலக முடிவு நாள் வரை உள்ள நடவடிக்கைகளையும் இறைவன் முன் கூட்டியே தனது பதிவு ஏட்டில் பதிந்திருக்கிறான். இதன் பிறகாரமே அனைத்து செயல்களும் நடைபெறுகிறது. மற்ற வேதங்கள் மாற்றப் படாமல் இருந்திருந்தால் முகமது நபி வரை தூதர்கள் வர அவசியமில்லாமல் போயிருக்கும்.

    'நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.'
    15 : 9 - குர்ஆன்

    இத்தகைய வாக்குறுதியை இறைவன் மற்ற வேதங்களுக்குக் கொடுக்கவில்லை. அதே இறைவன் நினைத்திருந்தால் மற்ற வேதங்களையும் பாதுகாத்திருக்க முடியும். இறுதி வேதமாக குர்ஆன் அருளப்பட வேண்டும் என்பதற்காகவும், மனிதர்களில் நல்லோர் யார் தீயோர் யார் என்பதை பிரித்தறிவிப்பதற்காகவும் இறைவன் முந்தய வேதங்களைப் பாதுகாக்க வில்லை.

    இறைவனே மிக அறிந்தவன்.

    ReplyDelete
  25. சிறில் அலெக்ஸ்!

    //இதையெல்லாம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்துக்கொள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

    காலத்துக்கு காலம் எல்லாமே மாறிவருகின்றன. கிறித்துவம் இதை அழகாகச் (தன் சுய லாபங்களுக்கும் நோக்கங்களுக்குமே) செய்கிறது.

    இந்துக் கோவில்களை புதுவருட பிறப்பீற்காக இரவில் திறப்பது போன்ற சின்ன மாற்றங்கள்கூட வரவேற்கத் தக்கதே.//

    முஸ்லிம்கள் குர்ஆனை ஒரு மனிதனின் வார்த்தைகள் என்று நம்பினால் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. இந்த குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததால்தான் வரிக்கு வரி அதன் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.கிறித்தவராக இருந்து கொண்டு கிறித்துவத்தை தன் சுய லாபம் என்று நீங்கள் விமரிசிப்பதன் காரணம் ஏசு அருளிய வேதம் உங்களிடம் இல்லை என்ற காரணத்தால்தான்.

    //இந்த மாதிரி பல விஷயங்களை கால காலமாய் 'அடித்துக்கூறி' பின்னர் அவை அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறதே?//

    குர்ஆன் சம்பந்தமாக அப்படி அடித்து நொறுக்கப் பட்ட சம்பவம் என்ன என்பதை கொஞ்சம் பட்டியலிடுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

    //குர்ஆன் சர்வ சாதாரணமாக கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் ஓய்வின்றி சுற்றி வருகின்றன என்று சொல்லி விட்டு செல்வதை பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.
    //- suvanappiriyan

    Kuran (forgive me if there's spelling mistake) was written well after the study about the Planet system was studied. Galeleo established these long before Mohammed.-syryl Alex


    முன்பு 'குரங்கிலிருந்தா மனிதன் பிறந்தான்' என்ற என்பதிவில் நான் எழுதியதற்கு நீங்கள் கொடுத்த மறுப்பு

    ஐயா சிறில் அலெக்ஸ் மற்றும் மனக்குமறல் அவர்களே... நீங்கள் அறிவிப்பூர்வமாகப் பேசியதாக நினைத்து இங்கு வார்த்தை விளையாட்டு மட்டும் விளையாடிவிட்டு சென்றுள்ளீர்கள். கலீலியோவின் காலம் தெரியுமா? கிபி 1564-1642 இந்தக்காலத்தில் தான் அவர் வாழ்ந்து விட்டுச் சென்றார். ஆனால் எங்கள் முகம்மது நபி(ஸல்) அவர்களின் காலம் கிபி 571-632. கலிலீயோவிற்கு முன் 1000 ஆண்டுகள் முன்பே வாழ்ந்து விட்டு சென்றுவிட்டார்கள். இதைக்கூட அறிய முடியாத நீங்கள் தான் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசவந்துள்ளீர்கள். இதிலிருந்தே உங்களின் அறியாமை உங்களுக்கு விளங்கவில்லையா?-Abdul Gutthoose

    இதற்கு அப்துல் குத்தூஸ் அவர்கள் கலிலியோ காலத்தையும் முகமது நபி காலத்தையும் விவரித்து உங்களின் தவறைச் சுட்டிக் காட்டினார். ஆனால் இதுவரை உங்களிடமிருந்து அதற்கான பதில் இல்லை. எப்படி வரும்? இந்த குர்ஆன் இறை வேதம் அல்லவா?

    ReplyDelete
  26. நல்லவன்!

    //ஆகவே முகம்மது நபிக்குக் கூட இந்த வசனத்துக்கு சரியான பொருள் தெரியவில்லை. அல்லா தன் இதயத்தின் என்ன நினைத்து இதனைச் சொன்னார் என்பதன் சரியான் பொருளை ஜெயினுலாபுதீன் கூறிவிட்டார்.//

    உங்களின் வாதம் தவறு. முகமது நபி காலத்தில் அவருடைய தோழர்கள் சில வசனங்கள் விளங்க வில்லை என்றால் அதற்கு விளக்கம் கேட்பார்கள். அதற்கு முகமது நபி விளக்கம் அளிப்பார்கள். அது போல் இந்த குறிப்பிட்ட வசனத்தைப் பற்றி எவரும் நபியிடம் கேட்கவில்லை. அவர்களும் விளக்கவில்லை. கடல்களையே அதிகம் பார்த்திராத அந்த மக்களுக்கு இந்த வசனத்தைப் பற்றிய மேலதிக விளக்கம் தேவை இல்லாமலும் இருந்திருக்கலாம்.

    ஆனால் இன்று நாம் வாழ்வது அறிவியல் முன்னேற்றம் அடைந்த உலகில். குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் உண்மையையும் பரிசோதனைகளின் மூலம் அறியும் காலத்தில் வாழ்கிறோம். குர்ஆன் இறை வேதம் தான் என்பதை நிரூபிக்க அந்த காலத்தை விட இன்றைய நவீன யுகம் மிகவும் உதவி புரிகிறது. இன்று வரை எந்த அறிவியல் கருத்துக்கும் முரண்படாத வகையிலேயே குர்ஆன் திகழ்கிறது என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

    முகமது நபி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அதற்கு மாற்றுக் கருத்துச் சொல்ல எந்த முஸ்லிமுக்கும் உரிமை இல்லை. நபி சொல்லுக்கு மாற்றமாக கருத்து சொல்ல பி.ஜெய்னுல்லாபுதீனுக்கும் உரிமையில்லை. உங்களையும் என்னையும் விட இது விஷயத்தில் அவர் தெளிவாகவே இருப்பார் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.


    அனானி!
    //ஆம் அல்லாவின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை பெருமானார் ஜெயினுலாபுதீன் தான் அறிவார்.
    பெருமானார் முகம்மது நபிகளுக்குக்கூட (ஸல்) கூட தெரியாத விஷயங்களை அல்லாவிடமிருந்து பெற்றவர் எங்கள் ஜெயினுலாபுதீன்.

    Long live PJ!//

    நானோ, ஜெய்னுல்லாபுதீனோ சொல்லாத ஒரு கருத்தை சம்பந்கப் பட்டவர்கள் மீது அபாண்டமாக சுமத்துவது என்பது இறைவனுக்கு மிகவும் கோபமூட்டக் கூடிய செயல் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் தண்டனைக்கு பயந்து கொள்ளுங்கள்.

    இந்த விவாதத்துக்கு இத்தோடு முற்றுப் புள்ளியும் வைக்கிறேன்.

    ReplyDelete
  27. இஸ்லாமிய பதிவர்களுக்கு . ஒரு வேண்டுகோள் .இந்து மதத்தையோ நித்யானந்தா பற்றியோ பதிவுகள் இட வேண்டாம். நாம் அழகிய முறையில் இஸ்லாத்தை சொல்வதுதான் நம் கடமையே தவிர வீண் விவாதம் செய்வது, குறை சொல்வது நம் அழகல்ல.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)