Monday, August 11, 2008

தாரே ஜமீன்பர் - பட விமர்சனம்

நேரம் கிடைக்கும் போது எப்போதாவது திரைப் படம் பார்ப்பதுண்டு. சில மாதம் முன்பு வெளியான அமீர்கானின் தாரே ஜமீன்பர் படம் சமீபத்தில் பார்த்தேன். மன வளர்ச்சி குன்றிய ஒரு மாணவன் எப்படி பாதிக்கப்படுகிறான்? அதற்க்கான காரணம் என்ன என்பதை அமீர்கான் அழகாக விளக்கியுள்ளார்.

தந்தைக்கோ 'இவன் பெரியவனாகி இவனுக்கு நாம் சம்பாதித்து போட வேண்டுமோ?' என்ற கவலை.

தாய்க்கோ 'தன் மூத்த மகனைப் போல் புத்திசாலியாக இளைய மகன் இல்லையே' என்ற கவலை.

தமயனுக்கோ 'தன்னைப் போல் தன் சகோதரன் புத்திசாலியாக இல்லையே' என்ற ஏக்கம்.

ஆசிரியரான அமீர்கானுக்கோ 'இவனுள் புதைந்துள்ள திறமைகளை எப்படி வெளியுலகுக்கு கொண்டு வருவது' என்ற அக்கறை.

இவை அனைத்தையும் ஒன்றாக்கி சிக்கலில்லாமல் ஒரு அழகிய திரைப்படத்தை கொடுத்துள்ளார் அமீர்கான்.

இப்படத்தில் சிறுவனாக வேடமேற்றிருக்கும் பொடியனை ஷாருக்கானோடு ஒப்பிட்டு சகாரா சானலில் ஒரு பேட்டியும் கொடுத்திருந்தார்கள். நம் ஊரில் ஒரு கமலஹாசனைப் போல் பாலிவுட்டில் ஒரு திறமை மிக்க அமீர்கான். இது போன்ற பயனுள்ள படங்கள் இன்னும் அதிகம் எடுத்து ஆஸ்கார் விருதையும் தட்டிச் செல்ல அமீர்கானை வாழ்த்துவோம்

4 comments:

  1. //மன வளர்ச்சி குன்றிய ஒரு மாணவன் //

    Dyslexia என்பதற்கும் மன வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. கணக்கு பாடத்தில் சிலர் தடுமாறுவது போல், எழுத்துகளைப் புரிந்து கொள்வதில் சிலர் தடுமாறுவார்கள். அதற்கு என்று தனிப் பயிற்சி அளிக்கப் பட்டால் அவர்கள் திறமையாளர்களே.

    ReplyDelete
  2. நானும் இந்த படத்தினைப்பார்த்தேன்... இப்படி படங்கள் தமிழில் வருவதில்லையே என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது. அந்த சிறுவனின் நடிப்பும் பாரட்டத்தக்கது

    ReplyDelete
  3. ஸ்ரீதர் நாராயணன்!

    மனிதனின் எந்த ஒரு செயலுக்கும் மூலமாக இருப்பது மூளையின் செயல்பாடே! அதில் ஏதும் குறைபாடு ஏற்பட்டால் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறான். அந்த குறைபாடு சதவிகிதத்தில் வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடலாம். எனவேதான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். மேலதிக விபரத்தை தந்துள்ளீர்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. இவன்!

    இது போன்ற படங்கள் முன்பு தமிழிலும் வந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பணம் பண்ணவில்லை. ஆனால் மலையாளப் படங்கள் ஓரளவு திறம்பட வெளிவருகின்றன. இது போன்ற படங்களை தமிழர்கள் வரவேற்க்க வேண்டும். இன்னும் தமிழ்ப் படங்களில் ஹீரோ பத்து பேரை அடித்து துவம்சம் பண்ணுவது, மரத்தை சுற்றி டூயட்பாடுவது போன்ற காட்சிகளை எத்தனை காலம் பார்க்க வேண்டி வருமோ தெரியவில்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)