Tuesday, March 17, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு மனம் திறந்த மடல்!



ஏ.ஆர். ரஹ்மானுக்கு அவர்களுக்கு!

குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இன்னும் பல சிறப்புகள் பெற்று நமது நாட்டுக்கு மேலும் பல சிறப்புகளைப் பெற்றுத் தர வேண்டும். இவ்வளவு புகழ் அடைந்தும் 'எலலாப் புகழும் இறைவனுக்கே!' என்று கூறும் உங்களின் தன்னடக்கத்தை எண்ணி வியக்கிறேன்.

ஒரு முறை ஹஜ் பயணத்துக்காக மக்கா வந்தபோது அந்த வருடம் நானும் ஹஜ் கடமைக்காக மக்கா வந்திருந்தேன். நீங்கள் மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதை பார்த்ததாக என் நண்பர் சொன்னார். வறியவர் பலருக்கும் உங்கள் செல்வத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஈந்து வருவது கண்டு மகிழ்ச்சி. தொழுகைக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக ரெகார்டிங்கை இரவு நேரங்களில் வைத்துக் கொள்கிறீர்கள். சாதி மத பேதமின்றி அனைத்து மதத்தவரிடமும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கிறீர்கள். இதை எல்லாம் பார்த்து உங்கள் ரசிகன் என்ற முறையில் சந்தோஷப் படுகிறேன்: பெருமைப் படுகிறேன்.

அதே சமயம் நேற்று அஜ்மீர் தர்ஹாவில் வழிபாடு நடத்தும் காட்சியை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தேன். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று கூறிவிட்டு அஜ்மீரில் இறந்து போய் அடக்கம் பண்ணப் பட்டிருக்கும் நம்மைப் போன்ற ஒரு மனிதரின் அடக்கஸ்தலத்தில் பிரார்த்தனையில் ஈடுபடுவது முரணாகத் தெரியவில்லையா? நீங்கள் மதினா வந்திருந்த போது முகமது நபியின் அடக்கஸ்தலத்தையும் பார்த்தீர்கள் தானே! அங்கு யாராவது முகமது நபியிடம் பிரார்த்திப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! பழக்க தோஷத்தில் நம்மவர்கள் முகமது நபியிடம் பிரார்த்திக்க முற்படும் போது அங்கு நிற்கும் காவலர்கள் அவர்களை தடுத்து 'இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறுவதை நீங்கள் பார்க்கவில்லையா? 'என்னுடைய அடக்கஸ்தலத்தை வணங்கும் இடமாக மாற்றி விடாதீர்கள்' என்று இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு முகமது நபி தன் தோழர்களிடம் சொன்னதை மறந்து விட்டீர்களா?

'தன் காலில் யாரும் விழக் கூடாது. தனக்காக மரியாதை நிமித்தம் யாரும் எழுந்திருக்கக் கூடாது' என்றும் தன் தோழர்களிடம் முகமது நபி கூறியதை மறந்து விட்டீர்களா? மேலும் இது சம்பந்தமாக குர்ஆன் கூறுவதையும் கேளுங்கள்.

'இறைவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.' -குர்ஆன் 7:197

'மனிதர்களே உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதை செவி தாழ்த்திக் கேளுங்கள். இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக்கூட படைக்க இயலாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலகீனமாக இருக்கிறார்கள்.' -குர்ஆன் 22:73

'நீங்கள் இறந்தவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியேற்க்க மாட்டார்கள்' குர்ஆன் 35:14


மேற்கண்ட குர்ஆனின் வசனங்கள் தர்ஹாக்களுக்கு செல்வதை கண்டிப்பதைப் பார்க்கிறோம்.

இணையத்தில் உங்கள் சம்பந்தமாக வரும் அனைத்து கட்டுரைகளையும் பார்வையிடுவதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த பதிவு உங்கள் கண்ணில் பட்டு அதன் மூலம் உங்கள் பிரார்த்தனை முறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ....

உங்கள் நலன் விரும்பி!

15 comments:

  1. Anonymous5:48 AM

    Hai, I'm not commenting on main content of your post. But I would like to highlight one point
    "குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற ".
    AR Rahman started to work at the age 11. He got Oscar at the age of 42. This is not a short period. Almost 31 years.Please remove this line.
    Thanks.

    ReplyDelete
  2. Anonymous9:32 AM

    No need to remove any line as above anony mentioned. 31years in Indian Film History is still குறுகிய காலம் compared to others.

    Moreover, ARR's Musical age starts from the year of 'Roja' only

    ReplyDelete
  3. Anonymous9:33 AM

    தர்ஹாவில் அவர் பிரார்த்திப்பதாக எழுதியுள்ளீர்கள். அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது ?

    அவர் தனது தேவைக்காக கப்ரில் அடங்கி இருப்பவரிடம் பிரார்த்திக்கிறாரா ? அல்லது கப்றில் அடக்கப்பட்டிருப்பவரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறாரா ?

    ReplyDelete
  4. அனானி 3!

    //தர்ஹாவில் அவர் பிரார்த்திப்பதாக எழுதியுள்ளீர்கள். அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது ?//

    தர்ஹாவுக்கு பிரார்த்திக்க அல்லாமல் வேறு எதுக்குங்க போவாங்க!

    //அவர் தனது தேவைக்காக கப்ரில் அடங்கி இருப்பவரிடம் பிரார்த்திக்கிறாரா ? அல்லது கப்றில் அடக்கப்பட்டிருப்பவரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறாரா ?//

    இறப்பதற்கு முன்னால் உயிரோடு இருக்கும் போது செய்யும் நல்ல அமல்கள்தான் ஒருவரை சொர்க்கத்துக்கு கொண்டு செல்லும். எனவே தர்ஹாவுக்கு செல்லும் அனைவருமே தங்களின் தேவைகளை முறையிடவே செல்கிறார்கள். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. அனானி!

    //"குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற ".
    AR Rahman started to work at the age 11. He got Oscar at the age of 42. This is not a short period. Almost 31 years.Please remove this line.
    Thanks.//

    //No need to remove any line as above anony mentioned. 31years in Indian Film History is still குறுகிய காலம் compared to others.

    Moreover, ARR's Musical age starts from the year of 'Roja' only//

    நான் இதில் பதில் சொல்ல அவசியமே இல்லாமல் ஆக்கி விட்டார் அனானி நம்பர் 2.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. Anonymous7:20 PM

    "இதில் மாற்று கருத்து இல்லை" என்று நீங்கள் முடிவு செய்துவிட்டதால், நான் பேசுவதற்கும் ஒன்றும் இல்லை

    ReplyDelete
  7. //"இதில் மாற்று கருத்து இல்லை" என்று நீங்கள் முடிவு செய்துவிட்டதால், நான் பேசுவதற்கும் ஒன்றும் இல்லை//

    இது நான் எடுத்த முடிவு இல்லீங்க! பத்திரிக்கை செய்தியில் வந்த படத்தையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். 'ஏ.ஆர்.ரஹ்மான் அங்குள்ள ஆஜ்மீர் தர்ஹாவில் வழிபாடு நடத்தினார்' என்ற செய்திக்கு நீங்கள் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறீர்கள்? வழிபாடு யாருக்கு நடத்துவோம்? நம்மைப் படைத்த இறைவனுக்கு. தர்ஹாவில் செய்யும் வழிபாட்டை இறைவனை வழிபடும் பள்ளி வாசலில் செய்யலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.

    'நாங்கள் உட்கார வைத்து கும்பிடுகிறோம். நீங்கள் (முஸ்லிம்கள்) படுக்க வைத்து கும்பிடுகிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம்' என்று மற்றவர்கள் எள்ளி நகையாடுவதற்கு இது போன்ற காரியங்கள் காரணமாகி விடுகிறதல்லவா!

    ReplyDelete
  8. Anonymous7:52 PM

    உங்களது முந்தைய பின்னூட்டத்தில் "மாற்று கருத்து இல்லை" என்று எந்த இடத்தில் நீங்கள் கூறியுள்ளீர்கள் என்று பார்த்தீர்களா ? நீங்கள் அடுத்த பின்னூட்டத்தில் அது பற்றியா பேசினீர்கள் ? சரி செய்யவும்.

    ReplyDelete
  9. Anonymous11:34 PM

    //No need to remove any line as above anony mentioned. 31years in Indian Film History is still குறுகிய காலம் compared to others.

    Moreover, ARR's Musical age starts from the year of 'Roja' only//

    What is sufficiently good period to deserve fame according to you?

    //Moreover, ARR's Musical age starts from the year of 'Roja' only
    //

    Was ARR musically ignorant and a novice before Roja?

    ReplyDelete
  10. Anonymous11:37 PM

    //தொழுகைக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக ரெகார்டிங்கை இரவு நேரங்களில் வைத்துக் கொள்கிறீர்கள். //

    Does he ever sleep at all during daytime?
    Isn't it a possibility that he might miss prayer time if he overslept?

    ReplyDelete
  11. அனானி!

    //Does he ever sleep at all during daytime?
    Isn't it a possibility that he might miss prayer time if he overslept?//

    ஒரு நேரத் தொழுகைக்கு தேவை பத்து அல்லது பதினைந்து நிமிடமே! ஒரு நாளைக்கு தொழுகைக்காக ஒரு முஸ்லிம் ஒதுக்கும் நேரம் ஒரு மணி நேரம். 24 மணி நேரத்தில் நம்மை படைத்த இறைவனை வணங்க ஒரு மணி நேரம் ஒதுக்குவதை யாரும் சிரமமாக நினைப்பதில்லை. அதைத்தான் ரஹ்மானும் செய்கிறார். இதை ஒரு பேட்டியிலும் அவரே குறிப்பிட்டுள்ளார்.

    //Was ARR musically ignorant and a novice before Roja?//

    இளையராஜாவும் வரதராஜனும் கங்கை அமரனும் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே பல பாடல்களை இயற்றியும் பாடியும் வந்துள்ளனர். ஆனால் இளையராஜாவின் இசைப்பயணத்தை குறிப்பிடும்போது நாம் அன்னக்கிளியிலிருந்துதான் ஆரம்பிப்போம். இதே அளவுகோல்தான் ரஹ்மானுக்கும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. Anonymous10:16 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஆயிரம் அவார்டுகள் வாங்கினாலும் நம் இஸ்லாம் தடை செய்த இசைக்கு அல்லவா அவார்ட் இதில் பெருமயடைய ஒன்றுமேயில்லையே

    ReplyDelete
  13. Anonymous7:00 PM

    //What is sufficiently good period to deserve fame according to you?

    //

    Care to bother this question? :)

    ReplyDelete
  14. Anonymous7:03 PM

    ////Was ARR musically ignorant and a novice before Roja?//

    இளையராஜாவும் வரதராஜனும் கங்கை அமரனும் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே பல பாடல்களை இயற்றியும் பாடியும் வந்துள்ளனர். ஆனால் இளையராஜாவின் இசைப்பயணத்தை குறிப்பிடும்போது நாம் அன்னக்கிளியிலிருந்துதான் ஆரம்பிப்போம். இதே அளவுகோல்தான் ரஹ்மானுக்கும்.
    //

    Raja brothers started their professional carreer with Annakili. Rahman was an accomplished composer for Ad.Jingles much before composing for Roja. Why do you confuse career with fame my friend?

    ReplyDelete
  15. Anonymous7:05 PM

    //நம் இஸ்லாம் தடை செய்த இசைக்கு //

    If music is banned, then why the call for prayer is made in the form of music?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)