Tuesday, September 22, 2009

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-1

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-1

//ஓர் உதவி. முன்பு ஒரு இஸ்லாமியப் பதிவர் பால் எப்படி கிறித்துவத்தை திசை மாற்றினார் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். paul made jesus into a mythic character.

இதன் நகல் கிடைக்குமா?//-Dharumy

எனது முந்தய பதிவில் தருமி சார் கேட்டதின் நகல் என்னிடம் இல்லையாதலால் இது சம்பந்தமாக நான் படித்ததை தனி பதிவாக போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதன்படி டாக்டர் மாரிஸ் புகைலின் 'விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்' என்ற புத்தகத்தில் உள்ள செய்திகளை அப்படியே தருகிறேன் பலரும் விளங்கிக் கொள்வதற்காக.

டாக்டர் மாரிஸ் புகைல்: பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இந்த டாக்டர் உடற்கூறு சிகிச்சை வைத்தியத்தில் கை தேர்ந்தவர்.மனிதர்களின் உடல்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த மனிதனின் ஆன்மா பற்றிய சிந்தனை எழுந்து விட்டது. அது பற்றி ஆராயத் தொடங்கி உலக மதங்களின் வேதங்களை ஆராயத் தொடங்கினார். அந்த வகையில் கிறித்துவின் வாழ்வில் எந்த அளவு உண்மை மறைக்கப் பட்டுள்ளது என்பதை அதில் பவுலின் பங்கு எந்த அளவு என்பதை இப்புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டை எழுதியது யார்?

இக் கேள்வி பலருக்கும் ஆச்சரியத்தை விளைவிக்கலாம். ஒரு சிலர் விவிலிய வேதமான பைபிளின் முன்னுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை நம்மிடம் திருப்பிக் கூறுவர். இந்நூல்கள் மனிதர்களினால் எழுதப்பட்ட போதிலும் பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்டு கோர்வை செய்யப்பட்டனவாகும் என்றும் எனவே இறைவனே இந்நூலின் ஆசிரியர் என்றும் அவர்கள் சொல்லக் கூடும்.

ஏசு நாதர் இறந்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சபை ஒரு பட்டியலைத் தயாரித்து இதில் அடங்கியுள்ள நூல்களே வேத நூல்கள் என பொது அறிவிப்புச் செய்தது. இந்தப் பட்டியலை கி.பி.1441 ஆம ஆண்டு பிளாரன்ஸில் கூடிய திருச்சபையும் 1546 ஆம் ஆண்டில் டிரென்டில் கூடிய திருச்சபையும் 1870 ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட முதலாவது வாடிகன் கவுன்சிலும் அங்கீகாரம் செய்து வந்துள்ளன. அந்தப் பட்டியல்தான் 'கேனான்' என்றழைக்கப்படும் வேத நூல் தொகுப்பாக இன்றளவும் இருந்து வருகிறது.

இரண்டாவது வாடிகன் கவுன்ஸில் 1962 ஆம ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தாற்போல் மூன்று ஆண்டுகள் கலந்தாலோசனை நடத்திய பிறகு பைபிளின் புதிய வெளியீட்டைக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு பாமரன் மேலெழுந்தவாரியாக இதைப் படிக்கும் போது இந்த வேதங்கள் செவ்வனே பாதுகாக்கப்பட்டுத்தான் வந்திருக்கின்றன என நம்பி விடுவான். இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலேசில் எழாது.

என்றாலும் குருமார்களில் ஓரிருவர் இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்யாமல் இல்லை. அவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். அவை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வரப் படுவதில்லை. அவை பல நூல் நிலையங்களில் மூலைகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று பேராசியர் எட்மண்ட் ஜாக்கப் பிரெஞ்சு மொழியில் எழுதிய 'பழைய ஏற்பாடு' என்ற நூலாகும். அந்நூலில் அவர் கூறியிருப்பதாவது:

'வேதங்கள் என்று சொல்லப்படுபவற்றில் ஆதி காலங்களில் பல வாய் மொழிகள் வழக்கில் இருந்து வந்தன. ஒரே மாதிரியான வாய் மொழிதான் இருந்து வந்தது எனச் சொல்ல முடியாது. பல்வேறு வாக்கு மூலங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன.நாளாக நாளாக அவை எழுத்து வடிவம் பெறலாயின. அதிலும் பல பிரிவுகள் வழக்கில் இருந்தன. இறுதியாக மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் உருவாயின. ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலவரம் இது. இந்த மூன்று வேறுபட்ட நூல்களில் இருந்தும் உருவாக்கப்பட்டதே யூதர்கள் இன்று அழைக்கும் பென்டாடெஷ் என்ற தொகுப்பாகும். இதைத்தான் அவர்கள் 'தௌராத் வேதம்' என்கிறார்கள். மேற் கூரிய மூன்று ஹீப்ரோ மொழிகளில் இருந்து பல பகுதிகள் கிரேக்க மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவையே பின்னால் உருவான பைபிள்களுக்குக் கருவாக அமைந்தன. மூன்று விதமான வேத நூல்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒன்று படுத்தும் முயற்சி ஏசு பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நடந்து வந்தது. இருப்பினும் ஏசு பிறந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே பைபிளுக்குரிய கருப் பொருள்கள் ஒன்று திரட்டப்பட்டன.”

மேற் கூரிய கருத்துக்கள் பேராசிரியர் எட்மண்ட் ஜேக்கப் அவர்களுடைய நீண்ட ஆராய்ச்சிகளின் விளைவுகளாகும்.

மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்திருக்குமாயின் இன்று நாம் அவைகளை ஒன்றுடன ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உய்த்து உணர்வதற்கு உதவியாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அவை குறித்து ஒரு துப்புக் கூட இன்று கிடைக்கவில்லை.

பழைய ஏற்பாடு முதன் முதலாக முழுமையாக கிரேக்க மொழியில் கி.மு.மூன்றாவது நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது. அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த யூதர்களே இப்பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த கிரேக்க மொழி பெயர்ப்புதான் பிற் காலத்தில் உருவான புதிய ஏற்பாட்டிற்கு மூலமாக அமைந்தது. கி.பி.ஏழாவது நூற்றாண்டு வரை இந்த 'பழைய ஏற்பாடு' அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தது.

ஆனால் செயின்ட் ஜெரோம் என்ற மத குரு கி.பி.ஐந்தாவது நூற்றாண்டில் ஹீப்ரு மூல நூல்களில் இருந்து லத்தீன் மொழியில் ஒரு பைபிளைத் தயாரித்தார். இதுவே உல்மேட் என்று அழைக்கப்படுகிறது. செயின்ட் ஜெரோம் தயாரித்த பைபிளே கிறித்தவ உலகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பரவலாக வழக்கில் இருந்து வருகிறது. லத்தீன் மொழி பெயர்ப்பு அல்லாமல் அராமிக் மொழியிலும், சிரியாக் மொழியிலும், பைபிள்கள் வெளி வந்தும் இருக்கின்றன.

எனவே ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன் சிரியாக், அராமிக்,அரபி ஆகிய பல மொழிகளில் விவிலிய வேதம் வழக்கில் இருந்தபோது சில ஆராய்ச்சியாளர்கள் எல்லா நூல்களில் இருந்தும் அவர்களது யுக்திக்கு ஏற்ற வகையில் அங்கிருந்து கொஞ்சம், இங்கிருந்து கொஞ்சம் என்ற முறையில் பல விஷயங்களையும் ஒன்று திரட்டி புதிய பைபிள்களைத் தயாரிக்கலானார்கள். அம் மாதிரித் தயாரிப்புத்தான் 1957 ஆம் ஆண்டு லண்டன் நகரில் அச்சிடப்பட்ட வால்டன் பைபிள் என்பதாகும்.

கிறித்தவர்களுக்குள்ளேயே பலவித உட்பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டுள்ள பைபிள்கள் பல மாதிரியானதாகவிருக்கும். வார்த்தை வித்தியாசம், கருத்து வித்தியாசங்கள் உண்டு. பல்வேறு கிறித்தவ பிரிவுகளும் இன்று ஒன்று கூடி ஒரே மாதிரியான பைபிளைத் தயாரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கப் பாதிரிகளும், புரோட்டஸ்ட் பாதிரிகளும் கூட்டாக முயற்ச்சித்து இறுதியில் அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அவர்களது புதிய தயாரிப்புக்கு (The Ecumencial Translation Of The Old Testament) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்நூல் வெளியிடப்பட்டு விட்டது.

மேலே கூறியவற்றில் இருந்து இன்று வழக்கில் இருக்கும் பழைய ஏற்பாடு என்ற வேதநூல் எப்படி உருவாயிற்று என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மனிதக் கரம் இதில் அதிகமதிகம் விளையாடி இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் ஒவ்வொரு தடவை புதிய பதிப்பு தயாரிக்கும் பொழுதெல்லாம் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மொழி பெயர்ப்பிலும் வாசகங்கள் கூட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. காலா காலமாக இந்தத் 'திருத்தும் வேலை' நடந்தே வந்திருக்கிறது.

குறிப்பு: இஸ்லாத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் முகமது நபியின் போதனைக்கு மாற்றமாக இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எல்லாம் ஊருக்கு ஊர் தர்ஹாக்களைக் கட்டி வைத்து அந்த மகான்களை இறைவனுக்கு சமமாக வழிபடுவதையும் பார்க்கிறோம். அதே போல் ருக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்கள் உருவ வழிபாட்டைப் போதிக்கவில்லை. சித்தர்கள் கூட 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' என்று உருவ வழிபாட்டைக் கண்டிக்கிறார். திருக்குறளிலும் உருவ வழிபாட்டைப் பற்றி சொல்லவில்லை. ஆனால் இந்து மதம் இன்று முழுக்க முழுக்க உருவ வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காட்சியையும் பார்க்கிறோம். இவை எல்லாம் வேத நூல்கள் ஒன்றைச் சொல்ல காலப் போக்கில் மனிதனின் மனம் அந்த வேதக்கருத்துக்களையே மாற்றி அதற்கு எதிரான திசையில் செல்ல ஆரம்பித்து விடுகிறது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். எனவே இப்பதிவு அந்த தவறுகளை சுட்டிக் காட்டத்தானே யொழிய யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் கண்டிப்பாக இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

-தொடரும்

42 comments:

  1. எனக்காகவேவா ... ?

    நன்று.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன் ..நன்றி!

    ReplyDelete
  3. திரு தருமி!

    //எனக்காகவேவா ... ?//

    'எனக்கே எனக்கா!' என்ற ஜீன்ஸ் பட பாடல் உடன் ஞாபகத்துக்கு வந்தது. இது உங்களுக்காகவும் நானும் சில விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், இந்த பதிவை படிப்பவர்களுக்காகவும் சேர்த்தே இந்த பதிவு. நன்றி.

    ReplyDelete
  4. ஜோ!

    //நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன் ..நன்றி!//

    உங்கள் அளவுக்கு கிறித்தவ மார்க்கத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. மாரிஸ் புகைல் எழுதியதை அப்படியே பதிக்கிறேன். வருகைக்கு நன்றி. ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. திரு தருமி!

    //emmanuel, ஏசு - இப்படி ஒருவர் வருவாரென பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது போல் ஏசு வந்ததாக கிறித்தவர்கள் சொல்வது போல், பழைய ஏற்பாட்டில் முகமது வருகை பற்றி ஏதும் முன் தகவல் உண்டா?//

    நீங்கள் கேட்ட ஆதாரம் தமிழில் தற்போது இல்லை. தமிழ் படுத்த நேரமில்லையாதலால் ஆங்கிலத்திலேயே தருகிறேன். பேராசிரியருக்கு சிரமமிருக்காது என்றே நினைக்கிறேன்.

    Jesus confirmed the validity of the Torah which was revealed to Moses and he also brought the glad tiding of the coming of a final messenger after him. This is clearly indicated in the following verse:

    “And when Jesus son of Mary said, “children of Israel, I am indeed the messenger to you, confirming the Torah that is before me and giving good tidings of a Messenger who shall come after me, whose name shall be the praised one(note that this is translation of Ahamed which is Prophet Mohamads name) (61:6)

    ('முகமது' 'அஹமது' என்ற இரண்டு பெயர்களும் முகமது நபிக்கு உண்டு. அந்தப் பெயரை தமிழில் மொழி பெயர்த்தால் 'புகழப்பட்டவர்' என்ற பொருள் வரும்.)

    The Messenger of whom Jesus gave glad tidings is referred to in both the old and new testaments of the Bible. The Old testament contains several prophecies that apply only to the Prophet Mohamed. I quote only one of those which applies to none except Prophet Mohamed. This prophesy which was addressed to Moses said that God will send among the “brethren” of the Israelites, a prophet like Moses who will be a founder, a leader, and an exemplar of a community of believers. We read this in the following verses of Duet. Ch 18

    “I will raise up for them a Prophet like you from among their brethren: and I will put my words in his mouth, and he shall speak to them all that I command him. And whoever will not give heed to my words which he shall speak in My name. I My self require it of him.(Deut 18:18-20)

    Any one who is familiar with Prophet Mohammads life, can easily see that no one fits the above description better than Prophet Mohamed. It was Prophet Mohamed, not Jesus, who like Moses was born from ordinary parents, got married, founded a faithful community, established a great law and died a natural death.

    Careful study of the New Testament shows that this same Prophet is referred to by Jesus in John 14:16,17

    “And I will pray the father and he will give you another counselor, to be with you for ever, even the Spirit of truth.”

    இதல்லாமல் இதற்கு மேலும் ஆதாரங்கள் இருக்கிறது. கேட்டீர்கள் என்றால் அதையும் தருகிறேன். நன்றி.

    மேலும் அறிவியல் சம்பந்தமாக நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் பிறகு பதிலளிக்கிறேன்.

    ReplyDelete
  6. திரு வெங்கட்!

    //இங்கு நாம் கவனிக்க வேண்டியது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கும் போதே தனது கலாச்சாரத்துக்கு ஏற்ற பள்ளிகளாக பார்த்து சேர்த்தால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகளின் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.//

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே! பிரச்னையின் மூலம் எது என்று தெரிந்து அதை களைந்தால் பல சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்.

    இஸ்லாமியர்களிடத்தில் வேறொரு சிக்கலும் உண்டு. மதரஸாக்கள் என்று இஸ்லாமிய போதனையை சொல்வதற்கென்று உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கும் முறையாக இஸ்லாம் சொல்லித் தரப்படுவதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் மொட்டை அடிக்க வேண்டும், ஜிப்பா போன்ற நீண்ட அங்கி அணிய வேண்டும், தலையில் கண்டிப்பாக தொப்பி அணிய வேண்டும். இந்த புற அடையாளங்களுக்கும் இஸ்லாத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. 'தொப்பி' என்ற பொருளில் வரும் வார்த்தை கூட குர்ஆனிலோ நபி மொழியிலோ பார்க்க முடியாது. தற்போது ஓட்டுக்காக அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் தொப்பி போட்டு ஏமாற்ற சௌகரியமாக இருக்கிறது. இங்கு அரபு நாடுகளில் மசூதிகளில் தொழக்கூடியவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களிடம் தொப்பி இருக்காது.

    பாடத்திட்டங்களும் இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாத கட்டுக் கதைகளே சொல்லித்தரப்படுகின்றன. முஸ்லிம் கான்வென்டுகள் ஓரளவு முஸ்லிமகளுக்கு தரமான கல்வியை வழங்கி வருகின்றன.

    ReplyDelete
  7. திரு தருமி!

    //See ye not How allah has created the seven heavens one above another, and made the moon a light in their midst and made the sun as a lamp (quran 71:15-16)
    அது என்ன ஏழடுக்கு சுவனம்?
    அப்போ சந்திரன் ஒரு விளக்கு ..? (அதுக்கு சுய ஒளியே கிடையாதே!)
    சூரியன் மட்டும் ஒரு விளக்கு .. மற்ற நட்சத்திரம் என்பதெல்லாம்…?//

    'வானத்தில் நட்சந்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும் ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்'
    25 : 61 - குர்ஆன்

    சந்திரன் தன் சொந்த ஒளியினாலே பிரகாசிக்கிறது என்று முந்தைய மனிதர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இன்று சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனின் ஒளியைத்தான் அது பிரதிபலிக்கின்றது என்று விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர். அதாவது சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி அதைத் திரும்ப வெளியிடுகிறது. ஆகையால் நாம் சந்திரனைக் காணும் போது அதில்காணும் ஒளியானது சந்திரனின் ஒளியல்ல. சூரியனின் ஒளியைத் தான் அது திரும்பக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது என்று சில ஆண்டுகளுக்கு முன்தான் விஞ்ஞானம் கண்டறிந்து கூறியது.

    குர்ஆன் சந்திரனின் ஒளிக்கு 'முனீர்' என்னும் பதத்தை உபயோகப் படுத்தியுள்ளது. இந்த அரபி பதத்துக்கு நேரடியான பொருள் பிரதிபலிக்கின்ற ஒளி. மிகவும் கவனமாக நேர்த்தியாக சந்திரனின் ஒளியை பிரதிபலித்தல் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளதால் குர்ஆன் இறை வாக்குதான் என்பது மேலும் உறுதியாகிறது.

    'சந்திரனை ஒளியாக அமைத்தான். சூரியனை விளக்காக அமைத்தான்.'
    -குர்ஆன்71:16

    இங்கும் சந்தினின் பிரகாசத்தையும் சூரியனின் பிரகாசத்தையும் வேறுபடுத்தி வார்த்தைகள் வந்திருப்பதை கவனியுங்கள். இரண்டு ஒளிகளுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை காட்டவே லைட்,லேம்ப் என்று குர்ஆன் வித்தியாசப்டுத்துகிறது.

    எனவே நீங்கள் எடுத்துக்காட்டிய வசனமே இது இறை வேதம்தான் என்று மெய்ப்பிக்கிறது.

    ReplyDelete
  8. //சான்றாக, மனித உயிர் விலா எலும்புகளுக்கும் முதுகெலும்பிற்கும் நடுவில் உள்ள நீர் பாய்ச்சப்படுவதுதால் ஏற்படுகிறது என்று கூறுவதற்குப் பதில் testes -semen என்றெல்லாம் கூறியிருக்கலாம்.//-Dharumy

    நாம் இப்போது அறிவியல் முதிர்ச்சி அடைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் முகமது நபி காலத்து மக்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்கு அறிவியல் வார்த்தைகளை எல்லாம் போட்டு சொன்னால் புரியவில்லை என்று குர்ஆனைத் தொடவே மாட்டார்கள். அந்த கால மக்களுக்கும் புரிய வேண்டும். நாம் வாழும் கம்ப்யூட்டர் யுக மனிதர்களுக்கும் பொருந்த வேண்டுமாயின் இரண்டுக்கும் இடைப்பட்ட மொழியில்தான் சொல்ல வேண்டும். அதைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

    மேலும் குர்ஆன் இறங்கியது மக்களுக்கு சட்டங்களை சொல்வதற்காக. அது இறைவன் வாக்குதான் என்று நிரூபிக்கத்தான் அறிவியல் சமாச்சாரங்களை அனைவரும் கையிலெடுப்பர்.

    ReplyDelete
  9. என்னங்க சுவனப் பிரியன்,
    //அவர்களுக்கு அறிவியல் வார்த்தைகளை எல்லாம் போட்டு சொன்னால் புரியவில்லை என்று குர்ஆனைத் தொடவே மாட்டார்கள். //

    சின்னப் பிள்ளைக்கு சொல்றது மாதிரி சொல்றீங்களே! விலாவுக்கும் முதுகெலும்புக்கும் என்பதற்குப் பதில் testis அப்டின்னோ, ஒரே வார்த்தையில் விந்து என்றோ சொல்ல முடியாதா என்ன?

    ReplyDelete
  10. இந்த சந்திரன், சூரியன் விவகாரம் விளக்கமும் அதே போல்தானிருக்கு. இதை மதராஸாவில் உள்ள குழந்தைகளுக்குச் சொன்னால், கைகட்டி, கைதட்டி ஏத்துக்குவாங்க.

    சந்திரன் சூர்யன் சொன்னவர் ஏங்க மற்ற galxies ,அது இதுன்னு இன்னும் கொஞ்சம் space பத்தி சொல்லியிருக்கலாமே ..

    ReplyDelete
  11. //இறைவன் வாக்குதான் என்று நிரூபிக்கத்தான் அறிவியல் சமாச்சாரங்களை அனைவரும் கையிலெடுப்பர்.//

    குரான் கடவுள் வாக்குன்னு நிச்சயமா இதெல்லாம் நிரூபிக்கவேயில்லைங்க.

    சும்மா நம்ம முதுகை நாமளே தட்டிக் கொடுக்குறது மாதி்ரிதான் தோணுது.

    ReplyDelete
  12. பவுல் கண்ட புது மார்க்கம்!

    'கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அது புது உயிர் கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத் தக்கது. அது பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச் சந்தோஷிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.
    -சங்கீதம் 19:7,8

    பழைய ஏற்பாட்டில் காணப்படும் இந்த வசனங்கள் கர்த்தரின் வார்த்தைகளும் பிரமாணங்களும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் என்று போதிக்கின்றன.

    கர்த்தரின் இந்த போதனைக்கு முரணாகப் பவுல் கருத்துத் தெரிவிக்கிறார். அது பைபிளிலும் இடம் பெற்றுள்ளது.

    'முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுனமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகிறது. நியாயப் பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தியதில்லை.'
    எபிரேயர் 7:18

    முந்தைய நியாயப் பிரமாணத்தைப் இயேசு தள்ளினால் அதில் ஓரளவாவது நியாயம் இருக்கும். இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் கர்த்தரின் நியாயப் பிரமாணம் பரிபூரணமானதன்று: பலவீனமானது என்கிறார். கர்த்தரையே அலட்சியம் செய்யும் பவுலடிகளை கிறித்தவ உலகம் நம்புவதுதான் வேதனைக்குரியது.

    ReplyDelete
  13. //கேள்வி: குர் ஆன் இறைவேதம் என்பது எப்படி சொல்கிறீர்கள் ?

    பதில்: முகம்மது சொல்கிறார்.

    கேள்வி: முகம்மது இறைதூதர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் ?

    பதில்: குர் ஆன் அப்படிச்சொல்கிறது.

    இதற்குப் பெயர் தான் circular logic.//

    கேள்வி: குர்ஆன் இறை வேதம் என்று எப்படி நம்புகிறீர்கள்.?

    முஸ்லிம்: 'முஹம்மதுக்கு நாம் அருளிய குர்ஆனில் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
    -குர்ஆன்:2:23

    'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
    -குர்ஆன்:4:82

    குர்ஆன் விடும் இது போன்ற பல சவால்களை உலகில் இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லையாதலால் நாங்கள் குர்ஆனை இறை வேதமாக இன்றும் நம்புகிறோம்.

    ReplyDelete
  14. திரு தருமி!

    //விலாவுக்கும் முதுகெலும்புக்கும் என்பதற்குப் பதில் testis அப்டின்னோ, ஒரே வார்த்தையில் விந்து என்றோ சொல்ல முடியாதா என்ன?//

    'மனிதன் குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுப் பகுதிக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது'
    -குர்ஆன்: 86:6,7

    சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று பலரும் நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தி ஆனாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்க்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்துதான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை முகமது நபி தன் சொந்த கற்பனையில் சொல்லியிருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

    ஒரு விளக்கத்தை அவரவர்கள் பாணியில் சொல்லும் போது சிறிய வித்தியாசம் ஏற்படும். ஆனால் பொருள் ஒன்றைத்தான் குறிக்கும்.

    //சந்திரன் சூர்யன் சொன்னவர் ஏங்க மற்ற galxies ,அது இதுன்னு இன்னும் கொஞ்சம் space பத்தி சொல்லியிருக்கலாமே ..//

    'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்க்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'
    -குர்ஆன் 55:7-9

    'அவன் வானத்தை உயர்த்தினான்' என்ற வாசகம் 'பெரு வெடிப்பு' கொள்கையை மெய்ப்பிக்கிறது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்? வானம் பூமி நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்து மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வானம் மேலே உயர்த்தப்பட்டது என்று கூறுகின்றனர். அதையேதான் குர்ஆனும் கூறுகிறது. இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு இட்டுள்ளதால் அதற்கு அடுத்து வரும் 'தராசை நிலை நாட்டினான்' என்ற வசனத்தின் விளக்கத்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.

    உதாரணத்திற்கு 600 கிராம் உள்ள இரும்பு துண்டை நாம் வாழும் பூமியில் தராசில் வைத்து நிறுத்தோம் என்றால் 600 கிராமைக் காட்டும். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அதே சமயம் அதே தராசில் அதே 600 கிராம் இரும்புத் துண்டை நீங்கள் நிலவில் வைத்து நிறுத்தீர்கள் என்றால் அதன் எடை வெறும் நூறு கிராமைத்தான் காட்டும். இதற்கு காரணம் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு குறைவாகும்.

    இதிலிருந்து நாம் விளங்குவது பூமியில் ஒரு பொருளை எடை போடும் போது அப் பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையையே நாம் எடையாக காண்கிறோம் என்பது தெளிவாகிறது.

    அந்த கால அரபிகளுக்கு புவி ஈர்ப்பு விசையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் 'வானம் உயர்த்தப்பட்டு தராசு நிறுவப்பட்டது' என்று எளிமையான மொழி நடையில் மிகப் பெரும் அறிவியலை குர்ஆன் மனிதர்களுக்குப் போதிக்கிறது. இந்த வாக்கியத்தை இன்றைய அறிவியல் யுகத்தில் படிக்க வேண்டுமாயின் 'வானத்தை உயர்த்தினான்: புவி ஈர்ப்பு விசையால் நிலை நாட்டினான்' என்று படித்தால் இன்னும் அறிவியலோடு நெருங்கி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

    இது போல் வானியலைப் பற்றி நூற்றுக்கணக்கான வசனங்களை என்னால் எடுத்துக் காட்ட முடியும். ஆனால் படிக்க பொறுமை வேண்டும்.

    ReplyDelete
  15. //...ஒளி சிந்தும் சந்திரனையும்..//

    ??

    இது எப்டிங்க?

    ReplyDelete
  16. //விதைப் பையில் விந்து உற்பத்தி ஆனாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்க்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்துதான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்//

    //முன் பகுதிக்கும்// விலா எலும்புன்னு சொன்னீங்களோ ...

    மனுசப்பயலுக்கா ... இதென்னங்க புத்தம் புதுசா இருக்கு ...??!!

    ReplyDelete
  17. 1. //அவன் வானத்தை உயர்த்தினான்' என்ற வாசகம் 'பெரு வெடிப்பு' கொள்கையை மெய்ப்பிக்கிறது. //

    2.//வானம் மேலே உயர்த்தப்பட்டது என்று கூறுகின்றனர். //

    3. //வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்க்காக! //

    1. அது எப்படின்னு தெரியலைங்களே!

    2/ வானம் உயர்த்தப் படுவதா. நீங்க 'வானம்' அப்டின்னா என்ன நினைக்கிறீங்க. நம்ம தலைக்குமேல அண்ணாந்து பார்த்த தெரிய்தே .. வானம் = sky அதசி சொல்றீங்களா?

    ரொம்ப தப்புங்க அது ...

    3. ஏங்க .. கடவுள் வானத்தை உயர்த்துறவரு திடீர்னு தராசுக்குப் போறார், இதுக்கு நீங்க கொடுக்கிற விளக்க்ம் மெய்சிலிர்க்க வைக்குதுங்க ... வானத்துக்கும் தராசுக்கும் என்ன தொடர்பு. ஒண்ணொடு ஒண்ணு ஒட்டாத இரு விஷயங்களை இப்படி ஒரு சேர சேர்த்துச் சொல்றதாலேயே -.... தெரியுதுங்க நிறைய.

    ReplyDelete
  18. //சந்திரன் சூர்யன் சொன்னவர் ஏங்க மற்ற galxies ,அது இதுன்னு இன்னும் கொஞ்சம் space பத்தி சொல்லியிருக்கலாமே ../

    ரிப்பீட்டு .......

    ReplyDelete
  19. // சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி அதைத் திரும்ப வெளியிடுகிறது. ஆகையால் நாம் சந்திரனைக் காணும் போது அதில்காணும் ஒளியானது சந்திரனின் ஒளியல்ல. சூரியனின் ஒளியைத் தான் அது திரும்பக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது என்று சில ஆண்டுகளுக்கு முன்தான் விஞ்ஞானம் கண்டறிந்து கூறியது.//


    சில ஆண்டுகளுக்கு முன்பா?

    நபியவர்கள் பிறப்பதற்கு 1300 வருடங்களுக்கு முன்பாக இதை கிரேக்கர்கள் சொல்லிவிட்டார்கள். கிபி 500-ல் வாழ்ந்த அனக்ஸகோரஸ், (இவர்தான் சாகரடீஸின் குருவாக கருதப்படுபவர்), சந்திரன்,பூமி இரண்டும் ஒரே பொருளால் ஆனது,சந்திரன் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது எனச் சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  20. தருமி சார்!

    நாத்திகம் உங்கள் கண்களை நன்றாக மறைக்கிறது. நல்ல உள்ளம் கொண்டவர். நல்ல ஆசிரியர். சிறந்த பழக்க வழக்கங்கள் உடையவர். இப்படிப்பட்ட குணங்களுக்கு சொந்தக்காரர் இறப்புக்குப்பின் பரலோக ராஜ்ஜியத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற வேண்டாமா?

    நீங்கள் கிறித்தவராகவே இருந்து கொள்ளுங்கள். ஆனால் ஏசுவை இறைவனின் மகனாகப் பார்க்காமல் ஏசுவைக் கடவுளாகப் பார்க்காமல் அவரை ஒரு இறைத்தூதராகப் பாருங்கள். அவர் மக்களுக்கு எதைப் பிரசிங்கித்தார் என்று தேடுங்கள். மனிதன் என்றுமே கடவுளாக முடியாது.

    தேடுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்:

    ReplyDelete
  21. //வானம் உயர்த்தப் படுவதா. நீங்க 'வானம்' அப்டின்னா என்ன நினைக்கிறீங்க. நம்ம தலைக்குமேல அண்ணாந்து பார்த்த தெரிய்தே .. வானம் = sky அதசி சொல்றீங்களா?

    ரொம்ப தப்புங்க அது ...//

    ஆகாயம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை நான் படித்ததிலிருந்து எடுத்துத் தருகிறேன்.

    ஆகாய விமானம், தொலைபேசி,தொலைக்காட்சி, விண்வெளிக் கலங்கள், முதற்கொண்டு அணு ஆயுதம வரை ஆயிரக்கணக்கான பயன்பாடுகளை நாம் இப்பேரண்டத்தில் பரவிக் கிடக்கும் ஆற்றல்களிலிருந்து பெற்று வருகிறோம். நாம் பயன்படுத்தும் ஆற்றல்கள் யாவும் ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது. இந்த ஆற்றல்கள் இல்லை எனில் இப்பேரண்டமே இல்லை. இப்பேரண்டத்தை சீரான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு குழுவாக இயங்கச் செய்வதும் இந்த ஆற்றல்களே ஆகும். இந்த ஆற்றல்களின் இயங்கு தளமே ஆகாயமாகும். இந்த ஆகாயம் உருப்பெறுவதற்கு நான்கு ஆதார சக்திகள் உள்ளன. அவை முறையே:

    1.பேரண்டத்தின் ஈர்ப்பு விசை 2.மின்காந்த விசை 3.வலுவான அணுக்கரு விசை 4.இலகுவான அணுக்கரு விசை.

    இப்படி நிறைய பேசலாம் சார்! நேரம்தான் கிடைக்க மாட்டேங்குது. கேலக்ஸி பற்றியும் நேரம் கிடைக்கும் போது வந்து சொல்கிறேன். (நானே பேராசிரியர், எனக்கே பாடமா!)

    ReplyDelete
  22. //'மனிதன் குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுப் பகுதிக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது'
    -குர்ஆன்: 86:6,7//

    ஏங்க முழு வசனத்தையும் எழுதுத்தான ஆகும்?

    He was created from a fluid, ejected. Emerging from between the backbone and the ribs

    விலா எலும்பு எவ்வளவு மேல இருக்குது? விந்து பயணிக்கிற இடம் எவ்வளவு 'லோ'வுல இருக்குது!

    விக்கிஇஸ்லாமில் இந்த வசனத்தைப்பத்தி இப்படி எழுதி இருக்காங்க.

    The various Islamic attempts to show that the Quran correctly describes semen production are not supported by modern scientific knowledge.

    ReplyDelete
  23. சுவனப்பிரியன்,
    நான்கேக்குறதை விட்டுட்டு வேற மாதிரி விளக்கங்கள் கொடுக்குறீங்கன்னு நினைக்கிறேன். ( எதற்கும் நானே ஒரு பதிவு போடுகிறேன். அதில் விளக்கம் சொல்லுங்களேன்.)

    உதாரணமா, வானம் உயர்த்துறது பத்தி கேட்டேன். நீங்க சொல்றதுவேற என்னவோ ..

    //ஏங்க .. கடவுள் வானத்தை உயர்த்துறவரு திடீர்னு தராசுக்குப் போறார், //

    ரிப்பீட்டே ..

    ReplyDelete
  24. திரு தருமி!

    //நான்கேக்குறதை விட்டுட்டு வேற மாதிரி விளக்கங்கள் கொடுக்குறீங்கன்னு நினைக்கிறேன். ( எதற்கும் நானே ஒரு பதிவு போடுகிறேன். அதில் விளக்கம் சொல்லுங்களேன்.)

    உதாரணமா, வானம் உயர்த்துறது பத்தி கேட்டேன். நீங்க சொல்றதுவேற என்னவோ ..

    //ஏங்க .. கடவுள் வானத்தை உயர்த்துறவரு திடீர்னு தராசுக்குப் போறார், //////

    இந்த உலகம் முன்பு ஒன்றாக இருந்து மிகப் பெரும் வெடிப்பினால் தூள் தூளாக சிதறி கோள்களும் நட்சத்திரங்களும் உண்டாயின என்று பார்த்தோம். இவைகள் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிக் கொண்டு ஒரு இலக்கை நோக்கி ஓடுவதாக அறிவியல் கூறுகிறது. இப்படி ஆயிரக்கணக்கான கோள்கள் ஓடும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதாமல் அதனதன் பாதையில் செல்வதைப் பார்க்கிறோம். இது எப்படி சாத்தியமாகிறது?

    ஒவ்வொரு கோள்களும் அதனதற்கு ஏற்ப ஈர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. இந்த ஈர்ப்பு ஆற்றலினால் தன் பாதையில் செல்லும் போது வேறு கோள்களால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. இப்படி ஒரு பேலன்ஸை தராசை நிறுவவில்லை என்றால் அனைத்துக் கோள்களும் நம் பூமி உட்பட ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபரீதமாகி விடும்.

    இந்த செயல்பாட்டைத்தான் 'வானத்தை உயர்த்தி கோள்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க தராசை நிறுவினேன்' என்கிறான் இறைவன். இதைத்தானே அறிவியலும் சொல்கிறது! இதில் என்ன தவறை கண்டீர்கள்?

    பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)

    'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'

    ReplyDelete
  25. //பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)

    'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'//


    அந்தப் பொருள் வியாழன் சைஸூக்கெல்லாம் இல்லை ஐயா! அது indefinitely சின்னது அது. அது விரிவடையந்த போதுதான் எலக்ட்ரானகளும் பின் அணுக்களும் வந்தன.

    மேலும் அப்பொருள் விரிவடைகிறது.இது ஈர்ப்பு சக்திக்கு எதிரான செயல் அல்லவா?

    மேலும் நீங்க நினைப்பது போல கடவுள் படைத்த (?, தருமி சார் கோபிப்பார்!) ஈர்ப்பு சக்தி எல்லா சமயத்திலும் நல்லது அல்ல. இரண்டு பொருட்கள் அருகே வந்தால் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு மோதிவிடும். நாம் வாழும் கேலக்ஸியும் (Milky Way) Andromeda கேலக்ஸியும் 2.9 ஒளியாண்டுகளுக்கு பின் அருகே வருவதால் டமால் என கட்டிப்பிடிக்குமாம்! காரணம் இவைகளின் ஈர்ப்பு சக்தி.அப்புறமென்ன பூமி மீது அடுத்த கேலக்ஸி ஐட்டம் ஏதாவது மோதி அழிவுதான்!

    ReplyDelete
  26. நந்தவனத்தான்!

    //மேலும் நீங்க நினைப்பது போல கடவுள் படைத்த (?, தருமி சார் கோபிப்பார்!) ஈர்ப்பு சக்தி எல்லா சமயத்திலும் நல்லது அல்ல. இரண்டு பொருட்கள் அருகே வந்தால் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு மோதிவிடும்.//]

    'வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி நிச்சயமாக இறைவன் தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அதன் பின்னர் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது.'
    -குர்ஆன் 35:41

    இறைவன் உங்கள் கேள்விக்கு எவ்வளவு அழகாக பதிலளிக்கிறான் பாருங்கள்.

    மேலும் சில விளக்கங்களை அளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  27. முகமது நபிக்குப் பிறகு ஆயிரம்வருடங்களுக்குபின் தோன்றிய கலீலியோ, அரிஸ்டாட்டிலின் இயற்பியல் தத்துவமும், வானியல் தத்துவமும் பொய்யானவை என்று நிரூபிக்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

    The Physics of Aristotle versusThe Physics of Galileo

    Aristotle taught that the substances making up the Earth were different from the substance making up the heavens. He also taught that dynamics (the branch of physics that deals with motion) was primarily determined by the nature of the substance that was moving.
    The Dynamics of Aristotle
    For example, stripped to its essentials, Aristotle believed that a stone fell to the ground because the stone and the ground were similar in substance (in terms of the 4 basic elements, they were mostly "earth"). Likewise, smoke rose away from the Earth because in terms of the 4 basic elements it was primarily air (and some fire), and therefore the smoke wished to be closer to air and further away from earth and water. By the same token, Aristotle held that the more perfect substance (the "quintessence") that made up the heavens had as its nature to execute perfect (that is, uniform circular) motion. He also believed that objects only moved as long as they were pushed. Thus, objects on the Earth stopped moving once applied forces were removed, and the heavenly spheres only moved because of the action of the Prime Mover, who continually applied the force to the outer spheres that turned the entire heavens. (A notorious problem for the Aristotelian view was why arrows shot from a bow continued to fly through the air after they had left the bow and the string was no longer applying force to them. Elaborate explanations were hatched; for example, it was proposed that the arrow creating a vacuum behind it into which air rushed and applied a force to the back of the arrow!)

    ReplyDelete
  28. Galileo vs. Aristotle

    Thus, Aristotle believed that the laws governing the motion of the heavens were a different set of laws than those that governed motion on the earth. As we have seen, Galileo's concept of inertia was quite contrary to Aristotle's ideas of motion: in Galileo's dynamics the arrow (with very small frictional forces) continued to fly through the air because of the law of inertia, while a block of wood on a table stopped sliding once the applied force was removed because of frictional forces that Aristotle had failed to analyze correctly.

    In addition, Galileo\'s extensive telescopic observations of the heavens made it more and more plausible that they were not made from a perfect, unchanging substance. In particular, Galileo\'s observational confirmation of the Copernican hypothesis suggested that the Earth was just another planet, so maybe it was made from the same material as the other planets. \nThus, the groundwork was laid by Galileo (and to a lesser extent by others like Kepler and Copernicus) to overthrow the physics of Aristotle, in addition to his astronomy. It fell to Isaac Newton to bring these threads together and to demonstrate that the laws that governed the heavens were the same laws that governed motion on the surface of the Earth.

    http://csep10.phys.utk.edu/astr161/lect/history/aristotle_dynamics.html

    Galileo Came after Prophet Mohammed\nGalileo Galilei Born: 15 Feb 1564 in Pisa (now in Italy)Died: 8 Jan 1642 in Arcetri (near Florence) (now in Italy

    In addition, Galileo's extensive telescopic observations of the heavens made it more and more plausible that they were not made from a perfect, unchanging substance. In particular, Galileo's observational confirmation of the Copernican hypothesis suggested that the Earth was just another planet, so maybe it was made from the same material as the other planets.
    Thus, the groundwork was laid by Galileo (and to a lesser extent by others like Kepler and Copernicus) to overthrow the physics of Aristotle, in addition to his astronomy. It fell to Isaac Newton to bring these threads together and to demonstrate that the laws that governed the heavens were the same laws that governed motion on the surface of the Earth.
    http://csep10.phys.utk.edu/astr161/lect/history/aristotle_dynamics.html



    Galileo Came after Prophet Mohammed
    Galileo Galilei
    Born: 15 Feb 1564 in Pisa (now in Italy)Died: 8 Jan 1642 in Arcetri (near Florence) (now in Italy)

    ReplyDelete
  29. நான் எழுதியது அனக்ஸகோரஸ் (Anaxagoras, not Aristotle) . இவர் முதலில் நிலவு சூர்ய ஒளியை பிரதிபலிக்கும் எனச் சொன்னவர்.

    Aristotle-ன் சில கோட்பாடுகள் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் உலகின் top 3 மேதைகளுள் ஒருவர், (மற்றவர் நியூட்டன், ஐனஸ்டைன்).

    Galileo Came after Prophet Mohammed என ஏன் எழுதியுள்ளீர்கள்?

    Galileo Prophet Mohammed-ன் கோட்பாடுகளை காப்பி அடித்து என்கிறீர்களா?

    ReplyDelete
  30. Galileo-ன் ஈர்ப்பு விசை குறித்தான கோடுபாடுகளுக்கு முன்னோடியாக இருந்தது நபியவர்களே அல்லது குரானே அல்ல!

    ஆனால் முஸ்லிம் அறிவியளார்களான
    Ja'far Muhammad ibn Mūsā ibn Shākir மற்றும்
    Abu Rayhan Biruni
    ,Al-Birjandit போன்றவரின் சிந்தனைகளின் தொடர்ச்சியே Galileo-ன் கோட்பாடுகள்!

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. நந்தவனத்தான்!

    /Aristotle-ன் சில கோட்பாடுகள் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் உலகின் top 3 மேதைகளுள் ஒருவர், (மற்றவர் நியூட்டன், ஐனஸ்டைன்).//

    அறிவியல் ஆய்வுகளில் முன்னணியில் இருந்தவர்களுக்கே சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளது. எழுத்தறிவே இல்லாத முகமது நபி இறைவனிடமிருந்து பெற்றுத் தந்த இந்த குர்ஆன் இன்று வரை எவராலும் குறை காண முடியாததை நினைத்து ஆச்சரியம் வருகிறதல்லவா?

    //Galileo Came after Prophet Mohammed என ஏன் எழுதியுள்ளீர்கள்?

    Galileo Prophet Mohammed-ன் கோட்பாடுகளை காப்பி அடித்து என்கிறீர்களா?//

    //ஆனால் முஸ்லிம் அறிவியளார்களான
    Ja'far Muhammad ibn Mūsā ibn Shākir மற்றும்
    Abu Rayhan Biruni,Al-Birjandit போன்றவரின் சிந்தனைகளின் தொடர்ச்சியே Galileo-ன் கோட்பாடுகள்!//

    நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் கலிலியோவின் காலத்தில் அவர் பேசி வந்த மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. சில சந்தேகங்களுக்கு அவர் குர்ஆனையும் பார்த்திருக்கலாம். அதை உங்களின் அடுத்த பின்னூட்டமும் உறுதி செய்கிறது. நன்றி.

    ReplyDelete
  33. //இந்த குர்ஆன் இன்று வரை எவராலும் குறை காண முடியாததை நினைத்து ஆச்சரியம் வருகிறதல்லவா//

    என்ன ஐயா இப்படி சொல்றீங்க?
    குரானில் 1000 தவறுகள்னு இணையதளமே இருக்கே?


    இதோ இன்னோர் இணையதளம் http://skepticsannotatedbible.com/Quran/index.htm


    இங்கெல்லாம் பாரும்...


    //கலிலியோவின் காலத்தில் அவர் பேசி வந்த மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. சில சந்தேகங்களுக்கு அவர் குர்ஆனையும்பார்த்திருக்கலாம்//

    முடியல!

    குரானுக்கு முன்னாடியே பைபிள் வந்திடுச்சு.அதுக்கு முன்னாடியே பகவத்கீதை வந்திடுச்சு... பாவம் கலிலியோ!

    //அதை உங்களின் அடுத்த பின்னூட்டமும் உறுதி செய்கிறது. நன்றி.//

    ஏங்க முஸ்லிம் அறிஞர்னா சொந்தமாவே யோசிக்க மாட்டங்களா? உட்னே குரானே படிச்சுதான் பிஸிக்ஸ் தியரி எழுதுவாங்கன்னு முடிவு பண்ணிவிடுவதா?

    ReplyDelete
  34. //என்ன ஐயா இப்படி சொல்றீங்க?
    குரானில் 1000 தவறுகள்னு இணையதளமே இருக்கே?


    இதோ இன்னோர் இணையதளம் http://skepticsannotatedbible.com/Quran/index.htm


    இங்கெல்லாம் பாரும்...//

    என்ன... சூடாகி விட்ட மாதிரி தெரிகிறது.

    நீங்கள் கொடுத்த ஒரு சுட்டி பக்கம் ஓபன் ஆகவில்லை. மற்றொரு சுட்டியில் குர்ஆனில் உள்ள தவறுகளின் பட்டியலை என்னால் பார்க்க முடியவில்லை. என்ன தவறு சுட்டப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியல் முடிவோடு குர்ஆன் மோதுகிறது? என்பதை வசன எண்ணோடு தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

    ReplyDelete
  35. //என்ன... சூடாகி விட்ட மாதிரி தெரிகிறது.//

    சேச்சே... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஐயா! அந்த தொனி தெரிந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  36. //நீங்கள் கொடுத்த ஒரு சுட்டி பக்கம் . என்ன தவறு சுட்டப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியல் முடிவோடு குர்ஆன் மோதுகிறது? என்பதை வசன எண்ணோடு தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.//

    இதோ...இவை http://skepticsannotatedbible.com/Quran/science/long.html லிருந்து எடுக்கப்பட்டது. நீளம் கருதியும், சில பாயிண்டுகளை நீக்கிவிட்டேன்,(கூடவே வரலாற்று தவறுகளையும் உ-ம் 5.Crucifixion is a Roman punishment, unknown in Egypt at the time this story supposedly occurred. 7:124).

    1. And He taught Adam all the names."
    Allah taught Adam all the names of the plants and animals, which must have taken a while since there are 1.7 million species that are known today, with probably another 10 million or so that are yet to be discovered. And this only includes those that are alive today. If extinct species are included (~99%), then Allah must have taught Adam a billion or so names. 2:31

    2. Humans created from a single man. 4: 1

    7. Humans created from a single man. 7:189

    8. Joseph saw in a dream eleven planets. Does this mean that according to the Quran there are eleven planets in our solar system? 12:4

    9. "The sun ... runneth unto an appointed term."
    The sun (according to the Quran) orbits the earth. 13:2

    10. "He ... spread out the earth."
    Sounds like a flat earth to me. 13:3 ( மேலும் 15:19, 21:33, 50:7,51:48,78:6-7,79:30 88:20, 91:6)

    12. "And thy Lord inspired the bee, saying ... eat of all fruits."
    Allah told bees to eat from all fruits, but decided to eat nectar and pollen instead. 16:68-68

    17. Allah created all animals. Some with no legs, some with two, and some with four. (Most animals have six legs. Did Allah forget about the insects?) 24:45

    18. The earth is fixed and does not move. 27:61

    19. "He hath subdued the sun and moon to service. Each runneth unto an appointed term."
    The sun orbits the earth. 35:13

    20. "The sun runneth on unto a resting-place for him." 36:38

    21. It is not for the sun to overtake the moon, nor doth the night outstrip the day. They float each in an orbit."
    The sun and the moon orbit the earth. (Well at least Allah and Mo are half right here!) 36:40

    27. "Who hath created seven heavens ... Canst thou see any rifts?"
    Allah asks Muhammed to examine the sky to see if it has any cracks. 67:3

    30. "And hath made the moon a light"
    This verse implies that the moon produces its own light, rather than reflecting light from the sun. 71:16

    34. Humans are formed from "a gushing fluid" that issues "from between the loins and the ribs." 86:5-7

    ReplyDelete
  37. இதோ இன்னும் ஒனறு...

    Quran 7: 54,10: 3,11:7

    The above verses clearly state that God created the heaven and Allah created the heaven and the Earth in 6 days.

    But the verses below stated-

    Quran 41: 9 Is it that ye deny Him who created the earth in Two Days ?

    Quran 41: 10 He set on the (earth) Mountains standing firm high above it, and bestowed blessing on the earth, and measured therein all things to give them nourishment in due proportion, in FOUR DAYS…

    Quran 41: 12 So He completed them (heavens) as seven firmaments in Two days and …

    Now do the math: 2(for earth) + 4(for nourishment) + 2 (for heavens) = 8 days; and not 6 days

    இதில் எது உண்மை?

    மேலும் big bang க்கு பின் உலகம் தோன்ற பல பில்லியன் வருடமானதாக அறிவியல் சொல்லுது!

    நன்றி; http://www.faithfreedom.org/Articles/SKM/contradictions.htm#1

    இப்படி பல தவறுகள் உண்டு ஐயா, மேலும் நீங்கள் விரும்பினால் தருகிறேன்.

    ReplyDelete
  38. நந்தவனத்தான்!

    //Crucifixion is a Roman punishment, unknown in Egypt at the time this story supposedly occurred. 7:124).//

    சிலுவையில் அறைதல் என்பது மத்திய கிழக்கிலும் ஆப்ரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அந்த காலத்தில் குறற்றவாளிகளின் குற்றங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளில் ஒன்று. பாரோ(பிர்அவுன்) மன்னன் தனக்கு கீழ்படியாது மந்திரவாதிகள் தூதர் மோசேயை நம்பி முஸ்லிமானதால் வெகுண்டு அவர்களை சிலுவையில் அறைவதாக கூறுகிறான். எகிப்தில் இந்த தண்டனை முறை முன்பு இருந்துள்ளதை சில திரைப்படங்களிலும் நான் பார்த்துள்ளேன். பைபிள் கூற்றுப்படி ஏசுவை சிலுவையில் அறைந்ததும் மத்திய கிழக்கில்தானே!

    //And He taught Adam all the names."//-2:31

    ஆதமை சொர்க்கத்திலிருந்து அனுப்பும்போது இனி பூமியில் இறைவனால் உலக முடிவு நாள் வரையில் உண்டாக்கப்படக் கூடிய பொருட்கள் அனைத்தின் பெயர்களின் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துத்தான் அனுப்புகிறான். அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவின் சில துளிகள்தான் உலக மனிதர்களாகிய அவரின் பிள்ளகைளாகிய நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. நமக்கு சிரமமாக இருக்கலாம். இறைவனுக்கு சிரமம் இல்லை அல்லவா?

    //2. Humans created from a single man. 4: 1

    7. Humans created from a single man. 7:189//

    ஆதி மனிதன் ஒருவரிலிருந்துதான் மனித இனம் பல்கிப் பெருகியதாக அறிவியலாரும் தற்போது ஒத்துக் கொண்டுள்ளனர். டார்வினின் பரிணாமக் கொள்கை அனுமானம்தானேயொழிய நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல.

    //8. Joseph saw in a dream eleven planets. Does this mean that according to the Quran there are eleven planets in our solar system? 12:4//

    'என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் நான் கனவில் கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்' என்று யூசுப்(ஜோஸப்) தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!'

    இங்கு கௌகப் என்ற அரபிச் சொல்லுக்கு நட்சத்திரங்கள், கோள்கள் என்ற இரண்டு பொருள் வரும். அரபி டிக்ஷனரி இருந்தால் வாங்கிப் பாருங்கள். 'பதினோரு நட்சத்திரங்கள்' என்றுதான் பலரும் மொழி பெயர்த்துள்ளனர்.

    //9. "The sun ... runneth unto an appointed term."
    The sun (according to the Quran) orbits the earth. 13:2’’

    'சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'-13:2

    சூரியனும் ஓடுவதாக தற்கால கண்டுபிடிப்பை அன்றே குர்ஆன் எவ்வளவு அழகாக சொல்கிறது! இங்கு சூரியன் பூமியை சுற்றுவதாக எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது? ஆங்கிலத்தில் யாருடைய மொழி பெயர்ப்பு என்பதை தெரிவியுங்கள். குர்ஆன் மீது பொய்யுரைக்கிறார்கள்.

    இதுவரை நீங்கள் தந்த ஆதாரங்களை வரிசைக்கிரமமாக பதிலளித்துள்ளேன். அதிகம் மொழி பெயர்ப்பில் நடந்த தவறுகளாகத்தான் இருக்கின்றன. மற்றவற்றிற்க்கும் நேரம் கிடைக்கும் போது பதிலளிக்கிறேன்.

    ReplyDelete
  39. இன்று ஒரு சிறிய விபத்து. வலது கையில் கட்டுடன் அமர்ந்துள்ளேன். கை சரியானவுடன் திரும்பவும் வருகிறேன்.

    பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  40. நீங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியவானாக!

    ReplyDelete
  41. // பைபிள் கூற்றுப்படி ஏசுவை சிலுவையில் அறைந்ததும் மத்திய கிழக்கில்தானே//

    ஏசுவை சிலுவையில் அறைந்தது ரோமானியர்.குரானில் குறிப்பிட்ட சம்பவம் நடந்தது மோசஸ் காலத்திற்கு முன்பு. பழங்கால எகிப்து மக்களுக்கு சிலுவை பற்றி தெரியாதாம். அக்காலத்தில் எகிப்து மக்கள் தலையை வெட்டுதல், பலியிடுதல்,நைல் நதியில் மூழ்கடித்தல் இப்படித்தான் மரணதண்டனை நிறைவேற்றுவார்களாம்.

    //இறைவனுக்கு சிரமம் இல்லை அல்லவா?//

    உண்மைதான், ஆனால் ஆதாமிற்கு?

    உலகில் அழிந்தது அழியாதது உட்பட சுமார் 100 கோடி உயிரிகள் உண்டு. இதை எல்லாம் தெரிந்துகொள்ளும் முன்பே ஆதாம் டிக்கெட் வாங்கியிருப்பார்!

    //ஆதி மனிதன் ஒருவரிலிருந்துதான் மனித இனம் பல்கிப் பெருகியதாக அறிவியலாரும் தற்போது ஒத்துக் கொண்டுள்ளனர்.//

    அறிவியல் ஆசாமிகள் ஒத்துக்கொண்ட தியரிக்கு பெயர் 'single origin of humans theory'. அதாவது ஓரிடத்தில் (ஆப்ரிக்கா) இருந்து உருவானவர்கள், ஒரு மனிதனிடத்தில் இருந்து தோன்றியவர்கள் அல்ல.

    //டார்வினின் பரிணாமக் கொள்கை அனுமானம்தானேயொழிய நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல//

    நிருபனம் என்றால் எப்படி? சவுதியின் al-Ikhbariya சானலில் லைவாக பரிணாமம் நடந்ததை காட்டினால்தான் நம்புவீர்களா? DNA கண்டுபிடிக்கப்பட்ட பின் ஏகப்பட்ட ஆதாரங்கள் சேர்ந்துவிட்டது. இன்டர்நெட்டில் நிறைய கிடைக்கிறது எனற போதும் தாங்களின் வசதிக்காக http://evolution.berkeley.edu/
    இங்கே
    What is the evidence for evolution? எனபதை கிளிக்குங்க. ஆதாரம் கிட்டும்.

    //சூரியனும் ஓடுவதாக தற்கால கண்டுபிடிப்பை அன்றே குர்ஆன் எவ்வளவு அழகாக சொல்கிறது! இங்கு சூரியன் பூமியை சுற்றுவதாக எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது?//

    அக்காலத்தில் பூமி நிலையாக இருப்பதாகவும் சூரியன் பூமியை சுற்றுவதாகவும் நம்பினர். பகலில் சூரியன் பூமியை சுற்றிவிட்டு இரவில் ரெஸ்ட் எடுக்கும் என நம்பினர். இதை குரான் வசனமும் (38;38) கூறுகிறது.

    இந்த வசனத்தில் (13:2) குறிப்பிட்ட தவணை (நேரம்) வரை ஓடுகின்றன என வருவதன் அர்த்தம் சூரியன் பகலிலும் ஓடி இரவில் ரெஸ்ட் எடுக்குது என்பதுதானே. ஏனெனில் அவை நில்லாமல் ஓடும் எனச் சொல்லியிருந்தால் சூரியன் தனது orbit-ல் சுத்துவதை குரான் குறிப்பிடுவதாக கொள்ளலாம்.

    மேலும் பூமி சூரியனை சுற்றுவது கடவுளுக்கே தெரியாது போலும், அவர் குரானில் ஓரிடத்தில் கூட இதை சொல்லவில்லை!

    ReplyDelete
  42. உடல் நலம் விரைவில் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)