Sunday, September 13, 2009

கிருத்தவத்தை தழுவிய முஸ்லிம் மாணவி!



அமெரிக்க பத்திரிக்கைகளில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வு பாத்திமா ரிப்கா பேரி என்ற முஸ்லிம் மாணவி கிருத்தவ மார்க்கத்தை தேர்ந்தெடுத்ததை. கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு குடி பெயர்கிறது பேரியின் குடும்பம். பாத்திமாவுக்கு கண்ணில் சிறு ஆபரேஷன் பண்ண வேண்டி இருந்ததால் அமெரிக்காவில் வந்து குடும்பத்தோடு செட்டில் ஆகிறார்கள். தந்தை முகமது பேரி தனது இரு பிள்ளைகளையும் கிறித்தவ கான்வென்டில் படிக்க வைக்கிறார். இங்குதான் பிரச்னை ஆரம்பம் ஆகிறது.

அந்த கான்வென்டில் கிறித்தவ மார்க்கத்தை போதிக்கிறார்கள். அந்த போதனைகளில் மெய் மறந்த பாத்திமா கிறித்தவராக மாறுகிறார் ரகசியமாக. ஒரு முறை பாத்திமாவின் சகோதரன் தன் தங்கை கையில் பைபிளோடு மற்ற குழந்தைகளிடம் மதப் பிரச்சாரம் செய்வதை பார்த்து விடுகிறான். சகோதரியின் நிலைமையை தனது தந்தையிடம் மகன் சொல்ல பிரச்னை வெடிக்கிறது. தனது மகளை திரும்பவும் இஸ்லாத்துக்குள் வந்து விடுமாறு தந்தை கண்டிக்க பிரச்னை அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் பாத்திமா. ஓர்லோண்டோவில் உள்ள சர்ச்சில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் பாத்திமா.

'படிக்க அனுப்பிய குழந்தையை மனம் மாற்றி என்னிடமிருந்து பிரித்து விட்டனர். என் மகள் இன்னும் மேஜராகவில்லை' என்று தந்தை முகமது கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளார். பாத்திமாவோ 'என்னை விட என் பெற்றோர் கடவுளைத்தான் அதிகம் நேசிக்கிறார்கள். நான் திரும்பவும் வீட்டுக்கு செல்ல மாட்டேன்' என்கிறார். இவரின் தாயோ 'என் ஒரே மகளை என்னிடம் திருப்பித் தாருங்கள்' என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

'நூர் இஸ்லாமிய அழைப்பு மையத்தோடு என் பெற்றோர் தொடர்பு வைத்துள்ளனர். நான் அங்கு சென்றால் என்னையும் தீவிரவாதியாக மாற்றி விடுவார்கள். என்னை கொன்றும் விடுவார்கள்' என்று பாத்திமா தனது பெற்றேறாரைப் பற்றி பேட்டியும் கொடுத்துள்ளார்.

ஆனால் நூர் இஸ்லாமிய அமைப்போ புது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை பயிற்றுவிக்கும் அமைப்பாகவும் பல நற்பணிகளையும் செய்து வருகிறது. கொலம்பஸ் மாகாண போலீஸோ பாத்திமாவின் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறது. நூர் இஸ்லாமிய அமைப்பின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த பாத்திமாவை பகடைக்காயாக பயன்படுத்துவதாக முகமது பேரியும் மற்றும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கும் போதே தனது கலாச்சாரத்துக்கு ஏற்ற பள்ளிகளாக பார்த்து சேர்த்தால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகளின் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த வயதுதான் அவர்களை மிகவும் தடுமாற வைக்கும் வயது.

பிற்காலத்தில் ஏசுநாதர் கடவுளல்ல அவரும் முகமது நபியைப்போல ஒரு இறைத்தூதர்தான் என்ற உண்மையை உணருகிறாரா அல்லது கிறித்தவத்திலேயே ஐக்கியமாகி விடுகிறாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

115 comments:

  1. //பிற்காலத்தில் ஏசுநாதர் கடவுளல்ல அவரும் முகமது நபியைப்போல ஒரு இறைத்தூதர்தான் என்ற உண்மையை உணருகிறாரா அல்லது கிறித்தவத்திலேயே ஐக்கியமாகி விடுகிறாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். //

    திரித்துவம் (பிதா சுதன் பரிசுத்த ஆவி) நம்புவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் படி உணரமாட்டார்கள். உங்கள் எதிர்பார்ப்பு வீண்.

    ReplyDelete
  2. Anonymous6:14 AM

    கிறித்துவத்தில் இணைவது பாவமான காரியங்களா?

    ReplyDelete
  3. //திரித்துவம் (பிதா சுதன் பரிசுத்த ஆவி) நம்புவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் படி உணரமாட்டார்கள். உங்கள் எதிர்பார்ப்பு வீண்.//

    என் எதிர்பார்ப்பு பொய்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கிறித்தவ மதத்துக்காகவே தன் வாழ்நாளையும், தன் இளமையையும் இழந்த அன்னை தெரஸாவின் வாக்கு மூலத்தை கீழே தருகிறேன். அன்னை தெரஸாவின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.

    “பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

    “என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

    “என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”

    மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டதில் ஒரு பகுதி.

    ReplyDelete
  4. Anonymous8:07 AM

    கண்டிப்பாக பிற்காலத்தில் உண்மையை உணர்வார். அது இயேசுநாதர் தான் உண்மையான இறை தூதர். முகமது ஒரு பிராடு இறைத்தூதர் என்ற உண்மையை.

    ReplyDelete
  5. ஆக! ஏசு நாதர் கடவுளோ அல்லது கடவுளின் குமாரரோ அல்ல. அவர் இறைவனின் தூதர்தான் என்று சொல்கிறீர்கள். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். ஏசுநாதரை தூதராக ஏற்றுக் கொண்டால் கிருத்தவ மதத்தின் அடிப்படையே தகர்ந்து விடுமே! அதையும் கவனித்தீர்களா?

    ஏசுநாதர் கடவுளின் குமாரர் அல்ல என்பதற்கு அன்னை தெரஸாவே சாட்சி. முகமது நபியை நான் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோனோ அதே அளவு மரியாதையை ஏசுநாதருக்கும் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  6. //முகமது நபியை நான் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோனோ அதே அளவு மரியாதையை ஏசுநாதருக்கும் கொடுக்கிறேன்.//

    :)))

    ReplyDelete
  7. ஜோ!

    சிரிப்பானை போட்டு இருக்கிறீர்கள். நான் சொன்னதில் ஏதும் தவறோ!

    ReplyDelete
  8. சுவனப்பிரியன்,
    இஸ்லாமைப் பொறுத்தவரை கிறிஸ்த்துவர்களும் ,யூத மதத்தவரும் 'People of Book' என கருதப்படுகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன் . ஆனால் இஸ்லாமிலிருந்து ஒரு பெண் கிறிஸ்தவரானதை ஏதோ அந்த பெண் போதைக்கு அடிமையாகி சீரழிந்ததைப் போல இங்கே சொல்லியிருக்கிறீர்கள் . ஏதோ இதுவே உலகத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனை போல நீங்கள் சொல்லியிருப்பது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  9. ஒரு வளர்ந்த, படித்த பெண் தனக்கு தேவையானதை தேர்தெடுக்க இந்த உலகில் உரிமை இல்லையா!?

    இயேசு இறைதூதரா இருந்தாலென்ன அவரை அனுப்பிய கடவுள் தானே உங்களுக்கும் கடவுள்!

    மாடி வீட்டில் இருந்தால் என்ன, குடிசை வீட்டில் இருந்தால் என்ன!?
    இருக்குறான்னு விட்டுட வேண்டியது தானே!

    ReplyDelete
  10. ஜோ!

    //சுவனப்பிரியன்,
    இஸ்லாமைப் பொறுத்தவரை கிறிஸ்த்துவர்களும் ,யூத மதத்தவரும் 'People of Book' என கருதப்படுகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன் . ஆனால் இஸ்லாமிலிருந்து ஒரு பெண் கிறிஸ்தவரானதை ஏதோ அந்த பெண் போதைக்கு அடிமையாகி சீரழிந்ததைப் போல இங்கே சொல்லியிருக்கிறீர்கள் . ஏதோ இதுவே உலகத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனை போல நீங்கள் சொல்லியிருப்பது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.//

    கிருத்தவமும் யூதமும் இஸ்லாத்துக்கு மிக நெருங்கிய மதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நான் பதிவிலே குறிப்பிட்டிருப்பது அந்த பெண்ணின் பெற்றோர்களின் வாக்கு மூலங்களைத்தான். அதை அப்படியே மொழி பெயர்த்து தந்திருக்கிறேன்.

    மேலும் கிறிஸ்து தேவ குமாரனோ அல்லது தேவனோ அல்ல. அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்தான் முகமது நபியைப் போல என்பதை நாம் பைபிளிலேயே பார்க்கிறோம். அதைத்தான் நான் மேலதிகமாக எடுத்துக் காட்டினேன். வேறொன்றுமில்லை. அந்த பெண்ணின் முடிவு அவருக்கும் கடவுளுக்கும் உள்ள பிரச்னை. இதில் யாருடைய வற்புறுத்தலும் எந்த பயனும் அளிக்காதல்லவா!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. வால் பையன்!

    //ஒரு வளர்ந்த, படித்த பெண் தனக்கு தேவையானதை தேர்தெடுக்க இந்த உலகில் உரிமை இல்லையா!?//

    கண்டிப்பாக உரிமை இருக்கிறது. தன் மகள் தேர்ந்தெடுத்த பாதையில் உள்ள சிக்கலை விடுவிப்பதற்கு அதே உரிமை பெற்றோர்களுக்கும் சுற்றத்தாருக்கும் உண்டல்லவா?

    //இயேசு இறைதூதரா இருந்தாலென்ன அவரை அனுப்பிய கடவுள் தானே உங்களுக்கும் கடவுள்!//

    அவரை அனுப்பிய அதே கடவுள்தான் எனக்கும் கடவுள். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

    //மாடி வீட்டில் இருந்தால் என்ன, குடிசை வீட்டில் இருந்தால் என்ன!?
    இருக்குறான்னு விட்டுட வேண்டியது தானே!//

    முகமது நபியைப் போல் ஏசுவையும் ஒரு இறைத்தூதராக பார்த்திருந்தால் மாடி வீட்டுக்கும் குடிசை வீட்டுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது. ஆனால் இங்கு ஏசுவை தேவ குமாரனாக்கி அதற்கும் மேல் கடவுளாகவும் ஆக்கியதுதான் இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் உள்ள வித்தியாசம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. //அந்த பெண்ணின் முடிவு அவருக்கும் கடவுளுக்கும் உள்ள பிரச்னை. இதில் யாருடைய வற்புறுத்தலும் எந்த பயனும் அளிக்காதல்லவா!//
    மிகச்சரியான கருத்து .இறைவனுக்கும் தனிமனிதனுக்கும் உள்ள உறவில் திணிப்பு அல்லது வற்புறுத்தல் செய்வதற்கு யாருக்கும் ,பெற்றோர் உட்பட , உரிமை இல்லை.

    பெற்றோர்களின் கருத்து வேறாக இருந்தால் அவர்கள் அறிவுறுத்தலாம் .அது வரை சரி.

    அதற்காக ஒரு பெண் வேறு நம்பிக்கையை கைக்கொண்டார் என்பதற்காக ஏதோ மாபெரும் மன்னிக்க முடியாத குற்றம் செய்தவர் போல புகைப்படமெல்லாம் இட்டு பொது இடத்தில் புலம்புவது ரொம்ப அதிகமாக தெரியவில்லையா ?

    ReplyDelete
  13. // ஆனால் இங்கு ஏசுவை தேவ குமாரனாக்கி அதற்கும் மேல் கடவுளாகவும் ஆக்கியதுதான் இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் உள்ள வித்தியாசம். //

    இருந்துட்டு போகட்டுமே ..உங்கள் நம்பிக்கையை போலவே எல்லோருக்கும் இருக்க வேண்டும் ,இல்லையென்றால் மாபெரும் குற்றம் என்ற ரீதியில் சொல்வதெல்லாம் ரொம்ப அதிகம் .

    நான் உங்களைச் சொல்லவில்லை .அவர் முஸ்லீம் குடிம்பத்தில் பிறந்ததால் சொல்கிறேன் .அதை பற்றி உங்களுக்கென்ன - என்று நீங்கள் வாதிடுவீர்கள் என்றால் , வாதிடாமல் இருப்பதே நல்லது.

    ReplyDelete
  14. //தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது //

    இதைத்தான் "நாங்களும்" சொல்கிறோம்.

    ReplyDelete
  15. http://www.timesonline.co.uk/tol/comment/faith/article2321124.ece

    கிடைத்துவிட்டது. நன்றி.

    ReplyDelete
  16. தருமி!

    /////தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது //

    இதைத்தான் "நாங்களும்" சொல்கிறோம்.//

    //“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”//- -அன்னை தெரஸா

    இந்த இடத்தில் அன்னை தெரஸாவும் தவறிழைக்கிறார். ஏசு என்றுமே தன்னை வணங்கச் சொல்லி சொல்லவில்லை. தன்னை கடவுளின் குமாரன் என்றும் சொல்லவில்லை. பின்னால் வந்த பவுல் அடிகளும் மார்க், யோவான் பொன்றோரும் தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் எழுதி வைத்ததைத்தான் பைபிள் என்கிறோம். ஏசு எதை மக்களுக்கு போதித்தாரோ அதை வசதியாக மறைத்தும் விட்டோம். மனிதர்களின் கரங்களும் இறைவனின் வாக்கும் கலந்து வருவதே பைபிள். எனவேதான் இதில் முன்னுக்குப் பின் முரணான பல கருத்துகளை நாம் பார்க்கிறோம். அறிவியலோடு பல இடங்களில் மோதுவதையம் பார்க்கிறோம். கிறித்தவ மார்க்கத்தில் பிறந்த நீங்கள் இன்று நாத்திக பாதையை தேர்ந்தெடுத்ததற்க்கான காரணம் பவுலும் மார்க்கும் யோவானுமே ஆகும். ஜோர்டானில் ஏசு பிரசிங்கித்த இன்ஜில் வேதம் தோல்களால் ஆன ஏடுகள் ஒரு ஆட்டிடையனால் கண்டெடுக்கப்பட்டு அது இன்றும் அமெரிக்காவில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இது சம்பந்தமாக 'அந்த ஏட்டுக்குரியோர்' என்ற ஒரு பதிவும் நான் போட்டுள்ளேன். அது கிடைக்கப் பெற்றால் நீங்களும் நாத்திக பாதையை தவிர்ப்பீர்கள். அது சம்பந்தமாக வேறு ஏதும் செய்திகள் கிடைத்தாலும் அன்பர்கள் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  17. சுவனப் பிரியன்,
    உங்கள் தமிழாக்கத்திற்கு முதலில் எனது வாழ்த்து. நன்கு தெளிவாக எழுதியுள்ளீர்கள். நன்று.

    நான் சொல்ல வந்ததை கொஞ்சம் நன்றாகவே திசை திருப்பி விட்டீர்கள். தயவு செய்து உங்கள் முதல் பத்தியை மறுபடி வாசியுங்கள் – “பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன …தவறு செய்து விட்டேனோ?” இதனோடு - “தேவன் இல்லையெனும்போது ..” என்ற வரிகளை மட்டும் நானெடுத்துத் தருகிறேன்.

    இங்கே ஒரு கிறித்துவ மூதாட்டியாக அவர் ஏசுவைப் பற்றிப் பேசுகிறார். நான் சொல்ல வந்தது அதுவல்ல…

    தேவன் இல்லையெனும்போது என்பது மட்டுமே நான் இங்கே எடுத்துக் கொண்டது. வேண்டுமானால், இன்னும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம் - தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே / அல்லாவே நீரும் உண்மையல்ல.” அவரது கடவுள் மறுப்பு என் போன்றோரின் மறுப்பை ஒத்திருப்பதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன். ஏசு கடவுள் அல்ல; அல்லாதான் கடவுள் என்ற பொருளில் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

    அவரது 'இறை மறுப்பை'த் தான் நான் மேற்கோளிட்டேன்.

    ReplyDelete
  18. தருமி சார் கொடுத்த சுட்டியை காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.

    Richard Owen of The Times, in Rome
    Mother Teresa of Calcutta, who has been put on the “fast track” to sainthood, was so tormented by doubts about her faith that she felt “a hypocrite”, it has emerged from a book of her letters to friends and confessors.

    Shortly after beginning her work in the slums of Calcutta, she wrote “Where is my faith? Even deep down there is nothing but emptiness and darkness. If there be a God — please forgive me.”
    In letters eight years later she was still expressing “such deep longing for God”, adding that she felt “repulsed, empty, no faith, no love, no zeal”.

    Her smile to the world from her familiar weather-beaten face was a “mask” or a “cloak”, she said. “What do I labour for? If there be no God, there can be no soul. If there be no soul then, Jesus, You also are not true.”
    Mother Teresa, who died in 1997 and was beatified in record time only six years later, felt abandoned by God from the very start of the work that made her a global figure, in her sandals and blue and white sari. The doubts persisted until her death.

    The nun’s crisis of faith was revealed four years ago by the Rev Brian Kolodiejchuk, the postutalor or advocate of her cause for sainthood, at the time of her beatification in October 2003. Now he has compiled a new edition of her letters, entitled Mother Teresa: Come be My Light, which reveals the full extent of her long “dark night of the soul”.
    “I am told God lives in me — and yet the reality of darkness and coldness and emptiness is so great that nothing touches my soul,” she wrote at one point. “I want God with all the power of my soul — and yet between us there is terrible separation.” On another occasion she wrote: “I feel just that terrible pain of loss, of God not wanting me, of God not being God, of God not really existing.”
    Rev Kolodiejchuk maintains that Mother Teresa did not suffer “a real doubt of faith”, but that, on the contrary, her agonising demonstrates her faith in God’s reality. “We cannot long for something that is not intimately close to us . . . Now we have this new understanding, this new window into her interior life, and for me this seems to be the most heroic,” he said.

    The priest said that the Church authorities had decided to keep her letters even though one of her dying wishes was that they should be destroyed. In one, written to a spiritual adviser, Michael van der Peet, shortly before she received the Nobel Peace Prize in 1979, she wrote that: “Jesus has a very special love for you. As for me, the silence and emptiness is so great that I look and do not see, listen and do not hear. The tongue moves but does not speak.”

    The late Pope, John Paul II, a great admirer of Mother Teresa, began the process of beatification immediately after her death. This required proof of a miracle cure performed through her intercession, and in 2002 the Vatican recognised as a miracle the healing of a stomach tumour in an Indian woman, Monica Besra, who laid a locket containing Mother Teresa’s picture on her abdomen. A second miracle is required for the nun to proceed to canonisation.

    ReplyDelete
  19. தருமி சார்!

    //அவரது 'இறை மறுப்பை'த் தான் நான் மேற்கோளிட்டேன்.//

    விளக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. Anonymous7:40 AM

    //கண்டிப்பாக உரிமை இருக்கிறது. தன் மகள் தேர்ந்தெடுத்த பாதையில் உள்ள சிக்கலை விடுவிப்பதற்கு அதே உரிமை பெற்றோர்களுக்கும் சுற்றத்தாருக்கும் உண்டல்லவா//

    என்ன சிக்கலை அந்த பாதையில் கண்டு விட்டீர்கள். உங்களுக்கெல்லாம் என்ன நினைப்பு. நீங்கள் (முஸ்லீம்கள்) மட்டுமே சரியான வழியில் நடக்கிறீர்கள் மற்றவர்களெல்லாம் தான் தோன்றிதனமாக திரிகிறார்கள் என்றா? கிறிஸ்தவத்தில் சேர்ந்ததால் அந்த பெண்ணின் வாழ்கையே சீரழிந்தது போல் ரொம்பதான் புலம்புகிறீர்களே, உங்களுக்கே ஓவராக தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிறிஸ்தவர்களும், இந்துக்களும் சில நேரங்களில் இஸ்லாமியர்களாக மாறிக்கொண்டு தான் இருக்கிறார்கள் அதற்கெல்லாம் எந்த கிறிஸ்தவனும், இந்துவும் பதிவு எழுதி கூப்பாடு போடுவதில்லையே.
    முகமது வந்து கடவுள் பெயரை சொல்லி இஸ்லாமிய மார்கத்தை உருவாக்கும் முன்பே இந்த உலகில் அவரை விட பெரிய ஞானிகளும் சித்தர்களும் உருவாகி மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று தேவையான அனைத்தையுமே கூறி சென்று விட்டார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த முகமது அதை விட பெரிதாக ஏதும் கூறி விடவில்லை.

    //முகமது நபியைப் போல் ஏசுவையும் ஒரு இறைத்தூதராக பார்த்திருந்தால் மாடி வீட்டுக்கும் குடிசை வீட்டுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது. ஆனால் இங்கு ஏசுவை தேவ குமாரனாக்கி அதற்கும் மேல் கடவுளாகவும் ஆக்கியதுதான் இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் உள்ள வித்தியாசம்//

    அது கிறிஸ்தவத்துக்கும் கிறிஸ்தவனுக்கும் உள்ள பிரச்னை. உங்களுக்கு அது ஏன் குடைகிறது. நாங்கள் இயேசுவை கடவுளாக பார்ப்பதில் இஸ்லாமியர்களுக்கு என்ன பிரச்சனை வந்தது. உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போவது தானே.

    //என் எதிர்பார்ப்பு பொய்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கிறித்தவ மதத்துக்காகவே தன் வாழ்நாளையும், தன் இளமையையும் இழந்த அன்னை தெரஸாவின் வாக்கு மூலத்தை கீழே தருகிறேன். அன்னை தெரஸாவின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.//

    மற்றவர்களை பற்றி என்றால்? உலகில் இன்று அதிகமான மக்கள் பின்பற்றுவது கிறிஸ்தவ மதம் தான். அவர்கள் நம்பிக்கை கெட்டா பின்பற்றுகிறார்கள். சாதாரணமாக மிக கடின துன்பம் வரும்போது எவ்வளவு பெரிய மதவாதியும் இறைவனை திட்டுவது இயல்பு. கடவுளே நீ இருக்கியா? என்று கேட்காத மனிதன் இல்லை. அது போல ஒரு துன்ப நேரத்தில் அன்னை அவர்கள் அதை எழுதி இருக்கலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் அவர்களை உயர்ந்த இடத்திலேயே வைத்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவதிர்க்காக வாழ்ந்த பெண்கள் பலரை நாங்கள் உயர்ந்த ஸ்தானத்திலேயே வைத்திருக்கிறோம். ஆனால் இஸ்லாமில் சொல்ல முடியுமா. முகமதுவின் மனைவி, மகள், தோழியர் தவிர எந்த இஸ்லாமிய பெண்ணை நீங்கள் கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள்.
    பாவம் அந்த பெண். அவளுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத நீங்களே அவளைப்பற்றி இந்த அளவுக்கு கூப்பாடு போடும்போது அவளது உறவுகள் கையில் சிக்கினால் என்ன கதி ஆவாளோ. உண்மையிலேயே இஸ்லாம் சகிப்பு தன்மை உள்ள மார்க்கம்தான். :))

    M. George Thomas

    ReplyDelete
  21. தருமி சார்!

    //இதில் எனக்கு வரும் ஐயம்: இப்படி Gabriel /ஜிப்ரில் என்ற பெயரில் "கடவுள்" ஆதாமிடமிருந்து ஆரம்பித்து பல 'தரவுகளை'த் தர, அவை ஒன்றோடொன்று ஒத்துவராத அந்தத் தரவுகளை எப்படி மனிதக் கரங்களால் மாற்றுப்படுத்த "கடவுள்" விட்டு விட்டார். ஏன் குரானை மட்டுமே பாதுகாத்தவர் முதலிலேயே ஆதாமுக்கோ ஆப்ரஹாமுக்கோ, ஈசாக்குக்கோ கொடுத்தவைகளையும் காத்திருக்கலாமே!? குழப்பம் இல்லாமல் இருந்திருக்கலாமே!?//

    இவ்வளவு ஏன் சார். உலக மக்கள் அனைவரையுமே நல்லவர்களாக படைத்து விட்டால் வேதத்துக்கோ தூதர்களுக்கோ அவசியமே இல்லாமல் போயிருக்கும். எல்லோருமே சொர்க்கத்துக்கு சென்று விடலாம். ஆனால் நம்மை படைத்த இறைவன் மனிதர்களை படைத்து நல்லது இது கெட்டது இது என்று பிரித்தறிவித்து அதை விளக்குவதற்காக வேதத்தையும் தூதர்களையும் தருகிறான். நம்மை படைத்த இறைவன் விலக்கியவைகளை தவிர்த்து நன் மக்களாக வாழ்ந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தைத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.

    அதே போல் ஒவ்வொரு கால கட்டத்திலும் தூதர்களை அனுப்புகிறான். அந்த தூதர் இறந்தவுடன் அந்த மக்கள் இறைவனின் சட்டத்தை மாற்றி விடுகின்றனர். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக மேலும் மேலும் தூதர்களை அனுப்புகிறான். இதில் கடைசி தூதராக முஹமது நபியை தேர்ந்தெடுக்கிறான். இனி உலக முடிவு நாளுக்கு சமீபம் ஏசு நாதரும் பாலஸ்தீன் பகுதியில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்துவார். இவை அனைத்தும் நம்மைப் படைத்த இறைவனின் ஏற்பாடு. இதற்கு முன் உள்ள வேதங்கள் மாற்றப்படாமல் இருந்திருந்தால் ஏசுவுக்கோ முஹமது நபிக்கோ அவசியம் இல்லாமல் போயிருக்கும். இதை எல்லாம் ஏன் இறைவன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு நானும் நீங்களும் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் முன் நிறுத்தப் படும் போது அந்த இறைவனிடமே கேட்போமே!

    ReplyDelete
  22. //இதை எல்லாம் ஏன் இறைவன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு நானும் நீங்களும் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் முன் நிறுத்தப் படும் போது அந்த இறைவனிடமே கேட்போமே! //

    அவருக்கு நாம பேசுறது புரியுமா!?
    எனக்கு ஒருவேளை தண்டனைன்னு சொல்லிட்டா வக்கீல் வச்சு வாதாட முடியுமா?

    நான் தான் தப்பு பண்ணுவேன்னு தெரியுமுல்ல பின்ன ஏன் படைச்சே, உன் மேல தான் தப்புன்னு கேஷை திருப்பி போட்டா கடவுள் என்ன பண்ணுவார்!

    வாளை எடுத்து என் தலையை சீவி விடுவாரா?
    நான் தான் ஏற்கனவே செத்து போயிட்டேனே! அதனால் திரும்பவும் உயிர் வந்துருமா?

    உங்கள் வேதத்தில் சொல்லப்படுள்ள சாத்தானின் பெயர் என்ன?
    இடிபஸா, இக்கிலிப்ஸா?

    அந்த கற்பனையை பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்!

    ReplyDelete
  23. ஆக நீங்கள் சொல்ல வருவது நீங்கள் அமரிக்காவில் வசித்தாலும் பிள்ளைகளை மதரஸாவுக்கு மட்டுமே அனுப்புங்கள் என்று ,

    கண்ணில் பிரச்சனை என வைத்தியத்துக்கு ஏன் ஒரு கிறுத்துவ நாட்டிற்க்கு செல்ல வேண்டும் ? ஓ , நீங்கதான் மதரஸாவில் மதத்தை தவிர வேறு எதையும் குழந்தைகளின் மண்டையில் ஏற அனுமதிப்பதில்லையே ? அப்புறம் எஙக அவங்க விஞ்ஞான , மருத்துவ கண்டுபிடிப்புகளை எல்லம் சாதிக்கிறது ?

    உங்க இஸ்லாம் பின்பற்ற படும் நாடுகளில் மற்ற மதங்களை முதலில் மதிக்கறீங்களா ? அவர்களுக்கு மத சுதந்திரம் உண்டா ?


    இதுல இது அமைதி மார்க்கம்னு கேப்ஷன் வேற .

    ReplyDelete
  24. //உலக மக்கள் அனைவரையுமே நல்லவர்களாக படைத்து விட்டால் வேதத்துக்கோ தூதர்களுக்கோ அவசியமே இல்லாமல் போயிருக்கும். //

    இது ரொம்ப நல்லா இருக்கே!

    //விலக்கியவைகளை தவிர்த்து நன் மக்களாக வாழ்ந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தைத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.//

    எதுக்கு இந்த "விளையாட்டு" பாவப்பட்ட நம்மோடு? ஜெயிச்சா சரி ..தோத்துட்டா நரகம்னு பயமுறுத்துறீங்க ..:(

    //கடைசி தூதராக முஹமது நபியை தேர்ந்தெடுக்கிறான். //

    மனுசன் தோன்றி பல்லாயிரக்கணக்கான வருஷமாச்சு. இப்ப கடைசியில் 1400 வருஷத்துக்கு வந்த மாதிரி ஏன் மொதல்லேயே வரலை. அப்ப அந்த மனுசங்க ..பாவம் ..
    எல்லா மதங்களில் இப்படியெல்லாம் சொன்னாலும், இது "சின்னப்பிள்ளை விளையாட்டு" மாதிரிதானே தோணுது!

    //ஏசு நாதரும் பாலஸ்தீன் பகுதியில் தோன்றி//
    ஓ! மறுபடியும் பாலஸ்தீனம் தான் அந்த ஏரியாவா? அதுவும் புஸ்தகத்தில சொல்லியிருக்கா. "எங்க" மதத்தில மறுபடி வர்ரதா சொல்லியிருக்கிறதா சொல்லுவாங்க ,, ஏரியாவும் சொல்லியிருக்கிறதா எனக்குத் தெரியாது.

    ------------

    //நான் தான் தப்பு பண்ணுவேன்னு தெரியுமுல்ல பின்ன ஏன் படைச்சே, உன் மேல தான் தப்புன்னு கேஷை திருப்பி போட்டா கடவுள் என்ன பண்ணுவார்!//

    இது ... !

    அப்ப நானும் இதையே சொல்லி 'பொழச்சுக்குவேனே'!

    ReplyDelete
  25. //உலக மக்கள் அனைவரையுமே நல்லவர்களாக படைத்து விட்டால் ..//

    அப்போ சாமிதான் நல்லவர்களாக மட்டும் படைக்காமல் (என்ன மாதிரி) மோசமானவர்களையும் படைச்சிட்டார்னு சொல்றீங்க .. இல்லீங்களா?

    ReplyDelete
  26. ஓர் உதவி. முன்பு ஒரு இஸ்லாமியப் பதிவர் பால் எப்படி கிறித்துவத்தை திசை மாற்றினார் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். paul made jesus into a mythic character.

    இதன் நகல் கிடைக்குமா?

    ReplyDelete
  27. /(என்ன மாதிரி) மோசமானவர்களையும்//

    என்னை விட்டுடிங்களே சார்!

    ReplyDelete
  28. //விலக்கியவைகளை தவிர்த்து நன் மக்களாக வாழ்ந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தைத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.//

    விலங்குகளுக்கு சொர்க்கம் கொடுத்தா ”ஆய்” போய் சொர்க்கத்தை அசிங்கம் பண்ணிருமா?

    ReplyDelete
  29. //கடைசி தூதராக முஹமது நபியை தேர்ந்தெடுக்கிறான். //

    முதலாம் நூற்றாண்டில் அதாவது 2000 வருடங்களுக்கு முன் ஈஸா தூதர்,
    பின் நான்காம் நூற்றாண்டில் நபி, அதன் பின் 1600 வருடங்களாக தூதரே தேவைப்படலையாக்கும்!

    தூதர் வேணும்னு முடிவு பண்ண வேண்டியது நீங்களா கடவுளா?

    ReplyDelete
  30. //ஓர் உதவி. முன்பு ஒரு இஸ்லாமியப் பதிவர் பால் எப்படி கிறித்துவத்தை திசை மாற்றினார் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். paul made jesus into a mythic character.

    இதன் நகல் கிடைக்குமா?//

    அதன் நகல் என்னிடம் இல்லை. ஆனால் பவுல் எவ்வாறு ஏசுவின் சரித்திரத்தை மாற்றினார் என்பதை நான் படித்ததை இரண்டொரு நாளில் தனி பதிவாகவே போடுகிறேன். நன்றி.

    ReplyDelete
  31. சுவனப் ப்ரியன்,
    இன்னுமொரு ஐயம். இஸ்லாமிற்கும் பச்சை வண்ணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

    ReplyDelete
  32. தருமி சார்!

    இஸ்லாத்துக்கும் பச்சை நிறத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது பற்றி குர்ஆனிலோ, நபி மொழிகளிலோ எந்த அறிவிப்பும் இல்லை. வெள்ளை நிற உடைகளை விரும்பி அணியுமாறு முகமது நபி தமது தோழர்களைப் பணித்துள்ளார். காவி நிறத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் பணித்துள்ளார். இதைத் தவிர நிறம் சம்பந்தமாக பச்சை நிறத்தைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

    ReplyDelete
  33. பதிவின் மேல் கருத்துறைப்பது எப்படி என்ற முறையை அழகாக பலர் கையாண்டுள்ளார்கள்.நல்ல பதிவை படித்த திருப்தி.

    ReplyDelete
  34. இங்கு நாம் கவனிக்க வேண்டியது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கும் போதே தனது கலாச்சாரத்துக்கு ஏற்ற பள்ளிகளாக பார்த்து சேர்த்தால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகளின் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  35. //இயேசுநாதர் தான் உண்மையான இறை தூதர். முகமது ஒரு பிராடு இறைத்தூதர் என்ற உண்மையை.//

    இறைத்தூதர் என்பதே ஒரு டுபாக்கூர்,
    அதிலென்ன உண்மை, பிராடு!

    உருவமற்ற கடவுள் ஏன் மனிதர்களுக்கு மட்டும் மனித வடிவில் இறைத்துதரை அனுப்ப வேண்டும்!
    மற்ற விலங்குகலூக்கு ஏன் அனுப்பவில்லை!

    அதை படைத்தது வேறு கடவுளா!?

    ReplyDelete
  36. //மனிதர்களின் கரங்களும் இறைவனின் வாக்கும் கலந்து வருவதே பைபிள். எனவேதான் இதில் முன்னுக்குப் பின் முரணான பல கருத்துகளை நாம் பார்க்கிறோம். அறிவியலோடு பல இடங்களில் மோதுவதையம் பார்க்கிறோம்.//

    குரான் மட்டும் அறிவியலோடு ஒன்றி இருக்குதாக்கும்!

    உனது வெளிச்சதற்காக சூரியனை படைத்தேன் போன்ற வாசகமும்,
    தினமும் இரவில் என்னை சூரியன் வணங்கச்செய்தேன் என்றும் வருகிறதா இல்லையா!?

    இரவில் எப்போது சூரியன் கடவுளை வணங்க செல்கிறது!

    சொடுக்கும் நேரத்திலா ஒரு சூரியன் உருவாகிறது!?

    ReplyDelete
  37. //நம்மை படைத்த இறைவன் மனிதர்களை படைத்து நல்லது இது கெட்டது இது என்று பிரித்தறிவித்து அதை விளக்குவதற்காக வேதத்தையும் தூதர்களையும் தருகிறான்.//

    நல்லது எது கெட்டது எது என்று யாருக்கு விளக்குகிறார்!?
    உஅலகம் தோன்றி கோடான கோடி வருடங்களில் தீடிரென்று மனிதனை படைத்து யாருக்கு நல்லது சொல்லி தருகிறார்!

    நாமெல்லாம் காட்சி பொருளா!?
    கடவுளுக்கு அருகில் சக கடவுள்கள் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கிறார்களோ!?

    ReplyDelete
  38. வால் பையன்!

    //நல்லது எது கெட்டது எது என்று யாருக்கு விளக்குகிறார்!?
    உஅலகம் தோன்றி கோடான கோடி வருடங்களில் தீடிரென்று மனிதனை படைத்து யாருக்கு நல்லது சொல்லி தருகிறார்!//

    மனிதர்களுக்குத்தான்.

    'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
    குர்ஆன்-14:4

    'உமது சமுதாயத்தை இருள்களிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு செல்வீராக! இறைவனின் அருட்கொடைகளை நினைவூட்டுவீராக!'
    குர்ஆன் 14:5

    //குரான் மட்டும் அறிவியலோடு ஒன்றி இருக்குதாக்கும்!

    உனது வெளிச்சதற்காக சூரியனை படைத்தேன் போன்ற வாசகமும்,
    தினமும் இரவில் என்னை சூரியன் வணங்கச்செய்தேன் என்றும் வருகிறதா இல்லையா!?

    இரவில் எப்போது சூரியன் கடவுளை வணங்க செல்கிறது!//

    குர்ஆனில் எந்த இடத்தில் இது போன்ற வாசகம் வருகிறது என்று வசன எண்களோடு சொன்னால் பலரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    //உருவமற்ற கடவுள் ஏன் மனிதர்களுக்கு மட்டும் மனித வடிவில் இறைத்துதரை அனுப்ப வேண்டும்!
    மற்ற விலங்குகலூக்கு ஏன் அனுப்பவில்லை!

    அதை படைத்தது வேறு கடவுளா!?//

    மனிதர்களுக்கு நேர்வழி காட்ட மனிதர்களிலிருந்துதானே தூதர்களை அனுப்ப முடியும்! நல்லவை கெட்டவை என்ற பாகுபாடு மிருகங்களுக்கு கிடையாது. என் வீட்டு ஆடு உங்கள் வீட்டிலும் வந்து மேய்ந்து விட்டு சென்று விடும். அதற்காக அதனை தண்டிக்கவும் முடியாது. அதை நேர்வழியில் செலுத்துவது ஆட்டின் சொந்தக்காரனான என் பொருப்பில் வந்து விடும்.

    ReplyDelete
  39. //மனிதர்களுக்கு நேர்வழி காட்ட மனிதர்களிலிருந்துதானே தூதர்களை அனுப்ப முடியும்! நல்லவை கெட்டவை என்ற பாகுபாடு மிருகங்களுக்கு கிடையாது. என் வீட்டு ஆடு உங்கள் வீட்டிலும் வந்து மேய்ந்து விட்டு சென்று விடும். அதற்காக அதனை தண்டிக்கவும் முடியாது. அதை நேர்வழியில் செலுத்துவது ஆட்டின் சொந்தக்காரனான என் பொருப்பில் வந்து விடும். //


    மனுசனுக்கு மட்டும் உயிர் இருக்கு மத்த விலங்குகளுக்கு இல்லைங்கிற மாதிரி இருக்கு இந்த பதில்!
    ஆடு மட்டுமா ஊர் மேயுது, மனுச பயலும் தான் மேயுறான்!
    தனி மனித ஒழுக்கம் வேணும்னு சொல்லுங்க ஒத்துகிறேன், அதுக்காக கடவுள் தூதுவரை அனுப்பினார், அதுவும் அவரவர் மொழிக்கு அனுப்பினார்னா என்ன இது சின்னபுள்ளதனமா?

    அப்ப தமிழுக்கு யார்!?

    சூரியன் வணங்குது, பூமி தட்டைன்னு இருக்கு! நான் குரானை படிச்சி புட்டு புட்டு வைக்க என்ன இந்துத்துவா வக்கிலா!?

    எந்த கடவுளுமே இல்லங்கிறவன போய் குரான் படி, பூரான் புடின்னா என்ன அர்த்தம்!

    ஆனாலும் எதோ ப்ளாக்கில் படித்த ஞாபகம் எடுத்து தர்றேன்!

    ReplyDelete
  40. emmanuel, ஏசு - இப்படி ஒருவர் வருவாரென பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது போல் ஏசு வந்ததாக கிறித்தவர்கள் சொல்வது போல், பழைய ஏற்பாட்டில் முகமது வருகை பற்றி ஏதும் முன் தகவல் உண்டா?

    ReplyDelete
  41. //உனது வெளிச்சதற்காக சூரியனை படைத்தேன் போன்ற வாசகமும்,
    தினமும் இரவில் என்னை சூரியன் வணங்கச்செய்தேன் என்றும் வருகிறதா இல்லையா!?//

    வாலபையன் சொன்னது எனக்குத் தெரியாது. ஆனாலும் இதுபோல பல விஷயங்களைச் சொல்ல முடியும். இப்போது நினைவுக்கு வருவது: 7 அடுக்கு heaven. வானம் என்பதை பாய்போல விரித்து ... இப்படியாகவும் போகும்.

    இவை சரியா?

    இதில் என் முக்கியமான கேள்வி: பல அறிவியல் உண்மைகள் வேத நூல்களில் பொதிந்திருப்பது என்று எல்லா மதத்தினரும் கூறுவது உண்டு. நீங்கள் அதை அதிகமாகவே கூறுவீர்கள். ஆனால் அவைகள் ஏன் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்படவில்லை. சொல்லியிருந்தால் நமக்கும் நல்ல பயனுள்ளதாயிருக்குமே.

    சான்றாக, மனித உயிர் விலா எலும்புகளுக்கும் முதுகெலும்பிற்கும் நடுவில் உள்ள நீர் பாய்ச்சப்படுவதுதால் ஏற்படுகிறது என்று கூறுவதற்குப் பதில் testes -semen என்றெல்லாம் கூறியிருக்கலாம்.

    இப்படி நிறைய கேட்கலாம் ....

    ReplyDelete
  42. வால்ஸுக்கு உதவ:


    seest thou not the Allah merges Night into Day and he merges day into night? (quran 31:29)
    அப்படி ஒண்ணுக்குள்ள ஒண்ணாவா ரெண்டும் இருக்கு?

    He created the heavens and the earth in true; He makes the Night overlap the day and the day overlap the night (39:5)
    அப்படி இரவும் பகலும் கோத்துக்கிட்டா இருக்கு?

    all(celestial bodies) swim along, each in its rounded course (21:33)
    ரவுண்ட்டாவா போகுதுங்க? Elliptical அப்டின்னுல சொல்லுவாங்க…….!

    he who created the heavens and the earth and all that is between (25:59)
    அப்போ மேலே சுவனம்; கீழே நம்ம பூமி நடுவில எல்லா நட்சத்திரம், milky way etc… etc எல்லாம் இருக்கா?


    See ye not How allah has created the seven heavens one above another, and made the moon a light in their midst and made the sun as a lamp (quran 71:15-16)
    அது என்ன ஏழடுக்கு சுவனம்?
    அப்போ சந்திரன் ஒரு விளக்கு ..? (அதுக்கு சுய ஒளியே கிடையாதே!)
    சூரியன் மட்டும் ஒரு விளக்கு .. மற்ற நட்சத்திரம் என்பதெல்லாம்…?

    do not the Unbelievers see that the heavens and earth were joined together before we clove them asunder> (quran 21:30)
    அப்படி ரெண்டும் ஒண்ணாவா இருந்திச்சி? அது ரெண்டும் கடவுள் பிளந்து விட்டாரா … big bang………?!

    ReplyDelete
  43. திரு தருமி!

    //emmanuel, ஏசு - இப்படி ஒருவர் வருவாரென பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது போல் ஏசு வந்ததாக கிறித்தவர்கள் சொல்வது போல், பழைய ஏற்பாட்டில் முகமது வருகை பற்றி ஏதும் முன் தகவல் உண்டா?//

    நீங்கள் கேட்ட ஆதாரம் தமிழில் தற்போது இல்லை. தமிழ் படுத்த நேரமில்லையாதலால் ஆங்கிலத்திலேயே தருகிறேன். பேராசிரியருக்கு சிரமமிருக்காது என்றே நினைக்கிறேன்.

    Jesus confirmed the validity of the Torah which was revealed to Moses and he also brought the glad tiding of the coming of a final messenger after him. This is clearly indicated in the following verse:

    “And when Jesus son of Mary said, “children of Israel, I am indeed the messenger to you, confirming the Torah that is before me and giving good tidings of a Messenger who shall come after me, whose name shall be the praised one(note that this is translation of Ahamed which is Prophet Mohamads name) (61:6)

    ('முகமது' 'அஹமது' என்ற இரண்டு பெயர்களும் முகமது நபிக்கு உண்டு. அந்தப் பெயரை தமிழில் மொழி பெயர்த்தால் 'புகழப்பட்டவர்' என்ற பொருள் வரும்.)

    The Messenger of whom Jesus gave glad tidings is referred to in both the old and new testaments of the Bible. The Old testament contains several prophecies that apply only to the Prophet Mohamed. I quote only one of those which applies to none except Prophet Mohamed. This prophesy which was addressed to Moses said that God will send among the “brethren” of the Israelites, a prophet like Moses who will be a founder, a leader, and an exemplar of a community of believers. We read this in the following verses of Duet. Ch 18

    “I will raise up for them a Prophet like you from among their brethren: and I will put my words in his mouth, and he shall speak to them all that I command him. And whoever will not give heed to my words which he shall speak in My name. I My self require it of him.(Deut 18:18-20)

    Any one who is familiar with Prophet Mohammads life, can easily see that no one fits the above description better than Prophet Mohamed. It was Prophet Mohamed, not Jesus, who like Moses was born from ordinary parents, got married, founded a faithful community, established a great law and died a natural death.

    Careful study of the New Testament shows that this same Prophet is referred to by Jesus in John 14:16,17

    “And I will pray the father and he will give you another counselor, to be with you for ever, even the Spirit of truth.”

    இதல்லாமல் இதற்கு மேலும் ஆதாரங்கள் இருக்கிறது. கேட்டீர்கள் என்றால் அதையும் தருகிறேன். நன்றி.

    மேலும் அறிவியல் சம்பந்தமாக நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் பிறகு பதிலளிக்கிறேன்.

    ReplyDelete
  44. //பதிவின் மேல் கருத்துறைப்பது எப்படி என்ற முறையை அழகாக பலர் கையாண்டுள்ளார்கள்.நல்ல பதிவை படித்த திருப்தி.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வடுவூர் குமார்.

    ReplyDelete
  45. கொஞ்சம் சான்றுகளாக ஜாகிர் நாய்க் புத்தகத்திலிருந்துதான் எடுத்திருக்கிறேன். அவரைப் போலவே - அவைகள் கொஞ்சமும் சரியாக எனக்குத் தோன்றவில்லை - பதிலளிக்காமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  46. வேத நூல்களின் வேலை அறிவியல் போதிப்பதற்காக இல்லை. ஆயினு நீங்கள் உங்கள் வேதப் புத்தகம் அறிவியல் களஞ்சியம் என்று கூறுவதால் ..,. :

    ஏன் அந்த அறிவியல் விஷய்ங்கள் அரைகுறையாக போதிக்கப்படுகின்றன. நான் சொன்னதுபோல் நேரடியாக போதிக்கப்பட்டிருக்கலாமே ... நமக்கு கண்டுபிடிப்புகள் ஈசியாக போயிருக்குமே ... (இது என் பழைய கேள்விதான்!)

    ReplyDelete
  47. திரு வெங்கட்!

    //இங்கு நாம் கவனிக்க வேண்டியது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கும் போதே தனது கலாச்சாரத்துக்கு ஏற்ற பள்ளிகளாக பார்த்து சேர்த்தால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகளின் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.//

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே! பிரச்னையின் மூலம் எது என்று தெரிந்து அதை களைந்தால் பல சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்.

    இஸ்லாமியர்களிடத்தில் வேறொரு சிக்கலும் உண்டு. மதரஸாக்கள் என்று இஸ்லாமிய போதனையை சொல்வதற்கென்று உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கும் முறையாக இஸ்லாம் சொல்லித் தரப்படுவதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் மொட்டை அடிக்க வேண்டும், ஜிப்பா போன்ற நீண்ட அங்கி அணிய வேண்டும், தலையில் கண்டிப்பாக தொப்பி அணிய வேண்டும். இந்த புற அடையாளங்களுக்கும் இஸ்லாத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. 'தொப்பி' என்ற பொருளில் வரும் வார்த்தை கூட குர்ஆனிலோ நபி மொழியிலோ பார்க்க முடியாது. தற்போது ஓட்டுக்காக அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் தொப்பி போட்டு ஏமாற்ற சௌகரியமாக இருக்கிறது. இங்கு அரபு நாடுகளில் மசூதிகளில் தொழக்கூடியவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களிடம் தொப்பி இருக்காது.

    பாடத்திட்டங்களும் இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாத கட்டுக் கதைகளே சொல்லித்தரப்படுகின்றன. முஸ்லிம் கான்வென்டுகள் ஓரளவு முஸ்லிமகளுக்கு தரமான கல்வியை வழங்கி வருகின்றன.

    ReplyDelete
  48. Anonymous6:29 AM

    ஒரே ஒரு பொம்பள போனதுக்கே இவ்வளவுஒப்பாரியா...

    பாகிஸ்தானில் நித்தம் நித்தம் இந்து, சீக்கியப்பெண்களை, பெண்குழந்தைகளை பலாத்காரம் செய்து மதம் மாற்றிவிடுகின்றனரே அதுக்கெல்லாம் என்ன சொல்லப்போகிறீர்கள் ?

    இஸ்லாம் என்ற மார்க்கம் ஒருவழிப்பாதையல்ல. அப்படி நினைப்பவர்கள் அடிப்படைவாதிகள் மட்டுமே.

    ReplyDelete
  49. ////விலக்கியவைகளை தவிர்த்து நன் மக்களாக வாழ்ந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தைத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.//

    விலங்குகளுக்கு சொர்க்கம் கொடுத்தா ”ஆய்” போய் சொர்க்கத்தை அசிங்கம் பண்ணிருமா?//

    என்ன கொடுமை வால்பையன் ஐயா இது !

    விலக்கியவைகள் ,விலங்குகள் ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு :)

    ReplyDelete
  50. திரு தருமி!

    //See ye not How allah has created the seven heavens one above another, and made the moon a light in their midst and made the sun as a lamp (quran 71:15-16)
    அது என்ன ஏழடுக்கு சுவனம்?
    அப்போ சந்திரன் ஒரு விளக்கு ..? (அதுக்கு சுய ஒளியே கிடையாதே!)
    சூரியன் மட்டும் ஒரு விளக்கு .. மற்ற நட்சத்திரம் என்பதெல்லாம்…?//

    'வானத்தில் நட்சந்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும் ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்'
    25 : 61 - குர்ஆன்

    சந்திரன் தன் சொந்த ஒளியினாலே பிரகாசிக்கிறது என்று முந்தைய மனிதர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இன்று சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனின் ஒளியைத்தான் அது பிரதிபலிக்கின்றது என்று விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர். அதாவது சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி அதைத் திரும்ப வெளியிடுகிறது. ஆகையால் நாம் சந்திரனைக் காணும் போது அதில்காணும் ஒளியானது சந்திரனின் ஒளியல்ல. சூரியனின் ஒளியைத் தான் அது திரும்பக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது என்று சில ஆண்டுகளுக்கு முன்தான் விஞ்ஞானம் கண்டறிந்து கூறியது.

    குர்ஆன் சந்திரனின் ஒளிக்கு 'முனீர்' என்னும் பதத்தை உபயோகப் படுத்தியுள்ளது. இந்த அரபி பதத்துக்கு நேரடியான பொருள் பிரதிபலிக்கின்ற ஒளி. மிகவும் கவனமாக நேர்த்தியாக சந்திரனின் ஒளியை பிரதிபலித்தல் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளதால் குர்ஆன் இறை வாக்குதான் என்பது மேலும் உறுதியாகிறது.

    'சந்திரனை ஒளியாக அமைத்தான். சூரியனை விளக்காக அமைத்தான்.'
    -குர்ஆன்71:16

    இங்கும் சந்தினின் பிரகாசத்தையும் சூரியனின் பிரகாசத்தையும் வேறுபடுத்தி வார்த்தைகள் வந்திருப்பதை கவனியுங்கள். இரண்டு ஒளிகளுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை காட்டவே லைட்,லேம்ப் என்று குர்ஆன் வித்தியாசப்டுத்துகிறது.

    எனவே நீங்கள் எடுத்துக்காட்டிய வசனமே இது இறை வேதம்தான் என்று மெய்ப்பிக்கிறது.

    ReplyDelete
  51. //சான்றாக, மனித உயிர் விலா எலும்புகளுக்கும் முதுகெலும்பிற்கும் நடுவில் உள்ள நீர் பாய்ச்சப்படுவதுதால் ஏற்படுகிறது என்று கூறுவதற்குப் பதில் testes -semen என்றெல்லாம் கூறியிருக்கலாம்.//-Dharumy

    நாம் இப்போது அறிவியல் முதிர்ச்சி அடைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் முகமது நபி காலத்து மக்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்கு அறிவியல் வார்த்தைகளை எல்லாம் போட்டு சொன்னால் புரியவில்லை என்று குர்ஆனைத் தொடவே மாட்டார்கள். அந்த கால மக்களுக்கும் புரிய வேண்டும். நாம் வாழும் கம்ப்யூட்டர் யுக மனிதர்களுக்கும் பொருந்த வேண்டுமாயின் இரண்டுக்கும் இடைப்பட்ட மொழியில்தான் சொல்ல வேண்டும். அதைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

    மேலும் குர்ஆன் இறங்கியது மக்களுக்கு சட்டங்களை சொல்வதற்காக. அது இறைவன் வாக்குதான் என்று நிரூபிக்கத்தான் அறிவியல் சமாச்சாரங்களை அனைவரும் கையிலெடுப்பர்.

    ReplyDelete
  52. @சுவனப்பிரியன், ஒருவர் தனது மதத்தை மாற்றிக் கொண்டதை ஏன் தவறாக எண்ணுகிறீர்கள்? தனிமனிதன் சுதந்திரத்தில் ஒன்றுதான் "அவர் விரும்பும் மதத்தை தேர்ந்து எடுக்கும் உரிமை". அடுத்தவர் தலையீட்டில் ஆகப்போவது ஒன்றும் இல்லை. இஸ்லாமும் விருப்ப பட்டு வருகிறவர்களுக்குதான்.

    ReplyDelete
  53. Anonymous11:58 PM

    கேள்வி: குர் ஆன் இறைவேதம் என்பது எப்படி சொல்கிறீர்கள் ?

    பதில்: முகம்மது சொல்கிறார்.

    கேள்வி: முகம்மது இறைதூதர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் ?

    பதில்: குர் ஆன் அப்படிச்சொல்கிறது.

    இதற்குப் பெயர் தான் circular logic.

    ReplyDelete
  54. //கேள்வி: குர் ஆன் இறைவேதம் என்பது எப்படி சொல்கிறீர்கள் ?

    பதில்: முகம்மது சொல்கிறார்.

    கேள்வி: முகம்மது இறைதூதர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் ?

    பதில்: குர் ஆன் அப்படிச்சொல்கிறது.

    இதற்குப் பெயர் தான் circular logic.//

    கேள்வி: குர்ஆன் இறை வேதம் என்று எப்படி நம்புகிறீர்கள்.?

    முஸ்லிம்: 'முஹம்மதுக்கு நாம் அருளிய குர்ஆனில் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
    -குர்ஆன்:2:23

    'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
    -குர்ஆன்:4:82

    குர்ஆன் விடும் இது போன்ற பல சவால்களை உலகில் இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லையாதலால் நாங்கள் குர்ஆனை இறை வேதமாக இன்றும் நம்புகிறோம்.

    ReplyDelete
  55. மஸ்தான்!

    //சுவனப்பிரியன், ஒருவர் தனது மதத்தை மாற்றிக் கொண்டதை ஏன் தவறாக எண்ணுகிறீர்கள்? தனிமனிதன் சுதந்திரத்தில் ஒன்றுதான் "அவர் விரும்பும் மதத்தை தேர்ந்து எடுக்கும் உரிமை". அடுத்தவர் தலையீட்டில் ஆகப்போவது ஒன்றும் இல்லை. இஸ்லாமும் விருப்ப பட்டு வருகிறவர்களுக்குதான்.//

    எவரையும் வற்புறுத்தி ஒரு மார்க்கத்தில் சேர்ப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதுதான் என் கருத்தும். தற்போது அந்த பெற்றோர் 'என் மகளுக்கு சரியாக இஸ்லாமிய கல்வியை புகட்டாதது எங்கள் தவறுதான்' என்று புலம்பும் நிலைக்குத் தள்ளப்படடுள்ளார்கள். பத்திரிக்கைக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். இந்த நிலை மற்ற பெற்றோருக்கும் வந்து விடக் கூடாதென்பதாலும், ஒரு செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும்தான் இந்த பதிவை இட்டேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  56. அனானி!

    நீங்கள் அனுப்பிய இரண்டு பின்னூட்டத்தையும் நான் வெளியிடவில்லை. காரணம் முகமது நபியின் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லும்போது அதற்கான ஆதாரத்தை தர வேண்டும். அனைத்தும் உங்கள் சொந்தக் கருத்தாகவும், இட்டுக்கட்டப்பட்டதாகவும் இருந்ததால் வெளியிடவில்லை. நன்றி.

    ReplyDelete
  57. சுவன பிரியன் சார், அதில் குறிப்பிட்டிருந்த உரையாடல் என்னுடைய சொந்த கருத்துதான். ஆனால் அடுத்து குறிப்பிட்டிருந்த சம்பவம் உங்கள் சகோதரர்களின் பதிவில் இருந்து அப்படியே நான் காப்பி பேஸ்ட் செய்ததுதான் இதில் போய் பார்த்து கொள்ளுங்கள்

    http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_23.html

    (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.

    "அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார்". (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

    http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_23.html

    ReplyDelete
  58. Anonymous7:45 AM

    //அந்த பெற்றோர் 'என் மகளுக்கு சரியாக இஸ்லாமிய கல்வியை புகட்டாதது எங்கள் தவறுதான்' என்று புலம்பும் நிலைக்குத் தள்ளப்படடுள்ளார்கள். பத்திரிக்கைக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். இந்த நிலை மற்ற பெற்றோருக்கும் வந்து விடக் கூடாதென்பதாலும்//
    அக்கறை நல்லா இருக்கே, இது போலவே உங்களால் மதம் மாற்றப்படுகின்ற கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களுக்கும் பெற்றோர்கள் இருப்பார்களே. அவர்கள் புலம்ப மாட்டார்களா. அவர்கள் மட்டும் பிள்ளைகளை வயிற்றில் சுமந்து பெறவில்லையோ


    P.G. Thomas

    ReplyDelete
  59. //வெள்ளை நிற உடைகளை விரும்பி அணியுமாறு முகமது நபி தமது தோழர்களைப் பணித்துள்ளார். காவி நிறத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் பணித்துள்ளார்.//

    இந்த clolor selection கடவுளுக்கு எதுக்கு? தேவையா?

    ReplyDelete
  60. //இதற்குப் பெயர் தான் circular logic.//

    வால்ஸ்,
    குரான் கடவுளின் வார்த்தைகள் என்று எப்படி நம்புவது என்று கேட்டால் மறுபடி குரானிலிருந்தே ஒரு மேற்கோள்!

    ReplyDelete
  61. //நீங்கள் எடுத்துக்காட்டிய வசனமே இது இறை வேதம்தான் என்று மெய்ப்பிக்கிறது.//

    good joke!!

    ReplyDelete
  62. திரு தாமஸ்!


    //அக்கறை நல்லா இருக்கே, இது போலவே உங்களால் மதம் மாற்றப்படுகின்ற கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களுக்கும் பெற்றோர்கள் இருப்பார்களே. அவர்கள் புலம்ப மாட்டார்களா. அவர்கள் மட்டும் பிள்ளைகளை வயிற்றில் சுமந்து பெறவில்லையோ//


    பெரியவர்களாக விரும்பி விளங்கி ஒரு மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களின் உரிமை. ஆனால் கல்வி கற்க அனுப்பிய ஒரு சிறுமியை வேறொரு மதத்தில் சேர்த்து இத்தனை நாளும் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களிடம் பிள்ளையை அனுப்பாமல் தடுத்து வைப்பது என்பது எந்த வகை நியாயம்?. அதிலும் குறிப்பாக கிறித்தவ மிஷினரிகள் நடத்தும் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக மத அனுஷ்டானங்களை கடைபிடிக்கச் சொல்லி வற்புறுத்துவதை தமிழகத்திலேயே நாம் பார்க்கலாம். இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். மற்றபடி ஒருவர் ஒரு மதத்தை விட்டு செல்வதால் அந்த மதத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டுவிடப் பொவதில்லை.

    ReplyDelete
  63. திரு எட்மண்ட்!

    //சுவன பிரியன் சார், அதில் குறிப்பிட்டிருந்த உரையாடல் என்னுடைய சொந்த கருத்துதான். ஆனால் அடுத்து குறிப்பிட்டிருந்த சம்பவம் உங்கள் சகோதரர்களின் பதிவில் இருந்து அப்படியே நான் காப்பி பேஸ்ட் செய்ததுதான் இதில் போய் பார்த்து கொள்ளுங்கள்//

    ஒத்துக் கொண்டதற்கு நன்றி!

    //நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.//

    இதில் என்ன தவறை கண்டு விட்டீர்கள்? நம் ஊரில் ஒரு பிராமணப் பெண் ஒரு தலித்தை மணந்து கொள் என்று சொன்னால் அவ்வளவு லேசில் ஒத்துக் கொள்வார்களா? நம் தமிழகத்தை விட சாதிக் கொடுமை அரபு நாடுகளில் அன்றைய தினம் மிகைத்திருந்தது. 'இறைவனின் வார்த்தை' என்றவுடன் ஜைனப் உடன் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார் அல்லவா? இதை முன்னுதாரணமாகக் கொண்டு அடுத்தடுத்து கலப்புத் திருமணம் எத்தனை நடந்தது? இன்று சாதி என்ற ஒன்றே இல்லாமல் 'அனைவரும் முஸ்லிம்கள்' என்ற ஒரு குடையின் கீழ் அனைத்துலக முஸ்லிம்களும் வந்து விட வில்லையா? இன்று நானும், சவூதி நாட்டவரும், சூடான் நாட்டவரும், எகிப்து நாட்டவரும், ஒரே தட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோமே! நாடு விட்டு நாடு திருமணங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறதே! இதற்க்கெல்லாம் காரணம் இது போன்ற குர்ஆனிய வசனங்கள் தான் என்றால் மிகையாகாது.

    எங்கள் வீட்டில் மேரி என்ற பெண் கடந்த 10 வருடமாக வீட்டு வேலை செய்து வருகிறார். அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவ்வப்போது கேட்பேன். மேரி என்று அவரது பெயர்தான் மாறியிருக்கிறதேயொழிய வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை. அந்த சேரியில் உள்ள மாதா கோவிலுக்கு வரும் பாதரும் ஒரு தாழ்த்தப்பட்டவர். வேறு சாதிக்காரர்கள் வருவதில்லை. வேறு சாதிக் கிறித்தவர்கள் மணம் முடிப்பதுமில்லை. மாரி மேரியானார், ராமர் ராபர்ட் ஆனார், விவேக் வில்லியம்ஸ் ஆனார். அரசாங்கம் அழகான கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் இவர்களுக்கு ரயில் தண்டவாளங்களுக்கு இரண்டு புறமும் அமர்ந்து காலைக் கடனைக் கழிப்பதுதான் நிம்மதியாக இருக்கிறது. குடித்து விட்டு தெருவில் உருளுவதிலும் எந்தக் குறைவுமில்லை. பெயர்கள்தான் மாறியிருக்கிறதேயொழிய நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இன்னமும் பாப்பாரப் பட்டி, கீழ் வெண்மணி சம்பவங்கள், இரட்டைக் குவளை முறை ஆங்காங்கே நடந்து கொண்டுதானே இருக்கிறது?

    ReplyDelete
  64. தருமி சார்!

    நாத்திகம் உங்கள் கண்களை நன்றாக மறைக்கிறது. நல்ல உள்ளம் கொண்டவர். நல்ல ஆசிரியர். சிறந்த பழக்க வழக்கங்கள் உடையவர். இப்படிப்பட்ட குணங்களுக்கு சொந்தக்காரர் இறப்புக்குப்பின் பரலோக ராஜ்ஜியத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற வேண்டாமா?

    நீங்கள் கிறித்தவராகவே இருந்து கொள்ளுங்கள். ஆனால் ஏசுவை இறைவனின் மகனாகப் பார்க்காமல் ஏசுவைக் கடவுளாகப் பார்க்காமல் அவரை ஒரு இறைத்தூதராகப் பாருங்கள். அவர் மக்களுக்கு எதைப் பிரசிங்கித்தார் என்று தேடுங்கள். மனிதன் என்றுமே கடவுளாக முடியாது.

    தேடுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்:

    ReplyDelete
  65. //நல்ல உள்ளம் கொண்டவர். நல்ல ஆசிரியர். சிறந்த பழக்க வழக்கங்கள் உடையவர். //

    ஹலோ! யாருங்க இந்த ஆளு??

    ReplyDelete
  66. //தேடுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்://

    இது நடக்காத ஒரு விஷயம் என்று முன்பே எழுதியுள்ளேன். predeterminism vs omniscience ... என்று.

    ReplyDelete
  67. //"அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை.//

    ஆக, ஒரு இஸ்லாமியர் / முஃமின் என்ன நல்லது / கெட்டது செய்தாலும், அது அல்லா & நபி அவர்களின் முடிவு என்பதாகிறது.

    சரிதானே?

    ReplyDelete
  68. //நல்ல உள்ளம் கொண்டவர். நல்ல ஆசிரியர். சிறந்த பழக்க வழக்கங்கள் உடையவர். இப்படிப்பட்ட குணங்களுக்கு சொந்தக்காரர் இறப்புக்குப்பின் பரலோக ராஜ்ஜியத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற வேண்டாமா? //

    நல்ல உள்ளம் கொண்ட ,நல்ல ஆசிரியரான ,சிறந்த ப்ழக்க வழக்கங்களை உடைய ஒருவருக்கு பரலோக ராஜியத்தில் நுழைய வேறென்ன தகுதி வேண்டும் ?

    ReplyDelete
  69. //மனிதன் என்றுமே கடவுளாக முடியாது.//

    இது எப்படி உங்கள் நம்பிக்கையோ அது போல கடவுள் மனிதனாகலாம் என்பது இன்னொரு சாராரின் நம்பிக்கை ..இரண்டுமே நம்பிக்கைகள் தான் .. அறிவியல் உண்மை இல்லை .

    ReplyDelete
  70. //அதிலும் குறிப்பாக கிறித்தவ மிஷினரிகள் நடத்தும் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக மத அனுஷ்டானங்களை கடைபிடிக்கச் சொல்லி வற்புறுத்துவதை தமிழகத்திலேயே நாம் பார்க்கலாம். இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். //

    ஓகோ :) அப்துல் கலாம் ,சோ இவங்கள்ளாம் இப்படித் தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாங்க போல :)

    //மற்றபடி ஒருவர் ஒரு மதத்தை விட்டு செல்வதால் அந்த மதத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டுவிடப் பொவதில்லை.//

    உண்மையாவா? அப்போ எதுக்கு பொங்கி எழுந்து ஏதோ மாபாவம் நடந்து விட்டது போல இந்த பதிவு போட்டீர்கள்?

    ReplyDelete
  71. //நல்ல உள்ளம் கொண்ட ,நல்ல ஆசிரியரான ,சிறந்த ப்ழக்க வழக்கங்களை உடைய ஒருவருக்கு பரலோக ராஜியத்தில் நுழைய வேறென்ன தகுதி வேண்டும் ?//

    இது மட்டும் போதுமா? தன்னைப் படைத்த கடவுள் யார்? அவரின் தகுதிகள் என்ன? அவருக்கு இணையாக யாரையும் வணங்காதிருத்தல்: அந்த இறைவனை மட்டுமே வணங்குதல் போன்ற தன்மைகளும் அதே மனிதனுக்கு சேர்ந்து விட்டால் பிறகென்ன சொர்க்கம்தான். இதை பைபிளில் இருந்தே பார்ப்போம்.

    தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
    -யோவான் 1 : 18

    மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
    -பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)

    ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
    -பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)

    //இது எப்படி உங்கள் நம்பிக்கையோ அது போல கடவுள் மனிதனாகலாம் என்பது இன்னொரு சாராரின் நம்பிக்கை ..இரண்டுமே நம்பிக்கைகள் தான் .. அறிவியல் உண்மை இல்லை //

    இது தவறான நம்பிக்கை என்பதை பைபிளிலிருந்தே ஆதாரம் தந்திருக்கிறேன்..

    ReplyDelete
  72. Anonymous5:16 PM

    சுவனப்பிரியன் said...
    //நல்ல உள்ளம் கொண்ட ,நல்ல ஆசிரியரான ,சிறந்த ப்ழக்க வழக்கங்களை உடைய ஒருவருக்கு பரலோக ராஜியத்தில் நுழைய வேறென்ன தகுதி வேண்டும் ?//

    இது மட்டும் போதுமா? தன்னைப் படைத்த கடவுள் யார்? அவரின் தகுதிகள் என்ன? அவருக்கு இணையாக யாரையும் வணங்காதிருத்தல்: அந்த இறைவனை மட்டுமே வணங்குதல் போன்ற தன்மைகளும் அதே மனிதனுக்கு சேர்ந்து விட்டால் பிறகென்ன சொர்க்கம்தான். இதை பைபிளில் இருந்தே பார்ப்போம்.

    தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
    -யோவான் 1 : 18

    மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
    -பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)

    ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
    -பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)

    //இது எப்படி உங்கள் நம்பிக்கையோ அது போல கடவுள் மனிதனாகலாம் என்பது இன்னொரு சாராரின் நம்பிக்கை ..இரண்டுமே நம்பிக்கைகள் தான் .. அறிவியல் உண்மை இல்லை //

    இது தவறான நம்பிக்கை என்பதை பைபிளிலிருந்தே ஆதாரம் தந்திருக்கிறேன்.//

    ஒருவேளை ஆப்ரகாமிய மத நரகம், மற்றவர்களுக்கு சொர்க்கமாக இருக்குமோ.

    ஆபிரகாமிய மதங்களின் கோட்பாடுகள் மட்டுமே உங்களுக்கு ஆதாரமாக தெரிவது எனக்கு வியப்பளிக்கிறது. உலகம் ஆபிரகாமிய மதங்களை தாண்டியும் உள்ளது அய்யா.

    ReplyDelete
  73. ////இது எப்படி உங்கள் நம்பிக்கையோ அது போல கடவுள் மனிதனாகலாம் என்பது இன்னொரு சாராரின் நம்பிக்கை ..இரண்டுமே நம்பிக்கைகள் தான் .. அறிவியல் உண்மை இல்லை //

    இது தவறான நம்பிக்கை என்பதை பைபிளிலிருந்தே ஆதாரம் தந்திருக்கிறேன்..
    //

    பைபிளிலிருந்து ஆதாரமும் ஒரு நம்பிக்கை தான் .பைபிள் ,குரான் தவிர வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்கள் உலகில் ஏராளம் உள்ளனர்.

    ReplyDelete
  74. //இது மட்டும் போதுமா? தன்னைப் படைத்த கடவுள் யார்? அவரின் தகுதிகள் என்ன? அவருக்கு இணையாக யாரையும் வணங்காதிருத்தல்: அந்த இறைவனை மட்டுமே வணங்குதல் போன்ற தன்மைகளும் அதே மனிதனுக்கு சேர்ந்து விட்டால் பிறகென்ன சொர்க்கம்தான். //

    ஆக எவ்வளவு பெரிய யோக்கியனாக இருந்தாலும் ,நீங்கள் சொல்லும் இந்த மேலதிக நம்பிக்கை சார்ந்த தகுதிகள் இல்லையென்றால் நரகம் தானா?

    (மீண்டும் பைபிளிலிருந்து ஆதாரம் தர வேண்டாம் .பைபிளில் சொல்லப்பட்டதற்காக அப்படியே ஏற்றுக்கொள்ளுபன அல்ல நான்)

    ReplyDelete
  75. Anonymous5:10 AM

    //கல்வி கற்க அனுப்பிய ஒரு சிறுமியை வேறொரு மதத்தில் சேர்த்து இத்தனை நாளும் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களிடம் பிள்ளையை அனுப்பாமல் தடுத்து வைப்பது என்பது எந்த வகை நியாயம்?.//

    எப்படி அனுப்புவார்கள், முஹமது தான் தெளிவாக சொல்லி இருக்கிறாரே 'மார்க்கத்தை விட்டு விலகுபவர்களுக்கு மரண தண்டனை' என்று ஜாகிர் நாயக்கும் அதை தானே சொல்லிக்கொண்டு திரிகிறார். அந்த வகையில் அந்த பெண்ணிற்கு மரண தண்டனை அளித்து விடக்கூடாதல்லவா, அந்த பயம்தான்

    ReplyDelete
  76. //ஒருவேளை ஆப்ரகாமிய மத நரகம், மற்றவர்களுக்கு சொர்க்கமாக இருக்குமோ.

    ஆபிரகாமிய மதங்களின் கோட்பாடுகள் மட்டுமே உங்களுக்கு ஆதாரமாக தெரிவது எனக்கு வியப்பளிக்கிறது. உலகம் ஆபிரகாமிய மதங்களை தாண்டியும் உள்ளது அய்யா.//

    ஆபிரஹாமிய மதங்களில் இந்து மதமும் அடங்கும். இந்து மதத்துக்குள் புதத மதமும், சீக்கிய மதமும் அடங்கும். நீங்கள் இந்து மத வேதங்களான ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களை படித்தீர்கள் என்றால் அவை அனைத்தும் குர்ஆனையும் பைபிளையும் ஒத்த நடையையும், கருத்தையும் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். அந்த வேதங்கள் சிலை வணக்கத்தை முற்றாக தடை செய்கின்றன. எனவே நான் எடுத்து வைக்கும் வாதம் உலக மதங்கள், மக்கள் அனைவருக்கும் பொருந்தும்.

    யூதர்களில் ஒரு பிரிவினர்தான் பிராமணர்கள். பிராமிணர்கள் ஸ்தாபித்து புணருத்தானம் செய்த மதமே இந்து மதம். எனவே எங்கு சுற்றி வந்தாலும் நாம் அனைவரும் ஒரே குடையின் கீழ்தான் வருவோம்.

    ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
    'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
    'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
    (The principal Upanishad by S.Radhakrishnan page 737)
    (And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

    யஜீர் வேதா அதிகாரம் 32 :3
    'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
    'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

    யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
    'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
    (The Yajurveda by Devi Chand M.A page 377)

    யஜீர்வேதா அதிகாரம் 40 :9
    'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
    'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

    பகவத் கீதை அதிகாரம் 10 :3
    'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

    ReplyDelete
  77. //(மீண்டும் பைபிளிலிருந்து ஆதாரம் தர வேண்டாம் .பைபிளில் சொல்லப்பட்டதற்காக அப்படியே ஏற்றுக்கொள்ளுபன அல்ல நான்)//

    கிறத்தவரான நீங்கள் பைபிள் சொல்வது எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ள முடியாது என்று கூறுவது வியப்பளிக்கிறது. இதிலிருந்து இறைவன் வார்த்தையோடு மனிதக்கரங்களும் பைபிளில் புகுந்து விட்டது என்பதை நீங்கள் அறிந்தே வைத்திருக்கிறீர்கள். இதைத்தானே நானும் சொல்கிறேன்.

    மேலும் குர்ஆனில் 'ஸாபியீன்கள்' என்ற ஒரு வகை மனிதர்களைப் பற்றி இறைவன் கூறுகிறான். இறைத்தூதர்கள் அனுப்பப்படாத போதும் அல்லது இறைத் தூதர்கள் வழிகாட்டு நெறி சென்றடையாத போதும் நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள். இவர்களுக்கு சொர்க்கம் தருவதாக இறைவன் வாக்களிக்கிறான்.

    'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்'
    குர்ஆன் 2:62

    ReplyDelete
  78. //'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்'
    //

    :)

    அவர்களின் இறைவனா ?

    மொத்தம் எத்தனை இறைவன்.

    // சுவனப்பிரியன் said...
    //(மீண்டும் பைபிளிலிருந்து ஆதாரம் தர வேண்டாம் .பைபிளில் சொல்லப்பட்டதற்காக அப்படியே ஏற்றுக்கொள்ளுபன அல்ல நான்)//

    கிறத்தவரான நீங்கள் பைபிள் சொல்வது எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ள முடியாது என்று கூறுவது வியப்பளிக்கிறது
    //

    அவர் "தான் கண்மூடித்தனமாக எதையும் நம்புவதில்லை" என்று சொல்வது உங்களுக்கு ஏன் வியப்பளிக்கிறது என்பதை நினைத்தால் எனக்கு வியப்பளிக்கிறது.
    :)

    "தான் அடிப்படைவாதி அல்ல" என்பதைத் தான் அவர் சொல்வதாக நினைக்கிறேன்.

    ReplyDelete
  79. //கிறத்தவரான நீங்கள் பைபிள் சொல்வது எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ள முடியாது என்று கூறுவது வியப்பளிக்கிறது. //

    கிறித்துவன் என்பதற்கு நீங்களோ அல்லது நான் பிறப்பால் சார்ந்திருக்கின்ற திருச்சபையோ வைத்திருக்கும் வரைமுறைகளின் படி நான் கிறிஸ்தவனாக இல்லாமல் இருக்கலாம் . அதை நான் அறிந்தே உள்ளேன். எனவே நீங்கள் வியக்க தேவையில்லை ..நான் கிறித்துவன் அல்ல என்று கூட நீங்கள் எடுத்துக்கொண்டு மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.

    ReplyDelete
  80. //ஆபிரஹாமிய மதங்களில் இந்து மதமும் அடங்கும். இந்து மதத்துக்குள் புதத மதமும், சீக்கிய மதமும் அடங்கும்//

    another joke.

    நல்வழிப்படுத்த என்று எழுதப்பட்ட நூல்களில் ஒற்றுமை இல்லாமலா இருக்கும்?

    ReplyDelete
  81. //குர்ஆன் விடும் இது போன்ற பல சவால்களை உலகில் இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லையாதலால்//

    this is just your statement!!

    நாம பேசுன testicles, semen இது பற்றியே நாம பேசி முடிக்கலை :(

    அதோடு அந்த தராசு கேசு வேறு இருக்கு ...

    ReplyDelete
  82. //'இறைவனின் வார்த்தை' என்றவுடன் ஜைனப் உடன் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார் அல்லவா? இதை முன்னுதாரணமாகக் கொண்டு அடுத்தடுத்து கலப்புத் திருமணம் எத்தனை நடந்தது?//

    நம்ம ஊர்ல ஜாதி; மற்ற ஊர்ல கலர். ஆனா இதையும் தாண்டி மேல்நாட்டில் மக்கள் எந்த வேற்றுமையையும் தாண்டிதான் இருக்கிறார்கள். ஏதோ இஸ்லாம் மட்டுமே இந்த வேற்றுமைகளைத் தாண்டி வந்ததாகச் சொல்வது 'டூ மச்'.

    ReplyDelete
  83. //
    ஒரு இஸ்லாமியர் / முஃமின் என்ன நல்லது / கெட்டது செய்தாலும், அது அல்லா & நபி அவர்களின் முடிவு என்பதாகிறது.//

    சரிதானே?

    ReplyDelete
  84. Anonymous8:29 AM

    //அதிலும் குறிப்பாக கிறித்தவ மிஷினரிகள் நடத்தும் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக மத அனுஷ்டானங்களை கடைபிடிக்கச் சொல்லி வற்புறுத்துவதை தமிழகத்திலேயே நாம் பார்க்கலாம். இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். //

    இன்றைய (01.10.2009) தினகரன் பத்திரிக்கையில் ஒரு செய்தி என்ன தெரியுமா? கேரளாவில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் துணை அமைப்பாக 'லவ் ஜிஹாத்' என்ற அமைப்பு செயல் படுகிறதாம். இவர்கள் வேலையே கல்லூரி மாணவிகளை காதலித்து அவர்களை மதம் மாற்றுவது.சமீபத்தில் இது போன்று கல்லூரி மாணவிகளை காதலித்து மதம் மாற்றிய இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணையில் இந்த விஷயங்கள் தெரிய வந்துள்ளன. இப்போது பாப்புலர் பிரான்ட் அமைப்பை கண்காணிக்க கேரளா உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போலவே மும்பையிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் பல கல்லூரி பெண்கள் முஸ்லிம்களை திருமணம் செய்து உடனே அரபு தேசங்களுக்கு சென்று முஸ்லிமாக திரும்பி வந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்தது இது குறித்து விசாரிக்கவும் மராட்டிய அரசு உத்தரவு இட்டது. நீங்கள் இல்லை என்று சொன்னாலும் முஸ்லிம்களின் மத மாற்ற நடவடிக்கைகளில் இதுவும் ஓன்று என்பது அப்பட்டமான உண்மை.இஸ்லாமிய ஆணை காதல் செய்யும் பிற மதத்தை சேர்ந்த எந்த பெண்ணும் முஸ்லிமாக மாறினால் மட்டுமே அந்த ஆண் அவளை திருமணம் செய்து கொள்கிறான். இதை விட கிறித்தவர்கள் செய்வது ஒன்றும் கேவலமாக தெரியவில்லையே

    ReplyDelete
  85. //குர்ஆன் விடும் இது போன்ற பல சவால்களை உலகில் இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லையாதலால்//


    அப்படி என்னாங்க சவால் விட்ருக்கு!?

    தெரிஞ்சிக்கலாமா?

    ReplyDelete
  86. Anany!

    //கல்லூரி மாணவிகளை காதலித்து மதம் மாற்றிய இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணையில் இந்த விஷயங்கள் தெரிய வந்துள்ளன.//

    இந்த செய்தி உண்மையாக இருந்தால் கண்டிக்கப்பட வேண்டியதே! காதலித்தெல்லாம் மார்க்கத்தைப் பரப்பு என்று இஸ்லாம் சொல்லவில்லை. முஸ்லிம் பெண்களை கல்லூரியில் காதலித்து அவரையும் கூட்டிக் கொண்டு ஓடி விடும் பிற மதத்தவரின் செயல்பாடுகளும் பத்திரிக்கையில் ஆங்காங்கே வரத்தான் செய்கிறது. எனவே எல்லா மதத்திலும் பரவலாக நடக்கும் செய்தி.

    //பிற மதத்தை சேர்ந்த எந்த பெண்ணும் முஸ்லிமாக மாறினால் மட்டுமே அந்த ஆண் அவளை திருமணம் செய்து கொள்கிறான்//

    அது இஸ்லாம் முஸ்லிம்களுக்கு இடும் கட்டளை. இந்த காலத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முடியாதல்லவா?

    ReplyDelete
  87. கோவி கண்ணன்!

    //அவர்களின் இறைவனா ?

    மொத்தம் எத்தனை இறைவன்.//

    அந்த வசனத்தில் ஏக இறைவனை வணங்கி நல்லறம் புரிந்து வரும் யூத,கிறித்தவ,ஸாபியீன்களுக்கு அவர்களின் இறைவனிடம் கூலி உண்டு என்று வருகிறது. ஏக இறைவனை வணங்குபரைப்பற்றி இவ் வசனம் பேசுவதால் 'எத்தனை இறைவன்?' என்ற கேள்வியே இங்கு வராது.

    //உங்களுக்கு ஏன் வியப்பளிக்கிறது என்பதை நினைத்தால் எனக்கு வியப்பளிக்கிறது.//

    எனக்கு வியப்பளித்த ஒரு செயல் உங்களுக்கும் வியப்பளிப்பதை நினைத்து திரும்பவும் நான் வியப்படைந்தேன். :-)

    ReplyDelete
  88. திரு தருமி!

    //அதோடு அந்த தராசு கேசு வேறு இருக்கு ...//

    //……இப்படி ஒரு பேலன்ஸை தராசை நிறுவவில்லை என்றால் அனைத்துக் கோள்களும் நம் பூமி உட்பட ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபரீதமாகி விடும்.

    இந்த செயல்பாட்டைத்தான் 'வானத்தை உயர்த்தி கோள்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க தராசை நிறுவினேன்' என்கிறான் இறைவன். இதைத்தானே அறிவியலும் சொல்கிறது! இதில் என்ன தவறை கண்டீர்கள்?....//

    நீங்கள் கேட்ட தராசு கேள்விக்கு 'பவுல் அடிகள்' பதிவில் விபரமாக விளக்கம் கொடுத்துள்ளேன் பார்க்கவில்லையா?

    ReplyDelete
  89. ஜோ!

    //கிறித்துவன் என்பதற்கு நீங்களோ அல்லது நான் பிறப்பால் சார்ந்திருக்கின்ற திருச்சபையோ வைத்திருக்கும் வரைமுறைகளின் படி நான் கிறிஸ்தவனாக இல்லாமல் இருக்கலாம் . அதை நான் அறிந்தே உள்ளேன். எனவே நீங்கள் வியக்க தேவையில்லை ..நான் கிறித்துவன் அல்ல என்று கூட நீங்கள் எடுத்துக்கொண்டு மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.//

    இந்த நிலைப்பாடுதான் முடிவில் நம்மை நாத்திகத்தில் கொண்டு சேர்ப்பித்து விடும். புதிய மேலாடை ஒன்றை வாங்க நாம் எத்தனை கடைகளில் ஏறி இறங்குகிறோம். அதே நேரம் நம்மை படைத்த இறைவன் யார்? அவனுக்கு இத்தனை உருவங்கள் எப்படி வந்தது? வேத புத்தகங்களில் இத்தனை குளறுபடிகளைச் செய்தது யார்? சிலை வணக்கம் கூடாது என்று பைபிள் தடுத்திருக்க மேரி, ஏசுவின் சிலைகள் அனைத்து சர்ச்களிலும் வந்தது எப்படி? என்றெல்லாம் நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? இந்த அவசர உலகம் அதற்க்கெல்லாம் நேரத்தையும் கொடுக்காது.

    ReplyDelete
  90. //இந்த நிலைப்பாடுதான் முடிவில் நம்மை நாத்திகத்தில் கொண்டு சேர்ப்பித்து விடும்.//

    நாத்திகர்கள் யாரும் அடுத்துக் கெடுக்கிறார்களா ? நாத்திகத்தில் என்ன குறை ? நாத்திகன் உலகளாவிய புனிதப் போர் எதையும் நடத்தவில்லையே.

    ReplyDelete
  91. //இந்த நிலைப்பாடுதான் முடிவில் நம்மை நாத்திகத்தில் கொண்டு சேர்ப்பித்து விடும். புதிய மேலாடை ஒன்றை வாங்க நாம் எத்தனை கடைகளில் ஏறி இறங்குகிறோம். அதே நேரம் நம்மை படைத்த இறைவன் யார்? அவனுக்கு இத்தனை உருவங்கள் எப்படி வந்தது? வேத புத்தகங்களில் இத்தனை குளறுபடிகளைச் செய்தது யார்? சிலை வணக்கம் கூடாது என்று பைபிள் தடுத்திருக்க மேரி, ஏசுவின் சிலைகள் அனைத்து சர்ச்களிலும் வந்தது எப்படி? என்றெல்லாம் நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? இந்த அவசர உலகம் அதற்க்கெல்லாம் நேரத்தையும் கொடுக்காது.//

    உங்க பிரச்சனை தான் என்ன ? கிறித்துவர்களுக்கு சுவனம் உண்டு, ஆனால் அவர்கள் ஏசுவை / மாதாவை வழிபடக் கூடாதா ?

    உங்க மறைமுகக் கருத்துப்படி கிறித்துவர்களுக்கு சுவனம் உண்டு என்றால் ஒரு வயது வந்த பெண் சுய விருப்படி தன்னை கிறித்துவாக அறிவித்துக் கொண்டதில் என்ன தவறைக் கண்டீர்கள் ?

    ReplyDelete
  92. வால்ஸ்!

    //அப்படி என்னாங்க சவால் விட்ருக்கு!?

    தெரிஞ்சிக்கலாமா?//

    'முஹம்மதுக்கு நாம் அருளிய குர்ஆனில் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
    -குர்ஆன்:2:23

    'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
    -குர்ஆன்:4:82

    ReplyDelete
  93. கோவிக் கண்ணன்!

    //நாத்திகர்கள் யாரும் அடுத்துக் கெடுக்கிறார்களா ? நாத்திகத்தில் என்ன குறை ? நாத்திகன் உலகளாவிய புனிதப் போர் எதையும் நடத்தவில்லையே.//

    எல்லா மதத்திலும், இயக்கத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்: கெட்டவர்களும் இருக்கிறார்கள். நாத்திக வாதிகளில் ஊழல் செய்தவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரும் இல்லை என்கிறீர்களா?

    'உலகலாவிய புனிதப்போர்' நடத்தச் சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. ஒரு சில மடையர்கள் இஸ்லாத்தை விளங்காது வன்முறையில் ஈடுபடுவதை மதத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டாம்.

    //உங்க பிரச்சனை தான் என்ன ? கிறித்துவர்களுக்கு சுவனம் உண்டு, ஆனால் அவர்கள் ஏசுவை / மாதாவை வழிபடக் கூடாதா ?//

    அப்படித்தான் குர்ஆனும், பைபிளும் சொல்கிறது.

    //உங்க மறைமுகக் கருத்துப்படி கிறித்துவர்களுக்கு சுவனம் உண்டு என்றால் ஒரு வயது வந்த பெண் சுய விருப்படி தன்னை கிறித்துவாக அறிவித்துக் கொண்டதில் என்ன தவறைக் கண்டீர்கள் ?//

    இதில் தவறு காண நான் யார்? நான் படித்த ஒரு செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அந்த குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க கொடுத்த பேட்டியைப் பார்த்து மற்றவர்களுக்கும் இந்நிலை வராமல் இருக்க அவரவர் கலாச்சாரத்தை ஒட்டிய பள்ளிகளில் சேர்த்தால் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என்றேன். வேறொன்றுமில்லை.

    ReplyDelete
  94. //இதில் தவறு காண நான் யார்? நான் படித்த ஒரு செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அந்த குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க கொடுத்த பேட்டியைப் பார்த்து மற்றவர்களுக்கும் இந்நிலை வராமல் இருக்க அவரவர் கலாச்சாரத்தை ஒட்டிய பள்ளிகளில் சேர்த்தால் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என்றேன். வேறொன்றுமில்லை.//

    அது என்ன பால் குடிக்கும் குழந்தையா ? வளர்ந்த நிலையை அவரவருக்கு தேவையானதை அவரவர் தேர்ந்தெடுக்க மனித உரிமையை சில நாடுகள் தருகிறது, என்னைக் கேட்டால் அந்த நாடுகளைப் பாராட்டலாம். பெண்கள் சுயமாக முடிவெடுப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை, தீயவர்களின் கைகளில் சிக்கவில்லை எனும் போது பெற்றவர்கள் புலம்புவதில் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை.

    எத்தனையோ இந்து குடும்பங்களில் மனைவியைப் பலிவாங்கவும், இன்னும் சில பெண்களை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாத்துக்கு மாறுவது மலேசியாவில் வாடிக்கையாக உள்ளது தேவை என்றால் சொல்லுங்கள் அது பற்றி விவரம் சேகரித்து தருகிறேன்.

    ReplyDelete
  95. அது என்ன ஏழடுக்கு சுவனம்?

    விலாவுக்கும் முதுகெலும்புக்கும் என்பதற்குப் பதில் testis அப்டின்னோ, ஒரே வார்த்தையில் விந்து என்றோ சொல்ல முடியாதா என்ன?

    மற்ற galxies ,அது இதுன்னு இன்னும் கொஞ்சம் space பத்தி சொல்லியிருக்கலாமே ..

    'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்க்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'
    -குர்ஆன் 55:7-9 --- இங்க நீங்க சொன்ன தராசுக்கும் நீங்க விளக்கிய தராசுக்கும் ஏது தொடர்பு?

    சந்திரன் சூர்யன் சொன்னவர் ஏங்க மற்ற galxies ,அது இதுன்னு இன்னும் கொஞ்சம் space பத்தி சொல்லியிருக்கலாமே ..

    . இதை எல்லாம் ஏன் இறைவன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு நானும் நீங்களும் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் முன் நிறுத்தப் படும் போது அந்த இறைவனிடமே கேட்போமே!

    seest thou not the Allah merges Night into Day and he merges day into night? (quran 31:29)
    அப்படி ஒண்ணுக்குள்ள ஒண்ணாவா ரெண்டும் இருக்கு?

    He created the heavens and the earth in true; He makes the Night overlap the day and the day overlap the night (39:5)
    அப்படி இரவும் பகலும் கோத்துக்கிட்டா இருக்கு?

    do not the Unbelievers see that the heavens and earth were joined together before we clove them asunder> (quran 21:30)
    அப்படி ரெண்டும் ஒண்ணாவா இருந்திச்சி? அது ரெண்டும் கடவுள் பிளந்து விட்டாரா … big bang………?!

    ஒரு இஸ்லாமியர் / முஃமின் என்ன நல்லது / கெட்டது செய்தாலும், அது அல்லா & நபி அவர்களின் முடிவு என்பதாகிறது.

    ஆபிரஹாமிய மதங்களில் இந்து மதமும் அடங்கும். இந்து மதத்துக்குள் புதத மதமும், சீக்கிய மதமும் அடங்கும்

    ================================

    பதிலுக்காக அல்ல. மேற்கூரிய சில என் கேள்விகளோ, commentகளோ பதிலின்றி இருக்கின்றன என்பதை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  96. மேலே சொன்னது உங்கள் கடைசி 3 பதிவுகளுக்குமானது.

    ReplyDelete
  97. Anonymous5:44 AM

    //பிற மதத்தை சேர்ந்த எந்த பெண்ணும் முஸ்லிமாக மாறினால் மட்டுமே அந்த ஆண் அவளை திருமணம் செய்து கொள்கிறான்//

    அது இஸ்லாம் முஸ்லிம்களுக்கு இடும் கட்டளை. இந்த காலத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முடியாதல்லவா?//

    அப்படி என்றால் எந்த இஸ்லாமிய ஆணும் பிற மத பெண்களை காதலிக்க கூடாது, இஸ்லாமிய பெண்களை மட்டும் அல்லவா காதலிக்க வேண்டும். ஜாதி, மதம், இனம் பார்த்து வருவதில்லை காதல் என்று சொன்னால், கடைசியில் திருமணம் செய்யும் பொது மதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது என்று மதம் மாற சொல்ல கூடாது. அதனால் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முடியாததால் காதலித்து மனம் மாற்றி திருமணம் செய்கிறார்கள் என்று எடுத்து கொள்ளலாமா.

    ReplyDelete
  98. Anonymous6:42 AM

    //அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்//
    எல்லாம் வல்ல கடவுளுக்கே இப்படி எல்லாம் சொல்லித்தான் தன்னை நிருபிக்க வேண்டி இருக்கிறது.

    //'முஹம்மதுக்கு நாம் அருளிய குர்ஆனில் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'//

    இது ஏதோ தெருச்சண்டை போடுபவர் சவால் விடுவது போல் இருக்கிறது, சவால்களுக்கும், சச்சரவுகளுக்கும் அப்பாற்பட்டவர் ஐயா இறைவன். தன்னை விட மேலானவன், உயர்ந்தவன் உலகில் இருக்கவே முடியாது என்பதை அறிந்த கடவுள் யாரிடம் சவால் விடுகிறார் என்னுடையதை போல் ஒன்றை உருவாக்கு என்று. வேறு எந்த மதத்தில் உள்ள இறை நூல்களிலும் இது போன்ற சவால் இல்லை. காரணம் அந்த மதங்களில் உள்ள இறைவன் தான் இறைவன் என்பதை உணர்ந்தே இருக்கிறார்.அதனால் தான் அந்த மக்களும் அதனை ஏற்று கொள்கிறார்கள் எந்த விமர்சனமும் இன்றி.

    jaya pragash

    ReplyDelete
  99. திரு தருமி!

    //விலாவுக்கும் முதுகெலும்புக்கும் என்பதற்குப் பதில் testis அப்டின்னோ, ஒரே வார்த்தையில் விந்து என்றோ சொல்ல முடியாதா என்ன?//

    படிப்பறிவில்லாத அந்த கால அரபுகளுக்கு அறிவியல் வார்த்தைகள் புரியாது. எனவேதான் இறைவன் எளிமைப்படுத்தியுள்ளான் என்று ஏற்கெனவே விளக்கியிருக்கிறேன்.

    //-குர்ஆன் 55:7-9 --- இங்க நீங்க சொன்ன தராசுக்கும் நீங்க விளக்கிய தராசுக்கும் ஏது தொடர்பு?//

    இங்கு அரபு வார்த்தை 'மீஜான்' என்ற சொல்லுக்கு சமன் செய்தல், தராசு, எடை கண்டுபிடிக்கும் கருவி என்ற பல பொருள் வரும். வானத்தை உயர்த்தும் போது சமன் செய்தல் என்ற பொருளும், எடையை குறைக்காதீர்கள் என்ற இடத்தில் எடை கண்டு பிடிக்கும் கருவி அதாவது தராசு என்றும் பொருள் கொள்ள பேராசிரியருக்கு நான் சொல்லித் தர வேண்டுமா என்ன?

    // seest thou not the Allah merges Night into Day and he merges day into night? (quran 31:29)
    அப்படி ஒண்ணுக்குள்ள ஒண்ணாவா ரெண்டும் இருக்கு?

    He created the heavens and the earth in true; He makes the Night overlap the day and the day overlap the night (39:5)
    அப்படி இரவும் பகலும் கோத்துக்கிட்டா இருக்கு?

    do not the Unbelievers see that the heavens and earth were joined together before we clove them asunder> (quran 21:30)
    அப்படி ரெண்டும் ஒண்ணாவா இருந்திச்சி? அது ரெண்டும் கடவுள் பிளந்து விட்டாரா … big bang………?!//

    'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும்'

    சூரியனைச் சுற்றியே பூமி மற்ற பிற கோள்கள் வலம் வருவதாக இவ்வசனம் விளக்குகிறது. பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் கட்டுண்டு நிற்கும் போது பூமியின் பகல் பிரதேசம் பூமியின் சுழற்ச்சியால் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் இரவுக்குள் நுழைய முடிகிறது. அதைப்போல் மறுபக்கம் பூமியின் மீதுள்ள இரவுப் பிரதேசம் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்க்கும் பகலுக்குள் நுழைய முடிகிறது. 10,15 வருடம் கல்லூரி வரை படித்து ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டிய ஒரு உண்மையை எவ்வளவு அலட்சியமாக குர்ஆன் சொல்லி விட்டுச் செல்கிறது பார்த்தீர்களா?

    //ஆபிரஹாமிய மதங்களில் இந்து மதமும் அடங்கும். இந்து மதத்துக்குள் புதத மதமும், சீக்கிய மதமும் அடங்கும்//

    இந்து மதத்துக்கு அனுப்பப்ட்ட தூதர் நூஹ்(நோவா) என்றும் 'ஆதிகிரந்' என்பது 'ஜபருல் அவ்வலீன்' முன்னோர்களின் வேதங்கள் என்றும் குர்ஆன் கூறுவதாக எனது பழைய பதிவுகளில் விளக்கமாக எழுதியுள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள். இந்து மதத்தின் நவீன கொள்கைகளை தீண்டாமை முதற்கொண்டு அப்படியே சுவீகாரம் செய்து கொண்டன புத்தமும் சீக்கியமும். பெயர் வேறாக இருந்தாலும் கொள்கைகள் ஒன்றுதானே!

    ReplyDelete
  100. கோவிக் கண்ணன்!

    //எத்தனையோ இந்து குடும்பங்களில் மனைவியைப் பலிவாங்கவும், இன்னும் சில பெண்களை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாத்துக்கு மாறுவது மலேசியாவில் வாடிக்கையாக உள்ளது தேவை என்றால் சொல்லுங்கள் அது பற்றி விவரம் சேகரித்து தருகிறேன்.//

    என் உறவுக்கார பெண் இந்து நண்பரை கல்லூரியில் படிக்கும்போது காதலித்துள்ளார். திருமணம் என்று வரும்போது 'நீ இஸ்லாத்துக்கு வா' என்று அந்த பெண்ணும், இல்லை 'என் அம்மா ஹார்ட் பேஷண்ட். நான் மதம் மாறினால் இறந்து விடுவார். எனவே நீ இந்து மதத்துக்கு வந்து விடு' என்று இரண்டு பேருமே கடந்த 10 வருடமாக விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இருவருமே வேறொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் குடும்பத்திலும் பல மன உளைச்சல்கள். இருவரின் எதிர்காலமும் இருண்டு கிடக்கிறது. இது போல் பல குடும்பங்களிலும் பிரச்னை. இதை நான் மலேசியாவில் 15 நாட்கள் தங்கியிருந்தபோது நேரிலேயே பார்த்தேன். மதம் விட்டு மதம், எம்மதமும் சம்மதம் போன்ற கோட்பாடுகள் மேலும் சிக்கலைத்தான் வளர்க்கும்.

    ReplyDelete
  101. இன்று ஒரு சிறிய விபத்து. வலது கையில் கட்டுடன் அமர்ந்துள்ளேன். கை சரியானவுடன் திரும்பவும் வருகிறேன்.

    பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  102. //'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும்'

    சூரியனைச் சுற்றியே பூமி மற்ற பிற கோள்கள் வலம் வருவதாக இவ்வசனம் விளக்குகிறது. //

    அது விளக்கல!
    நீங்க தான் திரிக்கிறிங்க!

    ReplyDelete
  103. //இன்று ஒரு சிறிய விபத்து. வலது கையில் கட்டுடன் அமர்ந்துள்ளேன். கை சரியானவுடன் திரும்பவும் வருகிறேன். //

    விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  104. //'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'//

    இந்த உலகில் உண்மை என்பது அதிகபட்ச சாத்தியகூறுகள் மட்டுமே!
    எந்த உண்மையும் ஏன் அறிவியல் கோட்பாடுகள் கூட மாறலாம்!

    ReplyDelete
  105. Anonymous6:04 AM

    எம்மதமும் சம்மதம் சிக்கலை வளர்ப்பதில்லை. 'என் மதம் மட்டும் தான்' என்பது தான் சிக்கலை வளர்க்கும். இஸ்லாமும் அந்த சித்தாந்ததை தான் போதிக்கிறது

    jaya pragash

    ReplyDelete
  106. // குமாரன் என்றும் சொல்லவில்லை. பின்னால் வந்த பவுல் அடிகளும் மார்க், யோவான் பொன்றோரும் தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் எழுதி வைத்ததைத்தான் பைபிள் என்கிறோம்//

    அப்போ ஈசா ஒரு நபியில்லை; அவர் சொன்னது சரியில்லை என்கிறீர்களா?

    ReplyDelete
  107. Anonymous8:11 AM

    Anonymus said,
    //////ஆனால் இஸ்லாமில் சொல்ல முடியுமா. முகமதுவின் மனைவி, மகள், தோழியர் தவிர எந்த இஸ்லாமிய பெண்ணை நீங்கள் கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள்.//////
    நாங்கள் எவ்வளவு பெண்களை கவுரவ படுத்தியிருக்கிறோம் என்பதை நீங்கள் பார்த்ததில்லையா?
    அரைகுறை ஆடையுடன் வலம் வரும் பெண்களுக்கு நடுவில் கவுரமான உடையை இஸ்லாம் எங்கள் சமுதாய பெண்களுக்கு கொடுத்திருக்கிறது(உங்கள் கன்னியாஸ்திரிகள் அணியும் கண்ணியமான ஆடையை எங்கள் சமுதாய பெண்கள் எல்லோரும் அணிந்திருக்கிறார்களே).
    நாங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் குடும்பத்து பெண்களை மட்டுமல்ல மற்ற எத்தணை பெண்களை மதிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    1.மரியம்(அலை)-ஈஸா நபி(அலை)அவர்களின் தாயார்.
    2.ஆஸியா (அலை)-மூஸா நபி(அலை) அவர்களை எடுத்து வளர்த்த பெண்மணி (பிர்அவ்னின் மனைவி).
    3.சுமையா(ரலி) -இஸ்லாமுக்காக உயிரைவிட்ட முதல் பெண் தியாகி.இவருடைய மரணம் கொடுமையானது.
    இவர்களெல்லாம் இஸ்லாமிய வரலாற்றில் நீங்காமல் இடம் பிடித்தவ்ர்கள்.
    இஸ்லாம் பெண்களை கண்ணிய படுத்துவது மட்டுமில்லாமல் ஒரு படி மேலே போய் அவர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்திருக்கிறது.இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா?

    ReplyDelete
  108. //இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா? //

    திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை ஒரே மாதிரி எல்லோரும் திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடுமா?

    //Wife Beating - The Rules

    http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

    http://www.youtube.com/watch?v=Wp3Eam5FX58
    //

    இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு இஸ்லாமியரல்லாதவர் உங்கள் மார்க்கத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கொஞ்சம் நீங்கள் யோசித்துப் பாருங்களேன்; இஸ்லாமியரல்லாத நண்பர்கள் இருந்தால் அவர்களிடமும் கேட்டுப் பாருங்களேன்.

    ReplyDelete
  109. கை சரியாகி விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

    மகிழ்ச்சி

    ReplyDelete
  110. அதோடு இன்னொன்று ...

    எனக்குத் தெரிந்த இஸ்லாமிய நண்பர்கள் யாரும் 4 மனைவிகளைக் கல்யாணம் செய்யவில்லை; இருந்தும் உங்கள் மார்க்கம் அதற்கு வழி கொடுத்திருகிறது. அதுவும் சாதாரணனுக்கு நான்கும், நபிக்கு மட்டும் கணக்கில்லாமலும் (இதற்கு நபியே தனக்கு அல்லாஹ் இப்படி லிமிட் கொடுக்கவில்லை என்று சொல்வது, ஒரு குற்றவாளியே தனக்கு ஆதரவாக சாட்சி சொல்வது போல் உள்ளது என்று முன்பே எழுதியிருந்தேன்!) என்று சொல்லிவிட்டு அதன் பின் //இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா?// என்று கேட்டால் என்ன பதில் சொல்வது ..?

    ReplyDelete
  111. மூன்று பின்னூட்டங்கள் இட்டேனே .. இன்னும் ஏதும் வரவில்லையே??

    ReplyDelete
  112. என் பின்னூட்டங்கள் என்னாயிற்று??????????????

    ReplyDelete
  113. இனி எதிர்பார்க்கவில்லை

    :(

    ReplyDelete
  114. Anonymous4:18 AM

    //நாங்கள் எவ்வளவு பெண்களை கவுரவ படுத்தியிருக்கிறோம் என்பதை நீங்கள் பார்த்ததில்லையா?//

    (உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள்(ஆவார்கள்); உங்களுடைய விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள் - குர்ஆன் 02:223)
    இறையடியான் அவர்களே, இது குரான் வசனம் தானே, இவ்வளவு கேவலமாகவா அல்லா தான் படைத்த பெண்களை குறித்து சொல்வார்.

    எங்கள் தேவாலயங்களில் ஆராதனைகளில் பெண்களும் இணைந்து பங்கு கொள்வார்கள். ஆராதனையும் தலைமையேற்றும் நடத்துவார்கள். பெண்களை உயர்ந்த இடத்தில வைத்திருக்கும் நீங்கள் முதலில் உங்கள் பள்ளிவாசலில் பெண்களை அனுமதியுங்கள். ஆண் என்றும் பெண் என்றும் பேதம் இல்லாத இறைவனை, பள்ளிவாசலில் சென்று பெண்கள் தொழுகை செய்ய அனுமதிக்க உங்களால் முடியுமா? ஒன்று, இரண்டு, மூன்று என்று விரல் விட்டு என்னும் அளவில்தான் நீங்கள் மதிக்கும் பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது.
    உங்களுக்கு மேலும் விளக்கங்களை திரு. தருமி அவர்கள் கூறி இருக்கிறார். படித்து புத்தி இருந்தால் தெளிவு பெற்று கொள்ளுங்கள்.

    (குரான் : 4 .34 : ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எந்த பெண்கள் விசயத்தில் அவர்கள் தங்கள் கணவருக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை படுக்கையில் இருந்து விலக்கி விடுங்கள். அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை (இலேசாக) அடியுங்கள்)

    வடிவேல் பாணியில் சொல்லவேண்டும் என்றால் 'முடியல','கண்ணு கட்டுது'
    திரு இறையடியான் அவர்களே அல்லா பெண்களுக்கு கொடுக்கும் சலுகைகளை பார்த்து

    M.P. Thomas

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)