Monday, May 09, 2011

இந்து வேதங்களைப் பற்றி ஜாகிர் நாயக்!



இஸ்லாத்துக்கும் இந்து மத வேதங்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை நான் கோடிட்டுக் காட்டியதை இக்பால் செல்வன் தவறு என்று பதிவிட்டிருக்கிறார். தவறு என்று சொன்னவர் 'எனக்கும் அர்த்தம் தெரியவில்லை. சமஸ்கிரதம் தெரிந்தவர்கள் விளக்குங்கள்' என்கிறார். என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம். திரு ஜாகிர்நாயக் அவர்கள் இது விஷயமாக என்ன வாதங்களை வைக்கிறார் என்பதை காணொளியில் பாருங்கள். இந்த பதிவு தொடர்ந்து விவாதித்து வரும் திரு கணேசனுக்கும் பதிலாக அமைந்திருக்கிறது.

12 comments:

  1. Anonymous7:46 PM

    @ சுவனப் ப்ரியன் - தாங்கள் காபா வேதத்தில் இருப்பதாக சொன்ன ஒரு வேதப் பாடல் கொடுத்திருந்தீர்கள், அதனை மொழிப் பெயர்ப்பு துணைக் கொண்டும், ஒலிப் பெயர்ப்புத் துணைக் கொண்டும், பொருள் ஆய்வு செய்ததில் - அப்படி ஒன்றுமே இல்லை என்பதை உறுதி செய்து வெளியிட்டேன். அவ்வளவே !!!

    இதற்கு மேலும் அச்சுப் பிறழாமல் சம்ஸ்கிருத பண்டித சிகாமணிகள் எடுத்து வைத்தால் - அதனையும் எதிர்க் கொண்டு வேறு சம்ஸ்கிருத பண்டித சிகாமணியின் துணைக் கொண்டு உறுதிச் செய்துத் தருவேன்.

    சொன்னவுடன் அப்படியே ஏற்க வேண்டியதில்லை என்பது எனது கொள்கை.

    ReplyDelete
  2. Anonymous7:57 PM

    @ - ஜாகிர் நாயக்கின் பல நிகழ்ச்சிகளையும், கட்டுரைகளையும் படித்துள்ளேன். ஆனால் அவரைப் போன்று அரை அறிவுக் காரர்களின் பிரச்சாரங்களை இஸ்லாமியர் நம்பத் தேவை இல்லை. குரானுக்கு சம்பந்தமே இல்லாத விடயங்களை முடிச்சுப் போட்டு தாம் அறிவானவர் என்று காட்டிக் கொள்பவர்.

    ரஷாத் காலிஃபா, அஹ்மத் தீதத் போன்ற விவாதம் செய்பவர் கூட இல்லை ஜாகிர் நாயக்.

    இஸ்லாத்தில் குறை மற்றும் நிறைகள் இருந்தே இருக்கின்றன. அதன் நிறைகளை எடுத்துக் கூறி பிற சமூகங்களோடு இணைந்து வாழ முற்படுதலே இஸ்லாமியருக்கும், இஸ்லாமியர் அல்லாதோருக்கும் சமூக நன்மை விதைக்கும்.

    தீவிர விடங்களை மக்களிடையேப் பரப்பும் ஜாகிர் நாயக் போன்றோரின் கருத்துக்களை புறக்கணிப்பதே நல்லது. ஜாகிர் நாயக்கை இஸ்லாமிய அறிஞர்களே '' காபிர் '' என விலக்கப்பட்டதும், கனடா மற்றும் பிரிட்டனுக்கு நுழைய அவருக்கு ஏன் தடை விதித்தார்கள் என்றுக் கூடத் தெரியாதா?

    ஒசாமா பின் லேடன் போன்றவர்களை நேரிடையாக ஆதரித்தவர் என்பதும் தெரியாதா. இவர்கள் போன்ற பேச்சைக் கேட்பதை விடவும் ஒவ்வொரு முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவரும் குரானை நீங்களேப் படித்துப் பொருள் புரிந்துக் கொள்ளுங்கள்...

    இறைவன் மெய்ப் பொருளைக் காட்டுவான் ..........

    ReplyDelete
  3. //ஆனால் அவரைப் போன்று அரை அறிவுக் காரர்களின் பிரச்சாரங்களை இஸ்லாமியர் நம்பத் தேவை இல்லை. குரானுக்கு சம்பந்தமே இல்லாத விடயங்களை முடிச்சுப் போட்டு தாம் அறிவானவர் என்று காட்டிக் கொள்பவர்.//

    அதாவது வேதங்களை முறையாக படித்து அதன் அர்த்தங்களை வசன எண்ணின் ஆதாரத்தோடு கொடுக்கும் இவர் அரை அறிவுக்காரர். ம்..ம்..நடத்துங்கள்.

    //இஸ்லாத்தில் குறை மற்றும் நிறைகள் இருந்தே இருக்கின்றன. அதன் நிறைகளை எடுத்துக் கூறி பிற சமூகங்களோடு இணைந்து வாழ முற்படுதலே இஸ்லாமியருக்கும், இஸ்லாமியர் அல்லாதோருக்கும் சமூக நன்மை விதைக்கும்.//

    இதைத்தானே ஜாகிர் நாயக்கும் செய்து வருகிறார். குர்ஆன் சொல்லும் இறைவனும், இந்து மத வேதங்கள், பழைய ஏற்பாடு சொல்லும் இறைவன் அனைவரும் ஒருவரே என்ற கோட்பாடு உலக மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்குமா இல்லையா?

    //ஒசாமா பின் லேடன் போன்றவர்களை நேரிடையாக ஆதரித்தவர் என்பதும் தெரியாதா//

    அமெரிக்காவை எதிர்த்த வகையில் அவரை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அதற்காக அப்பாவி பொது மக்களை இலக்காக்கியது உண்மையானால் உசாமாவை நான் எதிர்க்கிறேன்.

    //இறைவன் மெய்ப் பொருளைக் காட்டுவான் ..........//

    வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  4. ஓம் அப்பா போற்றி* ஓம் அரனே போற்றி
    * ஓம் அமுதே போற்றி* ஓம் அழகே போற்றி
    * ஓம் அத்தா போற்றி* ஓம் அற்புத போற்றி
    * ஓம் அறிவா போற்றி* ஓம் அம்பலா போற்றி
    * ஓம் அரியோன் போற்றி * ஓம் அருந்த வா போற்றி
    * ஓம் அணுவே போற்றி * ஓம் அண்டா போற்றி
    * ஓம் ஆதியே போற்றி * ஓம் ஆரங்கா போற்றி
    * ஓம் ஆரமுதே போற்றி* ஓம் ஆரணா போற்றி
    * ஓம் ஆண்டவா போற்றி* ஓம் ஆலவாமா போற்றி
    * ஓம் ஆரூரா போற்றி * ஓம் இறைவா போற்றி
    * ஓம் இடபா போற்றி * ஓம் இன்பா போற்றி
    * ஓம் ஈசா போற்றி * ஓம் உடையாய் போற்றி
    * ஓம் உணர்வே போற்றி* ஓம் உயிரே போற்றி
    * ஓம் ஊ ழியே போற்றி* ஓம் எண்ணே போற்றி
    * ஓம் எழுத்தே போற்றி* ஓம் என்ருணா போற்றி
    * ஓம் எழிலா போற்றி* ஓம் எளியே போற்றி
    * ஓம் ஏகா போற்றி* ஓம் ஏழிசையே போற்றி
    * ஓம் ஏநூர்ந்தா போற்றி* ஓம் ஐயா போற்றி
    * ஓம் ஒருவா போற்றி* ஓம் ஒப்பிலா போற்றி
    * ஓம் ஒளியே போற்றி* ஓம் ஓங்காரா போற்றி
    * ஓம் கடம்பா போற்றி* ஓம் கதிரே போற்றி
    * ஓம் கதியே போற்றி* ஓம் கனியே போற்றி
    * ஓம் கலையே போற்றி* ஓம் காருண்யா போற்றி
    * ஓம் குறியே போற்றி* ஓம் குருவே போற்றி
    * ஓம் குணமே போற்றி* ஓம் கூ த்தா போற்றி
    * ஓம் சடையா போற்றி* ஓம் சங்கரா போற்றி
    * ஓம் சதுரா போற்றி* ஓம் சதாசிவா போற்றி
    * ஓம் சிவமே போற்றி* ஓம் சிறமே போற்றி
    * ஓம் சித்தா போற்றி* ஓம் சீரா போற்றி
    * ஓம் சுடரே போற்றி* ஓம் சுந்தரா போற்றி
    * ஓம் செல்வா போற்றி* ஓம் செங்கணா போற்றி
    * ஓம் செம்பொனா போற்றி* ஓம் சொல்லே போற்றி
    * ஓம் ஞாயிரே போற்றி * ஓம் ஞானமே போற்றி
    * ஓம் தமிழே போற்றி * ஓம் அரசே போற்றி
    * ஓம் தத்துவா போற்றி* ஓம் தலைவா போற்றி
    * ஓம் தந்தையே போற்றி* ஓம் தாயே போற்றி
    * ஓம் தாண்டவா போற்றி* ஓம் திங்களே போற்றி
    * ஓம் திசையே போற்றி* ஓம் திரிசூலா போற்றி
    * ஓம் துணையே போற்றி* ஓம் தெளிவே போற்றி
    * ஓம் தேவதேவே போற்றி* ஓம் தோழா போற்றி
    * ஓம் நமச்சிவாயா போற்றி* ஓம் நண்பா போற்றி
    * ஓம் நஞ்சுண்டா போற்றி* ஓம் நான்மறையா போற்றி
    * ஓம் நிறைவே போற்றி* ஓம் நினைவே போற்றி
    * ஓம் நீலகண்டா போற்றி* ஓம் நெறியே போற்றி
    * ஓம் பண்ணே போற்றி* ஓம் பித்தா போற்றி
    * ஓம் புராணா போற்றி* ஓம் பெரியோய் போற்றி
    * ஓம் பொருளே போற்றி* ஓம் பொங்கரவா போற்றி
    * ஓம் மணியே போற்றி* ஓம் மதிசூடியே போற்றி
    * ஓம் மருந்தே போற்றி* ஓம் மலையே போற்றி
    * ஓம் மஞ்சா போற்றி* ஓம் மணாளா போற்றி
    * ஓம் மெய்யே போற்றி* ஓம் முகிலே போற்றி
    * ஓம் முத்தா போற்றி* ஓம் முதல்வா போற்றி
    * ஓம் வாழ்வே போற்றி* ஓம் வைப்பே போற்றி
    'இறைவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்.'
    -குர்ஆன் 7:180

    'அல்லாஹ் என்று அழையுங்கள். ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.' என்று முஹம்மதே! கூறுவீராக!'
    -குர்ஆன் 17:110

    'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
    -ரிக்வேதம 1:164:46

    ReplyDelete
  5. 'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
    -ரிக்வேதம 1:164:46


    'இறைவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்.'
    -குர்ஆன் 7:180

    'அல்லாஹ் என்று அழையுங்கள். ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.' என்று முஹம்மதே! கூறுவீராக!'
    -குர்ஆன் 17:110

    குர்ஆனில் கூறப்படும் இறைவனின் மற்ற தன்மைகள், பெயர்கள்:

    ரப்-அதிபதி, அவ்வல்-முதலானவன், ஆகிர்-முடிவானவன், பாரீ-உருவாக்குபவன், பாத்தின்-அந்தரங்கமானவன், பதீவு-முன்மாதிரியின்றி படைத்தவன், பர்ரு-நல்லது செய்பவன், பஷீர்-பார்ப்பவன், தவ்வாப்-ம்னிப்பை ஏற்பவன், ஜாமிஉ-திரட்டுபவன், ஜப்பார்-அடக்கி ஆள்பவன், ஹஸீப்-கணக்கெடுப்பவன், ஹஃபீன்-காப்பவன், ஹக்-மெய்யானவன், ஹக்கீம்-ஞானமிக்கவன், ஹலீம்-சகிப்பவன், ஹமீத்-புகழுக்குரியவன், ஹய்யு-உயிரள்ளவன், ஹாலிக்-படைத்தவன், ஹபீர்-நன்கறிந்தவன், ரவூஃப்-இரக்கமுடையவன், ரஹ்மான்-அருளாளன், ரஹீம்-நிகரற்ற அன்புடையோன், ராஸிக், ரஸ்ஸாக்-உணவளிப்பவன், ரகீப்-கண்காணிப்பவன், ஸலாம்-நிம்மதி அளிப்பவன், ஸமீஉ-செவியுறுபவன், ஷக்கூர்-நன்றியை ஏற்பவன், ஷஹீத்-நேரடியாகக் கண்காணிப்பவன், ஸமத்-தேவையற்றவன், ளாஹிர்-வெளிப்படையானவன், அஸீஸ்-மிகைத்தவன், அளீம்-மகத்தானவன், அஃபுவ்வு-பெருந்தன்மையுடன் மன்னிப்பவன், அல்லாமுல் குயுப்-மறைவானவற்றை அறிபவன், அலிய்யு-உயர்ந்தவன், அலீம்-அறிந்தவன், கஃபூர்-மிகவும் மன்னிப்பவன், கனிய்யு-தேவையற்றவன், ஃபத்தாஹ்-தீர்ப்பளிப்பவன், குத்தூஸ்-தூயவன், காதிர்-ஆற்றலுடையவன், கரீப்-அருகில் உள்ளவன், ஹாகிம்-தீர்ப்பு வழங்குபவன், கவிய்யு-வலிமையானவன், கய்யூம்-நிலையானவன், கபீர்-பெரியவன், அக்ரம்-பெரும் வள்ளல், லத்தீஃப்-நுட்பமானவன், முஃமின்-அபயமளிப்பவன், முதஆலி-உயர்ந்தவன், முதகப்பிர்-பெருமைக்கு சொந்தக்காரன், மதீன்-உறுதியானவன், முஜிப்-ஏற்பவன், பதிலளிப்பவன், மஜீத்-மகத்தானவன், முஹ்யீ-உயிர் கொடுப்பவன், முஸவ்விர்-வடிவமைப்பவன், முக்ததிர்-ஆற்றலுடையவன், முகீத்-ஆற்றலுடையவன், மாலிகுல் முல்க்-ஆட்சிக்கு உரிமையாளன், மாலிகு யவ்மித்தீன்-நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி, முபீன்-தெளிவுபடுத்துபவன், முஹீத்-முழுமையாக அறிபவன், மலிக்-அரசன், துன்திகாம்-பழிதீர்ப்பவன், முன்தகீம்-பழி தீர்ப்பவன், முஹைமின் கண்காணிப்பவன், மவ்லா-எஜமான், நூர்-ஒளி, ஹாதி-வழிகாட்டுபவன், வாஹித்-ஏகன், வாரிஸ்-உரிமையாளன், வாஸிவு-தாராளமானவன், வதூத்-அன்புடையவன், வக்கீல்-பொறுப்பாளன், வலீ-பொறுப்பாளன், நஸீர்-உதபுபவன், வஹ்ஹாப்-வள்ளல்

    ReplyDelete
  6. வால்பையன்!

    //வேதத்தில் உருவவழிபாடு தவறு என சொல்லியிருக்கா சுவனபிரியன்!?//

    'அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது'
    -யசூர் வேதம் 32:3

    'நண்பர்களே! தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்'
    -ரிக்வேதம் (8:1:1) (10)

    சுருதி ஸூக்தி மாலா சுலோகம் 7
    நாநீச்வரம் பவிதுமர்ஹதி விச்வமேதத்
    பஹ்வீச்வரம் ச நிதரா மயதா ப்ரமாணம் |
    தல்லோக வேத விதிதேச்வர ! வர்ஜனேன
    கோயம் ப்ரம : கதிசிதீச்வரமன்ய மாஹு: ||

    யஜமானனை வேலைக்காரன் நமஸ்கரிப்பது வழக்கம். அது தான் ஈச்வர ப்ருத்யந்நியாய மெனப்படும்.
    ஈச்வரபதம் வேதபுராணங்களில் பரமேச்வரனையே குறிப்பதாக யோக ரூட பதமென்பது முன்சொல்லியபடி தீர்மானிக்கப்பட்டிருப்பதால், ப்ருத்ய ஸ்தானீயர்களானவர்களால் செய்யப்படும் நமஸ்காரம் பரமசிவனைத்தான் சேரும் என்பது ‘ஈச்வர’ சப்தார்த்ததைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டது. அதனால் உலகுக்கு ஈச்வரன் கிடையாது என்ற நிரீச்வரவாதமும், பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற ‘பஹ்வீச்வர’ வாதமும், சிவபெருமானைத்தவிர வேறு கடவுள் உண்டு என்ற ‘அ ன்யேச்வர’ வாதமும், இம்மூன்றும் ஸரியல்லவென்பதை இந்த 7வது ச்லோகத்தால் கூறுகிறார்.

    பதவுரை
    ஏதத் – இந்த, விச்வம் – ப்ரபஞ்சம் (உலகம்) அனீச்வரம் முழு முதற்கடவுள் இல்லாமல், பவிதும் – உண்டாவதற்கோ, இருப்பதற்கோ, நார்ஹதி – தகுந்ததில்லை, பஹ்வீச்வரம்-ச - பல கடவுள்களை உடைத்தாயிருப்பதும், நிதராம் ந – முற்றிலும் தகுந்ததில்லை. அயதா ப்ரமாணம் தத் – பெரிய மாளிகை, கோபுரங்களில் பலபேர் கர்த்தாவாகக் காணப்படுவதால் ஒப்புக் கொள்ளலாம். ப்ரமாணமில்லாததால், உலகுக்குப் பல கர்த்தாக்களை அங்கீகரிக்க முடியாது. லோக வேத விதிதேச்வர வர்ஜனேன – புராணங்களிலும், வேதங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஈச்வரனான நீலகண்டன், சந்திரசேகரனைத் தள்ளிவிட்டு, கதி சித் – சிலர், அன்யம் – மற்று பிரம்மாவை, விஷ்ணுவை அனீச்வரனை ஈச்வரனல்லாதவர்களை, ஈச்வரம் – ஜகத்கர்த்தாவாக, ஆஹு: - சொல்லுகிறார்கள், அவர்கள் மூடர்கள். கோயம் ப்ரம: - ஏன் இந்த மயக்கம்? வேத புராணங்கள் தெளிவாகத் தெரிவிக்கும் போதுகூட, ஏன் இந்த மயக்கம் அவர்களுக்கு?

    விசேஷ வுரை
    கன்று வளர்ச்சிக்காகப் பால் சுரப்பது போல, அசேதனமாகிய உஅலகம். ஜீவாதியர் சுகத்திற்காக சேதனன் இல்லாமல் உண்டாகவோ, சேஷ்டிக்கவோ முடியாது. பால் சேதனனாகிய பசுவின் உதவியால் சுரக்கிறது. அயஸ் காந்தமும் இரும்பை சேதனனால் சமீபத்தில் வைக்கப்பட்ட பிறகுதான் இழுக்கிறது. ஆதலால், அசேதன உலகுக்கு சேதனன் ஈச்வரன் இருந்தே ஆகவேண்டும். அவன் ஒருவன் ஸர்வ சக்தனாக ஒப்புக் கொள்ளப்படுவது லாகவ ந்யாயத்தால். ச்ருதியும்,
    தத் விஜிஞாஸஸ்வம்
    தஸ்மாத் ஸப்தார்ச்சிஷ; ஸமிதஸ் ஸப்தஜிஹ்வ:
    த்யாவா ப்ருதிவீ ஜனயந் தேவ ஏக:

    என்ற விடங்களில், ஏகவசனத்தாலும், ஏகபதத்தாலும் ஓர் காரணம் என்கிறது. ச்வேதாச்வதரம், சிவரகஸ்யாகமம், வாயவீய ஸம்ஹிதை, லிங்கபுராணம்,காளிகா கண்டம், பத்ம புராணம், மகாபாரதம் சாந்திபர்வம் ஆனுசாஸனிகபர்வம், ஸ்காந்தம் முதலிய கிரந்தங்களில் ப்ரம்மாவை வலது பக்கத்திலிருந்தும், விஷ்ணுவை இடது பக்கத்திலிருந்தும், நான்கு வேதங்களையும் நான்கு முகங்களிலிருந்தும் படைத்துப் பரமேச்வரன் உலகத்தை நடத்துவதாகவும், யுக முடிவில் அழிப்பதாகவும் கூறப்பட்டிருப்பதால் கார்யகோடியில் சேர்ந்த பிரம்மா, விஷ்ணு தேவதைகள் உலகின் காரணமாகவோ, ஈச்வரனாகவோ இருக்கமுடியாதது பற்றி, அன்யேச்வர வாதமும், ப்ரமையால் ஏற்பட்டதுதான், என்பது தாத்பர்யம்.

    ReplyDelete
  7. ஜோதிஜி!

    //இன்று தான் உங்கள் பெரும்பாலான பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மதம் சார்ந்த விசயங்களை உங்கள் பார்வையில் எழுதியிருந்தாலும் மற்ற வலைதளங்களை குறிப்பாக திரைப்படங்கள் மற்றும் பத்துப் பைசாவுக்கு வெகுமதி இல்லாத எழுத்துக்களை விட உங்கள் ஒவ்வொரு ஆக்கமும், இதற்காக நீங்கள் உழைத்துள்ள உழைப்பிற்கும் என் வாழ்த்துகள்.//

    கிடைக்கும் ஓய்வு நேரத்தை இப்படி உபயோகமாக ஏதாவது செய்வோமே என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த வலைப்பூ. நம் கருத்தை மற்றவர்கள் ஏற்கிறார்களோ இல்லையோ சொல்ல வந்ததை நேரிடையாக சொல்லிவிடுவது எனது பாங்கு.

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. இக்பால் செல்வன்!

    //ஆனால் நீங்கள் சொல்வது போல வேதங்களைப் படித்து விட்டு அனைவரும் முஸ்லிமாக மாறிவிடுங்கள் என சொல்வது சிரிப்பைத் தருவதாக அமைகின்றது//

    நான் யாரையும் இவற்றைப் படித்து விட்டு முஸ்லிம்களாக மாறச் சொல்லவில்லை. வேதங்கள் அனைத்தின் மூலகர்த்தா ஒருவர் என்ற நிலைக்கு வந்தால் மற்ற மதங்களின் மேல் உள்ள வெறுப்பு ஓரளவு குறைய வாய்ப்பிருக்கிறது. வேதத்தின் பால் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் தீண்டாமை படிப்படியாக குறையவும் வாய்ப்புள்ளது..

    //சௌதியில் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. நாளையே இந்துக்கள் அங்கே போராட்டம் நடத்தினால் அனைவரும் ஒடுக்கப்படுவர், நாடுக் கடத்தப்படுவர் என்பதில் ஐயமில்லை.//

    இதைப் படித்தால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? குஜராத் கலவரம் மோடி ஆட்சியில் திரும்பவும் அமருவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் குடி மக்கள் சகஜ நிலைக்கு வந்திருக்கலாம்.

    ஆனால் சவுதி நிலைமை வேறு. அங்கு பணி நிமித்தம் போன் அனைத்து இந்துக்களும் அந்நாட்டு குடிமக்கள் அல்ல. அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நாங்கள் பணி செய்கிறோம் என்ற அக்ரிமெண்டோடு அந்நாட்டுக்கு சென்றவர்க்ள. வழ்கம்போல் ஏனைய வாதங்களைப் போலவே இதுவும் சொதப்பல்.

    சார்வாகன்!

    //ஆக்வே அந்த ஏக இறைவன் (One and One Only) இந்த குரானை மட்டும் பாதுகாத்து(?) இது பழைய வேதங்கள் அனைத்துக்கும் பதிலாக இது மட்டுமே பின்பற்றப்பட வேண்டியது என்று கூறிவிட்டார்.இதை மட்டும் பாதுகாக முடிந்தவருக்கு ,முன் வேதங்களை ஏன் பாதுகாகவில்லை என்றெல்லாம் அதிகப் பிரசங்கித்தனமாக கேட்டால் இறுதி நாளில் நரகம் கிட்டும்.சொன்னதை கேட்டால் இன்பம் பொங்கும் சுவனம். ஆக்வே ஆய்வு செய்வதை விட்டுவிட்டு இவ்வாழ்க்கை நிலையில்லை சுவனம் செல்லும் வழியை நாடுவோம்.ஆமீன்//

    ஆமீன்...ஆமீன்.....யாரப்பல் ஆலமீன். :- )

    //உருவத்தில் பிடிப்பு /நம்பிகை வைப்பதற்க்கு எளிதாக இருப்பதாலும், உருவன வழிபாடு ஒரு பண்பாட்டை சார்ந்து இருப்பதாலும் உருவவழிபாடு வந்திருக்கல்ஆம். நான் கேள்விப்பட்டதே ஒழிய உண்மையா தெரியவில்லை, இந்துமத வேதங்களில், சிவா ,விஷ்ணு போன்றா பெயர்களும் கூட முதலில் இருந்ததில்லை என்பதே.//

    சீதக்!

    இந்த பதிவின் மேலே உள்ள காஃபாவில் தொழுகை நடைபெறும் நேர்த்தியை பாருங்கள். சாதி மத இனம் கடந்து அனைத்து மக்களும் ஓரணியில் உளப்பூர்வமாக இறை வணக்கத்தில் ஈடுபட்டிருப்பது எப்படி சாத்தியமாயிற்று? அவர்களுக்கு முன்னே எந்த ஒரு உருவமும் இல்லையே!

    ReplyDelete
  9. Anonymous1:30 PM

    // குர்ஆன் சொல்லும் இறைவனும், இந்து மத வேதங்கள், பழைய ஏற்பாடு சொல்லும் இறைவன் அனைவரும் ஒருவரே என்ற கோட்பாடு உலக மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்குமா ? //

    முடியவில்லை சகோ. சரி அனைத்தும் ஒன்றே என ஏற்றுக் கொள்வோம். அந்த ஒன்று எந்தவொன்று என்பதில் அனைவரும் பொதுக் கருத்துக் கொள்ள இயலுமா..

    உதா. பரம் பிரம்மாவும், யாகோவாவும், அல்லாஹ்வும் ஒரே கடவுளின் வெவ்வேறு நாமங்களே ஆகும் என்பதை நான் ஏற்கின்றேன். ஆனால் ... அதன் பின்னான நிலை என்ன ?

    இஸ்லாமியர் அல்லாஹ்வே சரி எனவும், குரானே முழுமையான வேதம் எனவும் கூறுவார்கள் - அதனை பிறர் ஏற்பார்களா? சொல்லுங்கள் ... அங்கு மற்றொரு சிக்கல் வரும், சரி குரானே அனைவரும் ஏற்போம் என்று வைத்துக் கொண்டால் அதில் சொல்லப்பட்டவை அனைவருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும், -------- பல்வேறு கோட்பாட்டுச் சிக்கல்கள் எழும் ......

    சகோதரத்துவத்துக்கு ஒரே வழி --- அனைவரும் தத்தமது மதங்களை வணங்கலாம், ஆனால் அவற்றை அரசியல்படுத்தி பிறர் மீது திணிக்காமல் தனித் தனி மனித சுதந்திரமாக மதங்களை விட்டுவிடுதலே ஆகும்........... அதனை மதவாத நாடுகள் ஏற்குமா என்பதே கேள்விக் குறி ???

    ReplyDelete
  10. Anonymous1:37 PM

    அதே போல உலக மக்கள் அனைவரும் இறைவன் ஒன்று என ஏற்க வேண்டும் எனச் சொல்லப்படுவதும் கருத்துத் திணிப்பு என நான் நினைக்கின்றேன் ............. ஆசிய சமயங்கள் பலவற்றில் கடவுள் பல்வேறு நிலைகளில், பல்வேறு உருவங்களில் இருக்கின்றார்கள் என நினைக்கின்றார்கள் ..... அவர்களின் கருத்துகளை விட ஓரிறைக் கோட்பாடு உடையவரின் கருத்துக்கள் எவ்வகையில் உயர்வானது அல்லது தாழ்வானது ?? ...

    சொல்லப் போனால் பல கடவுளை வணங்கும் இந்துக்களிடையேக் கூட அனைத்துக் கடவுளும் பரம் பிரம்மம் என்பதில் இருந்து வந்ததாக நம்பாதவர்களும் உண்டு.......... ஆனால் அவர்களிடையே கடவுளால் பிரச்சனை எழவில்லை.. மாறாக சமூக ஏற்றத் தாழ்வால் தான் பிரச்சனைகள் எழுகின்றன.........

    கடவுளை ஒன்றாக்கி விட்டாலும் சமூக ஏற்றத் தாழ்வினைத் தவிர்க்க வேறு வழியை நாடித் தான் போக வேண்டும் ............... !!!

    ஆக கடவுளைக் கொண்டும், மதங்களைக் கொண்டும் சமூக சமத்துவத்தை நிறுவுவது கடினம் -------- கல்வி, வேலை, தேசிய விழுமியங்கள் கொண்டே சமூக சமத்துவத்தை நிறுவ முடியும் என்பதே உண்மை ...............

    ஜாகிர் நாய்க் போன்றோரை விடவும் இஸ்லாமிய சிந்தனையை அழகாகவும், எண்களோடும் சொல்லும் நபர்கள் பலர் இருக்கின்றார்கள் ......... சில இமாம்களோடு நேராக பேசியுள்ளேன் .......... அவர்களை விடவும் ஜாகி நாய்க் பெரிய அறிவாளியாக எனக்குப் படவில்லை........

    ReplyDelete
  11. //கல்வி, வேலை, தேசிய விழுமியங்கள் கொண்டே சமூக சமத்துவத்தை நிறுவ முடியும் என்பதே உண்மை ...............//

    தவறான கருத்து. முன்பை விட சாதி வெறி படித்த மக்களிடம்தான் தீவிரமாக உள்ளது. வினவு தளத்தில் நடக்கும் பல வாதங்களை நீங்களும் பார்த்திருக்கலாம்.

    //ஆசிய சமயங்கள் பலவற்றில் கடவுள் பல்வேறு நிலைகளில், பல்வேறு உருவங்களில் இருக்கின்றார்கள் என நினைக்கின்றார்கள் ..... அவர்களின் கருத்துகளை விட ஓரிறைக் கோட்பாடு உடையவரின் கருத்துக்கள் எவ்வகையில் உயர்வானது அல்லது தாழ்வானது ?? ...//

    ஒருமுறை அரபி நண்பர் தினசரி ஒன்றை காண்பித்தார். அதில் விநாயகரின் வாகனமான மூஞ்சுறுவை ஒரு இந்து நண்பர் மிக பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருந்தார். அரபி நண்பர் என்னிடம் 'எப்படி இதை எல்லாம் உங்கள் நாட்டில் கடவுளாக வழிபடுகிறார்கள்?' என்று வியப்புடன் கேட்டார். நான் ஏதேதோ சொல்லி அன்று சமாளித்தேன். ஏன் இப்படி ஒரு நிலை? வேதக் கருத்துகள் இதற்கெல்லாம் தடையாக இருக்கும் போது எங்கிருந்து இந்தப் பழக்கங்களெல்லாம் வந்தது? இதை சீர்திருத்துவது யார்?

    // சில இமாம்களோடு நேராக பேசியுள்ளேன் .......... அவர்களை விடவும் ஜாகி நாய்க் பெரிய அறிவாளியாக எனக்குப் படவில்லை........ //

    பலருக்கும் பல கோணங்களில் தனிப்பட்ட மனிதர்களை பற்றிய மதிப்பீடு இருக்கும். ஜாகிர் நாயக்கின் சில கொள்கைகளில் நானும் மாறுபடுகிறேன். ஆனால் அவர் வைக்கும் சில வாதங்களை புறந்தள்ள முடியாது.

    ReplyDelete
  12. //அதிலும் ஷியா மற்றும் அஹமதியாக்களை அனுமதிக்க கூடாது,அவர்களும் இணை வைப்பவர்களே என்று அடிக்கடி சில பிரச்சினைகளும் ஏற்படுவது உண்டு.//

    ஷியாக்களை அனுமதிப்பதில்லை என்று எங்கிருந்து படித்தீர்கள்? ஒவ்வொரு வருடமும் ஈரானிலிருந்து ஒரு பெருங் கூட்டம் ஹஜ் செய்ய வருவதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்ததில்லையா?

    //புகைப்படத்தில் உள்ள கட்டிடத்தை யாராவது காறித்துப்பினல்ஓ, அந்த் கட்டிடத்தின் புகைப்படத்தை யாராவ்து காலில் மிதித்தாலோ ஏன் கோபம் வருகிறது//

    மனிதர்கள் வணங்கக் கூடிய இடத்தில் யாராவது எச்சில் துப்புவார்களா? கோவில் அசுத்தமாக இருந்தால் அங்கு நீங்கள் சாமி கும்பிட போவீர்களா?

    அடுத்து இறை இல்லமான கஃபா புனிதமானது என்று இறை வேதம் குர்ஆன் சொல்கிறது. செவ்வக வடிவில் உள்ள ஒரு கட்டிடமே அது. அதனுள் எந்த சிலைகளும் இல்லை.

    ஆனால் இந்துக்கள் உருவ வழிபாடு செய்வதை இந்து மத வேதங்களே தடுக்கின்றன. நீங்கள் ராமரையோ, பிள்ளையாரையோ, முருகனையோ கடவுளாக வணங்குகிறீர்கள். இதற்கான ஆதாரம் என்ன? அவர்கள் அனைவரும் இறைவன்தான் என்பதை எதை வைத்து முடிவு செய்தீர்கள்? எனவே நான் கஃபாவை புனிதமாக நினைப்பதும், நீங்கள் பிள்ளையாரை தெய்வமாக வணங்குவதும் எவ்வாறு ஒன்றாக முடியும்?

    //ஆனால் முஸ்லிம்களுக்கு குரான் என்ற புத்தகமே உருவமாக புணிதமாக்கப்பட்டு வணங்கப்படுகிறது. அதன் வரிகள் இறைவனின் வார்த்தை என நம்புவதால் அப்புத்தகமே கடவுளாகத் தெரிகிறது.சுருக்கமாகச் சொல்வதென்றால் காகிதக் கடவுள் என்ற கற்பனையை வணங்கிவருகிறார்கள்.//

    குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட ஒரு சட்ட புத்தகம். அதன் சட்டங்களை ஒருவன் தனது வாழ்வில் கடைபிடிப்பதன் மூலமே குர்ஆனுக்கு மதிப்பு கொடுத்தாக ஆகும். குர்ஆன் என் கையில் இருந்தால் அது இறை வேதம். அதே உங்கள் கையில் இருந்தால் நீங்கள் நம்பாததால் அது ஒரு சட்ட புத்தகம்.

    சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு பாதிரியார் குர்ஆனை எரித்தார். இது சிரிப்பை வரவழைக்கவில்லையா? ஒரு புத்தகத்தை கொளுத்துவதால் முஸ்லிம்களுக்கு என்ன நட்டத்தை ஏற்படுத்தி விட்டார்? ஒன்றும் இல்லை. இதற்காக போராட்டம் நடத்தி அவரை பெரிய மனிதனாக்குவது தேவையில்லாத வேலை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)