Tuesday, May 24, 2011

பன்றி படங்களை சீனாவுக்கே திருப்பி அனுப்பு!


எங்கள் கம்பெனி பெரும்பாலான பொருட்களை சைனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது. வழக்கமாக மரம் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் பல கண்டெய்னர்கள் வருவது வழக்கம். இந்த முறை எனது பாஸ் கம்யூட்டர் சாதனங்களும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் இரண்டு கண்டெய்னர்கள் ஆர்டர் செய்து விட்டு வந்தார். கண்டெய்னரும் வந்தது.

சைனாவிலிருந்து வரக் கூடிய அனைத்து பொருட்களின் விலையை எடுத்து டாலருக்கு மாற்றி பிறகு ரியாலுக்கு மாற்ற வேண்டும். அதிலும் கண்டெய்னர் வாடகை, சைனா சென்ற செலவு, கம்பெனியின் லாபம் 30 சதவீதம் எல்லாம் போட்டு மார்க்கெட் ரேட்டை நிர்ணயிப்பதே எனது வேலை. வழக்கப்படி இந்த வேலைகளை கணிணியில் ஏற்ற நானும் ஓனரும் மாடல்களை பார்வையிட்டோம். சிறுவர்கள் விளங்கிக் கொள்ள படம் பார்த்து கதை சொல்லும் ஒரு போர்டும் அதில் இருந்தது. குதிரை, மாடு, ஆடு, கோழி படங்களுக்கு நடுவே ஒரு பன்றியின் படமும் அதில் இடம் பெற்றிருந்தது.

என் ஓனருக்கு பன்றியின் படத்தைப் பார்த்தவுடன் கோபம் தலைக்கேறியது. 'நான் சொன்னது ஒன்று. அந்த சைனீஷ் அனுப்பியது ஒன்று. இந்த போர்டை விற்பது ஹராம். எனவே இதை சைனாவுக்கே திரும்ப அனுப்பு. அல்லது நமது பெயிண்டரிடம் சொல்லி பன்றியின் இடத்தில் வேறு மிருகத்தைப் போடச் சொல்லவும்' என்றார் என்னிடம்.

நான் பொறுமையாக 'ஹராம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, இறைவன் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான்' (குர்ஆன் 2:173) என்ற குர்ஆன் வசனத்தை பார்க்கவில்லையா?' என்று என்னிடம் கேட்டார்.

'பன்றியின் இறைச்சி' என்று தான் வருகிறதே யொழிய பன்றியே ஹராம் என்று வரவில்லை. பன்றியைப் பற்றி படிப்பது, பன்றியைப் பற்றி ஆராய்ச்சி செய்வது இவை எல்லாம் இஸ்லாத்தில் தடை இல்லை. காரணம் இல்லாமல் ஒரு படைப்பை இறைவன் ஏன் படைக்க வேண்டும்?' என்று கேட்டேன்.

ஒரு கணம் யோசித்தவர் 'சந்தேகமான விஷயத்தில் நான் குர்ஆனில் வாதிட விரும்பவில்லை.' என்றார. குர்ஆனின் வார்த்தைகளுக்கு இந்த மக்கள் எந்த அளவு மரியாதை வைத்துள்ளார்கள் என்று நினைத்து பல முறை வியந்திருக்கிறேன். இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படாமல் அனைத்து போர்டுகளும் கொடவுனில் தூங்குகின்றன. என் ஓனரோடு ஒசாமா பின் லாடன், மன்னர் அப்துல்லா, பாலஸ்தீன் பிரச்னை என்று அவ்வப்போது நிறைய வாதிடுவது உண்டு. எனவே இது போன்ற வாதங்கள் இங்கு வழக்கமாக நடப்பது தான்.

பன்றியின் இறைச்சி ஏன் தடுக்கப்பட்டது? என்று கேட்டால் பலர் 'அது மலத்தை தின்கிறது. சாக்கடையில் புரள்கிறது' என்று கூறுவர். ஆனால் கோழி இதே செய்கையை செய்வதை நாம் பார்க்கிறோம். ஆனால் அறுப்பதற்கு முன் வீட்டில் இரண்டு நாட்கள் கட்டிப் போட்டாவது அதை அறுத்து சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் கோழியின் இறைச்சியை இறைவன் தடை செய்யவில்லை. எனவே இது காரணம் அல்ல.

பொதுவாக உணவுகளில் கொழுப்பு சத்து இருந்தால் அது உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இதய நோயாளிகளுக்கு இது பெரும் பிரச்னையைத் தரும். 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டிறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது. பாதிக்கு பாதி கொழுப்புள்ள பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதால் மனிதனுக்கு பல கேடுகள் வருகிறது. பன்றியின் இறைச்சியில் நாடாப் புழுக்கள் அதிகம் உள்ளன. எத்தனை அதிக சூட்டிலும் இந்த புழுக்கள் சாவதில்லை. இது மனிதனுக்கு மிகக் கெடுதலை உண்டு பண்ணுகிறது. பன்றிக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் என்ற பெயரில் நோய் பரவ பன்றியின் இறைச்சி காரணமாகிறது. இது போன்ற காரணங்கள்தான் பன்றியின் இறைச்சி நமக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்த தற்போது ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. பன்றியின் ரத்தமும் மனிதனின் ரத்தமும் ஓரளவு ஒத்துப் போவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். வருங்காலத்தில் பன்றியின் ரத்ததம் மனிதனுக்கும் செலுத்தப் படலாம். எனவே பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதை நாம் வெறுப்போம். அதற்காக பன்றி என்ற படைப்பையே வெறுப்பதை தவிர்த்துக் கொள்வோம்.

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். 2:173

22 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

    //காரணம் இல்லாமல் ஒரு படைப்பை இறைவன் ஏன் படைக்க வேண்டும்?//

    தெளிவாக இவ்விஷயத்தை பிரித்தறிவித்துள்ளீர்கள் சகோ.சுவனப்பிரியன். மிக்க நன்றி.

    'கொடவுனில் தூங்கும் அந்த போர்டுகளுக்கு என்ன நேர்ந்தன' என்பதை அப்டேட் செய்யுங்கள் சகோ.

    +++++++++++++++++++++++++++++++++++

    {குறிப்பு : தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்.பாருங்கள்}

    +++++++++++++++++++++++++++++++++++

    ReplyDelete
  2. சர்ச்சைக்குரிய பிரச்சனையை வேரொரு கொனத்தில் அணுகி இருக்கின்ரீர்கள். உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. இந்த பன்றியானது, நோவாவின் காலத்தில் அவர் உருவாக்கிய கப்பலில் இருந்த மிருகங்களின் கழிவுகலை அகற்றுவதற்காக படைக்கப்பட்டதாக ஒரு பாக்கிஸ்தான் இஸ்லமிய நண்பர் சொல்லி கேள்விப் பட்டு இருக்கின்றேன். இது உன்மையா?

    kannan from abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  3. தலைப்பைப் பார்த்த உடனே யோசித்தேன், நம்ம சீரியஸ் கட்டுரையாளர் மொக்கை போடுறாரோ என்று, ஆனால் நிறைய விடயங்கள் பதிவில் இருப்பதைப் பின்னர் தான் புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  4. பன்றி இறைச்சி பற்றி குர் ஆன் சொல்லும் விசயங்களைக் கேட்கையில் ஆச்சரியமாக இருக்கிறது சகோ. அதுவும் மனித உடல்களுக்கு ஏற்படும் தீங்கு பற்றிய விளக்கத்தினைக் குர் ஆனில் இருந்து பகிர்ந்திருக்கிறீர்கள், நன்றிகள் சகோ

    ReplyDelete
  5. பன்றியின் பெயர் கூட அல்குர்ஆனில்
    கின்ஸீர் என்று குறிப்பிடப்படுகிறதே!

    ReplyDelete
  6. வஅலைக்கும் சலாம்! சகோ. ஆஷிக்!

    //'கொடவுனில் தூங்கும் அந்த போர்டுகளுக்கு என்ன நேர்ந்தன' என்பதை அப்டேட் செய்யுங்கள் சகோ.//

    இன்னும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. பெரிய ஷேக்கிடம் கலந்து கொண்டு தனது முடிவை தெரிவிப்பதாக எனது ஓனர் சொல்லியுள்ளார். பார்ப்போம்.

    //{குறிப்பு : தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்.பாருங்கள்}//

    பார்த்தேன். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  7. திரு கண்ணன்!

    //சர்ச்சைக்குரிய பிரச்சனையை வேரொரு கொனத்தில் அணுகி இருக்கின்ரீர்கள். உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. இந்த பன்றியானது, நோவாவின் காலத்தில் அவர் உருவாக்கிய கப்பலில் இருந்த மிருகங்களின் கழிவுகலை அகற்றுவதற்காக படைக்கப்பட்டதாக ஒரு பாக்கிஸ்தான் இஸ்லமிய நண்பர் சொல்லி கேள்விப் பட்டு இருக்கின்றேன். இது உன்மையா?//

    செவி வழியாக நிறைய செய்திகள் வரும். முகமது நபி சொல்லியிருந்தால் மட்டுமே இது போன்ற வரலாறுகளை நம்மால் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும். நான் பார்த்த வகையில் அது போன்ற செய்தியை கேள்விப்படவில்லை.

    கழிவறை வசதி இல்லாத வீடுகளில் புதருக்கு பின்னால் செல்லக் கூடியவர்களை பல இடங்களிலும் பார்க்கலாம். நீங்கள் சொல்வது போல் கழிவுகளை சுத்தம் பண்ண இப்படி ஒரு படைப்பை இறைவன் படைத்திருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

    ReplyDelete
  8. நிரூபன்!

    //தலைப்பைப் பார்த்த உடனே யோசித்தேன், நம்ம சீரியஸ் கட்டுரையாளர் மொக்கை போடுறாரோ என்று, ஆனால் நிறைய விடயங்கள் பதிவில் இருப்பதைப் பின்னர் தான் புரிந்து கொண்டேன்.//

    ஹா...ஹா... எனக்கு மொக்கை பதிவு போடத் தெரியாது சகோ.

    //பன்றி இறைச்சி பற்றி குர் ஆன் சொல்லும் விசயங்களைக் கேட்கையில் ஆச்சரியமாக இருக்கிறது சகோ. அதுவும் மனித உடல்களுக்கு ஏற்படும் தீங்கு பற்றிய விளக்கத்தினைக் குர் ஆனில் இருந்து பகிர்ந்திருக்கிறீர்கள், நன்றிகள் சகோ//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  9. திரு அஜீஸ் நிசாருத்தீன்!

    //பன்றியின் பெயர் கூட அல்குர்ஆனில்
    கின்ஸீர் என்று குறிப்பிடப்படுகிறதே!//

    ஹின்ஜீர் என்பதை தமிழ்ப் படுத்தினால் பன்றி என்ற பொருள் வரும். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளக்கமாக சொன்னால் நலமாக இருக்கும்.

    ReplyDelete
  10. சகோதரர் சுவனப்பிரியன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ---------------
    இது போன்ற காரணங்கள்தான் பன்றியின் இறைச்சி நமக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
    ---------

    நல்லதொரு விளக்கத்தை சொல்ல முயற்சித்திருக்கிண்றீர்கள். வாழ்த்துக்கள்.

    இருப்பினும், இறைவனின் வார்த்தைகளுக்கு (பன்றி இறைச்சியை தடுத்ததற்கு) இது காரணமாக இருக்கலாம் என்று நாம் அனுமானம் வைத்திருக்குலாமே ஒழிய இது தான் சரி என்று கூற முடியாது என்பது என்னுடைய கருத்து...அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  11. பன்றி இறைச்சி ஹராம் ஆக்கப்பட்டதன் காரணமாக நானறிந்தது இது: மற்ற விலங்குகளை அறுக்கும்போது "ஹலால்" முறைப்படி வெட்டுவோம் இல்லையா? அதாவது "ஜுகுலார் வெய்ன்" (jugular vein) எனப்படும் கழுத்து இரத்த நாளத்தை அறுத்து இரத்தம் முழுமையாக வெளியேறிய பின்னரே இறைச்சியை வெட்டுவோம் இல்லையா?

    ஆனால் பன்றிக்கு இந்த ஜுகுலார் வெயினும் கிடையாது; கழுத்தும் கிடையாது; அதனால் இரத்தத்தை வெளியேற்ற முடியாது. அதனாலேயே அது உண்ணத்தகுந்ததல்ல என்று கூறப்படுகிறது.

    மேலும், நீங்கள் கூறியதுபோல பன்றியின் இறைச்சிதான் ஹராமே ஒழிய மற்றவை அல்ல. சில காலம் முன், சில பற்பசைகள், மற்றும் சிலவற்றில் பன்றி கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது, தவிர்க்கவும் என்று ஒரு பெரிய லிஸ்டே வந்தது. கொழுப்பைச் சேர்ப்பதில் தவறில்லையெனவும் ஒரு இஸ்லாமியத் தளத்தில் படித்தேன்.

    ReplyDelete
  12. அலைக்கும் சலாம் சகோ.ஆஷிக்!

    //இருப்பினும், இறைவனின் வார்த்தைகளுக்கு (பன்றி இறைச்சியை தடுத்ததற்கு) இது காரணமாக இருக்கலாம் என்று நாம் அனுமானம் வைத்திருக்குலாமே ஒழிய இது தான் சரி என்று கூற முடியாது என்பது என்னுடைய கருத்து...அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.//

    கண்டிப்பாக! அது என் அனுமானந்தான். அப்படித்தான் கூறியிருக்க வேண்டும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    மேலும் நான் சொன்னதற்கு ஆதாரமாக ஹதீஸூம் இருப்பதால் இதுதான் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். இறைவனே மிக அறிந்தவன்.

    2236. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

    நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள்.

    Volume :2 Book :34

    ReplyDelete
  13. //பன்றியின் இறைச்சி' என்று தான் வருகிறதே யொழிய பன்றியே ஹராம் என்று வரவில்லை. பன்றியைப் பற்றி படிப்பது, பன்றியைப் பற்றி ஆராய்ச்சி செய்வது இவை எல்லாம் இஸ்லாத்தில் தடை இல்லை.//
    சரி.பன்றியின் இறைச்சி என்றெ தெளிவாக 5.3 ,6:145,16:115 லும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அரபி அண்ணாச்சி புரிந்து கொண்டால் நல்லது.அரபியில் படித்தால்தான் குரான் நன்றாக விளங்கும் என்றால் அண்ணச்சி அதை பொய்யாக்குகிறாரே.புரியாவிட்டால் திருப்பி அனுப்புவார்.காசு இருக்கிறது என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இது பெரிய பிரசினை அல்ல‌

    //சைனாவிலிருந்து வரக் கூடிய அனைத்து பொருட்களின் விலையை எடுத்து டாலருக்கு மாற்றி பிறகு ரியாலுக்கு மாற்ற வேண்டும்.//

    இதை எதற்கு செய்யவேண்டும் அண்ணாச்சி என்று நீங்களும் கேட்கவில்லை.அண்ணாச்சியும் யோசிக்க மாட்டார்.இதில் எவ்வளவு இலாபம் அமெரிக்காவிற்கு போகின்றது என்று தெரியுமா?இது ஹராமா?ஹலாலா?

    ReplyDelete
  14. ஹூசைனம்மா!

    //மற்ற விலங்குகளை அறுக்கும்போது "ஹலால்" முறைப்படி வெட்டுவோம் இல்லையா? அதாவது "ஜுகுலார் வெய்ன்" (jugular vein) எனப்படும் கழுத்து இரத்த நாளத்தை அறுத்து இரத்தம் முழுமையாக வெளியேறிய பின்னரே இறைச்சியை வெட்டுவோம் இல்லையா?

    ஆனால் பன்றிக்கு இந்த ஜுகுலார் வெயினும் கிடையாது; கழுத்தும் கிடையாது; அதனால் இரத்தத்தை வெளியேற்ற முடியாது. அதனாலேயே அது உண்ணத்தகுந்ததல்ல என்று கூறப்படுகிறது.//

    நீங்கள் கூறும் கருத்தும் சிந்திக்கத்தக்கதாகவே இருக்கிறது. ஏன் இறைவன் தடுத்தான் என்பதை முழுமையாக அறிந்தவன் இறைவன் ஒருவனே!

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  15. குரானில் பன்றி மாமிசம் என்று மட்டுமே உல்ளது.இந்த ஹதிதுகள் என்ன சொல்கின்றன ?
    2236. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள்.
    Volume :2 Book :34
    5954. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, 'மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்' என்று கூறினார்கள்.
    பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம். 133
    Volume :6 Book :77
    5959. அனஸ்(ரலி) அறிவித்தார்
    ஆயிஷா(ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருங்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள்.136
    Volume :6 Book :77

    ReplyDelete
  16. சார்வாகன்!

    //இதை எதற்கு செய்யவேண்டும் அண்ணாச்சி என்று நீங்களும் கேட்கவில்லை.அண்ணாச்சியும் யோசிக்க மாட்டார்.இதில் எவ்வளவு இலாபம் அமெரிக்காவிற்கு போகின்றது என்று தெரியுமா?இது ஹராமா?ஹலாலா?//

    சைனாவின் ரூம்பியிலிருந்து நேரிடையாக ரியாலுக்கே மாற்றலாம். ஆனால் பொருளைக் கொடுக்கு சைனீஸ் கம்பெனிக்கும், என் ஓனருக்கும் தெரிந்த பொதுவான நாணய மாற்று டாலரே! பணத்தை பெற்றுக் கொள்பவருக்கும் பணத்தை அனுப்புபவருக்கும் மதிப்பில் குழப்பம் வராமல் இருக்க வேண்டும். எனக்கு மட்டும் அமெரிக்கா இதன் மூலம் லாபம் அடைவதில் சந்தோஷமா என்ன? டாலர் நுழையாமல் வர்த்தகம் நடைபெற இரு நாட்டவரும் ஒத்துக் கொள்ள வேண்டும். இனி வரும் காலத்தில் டாலரை தவிர்த்த வர்த்தகத்துக்கு முயற்ச்சிப்போம்.

    அடுத்து இவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. இதன் மூலமும் அமெரிக்க வரியவர்கள் சிலராவது பயன் பெறட்டுமே என்ற பெருந்தன்மையாகவும் இருக்கலாம். சவுதி அரசு எந்த வேலையை கொடுத்தாலும் மறு பேச்சு பேசாமல் செய்து கொடுக்கும் ஒரு அடியாளுக்கு கொடுக்கும் கப்பமாகவும் எடுத்துக் கொள்ளலாம். :-0

    ReplyDelete
  17. சார்வாகன்!

    //குரானில் பன்றி மாமிசம் என்று மட்டுமே உல்ளது.இந்த ஹதிதுகள் என்ன சொல்கின்றன ?//

    பன்றியின் மாமிசம் என்றாலே அதில் கொழுப்பும் அடங்கி விடுகிறது. எனவே கொழுப்பை தடை செய்ததில் எந்த முரணும் இல்லை. அடுத்து ஆட்டையோ மாட்டையோ நாம் வளர்த்து பரிபாலிப்பது அதன் பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் தான். பன்றி கறியை தடை செய்து விட்டு அதை வளர்த்து பராமரித்தால் மற்றவர்கள் சாப்பிட உதவியதாகி விடும். சாராயம் குடிக்கா விட்டாலும் சாராய கடையை ஏலம் எடுப்பது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றம்தான் பன்றிக் கறியை சாப்பிடாத முஸ்லிம்கள் அதனை வளர்த்து பரிபாலிப்பதும் தடை செய்யப்பட்டது. இதில் முரண் எதுவும் இல்லை.

    ReplyDelete
  18. Anonymous2:08 PM

    நல்ல பகிர்வு.. நான் பன்றி இறைச்சியும், மாட்டு இறைச்சியும் சாப்பிடுவது இல்லை ... எப்போதாவது ஆடு, வாரம் ஒரு முறை கோவி, இருமுறையாவது மீன் சாப்பிடுவேன் .. அவ்வளவே !!

    ஏனெனில் மாடு, பன்றி ஆகிய இரண்டிலும் உள்ள கொழுப்பு எளிதில் கரையாத ஒன்று, அது இதயத்தின் இரத்த நாளங்களை அடைத்துவிடும் என்பதும் கூடுதல் தகவல் ....

    ReplyDelete
  19. பன்றியின் இறைச்சி- மேலும் அறிந்துகொள்ள
    http://newstbm.blogspot.com/2010/11/blog-post_25.html

    ReplyDelete
  20. வருகை புரிந்து கருத்தைப் பதிந்த இக்பால் செல்வன், ஜபருல்லாஹ்வுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  21. பன்றி இறைச்சி தடை ஏன் ?

    பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

    ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
    "டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

    "Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."

    இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.
    இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.
    மனித உடல்உறுப்புகளில் எந்தபகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.

    டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.
    ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.
    இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.

    நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
    ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.
    சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

    பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

    -Thanks A.M.Syed

    ReplyDelete
  22. Pradeep2:14 AM

    பின் எதற்காக அல்லாஹ் பன்றியை படைத்தான்.?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)