Monday, October 31, 2011

தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் - ஓர் ஆய்வு

ஒரு இசமாகட்டும்: அல்லது ஒரு இயக்கமாகட்டும்: எதுவாக இருந்தாலும் நமது நாட்டில் அதிகமாக உலக ஆதாயங்களை வைத்தே நடத்தப்படுகின்றன. நம் தமிழ்நாட்டில் இஸ்லாமிய கிராமங்களில் மூடப்பழக்க வழக்கங்களுக்கு குறைவே இல்லை எனலாம். தர்ஹா வணக்கம்: முல்லாக்களை வீட்டுக்கு அழைத்து வந்து பிறந்ததிலிருந்து இறப்பு வரை அவரை வைத்து பாத்திஹா ஓதுவதாகட்டும்: திருமணத்தில் வரதட்சணை என்ற பெயரில் பெண் வீட்டாரிடம் லட்ச லட்சமாக கொள்ளையடிப்பதாகட்டும்: இவை எதிலுமே இந்து கிறித்தவ மதத்துக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போடுபவர்களாக முஸ்லிம்கள் இருந்தனர்.

ஆனால் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களாக மேற்கொண்ட அயராத பிரசாரத்தின் பலனாக இன்று பட்டி தொட்டிகளெல்லாம் குர்ஆன் ஹதீஸின்படி தங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட பல கிராமங்களை நம்மால் பார்க்க முடிகிறது. பல இளைஞர்கள் 'வரதட்சணை பெண்ணிடம வாங்கினால் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று பெற்றோர்களிடம் வம்பு பண்ணிக் கொண்டிருப்பதை நாம காண்கிறோம். முன்பு அறியாத நாட்களில் வாங்கிய வரதட்சணையை பெண்ணின் தகப்பனிடம் திரும்ப கொடுத்த பல நிகழ்வுகளை நாம் பல ஊர்களில் பார்க்கிறோம். தர்ஹா கொடியேற்றத்தில் கூட்டங்களை காணவில்லை. பள்ளிப் படிப்புகளை பாதியிலேயே விட்ட பல மாணவர்கள் இன்று படிப்பின் அருமை உணர்ந்து மற்ற இன மாணவர்களோடு போட்டி போடும் நிகழ்வுகளை ஆங்காங்கே பார்க்கிறோம். எங்கள் ஊரில் இன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவானதை ஆச்சரியத்தோடு பார்க்கிறேன். இருந்த சினிமா ரசிகர் மன்றங்களெல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு உள்ளது. ஆறாவது ஏழாவதோடு பள்ளிப் படிப்பை முடித்த பெண்மணிகள் இன்று காலேஜ் செல்ல பஸ்ஸீக்காக காலையிலேயே வீட்டு வாசலில் காத்திருக்கும் அழகை இன்று எங்கும் பார்க்கலாம்.

இதனை பிடிக்காத சிலர் இவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட ஆரம்பித்தனர். இது போன்ற சீர்திருத்தங்களை எல்லாம் செய்தால் பள்ளியில் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு சில செல்வந்தர்கள் மிரட்ட ஆரம்பித்தனர். உடனே ஒரு இளைஞன் தனது பெயரில் உள்ள பல லட்சம் பெறுமானமுள்ள ஒரு மனையை பொதுவாக்கி 'அங்கு புதிதாக பள்ளி கட்டி கொள்ளுங்கள்' என்று கொடுத்த அழகை என்னவென்பது. சிங்கப்பூரில் பைலட்டாக வேலை செய்யும் ஒரு இளைஞர் சில கோடிகள் பெறுமானமுள்ள தனது பூர்வீக வீட்டை முதியோர் இல்லமாக மாற்றி ஊருக்கு பொதுவாக்கி தவ்ஹீத் ஜமாத்துக்கு அளித்த ஈகை குணத்தை என்னவென்பது. இவை எல்லாம் சமீப காலங்களில் நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள். இத்தகைய பரந்த மனப்பான்மையை உண்டாக்கியது எது?

'இறைவனின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு பின்னர் செலவிட்டதை சொல்லிக் காட்டாமலும் தொல்லைத் தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

-குர்ஆன் 2:262

'தமது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு இறைவன் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். இறைவன் தாராளமானவன்: அறிந்தவன்:'

-குர்ஆன் 2:261

மேற்கண்ட இது போன்ற இறைவனின் வசனங்கள் அந்த இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியதாலேயே இவை எல்லாம் சாத்தியப்படுகிறது. இந்த மாற்றங்கள் எங்கள் ஊரில் மட்டும் அல்ல: தமிழகம் முழுவதும் ஏறத்தாழ இந்த நிலைதான்.

திருத்துறைப் பூண்டியை ஒட்டிய ஒரு குக்கிராமத்தில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இனி இந்த காணொளியில் காண்போம்.




--------------------------------------------------------------



பரங்கிப்பேட்டையில் கொடிகட்டி பறந்த “கண்டெடுத்த தர்கா கொடியேற்றம் ஊர்வலம்” இந்த வருடம் 28.10.2011 அன்று நடைப்பெற்றது. மக்களின் எந்தவித ஆதரவின்றியும், ஆராவரம்யின்றியும் குதிரை மேல் கொடி வைத்து செல்லும் தர்காவை சேர்ந்த ஒரு நபரும், குதிரை ஒட்டுபவர் ஆகிய இருவரும் மற்றும் ஆட்டோவில் ஒரு சிறுவன் மட்டும் என்று ஊர்வலம் போனதை காண முடிந்தது.

முன்பு எல்லாம் குதிரை மேல் கொடியை வைத்து பிடிக்க பலர், மிகப்பெரிய கூட்டம், ஊர்வலம் முன்பு கையில் கொடியேந்தி சிறுவர் பட்டாளம் செல்ல அதனை தொடர்ந்து தப்ஸ் குழு (பேண்டு வாத்தியம்) முழங்க சினிமா பாடலின் மெட்டுகளில் இஸ்லாமிய(?) பாடல்கள் என்று வெகு விமர்சையாக நடைப்பெற்ற இந்த கொடி ஊர்வலம்…!

இன்று மக்களின் ஆதரவின்றி பார்க்கும் போதும், ஒரு காலத்தில் 365 வலிமார்கள் அடங்கிய தர்கா உள்ள ஊர் என்றும் கூறுவார்கள். ஆனால் இன்று ஒரு சில தர்காக்களை தவிர மற்றவை எங்குயுள்ளது என்று தெரியாத நிலை. இவைகளின் மூலம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத்தின் (ஏகத்துவ) எழுச்சியும், வளர்ச்சியும் காணமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இது போன்ற இஸ்லாமிய அடிப்படை கோட்பாட்டை தகர்க்கும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் ஷிர்க் என்னும் பெரும் பாவத்திற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் விளைவு இன்று பெரும்பலான மக்களை தர்கா என்னும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் வழிகேட்டிலிருந்து மக்களை மீள வைத்திருக்கு என்றால் அது மிகையாகது.

எல்லாம் புகழும் அகிலத்தை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!

செய்தி: முஹம்மது இஸ்மாயில்
www.tntj.net

டிஸ்கி: துல்ஹஜ் ஒன்பதாம் நாள் ஹஜ்ஜூக்கு வராத முஸ்லிம்களை நோன்பு வைக்க சொல்லி நபிகள் நாயகம் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே சகோதரர்கள் மறக்காமல் நோன்பு வைக்க இப்பதிவின் மூலம் நினைவுபடுத்துகிறேன்.

டெல்லியில் உள்ள ஏஜண்டுகள் கடைசி நேரத்தில் செய்த குளறுபடியால் எனது தாயார் இந்த வருடம் ஹஜ் பயணம் செய்யமுடியாது போய்விட்டது. இறைவன் நாடினால் அடுத்த வருடம் இனிதே முடிப்பார்கள். இதனால் நான் மெக்கா செல்லவில்லை. மெக்காவில் உள்ள நண்பர்களுக்கு இதன் மூலம் அறியத் தருகிறேன். இறைவன் நாடினால் அடுத்த வருடம் சந்திப்போம்.

20 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மாஷா அல்லாஹ்....வியந்து போய் பார்க்கின்றேன்...இறைவன் மிகப்பெரியவன்...

    பகிர்வுக்கு நன்றி...

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  2. சகோதர் சுவனப்ரியன்,
    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாடுள்ளஹி வ பரகதுஹ்.
    இந்த பதிவு பகிர்ந்துகொள்ளதுக்கு ஜசக்கள்ளஹி கஹிர்...
    எல்லோரும் இது போல் மற்றிகொல்வதுக்கு, துவ செய்யும்...
    "மேற்கண்ட இது போன்ற இறைவனின் வசனங்கள் அந்த இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியதாலேயே இவை எல்லாம் சாத்தியப்படுகிறது." => மாஷா'அல்லாஹ் !!!
    நன்றி சகோ இந்த அருமையான பகிர்வுக்கு.

    இன்ஷா'அல்லாஹ், உங்கள் தாயார் அடுத்த வருடம் ஹஜ் போவதுக்கு துவ செய்கிறேன் !
    உங்கள் சகோதரி,



    எம்.ஷமீனா

    ReplyDelete
  3. வாஞ்சூர் பாய்!

    //இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
    அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.//

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. வஅலைக்கும் சலாம்! சகோ. ஆசிக்!

    //மாஷா அல்லாஹ்....வியந்து போய் பார்க்கின்றேன்...இறைவன் மிகப்பெரியவன்...

    பகிர்வுக்கு நன்றி...//

    ஒரு சம்பவம். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாசாவில் பணிபுரியும் ஆத்மராம் என்ற பிராமண சகோதரருக்கு இஸ்லாமிய ஏகத்துவவாதிகளோடு தொடர்பு எற்படுகிறது. சகோ. பி.ஜெய்னுல்லாபுதீனின் பிரசாரத்தை தொலைக்காட்சியில் தினமும் பார்த்து தங்களின் தொன்மையான வேதங்களான ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களையும் ஒப்பிட்டு குர்ஆனையும் ஒத்து நோக்க ஆரம்பிக்கிறார். குர்ஆன் அவரை கவர்கிறது. உடன் அவர் பிஜேயை சந்தித்து 25 லட்சரூபாயை குருதட்சணையாக தருவதாக சொன்னாராம். 'உண்மையை உணர்ந்து கொண்டதற்கு நன்றி. பணமெல்லாம் வேண்டாம்' என்று சகோதரர் பிஜே அவர்கள் மறுத்து விட்டார். பிறகு அந்த பணத்தை தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஒரு அனாதை விடுதிக்கு தந்ததாக படித்தேன். குர்ஆன் ஒரு மனிதனை எந்த அளவு மாற்றி விடுகிறது.

    வருகைக்கும் கருத்துக்கம் நன்றி!

    ReplyDelete
  5. சகோ ஆயிசா ஜீவா!

    //Alhamdulillah!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. சகோதரி எம்.ஷமீனா!

    //இன்ஷா'அல்லாஹ், உங்கள் தாயார் அடுத்த வருடம் ஹஜ் போவதுக்கு துவ செய்கிறேன் !//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  7. Assalamu alikum
    masha allah super post bro! TNTJ'vin entha pani paratukuriyathu!
    Matra eyakkangalum entha pani'yai mega sirappaga seiyugenranar avargalaiyum parata vendum! Jazakallahu kair!

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அல்ஹம்துலில்லாஹ்...
    நிச்சயம் இந்த பெரும் மக்கள் திரளுடன்(???) நடக்கும் இந்த “கண்டெடுத்த தர்கா கொடியேற்றம் ஊர்வலம்” ஃபோட்டோ... என்ன சொல்வது..? இதற்கு கருவியாக பாடுபட்ட தவ்ஹீத் சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் பேரருளும் பெரும் நற்கூலியையும் தந்தருள துவா செய்கிறேன். அத்துடன் தங்கள் தாயார் இன்ஷாஅல்லாஹ் அடுத்தவருடம் ஹஜ் செய்யவும் பிரார்த்திக்கிறேன். அந்த தவ்ஹீத் கிராமம் வீடியோ அருமையான பகிர்வு. மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.

    ReplyDelete
  9. வஅலைக்கும் சலாம்! ஜாபர்கான்!

    //Matra eyakkangalum entha pani'yai mega sirappaga seiyugenranar avargalaiyum parata vendum! Jazakallahu kair!//

    எந்த இயக்க வெறியும் என்னிடம் கிடையாது. எந்த பெயரில் யார் நல்ல காரியம் செய்தாலும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். வேறு இயக்கங்களும் இது போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட்டால் அவசியம் பிரசுரிக்கிறேன்.

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  10. அலைக்கும் சலாம் சகோ ஆசிக்!

    //இதற்கு கருவியாக பாடுபட்ட தவ்ஹீத் சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் பேரருளும் பெரும் நற்கூலியையும் தந்தருள துவா செய்கிறேன். அத்துடன் தங்கள் தாயார் இன்ஷாஅல்லாஹ் அடுத்தவருடம் ஹஜ் செய்யவும் பிரார்த்திக்கிறேன்.//

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. சக நீதிபதிகள் தன்னை அவமானபடுத்துகிறார்கள் : நீதிபதி சி.எஸ்.கர்ணன் புகார் !சக நீதிபதிகள் தன்னை அவமானபடுத்துகிறார்கள் : நீதிபதி சி.எஸ்.கர்ணன் புகார் !

    பதிவு செய்த நாள் : 11/3/2011 17:28:26, Dinakaran daily

    சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் புகார் தெரிவித்துள்ளார். தன்னுடன் பணிபுரியும் சக நீதிபதிகள் நான் தலித் இனத்தை
    சேர்ந்தவன் என்று தன்னை இழிவுபடுத்துவதாக அப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்க்கு 2009 ஆம் ஆண்டு கொடுமைகள் இழைக்கப்பட்டதாகவும் இதுப்பற்றி தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும் நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பின் சகோதரர் சுவனப்பிரியன்,
    அருமையானதொரு பகிர்வு. அந்த கிராமத்தை பற்றிய காணொளி கண்டு பொறாமை தான் முதலில் ஏற்பட்டது. ஏனெனில் என்னுடைய ஊரும் இவ்வாரில்லையே என்ற எண்ணம் தான். விட்டுக்கட்டி கிராமம் போல எங்கள் ஊரும் தமிழகத்தின் அனைத்து முஸ்லிம் பகுதிகளும் மாற அல்லாஹ் அருள் புரிவானாக. இதற்காக தவ்ஹீத் பிரச்சாரம் செய்த அனைத்து தாயிக்களுக்கும் அல்லாஹ் தனது கூலியை ஈருலகிலும் கொடுப்பானாக.
    தங்களுடைய தாயார் அடுத்த வருடம் ஹஜ் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக. முடிந்தவரை அரசின் ஹஜ் கமிட்டி மூலமே ஹஜ் செய்ய நாம் முயற்சிப்போம். தனியார்கள் ஹஜ்ஜை வைத்து அடிக்கும் பகல் கொள்ளைக்கு நாம் துணை போக வேண்டாம்.

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    "கண்டெடுத்த தர்கா கொடியேற்றம் ஊர்வலம்" படம் காணும் போது பழைய நினைவுகளும் வந்துப்போகுது . இந்த 20 வருட தவ்ஹீத் ஜமாத்தின் வீரியயமான பிரசாரம்தான் இதுக்கு முக்கிய காரணம். அல்ஹம்து லில்லாஹ் .

    இன்னும் ஒரு சில வருடங்களில் மற்ற தர்ஹாக்களின் நிலையையும் இதுப்போலவே பார்க்க அல்லாஹ் போதுமானவன் :-)

    ReplyDelete
  14. உங்கள் தாயார் அடுத்த வருடம் ஹஜ் செய்வதுக்கு துவா செய்கிறேன் இன்ஷாஅல்லாஹ்.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    மாஷா அல்லாஹ்! படிக்கவே எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது! அல்ஹம்துலில்லாஹ்!!!

    ReplyDelete
  16. அலைக்கும் சலாம் சகோ சேக்தாவுத்!

    //அருமையானதொரு பகிர்வு. அந்த கிராமத்தை பற்றிய காணொளி கண்டு பொறாமை தான் முதலில் ஏற்பட்டது. ஏனெனில் என்னுடைய ஊரும் இவ்வாரில்லையே என்ற எண்ணம் தான்.//

    அந்த நிலை ஏற்பட பிரார்த்திப்போம்

    //முடிந்தவரை அரசின் ஹஜ் கமிட்டி மூலமே ஹஜ் செய்ய நாம் முயற்சிப்போம். தனியார்கள் ஹஜ்ஜை வைத்து அடிக்கும் பகல் கொள்ளைக்கு நாம் துணை போக வேண்டாம்.//

    உண்மைதான். சவுதி அரசு ஒதுக்கும் கோடடாக்கள் நமக்கு போதவில்லை. சவுதி அரசையும் இந்த விதத்தில் குறை காண முடியாது

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  17. வஅலைக்கும் சலாம் சகோ ஜெய்லானி!

    //இன்னும் ஒரு சில வருடங்களில் மற்ற தர்ஹாக்களின் நிலையையும் இதுப்போலவே பார்க்க அல்லாஹ் போதுமானவன் :-)//

    உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.

    //உங்கள் தாயார் அடுத்த வருடம் ஹஜ் செய்வதுக்கு துவா செய்கிறேன் இன்ஷாஅல்லாஹ்.//

    பிரார்த்தனைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  18. வஅலைக்கும் சலாம் சகோ ஜாபர்!

    //மாஷா அல்லாஹ்! படிக்கவே எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது! அல்ஹம்துலில்லாஹ்!!!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  19. ஜஜாக்கல்லாஹ் ஹைர், இந்த மாற்றம் மெல்ல விரிந்து உலகம் முழுதும் மாறட்டும், இன்ஷா அல்லாஹ்

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)