Saturday, November 05, 2011

படிப்பறிவு வந்து விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமாமே! - நமபுங்கள்



சென்னை, நவ. 4-தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமக்குத் தொடர்ந்து அவமரியாதை செய்யப்படுகிறது என்று குமுறுகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன்.

செய்தியாளர்களிடம் நீதியரசர் கர்ணன் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எஸ்.சி. எஸ்.டி ஆணையத்தில் புகார் செய்துள்ளது உண்மைதான். எனது புகார் மீது நடத்தப்படும் விசாரணையின்போது எல்லா உண்மைகளையும் தெரிவிப்பேன். உயர் நீதிமன்றத்தின் மாண்பை காக்க வேண்டியது நமது கடமை.

சக நீதிபதிகள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் என்ன?

குறிப்பிட்ட சகோதர நீதிபதிகள் மற்றும் சகோதரி நீதிபதியும் நான் தலித் என்ற காரணத்தால் அவமானப்படுத்துகிறார்கள் என்று புகார் செய்திருக்கிறேன். அதன் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

உங்களை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார், யார்?

விசாரணையில் அதை தெரிவிப்பேன். அதுவரை இந்த புகார் தொடர்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

உங்களை எப்போதிருந்து அவமானப்படுத்தினார்கள்?

2009 ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்து இந்த கொடுமை நடக்கிறது.

ஏன் இதுவரை வெளியில் சொல்லவில்லை?

நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடக் கூடாது என்று பொறுத்துக் கொண்டிருந்தேன்.
சுயமரியாதை உள்ளவன் நான்!

மற்ற தலித் நீதிபதிகளுக்கும் இப்படி நடந்ததா?

நான் சுயமரியாதை உள்ளவன். அதை கடைப் பிடிப்பவன். மற்றவர்கள் பற்றி எதுவும் கூற முடியாது.

தலைமை நீதிபதியிடம் புகார் செய்தீர்களா?

அதற்கான அவசியம் இல்லை. தலித் சமு தாயத்தை சேர்ந்தவர்களுக்காகத்தான் எஸ்.சி.எஸ்.டி ஆணையம் உள்ளது. தலித் மீதான கொடுமைகளை தடுக்கவும், கட்டுப் படுத்தவும் இந்த கமிஷனுக்கு அதிகாரம் உண்டு. தலித் அல்லாதவர்கள்தான் நீதிமன் றத்தை அணுகமுடியும். வைகை, விஜயன் போன்ற வழக்குரைஞர்கள் நான் தலைமை நீதிபதியை சந்திக்காமல் ஆணையத்திற்கு சென்றுள்ளார் என்று கூறியுள்ளனர். புகார் கொடுப்பதற்கான இடத்தைதான் அணுகியிருக்கிறேன். தலைமை நீதிபதியை சந்தித்து புகார் கொடுப்பது தேவையற்றது.

நீதிபதிகள் பெயரை சொல்லுங்கள்!

விசாரணையின் போதுதான் சொல்வேன். புகாரில் கூட நீதிபதிகளின் பெயரைக் குறிப்பிட வில்லை.

எப்போதெல்லாம் உங்களை அவமானப் படுத்தினார்கள்?

தேனீர் விருந்து, டின்னர், மற்றும் நீதிபதிகள் கூட்டத்தின் போது இந்த அவமானங்கள் நடந்தன. எல்லா நீதிபதிகளும் என்று கூற முடியாது. குறிப்பிட்ட நீதிபதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டனர்.

உங்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற போகிறார்கள் என்று தெரிந்ததால்தான் இப்படி குற்றச்சாட்டு கூறுவதாக பேசுகிறார்களே?

என்னை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. நீதிமன்றத்தில் நான் பிறப்பித்த உத்தரவுகள் அடுத்த கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி என்ற பெயரை பெற்றவன் நான்.

வேறு வழக்கு பிரிவுக்கு (போர்ட் போலியோ) மாற்றம் செய்ததால் ஏற்பட்ட சிக்கலா?

அப்படி இல்லை. வேறு பிரிவுக்கு மாற்றுவது என்பது வாடிக்கையான ஒன்று.

அரசியல் பின்னணி உண்டா?
இந்தப் பிரச்சினையில் அரசியல் சம்பந்தம் உள்ளதா?

அரசியல் இல்லை.

வழக்குரைஞர் பின்னணி இருக்கிறதா?

நீதிபதிகள் சிலர் தூண்டிவிட்டதால் வழக்குரைஞர்களின் பின்னணி இருக்கலாம். எல்லாவற்றையும் விசாரணையின்போது தெரிவிப்பேன்.

எந்த மாதிரி அவமானம் உங்களுக்கு நேர்ந்தது?

ஒரு நீதிபதி தனது ஷூ காலால் தட்டினார். நாற்காலியில் எனது பெயர் எழுதப்பட்ட துண்டுச்சீட்டை கிழித்து அதை ஒரு நீதிபதி காலால் நசுக்க 2 நீதிபதிகள் பார்த்து ரசித்தனர். இந்த சம்பவம் குடியரசுதின நிகழ்ச்சியில் நடந்தது.

மற்ற தலித் நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள்?

தலித் நீதிபதிகள் சுய மரியாதையை கடைப் பிடிப்பதில் தோல்வியடைந்துள்ளனர். எனக்கு நேர்ந்த தொல்லை குறித்து மற்ற தலித் நீதிபதிகள் கேட்கவில்லை; நானும் சொல்லவில்லை. நீதித்துறையில் இது ஒரு கரும்புள்ளி. சுதந்திரத்துக்கு பிறகு இது
போன்று நடப்பது இதுவே முதல்முறை.

உங்கள் மீது வீடியோ ஆதாரத்துடன் குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறதே?

என் மீது குற்றச் சாட்டுகள் இருந்தால் வெளிப்படையான விசாரணைக்கு நான் தயார். எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமைக்கும் தலைமை நீதிபதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சகோதரி நீதிபதி என்று சொல்லியிருக்கிறீர்கள். பெண் நீதிபதியும் அவமானப்படுத் தினாரா?

பதில் கூற முடியாது.

உங்களுக்கு ஆதரவு தெரிவித்து சில வழக்குரைஞர்கள் சந்தித்ததாக பேச்சு எழுந்துள்ளதே?

எந்த ஆதரவும் தேவையில்லை. சட்ட ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நான் தயாராக உள்ளேன்.

இப்படி இதற்கு முன் நீதிபதிகள் பாதிக்கப் பட்டுள்ளார்களா?

நீதிபதிகள் வி.கனகராஜ், ஜெயபால், அசோக்குமார், பி.டி.தினகரன் ஆகியோர் என்னை மாதிரி சுயமரியாதை உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். என்னை பொறுத்தவரை சக நீதிபதிகள் குறுகிய மனப்பான்மையுடன் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன், குறிப்பாக தலித் நீதிபதிகள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.

இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார். அவர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்க சென்றபோது அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

-விடுதலை, 5-11-2011

இந்த செய்தியை படித்தவுடன் நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. சட்டத்தை வகுக்கும் அதிகாரத்தில் உரிய இடத்திலேயே தீண்டாமை இவ்வாறு கடைபிடிக்கப்பட்டால் சாமான்யனின் நிலை எந்த அளவில் இருக்கும். முன்பு ஒரு வாதம் வைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் படிப்பறிவு பெற்று விட்டால் பிராமணர்களை போல் தலித்துகளும் சம அந்தஸ்தை பெற்று விடலாம் என்ற வாதம் முன்பு வைக்கப்பட்டது. உடனே நமது ஆட்சியாளர்கள் தலித்துகளுக்கு என்று இட ஒதுக்கீட்டை அதிகரித்தனர். பஞ்சாயத்துகளில் இட ஒதுக்கீடு பெற்ற பாப்பார பட்டி, கீரிப்பட்டி நிகழ்வுகள் முடிவில் யாருக்கு சாதகமாக இருந்தது என்பதை நாம் அறிவோம். மாவட்ட ஆட்சியரிலிருந்து கடை நிலை ஊழியர் வரை இந்த தீண்டாமை கடை பிடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் மூல காரணம் யார்? எது?

நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட மலர் மன்னன் என்ற பதிவர் திண்ணையிலும், தமிழ் ஹிந்துவிலும் மனுவை ஆதரித்தும் மனு தர்மம் திரும்பவும் கடை பிடிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். இந்த மனுஸ்ருமிதி என்ன கூறுகிறது என்பதையும் சற்று பார்ப்போம்.

'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100 என்றும் 'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270) என்றும் 'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

பிராமணர் நாள் தோறும் பிச்சைக்காக ஊருக்குள் புகுந்து சுற்றி வர வேண்டும் - மனு த.சா.அ. 6 சு 43)

'சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும் ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கூட கொடுக்கலாகாது' - மனு ( த.சா.அ 4 சு. 80)

'பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்த தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்' மனு (த.சா.அ.10 சு 84)

'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112)

'ஒரு பிராமணன் தன்னைப் புலால் உண்ண வேண்டும் என்று பிறர் கேட்டுக் கொள்ளும் போதும் விதிப்படி சீரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்'

'அஜீகர்த்தர் என்னும் முனிவர் நூறு பசுக்களை வாங்கிக் கொன்று வேள்வி செய்து தமது பசியைத் தீர்த்துக் கொண்டார். அப்படிச் செய்தும் அவருக்குப் பாவம் நேரிடவில்லை' - மனு (த.சா.அ. 10 சு 105)

உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும் பாவத்தை பிராமணன் அடைய மாட்டான். பிராமணனாலேயே உண்ணத்தக்கவையும் கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன- மனு (த.சா.அ.5.சு- 30)

'பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக. ஆனால் பிராமணன் சூத்திரனின் பொருளை கொள்ளையிடலாம்' (மனு த.சா.அ.9.248)

பிராமணன் எத்தகைய குற்றங்கள் செய்தாலும் அவனைத் தூக்குப் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அவன் தலையை மட்டும் மொட்டை அடிக்க வேண்டும். அதுவே அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாகும். மற்ற வருணத்தார்க்கு கொலையே தண்டனை' மனு (த.சா.அ.379)

கொடிய குற்றம் செய்தாலும் பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகைய துன்பத்திற்கும் ஆளாக்காமலும் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்து அயலூருக்க அனுப்ப வேண்டும். (மனு த.சா.அ.சு 380)

அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது'
மனு (த.சா.க.8.சு.380)

நான் எழுதியது ஒரு சில சாம்பிளகளே! இன்னும் பல நூறு வசனங்கள் அள்ள அள்ள குறையாமல் வருகிறது. நான் கேட்பது இப்படி ஒரு கேடு கெட்ட சட்டத்தை நாடு முழுக்க தடை செய்யாமல் நாட்டு மக்களில் ஒரு சாரார் பயபக்தியோடு தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேத பாட சாலைகளில் குழந்தைகளுக்கு சொல்லியும் கொடுக்கப்படுகிறது. இப்படி சிறு வயதிலிருந்தே கடவுளின் பெயரால் சிறுக சிறுக தீண்டாமை மனதிலே விதைக்கப்படுகிறது. எனவே தான் ஒரு சாரார் எவ்வளவு படித்திருந்தாலும் தீண்டாமையை ஆதரிக்க காரணமே! மலர் மன்னன் போன்ற எல்லாம் அறிந்த ஒரு பதிவரே இதற்கு வக்காலத்து வாங்கினால் தீண்டாமையை இன்னும் எத்தனை யுகமானாலும் மாற்றவே முடியாது. அந்த மக்கள் இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் நோக்கி செல்வதையும் தடுக்க முடியாது.

குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

விளக்கம்
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)

டிஸ்கி: நண்பர் சவுக்கின் பதிவில் நீதிபதி கர்ணனைப் பற்றி சில தகவல்கள் வந்துள்ளன. அவர் ஒரு கேஸ் விஷயமாக சம்பந்தப்பட்ட பார்டடிகளிடம் வழக்கை சாதகமாக முடிக்க லஞ்சம் வாங்கியதாகவும் இது தெரிந்த தலைமை நீதிபதிகள் அவரை கண்டித்து விடுப்பில் செல்ல விட்டதாகவும் படித்தேன். தான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்போது 'தீண்டாமை' என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதாகவும் செய்திகள் சொல்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் நீதிபதி கர்ணனே!

ஆனால் படித்த மக்களி;டத்திலும் தீண்டாமை இன்றும் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

42 comments:

  1. @களிமிகு கணபதி!

    //படிக்கும் இஸ்லாமியர்களுக்கே விளங்காத வகையில் குர் ஆன் இருந்தால், அது இஸ்லாமியர்களின் குறையல்ல யுவர் ஆனர். :)//

    மற்ற இந்து கிறித்தவ வேதங்களை விட குர்ஆன் படிக்கவும் புரிந்து கொள்ளவும் மிகவும் இலகுவானது. தமிழில் குர்ஆனை மொழி பெயர்த்ததே 60 ஆண்டுகளுக்கு முன்புதான். தனது வேதம் தன்னிடம் என்ன பேசுகிறது என்பதை தெரியாமலேயே அரபியில் ஒரு சடங்காகவே இத்தனை காலமும் ஓதி வந்திருக்கிறார்கள் முஸ்லிம்கள். இப்போதோ பல மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. இனி நிலைமை மாறும்.

    @காவ்யா!
    //மூன்று மதங்களுமே விஞ்ஞானக்கொளகைகளை ஏற்றுக்கொள்ளவில்லை//

    தவறு. மற்ற இரண்டு வேதங்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவிலலை. ஆனால் குர்ஆன் நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு எந்த வகையிலும் எதிராக இல்லை. அப்படி ஒரு வசனத்தையும் உங்களால் காட்ட இயலாது. சூரியனும் நகர்கிறது, கோள்கள் அனைத்தும் வான வெளியில் நீந்துகின்றன, பின்னோக்கிச் செல்லும் இரவு, திருப்பித் தரும் வானம், விண்வெளிப்பயணத்தின் சாத்தியம், மனிதர்கள் பூமியில் மட்டுமே வாழ முடியும்,ஓரங்களில் குறைந்து வரும் பூமி, மலைகள் பூமிக்கு முளைகள், பெருவெடிப்புக் கொள்கையை பற்றி சொன்னது, இரு கடல்களுக்கிடையே தடுப்பு, புவிஈர்ப்பு சக்தியை பறை சாற்றியது, என்று எண்ணற்ற வசனங்களை மேலோட்டமாக சர்வ சாதாரணமாக குர்ஆன் சொல்லி செல்கிறது. இதற்கு முன்னால் வந்த வேதங்களான பைபிள், தோரா, ருக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது.

    'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
    -குர்ஆன் 4:82

    'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு, மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்.அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். இறைவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்' என்று கூறுவர்.
    -குர்ஆன் 2:136

    'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
    -குர்ஆன் 14:4

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
    மனதை உலுக்கிய மிகவும் அதிர்ச்சியான சம்பவம், இஃது.
    சம்பந்தப்பட்டோர் மீது தீர விசாரித்து இந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் உண்மையாக இருப்பின்...

    அந்த குற்றவாளிகள் நீதிபதிகளாக இருப்பதால், சற்று கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு நில்லாமல் அவர்களின் பதவியும் பறிக்கப்படலாம். அதுவே மற்றவருக்கு பாடமாக அமையும்.

    அப்புறம்...

    //அந்த மக்கள் இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் நோக்கி செல்வதையும் தடுக்க முடியாது.//---இல்லை சகோ.சுவனப்பிரியன். நான் தூத்துக்குடியில் எட்டு வருடங்கள் பணியாற்றிய அனுபத்தில் சொல்கிறேன்..! அங்கே தலித் கிருஸ்த்துவருக்கும் நாடார் கிருஸ்த்துவருக்கும் சாதிய தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள் எல்லாமே இருக்கக்கண்டேன்.

    வயது குறைந்த ஒரு கிருஸ்துவ இளைஞர் தன்னைவிட மும்மடங்கு வயது கூடிய ஒரு கிருஸ்துவரை "வாடா.. போடா.. அவன்... இவன்..." என்றும் பதிலுக்கு அந்த மும்மடங்கு வயதுள்ள முதியவர் அந்த இளைஞரை "வாங்க... போங்க..." என்று மரியாதையுடன் விளிப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.

    இதை நீங்கள் நம்ம தஞ்சை மாவட்ட ஊர் புறங்களில் வயதான முதிய உழவர்களையும் அவர்கள் உழும் வயல்களின் இளம் வயது விவசாய முதலாளிகள் இடையே நடக்கும் பேச்சுக்களிலும் இதே போன்று இருப்பதையும் கண்ணுற்று இருக்கிறேன்.

    (சென்ற வருடம் தஞ்சை மாவட்ட விவசாய கிராம பின்னணியுடன் ஒரு திரைப்படம் வந்தது. "களவாணி" என்று நினைக்கிறேன். அதில் வசனம் அப்படித்தான் இருக்கும். படித்த நிலச்சொந்தக்காரரான இளம் வயது விவசாய ஹீரோ தன்னை விட வயது கூடிய உழவர்களை "அவன்.. இவண்.. வாடா.. போடா..." என்றுதான் பேசுவார்..!)

    இதையெல்லாம் எதார்த்தம் என்றபெயரில் அனுமதிக்கும் சென்சாருக்கு ஒரு சென்சார் போட வேண்டும்.

    சாதி... தீண்டாமை...
    ஒழிப்போம் அதன் ஊற்றை..!

    கல்வி முடியவில்லை.
    இஸ்லாமால் முடிந்திருக்கிறது..!

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. Anonymous8:14 AM

    http://savukku.net/home1/1345-2011-11-03-15-31-30.html

    ReplyDelete
  4. தமிழன்!

    அருமையான காணொளிகளை கொடுத்ததற்கு நன்றி! அதிலும் 'வெள்ளைக்காரியில்' வரும் அந்த பிஞ்சு குழந்தையின் நடிப்பு மனதை தொட்டது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. //சுட்டியை சொடுக்கி படியுங்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உண்மைகள்!

    ReplyDelete
  6. சலாம் சகோ ஆசிக்!

    //அங்கே தலித் கிருஸ்த்துவருக்கும் நாடார் கிருஸ்த்துவருக்கும் சாதிய தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள் எல்லாமே இருக்கக்கண்டேன்.//

    இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். எங்காவது விடிவு கிடைக்காதா என்று அலைந்து சிலர் இஸ்லாத்திலும் சிலர் கிறித்தவத்திலும் ஐக்கியமாகிறார்கள். ஆனால் இஸ்லாம் சுவீகரித்துக் கொண்ட அளவு கிறித்தவம் அவர்களை அரவணைக்கவில்லை என்பது உண்மையே! இதை எங்கள் ஊரிலேயே பார்த்து வருகிறேன். எங்கள் வீட்டில் வீட்டு வேலை சுமார் 10 வருடங்களாக பார்த்து வரும் மேரி என்ற பெண்மணி தீண்டாமை எப்படி எல்லாம் இங்கும் அனுசரிக்கப்படுகிறது என்பதை விளக்குவார். சோகமாக இருக்கும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  7. Anonymous11:13 AM

    சாதி வெறி, மத வெறி - எவ்வளவு படிச்சாலும் போகாதுங்கிறதை உரக்க சொன்னீங்க. அதனால் தானே அமிலப் பெண்களையும் இஸ்லாத்துல பார்க்க முடியுது.

    ReplyDelete
  8. அனானி!

    //சாதி வெறி, மத வெறி - எவ்வளவு படிச்சாலும் போகாதுங்கிறதை உரக்க சொன்னீங்க. அதனால் தானே அமிலப் பெண்களையும் இஸ்லாத்துல பார்க்க முடியுது.//

    அமிலம் சில பெண்களின் முகத்தில் ஊற்றப்பட்டதற்கு இஸ்லாம் காரணம் அல்ல. ஒரு சில முஸ்லிம்கள் இஸ்லாத்தையும் குர்ஆனையும் விளங்காமல் எடுத்த தவறான முடிவுகள். இது போன்ற செயல்களை இஸ்லாம் கண்டிக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் படிப்பறிவு குறைவாக இருப்பதும் ஒரு காரணம். முன்பு ரஸ்யர்கள் அவர்களை கொடுமைபடுத்தினர். இன்று அதே வேலையை அமெரிக்கர்கள் செய்கின்றனர். அங்கு அமைதி திரும்பி அவர்கள் குர்ஆனின் பக்கம் வந்தாலே பல பிரச்னைகள் ஒழியும்.

    ReplyDelete
  9. சாதி மத ஒழிப்புப்பிரியன்6:42 PM

    நிச்சயம் எவ்வளவு படிச்சாலும் ஒழியாது சாதி மத வெறி. அதற்கு நீங்க சொன்ன உதாரணத்தோட, இதோ இன்னொரு உதாரணம். சில தினங்களுக்கு முன் உ.பியில் ஒரு முஸ்லீம் "தன் மகள் தலித்தை காதலித்த ஒரே காரணத்துக்காக" தன் மகளையே கழுத்தை நெறிச்சு கொன்றார். ஏழு தலைமுறை என்ன எழுபது தலைமுறை ஆனாலும் பெண்கள் மீதான அடக்குமுறையை இஸ்லாமிய அடிப்படைவாதம் கைகழுவாது.

    ReplyDelete
  10. Anonymous6:51 PM

    படிப்பறிவு வந்துவிட்டால் தீண்டாமை ஒழியாது ஒத்துக்கொள்கிறோம் அதே போல இஸ்லாமை ஏற்றால் மட்டும் இனவெறி ஒழியுமா?

    கறுப்பின முஸ்லிம்கள் அரபிகளால் எவ்வளவு கேவலமாக நடத்துப்படுகிறார்கள் என்பது குறித்து விவரமாக எழுதினால் குரான் படித்தாலும் இனவெறி ஒழியாது, நாம் கேவலமாகவே நடத்தப்படுவோம் என தெரிந்துகொள்வோமே!

    ரெபரன்ஸுக்கு வேணும்னா யூடியூப் வீடியோ பாருங்கள்

    http://www.youtube.com/watch?v=v30FqLzU6rs

    http://www.youtube.com/watch?v=_ynONsZ0glQ

    அதிலும் இரண்டவது வீடியோ இஸ்லாம் புகழ் பாடும் வீடியோவின் பகுதி!

    ReplyDelete
  11. Anonymous8:10 PM

    ஆயிரந்தான் கருத்து வேறுபாடு இருக்கட்டும்மையா... அனானி ஆப்சனை திறந்து வைத்து எதிர் கருத்துகளை அனுமதிக்கும் உமக்கு ஒரு ராயல் சல்யூட்!

    முற்போக்கு பதிவனுங்கன்னு சீன் போடுற பலரே கேள்வி கேட்ட வயித்துப்போக்கு வந்தா மாதிரி ஆயிடுறானுக. பிரசுரிப்பதில்லை. ஆனால் இசுலாமியராக இருந்தும் கருத்துரிமையை மதித்து விவாதங்களை வரவேற்கும் நீர் பண்பட்ட மனிதரய்யா!

    ReplyDelete
  12. கலிபோர்னியாக் காதலன்9:14 PM

    அண்ணாச்சி,

    ஆயிரம் கோடி தினார் மஹர் கொடுத்தாலும் அரபு ஷேக் தன் மகளை இந்திய முஸ்லீமுக்குக் கட்டி வைக்க மாட்டார்.
    நிலைம இப்படி இருக்க நமக்கு எதுக்கு இந்தப் பொழப்பெல்லாம்?

    ReplyDelete
  13. Anonymous9:53 PM

    you should concentrate on your own religious issues. dont speak about other's issues

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!!!!!!!!
    இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!!!!!!!!!!!

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ

    என்ன சொல்ல? மனிதர்க்கு அநீதி இழைத்தால் நீதிபதிக்கிட்ட முறையிடலாம்... நீதிபதிக்கே இப்படியொரு சம்பவம் நடந்தால்...........

    கொடுமை தான்.. உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வந்து அனைவரும் திருந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  16. Anonymous1:01 PM

    மற்ற மதத்தவரிடம் உள்ள ஏற்ற தாழ்வுகள் முஸ்லிம்களிடமும் உண்டு. உதாரணத்திற்க்கு யாழ்பாணம் தமிழ்முஸ்லிம் குடும்பம் பற்றி கொன்ஸ்ரன்ரைன் எழுதிய கட்டுரையில் இருந்து,

    பதூர்தீனின் மனைவி முத்துமா சுபைர் தமது குடும்பம் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தை விபரித்தார். தம்மைவிட உயரமான துப்பாக்கியுடன் வந்த சின்னப் பையன்கள்! ‘அம்மா கரிகாலன் குறூப் காலையில் வந்து அட்டகாசம் செய்யப் போறாங்கள்இ வீட்டுத் திறப்புக்களை எங்களிட்ட தந்திட்டு வெளிக்கிடுங்கோ. நாங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திருப்போம்’ என்று தம்மை விரட்டிய அபலத்தை விபரித்தார். சின்னப் பையன்களுக்கு பயந்து எங்கட வீட்டை சொந்த நிலத்தை விட்டு வெளிக்கிட்தை நினைத்து தான் இன்னும் வெட்கப்படுவதாக முத்துமா சுபைர் குரல் தடுதடுக்கக் கூறினார். தமிழ் மக்களுக்கும் தமக்கும் இடையில் ஒருபோதும் பிரச்சனைகள் இருக்கவில்லை எனவும் அன்றும் இன்றும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தம்முடன் அன்புடனேயே இருப்பதாகவும் பதூர்தீனும் அவரின் மனைவியும் கூறினார்கள். புத்தளத்தில் தாம் சக முஸ்லிம்களால் பட்ட அவமானத்தை என்றும் மறக்க போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். தமது பேச்சு புத்தளத்தில் உள்ள முஸ்லீம்கள் பேசும் தமிழில் இருந்து வேறுபட்டு இருப்பதால் தம்மை ‘பனங்கொட்டை’ என்று அழைப்பதாக பதூர்தீன் சொன்னார். நாம் பட்ட வேதனைகள் போதும். நான் பிறந்த மண்ணில் என்னை சாகவிட்டால் போதும் என பதூர்தீன் சர்வசாதரணமாகவே சொன்னார். நான் பட்டினியில் இறந்தாலும் பரவாயில்லை. இனி தமது குடும்பம் யாழ்ப்பாணத்தை விட்டு ஒரு அடிகூட நகரமாட்டோம் என்றார் பதூர்தீன்.எம்மை எமது வீடுகளில் இருந்து புலிகளைச் சேர்த்த சிறுவர்கள் கலைக்க ஜந்து முச்சந்தியில் புலிகளின் இன்னொரு பிரிவு நின்று தாம் எடுத்துச் சென்ற நகைகளைப் பறித்தனர். நாம் புத்தளம் சென்றபோது அங்குள்ள சக முஸ்லீம்கள் மிஞ்சியிருந்த எங்கள் தன்மானத்தையும் பறித்தார்கள் என்கிறார் பதூர்தீன்.

    ReplyDelete
  17. Anonymous2:01 PM

    besst post.
    -Ibrahim, olaya

    ReplyDelete
  18. சாதி மத ஒழிப்பு பிரியன்!

    //சில தினங்களுக்கு முன் உ.பியில் ஒரு முஸ்லீம் "தன் மகள் தலித்தை காதலித்த ஒரே காரணத்துக்காக" தன் மகளையே கழுத்தை நெறிச்சு கொன்றார். ஏழு தலைமுறை என்ன எழுபது தலைமுறை ஆனாலும் பெண்கள் மீதான அடக்குமுறையை இஸ்லாமிய அடிப்படைவாதம் கைகழுவாது.//

    நிங்கள் உபிக்கெல்லாம் போக வேண்டாம். நம் தமிழ் நாட்டில் எம்ஜிஆர் ஆட்சியில் 'மீனாடசிபுரம்' 'ரஹ்மத்நகராக' மாறியது ஞாபகம் இருக்கிறதா? அந்த கிராமத்தை இன்று போய் பாருங்கள். பழைய முஸ்லிம்கள் பலர் பெண் கொடுத்து பெண் எடுத்துள்ளனர். அவர்களின் தலித் என்ற இழிவு நீங்கி உலக இஸ்லாமியர்களில் ஒரு அங்கமாக மாறியுள்ள புதுமையை ராமநாதபுரம் சென்று பார்த்து வாருங்கள்.

    ஒரு சில முஸ்லிம்கள் அறியாமையால் சில தவறுகளை செய்தால் அவர்களுக்கு இஸ்லாம் விளங்கவில்லை என்றுதான் அர்த்தம். இங்கு தீண்டாமைக்கு ஆதரவாக குர்ஆன் இல்லை என்பதை என்னால் வாதிட முடியும். அது போல் இந்து மத வேதங்களை வைத்து உங்களால் வாதிட முடியுமா?

    //கறுப்பின முஸ்லிம்கள் அரபிகளால் எவ்வளவு கேவலமாக நடத்துப்படுகிறார்கள் என்பது குறித்து விவரமாக எழுதினால் குரான் படித்தாலும் இனவெறி ஒழியாது,//

    பல கறுப்பின முஸ்லிம்களை சம்மந்திகளாக ஆக்கிக் கொண்ட பல அரபிகளை என்னால் காட்ட முடியும். இங்கு தொழ வைப்பவர்களாக பல கறுப்பர்கள் இருக்கின்றனர். சிலர் நிறத்தை பிரித்து பார்த்தால் அது அந்த முஸ்லிமின் அறியாமை. இஸ்லாம் சகோதரத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை.

    //ஆயிரந்தான் கருத்து வேறுபாடு இருக்கட்டும்மையா... அனானி ஆப்சனை திறந்து வைத்து எதிர் கருத்துகளை அனுமதிக்கும் உமக்கு ஒரு ராயல் சல்யூட்!//

    நன்றி. இந்த பெருமை இஸ்லாத்துக்கும் குர்ஆனுக்குமே சேரும். ஏனெனில் நீங்கள் எந்த விதமாக கேட்டாலும் குறை முஸ்லிம்களிடத்தில்தான் காணப்படுமே ஒழிய குர்ஆனில் குறையை உங்களால் எடுத்தாள முடியாது. எனவேதான் அவதூறுகளும் ஆபாசங்களும் இல்லாத பின்னூட்டங்களை நான் அனுமதிக்கிறேன்.

    ReplyDelete
  19. கலிபோர்னியாக் காதலன்!

    //அண்ணாச்சி,

    ஆயிரம் கோடி தினார் மஹர் கொடுத்தாலும் அரபு ஷேக் தன் மகளை இந்திய முஸ்லீமுக்குக் கட்டி வைக்க மாட்டார்.
    நிலைம இப்படி இருக்க நமக்கு எதுக்கு இந்தப் பொழப்பெல்லாம்?//

    யார் சொன்னது? அரபு மணமகன் கொடுக்கும் மஹர் தொகையை இந்திய முஸ்லிம் கொடுக்க முன் வந்தால் திருமணம் புரிய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. முன்பு தடை இருந்தது. இப்பொழுது அந்த தடை நீங்கி விட்டது. இந்தியா பாகிஸ்தான் முஸ்லிம்களை மணந்த பல அரபு பெண்களை என்னால் காட்ட முடியும். இந்திய முஸ்லிம்களை இங்குள்ள அரபுகள் நம்பிக்கையானவர்கள் என்று நம்புவதும் காரணம்.

    இது போன்ற திருமணங்களுக்கு குர்ஆனில் தடையும் இல்லை.

    //you should concentrate on your own religious issues. dont speak about other's issues//

    சமூகம் என்று வந்து விட்டாலே அனைதது மதங்களும் அனைத்து மக்களும் ஒன்றாகி விடுகின்றனர். இந்த மதங்களில் உள்ள சாதக பாதகங்களை அலச வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

    ReplyDelete
  20. சார்வாகன்!

    //அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!!!!!!!!
    இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!!!!!!!!!!!//

    வஅலைக்கும் சலாம் சகோ....

    உங்களுக்கும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.


    வஅலைக்கும் சலாம் சகோதரி ஆமினா!

    //கொடுமை தான்.. உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வந்து அனைவரும் திருந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!

    சகோதரி சினேகிதி!

    //இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..//

    உங்களுக்கும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  21. பலீனோ!

    //மற்ற மதத்தவரிடம் உள்ள ஏற்ற தாழ்வுகள் முஸ்லிம்களிடமும் உண்டு. உதாரணத்திற்க்கு யாழ்பாணம் தமிழ்முஸ்லிம் குடும்பம் பற்றி கொன்ஸ்ரன்ரைன் எழுதிய கட்டுரையில் இருந்து,//

    ஏற்கெனவே பலமுறை விவாதித்த ஒரு விடயத்தை புதிதாக தூக்கிக் கொண்டு வர வேண்டாம். யாழ்ப்பாணத்தில் வெள்ளாலர் இனம் எந்த அளவு மற்ற இந்துக்களை இழிவாக நடத்துகின்றார்கள் என்பதை நிரூபனின் பல பதிவுகளையும் படித்து விட்டு பின்னூட்டம் இடவும். மலையக தமிழர்களை யாழ்ப்பாண தமிழர்கள் எந்த அளவு ஒதுக்குகிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே!

    நீங்கள் குறிப்பிடும் ஒரு சிலர் சாதி பாகுபாடு காட்டினால் அது இஸ்லாத்தின்படி தவறு. அதை விளக்கித்தான் தவ்ஹீத் ஜமாத் இன்று சிறீலங்கா முழுவதும் பெரும் பிரசாரத்தை குர்ஆனை ஆதாரமாக காட்டி பிரசாரம் செய்து வருகிறது. இது தற்போது நல்ல பலனையும் கொடுத்து வருகிறது. நீங்கள் குறிப்பிடும் நிலை மாறும்.

    அடுத்து பிரபாகரன் என்று முஸ்லிம்களை பகைத்துக் கொண்டாரோ அன்றே அவரது பாதி பலம் அவர் கையை விட்டு சென்று விட்டது. முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்காமலும், ராஜீவ் காந்தியின் அதிகார பகிர்வை ஒத்துக் கொண்டிருந்தாலும் இன்று தமிழர்களின் ஒரு சிறந்த தலைவராக பிரபாகரன் வலம் வந்து கொண்டிருப்பார்.

    'யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது'

    ReplyDelete
  22. நரேன்!


    //உத்மானால் தொகுகப்பட்ட குரான் உலகில் இல்லை. அதனால் குரானும் செவி வழிச் செய்திதான்.//


    மிகவும் சிரத்தை எடுத்து பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். கீழே வரும் ஹதீதுகள் அனைத்தும் முகமது நபியின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளின் அடிப்படையிலேயே அனைத்து குர்ஆன் வசனங்களும் இறங்கியதாக அறிகிறோம். அதிகமான குர்ஆன் வசனங்கள் அவருடைய தோழர்கள் அருகில் இருக்கும் போதே இறங்கியது. இவை அனைத்தையும் மனனம் செய்த எழுதி வைத்த ஆயிரமாயிரம் தோழர்களின் வரலாறு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    1200. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் 'தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்" என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்.
    Volume :2 Book :21


    1269. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    (நயவஞ்சகர்களின்தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்" என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை" என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்" என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.

    1360. முஸய்யப்(ரலி) அறிவித்தார்.
    அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், 'என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்' எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?' எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, 'நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)' என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்" என்று கூறியதும், 'இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று" (திருக்குர்ஆன் 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

    உங்கள் வாதப்படியே செவி வழியாகவே குர்ஆன் தொகுக்கப்பட்டது என்று ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொண்டாலும் அதனால் குர்ஆனுக்கு என்ன சிறுமை வந்து விட்டது?

    ReplyDelete
  23. திருக்குறள் முழுவதையும் மனனமிட்ட தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் தமிழக கிராமங்களில் குர்ஆன் முழுவதையும் மனனமிட்ட (ஹாபிழ்கள்) இஸ்லாமிய தமிழ் இளைஞர்களை பல ஆயிரங்களை பார்க்க முடியும். எங்கள் ஊரில் வருடத்துக்கு 7, 8 மாணவர்கள் குர்ஆனை மனனம் இட்டவர்கள் வெளியாவார்கள். இதனை நான் இங்கு சொல்லக் காரணம் வேற்று மொழியான அரபியில் உள்ள குர்ஆனையே ஆயிரக்கணக்கில் மனனமிட ஆட்கள் இருக்கும் போது முகமது நபிக்கு வஹி இறங்கும் நேரிடையாக பார்த்த அந்த தோழர்கள் எந்த அளவு ஈடுபாட்டோடு சிரத்தையோடு மனனமிட்டும் குறித்தும் வைத்திருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை.

    உஸ்மான் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்படும் போது அனைத்து ஹாபிழ்களும் அதனை சரிபார்த்தார்கள். அதன் பிறகே இவை அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டன. இந்த வரலாறுகள் அனைத்தும் இன்றும் ஆவணங்களாக பாதுகாக்கப்படுகினறன. ஒரு மனிதனுக்குள் இரண்டு விதமான மொழி நடைகள் தனது வாழ்நாள் முழுக்க இருக்க சாத்தியம் இல்லை. ஹதீதுகளுக்கும் குர்ஆனின் வசனங்களுக்கும் இலக்கிய தரத்தில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. இதை அரபி இலக்கணம் படித்தவர்களால் நன்கு உணர முடியும். இன்றைய அறிவியல் கருத்துகளோடு முற்றிலும் மோதாத தன்மை, எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டதிட்டங்கள், எல்லா தூதர்களையும் சமமாக பாவிக்கும் தன்மை, முகமது நபிக்கு எந்த ஆற்றலும் இல்லை: ஆற்றல்களுக்கெல்லாம் சொந்தக்காரன் இறைவனே என்று குர்ஆனிலேயே வரும் வசனங்கள், மேலும்முகமது நபியையே கண்டிக்கும் பல வசனங்கள் என்று பல இடங்களில் வருவதால் இது முகமது நபியின் கற்பனை அல்ல. ஏக இறைவனின் வாக்குதான். இதில் மனிதர்களின் கரம் கொஞ்சம் கூட புகவில்லை என்பதை ஐயத்திங்கிடமின்றி தெரிந்து கொள்கிறோம்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.
    இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
    (திருக்குர்ஆன் 75:16-19, 20:114)
    "திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம், அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது.
    இன்னொரு வசனத்தில் "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.

    எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும், கூறியவுடனே ஒலி நாடாவில் பதிவது போல் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.
    இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறை வனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.
    திருக்குர்ஆன் நபிகள் நாயகத் தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.
    நபித்தோழர்களின் உள்ளங்களில்...

    ReplyDelete
  24. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.
    பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காண்கிறோம். நினைவாற்றல் மூலமாக மட்டும் தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.
    எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.
    திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்பட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம்.
    23 ஆண்டுகளில் இந்தக் குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும். 23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் சர்வ சாதாரணமாக முழுக் குர்ஆனையும் மனனம் செய்து விட முடியும்.
    மேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) செய்தார்கள். "முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பித் தொழுகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.
    திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலை ஏற்பட இது உதவியாக இருந்தது.
    மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களைச் சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
    எங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப் பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக் குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.
    இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக நபி வழித் தொகுப்பு நூல்களில் ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    (நூல்: புகாரி 6, 1902, 3220, 3554, 4998)
    இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக் கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.

    குறிப்பாக,அபூபக்ர் ,உமர்,உஸ்மான், அலீ, தல்ஹா, ஸஅது, இப்னு மஸ்வூத், ஹுதைஃபா, ஸாலிம், அபூஹுரைரா, இப்னு உமர், இப்னு அப்பாஸ், அம்ர் பின் ஆஸ், அப்துல்லாஹ் பின் அம்ர், முஆவியா, அப்துல்லாஹ் பின் ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஸாஇப்,ஆயிஷா, ஹஃப்ஸா, உம்மு ஸலமா, உபை பின் கஅபு, முஆத் பின் ஜபல், ஸைத் பின் தாபித், அபூதர்தா, மஜ்மா பின் ஹாரிஸா, அனஸ் பின் மாலிக், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    ReplyDelete
  25. இவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.

    இவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாகக் குர்ஆனும் கூறுகிறது. (திருக்குர்ஆன் 29:49)

    எழுத்து வடிவிலும்...
    கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப் போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.

    இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
    இந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத் தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.
    இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

    இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக் குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.
    திருக்குர்ஆன் 98:2 வசனத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூய்மையான ஸுஹுஃபுகளை ஓதுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் பல வசனங்களில், கிதாப் என்று கூறப்படுவது போல் இவ்வசனத்தில் ஸுஹுஃபு என்று கூறப்பட்டுள்ளது.
    தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும்.
    நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது.

    நபிகள் நாயகம் காலத்தில் திருக்குர்ஆன் முழுமையாக எழுதப்பட்டிருந்தாலும் அனைத்து வசனங்களும் வரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தாலும், அத்தியாயங்களைப் பொறுத்த வரை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாமல் இருந்தது என்பதற்கு மேற்கண்ட 98:2 வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
    நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவ னுக்குத் தெரியும். எனவே திருக்குர்ஆனை கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

    ReplyDelete
  26. அபூபக்ர் (ரலி) ஆட்சியில்...
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு "யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.
    முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்து மாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.
    "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணி தான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்த வராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.
    அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)

    திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், "இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று நபிகள் நாயகம் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள்.
    (பார்க்க: திர்மிதீ 3011)

    இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில், எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது.

    வசனங்களின் வரிசை அமைப்பும், ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்ற வசனங்கள் எவை என்பதும் நபிகள் நாயகத்தின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டது.

    அப்படியானால் அபூபக்ருக்கு இதில் என்ன வேலை என்ற சந்தேகம் ஏற்படலாம்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள்.

    இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.
    ஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளது தான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும் போது. குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.
    அனைத்து எழுத்தர்களின், அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையில் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியா யங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்று கண்டறிய இயலும்.
    இந்தப் பணியைத் தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவ மாக்கினார்கள்.

    ReplyDelete
  27. இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தி னார்கள்.
    பாதுகாக்கப்பட்ட இந்த மூலப் பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்களெல்லாம் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்து விட முடியும்.
    அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவரது மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.

    உஸ்மான் (ரலி) ஆட்சியில்...
    இந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.

    மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.
    இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் "இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
    அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்
    ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப் போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப் படாமல் இருந்தன.

    உதாரணமாக, பல பக்கங்களைக் கொண்ட தனித்தனியான ஐம்பது கட்டுரைகளை தனித்தனியாகச் சுருட்டி ஒரு பெட்டியில் போட்டு வைத்தால், எது முதலில் வர வேண்டும், எது இரண்டாவதாக வரவேண்டும் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டுரைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் எது முதலாவது, எது இரண்டாவது என்ற வரிசை அமைப்பை அறிய முடியும்.
    வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கும் இந்தப் பணியைத் தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். அத்தியாயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இப்போது இருக்கும் வரிசைப்படி அமைத்தார்கள் என்ற கூற்று தவறாகும்.
    ஆயிஷா (ரலி) அவர்களிடம் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, "உங்கள் குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். ஏன் என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். "குர்ஆன் அத்தியாயங்களை சரியான வரிசைப்படி அமைத்துக் கொள்வதற்காக'' என்று அவர் கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி), "எதை முன்னால் ஓதினாலும் அதனால் உனக்கு எந்தக் கேடும் இல்லை'' என்று குறிப்பிட்டார்கள்.
    (நூல்: புகாரி 4993)
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில், பகரா (எனும் 2வது) அத்தியாயத்தையும், பின்னர் நிஸா (எனும் 4வது) அத்தியாயத் தையும், பின்னர் ஆலு இம்ரான் (எனும் 3வது) அத்தியாயத்தையும் ஓதினார்கள்.
    (நூல்: முஸ்லிம் 1291)
    உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம்; தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக் கூடிய அத்தியாயம் என்பதால் "அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியா யமாக அமைத்தார்கள். "இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
    அதன் பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாக வும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற் கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தினார்கள்.

    ReplyDelete
  28. சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தி னார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    ஒரு ஒழுங்குக்குள் இருந்தால் தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.
    இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

    நான் முன்பே குறிப்பிட்டது போல் இஸலாமிய சமூகத்தைப் பொறுத்தவரையில் குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதிலோ அந்த குர்ஆன் அருளப்பட்ட வகையிலேயே இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  29. வேதம் கோபால்!

    //இவர்கள் நம்நாட்டை கூறுபோட்டு அன்னியர்க்கு விற்ககூட தயங்காத கேவலமான மிருக ஜென்மங்கள்.//

    //இரண்டாவது அடையாளம் ஒருவறது தாய்மதம். தாய் மதத்தை மாற்றுபவன் தன் தாயையே விலைபேச துணிந்தவன் ஆவான்.//

    சட்டியில் இருப்பது அகப்பையில் வருகிறது.

    எனது முன்னோர்கள் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் இஸ்லாத்தை ஏற்றனர். ஏன் இந்தியாவில் பிறந்து இந்து மதத்தில் பிறந்து அராபிய மதத்தை சுவீகரிக்க வேண்டும்.? ஏனெனில் எனது முன்னோர் இந்து மதத்தில் சூத்திரர்களாக பாவிக்கப்பட்டனர். பிராமணர்களை தவிர்த்து மற்ற அனைவரும் இந்து மத கொள்கைகளின்படி சூத்திரர்களே! இந்த இழிவை அடுத்த தலைமறையிலாவது துடைக்க வேண்டும் என்ற வேகம் வந்தது எனது முன்னோர்களுக்கு. வேதத்தை பிராமணர்களை தவிர வேறு சாதியார் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற சொன்னது வேதம் கோபாலின் வெறி பிடித்த மதம். உலக மக்கள் அனைவரும் ஒரு இடத்திலேயே பிறக்க நம்ம இந்து மதம் மட்டும் நெற்றியில் பிறந்தவன் மேலோன், வயிற்றில் பிறந்தோன் இடையன், காலின் பிறந்தோன் சிறியோன் என மனிதர்களை வேற்றுமைப்படுத்தியது.

    எனவே இந்து மதத்தை தூக்கி எறிந்தனர் எனது முன்னோர். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்த என் முன்னோர்களை நினைத்து எனது கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறது. இன்று என்னை எவனாது சூத்திரன் என்று சொல்ல நா வருமா? சொன்னால் அவனது நாவை அறுத்து எறிந்து விடுவோமே! சமணம்,பௌத்தம், கிறித்தவம் என்று அனைத்தையும் விழுங்கிய இந்துத்வா இன்று இஸ்லாத்தையும் விழுங்கி இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாற்ற துடிக்கிறது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அது நிறைவேற போவதில்லை.

    என்னை சூத்திரன் என்று ஒத்துக் கொண்டு அந்த மதத்திலேயே இருப்பதுதான் தன் தாயை விலை பேசுவதாக முடியும். கேவலமான மிருக ஜென்மமாகவும் இருக்க முடியும். தன் மானமுள்ள ஒருவன் தனக்கு எங்கு மரியாதை கிடைக்கிறதோ அதை நோக்கிதான் ஓடுவான். மற்றவர்களையும் தக்கவைக்க இந்து மத வேதங்களை திருத்தும் பணியில் வேதம் கோபால் போன்றவர்கள் ஈடுபடலாம். அதை விடுத்து பாதிக்கப்பட்டவனுக்கு இருக்கும் ஒரே வழியான இஸ்லாத்தை வம்புக்கிழுத்து மூக்குடைபட வேண்டாம்.

    ReplyDelete
  30. Anonymous1:15 AM

    மலையக தமிழர்களை யாழ்ப்பாண தமிழர்கள் ஒதுக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நான் காட்டியது அதே தவறுகள் இஸ்லாமிய மதத்தவர்களிடமும் உண்டு என்பதை.

    ReplyDelete
  31. Anonymous8:09 AM

    //இந்தியா பாகிஸ்தான் முஸ்லிம்களை மணந்த பல அரபு பெண்களை என்னால் காட்ட முடியும். இந்திய முஸ்லிம்களை இங்குள்ள அரபுகள் நம்பிக்கையானவர்கள் என்று நம்புவதும் காரணம்.//

    ஆனா சும்மா சொல்லுக்கூடாது குரானை அப்புடியே ஃபாலோ பண்ணுறீங்க. அதாவது குரான் சொல்லுதே மதத்தை காக்க பொய் (taqiyya) சொல்லாம்ன்னு. ஆனா கிருத்துவ சதியாலே இப்ப இன்டர்நெட்டு இருக்குது, அதனாலே உம்ம குட்டு வெளிபட்டுவிட்டது.

    சவுதி பெண்கள் பிற முசுலிமைகளை, gulf முசுலிம்கள் உட்பட, மணக்க அரசு தடைவிதித்துள்ளது. சில இதை மீறி மணந்தவர்கள் சொல்லனாத துன்பத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சவுதி குடியுரிமை கிடைக்காது. சவுதியை தாண்டி வசிப்பவர் யாரும் முசுலிம்கள் என சவுதி மன்னர் கருதுவதில்லையா?

    இந்த வருடம் மே 2011 -ல் கூடிய செளரியா கூட்டத்தில் வளைகூடா நாட்டு ஆண்களை மட்டுமாவது சவுதி பெண்களை அணுமதிக்கலாம என யோசனை செய்துள்ளார்கள்- proposal for allowing marriage nationals from the Gulf countries since they belong to the same religion)

    இதோ அரபு நியூஸ் செய்தி
    http://saudisense.blogspot.com/2011/05/saudi-women-allowed-to-marry-other.html

    http://arabnews.com/saudiarabia/article425033.ece

    ஆனால் சவுதியிலிருந்து கிழவனுங்ககூட பெரும் பணம் தந்து இந்திய முசுலிம் சிறுமிகளை மணப்பது, அனுபவித்த பின் தலாக் சொல்லி பறந்துவிடுவது தெரிந்த விடயம்தானே!

    ReplyDelete
  32. //இந்த வருடம் மே 2011 -ல் கூடிய செளரியா கூட்டத்தில் வளைகூடா நாட்டு ஆண்களை மட்டுமாவது சவுதி பெண்களை அணுமதிக்கலாம என யோசனை செய்துள்ளார்கள்- proposal for allowing marriage nationals from the Gulf countries since they belong to the same religion)//

    நான் முன்பே சொன்னது போல் இஸ்லாத்தில் அரபுகள் இந்தியர்களை மணப்பதற்கு தடை இல்லை. சவுதி அரசு தடை விதிப்பதற்கான காரணம் வேறு விதமானது. தீண்டாமை காரணம் அல்ல.

    இங்கு பெண்கட்ட வேண்டும் என்றால் மாப்பிள்ளை பெண்ணுக்கு 4 லட்சம், 5 லடசம் என்று மஹராக கொடுக்க வேண்டும். இதற்கு பயந்து கொண்டு பல அரபுகள் வெளி நாட்டு பெண்களை குறைந்த மஹருக்கு திருமணம் முடித்து அழைத்து வந்தனர். இது தொடர்ந்தால் சவுதி பெண்களுக்கு மாப்பிள்ளை எங்கிருந்து கிடைக்கும்? எனவேதான் சவுதி அரசு இது போன்ற திருமணங்களுக்கு தடை விதித்து மாப்பிள்ளைகளுக்கு உதவிப் பணம் கொடுக்க ஆரம்பித்தது. தடை செய்ய காரணமும் இதுவே. இந்த தடையை நீக்குவது பற்றி தற்போது ஆலோசித்து வருகின்றனர்.

    //ஆனால் சவுதியிலிருந்து கிழவனுங்ககூட பெரும் பணம் தந்து இந்திய முசுலிம் சிறுமிகளை மணப்பது, அனுபவித்த பின் தலாக் சொல்லி பறந்துவிடுவது தெரிந்த விடயம்தானே!//

    இது இந்திய சட்டத்தில் உள்ள குறைபாடு. இதை ஏன் இந்திய அரசு அனுமதிக்கிறது?

    ReplyDelete
  33. Anonymous12:10 PM

    //பல கறுப்பின முஸ்லிம்களை சம்மந்திகளாக ஆக்கிக் கொண்ட பல அரபிகளை என்னால் காட்ட முடியும். //

    நானும் தலித் குடும்பத்தை சம்பந்தி ஆக்கிய பிற இந்து குடும்பங்களை காட்ட இயலும். ஏன் உத்திர பிரதேசத்தில் பிராமணர்களும் தலித் இன மக்களும் தலித் தலைவி மாயாவதி தலைமையில் இணைந்து ஜெயிக்கவில்லையா?

    //.இங்கு தொழ வைப்பவர்களாக பல கறுப்பர்கள் இருக்கின்றனர். சிலர் நிறத்தை பிரித்து பார்த்தால் அது அந்த முஸ்லிமின் அறியாமை. இஸ்லாம் சகோதரத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை//

    1.இசுலாம் தோற்றுவிக்கப்பட்டு 1400 வருடங்களுக்கு பின் 1962-ல் தான் கறுப்பினத்தவரை, மனிதர்களை அடிமையாக வைத்திருத்தல் ஒழிக்கப்பட்டது, அதுவும் மேற்கத்திய நாடுகளின்
    வற்புறுத்தலால்.

    2. 2009-ல்தான் மெக்கா மசூதிக்கு கறுப்பின இமாம் நியமிக்கப்பட்டார். அவர் ஒபாமா அமெரிக்க அதிபரானதைவிட இது மிகவும் அரிதான நிகழ்வு என்று சொன்னார்.நீர் சொல்வதைப் போல் இசுலாமில் சமத்தவம் நிலவினால் இது சாதாரண நிகழ்வாயல்லவா இருக்கணும்?

    3.சவுதியின் அரபு பழங்குடியினர் பிற இனத்தவருக்கு வைத்துள்ள பெயர் tarsh al bahr” )கடல் எடுத்த வாந்தி)!

    நான் அனுப்பிய வீடியோகளுக்கு உமது பதில் முசுலிம்கள் தவறிழைக்கலாம் இசுலாம் தவறிழைப்பதில்லை என்று சொன்னீர்கள். ஆனால் குரானில் பல இடங்களில் கறுப்பான தோல் நிறம் குறித்து அவமதிக்கும் சொற்றொடர்கள் உள்ளன.
    ஆக நானும் வாதாடலாம், இந்து மதத்தில் யாரும் நீ சாதியை விடாவிடில் இந்துவாயிருக்க முடியாது என்று சொல்வதில்லை.சொல்லவும் முடியாது. இந்தியாவில் சாதியும் மனித தவறேயாகும். இந்துமத தவறல்ல.முகம்மது நபியே சமூக ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க இயலாது என கூறியுள்ளதாக முதல் கறுப்பு இமாமான ஷேக அடில் கூறியுள்ளார். ஆக இசுலாமினல் ஆவது ஒன்றுமில்லை.

    ReplyDelete
  34. Anonymous12:38 PM

    //இங்கு பெண்கட்ட வேண்டும் என்றால் மாப்பிள்ளை பெண்ணுக்கு 4 லட்சம், 5 லடசம் என்று மஹராக கொடுக்க வேண்டும். இதற்கு பயந்து கொண்டு பல அரபுகள் வெளி நாட்டு பெண்களை குறைந்த மஹருக்கு திருமணம் முடித்து அழைத்து வந்தனர். இது தொடர்ந்தால் சவுதி பெண்களுக்கு மாப்பிள்ளை எங்கிருந்து கிடைக்கும்? எனவேதான் சவுதி அரசு இது போன்ற திருமணங்களுக்கு தடை விதித்து மாப்பிள்ளைகளுக்கு உதவிப் பணம் கொடுக்க ஆரம்பித்தது. //

    இந்த காரணத்துகாகத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என சவுதி அரசுக்கு தெரியுமா? நீரே அள்ளி விட்ட இன்னோரு taqiyya போல் அல்லவா உள்ளது. சவுதி பெண்களும் பிற ஆண்களை மணப்பதை சட்டம் தடுக்கிறது. அதாவது இனக்கலப்பு நடக்ககூடாது என்கிறது சவுதி.

    மேலும் இதைத்தானே கலிபோர்னியா காதலன் சொன்னாரு உமக்கு அரபி பொண்ணு தரமாட்டான்னு.... சும்மா குழப்பியடிக்கிறீரே

    ReplyDelete
  35. தருமி சார்!

    http://www.youtube.com/watch?v=GtCbTxS9UvU

    இந்த யுடியூபில் வரும் இந்த பிராமணரைப் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  36. Anonymous7:34 PM

    சுவனப்பிரியன் சார்!

    http://www.youtube.com/watch?v=ua9HsFPtPM4&feature=related

    மேலும்

    http://www.youtube.com/watch?v=q6EYKoScRjk&feature=related


    http://www.youtube.com/watch?v=Cfvp-ev-EhM&feature=related

    http://www.youtube.com/watch?v=JAuL3fgy_ec&feature=related


    இந்த யுடியூபில் வரும் இந்த முஸ்லிம்களை பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.


    கடைசியாக உலகின் மிகச்சிறந்த நாடான பாகிஸ்தானின் புகழ் பாடும்

    http://timesofindia.indiatimes.com/world/pakistan/Beygairat-Brigades-YouTube-hit-song-challenges-extremism-in-Pakistan/articleshow/10643261.cms

    ReplyDelete
  37. @ anonymous

    Anonymous said...
    சுவனப்பிரியன் சார்!

    http://www.youtube.com/watch?v=ua9HsFPtPM4&feature=related

    மேலும்

    http://www.youtube.com/watch?v=q6EYKoScRjk&feature=related

    http://www.youtube.com/watch?v=Cfvp-ev-EhM&feature=related

    http://www.youtube.com/watch?v=JAuL3fgy_ec&feature=related


    இந்த யுடியூபில் வரும் இந்த முஸ்லிம்களை பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

    கடைசியாக உலகின் மிகச்சிறந்த நாடான பாகிஸ்தானின் புகழ் பாடும்

    http://timesofindia.indiatimes.com/world/pakistan/Beygairat-Brigades-YouTube-hit-song-challenges-extremism-in-Pakistan/articleshow/10643261.cms
    ------------------------

    சகோதரர் அநானிமஸ் ,

    உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    இஸ்லாத்தின் பால்
    காழ்ப்புணர்வுடன் இமாலய முயற்ச்சி செய்து யூட்யூபில் மூழ்கி முக்குளித்து மேற்கண்ட சுட்டிகளை தேடிப்பிடித்த பொழுதே அதே யூடுயூப் தளத்திலேயே அநானிமஸ் கொடுக்கும் சுட்டிகளின் விடயங்களை ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக‌
    தோலுரிக்க‌ப்ப‌டும் த‌ள‌ங்க‌ளின் சுட்டிகளை கண்ட‌தை வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விட்டீர்க‌ளா? அல்ல‌து ம‌றைக்கிறீர்க‌ளா ?

    தங்கள் கொடுத்துள்ள சுட்டிகளுக்கு பதில் யூட்ய்ப் தளமே
    பல்லாயிரக்கணக்கில் கொண்டுள்ளது.

    மீண்டும் யூட்யூபிலே மூழ்கி முக்குளிப்பது உங்களுக்கு ஒரு பொருட்டா?

    ReplyDelete
  38. Anonymous2:17 PM

    மீண்டும் யூட்யூபிலே மூழ்கி முக்குளிப்பது உங்களுக்கு ஒரு பொருட்டா?//

    இல்லை ஐயா, சுவனபிரியன் தந்துள்ள வீடியோவை விட நான் தந்துள்ள வீடியோக்கள் எவ்வளவோ அர்த்தமுடையவை!

    கண்ணிருப்போர் பார்க்ககடவர். காதிருப்போர் கேட்ககடவர் - ஈசா நபி!

    ReplyDelete
  39. //@Anonymous said...
    மீண்டும் யூட்யூபிலே மூழ்கி முக்குளிப்பது உங்களுக்கு ஒரு பொருட்டா?////

    இல்லை ஐயா, சுவனபிரியன் தந்துள்ள வீடியோவை விட நான் தந்துள்ள வீடியோக்கள் எவ்வளவோ அர்த்தமுடையவை!

    கண்ணிருப்போர் பார்க்ககடவர். காதிருப்போர் கேட்ககடவர் - ஈசா நபி! //

    சுவ‌னப்பிரிய‌ன் த‌ந்துள்ள‌ விடியோவைவிட‌ தாங்க‌ள் த‌ந்துள்ள‌து எவ்வ‌ளவோ அர்த‌த‌முள்ள‌தாக‌ உங்க‌ளுக்கு ப‌டுகிற‌தென்றால் உங்க‌ளை என்ன‌வென்று சொல்லி அழைப்ப‌து?

    தாங்க‌ளே கூறிக்கொள்ளுங்க‌ள்.

    க‌ண்ணிருப்போர் என்னென்ன‌ கண்னோட்ட‌த்திலெல்லாம் எதையும் பார்க்க‌க்கூடாது.

    காதிருப்போர் கேட்பவைகளில் எல்லாம் எதை புற‌ந்தள்ள‌ வேண்டும்

    என்று அதே ஈசா ந‌பி கூறிய‌வ‌ற்றையும் நினைவூட்ட‌வும் வேண்டுமோ?

    .

    ReplyDelete
  40. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    *****
    ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம்.
    ****


    .

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)