Monday, December 19, 2011

எச்சில் இலையில் புரளும் ஏழாம் அறிவு!




'மடே ஸனானா' என்ற ஒரு ஆன்மீக நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அது என்ன 'மடே ஸ்னானா'?

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மேல் உருண்டு அவ்வெச்சில்கள் தமமேல் படும்போது சுப்ரமணிய சுவாமியின் அனுக்கிரகம் கிடைக்கும் என்றும் இதன் மூலம் தோல் வியாதிகளும் மற்ற சிரமங்களும் தங்களை விட்டு அகலும் என்றும் வேற்றுசாதிக்காரர்கள் நம்புகின்றனர். இதைத்தான் இந்த காணொளி நமக்கு விளக்குகிறது. இது பற்றி பிரபல இந்து நாளிதழ் தனது பத்திரிக்கையில் இதைப்பற்றிய செய்தியை 01-12-2011 அன்று வெளியிட்டதால் இது வெளி உலகுக்கும் இன்று தெரிய வந்துள்ளது.

இந்துவில் வந்த செய்தியை இங்கும் இங்கும் சென்று பார்ததுக் கொள்ளுங்கள். தினமலரில் இது பற்றிய செய்தியை நான் பார்க்கவில்லை.

தோல் வியாதி வந்தால் தோல் மருத்தவரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது ஆறறிவு உள்ள மனிதனுக்கு உகந்தது. முஸ்லிம்களிலும் சிலர் வயிற்று வலிக்கு நாகூர் தர்ஹாவில் சென்று படுத்து கொள்வது போல் இவர்கள் தோல் வியாதிக்கு எச்சில் இலைகளில் உருளுகின்றனர். இரு மதத்தவரும் செய்யும் இந்த மூட பழக்கத்துக்கு வேத நூல்களிலிருந்து எந்த ஆதாரத்தையும் காட்ட மாட்டார்கள்.

எச்சில் இலையில் புரளும் இந்த பழக்கத்தை விடச் சொல்லி சில தலித் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இந்த பழக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சில நபர்கள் எதிர்ப்பவர்களை எவ்வளவு மூர்க்கமாக தாக்குகிறார்கள் என்பதை பாருங்கள். இதில் ஒரு விசேஷம அடிப்பதும் அடி வாங்குவதும் இங்கு தலிததுகளே! இந்த நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. படிப்பறிவு இல்லாத இந்த மக்களின் மனதில் பக்தியின் பெயரால் போதையை ஏற்றி தான் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்கக் கூடவிடாது செய்கிறார்கள் சில அதி மேதாவிகள்.

இது போல் உடுப்பி மாவட்டத்தில் ஒரு ஊரில் பிராமணப் பெண்களின் 'கழிவுத் துணிகளை' தலித்துகள் சேகரித்து துவைத்துக் கொடுக்கும் பழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது.
தயவு செய்து இதையும் யாரும் காணொளியில் ஏற்றிவிட வேண்டாம். :-)

மக்கள் அனைவரும் படித்து விட்டால் சாதி பாகுபாடும் தீண்டாமையும் ஓடி விடும் என்று நாம் எண்ணி இருந்தோம். ஆனால் படித்தவர்கள் மத்தியில்தான் சாதிப் பாகுபாடு அதிகம் காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக திருமணத்துக்கு வரன் தேடும் பகுதியில் எந்த அளவு படித்தவர்கள் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை அறியலாம்.

இதை எல்லாம் சட்டம் போட்டு ஒரு அரசு தடுக்க வேண்டும். ஆனால் ஆளும் பாரதீய ஜனதாவின் உள்துறை அமைச்சர் ''இது போன்ற நிகழ்ச்சிகள் நமது பண்பாட்டை காக்கின்றன என்றும் இந்த நிகழ்ச்சியை சட்டம் மூலம் தடுத்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்றும்” திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மேலும் ஹிந்துவில் கல்வி அமைச்சரின் பொன்மொழிகளை பாருங்கள்.
Minister for Higher Education V.S. Acharya said on Saturday that it was not possible to ban the ritual of “made snana” followed in Kukke Subrahmanya as a large number of people believed in it.
He was speaking at the valedictory of the one-day “Tulunadu Daivaradhakara Sammelan” titled “Kodiyadi” at Alevoor near here.

Dr. Acharya said that some groups and politicians were demanding a ban on “Made Snana”. “They are speaking as if we have started the ritual of “Made Snana”. But it had been prevalent for a long time,” he said.
He said the seer of Sode Math Sri Vadiraja (1480-1600) had in his work “Tirtha Prabhanda” made a reference to “Made Snana” at Subrahmanya.

-The Hindu 18-12-2011

இன்னும் இவர்கள் கையில் முழு இந்தியாவையும் கொடுத்தால்.....


வேண்டாம்....நாங்கள் இந்துக்கள் எங்களுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்வோம். முஸ்லிமான நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்று பின்னூட்டம் காரமாக வரும். நமக்கேன் வமபு......

'அவர்கள் அவனது அடியார்களில் சிலரை அவனில் ஒரு பகுதியாக ஆக்குகின்றனர். மனிதன் தெளிவான நன்றி கெட்டவன்.'
-குர்ஆன் 43:15

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..
- சிவ வாக்கிய சுவாமிகள்)

29 comments:

  1. Anonymous5:39 PM

    padhivu nandru uraippavargalukku uraiththaal sari nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  2. very shame.

    kannan from abu dhabi
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  3. சுரேந்திர நாத்!

    //padhivu nandru uraippavargalukku uraiththaal sari nandri
    surendran
    surendranath1973@gmail.com//

    வருகைபுரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. திரு கண்ணன்!

    //very shame.

    kannan from abu dhabi
    http://samykannan.blogspot.com///

    இந்த மூட நம்பிக்கையை கண்டிப்பதற்கு பதில் பல படித்தவர்களே இந்த விபரீதத்தை ஆதரிக்கின்றனர். ஹிந்துவில் வந்த பல பின்னூட்டங்களே இதற்கு சாட்சி.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. பாண்டியன்!

    //சிலியில் ஏற்பட்ட பூகம்பம் அதில் மாட்டி கொண்டவர்களின் மன நிலை என்பது பற்றி எல்லாம் ஆராயப்பட்ட கட்டுரைகள் நம் முன்ன கொட்டிகிடக்கும் போது இந்த மாத்ரி வார்த்தை ஜாலம் வைத்து ஊரை எமாரூபவரை என்னவென்று சொல்வது//

    ஒன்றும் சொல்ல வேண்டாம்! சிலி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய அந்நாட்டு அரசாங்கம் உண்டு. அல்லது ஐக்கிய நாடுகள் சபை உண்டு. ஆனால் பிராமணரின் எச்சில் இலையில் புரளும் அந்த தலித்களுக்கும் மற்றும் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் கொடுமைகளுக்கும் நமது நாட்டில் அந்த மக்களுக்கு இன்று வரை ஒரு தீர்வை நமது அரசால் கொடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் என்ன? இப்படி ஒரு பழக்கம் இந்த மக்கள் மனத்திலே வேரூன்ற மூல காரணம் எது? என்று சிந்தித்து அந்த மக்களின் விடிவுக்கு ஒரு வழியை கண்டுபிடிக்க பாருங்கள். அதன்பிறகு சிலிக்கோ, பிலிப்பைனுக்கோ செல்லலாம்.

    ReplyDelete
  6. Anonymous8:46 PM

    இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியில் என்னா கிழியுது?அதை பாருடா மொதல்ல!

    ReplyDelete
  7. Anonymous8:46 PM

    இஸ்லாமில் apostasty பத்தி சொல்லு!

    ReplyDelete
  8. சரக்கு பிரியன்8:47 PM

    தன மதத்தை ஒழுங்கா அறியாதவன் மற்ற மதனகளை குறை சொல்லுவான்!

    ReplyDelete
  9. Anonymous8:48 PM

    இஸ்லாமிய ஆட்சியின் லட்சணம்!நீங்க மத்த மதங்களை கிண்டல் செய்யலாம்!ஆனா மத்தவன் ஒன்னோட மத்ததை கிண்டல் பண்ணா அதுக்கு பேர் மத துவேஷம்!அச்சாடா!
    http://dharumi.blogspot.com/2011/01/466.html

    ReplyDelete
  10. அனானி!

    //இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியில் என்னா கிழியுது?அதை பாருடா மொதல்ல!//

    //தன மதத்தை ஒழுங்கா அறியாதவன் மற்ற மதனகளை குறை சொல்லுவான்!//

    //இஸ்லாமிய ஆட்சியின் லட்சணம்!நீங்க மத்த மதங்களை கிண்டல் செய்யலாம்!ஆனா மத்தவன் ஒன்னோட மத்ததை கிண்டல் பண்ணா அதுக்கு பேர் மத துவேஷம்!அச்சாடா!
    http://dharumi.blogspot.com/2011/01/466.html//

    சொல்லப்படும் கருத்து என்ன என்பதைப் பற்றி சிந்திக்காமல் சொல்பவரின் மதத்தை ஆராய்வது அறிவுடைய செயலா? உங்களைப் போலவே மல ஜலத்தை சுமந்து திரியும் மேல்சாதிக்காரன் சாப்பிட்ட எச்சில் இலையில் அதே இனத்தை சார்ந்த மற்றொரு மனிதன் உருள்வது அறிவார்ந்த செயலா? ஏதோ நடந்து விட்டது. இனி நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என்ற முடிவுக்கு வராமல் ' உன் மதம் யோக்கியமா?' என்று கேள்வி வைப்பது அறிவுடையோர் செயல் அல்ல. எந்த ஒரு முஸ்லிமும் தன் மானத்தை அடகு வைத்து இவ்வாறு உருள மாட்டான்.

    இந்து மதத்தை மேலும் அதள பாதாளத்தக்கு கொண்டு செல்லக் கூடியவை இது போன்ற நிகழ்வுகள். இந்து மதம் காக்கப்பட வேண்டுமானால் இது போன்ற மூடப் பழக்கங்களை விடுத்து பூர்வீக பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகளை மீட்டெடுக்க முயற்ச்சியுங்கள்.

    ReplyDelete
  11. அனானி!

    //இஸ்லாமில் apostasty பத்தி சொல்லு!//

    “apostasty” யில் உங்களுக்கு என்ன சந்தேகம். முகமது நபியின் தூதுவத்திலோ அவரைப் பின்பற்றிய தோழர்களின் நன்நடத்தையிலோ என்ன சந்தேகம் என்பதை தெளிவாக குறிப்பிடவும். பதிலளிக்க முயற்ச்சிக்கிறேன்.

    ReplyDelete
  12. கீழுள்ள சுட்டிகளை சொடுக்கி படங்களை பாருங்கள்.

    1.>>>>> ரத்தம் குடிப்பதும், குடலை உருவுவதும் தான் பக்தி! திருவள்ளூரில் மாத்தம்மாள் சாமிக்காக ஆட்டுக்குட்டி ஒன்றை வாயால் கடித்து பலி கொடுக்கும் நேர்த்திக் கடன் வழிபாடு. பலி கொடுக்கப்படும் ஆட்டுக்குட்டியை சிலர் பிடித்துக் கொள்ள இளைஞர்கள் ஆட்டின் கழுத்தை வாயால் கடித்தனர். ஆட்டின் குடலை ஒருவர் வாயால் கவ்வி, வேகமாக ஓடி வலம் வந்தார். மற்றொருவர் கழுத்து வெட்டப்பட்ட ஆட்டை அப்படியே வாயில் கவ்வியபடி வேகமாக ஓடினார். <<<<<


    2. ஆடி 18 முடிந்து ஆடி 19 அன்று ஒரு கோயில் திருவிழா நடைபெறுகிறது. சில கோயில்களில் அந்நாளில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது என்பது வாடிக்கை <<<<<<


    3. >>>>> ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து பலரும் அதை வழிபட்டு வருகின்றனர். <<<<<<<

    4. >>>>> தட்டில் கற்ப்பூரத்தைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு, பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கற்ப்பூர தீபாராதனை

    இந்து மதத்தின் எல்லாக் கடவுள்களும் பசு மாட்டில் வசிக்கின்றன என்ற கருத்தின் அடிப்படையில்?? பசு மாட்டைக் கும்பிட்டு இதைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பசுவின் மூத்திரம் வரும் வழியில்தான், லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது, இந்து மதம்! அதனால்தான், வைணவக் கோயிலில் விடிந்ததும் பூஜை நடக்கும்போது பெருமாள் முகத்திற்கு நேரே பசு மாட்டின் யோனியைக் காட்டுகிறார்கள்! கடவுள் லட்சுமியை தரிசனம் செய்கிறதாம்!
    <<<<<<

    5.. வேப்பமரசாமி. … திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருப்பது தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம். அதன் அருகே ஒரு வேப்ப மரம் உள்ளது.
    இது சாமி மரமாக மாறிவிட்டது. பட்டுத்துணி கட்டி, மஞ்சள் பூசி, பொட்டு வைத்திருக்கிறார்கள் சில மனிதர்கள். வாகனங்களில் போவோர், வருவோர் அம்மரத்தைப் பார்த்துக் கன்னத்தைத் தொட்டுக் கொள்கின்றனர். (அதாவது சாமி கும்பிடுறாங்களாம்!)
    <<<<<<<

    6
    பக்தியை பெருக்கும் வல்லபை கணபதி கோயிலே தருமபுரிக்குப் பக்கத்தில் இருக்கிறதே!
    <<<<<<<

    ++++++++++++++++++

    சொடுக்கி படியுங்கள்.
    7. >>>>>
    பன்றி புனிதம். பன்றியின் ஆண் பெண் குறி “யாக மந்த்ரங்கள்” போன்றவையாம்.
    <<<<<<

    ReplyDelete
  13. கீழுள்ள சுட்டி சொடுக்கி படம் பாருங்கள்.


    >>>>> சாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்! - உண்மைச் சம்பவம் . நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்திபலகானூர் என்ற கிராமத்தில் உள்ள, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பூசாரி கையால் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி வருடா வருடம் வெகு விமர்சையாக நடைபெறும்.

    இந்த வருடம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று அதிகாலை தீச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்திவந்து வழிபட்டனர்.

    பின்னர் வினோதமான சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அந்த கோயில் பூசாரி சாட்டையுடன் நிற்க, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் நீண்ட வரிசையில் நின்றனர்.

    இந்த கோயில் பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகுமாம், தீராத நோய்கள் நீங்குமாம், மேலும் குடும்ப பிரச்னைகள் தீருமாம். அதேபோல இந்த வருடமும் அந்த சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து நிற்க அவர்களை சாட்டையால் அடித்து அந்த கோயில் பூசாரி ஆசீர்வதித்தார்.

    உறவுகளே என்னைப் பொருத்தவரை கடவுள் நம்பிக்கை வேண்டும்தான், ஆனால் இதுபோல மூட நம்பிக்கைகள் தேவையா?

    SOURCE: http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_01.html
    <<<<<<<<<

    ReplyDelete
  14. Anonymous1:07 AM

    இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தை விமர்சிக்கலாம்!ஆனால் இஸ்லாமில் அப்படி செய்யமுடியுமா?கொஞ்சம் யோசி!ஆளையே க்ளோஸ் செய்து விடுவர்!

    ReplyDelete
  15. Anonymous1:09 AM

    apostasty” யில் உங்களுக்கு என்ன சந்தேகம்//
    .
    .
    ஒருவர் இஸ்லாமை துறந்தார் என்றால் அவரை தீர்த்து கட்டுவது அல்லது அவர் வேறு மதத்தை தழுவினால் அவர்களை கொள்வது இதெல்லாம் நியாயமா?

    ReplyDelete
  16. Anonymous1:09 AM

    @உண்மைகள்'
    உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா உட்டுட்டு போங்க!சும்மா எல்லா இடங்களிலும் இதே குமட்டல்தானா?மற்ற மதங்கள் பத்தியும் பேசு!

    ReplyDelete
  17. Anonymous1:11 AM

    இந்து மதம் காக்கப்பட வேண்டுமானால் இது போன்ற மூடப் பழக்கங்களை விடுத்து பூர்வீக பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகளை மீட்டெடுக்க முயற்ச்சியுங்கள்.//
    .
    .
    அது பற்றி உங்களுக்கு என்ன கவலை?உங்க மதம் வரைக்கும் பேசு!

    ReplyDelete
  18. Anonymous1:12 AM

    http://en.wikipedia.org/wiki/Apostasy_in_Islam

    ReplyDelete
  19. Anonymous1:12 AM

    http://en.wikipedia.org/wiki/Muhammad_al_Warraq

    ReplyDelete
  20. Anonymous1:13 AM

    உன் மதம் யோக்கியமா?' என்று கேள்வி வைப்பது அறிவுடையோர் செயல் அல்ல..///
    .

    அதே போல தங்கள் மதத்தை தூக்கி பிடிக்க மற்ற மதங்களை இழிவது மட்டும் அறிவார்ந்த செயலா?

    ReplyDelete
  21. Anonymous1:14 AM

    அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!

    http://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/

    ReplyDelete
  22. Anonymous1:15 AM

    குரானில் மற்ற மதத்தவரை கழுத்தை திருப்பி கொல்லுங்கள்!அவர்கள் நரகத்துக்கு செல்வர் இதெல்லாம் எந்த வகையில் சாந்தியும் சமாதனமுமோ?
    யூதர்களை முதலில் அடித்தது நீங்கள்தான்!இஸ்லாமுக்கு மாற மறுத்தவர்களை போர் நடத்தி சாகடித்ததுதான் சாந்தியும் சமாதானமோ?

    ReplyDelete
  23. ஆதாம் எவாளில் இருந்து மனித இனம் உருவானது என்றால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஒரு மகன், ஒரு மகள் பிறந்து அவர்கள் தங்களுக்குள் புணர்ந்தால் தான் அது சாத்தியம்!அய்யகோ!இது என்ன நீதியோ!

    ReplyDelete
  24. மனிதன்1:17 AM

    இஸ்லாமுக்கு மாறிய தலித்துகள் எந்த நிலையில் நடத்த படுகின்றனர்!அம்பேத்கர் அது பற்றி நிறைய சொல்லியுள்ளார்!மேலும் பெண்களுக்கு சரியான உரிமை வழன்காததன் காரணமாகவே அவர் புத்த மதத்தை தழுவினார்!

    ReplyDelete
  25. Anonymous1:18 AM

    ஆண் பெண் சமத்துவத்தை இஸ்லாம் நிலைநாட்டுதுன்னா ஏன் பெண்கள் மசூதியில் தோழா அனுமதிக்க படுவதில்லை(பெரும்பாலும்!மிகுந்த போராட்டத்துக்கு பிறகு சில இடங்களில் அனுமதி இருக்குது!)மேலும் ஒரு பெண் ஏன் தொழுகைக்கு தலைமை வகிக்க கூடாது?

    ReplyDelete
  26. Anonymous1:19 AM

    துபாயில் பெண்கள் கார் ஓட்டினால் விபச்சாரி ஆகி விடுவர்னு சொல்லி தடை செய்வதுதான் ஆண் பெண் சமத்துவமா?

    ReplyDelete
  27. Anonymous1:19 AM

    ஒரு ஆண் சாட்சிக்கு நிகராக இரண்டு பெண் சாட்சிகள்!
    ஒரு ஆண் தனக்கு தீங்கு இழைக்கபட்டால் அதை எடுத்து சொல்ல ஒரு சாட்சி கூட இருக்கணும்!ஆனால் ஒரு பெண்?இரண்டு சாட்சிகளை கூட்டி செல்ல வேண்டுமாம்!ஆகா சூப்பர்!

    ReplyDelete
  28. அடுத்தவரை கொல்ல வேண்டும், ஊரை அழிக்க வேண்டும்,குண்டு போட வேண்டும் என்று கொலை செயல் புரியும் தீவிரவாதிகளை விட....மூட நம்பிக்கையில் இருப்பவர்கள் எவ்வள்வோ மேல்.......

    ReplyDelete
  29. இந்துக்களுக்கு முறையான சமய கல்வி அளிக்காதத்ன விளைவு பழையகால பைத்தியக்காரத்தனங்களை ஒழிக்காமல் அவைகள் தலைவிாித்து சதிராட்டம் போடுகின்றன. சமய சாா்பற்ற தன்மை இந்துக்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.மனித வளம் வீணாகி வருகின்றது. விவேகானந்தரையும் ஸ்ரீ நாராயணகுரு வள்ளலாா் தாயுமானவாின் கருத்துக்கள் சுனாமி வெள்ளம் போல் இந்தியா முழுவதும் பாய்ந்து செல்ல வேண்டும். பழையன கழிக வேண்டும்.புதியன வாழ வேண்டும். யாா் செய்வாா்கள் ? இந்து சமய அறநிலையத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசுதான் செய்ய வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)