Monday, January 16, 2012

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்........



1........................

2.ஆதி திராவிடர்களின் பழக்கங்கள்.

3.கிருத்தவம்.

4.சமணம்

5.பவுத்தம்

6.முஸ்லிம்களிடம் உள்ள தர்ஹா வணக்கம்.

7.திராவிடர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கை.

8.சீக்கியம்

9.ஏக இறைவனை மட்டுமே வணங்கும் இஸ்லாமியர்

ஒரு குறிப்பிட்ட கலாசாரம் எவ்வாறு நமது இந்திய கலாசாரத்தை சுருட்டி தனது கலாச்சாரத்தை முன்னிறுத்தி விட்டது என்பதை விளக்குவதே இந்த கார்ட்டூன். சுருட்டப்பட்ட கலாசாரங்கள் இன்னும் கூட உள்ளது. தெரிந்தவர்கள் அவைகளையும் பட்டியலிடவும்.

ஒன்பது வரை பூர்த்தி செய்த எனக்கு முதல் இலக்கத்தைப் பூர்த்தி செய்ய பொருத்தமான பெயர் கிடைக்கவில்லை. எனவே படிப்பவர்களின் யூகத்துக்கே முதல் நம்பரை விட்டு விட்டேன். முதல் இலக்கத்துக்கு பொருத்தமான பெயரை நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நமது முன்னோர்களின் கலாசாரத்தைப் பற்றிய இந்த காணொளியையும் பார்த்து விடுவோம்:




டிஸ்கி:…………….நம்மை நாம் திராவிடர்கள் என்றுணர்ந்தால் இவ்விழிவுகள் நம்மை விட்டு ஓடிவிடுகின்றன. விட்டுக்கொடுக்கும் தன்மை முஸ்லீமிடம் கிடையாது. இந்துவைப் போல, கிருஸ்தவப் பாதிரியார் கூட, கிருஸ்தவப் பறையன், கிருஸ்தவப் பார்ப்பனன், கிருஸ்தவ முதலியார் என்பதில் கவலையற்றிருப்பார். ஆனால் முஸ்லீமில் முஸ்லிம் பார்ப்பான், முஸ்லிம் பறையன் என்றிருக்க மாட்டான். அதுபோல நாமும் ஒரே திராவிடராக மட்டும் இருக்க வேண்டும்.

…………பெரியார் வாழ்க என்ற கித்தாப் எனக்கு வழங்கினால் நான் நிம்மதியடைய முடியாது. நமது இழிவு பூர்ணமாக நீங்க வேண்டும். அன்றுதான் நான் நிம்மதி அடைவேன். நமது ஈனம் ஒழிய உயிர் கொடுத்தேனும் புரட்சி செய்ய வேண்டும். ஆகவே, தோழர்களே நீங்கள் கீழான நிலையில் இருப்பதற்கு எது காரணம் என்பதைத் தெரிந்து அதற்குப் பரிகாரம் தேடுங்கள். இம்மக்களைப் பின்பற்றி மணமாகாதவர்கள் நடந்து கொள்ளுங்கள். நான் கூறியவைகளைப் பகுத்திறவைக் கொண்டு ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வாருங்கள்," என்று கூறி, மணமக்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் சுமார் 2 மணிநேரம் பேசினார்.

---------------- 21.07.1947 மாதவரம் திருமணத்தில் பெரியார் சொற்பொழிவு -"விடுதலை" 23.07.1947

27 comments:

  1. சலாம் சகோ.சுவனப்பிரியன்..!
    ஆக்டோபஸ் போன்றுள்ளது... ஆனால்... ஏழுகாலி...

    எட்டாவது காலை வரைந்து... அதில்,
    'சூரியனை வணங்கலாம்.. பொங்கலாம்..' எனும் அந்த... (உயர்ந்த வெள்ளை குரங்கு வழி பிறந்த... தாழ்ந்த கருங்குரங்கு வழி பிறந்த...) டார்வின்/கம்யுனிச நாத்திகர்களை கோர்த்து விட்டு விடுங்கள் சகோ.சுவனப்பிரியன்.

    அப்புறம் ஆக்டோபஸ் பெயரை...
    "ஆரியோப்டஸ்"...
    என்று மாற்றி பெயரிட்டு விடலாம்..!

    ஹா..ஹா..ஹா..ஹா..
    ஹா..ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
  2. //ஒரு குறிப்பிட்ட கலாசாரம//
    which culture you are talking about?

    kannan from abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  3. as a indian, we have only unity. i think that our culture is based on; following religion, province, community, mother tonque or local language etc etc. i don't think that we are following such a culture which is common for all (indians).

    kannan from abu dhabi

    ReplyDelete
  4. அருமையான பதிவு!!!!!!!!!!!!
    /முதல் இலக்கத்துக்கு பொருத்தமான பெயரை நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் /
    இந்திய தத்துவ மரபு அல்லது இந்திய வாழ்வியல் முறை என்பதை ஒன்றாக்கலாம். இந்திய வாழ்வியல் முறை எல்லோரையும் எப்படி அரவணைக்கிறது என்பதை விளக்கியதற்கு நன்றி. இந்திய மரபில் ஒன்றிய கலாச்சாரங்கள் , இனங்கள் எண்ணற்றவை.அத‌னால் ப‌ல‌ மொழி இன‌,ம‌த 120 கோடி ம‌க்க‌ள் ஒரே நாடாக பெரிய சமூக பிர‌ச்சினைகள் இல்லாமல் வாழ‌ முடிகிற‌து.
    ________________
    /(உயர்ந்த வெள்ளை குரங்கு வழி பிறந்த... தாழ்ந்த கருங்குரங்கு வழி பிறந்த...) டார்வின்/கம்யுனிச நாத்திகர்களை கோர்த்து விட்டு விடுங்கள்/

    1.இறை ம‌றுப்பு உள்ளிட்ட‌ பொருள் முத‌ல்வாத‌ம் என்ப‌தும் இந்திய‌ த‌த்துவ‌ ம‌ர‌பில் அட‌க்க‌மே.

    2.வெள்ளை குர‌ங்கு உய‌ர்ந்த‌தா,க‌ருங்குர‌ங்கு தாழ்ந்த‌தா? இத‌னை ஆதார‌ம் இல்லாம‌ல் சொல்லும் அள‌விற்கு விவ‌ர‌மில்லாத‌வ‌ர் அல்ல‌ சகோ முக‌ம‌து ஆஸிக் . சகோ முக‌ம‌து ஆஸிக் புத்திசாலி என்ப‌தால் மார்க்கப்படி(நன்றி சுவனப் பிரியன்)ச‌ரியாக‌வே இருக்கும்.

    3.சில‌ ம‌னித‌ர்கள் [டார்வின்/கம்யுனிச நாத்திகர்கள் ] ம‌ட்டும் குர‌ங்கின் வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்று கூறுவ‌து ப‌ரிணாம்த்தை ஆத‌ரித்து ம‌த‌ நிந்த‌னை ஆகாதா?

    அப்புற‌ம் ஒரு சின்ன‌ திருத்த‌ம் ம‌னித‌னுக்கும் சிம்ப‌ன்ஸி குர‌ங்கிற்கும் ஒரே மூதாதைய‌ர் என்று தெரிந்தே இக்கூற்றை சகோ நகைச்சுவையாக கூறியிருப்பார் என்ப‌திலும் என்க்கு ஐய‌மில்லை.

    முதல் ஓட்டும் போட்டு விட்டேன். Keep it up!!!!!!!!!!!!!!1

    ReplyDelete
  5. ///இத‌னை ஆதார‌ம் இல்லாம‌ல் சொல்லும் அள‌விற்கு விவ‌ர‌மில்லாத‌வ‌ர் அல்ல‌ சகோ முக‌ம‌து ஆஸிக் .///---மிக்க நன்றி சகோ.சார். சொன்னது சரிதான்.

    "எது மனிதகுல சீரழிவுக்கு அதிகம் வித்திட்டது?
    # டார்வினின் நிற வருணாசிரமகொள்கையா?
    # பார்ப்பனரின் சாதி வருணாசிரமக்கொள்கையா?"
    -----இதொன்றும் பட்டிமன்ற தலைப்பு அல்ல. உலக நிதர்சனம்.

    முன்னது வெவ்வேறு இனத்துக்குள் நிற வேற்றுமை காரணமாய் உயர்வு தாழ்வு உருவாக்கியது என்றால் பின்னது ஒரே இனத்துக்குள் தொழில் சார்ந்து உயர்வு தாழ்வு உருவாக்கியது.

    சார்லஸ் டார்வின் எழுதிய DESCENT OF MAN புத்தகத்தில், பக்கம்-201-ல் அவர்...

    கறுப்பினத்தவரை (நீக்ரோ என்று குறிப்பிட்டு) மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைக்கிறார். பின்னர் மேலும் இப்படி சொல்கிறார்... "நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்".

    அவர் யாரை 'காட்டுமிராண்டிகள்' என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இவ்வுலகில் இருக்கிறார்கள். இவர்களுக்கே அவர்களில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக.! அவர்கள் அழிந்துவிடவில்லை. இவர்களுடைய அறியாமை தான் அழிந்து விட்டது. இன்று அவர்கள் சிந்தனையிலும் திறமையிலும் இந்த ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. டார்வினின் கட்டுக்கதை மூட்டையின் ஒட்டை வழியே எட்டிப்பார்க்கும் அவரின் அறியாமை நன்றாக வெளிப்படும் இடம் தான் இது.

    சரி... டார்வினின் மனிதப்பரிணாமத்தில் "கருப்பும் பழுப்பும் மஞ்சளும் கலந்துள்ள ஆசியர்களாகிய நாம் எந்த படித்தரம்" என்று டார்வின் சொல்ல மறந்துவிட்டார் போலும்..!

    ஹா....ஹா....ஹா....

    ஆனால்,
    இஸ்லாமிய மார்க்கம் அதை சொல்ல மறக்கவில்லையே...!!!

    "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; ............." (குர்ஆன் 49:13) என்பது அனைத்து மனிதரையும் படைத்த இறைவனின் கூற்று..!

    ///சகோ முக‌ம‌து ஆஸிக் புத்திசாலி என்ப‌தால் மார்க்கப்படி(நன்றி சுவனப் பிரியன்)ச‌ரியாக‌வே இருக்கும்.///---மிக மிக மிக நன்றி சகோ.சார். எனக்குத்தான் உங்களின் ஓவர் புகழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    அறிவு இறைவன் தந்தது.

    ReplyDelete
  6. ///3.சில‌ ம‌னித‌ர்கள் [டார்வின்/கம்யுனிச நாத்திகர்கள் ] ம‌ட்டும் குர‌ங்கின் வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்று கூறுவ‌து ப‌ரிணாம்த்தை ஆத‌ரித்து ம‌த‌ நிந்த‌னை ஆகாதா?///

    ----ஓ...! இதுதான் உங்க பரிணாமம் தியரியா....?!?!?!
    அட..! இதை யாருங்க... எப்போங்க... சொன்னாக...? புதுசா இருக்கே..?!?!? பரிணாமத்தை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீக போங்க..!

    ReplyDelete
  7. ///அப்புற‌ம் ஒரு சின்ன‌ திருத்த‌ம் ம‌னித‌னுக்கும் சிம்ப‌ன்ஸி குர‌ங்கிற்கும் ஒரே மூதாதைய‌ர் ///
    ---இல்லைங்க அது பொய்யுன்னு நல்லா தெரியுங்க..!

    அந்த மூதாதையர் வாழ்ந்த காலத்தில் கண்ணால் பார்த்த சாட்சி ஒருத்தரும் இல்லைன்னும் தெரியும்ங்க...!

    அந்த கட்டுக்கதைக்கு படிமன் ஆதாரம் தேடித்தேடி பரிணாம வாதிகள் ஓஞ்சு போயிட்ட மேட்டரும் தெரியும்ங்க..!

    அப்படி ஏதும் ஆதாரம் இதுவரை இல்லைங்கிறதும் தெரியும்ங்க..!

    எதிர்க்குரல் ஆஷிக்கின் பரிணாம ஆப்பு பதிவுகளில் எல்லாம் உங்களால் எதிர் பின்னூட்டம் போடக்கூட முடியாத உங்கள் கையறு நிலை படலமும் நல்லாவே தெரியும்ங்க..!

    உங்க கிட்டே பரிணாமம் சம்பந்தமா இதே தளத்துலே ஏற்கனவே நாங்க கேட்ட சவால் கேள்விகளுக்கு இன்னிக்கு வரை நீங்க பதில் சொல்லாம பாச்சா காற்றதும் ஹா...ஹா...ஹா... நல்லாவே தெரியும்ங்க..!

    ///இக்கூற்றை சகோ நகைச்சுவையாக கூறியிருப்பார் என்ப‌திலும் என்க்கு ஐய‌மில்லை.///---அடப்போங்க... உங்களுக்கு சீரியஸா சிந்திக்கிறதே நகைச்சுவையா போச்சுங்க...

    ReplyDelete
  8. ஸலாம் சகோ
    விவாதம் தொடர்கிறது.
    **************
    முகமது ஆஸிக்://(உயர்ந்த வெள்ளை குரங்கு வழி பிறந்த... தாழ்ந்த கருங்குரங்கு வழி பிறந்த...) டார்வின்/கம்யுனிச நாத்திகர்களை கோர்த்து விட்டு விடுங்கள்//

    சார்வாகன்:://வெள்ளை குர‌ங்கு உய‌ர்ந்த‌தா,க‌ருங்குர‌ங்கு தாழ்ந்த‌தா? இத‌னை ஆதார‌ம் இல்லாம‌ல் சொல்லும் அள‌விற்கு விவ‌ர‌மில்லாத‌வ‌ர் அல்ல‌//

    முகமது ஆஸிக்://சார்லஸ் டார்வின் எழுதிய DESCENT OF MAN புத்தகத்தில், பக்கம்-201-ல் அவர்...கறுப்பினத்தவரை (நீக்ரோ என்று குறிப்பிட்டு) மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைக்கிறார்//

    **********
    சகோ ஆஸிக் நான் கேட்டது குரங்கில் வெள்ளை குரங்கு உயர்ந்தது, கருங்குரங்கு தாழ்ந்தது என்று டார்வினோ யாராவது கூறியுள்ளார்களா?.உங்களின் சொந்த கருத்து என்றால் எனக்கு ஆட்சேபம் இல்லை.

    ************************
    டார்வினின் பரிணாம் கொள்கைப்படி உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே ஆப்பிரிக்க மூதாதையரை உடையவர்களே. வெள்ளையர்கள் வெள்ளை குரங்கு , கருப்பினத்தவர் கருங்குரங்கில் இருந்து வந்தவர் என்பது கேள்விப்படாதது. அனைத்து மனிதர்களுமே மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைக்கிறார்.

    http://en.wikipedia.org/wiki/Polygenism

    In his work The Descent of Man (1871) Charles Darwin and some of his supporters argued for the monogenesis of the human species, seeing the common origin of all humans as essential for evolutionary theory. This is known as the single-origin hypothesis
    ***************

    மனிதன் பல இனங்களாக பிரிந்த பின்பு அவர் கூறியதை கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.காலத்திற்கு ,சூழலுக்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது. அமெரிக்க கருப்பின விடுதலைக்கு போர்[1861-1865),] தொடுத்த ஆபிரஹாம் லிங்கனால்தான் ஒபாமா போன்றோர் பதவிக்கு வர முடிந்தது.மதம் சார்ந்த விவாதத்திற்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

    Charles Darwin was one of the first to propose common descent of living organisms, and among the first to suggest that all humans had in common ancestors who lived in Africa
    http://en.wikipedia.org/wiki/Recent_African_origin_of_modern_humans

    ReplyDelete
  9. ---//-ஓ...! இதுதான் உங்க பரிணாமம் தியரியா....?!?!?!
    அட..! இதை யாருங்க... எப்போங்க... சொன்னாக...? புதுசா இருக்கே..?!?!? பரிணாமத்தை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீக போங்க..!//
    இவர்தான் அப்படி கூறி புத்தகம் வேறு எழுதியுள்ளார்.

    திரு அகம்து குட்டி என்னும் இஸ்லாமிய அறிஞர் எழுதிய ஒரு புத்தகம்தான் ஆடம் ஜீன்அன்ட் மைட்டொகான்ட்ரியல் ஈவ் என்னும் புத்தம்தான் அது.அதில் இவர் பரிணம்த்திற்கும்,படைப்புக் கொள்கைக்கும் பாலம் அமைக்கிறார்.இயற்கை தேர்வு மூலம் நடக்கும் பரிணாம் வளர்ச்சியை ஒத்துக் கொள்கிறார்.ஆதமிற்கு முன் மனிதர்கள் இருந்ததாக கூறி (இன்ப)அதிர்ச்சி அளிக்கிறார்.அதாவது பரிணாம வளர்ச்சி படி உயிரினங்கள் உருவாகின்றது,சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன் ஆத்மை இரைவன் படைத்தார் .அவரை படைத்து ,பிற மனிதர்களுக்கு தலைவர்களாக் வழிகாட்ட அவ்ருக்கு ஆலோசனைகள் வழங்கியதாக கூறுகின்ரார்

    பரிணாமம்,படைப்புக் கொள்கை பாய்!!!!!!!! பாய்!!!!!!


    http://saarvaakan.blogspot.com/2011/06/blog-post_20.html

    ReplyDelete
  10. ராஜன்7:49 AM

    பரிணாமம் கிடக்கட்டும்.

    அல்லாஹ் அல்லது காப்ரியேல் என்றுதன்னிடம் மலக்கு பேசியதாக நினைத்துகொண்டதெல்லாம் அவரது மனநோய் காரணமாகத்தான் என்று சொல்லுகிறார்களே.

    டெம்போரல் லோப் வலிப்பு நோயால் இப்படி அவர் உளறியதை எல்லாம் அல்லாஹ் சொன்னது என்று நினைத்து உலகத்தை சுருட்டும் ஆக்டோபஸ் ஆக வளர்ந்திருக்கும் இஸ்லாம் பற்றியும் சொல்லுங்கள் சுவனப்பிரியன்

    ReplyDelete
  11. //அப்துல் ஹகீம் said...
    நபி பெருமானாருக்கு வலிப்பு நோய் இருந்ததால்தான் அவர் தன்னிடம் ஜிப்ரீல் வந்து பேசினார் என்று நினைத்துகொண்டார் என்று கூறுகிறார்களே.

    அதனை பற்றி விளக்கி உண்மையிலேயே ஜிப்ரீல்தான் வந்து நபிபெருமானாரிடம் பேசினார் என்று விளக்கும்படி கேட்டுகொள்கிறேன்
    நன்றி //

    //ராஜன் said...
    பரிணாமம் கிடக்கட்டும்.

    அல்லாஹ் அல்லது காப்ரியேல் என்றுதன்னிடம் மலக்கு பேசியதாக நினைத்துகொண்டதெல்லாம் அவரது மனநோய் காரணமாகத்தான் என்று சொல்லுகிறார்களே.//

    ஹக்கீம், ராஜன், இப்னு ஷகீர் என்று எத்தனை பெயரில் வந்தாலும் பதில் ஒன்றுதான். நானும் எனது பதிலையே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

    யார் கூறுகிறார்கள்?

    இஸ்லாமிய எதிரிகள் அதன் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடைசியாக எடுத்த ஆயதமே முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்ததாக கதை கட்டி விட்டது. முகமது நபிக்கு தலையில் எத்தனை நரை முடிகள் இருந்தது என்பதைக் கூட அவரது தோழர்கள் ஹதீதுகளில் குறித்து வைத்துள்ளனர். அது பொல் முகமது நபி எப்பொழுதெல்லாம் நோய் வாய் பட்டார்களோ அவை அனைத்தும் தேதி வாரியாக ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு முறை கூட முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்த ஒரு குறிப்பையும் காணவில்லை. அன்றைய இஸ்லாமிய எதிரிகள் கூட இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தவில்லை. வழக்கமான திசை திருப்பும் வேலையே வலிப்பு நோய் என்பது. இமை எல்லாம தாண்டி இஸ்லாம் இன்று வெகு தூரத்துக்கு வந்து விட்டது.

    //அதனை பற்றி விளக்கி உண்மையிலேயே ஜிப்ரீல்தான் வந்து நபிபெருமானாரிடம் பேசினார் என்று விளக்கும்படி கேட்டுகொள்கிறேன்
    நன்றி//

    இதனை ஒரு பின்னூட்டத்தில் விளக்க முடியாது. தனி பதிவாகவே இடுகிறேன். முன்பும் இட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  12. @ சகோ.சார்வாகன்,

    உங்கள் கிட்டே பலமுறை சொல்லிட்டோம்...
    இப்பொது மறுபடியும் சொல்றேன்...

    பரிணாமம் சம்பந்தமா உங்களோட எந்தவித விவாதத்துக்கும் "\\இங்கே//" ஒருத்தர் தயாரா ரொம்ப நாளாவே உங்களை கூப்பிட்டுக்கிட்டு இருக்காரே..!

    உங்களின்---/////பரிணாமம்,படைப்புக் கொள்கை பாய்!!!!!!!! பாய்!!!!!!/////---போன்ற ஆதாரத்தை எல்லாம் அங்கே போய் கொட்டி அவரை 'துண்டை காணோம் துணியை காணோம்'னு ஓட வைக்கணும், என்ற வீர எண்ணத்தோடு... விவேக உத்வேகத்தோடு...
    சும்மா பயப்படாம அங்கே போயிட்டு வாங்க சகோ.சார்வாகன். தைரியமா பதில் சொல்ல அட்லீஸ்ட் முயற்சியாவது பண்ணுங்களேன் சகோ. சார்வாகன்..!

    ஒருவேளை விவாதத்தில் பரிணாமம் தோற்று விட்டால் (நீங்கள் தோற்க மாட்டீர்கள்) இப்போ என்ன ஆயிர போவுது..?

    பொய் சொன்ன சார்லஸ் டார்வினுக்கு இப்போ தண்டனை தர முடியுமா..? அவர்தான் எப்பவோ போய் சேர்ந்துட்டாரே..?

    அவருக்கு ஆதரவா இருந்த உங்களையும் யாரும் ஒண்ணும் தப்பா சொல்லவோ அல்லது கிண்டல் பண்ணவோ மாட்டோம் சகோ.சார்வாகன்.

    பாவம் நீங்கதான் என்ன பண்ணுவீங்க..? பள்ளியில் கல்லூரியில் அறிவியல் புத்தகத்தில் சொல்லித்தரப்பட்ட கட்டுக்கதையாயிற்றே இது..?

    ReplyDelete
  13. Anonymous9:13 AM

    //
    இதனை ஒரு பின்னூட்டத்தில் விளக்க முடியாது. தனி பதிவாகவே இடுகிறேன். முன்பும் இட்டிருக்கிறேன்.
    //
    முன்பு இட்டிருக்கிறீர்கள் என்றால் அதன் இணைப்பை இங்கே கொடுத்தால் போச்சு.

    ReplyDelete
  14. திரு கண்ணன்!

    //which culture you are talking about?//

    எல்லோருக்கும் தெரிந்ததே! யூத வழி வந்த ஆரிய கலாசாரம்.

    //i don't think that we are following such a culture which is common for all (indians).//

    அப்படி ஒரு நிலையைக் கொண்டு வருவதற்கு பகீரத முயற்சி எடுக்கப்படுகிறது. அந்த குழுமத்தில் முஸ்லிம்களையும் இணைக்க முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் அதில் அவர்கள் வெற்றியடையப் போவதில்லை. பவுத்தம, சமணம், திராவிடம் என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி கலாசாரமும், இறை வழிபாடும் இருந்தது. ஆனால் அவை அனைத்தும் இந்து மதம் என்ற ஒரு கூட்டுக்குள் அடைக்கப் பட்டுள்ளது. அதற்கு தலைமையாக ஒரு குறிப்பிட்ட இனத்தவரும் உள்ளனர். இதுதான் இன்றைய நிலை.

    வேற்றுமையில் ஒற்றுமைதான் பாரத கலாசாரமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அமைதியும் நிலவும்.

    ReplyDelete
  15. சலாம் சகோ ஆஷிக்!

    //அப்புறம் ஆக்டோபஸ் பெயரை...
    "ஆரியோப்டஸ்"...
    என்று மாற்றி பெயரிட்டு விடலாம்..!//

    பொருத்தமான பெயர்தான். சார்வாகன் எதிர்க் குரலின் பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் தரவில்லை. இனிமேலாவது தருகிறாரா பார்ப்போம்.

    வருகைக்கும் கருத்துக்கும நன்றி!

    ReplyDelete
  16. திரு சார்வாகன்!

    //இந்திய தத்துவ மரபு அல்லது இந்திய வாழ்வியல் முறை என்பதை ஒன்றாக்கலாம். இந்திய வாழ்வியல் முறை எல்லோரையும் எப்படி அரவணைக்கிறது என்பதை விளக்கியதற்கு நன்றி.//
    இந்திய வாழ்வியல் முறை என்று ஒன்று இருக்கிறதா? அதற்கான சட்ட திட்டங்கள் என்ன? எதன் அடிப்படையில் அது அமைந்திருக்கும்?

    //இந்திய மரபில் ஒன்றிய கலாச்சாரங்கள் , இனங்கள் எண்ணற்றவை.அத‌னால் ப‌ல‌ மொழி இன‌,ம‌த 120 கோடி ம‌க்க‌ள் ஒரே நாடாக பெரிய சமூக பிர‌ச்சினைகள் இல்லாமல் வாழ‌ முடிகிற‌து.//

    வசதியாக பாபரி மசூதி பிரச்னை. குஜராத் கலவரம், மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, கர்நாடகாவில் இந்துத்வவாதிகள் அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி அதை முஸ்லிம்கள் மேல் போட முயற்ச்சித்த தேச துரோக கொடுமை, மகாத்மா காந்தியை ஒரு இந்துத்வ வாதி கையில் 'இஸ்மாயில்' என்று பச்சை குத்திக் கொண்டு செய்த தேச துரோகம் என்பதை எல்லாம் மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது.

    ஆனால் இவ்வளவு சூழ்ச்சிகள் நடந்தும் இந்துக்களும் முஸ்லிம்களும் இன்றும் அதே சகோதர வாஞ்சையோடுதான் பழகி வருகின்றனர். அனைத்து மக்களுக்குமே தெரியும் இந்துக்கள் வேறு. இந்துத்வ வாதிகள் வேறு என்று. இந்த புரிதல் இருக்கும் வரை இந்தியர்களை இந்துத்வவாதிகளால் பிரிக்க முடியாது. எனவே நம் நாட்டில் என்றுமே மத ஒற்றுமை வளரும். இந்தியாவின் புகழும் ஓங்கும்.

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  17. Anonymous5:49 PM

    அதற்கெல்லாம் முன்னால் நடந்ததையும் போட்டிருக்கலாமே?

    டைரக்ட் ஆக்‌ஷ்ன் டே என்று ஜின்னா பாகிஸ்தானுக்காக ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்த வங்காளிகள்.

    வங்காளதேச போரின் போது லுங்கியை அவிழ்த்து பார்த்து இந்து என்று முடிவு கட்டி கொன்ற கோடிக்கணக்கான இந்துக்கள்.

    8 லட்சம் காஷ்மீரி இந்துக்களை காஷ்மிரிலிருந்து துரத்தியது

    இதுவெல்லாம் பாபர் மசூதி உடைப்புக்கு முன்னால் நடந்தது.

    ReplyDelete
  18. //டைரக்ட் ஆக்‌ஷ்ன் டே என்று ஜின்னா பாகிஸ்தானுக்காக ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்த வங்காளிகள்.

    வங்காளதேச போரின் போது லுங்கியை அவிழ்த்து பார்த்து இந்து என்று முடிவு கட்டி கொன்ற கோடிக்கணக்கான இந்துக்கள்.//

    ஒரு நாடே பிரியும் போது இரு பக்கத்திலும் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அன்றைய நேரத்தில் இந்துக்கள் எவ்வளவு பாதிப்படைந்தார்களோ அதே அளவு இழப்பு முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டது.

    ஆனால் சுதந்திர இந்தியாவில் நாள் குறித்து காவிக் கும்பலை அந்த இடத்தில் ஒன்று திரட்டி அடுத்த பிரதமர் என்று இனம் காணப்படும் அத்வானி என்ற அயோக்கியன் முன்னிலையில் ஒரு புராதன சின்னம் சகல பாதுகாப்புகளோடும் உடைக்கப்படுகிறது. இன்னும் 1000 மசூதிகள் இவர்கள் கணக்கில் உள்ளனவாம். இது மத சார்பற்ற நாடாம். :-))))))

    //8 லட்சம் காஷ்மீரி இந்துக்களை காஷ்மிரிலிருந்து துரத்தியது//

    உள்ளூர் மக்கள் எங்கும் இந்த பிரச்னையில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்க ஆதரவோடு செயல்படும் சில பாகிஸ்தானிய குழுக்களின் வேலை. காஷ்மீரில் அமைதி திரும்பினால் அமெரிக்காவின் வியாபாரம் படுத்து விடும். இது ஒரு வியாபார யுக்தி.

    மற்றபடி வெளியேறியவர்களை மீண்டும் குடியமர்த்த வெண்டும் என்பதே எனது நிலை.

    ReplyDelete
  19. Anonymous9:49 PM

    //Anonymous said...

    அதற்கெல்லாம் முன்னால் நடந்ததையும் போட்டிருக்கலாமே?

    டைரக்ட் ஆக்‌ஷ்ன் டே என்று ஜின்னா பாகிஸ்தானுக்காக ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்த வங்காளிகள்.

    வங்காளதேச போரின் போது லுங்கியை அவிழ்த்து பார்த்து இந்து என்று முடிவு கட்டி கொன்ற கோடிக்கணக்கான இந்துக்கள்.

    8 லட்சம் காஷ்மீரி இந்துக்களை காஷ்மிரிலிருந்து துரத்தியது

    இதுவெல்லாம் பாபர் மசூதி உடைப்புக்கு முன்னால் நடந்தது.
    5:49 PM //

    இது RSS புது வரவு, பழைய கோயல்பஸ் பலசு அனதளே இது புதுசு கண்ண புதுசு கண்ண பாவமய்யா இனி எத்தனை பிஞ்சு மண்டைய களுவ போரன்களோ தெரியலா

    ReplyDelete
  20. ஸலாம் சகோ முகம்மது ஆஸிக்
    /பாவம் நீங்கதான் என்ன பண்ணுவீங்க..? பள்ளியில் கல்லூரியில் அறிவியல் புத்தகத்தில் சொல்லித்தரப்பட்ட கட்டுக்கதையாயிற்றே இது..? /
    உண்மைதான். பரிணாமம் காற்கும் மாணவன் என்ற அளவில் அறிந்தவற்றை வைத்து முயற்சிக்க்லாம்.இதில் ஒன்றும் அச்சம்,கூச்சம் கிடையாது.நாம் யாருக்கும் எதிராக பதிவு எழுதுவது இல்லை.தேடி அறிந்த விவரங்களை எளிய தமிழில் அளிக்கிறோம் அவ்வளவுதான்.வெற்றி தோல்வி என்பது வரையறுப்பே!.
    இப்போது அறிவார்ந்த வடிவமைப்பு பற்றி தொடர் பதிவு எழுதி வருவதால் முடிந்ததும் பரிணாம விமர்சனங்கள்& மறுப்புகள் அதன் தொடர்ச்சியாக வெளிவரும்.
    ********
    @ சகோ சுவனப் பிரியன்
    இது உங்க‌ள் கேள்வி
    //இந்திய வாழ்வியல் முறை என்று ஒன்று இருக்கிறதா? அதற்கான சட்ட திட்டங்கள் என்ன? எதன் அடிப்படையில் அது அமைந்திருக்கும்?//

    இது உங்க‌ள் &என் ப‌திலும்
    //ஆனால் இவ்வளவு சூழ்ச்சிகள் நடந்தும் இந்துக்களும் முஸ்லிம்களும்(மற்றும் அனைவரும்) இன்றும் அதே சகோதர வாஞ்சையோடுதான் பழகி வருகின்றனர். அனைத்து மக்களுக்குமே தெரியும் இந்துக்கள் வேறு. இந்துத்வ வாதிகள் வேறு என்று. இந்த புரிதல் இருக்கும் வரை இந்தியர்களை இந்துத்வவாதிகளால் பிரிக்க முடியாது. எனவே நம் நாட்டில் என்றுமே மத ஒற்றுமை வளரும். இந்தியாவின் புகழும் ஓங்கும்.//

    இந்த வாஞ்சை எப்படி வந்தது?.(இந்திய வாழ்வியல்)மரபு ரீதியாக வந்ததுதானே!!!!!!!!!.

    120 கோடி மக்களில் 1% (1.2 கோடி)பிரச்சினைக்குறியவர்களாக‌ இருந்தாலே என்ன ஆகும்?.ஆனால் நடக்கும் சமூக வன்முறைகள் மிக குறைவு.அப்போது பெரும்பானமையினரின் வாழ்வியலே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
    நம் மக்கள் ஜனநாயகம்+மத சார்பின்மைக்கு எதிரான எதையும், எப்போதும் நிராகரிப்பார்கள்!!!!!!!!

    கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி

    ReplyDelete
  21. என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல !

    ஒரு வேலை விழிப்புணர்வு அல்லது பகுத்தறிவுப் பதிவாக இருக்குமோ?

    ReplyDelete
  22. சுகவனம் அவர்களே,
    வணக்கம்,
    உங்கள் கார்ட்டூனில் முதல் இலக்கம் 'மனிதம்' என்றிருக்கணும்.

    எழுத்தாளர் காஸ்யபன் தங்களை அறிமுகம் செய்தார்.
    பசு வதை பற்றிய எனது பதிவிற்கு தாங்கள் தந்துள்ள கருத்துப் பதிவை காஸ்யபன் அவர்கள் ப்ளாக்கில் பார்த்தேன். மிக்க நன்றி.

    அதையடுத்து தங்களது வலைப்பதிவையும் பார்த்தேன். மிகவும் சுவையாக பல பயனுள்ள தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள்.

    நன்றி.

    பரணிக்காதலர் எனும் தலைப்பில் தாமிரபரணி பற்றிய எனது கட்டுரை யை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
    http://johnchelladurai.blogspot.com/2012/01/blog-post.html
    அன்புடன்
    தேஜா

    ReplyDelete
  23. திரு ஜான் செல்லதுரை!

    //சுகவனம் அவர்களே,
    வணக்கம்,//

    எனது புனைப் பெயர் சுவனப்பிரியன்.

    மேலும் தங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    //உங்கள் கார்ட்டூனில் முதல் இலக்கம் 'மனிதம்' என்றிருக்கணும்.//

    ஒவ்வொரு மனிதனின் சிந்திக்கும் திறனும் ஆங்காங்கே மாறுபடுகிறது. எனது புரிதலோடு சகோ ஆஷிக் ஒத்து வருகிறார். சார்வாகன் அவரது புரிதலிலும் மாறுபடுகிறார். இதே கார்ட்டூனை நீங்கள் உங்கள் கோணத்தில் சிந்திக்கிறீர்கள்.

    //அதையடுத்து தங்களது வலைப்பதிவையும் பார்த்தேன். மிகவும் சுவையாக பல பயனுள்ள தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள்.//

    நன்றி! உங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் எனது வலை பக்கம் வருவது எனக்கு மகிழ்ச்சி. உங்கள் பதிவையும் வேலை முடிந்து வந்து பார்வையிடுகிறேன்.

    தொடர்ந்து கருத்துக்களை சொல்லி வாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  24. திரு கபிலன்!

    //என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல !

    ஒரு வேலை விழிப்புணர்வு அல்லது பகுத்தறிவுப் பதிவாக இருக்குமோ?//

    சரியாகவே சொன்னீர்கள். விழிப்புணர்வும் பகுத்தறிவும் நமக்கு எற்பட வேண்டும் என்ற தாக்கத்தில் எழுந்த பதிவே இது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  25. 1) தொடரும் வன்கொடுமைகள் பற்றி-

    1995 முதல் 2007 வரை எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட 4,41.424 வழக்குகளில்...

    கொலைகள் : 9593

    படுகாயம் ஏற்படுத்திய தாக்குதல்கள் : 61168

    வன்புணர்ச்சிகள் : 20865

    சூறையாடல் : 4699

    ஆள்கடத்தல் : 4484

    தீண்டாமை சம்பந்தமான

    வழக்குகள் : 10512

    (என்.சி.ஆர்.பி. இந்தியாவில் குற்றச்செயல்கள் 1995-2007, புதுதில்லி 1996-2008)


    2) வெளிவராத வன்கொடுமைகளுக்கு காரணங்கள் பற்றி…
    • வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்ய காவல்துறையினர் தயங்குகின்றனர்
    • காவல்துறையினரிடம் நிலவும் சாதி பாகுபாட்டு உணர்வும், ஊழலும்
    • தங்களது அதிகார எல்லையில் குறை வான குற்றங்கள் நடப்பதாக காட்டுவது.-
    • வழக்கு மெதுவாக நடப்பதும்-குறைவான தண்டனையும்
    (தேசிய எஸ்சி ஆணையம்-2004-05 அறிக்கை)


    3) சட்டம் சொல்வதென்ன?
    • வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. தான் விசாரிக்க வேண்டும்.
    • 30 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும்
    • முன் ஜாமீன் வழங்க தடை விதிக்கப்பட் டுள்ளது (2008 உசi டுது 4779).
    • மத்தியப்பிரதேச மாநில அரசு எதிர் ராம்கிரிஷன் பலோத்தியா மற்றும் ஒருவர் வழக்கில்(1995) இச்சட்டத்தின் 18 வது பிரிவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒரு வருக்கு முன் ஜாமீன் வழங்க இந்தப்பிரிவு கட்டுப்படுத்துகிறது (நாடாளுமன்றக்குழு 2004-2005)
    • 2004 ல் குஜராத் மாநிலத்தில் பதிவு செய் யப்பட்ட 400 வழக்குகளில் முன் ஜாமீன் வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதும்(320)80சதவீதம்முன்ஜாமீன்வழங்கப் பட்டுள்ளது. (ஃபிரண்ட் லைன், 4.12.2009)
    • பெண் அரசு ஊழியரை சாதிப்பெயரை சொல்லி திட்டி, அடித்த ஓர் வழக்கில், புகார் தாரரை அவமானப்படுத்தியதுடன், அரசு நிர்வாகப்பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளை யும் திட்டினார் என்று தண்டனை வழங்கப் பட்டது. 2010 ஊசi டுது 948(ர்ஞ)

    ஆனால் என்ன நடக்கிறது..?
    • வன்கொடுமை புகார் அளித்தால் காவல் துறை உடனடியாக பதிவு செய்வதில்லை.
    • எதிர் வழக்கு..
    • கட்டப்பஞ்சாயத்து …
    • காலம் கடத்துதல்....
    • மாவட்ட விழிக்கண் குழுக்கூட்டத்தில் மேல் நடவடிக்கையைக் கைவிட முடிவு செய்வது.
    -thanks
    http://www.maattru.com/2012/01/blog-post_19.html

    ReplyDelete
  26. உங்களுடைய கட்டுரை மற்றும் Commentகளை பார்க்கும் போது எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு குரங்கு இருந்து மனசுசன் பிறந்த்துக்கு ஆதரமகாக ஓர் விளக்கம் நடிகர் கவுண்டமணி ஓர் படத்தில் செந்திலுக்கு குரங்கு ரத்தம் தருவரு ஆனால் செந்தில் சகமல் குரங்கு போல் சேட்டைகள் செய்வர். இதே போன்று டார்வீன் அவர்கள் ஆய்வு செய்தீர்கார்களா? அடுத்த ஆதரமகாக ஓர் விளக்கம் நடிகர் S.V. சேகர் ஓர் நாடகத்தில் அவருக்கு வால் வளந்து கொன்டே இருக்கும். குரங்கு இருந்து மனசுசன் வந்தான் என்று சொல்லுபவர் இதையும் பரிணாம் வளர்ச்சியில் ஆதரமகாக இவர்களையும் சேர்த்த கடமை பட்டுள்ளார்கள். இதே போன்று தான் குரங்கு இருந்து மனசுசன் வந்தான் என்று பல ஆதாரங்கள் என்னால் தரமுடியும்.

    ReplyDelete
  27. சகோ. சார்வாகன் என்னை போலவே சிந்திக்கின்ற அவர்க்கு என் வாழ்த்துக்கள். இதற்கு முன்னர் உள்ள என் Commentல் நான் குறிப்பட்டது போல ஆதிகபடியான பரிணாவில் ஆதரமகாக குரங்கு இருந்து மனசுசன் வந்தான் என்று பல ஆதாரங்கள் என்னால் தரமுடியும். ஆனால்,....

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)