Sunday, January 29, 2012

தலசீமியா நோய் ஒரு அறிமுகம்.

இப்படி ஒரு நோயை நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த நோய் அதிகம் நமக்கு அருகிலுள்ள மாலத் தீவுகளில் பரவலாக பரவியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாலத்தீவின் சுகாதார அமைச்சர் ஆமினா ஜமீல் சவுதி அரேபியாவின் 'அல்வலீத் பவுண்டேஸனிடம' உதவி கோரி கோரிக்கை வைத்தார். இது நடந்தது 2010ல். இளவரசர் வலீத் பின் தலால் அமைச்சரின் கொரிக்கையை ஏற்று தற்போது மாலத் தீவுக்கு அன்பளிப்பாக 55360 டாலர்களை அளிக்க உள்ளார். இந்த உதவி அனைத்தும் தலசீமியா நோயைக் கட்டுப்படுத்தவும் அந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்காகவும் பயன்படுத்தப்படும். மேலும் அமைச்சர் ஆமினா ஜமீல் கூறும்போது 'எனது பயணத்தின் நோக்கம் சவுதி அரேபியாவின் மருத்துவ மற்றும் சுகாதார வழிமுறைகளை எங்கள் நாட்டுக்கும் கொண்டு செல்வதற்காகவே!” என்கிறார்.

----------------------------------------------

தலசீமியா ஒரு அறிமுகம்:

தலசீமியா (பிரிட்டிஷ் ஒலிபெயர்ப்பு, "தலசேமியா ")என்பது பின்னடையும் தன்மையுள்ள மரபு சார்ந்த இரத்த நோய் ஆகும். தலசீமியாவில், மரபு குறைகள் ஹீமோகுளோபினைச் சேர்ந்த குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்க்கை வீதத்தால் ஏற்படுகிறது. ஒரு வகையான குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்கையால் இயற்கைக்கு மாறான மூலக்கூறுகள் ஏற்படுவதுக்கு வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக அனீமியா என்கிற தலசீமியாவின் தனித்தன்மை அறிகுறி உருவாகும்.

தலசீமியா என்பது சிறு வகை குளோபின்களின் சேர்கையின் அளவு குறித்த பிரச்சனை ஆகும். தலசீமியா பொதுவாக இயற்கையான குளோபின் புரதத்தின் குறைந்த உற்பத்தியை உருவாக்கும். அதுமட்டும் இல்லாமல் அது ஒழுங்கு முறை சீர்படுத்தும் மரபணுக்களால் ஏற்படலாம். ஹீமோகுளோபிநோபதீஸ் என்பது குளோபின் புரத சக்தியின் அசாதாரணமான அமைப்பைக் குறிக்கிறது. இரண்டு நிலையும் ஒன்று மற்றதன் மீது படிதல் ஆகும். இருப்பினும், சில நிலைகள் அசாதாரணமான குளோபின் புரத்தை உருவாக்கி அதன் உற்பத்தியையும் பாதிக்கும் . ஆகவே, சில தலசீமியாக்கள் ஹீமோகுளோபிநோபதீஸ் ஆகும், பல ஆகாது. இரண்டில் ஏதேனுமொன்று அல்லது இரண்டு நிலைகளும் அனீமியாவை ஏற்படுத்தும்.

இந்நோய் குறிப்பாக மத்திய தரைக்கடலில் வசிக்கும் மக்களின் இடையே காணப்படும். அத்துடன் இதுவே தலசீமியா என்ற பெயரை வைக்க ஒரு காரணம் ஆகும். கிரிக் மொழியில் தலசா(θάλασσα) என்பது கடல் என்றும் மற்றும் ஹீமா(αἷμα) என்பது இரத்தம் என்றும் பொருள் ஆகும். ஐரோப்பாவில், அதிகளவில் இந்நோய் கிரீஸ் மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு இத்தாலி மற்றும் போ என்ற பள்ளத்தாக்கில் காணப்படும். பெரும்பான்மையான மத்தியத் தரைக்கடல் தீவுகளில் (பலீரிக்ஸ் தவிர) சிசிலி, சர்டினியா, மாலதா, கோர்சிகா, சிப்ரஸ், மற்றும் கிரேட்பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. மத்திய தரைக்கடலின் மற்ற பகுதியை சேர்ந்த மக்கள், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்களில் தலசீமியா அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த மக்களிலும் இந்நோய் காணப்படுகிறது. மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து அதிக தொலைவிலுள்ள தெற்கு ஆசியமக்களை இந்நோய் அதிகளவில் தாக்கி, உலகிலேயே மாலத்தீவுகள் என்ற பகுதியே இந்நோயால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதி என்ற பெயரை வாங்கியது.

அப்பகுதி மக்களிடையே மலேரியா அதிகளவில் காணப்படும். எனினும் தலசீமியாவால் மலேரியா வின் தாக்கம் அப்பகுதி மக்களில் குறைவாகவே காணப்பட்டது. இதுவே தேர்ந்தேடுகின்ற நிலைத்து இருத்தலுக்கு சாதகமாகிவிட்டது. இத்துடன் பல தலசீமியா மக்களில் ஹீமோகுளோபினை தாக்கக் கூடிய பரம்பரை நோய்கள் மற்றும் சில செல் நோய்களும் காணப்பட்டது.

பொதுவாக, தலசீமியா ஈரபதம் தட்ப வெட்பநிலைக் கொண்ட இடங்களில் தென்படும். இந்நோய் எல்லாவித மக்களையும் பாதிக்கும்.

தலசீமியா குறிப்பாக அரபு நாடு, ஆசிய நாடு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் வசிக்கும் மக்களைச் சார்ந்த நோய் ஆகும். மாலத்தீவுகள் தான் உலகிலேயே அதிகளவில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிக பட்சமாக 18% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கணக்கிட்ட நிகழ்வுகள் 16% சிப்ரசிலும், 1% தாய்லாந்திலும், 3-8% பங்களாதேஷிலும்,சீனாவிலும், இந்தியாவிலும், மலேசியாவிலும் மற்றும் பாகிஸ்தானிலும் காணப்படுகிறது. இது போக லத்தின் அமெரிக்கமற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ( கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், மற்றும் பல) இந்நோயின் நிகழ்வுகள் உண்டு. மிகக் குறைந்த ஆய்வரிக்கை வடக்கு ஐரோப்பாவிலும்(0.1%) அப்ரீகாவிலும் (0.9%) மற்றும் மிக அதிகளவில் ஆய்வரிக்கை வட அப்ரிக்காவிலும் தென்பட்டது.

பழங்கால எகிப்தியர்களும் தளசீமியவால் அவதிப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக 40% மம்மீக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நாட்களில், குறிப்பாக தெற்கு எகிப்து அதாவது பீஜா, ஹடெண்டோவா, சைதி வாழும் மக்களிடையேயும், நாயில் டெல்டா, சிகப்பு கடல் மலை பகுதி மற்றும் சீவான் பகுதி மக்களிலும் இந்நோய் காணப்படுகிறது.

உலகில் ஏறத்தாள 6-8 கோடி மக்கள் பீட்டா தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிக சரியான மதிப்பீடு அல்ல. பெரும்பாலான பகுதிகளில் இந்நோயின் விழிப்புணர்வு இல்லை. மத்திய கிழக்கு மற்றும் ஆசியா போன்ற நாடுகளில் இந்நோய்களின் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் இல்லாததால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் குறைந்த அளவில் மரபு பரிசோதனை மற்றும் ஆலோசனை செய்வதால் இந்நாடுகளில் அதிகளவில் தலசீமியா காணப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் தலசீமியா ஒரு கவலைகரமாக கூறப்படும் விஷயம் ஆகும். உலகின் இரத்த வங்கி மற்றும் உடல் நலனை பாதிக்கும் பிரச்சனை ஆகிவிடும். மதிப்பிடுகையில் ஐக்கிய நாடுகளில் ஏறத்தாள 1,000 மக்கள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கணக்கிலில்லாமல் ஏராலமானோர் இருக்கின்றனர். தலசீமியா நோயைப் பற்றி குறைந்த விழிப்புணர்வு இருப்பதால் இந்நாடுகளில் சிகிச்சை குறைபாடுகளுக்கும் குணங்குறி மூலம் நோயைக் கண்டறிவதும் கடினமாகும்.
மற்ற மரபணு நோயை ஒப்பிடும் போது, மரபணு ஆலோசனையே சிபாரிசு செய்யப்படுகின்றது.

சிகிச்சைமுறைகள்

தலசீமியா மைனர் கொண்ட நோயாளிகளுக்கு பொதுவாக தனிமுறை சிகிச்சைகள் தேவைப்படாது. ஆனால் தலசீமியா மேஜர் கொண்ட நோயாளிகளுக்கு நிடீத்த காலமான இரத்த ஏற்றுதல் பிணி நீக்கல், இரும்பு இடுக்கு இணைப்பு ,மண்ணீரல் அகற்றம் மற்றும் அல்லோஜெனிக் ஹீமொடோஃபாய்டிக் மாற்று போன்ற சிகிச்சைகள் தேவைப்படும்.

-நன்றி விக்கிபீடியா

-----------------------------------------------

இரத்த அழிவுச் சோகைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

மேஜர் இரத்த அழிவுச் சோகையுள்ள பிள்ளைகள் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்தில் பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் காட்டலாம். இரத்த சோகையுள்ள பிள்ளைகளுக்கும் இதே அறிகுறிகள் இருக்கும்:
• வெளிறிய தோல்
• சோர்வு
• பலவீனம்
• விரைவான சுவாசம்

வேறு அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தக்கூடும்:

• எரிச்சலடைதல்
• தோல் மஞ்சள் நிறமாக நிறமாற்றமடைதல் (மஞ்சட்காமாலை)
• மந்தமான வளர்ச்சி
• அடிவயிறு வெளித்தள்ளிக்கொண்டிருத்தல்
• முக எலும்பு உருக்குலைதல்
• அடர்நிற சிறுநீர்

காரணங்கள்

இரத்த ஒழுங்கின்மை என்பது ஹிமோகுளோபின் உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்தும் மரபணுவிலுள்ள குறைபாட்டினால் ஏற்படுகிறது. குறைபாடுள்ள மரபணு வழக்கமான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதில் இயலாமையை ஏற்படுத்துகிறது. பிள்ளைகள் இந்த மரபணுவை பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரிடமுமிருந்து சுதந்தரித்துக்கொள்கின்றனர். ஒரு பிள்ளை தவறான மரபணுவை பெற்றோர் இருவரிடமுமிருந்தும் சுதந்தரித்துக்கொண்டால், அந்தப் பிள்ளைக்கு மேஜர் இரத்த அழிவுச் சோகை ஏற்படும். தவறான மரபணு ஒரு பெற்றோர் மூலம் மாத்திரம் கடத்தப்பட்டால் பிள்ளைக்கு மைனர் இரத்த அழிவுச் சோகை ஏற்படும். பின்பு, அந்தப் பிள்ளை குறைபாடுள்ள மரபணுவைக் காவிச் செல்பவனாக இருப்பான்.

இரத்த அழிவுச் சோகையுள்ள உங்கள் பிள்ளைக்கு ஒரு மருத்துவர் செய்யக்கூடியவை
நீங்கள் அவதானித்த அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை உங்கள் பிள்ளையின் மருத்துவர் பரிசீலனை செய்வார். இரத்தப் பரிசோதனைகள் மூலம் தான் நோயைக் கண்டறிந்து உறுதிசெய்யமுடியும். மைனர் இரத்த அழிவுச் சோகைக்கு சிகிச்சை தேவையில்லை. மேஜர் இரத்த அழிவுச் சோகைக்கு மாதாந்தர இரத்தமேற்றுதல் மூலமாகச் சிகிச்சை செய்யப்படும். திரும்பத் திரும்ப இரத்தமேற்றும்போது உங்கள் பிள்ளையின் உடலில் இரும்புச் சத்து, அளவுக்கதிகமாகிவிடும். இது இதயம் அல்லது ஈரலில் சேதத்தை ஏற்படுத்தும். மேலதிகமான இரும்புச் சத்தை மருந்துகளின் மூலமாக அகற்றுவதன் மூலம் இந்த வகையான சேதத்தைத் தடுக்கலாம்.

தடுத்தல்

எந்த வகை இரத்த அழிவுச் சோகையையுடையவர்களும் மரபியல் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். பிரசவத்துக்கு முன்னான பரிசோதனைகளும் செய்யப்படும்.

சிக்கல்கள்
இந்த வகையான இரத்த ஒழுங்கின்மையுடைய ஒரு பிள்ளைக்குப் பித்தப்பைக் கற்கள் இருக்கலாம். வேறு பிள்ளைகளுக்கு மந்தமான வளர்ச்சி இருக்கலாம். இந்த ஒழுங்கின்மைக்குச் சிகிச்சையளிக்கப்படாது விடப்படும்போது, பிள்ளைகளுக்கு இதயச் செயலிழப்பு மற்றும் தொற்றுநோய்களால் மரணம் ஏற்படலாம். சிகிச்சையளிக்கப்படும்போது, மிகப்பெரிய சிக்கல்கள் அளவுக்கதிகமான இரும்புச்சத்துடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன.

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

உங்கள் பிள்ளை இரத்த சோகைக்கான அறிகுறிகளைக் காண்பித்தால், முடிந்தளவு விரைவாக உங்கள் பிள்ளையின் மருத்துவரைச் சந்திக்கவும். உங்களுக்கு இரத்த அழிவுச் சோகைக்கான ஒரு குடும்ப வரலாறு இருந்தால், நீங்கள் ஒரு நோய்க் காவியா என்பதை அறிவதற்காக பரிசோதிக்கப்படவேண்டும்.

முக்கிய குறிப்புகள்

• இரத்த அழிவுச் சோகை என்பது ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்தும் மரபணுவிலுள்ள ஒரு குறைபாட்டினால் ஏற்படும் ஒரு இரத்த ஒழுங்கின்மை.
• இது மத்தியதரை, ஆபிரிக்கா, மற்றும் ஆசியா நாட்டின் வம்சாவளியைச் சேர்ந்த பிள்ளைகளை மிகவும் பொதுவாகப் பாதிக்கும், மரபுவழியாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்தச் சோகையின் ஒரு வகை ஆகும்.
• மேஜர் இரத்த அழிவுச் சோகையுள்ள பிள்ளைகள் வெளிறியவர்களாகவும் விரைவான சுவாசமுடையவர்களாகவும் காணப்படுவார்கள்.
• மாதாந்தர இரத்தமேற்றுதல்கள் மூலம் இரத்த அழிவுச் சோகைக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

-http://www.aboutkidshealth.ca/En/HealthAZ/Multilingual/TA/Pages/Thalassemia.aspx

21 comments:

  1. இந்நோயைக் குறித்த புள்ளிவிவரங்களை விட, இதன் அறிகுறிகள் என்னென்ன, தாக்கும் காரணங்கள், தீர்வுகள், பரிசோதனை முறைகள், சிகிச்சைகள் பற்றிய விரிவான விளக்கமாக இப்பதிவு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    அரபு நாடுகளில், திருமணத்திற்குமுன் இரத்தப் பரிசோதனை கட்டாயம் என்றும், அதிலே இந்த தலசீமியா பரிசோதனையும் அடங்கும் என்றும் கேள்விப்பட்டேன். உண்மையா? (ச்சே.. சே.. இந்த நல்ல விஷயம்லாம் இந்தியாவுல இல்லையேன்னு நான் வருத்தப்படவேஏஏஏஏஏஏயில்லைங்க...)

    ReplyDelete
  2. சகோ ஹூசைனம்மா!

    //இந்நோயைக் குறித்த புள்ளிவிவரங்களை விட, இதன் அறிகுறிகள் என்னென்ன, தாக்கும் காரணங்கள், தீர்வுகள், பரிசோதனை முறைகள், சிகிச்சைகள் பற்றிய விரிவான விளக்கமாக இப்பதிவு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.//

    உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு உபயோகமாக இருக்குமே என்று புதிதாக பிற்சேர்க்கையாக சில மருத்துவ குறிப்புகளை சேர்த்துள்ளேன்.

    //அரபு நாடுகளில், திருமணத்திற்குமுன் இரத்தப் பரிசோதனை கட்டாயம் என்றும், அதிலே இந்த தலசீமியா பரிசோதனையும் அடங்கும் என்றும் கேள்விப்பட்டேன். உண்மையா? (ச்சே.. சே.. இந்த நல்ல விஷயம்லாம் இந்தியாவுல இல்லையேன்னு நான் வருத்தப்படவேஏஏஏஏஏஏயில்லைங்க...)//

    ஆம்! இங்கு திருமணத்துக்கு முன்பு இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்ககிறார்கள். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் முடிப்பதையும் ஓரளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். நமது நாட்டில் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் பரவலாக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  3. மிகவும் நன்றி. மேலதிகத் தகவல்கள் நிச்சயம் பலருக்கும் விழிப்புணர்வு தரும்!! :-)))

    //ஒரு நோய்க் காவி//
    ”நோய்க் காவி” - முதன்முதாலக் இவ்வார்த்தையை அறிகிறேன். “அடுத்த தலைமுறைக்கு நோயைக் கடத்துபவர்” அதாவது "Carrier" என்ற அர்த்தம் வருமென்று ஊகிக்கிறேன், சரியா?

    ReplyDelete
  4. //”நோய்க் காவி” - முதன்முதாலக் இவ்வார்த்தையை அறிகிறேன். “அடுத்த தலைமுறைக்கு நோயைக் கடத்துபவர்” அதாவது "Carrier" என்ற அர்த்தம் வருமென்று ஊகிக்கிறேன், சரியா?//

    ஆம் நீங்கள் சொல்வது சரிதான். கட்டுரையை மொழி பெயர்த்தவர் இலங்கை தமிழர் ஆதலால் சில சொற்கள் வித்தியாசமாக வந்திருக்கும்.

    ReplyDelete
  5. //இந்நோயைக் குறித்த புள்ளிவிவரங்களை விட, இதன் அறிகுறிகள் என்னென்ன, தாக்கும் காரணங்கள், தீர்வுகள், பரிசோதனை முறைகள், சிகிச்சைகள் பற்றிய விரிவான விளக்கமாக இப்பதிவு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.//

    strongly agreed !

    ReplyDelete
  6. சலாம் சகோ...பயனுள்ள தகவல்கள்...நன்றி

    ReplyDelete
  7. சலாம் சகோ.சுவனப்பிரியன்,
    நாம் அவசியம் அறியவேண்டிய பல தகவல்களை திரட்டித்தந்து பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

    இந்த பதிவை இன்னும் மெருகூட்டி முழுமையாக்கும்படி கேட்டுக்கொண்ட சகோ.ஹுசைனம்மாவுக்கும், மிகவும் நன்றி.

    அதன்படி சேர்க்கப்பட்ட பிற்சேர்க்கை தகவல்கள் மேலும் அருமை..!

    //மேலும் அமைச்சர் ஆமினா ஜமீல் கூறும்போது 'எனது பயணத்தின் நோக்கம் சவுதி அரேபியாவின் மருத்துவ மற்றும் சுகாதார வழிமுறைகளை எங்கள் நாட்டுக்கும் கொண்டு செல்வதற்காகவே!” என்கிறார்.//

    //(ச்சே.. சே.. இந்த நல்ல விஷயம்லாம் இந்தியாவுல இல்லையேன்னு நான் வருத்தப்படவேஏஏஏஏஏஏயில்லைங்க...)//

    ---இப்படி எல்லாம் சொல்றதுக்கு பதிலா...

    "வழக்கமா எதிர்பதிவு போடுபவர்கள் இதுக்கு எதிர்பதிவு போடாம போயிடாதீங்க"

    என்று என்னை மாதிரி நேரடியாவே சொல்லி இருக்கலாம்..! :-))

    ReplyDelete
  8. சலாம் சகோ ஹாஜா மைதீன்!

    //சலாம் சகோ...பயனுள்ள தகவல்கள்...நன்றி//

    வருகைககும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. சலாம் சகோ ஆஷிக்!

    //"வழக்கமா எதிர்பதிவு போடுபவர்கள் இதுக்கு எதிர்பதிவு போடாம போயிடாதீங்க"//

    ஹி..ஹி...ஹி... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  11. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    நான் இது வரை கேள்விப்படாத நோய் இது. பகிர்விற்கு நன்றி.

    என்ன ஒரு பிரச்சனை.... நீங்க சொன்ன சோம்பல் என்கிட்டே நிறைய இருக்கு, அதனால நமக்கும் இது வந்திருக்கோன்னு கொஞ்சம் இதயம் கூட துடிக்கிது. சோகையோடு இப்ப இதய துடிப்பும் அதிகமாயிருச்சா. இப்ப இன்னொரு அறிகுறி சேர்ந்திருச்சு. அதனால பயமும் அதிகம் ஆயிடுச்சு. ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  12. சலாம் சகோ சிராஜ்!

    //நான் இது வரை கேள்விப்படாத நோய் இது. பகிர்விற்கு நன்றி.

    என்ன ஒரு பிரச்சனை.... நீங்க சொன்ன சோம்பல் என்கிட்டே நிறைய இருக்கு, அதனால நமக்கும் இது வந்திருக்கோன்னு கொஞ்சம் இதயம் கூட துடிக்கிது. சோகையோடு இப்ப இதய துடிப்பும் அதிகமாயிருச்சா. இப்ப இன்னொரு அறிகுறி சேர்ந்திருச்சு. அதனால பயமும் அதிகம் ஆயிடுச்சு. ஹி..ஹி..ஹி//

    வருகைககும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  13. சலாம் சகோ ஆஷிக்!

    //பயனுள்ள தகவல்களுக்கு நன்றி...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
    எனது பெயர் பயாஸ். நான் இலங்கையைப் சேர்ந்தவன். இந்த தலசீமியா நோயினால் 22 வருடங்களாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கின்றேன். என்னுடன் எனது தம்பி ஒருவரும் இந் நோயினால் பாதிக்கப்பட்டு அவரும் 19 வருடங்களாக இந் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நோயினால் நாங்கள் பாரிய துயரங்களைப் அனுபவித்துள்ளோம். இந்த நோய் எனது ஒரு எதிரிக்குக் கூட வந்துவிடக் கூடாது என நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இந்த நோயினால் மீண்டு சாதாரண மனிதர்களைப் போல வாழ்வதற்கு நான் எனது உள்ளம் நிறைந்த ஆசையினை உடையவனாக இருக்கிறேன். அதற்காக தற்போது உலகில் 'ரத்த திசு கொடை' மூலமான சிகிச்சை முறை ஒன்று உள்ளது. அந்த சிகிச்சையை பெற்றுக்கொள்வதாயின் சுமார் 55 இலட்சம் தேவைப்படுகிறது. எனக்கும் தம்பிக்கும் சுமார் 1கோடியே 10 இலட்சம் தேவைப்படுகிறது. உங்களாளோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களாளோ எங்களுக்கு உயிர் வாழ உதவி செய்ய முடியும் என்று நினைத்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்கள் சகோதரர்களுக்கு வாழ்வளியுங்கள். உங்களது வாழ்க்கையில் இறைவன் ஒளியேற்றுவான்.
    தொடர்புகளுக்கு:- 078 681 70 82
    Whatsaap:- 0786817082
    FB:- Mohamad Fayas
    Gmail:- Fayas138077@gmail.com
    Account no:- 0110244768001 (FIRDHOUS MOHAMED FAYAS)

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

  17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

  18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

  19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

  20. காவி ஒருவரின் உடல் நலம் பற்றியும் விரிவாக கூறுங்கள்

    ReplyDelete
  21. காவி ஒருவரின் உடல் நலம் பற்றியும் விரிவாக கூறுங்கள்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)