Saturday, February 11, 2012

என் மேல் ஏன் இந்த கொலை வெறி!



இந்த வாரம் வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் எனது ரூமில் ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது வேலை: வேலை நேரம் முடிந்து சினிமா சாப்பாடு மற்ற கேளிக்கைகள் என்ற ரீதியில் செயல்படும் பெரும்பான்மையோரை மாதம் ஒரு முறை இது போன்று அழைத்து அவர்களுக்கு வாழ்வின் நோக்கத்தை புரிய வைப்போம் என்று முடிவெடுத்தோம். இது போல் முன்பே பல சகோதரர்கள் சிறப்பாக மார்க்க பணி செய்து வருகின்றனர். அந்த வகையில் சகோதரர் இக்பால் அவர்கள் 'தக்வா' அதாவது 'இறை அச்சம்' என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அழகிய முறையில் சொற்பொழிவு ஆற்றினார். முதலில் தக்வா என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம்.

தக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் "இறையச்சம் - பயபக்தி" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவன் நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.

இந்த தலைப்பில் சகோதரர் ஒரு நபி மொழியையும் மேற் கோளாக காட்டினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.

அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். விடியற்காலை நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!

மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.


மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!"
என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.

ஆதாரம்: புஹாரி: 2272.
Volume :2 Book :37

ஒரு மனிதனுக்கு இறை அச்சம் இருந்தால் அது எந்த அளவு சமூகத்தில் அவனை நேர்மையாளனாக நடக்க வைக்கும் என்பதற்கு மேற்சொன்ன நபிமொழி சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இந்த கூட்டத்தை சகோதரர் நெல்லிக் குப்பம் அக்பர் அவர்கள் துவக்கி வைத்தார். கூட்டத்தின் முடிவில் அடுத்த அமர்வில் இன்னும் நிறைய சகோதரர்களை அழைத்து வருவது என்றும் மாற்று மத நண்பர்களுக்கும் அழைப்பு விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மதுரை காதர், விழுப்புரம் அன்வர் போன்ற சகோதரர்களும் வந்திருந்தனர். அடுத்த கூட்டத்தை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என்ற முடிவில் இறை பிரார்த்தனையோடு கூட்டம் நிறைவுற்றது.

இனி தலைப்புக்கு வருவோம்! எனது ரூமில் கூட்டம் நடந்திருக்க என்னை ஃபோகஸ் செய்யாமல் பின்புறமாக என்னை காண்பித்த போட்டோ கிராபருக்கு என்மேல் கொலைவெறிதானே! :-)

-------------------------------------------------------------

உடன் இந்த பதிவை பார்த்து விட்டு 'ஆஹா...சுவனப்பிரியனுக்கு சவுதி அரசு பணம் தருகிறது.' என்று யாரும் உள் குத்து பதிவு இட வெண்டாம். ஏனெனில் ஒரு பதிவர் எனக்கு சவுதி அரசு பணம் தருவதாகவும் அதனால்தான் சவுதி அரேபியாவை புகழந்து பதிவு எழுதுவதாகவும் பதிவிட்டிருக்கிறார். தற்போது கிறித்தவ மதத்தை அவர் பாணியில் பரப்ப போகிறாராம். நன்றாக பரப்பட்டும். அடுத்து எனது பதிவு மகுடத்தை எட்ட பல போலி ஐடிக்களை உருவாக்கி வைத்திருப்பதாகவும் கதை அளந்திருக்கிறார். பிளாக்கர் ஐடி ஒன்றும் ஜிமெயில் ஐடி ஒன்று இதைத்தவிர வேறு எந்த ஐடியும் எனக்கு கிடையாது. பதிவை விரும்புபவர்கள் விரும்பி அளிக்கும் ஓட்டைப் பார்த்து இப்படி பொதுவில் வயிற்றெறிச்சலை கொட்டியிருக்க வேண்டாம். பொறாமை என்பது என்ன என்பதை அவரது பதிவிலேயே நேரிடையாக காணக்கிடைத்தது. அவர் சந்தோஷப்படுவார் என்பதற்காககத்தான் 'கழிவறை' பதிவு ஒன்றையும் இட்டேன். அதையும் மகுடம் ஏறட்டும் என்று ஆசைப்பட்டது அவர்தான். அதற்கு முதல் ஓட்டையும் அளித்தது அவர்தான். :-)

மேலும் எனது தேவைக்கு எற்ற சம்பளமும் கௌரமான வேலையும் கிடைத்திருக்கும் பொது சவுதி அரசின் பணத்தை எதிர்பார்த்து நான் இல்லை. ஒருக்கால் எனக்கு சவுதி அரசு பண உதவி கொடுத்தால் அதை வாங்கிக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அதை பொதுவிலும் அறிவிப்பேன். ஏனெனில் இப்படி பணம் வாங்குவது இஸ்லாமிய அடிப்படையில் தவறும் இல்லை. இந்திய அரசின் சட்டத்தின்படி தவறாகவும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட பதிவர் சவுதி அரசோடு தொடர்பு கொண்டு பண உதவிக்கு ஏற்பாடு செய்யவும்.

-------------------------------------------------------------

அடுத்து ஐடியா மணியை பற்றி தமிழ் மணத்துக்கு சிலர் புகார் கொடுத்ததாக அவரது பதிவில் குறைபட்டுக் கொண்டார். அவருக்கு எதிரான கருத்துக்களுக்காக பதிவுதான் இட்டேன். தமிழ் மணத்துக்கு புகார் செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

------------------------------------------------------------

அடுத்து சகோ நிரூபனுக்கு ஒரு விளக்கம்!


//ஒரு நூல் இப்படிக் கூறுகிறது எனக் கூறி,
ஒரு நூலை ஆதாரம் காட்டி, சொல்லுவது போல, இந்துக்கள், கிறித்துவர்கள்
தமது மத நூலை ஆதாரப்படுத்தி இஸ்லாமியச் சொந்தங்களுக்கு கருத்துரைகளைச் சொன்னால் ஏற்க முடியுமா?
இதற்குச் சுவனப்பிரியன் என்ன சொல்லவருகின்றார்?//

இந்த கேள்விக்கு சகோ ஆமினா அழகாக பதில் கொடுத்துள்ளார்.

//இந்த பதிவில் மதம் என்ற ஒன்றை முன்னிலைபடுத்துவதே தவறான விஷயம் நிரூ. சுவனப்பிரியன் சொன்னதில் கருத்து திணிப்புன்னா எதை சொல்றீங்க?

என் இஸ்லாம் இப்படி தான் சொல்லுது. நீயும் கட்டாயம் செய் என சொன்னாரா????

ஈழத்தில் இத்தகைய பிரச்சனை நடக்கும் போது ஆபாசத்தை தவிருங்கள் என தானே சொன்னார்? இங்கே இஸ்லாம் எங்கே வந்தது?//

இனி நான் நிரூபனுக்கு அளிக்கும் விளக்கம்!

மேலும் ஆபாசம், இரட்டை அர்த்த ஆபாச எழுத்துக்கள் என்பதை இஸ்லாம் மட்டும் கண்டிக்கவில்லை. இந்து கிறித்தவ மார்க்கங்களும் கண்டிக்கின்றன. கள், விபசாரம்,திருட்டு,பொய், கொலை, போன்ற பெரும் பாவங்கள் அனைத்தையும் அனைத்து மதங்களுமே கண்டிக்கின்றன. எனவே தான் அந்த பதிவில் திருக்குறளையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டேன். பைபிள் வசனம் அந்த நேரத்தில் கிடைக்காததால் அதையும் சேர்க்கவில்லை.

ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்: முருகனையோ பிள்ளையாரையோ வணங்காதீர்கள் என்று உங்களை பார்த்து நான் கட்டாயப் படுததினால்தான் மேற்கண்ட குற்றச் சாட்டை என்மேல் நீங்கள் வைக்க முடியும்.

56 comments:

  1. Assalamu alikum bro!
    Good post keep it up!

    ReplyDelete
  2. ஐயா சுவனப்பிரியன்,

    உங்கள் எழுத்தை பார்த்தவுடன் i really thought you would be a very very very young person.
    உங்கள் புகைப்படத்தை பின்புறமாக பார்த்தவுடன் தெரிகிறது நீங்கள் என்னைவிட மூத்தவர் சார் என்று.

    சார் என்பது only respect but no worship.

    இதற்கு ஆதாராம் இந்தச் செயல்தான்- கருணாநிதியை பார்க்கச் செல்லும் போது அவர் எழுந்து நின்றால், கருணாநிதி நம்மை பார்க்க வரும்போது நாமும் எழுந்து நிற்போம் (பாவம் அவர் எழுந்திருக்க முடியாது என்பது வேறு விஷயம்).
    குரான் ஹதீஸ்களில் தேடியபோது வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சரி கருணாநிதியே ஆதாராமாக இருந்துவிட்டு போகட்டும்.

    சார், உங்கள் தாவா பணிக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் சார். நல்ல தக்வா மலரட்டும்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்,

    சென்ற பதிவிலேயே சொல்லணும் என்று இருந்தேன். தற்போது நிரூபன் பெயரை பார்த்தவுடன் நினைவுக்கு வந்துவிட்டது.

    //உங்கள் பெயரையோ ஐடியா மணியின் பெயரையோ பதிவில் குறிப்பிடாதபோது குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்க அது நீங்கள்தான் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்து கொண்டீர்கள்?///

    இது நீங்கள் சொன்னது. இது போன்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆபாசத்தை எடுத்துக்கூற நீங்கள் காட்டிய பொறுப்புணர்வு, மேல் கூறிய கருத்தில் இல்லை சகோதரர். நீங்கள் நேரடியாகவே கூறி இருக்கலாம்.

    வஸ்ஸலாம் ...

    ReplyDelete
  4. சகோ நரேன்!

    //உங்கள் எழுத்தை பார்த்தவுடன் i really thought you would be a very very very young person.
    உங்கள் புகைப்படத்தை பின்புறமாக பார்த்தவுடன் தெரிகிறது நீங்கள் என்னைவிட மூத்தவர் சார் என்று.//

    அப்படியா! அவ்வளவு இளமையாகவா எனது எழுத்துக்கள் இருந்தது? அப்படி எல்லாம் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆச்சரியம். எனக்கு தற்போது 47 வயதாகிறது.

    //சார் என்பது only respect but no worship.//

    சரியான நிலைப்பாடு.

    //சார், உங்கள் தாவா பணிக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் சார். நல்ல தக்வா மலரட்டும்.//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. //Assalamu alikum bro!
    Good post keep it up!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஜாபர்கான்!

    ReplyDelete
  6. சலாம்! சகோ ஆஷிக்!

    //இது நீங்கள் சொன்னது. இது போன்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆபாசத்தை எடுத்துக்கூற நீங்கள் காட்டிய பொறுப்புணர்வு, மேல் கூறிய கருத்தில் இல்லை சகோதரர். நீங்கள் நேரடியாகவே கூறி இருக்கலாம்.//

    தலைப்பு மட்டும் தான் ஆபாசம். அதுவும் இலங்கை தமிழில் அர்த்தப்படுத்தினால் அதில் ஆபாசமே இல்லை என்பவரிடம் வெறு எதைச் சொல்ல முடியும். அந்த பதிவில் 20 க்கு மேற்பட்டு வந்த பின்னூட்டங்கள் எல்லாம் எனது கருத்தை ஆதரிக்கவும் நிரூபனின் கருத்தை எதிர்க்கவுமே செய்தன. எனவெ தான் முடிவை படிப்பவர்களின் பொறுப்புக்கே விட்டு விட்டேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    ReplyDelete
  7. திரு வேதம் கோபால்!

    //அல்லாவை தவிற வேறு இறைவன் இல்லை என்பதும் மற்ற மதத்தவர்கள் வணங்கும் கடவுள்கள் பொய் என்பதற்கும் வித்தியாசம் இல்லை. இது நிச்சயம் மாநில மொழிகளில் தினம் ஐந்துமுறையும் ஒவ்வொருமுறையும் நான்கு ஐந்துதடவை அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை என்று ஒலிபெருக்கியில் ஓதினால் நிச்சயம் மற்ற மதத்தவர் வெறுப்பை சம்பாதிப்பதோடு இது மத நல்லிணக்கத்தையும் கெடுக்கும். இது இந்திய சட்டபடி குற்றமே ஆகும்.//

    'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலர் மந்திரத்தை என்ன செய்வீர்கள்?

    ReplyDelete
  8. அன்பு நண்பர் சுவனப்பிரியனுக்கு,

    இப் பதிவினைப் படித்தேன். தலைப்பில் ருவிட்ஸ் வைச்சு எழுதியிருக்கிறீங்க.

    போட்டோ எடுத்தவனை இப்பவும் தேடிக்கிட்டே இருக்கிறீங்களா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. அனானி கமெண்டுகளை அனுமதிக்க வேணாம் நண்பா! அப்போது தான் பின்னூட்டம் எழுதுவோருக்கு சங்கடம் இருக்காது!

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. நண்பா, நேற்றைய என் பதிவில் தெளிவான விளக்கம் சொல்லியிருக்கிறேன்,

    முகஞ் சுழிக்கும் படங்கள், ஆபாசம் தொடர்பான விடயங்களை நான் எழுதுவதில்லை எனச் சொல்லி பல காலமாச்சு! என்னைக் கெடுத்த பெண்கள் பதிவு தொடர்பில் தாங்கள் ஆபாசப் பதிவு எழுதியிருப்பதாக கூறியிருந்தீங்க.

    என்னைக் கெடுத்த என்பதில் வரும் கெடுத்த எனும் சொல்
    ஈழத்தில் ஆபாசம் இன்றியும்,
    தமிழகத்தில் ஆபாசம் எனும் கோணத்திலும் நோக்கப்படுவதாகவும். இது போல இன்னும் சில சொற்கள் தமிழகத்தில் இதே நிலையில் நோக்கப்படுவதாகவும் சொல்லியிருக்கிறேன்!

    நான் மறந்து தொலைத்து பல மாதங்களான பதிவுகளை மறுபடியும் எழுத தூண்டாதீங்க! ஏன் சொல்றேன்னா இந்த மாசம், போன மாசம் எழுதிய பதிவுகளில் அப்படி எவையும் எழுதலை! தமிழ்மண நட்சத்திர வாரமும், வலையுலகில் ஒரு வருடமும் பதிவில் கூட
    எல்லோரும் படிக்கும் படி பதிவு அமையும் என்று சொன்னேன்!

    என்னைக் கெடுத்த பெண்கள் பதிவு சகோதரிகளால் விரும்பிப் படிக்கப்படுவதால் ஜாலியாக கல்லூரி, பாடசாலை கால நண்பிகளைப் பத்தி எழுதுகிறேன்! சம நேரத்தில் ஈழம் பத்தியும் எழுதுகிறேன்! ஆனால் அந்தப் பதிவில் நீங்கள் நினைக்கும் ஆபாசம் சிறு துளியும் இல்லை! போட்டோ பத்தி சொன்னீங்க! நடிகை நயந்தாரா என்றோர் பதிவி என் சைட் பாரில் பல மாதங்களுக்கு முன்னர் எழுதி பிரபலமாகி இருக்கிறது. அதற்கு போட்ட நயந்தாரா ஸ்டில் போல ஓவர் கவர்ச்சி ஸ்டில்லை வலையில் போட்டு பலமாதங்களாகி விட்டது!

    ஸோ...தாங்கள் கூறிய கருத்திற்கு தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறேன்!
    புரிந்து கொள்ளுவீங்க என நினைக்கிறேன்!

    சும்மா சிவனே என்று இருக்கும் என்னை நாளைக்கு ஆறேழு ஆபாசம் எழுதுவதாகவும், ஈழ மக்கள் பத்தி கரிசனை இன்றி இருப்பதாகவும் சொன்னீங்க! அதற்கான விவாதம் தொடங்கி அது எங்கோ ஓர் திசையில் போய் முடிந்திருக்கிறது! தாங்கள் இங்கே எனக்காக குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் தொடர்பில் என்னோட தெளிவான கருத்துக்களை
    என் பதிவில் தங்களின் பின்னூட்டத்தின் கீழ் சொல்லியிருக்கிறேன்!
    மறுபடியும், மறுபடியும் ஒரே விடயத்தினைப் பேசுவதால் பலன் இல்லை!

    இப்போது மொழி அடிப்படையில் உங்களுக்கு ஆபாசமாக தெரிந்த ஓர் விடயம் பத்தி தெளிவினை கொடுத்திருக்கிறேன்!

    ப்ளீஸ்...இந்தப் பின்னூட்டங்களுக்குள் நின்று,
    பின்னூட்டத்திற்கான பதிலை கொடுங்கள்! மேலும், மேலும் ஒரே விடயத்தினை கீறிக் கொண்டிருக்க எனக்கும் டைம் இல்லை! அது உங்களுக்கும் அழகில்லை!

    ReplyDelete
  12. Anonymous8:01 AM

    சுவன பிரியன் அவர்களே!
    உங்கள் கருத்து இறையச்சம் கொண்ட முஸ்லிம்கள் யாருக்காவது நல்லவர்களாக்வே இருப்பார்கள்[நல்ல முஸ்லிம்கள்].இதர முஸ்லிமகள்[கெட்ட முஸ்லிம்கள்] எந்த கேவலமான் குற்றத்தையும் செய்வார்கள்.
    இறைசயச்சம் கொண்ட தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ,இஸ்லாமியர்களில் எத்தனை சதவீதம்?
    இவர்களுக்கு சவுதி ஆடை அணியும் படி செய்துவிட்டால் அனைவரும் யோக்கியன் வர்ராருன்னு உஷாராக மதிப்புக் கொடுப்பார்கள் அல்லவா ?

    ஆகவே இதற்கு ஆவண செய்யவும் ஏனெனில் கெட்ட முஸ்லிம்கள் கேவல்மான் செயல்களை செய்வதால் உடனே அனைவரயும் பிடித்து ஜெயிலில் போட்டு விட்டால் இந்திய நாட்டில் 99% குற்றங்கள் குறைந்துவிடும்.
    சும்மா பேச்சு பேசுகிறீர்களே தவிர ஒன்றும் செய்வதில்லை.பாருங்கள் இறையச்சம் இல்லாத தீய முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்த கெட்ட முஸ்லிம் பையன் ஒரு ஆசிரியையே கொன்று விட்டான்.
    முதலில் அவன் நல்ல முஸ்லிமா கெட்ட முஸ்லிமா என கூறவும்.பிறகு கெட்ட முஸ்லிம்களில் இருந்து பிறர் எப்படி தங்களை காத்துக் கொள்வது என்பது பிறரின் உயிர் போகும் பிரச்சினை!

    ReplyDelete
  13. நண்பர் நிரூபன்!

    //இப் பதிவினைப் படித்தேன். தலைப்பில் ருவிட்ஸ் வைச்சு எழுதியிருக்கிறீங்க.

    போட்டோ எடுத்தவனை இப்பவும் தேடிக்கிட்டே இருக்கிறீங்களா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    வெள்ளிக்கிழமையிலிருந்து தேடிக்கிட்டே இருக்கேன். இன்னும் கையில் கிடைக்கவில்லை. :-)

    //அனானி கமெண்டுகளை அனுமதிக்க வேணாம் நண்பா! அப்போது தான் பின்னூட்டம் எழுதுவோருக்கு சங்கடம் இருக்காது!//

    இங்கு எழுதும் 90 சதமான பேர் தங்களது உண்மையான புகைப்படத்தையோ அல்லது உண்மையான பெயரையோ விலாசத்தையோ தருவதில்லை. எல்லாமே கற்பனையாக வைத்துக் கொண்டதுதான். ஒருவருக்கே இரண்டு மூன்று ஐடிகள் இருந்தாலும் கண்டுபிடிப்பது சிரமம். ஒருவர் தனது கருத்தை சொல்லவும் வேண்டம். தனது பெயரும் தெரியக் கூடாது என்பவருக்கும் பிளாக்கர் ஐடி இல்லாதவருக்கும் அனானி ஆப்ஷன் உபயோகமாக உள்ளது. ஆனால் ஆபாசமாக காழப்புணர்ச்சியோடு வரக் கூடிய அனானி பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதில்லை. சில வற்றை திருத்தி வெளியிட்டிருக்கிறேன். போன பதிவில் கூட ஒரு இறந்த தலைவரை அவன் இவன் என்று எழுதியதை திருத்தி வெளியிட்டேன்.

    //ஸோ...தாங்கள் கூறிய கருத்திற்கு தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறேன்! புரிந்து கொள்ளுவீங்க என நினைக்கிறேன்!//
    புரிந்து கொண்டேன். உங்களின் விளக்கத்துக்கு நன்றி!

    ReplyDelete
  14. சலாம் சகோ ஆஷிக்!

    //ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
    தலைப்பு வைப்பதில் இன்னுமா கொலைவெறி..?//

    நம் பிரதமரே இந்த தலைப்பில் மயங்கி கிடக்கும் போது நாமும் வைப்பொமே என்று தான் :-)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. அனானி!

    //இவர்களுக்கு சவுதி ஆடை அணியும் படி செய்துவிட்டால் அனைவரும் யோக்கியன் வர்ராருன்னு உஷாராக மதிப்புக் கொடுப்பார்கள் அல்லவா ?//

    சவுதி ஆடை அணிபவர்கள் எல்லோரும் யோக்கியர் என்று சொல்லவில்லை. இஸ்லாம் உடைகளை பார்ப்பதில்லை. உங்கள் உள்ளத்தைத்தான் பார்க்கிறது. குர்அனின் மற்றும் முகமது நபியின் வழிகாட்டதலின்படி முடிந்த வரை வாழும் முஸ்லிமே இஸ்லாமியனாக கருதப்படுவான்.

    //ஆகவே இதற்கு ஆவண செய்யவும் ஏனெனில் கெட்ட முஸ்லிம்கள் கேவல்மான் செயல்களை செய்வதால் உடனே அனைவரயும் பிடித்து ஜெயிலில் போட்டு விட்டால் இந்திய நாட்டில் 99% குற்றங்கள் குறைந்துவிடும்.
    சும்மா பேச்சு பேசுகிறீர்களே தவிர ஒன்றும் செய்வதில்லை//

    குற்றம் செய்பவர்கள் அனைவரையும் உள்ளே பிடித்து போட்டால் மொத்த இந்தியாவில் 10 சதமான பேரே வெளியில் இருப்பர். :-)

    ஹேமந்த் கர்கரே கண்டு பிடித்த குற்றவாளிகள் யார் என்று தெரியுமா! 

    //இறையச்சம் இல்லாத தீய முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்த கெட்ட முஸ்லிம் பையன் ஒரு ஆசிரியையே கொன்று விட்டான்.
    முதலில் அவன் நல்ல முஸ்லிமா கெட்ட முஸ்லிமா என கூறவும்.பிறகு கெட்ட முஸ்லிம்களில் இருந்து பிறர் எப்படி தங்களை காத்துக் கொள்வது என்பது பிறரின் உயிர் போகும் பிரச்சினை!//

    அந்த சிறுவனை வசதியான அந்த பெற்றோர் அளவுக்கு மீறி செல்லம் கொடுத்தனால் அதன் பலனை அனுபவிக்கின்றனர். தினம் ஐந்து வேளை தொழக் கூடியவனாக அந்த மாணவனை பெற்றோர் மாற்றியிருந்தால் அவனுக்கு ஆசிரியரையே கொல்லும் அளவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்காது. இறை தியானத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

    9 ஆம் வகுப்பு படிக்கும் பையனுக்கு தனி ரூம். தினம் பாக்கெட் மணியாக 100 ரூபாய். காரிலும் டூ வீலரிலும் பையனை பள்ளிக்கு அனுப்புவது. விதவிதமான விளையாட்டு சாதனங்கள். இறை பக்தி கிஞ்சிற்றும் இல்லை. இவை எல்லாம் சேர்ந்து இன்று அவனை கொலைகாரனாக்கியிருக்கிறது. அவனை இஸ்லாமிய சூழலில் வளர்க்காதது பெற்றோர் செய்த தவறு.

    இன்றைய தின மலரைப் பாருங்கள். இதே வயது ஒரு இந்து பையன் தனது குடிகார தந்தையை கொன்ற செய்தியை இன்று பார்த்தேன். இதற்கு உங்களின் பதில் என்ன?

    ReplyDelete
  17. திரு ஐடியாமணி!

    // முதலில் ஒரு ஸாரி! ஏன் தெரியுமா? உங்கள் வயசு என்னவென்று தெரியாமல், உங்களைப் பல இடங்களில் பெயர் சொல்லி அழைத்துவிட்டேன்! அதற்காக!
    உங்கள் வயதில் இருந்து 19 வயதைக் கழிக்க வேண்டும் என் வயதுக்கு! அவ்வ்வ்வ்வ்வ்!//

    பெயர் சொல்லி கூப்பிடுவதால் என்ன தவறு? இதில் ஒன்றும் இல்லை. என்னை தாராளமாக சுவனப்பிரியன் என்றே மொட்டையாகவே அழைக்கலாம். ஒரு தவறும் இல்லை.

    //உங்கள் வயசு தெரியாமல், ஆங்காங்கே பேர் சொல்லி அழைத்தமைக்கு மீண்டும் ஸாரி!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! என்னை சுவனப்பிரியன் என்றே அழைக்கலாம்.

    ReplyDelete
  18. திரு ஐடியா மணியின் பின்னூட்டம் சில திருத்தங்களுடன்!

    சுவனப்பிரியன் சாருக்கு!

    முதலில் ஒரு ஸாரி! ஏன் தெரியுமா? உங்கள் வயசு என்னவென்று தெரியாமல், உங்களைப் பல இடங்களில் பெயர் சொல்லி அழைத்துவிட்டேன்! அதற்காக!
    உங்கள் வயதில் இருந்து 19 வயதைக் கழிக்க வேண்டும் என் வயதுக்கு! அவ்வ்வ்வ்வ்வ்!

    அப்புறம் தமிழ்மணத்துக்கு நீங்கள் முறைப்பாடு செய்திருப்பீர்கள் என்று நான் உண்மையாகவே கருதவில்லை! நீங்கள் முகத்து நேரே பேசினீர்கள்! இது தவறு என்று சுட்டிக்காட்டினீர்கள்! ஆகவே நீங்கள் முதுகில் குத்தியிருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை!

    அத்துடன் யார் யார் முறைப்பாடு செய்திருப்பார்கள் என்றும் நான் தேடிக்கொண்டு திரியவும் இல்லை! எனக்கு அது அவசியம் இல்லை! யார் முறைப்பாடு செய்திருந்தாலும், அவர்கள் விவாதிக்கும் திறமை இல்லாத கோழைகள் என்பதே எனது முடிபு!


    உங்கள் வயசு தெரியாமல், ஆங்காங்கே பேர் சொல்லி அழைத்தமைக்கு மீண்டும் ஸாரி!

    ReplyDelete
  19. சகோ, சுவனப்பிரியன்!

    எடிட் செய்யப்பட்ட எனது பின்னூட்டம் பார்த்தேன்! இட்ஸ் ஓகே! பட்,மேலே இருக்கும் இன்னொரு கமெண்டையும் முன்னரேயே நீங்கள் எடிட் செய்திருந்தால், எனது கமெண்டை எடிட் செய்திருக்க வேண்டிய தேவை வந்திருக்காது!

    என்னைப் பற்றி ஒருவர் பேசும் போது, நானும் பதில் சொல்லத்தானே வேண்டும்! அதனால் தான் அப்படி எழுதினேன்!

    எனது கமெண்டை மட்டுமே எடிட் செய்தது, நடுநிலை என்று உங்கள் மனச்சாட்சிக்குத் தோன்றினால்...... சரிதான்!

    ReplyDelete
  20. கஜாலி நானா,

    நானும் சீரியஸ்சா எழுதி பார்க்கிறேன், கூட்டமே வர மாட்டேங்குது. இது மாதிரி ஏடாகூடமா போட்டாதான் கூட்டம் வருது.

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும்..

    உங்கள் பல பதிவுகளை படித்து ஓட்டு மட்டுமே போட்டிருக்கிறேன் பின்னூட்டம் இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்..

    நிரூபன் பதிவில் இடப்பட்ட பின்னூட்டத்தில், நிரூபனுக்கு உங்களால் வழங்கப்பட்ட பதிலில் உடன்பாடில்லை என உங்கள் பெயரோடு குறிப்பிட்டிருந்தேன்...

    இந்த பின்னூட்டமிட்டதிலிருந்து கொஞ்சம் அதிமேதாவித்தனமாக நடந்துகொண்டோமோ என மனதில் ஒரு உறுத்தல்.. தவறாக எண்ணினால் மன்னித்துக்கொள்ளுங்கள்... உங்களை விடவும் அறிவிலும்,அனுபவத்திலும் மிகச்சிறியவன் என்ற அடிப்படையில்.

    ReplyDelete
  22. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    நல்லதொரு முயற்சி. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களுடைய முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது சகோ. ஒரு புகைப்படத்தை பஹிருங்கள்.

    ReplyDelete
  23. சகோ ஆஷிக்கின் பின்னூட்டம் சில திருததங்களுடன்.....

    ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
    தலைப்பு வைப்பதில் இன்னுமா கொலைவெறி..?

    ReplyDelete
  24. //கஜாலி நானா,

    நானும் சீரியஸ்சா எழுதி பார்க்கிறேன், கூட்டமே வர மாட்டேங்குது. இது மாதிரி ஏடாகூடமா போட்டாதான் கூட்டம் வருது.//

    பதிவு மாறி பின்னூட்டம் இட்ட சகோ சிராஜூக்கு சவுதி அரேபியா மண்டலம் சார்பாக கடுமையான கண்டனங்கள். :-)))))

    ReplyDelete
  25. ///என்னைப் பற்றி ஒருவர் பேசும் போது, நானும் பதில் சொல்லத்தானே வேண்டும்! அதனால் தான் அப்படி எழுதினேன்!///

    சகோ.சுவனப்பிரியன்,
    பெயர் சொல்லாமல் யார் மீதோ ஆதாரமும் இல்லாமல் அபாண்டமாக வழக்கம் போல பொய் புளுகினவரின் பின்னூட்டம் உங்களால் நீக்கப்பட்டது. இது மிகவும் சரி. வரவேற்கிறேன்.

    ஆனால், நான் உண்மையைத்தானே சொன்னேன்..! என் பின்னூட்டம் எதற்கு நீக்கப்பட்டது..?

    அப்படி என்றால்,

    யார் மெயில் அனுப்பியது என்று ஆதாரம் தர அவதூறு செய்தவரால் முடியாத பட்சத்தில்....

    (நீங்கள் எனக்கு பதில் சொல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.)

    கேள்விகள்:

    யாரிடமிருந்தோ மெயில் அனுப்பப்பட்டதால் தான் தமிழ் மணம் திரட்டி அந்த வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததா..?

    சுயமாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வில்லையா..?

    எனது பின்னூட்டத்தில் என்ன தவறு..?

    ReplyDelete
  26. விபச்சாரத்துக்கு பகிரங்க அழைப்பு விடுத்த பதிவர் நீக்கப்பட்டதை நான் வரவேற்று தமிழமனத்தை பாராட்டியது கூட தவறா...?

    அடித்தவனுக்கும் அடிவாங்கியவனுக்கும் ஒரே தண்டனையா...?

    இது எப்படி சமநீதி ஆகும் சகோ.சுவனப்பிரியன்..?

    ReplyDelete
  27. /* பாருங்கள் இறையச்சம் இல்லாத தீய முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்த கெட்ட முஸ்லிம் பையன் ஒரு ஆசிரியையே கொன்று விட்டான்.
    முதலில் அவன் நல்ல முஸ்லிமா கெட்ட முஸ்லிமா என கூறவும்.பிறகு கெட்ட முஸ்லிம்களில் இருந்து பிறர் எப்படி தங்களை காத்துக் கொள்வது என்பது பிறரின் உயிர் போகும் பிரச்சினை! */

    இதற்க்கு பதில், எனது நண்பன் கசாலி தளத்தில் நாளை வரும்.

    http://www.rahimgazzali.com/

    உங்கள் பின்னூட்டத்தை பார்த்து பதிவிடுகிறோம் என்று நினைத்து விடாதீர்கள். இன்று மாலையே,
    அவன் இது சம்பந்தமாக என்னிடம் கொதித்து போய் பேசினான். அது மட்டும் அல்ல, இன்று சாயந்தரம் திருச்சியில் நடந்த மற்றொரு சம்பவம் அனைவர் மனதையும் பதை பதைக்க செய்யும். அதை செய்தவனும் முஸ்லிம் தான்.

    அய்யா, இஸ்லாம் பற்றி நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே உங்கள் பின்னூட்டம் சொல்கிறது, நாங்கள் இஸ்லாத்திற்கு அத்தாட்சி அல்ல, திருக்குரானே அத்தாட்சி, தயவு செய்து அதை ஒரு முறை படித்து விட்டு இஸ்லாத்தை எதிருங்கள். ஒரே ஒரு விஷயம் உங்களிடம் கேட்கிறேன், அதற்க்கு நீங்கள் எனக்கு பதில் சொல்ல வேண்டாம், உங்கள் மனசாட்சியிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

    "நீங்கள் இன்னும் குரானை முழுமையாக படிக்கவில்லை, சரியா???"

    இறுதியாக... நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறிய ஒரு அறிவுரையை சொல்கிறேன். இதில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கிறது.

    "அநீதி செய்யும் தமது சமுதாயத்தினருக்கு உதவி செய்பவன், கிணற்றில் விழுந்து கொண்டு இருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக்கொண்டு இருப்பவன் போல் ஆவான். அதனுடன் சேர்ந்து அவனும் அதில் விழுவான்".

    ReplyDelete
  28. சகோ ஐடியா மணி மற்றும் நிரூபனுக்கு,

    உங்கள் பெயரைச் சொல்ல சுவனப்பிரியன் பயப்படுகிறார் என்பது போல் சொல்லி இருந்தீர்கள். சுவனப்பிரியனை நான் அறிவேன், அவர் அது போன்றவர் அல்ல.

    அந்த பதிவு உங்கள் இருவரையும் குறிப்பது போல் இருந்தாலும், உங்கள் இருவருக்கானது மட்டும் அல்ல. அது தான் உண்மை. அனைவருக்கும் பொதுவானது,

    அதில் முஸ்லிம் பதிவர்கள் இருந்தாலும் அவர்களும் அடக்கம். ஆகவே இது உங்களை மட்டும் தாக்கியது என்று என்ன வேண்டாம்.

    ஐடியா மணியின் பதிவு அவரை எழுதத் தூண்டியதால், அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



    மற்றபடி நீங்கள் இருவரும் நன்றாக எழுதும் திறமை படைத்தவர்கள், மற்றவர்கள் எப்படியோ போகட்டும். நீங்கள் இருவரும் ஆக்கப் பூர்வமான பதிவுகள் எழுத வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த 18 + ல் இருந்து வெளியே வாருங்கள். சரி நிரூபன் வெளியில் வந்துவிட்டார்.

    அய்யா ஐடியா மணி நீங்க வந்திடுங்க. நல்ல விசயமா எழுதித் தள்ளுங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. /*

    //கஜாலி நானா,

    நானும் சீரியஸ்சா எழுதி பார்க்கிறேன், கூட்டமே வர மாட்டேங்குது. இது மாதிரி ஏடாகூடமா போட்டாதான் கூட்டம் வருது.//

    பதிவு மாறி பின்னூட்டம் இட்ட சகோ சிராஜூக்கு சவுதி அரேபியா மண்டலம் சார்பாக கடுமையான கண்டனங்கள். :-))))) ***/

    ஹ..ஹ..ஹ..ஹா ..... Totally confused ... மன்னிக்கவும்.

    அய்யயா..யாருக்கு என்ன பின்னூட்டம் போட்டேன்னே தெரியலையே??? சகோஸ் மன்னிக்கவும்.

    ReplyDelete
  30. /* 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலர் மந்திரத்தை என்ன செய்வீர்கள்? */

    சூப்பர்....

    ReplyDelete
  31. //ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்: முருகனையோ பிள்ளையாரையோ வணங்காதீர்கள் என்று உங்களை பார்த்து நான் கட்டாயப் படுததினால்தான் மேற்கண்ட குற்றச் சாட்டை என்மேல் நீங்கள் வைக்க முடியும்.//

    ஏன் சகோ,இப்படி சொல்லக் கூடாதா?உண்மையை போட்டு உடைக்கவேண்டும்,சிலைகளை வணங்காதே,அது நாஜீஸ் என்று,இப்ராஹீம் நம்பி சொன்னது போன்று

    ReplyDelete
  32. வஅலைக்கும் சலாம்! சகோ ரியாஸ்!

    //இந்த பின்னூட்டமிட்டதிலிருந்து கொஞ்சம் அதிமேதாவித்தனமாக நடந்துகொண்டோமோ என மனதில் ஒரு உறுத்தல்.. தவறாக எண்ணினால் மன்னித்துக்கொள்ளுங்கள்... உங்களை விடவும் அறிவிலும்,அனுபவத்திலும் மிகச்சிறியவன் என்ற அடிப்படையில்.//

    மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்லும் அளவுக்கு நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஐடியாமணி விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றதும் அதோடு நிரூபனின் சில தலைப்புகளும் சில படங்களும் என்னை அந்த பதிவை எழுத தூண்டியது. நான் சொன்ன முறையில் மனிதன் என்ற முறையில் தவறுகள் வந்திருக்கலாம். இங்கு யாருக்கு வெற்றி என்பது முக்கியமல்ல! எனது பதிவால் சம்பந்தபட்டவர்கள் சமூக அக்கறையோடு எழுத ஆரம்பித்தால் அதுவே போதும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  33. சலாம் சகோ ஆஷிக்!

    //யாரிடமிருந்தோ மெயில் அனுப்பப்பட்டதால் தான் தமிழ் மணம் திரட்டி அந்த வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததா..?//

    இதற்கு ஐடியா மணிதான் பதில் சொல்ல வேண்டும். யார் தமிழ் மணத்துக்கு அபபடி ஒரு மெயில் அனுப்பியது என்பதை தெரிவிப்பார் என்று நினைக்கிறேன்.

    //ஆனால், நான் உண்மையைத்தானே சொன்னேன்..! என் பின்னூட்டம் எதற்கு நீக்கப்பட்டது..?//

    அவர் சென்றதை நினைத்து சிரிப்பதை அவரால் தாங்க முடியவில்லை. எனவெ உங்களை விமரிசித்து காட்டமாக ஒரு பின்னூட்டத்தை ஐடியா மணி அனுப்பியிருந்தார். எனக்கு அதை வெளியிட மனமில்லாததால்தான் இருவரின் பின்னூட்டத்தையும் எடிட் செய்யும்படி ஆகி விட்டது. எனது சங்கடத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    //விபச்சாரத்துக்கு பகிரங்க அழைப்பு விடுத்த பதிவர் நீக்கப்பட்டதை நான் வரவேற்று தமிழமனத்தை பாராட்டியது கூட தவறா...?//

    நான் பதிவே போட்டிருக்கும் போது பின்னூட்டமிட்டிருக்கும் உங்களை குறை காணுவேனா?

    ReplyDelete
  34. சகோ ஐடியா மணி!

    //என்னைப் பற்றி ஒருவர் பேசும் போது, நானும் பதில் சொல்லத்தானே வேண்டும்! அதனால் தான் அப்படி எழுதினேன்!

    எனது கமெண்டை மட்டுமே எடிட் செய்தது, நடுநிலை என்று உங்கள் மனச்சாட்சிக்குத் தோன்றினால்...... சரிதான்!//

    உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து ஆஷிக்குடைய பின்னூட்டத்தையும் எடிட் செய்துள்ளேன். இனி நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்.

    சமூக நலனுக்கு எதிராக உங்கள் கருத்து இருந்ததால் ஆஷிக் உங்களை நீக்கியதை சந்தோஷத்தோடு வெளியிட்டார். ஆனால் தமிழ் மணத்தக்கு புகார் மெயில் எழுதியது உங்களுக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறீர்கள. அது யார் என்பதை விளக்குவீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் சகோ ஆஷிக்கின் பின்னூட்டத்தை ஏன் நீக்கினேன் என்று என் மேல் கோபப் படுவதால் அதை விளக்கக் கடமைபட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  35. சலாம் சகோ சிராஜ்!

    // நல்லதொரு முயற்சி. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    //உங்களுடைய முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது சகோ. ஒரு புகைப்படத்தை பஹிருங்கள்.//

    இன்ஷா அல்லாஹ் மெயிலில் அனப்புகிறேன்.

    ReplyDelete
  36. //ஏன் சகோ,இப்படி சொல்லக் கூடாதா?உண்மையை போட்டு உடைக்கவேண்டும்,சிலைகளை வணங்காதே,அது நாஜீஸ் என்று,இப்ராஹீம் நம்பி சொன்னது போன்று//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ அர அல!

    ReplyDelete
  37. சலாம் சகோ.சுவனப்பிரியன்,
    இது எனக்கு தன்மானப்பிரச்சினை..!
    இதை நான் இப்படியே சும்மா விடப்போவதில்லை..!

    சரி, அவரின் புகார் கடிதத்தில் என்ன இருந்தது என்று நான் பார்த்தால்....
    அட... அவர் என் பெயரையே குறிப்பிடவில்லை..! என்னை பற்றி எந்த புகாரும் சொல்லவில்லை.

    அவரின் கமெண்டில் நீங்கள் எடிட் செய்தது இதுதானே..?

    /// கோழிக்கள்ளனை முகத்தில் தெரியும் என்று சொல்வது போல, ஒருவரை நான் கண்டுபிடித்துவிட்டேன்! அகத்தின் அழகு அப்படியே முகத்தில் தெரிகிறது! அவ்வ்வ்வ்வ்வ்!////

    எந்த முறைப்பாடு மெயிலும் எவருக்கும் எந்த திரட்டிக்கும் அனுப்பாத நிலையில் நான் ஏன் 'கோழிக்கள்ளனைப்பற்றி' எல்லாம் அவன் யார் என்றெல்லாம் கவலைப்பட வேண்டும் சகோ..?

    விஷயம் இப்படி இருக்க.... அடுத்து அவர்....

    ReplyDelete
  38. விஷயம் இப்படி இருக்க.... அடுத்து அவர்....

    ///எடிட் செய்யப்பட்ட எனது பின்னூட்டம் பார்த்தேன்! இட்ஸ் ஓகே! பட்,மேலே இருக்கும் இன்னொரு கமெண்டையும் முன்னரேயே நீங்கள் எடிட் செய்திருந்தால், எனது கமெண்டை எடிட் செய்திருக்க வேண்டிய தேவை வந்திருக்காது!

    எந்த ஆதாரத்தின் அடிப்படையில், "அவர் சொன்னது என்னை பற்றியும் அது எனது கமென்ட் தான்" என்றும் முடிவு எடுத்தீர்கள் சகோ.சுவனப்பிரியன்..? உங்களுக்கு நான்தான் மெயில் அனுப்பினேன் என்று தெரியுமா..? என்ன ஆதாரம் உள்ளது உங்களிடம் சகோ.சுவனப்பிரியன்..?

    நீங்கள் இப்படி அவசரப்பட்டு செய்தததால்... ஏன் மீது அபாண்ட பழி விழுந்து இருக்கிறது உங்களால்..!

    எந்த பெயரும் சொல்லாமல் ஆதாரமற்ற ஒருவரின் அண்ட புளுகுக்கு என்னை எப்படி நீங்கள் அநியாயமாக இரையாக்கலாம் சகோ.சுவனப்பிரியன்...?

    குற்றம் செய்த மோடிக்கு உச்ச நீதி மன்றம் தூக்குத்தண்டனை கொடுத்தால், அதை நான் வரவேற்று பதிவு போட்டால், எனக்கும் தூக்குத்தண்டனையா..? 'இதெப்படி நியாயம் கணம் கோர்ட்டார் அவர்களே' என்று நான் நீதிபதியை கேட்டால்...........

    "அவர் தண்டனை பெற்றதை நினைத்து நீங்கள் சிரிப்பதை அவரால் தாங்க முடியவில்லை. எனவெ உங்களை விமரிசித்து காட்டமாக ஒரு கடிதம் மோடி அனுப்பியிருந்தார். எனக்கு அதை வெளியிட மனமில்லாததால்தான் அப்படி ஒரு தீர்ப்பு உங்களுக்கும் சொல்லும்படி ஆகி விட்டது. எனது சங்கடத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்".

    என்றால்....
    சத்தியமாக எனக்கு இந்த 'சமநீதி'(?!) புரியவே இல்லை சகோ.சுவனப்பிரியன்..!

    ReplyDelete
  39. விஷயம் இப்படி இருக்க.... அடுத்து அவர்....

    ///எடிட் செய்யப்பட்ட எனது பின்னூட்டம் பார்த்தேன்! இட்ஸ் ஓகே! பட்,மேலே இருக்கும் இன்னொரு கமெண்டையும் முன்னரேயே நீங்கள் எடிட் செய்திருந்தால், எனது கமெண்டை எடிட் செய்திருக்க வேண்டிய தேவை வந்திருக்காது!

    எந்த ஆதாரத்தின் அடிப்படையில், "அவர் சொன்னது என்னை பற்றியும் அது எனது கமென்ட் தான்" என்றும் முடிவு எடுத்தீர்கள் சகோ.சுவனப்பிரியன்..? உங்களுக்கு நான்தான் மெயில் அனுப்பினேன் என்று தெரியுமா..? என்ன ஆதாரம் உள்ளது உங்களிடம் சகோ.சுவனப்பிரியன்..?

    நீங்கள் இப்படி அவசரப்பட்டு செய்தததால்... ஏன் மீது அபாண்ட பழி விழுந்து இருக்கிறது உங்களால்..!

    எந்த பெயரும் சொல்லாமல் ஆதாரமற்ற ஒருவரின் அண்ட புளுகுக்கு என்னை எப்படி நீங்கள் அநியாயமாக இரையாக்கலாம் சகோ.சுவனப்பிரியன்...?

    குற்றம் செய்த மோடிக்கு உச்ச நீதி மன்றம் தூக்குத்தண்டனை கொடுத்தால், அதை நான் வரவேற்று பதிவு போட்டால், எனக்கும் தூக்குத்தண்டனையா..? 'இதெப்படி நியாயம் கணம் கோர்ட்டார் அவர்களே' என்று நான் நீதிபதியை கேட்டால்...........

    "அவர் தண்டனை பெற்றதை நினைத்து நீங்கள் சிரிப்பதை அவரால் தாங்க முடியவில்லை. எனவெ உங்களை விமரிசித்து காட்டமாக ஒரு கடிதம் மோடி அனுப்பியிருந்தார். எனக்கு அதை வெளியிட மனமில்லாததால்தான் அப்படி ஒரு தீர்ப்பு உங்களுக்கும் சொல்லும்படி ஆகி விட்டது. எனது சங்கடத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்".

    என்றால்....
    சத்தியமாக எனக்கு இந்த 'சமநீதி'(?!) புரியவே இல்லை சகோ.சுவனப்பிரியன்..!

    ReplyDelete
  40. சத்தியமாக எனக்கு இந்த 'சமநீதி'(?!) புரியவே இல்லை சகோ.சுவனப்பிரியன்..!

    ///ஏனெனில் சகோ ஆஷிக்கின் பின்னூட்டத்தை ஏன் நீக்கினேன் என்று என் மேல் கோபப் படுவதால் அதை விளக்கக் கடமைபட்டுள்ளீர்கள்.///

    ---எனக்கு விளக்கம் சொல்ல வேண்டியது நீங்கள்தான் சகோ.சுவனப்பிரியன்.

    நான் முறைப்பாடு தந்ததாக அவர் ஆதாரம் காட்டினால் அதற்கு அப்புறம் தான் எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை. அதை குற்றமற்ற நான் நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாமல் மோதிப்பார்த்துக்கொள்கிறேன். அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் சகோ.சுவனப்பிரியன்.

    இன்னும் ஒருநாளில் அந்த அண்டபுழுகர் தன் பொய்க்கு (ஆதாரம் எப்படி காட்ட முடியும்..?) இங்கே பகிரங்க வருத்தம் தெரிவித்து என்னிடம் மன்னிப்பு கேட்காவிட்டால்....

    நீங்கள் எடிட் செய்த அதே கமெண்டை நான் மறுபடியும் இங்கே போஸ்ட் பண்ணுவேன்...!

    இது சத்தியம்..!

    அதை நீங்கள் பிரசுரிக்கா விட்டால்....

    இன்ஷாஅல்லாஹ் எனது அடுத்த பதிவு "ஆபாச பதிவரை நீக்கிய தமிழ்மணத்துக்கு நன்றியும், நல்ல கமெண்டை நீக்கிய சகோக்கு எனது வருத்தங்களும்..!" என்ற பெயரில் போட்டு... அதில் நீங்கள் மட்டுறுத்திய எனது பின்னூட்டத்தை வெளியிடுவேன்..! இதுவும் சத்தியம்..!

    ReplyDelete
  41. சலாம் சகோ ஆஷிக்!

    அவர் காலை வரை பதில் தரா விட்டால் பழைய உங்கள் பின்னூட்டத்தை அனுப்புங்கள். நான் வெளியிட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  42. Anonymous6:08 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  43. அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ...

    நீங்கள் நல்லது சொன்னீர்கள்....அது மாதிரி நடந்தல் பதிவுலகுக்கு அது ஆரோக்கியம்...

    ReplyDelete
  44. Anonymous9:03 PM

    Ask the muslim PJ to accept this challenge. or let him wear burqa
    ---------- Forwarded message ----------

    From: SAN (INDIA) < sakshi.apologeticsnetwork@gmail.com>

    Date: Fri, Feb 3, 2012 at 2:48 PM
    Subject: Re: san new
    To: TNTJ Head Office < tntjho@gmail.com>, TNTJ Head Office < tntjho5@gmail.com>, TNTJ Head Office < tntjho6@gmail.com>, pjtntj@gmail.com


    Let the name of Yahweh, the only true name of God, upon which all the true prophets have called, who in flesh was known by the name Jesus Christ, be glorified forever and ever. Amen



    Dear Friends at TNTJ,



    Further to our email dated January 28, 2011 for which we have not got any reply from you, we reiterate our proposal that both SAN & TNTJ can approach the Joint Commissioner of Police, South Zone, Chennai Police to get the cancellation order revoked and conduct the debate on Quran at Chennai itself.



    However, if either the joint commissioner refuses to revoke the ban order or if you are not willing to approach the joint commissioner along with SAN, we propose the following:

    (a) We can host the debate in other parts of India where there are no ban orders on such debates. For the debate on Quran, SAN is willing to bear the entire expense and host the debate at Kochi, Kerala.

    (b) If TNTJ wants 150 participants as agreed in the agreement to be in Kochi, SAN is willing to book an auditorium and host the debate.

    (c) If TNTJ wants 25 participants from its side, SAN can host the debate either at SAN office, Kochi or at any other place in Kochi.

    (d) The future debates on other subjects can also be similarly be hosted in other parts of the country, if the ban order still stands.

    Looking forward for your reply.



    Regards,

    SAN

    ReplyDelete
  45. ஹா ஹா ஹா ஹா என்னையா இது வம்பாப் போச்சு?

    சகோ சுவனப்பிரியன்! என்னால் உங்களுக்கு சங்கடம் வேண்டாம்! நீங்கள் யாருடைய கமெண்டை முழுமையாக எடிட் செய்யாமல் வெளியிட வெண்டும் என்று கருதுகிறீர்களோ, அப்படியே வெளியிடுங்கள்! என்னுடைய கமெண்டை எடிட் செய்வதாக இருந்தால், தாராளமாக எடிட் செய்யுங்கள்! அதற்கான சம்மதத்தை நான் தருகிறேன்!

    நான் தமிழ்மணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமையை ஒருவர் கொண்டாடுகிறார் என்றால், ஹா ஹா ஹா அதிலிருந்து என்ன முடிவுகளை நான் எடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்!

    அதுபோக, என்னை தமிழ்மணம் நீக்கியது ஒருவர் இருவருக்கல்ல, பலருக்கு சந்தோசம் தான்! அதையே நான் எனது பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்! பட்டாசு கொழுத்தி கொண்டாடும் படியும் சொல்லியுள்ளேன்!

    என்னை தமிழ்மணத்தில் இருந்து அகற்றுவதன் மூலம், பதிவுலகில் இருந்து அகற்ற முடியாது! சிலரை தமிழ்மணம் நீக்கியவுடன், மிகவும் மனசு உடைந்து போய், பதிவு எழுதுவதையே நிறுத்திவிடுகின்றனர்!

    ஹா ஹா ஹா ஐடியாமணி அந்த ரகம் இல்லை! நான் இன்னும் இன்னும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் எழுதுவேன்! யாராவது மைனஸ் ஓட்டு குத்திவிடுவார்களோ என்ற அச்சம் துளிகூட இல்லை!

    எனவே சகோ சுவனப்பிரியன், என்னால் உங்களுக்குச் சங்கடம் வேண்டாம்! தமிழ்மணத்துக்கு ரிபோர்ட் செய்தவர்கள் யார் என்பது இப்போது அனைவருக்குமே புரிந்திருக்கும்! தவளையும் தன் வாயால் கெடும்!

    எனவே, நீங்கள் முன்பு போலவே கமெண்டுகளைப் பிரசுரியுங்கள்! எனக்கு எந்த வருத்தமும் இல்லை! ஆனால் ஒன்று ஐடியாமணியின் மன உறுதி பற்றி குறைத்து மதிப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
  46. ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
    ///அவர் காலை வரை பதில் தரா விட்டால் பழைய உங்கள் பின்னூட்டத்தை அனுப்புங்கள். நான் வெளியிட்டு விடுகிறேன்.///---அவரின் ஆதாரம் அற்ற மொக்கை பின்னூட்டமும் வந்து விட்டது...! ஆக, உலக மகா பொய்யன் என்று இப்போதும் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புரிந்து இருக்கும்..!

    இதோ............. மீண்டும் அதே பின்னூட்டம்..!

    //////////////////////////////////
    ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ noreply-comment@blogger.com

    6:10 PM (14 hours ago)

    to me
    ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ has left a new comment on the post "என் மேல் ஏன் இந்த கொலை வெறி!":

    ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
    தலைப்பு வைப்பதில் இன்னுமா கொலைவெறி..?

    //அடுத்து ஐடியா மணியை பற்றி தமிழ் மணத்துக்கு சிலர் புகார் கொடுத்ததாக அவரது பதிவில் குறைபட்டுக் கொண்டார்.//---யாராம்...? ஆதாரம் உள்ளதாமாம்...? இருந்தால் தரட்டுமே..! நீக்கிவர்கள் மீண்டும் சேர்ப்பார்கள் என்று கரிசனம் போல..! ஹா..ஹா..ஹா...

    இவர் என்ன சொல்ல வருகிறார்..?

    தமிழ்மணத்தில்....
    "சமூகத்துக்கு கேடு தரும் பதிவுகளை சுயபுத்தியுடன் சிந்தித்து பிரித்தறிய தெரியாத அளவுக்கு மற்றவர்கள் மெயிலில் சொன்னால்தான் அறிந்து கொள்ளும் அளவுக்கு 'எடுப்பார் கைப்பிள்ளை' பொறுப்பாளர்கள் தான் உள்ளனர்" என்பது போல அவதூறு பதிவு போட்டு உரக்கக்கூறிய இவரை தமிழ்மணம் அதற்கு முன்பே நீக்கியது மிக மிக மிக சரிதான்...!

    தமிழமணத்துக்கு எனது மகிழ்ச்சியான பாராட்டுகள்..!

    Post a comment.

    Unsubscribe to comments on this post.


    Posted by ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ to - சுவனப்பிரியன் at 6:27 AM
    ///////////////////////////////////

    ReplyDelete
  47. சுவனப்பிரியன்

    எனக்கு தெரிந்த போதை பலவகை, தற்போது நீங்கள் உங்களை அறியாமலேயே ஏதேனும் போதைக்கு ( எழுத்தில் ) அடிமையாகிவிடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது, ( தெரிந்தால் / உணர்ந்தால்தானே திருத்திகொள்வதர்க்கு)

    என்னை சுற்றி இருப்பவர்களை அவர்களின் குறையோடு எற்றுகொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இதுவரையில் இருந்தததில்லை, ஆனால் அதனை குறிப்பிட்டுவிடுவேன், அவ்வளவுதான்)--

    என்றும் அன்புடன்
    ஷர்புதீன்

    ReplyDelete
  48. Anonymous Anonymous said...

    //தீய முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்த கெட்ட முஸ்லிம் பையன் ஒரு ஆசிரியையே கொன்று விட்டான்.
    முதலில் அவன் நல்ல முஸ்லிமா கெட்ட முஸ்லிமா என கூறவும்.//
    ஓர் ஒசாமா வைத்து ஒட்டு மொத்த முஸ்ஸீம் சமுதயாத பளிக்கராது. இப்பொ புதுசா ஓர் பையன் கிடைச்சுருக்கான். அவ்வளவு தான் இனி முஸ்ஸீம் பையன்களை ஸ்கூலு சேத்தமா இருக்க இது ஓர் காரணம் கிடைச்சிருச்சு. இதோ இப்பவே களைட் பன்ன ஆராம்பிச்சரான். மத்த சமுதயத்தலா எத்தனை பேருன்.

    ReplyDelete
  49. சகோ ஷர்புதீன்!

    //எனக்கு தெரிந்த போதை பலவகை, தற்போது நீங்கள் உங்களை அறியாமலேயே ஏதேனும் போதைக்கு ( எழுத்தில் ) அடிமையாகிவிடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது, ( தெரிந்தால் / உணர்ந்தால்தானே திருத்திகொள்வதர்க்கு)//

    நான் ஏதோ 24 மணி நேரமும் எழுத்தை சுற்றியே வருவதுபோல் எழுதியிருக்கிறீர்கள். ஒரு நாளில் 8 மணி நேர வேலையில் எனது வேலை 4 மணி நேரத்துக்குள் முடிந்து விடும். மற்ற நேரங்களில் உலக விஷயங்கள், மார்க்க விஷயங்கள், அறிவியல் விஷயங்கள் என்று தேடிக் கொண்டிருப்பேன். அடுத்து நான் எதையும் சுயமாக எழுதவில்லை. ஏற்கெனவே இறைவன் கொடுத்த குர்ஆனையும், அதற்கு விளக்கமாக அமைந்த நபி மொழியையும் என்னால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு விளக்குகிறேன். இதில் போதை வருவதற்கு முகாந்திரமே இல்லை.

    குடும்பத்தை கவனிக்காமல் எந்த நேரமும் மதம் மார்க்கம் என்று உலக ஆசைகளை உதறி விட்டுச் செல்பவர்களுக்கு வெண்டுமானால் உங்கள் வாதம் பொருந்தலாம். மனைவியோடு சந்தோஷமாக இருக்கிறேன்: குழந்தைகளோடு கொஞ்சி குலாவுகிறேன்: அனைத்து மதத்தவர்களோடும் நட்புடனேயே பழகுகிறேன்: தாய் நாட்டையும் தாய் மொழியையும் நேசிக்கிறேன்: எனது தாய் தந்தையரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன்: இறைவன் அருளிய ஏவல் விலக்கல்களை என்னால் முடிந்த வரை பின் பற்றுகிறேன். இவை எல்லாம் செய்து முடித்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இணையத்திலும் எழுதுகிறேன்.

    முன்பு சொன்ன பல காரியங்களுக்கு இணையம் தடையாக இருந்தால் இணையத்தை கை கழவி விடுவேன். அவ்வளவுதான். :-)

    ReplyDelete
  50. எழுத்தில் என்று சொன்னது அதிகமாக எழுதுவதில் ( மட்டும் ) என்ற அர்த்தத்தில் அல்ல, எழுத்தில் மூலம் வரும் அல்லது எழுதுவதில் வரும் போதை. சர்ச்சைக்குரிய ( மற்றவர்களுக்கு) எழுத்தில்., அதற்க்கு எதிரான கமென்ட் அதிகம் வரும், அது கூட நமக்கே தெரியாத ஒரு போதை தரலாம். உற்சாகம் தரலாம், இன்றோ அல்லது நாளையோ!


    //முன்பு சொன்ன பல காரியங்களுக்கு இணையம் தடையாக இருந்தால் இணையத்தை கை கழவி விடுவேன். அவ்வளவுதான். //

    முடிந்தது விஷயம்!

    ReplyDelete
  51. ஒரு வேளை எனது மேல உள்ள கமெண்டு மூலம் நான் சொல்லவந்தது புரியவில்லை எனில், நேரிடையாக சொல்லிவிடுகிறேன். நான் சுற்றி வளைத்து சொல்லவந்தது உங்களின் இந்த இடுக்கைகான தலைப்பை குறித்தது! இப்ப புரிந்திருக்குமே

    ReplyDelete
  52. சலாம்! சகோ ஹாஜா மைதீன்!

    //நீங்கள் நல்லது சொன்னீர்கள்....அது மாதிரி நடந்தல் பதிவுலகுக்கு அது ஆரோக்கியம்...//

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  53. சலாம்! சகோ நிஜாம்!

    //முதலில் அவன் நல்ல முஸ்லிமா கெட்ட முஸ்லிமா என கூறவும்.//
    ஓர் ஒசாமா வைத்து ஒட்டு மொத்த முஸ்ஸீம் சமுதயாத பளிக்கராது. இப்பொ புதுசா ஓர் பையன் கிடைச்சுருக்கான். அவ்வளவு தான் இனி முஸ்ஸீம் பையன்களை ஸ்கூலு சேத்தமா இருக்க இது ஓர் காரணம் கிடைச்சிருச்சு//

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  54. சகோ ஷர்புதீன்!

    //ஒரு வேளை எனது மேல உள்ள கமெண்டு மூலம் நான் சொல்லவந்தது புரியவில்லை எனில், நேரிடையாக சொல்லிவிடுகிறேன். நான் சுற்றி வளைத்து சொல்லவந்தது உங்களின் இந்த இடுக்கைகான தலைப்பை குறித்தது! இப்ப புரிந்திருக்குமே//

    அது ஹாஸ்யமாக வைக்கப்பட்ட தலைப்பு என்பதை படிக்கும் அனைவரும் உணர்வர். வந்திருக்கும் பின்னூட்டங்களும தலைப்பை பேசவில்லையே! தலைப்புக்கு உளளிலிருக்கும் விபரங்களைத்தானே அலசுகிறது? இணையம் ஒரு பொழுது போக்கு. அதை பயனுள்ள வகையில் செலவழிக்க என்னால் ஆன முயற்சிகளை செய்கிறேன்.

    ReplyDelete
  55. மிக மிக சிறய அளவில் கூட தவறுகளின் பக்கம் போய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவராச்சேன்னு.....

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)