Thursday, February 23, 2012

ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்

சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஸாலிஹ் நபி.

சவுதி அரேபியாவில் உள்ள மதாயன ஷாலிஹ் என்ற இடத்தில் பெரும்பாறைகளை குடைந்து அவர்கள் வாழ்ந்த குகை வீடுகள் இப்போதும் உள்ளன. மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மதாயன ஷாலிஹ் உள்ளது. மக்காவிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அல் ஊலா என்ற ஊரிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அங்குதான் ஹிஜ்ர் பகுதி உள்ளது. இப்போது அதை ‘மதாயின் ஸாலிஹ்’ -(ஸாலிஹ் (அலை) அவர்கள் வசித்த ஊர்) என்று அழைக்கின்றார்கள்.
இந்த மக்கள் பேசிய மொழி அரபி மொழியாகும். இறைவன் அனுப்பிய தூதர்களில் அரபுகளாக அறியப்படுபவர்கள் நான்கு பேர். 1.நபி ஹூத், 2. நபி ஷூஐப், 3.நபி சாலிஹ், 4.நபி முகமது.




காலை தொழுகையை முடித்துக் கொண்டு நானும் மதுரையை சேர்ந்த நைனார் முஹம்மதும், ஒரு கேரள அன்பரும் சேர்ந்து கம்பெனி வண்டியில் கிளம்பினோம். நாங்கள் நினைத்தது தூரம் 300 கிலோமீட்டரே! ஆனால் அந்த இடம் வர கிட்டத்தட்ட 550 கிலோ மீட்டர் ஆகி விட்டது.



இந்த இடத்துக்கு செல்பவர்கள் முதலில் அல்ஊலாவில் இருக்கும் அரசு அலுவலகத்தில் சென்று அனுமதி பத்திரம் வாங்க வேண்டும். இது தெரியாமல் நாங்கள் நேரிடையாக சென்று விட்டோம். எங்களை உள்ளே விட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பிறகு நான் அவர்களிடம் 500 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வருகிறேன்: என்று அரை மணி நேரத்துக்கு மேலாக வாதிட்டு அதன் பிறகு அனுமதி வாங்கினோம். அரபி மொழி தெரிந்ததால் அனுமதி பத்திரம் இல்லாமலேலே எங்களுக்கு அனுமதி கிடைத்தது. சிரமத்தை தவிர்க்க இங்கு செல்பவர்கள் முதலில் அல் ஊலா சென்று அனுமதி வாங்கி விட்டு வரவும்.



கடும் பலம் வாய்ந்த சமுதாயமாக படைக்கப் பட்டிந்த ஸமூத் கூட்டத்தினர், சிலைகளை வணங்கிக் கொண்டும், ஆடம்பர வாழ்க்கையில் திலைத்துக் கொண்டும், மலைகளைக் குடைந்து, கோட்டைகள் கட்டி வாழ்ந்தும் வந்தார்கள். தோட்டங்களும் நீரூற்றுக்களும் வேளாண்மைகளும் பேரீத்தத் தோட்டங்களும் அங்கு மிகுந்து காணப்பட்டன.





இவர்கள் வீட்டின் வாயில்கள் மிகவும் உயரமாக உள்ளது. அந்த அளவு உயரமான மக்களாக இருந்துள்ளனர். மலைகளையே குடைந்து வீடு அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அத்தகைய வலிமை மிக்க சமூகமாக இவர்கள் வாழ்ந்துள்ளார்கள். போகும் வழியெங்கும் அந்த ஊர் இறைவன் சாபத்திற்குரிய ஊர் என்பதை நினைவுபடுத்தும் முகமாக எங்கும் அழிவின் காட்சிகள் காணக்கிடைக்கும்.



நமது நாட்டு கோவில்களை ஒத்து சில இடங்களில் சித்திரங்களும் செதுக்கியுள்ளனர். அழகிய வேலைப்பாடுகள். பல தெய்வ வணக்கம் புரியும் நம் நாட்டு மக்களின் கலாசாரமும் இந்த மக்களிடமும் இருந்ததை இந்த கட்டிடங்கள் இன்றும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அவர்களிடம் நபியாக அனுப்பப்பட்ட ஸாலிஹ் (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கையையும் தூதுத்துவப் பிரச்சாரத்தையும் ஏற்க மறுத்தனர்.

'ஸாலிஹே! இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினோமோ அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? நீர் எதற்கு எங்களை அழைக்கிறீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்' என்று அவர்கள் கூறினர்.
-குர்ஆன் 11:62

நீங்கள் இறைத்தூதர் என்பதற்கு ஏதேனும் அத்தாட்சியை கொண்டு வந்தால்தான் உங்களை நபியாக ஏற்போம் என்றனர். இவ்வாறு முறையிடுவது அவர்களுக்கு சோதனையாகவும் தண்டனையாகவும் அமைந்து விடும் என்பதை புரியாத அவர்கள் தம் கோரிக்கையில் பிடிவாதமாகவும் இருந்தனர்.

அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, கண்கூடான அத்தாட்சியாக பெண் ஒட்டகம் ஒன்றை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.



நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்பதற்கு இதோ நீங்கள் கேட்ட அத்தாட்சி! இதனை எந்த தொந்தரவும் செய்யாமல் பூமியில் மேய விட்டு விடுங்கள்! அதற்கென தண்ணீர் அருந்தும் நாள் ஒன்றை ஒதுக்கிவிடுங்கள்! இதற்கு தீங்கிழைத்தால் அல்லாஹ்வின் தண்டனையை சந்திக்க நேரிடும் என்று ஸாலிஹ் (அலை) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
அந்த சமுதாயத்தில் மதிப்பும், பலமும் வாய்ந்த, திமிர் பிடித்த ஒருவன் ஸாலிஹ் (அலை) அவர்களின் உபதேசத்தையும், எச்சரிக்கையும் மீறி அந்த அற்புத ஒட்டகத்தை அறுத்து விட்டு, ஸாலிஹே! நீர் உண்மையில் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தால் நீர் வாக்களித்த தண்டனையை கொண்டு வாரும்! என்றான்.
மூன்று நாட்கள் வரை உங்கள் வீடுகளில் சுகம் அனுபவியுங்கள்! இது பொய்ப்பிக்கப்படாத வாக்காகும் என்றார்கள் ஸாலிஹ் (அலை) அவர்கள். மூன்று நாட்கள் முடிந்தன.

“இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
- அல்குர்அன் 11:61


(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.

அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
-அல்குர்ஆன் 15:80-82


பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
-அல்குர்ஆன் 89:9


ஸமூது கூட்டத்தினர் ஒன்பது வன்முறை கூட்டத்தினர்களாக இருந்து பல தெய்வ வணக்கம் செய்தல், கொள்ளை அடித்தல், அக்கிரம செயல்கள் புரிதல் போன்றவைகளில் பரவலாக ஈடுபட்டனர். அப்பொழுது அல்லாஹ் அதிசயமான உருவத்துடன் ஒரு ஒட்டகத்தை படைத்து அவர்களிடையே நடக்க செய்தான். அவ்வொட்டகத்தை எந்த ஒரு துன்பமும் செய்யாமலிருக்க கட்டளையிட்டான்.

அவர்கள் இறையானைக்கு சவால் விட்டு அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள். அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கியது.
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்.
-அல்குர்ஆன் 11:64-67





------------------------------------------------------------



இங்கு காட்டப்படும் மனித எலும்புக் கூடுக்ள் சாலிஹ் நபியின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடையது என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது ஆதாரபூர்வமாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.

ஆனால் பரிணாமவியலாருக்கு இதில் பல கேள்விகள் இருக்கிறது.

பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது.

நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது. ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.

ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.

மேலும் மனிதன் முன்பு நம்மைவிட உயரமாக இருந்ததற்கும் மனிதனின் எலும்புக் கூடு கிடைத்துள்ளது. அந்த எலும்பும் இப்போது நமக்குள்ள அதே அமைப்பில்தான் உள்ளது. பரிணாம மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அளவில் தான் சிறிதாகி இருக்கிறது.

------------------------------------------------------------
நபி (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு செல்லும் போது வாகனத்தில் அமர்ந்தபடியே போர்வையால் தம்மை மறைத்துக் கொண்டு அந்த இடங்களை விட்டும் விரைவாகக் கடந்தார்கள்.

ஹிஜ்ர் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் அருந்தவோ, தண்ணீர் நிரப்பிக் கொள்ளவோ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். நாங்கள் நீரை நிரம்பிக் கொண்டோம். அந்த தண்ணீரைக் கொண்டு மாவும் பிசைந்து விட்டோமே! என்று நபித் தோழர்கள் கூறியபோது, தண்ணீரை ஊற்றி விடுங்கள்! மாவையும் வீசி விடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு கிடைத்த தண்டனை போன்று உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்ற அச்ச உணர்வுடனும் அழுதவாறும் நுழையுங்கள் என்று உபதேசித்தார்கள்.
-புகாரி 3377, -3381)


இந்த இடங்களை பார்க்கும் நமக்கு இறைவனின் தண்டனை எப்படி இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் வர வேண்டும். நேரம் கிடைப்பவர்கள் இந்த இடங்களை சென்று பார்வையிடவும்.

69 comments:

  1. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    ஸாலிஹ் நபியின் வரலாறை அழகிய முறையில் சொல்லி உள்ளீர்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மலைக்குகைகளைப்பற்றி படங்களுடன் விளக்கியதற்கு நன்றி.
    இந்த காரணங்களுக்காக சவுதியில் வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது சகோ.

    ReplyDelete
  2. வஅலைக்கும் சலாம் சகோ சிராஜ்!

    //ஸாலிஹ் நபியின் வரலாறை அழகிய முறையில் சொல்லி உள்ளீர்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மலைக்குகைகளைப்பற்றி படங்களுடன் விளக்கியதற்கு நன்றி.
    இந்த காரணங்களுக்காக சவுதியில் வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது சகோ.//

    உங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் நானும் பிரார்த்திக்கிறேன். நானும் முயற்ச்சிக்கிறேன்.

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  3. சலாம் சகோ வாஞ்சூர் பாய்!

    //அரிய விடியோக்கள் காணுங்கள்//

    வருகைக்கும் சுட்டியை தந்தமைக்கும் ஓட்டளித்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. இது போன்ற இறைவனின் அத்தாட்சிகளைப் பார்க்கு பொழுது

    (இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள்
    உதவியும் தேடுகிறோம்.

    நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக

    (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி!

    (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

    அல் குர் ஆன் 1 (5 - 7)

    என்று பிரார்த்திப்பதைத் தவிற வேறு என்ன தோன்றும்.

    அருமையான வரலாற்றுப் பதிவு சகோ....

    ReplyDelete
  5. சலாம் சகோ சையது இப்றாகிம்ஸா!

    //என்று பிரார்த்திப்பதைத் தவிற வேறு என்ன தோன்றும்.

    அருமையான வரலாற்றுப் பதிவு சகோ....//

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  6. வாழ்க வள்முடன் சகோ சுவனப்பிரியன்,
    உலகின் முதல் மனிதனக சில மத வேதங்களின் படி ஆதம் அறியப்படுகிறார்.புஹாரியில் உள்ள ஒரு ஹதித் ஆதம் 60முழ்ம்(90 அடி) உயரம் இருந்ததாக் கூறுகிறது.பைபிளில் நூஹ்(னோவா) கால்த்தில் இராட்சதர்கள் வாழ்ந்ததாக [ஆதியாகம் 6:4]கூறுகிறது.அந்த எலும்புக்கூடு அதனை நிரூபிக்கும் வகையில் த்யாரிக்கப்பட்ட காணொளி என்றே கூறலாம்.இவை அறிவியலின் படி ஆதாரமற்ற விடயம்.
    நீங்கள் குறிப்பிட்ட மலைக்குகை மக்கள் எபோது வாழ்ந்தார்கள் என விவரங்கள்,அங்கு கிடைத்த கல்வெட்டுகள் குறித்து விவரம் இருந்தால் பகிரலாம்.
    *************
    சரி பரிணம்த்திற்கு வருவோம்

    /. தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை./
    எங்கு சம்ர்ப்பிக்க பட வேண்டும் சகோ?.அறிவியலின் படி இதற்கு இடைப்பட்ட படிமங்கள் உண்டு.ஒரு விந்தையான் விடயம் எனில் திமிங்கலம் நிலத்தில் இருந்து நீருக்கு சென்ற உயிரினம்
    http://www.talkorigins.org/faqs/comdesc/section1.html#morphological_intermediates
    http://www-personal.umich.edu/~gingeric/PDFfiles/PDG413_Whaleevol.pdf

    இபோது அறிவியலில் இடைபட்ட உயிரின படிமங்களாக் ஏற்கப்பட்ட ஒன்றையாவது தவறு என நிரூபித்தால் நீங்கள் இருக்கும் இடமே வேறு சகோ!!!!!!!பல் பல்கலை கழகங்கள் உங்களை அழைத்து பல் மில்லியன் டாலர்கள் தந்து ஆய்வு மேற்கொள்ள அழைப்பார்கள்.
    உங்களுக்கு ஆய்வு செய்ய பிடிக்கவில்லை எனில் எனக்கு மட்டும் ஒரே ஒரு இடைப்பட்ட உயிரின படிமம் தவறு என்ற இரக்சியம் சொல்லுங்கள்.நான் பெரிய ஆளாகி விட்டு போகிறேன்.பரிணாம்ம் கிடக்குது வெங்காயம்!!!!!!!!!!.
    .ஆளுக்கு 50 - 50

    Deal or No Deal!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு....சகோ.
    உங்களுக்கு அரபி தெரியுமா? அருமை
    என்னை தவறாக நினைக்காதீர்கள்......

    டைனோசர் அழிந்துவிட்டது....அவைகள் பாவம் செய்தது, பல தெய்வ வழிபாடு செய்தது அதனால் இறைவன் அழித்துவிட்டார் என்று கூறுவது சரியாகுமா? சகோ...சிந்தியுங்கள்

    அதேபோல் தான் நீங்கள் இந்த பதிவில் கூறுகிறீர்கள். குரானிலும் பைபிளிலும் இதை தான் சொல்கிறார்கள்.

    கால மாற்றத்தால் மக்கள் அழிந்தனர்...அதை இறைவன் செய்தார் என்பது சரியா?

    இசுலாமை பரப்பிய, குரானை எழுதிய அலி கொலை செய்யப்பட்டார்....ஏன் அல்லா அவரை தண்டித்தார்?

    ஏன் நபி இறந்தவுடன் இசுலாம் இரண்டாக உடைந்தது? இதுவும் இறைவன் செயலா?

    சிந்தியுங்கள் சகோ
    சகோ என்னுடைய பின்னூட்டம் எந்த வகையிலாவது உங்கள் மனதை புண்படுத்தினால், வெறுப்பை ஏற்ப்படுத்தினால் தயங்காமல் கூறுங்கள்.

    ReplyDelete
  8. Allaa mammal aniyaayakaara
    Koottathil irunthu pathukaappaanaaka!

    ReplyDelete
  9. சகோ புரட்சி மணி!

    //டைனோசர் அழிந்துவிட்டது....அவைகள் பாவம் செய்தது, பல தெய்வ வழிபாடு செய்தது அதனால் இறைவன் அழித்துவிட்டார் என்று கூறுவது சரியாகுமா? சகோ...சிந்தியுங்கள்//

    மனிதனுக்கு இது நன்மை இது தீமை என்று இறைவன் சொல்லியுள்ளான். அதற்காக வேதங்களையும் கொடுத்து அதை விளக்க தூதர்களையும் ஒவ்வொரு காலத்திலும் அனுப்பியுள்ளான். ஆனால் மனிதன் அந்த வேதங்களை சிதைத்து தனது கருத்துகளை ஏற்றி விடுகிறான். இங்கு தவறு எங்கு நடக்கிறது. தவறான கொள்கையின்பால் தனது மனதை பறி கொடுத்த மனிதனிடம் தவறு இருக்கிறது.

    நமது தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் நபி வந்துள்ளார். ஏக இறைவனையே வணங்க வேண்டும் என்று போதித்துள்ளார். இருந்தும் இன்றைய தமிழகத்தின் நிலை என்ன? இத்தனை தெய்வங்களை கற்பனையாக கொண்டு வந்தது நமது முன்னோர்கள்தானே!

    //கால மாற்றத்தால் மக்கள் அழிந்தனர்...அதை இறைவன் செய்தார் என்பது சரியா?//

    அது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஏனெனில் குர்ஆன் கண்டிப்பாக இறை வசனம் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள். இதை நம்புங்கள் என்று உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை.

    //இசுலாமை பரப்பிய, குரானை எழுதிய அலி கொலை செய்யப்பட்டார்....ஏன் அல்லா அவரை தண்டித்தார்?

    ஏன் நபி இறந்தவுடன் இசுலாம் இரண்டாக உடைந்தது? இதுவும் இறைவன் செயலா?//

    அலியை விடுங்கள். இதற்கு முன்னால் சில தேசத்தவர் இறைத் தூதர்களையே கொலை செய்துள்ளார்கள். ஏக இறைவனை வணங்கச் சொன்னதே கொலைக்கான காரணம். இந்த மனித படைப்பை இறைவன் படைத்ததே அவனை வணங்க வேண்டும் என்பதற்காகத்தான். அதிலே மாறு செய்து சாத்தானுக்கு வழி பட்டால் இறைவன் கோபப்பட மாட்டானா?

    அதே போல் நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது நானும் நீங்களும் இணையத்தின் முன்னால் விவாதிப்பது என்பது வரை இறைவனுக்கு தெரியும். எல்லாம் ஏற்கெனவே எழுதியபடி அதாவது விதிப்படி நடந்து வருகிறது.

    ReplyDelete
  10. Anonymous12:26 PM

    பரிணாமத்திற்கு ஆதாரம் ஆதாரம் என பல மதவாதிகள் இணையத்தில் கூக்குரலிடுவதை சகிக்கவில்லை. அறிவியல் புத்தகங்களில் ஆதாரங்கள் கொட்டிகிடக்கின்றன. ஒருவேளை இவர்களுக்கு கிரிக்கட் மேட்ச் மாதிரி லைவ் ரிலே பண்ணவேண்டும் போலிருக்கிறது. படிமங்கள், மரபணு அமைப்பு, உயிரியல் செயல்பாடுகள் என பரிணாமம் பற்றிய ஆதாரங்கள் ஆயிரம் உண்டு. பரிணாமவாத ஆராய்ச்சியாளர் தவிர பிற உயிரியல் மருத்துவ விஞ்ஞானிகளை கேளுங்கள் ஆதாரங்களை அள்ளி தருவார்கள். இப்போது பரிணாமம் பொய் என கருதினால் அந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மதரசாவில்தான் ஆசிரியப்பணி செய்யவேண்டும். பரிணாமம் உண்மை என நம்பிதான் தற்போதைய உயிரியலே இயங்குது. இதோ மருத்துவ உலகம் வழங்கும் ஆதாரம். மனித கரு உருவாகி வளரும் போது நமது முன்னோர்களான ஊர்வன நீந்துவன போன்றவைகளின் கருக்களை போலவே இருக்குது. (http://www.youtube.com/watch?v=uAZmLYWEPGk). ஏன் இவ்வாறு உள்ளது எனில் ஊர்வன நீந்துவன இவைதான் மாறி குரங்காகி பின் மனிதனாகிவிட்டது. இதனால் அவற்றின் மரபணுக்கள் நம்மிடம் உண்டு. பல இயங்கியும் வருகின்றன். ஆக ஊர்வன நீந்துவன இவற்றின் அப்டேடட் வெர்சன்தான் நாம்!

    மேலும் ஒரு சந்தேகம்...
    ஆண்டவன் ஆதாமிலிருந்துதான் ஹவ்வாவை (ஏவாளை) உருவாக்கினானாம். அப்போது ஆண்டவர்தான் முதல் ஸ்டெம் செல் டெக்னாஜிஸ்டாக இருக்கணும். அவர் ஆதாமின் செல்களை எப்படி உபயோகப்படுத்தியிருப்பார்? ஆதாமின் செல்லில் X குரோமோசோம்தானே இருக்கும். ஹவ்வாவிற்கோ Y தேவைபடுமே?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒரு சந்தேகம்
      குரங்கிலிருந்நு மனிதன் வந்தானா ?
      மனிதன் குரங்காகினானா?
      பரிணாமாமம் விசித்திரம்

      Delete
  11. சகோ சார்வாகன்!

    //நீங்கள் குறிப்பிட்ட மலைக்குகை மக்கள் எபோது வாழ்ந்தார்கள் என விவரங்கள்,அங்கு கிடைத்த கல்வெட்டுகள் குறித்து விவரம் இருந்தால் பகிரலாம்.//
    பண்டைய அரபுகளான அல் அரபுல் பாயிதா என்ற முதல் பிரிவில் ஸமூது கோததிரத்தாரான குகைவாசிகள் வருகிறார்கள். இவர்கள் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டதால் இவர்களைப் பற்றிய வரலாறுகள் துல்லியமாக தெரியவில்லை. குர்ஆன் கூறும் இடங்களும் தற்போதய மதாயின் சாலிஹ் ஊர்களும் ஒத்துப் போவதாலும் 'அந்த ஊர் உங்கள் அருகிலேயே இருக்கிறது' என்று குர்ஆன் கோடிட்டுக் காட்டுவதாலும் இவைதான் குகை மனிதர்கள் வாழ்ந்த நகரம் என்று முடிவெடுக்கப்படுகிறது. சில அரபு கல்வெட்டுகளும் அல்ஊலா அருங்காட்சயகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    1) அல் அரபுல் பாயிதா

    இவர்கள் பண்டைக் கால அரபியர்களான ஆது, ஸமூது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம், ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹழ்ர மவ்த் ஆகிய வமிசத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டதால் இவர்களுடைய வரலாற்று குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.

    2) அல் அரபுல் ஆபா

    இவர்கள் எஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினர் ஆவர். கஹ்தான் வமிச அரபியர் என்றும் இவர்களை அழைக்கப்படும்.

    3) அல் அரபுல் முஸ்தஃபா

    இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வமிச அரபிகள் என்றும் அழைக்கப்படும்.

    //எங்கு சம்ர்ப்பிக்க பட வேண்டும் சகோ?.அறிவியலின் படி இதற்கு இடைப்பட்ட படிமங்கள் உண்டு.ஒரு விந்தையான் விடயம் எனில் திமிங்கலம் நிலத்தில் இருந்து நீருக்கு சென்ற உயிரினம்//
    அப்போ கடலில் திமிங்கிலங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறதே! வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து ஒரு திமிங்கிலமும் கடலைத் தாண்டி வரவில்லையே! அடுத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் நில வாழ் உயிரினங்களுக்கும் அடிப்படையிலேயே சுவாச உறுப்புகளில் மாற்றங்கள் உள்ளது. தண்ணீர் இல்லாமல் அவற்றின் உடல் அமைப்புக்கு நிலத்தில் வாழவும் முடியாதே!

    நீங்கள் கொடுத்துள்ள சுட்டி முழுவதுமாக கிடைத்த படிமங்கள் அல்ல. இவர்களாக பல இடங்களிலும் சேகரித்து எடுத்து ஒட்ட வைத்தது. மேலும் அவை ஒரிஜினல் படங்களும் அல்ல. வரைந்தவையே! மனிதனுக்கு இது போன்ற பரிணாம வளர்ச்சியின் படிமங்களை இது வரை சமர்ப்பிக்கவில்லையே! ஆதார சுட்டிகள் அப்படி ஏதும் இருக்கிறதா.? நமது முக்கிய பிரச்னையே மனிதனின் பரிணாமத்தைப் பற்றியதுதானே.

    செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்று இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ் செடியானது ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப்பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒருவித வாயுவை வெளியேற்றி, ஒலியை ஏற்படுத்தி பக்கத்தில் உள்ள செடியை எச்சரிக்கை செய்கிறது. இதனை நுட்பமான கேமராவின் மூலம் ஆய்வு செய்து முதன் முறையாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
    -viduthalai 16-02-2012
    இந்த ஆய்வின் மூலம் மனிதர்களைப் போல் செடிகளும் பேசிக் கொள்வதாக தற்போது கண்டு பிடித்துள்ளனர். இவற்றைப் பற்றியும் இவை எதிலிருந்து பரிணாமம் அடைந்தது என்பது பற்றியும் உங்கள் ஆசான் டார்வின் என்ன சொல்கிறார்? கொஞ்சம் விளக்குங்களேன்.

    ReplyDelete
  12. அனானி!

    //இப்போது பரிணாமம் பொய் என கருதினால் அந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மதரசாவில்தான் ஆசிரியப்பணி செய்யவேண்டும். பரிணாமம் உண்மை என நம்பிதான் தற்போதைய உயிரியலே இயங்குது.//

    வேலை போய் விடுமே அரசாங்கங்கள் பரிணாம ஆராய்ச்சிக்காக செலவிடும் கோடிகள் முடக்கப்படுமே என்ற அச்சத்தினாலதான் இன்று வரை பல அறிஞர்கள் பரிணாம வாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை முதலில் ஒத்துக் கொண்டதற்கு நன்றி!

    //இதோ மருத்துவ உலகம் வழங்கும் ஆதாரம். மனித கரு உருவாகி வளரும் போது நமது முன்னோர்களான ஊர்வன நீந்துவன போன்றவைகளின் கருக்களை போலவே இருக்குது.//

    எல்லாம் அனுமானம்தான். உறுதிப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளல்ல.

    //மேலும் ஒரு சந்தேகம்...
    ஆண்டவன் ஆதாமிலிருந்துதான் ஹவ்வாவை (ஏவாளை) உருவாக்கினானாம். அப்போது ஆண்டவர்தான் முதல் ஸ்டெம் செல் டெக்னாஜிஸ்டாக இருக்கணும். அவர் ஆதாமின் செல்களை எப்படி உபயோகப்படுத்தியிருப்பார்? ஆதாமின் செல்லில் X குரோமோசோம்தானே இருக்கும். ஹவ்வாவிற்கோ Y தேவைபடுமே?//

    சுட்ட களிமண்ணிலிருந்து ஆதமை படைத்து அதற்கு உயிரையும் உண்டாக்கியவனுக்கு அதே ஆதமின் விலா எலும்பிலிருந்து ஹவ்வாவை படைப்பது சிரமமான காரியமா. உங்களுக்கோ எனக்கோதான் சிரமம். எல்லாம் வல்ல இறைவனுக்கு சிரமமல்ல.

    மேலும் இன்று வரை உயிருக்கு சரியான ஒரு வரையறையை அறிவியலால் தர முடியவில்லை. வரும் காலங்களிலும் முடியாது என்றும் குர்ஆன் கூறுவதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

    'அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை நாம் படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.'

    'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்' என்று கூறுவீராக!'

    -குர்ஆன் 36:78,79

    ReplyDelete
  13. Anonymous1:41 PM

    எழுதும் போது typo..... சரியான கேளுவி ஆதாமிடமுள்ளதோ XY குரோமோசோம்கள் ஹவ்வாவின் XX தேவைக்கு என்ன செய்திருப்பார் என்பதே?

    ReplyDelete
  14. Anonymous6:39 PM

    //வேலை போய் விடுமே அரசாங்கங்கள் பரிணாம ஆராய்ச்சிக்காக செலவிடும் கோடிகள் முடக்கப்படுமே என்ற அச்சத்தினாலதான் இன்று வரை பல அறிஞர்கள் பரிணாம வாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை முதலில் ஒத்துக் கொண்டதற்கு நன்றி!//

    :நான் என்ன சொல்லுறேன் நீங்க என்ன புரிஞ்சிக்கிறீங்களே போங்க. இப்ப ஒருத்தர் குரானை நம்பமாட்டேன்,ஆனா நான் ஒரு முஸ்லிம்ன்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? அது போல பரிணாமத்தை மறுப்பவர் உயிரியல் ஆராய்ச்சியாளர்ன்னு சக விஞ்ஞானிகளே ஒத்துக்கிட மாட்டாங்க.

    மேலும் பரிணாம ஆராய்ச்சியாளர் எண்ணிக்கை 5% வீதம் கூட இருக்காது. அவர்கள் விடும் டூப்பை ஏன் மீதியுள்ள 95% சதவீத விஞ்ஞானிகள் ஆதரிக்க வேண்டும்? அவர்கள் ஒழிந்தால் அந்த தொகையும் மீதமுள்ளவர்க்கே கிட்டுமல்லவா?


    //எல்லாம் அனுமானம்தான். உறுதிப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளல்ல.//

    பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விலங்கு to மனுசன் மாற்றத்தை எப்படி உறுதிபடுத்துவது? சொல்லுங்க பார்ப்போம். நான ஏற்கனவே கேட்டா மாதிரி நேரடி ஒளிபரப்பா செய்ய முடியும். ஒரு சொல்வாடை உண்டு. வாதத்திற்கு மருந்துதுண்டு, விதண்டாவாதத்துக்கு இல்லையென. நீங்க சொன்னா மாதிரி 1 2 3 4 ன்னு எல்லா நிலையையும் காட்டுன மட்டும் உங்கள மாதிரி ஆளுக ஒத்துக்கவா போறீங்க. உடனே ஆண்டவர்தான் இவற்றை படைச்சாரு. இவை ஒன்னுல இருந்து இன்னொன்னா மாறுனதுக்கு ஆதாரம் கொண்டுவான்னுவீங்க.

    நாங்களும் சொல்லிற்றோம். கடவுள் சில மனிதர்களை மட்டும் தூதர்களாக தேர்ந்தெடுத்து பாரபட்சம் காட்டாமல் நாம எல்லோரையும் தூதர் ரேஞ்சுக்கு மாத்தி தேவதூதரை நம்மிடம் அனுப்பி நான்தான்டா உலகினை படைத்தேன் எனச் சொன்னால் இந்த பரிணாம கருமத்தையெல்லாம் ஏன் நம்புகிறோம்? கடவுள் கொஞ்சமும் பொறுப்புணர்ச்சியின்றி கேப்விட்டு விட்டு தூதர்களை அனுப்பிவிட்டு கடைசியில் இனிமே எல்லாமே சரியாகி விட்டது என்பது போல இனி தூதர்களை அனுப்ப மாட்டேன் என அறிக்கைவிட்டால் எப்படி?

    ReplyDelete
  15. Anonymous6:40 PM

    //வேலை போய் விடுமே அரசாங்கங்கள் பரிணாம ஆராய்ச்சிக்காக செலவிடும் கோடிகள் முடக்கப்படுமே என்ற அச்சத்தினாலதான் இன்று வரை பல அறிஞர்கள் பரிணாம வாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை முதலில் ஒத்துக் கொண்டதற்கு நன்றி!//

    :நான் என்ன சொல்லுறேன் நீங்க என்ன புரிஞ்சிக்கிறீங்களே போங்க. இப்ப ஒருத்தர் குரானை நம்பமாட்டேன்,ஆனா நான் ஒரு முஸ்லிம்ன்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? அது போல பரிணாமத்தை மறுப்பவர் உயிரியல் ஆராய்ச்சியாளர்ன்னு சக விஞ்ஞானிகளே ஒத்துக்கிட மாட்டாங்க.

    மேலும் பரிணாம ஆராய்ச்சியாளர் எண்ணிக்கை 5% வீதம் கூட இருக்காது. அவர்கள் விடும் டூப்பை ஏன் மீதியுள்ள 95% சதவீத விஞ்ஞானிகள் ஆதரிக்க வேண்டும்? அவர்கள் ஒழிந்தால் அந்த தொகையும் மீதமுள்ளவர்க்கே கிட்டுமல்லவா?


    //எல்லாம் அனுமானம்தான். உறுதிப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளல்ல.//

    பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விலங்கு to மனுசன் மாற்றத்தை எப்படி உறுதிபடுத்துவது? சொல்லுங்க பார்ப்போம். நான ஏற்கனவே கேட்டா மாதிரி நேரடி ஒளிபரப்பா செய்ய முடியும். ஒரு சொல்வாடை உண்டு. வாதத்திற்கு மருந்துதுண்டு, விதண்டாவாதத்துக்கு இல்லையென. நீங்க சொன்னா மாதிரி 1 2 3 4 ன்னு எல்லா நிலையையும் காட்டுன மட்டும் உங்கள மாதிரி ஆளுக ஒத்துக்கவா போறீங்க. உடனே ஆண்டவர்தான் இவற்றை படைச்சாரு. இவை ஒன்னுல இருந்து இன்னொன்னா மாறுனதுக்கு ஆதாரம் கொண்டுவான்னுவீங்க.

    நாங்களும் சொல்லிற்றோம். கடவுள் சில மனிதர்களை மட்டும் தூதர்களாக தேர்ந்தெடுத்து பாரபட்சம் காட்டாமல் நாம எல்லோரையும் தூதர் ரேஞ்சுக்கு மாத்தி தேவதூதரை நம்மிடம் அனுப்பி நான்தான்டா உலகினை படைத்தேன் எனச் சொன்னால் இந்த பரிணாம கருமத்தையெல்லாம் ஏன் நம்புகிறோம்? கடவுள் கொஞ்சமும் பொறுப்புணர்ச்சியின்றி கேப்விட்டு விட்டு தூதர்களை அனுப்பிவிட்டு கடைசியில் இனிமே எல்லாமே சரியாகி விட்டது என்பது போல இனி தூதர்களை அனுப்ப மாட்டேன் என அறிக்கைவிட்டால் எப்படி?

    ReplyDelete
  16. திரு சாரங்கன்!
    // நீங்கள் அல்லாவின் காரெக்டரையே புரிஞ்சிக்காம எழுதுகிறீர்கள். குரான் ஹிந்துத்வத்தின் அந்தர் பாகம் என்றால் நான் இன்றே ஹிந்டுத்த்வத்திளிருந்து வெளியேறிவிடுவேன்//

    அப்படி எல்லாம் கோபப்பட்டு எதையும் செஞ்சுடாதீங்க. :-)

    கண்ணதாசன் 'சேரமான் காதலி' என்ற தொடரை கல்கியில் எழுதியதை அனைவரும் படித்திருப்போம். இவர் இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியராக பதியப்படுகிறார். இது அந்த கதையிலும் வரும். இவரது அளுகையில் கேரளா இருந்தபோது தனது ஆஸ்தான குருமார்கள் முகமது நபியைப் பற்றி புராணங்களிலும் வேதங்களிலும் உள்ள மேற்கோள்களை காட்டுகின்றனர். அந்த நேரத்தில் அரபு வணிகக் கூட்டமும் சேரமான் பெருமாளை சந்தித்து முகமது நபி வருகையை உறுதிப் படுத்துகின்றனர். உடன் தனது ஆட்சி அதிகாரத்தை தனது வாரிசுகளிடம் கொடுத்து விட்டு முகமது நபியை காண மெக்கா புறப்படுகிறார். அங்கு அவருக்கு தாஜூதீன் என்ற பெயரையும் முகமது நபி சூட்டுகிறார். அதன் பிறகு இந்தியா திரும்பும் வழியில் ஓமனில் நோய்வாய்ப்படுகிறார். தனது கையால் 'இந்தியாவில் மசூதிகள் கட்டி ஓரிறை பிரசாரத்தை துவக்குங்கள்' என்ற கடிதத்தை மாலிக் இப்னு தீனார் என்பவரிடம் கொடுத்தனுப்புகிறார். இதை ஏற்றுக் கொண்ட சேரமான் பெருமாளின் வாரிசுகள் 14 மசூதிகளை அந்த நேரத்தில் கேரளாவில் கட்டுகின்றனர்.

    நோய் முற்றவே சேரமான் பெருமாள் ஓமனிலேயே மரணமடைகிறார். அவரது அடக்கஸ்தலம் இன்றும் ஓமனில் உள்ளது.

    நான் கேட்பது கால்டுவெல் வந்துதான் வேதங்களையும் புராணங்களையும் மாற்றி விட்டதாக சொல்கிறீர்கள். கால்டுவெல்லின் காலம் 1789. ஆனால் சேரமான் பெருமாள் காலமோ 1400 வருடங்களுக்கு முந்தயது. அந்த நேரத்திலேயே வேதங்களை பார்த்து முகமது நபியின் வருகையை எவ்வாறு அந்த வேதம் படித்த பண்டிதர்களால் சொல்ல முடிந்தது.

    சேரமான் பெருமாளால் கட்டப்பட்ட முதல் பள்ளி இன்றும் கேரளாவில் உள்ளது. இது அரசாங்கத்தால் ஆவணமாக பாதுகாக்கப்பட்டும் வருகிறது.


    http://www.iosworld.org/interview_cheramul.htm

    http://www.indiatraveltimes.com/travelogue/mosque.html

    http://www.youtube.com/watch?v=BU2duvVicuI

    ReplyDelete
  17. நண்பரே.
    நபி? பெயர்களை எழுதும்போது ஆங்கிலத்திலும் சேர்த்து எழுதுங்கள். என்னை போன்ற தமிழ் தெரியாத மக்குகளுக்கு படிக்கவும் தேடவும் உதவும்.

    பதிவில் நிறைய Archaeological ஆதாரங்களை எதிர்பார்த்தேன். நீங்கள் சொல்வதைப் போல ஆதாரங்களை பார்த்தால் உண்மையில் அயோத்தியில் சர்சைக்குரிய இடத்தில் இராமர் கண்டிப்பாக பிறந்திருப்பார்!!!!!!!!!!

    ////கால மாற்றத்தால் மக்கள் அழிந்தனர்...அதை இறைவன் செய்தார் என்பது சரியா?//

    அது முஸ்லிம்களின் நம்பிக்கை.//

    என்ன நண்பரே இஸ்லாத்தில் நம்பிக்கை வார்த்தைக்கு என்ன வேலை. அதுதான் உண்மை என்று சொல்ல வேண்டாமா.

    சார்வாகனுக்கு, அந்த ரகசியத்தை சொல்லிவிட்டீர்களா. கிடைக்கும் பணத்தில் பங்கு கேட்கலாம் என்று இருக்கிறேன். பணம் முக்கியம் அமைச்சரே -:)

    ReplyDelete
  18. சலாம் சகோ...
    பகிர்வுக்கு நன்றி...படங்கள்,வரலாறு எல்லாம் அருமை...இவை எல்லாவற்றையும் முஸ்லிம்களாகிய நாம் நம்புகின்றோம்...மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நீங்கள் இதை பகிரவில்லை...

    ReplyDelete
  19. Assalamu alikum bro!
    Arumaiyana varalaru!
    Neril vanthu parka thonrukirathu!
    parinamam nerubika padatha kolgai!
    Nerubitha mathiri vaai keeliya pesuvargal!!!

    ReplyDelete
  20. சகோ சுவனப்பிரியன்,
    // அலியை விடுங்கள். இதற்கு முன்னால் சில தேசத்தவர் இறைத் தூதர்களையே கொலை செய்துள்ளார்கள். ஏக இறைவனை வணங்கச் சொன்னதே கொலைக்கான காரணம். இந்த மனித படைப்பை இறைவன் படைத்ததே அவனை வணங்க வேண்டும் என்பதற்காகத்தான் //
    இறைத்தூதர்களை கூட காப்பாற்ற முடியாதவன் இறைவனா? இவர்களுக்கு ஏன் கடுமையான தண்டனை. பல தெய்வத்தை வழிபடுகின்றவனுக்கும், ஒரு தெய்வத்தை வழிபடுகின்றவனுக்கும் ஒரே தண்டனை தானே அவர் கொடுக்கிறார். ஏன்? சிந்தியுங்கள் சகோ.

    // நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது நானும் நீங்களும் இணையத்தின் முன்னால் விவாதிப்பது என்பது வரை இறைவனுக்கு தெரியும். எல்லாம் ஏற்கெனவே எழுதியபடி அதாவது விதிப்படி நடந்து வருகிறது. //
    அதேபோல் பல தெய்வ வழிபாடும் அவர் எழுதியபடி விதிப்படி தானே நடக்கிறது? இறைவன் விருப்பபடி விட்டுவிட்டால் தானே அவருக்கே மதிப்பு. :)

    //ஆனால் சேரமான் பெருமாள் காலமோ 1400 வருடங்களுக்கு முந்தயது. அந்த நேரத்திலேயே வேதங்களை பார்த்து முகமது நபியின் வருகையை எவ்வாறு அந்த வேதம் படித்த பண்டிதர்களால் சொல்ல முடிந்தது. //
    இதற்க்கு ஆதாரம் ஏதேனும் சுட்டி சகோ ?

    ReplyDelete
  21. ஏக இறைவன் தன் தூதர்களை அரேபிய பாலைநிலத்திற்கு மட்டுமே அனுப்பியுள்ளானா?

    இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எந்தத் தூதரையும் அனுப்பவில்லையா?

    அப்படி அனுப்பியிருந்தால் அவர்கள் யார் யார்? அவர்களைப் பற்றி முகமதுவின் குர்ரானில் உள்ளதா?

    உங்களின் அந்த ஏக இறைவன் ஏன் இத்தனை உயிரினங்களைப் படைக்கவேண்டும்? அவற்றால் என்ன நன்மை? யாருக்கு நன்மை?

    மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் உங்களின் அந்த ஏக இறைவனை தினமும் தொழுகின்றனவா?

    ReplyDelete
  22. ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

    படங்களுடன் கூடிய ஒரு நல்ல பகிர்வு. மதைன் ஸாலிஹ் இடத்திலிருந்து அல்-ஊலா சுமார் 20 km தூரம்தான் இருக்கும்.

    ///நபி (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு செல்லும் போது வாகனத்தில் அமர்ந்தபடியே போர்வையால் தம்மை மறைத்துக் கொண்டு அந்த இடங்களை விட்டும் விரைவாகக் கடந்தார்கள்.///

    ///அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு கிடைத்த தண்டனை போன்று உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்ற அச்ச உணர்வுடனும் அழுதபடியே அன்றி நுழையாதீர்கள் என்று உபதேசித்தார்கள்.///

    இன்னும் இந்த இடங்களுக்கு நான் சென்று பார்க்கவில்லை. ஆனால், கிட்டத்தட்ட இதேபோன்ற வீடுகள் பெட்ரா ஜோர்தானில் இருப்பது ஓர் ஆச்சரியம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  23. நண்பர் நரேன்!

    //நண்பரே.
    நபி? பெயர்களை எழுதும்போது ஆங்கிலத்திலும் சேர்த்து எழுதுங்கள். என்னை போன்ற தமிழ் தெரியாத மக்குகளுக்கு படிக்கவும் தேடவும் உதவும்.//

    தமிழகத்தில் பிறந்து விட்டு தமிழ் தெரியாது என்று சொல்வது இப்போ பேஷன். தமிழா.....திராவிடா.....இது தகுமா! கலைஞரே! விரமணியாரே! இந்த அநியாயத்தை யாரும் கேட்பார் இல்லையா! :-)

    ஸாலிஹ் நபி – Prophet Salih.

    //பதிவில் நிறைய Archaeological ஆதாரங்களை எதிர்பார்த்தேன். நீங்கள் சொல்வதைப் போல ஆதாரங்களை பார்த்தால் உண்மையில் அயோத்தியில் சர்சைக்குரிய இடத்தில் இராமர் கண்டிப்பாக பிறந்திருப்பார்!!!!!!!!!!//

    ஒரு ஊரே அரங்காட்சியகமாக இருக்கிறதே! காணொளியில் பார்க்கவில்லையா! அல்ஊலா அருங்காட்சியகத்தில் அவர்கள் பயன்படுத்திய பல பொருட்கள், கல்வெட்டுகள் இன்றும் உள்ளது. எனக்கு நேரமில்லாததால் அங்கு செல்லவில்லை. இனி ஒரு முறை முயற்ச்சிக்கிறேன்.

    அடுத்த ராமஜென்ம பூமியை இதோடு எப்படி ஒப்பிடுகிறீர்கள்? ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் இல்லை. வேத குறிப்புகளும் இல்லை. அகழ்வாராய்ச்சி முடிவுகளும் அங்கு கோவில் இரந்ததாக சொல்லவில்லை. எல்லாம் பதவி ஆசையால் வந்த ராம பக்தி நரேன். உண்மையான ராமபக்தர்களுக்குத் தெரியும் பிஜேபியின் அரசியல் தந்திரம். உண்மையில் ராமர் என்ற அரசர் வாழ்ந்ததற்கு சில ஆதாரங்கள் குறிப்புகள் மூலமாக கிடைக்கிறது. அந்த இடங்களும் இப்போது இருப்பது ஆப்கானிஸ்தானத்தில். எனவே இது விபரமாக நீங்கள் தாலிபான்களிடம் முறையிடலாம்.

    //என்ன நண்பரே இஸ்லாத்தில் நம்பிக்கை வார்த்தைக்கு என்ன வேலை. அதுதான் உண்மை என்று சொல்ல வேண்டாமா.//

    குர்ஆன் சொல்வதால் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். குர்ஆன் இறை வேதம்தானா என்பதற்கு நான் பல ஆதாரங்களை பழைய பதிவுகளில் கொடுத்தும் இருக்கிறேன்.
    //சார்வாகனுக்கு, அந்த ரகசியத்தை சொல்லிவிட்டீர்களா. கிடைக்கும் பணத்தில் பங்கு கேட்கலாம் என்று இருக்கிறேன். பணம் முக்கியம் அமைச்சரே -:)//

    குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட படிமத்தை இன்னும் சமர்ப்பிக்காத போது அத தவறு என்று எப்படி நிரூபிக்க முடியும்? முதலில் எந்த இடததில் குரஙகுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினத்தின் படிமம் கிடைத்தது என்ற விபரத்தை நீங்களாவது கூறுங்களேன். கிடைக்கும் பணத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு தருகிறேன். :-)

    Deal or No Deal!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  24. சகோ சீனி!

    //Allaa mammal aniyaayakaara
    Koottathil irunthu pathukaappaanaaka!//

    உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும். ஆமின்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  25. சலாம் சகோ ஹாஜாமைதீன்!

    //சலாம் சகோ...
    பகிர்வுக்கு நன்றி...படங்கள்,வரலாறு எல்லாம் அருமை...இவை எல்லாவற்றையும் முஸ்லிம்களாகிய நாம் நம்புகின்றோம்...மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நீங்கள் இதை பகிரவில்லை...//

    முஸ்லிம்கள் குர்ஆன் சொல்வதால் நம்புகிறோம். குர்ஆன் இறைவன் அருளியதுதான் என்பதற்கும் நாம் ஆதாரங்களை வைக்கிறோம். ஏற்பதும் ஏற்காதததும் அவரவர் விருப்பம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  26. வஅலைக்கும் சலாம் சகோ ஜாபர்கான்!

    //Arumaiyana varalaru!
    Neril vanthu parka thonrukirathu!
    parinamam nerubika padatha kolgai!
    Nerubitha mathiri vaai keeliya pesuvargal!!!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  27. சகோ புரட்சிமணி!

    //இறைத்தூதர்களை கூட காப்பாற்ற முடியாதவன் இறைவனா? இவர்களுக்கு ஏன் கடுமையான தண்டனை. பல தெய்வத்தை வழிபடுகின்றவனுக்கும், ஒரு தெய்வத்தை வழிபடுகின்றவனுக்கும் ஒரே தண்டனை தானே அவர் கொடுக்கிறார். ஏன்? சிந்தியுங்கள் சகோ.//

    இந்த உலகத்தில் நடக்கும் அனைத்திற்கும் பலன் மறு உலகில் என்று இறைவன் கூறுகிறான். இந்த உலகத்திலேயே தண்டனை கொடுப்பதாக இருந்தால் உலகில் ஒரு உயிரினமும் மிச்சம் இருக்காது. நிங்கள் இங்கு நடக்கும் கொலையையும் மறுமையில் கிடைக்கும் தண்டனையையும் போட்டு குழப்பிக் கொண்டதால் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள்.

    //அதேபோல் பல தெய்வ வழிபாடும் அவர் எழுதியபடி விதிப்படி தானே நடக்கிறது? இறைவன் விருப்பபடி விட்டுவிட்டால் தானே அவருக்கே மதிப்பு. :)//

    'பதிவேட்டில் இறைவன் நாடியதை அழிப்பான்: நாடியதை அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.'
    -குர்ஆன் 13:39

    'இறைவன் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க மாட்டோம். எதையும் விலக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்.' என்று இணை கற்ப்பிப்போர் கூறுகின்றனர்' இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர்.
    -குர்ஆன் 6;148

    புரட்சிமணி இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்பதை எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டுகிறான் இறைவன் என்பதை பாருங்கள்.

    மேலும் இறைவன் கூறுகிறான்.

    'முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். 'உங்களிடம் இது பற்றிய விபரம் உண்டா? இருந்தால் அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின் பற்றுகிறீர்கள். நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை.' என்று முஹம்மதே கூறுவீராக!'
    -குர்ஆன்:- 6:148

    'முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது' என்று கூறுவீராக. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டியிருப்பான்'
    -குர்ஆன் 6;149

    இறைவன் விதித்தது தானே கிடைக்கும் என்று நீங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதில்லை. பொருள்தேட வீட்டை விட்டு வெளியேறி உழைக்கிறீர்கள். அது பொல் உங்கள் பகுத்தறிவை உபயோகித்து நன்மை எது தீமை எது என்று விளங்கி நடந்தால் நரகம் செல்ல வேண்டிய புரட்சிமணியின் விதியை உண்டாக்கிய அவனே அழித்து புரட்சி மணியை சொர்க்கத்துக்கு அனுப்புகிறான்.

    மேலும் விதியைப் பற்றி அதிகம் சர்ச்சை செய்ய வேண்டாம் என்றும் முகமது நபி தடுத்துள்ளார். ஏனெனில் நாம் குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டுள்ளோம். அனைத்தையும் தாங்கும் சக்தி நம் மனத்துக்கு இல்லை.

    //இதற்க்கு ஆதாரம் ஏதேனும் சுட்டி சகோ ?//

    குர்ஆனைப் பார்க்காமல் முகமது நபியின் வரவையும் அவர் இறைத்தூதர்தான் என்பதையும் எதை வைத்து சேரமான் முடிவு செய்தார்? தனது நாட்டையும் தனது அரசாட்சியையும் விட்டு தன்னந்தனியாக ஒரு வியாபாரக் கூட்டத்தின் பின்னால் ஒரு இறை பக்தி உடைய அடியான் இந்தியாவிலிருந்து மெக்கா நோக்கி எவ்வாறு பயணிக்க முடியும்? இதற்கான சுட்டி மூன்று கொடுத்துள்ளேன். நீங்களும் சிந்தியுங்கள்.

    ReplyDelete
  28. சகோ ராவணன்!

    //ஏக இறைவன் தன் தூதர்களை அரேபிய பாலைநிலத்திற்கு மட்டுமே அனுப்பியுள்ளானா?

    இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எந்தத் தூதரையும் அனுப்பவில்லையா?

    அப்படி அனுப்பியிருந்தால் அவர்கள் யார் யார்? அவர்களைப் பற்றி முகமதுவின் குர்ரானில் உள்ளதா?//

    'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
    -குர்ஆன் 14:4

    உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்திற்கும் இறை வேதமும் இறைத்தூதர்களும் வந்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. மூல மொழியான தமிழுக்கும் ஒரு நபி வந்துள்ளார். அவர் திரவள்ளுவராகவும் இருக்கலாம். சித்தர்களாகவும் இருக்கலாம். கிருஷ்ணனாகவும் இருக்கலாம். இறைவனே அறிந்தவன். ஏனெனில் அந்த வேதங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படாமல் மனிதனின் எழுத்துக்களும் ஒன்றிரண்டு சேர்ந்து விட்டது. சமீப காலத்தில் பைபிளில் எத்தனை மாறுபாடுகள் என்பதை நாம் கண் கூடாகவே பார்க்கிறோம்.

    //உங்களின் அந்த ஏக இறைவன் ஏன் இத்தனை உயிரினங்களைப் படைக்கவேண்டும்? அவற்றால் என்ன நன்மை? யாருக்கு நன்மை?//

    எந்த ஒரு பொருளையும் நாம் வீணுக்காக படைக்கவில்லை என்று இறைவன் கூறுகிறான். நாம் அறிவு கொடுக்கப்பட்டுள்ளோம். நமக்குள் இருக்கும் உயிரைப் பற்றியே இன்னும் நாம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு விஞ்ஞானிகள் வரவில்லை. பிற்காலங்களில் இவற்றின் தேவைகளை மனிதன் அறியலாம்.

    //மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் உங்களின் அந்த ஏக இறைவனை தினமும் தொழுகின்றனவா?//

    கண்டிப்பாக!

    'மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள். பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு. உனது இறைவனின் பாதையில் எளிதாகச் செல்' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான்'
    -குர்ஆன் 16:68

    இறைவனின் பாதையில் செல்லுமாறு தேனீக்களுக்கு இறைவன் கட்டளையிடுவதைக் கொண்டு இது போன்ற அனைத்து உயிரினங்களும் இறைவனைத் தொழுகின்றன என்று அறியலாம்.

    ReplyDelete
  29. சலாம் சகோ ஆஷிக்!

    //இன்னும் இந்த இடங்களுக்கு நான் சென்று பார்க்கவில்லை. ஆனால், கிட்டத்தட்ட இதேபோன்ற வீடுகள் பெட்ரா ஜோர்தானில் இருப்பது ஓர் ஆச்சரியம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.//

    நேரம் கிடைக்கும் போது குடும்பத்தோடு போய் வாருங்கள். ஜோர்டானுக்கு அருகில் இதே போன்ற கட்டிடங்கள் உள்ளதாக தகவல் உண்டு. அது சுஐப் நபி வாழ்ந்த இடம் என்று சில குறிப்புகள் கிடைக்கின்றன. இறைவனே அறிந்தவன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  30. Anonymous12:12 AM

    சகோதரர் சுவனப்பிரியன்,

    மாஷா அல்லா சகோ சுவனப்பிரியன் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோ.நான் தொடர்ச்சியாக உங்கள் பதிவை படிக்க கூடியவன்,ஆனால் பின்னூட்டமிட்டது ஓரிரு தடவைதான்.உங்கள் பதிவுகளும் நீங்கள் பின்னூட்டத்தில் பிறர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முறையும் என்னைப்போல் புதியதாக தாவாஹ் பனி செய்ய துவங்கி இருக்கும் நம் சகோதரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது என்றால் அது மிகையாகாது.

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்

    தொடர்ந்து நீங்கள் மற்றும் நம் சகோதரர்கள் முஹமத் ஆஷிக்,ஆஷிக் அஹ்மத்,ஹைதர் அலி மற்றும் ஏனைய நம் சகோதரர்கள் அனைவரும் சமூகத்திற்கு பயனளிக்க கூடிய மேலும் பல சிறந்த பதிவுகளை நல்ல ஆரோக்கியத்துடன் எழுதக்கூடிய பாக்கியத்தை அந்த ஏக இறைவன் தந்து அருள்புரிவானாக.

    இப்படிக்கு உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

    ReplyDelete
  31. வஅலைக்கும் சலாம் சகோ இக்பால்!

    //மாஷா அல்லா சகோ சுவனப்பிரியன் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோ.நான் தொடர்ச்சியாக உங்கள் பதிவை படிக்க கூடியவன்,ஆனால் பின்னூட்டமிட்டது ஓரிரு தடவைதான்.உங்கள் பதிவுகளும் நீங்கள் பின்னூட்டத்தில் பிறர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முறையும் என்னைப்போல் புதியதாக தாவாஹ் பனி செய்ய துவங்கி இருக்கும் நம் சகோதரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது என்றால் அது மிகையாகாது.//

    பாராட்டுக்கு நன்றி சகோ. இதில் எனது திறமை ஒன்றும் இல்லை. இறைவன் கொடுத்த அறிவை நம்மால் முயன்ற வரை ஆக்கப் பூர்வமான வழியில் செலவிட வேண்டும். அதைத்தான் செய்கிறேன். புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!

    தொடர்ந்து படித்தும் பின்னூட்டம் இட்டும் வாருங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  32. சகோ சார்வாகன்!

    நாம் சொல்லும் கருத்தை குறைந்தபட்சம் நாமும் கடைபிடிக்க வேண்டும். மதவாதிகள் சொல்வது வெறும் நம்பிக்கை. அதை நாங்கள் ஒத்துக் கொள்ளமாட்டோம் என்று சொல்கிறீர்கள். இங்கு மனிதனின் பரிணாமம அடைந்த படிமங்கள் அறிவியல்பூர்வமாக அனைத்து அறிஞர்களாலும் ஒத்துக் கொள்ளப்பட்டதா? இந்த எலும்புகள் அனைத்தும் பல இடங்களில் சேகரிக்கப்பட்டு தனது கற்பனைக்கு ஏற்றவாறு ஜோடிக்கப்பட்டவைகளே! அதில் ஒரு சில படிமங்கள் விலங்குகளுக்கானதாகவும் இருக்கலாம். இப்போது நீங்களும் கடவுள் மறுப்புக்காக இந்த நிரூபிக்கப்படாத ஆராய்ச்சிகளை தூக்கிப் பிடிக்கிறீர்கள்.

    சகோ ஆஷிக் வைத்த எந்த கேள்விக்கும் இதுவரை பதிலும் சொல்லவில்லை. இந்த படிமங்களின் வரலாறையும் இங்கு லேசாக பார்ப்போம்.

    "Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.

    தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).

    உயிரினப் படிமங்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளாகததான் நமக்கு கிடைக்கிறது. இங்கிருந்துதான் படிமங்களின் வரலாறு தொடங்குகிறது. கேம்பிரியன் காலமான இங்கிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் அனைத்தும் முழுமையான நாம் தற்போது பார்க்கும் வடிவிலேயே எடுக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு உயிரும் பரிணாமம் அடைந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இல்லை.

    இந்த கேம்பிரியன் காலத்துக்கு முந்தய காலமான இடியக்காரா காலம் சென்று படிமங்களை ஆராய்ந்தால் ஏதும் கிடைக்குமா என்று உங்கள் ஆய்வாளர்கள் தேடினர். ஆச்சரியமாக இடியக்காரா காலத்தில் விலங்களின் படிமங்கள் சுத்தமாக இல்லை. அதாவது அந்த காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான எந்த துப்பும் கிடைக்கவில்லை. இடியக்காரா காலத்தில் மறைந்த படிமங்கள் கேம்பிரியன் காலத்தில் திடீரென எவ்வாறு வந்தது? இதற்கு டார்வின் ஆதரவாளர்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றனர்?

    திமிங்கிலத்தை எடுத்துக் கொண்டால் புறத் தோற்றம் மட்டும் அல்லாது சுவாச உறுப்புகளும் தரைக்கு ஏற்றவாறு பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். புறத் தோற்றத்தையே அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாமல் திணரும் நீங்கள் சுவாச உறுப்புகளின் பரிணாமத்தை எந்த காலத்தில் நிரூபிக்கப் போகிறீர்கள்? :-)

    அப்படி நிரூபித்து விட்டால் சுவனப்பிரியனான நான் டார்வின் பிரியனாக மாறி உங்களோடு நாத்திகத்துக்கும் வந்து விடுகிறேன். பிறகு நானும் நீங்களும் நரேனும் தருமியும் வவ்வாலும் சேர்ந்து ஆத்திகவாதிகளை ஒரு வழி பண்ணி விடலாம்.

    Deal or No Deal!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  33. திரு பைந்தமிழன்!

    //குரான் யாத்திரையை சொல்கிறது, மோசஸை சொல்கிறது. செங்கடல் வழிவிட்டதை 80 வசங்களில் பேசுகிறது. யாத்திரையின் போது தௌரத் வந்ததாகப் பேசுகிறது.
    நீங்களே சொல்லுங்கள் இப்படி புனைந்த கதாசிரியர் யாராக இருக்க முடியும் திரு.சுவனபிரியன், அவர்களே//

    நான் முன்பே கூறியிருக்கிறேன். பைபிளில் வரும் பெயர்களும் இடங்களும் குர்ஆனில் ஒன்றாக வந்தாலும் சம்பவங்கள் முற்றிலுமாக வேறு படுகின்றன. ஏசு போதித்த பைபிளுக்கும் தற்போதுள்ள பைபிளுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை இந்த தளத்தில் சென்று விரிவாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    http://onlinepj.com/books/kapsa_nilaikuma/

    பைபிளைப் படிக்கிறவர்கள், ஆபிரகாம், மோஸஸ், டேவிட், ஜான் த பாப்டிஸ்ட், ஜீஸஸ் - ஏன், கன்னிமேரி ஆகிய பெயர்களைக் குரானிலும் பார்க்கலாம். ஆனால், இவர்களைப் பற்றிய செய்திகள் பைபிளில் இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டவை. குரானில், தேவ தூதர்கள் எல்லோருமே முஸ்லிம்கள், உதாரணமாக, ஆபிரகாம் (இப்ராஹீம்), முதல் முஸ்லிம் ஆகக் கருதப்படுகிறார். ஏனெனில், அவர் தமது தகப்பனாரின் மதத்தை ஏற்காமல் அல்லாஹ்வைச் சரண் அடைந்தார்; அவருடைய பெயரும் பைபிளில் குறிப்படப்படவில்லை. இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவில் அவர் காபா கட்டிய குறிப்பும் இல்லை. குரானில் பேசப்படும் மூஸா பைபிளில் வரும் மோஸஸ் போல இருக்கிறார். பெற்றோருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. குரானில் வரும் ஈஸா, பைபிளில் வரும் ஜீஸஸ் போன்றே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மெக்காவில் முஹம்மதுவை முதலில் மக்கள் நிராகரித்து அலட்சியம் பண்ணியது போலவே அவரையும் வெறுத்திருக்கிறார்கள். ஆனால், ஏசு கடவுளின் குழந்தை என்ற கிறிஸ்தவர்களின் கூற்றை குரான் ஏற்கவில்லை. சிலுவையில் ஏசு அறையப்பட்டதைக் கூட மேலோட்டமாகத் தான் சொல்லுகிறது. ஆனால், குரானின்படி ஏசுபிரான் மர்மமான முறையில் இறக்கவில்லை; அல்லாஹ் அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்!

    1- கடவுளுக்கு மனைவி, மக்கள் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால் கிறிஸ்தவம் ஏசுவை கடவுளின் குமாரர் என்கிறது
    2- கிறித்துவம் பிதா - சுதன் - பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தைச் சொல்கிறது.
    3- மனிதன் பாவியாகவே பிறக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் ஒரு பாவமும் அற்றவனாகப் பிறக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது.
    4- எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொள்வதற்காக ஏசு தன்னைத்தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்று கிறித்துவம் சொல்கிறது. ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்கவே முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது.
    5- பாவம் செய்து விட்டால் மதகுருமார்களிடம் Confession செய்வதன் மூலம் பாபநிவர்த்தி அடையலாம் என்று கிறித்துவம் சொல்கிறது. ஆனால் இஸ்லாமோ கடவுளிடம் நேரடியாகப் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று சொல்கிறது.
    6-சொர்க்கம், நரகம் பற்றி இரண்டு வேதங்களில் பேசப்பட்டாலும், அதை அடைவதற்கான வழிகளில் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. ஒருவன் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப, சொர்க்கமா, நரகமா என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்று மிகத் தெளிவாகவே குரானில் சொல்லப்பட்டிருக்கிறது.
    7-பைபிளிலும், குரானிலும் கிட்டத்தட்ட ஒத்த பெயருடைய பலரைப் பற்றிச் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக, தாவீது (குரானில் தாவூத்) லோத்து (குரானில் லூத்) ஆகியோரைப் பற்றி பைபிளில் தவறான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. குரான் இதை மறுக்கிறது.

    ReplyDelete
  34. முகமதுதான் உங்கள் ஏக இறைவனின் இறுதித் தூதர் என்று எப்படி நம்புகின்றீர்கள்?

    அப்படிக்கூறுவது அந்த முகமதுதானே? அதை எப்படி ஏற்பது?

    உங்கள் குரானை எழுதியது யார்? அல்லது அது தொகுக்கப்பட்ட காலம் எது? அதைத் தொகுத்தவர்கள் சரியான எண்ணத்துடன் இருந்தார்கள் என்று எப்படி நம்புவது?

    உங்கள் குரானில் அரேபியா தவிர்த்து உலகின் மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களைப் பற்றி குறிப்புகள் இல்லாமல் இருப்பது எதனால்?

    அந்த முகமதுவிற்குப் பின் வேறு எந்த தூதரையும் அந்த ஏக இறைவன் அனுப்பவில்லை என்று எப்படி இறுதியாகக் கூறுகின்றீர்கள்?

    உங்கள் குரானில் அப்படி உள்ளது, அதனால் நம்புகிறீர்களா?

    பல தூதர்களை அனுப்பிய உங்கள் ஏக இறைவன் அதன் பின்னர் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

    நீங்கள்தான் அந்த ஏக இறைவனா?

    அரேபியாவிற்கு தூதர்களை அனுப்பிய அந்த உங்கள் ஏக இறைவன் மற்ற பகுதிகளுக்கு நேரில் வந்திருக்கக் கூடாதா? இல்லை அவரால் முடியாதா?

    உங்கள் ஏக இறைவனுக்கு உருவம் இல்லை என்று கூறுகின்றீர்களா?

    பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் படைத்து, அவற்றிற்கு உருவம் கொடுத்த உங்களின் ஏக இறைவன் தனக்கு ஒரு உருவம் ஏற்படுத்திக் கொள்ளமுடியாதவனா? அவருக்கு அந்த சக்தி இல்லையா?

    ReplyDelete
  35. நீங்கள் அந்த ஏக இறைவனைத் தொழவில்லை.

    அந்த முகமது கூறிய குரானைத் தொழுகின்றீர்கள்.

    நான்தான் அந்த ஏக இறைவன் என்று கூறினால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஏனென்றால் உங்களுக்கு அந்த குரானைவிட உயர்ந்தது எதுவும் இல்லை.

    உங்களின் ஏக இறைவன் குரானை விட்டு வெளியில் எங்கும் இருக்கமாட்டாரா?

    நீங்கள் நம்புவது ஏக இறைவனை அல்ல, அந்த குரான் என்ற புத்தகத்தை மட்டுமே.

    ReplyDelete
  36. //இந்த உலகத்தில் நடக்கும் அனைத்திற்கும் பலன் மறு உலகில் என்று இறைவன் கூறுகிறான். இந்த உலகத்திலேயே தண்டனை கொடுப்பதாக இருந்தால் உலகில் ஒரு உயிரினமும் மிச்சம் இருக்காது. நிங்கள் இங்கு நடக்கும் கொலையையும் மறுமையில் கிடைக்கும் தண்டனையையும் போட்டு குழப்பிக் கொண்டதால் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள்.//
    சகோ நான் குழப்பிக்கொள்ளவில்லை உங்கள் இறைவன் தான் குஷப்புகிறார் அல்லது குஷப்பிக்கொண்டுள்ளார்.
    பல இடங்களில் இங்கேஎ தண்டனை கொடுத்ததாக சொல்கிறார்....
    உதாரனத்திற்க்கு
    //அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்.
    -அல்குர்ஆன் 11:64-௬௭//
    மேலும் நீங்களும் //இந்த இடங்களை பார்க்கும் நமக்கு இறைவனின் தண்டனை எப்படி இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் வர வேண்டும்.// என்று கூறுகிறீர்கள் . ஆக இந்த தண்டனைகள் இங்கே கிடைத்ததுதான். அதேபோல் தான் இறைத்தூதர்களுக்கும் அவர் கடுமையான தண்டனைகளை கொடுத்துள்ளார்.....நீங்களே சிந்தியுங்கள் குழப்பம் எனக்கா அல்லது உங்கள் இறைவனுக்கா என்று...
    ////ஆனால் சேரமான் பெருமாள் காலமோ 1400 வருடங்களுக்கு முந்தயது. அந்த நேரத்திலேயே வேதங்களை பார்த்து முகமது நபியின் வருகையை எவ்வாறு அந்த வேதம் படித்த பண்டிதர்களால் சொல்ல முடிந்தது. //
    இதற்க்கு ஆதாரம் ஏதேனும் சுட்டி சகோ ? //

    நான் கேட்டது ///அந்த நேரத்திலேயே வேதங்களை பார்த்து முகமது நபியின் வருகையை எவ்வாறு அந்த வேதம் படித்த பண்டிதர்களால் சொல்ல முடிந்தது//

    இதற்க்கு. அதாவது வேத பண்டிதர்கள் அப்படி சொன்னார்கள் எனபதற்கு. நீங்கள் கொடுத்த சுட்டியில் இப்படி ஏதும் இல்லை சகோ. (youtube paarkkavillai athil irukkirathaa? )

    மேலும் பல கேள்விகர்ல் இருந்தாலும் அதை நான் உங்களிடம் கேட்டு siramappaduththa விரும்பவில்லை....
    நன்றி சகோ.

    ReplyDelete
  37. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    இந்த மாதிரி அறிவியல் பூர்வமான வரலாற்றை
    தெரியப் படுத்தியமைக்கு மிக்க நன்றி
    அல்ஹம்துலில்லாஹ்!
    ஹாஜா முஹைதீன்

    ReplyDelete
  38. Anonymous11:22 AM

    Mr Ravanan,


    ///உங்கள் குரானில் அரேபியா தவிர்த்து உலகின் மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களைப் பற்றி குறிப்புகள் இல்லாமல் இருப்பது எதனால்?///

    எந்த அரேபியாவைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள்?

    தற்போது இருக்கும் அரபு மொழி பேசும் நாடுகள், முன்னர் அரபு மொழி பேசும் மக்களைக் கொண்டிருக்கவில்லை.

    அடுத்தது, உங்கள் பின்னூட்டத்திற்கான தெளிவான பதில்கள் குர் ஆனிலே இருக்கிறது.

    சிலவற்றை இந்த கட்டுரையாளரின் பின்னூட்டங்களில்கூட அறிந்து கொள்ளலாம், வேறு தலையங்களின் கீழ்!


    ///அந்த முகமதுவிற்குப் பின் வேறு எந்த தூதரையும் அந்த ஏக இறைவன் அனுப்பவில்லை என்று எப்படி இறுதியாகக் கூறுகின்றீர்கள்? உங்கள் குரானில் அப்படி உள்ளது, அதனால் நம்புகிறீர்களா? பல தூதர்களை அனுப்பிய உங்கள் ஏக இறைவன் அதன் பின்னர் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?///


    குர்ஆன், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு, அவர்களின் இறுதித் தூதுத்துவத்தைப்பற்றி பாடம் நடத்துவதற்கு அவசியப்படாது என்பது, தங்களுக்கு தெரிந்த விடயம்.


    இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப்பின், தோன்றிய பொய் நபிகள், எப்படி முகவரியற்று அழிந்தனர், இன்னும் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அல்லது இனிமேல் தோன்றுபவர்கள் எப்படி அழிவார்கள் என்ற வரலாறு, நீங்கள் படிக்க வேண்டிய பாடம்.

    ///நீங்கள்தான் அந்த ஏக இறைவனா?///

    தெருவில் போகிறவர்களை எல்லாம் கடவுள் என்று கும்பிடும், கடவுளுக்கே மரியாதை இல்லாத இந்தியாவில், சுவனப்பிரியனை இறைவன் என்று வினவும் உங்களை மெச்சுகிறேன்.

    ///அரேபியாவிற்கு தூதர்களை அனுப்பிய அந்த உங்கள் ஏக இறைவன் மற்ற பகுதிகளுக்கு நேரில் வந்திருக்கக் கூடாதா? இல்லை அவரால் முடியாதா?///

    இறைவன் நேரில் வந்தும் என்ன பயன்? உங்களால் பார்க்க முடியாதே!

    ///பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் படைத்து, அவற்றிற்கு உருவம் கொடுத்த உங்களின் ஏக இறைவன் தனக்கு ஒரு உருவம் ஏற்படுத்திக் கொள்ளமுடியாதவனா? அவருக்கு அந்த சக்தி இல்லையா?///

    இதற்கு சுவனப் பிரியன் பதிலளித்திருக்கிறார். பார்த்துத் தெளிவடையலாமே!


    ///நீங்கள் அந்த ஏக இறைவனைத் தொழவில்லை. அந்த முகமது கூறிய குரானைத் தொழுகின்றீர்கள்.///

    குர் ஆன் என்பது உலக மக்களுக்கு வழிகாட்ட வந்த அருள்மறை. இந்த நன்னெறியை நம் வாழ்வில் பின்பற்றத்தான் முடியும்.

    உலகில் யார்தான் நன்னெறிகளை வணங்கி வழிபடுவர்? அதனால், என்ன பயன்?

    இப்பொழுது குர்ஆன், நூல் வடிவம் இன்னும் இதர வடிவங்களில் வந்துள்ளது. இந்த வடிவங்கள் கூட, நாம் உருவாக்கியவை.

    நாமே உருவாக்கி நாமே வணங்குவதற்கு, குர் ஆனிலே தடை இருக்கிறது.

    - Ismath

    ReplyDelete
  39. Anonymous2:54 PM

    //சுவனப்பிரியனான நான் டார்வின் பிரியனாக மாறி உங்களோடு நாத்திகத்துக்கும் வந்து விடுகிறேன். பிறகு நானும் நீங்களும் நரேனும் தருமியும் வவ்வாலும் சேர்ந்து ஆத்திகவாதிகளை ஒரு வழி பண்ணி விடலாம்./.

    அதே மாதிரி, சூரியன் மறைந்ததும் அல்லாஹ்வின் காலடியில் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் நான் காலையில் கிழக்கில் உதிக்கவா அல்லாஹ் என்று கேட்ட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பதையும் காலையில் அல்லாஹ் அனுமதி கொடுத்த பின்னரே நகர்ந்து கிழக்கில் உதிப்பதையும் நிரூபித்துவிட்டீர்கள் என்றால், முஸ்லீம் அல்லாதவர்களும் உடனே இஸ்லாமில் இணைந்துவிடுவார்களே. அதனையும் முயற்சிக்கலாமே?

    ReplyDelete
  40. Anonymous4:13 PM

    Mr R.Puratchimani,


    ///இறைத்தூதர்களை கூட காப்பாற்ற முடியாதவன் இறைவனா? இவர்களுக்கு ஏன் கடுமையான தண்டனை.///


    ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கும்.

    இறை தூதர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள். இறவா வரம்பெற்றவர்கள் அல்ல. நம்மைப் போன்றே அவர்களும் இயற்கை அல்லது அகால மரணங்களைச் சுவைக்கக் கூடியவர்கள்.

    அகால மரணங்களை அடைந்த தூதர்கள், இறைவனாலேயே காப்பாற்ற முடியவில்லை என்றோ அகால மரணங்களை ஏற்படுத்தி, இறைவனே இறை தூதர்களை தண்டித்தான் என்றோ கருதுவது ஏற்கத்தக்கது அல்ல.

    பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.

    - Ismath

    ReplyDelete
  41. அனானி

    //அதே மாதிரி, சூரியன் மறைந்ததும் அல்லாஹ்வின் காலடியில் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் நான் காலையில் கிழக்கில் உதிக்கவா அல்லாஹ் என்று கேட்ட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பதையும் காலையில் அல்லாஹ் அனுமதி கொடுத்த பின்னரே நகர்ந்து கிழக்கில் உதிப்பதையும் நிரூபித்துவிட்டீர்கள் என்றால், முஸ்லீம் அல்லாதவர்களும் உடனே இஸ்லாமில் இணைந்துவிடுவார்களே. அதனையும் முயற்சிக்கலாமே?//

    சூரியனைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை ஒரு பதிவாகவே இடுகிறேன். அதைப் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வரவும்.

    ReplyDelete
  42. சகோ இஸ்மத்!

    //பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.

    - Ismath//

    கூடுதல் அலுவலக பணியால் என்னால் பலருக்கு உடன் பதிலளிக்க முடிவதில்லை. அந்த நெரங்களில் நீங்கள் வந்து பதிலளிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  43. சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த ஸாலிஹ். இவர் பற்றி பைபிளில் உள்ளத- எபிரேயப் பெயர் என்ன? ஸாலிஹ் வழ்ந்த காலம் என்ன என்பதை தெளிவாக நிர்நணயம் செய்யும் குரான் வசங்களைத் தரவும்.
    அவ்வூரில் கிடைத்துள்ள ஆதாரங்களை கார்பன் - 14 சோதனை மூலம் இறுதி செய்யப்பட்ட காலம் என்ன. அவை பொருந்துகிறதா?
    இவர் ஆபிரகாம், நூக் காலத்திற்கு முந்தையவரா? இவர்கள் காலம் பற்றி குரான் கூறுவதை சரியான வசனங்கள் கொண்டு தெளிவாக்கவும்.

    இஸ்ரேலில் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த எல்லவற்றையும் பைபிள் தௌரத் காலத்தோடு பொருத்தியவை அனைத்தும் தவறு என்பது தெரிந்தும் இன்றும் அவை அங்கே மக்களிடம் காட்டப்படுகிறது. பல வலைப்பூக்கள் உங்களது போல தவறான பைபிளிற்கு விரோதமான ஆதரங்களை வைத்து கதை செய்வது தொடர்கிறது. தெளிவாக்கவும்.

    நான் தெளிவாக பைபிளியல் நூல்களிலிர்ந்தே ஆதாரங்களை தருகிறேன்.
    “இஸ்ரயேலரின் வரலாறு”- - ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.(First Edition in 1966; this is 3rd edition)

    ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் ஒஎயரோடு தனிதியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.
    பக்- 60
    இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. - பக் 90- 91

    ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49

    நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; – கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் S.S.தெயோபிலஸ்
    இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்
    தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய
    புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது.
    - பக்கம் 15
    அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலிஅய்ம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17 எழுதிய.

    ReplyDelete
  44. New Catholic Encyclopedia Vol-5 page-745
    “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus.
    The Hebrew term Yamsup signifies Reed sea. ”
    New Catholic Encyclopedia Vol-5 page-745
    மோசஸ் அல்லது மூசா நபி எழுதியதான தௌரத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள் தவறான மொழி பெயர்ப்பு காரணமாம்-அமெர்க்க கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது. இது நியாயப்பிராமாணங்கள் அல்லது புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதை நிருபிக்கும்.
    ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது. பரம்பரைப் பட்டியல்களில் பாபிலோனிய/கிரேக்க பின்பற்றுதல்கள் பைபிள் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
    Sharjah’s 3,000-year-old clue to the first domesticated camels
    http://newindian.activeboard.com/t36782212/semmozhi-tamil-ancient-archaeology-findings/?page=5
    இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், இவர்கள் நாகரிகத்தி மிகவும் பின் தங்கியிருந்தனர். பாபிலோனிய- கிரேக்கப் படையெடுப்புகளுக்குப் பின்பு தான் அவர்கள் நகரம்- கட்டுமானம்- தத்துவம் என அறிவு பெற்றனர். பொ.ச.மு.300-200 இடையே பெரும்பாலான பழைய ஏற்பாடு புனையப் பட்டது, இதற்கு எஸ்ரா-நெகமியா போன்ற புத்தகங்களிலும் மிகத்தெளிவான ஆதாரங்கள்- அதை எவைக் குறிக்கின்றன என்பதில் பெரும் கருத்தொற்றுமை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.
    இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
    ஆய்வு நூல்: R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”
    இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.

    ReplyDelete
  45. இன்னுமொரு நூல் –
    Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
    How was Hebrews living during OT times.
    The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
    Page-77
    எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.

    With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
    Pages- 87,88
    ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
    Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
    Page-77
    The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
    The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
    It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
    Pages 86-87.
    வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.
    பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
    இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
    பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பகுதியாகவே இல்லை.

    ReplyDelete
  46. கட்டுகதையா-”ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் – வரலாற்று ஆதாரங்கள்”-
    http://devapriyaji.wordpress.com/2012/02/26/3857/

    இவை 50 ஆண்டு முன் நிலை இப்போதைய நிலை
    Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
    இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
    http://wp.me/PxRSh-7E
    1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
    2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
    3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
    4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
    5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
    6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
    7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

    மோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது. இவர்கள் வெறியில் பேசினார்களெ தவிர எந்த வார்த்தையையும் கடவுளிடமிருந்து பெறவில்லை.
    குரான் யாத்திரையை சொல்கிறது, மோசஸை சொல்கிறது. செங்கடல் வழிவிட்டதை 80 வசங்களில் பேசுகிறது. யாத்திரையின் போது தௌரத் வந்ததாகப் பேசுகிறது.
    நீங்களே சொல்லுங்கள் இப்படி புனைந்த கதாசிரியர் யாராக இருக்க முடியும்

    ReplyDelete
  47. கொடுங்கல்லூர் கிறிஸ்துவர்கள் செயின்ட் தாமஸ் வந்த இடம் என்ற ரீதியிலேயே பிரபலமானது ஆனால் அன்கே செய்யப்பட்ட புதைபொருள் ஆய்வு முடிவுகள்- அங்கெ பொ.ச.800 வாக்கிலேயே கன்னி மண் கிடைக்கிறது, அதாவ்து அங்கெ மனிதன் குடியேறியதே அப்புறம் தான், ஆனால் கடலுக்கடியில் இர்ந்த நாட்டு ராஜா மதம் மாறியதாக கதை
    தோமோ வந்து இறங்கியதான கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் முடிவுகள்
    //கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….
    கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.
    கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
    கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..
    திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.
    திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.
    பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது.//
    பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala”

    ReplyDelete
  48. சகோ தேவப்பிரியா சாலமன்!

    //கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.//

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி! முழுவதும் படிக்கவில்லை. வேலை முடிந்து வருகிறேன்.

    மற்றபடி தொல்லியல் ஆராய்சச்சி என்பது கிடைக்கும் கல்வெட்டுகளையும் ஆராய்ச்சிகளையும் வைத்து எடுக்கப்படுவது. சேரமான் பெருமாளின வழி தோன்றலாக அறியப்படுபவரே இங்கு பேட்டி கொடுப்பதை ஒரு சுட்டியில் கொடுத்திருக்கிறேன். அந்த மசூதியை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் கிடைக்கலாம். பிற்காலங்களில். நீங்கள் சொல்வதற்கும் சேரமான் காலத்துக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசமே உள்ளது. அதுவும் 8 அல்லது 9 ஆக இருக்கலாம் என்று தோராயமாகத்தான் சொல்லப்படுகிறது. ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரும்காலத்தில் மேலும் பல உண்மைகள் வெளி வரலாம். இவரது அடக்கஸ்தலம் ஓமானில் கடற்கரையோரம் உள்ளது. சமாதிக்கு வெளியில் இந்திய அரசர் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  49. திரு தேவப்பிரியா சாலமன்!

    //மோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது.//

    இதைத்தானே முஸ்லிம்களாகிய நாங்களும் சொல்கிறோம். யூதர்களும் கிறித்தவர்களும் தங்களுக்கு இறைவனிடமிருந்து வந்த வேதங்களை தங்களின் சுய லாபத்துக்காக தங்களின் கருத்துகளை புகுத்தி விட்டனர் என்பதுதானே எங்களின் வாதம்!

    குர்ஆனில் வரக் கூடிய பல நபிமார்களின் சம்பவங்களை இந்த இடம் என்று குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. குர்ஆனின் வசனங்களை வைத்து தோராயமாக முஸ்லிம்கள் தீர்மானித்ததே இது போன்ற இடங்கள். மேலும் மதாயின் சாலிஹ் என்ற இடத்தில் தற்போதும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன.

    மேலும் குர்ஆனின் எந்த வசனமும் தற்கால அறிவியல் முடிவுக்கு மாற்றமாக இல்லாததும் முகமது நபி எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததும் இப்படி ஒரு வேதம் கண்டிப்பாக இறைவனிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகிறோம். உங்களுக்கு இதில் நம்பிக்கை வரவில்லை என்றால் அதற்காக நான் கட்டாயப்படுத்தவும் இல்லை.

    இது ஏன் இறைவனிடம் இருந்து வந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு நானே பதிவுகளை கொடுத்துள்ளேன். ஹாருன் யஹ்யா, ஜாகிர்நாயக், பி.ஜெய்னுல்லாபுதீன் போன்ற அறிஞர்களின் பக்கங்களுக்கு சென்றால் இன்னும் பல விபரங்கள் தெரிய வரும்.

    ReplyDelete
  50. @- Ismath
    // //பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.//
    ஐயா இசம்த், அப்புறம் ஏன் உங்கள் இறைவன், அங்கே பாருங்கள் அவர்கள் எனக்கு இணை வைத்ததால் அழித்துவிட்டேன்,எனவே என்னை மட்டும் வணங்குங்கள் வணங்குங்கள் என்று பல இடங்களில் கூறுகிறார்.
    // //பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.//
    நீங்கள் கொண்ட இந்த புரிதல் கூட இறைவனுக்கு இல்லை என்பது தானே உண்மை . இருந்திருந்தால் இயற்கை மாற்றத்தால், சீற்றத்தால், சூழ்ச்சியினால் மக்கள் இறந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திருக்க மாட்டார் இல்லையா? உங்கள் கூற்றுப்படி குரான் முரனாகத்தானே உள்ளது?

    இணை வைத்தவனுக்கும் ஒரே தண்டனை தான் அவனை மட்டும் வணங்கியவனுக்கும் ஒரே தண்டனை தான் புரிந்து கொள்ளுங்கள் சகோ. சிந்தியுங்கள்........
    நன்றி

    ReplyDelete
  51. Anonymous4:30 AM

    Mr R Puratchimani,

    // //பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.//

    ///நீங்கள் கொண்ட இந்த புரிதல் கூட இறைவனுக்கு இல்லை என்பது தானே உண்மை . இருந்திருந்தால் இயற்கை மாற்றத்தால், சீற்றத்தால், சூழ்ச்சியினால் மக்கள் இறந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திருக்க மாட்டார் இல்லையா? உங்கள் கூற்றுப்படி குரான் முரனாகத்தானே உள்ளது?///


    "பொதுவாக", ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.

    உங்களின் பார்வையில் வரும் இயற்கையின் சீற்றம், மாற்றம், சூழ்ச்சி (எங்களின் பார்வையில் இறைவன் செயல்) போன்றவற்றினால் ஏற்படும் மானிட அழிவை, "பொதுவாக" அல்லாமல், விதி விலக்காக இறை தண்டனை என, ஏன் தாங்கள் கருதக்கூடாது?

    - Ismath

    ReplyDelete
  52. @- Ismath
    // உங்களின் பார்வையில் வரும் இயற்கையின் சீற்றம், மாற்றம், சூழ்ச்சி (எங்களின் பார்வையில் இறைவன் செயல்) போன்றவற்றினால் ஏற்படும் மானிட அழிவை, "பொதுவாக" அல்லாமல், விதி விலக்காக இறை தண்டனை என, ஏன் தாங்கள் கருதக்கூடாது?//
    இறைவனை திருப்திபடுத்துவதாக நினைத்து நீங்கள் அப்படி நினைத்து கொள்ளலாம். :) சொர்க்கத்திற்காக :)

    அப்படியே பார்த்தாலும் உதாரனத்திற்க்கு ஷியா,சுன்னி முஸ்லிம்கள் படுகொலைகளையும் நீங்கள் இறை தண்டனை என்று ஏற்றுக்கொள்வீர்களா?
    சிந்தியுங்கள் சகோ,

    ReplyDelete
  53. Anonymous8:51 AM

    Mr R Puratchimani,

    ///உங்களின் பார்வையில் வரும் இயற்கையின் சீற்றம், மாற்றம், சூழ்ச்சி (எங்களின் பார்வையில் இறைவன் செயல்) போன்றவற்றினால் ஏற்படும் மானிட அழிவை, "பொதுவாக" அல்லாமல், விதி விலக்காக இறை தண்டனை என, ஏன் தாங்கள் கருதக்கூடாது?///

    ///இறைவனை திருப்திபடுத்துவதாக நினைத்து நீங்கள் அப்படி நினைத்து கொள்ளலாம். :) சொர்க்கத்திற்காக :)///

    இறைவன் என்றென்றும் திருப்தியானவன். திருப்தியானவனை, ஏன் மீண்டும் திருப்திப்படுத்த வேண்டும்?

    மனிதகுலம் அவனை வணங்குவதால், அவன் சொன்ன கட்டளைப் பிரகாரம் செயற்படுவதால், மனிதகுலம் திருப்தி அடைவதை, அவன் விரும்புகிறான்.

    இப்படி வாழ்வை அமைக்கும்போது, நீங்கள் சொன்ன சொர்க்கத்தை தருவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான். எம்முடன் நீங்கள் இணையத் தயாரா?

    ///சுன்னி முஸ்லிம்கள் படுகொலைகளையும் நீங்கள் இறை தண்டனை என்று ஏற்றுக்கொள்வீர்களா?///

    ஹிட்லர் செய்த கொலைகள், மோடி காடையர்களை ஏவி செய்த முஸ்லிம்களின் கொலைகள், இப்படி உலகத்தில் நடக்கும் ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு இறைவனா பொறுப்பு? ஆக, இவை இறை தண்டனைகள் அல்ல என்று உங்களுக்கே தெரியும்.

    இந்த செயல்களுக்கான தண்டனை, சம்பந்தப்பட்டவர்களுக்கு இறைவன் அளிப்பான்.

    - Ismath

    ReplyDelete
  54. Anonymous11:25 AM

    //அதே மாதிரி, சூரியன் மறைந்ததும் அல்லாஹ்வின் காலடியில் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் நான் காலையில் கிழக்கில் உதிக்கவா அல்லாஹ் என்று கேட்ட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பதையும் காலையில் அல்லாஹ் அனுமதி கொடுத்த பின்னரே நகர்ந்து கிழக்கில் உதிப்பதையும் நிரூபித்துவிட்டீர்கள் என்றால், முஸ்லீம் அல்லாதவர்களும் உடனே இஸ்லாமில் இணைந்துவிடுவார்களே. அதனையும் முயற்சிக்கலாமே?//

    இதற்கு பதில் தருகிறேன் என்று ரொம்ப நாளாகிவிட்டதே.
    அதே போல, அடிமைக்கு அடிமையை கொல், பெண்ணுக்கு பெண்ணை கொல் வசனத்துக்கும் பதிலளிப்பதாக சொன்னீர்கள். அதற்கும் பதிலளிக்கவில்லையே

    பதிலில்லையா?

    வேறொரு அனானி

    ReplyDelete
  55. Anonymous11:27 AM

    //இந்த செயல்களுக்கான தண்டனை, சம்பந்தப்பட்டவர்களுக்கு இறைவன் அளிப்பான்.//

    சரி ஹிட்லரை போலவோ அல்லது ஒசாமா மாதிரியோ ஒருவன் உலகத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட்டு, இனி உலகத்தில் பாவமே நடக்கக்கூடாது என்ற நல்லெண்ணெத்தால் இவர்களை கொன்றேன் என்று சொன்னால், அவனது நல்லெண்ணத்துக்காக அவனுக்கு சொர்க்கம் அளிப்பானா, அல்லது கொன்றதற்காக நரகம் அளிப்பானா?

    ReplyDelete
  56. அனானி!

    //இதற்கு பதில் தருகிறேன் என்று ரொம்ப நாளாகிவிட்டதே.
    அதே போல, அடிமைக்கு அடிமையை கொல், பெண்ணுக்கு பெண்ணை கொல் வசனத்துக்கும் பதிலளிப்பதாக சொன்னீர்கள். அதற்கும் பதிலளிக்கவில்லையே

    பதிலில்லையா?//

    தனி பதிவாக போடுகிறேன் என்றல்லவா சொன்னேன். கம்பெனி வேலைகளையும பார்க்க வேண்டும். ஓய்வு நேரத்தில் பதிவும் எழுத வேண்டும். நாளை பெண்கள் சம்பந்தமாக ஒரு பதிவு. அது முடிந்தவுடன் சூரியனைப் பற்றிய பதிவுக்கு வருகிறேன். நாள் நிறைய இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்.

    ReplyDelete
  57. அனானி!

    //சரி ஹிட்லரை போலவோ அல்லது ஒசாமா மாதிரியோ ஒருவன் உலகத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட்டு, இனி உலகத்தில் பாவமே நடக்கக்கூடாது என்ற நல்லெண்ணெத்தால் இவர்களை கொன்றேன் என்று சொன்னால், அவனது நல்லெண்ணத்துக்காக அவனுக்கு சொர்க்கம் அளிப்பானா, அல்லது கொன்றதற்காக நரகம் அளிப்பானா?//

    பாவத்தை அழிப்பதற்கு உசாமாவுக்கோ ஹிட்லருக்கோ யார் அதிகாரத்தைக் கொடுத்தது? அதற்குதானே இத்தனை வேதங்களும் இறைத் தூதர்களும்! ஒரு தனி மனிதன் சட்டத்தை கையில் எடுப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

    'இறைவன் தடை செய்துள்ளதால் எவரையும் அதற்கான உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறத்துகிறான்.'
    -குர்ஆன் 6;151

    ReplyDelete
  58. Anonymous1:34 PM

    Mr Anonymous,

    ///ஹிட்லரை போலவோ அல்லது ஒசாமா மாதிரியோ ஒருவன் உலகத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட்டு, இனி உலகத்தில் பாவமே நடக்கக்கூடாது என்ற நல்லெண்ணெத்தால் இவர்களை கொன்றேன் என்று சொன்னால், அவனது நல்லெண்ணத்துக்காக அவனுக்கு சொர்க்கம் அளிப்பானா, அல்லது கொன்றதற்காக நரகம் அளிப்பானா?///


    உலகத்தில் உள்ள எல்லாரையும் கொன்றுவிட்டால், பாவம் செய்வதற்கு யாரும் இருக்கமாட்டார்களே!

    உங்கள் எண்ணப்படி கொல்வதே, நல்லெண்ணமா?

    சொர்க்கம், நரகம் யார் யாருக்கென்று தீர்மானிப்பது, இறைவன் கையில்!

    இதில், நானோ நீங்களோ அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது?

    - Ismath

    ReplyDelete
  59. //மனிதகுலம் அவனை வணங்குவதால், அவன் சொன்ன கட்டளைப் பிரகாரம் செயற்படுவதால், மனிதகுலம் திருப்தி அடைவதை, அவன் விரும்புகிறான்.//

    //இப்படி வாழ்வை அமைக்கும்போது, நீங்கள் சொன்ன சொர்க்கத்தை தருவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.//
    அவன் திருப்தி அடைந்தாள் தான் உங்களுக்கு சொர்க்கம் இல்லையேல் நரகம் என்று தானே குரான் கூறுகிறது.

    என்னை தவறாக என்ன வேண்டாம்...எவன் கட்டளைப்படியும் நடக்க நான் விரும்பவில்லை. மற்ற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல்,முடிந்தால் உதவி செய்து, உண்மையை பேசி வாழ்வதையே நான் விரும்புகிறேன்.

    சகோ இஸ்மத் இது பற்றி நான் இறைவனிடமே பேசிக்கொள்கிறேன். :) உங்களை மேலும் கேள்விகள் கேட்டு சிரமப்படுத்த விரும்பவில்லை.

    //எம்முடன் நீங்கள் இணையத் தயாரா?////
    நான் உங்களுடனும் மற்ற அனைத்து உயிர்களுடனும் இணையும் முயற்சியில் தான் உள்ளேன். நீங்கள் அதற்க்கு தக்க உபாயம் கூறினால் அது சரியாக இருக்கும் பச்சத்தில் கண்டிப்பாக அதை ஏற்றுக்கொள்வேன்.
    தாங்கள் என்னுடன் கலந்துரையாடுவதற்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  60. Anonymous2:41 PM

    Mr R Puratchimani,

    ///என்னை தவறாக என்ன வேண்டாம்...எவன் கட்டளைப்படியும் நடக்க நான் விரும்பவில்லை. மற்ற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல்,முடிந்தால் உதவி செய்து, உண்மையை பேசி வாழ்வதையே நான் விரும்புகிறேன்.///

    தாங்கள் எவன் கட்டளைப்படியும் நடக்க விரும்பாவிடினும், இறைகட்டளைகளை விரும்புவதாக தங்களின் எழுத்து, தெளிவாக்குகிறது.

    ///சகோ இஸ்மத் இது பற்றி நான் இறைவனிடமே பேசிக்கொள்கிறேன்.///

    தங்களுக்கு நேர்வழி காட்ட இறைவனே போதுமானவன்.

    தங்களின் பணிவான எழுத்து நடைக்கு மிகவும் நன்றி!

    - Ismath

    ReplyDelete
  61. //குர்ஆனில் வரக் கூடிய பல நபிமார்களின் சம்பவங்களை இந்த இடம் என்று குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. குர்ஆனின் வசனங்களை வைத்து தோராயமாக முஸ்லிம்கள் தீர்மானித்ததே இது போன்ற இடங்கள்//

    ஒரு புத்தகத்தை ஆராய செய்ய வேண்டும் என்றால் அதில் தெளிவாக காலம் இடம் என இருக்க வேண்டும். இல்லை என்றால் அப்புத்தகம் சற்றும் பிரயோஜனம்ற்ற குப்பை. இது தான் உண்மை.

    //மேலும் குர்ஆனின் எந்த வசனமும் தற்கால அறிவியல் முடிவுக்கு மாற்றமாக இல்லாததும் முகமது நபி எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததும் இப்படி ஒரு வேதம் கண்டிப்பாக இறைவனிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகிறோம். உங்களுக்கு இதில் நம்பிக்கை வரவில்லை என்றால் அதற்காக நான் கட்டாயப்படுத்தவும் இல்லை.//

    இப்படி ஒர் எந்த விபரமும் முழுமையாக இல்லத ஒரு பழம் புராணத்தை வைத்து ஆராய்வது அப்படிப்பட்டவரின் தனிமையைக் காட்டும்..
    குர்ரானின் -பைபிளின் அடிப்படையில் உலகம் தட்டை என்பார் செய்யும் அக்கிரமங்கள் போதும் நான் மேலும் சொல்ல வேண்டியதே இல்லை.
    நீங்கள் மத நம்பிக்கை என்றால் அதற்கு விமர்சனமே இல்லை. வெளி நாட்டினர் கத்திமுனையில் முன்னோர் மாற்றப்பட்ட மூடநம்பிக்கையைத் தொடர உங்களுக்கும் முழு உரிமை உண்டு.

    //இது ஏன் இறைவனிடம் இருந்து வந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு நானே பதிவுகளை கொடுத்துள்ளேன். ஹாருன் யஹ்யா, ஜாகிர்நாயக், பி.ஜெய்னுல்லாபுதீன் போன்ற அறிஞர்களின் பக்கங்களுக்கு சென்றால் இன்னும் பல விபரங்கள் தெரிய வரும்.//

    அனைத்தும் உளறலகள் என்பது பலமுறை செளிவாக்கப் பட்டவை.

    பைபிள்- குரான் அடிப்படை புராணக்கதையே பொய் என்பதற்கு பதிலே இல்லை.
    என் பதிலைப் பதிதித்தற்கு நன்றி. வான் ஜூர் அவர்கள் உண்மையை கூறவிடாது தன் பொய்யான மூடநம்பிக்கையை தொடர கருத்தை அனுமதிக்கவில்லை

    ReplyDelete
  62. Anonymous2:47 PM

    Mr Devapriya Solomon,

    ///ஒரு புத்தகத்தை ஆராய செய்ய வேண்டும் என்றால் அதில் தெளிவாக காலம் இடம் என இருக்க வேண்டும். இல்லை என்றால் அப்புத்தகம் சற்றும் பிரயோஜனம்ற்ற குப்பை. இது தான் உண்மை.///

    ஆராயப்படும் எல்லாப் புத்தகங்களுக்கும் தெளிவான காலம், இடம் இருக்காது என்பதுதான் உண்மை. சரித்திரம், கண்டுபிடிப்பு சம்பந்தமான புத்தகங்களுக்கு
    காலம், இடம் இருக்க வேண்டியது இன்றியமையாதது.

    உங்கள் Encyclopaedia விலிருந்து தூக்கிப் போட்ட ஆதாரங்கள் அருமை. ஆனால், அதில் மிகவும் தவறு இருக்கிறது. Encyclopaedia வில் இருப்பவை எல்லாம் சரியானவை அன்று. அவையும் ஆய்விற்குரியது.

    ஒருவரின் கருத்தை பிறர் கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று யாரும் எண்ணுவது தவறு.

    தங்களின் கருத்தை ஏற்க மறுத்ததினால், புராணம், பொய், உலகம் தட்டை, உளறல், மூட நம்பிக்கை, கத்திமுனை என்றெல்லாம் வசைபாடுவது, தகுமா?

    இப்படி உங்களது கருத்திற்கு, அதே பாணியில் நாமும் வசைபாடினால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

    - Ismath

    ReplyDelete
  63. ஈச்மத் அவர்களெ

    //ஆராயப்படும் எல்லாப் புத்தகங்களுக்கும் தெளிவான காலம், இடம் இருக்காது என்பதுதான் உண்மை. சரித்திரம், கண்டுபிடிப்பு சம்பந்தமான புத்தகங்களுக்கு
    காலம், இடம் இருக்க வேண்டியது இன்றியமையாதது.
    உங்கள் Encyclopaedia விலிருந்து தூக்கிப் போட்ட ஆதாரங்கள் அருமை. ஆனால், அதில் மிகவும் தவறு இருக்கிறது. Encyclopaedia வில் இருப்பவை எல்லாம் சரியானவை அன்று. அவையும் ஆய்விற்குரியது.
    ஒருவரின் கருத்தை பிறர் கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று யாரும் எண்ணுவது தவறு.
    தங்களின் கருத்தை ஏற்க மறுத்ததினால், புராணம், பொய், உலகம் தட்டை, உளறல், மூட நம்பிக்கை, கத்திமுனை என்றெல்லாம் வசைபாடுவது, தகுமா?
    இப்படி உங்களது கருத்திற்கு, அதே பாணியில் நாமும் வசைபாடினால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?//

    தலைப்பு -ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் – வரலாற்று ஆதாரங்கள்.
    வரலாறு என்று சொன்னால் நிச்சயமாக தெளிவான காலம், இடம் வேண்டும். நீங்களே சொல்லிஉள்ளது போலே
    //சரித்திரம், கண்டுபிடிப்பு சம்பந்தமான புத்தகங்களுக்கு
    காலம், இடம் இருக்க வேண்டியது இன்றியமையாதது.//
    நான் பைபிள் கல்லூரிகளில் பாதிரியார்கள் கல்விக்கான புத்தகங்களிலிருந்து போட்டவை ஆதாரங்கள் -கலைகளஞ்சியங்களிலிருந்து அல்ல.
    வரலாற்று ஆதாரங்கள் தலைப்பு கொடுத்து பின் குரானில் காலம் -இடம் சொல்லவே இல்லை எனில் என்ன சொல்வது? நான் குரானை சொன்னதை விட பைபிளியல்- இஸ்ரேல் ஆய்வு முடிவுகள் கொண்டு தான் எழுதியுள்ளேன்.

    //குர்ஆனின் எந்த வசனமும் தற்கால அறிவியல் முடிவுக்கு மாற்றமாக இல்லாததும்…..கு இதில் நம்பிக்கை வரவில்லை என்றால் அதற்காக நான் கட்டாயப்படுத்தவும் இல்லை.//
    உலகம் தட்டை என்று அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட ஈராக்கியர் குரானின் அடிப்படையில் அரபி மொழியிலேயே விளக்குகிறார்.


    http://www.bbc.co.uk/news/world-africa-16456381

    உலகம் தட்டை முஸ்லீம் கும்பல் கொலைவெறியாட்டம்- நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் ஓட்டம்
    Nigerians flee Boko Haram sectarian attacks
    அவர் குரானின் அடிப்படையில், குரானில் இப்படி சொல்லியிருக்கிறது, ஹதீஸில் இப்படி சொல்லியிருக்கிறது. ஆகவே உலகம் தட்டை என்றுதான் குரான் சொல்லுகிறது.
    என் முந்தைய பதிவைப் பாருங்கள்,
    //Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
    http://www.mediafire.com/download.php?y177tc2oa3tegam
    இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
    http://wp.me/PxRSh-7E
    1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
    2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
    3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
    4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
    5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
    6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
    7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

    மோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது. இவர்கள் வெறியில் பேசினார்களெ தவிர எந்த வார்த்தையையும் கடவுளிடமிருந்து பெறவில்லை.
    குரான் யாத்திரையை சொல்கிறது, மோசஸை சொல்கிறது. செங்கடல் வழிவிட்டதை 80 வசங்களில் பேசுகிறது. யாத்திரையின் போது தௌரத் வந்ததாகப் பேசுகிறது.
    நீங்களே சொல்லுங்கள் இப்படி புனைந்த கதாசிரியர் யாராக இருக்க முடியும்.//
    என் கேள்வி அனைத்துமே பைபிளியல் அடிப்படையில் தான். வரலாறு அடிப்படையில் கூறியவையே- வருத்த அல்ல. விளக்க வாய்ப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  64. //இங்கு காட்டப்படும் மனித எலும்புக் கூடுக்ள் சாலிஹ் நபியின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடையது என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது ஆதாரபூர்வமாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.//

    இது ஒருவர் வடிவமைத்தது...

    http://www.lostateminor.com/2012/07/18/giant-model-of-a-human-skeleton-by-gino-de-dominicis/


    Italian artist Gino De Dominicis created this 28 meter (91 ft) model of a human skeleton. The work is accurately scaled, though it does feature a rather bizarre nose.

    ReplyDelete
  65. இனிய நண்பர்களுக்கு,

    குரானைத் தவிர வேறு எந்த வேதமும் உண்மையில்லை மூடநம்பிக்கையுள்ளது, திருத்தப்பட்டது,பொய்யானது நம்புங்கள் அவ்வளவுதான். ஆனால் மற்ற வேதத்தையுடையவர்களும் அவர்களுக்கு அது உண்மையானது அதையும் நம்புங்கள் எனவே நம்பிக்கை மட்டுமே உண்மையும் ஆகாது இதையும் நம்புங்கள் அல்லது நம்பாமலிருங்கள் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை கெடுதலும் இல்லை. ஏனெனில் வேதங்கள் கடவுள்கள் இல்லாமலும் இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழும்!!!!வாழும் வரை அன்பாகவும்,கலகலப்பாகவும்,மனிதனை மனிதன் கொன்று குவிக்காமல் மனிதநேயத்துடன் வாழ யாரையும் வணங்கும் அவசியம் எந்த உயிர்னங்களுக்கும் இல்லை,வணங்கித்தான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த எந்த மனிதனுக்கும் உரிமையும் இல்லை,அப்படி கட்டாயப்படுத்துபவர்களை நாம் மதிக்கத் தேவையில்லை இதுவே நம் நிலைபாடு.

    நன்றி!!!!!!

    இனியவன்.....

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)