Thursday, March 01, 2012

சூரியன் தனக்குரிய பாதையில் நகர்கிறதா?

இரவும் பகலும் மாறி மாறிவருவதைக் கண்ட மனிதன், இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'புவி மையக் கோட்பாட்டை உருவாக்கினார். அதாவது பூமியைச் சுற்றியே சூரியன், சந்திரன் போன்ற மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் இதனாலேயே இரவு பகல் ஏற்படுவதாகவும் தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். அரிஸ்டாட்டில் சொன்னதால் உலகமும் ஒத்துக் கொண்டது.



ஆனால் இவரின் ஆராய்ச்சி தவறு என்றும் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை குர்ஆன் வெளியிடுகிறது. ஆனால் அறிவியல் உலகம் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது. அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ்(1473-1543), ஜோஹன்னஸ் கெப்ளர்(1571-1630) போன்றோர் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை உணருகின்றனர்.



உலகம் கோள வடிவமானது என்ற உண்மையை நாம் கடலில் கப்பலின் வரவை வைத்தே எளிதாக கண்டு கொள்ளலாம். அந்த காலத்தில் பூமியின் வடிவத்தை காண இது ஒன்றுதான் வழியாக இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் வேண்டுமானால் கப்பலின் உதாரணம் தேவைப்படாமல் இருக்கலாம். அந்த காலத்திய மக்களுக்கு உண்மையை உணர்த்துவதற்க்கு குர்ஆன் கப்பலையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறது.

இனி குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 2:164


மேற்கண்ட குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்துகின்றன என்றும் பறை சாற்றுகிறது. இதன் மூலம் பூமி நிலைத்திருக்கவில்லை அதுவும் நீந்துகிறது என்ற உண்மையை கூறி புவி மையக் கோட்பாட்டை நிராகரிக்கிறது குர்ஆன்.



'அடுத்து சூரியன் ஒரு இடத்திலேயே நிலை பெற்றிருக்கிறது. அது நகரவில்லை என்றுதான் சமீபகாலம் வரை அறிவியல் அறிஞர்கள் நம்பி வந்தனர். கோபர் நிகஸ், கெப்ளர், கலிலியோ போன்ற தலை சிறந்த அறிவியல் அறிஞர்கள் கூட சூரியன் நகரவில்லை. அது ஒரே இடத்தில் நிற்கிறது என்றே கூறி வந்தனர். அரை நூற்றாண்டு காலம் தமது மொட்டை மாடியில் வானத்தை ஆராய்ந்து 1783 ஆம் அண்டு விஞ்ஞானி ஹெர்ஷல் சூரியனும் நகர்கிறது என்ற உண்மையை கண்டு பிடித்தார். இதே கருத்தை 'சூரியனும் நீந்துகிறது' என்று அழகான வார்த்தைகளைப் போட்டு கூறிய குர்ஆனை நினைத்து பிரமிக்கிறோம்.

அறிவியல் அறிஞர் பி.டூயிக் அவர்கள் நட்சத்திரங்களின் நகர்வை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறார். ஒரு நட்சத்திரம் நமது நிலவின் அகலம் எவ்வளவோ அவ்வளவு தூரம் நகர்ந்ததாக பூமியிலிருந்து பார்க்க வேண்டுமானால் அதற்காக 190 வருடங்கள் காத்திருக்க வெண்டும் எனக் கூறுகிறார். சுருங்கக் கூறின் பூமியிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் யாவும் நகராமல் ஒரே இடத்திலேயே இருப்பதாகத் தோன்றும் என்பதே இதன் பொருளாகும். நமது கண்களுக்கு நட்சத்திரங்கள் எதுவும் நகருவதாக பார்க்க முடியவில்லை. அப்படி நகருவதாக ஒரவர் 1400 வருடங்களுக்கு முன்பு சொல்வதாக இருந்தால் அவர் வானியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். அல்லது இந்த செய்தி இறைவனிடமிருந்து வந்ததாக இருக்க வேண்டும்.

The Sun orbits the center of the Milky Way galaxy at a distance of approximately 26,000 light-years from the galactic center, completing one revolution in about 225–250 million years. It's approximate orbital speed is 220 kilometers per second, plus or minus 20 km/s. This is equivalent to about one light-year every 1,400 years, and about one AU every 8 days. These measurements of galactic distance and speed are as accurate as we can get given our current knowledge, but will change as we learn more.

# ^ Kerr, F. J.; Lynden-Bell D. (1986). "Review of galactic constants" (PDF). Monthly Notices of the Royal Astronomical Society 221: 1023–1038.

இது எவ்வாறு குர்ஆனால் சாத்தியப்பட்டது? முகமது நபி என்ற ஒரு தனி மனிதரால் இத்தகைய உண்மையை எவ்வாறு குர்ஆனில் சொல்ல முடிந்தது?

'பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக'
-குர்ஆன் 51;7




இங்கு குர்ஆன் வானத்தில் பாதைகள் இருக்கிறது என்று கூறுகிறது. அது என்ன வானத்தில் பாதைகள்? சூரியன், சந்திரன், பூமி போன்ற எண்ணற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் கும்பலாக இழுத்துக் கொண்டு ஓடினால் அதற்குரிய பாதைகள் வகுக்கப்பட்டால்தான் சாத்தியமாகும். இல்லை என்றால் ஒன்றோடொன்று மோதி பெரும் அழிவு ஏற்படும். அடுத்து மனிதர்களும் வானத்தில் பயணிக்கலாம் என்ற செய்தியையும் குர்ஆன் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த தலைப்பை யொட்டி சூரியன் சம்பந்தமாக குர்ஆனில் வரும் வரும் வேறு பல வசனங்கள்.

36:38. இன்னும் சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும்.

36:40. சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.


----------------------------------------------

இனி அனானியின் கேள்விக்கு வருவோம்!

நாம் மேலே பார்த்த குர்ஆன் வசனங்கள் சூரியனைச் சுற்றி பூமியும் மற்ற கோள்களும் சுற்றி வருவதாகவும் சூரியன் இவை அனைத்தையும் கோர்த்துக் கொண்டு ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதாகவும் பார்த்தோம். தற்கால அறிவியல் அறிஞர்களும் இதை மெய்ப்பிப்பதாகவும் கண்டோம்.



ஆனால் இதற்கு மாற்றமாக முகமது நபி சொன்னதாக அனானி சொல்லும் ஒரு ஹதீதை பார்ப்போம்.

//அந்த பதிவில் எப்படி சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் சென்று அமர்ந்துகொள்கிறது. எப்படி அடுத்த நாள் காலை வரைக்கும் அல்லாஹ்வின் காலடியில் அமர்ந்து “அல்லாஹ் அல்லாஹ் நான் அடுத்த நாள் காலையில் கிழக்கில் உதிக்கலாமா அல்லாஹ்” என்று கேட்டுகொண்டிருக்கிறது என்பதையும், அடுத்த் நாள் காலையில், சரி போய் கிழக்கில் உதிச்சிக்க்கோ என்று அல்லாஹ் சொல்வதையும் அடுத்த நாள் காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்து இந்த நஜஸ் காபிர்களின் வாயை மூட வைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.//

குர்ஆனானது முகமது நபி காலத்திலேயே பாதுகாக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு விளக்க உரையாக அமைந்த முகமது நபியின் ஹதீதுகள் சிலவற்றில் யூதர்களின் கைவரிசை புக ஆரம்பித்தது. இஸ்லாத்தின் வெற்றியை பொறுக்காத ஒரு சில யூதர்களும் கிறித்தவர்களும் சிலை வணங்கிகளும் முஸ்லிம்களாக மாறுவதாக நடித்தனர். பாதினியாக்கள் என்ற இவர்கள் முதன்முதலில் தற்போதய ஈரானில் உருவானார்கள். இவர்களில் பலரை முகமது நபி காலத்திலேயே முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொண்டனர். நபியவர்களின் மரணத்திற்கு பிறகு 'நபி என்னிடம் இப்படி சொன்னார்' 'நான் நபியிடம் இப்படி ஒரு சட்டத்தைக் கேள்வியுற்றேன்.' என்று பலரும் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணினர். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட நபித் தோழர்கள் அதற்கு பின் வந்த மேதைகள் ஹதீதுகளை தரம் பிரிக்கின்றனர். அறிவிப்பவர் உண்மையாளரா, முகமது நபியை பார்த்தவரா?, பொய் சொல்லாதவரா? மனநலம் பாதிக்கப்படாதவரா? என்றெல்லாம் ஆராய்ந்து 'நம்பத் தகந்தவை' 'நம்பத் தகாதவை' என்ற இரு வேறு பிரிவாக நபிமொழிகள் பிரிக்கப்பட்டன.

எனவே நபி மொழிகளை தெரிந்து கொள்ள அதில் நல்ல பாண்டித்தியம் வேண்டும். இப்படி ஹதீது கலையில் தேர்ச்சி பெறாதவர் ஹதீதை அணுகுவதற்கு ஒரு இலகுவான வழி உண்டு. ஒரு ஹதீஸ் குர்ஆனை ஒத்திருந்தால் அது நம்பகமான ஹதீஸ். ஒரு நபிமொழி குர்ஆனின் கருத்துக்கு மாறுபட்டால் அது நம்பத்தக்க ஹதீது இல்லை என்று புறம் தள்ள வேண்டும்.

ஒருமுறை அன்னை ஆயிஷாவிடம் முகமது நபி அவர்களின் வாழ்வு எவ்வாறு இருந்தது என்று ஒரு நபித் தோழர் கேட்டார். அதற்கு அன்னை அவர்கள் 'அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது' என்று பதிலளித்தார்கள். எனவே குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு கருத்தை முகமது நபி சொல்லியிருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வருகிறோம்.

குர்ஆனை மக்களுக்கு இறைவனிடம் இருந்து வாங்கித் தந்தது யார்? முகமது நபி. வாங்கிக் கொடுத்த ஒரு நபர் அதற்கு விளக்க உரையாக அதற்கு நேர்மாறான விளக்கத்தை கொடுக்க முடியுமா? முடியாது. எனவே இங்கு குர்ஆன் சொல்லும் சூரியனின் ஓட்டத்தை எடுத்துக் கொள்கிறோம்.

மேலும் உலகில் அணுவும் அவனன்றி அசையாது. எனவே இறைவன் நினைத்தால் சூரியன் என்ன அனைத்து கோள்களையுமே தினமும் வந்து அனுமதி வாங்கி செல்லும்படி சொல்லலாம். அவை அனைத்தும் கீழ்படியும். இந்த நபி மொழி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒருக்கால் இந்த அர்த்தத்திலும் அந்த நபி மொழி வந்திருக்கலாம்.

'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: என நுஃமான் இப்னு பஷீர் அறிவித்தார்.

புஹாரி:52

Volume :1 Book :2



இறைவனே அறிந்தவன்.

28 comments:

  1. *மனிதனுக்கேற்ற மார்க்கம்*

    முஹம்மது இறைத் தூதரா?
    லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்பதையும் முஹம்மது ரசூலுல்லாஹ் - முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் - என்பதையும் நம்ப வேண்டும். நாம் சுட்டிக் காட்டிய அடிப்படையில் நம்ப வேண்டும். இப்படி யார் நம்பினார்களோ அவர்கள் தாம் முஸ்லிம்கள்.

    அறிவுப்பூர்வமாகப் பேசும் சிலருக்கு இந்த இடத்தில் சந்தேகம் வரலாம். கடவுள் என்று ஒருவன் இருக்கின்றார் என்று கூறுகிறீர்கள். இதை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே? கடவுளே நேராக வந்து எல்லாவற்றையும் சொல்லி விட்டுச் சென்றால் ஏற்றுக் கொள்ளலாம்.

    இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் தான்; முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடவுளுடைய தூதர் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதே அந்தச் சந்தேகம்.


    இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் தான் என்பதற்கு திருக்குர்ஆன் இன்று வரை ஒரு மாபெரும் நிரூபணமாக உள்ளது.

    திருக்குர்ஆனை நாம் புரட்டிப் பார்த்தால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தையும், அந்தக் காலத்தில் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும் பார்க்கும் போது உண்மையிலேயே இது முஹம்மது என்ற மனிதரால் சொல்லியிருக்க முடியாது.

    20ம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்குரிய விஷயங்கள் அனைத்தும் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆனில் தெளிவாக, நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

    மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உருவாக்கி அதன் வழியாகச் சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய்க் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளான்.

    நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

    பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.

    இத்தகைய கால கட்டத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் வின் வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கான சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது

    “ மனித, ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். திருக்குர்ஆன். 55:33

    விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்; மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது.

    அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

    ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது “ என்று கூறுகிறது.

    விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது.

    விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.

    விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

    “ ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். திருக்குர்ஆன் 6:125 „

    இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை.

    விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

    Continued………

    ReplyDelete
  2. *மனிதனுக்கேற்ற மார்க்கம்*

    மேலும் மற்றொரு கோனத்திலும் வின்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

    “பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக! திருக்குர்ஆன் 51:7“

    பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

    திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதன் தான் வாழ்ந்த பகுதியை விட வேறு ஒரு பகுதி இந்த உலகில் இல்லை என்று தான் விளங்கி வைத்திருந்தான்.

    அமெரிக்காவை ஒருவன் கண்டுபிடித்தான் என்று அறிந்து வைத்திருக்கிறோம். இந்தப் பூமியில் இருக்கின்ற அமெரிக்காவையே ஒருவன் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது

    இந்த உண்மையைப் பார்க்கும் போது இந்தக் குர்ஆன் 14 நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்த மனிதனின் கற்பனையில் தோன்றியது என்று சொல்ல முடியுமா?

    எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திர மண்டலத்திற்குப் போக முடியும் என்று கூறி இருக்கிறார் என்றால் இது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகச் சொன்னதில்லை.

    கடவுளுடைய வார்த்தை தான் என்பதற்கு இதுவே போதுமான சான்றாக இருக்கின்றது.
    இது ஒரு சின்ன உதாரணம் தான்.

    சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

    “ சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். திருக்குர்ஆன் 13:2 “

    “ சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். திருக்குர்ஆன் 36:38 “

    பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.

    பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான்.

    உருண்டையாக இருக்கின்ற பூமி தான், இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது என்றான்.

    இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது என்றும், தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

    பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

    ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

    இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல் இருக்கவே முடியாது.

    இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.

    இப்படி ஏராளமான விஞ்ஞான உண்மைகளைக் குர்ஆன் கூறுகிறது. குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளைப் பார்த்தால் இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் தான் என்பது தெரிய வரும்.

    முஹம்மது என்ற மனிதரால் இப்படிப்பட்ட உண்மைகளை எப்படிக் கூற முடியும்?

    அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?

    எழுத்தறிவில்லாத ஒரு காலம்.
    முஹம்மது அவர்களுக்கும் எழுத்தறிவு கிடையாது.

    எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு அறிவியலும் ஏன் சாதாரண தொலை நோக்கியைக் கூட கண்டுபிடிக்காத காலத்தில் வாழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்கள் இந்தக் கோள்கள் அனைத்தும் சுழல்கின்றன. அவற்றுக்குரிய பாதையில் சுழல்கின்றன என்று கூறுபவர்களாக இருந்தால் அவர் சாதாரண முஹம்மதாக இருந்து கூற முடியாது.

    அல்லாஹ்வுடைய தூதர் என்ற அடிப்படையில் இருந்தால் மட்டுமே சொல்ல முடியும். முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மட்டுமே இதைச் சொல்ல முடியும்.

    இன்னும்

    திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் அறிவியல் உலகம் கூறும் எல்லா விதமான உண்மைகளையும் அன்றே சொல்லி விட்டது. வேறு எந்த வேத நூலிலும் நீங்கள் இதைப் பார்க்க முடியாது.

    மாறாக அவை விஞ்ஞானத்திற்கு எதிராகவே இருக்கும்.

    Continued………

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அந்த அனானி நடுநிலையான, உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவரானால் பதிவின் இறுதியில் உள்ள அந்த ஹதீஸே அவருக்குப் போதுமானதாகும். அல்ஹம்துலில்லாஹ்! அருமையான பதிவு!!!

    ReplyDelete
  4. *மனிதனுக்கேற்ற மார்க்கம்*

    14 நூற்றாண்டுகளுக்கு முன்னே அருளப்பட்ட திருக்குர்ஆனில் 6666 வசனங்கள் உள்ளன. ஆனால் இன்று ஒரே ஒரு வசனத்தைக் காட்டி இது அறிவியல் உண்மைக்கு மாற்றமாக இருக்கின்றது என்று யாராலும் கூற முடியாது.

    14 நூற்றாண்டுகள் ஆன பிறகும், இன்றைய அறிவியல் உலகத்தில் இவ்வளவு கண்டுபிடிப்புகள் வந்தும் கூட பொய்ப்பிக்க முடியாத ஒரு நூலை கடவுள் தந்தார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

    இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் என்பதற்கு முஸ்லிம்கள் கையில் இன்றைக்கு இருக்கும் ஒரே ஆதாரம் இந்தத் குர்ஆன் தான். இந்தக் குர்ஆனை வைத்துத் தான் நாம் இஸ்லாம் மார்க்கம் கடவுளின் மார்க்கம் என்று நம்புகிறோம்.

    இது முஹம்மது (ஸல்) அவர்கள் எழுதிய புத்தகம் என்று சொல்வார்கள்.

    இது முஹம்மது எழுதிய புத்தகம் என்றால் இவையெல்லாம் அவருக்கு தெரியவே தெரியாது.

    அவருக்குத் தெரிய வேண்டுமானால் அவர் என்ன 20ம் நூற்றாண்டு மனிதரா?

    20ம் நூற்றாண்டு மனிதர்களுக்குச் சொல்ல வேண்டியதை அவர் 14ம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றால் குர்ஆன் அவர் கற்பனையில் உதித்ததல்லை என்பது உறுதி.

    (இது பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ள, வருமுன் உரைத்த இஸ்லாம்' என்ற வெளியீட்டைக் காண்க!)

    இப்படிப்பட்ட ஒரு அருமையான தத்துவம்

    மனிதர்கள் சிந்திக்க வேண்டிய தத்துவம்

    அறிவுக்குப் பொருத்தமான தத்துவம்

    மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தத்துவம்

    முரண்பாடே இல்லாத ஒரு தத்துவம் தான் இஸ்லாம்.

    இஸ்லாம் என்பது பிறப்பினால் வருவதில்லை.

    அதனைப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் போது வருகிறது.

    இதனை யாரும் ஏற்றுக் கொள்ளலாம்.

    ஏனெனில் இது அகில உலகத்திற்கும் பொதுவானது.

    மனிதர்களே!' என்று தான் குர்ஆன் அழைப்பு விடுகின்றது.

    முஸ்லிமான தாய் தந்தைக்குப் பிறந்தவன் எல்லாம் முஸ்லிம் இல்லை.

    ஆனால் முஸ்லிம் அல்லாத பெற்றோர்களுக்குப் பிறந்து இதனை ஏற்றுக் கொண்டு விட்டால் அவன் முஸ்லிம்.

    உனது பூர்வீகம் என்ன? என்று கேட்க முடியாது.

    ஆகவே இஸ்லாம் என்பது நம்பி விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கைத் தத்துவம்.


    - பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

    ReplyDelete
  5. அருமையான விக்கங்கள் சகோ....தொடருங்கள்

    ReplyDelete
  6. ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

    குர்ஆன் பின்னணியில் மிக விளக்கமான சிந்திக்கவைக்கும் பதிவு. நன்றி சகோ.

    குர்ஆன் வசனங்கள் பாதுகாக்கப்பட்டது என அறிவோம். ஹதீஸ்களில் சில மனிதத்தவறுகள் இடம்பெற்றுவிடக்கூடும் என்பதையும் அறிவோம்.

    இந்நிலையில்... குர்ஆனில் ஒரு விஷயம் தெளிவாக சொல்லப்பட்டு இருக்க, அதற்கு மாற்றமாக ஹதீஸ்களில் வந்தால்... குர்ஆன் சொல்வதையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றே.

    இது அனானி அன்பர் அறிய வேண்டிய ஒன்று..!

    ReplyDelete
  7. சலாம் சகோ வாஞ்சூர் பாய்!

    தலைப்புக்கு பொருத்தமான பி.ஜே அவர்களின் நீண்ட கட்டுரையை பகிர்ந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. வஅலைக்கும் சலாம்! சகோ ஜாபர்!

    //அந்த அனானி நடுநிலையான, உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவரானால் பதிவின் இறுதியில் உள்ள அந்த ஹதீஸே அவருக்குப் போதுமானதாகும். அல்ஹம்துலில்லாஹ்! அருமையான பதிவு!!!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  9. //அருமையான விக்கங்கள் சகோ....தொடருங்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஹாஜாமைதீன்!

    ReplyDelete
  10. சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!

    //இந்நிலையில்... குர்ஆனில் ஒரு விஷயம் தெளிவாக சொல்லப்பட்டு இருக்க, அதற்கு மாற்றமாக ஹதீஸ்களில் வந்தால்... குர்ஆன் சொல்வதையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றே.

    இது அனானி அன்பர் அறிய வேண்டிய ஒன்று..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  11. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    நேர்த்தியான பதிவு. முஹம்மது நபி ஸல் அவர்கள் தானாகவே குரானை எழுதி இருந்தால் இவ்வளவு confident டாக வானவியல் பற்றி பேசி இருக்க முடியாது. மேலும் அந்தக்காலத்தில் அவர் அறியாத ஒன்றை பேச வேண்டிய அவசியமும் இல்லை. வானவியல் பற்றி பேசும் குரான் வசனங்களில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயம் அத்தாட்சிகள் உண்டு என்பதுதான் எதார்த்தம். சகோக்கள் சிந்திப்பார்களா?????

    ReplyDelete
  12. சலாம் சகோ சிராஜ்!

    //நேர்த்தியான பதிவு. முஹம்மது நபி ஸல் அவர்கள் தானாகவே குரானை எழுதி இருந்தால் இவ்வளவு confident டாக வானவியல் பற்றி பேசி இருக்க முடியாது. மேலும் அந்தக்காலத்தில் அவர் அறியாத ஒன்றை பேச வேண்டிய அவசியமும் இல்லை. வானவியல் பற்றி பேசும் குரான் வசனங்களில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயம் அத்தாட்சிகள் உண்டு என்பதுதான் எதார்த்தம். சகோக்கள் சிந்திப்பார்களா?????//

    சிந்திக்க வேண்டும். குறைந்தபட்சம் தவறான கோணத்தில் பார்ப்பதையாவது அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மாஷா அல்லாஹ்

    அறிவியலுடன் இஸ்லாத்தை அழகாய் பொருத்திய பதிவு

    பகிர்ந்த பதிவிற்கு
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  14. நல்ல காமடி பதிவு....வாழ்க்கையில் சிரிக்க காமடி வேண்டுமே...உங்கள் சேவை தமிழ்பதிவுலகிற்குத் தேவை.

    ReplyDelete
  15. alhamthulillaah!
    nalla thakavalkal!
    ungalukku iraivan arul purivaanaaka!

    ReplyDelete
  16. நண்பர் சுவனப்பிரியன்,

    அருமையான அறிவியல் பதிவு.
    அந்த வாரம் தமிழன் தொல்லைக்காட்சி பார்த்தவுடன், அடுத்த வாரம் நமது நண்பரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்ற எனது யூகங்கள் சரியாகத்தான் அமைந்து வருகிறது.

    சூரியன் கழுதை அதுப்பாட்டுக்கு கிடக்கட்டும், சூரியன் breast stroke, butterfly stroke, crawl, backstroke, side stroke, dog paddle, free style, போன்ற வகையில் நீந்துதுவதை அந்த “சிலை வணங்கி” அனானிக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. அது பெலமான அதீஸா, பெலஹீனமான அதீஸா என்று அதீஸ் கலையுடன் விளக்கி சொல்லியிருந்தால் அந்த அனானிக்கு சரியான பதிலடியாக இருந்திருக்கும்.

    சரி அதை விடுங்க, இப்ப ஒரு பயங்கரமான பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளேன்.........

    ஒரு வருடமாக குரானை தமிழாக்கம் நூலின் மூலம் படித்துக் கொண்டுவருகிறேன். இவ்வளவு நாள் பார்க்காத செய்தியை இன்று காலையில் பார்த்தவுடன பயங்கரமான அதிர்ச்சி. அந்தச் செய்தி..’தயவு செய்து குளித்து சுத்தமாக இந்த குரானை படிக்கவும்” என்றிருக்கிறது.

    அடடா, எப்பஎப்போ தோணுதோ தேவையிருகோ அப்பஅப்போ படிப்பதினால் பெரிய தெய்வகுற்றத்தில் மாட்டிவிட்டதாக ஒரே பதட்டம்.....

    1) தமிழாக்கம் குரானை ”தயவு செய்து குளித்து சுத்தமாக இந்த குரானை படிக்கவும்” என்பது சரியா கட்டாயாமா?

    2) அப்படி செய்யாமல் படித்த என்னைப் போன்றவர்களுக்கு என்ன தண்டனை?

    சீக்கிரமாக பதில் சொன்னால் நல்லது, இரவு நன்றாக தூங்கனும்.

    ReplyDelete
  17. விஞ்ஞானம் என்பது இருக்கிறவைகளின் ஆராய்ச்சி முடிவுகள் மட்டுமே. நம் புத்திக்கு எட்டாத இறைவனை அறிவியலைக் கொண்டு ஆராய்வது பத்தாம்பசலித்தனமாகும். இதை என்று இந்த நாத்திகக் கூட்டம் உணருமோ தெரியவில்லை. அறிவியல் என்பதே இறைவன் அருளிய அருட்கொடையே. வேறில்லை என்பது நமது தாழ்மையான கருத்து. நல்ல அலசல். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. கடவுள் இல்லை என்பவர்கள் மூடர்களே! இவர்கள் திருந்தப் போவதும் இல்லை. வருந்தப்போவதும் இல்லை. இறைத்தண்டனைக்கு தப்பிப்பதும் இல்லை. அவர்களும் அவர்கள் கொள்கைகளும் அவர்களோடே நாசமாய்ப் போகக்கடவது. விட்டுத்தள்ளுங்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப் படவேண்டிய அவசியமும் இல்லை சகோ.

    ReplyDelete
  19. சகோ நரேன்!

    //1) தமிழாக்கம் குரானை ”தயவு செய்து குளித்து சுத்தமாக இந்த குரானை படிக்கவும்” என்பது சரியா கட்டாயாமா?

    2) அப்படி செய்யாமல் படித்த என்னைப் போன்றவர்களுக்கு என்ன தண்டனை?

    சீக்கிரமாக பதில் சொன்னால் நல்லது, இரவு நன்றாக தூங்கனும்.//

    நிம்மதியாக தூங்குங்கள். அதை மொழி பெயர்த்தவர்கள் தவறாக விளங்கியிருக்கிறார்கள்.

    'தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்' (அல்குர்ஆன் 56:79)

    குர்ஆனின் வசனத்தை தவறாக விளங்கிக் கொண்டதால் இந்த கருத்து சில குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் போடப்பட்டுள்ளது.

    இந்த வசனத்துக்கு முந்தய வசனத்தை நீங்கள் படித்தால் உண்மையான விளக்கம் கிடைக்கும்.

    'இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் அதை தீண்ட மாட்டார்கள்.'
    -குர்ஆன் 56:77,78,79

    இப்பொழுது விளங்கியிருக்குமே! அன்றைய அரபுகள் முகமது நபிக்கு அருளப்படும் இந்த குர்ஆன் ஷைத்தானிடமிருந்து வருகிறது என்று சொல்லி வந்தனர். அதை மறுத்தே இறைவன் இந்த குர்ஆன் பாதுகாக்ப்பட்ட பதிவேட்டில் உள்ளது. அதனை வானவர்களைத் தவிர வேறு யாரும் தொடமாட்டார்கள் என்று குர்ஆனில் இறைவன் விளக்குகிறான். இதனை தவறாக விளங்கிய ஒரு சில மார்க்க அறிஞர்கள் இவ்வாறு எழுதி வைத்துள்ளார்கள்.

    இந்த குர்அன் அருளப்பட்டது ஒலி வடிவில்தானே யொழிய வரி வடிவில் கிடையாது. புத்தகமாக நமது வகதிக்காக தயாரித்திருக்கிறோம். இந்த குர்ஆன் அருளப்பட்டபோது எவருமே முஸ்லிம்கள் இல்லையே! எலும்புகளிலும் தோல்களிலும் எழுதியதை அவர்களும் படித்திருக்கிறார்கள். அதன் பிறகே இஸ்லாத்தை ஏற்றார்கள். இந்த முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. முழு உலக மனிதருக்கும் சொந்தமானது. நரேனுக்கு சொந்தமானது. ராவணனுக்கு சொந்தமானது. தருமிக்கு சொந்தமானது. சார்வாகனுக்கு சொந்தமானது.

    மேலும் விபரமறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

    http://www.youtube.com/watch?v=ca2krYAzZPU&feature=player_embedded#!

    //அருமையான அறிவியல் பதிவு.
    அந்த வாரம் தமிழன் தொல்லைக்காட்சி பார்த்தவுடன், அடுத்த வாரம் நமது நண்பரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்ற எனது யூகங்கள் சரியாகத்தான் அமைந்து வருகிறது.//

    தமிழன் டிவியில் இப்படி ஒரு தலைப்பில் நிகழ்ச்சி நடந்ததே நீங்கள் சொல்லித்தான் தெரியும். அனானி இரண்டு முறை என்னிடம் நினைவூட்டி 'பதில் இல்லையா' என்று கேட்டதால்தான் இந்த பதிவை எழுதவே அமர்ந்தேன். இது போன்ற நிகழ்ச்சி தமிழன் டிவியிலும் வந்தது மகிழ்ச்சி!

    ReplyDelete
  20. சலாம் சகோ குலாம்!

    //மாஷா அல்லாஹ்

    அறிவியலுடன் இஸ்லாத்தை அழகாய் பொருத்திய பதிவு

    பகிர்ந்த பதிவிற்கு
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  21. திரு ராவணன்!

    //நல்ல காமடி பதிவு....வாழ்க்கையில் சிரிக்க காமடி வேண்டுமே...உங்கள் சேவை தமிழ்பதிவுலகிற்குத் தேவை.//

    பதிவை படிப்பவர்கள் அதனை தீர்மானித்துக் கொள்வார்கள்.

    ReplyDelete
  22. சகோ சீனி!

    //alhamthulillaah!
    nalla thakavalkal!
    ungalukku iraivan arul purivaanaaka!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  23. சகோ துரை டேனியல்!

    //கடவுள் இல்லை என்பவர்கள் மூடர்களே! இவர்கள் திருந்தப் போவதும் இல்லை. வருந்தப்போவதும் இல்லை. இறைத்தண்டனைக்கு தப்பிப்பதும் இல்லை. அவர்களும் அவர்கள் கொள்கைகளும் அவர்களோடே நாசமாய்ப் போகக்கடவது. விட்டுத்தள்ளுங்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப் படவேண்டிய அவசியமும் இல்லை சகோ.//

    'இறைவன் அழிக்கப் பொகிற அல்லது கடுமையாக தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்? என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் 'உங்கள் இறைவனிடமிருந்து விசாரணையின் போது தப்பிப்பதற்காகவும் அவர்கள் இறைவனை அஞ்சுவோராக ஆவதற்காகவும் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்' எனக் கூறினர்.
    -குர்ஆன் 7:164

    இந்த வசனம் இன்றைய நாத்திகர்களுக்கும் பொருந்தும். சொல்வதை சொல்லி விடுகிறோம். எடுப்பதும் எடுக்காததும் அவரவர் விருப்பம். இவர்கள் இல்லை என்றாலும் இவர்களது வாரிசுகளாவது உண்மையை இறைவனை உணருவார்கள். அதற்கான சிறிய முயற்ச்சியே இது போன்ற பிரசாரங்கள்.
    நீங்களும் பல நல்ல ஆக்கங்களை எழுதி வருகிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  24. // **** பேரும், பின் பற்ற கூட்டமும் சேர்ந்த பின் அல்லவா மற்ற கூத்தெல்லாம். ஹும்ம்.*****
    எமது நபிகளாரைப்பற்றி, இப்படியெல்லாம் //

    உங்களின் நம்பிக்கையை தாக்கிய கருத்து அது.

    //****வெறியுடன் குதருதல், பீற்றல்****//

    கருத்தை சாடாமல் கருத்து சொன்னவரை சாடும் தனி மனித தாக்குதல் இது.

    // இறைவன் தங்களை நேர்வழியில் செலுத்தட்டும் //

    ஹா ஹா!!!! இதில் இந்த மாதிரி ஜோக்குகள் வேறயா.

    ReplyDelete
  25. Anonymous11:56 PM

    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,

    சகோ சுவனப்பிரியன் நீங்கள் சூரியனை பற்றி விளக்கம் அளித்திருக்கும் முறை அருமை சகோ அல்ஹம்துலில்லாஹ்.உங்கள் பதிவு மிகவும் எளிதாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும்படியும் அமைந்துள்ளது சகோ.ஜசாகல்லாஹ் ஹைர்.

    மேலும் சகோ உங்க mail id எனக்கும் வேண்டும்.எனக்கு ஒரு சில சந்தேகங்களுக்கு விடை வேண்டும் சகோ.அதை நான் உங்கள் மெயில் முகவரிக்கு அனுப்புகிறேன் இன்ஷா அலலாஹ்.

    your brother mohamed iqbal

    ReplyDelete
  26. சலாம் சகோ முஹம்மது இக்பால்!

    //மேலும் சகோ உங்க mail id எனக்கும் வேண்டும்.எனக்கு ஒரு சில சந்தேகங்களுக்கு விடை வேண்டும் சகோ.அதை நான் உங்கள் மெயில் முகவரிக்கு அனுப்புகிறேன் இன்ஷா அலலாஹ்.

    your brother mohamed iqbal//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    எனது ஈமெயில் nazeer65@gmail.com

    ReplyDelete
  27. அஸ்ஸலாமு அலைக்கும்!



    அன்பிற்குரிய சகோதரர் முஹம்மது இக்பால்!



    'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் இப்றாஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மூசாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்.' என்று கூறுங்கள்.

    -குர்ஆன் 2:136



    இந்த வசனத்தின் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் வேதங்கள் வழங்கப்பட்டது என்பதை அறிகிறோம்.



    இஸரவேலர்கள் உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகிறீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தையை செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.

    -குர்ஆன் 2:75



    அப்படி உலக மக்கள் அனைவருக்கும் வேதம் வந்தாலும் சில சுய நலமிகளால் அந்த வேதங்கள் மாற்றப்பட்டு மனிதர்களின் எண்ணங்களும் கலந்து விட்டன. இந்து மத வேதங்களில் ஓரிறைக் கொள்கையும் வரும் பல தெய்வ வணக்கமும் வரும். மனிதனும் தெய்வமாகலாம் என்ற கருத்தும் வரும். இறைவனின் கருத்தும் மனிதனின் கருத்தும் கலந்ததனால் வந்த வினை இது.



    இந்து மத வேதங்களும் கிறித்தவ மத வேதங்களும் எந்த மாற்றங்களும் இல்லாமல் அருளப்பட்ட விதத்திலேயே இன்றும் இருந்தால் அது முழுக்க முழுக்க குர்ஆனையே ஒத்திருக்கும். எனவேதான் இந்து மத வேதங்களிலும் பல அறிவியல் கருத்துகள் புதைந்து கிடக்கிறது. அதிலும் சித்தர்களின் பாடல்களை கேட்டால் நாம் மலைத்து விடுவொம். அந்த அளவு அறிவியல் உண்மைகள் பரந்து கிடக்கின்றது.



    எனவே இந்து மத வேதங்களில் உள்ள கோள்கள் சமாச்சாரமும் இறைவன் புறத்திலிருந்து வந்தவையே. இந்து மதத்துக்கு அனுப்பப்பட்ட தூதராக நோவா அதாவது நூஹ் நபியாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மோசேயை பின் பற்றிய யூதர்களின் ஒரு பிரிவினர்தான் நம்மூர் பிராமணர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆனால உறுதி செய்த தகவல் இல்லை. பலவற்றை தெரிந்தே அழித்து விட்டார்கள்.



    இது பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெற்றால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.



    தாவா பணியில் சிறந்து விளங்குவது அறிந்து மகிழ்ச்சி! ஈருலக வெற்றிக்கு இதுவெ சிறந்த வழி. வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்.



    என்றும் அன்புடன்



    சுவனப்பிரியன்.

    ReplyDelete
  28. தமாசு தமாசு

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)