Monday, March 12, 2012

உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

கேள்வி:
ஓரிறையின் திருப்பெயரால்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரகாதஹு,

அன்பின் சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு!

உங்கள் அன்பின் சகோதரன் முஹமத் இக்பால் இடம் ஒரு சந்தேகம் உள்ளது.இறை நாடினால் அதற்கு எனக்கு நீங்கள் விளக்கம் அளிக்கவும் சகோ. சகோ இஸ்லாம் பார்வையில் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?கூடாதா?கொஞ்சம் தெளிவு படுத்தவும் இன்ஷா அல்லாஹ்.


பதில்:
வஅலைக்கும் சலாம் சகோ முஹம்மது இக்பால். உடல் உறுப்புகளை நமது உடலுக்கு பாதகம் வராமல் தாராளமாக பிறருக்கு தானம் செய்யலாம். மார்க்கத்தில் இதற்கு தடை இல்லை. முழு உடலையும் ஆராய்ச்சிக்காக கொடுப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் குளிப்பாட்டுவது, உடலை அடக்கம் செய்வது போன்ற செயல்களை உடலை தானம் செய்யும போது நம்மால் நிறைவேற்ற முடியாது. அவசியம் உள்ளவர்கள் மற்ற மதத்தவர்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.

எனவே இரத்தம் கொடுப்பது, கண்தானம் செய்வது, கிட்னி தானம் செய்வது போன்றவை மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை. தாராளமாக கொடுக்கலாம்.

இந்த காணொளியில் உங்கள் கேள்விக்கான விளக்கம் இருக்கிறது. பார்த்து தெளிவு பெறுங்கள்.



-------------------------------------------------------

சவூதியின் அல்பாஹா நகரில் சாலை விபத்தொன்றில் இறந்த சவூதி இளைஞன் ஒருவனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவனுடைய பெற்றோர் முன்வந்துள்ளனர்.
அல்பாஹா நகரின் மன்னர் ஃபஹத் மருத்துவமனையின் உறுப்பு தானப் பிரிவு பொறுப்பாளரிடம் சவூதி உறுப்பு தான மையம் (SOTC) வைத்த கோரிக்கை படி, அந்தப் பொறுப்பாளர் இறந்த இளைஞனின் பெற்றோரை அணுகி "இறைவனுக்காக, இறந்த மகனின் உறுப்புகளை தானம் வழங்குங்கள்" என்று கேட்டுக்கொண்டார். இது பற்றி கருத்து தெரிவித்த இறந்த இளைஞனின் சகோதரர், "இறைவனுக்காக, இம்மாபெரும் கொடைக்கு எங்கள் பெற்றோர் ஒப்புக்கொண்டார்கள்" என்று கூறினார்.

அல்பாஹா மருத்துவத்துறை பொறுப்பாளர் மாஜித் ஆல் ஷாத்தி கூறுகையில், "சவூதி உறுப்பு தான மையத்தின் மருத்துவக் குழு கடந்த சனியன்று வானூர்தியில் அல்பாஹா வந்தடைந்தது. 10 நுட்ப வல்லுநர்களும், அறுவை சிகிட்சை மருத்துவர்களையும் கொண்ட அந்தக் குழு தேவையான உறுப்புகளை தானம் பெற்றுச் சென்றது. இவையாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வழிகாட்டுதல் படி நடைபெற்றது" என்றார்.

சவூதி உறுப்பு தான மையம் (SOTC) இயக்குநர், அந்தக் குடும்பத்தினருக்கான தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், இளவரசர் சல்மான், அல்பாஹா மாகாண சுகாதாரத்துறை இயக்குநர் அப்துல்ஹமீது அல்காம்தி ஆகியோருக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.

36 comments:

  1. Anonymous4:19 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

    சகோ பதிவாகவே போட்டு விட்டீர்களா மாஷா அல்லாஹ்.ஜஜாகல்லாஹ் ஹைரன்

    உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

    ReplyDelete
  2. உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

    ஒருவர் பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, அல்லது தர்மத்திற்காகவோ உயிருடன் இருக்கும்போது அல்லது இறந்த பின்போ தன்னுடை கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை பிற மனிதர்களுக்கு தானம் கொடுக்கலாமா?

    இதில் இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பார்ப்போம்.

    மனிதனின் உடற்கூறுகளை ஆராயும் மருத்துவத்துறையின் வளர்ச்சி சென்ற ஒரு நூற்றாண்டில் பல நூறு ஆண்டுகள் காணாத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித இனம் பற்பல நன்மைகளை அடைந்துள்ளது. அதில் ஒன்று உடல் உறுப்புகளை மாற்றும் Transplantation முறையாகும்.

    முழுமை பெற்ற இஸ்லாம் இவ்விதம் உடல் உறுப்புகளை உயிருடனோ, மரணித்த பின்போ தானமாக தரலாமா? போன்ற நியாயமான கேள்விகள் முஸ்லிம்களிடையே எழுந்துள்ளது.

    இதற்கு ஒரிரு வார்த்தைகளில் பதிலலிப்பது விவேகமாகாது.

    குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்தால் எக்காலத்திற்கும் உகந்தது இஸ்லாம் என்ற கருத்து அனைவரிடமும் நிலவும்.

    எனவே நாம் இதனை சிறிது விளக்கமாகவே பார்ப்போம்.

    வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்். அவன் நாடியதைப் படைக்கிறான்். இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குா்ஆன் 5:17)

    வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! (அல்குா்ஆன் 24:64)
    அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்் பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்் அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல்குா்ஆன் 2:29)

    போன்ற திருக்குர்ஆன் வசனங்களின்படி அல்லாஹ் அனைத்திற்கும் அதிபதி என்பதை அறிகிறோம். இப்படிப் படைக்கப்பட்ட அனைத்தும் எதற்கு? ஏன் அல்லாஹ் படைத்தான்? என்ற வினாவுக்கு அல்லாஹ் பதிலலிக்கிறான்.

    அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்் (அல்குா்ஆன் 2:29)

    நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்் இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்் அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்் நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (அல்குா்ஆன் 31:20)

    இவ்விதமாக அகத்திலும் புறத்திலும் அருட்கொடைகளாக அளித்திருப்பவை தனது உடலிலும் உண்டு. வானங்களிலும் பூமிகளிலும் உள்ள அனைத்திலும் உள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொள்வது நமது கடமையாகும். அவற்றை செம்மையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான்.

    அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்் அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. (அல்குா்ஆன் 45:13)

    அல்லாஹ் படைப்புகளில் மிக உயர்ந்த படைப்பான மனித இனத்திற்கு மற்ற படைப்பினங்களை கட்டுப்படுத்தி தந்திருக்கிறான். அதே நேரத்தில் மனிதனுக்கு மனிதன் உபயோகமாக இருக்க வேண்டுமென்பதையும் இஸ்லாம் கூறாமலில்லை. அதன் அடிப்படையில்தான் தர்மங்கள் நல்லெண்ண உறவுகள் பந்தப்பினைப்புகளை அல்லாஹ் அவசியமாக நற்செயலாக நமக்கு காட்டுகிறான்.

    நன்மையிலும்் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்். (அல்குா்ஆன் 5:2)

    நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குா்ஆன் 3:92)

    அவனது படைப்பில் எப்பொருளும் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ படைக்கப்படவில்லை என்பதை அலுத்தம் திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான்.

    வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை.(38:27) இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்் காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. (38:27)

    என எச்சரிக்கையும் செய்கிறான். எனவே எதனையும் வீணாக்கவோ, உதாசீனப்படுத்தவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.



    continued...

    ReplyDelete
  3. ஒரு சிட்டு குருவியைக்கூட முறை தவறி கொள்வதை அல்லாஹ் விசாரிப்பான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஒருவர் ஒரு சிட்டுக்குருவியை அல்லது அதைவிடப் பெரிய பிராணியை அதற்குரிய முறையின்றி கொன்று விடுவாராயின் அதைக் கொன்றது குறித்து அல்லாஹ் அவரிடம் (கேள்வி) கேட்கவே செய்வான் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள்.

    அப்போது அல்லாஹ்வின் தூதரே! அதற்குரிய முறை என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அதை அவர் அறுத்து புசித்திட வேண்டும். அதன் தலையைத் துண்டித்து அதை(க்கொன்று வீணாக) வீசிவிடக் கூடாது என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்: அஹ்மது, நஸயீ, தாரமி.

    எனவே அல்லாஹ்வின் படைப்புகளில் எதனையும் உரிய முறையில் உபயோகப்படுத்துவதையே அல்லாஹ் விரும்புகிறான். உபயோகிக்க தகுதியுள்ள நிலையில் அதனை வீணாக்குவதை வெறுக்கிறான். அதனைப்பற்றி கேள்வியும் கேட்பான் என்பது தெளிவாகிறது.

    இதன் அடிப்படையில் இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் உயிருடன் உடல் உறுப்புகளை மாற்றுவது விஷயத்திலும், இறந்தவர்களின் உறுப்புகளை உயிருடனிருப்பவருக்கு தர்மம் செய்வது விஷயத்திலும் இஸ்லாம் காட்டும் வழியை நோக்கவேண்டும்.

    நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (அல்குா்ஆன் 15:85)

    அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை. (அல்குா்ஆன் 30:8)

    ஒரு மனிதன் இறக்கிறான் அவனைப் பொருத்த வரையில் அவனது தவணை முடிவடைகிறது. அவன் உடல் அமைப்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையையும் அல்லாஹ் வைத்திருக்கிறான்.

    எனவேதான் ஒருவன் இறந்த பின்பும் அவனது உறுப்புகள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை மீண்டும் உபயோகிக்கும்படியான உயிர் தன்மையுடன் இருக்கின்றன.

    எனவே, இறந்து விட்டவரின் உடலிலுள்ள கண், சிறுநீரகம், இதயம் போன்றவை அக்குறிப்பிட்ட நேரத்திற்குள் இறந்தவரின் உடலிலிருந்து சரியான முறையில் பிரிக்கப்பட்டால் அதனை உயிருடன் இருப்பவர்களுக்கு பொருத்தி பயன் அடையலாம் என்பதை மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். அதனை செயல்படுத்தி வருவதையும் கன்கூடாக பார்க்கிறோம்.

    அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்் அவர்களுக்குக் கண்கள் உண்டு் ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்் இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல்குா்ஆன் 7:179)

    இதயங்களைக் கொண்டும், கண்களைக் கொண்டும், காதுகளைக் கொண்டும் நல்லுபதேசங்கள் பெறவேண்டும். அவ்வுறுப்புகள் மூலம் பெறாதவன் மிருகத்தைவிட மோசமானவன் என்பதை (7:179) வசனத்தின் கருத்தாக இருக்கிறது.

    மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குா்ஆன் 5:32)

    உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்் காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்் எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பாிகாரமாகும்். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (அல்குா்ஆன் 5:45)

    பலிக்கு பழி வாங்குவதைவிட அதனை மறந்து மன்னித்து விடுவதையே பெரும் தர்மமாகவும், பாவத்திற்கு பரிகாரமாகவும் காட்டும் இஸ்லாம், சமுதாயத்தில் வாழ தவணையுள்ளவர்களுக்கு தனது தவணைக்குப்பின் தனது உறுப்புக்குள்ள தவணையைத் தந்து வாழ வைப்பது எவ்வளவு சிறப்புக்குறியது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

    உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்் (அல்குா்ஆன் 67:2)

    இவ்வசனத்தில் முதலில் மரணத்தையும், வாழ்வையும் என முதலில் மரணத்தை குறிப்பிடுகிறான். எனவே, ஒருவரின் மரணத்தின் மூலமும் அவரது அழகிய செயல் வெளிப்படுவதை அறியலாம். மரனமடைந்தவர் தனது உடல் உறுப்புகளை தேவையுடையோருக்கு கொடுப்பதன் மூலம் அழகிய செயல் செய்தவராகவே கணிக்கப்படுகிறார் என்பது தெளிவு.

    continued.....

    ReplyDelete
  4. உயிரோடு இருப்பவர்கள் தனது உறுப்புகளை தரும்போது தன்னைத்தானே அழித்துக்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

    உயிரோடி இருப்பவர் தனது உறுப்புகளை தருவதால் அவரது உயிருக்கு ஊறு விளையுமானால் அதனை இஸ்லாம் உண்மையாக கண்டிக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் உதவ நாடுகிறவர் வரம்பு மீறி தன்னை அழித்துக் கொள்ளக் கூடாது என்பதை அல்குர்ஆன் இப்படி கூறுகிறது.

    அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்். (அல்குா்ஆன் 2:195)

    எனவே உயிரோடு இருப்பவர் இதயம் போன்ற ஒரு உறுப்புகளைத் தானம் செய்து தன்னை மாய்த்துக்கொள்ள இஸ்லாத்தில் இடமில்லை.

    இரு உறுப்புகளில் ஒன்றைத் தானமாக தந்து மற்றொன்றைக் கொண்டு எவ்வித ஊனமும் இடையூறுமின்றி வாழ முடியுமென்றால் கொடுப்பது தவறில்லை.

    மறு உறுப்பால் வாழ்க்கையில் அது வீணாகி அதன் மூலம் தனக்கு உயிர் வாழும் பிரச்சனை ஏற்படுமெனில், சந்தேகம் வந்தால் மற்றெவரின் உறுப்பை பெறவும் வாய்ப்பிருக்காது என நினைத்தால் இரண்டில் ஒன்றை தானமாகத் தருவதை இஸ்லாம் தடுக்கிறது.

    எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்் (அல்குா்ஆன் 17:36)

    உனக்கு சந்தேகமானவற்றை விட்டுவிடு, உனக்கு சந்தேகமற்ற உறுதியான விஷயங்களில் பால் சென்றுவிடு என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி)
    E
    நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான் (அல்குா்ஆன் 9:111)

    என்ற இறைவசனப்படி மூமின்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அல்லாஹ்வின் அமானிதமாகும். அதனை விலை பேசுவதற்கு நமக்கு உரிமையில்லை. எனவே உறுப்புகளுக்கு பணம் வாங்குவது தடுக்கப்படுகிறது. ஒருவரின் எண்ணம் நிய்யத்தை பொருத்துதான் அவரது செயல்கள் கணிக்கப்படும் என்பதையும் நபி صلى الله عليه وسلم எடுத்துரைத்துள்ளார்கள்.

    நபி صلى الله عليه وسلم கூறியதாக, எவரொருவர் மக்களிடம் இரக்கம் காட்டவில்லையோ அவரிடம் அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். (ஜாபிர் பின் அப்துல்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி, முஸ்லிம்)

    பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுவோருக்கு வானில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள். இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதீ, அஹமது)

    தாகத்தால் வருந்திய நாய்க்கு உதவிய ஒரு தீய பெண்ணுக்கு பாவமன்னிப்பு அளிக்கப்பட்டது என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். மேலும் ஈரமான இதயமுள்ள பிராணிகளுக்கு உதவுவதாலும் நன்மையுண்டு என்றார்கள். (அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்:புகாரி, முஸ்லிம்

    மேற்காணும் ஹதீஸ்களில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மனித இனத்தின்மீது முழுமையாக இரக்கம் காட்டுவதையே குறிப்பிட்டுள்ளார்கள்.
    முஸ்லிம்கள், மூமின்கள் மீது மட்டும்தான் இரக்கம் காட்டவேண்டும் என குறிப்பிடவில்லை.

    அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்ட இறுதி வேதம். நபி صلى الله عليه وسلم அவர்கள் முந்திய நபிகளைப்போல ஒரு இனத்திற்கோ நாட்டுக்கோ அனுப்பப்படவில்லை.

    நபி صلى الله عليه وسلم அவர்கள் அகில உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள்.


    ஆனால், அதே நபி صلى الله عليه وسلم அவர்கள் மரணித்துவிட்டவரின் உடல் எலும்பை முறிப்பது அவர் உயிருடனிருக்கையில் எலும்பை முறிப்பது போலாகும். எனவும் கூறினார்கள். (ஆயிஸாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஅத்தா, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)

    இந்த நபி மொழியில் எவ்வித நலனும் கருதாமல் மரணித்தவரை ஊனப்படுத்தவும், வெறுப்பை, குழப்பத்தை ஏற்படுத்தவும் செய்யப்படும் செயலாக செய்வதையே தடுத்தார்கள்.

    உதாரணமாக உஹது போரில் மரணித்த ஹம்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களை ஹிந்தா என்ற பெண்மனி அசிங்கப்படுத்திய செயல் போன்றவற்றையே தடுத்தார்கள் என கொள்ளவேண்டும்.

    வளரும் எதிர்கால சமுதாய நலன் கருதி மருத்துவத்துறையில் ஆபரேஷன், போஸ்ட்மார்டம் போன்றவற்றால் பற்பல உண்மைகள் உலகுக்குத் தெரிய வருகிறது. மரணித்தவரின் உண்மைக் காரணங்கள் தெரிய வருகின்றன.

    எனவே அல்லாஹ்வின் பொருத்தம் நாடி உலக ஆதாயங்களை எதிர்பாராமல் ஒருவர் தர்மத்திற்காகவோ, மனிதாபிமானத்திற்காகவோ தனது உறுப்புகளை பிர மனிதர்களுக்கு கொடுப்பது இஸ்லாமிய அடிப்படையில் கூடும்.

    உயிரோடு இருப்பவர்கள் தனது உயிரை பாதிக்காத வகையில் தேவையுள்ளவர்களுக்கு தானம் கொடுப்பது கூடும்.
    அவ்விதம் தானம் செய்பவரின் எண்ணம் நிய்யத்துக்கொப்ப அல்லாஹுவிடம் அவர் கூலி பெறுவார்.

    continued....

    ReplyDelete
  5. அல்லாஹ்் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்் இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குா்ஆன் 6:3)

    ஒரு சிலர் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் ஊனத்துடன் மறுமையில் எழுப்பபடுவார்கள் என ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அல்லாஹ் மறுமையில், மனிதன் இறை கட்டளைப்படி வாழாத காரணத்தால் அவர்கள் குருடர்களாக செவிடர்களாக எழுப்பப்படுவவார்கள், மறுமையில் அவர்களின் கண் பார்க்கும் சக்தியை இழந்து விடும் என்பது போன்ற பல கருத்துகளை குர்ஆன் எடுத்துக் கூறுகிறது.

    எனவே இப்புற உறுப்புகளுக்கும், மறுமையில் எழுப்பப்படும் நிலைக்கும் வேறுபாடு உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

    சிலர் உடல் அல்லாஹ்வுக்கு சொந்தம், இதனை பிறருக்கு கொடுக்க இவனுக்கு உரிமையில்லை.

    அவ்வுடலை மண்ணுக்கே சொந்தப் படுத்த வேண்டுமென மார்க்க தீர்ப்பு அளிக்கின்றனர்.

    உண்மையில் உடல் மட்டுமல்ல உயிர், உடல், செல்வம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை.

    அல்லாஹ்வுக்கு சொந்தமான செல்வத்தை தேவையுடையோருக்கு கொடுப்பதை அல்லாஹ் வரவேற்று வலியுறுத்துகிறான் எனில் அவனுக்குச் சொந்தமான உடல் உறுப்புகளையும் தேவையுடைவர்களுக்கு கொடுப்பதை அல்லாஹ் வரவேற்கவே செய்வான் என்பதில் ஐயமில்லை.

    மேலும் அவ்வுறுப்புகள் அதன் தவணை முடிந்ததும் மண்ணில்தான் போய்ச்சேரும் என்பதிலும் ஐயமில்லை.

    SOURCE: http://www.readislam.net/transplantation.htm

    ReplyDelete
  6. சரி, “தானம், தானம்” என்கிறார்களே மருத்துவர்கள். உண்மையில் அது தானம்தானா?

    ஜப்பானில், மூளைச் சாவு சம்பந்தமான குழப்பம் ஏற்பட்டபோது 100 நபர்களை நியூக்ளியர் ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, 22 பேர் அதில் உயிரோடு இருப்பது தெரிய வந்தது.

    இதுபோன்ற சோதனைகள் இந்தியாவில் செய்யப்படுவதில்லை.

    எனவேதான், மூளைச் சாவு சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இந்த அவலத்தைப் போக்க முடியும்” என்கிறார் அவர்.

    ‘‘இல்லை. தானம் என்கிற பெயரில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மனித உறுப்புகள், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது’’ என்கிறார்கள் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள்.

    ‘கெடாவர்’ என்கிற மனித கசாப்பு கடை:

    அது என்ன கெடாவர் கசாப்பு கடை?

    மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை ‘கெடாவர்’ என்று அழைக்கிறது மருத்துவ உலகம். இந்தக் கெடாவர் பிசினஸ்தான் தற்போதைய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஹாட்டஸ்ட் பிசினஸ்.

    பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகளில், உடல் உறுப்பு தேவைப்படுகிறவர்களுக்கு என தனியாகவே கெடாவர் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டர் வைத்திருக்கிறார்கள். உறுப்பு தேவைப்படுபவர்கள் இந்த கவுண்ட்டர்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

    இதற்காக, ஒருவர் ஒரு லட்சமோ அல்லது பத்து லட்சமோ டெபாசிட் செய்யவேண்டும். அதே சமயம், டெபாசிட் செய்துவிட்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை கெடாவருக்காக இவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இன்று சராசரியாக ஒவ்வொரு கார்ப்பரேட் மருத்துவமனையிலும் தலா ஒரு உறுப்புக்கு 50 முதல் 80 பேர்வரை முன்பதிவு செய்திருப்பதாகக் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன. இதிலும்கூட, வசதியான நபர் என்றால், ஒரே ஆள் பத்துப் பதினைந்து மருத்துவமனைகளில் டெபாசிட் செய்திருப்பாராம்.

    இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் நோயாளிகள் திரும்பப் பெற முடியும்.

    என்றாலும், முக்கால்வாசிப்பேர் திருப்பி வாங்குவது இல்லை. காரணம், கேட்ட உறுப்பு கிடைக்கவேண்டிய நாளில், ‘லம்ப்பாக இருபது லட்சம்’ கொடுத்து பெரும் பணக்காரர்கள் யாராவது லவட்டிக்கொண்டு போய்விடுவதே. எனவே, டெபாசிட் செய்தவர் மீண்டும் காத்திருப்புப் பட்டியலிலேயே இருப்பார்.

    இப்படியாக, டெபாசிட் தொகையாகவே நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் தனியார் மருத்துவமனை கணக்குகளில் கொள்ளையடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

    இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த டெபாசிட்டுகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பதுதான்.

    எந்த முதலீடும் இல்லாமல், நோயாளியின் தலையில் மிளகாய் அரைத்து, மாதம் ஒன்றுக்கு வட்டியாகவே பல லட்சங்கள் வருமானம் பார்க்கிற பிஸினஸ். மருத்துவம் படித்த மூளை என்னமாக சார்டட் அக்கவுண்ட் செய்கிறது பார்த்தீர்களா?

    ஒரு மருத்துவமனை ஊழியர் இப்படிச் சொன்னார்: ‘‘சில சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களைப் பற்றிப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். வெளிநாட்டினருக்கு கல்லீரல் மாற்று அறுவை, இதய அறுவை செய்ததை சாதனையாக காட்டியிருப்பார்கள்.

    ஆனால், நம் நாட்டில் தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்பை, வெளிநாட்டினருக்கு எப்படிக் கொடுக்கிறீர்கள்? என்று ஒரு நாயும் கேள்வி எழுப்புவதில்லையே! ஏன் சார்?

    இங்கே நம்முடைய மக்களிடமிருந்து மூளைச்சாவு என்கிற பெயரில் இலவசமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளை, வெளிநாட்டுகாரன்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை விற்கிறானுங்க சார் அயோக்கியப் பயலுவ.’’

    மனித உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம் என்று இருக்கும்போது, வெளிநாட்டினருக்கு எப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

    ‘‘இங்கே உறுப்புகளைப் பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்றால், அதை வெளிநாட்டினருக்குப் பொருத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டன. எனவே, கருணை அடிப்படையில் அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது’’ என்கிறார் கார்ப்பரேட் மருத்துவமனையில் புரியும் ஒரு மருத்துவர்.

    நல்ல கருணையாக இருக்கிறதே! உள்நாட்டில் அவனவன் லட்சக்கணக்கில் கெடாவருக்காக டெபாசிட் செய்துவிட்டு, வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பானாம். அரசாங்கம் என்னடாவென்றால், அந்நியர்களுக்கு கருணை காட்டுவானாம்!
    இதற்குத் தீர்வே இல்லையா?

    ‘‘இரண்டு விஷயங்கள்.

    ஒன்று, கெடாவர் என்பது மருத்துவமனைகளையும் தாண்டி மாஃபியாக்களின் கையில் உள்ளது. மருத்துவச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதால் இந்த மாஃபியாக்களை ஒழிப்பது கடினம். ஒரு லட்சத்தில் முடிக்க வேண்டிய ஆபரேஷன்களை இன்றைக்கு 20 லட்சமாக்கியதும் இந்த மாஃபியா கும்பல்தான்.
    Continued ………

    ReplyDelete
  7. இன்னொன்று நோய்க்கான காரணம். என்டோசல்ஃபான் மாதிரியான தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக இந்தியாவில் புழங்குகின்றன.

    உள்நாட்டில் கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் உள்ளிட்ட பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு இந்த மருந்துகள்தான் காரணம்.

    இத்தகைய மருந்துகளின் பின்னணியில் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சக்திகள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் கூட்டாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

    எனவே, அரசு இதற்கென ஒரு நிபுணர் குழுவை நியமித்தோ அல்லது சி.பி.ஐ வசம் ஒப்படைத்தோ ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விடிவே இல்லை.’’ இதை நான் சொல்லவில்லை. கார்ப்பரேட்டில் பணிபுரியும் மனைதநேமுள்ள ஒரு மருத்துவர் சொல்கிறார்.

    கெடவர் கொள்ளைக்காரர்களின் கொடூர முகத்தை தோலுரித்த மருத்துவ உலகம்:

    ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது தந்தைக்கு கல்லீரல் பிரச்னை. மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டும்.

    இந்த சூழ்நிலையில்தான் அந்தப் பத்திரிகைச் செய்தியைப் பார்க்கிறார்.

    ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில்(இந்த மருத்துவமனை இப்போது சென்னைக்கும் வந்து வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது),

    இதுபோன்ற ஆபரேஷன்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து குளோபல் மருத்துவமனையில் தன் தந்தையை அட்மிட் செய்கிறார் ஸ்ரீனிவாசன். பரிசோதனைகளுக்கு மட்டும் 95 ஆயிரம் ரூபாய் பில் கட்டுகிறார்.

    அப்போது, லலிதா ரகுராம் என்கிற ‘கெடாவர் கோ-ஆர்டினேட்டர்’ ஸ்ரீனிவாசனைச் சந்திக்கிறார். இவர் சென்னையைச் சேர்ந்த மோகன் பவுண்டேஷன் எனப்படும் என்.ஜி.ஓ ஊழியர்.

    சென்னையில் ஒரு கெடாவர் இருப்பதாகவும், பத்து லட்சம் கட்டினால் அதை வாங்கித் தருவதாகவும் ஸ்ரீனிவாசனிடம் கூறுகிறார்.

    இதை நம்பி, நகையை விற்று, கடனும் வாங்கி அப்பாவுக்காகப் பணத்தைக் கட்டுகிறார் ஸ்ரீனிவாசன்.

    சில நாட்கள் கழித்து, கெடாவர் ரெடியாகிவிட்டதாகவும், அதைத் தனி விமானத்தில் (எவ்ளோ பெரிய பிசினஸ் பார்த்தீர்களா?) கொண்டுவர ஏழு லட்ச ரூபாய் கட்டும்படியும் கேட்கிறார் லலிதா. ஆனால், ஸ்ரீனிவாசனால் கட்ட முடியவில்லை.

    ஆனால், அப்பாவின் நிலைமை சீரியசாகிவிட, உடனடியாக மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டிய கட்டாயம்.

    அப்போதுதான், ‘‘கவலையை விடுங்க. உங்க அம்மாவோட கல்லீரலை எடுத்து உங்க அப்பாவுக்குப் பொருத்திடலாம். இதுபோல நாங்க 55 ஆபரேஷன்களை வெற்றிகரமா செஞ்சிருக்கோம். ஆபரேஷன் செலவுகளை மட்டும் கட்டினால் போதும்’’ என்று மருத்துவமனையில் உறுதி கொடுக்கிறார்கள்.

    ஸ்ரீனிவாசன் குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறது.

    ஆனால், அடுத்து நடந்ததுதான் ஒண்ணாம் நெம்பர் ‘மனிதாபிமானம்’.

    ஸ்ரீனிவாசனின் அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோகும் வழியில், (சமயம் பார்த்து) 23 லட்சம் கட்டச் சொல்லியிருக்கிறது ஹாஸ்பிட்டல் நிர்வாகம்.

    இரண்டு பேரின் உயிர் என்பதால், அதையும் கட்டியிருக்கிறார் ஸ்ரீனிவாசன். வழக்கம்போல், ‘ஆபரேஷன் சக்ஸஸ்’ எனக்கூறி வெளியே வந்திருக்கிறார் மருத்துவர்.

    ஆனால், அடுத்த பதினைந்து நாளில் ஸ்ரீனிவாசனின் அப்பாவுக்கு உயிர் பிரிந்துவிட்டது. கல்லீரல் தானம் கொடுத்த அம்மா கோமாவுக்குப் போய்விட்டார். தொடர்ந்து 20 மாதங்கள்வரை கோமாவிலேயே இருந்திருக்கிறார் அந்த அம்மா.

    முடிவில், 20 மாதங்கள் கோமா பேஷண்ட்டைப் பராமரித்ததாகக் கூறி இரண்டாம் கட்டமாக எக்ஸ்ட்ரா 45 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்கள்.

    ஸ்ரீனிவாசன் அதையும் கட்டியிருக்கிறார். ஆனால், இரண்டாவது ஆண்டில் அந்த அம்மாவும் இறந்து போய்விட்டார்.

    கெடாவர் பிசினஸ் என்றால் என்ன, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? என்று இப்போது புரிகிறதா? இதுதான் உடல் உறுப்பு தானமும் மருத்துவமனைகளின் ‘மனிதாபிமானமும்’.

    THANKS TO SOURCE : மனிதக் கறி தின்னும் கார்ப்பரேட் மருத்துவர்கள்
    '

    ReplyDelete
  8. மேலே கண்டுள்ள “ இன்னொன்று நோய்க்கான காரணம்.....
    என்று தொட‌ங்கும் கருத்திற்க்கு முந்தைய‌ பகுதி இதோ ....


    சரி, “தானம், தானம்” என்கிறார்களே மருத்துவர்கள். உண்மையில் அது தானம்தானா?

    ஜப்பானில், மூளைச் சாவு சம்பந்தமான குழப்பம் ஏற்பட்டபோது 100 நபர்களை நியூக்ளியர் ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, 22 பேர் அதில் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற சோதனைகள் இந்தியாவில் செய்யப்படுவதில்லை. எனவேதான், மூளைச் சாவு சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இந்த அவலத்தைப் போக்க முடியும்” என்கிறார் அவர்.

    ‘‘இல்லை. தானம் என்கிற பெயரில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மனித உறுப்புகள், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது’’ என்கிறார்கள் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள்.

    ‘கெடாவர்’ என்கிற மனித கசாப்பு கடை:

    அது என்ன கெடாவர் கசாப்பு கடை?

    மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை ‘கெடாவர்’ என்று அழைக்கிறது மருத்துவ உலகம். இந்தக் கெடாவர் பிசினஸ்தான் தற்போதைய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஹாட்டஸ்ட் பிசினஸ்.

    பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகளில், உடல் உறுப்பு தேவைப்படுகிறவர்களுக்கு என தனியாகவே கெடாவர் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டர் வைத்திருக்கிறார்கள். உறுப்பு தேவைப்படுபவர்கள் இந்த கவுண்ட்டர்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

    இதற்காக, ஒருவர் ஒரு லட்சமோ அல்லது பத்து லட்சமோ டெபாசிட் செய்யவேண்டும். அதே சமயம், டெபாசிட் செய்துவிட்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை கெடாவருக்காக இவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

    இன்று சராசரியாக ஒவ்வொரு கார்ப்பரேட் மருத்துவமனையிலும் தலா ஒரு உறுப்புக்கு 50 முதல் 80 பேர்வரை முன்பதிவு செய்திருப்பதாகக் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதிலும்கூட, வசதியான நபர் என்றால், ஒரே ஆள் பத்துப் பதினைந்து மருத்துவமனைகளில் டெபாசிட் செய்திருப்பாராம்.

    இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் நோயாளிகள் திரும்பப் பெற முடியும். என்றாலும், முக்கால்வாசிப்பேர் திருப்பி வாங்குவது இல்லை.

    காரணம், கேட்ட உறுப்பு கிடைக்கவேண்டிய நாளில், ‘லம்ப்பாக இருபது லட்சம்’ கொடுத்து பெரும் பணக்காரர்கள் யாராவது லவட்டிக்கொண்டு போய்விடுவதே. எனவே, டெபாசிட் செய்தவர் மீண்டும் காத்திருப்புப் பட்டியலிலேயே இருப்பார்.

    இப்படியாக, டெபாசிட் தொகையாகவே நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் தனியார் மருத்துவமனை கணக்குகளில் கொள்ளையடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

    இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த டெபாசிட்டுகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பதுதான்.

    எந்த முதலீடும் இல்லாமல், நோயாளியின் தலையில் மிளகாய் அரைத்து, மாதம் ஒன்றுக்கு வட்டியாகவே பல லட்சங்கள் வருமானம் பார்க்கிற பிஸினஸ். மருத்துவம் படித்த மூளை என்னமாக சார்டட் அக்கவுண்ட் செய்கிறது பார்த்தீர்களா?

    ஒரு மருத்துவமனை ஊழியர் இப்படிச் சொன்னார்: ‘‘சில சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களைப் பற்றிப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள்.

    வெளிநாட்டினருக்கு கல்லீரல் மாற்று அறுவை, இதய அறுவை செய்ததை சாதனையாக காட்டியிருப்பார்கள்.

    ஆனால், நம் நாட்டில் தானமாகப்
    பெறப்பட்ட உடல் உறுப்பை, வெளிநாட்டினருக்கு எப்படிக் கொடுக்கிறீர்கள்? என்று ஒரு நாயும் கேள்வி எழுப்புவதில்லையே! ஏன் சார்?

    இங்கே நம்முடைய மக்களிடமிருந்து மூளைச்சாவு என்கிற பெயரில் இலவசமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளை, வெளிநாட்டுகாரன்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை விற்கிறானுங்க சார் அயோக்கியப் பயலுவ.’’

    மனித உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம் என்று இருக்கும்போது, வெளிநாட்டினருக்கு எப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

    ‘‘இங்கே உறுப்புகளைப் பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்றால், அதை வெளிநாட்டினருக்குப் பொருத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டன.

    எனவே, கருணை அடிப்படையில் அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது’’ என்கிறார் கார்ப்பரேட் மருத்துவமனையில் புரியும் ஒரு மருத்துவர்.

    நல்ல கருணையாக இருக்கிறதே! உள்நாட்டில் அவனவன் லட்சக்கணக்கில் கெடாவருக்காக டெபாசிட் செய்துவிட்டு, வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பானாம். அரசாங்கம் என்னடாவென்றால், அந்நியர்களுக்கு கருணை காட்டுவானாம்!
    இதற்குத் தீர்வே இல்லையா?

    ‘‘இரண்டு விஷயங்கள்.

    ஒன்று, கெடாவர் என்பது மருத்துவமனைகளையும் தாண்டி மாஃபியாக்களின் கையில் உள்ளது. மருத்துவச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதால் இந்த மாஃபியாக்களை ஒழிப்பது கடினம். ஒரு லட்சத்தில் முடிக்க வேண்டிய ஆபரேஷன்களை இன்றைக்கு 20 லட்சமாக்கியதும் இந்த மாஃபியா கும்பல்தான்.
    Continued ………

    ReplyDelete
  9. சலாம் வாஞ்சூர் பாய்!

    மாஷா அல்லாஹ்! எவ்வளவு விபரங்கள். இந்த பதிவுக்கு அவசியமான பல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. வஅலைக்கும் சலாம்! சகோ இக்பால்!

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

    சகோ பதிவாகவே போட்டு விட்டீர்களா மாஷா அல்லாஹ்.ஜஜாகல்லாஹ் ஹைரன்

    உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்//

    நீங்கள் தனி மெயிலில் கேட்டிருந்தீர்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கட்டுமே என்று தான் பதிவாகவே இட்டு விட்டேன்.

    இதனால் பாருங்கள் வாஞ்சூர் பாயின் அருமையான பின்னூட்டங்களும் போனஸாக நமக்கு கிடைத்துள்ளது.

    ReplyDelete
  11. நல்லெண்ணப்பிரியன்7:22 AM

    உடல் உறுப்பு தானம் தருவது என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே அமையப் பெற்ற ஒரு குணாதிசயமாக, பண்பாக இருக்க வேண்டும். ஆனா அதை கூட ஒருவரிடம கேட்டு தான் தெரிஞ்சுக்கணும் என்கிற அளவு அறிவு முடமாக இருப்பது தான் கொடுமை. அந்த அளவு கூட சிந்திக்க இயலாதவர்களா நீங்கள். கொஞ்சம் சுயமாக சிந்திக்கின்ற அறிவும் வேண்டும்.

    ReplyDelete
  12. நல்லெண்ணப்பிரியன்7:25 AM

    உடல் உறுப்பு தானம் தருவது என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே அமையப் பெற்ற ஒரு குணாதிசயமாக, பண்பாக இருக்க வேண்டும். ஆனா அதை கூட ஒருவரிடம கேட்டு தான் தெரிஞ்சுக்கணும் என்கிற அளவு அறிவு முடமாக இருப்பது தான் கொடுமை. அந்த அளவு கூட சிந்திக்க இயலாதவர்களா நீங்கள். கொஞ்சம் சுயமாக சிந்திக்கின்ற அறிவும் வேண்டும்.

    ReplyDelete
  13. திரு நல்லெண்ணப் பிரியன்.

    //உடல் உறுப்பு தானம் தருவது என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே அமையப் பெற்ற ஒரு குணாதிசயமாக, பண்பாக இருக்க வேண்டும். ஆனா அதை கூட ஒருவரிடம கேட்டு தான் தெரிஞ்சுக்கணும் என்கிற அளவு அறிவு முடமாக இருப்பது தான் கொடுமை. அந்த அளவு கூட சிந்திக்க இயலாதவர்களா நீங்கள். கொஞ்சம் சுயமாக சிந்திக்கின்ற அறிவும் வேண்டும்.//

    ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்திலும் இஸ்லாம் குறுக்கிடுகிறது. உலகம் முழுவதும் ஓரிறை ஓர் சட்டம் என்ற நியதியின் அடிப்படையில் இயங்குவதுதான் சிறப்பு. ஒருவருக்கு உடல் பொருள்களை தானமாக கொடுப்பது நியாயமாக தெரியலாம. மற்றொருவருக்கு அநியாயயமாக தெரியலாம். இறைவன் புறத்திலிருந்து இந்த செய்தியை உரசிப் பார்த்தால் குழப்பத்திற்கு வழியே இல்லை. அந்த சட்டம் தவறான ஒரு முடிவை தந்தால்தான் நீங்கள் விமரிசிக்க முடியும். மனிதாபிமானத்துக்கோ மற்ற நாட்டு சட்டங்களுக்கோ எந்த இடத்திலும் இஸ்லாமிய சட்டங்கள் பிரச்னையை உண்டு பண்ணவில்லை.

    உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை இறைவன் கொடுத்த வேதங்களில் உள்ள செய்திகளை உள்வாங்கித்தான் மனிதன் இந்த அளவு முன்னேற்றத்தையே அடைந்துள்ளான். உங்களுக்கு உள்ளதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் சுய புத்தி என்பதன் அளவுகோல் என்ன என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.

    ReplyDelete
  14. அஸ்ஸலாம் அலைக்கும் ,
    சுவனப்பிரியன் அவர்களே , தாங்கள் சகோ முஹம்மத் இக்பால்
    அவர்களுக்கு விளக்கம் கொடுத்தது மிக சொற்பமே ஆனால்
    "73 வயது இளைஞ்சரின்" தொடர்ச்சியான விளக்கங்களை பார்த்தால் ஒரே மலைப்பாக இருக்கிறது , தகவல் சுரங்கம் .......
    என்னால் இவரைப்போல சமூக அக்கறையில் ஆர்வமுடன் இருக்க முடியுமா ?!
    சந்தேகமாகத்தான் இருக்கிறது .........
    என்னுடைய ராயல் சல்யுட் ஜனாப். வாஞ்சூர் பாய் அவர்களுக்கு .

    ReplyDelete
  15. வஅலைக்கும் சலாம்! சகோ நாஸர்.

    //என்னால் இவரைப்போல சமூக அக்கறையில் ஆர்வமுடன் இருக்க முடியுமா ?!
    சந்தேகமாகத்தான் இருக்கிறது .........
    என்னுடைய ராயல் சல்யுட் ஜனாப். வாஞ்சூர் பாய் அவர்களுக்கு .//

    நானும் சில சமயம் மலைத்து விடுகிறேன். சமூகத்தின் மேல் உள்ள அக்கறையே இது போன்ற உழைப்புகள். வாஞ்சூர் பாய் அவர்களுக்கு இறைவன் மேலும் சிறந்த சரீர சுகத்தையும் அழகிய மறுமை வாழ்வையும் தந்தருள்வானாக!

    ReplyDelete
  16. // மனிதாபிமானத்துக்கோ மற்ற நாட்டு சட்டங்களுக்கோ எந்த இடத்திலும் இஸ்லாமிய சட்டங்கள் பிரச்னையை உண்டு பண்ணவில்லை. //

    // உங்களுக்கு உள்ளதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் சுய புத்தி என்பதன் அளவுகோல் என்ன என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.//

    சகோ சுவனப்பிரியன் "நச்" என்று கேட்டிருக்கிறார் ..
    சகோ நல்லென்னைப்பிரியன் பதில் கிடைக்குமா !?

    ReplyDelete
  17. Anonymous8:20 AM

    இதோ அல்லாவின் பிள்ளைகளின் லட்சணம், காரி துப்ப வைக்கும் செயல்களை அல்லாவின் பெயரால் செய்யும் இவர்கள் தான் உலகை மற்ற போகிறார்களாம், இந்த அளவிற்கு கேவலமாகவா தங்கள் மதத்தை பரப்ப வேண்டும். இந்த ஈன செயலை செய்யும் இந்த கூட்டம், வரும் காலத்தில் உலகை ஆள போகிறதாம்.


    Daily thanthi - Date 12/03/2012
    பாகிஸ்தானில் உள்ள சிந்து மகாணத்தில் மாதம்தோறும் 20 முதல் 25 இந்து இளம்பெண்கள் கடத்தி சென்று கட்டாய மத மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று மனித உரிமை கழகம் குற்றம் சட்டி உள்ளது.
    பாகிஸ்தானில் உள்ள சிந்து மற்றும் பலுசிஸ்தான் மகாணங்களில் இந்து வியாபாரிகள் கடத்தி செல்லப்பட்டு பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது இதனால் அச்சம் அடையும் இந்து குடும்பங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடத்துக்கு செல்லும் அவல நிலை ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.
    தற்போது, சிந்து மாகாணத்தில் வசிக்கும் இளம்பெண்கள் கட்டாய மத மாற்றம் செய்து செய்து திருமணம் செய்யப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது...
    http://www.dailythanthi.com/article.asp?NewsID=715260&disdate=3/12/2012
    இந்த இழிவானவர்களின் செயலை இதில் படியுங்கள்


    --Anandan--

    ReplyDelete
  18. அன்பிற்கினிய நாசர் அவர்களே, சுவனப்பிரியன் அவர்களே,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    எனக்கு இதுகாறும் வழிகாட்டி என்னை வழிநடத்தி கொண்டிருக்கும் அந்த "எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன்" பொறுப்பில் என்னை பரிபூரணமாக சமர்ப்பித்து

    என்பால் "அவனுடைய" பொறுப்பு என்னை விட்டு ஈருலகிலும் சறுகிடாதிருக்க சதா வேண்டுகிறேன்.

    எல்லா புகழும் இறையவனுக்கே.

    ReplyDelete
  19. சகோ ஆனந்தன்!

    //N—T†‡¥ reiŸ Th‡ÛV ÚNŸ‹R ¡j¦hUÖ¡ GÁ\ 18 YV‰ ÙTÛQ URUÖ¼\• ÙNš‰ ‘\h AYÛW CÍXÖ–V YÖ¦T£eh ‡£UQ• ÙNš‰ ÛY†R]Ÿ. CYÛW LP†‡o ÙNÁ¿ URUÖ¼\• ÙNšRRÖL ÙT¼Ú\ÖŸ “LÖŸ ÙLÖ|†RÖ¥ YZeh ÚLÖŸy| «NÖWÛQ›¥ C£ef\‰. C‹R ÙT‚Á h|•T†‡]£• C‹R ÚTyz ŒL²op›¥//

    இது காதல் விவகாரம். அதுவும் அந்த பெண்ணைக் கொண்டு போய் முறைப்படி திருமணம் செய்து வைத்திருப்பதையும் படியுங்கள். காதலுக்கு எதிராக பெற்றோர்கள் இவ்வாறு புகார் கொடுப்பது நம் நாட்டிலும் உள்ளதே!

    இங்கும் கூட படிக்க வரும் கல்லூரிப் பெண்களை மயக்கி பல இந்து மாணவர்கள் திருமணம் செய்து கொள்வது நடக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து படிப்பதனால் வரும் கோளாறுகள் இது.

    கட்டாய மத மாற்றம் யார் செய்தாலும் அது தவறே! தமிழகத்தில் அதை விட அதிக எண்ணிக்கையில் தினந்தோறும் இஸ்லாத்துக்கு வரும் நபர்கள் அதிகரித்து வருகின்றனரே! அவர்களை யார் கட்டாயப்படுத்தியது? இந்தியாவில் இந்துவாக இருப்பதுதானே பாதுகாப்பு என்று கருதுகிறார்கள்? எனவே தவறு இஸ்லாமியர்களிடத்தில் இல்லை. இந்து மத கொள்கைகளில் இருக்கிறது.

    ReplyDelete
  20. “என்னை உடன்கட்டை ஏறச்சொல்லி கொன்று விடுவார்கள். காப்பாற்றுங்கள்''

    3 குழந்தைகளுடன் போலீசில் பெண் தஞ்சம்

    ராமநாதபுரம், மார்ச்.13-

    ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சும், வேனும் மோதிக்கொண்டன.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பேரும், வேனில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேரும் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் லகன்சிங், பீபல்சிங் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் வழியில் பீபல்சிங் இறந்தார்.

    இவர் மத்தியபிரதேசம் மாநிலம் சத்தான மாவட்டம் நகோடு தாலுகா சித்துபுராவை சேர்ந்த நிக்குசிங் என்பவரின் மகன் ஆவார். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தபோது விபத்தில் சிக்கி இறந்து போனார்.

    இவருடைய மனைவி வீராபதி (வயது27), மகன் அனில்(3), 5 மாத குழந்தை பாதல், மகள் பூனம்(7) ஆகியோர் காயமடைந்தனர்.

    பீபல்சிங்கின் உடலை பெற அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ராமநாதபுரம் வந்தனர். அவர்கள் பீபல்சிங்கின் உடலை பெற்றுக்கொண்டு வீராபதி மற்றும் குழந்தைகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

    ஆனால் வீராபதி தனது குழந்தைகளை கட்டி அணைத்துக்கொண்டு வரமுடியாது என கூறினார். அவர்கள் வீராபதியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கவே கதறி அழுதார்.

    பின்னர் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்டு அழுதுகொண்டே ராமநாதபுரம் டவுன் போலீஸ்நிலையத்துக்கு ஓடி வந்து தஞ்சம் அடைந்தார்.

    அங்கு, "போலீசாரிடம் காப்பாற்றுங்கள் காப்பாற்றுகள்'' என்று இந்தியில் அலறினார்.

    போலீசார் அவரை ஆறுதல் படுத்தி விசாரித்தனர்.

    "ஏன் கணவர் வீட்டாருடன் செல்ல மறுக்கிறாய்?'' என்று அவரிடம் போலீசார் கேட்டபோது வீராபதி கூறிய பதில் போலீசையே அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    "எங்கள் குல வழக்கப்படி கணவர் இறந்துவிட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும்.

    இறந்த கணவருடன் சேர்த்து வீட்டின் பின்புறம் என்னையும் உயிரோடு புதைத்து விடுவார்கள்.

    குழந்தைகள் இருந்தால் கணவரின் பெற்றோர் தான் அவர்களை வளர்ப்பார்கள். என்னையும் என் கணவரோடு புதைக்கவே வருமாறு வற்புறுத்தி அழைக்கிறார்கள்.

    எனது கணவர் இறந்தாலும் எனது பிள்ளைகளை நான்தான் வளர்ப்பேன். அவர்களுக்காக நான் உயிர்வாழ வேண்டும். எனவே என்னை அவர்கள்பிடியில் இருந்து காப்பாற்றுகள்.

    நான் எனது தந்தை ராம்ஜிலாலுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அவர் வந்து என்னை அழைத்துச் செல்வார்.''

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை அடுத்து வீராபதியை அவருடைய மாமனார் குடும்பத்தினருடன் அனுப்ப போலீசார் மறுத்துவிட்டனர்.மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பிவிட்டனர்.

    http://www.dailythanthi.com/article.asp?NewsID=715630&disdate=3/13/2012

    ReplyDelete
  21. சகோ ஆனந்தன்!

    //இதோ அல்லாவின் பிள்ளைகளின் லட்சணம், காரி துப்ப வைக்கும் செயல்களை அல்லாவின் பெயரால் செய்யும் இவர்கள் தான் உலகை மற்ற போகிறார்களாம், இந்த அளவிற்கு கேவலமாகவா தங்கள் மதத்தை பரப்ப வேண்டும். இந்த ஈன செயலை செய்யும் இந்த கூட்டம், வரும் காலத்தில் உலகை ஆள போகிறதாம்.//

    சகோ உண்மைகள் கொடுத்த அதே தினத் தந்தியின் சுட்டியை படித்தீர்களா? இது ஏதோ 1000 வருடம் முன்பு நடந்த சம்பவம் அல்ல. நாம் வாழும் 20 ஆம் நூற்றாண்டில் இந்த மாதம் நடந்த சம்பவம். கணவன் இறந்து விட்டால் உயிரோடு உடன் கட்டை ஏற்றி விடுவார்கள் என்றுதான் அந்த சகோதரி கதறி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இப்படி ஒரு கொடுமை மிக்க சட்டங்களை கொண்ட மத பிடியிலிருந்து விடுபடவே பல பேர் இஸ்லாத்தை நோக்கி ஓடுகின்றனர். இப்பொழுது பாகிஸ்தானில் மத மாற்றம் ஏன் நிகழ்கிறதென்று புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..

    அருமையான சுட்டியை பகிர்ந்த உண்மைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  22. மனச்சாட்சி எங்கே போனது? கிட்னி விற்கும் கிராமம்.

    தர்மம், நீதி, நியாயம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நிரூபிக்கும் அனேக சம்பவங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டு தான் வருகின்றன.

    ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியைக் கொள்ளை அடிக்கிறது ஒரு கட்சி. பட்டினி தாங்காமல் வெறும் 30,000 ஆயிரத்திற்கு கிட்னியை விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு இந்தியக் கிராமம்.

    பசி தாங்காமல், உழைக்கவும் வழி இல்லாமல் தன் கிட்னியை விற்று விட்டு, கிடைத்த பணம் தீர்ந்த உடன் நோயில் கிடந்து 60 வயதில் போக வேண்டியவர்கள் ஆபரேசன் செய்ததால் இரண்டு வருடங்களில் இறந்து போகும் அவலம் மேற்கு வங்காளத்தில் பிந்தோல் என்ற கிராமத்தில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

    எத்தனை திட்டங்கள் இருக்கின்றன, எத்தனை சட்டங்கள் இருக்கின்றன, எத்தனை நீதிமன்றங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? பட்டினியால் கிட்னியை விற்றுப் பின் அற்பாயுசில் செத்துப் போகின்றார்களே இந்தியர்கள். இதற்கெல்லாம் யார் காரணம்? ஜன நாயகம் அல்லவா காரணம்.

    காசை வைத்துக் கொண்டு தின்று கொழுத்து தன் உடம்பைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டு, பசியால் வாடுபவனின் கிட்னியையையும் விலைக்கு வாங்கி உடம்பில் பொறுத்திக் கொண்டு, அவனை சாகவும் அடிக்கும் பணக்கார நாய்களையும், அதற்கு உறுதுணையாய் இருக்கும் மாஃபியா ஹாஸ்பிட்டல்களையும் யார் என்ன செய்ய முடியும்?

    ஜன நாயக ஆட்சியில் ஏழைகள் சொல் அம்பலம் ஏறுமா? இல்லை ஏழைகள் வாழ இந்தியாவில் வழிதான் இருக்கின்றதா?

    இதோ அந்த கிட்னி வில்லேஜ் பற்றிய செய்தி ஆங்கிலத்தில் இருக்கிறது. படித்து விட்டு, நாமெல்லாம் மனிதர்கள் என்ற பெயரில் மிருகங்கள் வாழும் உலகில் வாழ்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

    சொடுக்கி >>>>>
    People sell kidneys to beat starvation in West Bengal village
    <<<<< படியுங்கள்.

    .
    .



    THANKS TO SOURCE: http://thangavelmanickadevar.blogspot.com/2012/03/blog-post_09.html

    ReplyDelete
  23. நண்பரே.

    உடல் உறுப்புகள் தானம் பற்றிய அளவுகோள்கள் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். ஓவ்வொரு நாடுக்கும் மாறும். அது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது.

    மார்க்கத்தின் அளவுகோளை வைத்து நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள். அண்ணன் சொன்னதைப்போல தனக்கு வந்தால்தான் எல்லாம் தெளிவாகும்.

    பதிவில் ஒரு சிக்கல். மார்க்கத்தின்படி முழு உடல் தானம் கூடாது என்று சொல்லி நிறுத்தியிருக்கலாம். ஆனால் கொஞ்சம் மேலே சென்று
    //
    முழு உடலையும் ஆராய்ச்சிக்காக கொடுப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் குளிப்பாட்டுவது, உடலை அடக்கம் செய்வது போன்ற செயல்களை உடலை தானம் செய்யும போது நம்மால் நிறைவேற்ற முடியாது. அவசியம் உள்ளவர்கள் மற்ற மதத்தவர்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.
    // என்று எழுதப்பட்டுள்ளது.
    சில கேள்விகள் எழும்.

    அ) அவ்வாறு ஆராய்ச்சி செய்யாமல் ”மார்க்க மருத்துவம்” என்று ஏதாவது உண்டா? அந்த மருத்துவம் சிறப்பாக நடைப்பெற்றுக்கொண்டுவருகிறதா?

    ஆ) ஒன்று தவிர்க்கபட வேண்டியது என்றால் பிற மதத்தினரும் தவிர்க்க வேண்டியது அல்லவா. அதுதானே ஒரிறை கொள்கை. எப்படி பிறமதத்தினர் பின்பற்றலாம் என்று கூறலாம்? உ.தா. ஒரு இறைவனை வணங்குதல் அனைவருக்கும் பொருந்துமல்லவா?

    இ) அவ்வாறு பிறமதத்தினர் முழு உடலால் ஆய்வு செய்து மருத்துவம் படித்த மருத்தவர்களை, வளர்ந்த மருத்துவத்தை, எப்படி மார்க்க நண்பர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்? இது அடிமைபடுத்தும் புத்தியை காட்டுகின்றது அல்லவா? மாற்று மதத்தினர் அவ்வளவு எளக்காரமா?

    இது “ரிலாக்ஸ்”க்காக மட்டும் ஒரு கேள்வி. இஸ்லாமிய பதிவுகளை படிக்க ஆரம்பித்ததிலிருந்து “அவனா இவன், இவனா அவன்” வியாதி தொற்றிவிட்டது. நண்பர் முஹம்மது இக்பால் கோபப்படவில்லையென்றால்...

    முன்னாள் பதிவர் இக்பால் செல்வன் தான் இந்த முஹம்மது இக்பாலா??

    ReplyDelete
  24. சகோ ஆனந்த்,

    1947 ல சுதந்திரம் அடைந்ததிலிருந்து, 50 வருசமா இந்துவாவே விட்டுட்டு, இப்ப கட்டாயமா மதம் மாற்றுகிறார்களா??? அப்படியா???? கேட்கவே விநோதமாக இருக்கிறதே.

    பாகிஸ்தான்ல இருக்கவங்கல்லாம் காட்டு மிராண்டிக, நாமெல்லாம் ரொம்ப நல்லவுக. சரிதானே??? போய் நிம்மதியா தூங்குங்க.

    ReplyDelete
  25. "அறுவை சிகிச்சையின் தந்தை - Abu al-Qasim al-Zahrawi “

    "Abu al-Qasim al-Zahrawi - Father of Surgery"

    Abu al-Qasim Khalaf ibn al-Abbas Al-Zahrawi (936–1013),

    (Arabic: أبو القاسم بن خلف بن العباس الزهراوي‎)

    also known in the West as Abulcasis,

    was an Arab physician who lived in Al-Andalus.

    He is considered the greatest medieval surgeon to have appeared from the Islamic World,

    and has been described by some as the father of modern surgery.[1]

    His greatest contribution to medicine is the Kitab al-Tasrif, a thirty-volume encyclopedia of medical practices.[2]


    His pioneering contributions to the field of surgical procedures and instruments had an enormous impact in the East and West well into the modern period,

    where some of his discoveries are still applied in medicine to this day.[3]


    He was the first physician to describe an ectopic pregnancy, and the first physician to identify the hereditary nature of haemophilia.[3]

    Muslim scientist

    Abu al-Qasim Khalaf ibn al-Abbas Al-Zahrawi Title Alzahrawi, Albucasis

    Born 936 CE Died 1013 CE

    Ethnicity Arab

    Region Al-Andalus, Caliphate of Córdoba

    Maddhab Sunni Islam

    Notable ideas Founder of modern surgical and medical instruments;

    "Father of Surgery"


    REF: http://en.wikipedia.org/wiki/Abu_al-Qasim_al-Zahrawi

    http://en.wikipedia.org/wiki/Abu_al-Qasim_al-Zahrawi

    ReplyDelete
  26. ANAESTHESIA IN ISLAMIC MEDICINE:

    The delay in the introduction of pain allaying drugs is attributed to the old belief in the west, that pain and suffering was the price paid by humans for sins.

    Humanity is indebted greatly to the introduction of modern anaesthesia by Morton, Wells, Simpson and others.

    Text books at hand, however, indicate that inhalational anaesthesia as such was not known before, and that there may have been some attempts, tried by the Greeks and Romans who are reported to have used magic and superstition, hypothermia and real use of analgaesic mixtures.

    The physicians of Islamic civilization were familiar with surgery and have practiced different kinds of surgical procedures such as amputation, tonsillectomies, excision of tumors, and in some instances describing technical details.
    This extent of surgery could not have been performed without some kind of pain allayment.

    In addition, one of the reasons why the Muslims could make their way into the field of anaesthesia was the fact that the concept of pain as a punishment from God had no place in their belief and tradition.

    There is evidence that the Muslims used to administer sedatives and analgaesic mixtures before a surgical operation.


    A question from Avicenna reads "A patient who wants to have an amputation of one of his organs must have a drink prepared from a mixture of Mandagora and other sleeping drugs".

    Other plants used for the same purpose were Indian cannabis (Hashish), Opium poppies (El-Khishkash), Shweikran (Hemlock), Bhang and hyoscyamus.

    The Muslims scientists are also credited

    for the introduction of inhalational anaesthesia by using the then called "Anaesthetic sponge" or "Sleeping sponge".


    A quotation from Sigrid Hunke's book reads: The science of medicine has gained a great and extremely important discovery

    and that is the use of general anaesthetics for surgical operations,

    and how unique, efficient, and merciful for those who tried it the Muslim anaesthetic was.

    It was quite different from the drinks the Indians, Romans and Greeks were forcing their patients to have for relief of pain.

    There had been some allegations to credit this discovery to an Italian or to an Alexandrian,

    but the truth is and history proves that, the art of using the anaesthetic sponge is a pure Muslim technique, which was not known before.

    The sponge used to be dipped and left in a mixture prepared from cannabis, opium, hyoscyamus and a plant called Zoan".

    REF: http://www.islamset.com/hip/i_medcin/taha_jasser.html

    ReplyDelete
  27. சகோ நரேன்!

    //அ) அவ்வாறு ஆராய்ச்சி செய்யாமல் ”மார்க்க மருத்துவம்” என்று ஏதாவது உண்டா? அந்த மருத்துவம் சிறப்பாக நடைப்பெற்றுக்கொண்டுவருகிறதா?//

    மார்க்க மருத்துவம் என்றெல்லாம் தனியாக கிடையாது. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மருத்துவரை நாட வேண்டும்.

    //ஆ) ஒன்று தவிர்க்கபட வேண்டியது என்றால் பிற மதத்தினரும் தவிர்க்க வேண்டியது அல்லவா. அதுதானே ஒரிறை கொள்கை. எப்படி பிறமதத்தினர் பின்பற்றலாம் என்று கூறலாம்? உ.தா. ஒரு இறைவனை வணங்குதல் அனைவருக்கும் பொருந்துமல்லவா?//

    ஆனால் ஓரிறையை இந்து மதத்திலோ கிறித்தவ மதத்திலோ வணங்குவதில்லையே! பல தெய்வ வணக்கம் தானே அதிகமாக இருக்கிறது.

    //இ) அவ்வாறு பிறமதத்தினர் முழு உடலால் ஆய்வு செய்து மருத்துவம் படித்த மருத்தவர்களை, வளர்ந்த மருத்துவத்தை, எப்படி மார்க்க நண்பர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்? இது அடிமைபடுத்தும் புத்தியை காட்டுகின்றது அல்லவா? மாற்று மதத்தினர் அவ்வளவு எளக்காரமா?//

    'உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் இறைவன் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கு அறிந்தவன்'
    -குர்ஆன் 58:11

    இங்கு கல்வி கொடுக்கப்பட்டோரின் தகுதிகளை உயர்த்துவதாக இறைவன் கூறுகிறான். மருத்துவ படிப்பு படித்து இறைவன் உதவியால் தங்களை உயர்த்திக் கொண்ட மருத்துவர்களிடம் மருத்தவம் பார்ப்பதும் இறை கட்டளையே!


    இந்து மதத்தில் உடலை எரித்து விடும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பலர் புதைக்கவும் செய்கின்றனர். இப்படித்தான் வாழ வேண்டும். இப்படித்தான் புதைக்க வேண்டும் என்ற என்ற சட்ட திட்டங்கள் இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. இந்த வகையில் பார்க்கும் போது இந்து மதத்தைப் பொருத்த வரை உடலை தானமாக கொடுப்பது தவறில்லை. எனவே மருத்துவர்கள் அவர்களிடம் (விருப்பம் உள்ளவர்களிடம்) பெற்றுக் கொள்ளலாம். உடலை எரிப்பது சுற்றுப் பற சூழலுக்கு கேடும் தருகிறது. எரிப்பதை விட இது போல் ஆராய்ச்சிக்கு கொடுத்தால் மத நிந்தனையும் இல்லை: சுற்றுப்புற சூழலுக்கு கேடும் இல்லை: மருத்தவ ஆராய்ச்சிக்கு உதவியதாகவும் இருக்கும்.

    //மாற்று மதத்தினர் அவ்வளவு எளக்காரமா?//

    இதில் எளக்காரம் எங்கிருந்து வந்தது? இஸ்லாமிய மார்க்கத்தில் உடலை தானம் செய்வது அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்களும் கொடுப்பார்கள். இந்து மதத்தில் உடலை தானமாக பெற தடை இல்லை என்பதால்தான் அவ்வாறு கூறினேன்.

    உடலை எரிக்கும் போது அந்த உடல் நரம்புகள் சுண்டுவதால் ஆக்ரோஷமாக எழும்பும். உடன் வெட்டியான் பக்கத்தில் இருக்கும் கட்டையால் ஓங்கி ஒரு போடு போட அந்த எரியும் பிணம் திரும்பவும் கீழே விழும். பாதி எரிந்த உடலை நாய்களும் நரிகளும் இழுத்துச் செல்லும். கங்கை நதியே இன்று பாதி எரிந்த பிணங்களால் அசுத்தமாகி விட்டதாக அறிக்கை கூறுகிறது. இங்கெல்லாம் வராத எளக்காரம் மனித குலத்துக்கு பயன்படட்டும் என்று நான் சொன்னதில் வந்து விட்டதா?

    இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் நரேன்.

    ReplyDelete
  28. சலாம் சகோ சிராஜ்!

    //பாகிஸ்தான்ல இருக்கவங்கல்லாம் காட்டு மிராண்டிக, நாமெல்லாம் ரொம்ப நல்லவுக. சரிதானே??? போய் நிம்மதியா தூங்குங்க.//

    பாகிஸ்தானைப் பொறுத்த வரை அங்கு முஸ்லிம்களும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். அந்த நாட்டின் அரசு ஸ்திரமில்லாமல் இருப்பதே பல பிரச்னைகளுக்கு காரணம். பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்காக கோர்ட்டில் கேஸூம் நடக்கிறது. இதை எல்லாம் ஆனந்த் வசதியாக மறந்து விடுகிறார்.

    அவர் தூங்கவில்லை. தூங்குவது போல் நடிக்கிறார. :-)

    ReplyDelete
  29. சலாம் வாஞ்சூர் பாய்!

    மருத்துவ துறையில் இஸ்லாமியர்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளீர்கள். நரேனும் படிப்பார்.

    ReplyDelete
  30. நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலைநாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும்.

    மேலைநாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே

    முஸ்லிம்கள் மிகப்பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள்

    இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம். .


    வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்...

    (மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அடைப்புக்குறிக்குள்
    கொடுக்கப்பட்டுள்ளது)

    பெயர் காலக்கட்டம் துறை (கி.பி.)

    அல்குவாரிஸ்மி 780-850 --- கணிதம்-வானவியல் (அல்காரிஸ்ம்)

    அல் ராஜி 844-946 ----மருத்துவம் (ரேஜஸ்)

    அல் ஹைதம் 965-1039----- கணிதம்-ஒளியியல்(அல்ஹேஜன்)

    அல்பிரூணி 973-1048---- கணிதம்-தத்துவம்-வரலாறு

    இப்னு சீனா 980-1037----- மருத்துவம் (அவிசென்னா)

    அல் இத்ரீஸி 1100 ---- புவியியல் (டிரேஸஸ்)

    இப்னு ருஸ்து 1126-1198 ----- மருத்துவம்-தத்துவம் (அவிர்ரோஸ்)

    ஜாபிர் இப்னு 803 ----- பௌதீகம் ஹையான் (ஜிபர்)

    அல் தபரி 838 ----- மருத்துவம்

    அல் பத்தானி 858 ----- தாவரவியல் (அல்பதக்னியஸ்)

    அல் மசூதி 957 ---- புவியியல்

    அல் ஜஹ்ராவி 936 ---- அறுவை சிகிச்சை (அல்புகேஸிஸ்)

    இப்னு ஹல்தூண் 1332 --- வரலாறு

    இப்னு ஜுஹ்ர் ----அறுவை சிகிச்சை (அவன்ஜோர்)


    இன்றைய சூழ்நிலையில் மேலைநாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரிதான்.

    இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல.

    மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல.

    மாறாக பொருளாதார வசதி, ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன.

    காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம்.

    பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

    முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரிய அளவில் ஊக்குவித்தனர்.

    இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களோ சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

    எனவே தான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை.

    ReplyDelete
  31. Anonymous4:25 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

    மாஷா அல்லாஹ் வாஞ்சூர் அப்பா அவர்களின் பின்னூட்டத்தின் வாயிலாக நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்,அதை என் மெயில் இன்பாக்ஸில் பதிவு செய்து வைத்து கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்

    //நண்பர் முஹம்மது இக்பால் கோபப்படவில்லையென்றால்...

    முன்னாள் பதிவர் இக்பால் செல்வன் தான் இந்த முஹம்மது இக்பாலா??//

    சகோதரர் நரேன் இதில் கோபப் பட ஒன்றும் இல்லை.நான் இக்பால் செல்வன் அல்ல.என் பெயர் முஹமத் இக்பால் தான்.

    உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

    ReplyDelete
  32. Anonymous4:40 AM

    சகோதரர் நல்லெண்ணப்பிரியன்,

    //உடல் உறுப்பு தானம் தருவது என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே அமையப் பெற்ற ஒரு குணாதிசயமாக, பண்பாக இருக்க வேண்டும். ஆனா அதை கூட ஒருவரிடம கேட்டு தான் தெரிஞ்சுக்கணும் என்கிற அளவு அறிவு முடமாக இருப்பது தான் கொடுமை.//

    ஹா ஹா ஹா!சகோ உடல் உறுப்பு மட்டும் அல்ல கழிவறைக்கு கூட எவ்வாறு செல்ல வேண்டும் என்ற நெறியை இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கியுள்ளது சகோதரர் நல்லெண்ணப்பிரியன்.அதுவும் எனக்கு தெரியவில்லை என்றாலும் கூட நான் என் சகோதரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.ஏன் என்றால் இஸ்லாத்தை நான் என் வாழ்வில் எந்த நிலையிலும் கடைபிடித்து வாழ ஆசை படுகிறேன் சகோ.இதில் என்ன தவறை நீங்கள் கண்டுவிட்டீர்கள்.

    //அந்த அளவு கூட சிந்திக்க இயலாதவர்களா நீங்கள். கொஞ்சம் சுயமாக சிந்திக்கின்ற அறிவும் வேண்டும்.//

    சிந்திதனால் தான் சகோ பெயர் அளவில் முஸ்லிமாக இருந்த நான் இன்று ஒரு நல்ல முஸ்லிமாகவும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

    ReplyDelete
  33. சலாம்....
    நல்ல விளக்கம்...பொதுவாக மாற்று மதத்தினர் இடையே முஸ்லிம்கள் யாரும் உறுப்பு தானம் செய்யமாட்டார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது...இதை படிக்கும் நண்பர்கள் தெளிவு பெறுவார்கள் என நினைக்கின்றேன்

    ReplyDelete
  34. Anonymous8:17 AM

    //இது காதல் விவகாரம். அதுவும் அந்த பெண்ணைக் கொண்டு போய் முறைப்படி திருமணம் செய்து வைத்திருப்பதையும் படியுங்கள். காதலுக்கு எதிராக பெற்றோர்கள் இவ்வாறு புகார் கொடுப்பது நம் நாட்டிலும் உள்ளதே!//
    அந்த செய்தியில் காதல் விவகாரம் என்று எதுவும் இல்லையே, அந்த பெண்ணை கடத்தி சென்று மத மாற்றம் செய்து பிறகு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். முறைப்படி திருமணம் செய்தால் தவறு நியாயம் ஆகி விடுமா? மேலும் அந்த செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருப்பது பாகிஸ்தான் மனித உரிமை கழக அதிகாரிகளே 'மாதம் தோறும் 20 முதல் 25 பெண்கள்வரை கட்டாய மத மாற்றம் செய்யப்படுகிறார்கள்' என்று கூறி இருக்கிறார்கள். பொதுவாக இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக எது நடந்தாலும் 'மனித உரிமை மனித உரிமை' என்று கூறுவீர்களே உங்களுக்கு பாகிஸ்தான் மனித உரிமை கழக அதிகாரிகள் கூறி இருப்பது கண்ணில் படவில்லையா

    //இங்கும் கூட படிக்க வரும் கல்லூரிப் பெண்களை மயக்கி பல இந்து மாணவர்கள் திருமணம் செய்து கொள்வது நடக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து படிப்பதனால் வரும் கோளாறுகள் இது.//
    இந்து மாணவர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள், ஏன் இஸ்லாமியர்கள் இந்து பெண்களை காதலித்து பின்னர், மதம் மாறினால் தான் உன்னை திருமணம் செய்வேன் என்று கூறி மதம் மாற்றி திருமணம் செய்வது நடக்கவில்லையா? ஆணும் பெண்ணும் தனி தனியாக படித்தால் மட்டும் எந்த கோளாறும் வராதா?
    இங்கு அதிகமாக நடப்பதே இந்து பெண்களை இஸ்லாமியர்கள் காதல் என்ற பெயரால் மதம் மாற்றுவது தானே, இஸ்லாமிய பெண்களை பிறருடன் பேச கூடாது, வீட்டை விட்டு வெளியில் செல்லகூடாது, அந்நியருடன் பேச கூடாது என்று நீங்கள் கட்டுப்பாடுகள் விதித்து வைத்திருக்கும்போது அவர்களை எப்படி இந்து மாணவர்கள் மயக்கி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இந்துக்களும் மற்ற மதத்தவரும் காபிர்கள் என்றும் அவர்கள் இறைவன் அருள் இல்லாதவர்கள் என்று உங்கள் பெண்களை மூளை சலவை செய்து வைத்திருக்கும்போது அவர்கள் காபிர்களிடம் மயங்குகிறார்களா என்ன?

    //கட்டாய மத மாற்றம் யார் செய்தாலும் அது தவறே!//
    கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனித உரிமை கழகமே கூறி இருக்கிறதே, ஒருவேளை அல்லாவின் பிள்ளைகள் செய்தால் அது தவறு இல்லையோ
    //தமிழகத்தில் அதை விட அதிக எண்ணிக்கையில் தினந்தோறும் இஸ்லாத்துக்கு வரும் நபர்கள் அதிகரித்து வருகின்றனரே! அவர்களை யார் கட்டாயப்படுத்தியது?//

    யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி கட்டயபடுதுவதற்கு இது ஒன்றும் காட்டுமிராண்டிகள் பெரும்பான்மையாக வாழும் நாடு இல்லையே, ஆனால் ஊருக்கு ஊரு தாவா அமைப்புகள் வைத்து மதமாற்றம் செய்கிறீர்களே அதற்கு பெயர் என்ன?'உன் மத கொள்கைகள் தவறு, உன் வழிபாடு தவறு' என்று ஒவ்வொரு இஸ்லாமியனும் இன்று தன்னுடன் படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் என்று எல்லாரையும் மூளை சலவை செய்து தங்கள் மதத்திற்கு மாற்றுகிறீர்களே இந்த இழி செயலுக்கு யாரு பொறுப்பு, இது போன்று தாவா அமைப்புகள் வைத்து மதம் மாற்றி கொண்டிருக்கும் பீஜே போன்ற மத வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். உங்களின் இந்த தாவா அமைப்புகள் என்னும் மூளை சலவை அமைப்புகளால் தான் இன்று ஒரு சிலர் உங்கள் கூட்டத்தில் வருகிறார்களே தவிர உங்கள் காப்பி அடிக்கப்பட்ட உங்கள கொள்கைகளை பார்த்தோ கோட்பாடுகளை பார்த்தோ இல்லை. ஒன்று செய்யுங்களேன், உங்கள் தாவா அமைப்புகள் அனைத்தையும் மூடி விட்டு 'உன் வழி தவறு' எங்க பக்கம் வா' என்று ஊரு ஊராக கூட்டம் போடாமல் 'உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம்' என்று குரான் சொன்னபடி நடந்து பாருங்களேன், யார் உங்கள் மதத்திற்கு வருகிறார்கள் என்று பார்ப்போம்.
    இதோ இந்த வீடியோவில் ஒருவர் செய்யும் மூளை சலவையை பாருங்கள் இது போன்ற கேவலங்களை செய்து விட்டு எதை வைத்து பீற்றி கொள்கிறீர்கள்

    http://www.youtube.com/watch?v=GCkROopHZ3c

    ReplyDelete
  35. Anonymous11:09 PM

    //இந்து மத கொள்கைகளில் இருக்கிறது. //
    உண்மைதான், இந்து மத கொள்கை தவறாக இருந்ததால் தான் எங்கிருந்தோ வந்த ஒரு கொள்கை இன்று இந்து மத கொள்கையை தவறு என்று சொல்கிறது. அன்று மஇந்து மத கொள்கை பிற மதங்களையும், மதத்தவரையும் காபிர்கள் என்று சொல்லி இருந்தால், வறண்ட பாலைவன கொள்கை இன்று இந்து மத கொள்கையை தவறு என்று சொல்லும் நிலை வந்திருக்காது

    //இப்படி ஒரு கொடுமை மிக்க சட்டங்களை கொண்ட மத பிடியிலிருந்து விடுபடவே பல பேர் இஸ்லாத்தை நோக்கி ஓடுகின்றனர்.

    சுவனப்பிரியன், இது போன்ற சட்டங்கள் இந்து மதத்தின் எந்த வேத நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது, யார் கூறினார்கள் என்று கூற முடியுமா. உடன்கட்டை ஏறும் சட்டம் இந்து மதத்தின் எந்த வேத புத்தகம் வலியுறுத்துகிறது என்று தெளிவாக கூறுங்களேன்.

    //இப்பொழுது பாகிஸ்தானில் மத மாற்றம் ஏன் நிகழ்கிறதென்று புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்///

    இந்துக்கள் சிறுபான்மையினராக ஒரு காட்டு மிராண்டி கூட்டத்தின் நடுவே மாட்டிகொண்டிருப்பதால் தான் அங்கே மத மாற்றம் நடக்கிறது. அதுவும் கட்டாய மத மாற்றம்.

    ---- Anandan ---

    ReplyDelete
  36. உங்கள் சிறுநீரகத்தை 3 கோடி ரூபாய்க்கு நன்கொடையாக, மேலும் விவரங்களுக்கு, மின்னஞ்சல்: kidneydonationcenter@gmail.com
    WhatsApp +91 8681996093

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)