Tuesday, March 13, 2012

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?

இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.'
-குர்ஆன் 51:47

'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
-குர்ஆன் 15:19



மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
-குர்ஆன் 13:3

இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

-குர்ஆன் 55:10

'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.

நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.





பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.

பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.



உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!
'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!



முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன. இதனை இந்த காணொளி அழகாக விவரிக்கிறது.



ஹாக்கிங் கூறுகிறார்:

'இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.'

-எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)
“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)



உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.

மேலும் விபரங்கள் அறிய...
http://en.wikipedia.org/wiki/Universe

34 comments:

  1. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    குரான் இறைவேதம் என்பதற்கு அதனுள்ளே எண்ணற்ற சாட்சிகள் உள்ளன. அதில் ஒன்றானா பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதை அழகாக விளக்கி உள்ளீர்கள் சகோ.

    yet another lovely post from you.

    ReplyDelete
  2. நான் பேசிய வரை நிறைய சகோதரர்கள் குரான் படிக்காமலே இஸ்லாம் பற்றி கேள்வி பட்டவைகளை வைத்து ஒரு பிம்பத்தை
    உருவாக்கி வைத்துள்ளார்கள், அவர்கள் மனதில். திருக்குரானை படித்தாலே அவர்களுக்கு உண்மை விளங்கிவிடும்.
    ஒரு சகோதரரிடம் சில நாட்களுக்கு முன் நான் பேசிய போது, குரான் காபிர்களை கொல்லச் சொல்கின்றது என்று சொன்னார்.
    நான் கேட்டேன் நீங்கள் படித்து இருக்கிறீர்களா என்று? அவர் சொன்னார் இல்லை கேள்வி பட்டு இருக்கிறேன் என்று.
    பின்னர் நான் அது ஒரு போர்க்கால வசனம், அவர்கள் உங்களை கொன்றது போல் நீங்களும் அவர்களைக் கொல்லுங்கள்
    என்று தான் வருகிறது. போர்க்களத்தில் வெட்ட வருபவனை திருப்பி வெட்டச் சொல்வது ஒன்றும் தவறில்லையே என்று விளக்கினேன்.

    மேலும் நிறைய பேர் காபிர் என்றால் அது ஏதோ கெட்ட வார்த்தை என்பதுபோல் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நம் பதிவுலகிலே கூட சில அறிவு ஜீவிகள் காபிர்
    என்ற வார்த்தையை நமக்கு எதிராக மாற்ற முயர்ச்சிப்பதை பார்க்கிறோம். அய்யா புண்ணியவான்களே, காபிர்கள் என்பது கெட்ட வார்த்தை அல்ல,
    முஸ்லிம் என்ற வார்த்தைக்கு ஆப்போசிட் தான் காபிர். புரிந்து கொல்லுங்கள். என்னைய வேணும்னா NON KAFIR னு கூப்பிட்டுகங்க. ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  3. சலாம் சகோ சிராஜ்!

    முன்பு பத்திரிக்கைகளை மட்டுமே நாம் தகவல்களுக்காக வைத்திருந்தோம். அன்றைய காலங்களில் ஊடகங்கள் அனைத்தும் இஸ்லாமிய எதிரிகளின் கைகளில் இருந்தது. எனவே தங்களால் இயன்ற வரை இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து வந்தனர். இன்றோ நிலைமை தலைகீழ். இணையத்தின் அபார வளர்ச்சியால் உண்மைகள் ஒவ்வொருவரின் வீட்டின் கதவுகளையும் தினமும் தட்டுகிறது. அரசு சார்பல்லாத தனியார் தொலைக் காட்சிகளும் தங்களின் பங்கை ஓரளவு சரிவரவே செய்கின்றன. பொய்களும் புரட்டுகளும் இனி சபையேற முடியாது. அறிவியல் வளர்ச்சியின் நன்மைகளில் இதுவும் ஒன்று.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. if you agree the concept of expansion of the universe, i will expect you to accept the concept of tha "big bang" theory too. (i think that both are related).

    kannan from abu dhabi
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  5. திரு சாமி கண்ணன்!

    //if you agree the concept of expansion of the universe, i will expect you to accept the concept of tha "big bang" theory too. (i think that both are related).//

    கண்டிப்பாக! பிரபஞசம் விரிவடைவதை ஒத்துக் கொண்டால் 'பிக் பேங்க் தியரி'யையும் ஒத்துக் கொள்ள வேண்டும். அதுவும் கூட குர்ஆனுக்கு மாற்றமாக இல்லை என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்று.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!.

    ReplyDelete
  6. அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்...
    நல்ல ஆக்கம் .....
    இதனால் குரான் சொல்லவருவதென்ன??
    அறிவாளிகள் சிந்தித்தால் உண்மை விளங்கும் !
    1400 வருடங்களுக்கு முன்பே சில அறிவியல் உண்மைகளை
    குரான் எடுத்து உரைப்பதன் நோக்கமென்ன ??
    இந்த குரான் மனிதர்களிடமிருந்து வரவில்லை மாறாக ஒரு
    சூப்பர் சக்தியிடமிருந்து வந்தது என்பதை நிருபிக்கவே
    நவீன அறிவியலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இது போன்ற
    உண்மைகளை உரைக்கிறது ...
    இந்த பிரபஞ்சம் சுரிங்கினாலேன்ன,விரிவடைந்தாலென்ன ??
    இதனால் மனிதர்களுக்கு ஏதும் நன்மை தீமை உண்டா ? இல்லையே ....!
    பின்னே ஏன் இதைப்பற்றி அறிவிப்பு செய்யவேண்டும் ??
    என் மாற்று மார்க்க சகோதரர்களே தயவு செய்து ஒரு முறையாவது
    குரானை ஆழ்ந்து படித்து சிந்தியுங்கள் உண்மை விளங்கும் ...

    ReplyDelete
  7. சுவனப்பிரியன். நீங்கள் இது போன்று எழுதுவது திருக்குரானை மிகவும் மட்டமாக்குவது என்பதை அறியாமலே எழுதுகிறீர்கள் என கருதுகிறேன். நல்ல விசயங்களை மேற்கோளிட்டு குரானின் சிறப்பை சொல்லுங்கள்,ஆனால் தவறான செய்திகளை பரப்பாதீர்கள். இப்படி எழுதியமைக்காக உங்களை முகம்மது நபி மன்னிப்பாராக. பூமியை விரித்தார் என்பதும் பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதும் ஒன்றா?!

    பிரபஞ்சம் என்றால் பூமி என்று உங்களுக்கு எவர் சொன்னது? நீங்கள் இப்படி தவறான கருத்தை பரப்புவது குரானுக்கு அழகு சேர்க்காது என்பதல்ல, குரான் தவறு என்பதை நீங்களே சொல்கிறீர்கள், அதாவது தவளை தன் வாயால் கெடுவது போல.

    1970 ம் வருடமே மிக தெளிவாக இந்த பூமி சுருங்கவும் இல்லை, விரியவும் இல்லை என சொல்லியாகிவிட்டது. ப்போமியில் கண்டங்கள் இடம்பெயர்கிறதே தவிர பூமியின் அளவு மாறவில்லை என்பதுதான் இன்றைய கூற்று.

    நிச்சயம் குரான் புரிந்து கொள்ளப்படுபவர்களால் புரிந்து கொள்ளப்படும். தயவு செய்து இது போன்ற அறிவியல் விசயங்களை குரானுடன் இணைத்து எழுதி குரானுக்கு களங்கம் கற்பித்து கொள்ளாதீர்கள் என்பதுதான் எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள்.

    அதே வேளையில் நீங்கள் இப்படித்தான் எழுத வேண்டும் என சொல்லும் உரிமை எனக்கு இல்லை என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
  8. திரு ராதாகிருஷ்ணன்!

    //தவளை தன் வாயால் கெடுவது போல.//

    பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதற்காக நோபல் பரிசையே வென்றெடுத்த அறிஞர்களின் காணொளியைப் பார்க்கவில்லையா? இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி ஹாக்கிமின் கட்டுரைகளும் பிரபஞ்சம் விரிவடைவதைத்தானே கூறுகிறது. பிரபஞ்சம் விரிவடையவில்லை என்பதை அறிவியல்பூர்வமாக எதை வைத்து முடிவு செய்தீர்கள்? கொஞ்சம் விளக்கிக் கூறுங்களேன். 'தவளை தன் வாயாலே கெடும்' என்பது போல் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு போகக் கூடாது இல்லையா?

    மேலும் குரஆன் அறிவியல் புத்தகம் அல்ல என்பதை முன்பே தெளிவாக்கியிருக்கிறேன். அறிவியல் முதிர்ச்சி அடைந்த தற்கால மக்கள் இது இறை வேதம்தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது போன்ற வசனங்களையும் இறைவன் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறான்.

    ReplyDelete
  9. சலாம் சகோ நாசர்!

    //சுரிங்கினாலேன்ன,விரிவடைந்தாலென
    இதனால் மனிதர்களுக்கு ஏதும் நன்மை தீமை உண்டா ? இல்லையே ....!
    பின்னே ஏன் இதைப்பற்றி அறிவிப்பு செய்யவேண்டும் ??
    என் மாற்று மார்க்க சகோதரர்களே தயவு செய்து ஒரு முறையாவது
    குரானை ஆழ்ந்து படித்து சிந்தியுங்கள் உண்மை விளங்கும் ...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. Assalamu alikum bro!
    Masha allah good post!
    "SHARE" option'ai vaiyungal sago pakirvatarku easy'aga erukum!

    ReplyDelete
  11. //பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதற்காக நோபல் பரிசையே வென்றெடுத்த அறிஞர்களின் காணொளியைப் பார்க்கவில்லையா? //

    என்னங்க சுவனப்பிரியன். நான் சொன்ன கருத்தை அப்படியே விட்டுவிட்டு தவளை தன் வாயால் கெடும் என்பதை மட்டும் சுட்டி காட்டி இருக்கிறீர்களே.

    இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

    பூமியும் பிரபஞ்சமும் ஒன்றா?

    ReplyDelete
  12. //இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

    பூமியும் பிரபஞ்சமும் ஒன்றா?//

    ஐயா...பிரபஞ்சத்தின் உள்ளேதானே பூமியே வருகிறது. கேலக்ஸி என்பது கோள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. இது போல் பல கேலக்ஸிகள் உள்ளன. பூமி விரிவடைகிறது என்றால் அது சார்ந்த கோள்களும் கேலக்ஸிகளும் விரிவடைவதாகத்தானே அர்த்தம்.

    அடுத்து பூமி விரிவடையவில்லை என்பதை எதை வைத்து சொன்னீர்கள் என்று கேட்டிருந்தேன். அதற்கு பதில் இல்லையே!

    ReplyDelete
  13. சலாம் சகோ ஜாபர்கான்!

    //Assalamu alikum bro!
    Masha allah good post!
    "SHARE" option'ai vaiyungal sago pakirvatarku easy'aga erukum!//

    ஷேர் ஆப்ஷன் வைக்க முயற்ச்சிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. //பிரபஞ்சம் விரிவடையவில்லை என்பதை அறிவியல்பூர்வமாக எதை வைத்து முடிவு செய்தீர்கள்?//

    பிரபஞ்சம் விரிவடையவில்லை என நான் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன் சுவனப்பிரியன். பூமி என்றுதான் குறிப்பிட்டேன்.

    //ஐயா...பிரபஞ்சத்தின் உள்ளேதானே பூமியே வருகிறது. கேலக்ஸி என்பது கோள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. இது போல் பல கேலக்ஸிகள் உள்ளன. பூமி விரிவடைகிறது என்றால் அது சார்ந்த கோள்களும் கேலக்ஸிகளும் விரிவடைவதாகத்தானே அர்த்தம்.

    அடுத்து பூமி விரிவடையவில்லை என்பதை எதை வைத்து சொன்னீர்கள் என்று கேட்டிருந்தேன். அதற்கு பதில் இல்லையே! //

    அடடா! என்ன சுவனப்பிரியன் நீங்கள். என்னை கேள்வி மேல் கேள்வி கேட்க வைக்கிறீர்கள். நானே பதிலும் எழுதுறேன். ஏனெனில் நீங்கள் சொன்ன விசயத்தில் உறுதியாக இருக்கிறீர்கள் தவறு என தெரிந்தோ, தெரியாமலோ.


    விரிவடைதல் என்றால் என்ன?

    ஒன்றின் அளவு மாறுபாடு அடைதல் என பொருள்படும். இப்போது பிரபஞ்சத்தில் உள்ள கேலக்சிகள் மொத்தம் மொத்தமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.அந்த கேலக்சிகள் விரிவடைகின்றனவா என்றால் அதுதான் இல்லை. கேலக்சிகள் நகர்கின்றன. அப்படி அவை நகர எல்லா பக்கங்களிலும் விரிவடைதல் நடக்க வேண்டும் என்பதன் காரணம் கொண்டே யுனிவர்ஸ் அதாவது பிரபஞ்சம் விரிவடைகிறது என பொருள் கொண்டார்கள். ஆனால் இந்த பிரபஞ்சத்தின் எல்கை என அறிந்து இருந்தால் இப்படி எல்லாம் விரிவடைகிறது என சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். எனவே இந்த பிரபஞ்சம் விரிவடைதல் எனும் கூற்று கூட ஒருவேளை பொய்யானதாக இருக்கலாம். அது இருக்கட்டும்.

    நீங்கள் பூமி பற்றி இப்போதுதான் குறிப்பிடுகிறீர்கள். அதற்கான பதில் இதோ.

    பிரபஞ்சத்தின் எல்கைகள் தெரியாதது போல பூமியின் எல்கைகள் தெரியாதது அல்ல. பூமியினை தாண்டி வேறு கோள்களுக்கு செல்லலாம். ஆனால் பிரபஞ்சம் தாண்டி வேறு பிரபஞ்சம் உண்டா என தெரியவில்லை. அப்படிப்பட்ட பூமியின் நிலப்பரப்பு நகர்வதை வைத்து இந்த பூமி விரிவடைகிறது என ஒரு கோட்பாடு முன் வைக்கப்பட்டது. ஆனால் டேக்டானிக் பிளட்ஸ் எனப்படும் பூமியின் மேற்பகுதியும், சற்று உள்பகுதியும் உள்ள பகுதியை பல மில்லியன் வருடங்களாக ஆராய்ந்தபோது பூமியின் அளவு ஒரே மாதிர்தான் இருக்கிறது என அறிவியல் சொல்லி இந்த கோட்பாடுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டது.

    நீங்கள் குறிப்பிடுவது போல பூமி விரிவடைந்தால் அது செவ்வாயுடனோ, நிலாவுடனோ, வெள்ளியுடனோ முட்டிக்கொண்டு நிற்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் அறிக.

    பிரபஞ்சம் விரிவடைந்தால், பூமியும் விரிவடைகிறது என சொல்வது தவறான கருத்தாகும். ஒரு பலூனுக்குள் உட்கார்ந்து கொண்டு காற்றை பலூனில் செலுத்த பலூன் விரிவடைகிறது என வைத்து கொள்வோம், அதற்காக நாமும் விரிவடைவோம் என்பது சரியானது அல்ல எனபதே எளிமையான கருத்து.

    முதலில் அறிவியலின் அடிப்படை தத்துவங்கள் அனைத்தும் நாம் அறிந்து கொள்ள நிறைய முயற்சிகள் மேற்கொண்டாக வேண்டும். எனக்கு தெரிந்த குறைந்த பட்ச அறிவை வைத்துதான் பேசுகிறேன், பிரபஞ்சம் தட்டை என்று அறிவியல் சொல்கிறது, அதற்காக பூமி தட்டை என்று ஆகிவிடாது.

    விளக்கம் போதும் என்றே நினைக்கிறேன். இல்லையில்லை பூமி விரிவடைதல், பிரபஞ்சம் விரிவடைதலுக்கு சமம் என்பது நாமும் இறைவனும் ஒன்று என்பதற்கு சமமாகும். குரான் நாம் வேறு, இறைவன் வேறு என பிரித்தே சொல்கிறது என்பதை அறிக.

    அதெல்லாம் இல்லை என்று நீங்கள் மறுத்தால் நான் எதுவும் சொல்வதற்கில்லை. சரியென கேட்டுக் கொள்கிறேன். எனது நோக்கம் உங்கள் கருத்தை மாற்றுவது அல்ல, கருத்தை திருத்தி அமைப்பது என்று எடுத்துக் கொள்ளலாம்.

    மிக்க நன்றி சுவனப்பிரியன். நிறையவே சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  15. maasha allah!
    nalla pakirvu!

    ReplyDelete
  16. சகோ ராதா கிருஷ்ணன்!

    //நீங்கள் குறிப்பிடுவது போல பூமி விரிவடைந்தால் அது செவ்வாயுடனோ, நிலாவுடனோ, வெள்ளியுடனோ முட்டிக்கொண்டு நிற்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் அறிக.//

    'டாப்ளர் தத்துவம்' என்ன என்பதை விளங்கியிருந்தால் இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். டாப்ளர் தத்துவம் என்பது ஒளியுடன் சம்பந்தப்பட்டதாகும. இரயில் என்ஜினின் விசில் சத்தத்தை இதற்கு எளிமையாக விளக்க உதாரணமாக எடுத்துக் கொள்வோம். வழியோரம் நின்றிருக்கும் ஒருவரை நோக்கி இரயில் வண்டி வரும்போது அதன் விசில் சத்தம் சாதாரண நிலையிலிருந்து அசாதாரணமாகக் கூடுவதை அவரால் புரிந்து கொள்ள முடியும். இதைப் போன்று அந்த இரயில் வண்டி அவரைத் தாண்டி செல்லும் போது விசில் சத்தம் படிப்படியாகக் குறையாமல் திடீர் எனக் குறைந்து விடுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.

    ஒலி அலைகளுக்குரிய இந்த இயற்பியல் பண்பு 'ஒளி' அலைகளுக்கும் பொருந்தும் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. நிறமாலை நோக்கியில் தென்படும் காட்சிகளுக்கு டாப்ளர் விளைவை பொருத்திப் பார்த்தார்கள்.
    இங்கு அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நெருங்கி வரவில்லை. அதற்கு மாறாக பூமியை விட்டு விலகிச் செல்கிறது. இதனை இந்த சோதனையின் மூலம் நிரூபித்தனர். காலக்சிகள் பூமியை விட்டு விலகிச் செல்வதால் பூமிக்கும் அந்த காலக்சிகளுக்கும் இடையிலுள்ள தூரம் விரிவடைந்து செல்வதால் அதன் ஒளிக் கற்றைகள் நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கிறது. அறிவியல் அறிஞர்கள் ஒளிக் கற்றைகளின் இந்த இயற்பியல் பண்பை 'செந்நிறப் பெயர்ச்சி' (red shift) எனக் கூறுகிறார்கள்.

    சென்ற நூற்றாண்டில் திறமை மிக்க அறிவியல் நிபுணராம் 'எட்வின் ஹிப்பிள்' அவர்களின் இக்கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் அறிவியல் புரட்சியைத் தோற்றுவித்த கண்டுபிடிப்பாகும்.

    http://en.wikipedia.org/wiki/Doppler_effect

    விரிவாக விளங்கிக் கொள்ள இந்த தளத்திற்கு செல்லுங்கள்.

    //எனவே இந்த பிரபஞ்சம் விரிவடைதல் எனும் கூற்று கூட ஒருவேளை பொய்யானதாக இருக்கலாம்.//

    ஆக இத்தனை அறிவியல் அறிஞர்களின் அயராத உழைப்பை அவர்களின் கண்டுபிடிப்பை எல்லாம் தூரமாக ஒதுக்கி விட்டு ராதா கிருஷ்ணன் சொல்வதை நான் பின்பற்ற வேண்டும் இல்லையா?

    இப்படி உங்களின் நிலைப்பாட்டை அரைகுறையாக சந்தேகத்தில் வைத்துக் கொண்டு 'தவளை தன் வாயால் கெடும்' என்ற பழமொழியை எல்லாம் உபயோகிக்கலாமா? இந்த பழமொழி தற்போது யாருக்கு பொருந்தும் என்பதை படிப்பவர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  17. Anonymous12:03 PM

    நமது காலக்சி சுருங்கினாலும் பிரபஞ்சம் விரிவது போல தெரியுமல்லவா

    ReplyDelete
  18. சலாம் சகோ.சுவனப்பிரியன்,
    தங்களின் இந்த மிகவும் அருமையான ஒரு பதிவில், தலைப்பில் ஏதோ சந்தேகம் உள்ளது போல என்ன ஒரு கேள்வி...! :-)

    "பிரபஞ்சம் விரிவடைகிறது" அவ்ளோதான்..! இதுதான் உண்மை..! :-)

    இதற்கு நீங்கள் இங்கே பகிர்ந்துள்ள சிறந்த அடுத்தடுத்த இரண்டு அருமையான வசனங்கள் சிறப்பு..!

    وَٱلسَّمَآءَ بَنَيۡنَـٰهَا بِأَيۡيْدٍ۬ وَإِنَّا لَمُوسِعُونَ (குர்ஆன் 51:47)

    وَٱلۡأَرۡضَ فَرَشۡنَـٰهَا فَنِعۡمَ ٱلۡمَـٰهِدُونَ (குர்ஆன் 51:48)

    ----இந்த இரண்டு வசனங்களுமே சொல்ல வேண்டிய அனைத்தையும் தெளிவாக சொல்லி விடுகின்றன.

    முதல் வசனத்தின் கடைசி வார்த்தை "விரிவாக்கம் செய்பவர்" (expander)
    அடுத்த வசனத்தின் கடைசி வார்த்தை... "விரிப்பவர்" (spreader)

    ஒரு பலூனை ஊதி பெரிதாக விரிப்பது.... முன்னது...!

    அதே பலூனை ஊதாமல் இழுத்து பரப்பி ஒரு கோலத்தை மூடுவதற்காக அதன்மீது படரவிட்டு விரிப்பது... பின்னது..!

    அப்புறம் அது சுருங்கி விடாதிருக்க அங்கங்கே ஆணி அடித்து வைப்பது... இன்னொரு வசனம். (குர்ஆன் 15:௧௯)

    இப்படியாக, தமிழில் "விரி" என்ற ஒரே வார்த்தைக்கு இப்படி இரண்டு அர்த்தம் உள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

    தற்போதும் விரிவடைந்து கொண்டு இருப்பது பிரபஞ்சம் மட்டுமே... َஎன்றே நான் கருதுகிறேன்.

    குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு உள்ள எண்ணற்ற அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று.

    அவ்வப்போது வெளியாகும் இதுபோன்ற அறிவியல் ஆய்வு முடிவுகள், குர்ஆன் இறைவேதம்தான் என்று நிரூபிக்கின்றன. இதனை சிறப்பாக காணொளிகளுடன் எழுதி வெளியிட்ட தங்களுக்கு நன்றி சகோ.சுவனப்பிரியன். ஜசாக்கலாஹு க்ஹைர்.

    ReplyDelete
  19. சகோ ராதா கிருஷ்ணன்,

    தங்களின் "பிரபஞ்சம் விரிவடைகிறது... பூமி விரிவடையவில்லை..." என்ற கருத்தோடு உடன்படுகிறேன். குர்ஆனும் அதைத்தான் சொல்கிறது..! முந்திய பின்னூட்டத்தில் அதைப்பற்றி விரிவாக சொல்லி இருக்கிறேன்.

    மேற்படி குர்ஆன் 51:47 இறை வசனத்தில் உள்ள 'வானம்' என்று சொல்லப்படுவது பிரபஞ்சம் பற்றித்தான் என்பதும் இலகுவாக விளங்கும்..!

    //பிரபஞ்சம் தட்டை என்று அறிவியல் சொல்கிறது,//--?!?!?

    பிரபஞ்சத்தை விஞ்ஞாநிகளில் ஒரு சாரார், கேலக்சி போல 'தட்டை' என்றும்... மற்றொரு சாரார் கோள்கள் விண்மீன்கள் போல 'கோளம்' என்றும்... இன்னொரு சாரார் வித்தியாசமாக 'குவளை' போன்றது என்றும்... இன்னும் விதவிதமாக படம்வரைந்து பலமாதிரி சொல்கின்றனர்.

    சகோ.சுவனப்பிரியன் இப்பதிவில் பகிர்ந்துள்ள கோள வடிவ பிரபஞ்ச படம் மிகவும் அழகாக பலூன்போல உப்பி விரிவடையும் பிரபஞ்சத்தையும், அதனுள்ளே பல கேலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகுவதையும், கேளக்சிகளுக்குள் உள்ளே உள்ள விண்மீன்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதையும் ஆனால், வின்மீன்களை சுற்றி வரும் அதனதன் கோள்கள் சரியான ஈர்ப்பு விசையோடு விலகிடாமல் சரியாக பயணிப்பதையும் எளிதாக விளக்குகிறது.

    ///ஆனால் பிரபஞ்சம் தாண்டி வேறு பிரபஞ்சம் உண்டா என தெரியவில்லை.///----?!?!?!

    இன்னும் ஆறு பிரபஞ்சங்கள் உள்ளன சகோ.ராதா கிருஷ்ணன்..! இறைநாடினால்... நம்ம அடுத்த பதிவு அதைப்பற்றித்தான்..!

    :-))

    ReplyDelete
  20. Anonymous6:58 PM

    The first sign international researchers had that the earthquake caused such a dramatic change in the Earth’s rotation came from the United States Geographical Survey which monitors Global Positioning Satellite stations across the world. The Survey team had several GPS monitors located near the scene of the earthquake. The GPS station located nearest the epicenter moved almost 13 feet (4.0 m). This motivated government researchers to look into other ways the earthquake may have had large scale effects on the planet. Scientists at NASA’s Jet Propulsion Laboratory did some calculations and determined that the Earth’s rotation was changed by the earthquake to the point where the days are now one point eight (1.8) microseconds shorter.

    http://en.wikipedia.org/wiki/Japan_tsunami_2011

    மேலே, உள்ள கருத்து அமெரிக்க நாசா விஞ்ஞானிகளின் கூற்று. பூமியின் அளவு சுருங்கியுள்ளதாற்றான் அதன் சுற்றுச்சுழற்சி குறைந்துள்ளது. அவ்வாறாயின் பூமி விரிவடையவும் முடியும்.

    ReplyDelete
  21. ரெட் ஷிபிட் எல்லாம் புத்தகத்தில் படித்ததுதான். ஆனால் அதுதான் தீர்மானம் என அறிவியல் சொல்லவில்லை. அறிவியல் பேசுவது எல்லாம் கோட்பாடு. இப்படி இருக்கிறது எனவே இப்படி இருக்கலாம் என்பதுதான். இதில் மாற்றம் ஏற்படலாம், அதுதான் அறிவியல். இயல்பை அறிந்து கொள்ளும் அறிவு = அறிவியல். அதாவது இன்றைய இயல்பு நிலையை சொல்வது. மேலும் கேலக்சிகளில் இருந்து நம்மிடம் வரும் ஒளி எல்லாம் எத்தனையோ வருடங்களுக்கு அப்பால் கிளம்பிய ஒளி என்பதை அறிவீர்களா? அறிவியல் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும், இப்படி ஒரு கோணத்தில் யோசியுங்கள். ஒருவேளை இந்த பிரபஞ்சம் மிக மிகப் பெரிதாக படைக்கப்பட்டு அதில் இந்த கேலக்ஸிகள் எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தால் பிரபஞ்சம் விரிவடைகிறது என பொருள்படுமா?

    சகோதரர் முகம்மது ஆசிக் அவர்கள் எழுதியதையும் பாருங்கள். வேறு ஆறு பிரபஞ்சங்கள் உள்ளது என்கிறார். நீங்கள் பூமி விரிவடைதல் என்று குறிப்பிட்டதுதான் இத்தனைக்கும் பிரச்சினை. நீங்கள் பிரபஞ்சம் பூமி எல்லாம் ஒன்று என பேசியதை நினைவு கூறுங்கள்.

    //ஆக இத்தனை அறிவியல் அறிஞர்களின் அயராத உழைப்பை அவர்களின் கண்டுபிடிப்பை எல்லாம் தூரமாக ஒதுக்கி விட்டு ராதா கிருஷ்ணன் சொல்வதை நான் பின்பற்ற வேண்டும் இல்லையா?

    இப்படி உங்களின் நிலைப்பாட்டை அரைகுறையாக சந்தேகத்தில் வைத்துக் கொண்டு 'தவளை தன் வாயால் கெடும்' என்ற பழமொழியை எல்லாம் உபயோகிக்கலாமா? இந்த பழமொழி தற்போது யாருக்கு பொருந்தும் என்பதை படிப்பவர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறேன்.//

    ஹா ஹா ! சுவனப்பிரியன். மிகவும் சுவாரஸ்யம், ரசித்தேன். அப்படி என்றால் கடும் உழைப்பு உழைத்து பரிணாம கொள்கையை நிலைநிறுத்த ஆதாரங்கள் பேசிய அறிவியல் அறிஞர்கள் சொல்வதை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுவீர்களா? அப்படி நீங்கள் ஏற்றுக்கொண்டதாக சொன்னால் மேற்குறிப்பிட்ட தவளை நான் தான் என ஒப்புக்கொள்கிறேன். :)

    ReplyDelete
  22. சகோ ராதா கிருஷ்ணன்!

    //நீங்கள் பிரபஞ்சம் பூமி எல்லாம் ஒன்று என பேசியதை நினைவு கூறுங்கள்.//

    பிரபஞ்சமும் பூமியும் ஒன்று என்று நான் எங்கே சார் சொன்னேன். சம்பந்தமில்லாமல் வாதங்களை எடுத்து வைக்கிறீரகள். முதலில் பிரபஞசம் விரிவடைவது என்பதே தவறு என்றீர்கள். இப்போது ஒத்துக் கொள்கிறீர்கள்.

    //ஹா ஹா ! சுவனப்பிரியன். மிகவும் சுவாரஸ்யம், ரசித்தேன். அப்படி என்றால் கடும் உழைப்பு உழைத்து பரிணாம கொள்கையை நிலைநிறுத்த ஆதாரங்கள் பேசிய அறிவியல் அறிஞர்கள் சொல்வதை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுவீர்களா? அப்படி நீங்கள் ஏற்றுக்கொண்டதாக சொன்னால் மேற்குறிப்பிட்ட தவளை நான் தான் என ஒப்புக்கொள்கிறேன். :)//

    ஹி..ஹி...ஐன்ஸ்டீன், டாப்ளர், நியூட்டன், ஹாக்கிங் போன்ற தலை சிறந்த விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு ஆய்வுக் கூடங்களில் சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டது. உலகின் அனைத்து அறிவியல் அறிஞர்களாலும் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் டார்வின் தியரியோ இது வரை நிரூபிக்கப்படவில்லை. எந்த படிமங்களும் பரிணாமம் நடந்ததை உறுதி செய்யவில்லை. டார்வினின் அனுமானம்தான் பரிணாமக் கொள்கையாக நாத்திகர்களிடம் வலம் வருகிறது. பல நாடுகள் இந்த கப்ஸாக்களை புறம் தள்ளி விட்டன. பாடத் திட்டத்திலிருந்து எடுத்தும் விட்டன. எனவே ஐன்ஸடீன், நியூட்டன் போன்ற தலை சிறந்த விஞ்ஞானிகளோடு டார்வினை ஒப்பிட்டு அந்த பழமொழிக்கு சொந்தக்காரராக திரும்பவும் தங்களை நிரூபித்துக் கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  23. சலாம் சகோ ஆஷிக்!

    //அவ்வப்போது வெளியாகும் இதுபோன்ற அறிவியல் ஆய்வு முடிவுகள், குர்ஆன் இறைவேதம்தான் என்று நிரூபிக்கின்றன. இதனை சிறப்பாக காணொளிகளுடன் எழுதி வெளியிட்ட தங்களுக்கு நன்றி சகோ.சுவனப்பிரியன். ஜசாக்கலாஹு க்ஹைர்.//

    ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் பல உண்மைகள் தெரிய வரும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  24. //ஐயா...பிரபஞ்சத்தின் உள்ளேதானே பூமியே வருகிறது. கேலக்ஸி என்பது கோள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. இது போல் பல கேலக்ஸிகள் உள்ளன. பூமி விரிவடைகிறது என்றால் அது சார்ந்த கோள்களும் கேலக்ஸிகளும் விரிவடைவதாகத்தானே அர்த்தம்.//

    மேலே உள்ளதை எழுதியது நீங்கள் தான் சுவனப்பிரியன். நான் அதைத்தான் திரும்ப திரும்ப கேட்டேன். பூமியும், பிரபஞ்சமும் ஒன்றா என! பூமி விரிவடைவதாக ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் கேலக்சிகள் நகர்கின்றன என்பதை வைத்தே பிரபஞ்சம் விரிவடைகிறது என சொல்கிறார்கள். அது தவறாக இருக்க கூடும். எதற்கும் நாசாவிற்கு ஒரு கட்டுரையை அனுப்பிவிட்டு பின்னர் வருகிறேன். ஏனெனில் அவர்கள் கொஞ்சமாவது யோசிப்பார்கள். அதற்காக நீங்கள் யோசிக்கவில்லை என சொல்ல வர வில்லை.

    மேலும் அவரவர் கருத்துக்கு சரியென வந்தால் அவர் தலைசிறந்த விஞ்ஞானி, இல்லையெனில் அவர் விஞ்ஞானியே இல்லை. சரிதான். புரிந்து கொள்ள முடிகிறது.

    //பிரபஞ்சமும் பூமியும் ஒன்று என்று நான் எங்கே சார் சொன்னேன். சம்பந்தமில்லாமல் வாதங்களை எடுத்து வைக்கிறீரகள். முதலில் பிரபஞசம் விரிவடைவது என்பதே தவறு என்றீர்கள். இப்போது ஒத்துக் கொள்கிறீர்கள்.//

    பிரபஞ்சம் விரிவடைவது என கூறுவது தவறாக இருக்க கூடும் என்றே சொல்கிறேன். அதற்கு விளக்கமாக மிக மிக பெரிய பிரபஞ்சம் படைக்கப்பட்டு அதில் கேலக்சிகள் நகர்ந்தால் பிரபஞ்சம் விரிவடையும் என்கிற வாய்ப்பு அப்படி இருக்கும் பட்ச்சதில் இல்லை என்றே கேள்வி கேட்டேன். ஆனால் உங்கள் நிலைப்பாடுதனை மிகவும் தெளிவாகவே சொல்லிவிட்டீர்கள்.

    மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  25. //அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
    -விஞ்ஞானி ஹப்பிள்.
    இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!//

    //பிரபஞ்சமும் பூமியும் ஒன்று என்று நான் எங்கே சார் சொன்னேன். சம்பந்தமில்லாமல் வாதங்களை எடுத்து வைக்கிறீரகள். //

    ரா.கி,

    ஹி...ஹி உங்களுக்கு அசாத்திய பொறுமை தான், பதிவில் பூமி,பிரபஞ்சம் என ஒன்றாக பாவித்துக்கூறிவிட்டு, பின்னர் எப்போ சொன்னேன் என கேட்கிறார் மார்க்கபந்து, ஆனாலும் அவருக்கும் புரிய வைக்க முயற்சி செய்கிறீர்கள்.

    நானே சு.பிரியன் சொன்ன இரண்டையும் காபி&பேஸ்ட் செய்து போட்டுள்ளேன், அப்பவும் அவர் என்ன கைய்ய புடிச்சு இழுத்தியா போல நான் எப்போ சொன்னேன் என்றே சொல்வார் பாருங்கள் :-))

    ReplyDelete
  26. திரு வவ்வால்!

    //நானே சு.பிரியன் சொன்ன இரண்டையும் காபி&பேஸ்ட் செய்து போட்டுள்ளேன், அப்பவும் அவர் என்ன கைய்ய புடிச்சு இழுத்தியா போல நான் எப்போ சொன்னேன் என்றே சொல்வார் பாருங்கள் :-))//

    மனிதனின் உடல் வயதுக்கு ஏற்ப வளர்ச்சியடைகிறது என்று நான் ஒரு இடத்தில் சொல்வதாக கொள்வோம். இன்னொரு இடத்தில் மனிதனின் கைகளும் கால்களும் அவனது வயதக்கு ஏற்ப வளர்ச்சியுறும் என்று கூறுகிறேன். உடனே வவ்வால் என்ன சொல்வார். 'பார்த்தீர்களா! சுவனப்பிரியன் உடலும் கைகளும் கால்களும் ஒன்று என்று கூறுகிறார்” என்று ராதா கிருஷ்ணனிடம் கூறுவார். அது போல் பிரபஞ்சம் விரியும் போது அந்த பிரபஞ்சத்துக்குள் அடங்கிய பூமியும் கோள்களும் விரிவடைகின்றன என்று சொன்னால் இரண்டையும் ஒன்றாக்கினேன் என்று சொன்னால் இனி நான் அரிச்சுவடி பாடம்தான் நடத்த வேண்டும். :-)

    ReplyDelete
  27. திரு.சு.பிரியன்,

    வணக்கம்,

    //நான் அரிச்சுவடி பாடம்தான் நடத்த வேண்டும். :-)//

    அந்த அரிச்சுவடியாவது நல்லா தெரியுமா :-))

    மண்டபத்தில யாரோ எழுதி தர்ராங்க போல, என்னவென பொருளே தெரியாமல் பதிவிடுகிறீர்கள் போல இருக்கு.இப்பவும் ஹபிள் பிரபஞ்சத்தை சொன்னதை பூமினே சொல்லிக்கொள்கிறீர்கள், பூமி விரிவடைவதில்லை. தோன்றிய காலத்தை விட சுருங்கியே இருக்கிறது, மிகப்பெரிய வாயுக்கோளம் உருவாகி ஈர்ப்பு விசையினால் ஒன்றாக சேர்ந்து குளிர்ந்து பூமி உருவாகியுள்ளது, வாயு திட வடிவம் ஆகும் போது சுருங்கத்தான் செய்யும்.

    பூமியும் விரிவடைவதில்லை, சூரிய குடும்பமும் விரிவடைவதில்லை :-))

    ReplyDelete
  28. நண்பர் வவ்வால்!

    //அந்த அரிச்சுவடியாவது நல்லா தெரியுமா :-)) பூமியும் விரிவடைவதில்லை, சூரிய குடும்பமும் விரிவடைவதில்லை :-)) //

    ஓய்வில்லாமல் உப்பிடும் இன்றைய பூகோளம் !

    பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5 அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continentel Movement) தூண்டியும் வருகிறது !

    http://jayabarathan.wordpress.com/page/27/?ca

    அரிச்சுவடி பாடத்தை சகோ ஜெயபாரதனிடம் சொல்லி உங்களுக்கு ஆரம்பிச்சுருவமா....:-)))))))

    ReplyDelete
  29. திரு வவ்வால்!

    http://www.expanding-earth.org/

    இந்த சுட்டியில் பூமி எவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்டது என்பதை மிக அழகாக தொகுத்துள்ளார்கள். சற்று ராதா கிருஷ்ணனுக்கும் விளக்கி சொல்லி விடவும். :-)

    ReplyDelete
  30. திரு.சு.பிரியன்,

    ஆமாம் பூமி என்றால் பிரபஞ்சம் , பூமி விரிவடைந்துக்கிட்டே போய் சூரியனை விழுங்கிடும் :-)) அதைக்கண்டுப்பிடித்து சொன்னதற்காக உங்களுக்கு நோபெல் பரிசு கொடுப்பாங்க ,மறக்காம வாங்கிகோங்க :-))

    நல்லா ஆதாராம் காட்டுறாங்கப்பா , தமிழில் பினாத்தியது போல ஆங்கிலத்தில் பினாத்தி இருக்கும் தளமும், அப்புறம் ஒரு தமிழ் வலைப்பதிவும் காட்டினா எல்லாம் முடிஞ்சுப்போச்சு.

    மார்சில் இருந்து விண்கல்லில் உயிரினம் பூமிக்கு வந்தது என சிலர் ஒரு தியரி சொல்றாங்க, அதன் பெயர் பான்ஸ்பெர்மியா, அத் தளம் சுட்டிக் காட்டினா நீங்க குரான் தப்புனு ஒத்துப்பீங்களா :-))

    நல்லா காமெடி செய்றாங்கப்பா குரானை வச்சு :-))

    ReplyDelete
  31. நண்பர் வவ்வால்!

    //நல்லா ஆதாராம் காட்டுறாங்கப்பா , தமிழில் பினாத்தியது போல ஆங்கிலத்தில் பினாத்தி இருக்கும் தளமும், அப்புறம் ஒரு தமிழ் வலைப்பதிவும் காட்டினா எல்லாம் முடிஞ்சுப்போச்சு.//

    ஹி...ஹி...ஹி.... அரிச்சுவடி என்று மீண்டும் நிரூபித்ததற்கு நன்றி!

    //மார்சில் இருந்து விண்கல்லில் உயிரினம் பூமிக்கு வந்தது என சிலர் ஒரு தியரி சொல்றாங்க, அதன் பெயர் பான்ஸ்பெர்மியா, அத் தளம் சுட்டிக் காட்டினா நீங்க குரான் தப்புனு ஒத்துப்பீங்களா :-))//

    அப்படி ஒரு உயிரினம் வந்தாலும் அது பூமியை ஒத்த உயிரினங்களின் உடல் அமைப்பைப் பெற்றிருக்காது. அதற்கும் குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது. முன்பு பதிவாகவே கூட இட்டுருக்கிறேன். :-)

    காமெடி யார் பண்றாங்கன்னு விளங்கியிருக்குமே! :-)

    ReplyDelete
  32. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  33. என்னதான் குர்ரான ஜாக்கி வச்சி தூக்கினாலும் ஆவறது ஒன்னும் இல்ல. குர்ரான் சொல்றது " பூமி என்பது தட்டை ", பிறகு வானம் (பிரபஞ்சம் என்பதெல்லாம் முகமதுவிற்கு தெரியாது). அதுல வெளிச்சம் கொடுக்க சூரியன் சந்திரன் இருக்கு . ரெண்டும் பூமியை சுத்தி வருது. அவ்ளோதான். இத மாத்தி காட்டத்தான் இவ்வளோ அலப்பறை.

    ReplyDelete
  34. http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9790&ncat=2

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)