Sunday, March 25, 2012

மார்க்கத்தின் குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? -திருமந்திரம்

குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறைநிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:



குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்வார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்




வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்.

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக

எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று

தெள்ளி யறியச் சிவபதந்தானே.



1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்

விளக்கம்:

குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.

திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.

-----------------------------------------------------------

முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.

-ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430

பலரும் அமர்ந்து சாப்பிடும் ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள். மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை நாம் பார்த்திருக்கிறோமா?

ஒரு மனிதர் முதன் முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல் நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.' என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.

-நூல் இப்னுமாஜா 3303.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.

தரையில் எதுவும் விரிக்காமல் அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.

-தப்ரானி 12494

அகழ் யுத்தத்தின் போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.

-புகாரி 2837, 3034,4101


முகமது நபி அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.

-புகாரி 3906


இப்படி எந்த வேலையிலும் பின் வாங்காமல் மக்களோடு மக்களாக ஒன்றரக் கலந்திருந்ததுதான் முகமது நபி அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. எனவே இன்று வரை அவரது புகழ் மேலும் மேலும் எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு இறைத்தூதர், ஒரு குரு எவ்வாறு தனது மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக முகமது நபி அவர்கள் திகழ்ந்து வருகிறார.

--------------------------------------------------------

டிஸ்கி:

ஒரு அவசர உதவி!

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஷெரீப் என்ற பெயருடைய ஒரு சகோதரர் டூ வீலரில் போகும் போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்துள்ளார். கடந்த 10 நாட்களாக ரியாத் சுமைசி ஹாஸ்பிடலில் உடல் உள்ளது.

அவருடைய ஸ்பான்ஸர் தமாம். அங்கிருந்து ஓடி வந்து ரியாத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஏழு வருடமாக ஊர் செல்லவில்லை. வயது சுமாராக 45 இருக்கும்.

அவரது செல் நம்பர் 0542039717. அதுவும் பொலீஸ் வசம் உள்ளது. தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொண்டு உடலை அடக்கம் பண்ண ஏற்பாடு செய்யவும்.

.

21 comments:

  1. அதிசய மனிதர் முஹம்மத் (ஸல்)? Page 1

    01.எங்கிருந்து கிடைத்தது அறிவு ?

    "முஹம்மத் நபி (ஸல்) அவர்களது பிறப்பிற்கு முன்னரே தந்தை மரணித்து விடுகிறார்கள். தாம் கல்வி பெற வேண்டிய வயதில் தாயார் ஆமினாவும் மரணித்து விடுகிறார்கள்.

    இவர்களது வாழ்நாளில் கல்வியறிவூட்டிய ஆசிரியர்களாகவும் எவருமே இருந்ததில்லை. இதனால் இவர்கள் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்களாகவே வாழ்ந்தார்கள்.

    அவ்வாறே இவர்களது இறை தூதுத்துவம் 40வது வயதில் கிடைக்கும் வரை சமூகசீர்திருத்தம் குறித்து எவர்களுடனும் பேசிக்கொண்டிருந்ததற்கான ஆதாரங்களை எவராலும் எங்கு தேடியும் துளியும் பெறமுடியாது;

    மாறாக இக்கருத்துக்கு எதிரான ஆதாரங்களையே சேகரிக்க முடிகிறது.

    ஆக அறிவு புகட்ட மாதா, பிதா, குரு என்ற யாரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்ததில்லை. வாசித்தறியும் ஆற்றலுமிருந்ததில்லை கேள்வி ஞானமும் இருந்ததில்லை."

    முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய இக்கூற்றுக்கள் இன்றைய அனைத்து வரலாற்று ஆய்வாளர்களாலும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும்.

    பகிரங்கமாக எதிர்ப்பவர்களும் கூட இதற்கெதிரான தமது வாதங்களை நிறுவ முடியாது மௌனிக்கவே செய்கின்றனர்.


    இவைகளை உறுதிப்படுத்த பலமான ஆதாரங்கள் உள்ளதே இவற்றுக்கு காரணமாகும்.

    அவைகளிலொன்று ; முதலில் கடுமையாக எதிர்த்து நின்ற அன்றைய மக்களுக்கு மத்தியிலேயே முஹம்மத்(ஸல்)அவர்களை எழுத வாசிகத் தெரியாதவர், எதுவுமே அறிந்திராத "உம்மி" என திருக்குர்ஆன் அடையாளப்படுத்தி இருந்தது

    "அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)"

    (நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் –

    ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியாத நபியாகிய அவன் தூதரின் மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."(7:158)(இன்னும்-11:49/7:158/62:2/4:164)


    இவ் இறை வசனங்களில் சிறிதளவும் சந்தேகமில்லாதிருந்த காரணத்தினாலேயே இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் முஹம்மத்(ஸல்)அவர்களது வாழ்நாளிலேயே இறைத்தூதராக அவர்களை அங்கீகரித்தார்கள்.

    அவர்களுக்காக இவ்வுலக செல்வ சுகங்களையெல்லாம் துறக்கும் துணிவையும் பெற்றார்கள்.

    எதிர் கருத்துக்கொண்டவர்களது விதண்டாவாதத்தை தகர்த்தெறிய இவ்வாதாரம் ஒன்றே போதும்.

    CONTINUED………..

    ReplyDelete
  2. அதிசய மனிதர் முஹம்மத் (ஸல்)?> Page 2
    01.எங்கிருந்து கிடைத்தது அறிவு ?

    அல்லாஹ் அத்தாட்சிப்படுத்தியுள்ள முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.

    1. பாலைவனத்தில் வாழ்ந்த படிப்பறிவே இல்லாத சாதாரண மனிதரால் எவ்வாறு இன்றைய நவீன உலகம் வியக்கும் திருக்குர்ஆனைத் தர முடிந்தது?

    2. இன்றைய விஞ்ஞானம் மெய்பித்து நிற்கும் உண்மைகளை ஆறாம் நூற்றாண்டில் இவர்களால் எவ்வாறு துல்லியமாக கூற முடிந்தது?

    3. எவ்வாறு இவர்களால் முன்னைய வேதங்களையும் வரலாறுகளையும் கச்சிதமாகவும் அவைகளை விட விரிவாகவும் கூற முடிந்தது?

    4. அண்ட பால் மண்டலங்களின் ஒழுங்குகளைப் பற்றியும், முள்ளந்தண்டிலிருந்து உருவாகும் விந்தணு பற்றியும், பசும் மரத்திலிருந்து இறைவன் தீயை உண்டாக்கினான் என்றும் எவ்வாறு இவர்களால் கூற முடிந்தது?

    5. இவ்வாறு சிக்கலான விடயங்களையெல்லம் கூறியதுடன் நில்லாது; இவைகளனைத்தும் இறைவனது வசனங்களேயன்றி வேறில்லை முடிந்தால் பொய்ப்பித்துக் காட்டுமாறு எவ்வாறு இவர்களால் சவால் விட முடிந்தது?

    6. எவ்வாறு இவர்களால் இன்றைய உலகில் நிரூபிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முன்னறிவிப்புகளையெல்லாம் கூற முடிந்தது?

    7. எவ்வாறு இவர்களால் பெரும்சட்ட வல்லுனராக முடிந்தது?

    8. எவ்வாறு இவர்களால் பெரும் சாம்ராஜ்யத்தையே நிர்வகிக்கவும் வழிகாட்டவும் முடிந்தது?

    9. எவ்வாறு இவர்களால் உன்னத பொருளியல் கோட்பாடுகளை கூற முடிந்தது?

    10. எவ்வாறு இவர்களால் முழு மனித வாழ்க்கைக்குமே வழிகாட்ட முடிந்தது?

    11. மொத்தத்தில் மனித உள்ளங்களை எவ்வாறு இவர்களால் பக்குவபடுத்த முடிந்தது?


    அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கேயுரியது).

    இக்கேள்விகளைப் போன்ற இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் முஃமீன்களினது பதில்

    "வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வேயன்றி வேறில்லை; அவனது திருத்தூதரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதாகும்.

    "உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா? (குர்ஆன்-21:10)"

    SOURCE: http://a1-islam.blogspot.com/

    CONTINUED………..

    ReplyDelete
  3. alhamthulillaah!
    arumai!

    nalla hatheeth pakirnthamaikku!
    mikka nantri!

    ReplyDelete
  4. அதிசய மனிதர் முஹம்மத் (ஸல்)? Page 3

    02.ஆலோசனைகளை வழங்கியது யார்?

    "மனிதனானவன் அடுத்த மனிதனை ஏதாவது ஒரு விதத்தில் சார்ந்திருக்கவே வேண்டும்" என்பதே இறை நியதி.

    அவனே உலகின் தனிப்பெரும் அறிவாளியாக இருந்தாலும் சரியே அவன் அறியாத அடுத்த துறையும் இருக்கவே செய்யும்.

    அப்பெரும் அறிவாளி அடுத்த துறையினுள் நுழையும் போது அத்துறை சார்ந்தவனை துணைக்கழைக்கவே வேண்டும். இதுவே இன்றைய தினம் வரை வரலாறு தரும் பாடமும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதியுமாகும்.

    "பொருளாதார மேதைக்கு நிர்வாகங்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை, இராணுவ மேதைக்கு அரசியல் தெரிந்திருப்பதில்லை. ஏன் உயிரியல் விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியல் விஞ்ஞானம் தெரிந்திருப்பதில்லை."

    உலகில் வாழ்ந்து சென்ற அனைவரும் இவ்வாறு அடுத்தவர்களின் துணையின் அவசியத்துடன் வாழ்ந்தவர்களே.

    ஆனால் மனித சரித்திரத்தில் ஒருவரைத் தவிர; அவர்கள்தான் மனிதர்களது ஒவ்வொரு வினாடிஅசைவுக்கும் வழிகாட்டிச்சென்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.

    இத்தனைக்கும் இவர்கள் சாதாரணமான ஆன்மீகவாதி மட்டுமல்ல.

    அன்றைய பெரும் வல்லரசான உரோம சாம்ராஜ்யத்துக்கு நிகராக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தலைமைதாங்கி வழி நடாத்திய அரசியல் தலைவர்.

    தமது மக்களுக்காக களமிறங்கி காவல் புரிந்த மாபெரும் இராணுவத்தளபதி.

    நூற்றாண்டுகள் பல கடந்து இன்றும் நிலைத்து நிற்கும் சட்டங்களை இயற்றியவர்.

    இன்றும் போற்றப்படும் பொருளியல் கோட்பாடுகளை உலகிற்கு தந்தவர்.

    இன்னும் உலகின் அனைத்து துறைகளையும் அசாதாரணமாக அலசியவர்.

    உலகின் இன்றைய முதன்மை துறைகளையெல்லாம் இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்த அதிசய மனிதர்.


    இவ்வாறு அல்லாஹ் அத்தாட்சிப்படுத்தியுள்ள முஹம்மத்(ஸல்) அவர்களது சாதனைகளை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.


    1. இன்றைய நூற்றாண்டின் உலகின் பாதிப்பேர்களினது வாழ்வுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து சென்றுள்ள, வாழ்வுக்கான வரையறைகளை காட்டி சென்றுள்ள முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர்கள் யார்?

    2. அன்றைய உலகின் தனிப்பெரும் வல்லரசான ரோம சாம்ராஜ்யமே ஆட்டங்காணுமளவு ஆட்சிநடத்திய இவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர்கள் யார்?

    3. அன்றைய உலகில் மட்டுமல்ல கடந்த நூற்றாண்டு வரை எழுச்சியுற்றிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்திற்கான கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது?

    4. மேலும் இவர்களுக்கு நவீன விஞ்ஞான உலகாலும் பொய்ப்பிக்க முடியாத விஞ்ஞான ஆலோசனைகள் வழங்கியது யார்?

    5. மேலும் பொருளியல் ஆலோசனைகளை வழங்கியது யார்?

    6. மேலும் இராணுவ ஆலோசனைகளை வழங்கியது யார்?


    "முஹம்மத்(ஸல்) அவர்களது ஆலோசனைகள் உலக மக்களில் பாதியளவானோருக்கு இன்று அவசியமாகின்ற நிலையில், இவ்வளவு சாதனைகளையும் புரிந்தவருக்கு எந்த துறையிலும் எந்த மனிதரது ஆலோசனைகளும் தேவைப்பட்டிருக்கவில்லையே."

    அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கேயுரியது).

    இக்கேள்விகளைப் போன்ற இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் முஃமீன்களினது பதில் "வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வேயன்றி வேறில்லை; அவனது திருத்தூதரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதாகும்.

    (நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று நிராகரிப்பவர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்" என்று நீர் கூறிவிடுவீராக! (குர்ஆன்-13:43)

    SOURCE: http://a1-islam.blogspot.com/

    Posted by Mohamed S. Nisardeen

    ReplyDelete
  5. அருமையான விளக்கங்கள்.

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. உங்கள் அறிவை இன்னும் விசாலமாக்குவானாக

    ReplyDelete
  6. பா.ராகவன்: ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம்.

    மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில்,

    இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.

    காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல.

    அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

    முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.

    இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

    ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது. - பா.ராகவன்

    சொடுக்கி >>>>>> சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. - பா.ராகவன் <<<<<< படிக்கவும்.

    =========================


    சொடுக்கி >>>>>> இஸ்லாம், முஹமது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அறிஞர்கள், ஞானிகள், சரித்திர ஆசிரியர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் கூறுவது என்ன? – <<<<<< படிக்கவும்.


    சொடுக்கி >>>>>>நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க. <<<<<<படிக்கவும்


    .

    ReplyDelete
  7. நபிகள் நாயகம் சுகபோகங்களில் திளைக்கவில்லை

    உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா?

    அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?

    கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.== நூல் : புகாரி 6456

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும்.

    இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம்.

    அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது?

    மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
    இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.== நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

    பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள்.

    ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான்.

    'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகல் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.==
    நூல் : புகாரி 730, 5862

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள்.

    'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாயின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன்.

    அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.

    இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.==
    நூல் : புகாரி 4913


    கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

    வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?

    நபிகள் நாயகத்தின் அரண்மனை

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

    மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள்.

    ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள்.

    ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.==
    நூல் : புகாரி 3906


    இஸ்லாத்தை வீண் குறை சொல்பவர்கள் இந்த தொடர்கட்டுரைகளை

    சொடுக்கி >>>>>> நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1) <<<<<< படிக்கவும்.


    சொடுக்கி >>>>>> நபிகள் நாயகம் VS தலைவர்கள்(பகுதி-2) <<<<<< படிக்கவும்.


    சொடுக்கி >>>>>> http://tvpmuslim.blogspot.com/2011/12/vs-3.html> நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 3) <<<<<< படிக்கவும்.

    தொடர்ந்து படித்தாலே இஸ்லாத்தின் மீதும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மீதும் உள்ள கெட்ட எண்ணங்கள் விலகிவிடும்

    .

    ReplyDelete
  8. அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்,
    உலகத்தின் அருட்கொடை , மானிடர்க்கு முன்மாதிரியாம்
    நபி முஹம்மது அவர்களைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் ஏடு பத்தாது.
    நபிக்கு பின்னால் வந்தவர்தானே திருமுலர், ஒருவேளை நபியை நினைத்துக்கொண்டு இப்பாடலை இயற்றியிருப்பாரோ !!!
    நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி ......

    ReplyDelete
  9. சலாம் வாஞ்சூர் பாய்!

    //முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய இக்கூற்றுக்கள் இன்றைய அனைத்து வரலாற்று ஆய்வாளர்களாலும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும்.

    பகிரங்கமாக எதிர்ப்பவர்களும் கூட இதற்கெதிரான தமது வாதங்களை நிறுவ முடியாது மௌனிக்கவே செய்கின்றனர்//

    வருகைக்கும் பல அரிய தகவல்களை தொடராக பகிர்ந்தமைக்கும் நன்றி !

    ReplyDelete
  10. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    கொஞ்சமே கொஞ்சம் பணம் அல்லது சிறிய பதவி கிடைத்துவிட்டாலே நமக்கெல்லாம் எவ்வளவு கர்வம் வந்துவிடுகிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவிய
    நபி ஸல் அவர்களின் எளிமை நமக்கெல்லாம் ஒரு பாடம் என்பதை உங்கள் பதிவு மீண்டும் நினைவு படுத்தியது.

    நமது செயல்களை திரும்பி பார்க்கவைக்கும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும் சகோ.

    ReplyDelete
  11. சலாம் சகோ சீனி!

    //nalla hatheeth pakirnthamaikku!
    mikka nantri!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. சலாம் சகோ ஹாஜா மைதீன்!

    //அருமையான விளக்கங்கள்.

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. உங்கள் அறிவை இன்னும் விசாலமாக்குவானாக//

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  13. சலாம் சகோ நாசர்!

    //நபி முஹம்மது அவர்களைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் ஏடு பத்தாது.
    நபிக்கு பின்னால் வந்தவர்தானே திருமுலர், ஒருவேளை நபியை நினைத்துக்கொண்டு இப்பாடலை இயற்றியிருப்பாரோ !!!
    நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி ......//

    ஒருக்கால் இருக்கலாம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. சலாம் சகோ சிராஜ்!

    //கொஞ்சமே கொஞ்சம் பணம் அல்லது சிறிய பதவி கிடைத்துவிட்டாலே நமக்கெல்லாம் எவ்வளவு கர்வம் வந்துவிடுகிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவிய
    நபி ஸல் அவர்களின் எளிமை நமக்கெல்லாம் ஒரு பாடம் என்பதை உங்கள் பதிவு மீண்டும் நினைவு படுத்தியது.

    நமது செயல்களை திரும்பி பார்க்கவைக்கும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும் சகோ.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, வலுவான சட்டம் தேவை என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபற்றி, மதச் சிறுபான்மையினரை பாதுகாப்பது குறித்து, தேசிய நல்லிணக்க அமைச்சர் அக்ரம் மஷிஹ் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இது போன்ற கட்டாய மதமாற்றங்கள், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானவை. மதச் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, வலுவான சட்டம் ஒன்று தேவை. அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன், இஸ்லாமிய மத கவுன்சில் மற்றும் மத்திய ஷரியா கோர்ட் ஆகிய இரு அமைப்புகளும் கட்டாய மதமாற்றம் இஸ்லாத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். கட்டாய மதமாற்றத்தைக் கண்காணித்து தடுக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தகைய சட்டத்தின் முன்வரைவு, ஜூன் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின் பார்லிமென்டில் தாக்கல் ஆகலாம். இவ்வாறு கில் தெரிவித்தார்.

    -Dinamalar 25-03-2012

    ReplyDelete
  16. டிஸ்கி:

    ஒரு அவசர உதவி!

    தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஷெரீப் என்ற பெயருடைய ஒரு சகோதரர் டூ வீலரில் போகும் போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்துள்ளார். கடந்த 10 நாட்களாக ரியாத் சுமைசி ஹாஸ்பிடலில் உடல் உள்ளது.

    அவருடைய ஸ்பான்ஸர் தமாம். அங்கிருந்து ஓடி வந்து ரியாத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஏழு வருடமாக ஊர் செல்லவில்லை. வயது சுமாராக 45 இருக்கும்.

    அவரது செல் நம்பர் 0542039717. அதுவும் பொலீஸ் வசம் உள்ளது. தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொண்டு உடலை அடக்கம் பண்ண ஏற்பாடு செய்யவும்.

    ReplyDelete
  17. சலாம் சகோ....

    ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ரசூலுல்லாவை தவிர உதாரணம் யாரும் இல்லை....மைனஸ் ஓட்டளித்து அதை உண்மை என ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என நினைகின்றேன்...உண்மையை ஏற்று கொள்ளாதவர்களின் எதிர்ப்பு இப்படிதான் இருக்கும்...

    ReplyDelete
  18. சலாம் சகோ ஹாஜா மைதீன்!

    //ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ரசூலுல்லாவை தவிர உதாரணம் யாரும் இல்லை....மைனஸ் ஓட்டளித்து அதை உண்மை என ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என நினைகின்றேன்...உண்மையை ஏற்று கொள்ளாதவர்களின் எதிர்ப்பு இப்படிதான் இருக்கும்...//

    பதில் இல்லை என்கிறபோது அதன் வேகம் இவ்வாறெல்லாம் வெளிப்படும் என்பது நமக்கு தெரிந்ததே!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  19. சிவபெருமானை மனதில் வைத்து பாடிய வரிகள் இவை என்பதை கோடிட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  20. //ஒரு அவசர உதவி!

    தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஷெரீப் என்ற பெயருடைய ஒரு சகோதரர் டூ வீலரில் போகும் போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்துள்ளார். கடந்த 10 நாட்களாக ரியாத் சுமைசி ஹாஸ்பிடலில் உடல் உள்ளது.

    அவருடைய ஸ்பான்ஸர் தமாம். அங்கிருந்து ஓடி வந்து ரியாத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஏழு வருடமாக ஊர் செல்லவில்லை. வயது சுமாராக 45 இருக்கும்.

    அவரது செல் நம்பர் 0542039717. அதுவும் பொலீஸ் வசம் உள்ளது. தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொண்டு உடலை அடக்கம் பண்ண ஏற்பாடு செய்யவும்.//

    அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...

    இந்த தகவல் நமக்கு (இந்தியா பிரடேர்நிட்டி பாரம் தமிழ் பிரிவு ரியாத் ) நேற்று கிடைத்த உடனேயே அதில் குறிப்பிட்டிருந்த சகோதரர் நஜீர் அஹமது அவர்களுக்கு அவரைப்பற்றிய விபரங்கள் ஏதும் தெரிந்தால் தெரிவிக்கும்படி கேட்டிருந்தோம் இவ்விநாடி வரை பதில் இல்லை இருந்தாலும் நாம் இவ்விசயத்தை நமது தூதரகத்திற்கு எடுத்து சென்று விசாரித்தோம் அங்கு இதுவரை இவ்விசயத்தை யாரும் தெரிவிக்கவில்லை கம்யூனிட்டி வெல்பேர் அட்டாச்சே (டெத்) திரு.ரோஜாரிய அவர்கள் நம்மை சுமேசி ஹாஸ்பிடல் சென்று விசாரிக்கசொன்னர் அதனடிப்படையில் நமது உறுப்பினர் சுமேசி மருத்துவமனை (மார்ச்சுவரி) சென்று விசாரித்ததில் ஷெரிப் என்ற பெயரில் எந்த ஜனாசாவும் இல்லை ஆனால் கடந்த பத்து நாட்களில் வபாத்தான இரண்டு அடையாளம் காணப்படா ஜனாசாக்கள் காண்பிக்கப்பட்டது அதில் ஒருவர் ஆப்ரிக்கநாட்டை செர்ந்தவர்போளுள்ளார் மற்றொருவர் இந்தியா நாட்டவர் போல்தேரிகிறது, அந்த ஜனாஸா குறித்த விபரங்கள் பைல் நம்பர் குறித்துவந்துள்ளோம் இந்த ஜனாஸா குறித்த விபரங்கள் போலீஸ் வசம உள்ளதால் அதனை குறித்து விசாரித்து வருகிறோம். இந்த மர்ஹூம் ஷெரிப் அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் அல்லது அடையாளம் காணப்படக்கூடிய யாரேனும் இருந்தால் எங்களை உடனே தொடர்புகொள்ளுங்கள்.

    India Fraternity Forum (Tamil Chapter -Riyadh)
    0502112308 / 0504686276

    A.Mohammed Ramujudeen
    Riyadh - KSA
    Mobile: +966 50211 2308

    இதனுடைய தொடர்ச்சியாக:

    மர்ஹூம் ஷெரிப் அவர்கள் வபாத்தான இடம் மற்றும் தேதி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த சில சகோதரர்களின் விபரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய ஊர் முகவரி மட்டும் கிடைப்பதில் தாமதமாகிறது இன்ஷாஅல்லாஹ் விரைவில் நமக்கு கிடைக்கும் என நம்புகிறோம்.

    ReplyDelete
  21. சலாம் சகோ இனியவன்!

    உங்களின் முயற்ச்சிக்கு இறைவன் தக்க கூலியை வழங்குவானாக! என்னால் அலுவலகத்தை விட்டு நகர முடியாத சூழ்நிலை. எனவேதான் இணையத்தில் இந்த செய்தியை பகிர்ந்தேன். இன்ஷா அல்லாஹ் அவருடைய வீட்டு அட்ரஸ் கிடைத்து அவர்களுக்கு விபரம் தெரிந்தால் மிக்க உதவியாக இருக்கும். அப்படி ஏதேனும் செய்திகள் கிடைத்தால் மறக்காமல் இங்கு பகிரவும். நன்றி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)