Tuesday, April 17, 2012

'வஹாபிகள்' செய்து வரும் மனித நேய பணி!

ரியாத் மண்டலத்தின் 18 ஆவது மாபெரும் இரத்த தான முகாம், நேற்று 13.04.2012 வெள்ளியன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை இரத்த வங்கியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாம், மாலை 5 மணி வரை நடைபெற்றது



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிந்ததும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். சிரியா, யெமன், பாகிஸ்தான், இலங்கை, சூடான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது, TNTJ வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது.



சுமார் 275 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இம்முகாமில் 230 பேர் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது. ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர்களுள் ஒருவரான சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் ஏற்பாட்டிலும், மண்டல தலைமை நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் மற்றும் தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா ஆகியோர் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர். மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. ஹாஜா அலாவுதீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகள் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்ததானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன.





மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வடிவமைத்திருந்த இரத்த தான முகாம்களுக்கான மென்பொருள் (Software) கொடையாளிகளிடையே வரவேற்பினைப் பெற்றது. கொடையாளிகள் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதி நாட்டைச் சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.




முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு “தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்” புத்தககம் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது போன்று, 2012 ஆண்டிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத் தக்கது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

--நன்றி riyadhtntj.net

நானும் இந்த முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தேன். காலை 8 மணியிலிருந்து தூக்கத்தை மறந்து தோழர்கள் சுறுசுறுப்பாக கார்களில் மக்களை அழைத்துக் கொண்டிருந்தனர். எந்த சுய நலமும் பார்க்காது உடல் உழைப்பை அளித்த நமது தோழர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.



தமிழ் இணைய தளங்களில் 'வஹாபிகள் தமிழகத்தில் அதிகரித்து விட்டனர். இதனால் மத ந்லலிணக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தல்' என்ற வாதம் வைக்கப்படுகிறது. மாற்று மத நண்பர்களையும் இன் முகத்தோடு அழைத்து இந்த மனித நேய பணியை செய்தவர்கள் தௌஹீது சகோதரர்கள். அதாவது தருமி, சார்வாகன், கோவிகண்ணன் போன்றோர் பார்வையில் வஹாபிகள். தன்னலம் பாராது உழைத்து வரும் இவர்களை தவ்ஹீதுவாதிகள் என்றோ வஹாபிகள் என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். தங்களது பணியில் எந்த தொய்வும் இல்லாது திறம்பட காரியங்களை ஹிந்து நண்பர்களுக்கும் ஆற்றி வருவார்கள்.

32 comments:

  1. salaam..

    அண்ணே அப்படி போடுங்க, இத இதத்தான் எதிர்பார்த்தேன். ஆனா வஹ்ஹாபி என்ற வார்த்தை உபயோகத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் எதிர்தரப்பு அப்படியே சொல்வதால் அவர்கள் பாணியிலேயே தலைப்பு வைத்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன் (அதனால் தான் வஹாபி என்ற வார்த்தையை அடைப்பு குறிக்குள் போட்டிருக்கின்றீர்கள் என்று எண்ணுகின்றேன்). கலக்குங்க...

    ReplyDelete
  2. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    சார்வாகன் மேல எனக்கு மதிப்பு இருக்கு.. அவர போய் கோவி கண்ணனோட ஒப்பிட்டத ஏத்துக்க முடியல சகோ....

    ReplyDelete
  3. சலாம் சகோ ஆஷிக்!

    //ஆனா வஹ்ஹாபி என்ற வார்த்தை உபயோகத்தில் எனக்கு உடன்பாடு இல்லை//

    இப்படி ஒன்றுபட்ட இஸ்லாத்தில் வஹ்ஹாபி என்று பிரித்து சொல்வதை நான் முற்றிலுமாக வெறுக்கிறேன். ஏனெனில் அப்துல் வஹாப் என்ற அந்த சிறந்த முஸ்லிம் தலைவராக ஏற்றுக் கொண்டது முகமது நபியைத்தான். முஸ்லிம்களாகிய நம் அனைவருக்கும் ஒரே தலைவர் முகமது நபி அவர்கள்தான்.

    தொட்டதற்க்கெல்லாம் வஹாபி என்ற பதத்தை உபயோகித்து பிரிவு உள்ளது போல் தோற்றத்தைக் கொடுப்பவர்கள் தெளிவு பெறவே இந்த பதிவு.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  4. சலாம் சகோ சிராஜ்!

    //சார்வாகன் மேல எனக்கு மதிப்பு இருக்கு.. அவர போய் கோவி கண்ணனோட ஒப்பிட்டத ஏத்துக்க முடியல சகோ....//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. சலாம் வாஞ்சூர் பாய்!

    //CLICK >>>>>
    PART 7.. முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம் <<<<< TO READ. //

    வருகைககும் சுட்டிக்கும் நன்றி!
    ..

    ReplyDelete
  6. Anonymous12:59 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

    மாஷா அல்லாஹ் அருமையான மனித நேயப் பணிகள்.அதிகமான மக்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தை விரும்புவதற்கு காரணாம் மற்ற இஸ்லாமிய இயக்கங்களை காட்டிலும் அவர்கள் செய்யும் மனித நேயப் பணிகள் என்று சொன்னால் அது மிகை ஆகாது. மேலும் அவர்கள் பனி செவ்வன சிறக்க அந்த ஏக இறைவனை பிரார்த்தித்தவனாய்,

    உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

    ReplyDelete
  7. சலாம் சகோ முஹம்மது இக்பால்!

    //மாஷா அல்லாஹ் அருமையான மனித நேயப் பணிகள்.அதிகமான மக்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தை விரும்புவதற்கு காரணாம் மற்ற இஸ்லாமிய இயக்கங்களை காட்டிலும் அவர்கள் செய்யும் மனித நேயப் பணிகள் என்று சொன்னால் அது மிகை ஆகாது. மேலும் அவர்கள் பனி செவ்வன சிறக்க அந்த ஏக இறைவனை பிரார்த்தித்தவனாய்,//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. மாஷாஅல்லாஹ் அருமையான பணி

    அன்மையில் பிகாஹரை சேர்ந்த முன்று பெண் குழந்தையுள்ள வாலிபர் வேலை சேர்ந்தா ஒரே நாளில் மின்சாரம் தாக்கி கோவையில் இறந்தார், அந்த வாலிபர் ஒரே உறவினார் மட்டும் இருந்தார், ஒரே நாளுக்காக நஷ்டஇடு தராமுடியாது என்று முதாலளி சொல்ல என்ன செய்வது என்று தெரியவில்லை அந்த உறவினராக்கு மொழி தெரியாது, இந்த நிலையில் இவர்கள் ததஜ சகோதரை அனுகினார்கள், அவர் போலீஸ்,அரசு மருத்தவமனை, கேஸ் எல்லாம் சந்தித்து லேசக்கி மற்றும் நஷ்டஇடு தராமுடியாது என்று சொன்ன அந்த முதாலளி சந்தித்து நஷ்டஇடு பெற்றும் தந்தனர், மேலும் அந்த முதாலளி மணறங்கி கூடுதலாக அம்புளன்ஸ் வைத்து பிகாஹர் வரை செல்லா ஆகின்றா செலவை முதாலளி ஏற்கொன்டார், அந்த குடும்பத்தினார் கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள்.
    இதை படித்தால் ஒரு சின்ன செய்திதான் இதற்காக அவர்கள் (ததஜ) ஒருவார காலம் எடுத்துகொண்ட Practical அவர்கள் எவ்வளவு சிறமங்களை சந்த்திர்பார் அல்லாஹ் அக்பர் அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் கூலி வழங்குவனாக.

    ReplyDelete
  9. சலாம் சகோதரர் நிஜாம்!

    //இதை படித்தால் ஒரு சின்ன செய்திதான் இதற்காக அவர்கள் (ததஜ) ஒருவார காலம் எடுத்துகொண்ட Practical அவர்கள் எவ்வளவு சிறமங்களை சந்த்திர்பார் அல்லாஹ் அக்பர் அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் கூலி வழங்குவனாக. //

    இவ்வாறு இவ்வுலக வருமானங்களை எதிர் நோக்காமல் தன்னலமற்ற சேவை செய்து வரும் இவர்களால்தான் மதக் கலவரம் வரும் என்று சிலர் பொய்யுரைத்து வருகின்றனர். அவர்களின் வாதம் பொய்யானது என்பதை இந்த பதிவும் உங்களின் பின்னூட்டமும் உறுதிப்படுத்துகிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. கோல்கட்டா: ""திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர், மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களை திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அந்தக் கட்சியினருடன் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக் கூடாது'' என, மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க மாநில உணவுத் துறை அமைச்சருமான ஜோதிபிரியா மாலிக் , வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில், ஹப்ரா என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது: ஆளும் கட்சியான திரிணமுல் காங்கிரசுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியினர் பரம எதிரி. அதனால், அவர்கள் விஷயத்தில், விலகியே இருக்க வேண்டும். அவர்களுடன் சேரக் கூடாது. மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுடன், அந்தக் கட்சியின் உள்ளூர் தலைவர்களுடன், எந்த விதமான திருமண உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர். தெருவோர டீக்கடைகளில் கூட, அவர்களுடன் உட்கார்ந்து கதை பேசாதீர். மார்க்சிஸ்ட் கட்சியினருடன் உறவு வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாடுகளை நாம் எதிர்க்க முடியாது. மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு ஊராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதுவரையாவது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாலிக் கூறினார்.

    மாலிக்கின் இந்தப் பேச்சுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் சலீம் கூறுகையில், ""மாலிக்கின் பேச்சு துரதிருஷ்டமானது, கேலிக்கூத்தானது, திமிர்த்தனமானது. உயர் பொறுப்பில் உள்ளவர்கள், இப்படி சகிப்புத்தன்மை இல்லாத நிலையை மக்களிடையே ஊக்கப்படுத்துவதால், ஜனநாயக மரபுகள் சீர்குலைகின்றன. சாதி, மத, இன பேதம் இல்லாமல், மாநில மக்களிடையே நிலவும் சமூக கட்டமைப்பை, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், அவரின் பேச்சு உள்ளது. மக்கள் மத்தியில் விரோதத்தை உருவாக்க, ஆளும் கட்சியினர் முற்படுவது வருந்தத்தக்கது'' என்றார்.

    -Dinamalar 18-04-2012

    ReplyDelete
  11. கொழும்பு: "இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஓடியவர்களைத் தவிர, மற்றவர்களில் 95 சதவீதத்தினர் மறு குடியமர்த்தப்பட்டு விட்டனர்' என, இலங்கை சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே கூறினார்.

    இலங்கையில் கடந்த 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த இறுதிகட்டப் போரில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, இந்திய அரசின் நிதியுதவியுடன் பல்வேறு மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 12 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழுவினர், நேற்று முன்தினம் இலங்கை சென்றனர்.

    அமைச்சர்களுடன் சந்திப்பு: ஆறு நாள் பயணமாக இலங்கை சென்ற அவர்கள், நேற்று கொழும்பில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், பொருளாதார மேம்பாட்டுத் துணை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே ஆகியோரை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, பாசில் ராஜபக்ஷேயிடம் எம்.பி.,க்கள் குழுவினர், "இலங்கையின் இறையாண்மையை இந்தியா எப்போதுமே மதிக்கிறது, இரு நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான உறவுமுறைகளை பலப்படுத்தவே இந்தியா விரும்புகிறது' எனத் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த பாசில் ராஜபக்ஷே, இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவரித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:

    50 ஆயிரம் வீடுகள்: இலங்கையில் இருந்து இந்தியா மற்றும் சில நாடுகளுக்கு ஓடியவர்களை தவிர, இடம் பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேரை மறு குடியமர்த்தும் பணிகள் நடந்துள்ளன. இடம் பெயர்ந்தவர்களுக்காக, இலங்கை அரசு வீடுகளை கட்டியுள்ளது. அத்துடன், இந்தியா அளித்த நிதியில், 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இடம் பெயர்ந்தவர்களுக்கு தேவையான உபகரணங்களும், பண உதவியும், ரேஷனும் வழங்கப்பட்டு வருகிறது. அது மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மிக குறைவான காலத்தில், இலங்கை அரசு அமைதி திரும்பச் செய்துள்ளது. இந்திய குழுவினர் கிளிநொச்சிக்கு செல்ல வேண்டும். அங்கு நிகழ்ந்துள்ள மாற்றங்களை கண்டறிய வேண்டும். இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

    -Dinamalar 18-04-2012

    ReplyDelete
  12. Anonymous3:59 PM

    Brother Suvanapriyan,

    ///அத்துடன், இந்தியா அளித்த நிதியில், 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது///

    இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில், தமிழ்ப் பயங்கரவாதிகளினால் துரத்தப்பட்ட முஸ்லிம் அகதிகள் உள்வாங்கப்படவில்லை.

    அந்த முஸ்லிம் அகதிகளுக்கும் வீடுகள் கிடைக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைச்சர்கள், இந்தியாவைக் கோரியுள்ளனர்.

    தமிழக முஸ்லிம்களும், இலங்கை முஸ்லிம் அகதிகளுக்கு இந்தியாவின் வீட்டுத் திட்டத்திலிருந்து வீடுகள் கிடைக்க இந்திய அரசிடம் வினவவேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.

    - Ismath

    ReplyDelete
  13. Anonymous2:26 AM

    தமிழ்ப் பயங்கரவாதிகளுக்குத் தனி நாடு கிடைக்க இலங்கையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனக் கோரும் கயவன் கருணாநிதி, 1948 இலேயே ஐநாவால் கோரப்பட்ட சர்வசன வாக்கெடுப்பைக் காஷ்மீரில் நடத்த வேண்டுமெனக் கோராதிருப்பதேன்? 1948 வரையும், அதாவது இந்தியா சுதந்திரமடைந்த பின்னும் சில காலம் தனிநாடாக இருந்த ஹைதராபாத் அரசாங்கத்தைக் காட்டிக் கொடுத்து, இந்தியக் காட்டுமிராண்டிப் படைகளால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட ஹைதராபாத் அரசைத் தனிநாடாக்க வேண்டும். இவற்றையெல்லாம் கூறாமல் இலங்கை விவகாரத்திற் தலையிட நினைக்கும் சுயநலவாதிகள் ஏன் சீனாவிடம் வாலாட்ட முடியவில்லை? இலங்கைக்கு எப்போதும் உண்மையான நண்பன் சீனா! ஜெனீவாவில் வைத்து இந்தியா நம்ப வைத்துக் கழுத்தறுத்தது சுத்தக் கயமை.

    ReplyDelete
  14. சகோ அமுதன்!

    //Amudhan says:
    April 19, 2012 at 9:03 am
    I have seen most of my Bramin friends turn any topic into Hindu vs Muslims.
    They look for any small gap to propogate Antimuslim sentiments. They do it conciuosly or not, I don’t know. But I am sure they do it.
    Here the topic is about our Siddharhal, but see people here are trying to degrade Ismal/Mulsims . They have turned the topic cleverly.
    Hats off my Intelligent Brahmin Bros!//

    பல தளங்களில் நடக்கும் மோசடியை அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். மேலே ரஃபீக் என்ற முஸ்லிம் பெயரில் எழுதியிருபபதும் தங்கமணி அண்ட் கோ தான். திறமைசாலிகள் தான் இந்த காலத்திலும் அவர்களின் மேலாதிக்கத்தை பெரும்பான்மையினரால் ஒன்றும் செய்ய முடியவில்லையே!

    ReplyDelete
  15. Anonymous2:16 PM

    யாழ் குடாநாட்டிலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம் மக்களுக்கும் இந்திய உதவியுடன் கட்டப்பட்டுவரும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டங்களில் வீடுகள் வழங்கப்பட வேண்டுமென இலங்கை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பாராளுமன்றக் குழுவினரைச் சந்தித்தபோது இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கேட்டுக்கொண்டார். அவர் மேலும் இந்தியக் குழுவிக்கு தெரிவித்ததாவது புலிகளால் 48 மணித்தியாலங்களில் யாழ் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இன்னமும் சிங்கள கிராமங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.தமிழ்மொழி மற்றும் கலாசாரம் முன்னொரு போதும் இல்லாத வகையில் இலங்கையில் செழித்தோங்குகிறது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கம்பன் விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. 4 நாள் நடைபெற்ற இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டிருந்தார். இதில் இந்தியாவின் பிரபல இலக்கியவாதிகளும் கலந்துகொண்டிருந்தனர். அது மாத்திரமன்றி தமிழ் நாட்டில் அச்சிடப்படும் புத்தகங்கள் வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் வெளியிடப்படுகின்றன. வேல் தேர்திருவிழா உள்ளிட்ட பல்வேறு தமிழ் விழாக்கள் சந்தோசமாகக் கொண்டடப்படுகின்றன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் துரித கதியிலான பொருளாதார அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் இங்கு நிலையான சமாதானச் சூழ்நிலை காணப்படுகிறது என்பது தெரிந்ததாலேயே சீமான் வைகோ திருமாவளவன் மற்றும் ஏனைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உங்கள் குழுவிலிருந்து மீளெடுக்கப்பட்டனர். அவர்கள் இங்குவந்து உண்மை நிலையைப் பார்த்தால் மீண்டும் மீண்டும் தாம் கூறிவரும் குற்றச்சாட்டுக்களை தொடரமுடியாது என்றும் அஸ்வர் எம்.பி. கூறினார்.

    ReplyDelete
  16. Anonymous7:44 AM

    smitha says:
    April 20, 2012 at 5:28 am

    Amudhan,

    Before defending islam, you must get the facts right. Caste system is not prescribed in hindusim & nowhere does manu mentions this.

    U say that marraige amongst various caste groups will slowly happen in muslim comunity. The reality is different. Even going by your argument, the same applies to hindusim as well.

    U have asked whether inter caste marraige is possible within hinduism? Tell me – Are you living in a fool’s paradise?

    Thangamani has answered on the topic of slavery in islam.

    There is no need for anyone to turn against islam, least of all brahmins.

    But when faslehood is spread about hindusim, it is the duty of the hindus to set the facts right – brahmin or non brahmin.

    The so called rationalists in our country have unfortunately spread lies about hinduism, at the same time keeping quiet when atrocities by other religions notably islam is committed.

    Why? What are you afraid of?

    Do you know the plight of the hindus in pakistan?

    Forget pakistan, there are 3 lakh hindus who have been driven out from kashmir & are now living in slums in delhi.

    Why has no one raised a word on it?

    The Imam of Jama Masjid who is a respected muslim religious leader, openly says that he will complain to the OIC that muslims in india are not treated properly.

    Is this not an anti-national statement?

    India was the first country to ban “satanci verses” even before it was released here. U guys talk of freedom of expression. This time around, where was it hiding?

    U sympathised with MF hussain & said that his freedom of expression should be safeguarded. Have U ever seen his paintings? He has painted Hindu Gods & Goddesses in the nude. Ok U call it art.

    My question, why did he dare not do it on Allah & Prophet? Have U seen his paintings on them? Just see & U will know. It is very carefully done.

    Hussian produced & directed a film “Meenaxi – a tale of 2 cities”.

    The movie was withdrawn from the theatres in the same week as its launch after some Muslim Ulemas protested against it. The reason was that the song Noor-Un-Ala from the movie used Qur’an verses honoring the God as its lyrics which was used in honoring the lead actress.

    What is your answer to this?

    India has the 2nd largest Muslim population in the world.

    Muslims do not agree to a common civil code.

    Last year when the then T.N CM karunanithi brought a law making marraige registration compulsory, muslims refused to heed citing religious reasons.

    What were the so called civil activists doing?

    Hindus have been & and are at the receiving hand from other religions notably islam.

    It is time they stood up for their righs.

    See, it is a shaeful thing that the majority in this cunytry have to fight for their rights.

    First understand the meaning of secularism in this country before U talk further.
    Reply

    ReplyDelete
  17. Anonymous7:46 AM

    Amudhan says:
    April 20, 2012 at 1:43 pm

    Smitha,

    Try to understand that there is no caste sytem in Islamic text. Rather people happens to live in groups based on geography, language etc. It is groups not caste. And there is no upper caste or lowers caste or upper groups or lower groups prescribed or identified in Islam anywhere. Try to undertsnad the diffrence. (I hope you understand it already and do not want to accept it).
    All pepole are equal according to Quran and Hadiths . There is no single saying that some poeple are upper and some other are lower.

    Smitha ,
    can you try to change the texts in your Hinduism those pertains to caste sytem? Ask your RSS or Sankarar.

    ReplyDelete
  18. Anonymous7:47 AM

    Amudhan says:
    April 20, 2012 at 2:16 pm

    Thangamai

    Aneha Namskaarangal.

    you tell the half boiled truths again and again and want to prove that Islam has (hiercarical) caste sytem, But it is not at all true. what is the case of saudi arabian court? Pls explain here in detail.
    Islam tried to abolish the social descrimantions based on birth. Practically it is a succesful movement in History. But may not be 100% succesful.

    Islam strongly opposes caste system or hierrachical division of people in its texts.( you would be knowing it).

    you know., the Tamil Muslim community is purely a Tamil group which emerged from our Tamil commuinty only. But no one knows which caste they belonged to when they were non muslims.

    Endha kudumbammum Uyarndhadhu Illai. Even Mohameed is also a normal Human being not God as per Quran.

    Any Muslim can Marry anyother Muslim (in India) as per Islamic concepts/texts.

    Any how Thangamani will never accept this!.

    okay Let Islam support the evil caste system as per our Thangamani.

    I ask you one moral question:
    Can you ask RSS/Sankarar to declare that any Hindu(including Dalits) can marry any other Hindu(including Dalits) ?
    ( I agree that it happens here and there by Love marriages but the question is diferent).

    Can you try to correct the texts in Hinduism by our respected Sankarar?

    ReplyDelete
  19. Anonymous7:50 AM

    தங்கமணி says:
    April 20, 2012 at 12:32 am

    ஜனாப் Amudhan,

    குரானில் முகம்மது எங்கேயும் அடிமைமுறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றோ அதனை பின்பற்றக்கூடாது என்று முஸ்லிம்களை கேட்டுகொண்டதாகவோ ஒருவரி கூட கிடையாது. இருந்தால் எடுத்து காட்டுங்கள். முகம்மதுவே ஏராளமான அடிமைகளை வைத்திருந்தார். சுதந்திரமாக இருந்தவர்களை போர், கொள்ளை என்ற சாக்கில் அடிமைகளாக்கி விற்றிருக்கிறார். அடிமைகளை வாங்கியிருக்கிறார். விற்றிருக்கிறார். ஆகவே அடிமை முறையை ஒழித்ததாக கதை விடுவது தெரியாதவர்களிடம் போய் சொல்லுங்கள். இப்போது இணையத்தில் எல்லாம் கிடைக்கின்றன. ஆகவே பழைய பிரச்சாரம் ஓடாது.

    ReplyDelete
  20. Anonymous7:51 AM

    Racism exists all over in India. Only Hindus are racists. This is the fact!

    ReplyDelete
  21. Anonymous8:44 AM

    முட்டாள் தங்கமணி,

    குர்ஆனில் எப்படி முஹம்மது நபி எதையேனும் கூற முடியும்? குர்ஆன் என்பது அவருடைய வார்த்தைகள் அல்லவே! அத்துடன், நீர் எங்கிருந்து குர்ஆன் பற்றிப் பார்க்கிறீர்? உமக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். முடிந்தால் முறியடித்துப் பாரும். புனித குர்ஆனில் உள்ளது போன்று ஒரேயொரு அத்தியாயத்தை அது உள்ள அரபு மொழியிலேயே இயற்றிக் காட்டும்!

    -வள்ளுவன்

    ReplyDelete
  22. Anonymous8:47 AM

    Woe to the RACIST Hindus. Racism exists in India!

    ReplyDelete
  23. //தங்கமணி says:
    April 20, 2012 at 2:50 pm
    ஜனாப் Amudhan
    இணையத்தில் தான் இவையும் இருக்கின்றன

    பல்வேறு வழிகளிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; இதை மறுக்கும் அளவு மடையர்கள் யார் இருக்க முடியும் ?
    உதாரணமாக, இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: … சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம் நாளுக்கு நாள் உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது… நமது சமூகத்தில், பல நூறு வருடங்களாக ஒரு சாதியின் உட்பிரிவுகளுக்குள் மட்டுமே திருமணம் செய்யப்படவேண்டும் என்று கட்டுப்படுத்தப் பட்டிருப்பதால், பெற்றோரின் குடும்பத்தோடு அல்லது நெருங்கிய உறவினர்களோடு மட்டுமே திருமணம் செய்தாக வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாகவே, இந்த இந்திய சமூகம் உடல் அளவில் சீர்கேடு அடைந்து வருவதோடு, அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ?
    … திருமண உறவு வட்டத்தை விரிவாக்குவதன் மூலம் மட்டுமே புத்துணர்வு ஊட்டும் புதிய வேறுபட்ட ரத்தத்தை நம்முடைய சந்ததியாருக்குத் தர முடியும். நம் சந்ததியினரை வரவிருக்கும் தீமைகளில் இருந்து காப்பாற்றவும் முடியும்.” – ஸ்வாமி விவேகானந்தர் (Complete Works of Vivekananda, Volume 5 – pages 334 ~ 341)
    ஹிந்துஸ்தானத்தின் மேல் விழுந்த அன்னிய ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்வதைப் போல, இந்தச் சாதி அமைப்பையும் தீண்டாமையையும் எதிர்த்தும் புரட்சி செய்தேயாக வேண்டும் என்று நான் மனவெழுச்சி கொண்டேன். – வீர சாவர்க்கர் (1920, Letters from the Andamans, Samagra Savarkar vangmaya, Vol. 5, p. 490)//

    ஹி...ஹி..ஹி...

    தங்கமணி! சீர்திருத்தவாதிகள் தற்போது சொல்வதை யார் கேட்கிறார்கள்? வேதத்திலிருந்தும், மனு ஸ்மிரிதியிலிருந்தும் ஆதாரம் கொடுத்தால் கொஞ்சம் மதிப்புடையதாக இருக்கும். அதை தருவீர்கள் என்று நினைக்கிறேன்.

    அமுதன் அருமையாக கேள்விகளை கேட்டு வருகிறார். எனவே நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன். :-)

    ReplyDelete
  24. Anonymous10:54 AM

    தங்கமணி says:
    April 20, 2012 at 3:03 pm

    On the question of parity between husband and wife, Section 117 (3) of the AIMPLB compendium differentiates between Muslims of Arab and non-Arab origin. It provides that “regard shall be had in respect of descent among the Arabs especially Quraysh and those non-Arab families who have preserved their descent. People in the rest of the non-Arab world are mutually equal”.

    ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல் லா போர்டின் படி அரபுகள் மேன்மையானவர்கள். மற்ற்வர்கள் எல்லோரும் கீழானவர்கள். இச்லாமை பற்றி எங்களிடம் எடுத்து உடுவதற்கு முன்னால், இந்த ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல் லா போர்டிடம் போய் சொல்லலாமே?

    ReplyDelete
  25. Anonymous10:55 AM

    தங்கமணி says:
    April 20, 2012 at 2:52 pm

    அர்ஜுனன் சொல்கிறான்: என் உறவினரான துரியோதனர்களைக் கொன்றால் அந்தக் குலம் அழியும். குலம் அழிந்தால், அவர்கள் பின்பற்றும் குல தர்மம் அழியும். குல தர்மம் அழிந்தால் ஒரு குலத்துப் பெண்கள் மற்ற குலத்து ஆண்களோடு சம்பந்தம் கொள்வார். சாதிக் கலப்பால் தர்மம் அழிந்து போகும். குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.

    கிருஷ்ணன் சொல்கிறான்: அழியும் உடல்களால் உருவாகுபவை பற்றுதல்களே; அன்றி, கடமைகள் அல்ல. அவை ஆத்மாவை அறியச் செய்யாது. ஆத்மாவை அறிந்து செயல்படுவதே தர்மம். மற்ற எதுவும் தர்மம் இல்லை.

    தனிமனிதரின் குணம் மற்றும் செயல் – என்ற இந்த இரண்டின் மூலமாகவே வர்ண ஆசிரமம் உண்டாகிறது (பிறப்பால் இல்லை).

    ஒருவரின் குணம் மற்றும் செயல்களால் உருவாகும் அந்த சுயதர்மத்தைப் பின்பற்றுவதுதான் அவரவர் கடமை. அனைத்து வகை தர்மங்களிலும் சிறந்தது சுயதர்மம் மட்டுமே. சுயதர்மத்தின்படி மட்டுமே நீ செயல்படு. சுயதர்மப்படி செயல்படாமல் இருப்பதுதான் பாவம். – பகவத் கீதை

    ReplyDelete
  26. Anonymous5:01 PM

    Mr Thangamani,


    ///என் உறவினரான துரியோதனர்களைக் கொன்றால் அந்தக் குலம் அழியும். குலம் அழிந்தால், அவர்கள் பின்பற்றும் குல தர்மம் அழியும். குல தர்மம் அழிந்தால் ஒரு குலத்துப் பெண்கள் மற்ற குலத்து ஆண்களோடு சம்பந்தம் கொள்வார். சாதிக் கலப்பால் தர்மம் அழிந்து போகும். குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.///


    குல தர்மத்தை அழித்தால், யாரப்பா நரகம் அடைவர்? குலம், கோத்திரம், சாதிகள் அழிந்தால் மோட்சமல்லவா கிடைக்கும்.

    தலித்துக்கள் பிராமணியப் பெண்களை மணந்தால், தர்மம் எங்கேயப்பா அழிந்து போகும்?

    அர்ஜுனன் புலம்புவதுபோல், தங்கமணி புலம்புவதை சகிக்க முடியவில்லை.

    பேசாமல், உங்களது பிள்ளைகளை தலித்துக்களுக்கே மணம் முடித்து வையுங்கள். அப்போது, குல தர்மம் பரிணாம வளர்ச்சியடைந்து, உலக தர்மத்தை அடையலாம்.


    - Ismath

    ReplyDelete
  27. நியூயார்க்: அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைகழக வளாகத்தில் 24 வயது மதிக்கத்தக்க இந்திய மாணவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். போஸ்டன் போலீஸ் அதிகாரிகளோ அல்லது பல்கலைகழக அதிகாரிகளோ இறந்த மாணவனின் பெயரை வெளியிடவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இறந்தது இந்திய மாணவர் என்பதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
    -dinamalar
    21-04-2012

    ReplyDelete
  28. //தங்கமணி says:
    April 20, 2012 at 2:52 pm

    அர்ஜுனன் சொல்கிறான்: என் உறவினரான துரியோதனர்களைக் கொன்றால் அந்தக் குலம் அழியும்.// OK புரிந்தாது

    //குலம் அழிந்தால், அவர்கள் பின்பற்றும் குல தர்மம் அழியும்.// OK புரிந்தாது

    //குல தர்மம் அழிந்தால் ஒரு குலத்துப் பெண்கள் மற்ற குலத்து ஆண்களோடு சம்பந்தம் கொள்வார்.// OK புரிந்தாது

    //சாதிக் கலப்பால் தர்மம் அழிந்து போகும்.// OK புரிந்தாது

    //குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.// இங்கதான் புரியலா துரியோதனர்களைக் அர்ஜுனன் ஏதற்காக சண்டையிட்டு கொன்றார் அப்போ அர்ஜுனன் நரகமா கிட்டும் எப்படினின் தெளிவ விளக்கம் கொடுங்க தங்கமணி

    ReplyDelete
  29. Anonymous7:40 AM

    இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான கங்கை ஹிந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.
    உத்தரபிரதேச மாநிலத்தில் பாயும் அந்த ஜீவநதி தொழிற்சாலைக் கழிவுகள், பிரேதங்கள் ஆகியவற்றின் காரணமாக உலகின் அழுக்கான நதிகளுள் குறிக்கத்தக்கதாகவும் உள்ளது.
    கங்கை நதியை தூய்மைப்படுத்த கங்கையை காப்போம் என்ற முழக்கத்துடன் ஹிந்து அமைப்புகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இப்போது, கங்கை நதியை சுத்தப்படுத்தும் நற்பணியில் தாங்களும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக முஸ்லிம் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

    வாரணாசியில் உள்ள அகில இந்திய முஸ்லிம் சட்ட பிரிவை சேர்நத மெளலானா கல்பே ஜாவீத் என்பவர் கூறுகையில் கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சியில் உ.பி.மாநில அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்திய அரசு கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் , மாசுஅடைவதிலிருந்து பாதுகாக்க எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

    நதித் தூய்மைப்படுத்தும் சேவையில் முஸ்லிம்களும் பங்குபெற உள்ளனர். ‌மேலும் ஹிந்துக்களோடு நட்புறவு பாராட்டவதற்காக மட்டுமல்லாது அதற்கும் மேலாக கங்கையின் அவலநிலையை போக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே முஸ்லிம்கள் முன்வருவதன் பிரதான காரணம் என்று கூறியுள்ளார்.

    www.inneram.com

    ReplyDelete
  30. Anonymous7:49 AM

    தங்கமணி ஐயா அவர்களே!,

    //குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.//

    இந்து மதத்தில் சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கை உண்டா? அல்லது ஏழு ஜென்மம் என்ற நம்பிக்கையா?, அப்படி சொர்க்கம் நரகம் என்ற ஒன்று இருந்தால் இவை யார் யாருக்குக் கிடைக்கும்? அதை அடைவதற்குண்டான வழிமுறைகள் என்ன?. துறவறம் இதைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது?. துறவறத்தின் மீது தற்கால மிகப் பெரும்பான்மையான இந்துக்கள் என்று கூறிக்கொள்வோர் விருப்பமின்றி இருக்கின்றனரே, இவர்கள் அனைவரும் செல்லுமிடம் எது?.

    கொஞ்சம் விளக்க முடியுமா?.

    ReplyDelete
  31. Anonymous8:54 PM

    சுவனம்
    இலங்கை யாழ்ப்பாணத்தில 10 வயசு பாலகனை ஒரு முசுலிம் கடத்தி காத்தான்குடிக்கு கொண்டுபோய்
    முசுலிமா மாத்தி தன்னோட வீட்டில வேலை செய்யவச்சிருக்கன். இதை நீங்க உங்களின் தளத்தில் கண்டிக்கவேண்டும் .
    செய்வீங்களா ?
    Refer:
    www.tamilwin.com

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)