Wednesday, April 25, 2012

குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?

குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?
கேள்வி: மாற்று மதத்தவர் ஒருவர் - அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்! -எஸ். ராஜா முஹம்மது, காயல்பட்டணம்

விளக்கம்: இறைவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது.
 
 


மண்ணிலிருந்தோ
, உலோகத்திலிருந்தோ ஒரு உயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! எறும்பின் மரபணுவைக் கூட மனிதனால் படைக்க முடியாது

நான் உங்களிடம் தருகின்ற விதையை தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நீங்கள் படைத்தவராக மாட்டீர்கள். இறைவன் படைத்து வைத்துள்ளவற்றை மனிதன் கண்டுபிடிக்கிறானே தவிர படைக்கவில்லை.


உயிரணுவும்-மரபணுவும் இல்லாத களி மண்ணிலிருந்து அவற்றை அல்லாஹ் எப்படி உருவாக்கினானோ அப்படி உருவாக்கும் போது தான் மனிதன் கடவுள் வேலையைச் செய்தான் எனக் கூற முடியும். ஒருக்காலும் இது மனிதனால் ஆகாது.

எனவே குளோனிங் மூலம் படைக்கப்பட்டவர்களும் இறைவனால் தான் படைக்கப்படுகின்றன்ர் என்பதால் அவர்களும் இறைவனை வணங்கியாக வேண்டும்
 
 

  கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?
கேள்வி: மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233-வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து நான்கு ஆகிறது. இப்படியிருக்க, அல்குர்ஆனின் 46:15-வது வசனத்தில் கருவறை மற்றும் பால்குடியின் கால அளவு 30 மாதங்கள் எனக் கூறுகிறது. இரண்டும் முரண்படுகிறதே! என்ற என்னுடைய மற்றும் என் தோழருடைய கேள்விக்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். - எம்.ஏ. பக்கீர் முஹம்மது, தென்காசி.


பதில்: 2:233-வது வசனத்தில் மட்டுமின்றி 31:14 வது வசனத்திலும் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.


ஆனால், 46:15-வது வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.


அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை) கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறது. ஒரு குழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று எந்தக் காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்து மாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கி வைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.


கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, 'கர்ப்ப காலம் ஆறு மாதம்' என்று குர்ஆன் கூறுகிறது என்றால் வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான் பொருத்தமானதாகும்.


இறைவன் வேண்டுமென்றே அனைவரும் தெரிந்து வைத்துள்ள நிலைக்கு எதிராகக் கூறுகிறான் என்றால் இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து, கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறை வார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம்.

 
மனிதனுக்கு என்று தனியான வித்தியாசமான வடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு என்று தனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில் விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர் கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான். அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக் காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தை எடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடு எவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோ அது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ, கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.


கருவறையில் இந்த நிலையை அடைந்த இறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது. இது இன்ன பிராணிக்குரியது என்றெல்லாம் கூட கூற முடியாது. ஆய்வும், சோதனைகளும் நடத்திப் பார்த்தாலும் அதில் மனிதனுக்குரிய அம்சம் ஏதும் இருக்காது.


இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம் உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன. அதன் பின்னர்தான் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும் உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.
 

மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய கால கட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத்தன்மையும் அடையாளமும் இல்லாத இறைச்சித்துண்டு தான் கருவில் இருந்தது.
நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்தில் கருவளர்ச்சி என்று கூறாமல் மனிதன் - இன்ஸான் - என்ற சொல்லை இறைவன் பயன்படுத்தி விட்டு 'இன்ஸானை (மனிதனை) அவள் சுமப்பது ஆறு மாதம்' என்று அற்புதமாக கூறுகிறான்.


பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (திருக்குர்ஆன் 23:14)


பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம் ஆக்கினோம் என்பது எவ்வளவு அற்புதமான சொல்! இந்த நிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும் ஒன்று தான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடு மாடாகவும் மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலை உருவாகிறது. எனவே அதை மற்றொரு படைப்பு என்று இறைவன் கூறுகிறான். இதையே தான் மனிதனை தாய் ஆறு மாதம் சுமந்தாள் என்ற வசனமும் கூறுகிறது.


இந்த மாபெரும் உண்மை படைத்த இறைவனுக்குச் சாதாரண விஷயம் என்பதால் தான் மக்கள் விளங்கி வைத்திருந்ததற்கு மாற்றமாக வேண்டுமென்றே மனிதனைத் தாய் சுமந்தது ஆறு மாதம் என்கிறான். கருவின் வளர்ச்சி காலம் எனக் கூறவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.
 
- -நன்றி பி.ஜெய்னுல்லாபுதீன்.


15 comments:

  1. சென்னை: கடந்த 2011 முதல் 2012 வரை தமிழகத்தில் மதுபான விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி கிடைத்திருப்பதாகவும், இன்னும் இந்த வருமானத்தை பெருக்கிட எலைட் என்ற உயர்ரக மதுவகைகள் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் நத்தம் விசுவநாதன் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மதுபான விற்பனையை தனியார் விற்பனை செய்து வந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக சில்லரை விற்பனை செய்யும் உரிமையை அரசுக்கு முழுவதும் சொந்த நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்துக்கு வழங்குவது என்று 2003-ம் ஆண்டு துணிச்சலான முடிவை அ.தி.மு.க., அரசு எடுத்தது. இதன்மூலம் தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை தடுக்கப்பட்டு அரசு வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இது குறித்த விவரம் வருமாறு: ரூ.3 ஆயிரத்து 639.93 கோடி ( 2003-2004) , ரூ.4ஆயிரத்து 872.03 கோடி ( 2004-2005 ) , ரூ.6 ஆயிரத்து 030.77 கோடி( 2005-2006), ரூ.7ஆயிரத்து 473.61 கோடி ( 2006-2007) , ரூ.8 ஆயிரத்து 821.16 கோடி (2007-2008 ), ரூ.10 ஆயிரத்து 601.50 கோடி ( 2008-2009 ) , ரூ.12 ஆயிரத்து 498.22 கோடி( 2009-2010 ) , ரூ.14 ஆயிரத்து 965.42 கோடி ( 2010-2011 ) , ரூ.18 ஆயிரத்து 081.16 கோடி 2011-2012 ) மொத்த வருவாய் கிடைத்துள்ளது. எனவே உயர்தர மதுபானம் தயாரிக்க தேவைப்படும் சாராவி தயாரிக்கும் வடிப்பாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    -Dinamalar
    26-04-2012

    வாழ்க ஜனநாயகம்! வாழ்க குடி மக்கள்! :-)

    ReplyDelete
  2. Anonymous5:20 AM

    ஒரு சவுதி காட்டுமிராண்டி பெரியசாமி என்பவரை 18 வருசமாய் அடிமையாக வைத்திருந்தானாமே. 18 வருசமாய் தமிழே பேச இயலாததால் அவருக்கு தமிழ் மறந்தே போய்விட்டதாம். அவரை சித்தரவதைவேறு செய்திருக்கிறான் அந்த சவுதி. இன்னோரு நல்ல மனம் படைத்த சவுதிகாரர் அவரை அரசாங்கத்திடம் புகார் செய்தி விடுவித்திருக்கிறார். அரசு சம்பள பாக்கியும் விமான சீட்டும் தந்து அனுப்ப உத்தரவு இட்டிருக்குது. சவுதி காட்டுமிராண்டிக்கு தண்டனையும் இல்லை. பெரியசாமிக்கு நஷ்ட ஈடும் தரவில்லை. நீரோ குரான் அடிமை முறையை தடை செய்கிறது என சரடு விட்டுக் கொண்டிருக்கறீர்கள்.

    இதே உம்மால் கீழ்த்தரமாக ஏசப்படும் அமெரிக்காவில் நடந்திருந்தால் அந்த அமெரிக்கன் கோடிகணக்கில் நஷ்ட ஈடு தந்துவிட்டு சிறைக்கும் போயிருப்பான். ஏன்னா அது உண்மையிலேயே முன்னேறிய நாடு.

    ReplyDelete
  3. சகோ அனானி!

    //ஒரு சவுதி காட்டுமிராண்டி பெரியசாமி என்பவரை 18 வருசமாய் அடிமையாக வைத்திருந்தானாமே. 18 வருசமாய் தமிழே பேச இயலாததால் அவருக்கு தமிழ் மறந்தே போய்விட்டதாம்.//

    10 லட்சத்திற்கும் அதிகமான நம் இந்திய தொழிலாளர்கள் சவுதியில் 10 வருடம் இருபது வருடமாக வேலை செய்து வருகிறார்கள். சிலர் குடும்பத்தோடு பல வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஏதோ ஒரு காட்டுமிராண்டி இஸ்ராத்துக்கு மாற்றமாக நடப்பதை நாம் உதாரணமாக கொள்ளலாமா? கெட்டவர்கள் எல்லா நாட்டிலும் உள்ளனர். விகிதாச்சாரங்கள் மட்டுமே மாறுபடும். இன்னொரு நல்ல மனது படைத்த சவுதிதானே அவரை விடுவித்து அவருக்கு சேர வேண்டிய .ழப்புத் தொகையையும் ஒரு நாள் விடாமல் கணக்கு பண்ணி அவரை தமிழகத்தக்கு அனுப்பி வைத்துள்ளார்!

    //இதே உம்மால் கீழ்த்தரமாக ஏசப்படும் அமெரிக்காவில் நடந்திருந்தால் அந்த அமெரிக்கன் கோடிகணக்கில் நஷ்ட ஈடு தந்துவிட்டு சிறைக்கும் போயிருப்பான். ஏன்னா அது உண்மையிலேயே முன்னேறிய நாடு.//
    ஹி..ஹி... அமெரிக்காவைப் பற்றி பெருமை வேறா! இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தினமலரும் செய்தியை வெளியிட்டிருந்தது. துப்பாக்கி கலாசாரம் அமெரிக்காவில் கொடி கட்டி பறக்கிறது. தினம் தினம் இந்தியர்கள் செத்து பிழைக்கின்றனர் அமெரிக்காவில். ஆஸ்திரேலியாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த சவுதி கிறுக்கன் இறைவனுக்கு கொஞ்சமாவது பயந்ததனால்தான் உயிரோடவாவது விட்டு வைத்திருந்தான். அமெரிக்காவாக இருந்திருந்தால் பெரியசாமி என்றோ எமலோகம் சென்றிருப்பார்.

    ReplyDelete
  4. பாலக்காட்டு மாதவன்6:56 AM

    //இறைவன் படைத்து வைத்துள்ளவற்றை மனிதன் கண்டுபிடிக்கிறானே தவிர படைக்கவில்லை.//

    Liger, Tiglon இதையெல்லாம் இறைவன்தான் படைத்தாரா?

    ReplyDelete
  5. பணிப்பெண்ணை வீட்டில் பூட்டிவிட்டு வெளிநாடு சென்ற "கொலவெறி" தம்பதி

    வெள்ளிக்கிழமை, மார்ச் 30, 2012, 15:35 [IST]

    டெல்லி: 13 வயது பணிப்பெண்ணை வீட்டில் பூட்டிவிட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காங்குக்கு 6 நாள் பயணமாக சென்ற தம்பதியினரின் கொடூரச் செயல் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

    வீட்டில் வைத்து பூட்டப்பட்ட அந்த சிறுமி ஜன்னல் ஒன்றைத் திறந்து உதவிகோரி கூக்குரல் எழுப்பியதும்தான் அவர் வீட்டில் அடைபட்டுக் கிடந்தது அனைவருக்கும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

    இதில் கொடுமை என்னவெனில் தம்பதியர் இருவருமே மருத்துவர்கள்தான்!

    வெளிநாடு திரும்பிவிட்டு வந்து சிறுமியின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக வீட்டுக்குள் காமிராவையும் பொருத்தி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தரகர்கள் மூலம் இந்த சிறுமி கொண்டுவரப்பட்ட நாள் முதல் ஒரு பைசா சம்பளமும் கூட கொடுக்கவில்லையாம்..

    இதுதொடர்பாக அந்த மருத்துவ தம்பதியினர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை பதிவுசெய்த பின்னர் சிறுவர் இல்லத்துக்கு அவரை அனுப்பிவைக்க போலீசார் முடிவுசெய்துள்ளனர்.

    http://tamil.oneindia.in/news/2012/03/30/india-delhi-couple-holidays-abroad-locking-maid-aid0216.html

    ReplyDelete
  6. திரு பாலக்காட்டு மாதவன்!

    //Liger, Tiglon இதையெல்லாம் இறைவன்தான் படைத்தாரா? //

    இவை புதிய உயிரினமாக இருந்தாலும் இவற்றின் மூதாதையரை படைத்தது யார்? இவை தானாக உருவாகி விடவில்லையே! எனவே இங்கும் இறைவனின் ஆளுமையை உங்களால் புறந்தள்ள முடியாது.

    ReplyDelete
  7. சகோ புரட்சி மணி!

    உங்கள் புரிதல் எந்த அளவு தவறானது என்பதை பின்வரும் ஆதாரபூர்வமான ஹதீதைப் பார்த்து தெளிவு பெறுங்கள்:

    இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:


    “அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.


    முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.


    இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.


    மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.


    நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.


    இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.


    சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

    ReplyDelete
  8. Anonymous8:15 AM

    //ஏதோ ஒரு காட்டுமிராண்டி இஸ்ராத்துக்கு மாற்றமாக நடப்பதை நாம் உதாரணமாக கொள்ளலாமா? கெட்டவர்கள் எல்லா நாட்டிலும் உள்ளனர். விகிதாச்சாரங்கள் மட்டுமே மாறுபடும். இன்னொரு நல்ல மனது படைத்த சவுதிதானே அவரை விடுவித்து அவருக்கு சேர வேண்டிய .ழப்புத் தொகையையும் ஒரு நாள் விடாமல் கணக்கு பண்ணி அவரை தமிழகத்தக்கு அனுப்பி வைத்துள்ளார்!//

    நான் சவுதிகாரனுக எல்லாரும் கெட்டவனுக என சொல்லவில்லையே. நீர் குரான் அடிமைதனத்தை அனுமதிக்கவில்லை என்று சொல்கிறீர்,சவுதி அரசு குரான் வழி நடக்கும் நல்லரசு எனவும் சொல்கிறீர்கள். அப்படி எனில் அடிமையாக்கியனுக்கு சவுதி அரசு தண்டனை தரவேண்டாமா? அடிமையாக்கப்பட்டவர் தனது வாழ்வின் 18 வருடத்தை இழந்ததற்காக நட்டஈடு அளிக்க வேண்டாம்?

    //அமெரிக்காவைப் பற்றி பெருமை வேறா! இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தினமலரும் செய்தியை வெளியிட்டிருந்தது. துப்பாக்கி கலாசாரம் அமெரிக்காவில் கொடி கட்டி பறக்கிறது. //

    சும்மா அடித்துவிடாதீர்கள் ஜயா. பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியுண்டு என்பதினால் நம்மூரில் கத்தி வைத்திருப்பது போல் பலர் துப்பாக்கி வைத்துள்ளார்கள். அதில் சிலர் தவறாக பயன்படுத்துவது நிகழத்தானே செய்யும். என்னமோ அமெரிக்காவில் எல்லோரும் துப்பாக்கி வைத்துக்கொண்டு தெருவில் நின்னு சுட்டு விளையாடுவது போல் சொல்கிறீர்கள். இங்கு காவல்துறை, ஆம்புலன்ஸ், தீ அழைத்த 5 நிமிடத்தில் வருவார்கள். ஒரு தடவை எங்கள் அலுவலகத்தில் மைக்ரோவேவ் அவனில் சுட வைக்க உணவை வைத்துவிட்டு ஒருவர் வேறு பக்கம் போய்விட்டார். உணவு கருகி புகைவந்து தீ அலாரம் அடித்தது. 3வது மாடியிலிந்து அலாரம் கேட்டு நாங்கள் கீழே படி இறங்கி வருவதற்குள் தீயணைப்புவண்டி, போலிஸ் வந்துவிட்டார்கள். நான் தபாலில் வாங்கிய விலையுயர்ந்த லப்டாப் போன்ற பொருட்களை தபால்காரர் வீட்டுவாசலில் வைத்துவிட்டு போய்விடுவார். நான் அலுவலகம் முடிந்து வருவரை அது அப்படியே இருக்கும். வீடு கார் இவற்றை பலர் பூட்டமலிருப்பதையும் பார்த்திருக்கிறேன். இவ்வளவு பாதுகாப்பு கொண்ட இடங்களும் அமெரிக்காவில் உண்டு. குற்றம் அதிகம் நடக்கும் பகுதிகளும் உண்டு. அங்கு போகமலிருப்பது நமது சமார்த்தியம்.

    ReplyDelete
  9. எத்தனை கதைகள்?

    பிராமணர்களிடம் இதைவிட ஆயிரம் கதைகள் கூடுதலாக உள்ளன.

    சீனர்கள் இன்னும் பல புதிய கதைகளைக் கூறுகின்றனர்.

    கதை கேட்பதில் என்ன தப்பு?

    வெறும் கதை தானே?

    அடுத்த கதை என்னவோ?

    ReplyDelete
  10. //இதே உம்மால் கீழ்த்தரமாக ஏசப்படும் அமெரிக்காவில் நடந்திருந்தால் அந்த அமெரிக்கன் கோடிகணக்கில் நஷ்ட ஈடு தந்துவிட்டு சிறைக்கும் போயிருப்பான். ஏன்னா அது உண்மையிலேயே முன்னேறிய நாடு.//

    சகோதரா அனானிகளே சும்மா அடித்து விடகூடாது. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது,

    Crime stats: SArabia vs UStates
    Saudi Crime stats
    84,599
    Ranked 32nd.

    American Crime stats
    11,877,218
    Ranked 1st. 139 times more than Saudi Arabia

    Frauds

    Saudi : 741
    Ranked 37th.

    American : 371,800
    Ranked 2nd. 501 times more than Saudi Arabia

    http://www.nationmaster.com/compare/Saudi-Arabia/United-States/Crime

    மேலும் உங்களுக்கு தகவல் தேவை இந்த லிங்கில் சென்று ஒவ்வோரு நாட்டையும் ஒப்பிட்டு பார்த்து எதையும் ஆதராத்தோடு உன்மை பேசும் சகோராக மாறுவோம்.

    //சவுதி காட்டுமிராண்டிக்கு தண்டனையும் இல்லை. பெரியசாமிக்கு நஷ்ட ஈடும் தரவில்லை.//
    //18 வருடத்தை இழந்ததற்காக நட்டஈடு அளிக்க வேண்டாம்?// அப்போ நிங்கா முழுசா படிக்கள அரைகுறையாக படித்து வதந்தியா. நஷ்டஈடுக 85000 Riyal காட்டுமிராண்டி தந்துள்ளன். சும்மா எப்பார்தலும் கோயிலுக்குள் முஸ்லீம் கறி விசிட்டாங்கரா மாதிரி பேசிட்டு இருக்கவேண்டாம்.

    ReplyDelete
  11. சலாம் சகோ நிஜாம்!

    //சும்மா எப்பார்தலும் கோயிலுக்குள் முஸ்லீம் கறி விசிட்டாங்கரா மாதிரி பேசிட்டு இருக்கவேண்டாம்.//

    அனானிகளுக்கு ஆதாரத்தோடு கொடுத்த பதில்கள் அருமை!

    ReplyDelete
  12. Anonymous12:24 PM

    நிசாம் வழக்கம் உளற ஆரம்பித்து விட்டீர்கள். கேட்குற கேள்விய விட்டுவிட்டு மத்த எல்லா விடயமும் பேசுவீங்க.

    இந்திய தொழிலாளி கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து பேசாமல் அமெரிக்க கிரைம் ரேட் குறித்து என்ன பேச்சு? அமெரிக்காவில் எவனும் பிறநாட்டு தொழிலாளியின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைச்சுகிட்டு அடிமையாக வேலைவாங்குவதில்லை. இது எந்த நாட்டில் நடக்குதுன்னு மனசாட்சி உள்ள எல்லோருக்கும் தெரியும்.

    ஏன்யா உமக்கு கொஞ்சமாவது வெட்கம் மனசாட்சி இருக்குதா? 85,000 ரியால் அதாவது 12 லட்சம் இப்போது ஒரு தொகையா? அந்தாளின் 18 வருட சம்பளத்தொகையே அதைவிட இருக்குமே?(18 வருடம் அவருக்கு சம்பளம் தரவில்லை) அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் திரட்டிய உதவிதொகை மட்டும் 30,000 ரியால், நீர் என்னவெனில் 85000 ரியாலைப்போய் நட்ட ஈடு என தமாசு பண்ணறீங்க. இதுல பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என சாபம் வேறு!

    இந்திய பணிப்பெண்ணை 3 வருடம் சம்பளம் தராமல் நியூயார்க்கில் வேலை வாங்கிய இந்திய அதிகாரிக்கு அமெரிக்க கோர்ட் விதித்த அபராதம் 15 லட்ச டாலர்கள் அதாவது 7,86,60,000 ருபாய் ஏறக்குறைய 8 கோடி ருபாய்! இதை செய்ததுகூட அமெரிக்கனல்ல.

    18 வருடத்துக்கு 12 லட்சமாம் அடப் போங்கய்யா நீங்களும் உங்க நீதியும்!

    ReplyDelete
  13. Anonymous6:18 PM

    eppodhum polave avaravar madhaththavarugalai avargal unarndhukolvadhumillai, unarappovadhum illai manidhanukku madham pidiththirukkindradhu nandri

    ReplyDelete
  14. //நிசாம் வழக்கம் உளற ஆரம்பித்து விட்டீர்கள். கேட்குற கேள்விய விட்டுவிட்டு மத்த எல்லா விடயமும் பேசுவீங்க.//அனானி சகோதரே பதிவு சம்பந்ததில்லா வந்தி எடுத்தது முதலில் நி. நான் எதுக்கு அந்த லிங்கு கொடுத்தேன் சவுதியை விட அமெரிக்கவில் 501 மடங்கு திருடன் அதிகமுன் அதாராத்தோட கொடுத்தேன்.

    //இந்திய பணிப்பெண்ணை 3 வருடம் சம்பளம் தராமல் நியூயார்க்கில் வேலை வாங்கிய இந்திய அதிகாரிக்கு அமெரிக்க கோர்ட் விதித்த அபராதம் 15 லட்ச டாலர்கள் அதாவது 7,86,60,000 ருபாய் ஏறக்குறைய 8 கோடி ருபாய்! இதை செய்ததுகூட அமெரிக்கனல்ல.//அடேய்அப்பா இவ்வளவு தொகையா அவன் கொடுத்தங்காரதுக்கு எதாவு லிங்கு இருந்தா கொடுங்க அனானி சகோதரே, அப்போ அமெரிக்கவிலும் பெரிய பெரிய திருடன் இருக்கறான் நி ஏத்துக்கறா. அமெரிக்கவில் 371,800 இவ்வளவு திருடனு இந்தியனை ஏமத்திட்ருக்கனுகா,

    //இந்திய அதிகாரிக்கு அமெரிக்க கோர்ட் விதித்த அபராதம் 15 லட்ச டாலர்கள்// நி கொடுத்த வார்த்தையில் அங்கேயேயும் இந்தியனுக்கு சட்டமெல்லாம், அமெரிக்கனுக்கு இல்லை.

    ReplyDelete
  15. Anonymous3:16 PM

    நிசாம் பாய், ரொம்ப ஆத்திரம் அடைந்துவிட்டீர்கள். இப்போது உமக்கு தேவை லிங்க் அல்ல. ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும்தான். உமது தொழுகைக்கு பின் இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் வழங்கினால் அமைதியான மனத்துடன் கூக்கிளிட்டு பாருங்கள். சலாம் அலைக்கும்!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)