Saturday, April 28, 2012

மதுரை ஆதீனமாக சுவாமி நித்தியானந்தா!

மதுரை ஆதீனமாக சுவாமி நித்தியானந்தா!

பெங்களூரு: திருஞானசம்பந்தர் தோற்றுவித்த, 1,500 ஆண்டு பழமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின், 293வது குரு மகா சன்னிதானமாக, சாமியார் நித்யானந்தா முடிசூட்டப்பட்டார். இதை, நடிகை ரஞ்சிதா முதல் வரிசையிலிருந்து பார்த்து ரசித்தார். பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஆரவாரம் செய்தனர்.

292வது மதுரை ஆதீனமாக, சீர்காழியின் அருணகிரிநாதர் ஞானதேசிக பரமஹம்சர் 1975ல் நியமிக்கப்பட்டார். தற்போது 293வது மதுரை ஆதீனமாக, நித்யானந்தாவுக்கு குரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில், தற்போதைய மதுரை ஆதீனம், நித்யானந்தாவிடம் செங்கோல் கொடுத்து, மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு என்று அறிவித்து, வெள்ளை பேப்பரில் கையெழுத்திட்டு கொடுத்தார். இருவரும் தங்கக் கிரீடத்துடன் காட்சியளித்தனர். பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். நடிகை ரஞ்சிதா, புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார்.



மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது: மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார். நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.

பல கோடிக்கு சொத்து: மதுரை ஆதீனத்துக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதை பாதுகாத்து, ஆதீனத்தை வளர்க்க, நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை. அவர் புனிதமானவர். பணத்தால் எதையும் பெற்று விடலாம்; பக்குவப் பட்ட மனிதனை வாங்க முடியாது. மதுரை ஆதீனத்தை சர்வதேச மையமாக அவர் மாற்றுவார். விரைவில் அவருக்கு பட்டமளிப்பு விழா நடக்கும். கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வயதில்லை: நித்யானந்தா கூறியதாவது: தற்போதைய மதுரை ஆதீனத்தின் பதவிக் காலம் கூட என் வயதில்லை. நான் பிறந்தது, 1978ம் ஆண்டு தான். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான பல கட்டடங்களை, அவர் தான் உருவாக்கினார். மதுரை ஆதீனம், அகில உலக ஆன்மிக இயக்கமாக தரம் உயர்த்தப்படும். முதல் கட்டமாக, 1 கோடி ரூபாய் வழங்குகிறேன். ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களை புனரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும். ஜூன் 5ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ள குரு பூஜையில் சன்னிதானத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க கிரீடம், தங்க செங்கோல் வழங்கப்படும், மதுரை ஆதீனத்தில், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். விரைவில் மருத்துவக் கல்லூரி துவக்கப்படும். மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு தடை வந்தால் தகர்ப்பேன் என்றார்.
-தின மலர்
27-04-2012

ஒரு நல்ல மனிதரை ஆதீனமாக நியமிக்க சிவ பெருமானே கனவில் வந்து சொன்னதன் பேரில் இன்று புயலென புறப்பட்டு மதுரை ஆதீனமாக பொறுப்பேற்ற சுவாமி நித்யானந்தா அவர்களை தமிழர்கள் என்ற முறையில் வரவேற்போம். கூடுதலாக கலைச் சேவை செய்து வரும் ரஞ்சிதாவும் பக்க பலமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் இனி ஆன்மீகம் தழைத்தோங்கும். எத்தனை பெரியார்கள் வந்தாலும் தமிழகத்தில் ஆன்மீகத்தின் வாயிலை அடைக்க முடியாது என்பதற்கு உதாரணமாக சுவாமி நித்தயானந்தா திகழ்கிறார்.

சார்வாகன், இப்னு ஷகீர், நரேன், கோவி கண்ணன், தருமி, தங்கமணி, ராவணன், போன்ற இந்து மத ஆர்வலர்கள் இனி கவலைப் பட வேண்டாம். இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் மதம் மாறிய அனைத்து இந்துக்களையும் சுவாமி நித்யானந்தா அவர்கள் தனது சொற்பொழிவால் தாய் மதத்துக்கே திரும்ப அழைத்து வந்து விடுவார். ரஞ்சிதா பாயிண்டுகளை எடுத்துக் கொடுக்க கூடவே இருப்பதால் இனி ஒரு கவலையும்பட தேவையில்லை. 'சொர்க்கத்து கன்னிகள்', 'கில்மான்கள்' என்றெல்லாம் இணைய இஸ்லாமிஸ்டுகளை தருமி போன்றவர்கள் இனி வம்புக்கு இழுக்கத் தேவையில்லை. அந்த காரியத்தையும் சுவாமி நித்தயானந்தா அவர்களே பார்த்துக் கொள்வார்.

இனி உலகம் முழுவதும் நித்யானந்தா தனது கிளைகளை பரப்பி இஸ்லாத்தின் வளர்ச்சியை ஓரளவு தடுத்து விடுவார். புராதன மதத்தின் பெருமை இனி உலகமெங்கும் பரவும். தமிழனின் பெருமை இனி தரணி எங்கும் பரவும்.



'தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!' என்று தமிழர்கள் தங்கள் காலர்களை இனி தூக்கி விட்டுக் கொள்ளலாம்.





56 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் சகோ... சுவனப்பிரியன் :)
    ///மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது: மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார். நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.//// ஹா ஹா ஹா ஹா :)

    ReplyDelete
  2. தேவநாதன்னு ஒருத்தர் இருந்தாரே அவரையும் அசிஸ்டெண்டா வச்சிகிட்டா இன்னும் நல்லா இருக்குமே :-)

    ReplyDelete
  3. திருச்சி அரியலூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற சகோதரர் கடந்த 14.04.2012 அன்று ரியாத் மண்டலத்தை தொடர்பு கொண்டு, தனக்கு அவசரமாக 4 யூனிட் இரத்தம் தேவைப்படுவதாக கூற, உடனடியாக மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் மூலமாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருடைய உடல் நிலை மற்றும் மருத்துவமனை ஆவணங்களை சரிபார்த்து, கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி இரத்த வங்கி மூலமாக 4 யூனிட்டுகள் வழங்கப்பட்டது,


    தம்மாமில் உள்ள அல் மர்கான் என்ற கம்பெனியில் கனரக வாகன ஓட்டியாக பணிபுரிபவர், அதிக வேலைப்பளு காரணமாக சரியாக ஓய்வெடுக்காமலும் அதிக ஓவர் டைம் செய்ததாலும் அவரது உடலில் இரத்தத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. ரியாத் TNTJ வின் இந்த உதவிக்கு ராமகிருஷ்ணன் அவர்கள் மனதார நன்றி தெரிவித்தது குறிப்பி்டதக்கது.


    http://www.tntj.net/83810.html

    ReplyDelete
  4. சலாம் சகோ ஷர்மிளா ஹமீத்!

    ///மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது: மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார். நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.//// ஹா ஹா ஹா ஹா :) //

    எந்த நேரமும் சிரித்துக் கொண்டே இருந்தால் மனிதனின் ஆயுள் கூடும் என்பது மருத்துவர்களின் பரிந்துரை.

    எனவே வாய்விட்டு சிரிப்போம்: நோய் விட்டுப் போகும். :-)

    ReplyDelete
  5. சகோ ஜெய்லானி!

    //தேவநாதன்னு ஒருத்தர் இருந்தாரே அவரையும் அசிஸ்டெண்டா வச்சிகிட்டா இன்னும் நல்லா இருக்குமே :-)//

    ஆன்மீக பணி ஆற்றுவதற்கு தேவநாதனின் உதவி தேவைப்பட்டால் சுவாமி நித்தியானந்தா அவர்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்வார். ஆலோசனைக்கு நன்றி.

    ReplyDelete
  6. யார் தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் உங்கள் தைரியமும் நேர்மையும் எனக்குப் பிடிக்கும்.

    இந்து மத சூத்திர சாமியாரை கண்டிக்கும் உங்களுக்கு சூத்திரர் அல்லாத சாமியார்களை கண்டிக்கும் நேர்மையும், அந்த நேர்மையை தாங்கிப் பிடிக்கும் தைரியமும் உண்டு என்று நம்புகிறேன்.

    அதை செய்யாவிடில் நீங்களும் ஒரு கோழை மற்றும் சந்தர்ப்பவாதி என்றும், ஊருக்கு இளைத்த சூத்திர சாமியார்கள் கிட்டதான் உங்க வீரத்தைக் காட்டமுடியும் என்றும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

    தைரியம் இருந்தால் அங்கன வேலையை காட்டுங்கள். தொலைத்து விடுவார்கள் உங்களை.

    பின்குறிப்பு:தவறுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை எல்லோரும் நிரபரதிகளே!

    ReplyDelete
  7. ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
    இப்படியுமா காசு ஆசைக்கு
    ஆன்மிகம் அடி வருடி பணியும்..?

    "முஸ்லிம் என்று சொன்னேன்டா...
    தலை நிமிர்ந்து நின்றேனடா..."

    அல்ஹம்துலில்லாஹ்...!

    ReplyDelete
  8. வணக்கம் சகோ!

    கல்க்கல் பதிவு.அரசியலிலும்,ஆன்மீகத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.அப்படி இருந்தால்தான் அரசியல்ல் ஆன்மீகம்.

    இரண்டிலும் குற்றம் சாட்டப்படுபவர்கள்&அவர்களின் ஆதரவாளர்கள் இரு விடயங்களை செய்வார்கள்.

    1. குற்றச் சாட்டை முழுப் பூசணிக்காயை சோர்றில் மறைப்பது போல் ஆதாரம் இல்லை என மறு(றை)க்கலாம்.[நித்தி இதைத்தான் இப்போது செய்கிறார்]

    இது ஒருவேளை முடியவில்லை எனில்

    2. அதன் காரண காரியங்களை எப்ப்டியாவது நியாயப் படுத்தி விடவேண்டும்.மக்கள் எதையும் நம்புவார்கள்.நம்பிக்கைதானே ஆன்மீகம்.

    நித்தியின் மதுரை ஆதின ப‌தவி தவிர்க்ககப் பட்டு இருக்கலாம்.எனினும் இன்னும் நித்தியின் அல்லது எந்த ஆன்மீக குருவின் பின்னால் சென்றால் வரும் விளைவுகளுக்கு நம்பிக்கையாளர்களே பொறுப்பு.

    சகோதர, சகோதரிகளே எச்சரிக்கையாக இருங்கள்!

    யார் செய்தாலும் தவறினை தவறு என கூறும் மனம் நமக்கு உண்டு.நியாயப் படுத்த மாட்டோம்.

    நகைச்சுவையாக குறிபிட்டால் இது "நான் அவன் இல்லை பகுதி 3"
    அவ்வளவுதான்.எனினும் எச்சரிக்கை பதிவுக்கு நன்றி.

    நம்மை இந்து மத ஆர்வலர் என்பதை விட மக்கள் ஆர்வலன் என்று குறிப்பிட்டு இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன்.

    நம் பெயரை முதலில் குறிப்பிட்டு இருப்பதால் நம் மீதுள்ள அன்பு புரிகிறது.


    மிக்க நன்றி

    ReplyDelete
  9. Anonymous6:04 AM

    kali muthiduthu....

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  10. Anonymous6:21 AM

    இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார். ஸ்வாமிஜிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ங்கோத்தா


    *

    'ங்கோத்தா' என்றெழுத‌
    இங்கிதம் தடுக்கிறது -

    என் பாட்டனுக்கு எவனும்
    எழுதப் பழக்கவில்லை;

    என் அப்பனுக்கு எவனும்
    இங்கிதம் பழக்கவில்லை;

    எனக்கு மட்டும் தான்
    எல்லா இழவும்.

    thanks to writercsk

    ReplyDelete
  12. சலாம் சகோ ஆஷிக்!

    //இப்படியுமா காசு ஆசைக்கு
    ஆன்மிகம் அடி வருடி பணியும்..?

    "முஸ்லிம் என்று சொன்னேன்டா...
    தலை நிமிர்ந்து நின்றேனடா..."

    அல்ஹம்துலில்லாஹ்...!//

    முற்றிலுமாக வழி மொழிகிறேன். சில தலைமுறைகளுக்கு முன்னால் இஸ்லாத்தை வாழ்வியலாக தேர்ந்தெடுத்த நம் முன்னோர்களை நினைத்து கண்கள் ஆனந்தத்தால் பனித்து விட்டது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  13. சலாம் சகோ சார்வாகன்!

    //நித்தியின் மதுரை ஆதின ப‌தவி தவிர்க்ககப் பட்டு இருக்கலாம்.எனினும் இன்னும் நித்தியின் அல்லது எந்த ஆன்மீக குருவின் பின்னால் சென்றால் வரும் விளைவுகளுக்கு நம்பிக்கையாளர்களே பொறுப்பு.

    சகோதர, சகோதரிகளே எச்சரிக்கையாக இருங்கள்!

    யார் செய்தாலும் தவறினை தவறு என கூறும் மனம் நமக்கு உண்டு.நியாயப் படுத்த மாட்டோம்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. சகோ நம்பள்கி!

    //இந்து மத சூத்திர சாமியாரை கண்டிக்கும் உங்களுக்கு சூத்திரர் அல்லாத சாமியார்களை கண்டிக்கும் நேர்மையும், அந்த நேர்மையை தாங்கிப் பிடிக்கும் தைரியமும் உண்டு என்று நம்புகிறேன்.

    அதை செய்யாவிடில் நீங்களும் ஒரு கோழை மற்றும் சந்தர்ப்பவாதி என்றும், ஊருக்கு இளைத்த சூத்திர சாமியார்கள் கிட்டதான் உங்க வீரத்தைக் காட்டமுடியும் என்றும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

    தைரியம் இருந்தால் அங்கன வேலையை காட்டுங்கள். தொலைத்து விடுவார்கள் உங்களை.//

    ஆன்மீகத்தின் பெயரால் மக்களை சுரண்டுபவர்கள் முஸ்லிமாக இருந்தாலும், கிறித்தவராக இருந்தாலும், சூத்திரராக இருந்தாலும், பிராமணராக இருந்தாலும் சுட்டிக் காட்டுவதில் என்றுமே பின் வாங்கியதில்லை. பழைய பதிவுகளை படித்து பார்த்தாலே உங்களுக்கு விளங்கும்.

    //பின்குறிப்பு:தவறுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை எல்லோரும் நிரபரதிகளே!//

    இன்னுமா நிரூபிக்கப்படவில்லை. :-)

    ReplyDelete
  15. அஸ்ஸலாம் அலைக்கும்.... சகோஸ்,
    இந்த மதுரை ஆதினம் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சின்ன பையனை காட்டி இவர் தான் என் அடுத்த வாரிசு என்று சொன்னார் பிறகு சில நாட்களுக்குள்ளேயே ஏதோ கசமுசா ஆகி அந்த பையனை ரிஜெக்ட் செய்துவிட்டார், இப்ப " கதவை திற, காற்று (ரஞ்சிதா) வரட்டும் " புகழ்
    நித்தியை ஏதோ ஒரு உணர்ச்சி வசத்தால் செலக்ட் செய்து இருக்கீறார் ..
    ம்...பார்க்கலாம் நித்தியின் ஆயுளை ...!!!!
    இவங்க லூட்டி ஒரே தமாசா கீது சகோஸ்.......
    இந்த நேரத்துல " முனியாண்டி " புகழ் ராவணன் அவர்கள், எங்கே ஆளையே
    காணோமே ...!!! GREAT ESCAPE...???

    ReplyDelete
  16. சலாம் சகோ நாசர்!

    //இந்த நேரத்துல " முனியாண்டி " புகழ் ராவணன் அவர்கள், எங்கே ஆளையே
    காணோமே ...!!! GREAT ESCAPE...???//

    பதிவுக்கு எப்படி சமாளித்து பின்னூட்டம் இடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார். கொஞ்சம் பொறுங்க. :-)

    ReplyDelete
  17. சகோ நவநீத கிருஷ்ணன்!

    //என் பாட்டனுக்கு எவனும்
    எழுதப் பழக்கவில்லை;

    என் அப்பனுக்கு எவனும்
    இங்கிதம் பழக்கவில்லை;

    எனக்கு மட்டும் தான்
    எல்லா இழவும்.//

    உங்களின் ஆதங்கமும் ஆற்றாமையும் எனக்கு நன்றாக விளங்குகிறது சகோ. இந்த தீமையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தவற விட்டால் சமூகம் கெடுவதற்கு நாமே காரணமாகி விடுவோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  18. Anonymous7:04 AM

    நம்பள்கி,

    உயர்குலமெனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஞானசூனியங்களின் பெயர்களைத் தாருமே. எவரும் எம்மை ஒன்றும் செய்ய இயலாது. யாம் ஏற்கனவே ராஜீவுக்கே ஆப்பு வைத்தவர்களையே (அதான, குண்டு வைத்தவர்களையே) ஆதரிக்கும் தமிழக அரசின் பக்கத்திலிருப்பதால், எவரும் எம்மிடம் வாலாட்ட முடியாது.

    ReplyDelete
  19. Anonymous7:47 AM

    sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
    2012-04-28 11:50:46 IST Report Abuse

    அருணகிரியார் பதவி விலகவேண்டிய அவசியம் ஏன் வந்தது? அவர் மடாதிபதியாகவும் திமுக அனுதாபியாகவும் இருக்குமிடம் அவருக்கு ரொம்பவும் அனுகூலமாகத்தானே இருக்கிறது. ஒருவேளை சகோதர யுத்தத்தில் இவரும் பலிகடா ஆகிவிட்டாரோ? ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ஆனால் என்ன நடந்தது என்று புரியவில்லை.

    ---------------------------


    Puthiyavan Raj - New Delhi ,இந்தியா
    2012-04-28 15:48:54 IST Report Abuse

    குறுந்தகடு மூலம் மதிப்பும் மரியாதையையும் இழந்து காவல்துறைக்கு பயந்து ஓடி ஒளிந்து திரும்பி வந்த நித்தியானந்தாவை நேர்காணல் மூலம் பெருமைப்படுத்தியது ஜெயா தொலைக்காட்சி தான்....

    ---------------------------


    thumilan - singapore,சிங்கப்பூர்
    2012-04-28 11:50:22 IST Report Abuse

    ஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்ட ஆதீனம் இன்று ஞான சுனியன்களால் உருக்குலைகிறது . மக்கள் விழித்தால் நலம் பெரும் . மற்ற அதீனகர்தர்கள் கனவில் சிவபெருமான் வரவில்லையா...

    -----------------------------

    anwarhalwani - thiruvaarur,இந்தியா
    2012-04-28 11:27:31 IST Report Abuse

    படிக்க படிக்க என்னால் நம்பவே முடியவில்லை.. போட்டோவை நன்கு உற்றுப்பார்க்கிறேன்.. நித்தியானந்தா என்று வேறு யாரும் நல்ல சாமியார்கள் இருக்கிறார்களா என்று..? அட இறைவா.... இந்துமதத்தை வளர்ப்பதற்காகவும், ஏழைகள் ஒருவேளை அன்னம் உண்ணவும், அப்பர் திரு ஞானசம்பந்த முனிவரால் வழி நடத்தப்பட்ட இந்த ஆதீனத்திற்கு சீர்காழி பெரியவரும், அவரை தொடர்ந்து நித்தியானந்தாவும் பீடத்துக்கு தலைமை பதவி வகித்து அதனை அலங்கரிக்க போகிறார்கள் என்று நினைக்கும் போது,,, நெஞ்சம் பொறுக்கிதில்லை இந்த நிலைகெட்ட முனிவரை நினைத்துவிட்டால்..

    ------------------------

    Sak Raja - wembley,யுனைடெட் கிங்டம்
    2012-04-28 18:13:39 IST Report Abuse

    சரியா சொன்னீங்க அம்மணி... எல்லாம் படைக்கும் வல்லமை உள்ள கடவுளுக்கு பணம் எதற்கு கிரீடம் எதற்கு நடனம் எதற்கு? இவர்கள் சாமியே லஞ்சம் வாங்கும் , தேவைகள் உள்ள, மனிதக்குறைபாடுகள் உள்ளதாக பார்ப்பதால் தான் இந்த இடைத்தரகர்கள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்.. அகிலத்தையும் படைத்த இறைவனுக்கு நம் உதவியோ, நம் பொருள்களோ தேவை இல்லை.. எதுவுமே இல்லாத நிலையில் இருந்து கருவாக உருவாகி மீண்டும் எதுவுமே இல்லாமல் மண்ணோடு மண்ணாகிப்போகும் மனிதர்களின் பாதுகாப்பா இறைவனுக்கு தேவை?...

    -Dinamalar comments

    ReplyDelete
  20. //இந்த நேரத்துல " முனியாண்டி " புகழ் ராவணன் அவர்கள், எங்கே ஆளையே
    காணோமே ...!!! GREAT ESCAPE...???//

    பதிவுக்கு எப்படி சமாளித்து பின்னூட்டம் இடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார். கொஞ்சம் பொறுங்க. :-) ////

    பதிவுகளுக்காக வாழ்பவன் நான் இல்லை.

    ரம்ஜான் மாதத்தில் மட்டும் நோன்பு இருக்கும் உங்களுக்கு எதுவும் தெரியாது.

    எந்த இறைவனையும் எந்த மதத்தையும் எந்த மார்க்கத்தையும் தூக்கிப் பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

    அப்ப முனியாண்டி சாமி...? என்ற கேள்வி வரும்?

    முனியாண்டி சாமி என்னைப் படைத்தார்...முனியாண்டி சாமியை நான் படைத்தேன். இதில் எந்த முரணும் இல்லை.

    ஏக இறைவன் என்று மந்தையில் வெளிக்குப் போக எனக்குத் தெரியாது.

    ReplyDelete
  21. //இந்த நேரத்துல " முனியாண்டி " புகழ் ராவணன் அவர்கள், எங்கே ஆளையே
    காணோமே ...!!! GREAT ESCAPE...???//

    பதிவுக்கு எப்படி சமாளித்து பின்னூட்டம் இடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார். கொஞ்சம் பொறுங்க. :-)///

    நான் வெட்டியாய் பதிவுகள் படித்துக்கொண்டு இருப்பதாக எண்ணமா?

    இரவு 10 மணிக்கு மேல்தான் பதிவுகள் பக்கம் வருவேன். அதுவும் குறைந்த நேரம் மட்டுமே.

    என்னைவிட சிறந்த ஒரு ஏக இறைவன் இருப்பான் என்று நினைக்க முடியவில்லை.

    நாஸர் போன்று நாசமாய் போனவன் இல்லை.

    என் பிளாக் பக்கம் உங்களில் யாராவது வந்து கருத்து கூறமுடியுமா?

    ReplyDelete
  22. Anonymous7:57 AM

    T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
    2012-04-28 10:44:19 IST Report Abuse

    T.G.BALASUBRAMANIAN., AUSTRALIA. இன்று இந்து மதம் என்று சொல்லப் படுவது ஒரு காலத்தில் திராவிட நாகரிகமாக இருந்தது. அதுவே காலப்போக்கில் மருவி இந்து மதம் என்று அழைக்கப் படுகிறது. கல்வி வேறு, பள்ளிகள் வேறு என்பதுபோல இந்துமதம் வேறு, மடங்கள் வேறு. இரெண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். இன்றைய அனைத்து உலக மதங்களுக்கும் வழிகாட்டி இந்துமதம்தான். அம்மதத்தை பயன்படுத்துபவர்கள்தான் நாம். பள்ளிகளும், சில ஆசிரியர்களும் தவறு செய்வதுபோல அங்காங்கே மதவாதிகளும் தவறு செய்திருக்கலாம். அதற்காக மதத்தை குறை சொல்லத் தேவையில்லை. &39கண்ணால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய்&39 என்ற பழமொழியை மறந்துவிட்டு வாய்க்கு வந்தபடி பேசுவதோ எழுதுவதோ கூடாது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை.உண்மை தெரியும்வரை பொறுத்திருப்போம்.

    -------------------------------

    Raja Ratnagiri - Chennai,இந்தியா
    2012-04-28 13:48:54 IST Report Abuse

    தமிழர்களுக்கு மதம் கிடையாது. இயற்க்கை தான் கடவுள். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கடவுள் என்பது தான் தமிழ் பண்பாடு. அதுதான் bigbang நிகழ்வு மூலம் அறிந்துள்ளனர்....

    ------------------------------


    anwarhalwani - thiruvaarur,இந்தியா
    2012-04-28 18:05:42 IST Report Abuse

    இந்து மதம் ஒரு போதும் திராவிட மதமாகாது... ஆரியர்களின் வழித்தோன்றல் மூலம் இறக்குமதியானவை. மருவவுமில்லை, உருவவுமில்லை... மடமும்,மதமும் ஒன்று தான்,, மதம் தான் மடங்களில் போதிக்கப்படுபவை.. கல்வியும், பள்ளியும் எங்கனம் வெவ்வேறாக முடியும்.. ? கருத்து என்ற பெயரில் பிதற்றல். இங்ஙனம் தீயவர்களை ஊக்குவிப்பதால் தான் குற்றவாளிகளுக்கு குளிர் விட்டு போகிறது.. ஒழுக்கம் கெட்டவர்களுக்கு உயர் பதவி கொடுப்பது சீர்கேட்டை சில்லறை கொடுத்து வாங்குவது போல்..உலக மதங்களுக்கு வழிகாட்டி இந்து மதமா? இந்துமத கோட்பாடு எந்த மதத்தில் கலந்திருக்கிறது.? மதத்தில் பிறந்தவரை, தவிர்த்து இதை யார் புதிதாக ஏற்றுக்கொண்டு வாழ் கிறார்கள்? உலகம் தோன்றியது முதல் இன்று வரை இம்மதம் எத்தனை சதவிகிதம் வளர்ந்திருக்கிறது..? மாறாக, இந்து மதம் அழிந்திருக்கிறது, அழிக்கப்பட்டிருக்கிறது, தனி மனித இச்சை களால் பாழ் படுத்தப்பட்டிருக்கிறது, சாமியார்களாலும்.. சந்நியாசிகளாலும் இந்துமதம் விடியா இருட்டில் தள்ளப்பட்டிருக்கிறது..சந்த்ரா சுவாமி, சங்கராச்சாரியார், பிரேமானந்தா சாமி, காஞ்சிபுரம் அர்ச்சகர், நித்தியா நந்தா, அருணகிரி நாதர்,போன்ற ஒழுக்க சீலர்களால், இந்து மதம் சீரழிக்கப்பட்டிருக்கிறது... இவர்கள் இந்து மதத்தை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்கள் ஆச்சாரியமாக அல்ல, அருவருப்பாக...

    ----------------------------

    Govindarajan.D - chennai,இந்தியா
    2012-04-28 10:14:17 IST Report Abuse

    திருநான சம்மந்தரின் ஆத்மா ஞான தேசிக பரமஹம்சரை ஒருபோதும் மன்னிக்காது இதைவிட இந்துமததுக்கு இழுக்கு ஒன்றும் இருக்க முடியாது ,

    -------------------------------


    S.K.SAMY - Vellore,இந்தியா
    2012-04-28 09:19:13 IST Report Abuse

    இந்த ஆதினங்கள் சைவ மதத்தையும் தமிழையும் ஒருங்கே போற்றி வளர்க சான்றோர்களால் உருவாக்கப்பட்டவை. எத்தனையோ நல்ல வரலாறுகள் உடையவை. இந்த நிகழ்வு அணைத்து மடங்களுக்கும் ஒரு தலைகுனிவை தர கூடியது. என்னை போன்று தேவாரம், திருமுறை இவற்றின் மீது நம்பிக்கையும் மரியாதையும் உண்டையவர்களுக்கு இது மிகவும் துயரம் தர கூடியதாக உள்ளது. வேதனையும் வெட்கமும் அளவிட முடியவில்லை. அந்த சிவபெருமான் தான் இவர்களுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும்.

    -Dinamalar comments

    ReplyDelete
  23. மதுரை ஆதீனமாக எந்த நாய் வந்தால் உங்களுக்கு என்ன?

    அரேபிய முகமதுவைவிட குறைந்தவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை.

    ReplyDelete
  24. நண்பர் சு.பி.

    தமிழரான உங்க ஆதங்கம் புரியுது. சரித்தரத்தை எடுத்து பார்த்தால் நம்ம நித்யானந்தா “சாமிகள்” மாதிரி மொல்லமாரிகள் பின்னாள் தான் முதலில் சில மக்கள் சென்று பிறகு பெருகி, ஏன் என்று கேள்வி எழுப்ப முடியாமல், நிலைத்து இருக்கிறார்கள்.

    நித்யானந்தா மீது சதி செய்து அவர் மீது சொல்லப்படும் அவதூறுகளை முறியடித்து இன்னும் வரும் சில நூற்றாண்டுகளில், அவர் சொன்னதுதான் உண்மை என்று அறிவியல் பூர்வமாக அவரை முன்மாதிரியா எடுக்கும் ரசிகர்களால் வெறியர்களால் நீருபிக்கப்படும. -:)LOL

    சரி விடுங்க அந்த மேட்டரே ஒரு காமெடி பீஸ்.

    ஆனாலும் நண்பரே நீங்கள் ஓன்றை தவறு குற்றம் என்று சொன்னால் அது தவறுதான் குற்றம்தான் பொய்யாகது அப்பீலே கிடையாது போங்க.

    என்னது நரேன் ஒரு இந்து மத ஆர்வலரா?? கொடுமை நான் இஸ்லாமிய ஆர்வலராக எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தில் பெட்ரோலை போட்டு கொலுத்தீட்டீங்களே. so sad. -:)

    ஆமாங்க அது யாருங்க இப்னு ஷாகீர்??

    ReplyDelete
  25. என்னையும் மனதில் வைத்து பதிவில் எழுதியதால் உங்கள் ஏக இறைவனைவிட உயர்ந்து நிற்கின்றேன்.

    தொடரட்டும் உங்கள் பணி..

    ReplyDelete
  26. Madurai adheenaththukkum ungalukkum ennadaa sammantham.... Vekkame illayaa ungalukku

    ReplyDelete
  27. Anonymous8:08 AM

    madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ

    இன்றைக்கு வந்த இந்த செய்தியில் அதிர்ச்சியைத் தெரிவிக்கும் பல ":ஆத்திக" "நண்பர்கள்" இவரைப் பற்றிய செய்திச் சுருள் தொலைக் காட்சியில் வெளியிடப்பட்ட போதும், அவைகளை "கிராபிக்ஸ்" என்று இந்த டுபாக்கூர் சாமியார் சொன்ன போதும், சொன்ன கருத்துக்களை அவர்கள் திரும்பப் படித்தால் அவர்கள் மல்லாக்கத் துப்பியது அவர்களின் மேலேயே இன்று விழுந்தது புரியும். ஆனால், இன்று நடப்பது என்ன ?? ஆபாசம் எங்கோ நடப்பது தானே என்று கண்ணை மூடிக் கொண்டு இருந்ததால், இன்று இவன் உங்களின் வீட்டு பூஜை அறைக்குள்ளேயே "பஜனை" செய்ய வந்து விட்டான்.. அம்பாளின் அருட்பால் சுவைத்து தேவாரம் அருளிய நால்வரில் இளையவர் ஞானசம்பந்தரால் தொடங்கப் பெற்ற சிறப்புடைய இந்த ஆதீனம்... இப்படி அருளில் க்ஷீணமடைந்து, பொருளில் பெருகி.. நடிகையுடன் காமத்துப்பால் பருகினவன் எல்லாம் ஆதீனத்தின் அருட் பீடத்தில் அமரும் அபாக்கியம் வர என்ன காரணம் ?? காஞ்சி மடாதிபதிகள் கொலைக் குற்றத்திற்காக அலைகிறார்கள்.. மதுரை ஆதீனம் காமக் களியாட்டாத்தில் திளைக்கிறார்... தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் காதில் பூவை வைத்துக் கொண்டு இவர்களின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுகிறார்கள்.. இது கட்டாயம் கலிகாலம் தான்..

    ReplyDelete
  28. இந்து மதத்தின் மிகச் சிறந்த ஒரு பண்பு அதன் சகிப்புத்தன்மை தான் ,
    இது போல எவ்வளவோ துவேஷங்களை இந்து மதம் எதிர்கொண்டுள்ளது.. ஆனால் இன்றளவும் அது வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.. யாரோ ஒரு தனி மனிதன் தவறு செய்வதனால் அவன் சார்ந்த ஒட்டுமொத்த சமுதாயமும் அதற்கு பொறுப்பு ஆகாது ,
    ஒரு பின்லாடன் விமான தாக்குதல் நடத்தியதால் அவனது சமுதாயமும் அதற்கு உடந்தை கூற முடியுமா ? நண்பரே பின்லாடன் மரணத்திற்கு வருந்தி தொழுகை நடத்தியவர்களும்
    தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் , நித்தியானந்தனைப் போல ஆசாமிகளை நம்பாதவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறோம் ..
    நமச்சிவாய வாழ்க , நாதன் தாழ் வாழ்க ...

    ReplyDelete
  29. திரு மௌன குரு!

    //Madurai adheenaththukkum ungalukkum ennadaa sammantham.... Vekkame illayaa ungalukku//

    நித்தியானந்தாவின் சீடரா நீங்கள். உங்களின் எழுத்தும் கோபமும் என்னை அப்படி நினைக்கச் சொல்கிறது.

    வெட்கமாக இருப்பதாலும் அதிலும் தமிழ் நாட்டில் ஒரு தமிழனாக பிறந்து விட்டதாலும்தான் எங்களின் வருத்தத்தை இப்படி பதிவில் கொட்டுகிறோம். உங்களைப் போன்று உள்ளவர்களால்தான் நித்தியானந்தா போன்றவர்களின் கல்லா நிரம்புகிறது.

    வாழ்க உமது பக்தி!:-)

    ReplyDelete
  30. சகோ நரேன்!

    //சரி விடுங்க அந்த மேட்டரே ஒரு காமெடி பீஸ்.//

    நானும் அவரை காமெடி பீஸ் என்றுதான் இதுவரை நினைத்து வந்தேன். ஆனால் காரியக்கார காமெடி பீஸ் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. யாரை கவனித்தால் பிரச்னைகளோ காவல் துறையின் தலையீடோ இருக்காது என்பதை எல்லாம் ஊகித்து அங்கெல்லாம் சரி செய்து இன்று மதுரை ஆதீனமாக கம்பீரமாக வீற்றிருக்கும் ஒருவர் உங்களுக்கு காமெடி பீஸாக தெரிகிறதா?

    //ஆமாங்க அது யாருங்க இப்னு ஷாகீர்??//

    அது உங்களுக்கும் சார்வாகனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அல்லவா!

    ReplyDelete
  31. சகோ நல்லவன்!

    //யாரோ ஒரு தனி மனிதன் தவறு செய்வதனால் அவன் சார்ந்த ஒட்டுமொத்த சமுதாயமும் அதற்கு பொறுப்பு ஆகாது ,//

    ஒரு அநியாயத்தை தெரிந்தே எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் எப்படி மக்களால் ஜீரணிக்க முடிகிறது என்பதுதான் இங்கு கேள்வி. வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்ப்பது அந்த தவறை அங்கீகரித்ததாகாதா!

    //ஒரு பின்லாடன் விமான தாக்குதல் நடத்தியதால் அவனது சமுதாயமும் அதற்கு உடந்தை கூற முடியுமா ?//

    அதை பின்லாடன்தான் நிகழ்த்தினார் என்பதை அமெரிக்காவால் இன்று வரை நிரூபிக்க முடியவில்லை நண்பரே! அமெரிக்க உளவு நிறுவனத்தின் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய வெடிப்பை தாலிபான்களாலோ பின்லாடனாலோ நிகழ்த்தியிருக்க முடியாது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அப்பாவி மக்களை கொல்பவர் எவ்வாறு குர்ஆனின் கட்டளையை கடைபிடித்தவராக முடியும்?

    ReplyDelete
  32. மதுரை ஆதீனம் ஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது என்று "சொல்லப்படுகிறது." இது வடிகட்டின பொய். இடைச்செருகல் செய்வது இப்படித்தான். ஒரே பொய்யை திரும்ப சொன்னால் கடைசியில் அது உண்மை ஆகி விடும்.

    மதுரை ஆதீனம் ஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது அல்ல. அவர் ஒரு பிராமணர். அப்படி அவர் துவங்கி இருந்தால், அந்த இடத்திற்கு ஒரு பிராமணர் தான் வர முடியும்....

    எக்காலத்திலேயும் அருணகிரிநாதர் அல்லது நித்யானந்தா மாதிரி சூத்திர சாமியார்கள் வர முடியாது. வரவே முடியாது. இந்த உண்மை எல்லா சரித்திர ஆராய்ச்சியாளர்ரகளுக்கும் தெரியும்.

    ஆகவே மதுரை ஆதீனம் ஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது என்று கூறுவது பொய் தான்.

    ReplyDelete
  33. Anonymous9:54 AM

    Anbu Daas - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
    2012-04-28 18:03:31 IST Report Abuse

    இந்த நூற்றாண்டில் நாம் இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்டு இருப்போம் என்றால் இந்தியா வளர இன்னும் பல நூறு ஆண்டுகள் இருக்கு நாம் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். உண்மையான சாமியார் என்றால் முற்றிலும் துறந்து துறவறம் போக வேண்டும் ஆனால் இது போன்ற போலி சாமியார்களை நம்பி இருக்கும் பக்தர்கள் தான் தங்கள் சொத்துக்களை எல்லாம் இவர்களிடம் விட்டுவிட்டு துறவறம் போக வேண்டி இருக்கு இவர்கள் தங்க சிம்ம சனத்தில் அமருந்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க இவர்கள் உபயோகிப்பது மதத்தை. இந்து மதம் சற்று கடினமாக இதுபோன்ற போலிகளுக்கு எதிராக எந்தொரு இந்துசட்டதையும் போதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

    ----------------------------

    Zillabad - Madurai,இந்தியா
    2012-04-28 16:54:20 IST Report Abuse
    சபாஷ் இந்த நாட்டில் காமக்கொடுரனுக்கு இப்படி ஒரு விழா நடத்தி அவருக்கு இப்படி ஒரு பாராட்டு இந்த உலகத்துக்கே தெரியும் இந்த காம கொடுரனை இருந்தும் வெக்கமாக இருக்கிறது இவர்கள் இப்படி செய்யும்போது . இந்த நித்யானந்த சாமி தன்னுடைய காம லீலைகளுக்கு பெண்களை அழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அதை யாராவது படம் எடுத்து காண்பித்தால் இது ஜோடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள் ஆனால் இந்த வீடியோ பரிசீலனைக்காக அனுப்பட்டும் இதில் இருக்கும் வீடியோ பதிவு உண்மை என்றும் சொல்லியும் இந்த மக்கள் இன்னும் இந்த காம கொடுரனை பார்க்க போகின்றனர் அவரிடம் ஆசி பெறுகின்றனர் இப்படி செய்யும் போது இந்த காமகொடூரன் இன்னும் தன்னுடைய காம லீலைகளை துரிதமாக செய்து கொண்டு இருக்கிறான் இவனை சட்டமும் தண்டிக்காது மக்கள் நீங்கள் தான் புரிந்து இவனுக்கு சரியான தண்டனை கொடுத்து இவனை அடித்து விரட்டுங்கள் இந்த காம கொடூரனை ....--------------------

    செல்வன் - Kolkatta,இந்தியா
    2012-04-28 01:09:24 IST Report Abuse

    இவர்களால் ஆன்மிகம் வளர்க்கிற மாதிரி தெரியவில்லை..அந்த காலத்தில் புன்னியவண்களால் உருவாக்கப்பட்ட இந்த மடம், சமுதாயத்தில் நலிவடைந்தவர்களுக்கு உதவி அவர்களை ஆன்மிகத்தில், மனஉறுதியில், அவர்களில் வாழ்வில் முன்னேற்றம் அடைய செய்வதற்காகவே..இவர்கள் பாதை மாறிவிட்டார்கள்..இவர்கள் கவனிக்க தவறியதால்,போலி சாமியார்கள் பெருகி, மக்களிடம் ஆன்மிக விழிப்புணர்ச்சி குறைந்து, தடுமாறுகிறார்கள்,அவர்களும் பாதை மாறுகிறார்கள்..

    --------------------------------

    Govind - Delhi,இந்தியா
    2012-04-28 00:56:58 IST Report Abuse
    நான் முதலில் இதை பார்த்தவுடன் ஏதோ தரணி செட்டிங் மாதிரி இருக்கு என்று நினைத்து கொண்டேன். பிறகு படித்ததும் இந்த நித்யானந்தா மதுரை ஆதீனத்தை பெண்கள் விஷயத்தில் சம்பந்தபடுத்தி மிரட்டி வருவதாகவே எனக்கு படுகிறது. ரஞ்சிதமும் இந்த மிரட்டலுக்கு உடந்தை என்றே எனக்கு படுகிறது. தேவராம் புகழ் பாடும் குடும்பத்தில் வரும் என்னை போன்றவர்களுக்கு இது மிகவும் வேதனை தரும் ஒரு விஷயம்.

    இந்து மதம் கொடுத்துள்ள ஒரு சுதந்திரத்தை எப்படி எல்லாம் தவறாக பயன்படுத்தலாம் என்பதை இந்த உதவாகரைகளை தெரிந்து கொள்ளலாம். மதுரை ஆதினத்தை செருப்பால் அடித்தால் என்ன தப்பு ? திருஞான சம்பந்தம் வளர்த்த இந்த ஆதீனத்தில் இந்த உருபடாத உதவாக்கரைகள் புகுந்து கொண்டு கொட்டம் அடிப்பதை பார்த்தால் வேதனை தான் ஏற்படுகிறது. இவர்கள் அரசியல்வாதிகளை விட மோசம். சைவ சித்தாந்தத்தை கேவலபடுத்தும் செயல். இதை அத்தனை இந்துக்களும் வேடிக்கை பார்ப்பது மகா மட்டரகமான செயல். இந்த ரெண்டு பேரின் சுயரூபம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. ரஞ்சிதா போன்ற பெண்களை கொண்டு கூத்தடித்து கொண்டு இருக்கும் இந்த சாமியார்களை தூக்கில் போட்டாலும் தப்பில்லை.

    ---------------------------------

    S.Kumar - New Delhi,இந்தியா
    2012-04-28 00:39:05 IST Report Abuse
    அட பாவிகளா... ஞானசம்பந்த பெருமான் தோற்றுவித்த ஒரு பாரம்பரியமிக்க மடத்துல ஒரு பன்னாடைய உட்கார வச்சி தீராத களங்கத்தை ஏற்படுத்தி.... ஒரு பெரிய வரலாற்று பிழையை ஏற்படுத்திவிட்டீர்களே... எனகென்னமோ... இந்த பழைய குரு மகா சன்னிதானத்து மேலேயே சந்தேகம்தான் இருக்கு... அதுவும் பல விஷயங்களில அடிபட்டதுதானே... எப்டியோ மதுரை ஆதீனத்தின் மகிமையையும் கெடுத்து விட்டீர்கள்.... இந்த பன்னாடையை விட்ட வேற ஆளே இல்லையாமாம்.... என்னடா கலர் கலரா சுத்துரிங்க... இத சிவபெருமானே வந்து சொன்னராமா.... இவன் CD கைலாயம் வரை போய்டுச்சி போல.... பொண்ணுங்கலாம் ஆடுச்சாமா இவரும் சேர்ந்து ஆடினாராம்... நல்ல இருக்குடா உங்க கதை....
    -----------------------
    -Dinamalar comments

    ReplyDelete
  34. நண்பர் சு.பி.

    தெளிவு படுத்தியதற்கு நன்றி. எதையா???

    பின்லேடன் மீதுள்ள குற்றம் நிரூபிக்கபடவில்லை என்பதையும் நித்யானந்தா மீதுள்ள குற்றம் நிரூபிக்கபட்டுள்ளது என்பதையும். -:)

    இப்னு ஷாகிர் யாரென்று இரகசியம் உண்மையாக எனக்கு தெரியாது. seriously.

    நன்றி

    ReplyDelete
  35. Anonymous9:59 AM

    madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ
    2012-04-28 02:50:07 IST Report Abuse

    சில தவறுகள்... - ஒன்று இந்த கேடு கெட்ட கேடிகள் ஆன்மீகம் காக்க வந்த சாமியார்கள் அல்ல.. இரண்டு, உங்களின் நன்கொடையை நம்பி இவர்களும், இவர்களுடைய ஆதீனமும் இல்லை.. மதுரை ஆதீனத்திற்கு பலப்பல பல்லாயிரம் கோடி பெறுமான சொத்துக்கள் பலவேறு விதங்களில் உள்ளன.. நீங்கள் போடும் நன்கொடை அந்த "சாமியார்"களுக்கு வயாகரா வாங்கக் கூட பத்தாது.. கலிகாலம் பாத்தீங்களா.. கல்வியும், கடவுளும் காசுக்கு அடிமையாகி விட்டதை.. இனி அந்த மதுரை ஆதீனத்தை சாட்சாத் சிவபெருமானால் கூட காப்பாத்த முடியாது.....

    --------------------------


    Krishnan - Chennai,இந்தியா
    2012-04-28 10:04:21 IST Report Abuse
    இறைவன் இந்த உலகிற்கு கொடுத்த எத்தனையோ புனிதநூல்களை போற்றியும் பாதுகாத்தும் வைத்திருக்கும் இந்து மதத்திற்கு இப்படி ஒரு சோதனையா

    -----------------------------


    A R Parthasarathy - Chennai,இந்தியா
    2012-04-28 15:49:58 IST Report Abuse
    மொத்தமாக இந்து மதத்திற்கு வந்தசொதனை என்று என் சொல்கிறீர்கள்? இந்து மதத்தின் ஒரு கிளைதான் சைவம். அந்த சைவத்திலும் எத்தனையோ சித்தாந்தங்கள் ஆதீனங்கள். அதில் ஒன்று தான் மதுரை ஆதீனம். அவர்களை வழிநடத்த தலைமையை அவர்கள் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். அதில் கருத்து சொல்ல நமக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தவறு நடந்ததால் பிறகு கருத்து சொல்ல நமது மூக்கை நுழைக்கலாம். அதுவரை அமைதி காப்பதே உத்தமம்....

    ----------------------------

    D SRINIVASAN - chennai,இந்தியா
    2012-04-28 19:24:06 IST Report Abuse
    நமது வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களுக்கு வேண்டமானால் நீங்கள் சொல்வது மாதிரி அதிகாரம் இல்லை என்று சொல்வது பொருந்தும் . அதில் கூட வயது வரம்பு உண்டு மேஜர் ஆகிவிட்டால் தப்பு யார் செய்தாலும் வீட்டில் உள்ளவர்கள் கண்டிக்கும் உரிமைஉண்டு. ஆனால் இந்த இடத்தில் எல்லோருக்கும் தெரிந்தது நித்தி புகழ் அவரை சன்னிதானமாக அறிவித்தது தவறு என்று உங்களுடைய பார்வையில் தெரியவில்லையா?...

    -Dinamalar comments

    ReplyDelete
  36. அது ஏன் சூத்திர சாமியார் என்றால் மட்டும் எல்லா இந்துக்களுக்கும் கோபம் வருகிறது?

    ReplyDelete
  37. MR. ராவணன்,
    **முனியாண்டி சாமி என்னைப் படைத்தார்...முனியாண்டி சாமியை நான் படைத்தேன். இதில் எந்த முரணும் இல்லை.**

    ஹ் ஹஹா ...இதுல நீங்க பிளாக்கரு ??? உங்க தளத்துல இப்படிதான்
    அறிவுப்பூர்வமா ??!! எழுதுவீங்களா ???

    ** நாஸர் போன்று நாசமாய் போனவன் இல்லை.**
    ஏன் முன்பு நான் நாகராஜ் ஆக இருந்து இப்போ நாசர் ஆக மாறிவிட்டேன் என்பதற்காக திட்டுறீங்களா ??
    சரி உங்க தள முகவரிய கொடுங்க, அங்கே உங்க மேதாவிலாசத்த பார்க்கலாம் ...

    ReplyDelete
  38. Bro Naren!

    //பின்லேடன் மீதுள்ள குற்றம் நிரூபிக்கபடவில்லை என்பதையும் நித்யானந்தா மீதுள்ள குற்றம் நிரூபிக்கபட்டுள்ளது என்பதையும். -:)//


    இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

    இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.
    அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...

    இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

    அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.

    இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

    விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)

    அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

    விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.

    இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.

    ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.

    இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

    ReplyDelete
  39. Bro Naren!

    முன்னாள் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில், இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது,

    9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது. அரபு முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர்.

    இத்தாக்குதல் நடத்த நீண்ட காலமாக திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம்.

    மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் பொழுது அது அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன் ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது என்றும் மேலும் மூன்றாவது கட்டிடமும் இதே போன்று விழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார்.

    மேலும் பெண்டகனை தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை விமானம் தாக்குதலில் என்ன முழுவதுமாக ஆவியாகிவிட்டதா? என வினவியுள்ளார். கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறியுள்ளனர் அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் என்ன மாயமாக மறைந்து விட்டனவா? எனக் கேட்டுள்ளார்.

    அமெரிக்க ஊடகங்கள் ஏன் இத்தாக்குதலை குறித்து மௌனம் சாதிக்கின்றன என்றும். புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக்கையும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுப்பதே. இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபருக்கு மனிதர்களை உயிர் மதிப்புடையது அல்ல என்று மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  40. //கூடுதலாக கலைச் சேவை செய்து வரும் ரஞ்சிதாவும் பக்க பலமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் இனி ஆன்மீகம் தழைத்தோங்கும். எத்தனை பெரியார்கள் வந்தாலும் தமிழகத்தில் ஆன்மீகத்தின் வாயிலை அடைக்க முடியாது என்பதற்கு உதாரணமாக சுவாமி நித்தயானந்தா திகழ்கிறார்.//

    :))))) மிகத் துள்ளியமா கணக்கு போட்டிருக்கீங்க சகோ :)))) சூப்பரான பதிவு!

    ReplyDelete
  41. சலாம் சகோ அஸ்மா!

    //:))))) மிகத் துள்ளியமா கணக்கு போட்டிருக்கீங்க சகோ :)))) சூப்பரான பதிவு!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  42. ஸலாம் சகோ நசீர்...

    இதை பொதுவில் வைத்து பலரது உள்ளக்கிடக்கையையும் அறியத் தந்ததற்கு நன்றி...

    இரட்டை கோபுரம் குறித்த தகவல் நினைவுபடுத்திக்கொள்ள ஒருவாய்ப்பாக அனைத்தையும் பின்னூட்டத்தில் கொடுத்ததற்கும் நன்றி...சகொ...

    இனி இந்த நித்தி சிவப்பு நிற சுழல்விளக்குள்ள காரில் பவனிவருவதை கண்டுதுலைக்கும் நிலைவேறு நமக்கா....கொடுமைடா...

    ஹிந்துமதம் ஹிமாலய கவுரவம் பெற இருப்பதன் முன்னறிவிப்போ... :)

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  43. அஸ்ஸலாமு அழைக்கும். சகோ. சுவனப்பிரியன்.

    இவர்களுடைய மூலதனமே மக்களின் அறியாமை தான். மக்கள் ஏமாறும் வரை இவர்கள் பல ரூபங்களில் தோன்றிகொண்டே இருப்பார்கள்.

    ///மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.////

    இதில் ஜாலி என்பது சிரிப்பா அல்லது இளம் பெண்களின் நடனமா?

    ReplyDelete
  44. சலாம் சகோ ரஜின்!

    //இனி இந்த நித்தி சிவப்பு நிற சுழல்விளக்குள்ள காரில் பவனிவருவதை கண்டுதுலைக்கும் நிலைவேறு நமக்கா....கொடுமைடா...//

    இப்படி ஒரு கொடுமை வேற இருக்கா! நல்ல வேளையாக நான் மதுரைக்காரன் இல்லை. :-)

    ReplyDelete
  45. சலாம் சகோ முஜாஹித் அலி!

    //இதில் ஜாலி என்பது சிரிப்பா அல்லது இளம் பெண்களின் நடனமா?//

    இனி மதுரைக்காரர்களிடம்தான் இதைப் பற்றி கேட்க வேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  46. பெரியாரின் தி.க வுக்கு வீரமணி பொதுச்செயலாளர்
    அண்ணாவின் திமுக வுக்கு கருணா தலைவர்
    இதிலெல்லாம் வராத ஆச்சர்யம் இதில் எதுவும் இல்லை சுவனப்ரியன்

    ReplyDelete
  47. பெரியாரின் தி.க வுக்கு வீரமணி பொதுச்செயலாளர்
    அண்ணாவின் திமுக வுக்கு கருணா தலைவர்
    இதிலெல்லாம் வராத ஆச்சர்யம் இதில் எதுவும் இல்லை சுவனப்ரியன்

    ReplyDelete
  48. பெரியாரின் தி.க வுக்கு வீரமணி பொதுச்செயலாளர்
    அண்ணாவின் திமுக வுக்கு கருணா தலைவர்
    இதிலெல்லாம் வராத ஆச்சர்யம் இதில் எதுவும் இல்லை சுவனப்ரியன்

    ReplyDelete
  49. பெரியாரின் தி.க வுக்கு வீரமணி பொதுச்செயலாளர்
    அண்ணாவின் திமுக வுக்கு கருணா தலைவர்
    இதிலெல்லாம் வராத ஆச்சர்யம் இதில் எதுவும் இல்லை சுவனப்ரியன்

    ReplyDelete
  50. Anonymous3:31 AM

    // இனி மதுரைக்காரர்களிடம்தான் இதைப் பற்றி கேட்க வேண்டும்.//

    அவன் சீர்காழிக்காரன். நித்தி தி.மலை இதில் ஏன் பொத்தாம் பொதுவாக மதுரைக்காரர்களைத் திணிக்கிறீர்கள் ஒரு இஸ்லாமியன் குண்டு வைத்தால் பொத்தாம் பொதுவாய் " முஸ்லிம்களே" இப்டி தான் என்று பேசுவது போல உள்ளது
    - அக்கப்போரு

    ReplyDelete
  51. திரு அக்கப்போரு!

    //பெரியாரின் தி.க வுக்கு வீரமணி பொதுச்செயலாளர்
    அண்ணாவின் திமுக வுக்கு கருணா தலைவர்
    இதிலெல்லாம் வராத ஆச்சர்யம் இதில் எதுவும் இல்லை சுவனப்ரியன் //

    வீரமணியும் கருணாநிதியும் ஆன்மீகத் தலைவர்கள் அல்ல. ஆனால் நித்தியானந்தாவோ இந்து மத சைவப் பிரிவின் மதுரை ஆதீனமாக பதவியேற்றிருக்கிறார். மதத் தலைமை என்பது எவ்வளவு புனிதமானது. இது கூட இன்னும் விளங்காமல் நான்கு முறை ஒரே செய்தியை பின்னூட்டமாக விளாசித் தள்ளியிருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் போலிஆன்மீக மயக்கத்தில் இருக்கும் வரை ஒரு நித்தியானந்தா என்ன ஓராயிரம் நித்தியானந்தாக்கள் உருவாக்கப்படுவார்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. ஐகோர்ட் போனாலும் செல்லாது:""ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?'' என நிருபர்கள் கேட்டதற்கு, ""ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,'' என்றார் ஆதீனம்.

    மதுரை ஆதீன மடத்துக்குள் இந்து அமைப்புகள் போராட்டம் :பெங்களூரில் இருந்து நேற்று மதுரை வந்த ஆதீனம், நித்யானந்தாவுக்கு தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், பக்தர்கள் நடுரோட்டில் குத்தாட்டம் ஆட, இருவரும் ஊர்வலமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். இதற்கு போலீஸ் அனுமதிக்காததால், சீடர்களுடன் கோவிலுக்கு சென்றனர்.

    சந்திக்க மறுப்பு:இதற்கிடையே, "நித்யானந்தாவை தேர்ந்தெடுத்தது ஏன்?' என ஆதீனத்திடம் கேட்க, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், உட்பட பலர், மடத்துக்கு வந்தனர்.அவர்களை சந்திக்க ஆதீனம் மறுத்ததால், மடத்தினுள் திருஞான சம்பந்தர் சன்னிதி முன், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "திருஞான சம்பந்தர் வாழ்க' என, அவர்கள் கோஷமிட, பதிலுக்கு நித்யானந்தா பக்தர்கள், "நித்யானந்தாவிற்கு ஜே' என கோஷமிட, பதட்டம் உருவானது. இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.போரூர் திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி, சுரேஷ்பாபு மட்டும் மதுரை ஆதீனத்தை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
    -Dina malar

    ReplyDelete
  53. சுவனப் பிரியன் சார்,

    மற்றவர்களின் கடவுளர்களைத் திட்டாதீர்கள் என்று கூறும் இஸ்லாமில் இருக்கும் உங்களுக்கு இந்தப்பதிவு தேவையில்லாத ஒன்று.

    உங்கள் மதத்தின் சிறப்பியல்புகளை (மட்டுமே) முடிந்தால் கூறுங்கள். அதுபோதும்.

    ReplyDelete
  54. மொக்கப்போரு9:05 AM

    ரெண்டு டம்மிபீஸ்களைப் பற்றி ரொம்பத்தான் கவலைப்படுறீங்க. தாய் மதத்தில் இருந்திருந்தால் நித்திக்கு நல்லதொரு சீடராய் இருந்திருப்பீர்கள் போலும்!

    ReplyDelete
  55. சுரண்டை உருண்டை8:23 AM

    இந்த ரண்டு லூசுங்களப் பத்தி இந்து மத த்திலயே யாரும் கண்டுக்கிடல. நீரு ஏம்வே கிடந்து தவிக்கீரு?

    ReplyDelete
  56. சென்னை: நித்யானந்தா, மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்றதை, மாதா அமிர்தானந்தமயி தேவி ஆதரித்துள்ளார் என, நித்யானந்தா கூறியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதுகுறித்து, மாதா அமிர்தானந்தமயி தேவியிடம் கேட்டபோது, "இந்த விஷயத்தை பற்றி யாரும் என்னிடம் கேட்கவுமில்லை. மேலும், இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதை பற்றி யாரிடமும் நான் ஒன்றும் கூறவுமில்லை' என்று கூறினார் என, மாதா அமிர்தானந்தமயி மடம் தெரிவித்துள்ளது.

    தினமலர் 4/5/12

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)