Tuesday, May 01, 2012

மறு பிறவி என்பது நம்பத் தகுந்ததா?

52. அத்தாட்சிகளை மறுக்கலாமா?

கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு(தொழுவது போன்று) செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தோடு நானும் இணைகிறேன். என்றாலும் மாற்றுக்கருத்துடைய சகோதரர்கள் இந்த விஷயத்தை நம்பி பெரிதாக எடுத்துக்கொண்டு மற்றவர்களிடமும் இதைப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (திருக்குர்ஆன் 41:53)

என்ற வசனத்தை எடுத்துக்காட்டி இது அல்லாஹ்வின் அற்புதம் தான் என்றும் இதை மறுத்தால் இந்த வசனத்தையே மறுத்தது போல் ஆகும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இதை எல்லாம் அற்புதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என்றும் கேட்கிறார்கள்? எம்.ஹுசைன், யூ.ஏ.இ.

பதில்: இறைவன் தனது அத்தாட்சிகளைக் காட்டுவான் என்பதிலோ, அவற்றை நம்ப வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாயையையும், மாயத் தோற்றங்களையும் அத்தாட்சிகள் என்று கூறுவோர் தான் இவை அத்தாட்சி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இதுபோன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன. சிலுவை, மேரி வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. எல்லா மதத்தினரும் தற்செயலாக அமைந்து விட்ட இது போன்ற காட்சிகளைக் காட்டுகின்றனர். உங்கள் நண்பர்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் தாமா?

இதோ வணக்கம் செய்யும் மரம் என்று நீங்கள் கூறினால் கும்பிடுவது போல தோற்றமளிக்கும் மரங்களை அவர்கள் காட்டுவார்கள். அல்லாஹ் என்ற அரபு எழுத்து எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் காட்டினால் இல்லை சூலம் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுவார்கள். இறைவனின் அத்தாட்சிகள் இவ்வளவு பலவீனமாக, வமையற்றதாக ஒருக்காலும் இருக்க முடியாது.

அத்தாட்சிகள் என்பன, ஒரே இறைவன் இருக்கிறான் என்பதைத் தெளிவாக அறிவிக்கும். நீங்கள் கூறுபவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் பல கடவுள் உள்ளனர் என்பதற்கும் இது போன்ற அத்தாட்சிகளை (?) மற்றவர்கள் காட்டுவார்கள்.

அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனது அத்தாட்சிகள் பற்றிய அறிவும் இல்லாதவர்கள் தான் மாயைகளை அத்தாட்சிகள் என்பர்.

மூஸா நபி இலேசாக பாறையில் தட்டியவுடன் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இது போல் எவரும் செய்ய முடியாது என்பதால் இதை அத்தாட்சி எனலாம்.

வானங்கள், பூமி, சூரியன், கோள்கள், மழை மேகங்கள், விண்மீன்கள், காற்று, பயிர்கள் முளைப்பது, கருவில் மனிதன் வளர்வது, மனிதனுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் அற்புதங்கள் என கோடானு கோடி அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டே தான் இருக்கிறான்.

இத்தகைய பிரம்மாண்டமான மலைக்கச் செய்யும் அத்தாட்சிகளை விட்டு விட்டு அற்பமானவைகளை அத்தாட்சி என்று கூறுவது முற்றிலும் தவறாகும். கோடி கோடியாக செல்வம் வைத்திருப்பவன் செல்லாத காலணாவைப் பெரிதாக நினைப்பது போலவே இவர்களின் நிலைமை அமைந்துள்ளது.

இத்தகைய அற்பமான தற்செயலானவற்றை அத்தாட்சி என்று கூற ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் தோற்று விடுவீர்கள்! இது போன்ற செல்லாக்காசுகள் உங்களை விட மற்றவர்களிடம் மூட்டை மூட்டையாகக் குவிந்துள்ளன.

அல்லாஹ்வுடைய வசனத்தைத் தவறான இடத்தில் பயன்படுத்தாதீர்கள்!
இவை அத்தாட்சி இல்லை என்று நம்மிடம் ஆதாரம் கேட்கக் கூடாது. யார் அத்தாட்சி என்று வாதிடுகிறார்களோ அவர்கள் தான் இது போன்றவைகளை அத்தாட்சிகளாக இறைவன் கூறியிருக்கிறான் என்ற ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

---------------------------------------------------



53. மறு பிறவி உண்டா?
கேள்வி : என்னுடைய ஒரு ஹிந்து நண்பன் மறு பிறவி இல்லையென்பதை நிரூபித்தால் நான் இஸ்லாத்தில் வந்து விடலாம் எனக் கூறியுள்ளான். எனவே தயவு செய்து பதில் தந்தால் அந்த நண்பனின் சந்தேகம் தீர்க்க வாய்ப்பாக அமையும். ஹெச்.ஜாஃபர் சாதிக், கேரளா.

பதில் : மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம்.

அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.

இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

-நன்றி பி.ஜெய்னுல்லாபுதீன்

________________________________________



28 comments:

  1. இம்மாதிரி தர்க்கத்தால் மறுபிறவி இல்லை எனக் காட்டுகிறீர்கள். சரி, இருக்கட்டும்.

    உலகம் உருவாகி எத்தனை ஆண்டுகள் ஆயின? எத்தனை ஜீவராசிகள் தோன்றி மடிந்துள்ளன, இன்னும் எத்தனை ஆண்டுகள் அவ்வாறே நிகழப் போகின்றன?

    கயாமத் அன்று எல்லோரும் மீண்டும் வந்து அல்லா அவர்கள் தீர்ப்பு சொல்வார்கள் என நினைப்பது எவ்வித நம்பிக்கை?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. Anonymous5:59 AM

    I was going to ask the same! Dondu beat me to it.
    Live and let Live!
    What is your opinion on Sania Mirza?

    ReplyDelete
  3. திரு டோண்டு ராகவன்!

    //உலகம் உருவாகி எத்தனை ஆண்டுகள் ஆயின? எத்தனை ஜீவராசிகள் தோன்றி மடிந்துள்ளன, இன்னும் எத்தனை ஆண்டுகள் அவ்வாறே நிகழப் போகின்றன?

    கயாமத் அன்று எல்லோரும் மீண்டும் வந்து அல்லா அவர்கள் தீர்ப்பு சொல்வார்கள் என நினைப்பது எவ்வித நம்பிக்கை?//

    உங்களின் இந்த கேள்விக்கு ஒரு பின்னூட்டத்தில் பதிலளித்து விட முடியாது. உங்கள் கேள்விகளுக்கான பதிலை ஒரு தனி பதிவாகவே தருகிறேன். அதில் பார்த்துக் கொள்ளுங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. Anonymous8:38 AM

    சித்தர் பாடல்,

    கறந்த பால் முலை புகா, கடைந்த வெண்ணை மோர்புகா.
    உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா,
    விரிந்த பூ உதிர்ந்தகாய் மீண்டும் போய் மரம்புகா,
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!

    - வள்ளுவன்

    ReplyDelete
  5. Anonymous8:49 AM

    Check this...
    http://www.youtube.com/watch?v=OWCUjx4nI98

    ReplyDelete
  6. Anonymous8:57 AM

    பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
    இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
    பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
    பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!


    What does it mean - a Pariah woman?
    What does it mean - a Brahmin woman?
    Is there any difference in flesh, skin,or bones?
    Do you feel any difference when you sleep with a Pariah or Brahmin woman?


    Poet: Civavakaviyar
    Translated by Kamil V Zvelebil

    - வள்ளுவன்

    ReplyDelete
  7. //ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.
    //

    மிக குறுகிய கண்ணோட்டத்தில் இதை சொல்லியிருக்கிறர்கள் சுவனப்ரியன் அவர்களே,

    உங்களது வினையால் ஏற்பட்ட பலனை அனுபவித்தே ஆக வேண்டும், காரணம் புரிகிறதோ இல்லையோ அது உங்களுடைய புரிந்துகொள்ளும் அறிவையும்/ முதிர்ச்சியையும் பொறுத்தது. எடுத்துக்காட்டாக உங்களுக்கு வயிற்றுப்போக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
    காரணம் தெரியவில்லை, ஆனால் இது ஏற்பட்டது நீங்கள் சாப்பிட்ட ஏதோ ஒன்றின் ஒவ்வாமையினால், அதன் பலனை அனுபவிகிறிர்கள்,
    காரணம் தெரியவரலாம் சரியான மருத்துவர் மூலம், அல்லது நீங்கள் உங்களையே சரியாக அவதானித்து வந்திருந்தால்.

    ReplyDelete
  8. திரு வள்ளுவன்!

    //கறந்த பால் முலை புகா, கடைந்த வெண்ணை மோர்புகா.
    உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா,
    விரிந்த பூ உதிர்ந்தகாய் மீண்டும் போய் மரம்புகா,
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!//

    சித்தர் பாடலை சுட்டியமைக்கு நன்றி! சித்தர் பாடல்கள் பல இந்து மத நம்பிக்கைகளுக்கு மாற்றமான கருத்தையே கொண்டுள்ளது. ராமாயணமும் மகாபாரதமும் பிரபல்யப் படுத்திய அளவு சித்தர் பாடல்கள் பிரபல்யமாகாததன் மர்மம் என்ன?

    ReplyDelete
  9. திரு அனானி!

    //Check this...
    http://www.youtube.com/watch?v=OWCUjx4nI98//

    கனவுகள் சில நேரங்களில் பலிப்பதுண்டு: பலிக்காமல் செல்வதுமுண்டு. அதே போல் சிலர் வருங்காலத்தைப் பற்றி சொல்வதில் ஆச்சரியமாக 70 சதவீதம் ஒத்து வந்து விடும். 30 சதவீதம் பொய்யாக போனது அரங்கேறுவதில்லை. மறு பிறவி என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதுதான் அறிவியலாரின் முடிவு. அறிவியல் ஆதாரம் ஏதும் இருந்தால் கொடுங்கள்.

    ReplyDelete
  10. Iniyan9:35 AM

    Brother suvanapriyan, what about species which had extinct?

    ReplyDelete
  11. Anonymous10:00 AM

    An open letter to Sania Mirza? At least it will
    serve as a warning to all Tamil Muslim girls!
    FYI I do not care about afterlife, only about who
    I am in this life. I can't wait to see your post on
    Judgement Day

    ReplyDelete
  12. Anonymous10:18 AM

    அன்புடன் சுவனப்பிரியன்,

    இந்து மதத்தினர் எப்படியெல்லாம் தில்லுமுல்லுகளைச் செய்தனர் என்பதையும் சித்தர் பாடல்களை ஏன் மறைத்தனர் என்பதையும் கலையரசன் நன்கு விளக்குகிறார். அவரது வலைப்பூவிற்குச் சென்று பாருங்களேன். இதோ தொடுப்பு: http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_27.html

    அவ்வளவு ஏன்? தமிழனுக்கு அறிவு புகட்டிய சித்தர்களிற் பலர் இஸ்லாத்தைத் தழுவினர் என்பது பார்ப்பனர்களுக்குத் தெரியவில்லை.
    - வள்ளுவன்

    ReplyDelete
  13. Anonymous11:42 AM

    ஆரியர் திராவிடர் எனபது புரட்டுவாதம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
    http://www.dnaindia.com/india/report_new-research-debunks-aryan-invasion-theory_1623744

    ReplyDelete
  14. Anonymous11:51 AM

    //மறு பிறவி என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதுதான் அறிவியலாரின் முடிவு. அறிவியல் ஆதாரம் ஏதும் இருந்தால் கொடுங்கள்.//


    ஆண்டவன் உலகை படைக்கவில்லை என்பதும் அறிவியலாரின் முடிவு.

    பரிணாமம் நடந்தது என்பதும் அறிவியலாரின் முடிவு.

    சுவனம் நரகம் இல்லை என்பது என்பதும் அறிவியலாரின் முடிவு.

    இறந்தவுடன் நம் கதை காலி என்பதும் அறிவியலாரின் முடிவு.

    ஹலால் முறையில் மிருகங்களை கொல்லுவது சித்ரவதை என்பதும் அறிவியலாரின் முடிவு.

    முகம்மது நபிக்கு ஆண்டவன் குரானை தரவில்லை என்பதும் அறிவியலாரின் முடிவு.


    இல்லைனா அறிவியல் ஆதாரம் ஏதும் இருந்தால் கொடுங்கள்.

    ReplyDelete
  15. அனானி!

    //பரிணாமம் நடந்தது என்பதும் அறிவியலாரின் முடிவு.//

    எந்த முடிவு சொல்கிறது என்று ஆதாரத்தோடு தர முடியுமா!

    //ஆண்டவன் உலகை படைக்கவில்லை என்பதும் அறிவியலாரின் முடிவு.//

    பெருவெடிப்பு வரை அறிவியல் பேசுகிறது. அதற்கு முன்னால் ஒரு மாபெரும் சக்தி இந்த பெரு வெடிப்பை நிகழ்த்தியதாக அறிவியல் கூறுகிறது. அந்த சக்தியைத்தான் நாங்கள் இறைவன் என்கிறோம்.

    //ஹலால் முறையில் மிருகங்களை கொல்லுவது சித்ரவதை என்பதும் அறிவியலாரின் முடிவு.//

    கழுத்தை முறித்தோ, அல்லது கோணிப் பைக்குள் அமுக்கி அடித்து கொல்வதையோ அறிவியல் தவறு என்கிறது. கழுத்துப்புறத்தில் அறுப்பதால் உயிரும் உடன் போய் விடுகிறது. அசுத்த ரத்தங்களும் முற்றிலுமாக வெளியாகி விடுகின்றன. பிறகென்ன சிக்கன் 65தான் :-)

    //முகம்மது நபிக்கு ஆண்டவன் குரானை தரவில்லை என்பதும் அறிவியலாரின் முடிவு.//

    பல அறிவியல் அறிஞர்கள் இந்த குர்ஆன் முகமது நபியின் வார்த்தையாக இருக்க முடியாது என்று ஆராய்ந்து இஸ்லாத்தை தழுவியுள்ளனர். எனது பழைய பதிவுகளை படித்தாலே பல விபரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  16. எடுத்துக்காட்டாக உங்களுக்கு
    திரு கர்மா!

    //வயிற்றுப்போக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
    காரணம் தெரியவில்லை, ஆனால் இது ஏற்பட்டது நீங்கள் சாப்பிட்ட ஏதோ ஒன்றின் ஒவ்வாமையினால், அதன் பலனை அனுபவிகிறிர்கள்,
    காரணம் தெரியவரலாம் சரியான மருத்துவர் மூலம், அல்லது நீங்கள் உங்களையே சரியாக அவதானித்து வந்திருந்தால்.//

    வயிற்று வலி வருவதை நான் உணருகிறேன். என்ன காரணத்தினால் என்பதையும் ஓரளவு என்னால் ஊகிக்க முடிகிறது. போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக ஒரு மனிதன் நாயாக பிறக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதை அந்த நாய் உணருகிறதா? நான் போன ஜென்மத்தில் என்ன நன்மை செய்ததனால் மனிதனாகப் பிறந்தேன். இது எனக்கு தெரியவில்லையே. உங்களுக்காவது அதன் உண்மை விளங்கியதா? ஒரு பைத்தியக்காரனுக்கே நமது நாட்டு சட்டம் தண்டனை கொடுப்பதில்லை. ஏனெனில் அந்த தண்டனை எதற்காக கொடுக்கப்பட்டது என்பதை அந்த பைத்தியம் உணர வாய்ப்பில்லை. அவன் திருந்தவும் வாய்ப்பில்லை. மனித சட்டமே இவ்வளவு தெளிவாக இருக்கும் போது இறை சட்டம் இந்த குழப்பத்தில் இருக்குமா?

    ReplyDelete
  17. சகோ இனியன்!

    //Brother suvanapriyan, what about species which had extinct?//

    அழிந்த உயிரினங்களின் நிலை என்ன என்று கேட்கிறீர்கள்.

    'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள்,மற்றும் ஸாபியீன்களில் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.'
    -குர்ஆன் 2:62

    இதன் மூலம் நல்லறங்கள் செய்து ஏக இறைவனை வணங்கி இறுதி தீர்ப்பு நாளையும் நம்பிய மக்கள் கவலைப்பட தேவையில்லை என்கிறான் இறைவன். அதே போல் அழிந்து போன டைனோசர்கள் போன்ற எண்ணற்ற உயிரினங்களின் தேவை நாம் வாழும் பூமிக்கு தற்காலத்திற்கு அவசியம் இல்லை என்று இறைவன் நினைத்திருக்கலாம். எனவே அவற்றை அழித்திருக்கலாம். மேலதிக விபரங்களை இறைவனே அறிந்தவன்.

    ReplyDelete
  18. Anonymous2:28 PM

    //எந்த முடிவு சொல்கிறது என்று ஆதாரத்தோடு தர முடியுமா!//

    எல்லா உயிரியல் ஆராய்ச்சி முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன். இதுவரை ஒரு முடிவும் பரிணாமத்தை தவறு என நிறுவ இல்லை. இந்தியா வந்தபின் அருகிலுள்ள பல்கலைகழகம் சென்று எந்த உயிரியல் விஞ்ஞானியை பார்த்தும் கேளுங்கள். பரிணாமம் உண்மையா இல்லையா என்று. (சவுதியில் உண்மையை சொன்னால் அந்த விஞ்ஞானி உடம்பில் தலை இருக்காதல்லவா?)அதுவரை சார்வாகன் பதிவுகளை படிக்கவும்.

    ReplyDelete
  19. Anonymous2:41 PM

    //அதற்கு முன்னால் ஒரு மாபெரும் சக்தி இந்த பெரு வெடிப்பை நிகழ்த்தியதாக அறிவியல் கூறுகிறது. அந்த சக்தியைத்தான் நாங்கள் இறைவன் என்கிறோம்.//

    அப்புடியா? அந்த சக்திதான் பெருவெடிப்பின் போது உலக பொருட்களாக அதாவது எலெக்ரான் நியூட்டரான் என மாறிவிட்டதாக அறிவியல் கூறுகிறது. அதாகப்பட்டது இறைவன் உலகத்தை படைத்து பின்பு உலகமாகவும் இருக்கிறான்.அப்படியெனில் இயற்கையை வழிபாடு இறைவன் வழிபாடுதானே...அதாவது இந்துமதம் மட்டுமே உண்மையானது இல்லையா?

    ReplyDelete
  20. //அதாகப்பட்டது இறைவன் உலகத்தை படைத்து பின்பு உலகமாகவும் இருக்கிறான்.அப்படியெனில் இயற்கையை வழிபாடு இறைவன் வழிபாடுதானே...அதாவது இந்துமதம் மட்டுமே உண்மையானது இல்லையா?//

    எலக்டரானும் நியூட்ரானும் தானாகவே தங்களின் சக்தியை உற்பத்தி செய்து கொண்டதா? அந்த பொருட்களை உருவாக்கிய ஏக இறைவனை வணங்குவதுதானே அறிவார்ந்த செயலாகும்? இயற்கை வழிபாடு சரி என்றும் உலக பொருட்கள் அனைத்திலும் இறைவன் இருக்கிறான் எனவே உலகில் எதையும் வணங்கிக் கொள்ளலாம் என்று உங்கள் மத வேத புத்தகம் கூறகிறதா? நான் பார்த்த வகையில் அப்படி ஏதும் இல்லையே!

    ReplyDelete
  21. //எல்லா உயிரியல் ஆராய்ச்சி முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன். இதுவரை ஒரு முடிவும் பரிணாமத்தை தவறு என நிறுவ இல்லை.//

    பொத்தாம் பொதுவாக கூறாமல் எந்த ஆராய்ச்சி முடிவு பரிணாமத்தை ஒத்துக் கொண்டுள்ளது என்பதை ஆதாரத்தோடு தாருங்களேன்.

    ReplyDelete
  22. Anonymous8:03 PM

    //எனவே உலகில் எதையும் வணங்கிக் கொள்ளலாம் என்று உங்கள் மத வேத புத்தகம் கூறகிறதா? நான் பார்த்த வகையில் அப்படி ஏதும் இல்லையே!//

    இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என இந்து தத்துவம் கூறுவதை அறியதவரான தாங்கள் ஏதோ அனைத்து நூலும் கற்றறிந்த மதநூல் அறிஞர் போல் எழுதுவது தமாசு!

    ReplyDelete
  23. Anonymous8:22 PM

    //பொத்தாம் பொதுவாக கூறாமல் எந்த ஆராய்ச்சி முடிவு பரிணாமத்தை ஒத்துக் கொண்டுள்ளது என்பதை ஆதாரத்தோடு தாருங்களேன்.//

    உலகின் தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான கலிபோர்னிய பல்கலையின் பர்க்லி பிரிவு உமக்காகவே Understanding Evolution எனும் தளத்தை அமைத்துள்ளது. இங்கு பரிணாமம் பற்றி அருமையாக முக்கிய விஞ்ஞானிகள் கற்று தருகிறார்கள். அதில் What is the evidence for evolution? எனும் பக்கம் பார்க்கவும். அதிலிருந்து ஒருவரி The theory of evolution is broadly accepted by scientists — and for good reason! இங்கு பல ஆதாரங்கள் தருகிறார்கள்.

    எப்படியும் இவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் சொல்வதை நம்ப போவதில்லை. உமக்கு கார்பன் கூட்டாளீ, ஆசிக், குரானை படித்து நோபல் பரிசு வாங்க போவதாக பினாத்தும் அநாநி இவர்கள்தான் பெரிய விஞ்ஞானிகள். இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டுமே என இந்த பின்னூட்டம்!

    ReplyDelete
  24. //போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக ஒரு மனிதன் நாயாக பிறக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதை அந்த நாய் உணருகிறதா? //

    நாய் உணர வாய்ப்பில்லை, தன்னை உணர்தல் என்பது பொதுவாக மனிதப்பிறவிகளுக்கு மட்டும் சாத்தியமானது,
    விதிவிலக்காக மிகச்சில சமயங்களில் பிற உயிரினங்களில் சாத்தியமாகலாம், இது பற்றி மேலதிக விபரங்கள் எனக்குத் தெரியாது.

    //நான் போன ஜென்மத்தில் என்ன நன்மை செய்ததனால் மனிதனாகப் பிறந்தேன். இது எனக்கு தெரியவில்லையே. உங்களுக்காவது அதன் உண்மை விளங்கியதா? //

    இல்லை, இது வரை. ஆனால் சாத்தியமுள்ளது.

    //ஒரு பைத்தியக்காரனுக்கே நமது நாட்டு சட்டம் தண்டனை கொடுப்பதில்லை. ஏனெனில் அந்த தண்டனை எதற்காக கொடுக்கப்பட்டது என்பதை அந்த பைத்தியம் உணர வாய்ப்பில்லை. அவன் திருந்தவும் வாய்ப்பில்லை. மனித சட்டமே இவ்வளவு தெளிவாக இருக்கும் போது இறை சட்டம் இந்த குழப்பத்தில் இருக்குமா?//

    மீண்டும் தெளிவாக சொல்கிறேன், மிகக்குறுகிய கண்ணோட்டத்துடன் மறுபிறவிக் கோட்பாட்டை அணுகுகிறிர்கள்.
    அதே பைத்தியம் மின்சார கம்பியை தெரியாமல் தொட்டுவிட்டால் இயற்கை விட்டுவைப்பதில்லை, எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை.
    மனித சட்டங்களையும், அதில் உள்ள ஓட்டைகளையும், அபத்தங்களையும் தயவு செய்து மறுபிறவியுடன் ஒப்புமை செய்யவேண்டாம்.

    நிங்கள் சுவனப்ப்ரியனாக ( the man as you are today ) இருக்க, ஒரு இஸ்லாமியராக இருக்க என்ன, மற்றும் யார். யாரெல்லாம் காரணம் என்று ஒரு பட்டியல் எடுங்கள். அதை உங்கள் பெற்றோரிடம் (அல்லது உங்களை இளவயது முதல் நன்கு புரிந்தவராக நீங்கள் கருதுகின்ற ஒருவரிடம்) காண்பித்து நீங்கள் நீங்களாக வாழ்தலுக்கான உங்களின் புரிதல் எவ்வளவு சரி என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

    காரணங்கள், காரியத்துடன் தொடர்பு படுத்துதல், அதுவும் பிறவிகள் கடந்து தொடர்பு செய்தல் என்பது அவ்வளவு எளிய செயலன்று என்பதை புரிந்துகொள்தல் கடினமன்று.

    மேலே குறிப்பிடப்பட்ட சித்தர் பாடல்களுக்கு மிக ஆழமான பொருளுள்ளது, தயவு செய்து உங்கள் நோக்கம் கருதி குறுக்க வேண்டாம்.

    மறுபிறவி என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல 100 வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
    இந்து மதத்தை விடவும் புத்தமதத்தில் இதற்கான விளக்கம் சரியாகக் கையாளப்பட்டுள்ளது.

    ReplyDelete
  25. ஹலோ அனானி சவூதிய குறை சொல்வது இருக்கட்டும்.இந்தியாவிலே கூட உங்க தலைய காட்டாம இப்படி தலையில கூடைய கவுத்துகிட்டு குழிக்குள்ள இருந்து பதில் சொல்வது போல அனானி பெயர்ல பதில் எழுதுறிங்களே கொஞ்சம் உங்க பெயரோடே பதில் சொல்லலாம்லே.உங்கள போல ஆளுங்களுக்கெல்லாம் புரியுறா மாதிரி எவளோ பதில் சொன்னாலும் பதில் சொன்ன கேள்விய அரவேகாட்டுதனமா வேற வேற தளத்துக்கு போய் மறுபடியும் கேள்வி கேட்பிங்க.உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி புரியவைக்க முடியலன்னு(புரிஞ்சாலும் புரியாத மாதிரி தான் உங்கள போல ஆளுங்க நடிப்பாங்க) எங்கள போல ஆளுங்க உங்களுக்கு பதில் சொல்லுறத கைவிட்டா,முஸ்லிம்களுக்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் தெரியல இஸ்லாம் பொய்,குர்ஆன் பொய்னு உங்க ப்ளோக்ல பெருசா போட்டுபிங்க.குழியில இருந்து முதல்ல வந்து உங்க முகத்த காட்டி கேள்வி கேளுங்க பாஸ்.உங்களுக்கு பதில் சொல்லாமலும் இருக்க முடியாது எங்களால் ஏன்னா நாய் வால பிடிச்ச கதை தான். சுவனபிரியன் சகோ. அவர்களே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete
  26. Hello sir marupiravi ku neega kodutha eaduthukattu chinna pulla thanama iruku. Ellam manithanum 1ru joodi la irundhu vandhan nu sonnadhu thappu. Oru manithan 1ru joodi udhavi odathan boomiku varaan. Neega solra maatheri ella manithanum oru joodi la irundhu than vandhan nu solradhu. Neega scientific ah pakkala nu nalla theriyudhu. Neega solradhu chirstins solra maatheri than iruku aadam eavaal 2nd peru than andha joodi nu neega solriga.

    ReplyDelete
  27. Nanba unga kitta neraya kelvi ketkanum answer panna virupam irundha solluga na kelvi kekkuran. This is my email ID vel1993@gmail.com. Replay pannuga.

    ReplyDelete
  28. Hello friends oruthar kelvi ketta badhil solluga illa solla matten solluga aadha vittutu aavara yen potta pathevea puriyala nu solrga. Aavarukum konjam aarivu iruku purichukonga. Kanaal kanpadhum poi kadhal ketpadhum poi thera visaripathe mai nu aanubava padamaya sonnaga. Engala thera vesarika viduga. Ungaluku lam badhil theriyalanaalum summa eadho 1na pese malipidiviga. Appadi thana.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)