Sunday, May 06, 2012

பிச்சை புகினும் கற்கை நன்றே!


பிச்சை புகினும் கற்கை நன்றே!

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே 35

கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே 36

-வெற்றி வேற்கை (நறுந்தொகை)

கல்வியைப் பற்றி கல்வியின் அவசியத்தைப் பற்றி நமது முன்னோர்கள் எந்த அளவு கவலைப்பட்டுள்ளனர் என்பது மேற்கண்ட பழமொழிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கல்வி கற்பதில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது நாம் ஓரளவு பெருமை பட்டுக் கொண்டாலும் தற்போதய மாணவர்களின் கல்வித் தரத்தைப் பார்த்தால் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பத்தாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் படிக்கும் மாணவர்களில் பலர் சில கெமிக்கல்களில் தண்ணீர் கலந்து தங்களுக்கு போதை ஏற்றிக் கொள்வதாக பத்திரிக்கை செய்தியை படித்து பதறி விட்டேன். நமது தமிழ் நாட்டு மாணவர்களிடமா இப்படி ஒரு பழக்கம் என்று ஆச்சரியப்பட்டேன். போலீஸ் கஸ்டடியிலிருந்து மாணவர்களின் எதிர்காலம் கருதி கேஸ் பைல் பண்ணாமல் அனுப்பியிருக்கிறார்கள். இதை நான் இங்கு குறிப்பிட காரணம் தனி மனித ஒழுக்கம் என்பது தலையாய பிரச்னையாக இன்று பரிணமித்திருக்கிறது.

'நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.'
-கல்லாமை 41:407

ஆழமும் அகலமும் கூர்மையும் பொருந்திய கல்வி அறிவு இல்லாத ஒருவன் பார்வைக்குக் கவர்ச்சியாகவும் அழகாகவும் தோன்றினாலும் உள்ளம் கெட்டதால் மண்ணால் அழகாக செய்யப்பட்ட பொம்மையைப் போன்றாவான் என்கிறார் வள்ளுவர்.

இந்த குறளை படித்த போது அந்த பள்ளி மாணவர்களின் ஞாபகம்தான் எனக்கு வந்தது. எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டிய இந்த பருவத்தில் வாழ்க்கையை தொலைக்க நினைக்கும் இவர்களால் நாட்டுக்கும் கேடு: சொந்த வீட்டுக்கும் கேடு.

'என் இறைவா! எனக்கு கல்வியை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!
-குர்ஆன் 20:114

கல்வி ஞானத்தை அதிகப்படுத்தச் சொல்லி நாம் இறைவனிடம் கேட்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

'அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?' என்று கேட்பீராக! அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள்.

-குர்ஆன் 39:9..
இங்கு கற்றவரும் கல்லாதவரும் சமமாக மாட்டார் என்கிறான் இறைவன். கல்வியின் அவசியம் பற்றி மேலும் சில தகவல்களைப் பார்ப்போம்.


'தன்னை மறந்துவிட்டுப் பிற மனிதர்களுக்குப் போதிக்கும் மனிதன், பிறருக்கு ஒளியைக் கொடுத்து, தன்னை எரித்துக் கொள்ளும் திரியைப் போன்றவனாவான்.'

'முஃமின் தேனீயைப் போன்றவனாவான். அது நல்லதைச் சாப்பிடும், நல்லதையே வெளியேற்றும். அது ஒரு கொடியில் அமர்ந்தாலும் அதனை முறித்து விடாது.' (அத்தபரானி, அல் பஸ்ஸார்)

'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்' (புகாரி , முஸ்லிம்)

'கல்வியூட்டுங்கள், கடுமையாக நடத்தாதீர்கள், கல்வியூட்டுபவன் கடுமையாக நடப்பவனைவிடச் சிறந்தவன்.' (அல்-பைஹகீ -ஷுஅபுல் ஈமான்)

'ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

மேற்கண்ட திருக்குறள், திருக்குர்ஆன் வசனங்கள் நபி மொழிகள் மனிதன் கல்வி அறிவு பெறுவது அவசியம் என்று போதிக்கிறது. அந்த கல்வியும் மனிதனின் வாழ்வை சீர்குலைக்காமல் நேர்படுத்தும்படியாகவும் இருக்க வேண்டும். இன்று உலகில் படித்தவர்கள்தான் குற்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். மகா ஊழலான 2ஜி அலைக்கற்றை ஊழலை செய்தது அனைவருமே மெத்த படித்தவர்கள். எனவே இத்தகைய கல்வியால் சமூகத்துக்கு கேடுதான். இறை நம்பிக்கை சார்ந்த கல்விதான் ஒருவனுக்கு நேர் வழியைக் காட்டித் தரும்.

-------------------------------------------

அத்தகைய கல்வியை தேடி செல்வது ஒவ்வொரு மனிதனின் மீதும் கடமையாகும்.

அந்த வகையில் அரசு பள்ளி ஒன்று சிறப்பாக இயங்கி வருவதாக மனிதாபிமானி தளத்தில் ஒரு அறிவிப்பு வந்ததை நாம் அறிவோம்.


கல்வி ஒரு வியாபாரமாகி விட்ட இன்றைய சூழலில் அரசு பள்ளி ஒன்று சிறப்பாக இயங்கி வருவது நமக்கு ஆச்சரியத்தை தருகிறது. வசதி குறைந்தவர்களின் குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வியை தந்து வரும் இது போன்ற கல்வி நிறுவனங்களை நாம் ஆதரிப்பது மற்றவர்களுக்கு ஊக்கமாக அமையும். அதன் தொடர்ச்சியாக நண்பர் ஆஷிக் அனுப்பிய மெயிலையும் இணைக்கிறேன்.



நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

மனிதாபிமானி தளத்தில் வெளிவந்த அரசு பள்ளி குறித்த பதிவை பார்த்திருப்பீர்கள். நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கொடுக்க விரும்பி அதற்காக ஏங்கும் நாம், இம்மாதிரியான அரசு பள்ளிகள் செயல்படும் போது அவர்களை ஊக்குவிக்க நிச்சயமாக கடமைப்பட்டிருக்கின்றோம். ஏழை மாணவர்களுக்கு இத்தகைய தரமான கல்வி கிடைப்பது இப்போதைய நிலையில் எவ்வளவு சிரமம் என்பதை சற்றே சிந்தித்து பார்ப்போம். அரசு பள்ளிகள் இப்படி இருக்கின்றனவே என்று கவலைப்படும் நாம், இம்மாதிரியான பள்ளிகள் சிறந்த தரத்திலான கல்வியை கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம்.

உங்களால் ஆன உதவி மிகச் சிறிதே என்றாலும் விரைவாக மறக்காமல் செய்யுங்கள். நாளைய சமுதாயம் சிறப்பான முறையில் வளரவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கின்றது. அதற்கான அனைத்து வழிகளையும் நாம் கண்டறிந்து உதவுவோமே. எல்லாத்தையும் விட இதனால் மறுமையில் கிடைக்ககூடிய நன்மைகளை எண்ணிப்பாருங்கள். ஆகவே தயவுக்கூர்ந்து உதவ முன்வாருங்கள் (இந்த பள்ளி குறித்து உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின் நேரடியாகவோ அல்லது கிராம பஞ்சாயத்தை தொடர்பு கொள்வதின் மூலமாகவோ அல்லது அப்பள்ளியின் ஆசிரியர்களை தொடர்பு கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்து கொள்ளலாம்).

Canara Bank Swift code : CNRBINBBOXC (வெளிநாடுகளில் வாழ்பவர்கள்)
Canara Bank IFSC Code : CNRB0001031 (இந்தியாவில் வாழ்பவர்கள்)
வங்கிக் கணக்கு எண்: 1031101123120
கணக்கு பெயர் : PTA, PANCHAYAT UNION PRIMARY SCHOOL, RAMAMPALAYAM.
வங்கி / கிளை : CANARA BANK / SIRUMUGAI Branch
பள்ளி முகவரி : THE HEADMISTRESS,
PANCHAYAT UNION PRIMARY SCHOOL,
RAMAMPALAYAM, JADAYAMPALAYAM-POST,
SIRUMUGAI- 641302. METTUPALAYAM.

தொடர்பு எண்கள் :
ந.சரஸ்வதி (principal): 99521 64582
து.பிராங்கிளின் (staff behind these activities): 99424 72672

இதுநாள் வரை பல்வேறு சகோதர சகோதரிகள் இறைவனுக்காக பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றனர். சமயங்களில் எதிர்பார்க்கப்படும் தொகை அனைத்தையும் ஒரு சிலரே கொடுக்க கூட முன்வந்திருக்கின்றனர் (இறைவன் அவர்களுக்கு மேலும் மேலும் செல்வத்தை தந்தருவானாக). ஆனால் இந்த முறை தொகை சற்றே பெரிது என்பதால் நீங்கள் அறிந்தவர்களுக்கு கூறி அந்த தொகை மிக விரையில் அந்த பள்ளிக்கு கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள்.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ



21 comments:

  1. கல்வி அறிவைத் தேடுவது தொட்டிலிலிருந்து மரணிக்கும் வரை என்றார்கள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள்.

    ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் கல்வி கற்பது கட்டாயக் கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது

    இஸ்லாம் கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது கல்வியறிவு இல்லாத எந்த சமுதாயமும் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்ந்து சிறக்க முடியாது என்பதை அனுபவ பூர்வமாக கண்டு வருகிறோம்.

    இஸ்லாம் கல்விக்கு கண் தந்த அரிய பொற்காலம் வெறும் நினைவு தூண்களாக காட்சி அளிக்கின்றன

    நம் பெற்றோர்களின் கல்வியின்மையால் நாமும் கல்வியிழந்து நம் சந்ததிகளையும் கல்வியூட்டும் ஞானமின்றி மற்ற சமுதாயங்களைவிட 200 வருடங்கள் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம்

    இஸ்லாமிய வரலாற்றைப் பார்க்கும் போது அதிகளவில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும்

    இடைக்காலத்தில் கல்வியைப் பற்றிய எந்தவித சிந்தனையும் கவலையும் இன்றியும்

    அது ஒரு அழியாச் செல்வம் என்பதை மறந்த நம்மில் பலர் சொத்து சேர்ப்பதிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

    சீன தேசம் சென்றாகிலும் சீர்கல்வி கற்றுக் கொள்ளுங்கள்

    என உலக மனித குலத்தின் வாழ்வியல் ஆசானாகப் பிறந்த அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் கல்வியின் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்


    THANKS TO: www.imandubai.org

    ReplyDelete
  2. சலாம் வாஞ்சூர் பாய்!

    கல்வியின் அவசியத்தைப் பற்றி அழகிய விளக்கத்ததை பகிர்ந்துள்ளீர்கள். மற்ற சமூகங்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கியே உள்ளனர். ஆனால் சமீப காலமாக முஸ்லிம்களும் கல்வியில் ஆர்வமுடன் செயல்படுகின்றனர். சொத்தை விற்றாவது குழந்தைகளுக்கு கல்வியைத் தந்து விட வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மவர்களுக்கு வந்துள்ளது. இதை கண்கூடாக பல இஸ்லாமிய கிராமங்களில் பார்த்து வருகிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஜசாக்கல்லாஹ் அண்ணன்...

    ReplyDelete
  4. இஸ்லாமிய மாணவன்12:29 AM


    தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்

    சீனா சென்று கல்வியைத் தேடு

    இந்த ஹதீத் சரியானதா ???? இல்லை .. பலவீனமானது ...

    வெகு காலமாக முஸ்லிம் பதிவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி முழக்கமிடும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று ..

    உதாரணம் : முஹம்மத் ஆஷிக் , citizen of world

    அஹமது ஆஷிக் ...

    அவர்களின் பதிவுகளில் பார்த்து உள்ளேன் .. அதை அவர்கள் அழித்து விடவும் ...


    தமிழகத்தில் நபிமொழிகளின் தாக்கம் ஏற்பட்ட போது நபிகளாரின் பொன்மொழிகள் ஜும்ஆ உரைகளிலும் போது மேடைகளிலும் நூல்களில் கூறும் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் நபிமொழி பற்றி ஆய்வு நூல்கள் குறைவாக இருந்த காரணத்தினால் பல ஆதாரமற்ற செய்திகளை நாமும் கூறியிருக்கிறோம். பின்னர் அவற்றின் உண்மை நிலையை அறியும் போது மக்களிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

    ஆரம்பத்தில் நாம் சரியான செய்தி என்று சொல்லி, ஆய்வுக்குப் பின்னர் பலவீனமான செய்திகளாக ஆன ஹதீஸ்களையும், மக்களிடம் பரவலாக பயன்படுத்தும் பலவீனமான செய்திகளையும், இத்தொடரில் தெளிவுபடுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.


    சீனா சென்றேனும் சீர் கல்வியைத் தேடு

    சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

    நூல்கள் : பைஹகீலிஷுஅபுல் ஈமான், பாகம் :4, பக்கம் :174,

    அல்லுஅஃபாவுல் கபீர்லி உகைலீ, பாகம் :4, பக்கம் : 162,

    ஜாமிவு பயானில் இல்மி வஃபழ்ஹிலிஇப்னு அப்துல்பர், பாகம் :1, பக்கம் :14,15,21,

    அல்காமில் ஃபீ லுஅஃபாவுல் ரிஜால்லிஇப்னு அதீ, பாகம் :1, பக்கம் 177,

    முஸ்னதுல் பஸ்ஸார், பாகம் : 1, பக்கம் : 98

    இச்செய்தியைப் பதிவு செய்த இமாம்கள் இந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை அதன் கீழே குறிப்பிட்டுள்ளார்கள்.

    இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும் என்றும் இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளர்கள். இந்தச் செய்தியில் சீனா என்ற வாசகத்தை அபூ ஆத்திகா என்பவர் மட்டுமே பயன்படுத்தியுள்ளார். இவர் ஹதீஸ்கலையில் விடப்பட வேண்டியவர் (பொய்யர்) ஆவார். கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்ற வாசகம் இடம்பெற்றுள்ள அறிவிப்பும் பலவீனமானதே என்று இமாம் உகைலீ அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இந்தச் செய்தியில் இடம்பெறும் அபூ ஆத்திகா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட வேண்டியவராவர். மேலும் இந்தச் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. இது பொய்யானதாகும். இச்செய்தியில் இடம்பெறும் வஹப் பின் வஹப் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர் என்று இப்னு அதீ அவர்கள் அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

    அபூ ஆத்திகா என்பவர் யாரென தெரியவில்லை. இவர் இந்த செய்தியை யாரிடமிருந்து பெற்றார் என்பதும் புரியவில்லை. இந்த செய்தி அடிப்படையற்ற செய்தியாகும் என்று இமாம் பஸ்ஸார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. என்றாலும் கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றில் சில இதோ:

    உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

    அல்குர்ஆன் 58:11

    அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.

    அல்குர்ஆன் 39:9

    யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

    நூல் : முஸ்லிம் (5231)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

    அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),

    நூல் : புகாரி (73)

    //சீன தேசம் சென்றாகிலும் சீர்கல்வி கற்றுக் கொள்ளுங்கள்

    என உலக மனித குலத்தின் வாழ்வியல் ஆசானாகப் பிறந்த அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் கல்வியின் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்
    //

    ஜசகல்லாஹ் க்ஹைர் ..

    http://onlinepj.com/deen_kula_penmani/dkp_2011/dkp_2011/


    ReplyDelete
  5. இஸ்லாமிய மாணவன்12:44 AM



    //சீன தேசம் சென்றாகிலும் சீர்கல்வி கற்றுக் கொள்ளுங்கள்

    என உலக மனித குலத்தின் வாழ்வியல் ஆசானாகப் பிறந்த அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் கல்வியின் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்
    //

    இது பலவீனமான ஹதீஸ் ....

    //சுவனபிரியன் பாய் ..
    சலாம் வாஞ்சூர் பாய்!

    கல்வியின் அவசியத்தைப் பற்றி அழகிய விளக்கத்ததை பகிர்ந்துள்ளீர்கள்.//

    மேலுள்ள வாக்கியத்துக்கு தான் அழகிய விளக்கம் என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறன் ..

    ..................................

    சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

    நூல்கள் : பைஹகீலிஷுஅபுல் ஈமான், பாகம் :4, பக்கம் :174,

    அல்லுஅஃபாவுல் கபீர்லி உகைலீ, பாகம் :4, பக்கம் : 162,

    ஜாமிவு பயானில் இல்மி வஃபழ்ஹிலிஇப்னு அப்துல்பர், பாகம் :1, பக்கம் :14,15,21,

    அல்காமில் ஃபீ லுஅஃபாவுல் ரிஜால்லிஇப்னு அதீ, பாகம் :1, பக்கம் 177,

    முஸ்னதுல் பஸ்ஸார், பாகம் : 1, பக்கம் : 98

    இச்செய்தியைப் பதிவு செய்த இமாம்கள் இந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை அதன் கீழே குறிப்பிட்டுள்ளார்கள்.

    இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும் என்றும் இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளர்கள். இந்தச் செய்தியில் சீனா என்ற வாசகத்தை அபூ ஆத்திகா என்பவர் மட்டுமே பயன்படுத்தியுள்ளார். இவர் ஹதீஸ்கலையில் விடப்பட வேண்டியவர் (பொய்யர்) ஆவார். கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்ற வாசகம் இடம்பெற்றுள்ள அறிவிப்பும் பலவீனமானதே என்று இமாம் உகைலீ அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இந்தச் செய்தியில் இடம்பெறும் அபூ ஆத்திகா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட வேண்டியவராவர். மேலும் இந்தச் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. இது பொய்யானதாகும். இச்செய்தியில் இடம்பெறும் வஹப் பின் வஹப் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர் என்று இப்னு அதீ அவர்கள் அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

    அபூ ஆத்திகா என்பவர் யாரென தெரியவில்லை. இவர் இந்த செய்தியை யாரிடமிருந்து பெற்றார் என்பதும் புரியவில்லை. இந்த செய்தி அடிப்படையற்ற செய்தியாகும் என்று இமாம் பஸ்ஸார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.........

    ======================================================================

    கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றில் சில இதோ:

    உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

    அல்குர்ஆன் 58:11

    அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.

    அல்குர்ஆன் 39:9

    யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

    நூல் : முஸ்லிம் (5231)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

    அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),

    நூல் : புகாரி (73)

    ===================================

    ஆகையால் நபியின் பெயரால் இட்டுக்கட்ட வேண்டாம் ...

    இட்டுகட்டினால் உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் என்ன வெகுமதி கிடைக்கும் என்று ...


    ReplyDelete
  6. சலாம் சகோ ஆஷிக்!

    //ஜசாக்கல்லாஹ் அண்ணன்... //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. சலாம் இஸ்லாமிய மாணவன்!


    //இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும் என்றும் இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளர்கள்//

    ஆதாரத்தோடு விளக்கியமைக்கு நன்றி!

    //கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றில் சில இதோ://

    ஆதாரபூர்வமான ஹதீதுகளை தந்ததற்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. nalla thakavalkal!

    ReplyDelete
  9. சலாம் அண்ணன்,

    அழகான பதிவு....பிச்சை புகினும் கற்கை நன்றே...நிச்சயம் நன்றே...
    நமது சமூகம் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளது என்பது எதார்த்தம்... இந்திய அரசால் எடுக்கப்பட்ட அனைத்து ஆய்வுகளும் அதைத்தான் சொல்கின்றன...
    இப்பொழுது நிலைமை சற்று மாறி வருவது ஆறுதல் அளிக்கும் செய்தி தான்...
    ஆனாலும் நம் இளைய தலைமுறையிடம் கல்வியின் அவசியத்தை இன்னும் அதிகம் அதிகம் சேர்க்கும் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது..

    ReplyDelete
  10. அண்ணே,

    எப்டினே இவ்ளோ பெரிய போஸ்ட் எழுதுறீங்க....டியூஷன் ஏதும் நடத்துனா சொல்லுங்க...நானும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்...
    நமக்கெல்லாம் ஒரு பத்தி எழுதவே நாக்கு தள்ளுது....

    ReplyDelete
  11. சலாம் சகோ சிராஜ்!

    //எப்டினே இவ்ளோ பெரிய போஸ்ட் எழுதுறீங்க....டியூஷன் ஏதும் நடத்துனா சொல்லுங்க...நானும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்...
    நமக்கெல்லாம் ஒரு பத்தி எழுதவே நாக்கு தள்ளுது....//

    ஹா..ஹா...வேலை நேரம் 8 மணி நேரம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தொழுகை நேரமும் இடையில் வருவதால் அதில் 40 நிமிடம் போய் விடும். எனது வேலையே ஒரு நாளில் 3 மணி அல்லது நான்கு மணி நேரம் தான். அலுவலக வேலை முடிந்து என்ன செய்வது. இணையத்தில் மேய்வது. நாம் படித்து தெரிந்து கொண்ட சில விஷயங்களை பதிவுகளாக எழுதுவது. நாலா பக்கங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விவரத்தை கிரகித்து கொண்டு உங்கள் நடையில் எழுத ஆரம்பியுங்கள். பதிவு ரெடி. இதற்கு டியூஷன் எல்லாம் தேவையில்லை. :-)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. சகோ சீனி!

    //nalla thakavalkal!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  13. இஸ்லாமிய மாணவன்10:38 AM

    நானே உங்களிடம் கேட்கலாம் என்று இருந்தேன் . எப்படி இப்புடி இணையத்தில் உங்களால் மட்டும் நேரத்தை செழவளிகிறீங்க நு .. ம்ம்ம் .. பதிலும் அளித்துவிட்டீர்கள் ..

    ReplyDelete
  14. சகோ இஸ்லாமிய மாணவன்!

    //நானே உங்களிடம் கேட்கலாம் என்று இருந்தேன் . எப்படி இப்புடி இணையத்தில் உங்களால் மட்டும் நேரத்தை செழவளிகிறீங்க நு .. ம்ம்ம் .. பதிலும் அளித்துவிட்டீர்கள் ..//

    வேலை நேரத்தில் இவ்வாறு பதிவுலகில் எழுதுவதற்கு எனக்கு சம்பளம் தரும் எனது பாஸிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் செய்கிறேன். எனவே என்னை முன் உதாரணமாகக் கொண்டு வேலை நேரத்தில் யாரும் ஆட்டையைப் போட வேண்டாம். :-) ஏனெனில் அது தவறு. சில நேரங்களில் பல பிராஞ்சுகளுக்கு நான் கணக்கெடுக்க செல்லும் போது இரண்டு மூன்று நாட்களுக்கு என்னை இணையத்தின் பக்கமே பார்க்க முடியாது. எனவே வேலைதான் முக்கியம். அது முடிந்த பிறகு சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு இது போன்று பதிவு எழுதுவது வரவேற்கப்பட வேண்டியது. இதனால் பலர் தெளிவடைகின்றனர்.

    ReplyDelete
  15. அஸ்ஸலாம் அலைக்கும்...சகோஸ்,
    // சொத்தை விற்றாவது குழந்தைகளுக்கு கல்வியைத் தந்து விட வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மவர்களுக்கு வந்துள்ளது. இதை கண்கூடாக பல இஸ்லாமிய கிராமங்களில் பார்த்து வருகிறேன். //
    உண்மைதான் சுவனப்பிரியன் பாய்...நல்ல மாற்றம் தான் இது இப்படியே தொடர்ந்தால், சில வருடங்களில் குறைந்தது 80% கல்வியறிவு பெற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாறுவார்கள் இறைநாடினால் .....
    ஆமா நா ஒன்னு கேக்கணும் ...கல்வியின் அவசியத்த பத்தி ஒரு பதிவர் பதிவ போட்டால் அதேபோல நீங்களும் போடுரீங்களே ஏன் ??!!

    ReplyDelete
  16. சலாம் சகோ நாசர்!

    //கல்வியின் அவசியத்த பத்தி ஒரு பதிவர் பதிவ போட்டால் அதேபோல நீங்களும் போடுரீங்களே ஏன் ??!!//

    நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆஷிக்கை மனதில் வைத்து சொல்லியிருந்தால் அதற்கு ஒரு பதில் உண்டு. ஏற்கெனவே இந்த பள்ளி சம்பந்தமாக மனிதாபிமானி தளத்தில் ஆஷிக் பதிவை வெளியிட்டுள்ளார். பதிவின் முக்கியத்துவம் கருதி இன்னும் பலரையும் இந்த செய்தி சென்றடைய வேண்டும் என்று என்னை ஒரு பதிவிடுமாறு ஆஷிக் கேட்டிருந்தார். எனவே தான் எனது கருத்துக்கள் சிலவற்றை சேர்த்து அவரது கடிதத்தையும் சேர்த்தேன். கல்விக்காக இன்னும் பத்து பதிவுகள் கூட எழுதலாமே! அந்த அளவு விஷயங்கள் இருக்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  17. இஸ்லாமிய மாணவன்8:59 PM


    ஸலாம்

    //வேலை நேரத்தில் இவ்வாறு பதிவுலகில் எழுதுவதற்கு எனக்கு சம்பளம் தரும் எனது பாஸிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் செய்கிறேன்.//

    இந்த மிகப்பெரும் பாக்கியம் ஒரு சில பேருக்கு தான் கிடைக்கும் ... அதுவும் நீங்கள் நல்ல வழியில் நேரத்தை செலவளிகிரீர்கள் ...

    முக்கியமா உங்க பாஸ் க்கும் உங்களுடைய து ஆ வில் அவரையும் இணைத்து கொள்ளுங்கள் ...


    நான் கொஞ்சம் விவகாரமானவன் நினைதுவிட்டீர்கள் போல ...என்னை புரிந்து மேலதிக தவகல் தந்தமைக்கு ...

    ReplyDelete
  18. கல்வி கண் போன்றது ..கற்றவன் மேன்மை

    பெறுவதும் சிறுமை அடைவதும் அவன் தேர்தெடுக்கும்

    வழியை பொருத்தது பொருள் சேர்பதற்காக குறுக்கு வழியில்

    சென்று பணம் பார்ப்பவன் ..பல வருடங்கள் காத்திருந்து

    கற்ற கல்விக்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது ..

    கற்றவரிடத்தில் ,பொறுமை .அமைதி .செய்யும் செயலில்

    நேர்த்தி .பிறர் ஆலோசனையை அங்கீகரித்தல் .,,கற்றவர்களிடத்தில்

    எத்தனையோ நற்பண்புகள் காண படும் ஆனால் அரசியலில் ,,.

    ஈடுபடும் எந்த படித்தவராக இருந்தாலும் காணாமல் போய்விடும்

    அரசியல் ஒரு சாக்கடை படித்தவர் பண்புள்ளவர் என்று எவர்

    வந்தாலும் சாக்கடைதான் ..,

    ReplyDelete
  19. இஸ்லாமிய மாணவன்7:46 AM


    சென்னையில் உள்ள SHOE COMPANY க்கு வேலை ஆள் தேவை ...

    Dear all,

    Assalamu Alaikum (sorry for writing in english).

    We are the manufactures of Shoe uppers having our head office in
    Germany and need a person urgently in our Chennai office for taking
    care of it. Main job is just to co-ordinate between our suppliers and
    our head office and sorry guys, he should be a non-muslim (as we have
    muslim friends in our office, so we require a person who should be a
    non-muslim)

    muslim friends, please help me - if any of your friends requires job,
    please ask him to send his resume with photo to my e-mail id :
    sameel.ahamed@gmail.com

    1. he should be good in MS-Office (especially MS-Excel).
    2. he should have good communication skills.
    3. Qualification : any degree.

    Salary - 12.000 to 15,000 Per Month.

    Allah Hafiz,
    Sameel.
    Contact : 9176048705.




    STILL SEARCHING FOR THE RIGHT PERSON....BROTHER/SISTERS - IF ANY OF
    NON-MUSLIM FREINDS WHO MATCH THE BELOW CRITERIA CAN SEND US THE
    RESUME

    ReplyDelete
  20. சகோ அதிரை சித்திக்!

    //கல்வி கண் போன்றது ..கற்றவன் மேன்மை

    பெறுவதும் சிறுமை அடைவதும் அவன் தேர்தெடுக்கும்

    வழியை பொருத்தது பொருள் சேர்பதற்காக குறுக்கு வழியில்

    சென்று பணம் பார்ப்பவன் //

    சிறந்த கருத்துக்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  21. ஸலாம் சகோ. சுவனப்பிரியன்

    //பத்தாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் படிக்கும் மாணவர்களில் பலர் சில கெமிக்கல்களில் தண்ணீர் கலந்து தங்களுக்கு போதை ஏற்றிக் கொள்வதாக பத்திரிக்கை செய்தியை படித்து பதறி விட்டேன். நமது தமிழ் நாட்டு மாணவர்களிடமா இப்படி ஒரு பழக்கம் என்று ஆச்சரியப்பட்டேன்.//

    ஆம் சகோ. இளைய சமுதாயம் ரொம்பவே கெட்டுப் போயிருக்கிறது. பரவி வரும் இது போன்ற நூதன போதை பற்றி நானும் இங்கே எழுதியிருக்கிறேன்.

    தங்கள் விழிப்புணர்வுப் பதிவுக்கு நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)