Wednesday, June 20, 2012

திருமணத்துக்கு முன் புலி: பின்னே பூனை!




காட்டில் ஒரு புலி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் புலியின் குடும்பத்தினர் விமரிசையாக செய்யத் தொடங்கினர். காட்டின் அனைத்து மிருகங்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. இதற்காக ஒரு மேடையும் தயார் செய்யப்பட்டது. திருமண நாளன்று விழா மேடை அலங்கரிக்கப்பட்டது. அந்த மேடையில் புலிகள் மட்டுமே நடனமாட அனுமதிக்கப்பட்டனர். மற்ற மிருகங்கள் எல்லாம் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தன. புலிகளின் நடனம் தொடங்கியது. மேடையின் ஓரத்தில் ஒரு பூனை தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தது. மணமகன் புலி மேடையில் ஒரு பூனை ஆடுவதைப் பார்த்து ஆச்சரியத்தோடு வந்து அந்த பூனையிடம் கேட்டது:

"மன்னிக்கவும்! இந்த மேடை புலிகளுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டதாச்சே! வேறு மிருகங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை"

அதற்கு அந்த பூனை சொன்னது: "எனக்கும் தெரியும். திருமணத்துக்கு முன்னால் நானும் புலியாகத்தான் இருந்தேன். எனது திருமணத்திலிருந்து பூனையாக மாற்றப்பட்டு விட்டேன். என்னை நம்பவும்!"

புலி: "!!!!!!!!!!!!!!!............"

டிஸ்கி: திருமணத்துக்கு முன் வரதட்சணை கூடாது என்று வீர வசனம் பேசிய பலர் தனது திருமணம் என்று வரும் போது 'அம்மா பேச்சை தட்ட முடியாதுல்ல..' என்று ஜகா வாங்கும் பலருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

--------------------------------



நான் முதியவனல்ல - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
6/13/2012

நான் ஒரே நேரத்தில் தென்னை மரத்தையும்

என் மகனையும் வளர்த்தேன்,

தென்னை எனக்கு நிழல் தருகிறது,

இவன் நிழலில் நானிருக்க ஒரு

அரை கூட இவன் வீட்டில் இல்லை,

தென்னை எனக்கு இளநீர் தந்தது,

இவன் இளவயதில் கூட எனக்கு நீர் தரவில்லை,

தென்னை எனக்கு தேங்காய் தந்தது,

அன்னை என்னை இவன் முதியோர் இல்லத்துக்கு தந்தான்...

என் மன வேதனை இவனுக்கு என் வயது

வரும்போது வரகூடாது என் ஆண்டவா...

நான் முதியவனல்ல - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
6/13/2012
-தின மலர்



29 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ கதை அருமை ஹி..ஹி..ஹி...

    புலிகள் எல்லாமே பூனையாவே மாறி இருந்துட்டா நல்லாத்தான் இருக்கும் :-)

    ReplyDelete
  2. சலாம் அண்ணன்,

    கதையவிட டிஸ்கி ரொம்ப அருமை...

    டிஸ்கில நிறைய பேர செருப்பால அடிச்சு இருக்கீங்க...

    தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  3. வஅலைக்கும் சலாம் சகோ ஆமினா!

    //சகோ கதை அருமை ஹி..ஹி..ஹி...

    புலிகள் எல்லாமே பூனையாவே மாறி இருந்துட்டா நல்லாத்தான் இருக்கும் :-)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. வஅலைக்கும் சலாம் சகோ சிராஜ்!

    //கதையவிட டிஸ்கி ரொம்ப அருமை...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. சிரிப்பு, சிந்தனை இரண்டும் கொண்ட அருமையான கதை.

    ReplyDelete
  6. சகோ நிஜாமுத்தீன்!

    //சிரிப்பு, சிந்தனை இரண்டும் கொண்ட அருமையான கதை. //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. பகிர்வு அருமை.

    ReplyDelete
  8. சகோ ஸ்டார்ஜான்!

    //பகிர்வு அருமை.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.சுவனப்பிர்யன்,
    பாட புத்தகத்தில் இடம் பெற தகுதி வாய்ந்த கதை..! நன்றி சகோ..!

    //'அம்மா பேச்சை தட்ட முடியாதுல்ல..'//---அப்போது அப்பா என்ன பண்ணிக்கிட்டு இருந்தாராம்..? "ஜிங்..ஜாங்..???"

    புலியை கல்யாணம் பண்ணிவிட்டு புலிக்குட்டி பெற்று அதற்கு கல்யாணம் என்றதும் அதை பூனையாக்கலாமா..?

    அப்படி ஒரு முயற்சி நடந்தாலும்...

    பூனைக்கு பிறந்ததெல்லாம் நடப்புலகில் புலியாகிக்கொண்டு இருக்கையில்... புலி ஒன்று பூனையாகலாமா..?

    இன்னும்,

    'பூனையாகும் புலியை முறத்தால் அடித்து விரட்டுவேன்' என்று கல்யாணம் ஆகாத புலிகள் சொல்லும்போதுதான், பூனைகள் பாவம்... வேருவழியின்றி புலியாகும்..!

    பின்னூட்டம் யாருக்காச்சும் புரியலைன்னா.. பதிவை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்..! :-))

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    நல்ல சிந்தனை... சகோ டிஸ்கி சூப்பர்.,
    சிந்திப்பவர்களுக்கு மிக நலம்


    == புலிகள் எல்லாமே பூனையாவே மாறி இருந்துட்டா நல்லாத்தான் இருக்கும் :-) ==

    இல்லை சகோ ஆமீனா புலிகள் புலிகளாக இருந்தால் மட்டுமே நன்றாய் இருக்கும்.

    ReplyDelete
  11. Anonymous10:46 PM

    சுவைத்தேன் நும் தேன்
    கதையில் மகிழ்ந்தேன்.

    - வள்ளுவன்

    ReplyDelete
  12. மானம் கெட்ட பயல்களுக்கு நல்ல செருப்படி......

    ReplyDelete
  13. Anonymous10:55 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    மிக சிறப்பான இன்றைக்கு தேவையான பதிவு. வீர வசனம் பேசும் இளைஞர்கள் மட்டுமல்ல அனைத்து இளைஞர்களும் சிந்திக்க வேண்டிய பதிவு.உங்கள் பணி சிறக்க இறைவன் துணை புரிவானாக.
    kalam.

    ReplyDelete
  14. சலாம் சகோ ஆஷிக்!

    //பாட புத்தகத்தில் இடம் பெற தகுதி வாய்ந்த கதை..! நன்றி சகோ..!//

    மற்ற விஷயங்களில் எல்லாம் மார்க்கம் பேசும் பலர் திருமணம் என்று வரும்போது மட்டும் தடம் மாறி விடுவதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அதற்கு பல நொண்டிக் காரணங்கள். இந்த நிலை மாறி பெண்ணுக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம்(வசதி உள்ளவர்கள்) மஹராக பணம் கொடுத்து அரபு நாடுகளைப் போல் இஸ்லாமிய முறையில் திருமணம் நடக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. சகோ சீனி!

    //nantru!//

    தமிழில் எழுத எனது பதிவில் வலப்பக்கம் 'பாமினி டு யுனிகோட்' என்ற பகுதிக்கு சென்று தமிழில் எழுதி காப்பி பேஸ்ட் செய்து விடுங்கள். சுலபமான வழி.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  16. வஅலைக்கும் சலாம் சகோ குலாம்!

    //நல்ல சிந்தனை... சகோ டிஸ்கி சூப்பர்.,
    சிந்திப்பவர்களுக்கு மிக நலம்//

    சமீபத்தில் நடந்த உங்களின் திருமணத்தையும் நபி வழியில் பல போராட்டங்களுக்கு பிறகு நடத்தியுள்ளீர்கள். இறைவன் அதற்குரிய கூலியை தருவானாக!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  17. சகோ வள்ளுவன்!

    //சுவைத்தேன் நும் தேன்
    கதையில் மகிழ்ந்தேன்.//

    பெயருக்கேற்றவாறு கவிதையும் அருமை! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  18. சகோ ஆஷா பர்வீன்!

    //மானம் கெட்ட பயல்களுக்கு நல்ல செருப்படி....//

    ரொம்பவும் கோபத்தில் இருக்கிறீர்கள். என்னசெய்வது சில நேரங்களில் இந்த வரதட்சணை பிரச்னையில் பெண்களின் ஈடுபாடுதான் அதிகமாக இருக்கிறது. மணமகனின் தாயாரும் அக்கா தங்கைகளும்தான் ஊர் மதிக்க வேண்டும் என்ற காரணத்தை சொல்லி பெண் வீட்டிலிருந்து சீதனங்களை பெறுகின்றனர். அதற்காக அந்த பெண் வீட்டார் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்பவர்களாகவும் இல்லை.

    சில வீடுகளில் மாப்பிள்ளை எதுவும் வேண்டாம் என்றால் 'பையனுக்கு ஏதும் குறையோ' என்ற பேச்சும் வருகிறது. இன்றும் சில வீடுகளில் மாப்பிள்ளை வீட்டார் கேட்கா விட்டாலும் 'என் மகளுக்கு நான் செய்வதை செய்தே தீருவேன்' என்று இவர்களாக அனுப்புவதும் உண்டு.

    எனவே இந்த தவறில் பலரும் பங்கு கொள்கிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  19. சகோ கலாம்!

    //மிக சிறப்பான இன்றைக்கு தேவையான பதிவு. வீர வசனம் பேசும் இளைஞர்கள் மட்டுமல்ல அனைத்து இளைஞர்களும் சிந்திக்க வேண்டிய பதிவு.உங்கள் பணி சிறக்க இறைவன் துணை புரிவானாக.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  20. நல்ல கதை ...எத்தனை கதை .வந்தாலும்

    செவிடன் காதில் ஊதிய சங்குதான் ..

    சுய நலமிக்க .துணைவி ....

    கட்டுப்படுத்துவதும் ..காலம் சென்ற பின்

    தாய் ,,ஸ்தானம் ..மகன் திருமணம் .

    மகனின் மனைவி ..தொடரும் கதைகள் ..

    ReplyDelete
  21. சகோ அதிரை சித்திக்!

    //நல்ல கதை ...எத்தனை கதை .வந்தாலும்

    செவிடன் காதில் ஊதிய சங்குதான் ..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  22. Anonymous3:30 AM

    செவிடன் காதில் ஊதிய சங்குதான்

    intha pathil ungalukku than

    ReplyDelete
  23. ஆசா பர்வீன் அவர்களுக்கு சொன்ன பதில்தான் இடுகையாக இருந்திருக்கணும்!

    ReplyDelete
  24. சகோ ஷர்புதீன்!

    //ஆசா பர்வீன் அவர்களுக்கு சொன்ன பதில்தான் இடுகையாக இருந்திருக்கணும்!//

    என்னதான் தாயாரும் சகோதரிகளும் வரதட்சணைக்கு ஆதரவாக நின்றாலும் மணமகன் தனது எதிர்ப்பை அதிகப்படுத்தினால் முடிவில் அவர்கள் வழிக்கு வந்தே ஆக வேண்டும். தாயார் என்பதற்காக ஒரு பாட்டிலில் விஷம் என்று தெரியாமல் கொடுக்கிறார்: அது விஷம் என்பது மகனுக்கு தெரிகிறது: அந்த மகன் தாய் சொல்லைத் தட்டக் கூடாது என்பதற்காக விஷத்தை உடன் குடித்து விடுவாரா? இல்லையே! தாய்க்கு அந்த பாட்டிலில் விஷம் இருப்பதை விளக்குவார் இல்லையா? அது போல் வரதட்சணையால் வரும் சீரழிவுகளை பக்குவமாக எடுத்துச் சொன்னால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். ஆதாரத்துக்கு வேத வசனங்களையும் நபி மொழிகளையும் எடுத்தாளலாம்.

    ReplyDelete
  25. ///தாயார் என்பதற்காக ஒரு பாட்டிலில் விஷம் என்று தெரியாமல் கொடுக்கிறார்: அது விஷம் என்பது மகனுக்கு தெரிகிறது: அந்த மகன் தாய் சொல்லைத் தட்டக் கூடாது என்பதற்காக விஷத்தை உடன் குடித்து விடுவாரா? //

    ரொம்ப பழசு பாய்!

    அமைதிப்படை என்ற படத்தில் நாத்திகராக ( அரசியல்வாதியாக ) வரும் சத்யராஜ் ஒரு ஜோசியர் சொன்னதை நம்பி சிறிய வயது பெண் ஒருவரை மனம் முடித்தால் தனது பதவி நிலைக்கும் என்பதற்காக திருமணம் செய்வார், மணிவண்ணண் அவரிடம் " ஜோசியத்தை நம்புகிறாயா ?"என்று கேட்கும் பொழுது சத்யராஜ் சிரித்துக்கொண்டே அவரது நக்கலான பாணியில் " வேப்பில்லையை திங்க சொன்னால் கசக்கும், கர்மம்.... தேனைதானே குடிக்க சொல்கிறார் , செய்துதான் பார்ப்போமே," என்பார்.

    எனக்கென்னவோ மணமகன் மனிதன்தானே, பலகீனமானவனாக இருப்பான் என்றே தோன்றுகிறது. பீஜே - ஜவாஹி போன்ற நல்லுபதேசகாரர்கள் அவர்களுக்குள் சலாம் சொல்லாமல் இருப்பது இஸ்லாமியத்தை நம்பாமல் அல்லவே... பலகீனம்தான். பீஜே - ஜவாஹி செய்கின்ற மனித தவறுகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.,, இப்ப இல்லே, மறுமை நானில்தான், அதுவரைக்கும் பிடரி நரம்பில் இருக்கும் மடையனை கொஞ்சம் எமாத்திகொண்டால் என்னவாகிவிட போகிறது !!

    அமீர்கா"னே" ஓரளவுக்காகவது யோக்கியனாக இருக்கவேண்டி இருக்கிறது நம்மை பார்த்து காலையில் பல்விளக்கி கொள் என்று சொல்ல...

    டிஸ்கி -
    அவர்களுக்குள் உள்ள இந்த சிறிய விஷயத்தை மட்டுமே பூதாகரமாக அடிக்கடி சொல்லிகாடுவதை நேரிடை அர்த்தமாக எடுத்துகொண்டால் சொல்லிவிடுங்கள், காரணம் ...நீங்கள் என்னுடன் தொலைபேசியில் உர்யாடவேண்டி வரலாம், சில தெளிவுகளுக்காக...


    மற்றபடி எனக்கு தெரிந்தது இதுஒன்றுதான் ! இஸ்லாமியத்தை அல்லாஹு அக்பர் என்று உணர்ச்சியோடு கத்துவதற்கு மட்டும் உபயோகிக்க தெரியாது ..பயானை புல்லரிக்க கேட்டுவிட்டு ஜும்மா தொழுதுவிட்டு, அதன் பின் பார்க் பண்ணிய வண்டியை எடுக்கும் போது பயனை மீண்டும் ஞாபகபடுத்தி பார்த்துகொண்டு அதற்குரிய முறைகளை பின்பற்ற துடிக்கும் ( துடிக்கும்...அவ்வளவுதான் ) சாதாரன ஜீவன் நான்.

    நீங்களும் பிடரி நரம்புக்காரனை எப்பொழுதும் ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் போதிக்கிறீர்கள், பார்போம் ...

    ReplyDelete
  26. //பீஜே - ஜவாஹி செய்கின்ற மனித தவறுகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.,, இப்ப இல்லே, மறுமை நானில்தான்,//

    பிஜே மட்டும் விதிவிலக்கா என்ன? அவரும் மனிதர்தான். அவர் ஏதும் தவறு செய்திருந்தால் அதற்குரிய பலனை மறுமையில் அடைந்து விட்டுப் போகிறார்.

    //அதுவரைக்கும் பிடரி நரம்பில் இருக்கும் மடையனை கொஞ்சம் எமாத்திகொண்டால் என்னவாகிவிட போகிறது !!//

    மடையன் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? படைத்த இறைவனை என்றால் அதற்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்.

    //பயனை மீண்டும் ஞாபகபடுத்தி பார்த்துகொண்டு அதற்குரிய முறைகளை பின்பற்ற துடிக்கும் ( துடிக்கும்...அவ்வளவுதான் ) சாதாரன ஜீவன் நான்.//

    சம்பிரதாயமாகவம் சடங்காகவும் இல்லாமல் வாழ்க்கையில் கூடிய வரை செயல்படுத்த நினைப்பவன். நிங்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

    ReplyDelete
  27. Anonymous7:21 PM

    ப்ளாக் எழுதும் நபர் தன்னுடைய திருமணம் எப்படி ...பூனையா ? புலியா ?

    இல்லை பூனைப்புலியா ? அதென்ன பூனைபுலி கேட்க வரீங்களா ? உங்கள் பதிலுக்கு பின் நானே சொல்றேன் ...

    பூனைபுலி ?

    ReplyDelete
  28. பிடரி நரம்பு மேட்டர் குறித்து -
    , என்னிடம் யார் எனது சிறிய குற்றகளுக்கு பிடரி நரம்பில் இருக்கும் ....................வனை நினைத்து பயந்துகொள்ளுங்கள் என்றாரோ அவர் அதே அளவிற்கு பயந்து கொள்ளவில்லை, ஆகவே இது போன்ற தவறுகளை (உணர்ந்தே)செய்துவிட்டு போகின்றேன்,., மறுமையில் அவருக்கு எனக்கும் ஒரே தண்டனைதானே, அனுபவிப்போம், ( பதிவு செய்யவே இப்படி சொல்கின்றேன் , நான் நல்ல மனித பிறவி என்றே பெயருக்கு மட்டுமே ஆசைபடுகிறேன்)

    இது போன்ற வாதங்களில் உங்களிடம் ஜெய்க்க வேண்டு என்பதற்காக பேசவில்லை, ( உங்களிடம் நான் ஏதும் இதுவரையில் சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் காணவில்லை, பழகினதும் இல்லை) எனது ஒரே கோவம்... இரண்டு ஒரே சிந்தனை உடைய , ஒரே இன மக்களுக்காக , இறைவனின் தக்வாவோடு, ஐந்துவேளை தொழுகின்ற , பயப்படுகின்ற?! இருவர் பேசிக்கொள்வதில், சமுதாய முன்னேற்றத்தில் ஒன்றாக பாடுபட விர்ப்பபடாத , ஒருவரை ஒருவர் குறைசொல்கின்ற தலைவர்களும், நித்யானந்தா போன்றவர்களும் எனக்கு ஒரே மாதிரிதான்!! கேவலம் உலக வாழ்க்கை வாழ்கின்ற சிறிய கட்சிகளின் தலைவர்கல் , நரகம் போகப்போகும் அந்த தலைவர்கள் ஒரு சீட்டுக்காக தங்களது ரோசம், கோவம் , மானம் இவற்ற்றை அடகு வைத்து வாழும் போது, சொர்க்க ம் மட்டுமே குறிக்கோள் ( அல்லாஹு அக்பர் என்று சத்தமாக சொல்லிகொல்வார்கள் இந்த மாதிரி வார்த்தை வரும் பொழுது ) என்ற இவர்கள் எந்த வகையில் மற்றவர்களுக்கு நல்லுபதேசம் செய்கிறார்கள்? நித்தியானந்தா அவரது சொல்லுக்கும், நடைமுறைக்கும் மட்டுமே வித்தியாசம் இருக்க கூடாது, இவர்களிடம் இருந்தால் ...பரவாயில்லையா?!

    ஆயிரம் பேர்களை கூட்டம் கூட்டினாலே இவ்வளவு "பலகீனமானவனாக " இவர்கள் இருந்துகொண்டால்., லட்ச கூட்டங்களை கூட்ட சக்தி உள்ள ஜார்ஜ் புஷை - மோடியை - etc இவர்களை நான் குறைசொள்ளமாட்டேன், அவர்கள் அப்படிதான் இஸ்லாமியர்களை எதிர்க்க /அழிக்க பார்ப்பார்கள் .. நீங்களும் போராடிகொன்றே இருங்கள், அவர்களும் கொஞ்சம் பெரிய பலகீனமானவர்கல்தான், பலகினவர்களுக்குள் அடிதடி செய்ய முடிகின்ற நான் எப்படி தூரத்தில் உள்ள சொந்தமோ , பந்தமோ இல்லாத மோடி அடிப்பதை குறை சொல்ல ம்டுயும் ? ( அப்ப அடி வாங்கி கொன்றே இருக்கணும் அப்படிதானே? என்று கேட்டால், இல்லை இல்லை, அவர்கள் அடிப்பார்கள் , நீங்கள் தனி தனியாக நிட்று கூவிக்கொண்ட்ர்எ இருங்கள்.)

    மார்க்கம் சரியானதுதான், மனிதர்கள்தான் சரியில்லை என்றே நானும் சொல்கின்றேன், ஆனால் நான் இவுலக வாழ்க்கையையும் வருசையில் நின்று முறையாக அனுபவிக்க விரும்புகிறேன். அவர்கள் முதலில் வருசையில் வருவதை கற்று கொள்ள சொல்லுங்கள், நானும் வருசையில் வருகிறேன்!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)