Saturday, July 21, 2012

நோன்பு : பகலே இரவாகி, இரவே பகலான விநோதம்!

நோன்பு : பகலே இரவாகி, இரவே பகலான விநோதம்!


ஆம்...சவுதியை பொறுத்த வரை ரமலான் வந்து விட்டால் பகல் இரவாகி விடும். இரவு பகலாகி விடும். 80 சதமான நபர்களுக்கு வேலை நேரமும் மாற்றலாகி விடும். என்னுடைய வேலை நேரமும் மாறி விட்டது. நோன்பு வைப்பதற்காக நடு நிசியில் 3 மணிக்கு சாப்பிட்டு விட்டு 4 மணிக்கெல்லாம் தொழுகைக்கு பள்ளிக்கு சென்று விடுவேன். தொழுது முடித்து அருமையான தூக்கம். அதன் பிறகு 11 மணிக்கு எழும்பி குளித்து விட்டு மதிய தொழுகைக்காக பள்ளிக்கு செல்வேன். அதன் பிறகு அலுவலக வேலை ஆரம்பம். 3 மணி 30 நிமிடத்தில் வேலை முடிந்து விடும். பிறகு மாலை நேரத் தொழுகை. தொழுகை முடிந்து கணிணி முன்னால் உட்கார்ந்து சிறிது டைம் பாஸ். அதன் பிறகு நோன்பு திறக்க தயாராக வேண்டும். நோன்பு திறந்தவுடன் தொழுது விட்டு பிறகு ஒரு குட்டி தூக்கம்.

பிறகு இரவு தொழுகை. தொழுது முடித்து இரவு 10 மணிக்கு வேலை ஆரம்பம். நடுநிசி 2 மணிக்கு வேலை முடியும். பிறகு சிறிது ஓய்வெடுத்து விட்டு சாப்பாடு. இது ரமலானின் எனது தொடர் வேலை. நோன்பின் களைப்பே தெரியாமல் பலருக்கு வேலை அமைந்திருக்கும். எனவேதான் நான் அதிகம் ரமலானில் சவுதியில் இருக்க பிரியப்படுவேன்.



ரமலான் வந்து விட்டால் பார்ட்டிகளுக்கும் குறைவிருக்காது. நோன்பு திறக்க தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து சிறந்த உணவு பதார்த்தங்களோடு பார்ட்டிகள் அமைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் இந்த காணொளியில் நீங்கள் பார்ப்பது.





நோன்பு வைக்க முடியாத வயோதிகர்கள், நோயாளிகள் அதற்கு பகரமாக ஒரு நபருக்கு உணவு அளிக்கும்படி குர்ஆன் கூறுவதால் பலர் தங்களின் வாகனங்களில் 100, 200 பாக்கெட்டுகள் பிரியாணி மற்றும் பழங்கள் ஜூஸ் வகையறாக்களையும் சமோசாக்களையும் ஏற்றிக் கொண்டு பள்ளிகளில் தந்து விட்டு செல்வர். அரசாங்கமும் பள்ளிகளுக்கு நோன்பாளிகளுக்காக சாப்பாட்டை அனுப்பி வைக்கும். இது பல பள்ளிகளிலும் டென்ட்களிலும் நடக்கும். அதற்கு முன்னால் அழகிய முறையில் இஸ்லாமிய போதனைகள் நடைபெறும். மேலும் சவுதி இளைஞர்கள் உணவுகளை பரிமாறுவதில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்பர். சவுதி பெண்கள் வீடுகளில் சமைத்த உணவு பதார்த்தங்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பர். பள்ளிகள் அனைத்தும் தொழுகையாளிகளால் நிரம்பி வழியும். இரவு தொழுகையில் பெண்களும் பங்கு பெற அனைத்து பள்ளிகளிலும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். பெண்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவர். தற்போது தமிழகத்திலும் பெண்கள் இரவு தொழுகைக்கு பள்ளிக்கு வருவது அதிகரித்திருக்கிறது.

எங்கு நல்லது நடந்தாலும் அங்கு மூக்கை நுழைக்கும் அமெரிக்கா 'இது போன்ற டென்ட்களில் தீவிரவாத பிரசாரம் நடக்கிறது. எனவே இதனை தடை செய்யுங்கள்" என்று மன்னரிடம் முன்பு கோரிக்கை வைத்தது. அதற்கான ஆதாரத்தை மன்னர் கேட்டார். ஆதாரம் தர இயலாது மூக்குடைபட்டனர் அமெரிக்க அதிகாரிகள்.

"நீங்கள் ஆதாரம் தரவில்லையாதலால் டென்ட்களை தடை செய்யவும் முடியாது" என்று மன்னர் மறுத்து விட்டார். எந்த நேரமும் இசையும், குடியுமாக இருக்கும் பல பிலிப்பைன் நாட்டவர் இஸ்லாத்தை ஏற்றவுடன் எவ்வளவு அழகிய வாழ்க்கை முறையை பேணுகிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.




ரமலானில் மெக்கா சென்று உம்ரா செய்தால் நன்மைகள் அதிகம் என்பதனால் இந்த மாதத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அந்த நேரங்களில் கஃபாவை பார்ப்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சி. இந்த காணொளியில் அதையும் பாருங்கள்.

பல இந்து கிறித்தவ நண்பர்கள் தாங்களாகவே விரும்பி ரமலான் மாதங்களில் இஸ்லாமியர்களோடு சேர்ந்து நோன்பிருப்பர். அது அவர்களுக்கு பெரும் மன நிறைவை கொடுப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். நோன்பில்லாத மாற்று மத சகோதரர்கள் யாரும் சொல்லாமலேயே நோன்பாளிகளுக்கு முன்னால் சாப்பிட மாட்டார்கள். 95 சதவீத மக்கள் நோன்பிருப்பதால் அந்த சூழ்நிலையே அவர்களை மறைவாக சென்று சாப்பிட சொல்லும். சிறு குழந்தைகள் நோன்பிருக்கும் பொது அவர்களுக்கு முன்னால் பெரியவர்கள் சாப்பிட்டால் குழந்தைகளின் மனது பாதிக்கப்படும் என்பதாலேயே நோன்பாளிகளுக்கு முன்னால் சாப்பிட வெண்டாம் என்று மாற்று மத நண்பர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பகல் நேரங்களில் உணவகங்கள் அனேகமாக ஆட்கள் இல்லாததால் பூட்டப்பட்டிருக்கும். இரவில் விடிய விடிய வியாபாரம்தான்.



கஃபாவை சுற்றி இரவில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காணொளி!



சவுதியில் நோன்பு திறக்க வைக்கும் பதார்த்தங்களில் சமூசா முக்கிய இடம் பிடிக்கும். சேமியானும் முக்கிய இடத்தை பிடிக்கும். அது தயாரிக்கும் முறையை விளக்குகிறது இந்த காணொளி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அல்லாஹ் கூறுகிறான்)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.1894

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.

அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

சவுதி உள்துறை அமைச்சகத்தின் ரமலான் அறிவிப்பு:

Sunday 22 July 2012

The Ministry of Interior has urged non-Muslim expatriates to understand the sentiments of Muslims and respect the sanctity of Ramadan by not eating and drinking publicly during daylight hours.

“The non-Muslim expatriates in this country should respect the sentiments of Muslims by not eating, drinking and smoking in public places, including roads and workplaces,” stated an Interior Ministry statement issued by the Saudi Press Agency.
The ministry warned that those who violated the regulations will have to face deterrent punishments such as deportation or sacking.
The statement added that eating and drinking openly during daylight hours are seen as an embarrassment to Muslims, as abstaining from foods and drinks are one of the visible features of Ramadan since fasting was made obligatory to Muslims centuries ago.

“Being a non-believer of Islam does not exempt an expatriate from being inconsiderate of the feelings of Muslims and the Islamic symbols of this country,” the ministry said.

The statement also said that the ministry hoped workers would honor the terms of their work contracts, which stipulate that anyone living in this country should follow the laws of the Kingdom, including respecting religious sentiments.
The statement also asks companies and establishments to explain these instructions to their employees.

Restaurants and eateries will only open at sunset, the time fast-breaking occurs.
The ban on public consumption will last until Aug.18, the last day of fasting if this year’s Ramadan is 30 days long.

The Ministry of Civil Service and the Ministry of Labor have set the working hours for public and private sector employees during Ramadan. The working hours for all public offices have been modified for the month of Ramadan. According to a Civil Service Ministry statement, government offices will work five hours from 10 a.m. to 3 p.m.

On the other hand, private sectors will work six hours per day during Ramadan if employers fix working hours on a daily basis. If employers fix working hours on a weekly basis, then employees will work 36 hours.

An official of the Labor Ministry said there was a provision in the Labor Law that Muslim employees need to work only six hours instead of eight during Ramadan.
There is already a ban on working in the open air from noon to early afternoon because of high summer temperature.


எல்லோருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

29 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    அந்நாட்டில் நோன்பு நேரம் எப்படி இருக்கும் என கண்முன் காட்டியது போல் இருந்தது... ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

    ReplyDelete
  2. எல்லோருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    ========================

    //காரிகன் said ...... 21 July 2012 05:37

    இந்துக்களின் சதி என்னும் மனைவியை கணவனின் சடலத்தோடு தீயிட்டு கொளுத்துவது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம். ...........

    சதி என்னும் பழக்கம் இஸ்லாமியரின் வருகைக்கு பின்தான் பிரபலமடைந்தது என்பதே உண்மை. ஒரு விதத்தில் சதி இஸ்லாமிய சதி என்று கூட சொல்லலாம்.//

    இஸ்லாத்துக்கெதிராக விஷ வித்துக்களை விதைக்க எப்படி எப்படியெல்லாம் யோசிப்பார்களோ? இப்படியெல்லாமா?

    இந்துக்களின் சதி என்னும் உயிருடன் மனைவியை கணவனின் சடலத்தோடு தீயிட்டு கொளுத்தும் காட்டுமிராண்டித்தனம் இஸ்லாமிய சதியாமே?

    “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, ---அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். எழுதிய CLICK HERE “இந்துமதம் எங்கே போகிறது” TO READ என்ற நூலில் இருந்து இதோ:-

    இறந்தகணவனுடன் மனைவியையும் உயிருடன் எரித்துவிடு. வேதம்.

    ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை? ஆறுதல் மொழிகள்தானே...

    ``கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...’’- இப்படித்தானே சொல்லவேண்டும்?

    அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

    `பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...’இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

    ``உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்? அதனால்...

    உன் கணவனோட நீயும் போய்விடேன். அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்து விடுகிறோம் சரியா?

    அதனால்...? ஆமாம்மா புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா?

    அதனால் உன் கணவனோட நீயும் போய்விடேன்.அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்துவிடுகிறோம் சரியா?

    அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்

    வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது.

    கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச் செயல்தான் சுருக்கமாக ‘சதி’ என அழைக்கப்பட்டது.


    SOURCE: CLICK HERE “இந்துமதம் எங்கே போகிறது” TO READ


    Rig Veda sanctions sati

    This most ancient text sanctions or prescribes sati.

    This is based on verse 10.18.7, part of the verses to be used at funerals.

    इमा नारीरविधवाः सुपत्नीराञ्जनेन सर्पिषा संविशन्तु |
    अनश्रवो.अनमीवाः सुरत्ना आ रोहन्तु जनयोयोनिमग्रे || (RV 10.18.7)

    Let these women, whose husbands are worthy and are living, enter the house with ghee (applied) as collyrium (to their eyes).

    Let these wives first step into the pyre, tearless without any affliction and well adorned.[62]


    .

    ReplyDelete
  3. டியர் சுபி பாய் அஸ்ஸலாமு அலைக்கும். i don't have any objection regarding the fasting in the (Holy) month of Ramadan. as per my knowledge fasting means we should take "less intake" in the normal cycle. but few days ago food materilas price increased in u.a.e due to the expectation "over consume" in the month of fasting. what is the lagic behind that "avoid food in day time and more intake at night". we r taking food 3 times at day time as per our south indai culture. so our body cylce also has been set according to that. if we take more food and night and avoid food at day; our body cycle also will get adjust according to that (with in few days). if we work only at night in time which we are allowd to have food, and we are sleeping in time time in which we are not alowed to take food. i'm not able understand this logic.

    என்னுடைய குறைந்த பட்ச்ச புரிதல்கலை வைத்து இந்த பின்னுட்டத்தை இட்டுறுக்கின்றேன். பதில் சொல்லவும்.

    kannan from abu dhabi

    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  4. வஅலைக்கும் சலாம் சகோ ஆமினா!

    //அந்நாட்டில் நோன்பு நேரம் எப்படி இருக்கும் என கண்முன் காட்டியது போல் இருந்தது... ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. திரு சாமி கண்ணன்!

    //we r taking food 3 times at day time as per our south indai culture. so our body cylce also has been set according to that. if we take more food and night and avoid food at day; our body cycle also will get adjust according to that (with in few days).//

    ஒரு மனிதன் ஒட்டகம் தண்ணீரை சேகரிப்பது போல் ஒரு நாள் உணவு முழுவதையும் சேகரித்து வைத்து விட முடியாது. அதே போல் தண்ணிர் தாகம் எடுப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. எனக்கு முன்னால் நான் சம்பாதித்து வாங்கிய வித விதமான உணவு பதார்த்தங்கள் இருக்க எனனை படைத்த இறைவன் எனக்கு கட்டளையிட்டதனால் நான் உண்ண மாட்டேன் குடிக்க மாட்டேன் என்று தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த நோன்பு அமைகிறது. ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் ஒரு மனிதன் இந்த பாடு படுகிறான். அந்த உணவையே இறைவனுக்காக தியாகம் செய்யும் போது அந்த இறைவனின் மற்ற கட்டளைகளையும் கடை பிடிக்க தொடங்கி விடுகிறான். எனவே வயிற்று பசி மட்டுமே இங்கு பார்க்கப் படுவதில்லை. இதன் மூலம் இறைவனின் ஒரு கட்டளையை செயல்படுத்துகிறோம் என்பது தான் முன்னுக்கு வர வேண்டும்.

    //if we work only at night in time which we are allowd to have food, and we are sleeping in time time in which we are not alowed to take food. i'm not able understand this logic.//

    நான் முன்பே சொன்னது போல் வயிற்று பசி மட்டுமே இங்கு பிரதானமாக பார்க்கப்படுவதில்லை. பல இஸ்லாமல்லாத ஏழைகள் தினமும் வயிற்றுப் பசியோடு உள்ளனர். அது அவர்களின் வறுமையினால். ஆனால் இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக சாப்பிடும் நேரத்தை மாற்றுகிறோம். வேலை நேரத்தை மாற்றுகிறோம். மனைவியோடு கூடுவதில்லை. ஏழைகளுக்கு உணவளிக்கிறோம். இறைவனை அதிகமதிகம் பிரார்த்திக்கிறோம். அடுத்து வருடம் முழுவதும் தொடர்ந்து நமது வயிற்றுக்கு வேலை கொடுப்பது நிறுத்தப்பட்டு ஒரு மாதம் சிறிது ஓய்வு கொடுக்கிறோம். மருத்துவ துறையும் இதனை ஆதரிக்கிறது. ஏழைகளின் பசி எப்படி இருக்கும் என்பதையும் இந்த நோன்பு நமக்கு உணர்த்துகிறது.

    மேலும் இரவு முழுவதும் யாரும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதில்லை. நமது உடலும் ஏற்றுக் கொள்ளாது. அடுத்து பள்ளியில் ஒரு மனிதர் நிழல் இருக்க வெயிலில் தேவையில்லாமல் நின்று கொண்டிருந்தார். இதைக் கவனித்த முகமது நபி 'ஏன் அவ்வாறு அந்த மனிதர் நிற்கிறார்?' என்று கேட்டார். அதற்கு அவரது தோழர்கள் 'வெயிலில் நின்று தன்னை வருத்திக் கொண்டு இறைவனை வழிபடுவதாக' சொல்கிறார் என்றனர். உடனே முகமது நபி 'அவரை நிழலுக்கு வரச் சொல்லுங்கள். அறியாமைக் கால பழக்கங்களை தூரமாக்கவே நான் வந்துள்ளேன்.' என்றவுடன் அவரும் நிழலுக்கு வந்து விடுகிறார். எனவே உடலை சிரமத்துக்குள்ளாக்க வேண்டும் என்ற நோக்கம் நோன்பில் கிடையாது என்பதை நாம் விளங்குகிறோம். இறைவனின் கட்டளையை செயல்படுத்துகிறோம் என்பதுதான் பிரதானமாக இங்கு வர வேண்டும்.

    "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்"
    -முகமது நபி

    ReplyDelete
  6. சலாம் சகோ உண்மைகள்!

    //சதி என்னும் பழக்கம் இஸ்லாமியரின் வருகைக்கு பின்தான் பிரபலமடைந்தது என்பதே உண்மை. ஒரு விதத்தில் சதி இஸ்லாமிய சதி என்று கூட சொல்லலாம்.//

    ஹா...ஹா...இதை இந்துத்வ வாதிகளே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கோடங்கிக்கு ஏற்ற ஆள்தான் காரிகனும். நான் இது போன்ற பதிவுகளை ஹாஸ்யமாக எடுத்துக் கொண்டு சிரித்து விட்டு போய் விடுவேன். என்ன செய்வது..கோடங்கிக்கு தனது மதம் இவ்வளவு சீர்கெட்டிருக்கிறதே அது போல் இஸ்லாமிய கருத்துகளையும் திரித்து தனது பொய்களை அரங்கேற்ற துடித்துக் கொண்டிருக்கிறார். முன்பு இக்பால் செல்வனின் பதிவுகள் தரமாக இருக்கும். தற்போது கோமாளித் தனமாக இருக்கிறது. நீங்களும் சிரித்து விட்டு சென்று விடுங்கள். சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  7. //டியர் சுபி பாய் அஸ்ஸலாமு அலைக்கும்.//

    வஅலைக்கும் சலாம் சகோ சாமி கண்ணன். முதல் பின்னூட்டத்தில் சலாமை கவனிக்கவில்லை. எனவே இந்த பிரத்யேக பின்னூட்டம். :-)

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. Anonymous8:30 AM

    ரமதான் நோன்பு இருப்போருக் எனது வாழ்த்துக்கள் !

    ஆனால் சௌதி அரசின் மிரட்டல் தொனியிலான அறிவிப்பு வருத்தமளிக்கின்றது. நோன்பினை விரும்பாதோர் மீது கட்டாயப் படுத்தாதீர்கள்.

    சதி என்னும் பழக்கத்துக்கு இஸ்லாமியர் தான் காரணம் என்பதை நான் எங்கே ஏற்றுக் கொண்டேன், ஆனால் முகாலயர் ஆட்சியில் இது பரவலாக பல இந்துக்களால் பின்பற்றப் பட்டது என்பது உண்மை ... ! எந்த மதமோ சிறந்தது என நான் ஒருபோதும் கூறியதும் இல்லை. இந்துத்வாதி என்று என்னை பலர் கூறி அலைவதும் நகைப்பைத் தருகின்றது ... நன்றிகள் !

    ReplyDelete
  10. Anonymous9:21 AM

    Hello suvanapriyan,

    Do you know that you are effectively seeding islamic hatred among some passerby readers?

    After reading bloggers like you, I have started hating islam for hating other religions.

    You are a Hindu hater and effectively create a rift between Hindus and muslims.

    Are you doing this intentionally or you do not know the effect?

    ReplyDelete
  11. Anonymous9:29 AM

    ராவணன் said...

    எப்படா நோன்பு முடியும் என்று காத்திருந்து ஒரு கட்டு கட்டிவிட்டு, மீண்டும் விடிவதற்கு முன் பெரும் கட்டை கட்டிவிட்டு அதற்குப் பெயர் நோன்பா?

    பகலில் வேலை செய்யவேண்டும், பகலில் நோன்பு இருக்கவேண்டும். எந்த அரபிக்காரனாவது இருப்பானா?

    நான் இருப்பேன். எந்த இறைவனையும் நான் நம்புவதில்லை.

    ReplyDelete
  12. அனானி!

    //You are a Hindu hater and effectively create a rift between Hindus and muslims.

    Are you doing this intentionally or you do not know the effect?//

    சில தலைமுறைகளுக்கு முன்னால் எனது மூதாதையர்கள் பின்பற்றிய மார்க்கம் தானே இந்து மதம்.! இதில் இந்து மதத்தை வெறுக்கவோ அல்லது அதை பின்பற்றுபவர்களை வெறுப்பதோ எப்படி எனது செயலாக முடியும்? நான் இது வரை 500 பதிவுகள் வரை எழுதியுள்ளேன். ஒரு பதிவிலாவது இந்து மதத்தை தாக்கியோ இந்துக்களை தாக்கியோ பதிவிட்டதாக ஒன்றைக் காட்ட முடியுமா? இந்து தெய்வங்களை நான் கிண்டலடித்தும் எந்த பதிவுகளும் எழுதியதில்லை. குதர்க்கமாக எவரும் கேள்விகள் கேட்டால் அதை விளக்குவதற்காக சில உதாரணங்களை சொல்லியிருக்கிறேன். அவர்கள் அவ்வாறு கேட்டிருக்கா விட்டால் அந்த கேள்விகளும் எழுந்திருக்காது.

    இன்றும் எனக்கு அதிகம் இந்து நண்பர்களே உள்ளனர்.

    ReplyDelete
  13. இக்பால் செல்வன்!

    //ஆனால் சௌதி அரசின் மிரட்டல் தொனியிலான அறிவிப்பு வருத்தமளிக்கின்றது. நோன்பினை விரும்பாதோர் மீது கட்டாயப் படுத்தாதீர்கள்.//

    இங்கு யார் கட்டாயப் படுத்தியது? பகல் நேரங்களில் எதுவும் சாப்பிட வேண்டும் என்றால் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்ளுங்கள். சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ள ஒருவர் நோன்பு வைத்துள்ளார். அவருக்கு முன்னால் நீங்கள் சிகரெட் பிடித்தால் அது அவரின் எண்ணங்களை சில நேரங்கள் சிதறடிக்கலாம் அல்லவா? அடுத்து சிறு குழந்தைகள் கூட இங்கு நோன்பு பிடிப்பார்கள். கடைத் தெருவில் நீங்கள் வெயில் நேரங்களில் குளிர் பானங்களை ரமலானில் அருந்தினால் அது அந்த குழந்தைகளை பாதிக்காதா? எனவே தான் சவுதி அரசு ஒரு வேண்டுகோளாக 'நோன்பாளிகளுக்கு கண்ணியம் தரும் விதமாக பொது இடங்களில் பகல் நேரங்களில் உண்ணுவதோ குடிப்பதோ தவிர்த்து கொள்ளுங்கள்' என்ற அறிக்கையை விட்டுள்ளது.

    இவர்கள் அறிக்கை விடா விட்டாலும் இந்து கிறித்தவ நண்பர்கள் பொது இடங்களில் ரமலானில் உணவு, குளிர் பானங்கள் முதலியவற்றை தொட மாட்டார்கள். எதுவாக இருந்தாலும் ரூமில் சென்றுதான் சாப்பிடுவார்கள். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதே! இதை பலரும் விரும்பியே செய்கின்றனர்.

    //ஆனால் முகாலயர் ஆட்சியில் இது பரவலாக பல இந்துக்களால் பின்பற்றப் பட்டது என்பது உண்மை//

    தமிழர்கள் தினமும் மூன்று வேளை சாப்பிடும் பழக்கம் ஜெயலலிதா ஆட்சியில் அதிகமாக பின்பற்றப்பட்டது என்பதும் உண்மை. :-)

    ReplyDelete
  14. ராவணன்!

    //பகலில் வேலை செய்யவேண்டும், பகலில் நோன்பு இருக்கவேண்டும். எந்த அரபிக்காரனாவது இருப்பானா?//

    அரசு அலுவலகங்கள் அதிகமாக இயங்குவது காலை நேரங்களில்தான். அதில் அதிகம் வேலை செய்வது சவுதிகள் தான். அத்தனை பேருமே நோன்பிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

    //நான் இருப்பேன். எந்த இறைவனையும் நான் நம்புவதில்லை//

    உடம்புக்கு நல்லதாச்சே! யார் தடுத்தது? டாஸ் மார்க் வருமானம் பிறகு அரசுக்கு குறைய ஆரம்பித்து விடுமே! :-)

    ReplyDelete
  15. Anonymous11:33 AM

    For the jalra you put, you better stay in Saudi. Please do not come back and disturb us here. :(

    ReplyDelete
  16. அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோ
    அருமையான பதிவு..ரமலான் வாழ்த்துக்கள்....அப்புறம் ,
    சென்ற பதிவில் சகோ முஹம்மத் ஆஷிக், தவ்ஹித்வாதிகளிடம் ஒரு கேள்வியை கேட்டார் ....//தவ்ஹீத் கார சகோஸ்...

    ரமலானில் இரவுத்தொழுகை... இருபத்து மூன்று ரக்கத் பித்அத்... இதில் உங்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!

    "பித்அத் என்றாலே ஷிர்க்" என்று உங்களால் தற்போது விளக்கம் அளிக்கப்படுகிறது..!

    இந்த அடிப்படையில் ஷிர்க் நடக்கும் பள்ளியில்... ஒரு இணைவைக்கும் இமாம் தொழவைக்கும் பள்ளியில் தொழக்கூடாது என்கிறீர்கள்..!

    எனில், ரமலானில் ஒரே இமாம் ஒரே ஜாமத்துக்கு இருபது மூன்று ரக்கத் தொழவைக்கும் கஃபத்துல்லாவில் & மஸ்ஜித் நபவியில் ரமலானில் மட்டும் தொழக்கூடாதா.... அல்லது அது "இணைவைக்கும் இமாம்" தொழ வைக்கும் பள்ளி என்ற உங்கள் 'நவீன தவ்ஹீது புரிதல்' அடிப்படையில்... (?!) அது 'தவ்ஹீது பள்ளி இல்லை மத்ஹப் பள்ளி' என்ற அடிப்படையில் நாம் இனி எப்போதுமே மக்கா ஹரம் ஷரீபை நாம் நம் வாழ்வில் புறக்கணிக்க வேண்டுமா..?

    ஒரு தவ்ஹீது வாதி மக்காவில் ஹஜ் செய்யலாமா..? கூடாதா...?

    உங்கள் பதிலை ஆர்வமுடம் எதிர்பார்க்கிறேன்..! //

    இதற்கு சரியான பதில் தாருங்கள் சுவண் பாய்..
    மற்றும் முஸ்லிம் என்கிற சொல்லிலே அடங்கியது தானே தௌஹித் பின்பு ஏன் PJ வகையறாக்கள் தங்களை முஸ்லிம் என்று சொல்லாமல் 'தௌஹித்வாதி' என்று தனியாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் ..!!!???
    நீங்கள் தௌஹித்வாதி என்று சொல்லிக்கொள்பவர் அதனால் என் கேள்விக்கு
    " ஜகா " வாங்காமல் சரியான பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  17. //For the jalra you put, you better stay in Saudi. Please do not come back and disturb us here. :(//

    காலம் காலமாக எனது மூதாதையர் வாழ்ந்த பூமிக்கு நான் பிறந்த மண்ணுக்கு வர வேண்டாம் என்று கைபர் கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்து வந்த ஒரு வந்தேறியான நீர் கூறுகிறீரா? நல்ல காமெடி பீஸ் சார் நீங்க....:-)

    ReplyDelete
  18. சலாம் சகோ நாசர்!

    ரமலான் வாழ்த்துக்கள்!

    //நீங்கள் தௌஹித்வாதி என்று சொல்லிக்கொள்பவர் அதனால் என் கேள்விக்கு
    " ஜகா " வாங்காமல் சரியான பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்...//

    பிஜே சொன்னாலும், ஜவாஹிருல்லா சொன்னாலும், அபு அப்துல்லாஹ் சொன்னாலும், சம்சுதீன் காசிமி சொன்னாலும் அது குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்கும் மாற்றமில்லாமல் இருந்தால் உடன் எடுத்துக் கொள்வேன். தவ்ஹீத் பள்ளியிலும் தொழுவேன். சுன்னத் ஜமாத் பள்ளியிலும் தொழுவேன். யாரையும் 'நீ செர்க்கவாதி, நீ தௌஹீத்வாதி, நீ காஃபிர்' என்று யாரையும் சொல்ல மாட்டேன். அது இறைவன் அறிந்த விஷயம். மேலும் எந்த இயக்கத்திலும் இருக்கலாம் என்பதற்கு பிஜே கூறும் விளக்கங்களையும் இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    http://annajaath.com/?p=5020
    http://www.youtube.com/watch?v=gDUz31T2Rbw&feature=plcp

    'மார்க்கத்தை கடினமாக்கி விடாதீர்கள்' என்று நபி அவர்களின் கூற்று உள்ளது. எனவே இணை வைக்காமல் கட்டாய கடமைகளை செய்து கொண்டு முடிந்த வரை குழப்பங்கள் ஏற்படாமல் நாம் பார்த்து கொள்வோம். அதுதான் தற்போதைக்கு வேண்டியது.

    ReplyDelete
  19. Anonymous2:34 PM

    @ சுவனப் பிரியன் - // இங்கு யார் கட்டாயப் படுத்தியது? பகல் நேரங்களில் எதுவும் சாப்பிட வேண்டும் என்றால் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்ளுங்கள். //

    அறிக்கை விடுவதும் மிரட்டுவதற்கும் வேறுபாடுகள் உண்டு சகோ. பொது இடத்தில் உண்ணாதீர்கள், பருகாதீர்கள் என சொன்னால் பரவாயில்லை. சரி ! பருகினால், உண்டால் fine போடப்படும் அல்லது சிறைத் தண்டனைக் கொடுக்கப்படும் என்று சொன்னால் கூட எதோ மதவாத நாடு இப்படி செய்கின்றது என்று விட்டுவிடலாம்.. ஆனால் நாடுக் கடத்திவிடுவோம் எனக் கூறுவது என்ன ? மிரட்டுவது தானே !

    ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இஸ்லாமியப் பெண்கள் புர்க்கா போடாதீர்கள் என சொன்னால் அது சட்டமாகும், தண்டம் அளவிட்டால் கூட பரவாயில்லை என ஏற்கலாம்.. ஆனால் அனைவரையும் நாடுக் கடத்திவிடுவோம் எனக் கூறினால் நியாயமாக இருக்குமா சொல்லுங்கள் ?

    ஒரு விடயத்தை பணிப்பதற்கும் மிரட்டிக் கட்டாயப் படுத்துவதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றது ..

    ReplyDelete
  20. Anonymous2:36 PM

    @ சுவனப்பிரியன் - // தமிழர்கள் தினமும் மூன்று வேளை சாப்பிடும் பழக்கம் ஜெயலலிதா ஆட்சியில் அதிகமாக பின்பற்றப்பட்டது என்பதும் உண்மை. :-) //

    சிறியத் திருத்தம் .. தமிழர்கள் தினமும் மூன்று வேளை தண்ணீர் ( சரக்கு ) சாப்பிடும் பழக்கம் ஜெயலலிதா ஆட்சியில் அதிகமாக பின்பற்றப்பட்டது என்பதும் உண்மை. :-) என்று வந்திருக்க வேண்டும் ...

    :) :) :)

    ReplyDelete
  21. இக்பால் செல்வன் said...

    இக்பால்* என்னும் முஸ்லீமுக்கு பிறந்த* நீங்கள் எப்படி இவ்வாறு இஸ்லாமிய துவேசராக! மாறினீர்கள்?

    * உங்கள் பெயரைப்பார்த்து இவ்வாறு நினைக்க தோன்றியது! உங்கள் தந்தை பெயர் இக்பால் இல்லை என்றால்; நீங்கள இந்த புனை பெயர் வைத்ததுக் கொண்டது உங்கள் தாய்க்கு செய்யும் அவமரியாதை.

    ReplyDelete
  22. ////எங்கு நல்லது நடந்தாலும் அங்கு மூக்கை நுழைக்கும் அமெரிக்கா 'இது போன்ற டென்ட்களில் தீவிரவாத பிரசாரம் நடக்கிறது. எனவே இதனை தடை செய்யுங்கள்" என்று மன்னரிடம் முன்பு கோரிக்கை வைத்தது. அதற்கான ஆதாரத்தை மன்னர் கேட்டார். ஆதாரம் தர இயலாது மூக்குடைபட்டனர் அமெரிக்க அதிகாரிகள்.

    "நீங்கள் ஆதாரம் தரவில்லையாதலால் டென்ட்களை தடை செய்யவும் முடியாது" என்று மன்னர் மறுத்து விட்டார். //////

    என்னது! அமெரிக்கவை எதிர்த்து மன்னர் பேசிட்டாரா!!!!!

    நல்லா காமெடி பண்ணுறீங்க சகோ.


    ஒரு சின்ன டவுட்டு ! எல்லா இடத்திலும் ஹிஜாப் கட்டாயம் ஆக்குன உங்க மன்னர்! ஏன் அந்த புது யுனிவர்சிட்டியில மட்டும் பொண்ணுங்க தொறந்து போட்டா தப்பில்ல ன்னு சொல்லிட்டார்?

    இந்த கமெண்ட்ட வெளியிடுவீர்களா சகோ?

    ReplyDelete
  23. உகாண்டா தோழன்!

    //ஒரு சின்ன டவுட்டு ! எல்லா இடத்திலும் ஹிஜாப் கட்டாயம் ஆக்குன உங்க மன்னர்! ஏன் அந்த புது யுனிவர்சிட்டியில மட்டும் பொண்ணுங்க தொறந்து போட்டா தப்பில்ல ன்னு சொல்லிட்டார்?//

    பெண்கள் பல்கலைகழகத்துக்கு உள்ளே சென்றவுடன் பெண்களாக உள்ள சபையில் முக்காடு எதற்கு?

    ReplyDelete
  24. சுவனப் பிரியன் said...

    //பெண்கள் பல்கலைகழகத்துக்கு உள்ளே சென்றவுடன் பெண்களாக உள்ள சபையில் முக்காடு எதற்கு?///

    நீங்கள் சொல்வது தவறு சகோ, இது பெண்கள் மட்டும் பயிலும் இடம் அல்ல. இருபாலர் பயிலும் இடம்.

    இந்த லிங்கில் உள்ள காணொளியை காணவும்.
    New Saudi Co-Education University Where Women Can Wear "Any Kind Of Dress" They Like.

    http://www.youtube.com/watch?v=hI7MeGCxYos

    சவுதியில் உள்ள உங்களுக்கு, உண்மையிலேயே இது பற்றி தெரியாதா??? ஆச்சரியம் தான்!

    அமெரிக்க சாத்தானின் கட்டளையை அவர்கள் சிறிது சிறிதாக செயல் படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

    இவர்களை பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுவதை கேளுங்கள்!

    5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

    5:52. எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; .....

    ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)..

    உண்மையில் இவர்கள் யார்! என்று நம்மை படைத்த இறைவனே தெளிவாக சொல்லிவிட்டான்.

    இனியும் இந்த வீணர்களை! வீரர்களாக உயர்த்தி பிடிக்க வேண்டாம் சகோ!

    படைத்த இறைவனின் வார்த்தைகளை நம்புவோம்.

    ReplyDelete
  25. சுவனப் பிரியன் said...

    //பெண்கள் பல்கலைகழகத்துக்கு உள்ளே சென்றவுடன் பெண்களாக உள்ள சபையில் முக்காடு எதற்கு?///

    இந்த செய்தியையும் பார்க்கவும்!
    http://www.asianews.it/news-en/First-Saudi-university-to-allow-men-and-women-together-16422.html

    **** Saudi Arabia’s religious police will not be allowed on the premises ******

    ஒரு பதிவரான உங்களுக்கு, "இது எப்படி தெரியாமல் போனது?" என்று நினைக்கும் பொது, எனக்கு மிக மிக மிக .... ஆச்சர்யமாக உள்ளது சகோ!

    ReplyDelete
  26. //உகாண்டா தோழன் said...
    சுவனப் பிரியன் said...

    //பெண்கள் பல்கலைகழகத்துக்கு உள்ளே சென்றவுடன் பெண்களாக உள்ள சபையில் முக்காடு எதற்கு?///

    இந்த செய்தியையும் பார்க்கவும்!
    http://www.asianews.it/news-en/First-Saudi-university-to-allow-men-and-women-together-16422.html

    **** Saudi Arabia’s religious police will not be allowed on the premises ******


    உகாண்டா சரியான கேள்வி .... !!!!


    லிங்க் பார்த்தேன் ... பல்கலைகழகம் கட்டிட பணி நடைபெறும் போதே எனக்கும் கேள்வி எழுந்தது ...

    மாற்று மத பெண்கள் அந்த பல்கலைகழகத்தில் எப்படி இஸ்லாமிய ஆடை பின்பற்ற போகிறார்கள் என்று ...?? எனக்குள் கேள்வி எழுந்தது ...

    இது குறித்து தெரிந்தவர்கள் பதில் சொல்லவும் ..

    ReplyDelete
  27. சாமி கண்ணன் அவர்களுக்கு,

    //டியர் சுபி பாய் அஸ்ஸலாமு அலைக்கும். i don't have any objection regarding the fasting in the (Holy) month of Ramadan. as per my knowledge fasting means we should take "less intake" in the normal cycle. but few days ago food materilas price increased in u.a.e due to the expectation "over consume" in the month of fasting. what is the lagic behind that "avoid food in day time and more intake at night". we r taking food 3 times at day time as per our south indai culture. so our body cylce also has been set according to that. if we take more food and night and avoid food at day; our body cycle also will get adjust according to that (with in few days). if we work only at night in time which we are allowd to have food, and we are sleeping in time time in which we are not alowed to take food. i'm not able understand this logic.

    என்னுடைய குறைந்த பட்ச்ச புரிதல்கலை வைத்து இந்த பின்னுட்டத்தை இட்டுறுக்கின்றேன். பதில் சொல்லவும்.

    kannan from abu dhabi//

    ​நோன்பு காலங்களில் நோன்பு முடிவில் மற்ற சாதாரண நாட்களை போல் அல்லாமல் வடை ,பஜ்ஜி,சமூசா,ஜூஸ் போன்ற இதர உ​ணவு பொருட்களை உபயோகப் படுத்துவது உண்டு. அதனால் பல்வேறு உனவுப் பொருட்களின் தேவை கூடுவது சகஜம். ஆனால் நோன்பின் காரணமாக தனி மனிதனின் உணவுத் தேவை (quantity) அதிகரிப்பதில்லை.

    இதை நீங்கள் ஓரிரு நாட்கள் முஸ்லீம்களை போலவே நோன்பிருந்து விட்டு உங்களால் எவ்வளவு(quantity)சாப்பிட முடிகிறது என்பதை கண்டு கொள்ளலாம்.தனி மனிதருக்கு பொருந்துவதுதான் ஒரு நாட்டின் மக்கள் தொகைக்கும்.

    மேலும் நோன்பு திறக்கும் சமயம் ஒவ்வொரு வசதியான முஸ்லீமும் பல்வேறு உணவுப் பொருட்களை அதிகப்படியாக தயாரித்து மற்றவர்களுக்கும்(ஏழைகளுக்கும்) பங்களித்து சாப்பிடுவதால் மற்ற நாட்களில் அவர்கள் வழமையாக சாப்பிடும் பொருட்களை தவிர அதிகப் படியாக ஏழைகளுக்கு கிடைக்கிறது.

    உதாரணத்திற்கு எனக்கு நோன்பு திறப்பதற்கு ஒரு பேரிட்சம் பழம்,ஒரு சம்சா, ஒரு டம்பளர் ஜூஸ் போதும் .ஆனால் நான் எடுத்து சென்று பகிர்ந்து அளிப்பது 10 பேரிட்சம் பழம்,10 சமூசா,ஒரு பாட்டில் ஜூஸ். இதனால் பயனடைவது ஏழைகள் .


    இ​து மற்றுமன்றி சிலர் தங்கள் ஊர்களில் ஏழைகள் அனாதைகளுக்கு பொறுப்பேற்று தங்கள் செலவிலேயே இம்மாதத்தில் இரு நேரமும் உணவு அளிக்கிறார்கள்.

    இப்பொழுது தங்களின் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    அ​ன்புடன்,

    HBA.

    ReplyDelete
  28. வணக்கம் நண்பரே,

    ரம்ஜான் மாதத்தில், உங்களுக்கு பின்னூட்டம் போட வேண்டம் என்றிருந்தேன். நல்ல எண்ணத்தில் பின்னூட்டங்கள் போட்டாலும், சில சமயம் உங்கள் மனது சங்கடப் படும், கோவம் படும், அல்லது படிப்பவர்கள் சங்கடப்படுவாரகள்.
    என்ன செய்வது விதி வலியது )))))

    நான் பழகும் இஸ்லாமிய நண்பர்களில் யாரும் அவர்கள் நோன்பு இருப்பதை பற்றியோ, நோன்பு திறப்பதை பற்றியோ, அதிகம் முக்கியதுவம் தருவதில்லை. ஆனால், நோன்பினால் உண்டாகும் இறையச்சத்திற்கும் மற்றும் சாய்ந்திர வேளையில் குரான் படிப்பதற்கும் முக்கியத்துவம் தருகிறார்கள். அதுவே அவர்களுக்கு பிரதானமாக உள்ளது.

    ஆனால், இங்கேயும் இணையத்தில் மற்ற பதிவுகளில் நேர் மாறாக உள்ளது. சாப்பாட்டிற்கும், தூக்கதிற்கும் முக்கியத்துவம் தருகிறார்கள். முக்கியமில்லாததை பேசிகொண்டிருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

    எது எப்படியோ அட்வாண்ஸ் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

    நன்றி

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)