Tuesday, July 31, 2012

இரண்டு பாகிஸ்தானிகள் என்னை அடித்து விட்டனர்!


ஒரு பாகிஸ்தானிய மாணவன் அமெரிக்க பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

ஆசிரியர்: உன் பெயர் என்ன?

மாணவன்: அஹமத்

ஆசிரியர்: தவறு. இப்பொழுது நீ அமெரிக்காவில் இருக்கிறாய். எனவே இன்றிலிருந்து உன் பெயர் ஜானி. சரியா...

பாகிஸ்தானிய மாணவன் யோசித்தபடியே வீட்டுக்கு சென்றான். வீட்டில் அவனது தாய் 'முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது?' என்று கேட்டார்.

மாணவன்: ஓ....நன்றாகவே சென்றது. இன்றிலிருந்து நான் ஒரு அமெரிக்கன். என் பெயர் இனி ஜானி.

பையனின் தந்தையும் தாயும் இஸ்லாத்தை அடி பிறழாமல் பின் பற்றுபவர்கள். எனவே கிறித்தவ பெயரை வைக்கக் கூடாது என்று போதித்தனர். பையன் கேட்பதாக இல்லை. எனவே இவ்வாறு சொன்னதற்காக பையனை திருத்துவதற்காக அவனை அடித்து விட்டனர். அடி வாங்கிய மறு நாள் அதே யோசனையோடு பள்ளியினுள் நுழைந்தான் அஹமத். இவன் யோசனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த ஆசிரியர் 'என்ன ஆச்சு உனக்கு ஜானி?' என்று கேட்டார்.

பையன் பொறுமையாக சொன்னான் "அமெரிக்கனாக மாறிய என்னை இரண்டு பாகிஸ்தானிகள் அடித்து விடடனர்"
-----------------------------------------------------
கல்வி அமைச்சர் அப்துல் கலாமா? அபுல் கலாமா?

பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது.




இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார்.

தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு, தமிழில் அனுப்பிய மடல், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.புதுச்சேரி அரசு பிரதமரின் மடலை நகலெடுத்து அனைத்து அரசு துறைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது. இந்த மடலில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர், "மவுலானா அபுல் கலாம் ஆசாத்' என்பதற்குப் பதிலாக, "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பதில் சொல்ல முடியவில்லை:இந்த பிழை கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், பிரதமரின் கையெழுத்திட்டு வந்திருப்பதால் மடலில் எந்த மாற்றமும், திருத்தமும் செய்யாமல், அப்படியே பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.வரலாறு பாடத்தில் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என குறிப்பிடப்பட்டுள்ள வேளை யில், பிரதமரின் மடலில் "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, எழுதப்பட்டுள்ளது ஏன்?இரண்டில் எது சரி என, ஆசிரியர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தின மலர்
29-07-2012


கலாம் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ல. கலாம் என்றால் பேச்சு என்று பொருள். கலாமுல்லாஹ் - அல்லாஹ்வின் பேச்சு என்று வரும் போது தான் அது வேதத்தை குறிக்கும்.வெறும் கலாம் என்பது வேதத்தை குறிக்காது. ஆக கலாம் என்றால் சொல் என்று அர்த்தம். அப்துல் கலாம் என்றால் சொல்லுக்கு அடிமை என்று பொருள். இது தடுக்கப்பட்ட பெயர் ஆகும். ஏனெனில் அடிமை என்பதற்கு அல்லாஹ்விடம் மட்டுமே அடிமையாக இருக்குமாறு அமைய வேண்டும். அடுத்து அபு என்றால் தந்தை என்று அர்த்தம். அபுல் கலாம் என்றால் சொல்லின் தந்தை என்று பொருள். சொல்லாற்றல் மிக்கவர் என்று பொருள். இது அனுமதிக்கப் பட்ட பெயர்.

நாட்டுக்காக உழைத்த ஒரு தியாகி: கல்வி அமைச்சராக இருந்த ஒருவரின் பெயரிலேயே அதிகார வர்க்கத்தில் பெரும் குழப்பம். அந்த அளவு இவரது வரலாறு திட்டம் போட்டு மறைக்கப்பட்டுள்ளது..

எனவே அபுல் கலாமுக்கும் அப்துல் கலாமுக்கும் உள்ள தொடர்பை தெரிந்திருப்போம். இதன் மூலம் நமது முன்னால் மத்திய கல்வி அமைச்சரின் பெயர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்றே குறிப்பிடுவது இஸ்லாமிய அடிப்படையில் சரியாகும்.

---------------------------------------


கர்னாடக மாநிலத்தில் இந்தியத் திருவிழாக்கள் என்று ஒரு பாடப்புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் உள்ள அனைத்து பண்டிகைகளும் இந்துப் பண்டிகைகள்
மட்டுமே.

உயர் சாதியினர் மட்டுமே கொண்டாடும் பண்டிகைகளை தொகுத்துள்ள அந்தப் புத்தகம்
மற்ற மதத்தினரின் பண்டிகைகளைப் பற்றி கண்டு கொள்ளவேயில்லை.

இந்துப் பண்டிகைகளை மட்டும் விவரிக்கும் ஒரு புத்தகத்திற்கு எதற்கு இந்தியாவின்
திருவிழாக்கள் என்று பெயர்?

இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள் என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கும் நச்சு முயற்சி.

பெரும்பான்மை இந்துக்கள் ஒத்துக் கொள்ளாத பட்சத்திலேயே இந்த ஆட்டம் ஆடுகிறதே பாஜக. இன்னும் இவர்களை அனைவரும் ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் பழையபடி வர்ணாசிரமம் வெளியே வர ஆரம்பித்து விடும். வாழ்க பாரதம்.

பாஜக என்றென்றும் ஒரு விஷப் பாம்பு என்பதை நிரூபித்துக் கொண்டே உள்ளது.

----------------------------------------------
மனக் குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 9



-----------------------------------------------

நேற்று முன் தினம் கேரளா மாநிலத்தின் கோழிகோடு மாவட்டத்தில் ஒரு குண்டு ஒன்று வெடித்தது . இது தொடர்பாக ஜோஷிராம் என்ற ஆர்.எஸ்.எஸ் .காரனை கைது செய்துள்ளனர்.

கோயிலாண்டி என்ற ஊருக்கருகில் அவனது வாடகை வீட்டில் வைத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் அவனது தாயாரே காயமடைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிட தகுந்தது. எதற்காக ஒத்திகை பார்த்து கொண்டு இருந்தானோ ? அதுவே விபத்தாகி அவனை வெளியுலகிற்கு காட்டி கொடுத்துள்ளது.

செய்தியை படிக்க இங்கு செல்க:

ஹிந்துவில் வந்த செய்தியை படிக்க இங்கு செல்க:


http://www.mathrubhumi.com/english/story.php?id=126586

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article3698903.ece





17 comments:

  1. J O K E S

    "தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"

    ஒரு தெருவில் நாயொன்று படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது.

    அந்தப்பெண்னோ மிகப்பயந்தவளாக நாய் கடித்துவிடாமல் இருக்க தன்னை பாதுகாத்துகொள்ளும் நோக்கோடு மிக வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தாள்.

    நாய் அவளை நெருங்கி கடித்து விடும் நிலையில் அவளை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில்

    அந்த நொடி ஒரு மனிதன் சடாரென பாய்ந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.

    பிறகு காப்பாற்றியவருக்கு நன்றியோடு விடைபெற்று அவ்விடத்தை நிம்மதியாக நடந்தாள்

    அதை ஒரு பத்திரிக்கை நிருபர் நேரடியாக பார்த்து தனது கேமராவில் பதிவு செய்து கொண்டார்.

    பின் அந்த மனிதனின் செயலை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன்

    தலைப்பு செய்தியே இது தான்,'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"

    அந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.

    உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"

    திரும்பவும் அந்த மனிதன்,"இல்லை நான் அமெரிக்கனில்லை, பாகிஸ்தானி" என்றார்.

    மறு நாள் வந்த செய்தியின் தலைப்பு இப்படியிருந்தது..

    "தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"

    ===================



    இந்த விஷயம் ஐ. நா சபையில் நடந்ததாக கூறுகிறது:

    இந்திய தூதுவர் தன் பேச்சை இவ்வாறு துவக்கினார்:

    "ரிஷி காஷ்யாப் என்ற காஷ்மீரை கண்டு பிடித்த மனிதர் காஷ்மிரில் ஒரு பாறையை வெட்டினார் .

    அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தனது துணிகளை கழட்டி வைத்து விட்டு குளித்தார்.

    குளித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் அவர் உடைகளை காண வில்லை. அதை ஒரு பாகிஸ்தானி திருடி சென்று விட்டார்"....

    அவர் பேசுவதை இடை மறித்த பாகிஸ்தான் தூதுவர், " இது சுத்த பொய். அப்போது பாகிஸ்தானிகள் அங்கு இல்லவே இல்லை" என்றாராம்.

    நமது தூதுவர், " உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி. எனக்கு தேவை அது தான்" என தொடர்ந்தாராம் !!!..

    **
    *ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்..

    இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்..

    பாகிஸ்தானி சொன்னார்.. என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..

    இந்தியர் சொன்னார்..

    " என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு
    போட்டுட்டேன்,,!*
    --------------------

    வாஜ்பாயும் புஷ்ஷும் ஒரு பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார்.

    சிப்பந்தியிடம் அவர்கள் வாஜ்பாய் மற்றும் புஷ்சா என்று கேட்கிறார்.

    "ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

    உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.

    புஷ்: "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

    அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

    வாஜ்பாய்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களையும், ஒரு சைக்கிள்
    ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

    உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

    வாஜ்பாய் புஷ் ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"

    ALL THE ABOVE JOKES ARE TAKEN FROM INTERNET.

    ReplyDelete
  2. Anonymous2:22 AM

    UNMAIKAL said...
    J O K E S

    =========================

    ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி மூவரும் மெக்சிகோவில் பயணம் செய்த போது ஒரு மெக்சிகனை ஏதோ ஒரு காரணத்துக்காக கொன்று விட்டனர்.அவர்கள் மூவருக்கும் மின்சார நாற்காலி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

    ஆப்பிரிக்கன் ' நான் ஒரு டென்டிஸ்ட். நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் .என்னை விட்டுவிடுங்கள் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

    இந்தியன் ' நான் ஒரு டாக்டர் . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .. சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

    பாகிஸ்தானி ' நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'

    ALL THE ABOVE JOKES ARE TAKEN FROM INTERNET.
    9:53 PM

    ReplyDelete
  3. சலாம் சகோ....

    பாகிஸ்தான் ஜோக் அருமை...

    ReplyDelete
  4. salaam

    அன்பான வேண்டுக்கோள்:இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை(பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்)அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.
    Read more: http://tvpmuslim.blogspot.com

    *சகோ.உங்கள் இப்பதிவை நான் இன்னும் படிக்கவில்லை படித்து இன்ஷா அல்லாஹ் பின்னூட்டமிடுகிறேன்

    ReplyDelete
  5. அஸ்ஸலாம் அலைக்கும்....
    பாகிஸ்தானி Electrical Engineer ஜோக் நல்லாருக்குங்கோ ......

    ReplyDelete
  6. சலாம் சகோ நாசர்!

    //அஸ்ஸலாம் அலைக்கும்....
    பாகிஸ்தானி Electrical Engineer ஜோக் நல்லாருக்குங்கோ ....//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. salam bro thiruvalapputhtur!

    //அன்பான வேண்டுக்கோள்:இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை(பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்)அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.
    Read more: http://tvpmuslim.blogspot.com//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. salam bro haja mydeen!

    //பாகிஸ்தான் ஜோக் அருமை.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. salam brp sarfuddeen!

    //:-)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. salam bro unmaikhal!

    //வாஜ்பாயும் புஷ்ஷும் ஒரு பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  11. நேற்று முன் தினம் கேரளா மாநிலத்தின் கோழிகோடு மாவட்டத்தில் ஒரு குண்டு ஒன்று வெடித்தது . இது தொடர்பாக ஜோஷிராம் என்ற ஆர்.எஸ்.எஸ் .காரனை கைது செய்துள்ளனர்.

    கோயிலாண்டி என்ற ஊருக்கருகில் அவனது வாடகை வீட்டில் வைத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் அவனது தாயாரே காயமடைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிட தகுந்தது. எதற்காக ஒத்திகை பார்த்து கொண்டு இருந்தானோ ? அதுவே விபத்தாகி அவனை வெளியுலகிற்கு காட்டி கொடுத்துள்ளது.

    வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ் , அவன் எங்களை சார்ந்தவனே இல்லை என்று சாதிக்கும்.


    http://www.mathrubhumi.com/english/story.php?id=126586

    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article3698903.ece

    ReplyDelete
  12. நாகூர் மீரான்11:42 AM

    சகோ, சுவனப்ரியன்,
    தங்களுடைய கருத்தை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    கலாம் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ல.கலாம் என்றல் பேச்சு என்று பொருள்.கலாமுல்லாஹ் - அல்லாஹ்வின் பேச்சு என்று வரும் பொது தான் அது வேதத்தை குறிக்கும்.வெறும் கலாம் என்பது வேதத்தை குறிக்காது.ஆக கலாம் என்றால் சொல் என்று அர்த்தம்.அப்துல் கலாம் என்றால் சொல்லுக்கு அடிமை என்று பொருள்.இது ஹராமான பெயர் ஆகும். ஏனெனில் அடிமை என்பதற்கு அல்லாஹ்விடம் மட்டுமே அடிமையாக இருக்குமாறு அமைய வேண்டும். அடுத்து அபு என்றால் தந்தை என்று அர்த்தம்.அபுல் கலாம் என்றால் சொல்லின் தந்தை என்று பொருள்.சொல்லாற்றல் மிக்கவர் என்று பொருள்.இது அனுமதிக்கப் பட்ட பெயர்.இரண்டும் வேறு வேறு ..

    நன்றி பீ.ஜே

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...

    சிரிக்க சிந்திக்க அருமையான பகிர்வு.. ஜசாக்கல்லாஹ்..

    //பாகிஸ்தானி ' நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'/// ஆடு தானா போயி தலைய குடுக்குதே அவ்வ்வ்வ்வ்.. ஹிஹிஹி இருந்தாலும் அவரோட நேர்மை..!! ஐ லைக் இட்.. :))

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  14. Anonymous11:47 AM

    சகோ, சுவனப்ரியன்,
    தங்களுடைய கருத்தை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    கலாம் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ல.கலாம் என்றல் பேச்சு என்று பொருள்.கலாமுல்லாஹ் - அல்லாஹ்வின் பேச்சு என்று வரும் பொது தான் அது வேதத்தை குறிக்கும்.வெறும் கலாம் என்பது வேதத்தை குறிக்காது.ஆக கலாம் என்றால் சொல் என்று அர்த்தம்.அப்துல் கலாம் என்றால் சொல்லுக்கு அடிமை என்று பொருள்.இது ஹராமான பெயர் ஆகும். ஏனெனில் அடிமை என்பதற்கு அல்லாஹ்விடம் மட்டுமே அடிமையாக இருக்குமாறு அமைய வேண்டும். அடுத்து அபு என்றால் தந்தை என்று அர்த்தம்.அபுல் கலாம் என்றால் சொல்லின் தந்தை என்று பொருள்.சொல்லாற்றல் மிக்கவர் என்று பொருள்.இது அனுமதிக்கப் பட்ட பெயர்.இரண்டும் வேறு வேறு ..

    நன்றி பீ.ஜே
    - நாகூர் மீரான்

    ReplyDelete
  15. சகோ நாகூர் மீரான்!

    //சகோ, சுவனப்ரியன்,
    தங்களுடைய கருத்தை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் //

    தகவலுக்கு நன்றி. மாற்றி விட்டேன்.

    ReplyDelete
  16. சலாம் சகோ ஷர்மிளா ஹமீத்!

    //சிரிக்க சிந்திக்க அருமையான பகிர்வு.. ஜசாக்கல்லாஹ்..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)