Friday, September 14, 2012

சுவனப்பிரியனுக்கும் மாத்தியோசி மணிக்கும் என்ன தகராறு?

சுவனப்பிரியனுக்கும் மாத்தியோசி மணிக்கும் என்ன தகராறு?

சில நாட்களாகவே பல பதிவுகளில் சென்று என்னைப் பற்றி ஏதாவது சொல்வதே மணிக்கு வாடிக்கையாக உள்ளது. இதை நான் பெரிதுபடுத்தவில்லை. சில நண்பர்கள் எனக்கு இதை சுட்டிக் காட்டி தனி பதிவாகவே பதில் கொடுங்கள் என்று கூறியதால் இந்த பதிவு. இதனால் மணி திருந்தி விடுவார் என்று நான் நினைக்க வில்லை. என்றாலும் பொதுவில் உள்ளவர்கள் என்ன தகராறு என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த விளக்கப் பதிவு.

சில மாதங்களுக்கு முன் 'யாழ்ப்பாணத்தில் விபசார விடுதிகளை திறக்க வேண்டும்' என்ற ஒரு பதிவை மணி தனது தளத்தில் இட்டிருந்தார். வேறொரு பதிவர் தனது பதிவுகளில் கொச்சையான தலைப்புகளை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார். அடுத்து இணையம் முழுவதும் தமிழ் பக்கங்களை கூகுளில் தேடினால் அங்கும் ஆபாச கதைகளையும் படங்களையும் சகட்டு மேனிக்கு குறிப்பிட்ட சிலர் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த இணையம் என்பது சிறுவர் முதல் பெண்கள் மற்றும் வயோதிகர் வரை வந்து செல்லும் இடம்.

இந்த இடத்தில் ஆபாசத்தையே குறிக்கோளாக கொண்டு இவ்வாறு எழுதுவது தவறு என்று ஒரு பதிவு இட்டேன்.

http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_08.html

'அபாசத்தை தவிருங்கள் பதிவர்களே!'

இதுதான் எனக்கும் மணிக்கும் உள்ள பிரச்னையே! இந்த கோபத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னை அவ்வப்போது மணி சீண்டுவது. சமீப காலங்களில் என்னைப் பற்றி மணி கொடுத்த சில அர்ச்சனைகள். :-)

//அண்ணே, சவுதியில் இருக்கும் சுவனம் என்ன முஸ்லிம் அண்ணே? அவரும் சுன்னிபிரிவா? அப்படியானால் அவருக்கு மேற்கு நாடுகளைப் பிடிக்குமா? சுவனம் ஒரு இரட்டைவேடதாரி என்று எமக்குத் தெரியும்! கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ அண்ணா!//

//சுவனப்பிரியன் போன்ற அறிவிஜீவுகளின் அபிமானத்துக்குரிய, சிங்கள இராணுவத்தினரின், கொத்தணிக் குண்டுகளில் உயிரிழந்த எம் அப்பாவி மக்களின் படங்களையும் போட்டமைக்கு மிக்க நன்றி!//

//நாங்கள் இப்பவும் சொல்றோம் - வலையுலகில் இருக்கும் சுவனப்பிரியன் அண்ட் கோவினால் ஒருபோதுமே இஸ்லாத்துக்கு நற்பெயர் வாங்கித் தர முடியாது! இஸ்லாத்தின் பெருமைகளை உலகறியவும் செய்ய முடியாது! :)))//

தவறான வழியில் செல்லும் ஒருவனை அந்த தவறை சுட்டிக் காட்டியது தவறா? யாழ்ப்பாண இந்து பெண்ணும் எனது சகோதரிதானே! என் மொழியை பேசக் கூடிய பெண்தானே! இவ்வாறு நாம் பிறந்த மண்ணின் பெண்மக்களை விபசார விடுதிகள் திறந்து நரக வாழ்வில் தள்ள முயற்ச்சிக்கலாமா? என்று கேட்டதற்கு இதே மணி எனக்கு அளித்த பதில் என்ன தெரியுமா?

//யாழ்ப்பாணத்தில் விபச்சார நிலையங்கள் வேண்டும் என்ற எனது கூற்றுக்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்! எனது கருத்தை ஏன் அங்கிருப்பவர்கள் எதிர்க்கவில்லை என்று எனக்கே புரியவில்லை! அதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!//

இதுதான மணி எனக்களித்த பதில். அதாவது யாரும் இவர் கருத்தை எதிர்க்க வில்லையாம். எனவே இவர் கருத்தை எல்லோரும் ஒத்துக் கொண்டதாக இவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான எண்ணம் உள்ள ஒரு மனிதனிடமிருந்து நாம் எதை எதிர் பார்க்க முடியும்? அந்த பதிவில் மணிக்கு நான் மேலும் விளக்கமாக அளித்த பதில்.


விபசாரத்தை பெரும்பாலான ஆண் வர்க்கமான நாம் வெகு இலகுவாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இந்த தொழிலால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றியோ அவர்களின் எதிர்காலம் பற்றியோ கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இளமை இருக்கும் வரை அந்த பெண்ணுக்கு வருமானத்தக்கு குறைவிருக்காது. அதன் பிறகு முதுமை அடையும் போது ஆட்கொல்லி நோய்களையும் சுமந்து கொள்கிறாள். சமூகத்தினால் ஒதுக்கப்படுகிறாள். வருமானமும் போய் விடுகிறது. இவளால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இழி சொல்லை சுமந்து மன நோயாளியாகிறார்களே!! இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில் இருக்கிறது.

மனிதனுக்கு இறைவன் கொடுத்த பல உணர்வுகளில் காமமும் ஒன்று. அதனை நம் சமூகத்தை பாதிக்காமல் இதனால் எந்த ஒரு பிறப்பும் இழிவடையாமல் நமது இன்பத்தை அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு சமூகத்தில் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு வழியே திருமணம். இதன் மூலம் மட்டுமே எவருக்கும் தீங்கில்லாமல் நமது தேவைகளை போக்கிக் கொள்ள முடியும்.

இவ்வாறு நான் கொடுத்த பதிலால் அவரிடம் ஏதும் மாற்றம் இதுவரை வரவில்லை என்பது அவரது சமீபத்திய பதிவுகள் வரை நீள்கிறது.

மேலும் வசதியாக இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வன்னி காட்டில் சிரமப் படும் மக்களுக்கு உதவலாமே என்றும் கேட்டிருந்தேன். அதற்கு சமீபத்தில் அவர் அளித்த பதில் 'அந்த மக்கள் எல்லோரும் வசதியாகவே உள்ளார்கள். வன்னி பகுதி மிகவும் வளமான பகுதி' என்ற பதிலே வந்தது. கடந்த 30 வருடங்களாக போரினால் சிதைந்து உருக்குலைந்து போயிருக்கும் வன்னி மக்கள் வசதியாக வாழ்கிறார்களாம். அந்த வன்னி மக்களின் அவல நிலையை உலகம் முழுதும் செய்திகளாக்கி தங்களின் அகதிகள் உரிமையை நீட்டிப்பதற்கு மட்டுமே பயன் படுததிக் கொள்வது போல் உள்ளது மணியின் கூற்று.

இதற்கெல்லாம் பதிலளிக்காமல் இஸ்லாத்தை தரக் குறைவாக தாக்க ஆரம்பித்து விட்டார். இவரது சுயரூபம் தெரிந்த முஸ்லிம்களும் இதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதனால் வெகுண்டெழுந்து அவர் எழுதிய சமீபத்திய பதிவு.


//அதாவது நாம் அல்லா குறித்தும், இஸ்லாம் குறித்தும் ஏதேனும் கேள்வி கேட்டால், உடனே வலையுலகில் இருக்கும் சில இஸ்லாமிய பதிவர்கள் “அப்போ பிரபாகரன் மட்டும் பண்ணது சரியா?” அப்டீன்னு எதிர்கேள்வி கேட்கிறாங்க! நியாயப்படி பார்த்தா, அல்லாவை நாம் தாக்கும் போது, அவர்கள் சிவபெருமானையோ, முருகன், பிள்ளையாரையோ தானே தாக்கணும்! கடவுளோட, கடவுளைத்தானே பொருத்தணும்! அதென்ன சாதாரண மனிதனாகிய பிரபாகரனை ஒப்பிடுறது? :)))//

இந்த கருத்துக்கு சகோ சிராஜ் மிக அழகாக பதில் கொடுத்துள்ளார். அதாவது மணி இஸ்லாத்தை திட்டினால் பதிலுக்கு நாம் இந்து கடவுள்களை திட்டி பதிவெழுத வேண்டும் என்பது மணியின் எதிர் பார்ப்பு. இதன் மூலம் தமிழ் இணைய தளத்தில் இந்து முஸ்லிம் பிரிவினையை நிரந்தரமாக்க முயற்சிக்கிறார். இந்துத்வா வாதிகளாலேயே முடியாத ஒன்றை இந்த மணி சாதித்து விடுவாரா என்ன? தமிழகம் என்றுமே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது நாட்டுக்கே எடுத்துக் காட்டாய் உள்ளது என்பதை இவர் அறியவில்லை போல் இருக்கிறது.

//அத்தோடு எம்மவர்களின் கல்வியறிவும் ஒரு காரணம்! எங்களின் கல்விக்கு முன்னால் அவர்கள் பிச்சைதான் எடுக்கோணும்! இதுவும் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு காரணம்! //

அட ஞான சூன்யமே! உலகிலேயே தலை நிமிர்ந்து வாழும் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். தெருவோரத்தில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஒரு சராசரி முஸ்லிமை யார் காலிலாவது விழச் சொல்லிப் பார். உனக்கு உறைக்கும் படி சரியான பதிலை அவர் கொடுப்பார். வல்லரசுகளே கதி கலங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தைப் பார்த்து 'தாழ்வு மனப்பான்மை' என்பது உம்முடைய அறிவு குறைபாட்டைத்தான் உணர்த்துகிறது.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு விஸ்கியை உள்ளே தள்ளிக் கொண்டு தினமும் ஒரு பெண்ணோடு உல்லாசமாக இருப்பதும் கை நிறைய சம்பாதிப்பதும் தான் சிறந்த கல்வி என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இங்கு குர்ஆன் வேண்டாம். வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மான் புனைபாவை அற்று

ஆழமும் சிறந்த சிந்தனையும் கூர்மையும் பொருந்திய கல்வி அறிவு இல்லாத ஒருவர் வெளிப் பார்வைக்கு சிறந்து விளங்கினாலும் அவனது உள்ளம் பாழடைந்து இருப்பதால் அவன் மண்ணால் செய்யப்பட்ட பொம்மையைப் போன்றவனே ஆவான் என்கிறார் வள்ளுவர்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

சிறந்த நூல்களை கற்காத ஒருவன் தன்னை அறிவுடையவனாக நினைத்துக் கொண்டு சான்றோர்கள் சபையில் பேச முயலும் போது அனைத்தும் வெளி வந்து விடும். அஃதாவது அவனது உண்மை இயல்புகள் வெளிப்பட்டு விடும். சிறந்த நூல்களை கல்லாதவன் கல்வி குறைபாடுடையது என்கிறார் வள்ளுவர்.

நம்ம மணியைப் போன்ற அரை குறைகளுக்காகவே இந்த குறளை வள்ளுவர் இயற்றியிருக்கிறார் போலும்..

முன்பு முஸ்லிம்கள் கல்வியை புறக்கணித்தது உண்மையே! வெள்ளையனை இந்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றால் முதலில் அவனது மொழியை வெறுக்க வேண்டும். அவன் தரும் அரசு வேலைகளை உதறி எறிய வேண்டும் என்று ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பள்ளிவாசல்களில் சொற்பொழிவு செய்யப்பட்டது. இதனை செயல்படுத்தினர் முஸ்லிமகள். அதனால் வெள்ளையன் கொடுத்த அனைத்து சலுகைகளையும் புறக்கணித்தனர். ஆனால் அது தவறு என்று 50 வருடங்களுக்கு பிறகு தற்போது உணர்ந்து கொண்டனர். இன்று தங்களது சொத்தையே விற்று கூட தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர் முஸ்லிம்கள்.இன்று வீட்டுக்கு பல பட்டதாரிகள் வருடந்தோறும் வந்த வண்ணமே உள்ளனர்.

மணியும், ஆஷிக் அஹமதும் ஒத்த வயதுடையவர்கள். ஆனால் மணி எப்படி சிந்திக்கிறார். ஆஷிக் அஹமது எப்படி சிந்திக்கிறார் என்பதை பதிவுலகம் நன்றாகவே அறியும். இதுதான் மணி கற்ற கல்விக்கும் ஆஷிக் அஹமது கற்ற கல்விக்கும் உள்ள வேறுபாடு. மணி தான் கற்ற கல்வியின் பயனாய் தனது தாயகத்தில் விபசார விடுதியை திறக்க முயற்சிக்கிறார். அதே உலக கல்வியை கற்ற ஆஷிக் தனது பதிவுகளால் சமூகத்தில் உள்ள அனாசாரங்களை களைய பாடுபடுகிறார். இருவரும் கற்ற கல்வி ஒன்றானாலும் அதனால் சமூகம் அடைந்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பதைத்தான் நாம் இங்கு சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.





43 comments:

  1. //வல்லரசுகளே கதி கலங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தைப் பார்த்து //

    "இஸ்லாமிய தீவிரவாதம்" னு எல்லோரும் தான் கதி கலங்குறாங்க, அதை நீங்க இப்படி வெளிப்படையாக எழுதி இருக்க வேண்டாம்.

    :)

    ReplyDelete
  2. //"இஸ்லாமிய தீவிரவாதம்" னு எல்லோரும் தான் கதி கலங்குறாங்க, அதை நீங்க இப்படி வெளிப்படையாக எழுதி இருக்க வேண்டாம்.//

    தீவிரவாதம் எங்கு காணப்படுகிறது? ஆப்கானிஸ்தான், லிபியா, ஏமன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில். ஏன் அங்கு மட்டும்? காரணம் அந்த நாட்டு செல்வங்கள் அமெரிக்காவால் சுரண்டப்படுகிறது. எனவே ஆட்சியாளர்களை எதிர்த்தும் அமெரிக்காவை எதிர்த்தும் போராட்டங்கள் வெடிக்கின்றன.

    இதன்படி பார்த்தால் நம் காந்தியிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் வரை பாடுபட்ட அனைத்து விடுதலை போராட்ட வீரர்களும் தீவிரவாதிகளே.

    லிபியாவில் சம்பந்தமில்லாத மூன்று அமெரிக்கர்களை கொன்றதை நான் ஆதரிக்கவில்லை. அதனை இஸ்லாமும் ஆதரிக்கவில்லை. அதே சமயம் உலகமே போறறும் தலைவரின் வாழ்க்கையில் பொய்களை புனைந்து யூதர்களின் துணை கொண்டு திரைப்படமாக வெளியிட முயற்சிப்பதையும் கண்டிக்கிறேன்.

    இலகுவாக விளங்கக் கூடிய இந்த சாதாரண விஷத்தை இப்படி போட்டு நீங்களும் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். :-)

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோஸ், தயக்கூர்ந்து இம்மாதிரியான பதிவுகளை தவிருங்கள். நம் நோக்கம் என்னவென்று நன்கு தெரிந்த பின்னும் உங்களைப்போன்றவர்கள் இம்மாதியான பதிவுகளில் நேரத்தை வீணாக்குவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது.

    நேரம் பொன் போன்றது என்பார்கள். அதனை புரிந்துக்கொண்டால் சால நலம்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  4. //இதன்படி பார்த்தால் நம் காந்தியிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் வரை பாடுபட்ட அனைத்து விடுதலை போராட்ட வீரர்களும் தீவிரவாதிகளே.//

    இதற்கு பதிலாக பின்லேடன் & முல்லா ஓமர் அன்கோ காந்தி வழி போராட்டக்காரர்கள் என்று நீங்கள் சான்றிதழ் தந்திருக்கலாம்
    :)

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்,
    நானும் படித்தேன் அந்த(மணியின்) பதிவை முட்டாள்களுக்கு பதில் அளித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    ReplyDelete
  6. PART 1. ஐடியாமணி / பவுடர்மணி / மாத்தியோசி மணி என்ற பெயர்களில் உலவும் இரட்டை நாக்கு மணி.

    ஐடியாமணி / பவுடர்மணி / என்ற பெயர்களில் உலவிய மாத்தியோசி மணி யின் ப‌திவை .

    சொடுக்குக‌ >>>> இஸ்லாமியர்கள் நிஜமாகவே பயங்கரவாதிகளா??? <<<< யும் ப‌டித்து பாருங்க‌ள்.

    மாத்தியோசி மணி யின் பதிவும் அதில் வந்த சில க‌ருத்துரைகளும் கீழே

    வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

    அறிமுகம் - நண்பர்களே! இன்று எனக்கு ஒரு முக்கியமான நாள்! உயிர்காக்கப்பட்ட நாள்! காப்பாற்றியவர்கள் நான்கு இஸ்லாமியர்கள்! அவர்களுக்காக இந்தப் பதிவை அர்ப்பணிக்கிறேன்! இது எனது தனிப்பட்ட பதிவாகும்! எனது டைரியை படிப்பது போல இருக்கும்! எனவே அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி சொல்லிக்கொண்டு, இப்பதிவை தொடருகிறேன்!

    இலங்கையில் தமிழர்களுக்கும் - இஸ்லாமியர்களுக்கும் சண்டை, சச்சரவு இருப்பதாக ஒரு தோற்றம் வெளியுலகில் இருக்கிறது! ஆனால் உண்மை அதுவல்ல! எங்கேனும் அரிதாக, நடந்த ஓரிரு சம்பவங்களை வைத்துக்கொண்டு, இரு இனங்களுக்கிடையே பிளவு என்று சொல்லுவது தவறு!

    தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்விதமான பிரச்சனைகளும் இன்றி ஒற்றுமையாக வாழும் பல கிராமங்கள் இலங்கையில் உள்ளன! வவுனியா அதற்கு மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டு! அங்கே மூவின மக்களும் எவ்விதமான சண்டை சச்சரவும் இன்றி வாழ்கிறார்கள்!

    1997 ம் ஆண்டு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து, ஒரு முஸ்லிம் அன்பரின் வீட்டில் வாடகைக்கு இருந்தோம்! அந்நாட்களில், பல வன்னிக்குடும்பங்கள், முஸ்லிம் மக்களின் வீடுகளின் வாடகைக்கு இருந்தார்கள்! காரணம், முஸ்லிம் கிராமங்களை இராணுவத்தினர் சுற்றி வளைக்க மாட்டார்கள்! அங்கு வரவும் மாட்டார்கள் என்ற நம்பிக்கையே!

    அன்றிலிருந்து, அவர்களோடு பழகும் அரிய வாய்ப்பு கிடைத்தது! அவர்கள் மிகவும் பண்பானவர்கள்! வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள்! எந்தத் தொழிலையும் தயக்கம் இன்றி செய்வார்கள்! அவர்களுக்குள் தொழில் ரீதியான சாதிப் பாகுபாடு கிடையாது! என்னோடு ஒன்றாகப் படித்த நசீர் என்ற நண்பன், மிகவும் குறும்புக்காரன்! அவனிடம் எப்போதுமே நிறையவே காசு இருக்கும்!

    மத்தியானம் பாடசாலை முடிந்ததும், ஒரு மீன் கடையில் வேலை செய்வான்! மின்னல் வேகத்தில் அவன் மீன்களை வெட்டும் அழகே தனி! பின்னர் மாலையில், இருவரும் ஃபுட்பால் விளையாட கிளம்பிடுவோம்! அவனோடு சேர்ந்து, மீன் கடையில் வேலை பார்க்க எனக்கும் விருப்பமாக இருந்தது! ஏன் தெரியுமா? பின்ன, ஏ எல் படிக்கும் போது, கையில காசே இருப்பதில்லை! அதனால்தான்!

    அம்மாவிடம் போய், மீன்கடையில் வேலை செய்யப் போவதாக சொன்னேன்! அம்மா தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்! நான் மீன்கடையில் வேலை செய்வதால் வரும் விளைவுகள் பற்றி ஒரு மணிநேரம் விபரித்தார்! அதில் எனக்கு யாருமே பொண்ணு தரமாட்டாங்களாம் அப்டீன்னும் என்று ஒரு பிட்ட போட்டுட்டா!

    இந்த இடத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்! இதில் நான் யாரையும் குறைத்து கூறவில்லை! எமது சாதி முறைப்படி, நாங்கள் அப்படியான தொழில் செய்யக் கூடாது என்று அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டா! நான் சின்ன வயசில் இருந்தே மாத்தியோசிக்கத் தொடங்கிவிட்டேன் என்பதால், அது ஏன்? இது ஏன்? அப்படிச் செய்தால் என்ன? என்று அம்மாவுடன் ஒரே வாக்குவாதம்!

    இறுதியில், “ உன்ர விருப்பப்படி வேலை செய்யுறதென்றால், வீட்டைவிட்டுப் போ” என்ற அம்மாவின் கண்டிப்பான உத்தரவோடு, நான் எனது வாயை மூடிக்கொண்டேன்! அன்றோடு ஒரு மீன்கடையில் வேலை செய்யவேண்டும் என்ற எனது கனவு காணாமல் போனது!

    பிறகு இங்கு வெளிநாடு வந்து, நான் வெட்டாத மீனா? வாட்டாத இறைச்சியா? கழுவாத கோப்பையா? ஹி ஹி ஹி ஹி ஆனால் இப்பதான் பலர் பொண்ணு கொடுக்க முன்வருகிறார்கள்! என்ன கொடுமை முனுசாமி? ( எத்தனை நாளைக்குத்தான் சரவணனைக் கூப்புடுறது? )

    சரி சரி நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு எங்கோ போய்விட்டேன்!

    இஸ்லாமியர்களில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம்! இறைபக்தி, மதக் கட்டுப்பாடு, நேரம் தவறாத தொழுகை!! எப்படி, இப்படியெல்லாம் கட்டுப்பாடாக, ஒரே கோட்பாட்டோடு இருக்கிறார்கள்? என்று நான் எப்போதுமே ஆச்சரியப்படுவேன்! அவர்களின் இறைவிசுவாசம் - அல்லாஹ் மீது கொண்ட பக்தி, எப்பவுமே ஆச்சரியமானதுதான்! இப்படிப் பட்டவர்களையா, உலகம் பயங்கரவாதிகள் என்கிறது?


    Continued .....

    ReplyDelete
  7. PART 2. இஸ்லாமியர்கள் நிஜமாகவே பயங்கரவாதிகளா???

    இலங்கையில், பி.எச். அப்துல் ஹமீத் என்ற பெரும்சிகரம், தமிழ்க்கடல்! அவர் தொடக்கம், ஏ.ஆர்.எம்.ஜிஃப்ரி, ஃபரீன் அப்துல் காதர், ஃபரீன் அப்துல் கையும், சமோஸ் முஹ்ஹம்மது பெரோஸ், எஸ்.ரி.ரவூஃப் என்று பல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் இருக்கிறார்கள்!

    இவர்கள் அனைவரினதும் குரல்களும், அழகிய தமிழ் உச்சரிப்புக்களும், என்னை மேலும் மேலும், இஸ்லாமியர்கள் மீது பற்றுகொள்ள வைத்தது!

    இலங்கையில் இஸ்லாமியர்களின் பேச்சுத் தமிழ் மிகவும் வித்தியாசமாக இருக்கும்! நாம் பேசும் யாழ்ப்பாணத்து தமிழுக்கும், அவர்கள் பேசும் தமிழுக்கும் முற்றிலும் வேறுபாடாக இருக்கும்!

    ஆனால் வானொலியில் தமிழ் பேசும் போது அவ்வளவு அழகாக இருக்கும்! மிகவும் அழகு நிறைந்த தமிழில் பேசுவார்கள்! அதுவே மிகப்பெரிய ஆச்சரியம்!

    நான் அடிக்கடி ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பேன்!

    அதாவது தமிழை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள், தமிழில் உள்ள இலக்கியங்களைப் படிக்கும்போது, சங்கடமாக இருக்காதா??

    ஏனென்றால், தமிழிலக்கியத்தில் 85 வீதம், இந்து சமயம் கலந்துள்ளது! இந்து சமய கருத்துக்களைக் கலக்காத தமிழிலக்கியமே இல்லை என்று சொல்லிவிடலாம்!

    தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு இஸ்லாமியர், தமிழின் சிறந்த இலக்கியமாகிய கம்பராமாயணத்தை படிக்க நேர்ந்தால், அதில் பல இந்துமதக் கருத்துக்களைக் கடந்தே செல்லவேண்டும்! இது சங்கடமாக இருக்காதா? இதுபற்றி நான் அடிக்கடி எண்ணிப் பார்ப்பேன்!

    இன்று உலகளவில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாம் மதத்துக்கும் விடுக்கப்படும் சவால்கள் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்!

    நான் வாழும் ஃபிரான்ஸ்கூட, இஸ்லாமியபெண்கள் பர்தா அணிவதை எதிர்க்க்கிறது!

    வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இந்த மேற்கு நாடுகளை மிகவும் பிடிக்கும்! குறிப்பாக நான் வாழும் ஃபிரான்ஸ் மீது அளவுகடந்த பற்று உண்டு! யாராவது ஃபிரான்ஸ் பற்றி தப்பாக கதைத்தால் செம டென்சனாகிடுவேன்!

    அதே சமயத்தில், இஸ்லாமிய சகோதர்கள் மீது இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எப்படி எடுத்துக்கொள்வது?

    யாருக்கு சப்போர்ட் செய்வது என்று பல நாட்கள், மண்டையைப் போட்டு குழப்பியிருக்கிறேன்!

    இப்போ, ஆஃப்கானிஸ்தானில் ஒரு ஃபிரெஞ்சு வீரர் இறந்துவிட்டால், அன்று முழுக்க ஒரே டல்லாக இருக்கும்! அதே சமயத்தில், அங்கு இஸ்லாமிய போராளிகளோ, படையினரோ கொல்லப்பட்டாலும், அதுவும் துக்கத்தையே வரவழைக்கும்!
    -----

    இப்படி ஒரு ரெண்டும் கெட்டான் மனோநிலையில் வாழ்ந்துவருகிறேன்!

    குறிப்பாக சதாம் ஹுசேனை, தூக்கில் போட்ட, அந்த நாளில் மிகவும் சங்கடமாக இருந்தது! மனம் அவருக்காக இரங்கவே செய்தது! என்ன செய்வது?

    எங்களுக்கு மேற்கு நாடும் வேண்டும், இஸ்லாமிய சொந்தங்களும் வேண்டும்!

    நண்பர்களே! நான் முன்பு சொன்னது போல, நான்கு இஸ்லாமிய நண்பர்களால், நான் காப்பாற்றப்பட்ட அந்த நாள் அக்டோபர் 7 ஆகிய இன்றாகும்! இந்த நன்னாளில், அந்த நால்வரோடும் சேர்த்து, இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரையுமே நினைத்துப் பார்க்கிறேன்!

    அனைவரின் மீதும் அல்லாஹ்வின் கருணை என்றும் நிலவுவதாக!

    SOME OF THE COMMENTS

    Powder Star - Dr. ஐடியாமணி said... 6
    @தனிமரம்

    எனக்குப் பிடித்த al.ஜாபீர்,ஹலீர் ரகுமான் அபுபைதா மொயூத் பாரின் அப்துல்காதர் என பலர் அறிவிப்புத்துறையில் இன்றும் முன்னனியில் இருக்கும் போது அவர்களை ஒரு தீவிரவாதிகள் என்ற போர்வையில் சித்தரிப்பது சங்கடமே!////////

    நிச்சயமாக! அவர்களின் தமிழ்கூட, அவ்வளவு சுத்தமாக இருக்கும் அண்ணா!
    Friday, October 07, 2011 12:30:00 AM

    தனிமரம் said... 7
    உண்மையில் நானும் வழி மொழிவது இவர்களின் மதப்பற்று இன்று நம் இந்துக்கள் நிலையைச் சொன்னால் நாளை தனிமரம் வலைகூட தோனிக்கலில்,பட்டானிச்சூரில் பட்டம்விடுமோ தெரியாது?
    Friday, October 07, 2011 12:31:00 AM

    தனிமரம் said... 8
    மிக்கியமாக கிழக்குமாகாணத்தின் அறிவிப்பாளர்கள் கவிஞர்கள் நல்ல இசை யாணம் உள்ளவர்கள் இன்றும் சில பாடல்களை நான் தனிமரத்தில் ஒலிக்கவிட அவர்கள்தான் காரணம்!
    Friday, October 07, 2011 12:33:00 AM

    தனிமரம் said... 10
    கால ஓட்டத்தில் சிலர் செய்த செயல்கள் மற்றவர்கள் மீது தீவிரவாதப்பார்வையை கொடுக்கின்றது என்னுடன் பழகியவர்கள் பெருநாள் வட்டலப்பம் சுவை இன்னும் நாவில் ஊறுகின்றது உங்கள் பதிவினை வாசிக்கும் போது!
    Friday, October 07, 2011 12:36:00 AM


    CONTINUED ....

    ReplyDelete
  8. PART 3. ஐடியாமணி / பவுடர்மணி / மாத்தியோசி மணி என்ற பெயர்களில் உலவிய இரட்டை நாக்கு மணியின் இஸ்லாமியர்கள் நிஜமாகவே பயங்கரவாதிகளா???

    காட்டான் said... 12

    வணக்கம் மணிசார் நாங்களும் சிறு வயதில் அப்பாவின் வியாபார நிமித்தம் எட்டியாந்தோட்டையில் இருந்தோம் அங்கு முஸ்ஸீம்களோடு பழகிய அனுபவம் எனக்கும் உண்டு. அப்பாவின் நல்ல தோழனாக ஒரு முஸ்ஸீமே இருந்தார் 83ஆம் ஆண்டுவரை.. இங்கும் நான் முஸ்ஸீம் நண்பர்களோடுதான் வேலை செய்கிறேன் இப்போதைய நிலைமையில் உங்களைப்போலதான் நானும் இரண்டும் கெட்டான் நிலைதான்.. இந்த பதிவை அதிகமாக விமர்சிக்க விரும்பவில்லை 2002ற்கு பிறகு முஸ்ஸீம் மக்களை மற்ற சமூகத்தவர்கள் பார்க்கும் பார்வை மாறியுள்ளது.. இது திட்டமிட்டே நடப்பதைப்போல் உள்ளது!!!
    Friday, October 07, 2011 12:37:00 AM


    DrPKandaswamyPhD said... 28
    கடைசியா ஒரு உருப்படியான பதிவு போட்டிருக்கீங்க!!!!!
    Friday, October 07, 2011 2:19:00 AM

    K.s.s.Rajh said... 30
    .உண்மையில் நட்புடன் பழகுவதற்கு அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்
    Friday, October 07, 2011 5:10:00 AM

    மாய உலகம் said... 43
    எனக்கும் வாழ்வில் இஸ்லாமிய நண்பர்கள் நல்ல விதமாக பழகி உதவியிருக்கின்றனர்... உங்கள் பதிவுகள் மூலமாக அவர்களை உணர்கிறேன்...
    Friday, October 07, 2011 7:01:00 AM

    Vinodhini said... 46
    மிகவும் உண்மையான கருத்து.. எனக்கும் பல நாட்களாக இருக்கும் சந்தேகமே இது, சிலர் தங்களது சுயநலன்களுக்காக இன்னொருவர் மீது பழி போடுவதும், அவர்களை துரோகிகளாக சித்தரித்து காட்டுவதும் இந்த உலகில் சகஜமாக போய்விட்டது.. எனக்கும் நிறைய இஸ்லாமிய தோழர்கள் தோழிகள் இருக்கிறார்கள், அன்பாய் & பண்பாய் பழகுவதில் அவர்களை அடித்துக்கொள்ள யாருமே இல்லை என்று கூறலாம்.
    Friday, October 07, 2011 7:30:00 AM

    Yoga.s.FR said... 47
    வெள்ளி வணக்கம்!உங்களுடன் சேர்ந்து நானும் உங்களைக் காப்பாற்றிய அந்த அன்பு உள்ளங்களை வாழ்த்துகிறேன்.இஸ்லாமியர்களின் உதவும் பண்பை யாழில் நான் அனுபவித்திருக்கிறேன்.இங்கே,பிரான்சில் இந்திய காரைக்கால் பெற்ற புதல்வர்கள் எமது விடுதலைப் போருக்கு தெரிவிக்கும் ஆதரவையும் பார்க்கிறேன்!நன்றி நண்பர்களே!
    Friday, October 07, 2011 7:48:00 AM

    மகேந்திரன் said... 50
    மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்பவர்கள்
    சரியான முறையில் முறைப்படுத்தப்படவில்லை என்றுதான் அர்த்தம்.
    எந்த ஒரு மதமும் பயங்கரவாதத்தை முன்மொழியவில்லை.
    அடுத்தவரை தண்டித்து நீ நினைத்ததை சாதித்துக்கொள்ளவேண்டும் என எந்த மதமும் கூறவில்லை. புனிதப்போர் என்று மாதங்கள் குறிப்பிடுவது, எப்போது மதங்களின் சத்திய சாரங்கள் மீறப்படுகிறதோ அப்போது மிதமான முறையில் புனிதப்போர் புரிந்து மதங்களின் புண்ணிய சாரங்களை அவர்களுக்கு விளங்குங்கள் என்றே மாதங்கள் கூறுகின்றன.

    நம்மில் எத்தனையோ நண்பர்கள் இஸ்லாமியர்களுடன் பழகும் வாய்ப்பு படைத்தவர்கள். நட்புடன் பழகும் யாரும் அப்படி மனம் படைத்தவர்கள் இல்லை.
    இஸ்லாத்தின் பெயர்சொல்லி பயங்கரவாதம் செய்யும் யாரும் இஸ்லாமியர்கள் அல்லர்...
    Friday, October 07, 2011 8:17:00 AM

    Powder Star - Dr. ஐடியாமணி said... 54
    @K.s.s.Rajh

    மிகவும் நல்ல ஒரு பதிவு மச்சான் சார்..எனக்கும் நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கின்றார்கள்..அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்குது.உண்மையில் நட்புடன் பழகுவதற்கு அவர்களுக்கு நிகர் அவர்கள்தான் ///////////

    உண்மைதான்! மிகவும் அன்பாக பழகுவார்கள்! பேச்சிலும் அவ்வளவு கண்ணியம் இருக்கும்!
    Friday, October 07, 2011 9:11:00 AM


    Powder Star - Dr. ஐடியாமணி said... 86
    @சசிகுமார்

    உண்மைதான் அனைத்து முச்லீம்பளும் தீவிரவாதிகள் அல்ல,,,,////////

    நன்றி சசிகுமார்! ” முஸ்லீம்களும்” என்ற வார்த்தையை தவறாக டைப் செய்திருக்கிறீர்களே! அவர்களின் மனம்புண்பட்டு விடுமல்லவா??

    அவதானம் வேணாம்???
    Friday, October 07, 2011 11:38:00 AM

    CONTINUED ....

    ReplyDelete
  9. PART 4. ஐடியாமணி / பவுடர்மணி / மாத்தியோசி மணி என்ற பெயர்களில் உலவிய இரட்டை நாக்கு மணியின் இஸ்லாமியர்கள் நிஜமாகவே பயங்கரவாதிகளா???


    Powder Star - Dr. ஐடியாமணி said... 88
    @நிரூபன்

    இஸ்லாமிய சகோதர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் விரிசல் ஏற்படுவதற்கு எங்களின் அரசியல்வாதிகளும், பிரித்தாளும் தன்மை கொண்ட தமிழ்ப் பெரியவர்களும், ஒரு சில இஸ்லாமிய பெரியார்களும் தான் ஈழத்தில் காரணமாக இருந்தார்கள்.

    ஆனால் இன்றும் யாழ்ப்பாணத்தில் புட்டும் தேங்காய்ப் பூவும் போன்று இஸ்லாமிய சகோதர்கள் ஒன்றித்து வாழ்ந்து வருகின்றார்கள்.

    நல்ல பதிவு வேலை பிசியில் விரிவான பின்னூட்டம் இட முடியவில்லை.

    மன்னிக்கவும்! //////////

    தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்து அரசியல் நடத்திய காலம் போயாச்சு! இரு இன மக்களும் ஈழத்தில் ஒற்றுமையாக வாழத்தொடங்கி பல வருஷங்கள் ஆச்சு! ஆனால், உண்மை இவ்வளவு நாளும் வெளித்தெரியாமல் இருந்தது!

    கருத்துக்கு நன்றி நண்பா!
    Friday, October 07, 2011 11:41:00 AM

    Powder Star - Dr. ஐடியாமணி said... 90
    @செங்கோவி

    இஸ்லாமியர்களிடம் உள்ள, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தீவிர இறைபக்தியும், சகோதரத்துவமும் தான்..

    எனது நெருங்கிய நண்பரும் இஸ்லாமியரே. சொந்தத் தொழில் செய்து முன்னேறுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்../////////

    நிச்சயமாக! செய்யும் தொழிலே தெய்வம் என்பதை நிஜமாகவே நம்புபவர்கள் அவர்கள்! எந்தத் தொழிலையும், நேர்மையாக, உண்மையாக செய்வார்கள்!

    அதனால் தான் வர்த்தகத்தில் சிறந்து விளங்கி, உலகத்தின் கண்களுக்கே, உறுத்தலாக இருக்கிறார்கள்! உலகம் முஸ்லிம்களை ஒடுக்க நினைப்பது, அவர்களின் பொருளாதார வளர்ச்சியினால் வந்த பொறாமைதான்!
    Friday, October 07, 2011 11:48:00 AM

    Powder Star - Dr. ஐடியாமணி said... 91
    @செங்கோவி

    1990களுக்குப் பிறகே அவர்கள் மீதான கருத்தியல் தாக்குதல் அதிகம் ஆகியது..

    எல்லா மதத்திலும் மத அடிப்படைவாதிகள் உண்டு. ஆனால் அவர்களின் குரல், அந்த மதத்தின் ஒட்டுமொத்தக் குரல் அல்ல.

    துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமியர்களின் குரலாக ‘அடிப்படைவாதிகளின்’ செயல்களும், பேச்சுக்கலூம் காட்டப்பட்டன. அது இஸ்லாமியர்களுக்கு சமூகரீதியில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது.

    ஆனாலும் பெருவாரியான இஸ்லாமிய மக்கள், தொடர்ந்து நல்லுறவைப் பேணியதன்மூலம் தங்களைப் பற்றிய அவதூறுகளை புறந்தள்ளினார்கள்.

    இஸ்லாமியர்களுடன் பழகியோரின் சிந்தனை உங்கள் பதிவைப் போன்றே இருக்கும். அதுவே உண்மை./////////

    உண்மைதான் அண்ணான்! நானும் அவர்களோடு பழகாதவரை, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையே கொண்டிருந்தேன்! ஏனெனில் நான் வாழ்ந்த சூழலில் எனக்கு சொல்லப்பட்டவை எல்லாமே - முஸ்லிம்களுடன் பழக கூடாது என்பதே!

    பின்னர், சுயமாக சிந்திக்கத் தொடங்கியவுடன், எனது கருத்துக்களை மாற்றிக்கொண்டேன்!
    Friday, October 07, 2011 11:52:00 AM


    பன்னிக்குட்டி ராம்சாமி said... 93
    அருமையான நெகிழ வைக்கும் பதிவு.... !
    Friday, October 07, 2011 12:06:00 PM
    முழுமையாக படிக்க இங்கே >>>> இஸ்லாமியர்கள் நிஜமாகவே பயங்கரவாதிகளா??? <<<< க்ளிக் செய்ய‌வும்.

    ReplyDelete
  10. சகோ.சுவனப்பிரியன்!முன்பே எங்லோ ஒரு முறை சுவனப்பிரியனும்,கோவிக்கண்ணனும் நீண்ட நாட்களாக எதிர் விவாதம் செய்பவர்கள் என குறிப்பிட்டுள்ளேன.ஆனால் முந்தைய விவாத கால சூழலுக்கும் தற்போது மதம் என்ற சுழலில் பதிவர்கள் வலம் வருவதற்கும் காரணங்கள் என்ன?நிறைய இஸ்லாமிய பதிவர்கள் வந்து விட்டார்கள் என்பீர்கள்.காரணம் அதுவல்ல,மதம் என்ற ஒற்றைக்கோட்டில் அனைவரும் இணைகிறீரக்ள்.இணைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் கருத்தியலை குழுவாக சில பின்புலங்களுடன் முன்வைக்க முயல்கிறீர்கள.எனவே பொதுதளத்திற்கு வரும்போது அவற்றிற்கான விமர்சனங்களூம் உருவாகின்றன.

    ஒரு பதிவினால் உங்களுக்கும்,மணிக்கும் தகராறு என்பதை விட மத குழுவாக நீங்கள் செயல்படுவதைப் போல் மணியை சார்ந்தவர்களூம் சிலர் நண்பர் குழுவாக செயல்படுகின்றனர்.ஒரு வேளை மணியே இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை முதலில் முன் வைத்திருந்தாலும் அதற்கு எதிர்வினையாக இஸ்லாமிய சகோக்களும் மணி குழுவினரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு பூமராங்க் மாதிரி திருப்பி தாக்கும் என்று உணராமல் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை ஏவினீர்கள்.இதற்கு உதாரணமாக வாஞ்சூர் என்ற உண்மைகளின் கருத்துக்களையும்,ஏனையவர்களின் பின்னூட்டங்களையும் கூறலாம்.

    இஸ்லாமிய சகோதரர்களின் மீதான விமர்சனங்களுக்கு துவக்க கால மதம் சார்ந்த பதிவுகளே காரணமென்பேன்.இப்பொழுது கொஞ்சம் மாற்றம் தெரிகிறது.தொடர்பயணத்தில் இன்னும் மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  11. //இதன்படி பார்த்தால் நம் காந்தியிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் வரை பாடுபட்ட அனைத்து விடுதலை போராட்ட வீரர்களும் தீவிரவாதிகளே.//

    இன்று காந்தியும்,சுபாஷ் சந்திர போஸ் எப்படி விடுதலைப்போராட்ட வீரர்களோ அதே போல் பிரபாகரனும் ஒரு நாள் விடுதலைப்போராட்ட வீரன் என்பதை தொடரும் இலங்கை அரசின் சட்டங்களும்,எதிர்கால வரலாறும் உறுதிப்படுத்தும்.

    பிரபாகரனுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் எதிரான பல விமர்சனங்கள் இன்றும் தனிமனிதர்கள்,அரசுகள் சார்ந்து இருக்கின்றன.இவற்றையெல்லாம் கடந்தும் பிரபாகரன் என்ற பெயர் விடுதலைக்கான மற்றொரு பெயர் என்பதை வரலாறு சொல்லும் என்பதை அமெரிக்காவின் சி.ஐ.ஏவும்,பொலிவிய அரசும் செய்த பிரச்சாரங்களையும் தாண்டி செகுவாரா என்ற பெயர் நிற்பதைப் போல் தமிழர்களிடையே பிரபாகரன் என்ற பெயரும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

    //லிபியாவில் சம்பந்தமில்லாத மூன்று அமெரிக்கர்களை கொன்றதை நான் ஆதரிக்கவில்லை.//

    லிபியாவில் சம்பந்தமில்லாமல் மூன்று அமெரிக்கர்களை கொன்றதை ஆதரிக்கவில்லையென நீங்கள் பின்னூட்டதிலாவது வெளிப்படுத்தியதற்கு நன்றி.

    மணி இஸ்லாமிய பதிவர்களை சுண்டி விட்டால் குதிப்பார்கள் என்று அறிந்தே தூண்டி விடுவதைப்போலவே அமெரிக்க திரைப்படமும் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்த வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தோடு வெளி வந்தது என்பதோடு ஜூலையில் அமெரிக்காவில் திரையிடப்பட்ட போது இப்படி ஒரு மொக்கைப்படமா என்று வெளியிட்ட சில திரையரங்குகள் காத்து வாங்கின என இப்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.தரக்குறைவான பின்னூட்டங்கள் எப்படி தூண்டிவிடுகிறதோ அதே போல் அரேபிய மொழி பெயர்ப்பு ட்ரெய்லர் இஸ்லாமியர்களை தூண்டி விட்டுள்ளது.எதிர்ப்பையும் கூட் எப்படி வெளிப்படுத்த வேண்டுமென்று தெரியாத ஆங்கில திரைபப்டத்தின் மூலமே இஸ்லாமியர்களை அவமதிக்கும் நோக்கில்தான் ட்ரெயலர்கள் இருக்கின்ற்ன.திரைப்பட ட்ரெய்லரை கண்டனம் செய்வதோடு அமெரிக்க யூத வலையில் இஸ்லாமியர்கள் விழுந்து விடாமல் இருப்பதற்கான தூரப்பார்வை இல்லை என்பதையே லிபியாவின் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் உறுதிப்படுத்துகிற்து.

    ReplyDelete
  12. அஸ்ஸலாம் அலைக்கும்..சகோ,
    அவர்களைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டம் , இன்றைக்கு துற்றிக்கொண்டிருக்கும் வாய், நாளை போற்றி புகழ் பாடும் என்பதை தாங்கள் அறியாததல்ல...
    ஆக்கபூர்வமான பணிகளில் கவனத்தை செலுத்துவோம்...
    அவதூறு பரப்புவோரை புறம் தள்ளுவோம் .......
    எல்லோரையும் ஆரவனைத்து சாந்தி,சமாதான வழி நடப்போம் .

    ReplyDelete
  13. Anonymous6:55 AM

    குரான் எரிப்பை பற்றி பதிவு போட்டிருக்கான் ஒருவன், இங்கேயாவது குரானை தான் எரிச்சாங்க, அங்க அவன் இனத்தையே எரிச்சிட்டான். அதுக்கப்புறமும் திருந்தவில்லை இந்த ஈனப் பயல்கள்

    ReplyDelete
  14. Anonymous7:06 AM

    //இதற்கு பதிலாக பின்லேடன் & முல்லா ஓமர் அன்கோ காந்தி வழி போராட்டக்காரர்கள் என்று நீங்கள் சான்றிதழ் தந்திருக்கலாம்//

    மேற்படி நபர்கள் தீவிரவாதிகளென்றால், சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரும் ஜான்சி ராணிப் படையும் தீவிரவாதிகள் என்பது தெரியாதா? இவ்விரு சாராருக்கும் நீங்கள் ஒரே பெயரைத்தான் சூட்ட வேண்டியிருக்கும். ஒரேயொரு வித்தியாசம். அது அவர்கள் சார்ந்த சமயம். அவ்வளவுதான்.

    - வள்ளுவன்

    ReplyDelete
  15. 1 வயது குழந்தைக்கு சிறை – திருச்சி போலீசின் ‘தாயுள்ளம்’!


    நேற்று சீரங்கம் கோயிலில் அன்னதானம் செய்ய வந்த அம்மாவுக்கு கருப்புக் கொடி காட்டி, அதிமுக காலிகளால் தாக்கப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் நேற்றிரவே திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

    மாஜிஸ்திரேட் காயத்தை பதிவு செய்து கொண்டார்.

    ஆனால் காயத்துக்கு காரணமானவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று போலீசை கேட்டதாகத் தெரியவில்லை.

    அதெற்கெல்லாம் பி.ஆர்.பி யாகப் பிறக்க வேண்டும்.

    நேற்று கைது செய்யப்பட்டிருப்பவர்களில் 11 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 3 குழந்தைகள்.

    சிறுவர்கள் அல்ல குழந்தைகள்.

    இளமாறன் –வயது 3, சிந்தனை -வயது 2, அஜிதா –வயது 1 .

    இந்த மூவரும் இப்போது திருச்சி மத்திய சிறையில்.

    இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143, 153, 188, 189, 190, 353, 500, 501, 504, 506(1) ஆகிய பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு.


    கூடங்குளம் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கும் மக்களை, பாளையங்கோட்டை சிறையில் வைத்தால் சொந்த பந்தங்கள் வந்து பார்த்து விடக்கூடுமே என்பதனால், அதைத் தடுப்பதற்காக, அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பியது நெல்லை போலீசு.

    இப்போது 3 குழந்தைகள் உட்பட 21 பேரை திருச்சி சிறைக்கு அனுப்பி அம்மக்களின் வாட்டத்தைப் போக்கி விட்டது திருச்சி போலீசு.

    அம்மாவுக்கே தெரியாமல் போலீசாரின் உள்ளத்தில் புகுந்து வேலை செய்கிறது அம்மாவின் தாயுள்ளம் – அடேங்கப்பா!

    http://www.vinavu.com/2012/09/14/black-flag-j-follow-up/

    ReplyDelete
  16. //இதன்படி பார்த்தால் நம் காந்தியிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் வரை பாடுபட்ட அனைத்து விடுதலை போராட்ட வீரர்களும் தீவிரவாதிகளே.//

    சுவனம் நீங்கள் ஜின்னாவை காந்தி நேசித்ததால் இப்படி கூறியிருக்கின்றீர் என்றே கருதுகின்றேன்...ஆம் பிரிவினைக்கு எதிரான இஸ்லாமியர்களை பாத்வா மூலம் கொன்று குவித்த முஸ்லீம் லீக் கட்சி ஜின்னாவுடையது!

    ஆனால் சுபாஷ் அப்படிப்பட்டவரல்ல...! தன் நாட்டை மீட்க ஆயுத வழியில் போராடிய போராளி!

    போராளிக்கும், தீவிரவாதிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது!

    ஒரு மணிக்கு பதில் அளிக்கிறேன் பேர்வழி என்று இந்திய மக்கள் அனைவரும் நேசிக்கும் ஒரு தேசத்தலைவரை இழிவு படுத்துவதிலிருந்தே நீர் மதிப்பிழந்து போய் விட்டீர்!

    ReplyDelete
  17. ///உலகமே போறறும் தலைவரின் வாழ்க்கையில் பொய்களை புனைந்து ///

    தமிழர்களில் பெரும்பாலானோர் போற்றும் பிரபாகரனைத் தரக்குறைவாக எழுதும் போது இனிக்கின்றதா?

    ReplyDelete
  18. ஜெயலலிதாவைப் பற்றி ஒரு சிங்களவன் போட்ட கார்ட்டூனைப் பற்றி பதிவு ஒன்றும் இல்லை.

    ஜெயலலிதாவிற்குப் பதில் பெனாசிர் புட்டோ..மன்மோகனுக்குப் பதில் ராஜீவ் என்று இந்து பத்திரிக்கையில் ஒரு கார்ட்டூன் வந்திருந்தால் என்னா குதி குதிப்பீக?

    ReplyDelete
  19. சும்மா ஆடாதே....உன்னைப் போன்ற தீவிரவாதிகளால் உன் சமூகத்தின் பெயர்தான் கெடும்.

    ReplyDelete
  20. வீடு சுரேஷ் குமார்!

    //போராளிக்கும், தீவிரவாதிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது!//

    ஆம். சுபாஷ் சந்திர போசுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரனுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

    //சுவனம் நீங்கள் ஜின்னாவை காந்தி நேசித்ததால் இப்படி கூறியிருக்கின்றீர் என்றே கருதுகின்றேன்...ஆம் பிரிவினைக்கு எதிரான இஸ்லாமியர்களை பாத்வா மூலம் கொன்று குவித்த முஸ்லீம் லீக் கட்சி ஜின்னாவுடையது!//

    நீங்க இன்னும் நிறைய சுதந்திர போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. :-)

    ReplyDelete
  21. ராவணன்!

    //தமிழர்களில் பெரும்பாலானோர் போற்றும் பிரபாகரனைத் தரக்குறைவாக எழுதும் போது இனிக்கின்றதா?//

    சும்மா...காமெடில்லாம் பண்ணக் கூடாது ஆமாம் சொல்லிப்புட்டேன்..... :-)

    ReplyDelete
  22. வள்ளுவன்!

    //மேற்படி நபர்கள் தீவிரவாதிகளென்றால், சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரும் ஜான்சி ராணிப் படையும் தீவிரவாதிகள் என்பது தெரியாதா? இவ்விரு சாராருக்கும் நீங்கள் ஒரே பெயரைத்தான் சூட்ட வேண்டியிருக்கும். ஒரேயொரு வித்தியாசம். அது அவர்கள் சார்ந்த சமயம். அவ்வளவுதான்.//

    சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  23. வஅலைக்கும் சலாம் சகோ நாசர்!

    //அவர்களைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டம் , இன்றைக்கு துற்றிக்கொண்டிருக்கும் வாய், நாளை போற்றி புகழ் பாடும் என்பதை தாங்கள் அறியாததல்ல...//

    உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

    ReplyDelete
  24. சகோ ராஜ நடராஜன்!

    //இன்று காந்தியும்,சுபாஷ் சந்திர போஸ் எப்படி விடுதலைப்போராட்ட வீரர்களோ அதே போல் பிரபாகரனும் ஒரு நாள் விடுதலைப்போராட்ட வீரன் என்பதை தொடரும் இலங்கை அரசின் சட்டங்களும்,எதிர்கால வரலாறும் உறுதிப்படுத்தும்.//

    சுபாஷ் சந்திர போசும், காந்தியும் எதிர் கருத்து கொண்டிருந்தாலும் ஒருவரை யொருவர் தீர்த்துக் கட்ட முயற்ச்சிக்கவில்லை.

    ஆனால் பிரபாகரன் கதையே வேறு. தனக்கு போட்டியாகவோ தன்னை எதிர்த்து யார் பேசினாலும் அவர்களை போட்டுத் தள்ளுவதில் கொஞ்சமும் பாவ புண்ணியம் பார்க்காதவர் பிரபாகரன்.

    ராஜபக்ஷே பிற்காலத்தில் தவறாக நடந்தாலும் அதற்கு மக்கள் அரசியல் தீர்வு முலமே ஒரு முடிவு எட்டப்பட அந்த மக்கள் விரும்புவர். இனி ஒரு காலும் பிரபாகரனின் புகழ் அதற்கு தீர்வாக அமையாது. அந்த அளவு தமிழ் மக்கள் பிரபாகரனால் தொல்லைக்குள்ளாக்கப்பட்டனர். அங்கு வாழ்ந்த மக்களின் நேரடி வாக்கு மூலத்தை வைத்தே இதனை சொல்கிறேன்.

    ReplyDelete
  25. வஅலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!

    //சகோஸ், தயக்கூர்ந்து இம்மாதிரியான பதிவுகளை தவிருங்கள். நம் நோக்கம் என்னவென்று நன்கு தெரிந்த பின்னும் உங்களைப்போன்றவர்கள் இம்மாதியான பதிவுகளில் நேரத்தை வீணாக்குவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது.

    நேரம் பொன் போன்றது என்பார்கள். அதனை புரிந்துக்கொண்டால் சால நலம்..//

    இதை தவிர்க்கத்தான் நினைத்தேன். பொதுவில் உள்ளவர்கள் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள புதிய நபர்களுக்காகவே இந்த பதிவு.

    ReplyDelete
  26. வஅலைக்கும் சலாம்! அஜீம் பாஸா!

    //நானும் படித்தேன் அந்த(மணியின்) பதிவை முட்டாள்களுக்கு பதில் அளித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  27. சகோ உண்மைகள்!

    //அறிமுகம் - நண்பர்களே! இன்று எனக்கு ஒரு முக்கியமான நாள்! உயிர்காக்கப்பட்ட நாள்! காப்பாற்றியவர்கள் நான்கு இஸ்லாமியர்கள்! அவர்களுக்காக இந்தப் பதிவை அர்ப்பணிக்கிறேன்! இது எனது தனிப்பட்ட பதிவாகும்! எனது டைரியை படிப்பது போல இருக்கும்! எனவே அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி சொல்லிக்கொண்டு, இப்பதிவை தொடருகிறேன்!//

    பல சுட்டிகளை தந்து பதிவை மேலும் மெருகூற்றியதற்கு நன்றி!

    ReplyDelete
  28. Anonymous9:40 AM

    பூவண்ணன் says:
    September 1, 2012 at 10:07 am

    பூவண்ணன்

    http://countrystudies.us/nepal/13.htm

    நம்ம ஹிந்டுத்வர்கள் இஸ்லாமிய ராஜாக்கள் தான் அண்ணன்,தம்பிய,அப்பாவ கொன்று,சிறையில் வைத்து ராஜாவானவர்கள் ,ஹிந்துக்கள் ரொம்ப நல்லவிங்க என்று நிறைய கதைகளை பரப்பியுள்ளனர்
    பல கோடி மக்களும் அதை நம்பி இன்றும் அவர்களின் காலங்களை பொற்காலம் என்று எண்ணி வாழ்கின்றனர்
    நேர்மையான புரிதல் இருந்தால் ஹிந்து ராஜாக்கள் அட்டூழியங்களில் மற்றவர்களுக்கு சிறிதும் சளைத்தவர்கள் இல்லை எனபது புரியும்
    குடும்பங்களை அழிப்பது,ராஜகுருவாக டம்மி ராஜாக்களை ஆட்டுவிப்பது ,இளம் மனைவியின் பேச்சை கேட்டு முந்தைய மனைவிகளையும் ,மகன்களையும் விரட்டுவது,கொல்வது என்று ஹிந்து ராஜாக்கள் ஆடாத ஆட்டமல்ல

    Under intense pressure from the aristocracy, the king decreed in January 1843 that he would rule the country only with advice and agreement of his junior queen, Lakshmidevi, and commanded his subjects to obey her even over his own son, Surendra. The queen, seeking support of her own son’s claims to the throne over those of Surendra, invited back from exile Mathbar Singh Thapa, who was popular in army circles. Upon his arrival in Kathmandu, an investigation of his uncle’s death took place, and a number of his Pande enemies were executed

    http://en.wikipedia.org/wiki/Anglo-Nepalese_War

    During the regency of Rani Rajendra Laxmi, towards the close of the 18th century, the hill country of Palpa was conquered and annexed to Nepal. The rajah retreated to Butwal, but was subsequently induced, under false promises of redress, to visit Kathmandu, where he was put to death, and his territories in Butwal seized and occupied by the Gorkhali.[6] Bhimsen Thapa, the Gorkhali prime minister from 1806 to 1837, installed his own father as governor of Palpa, leading to serious border disputes between the two powers.

    ReplyDelete
  29. Anonymous9:44 AM

    Kavya says:
    August 29, 2012 at 8:55 am

    பகதூர் ஷாவும் திப்புவும் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சித்திரிக்கப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திராவிட ஆட்சியில் அண்டப் புளுகுகளே உண்மையென எழுதப்படும் பாடங்களை நம் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!//

    The above is from Malarmannan.

    ம‌ன்ன‌ர்க‌ள் அனைவ‌ரும் கால‌னி அர‌சின் பேச்சைக்கேட்டு ந‌ட‌ந்த‌வ‌ர்க‌ள். எல்லாமே ச‌ரியாக‌ இருக்கும்போது வாரிசு ச‌ட்ட‌த்தினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன்ன‌ர்க‌ளும், ம‌ற்ற‌ பிற‌வ‌ற்றால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன்ன‌ர்க‌ளும் சேர்ந்து அவ்வ‌ர‌சை எதிர்த்த‌தே 1857 புர‌ட்சி. சிப்பாய்க்க‌ல‌க‌ம் அவ‌ர்க‌ளுக்குத் தோதாய‌ அமைந்த‌து.

    இதே போல‌ எக்கார‌ண‌ங்க‌ளாலும் கால‌னி அர‌சை எதிர்த்த‌வ‌ர்க‌ளை இன்றும் தியாகிக‌ள் என்கிறோம். ச‌னாத‌ன‌ த‌ர்ம‌ம் ஆங்கிலேய‌னால் பாழ்ப‌டுகிற‌து என்று திருனெல்வேலி க‌லெக்ட‌ரை அவ‌ர் ம‌னைவி குழ‌ந்தைக‌ள் முன்னிலையிலேயே சுட்டுக்கொன்ற‌வ‌னை (வாஞ்சிநாத‌ன்) நாம் சுத‌ந்திர‌போராட்ட‌த்தியாகி என்ற‌ழைத்து நூல்க‌ளில் ப‌டிக்கிறோம்.

    ஆக‌, ஒரு உண்மை தெரிய‌வ‌ரும். கால‌னி அர‌சையோ, அவ்வ‌ரசு ஊழிய‌ர்க‌ளைக்கொன்ற‌வ‌ர்க‌ள‌ எல்லாருமே சுத‌ந்திர‌ப்போராட்ட‌த்தியாகிக‌ள்தான். அவ‌ர்க‌ளுள் ப‌ல‌ர் த‌ன்ன‌லமில்லா பொதுவாக‌ ந‌ம் நாட்டை நாமே ஆள‌வேண்டுமென‌ வேட்கையால் செய‌ல்ப‌ட்டோர். வ உ சி, சிவா, கும‌ர‌ன் போன்றோர். த‌ன்ன‌ல‌த்தோடு தன் ஆட்சிக்குக்கேடு வ‌ர‌க்கூடாதென்று வெள்ளைய‌ன் அர‌சை எதிர்த்தோர் ப‌ல‌ர்: ப‌ஹாதூர் ஷா, ராணி ஜான்சிபாய், த‌த்தியா தோப்பே, திப்பு சுல்தான்.

    த‌ன் ம‌த‌த்துக்குக் கேடுவ‌ர‌க்கூடாது என்று எதிர்த்தோர் சில‌ர்: மாங்க‌ள் பாண்டே போன்றோர்.

    த‌ன் வைதீக‌ ச‌னாத‌ன‌ ம‌த‌த்துக்கும் அக்க‌லாச்சார‌த்துக்கும் கேடுவ‌ருகிற‌தே இவ‌னால் என்று தீவிர‌வாதியாக‌ மாறிவர் சில‌ர்: வாஞ்சிநாத‌ன் போன்றோர்.

    அனைவ‌ருமே இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் தியாகிக‌ள்தான். அப்ப‌டியிருக்க‌ ம‌ல‌ர்ம‌ன்ன‌னுக்க் ப‌ஹ‌தூர் ஷா ச‌ஃபார், திப்பு மேல்ம‌ட்டும் ஏன் கோப‌ம்? ஜான்சி ராணி, த‌ன்தியா தோப்பேக்க‌ளை ஏன் விட்டுவிட்டார்?

    தியாகி ஆர்? என்ப‌த‌ன் விள‌க்க‌ம் சிம்பிள்: கார‌ண‌ம் எதாகாவாவ‌து இருக்க‌ட்டும். வெள்ளைய‌னை எதிர்த்தால், அவ‌னைக்கொன்றால், அல்ல‌து அவர்களால் சிறையில‌ட‌ப்ப‌ட்டால், அல்ல‌து தூக்கிலிட‌ப்ப‌ட்டால், அவ‌ர்க‌ள் தியாகிக‌ள்தான் என்று சொல்கிற‌து ந‌ம் வ‌ர‌லாற்று நூல்க‌ள். சிந்தித்துச்சொல்லுங்க‌ள் உண்மையா பொய்யா? வ‌ர‌லாறு என்ப‌து என்ன‌? நாம் எழுதிக்கொண்ட‌துதான். இல்லையா?

    அவ‌ர்க‌ளுள் இசுலாமிய‌ர் ம‌ட்டும் தியாகிக‌ள் கிடையாதென்று சொல்ல‌ விழைகிறார் ம‌ல‌ர்ம‌ன்ன‌ன். எப்ப‌டி நியாய‌மாகும்?

    எதையும் எழுதிவிடலாம். கேட்க‌ ஆளில்லையென்றால் என்று மலர்மன்னன் எழுதுவது ம‌லர்ம‌ன்ன‌னுக்கும் பொருந்தும். இவ‌ர் சொல்வ‌து என்ன‌வென்றால், அண்ட‌ப்புழுகுக‌ள் சொல்வ‌த‌ற்கு எங்க‌ளுக்கும் உரிமை தாருங்க‌ள் என்ப‌தே. Complete lack of integrity !

    ReplyDelete
  30. // இனி ஒரு காலும் பிரபாகரனின் புகழ் அதற்கு தீர்வாக அமையாது. அந்த அளவு தமிழ் மக்கள் பிரபாகரனால் தொல்லைக்குள்ளாக்கப்பட்டனர். அங்கு வாழ்ந்த மக்களின் நேரடி வாக்கு மூலத்தை வைத்தே இதனை சொல்கிறேன். //

    சகோ.சுவனப்பிரியன்!நீங்கள் இன்னும் தென் அமேரிக்காவின் வரலாற்றுப் பக்கம் உங்கள் பார்வையை திருப்பவில்லையென நினைக்கின்றேன்.செகுவாராவின் டைரிகள்,கியுபா,பொலிவிய வரலாறுகள் என கொஞ்சம் பார்வையை செலுத்துங்கள்.கூடவே ஆப்பிரிக்காவில் காங்கோ வரலாறும்.

    ஆராய்ச்சிகள் செய்யும் பட்சத்தில் மத சித்தாந்தங்களிலிருந்து சோசலிச சித்தாந்தங்கள் வந்து நிரந்தரமாக மனதில் உட்கார்ந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்:)

    ReplyDelete
  31. சலாம் அண்ணன்...

    ஹா..ஹா..ஹா... நமக்குள்ள எந்த தேர்தலும் நடக்காமலே நீங்க தான் தலைவர்னு நிறைய பேர் முடிவு பண்ணிட்டாங்க...

    சரி விடுங்க...இங்க நீங்க தலைவரா இருந்துகங்க... அங்க ஆசிக் இருக்கட்டும்...அங்க நான் இருந்துகிறேன்.... ஹா..ஹா..ஹா

    தலைவர் சுவனப்பிரியன் வாழ்க..வாழ்க....

    ReplyDelete
  32. Kavya says:
    September 3, 2012 at 5:36 am

    //Then the muslim terrorists who kill people also swear by Koran.

    It is not an utopian world, piriyan. Realise that
    //

    The realisation from your part too is seriously wanting.

    If some ppl abuse a common thing, which was purportedly madeg for the common weal, will that thing per se get perverted?

    Likewise, if internet is abused by some to mount pornography or child sex, or creating troubles in society, if Thinnai itself abused by some miscreants, will these things per se get perverted? Will you spew ur venom on them?

    If some bajrang bali activities and extremist Hindus pounce on a catholic nun using the cry: Jai Bajrang Bali, Jai Hanuman, Jai Shri Ram, and rape her (a case which went to SC), If some similarly burn alive a priest with his young children together, using the same cry: Jai Hanuman (the killers were hanged by the court), can we say that the Jai Hanuman, Jai Sri Ram, get perverted? If some mad terrorst plant a bomb saying ‘AllaahoAkbar’ in a public place to kill ppl, will Islam stand perverted? If Devanathan abuses a temple for his activities, can we throw the whole lot of Hinduism into the Bay of Bengal?

    குரங்கு கையில் பூமாலை கொடுத்தால்....

    ReplyDelete
  33. சலாம் சகோ சிராஜ்!

    //ஹா..ஹா..ஹா... நமக்குள்ள எந்த தேர்தலும் நடக்காமலே நீங்க தான் தலைவர்னு நிறைய பேர் முடிவு பண்ணிட்டாங்க...//

    அதானே....நான் எப்போ தலைவரானேன்? பல காமெடிகளில் இதுவும் ஒன்று....

    ReplyDelete
  34. சகோ ராஜ நடராஜன்!

    //நீங்கள் இன்னும் தென் அமேரிக்காவின் வரலாற்றுப் பக்கம் உங்கள் பார்வையை திருப்பவில்லையென நினைக்கின்றேன்.செகுவாராவின் டைரிகள்,கியுபா,பொலிவிய வரலாறுகள் என கொஞ்சம் பார்வையை செலுத்துங்கள்.கூடவே ஆப்பிரிக்காவில் காங்கோ வரலாறும்.

    ஆராய்ச்சிகள் செய்யும் பட்சத்தில் மத சித்தாந்தங்களிலிருந்து சோசலிச சித்தாந்தங்கள் வந்து நிரந்தரமாக மனதில் உட்கார்ந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்:)//

    விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் உயரிய நோக்கத்துக்காக போரிட்டனர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர்களின் கடைசி காலங்கள் பெருமைபடும்படியாக இருக்கவில்லை என்பதில் இன்றும் மாற்றுக் கருத்தில்லை.

    செகுவரா, பொலிவிய, கியூப வரலாறுகளால் நாம் பெறும் படிப்பினை என்ன என்பதை நீங்கள் சொன்னால் நான் தெரிந்து கொள்வேன்.

    ReplyDelete
  35. வேதம் கோபால்!

    //இப்படிப்பட்ட இந்திய முஸ்லீம் முன்னோர்களின் வழிவந்த இன்றைய முஸ்லீம்கள் மூதாதையர்களின் கொள்கை படி வாழ்வது தான் உண்மையான மணிதநேயம். இது மதசார்பின்மை நாடு இங்கே மதவெறிகொள்கைகளுக்கு இடம் இல்லை. மீறினால் இனம் அழிவதும் நாடுகடத்தபடுவதும் நிச்சயம் ஒருநாள் பாரதத்தில் நிகழும்.//

    ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக எனது தேசத்தில் புகுந்து கொண்டு எனது நாட்டு பூர்வீக குடிகளை சூத்திரர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் இதற்கு முன்னால் சொல்லி வந்தீர்கள். நடந்தது நடந்து விட்டது. ஆனால் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நாங்களே மேன் மக்கள் என்று கூவி வந்து வர்ணாசிரமத்தை தூக்கி பிடித்தால் எனது நாட்டு பூர்வ குடிகள் உங்களை போன்றவர்களை சொந்த பூமியான ஆப்கானிஸ்தனத்துக்கும், ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் விரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. பார்த்து நடநது கொள்ளுங்கள். இட ஒதுக்கீட்டின் பயனாக உங்கள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்தை இழந்து வருகிறது. வரும் காலம் உங்களுக்கு இன்னும் மோசமாக இருக்கும். அதிலிருந்து தப்ப ஒரே வழி எனது நாட்டு மக்களோடு திருமண பந்தத்தின் மூலம் இரண்டற கலப்பதும் வர்ணாசிரமத்தை கை விடுவதும் தான் உங்கள் முன் உள்ள ஒரே வழி. பிறகு உங்கள் இஷ்டம்: எங்களுக்கில்லை கஷ்டம். :-)

    ReplyDelete
  36. Anonymous12:12 PM

    சுவனப்ரியன் அவர்கள்ளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்

    உங்கள் பதிப்பை சமீப காலமாக தான் பார்த்து வருகிறன் அழகாக பதில் அளிக்கிறிகள் அல்லா நிச்சயமாக உங்களுக்கு உதவி

    புரிவான்

    K S M ஹாஜி முஹமது

    பொதக்குடி

    ReplyDelete
  37. என்ன ஆச்சு, எங்க போனாலும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுகிட்டு பிச்சு பிராண்டிகிட்டு இருக்காங்க.........??

    ReplyDelete
  38. வஅலைக்கும் சலாம்! சகோK S M ஹாஜி முஹமது!

    //உங்கள் பதிப்பை சமீப காலமாக தான் பார்த்து வருகிறன் அழகாக பதில் அளிக்கிறிகள் அல்லா நிச்சயமாக உங்களுக்கு உதவி

    புரிவான்//

    அந்த நம்பிக்கையில்தானே நமது வாழ்க்கையே ஓடுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  39. சகோ ஜெய தேவ தாஸ்!

    //என்ன ஆச்சு, எங்க போனாலும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுகிட்டு பிச்சு பிராண்டிகிட்டு இருக்காங்க.........??//

    அவ்வப்போது இவ்வாறு நிகழ்வது சகஜமே! சில நாட்களில் சரியாகி விடும்.

    ReplyDelete
  40. Anonymous1:57 PM

    ஒருபுறம் மதவாத பதிவர்கள். மறுபுறம் மொக்கை பதிவர்கள்.


    இவர்களுக்குள் தான் சண்டை. இது நல்ல விஷயம் தான்.

    நடத்துங்கள் அன்பரே!

    ReplyDelete
  41. ஒக்லஹாமா சிட்டி:சூறாவளி தாக்கப்போவதாக நினைத்து பயந்துபோய் ஃபிரிட்ஜுக்குள் உட்கார்ந்துகொண்ட பெண் 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார்.அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலம் டுல்சா நகரை சேர்ந்தவர் தெரசா கிறிஸ்டியன் (59). வீட்டில் தனியே வசித்து வந்தார். கடந்த வார கடைசியில் மர்மமான முறையில் மாயமானர். அக்கம்பக்கம், நண்பர், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
    கடிதம் எதுவும் எழுதி வைத்திருக்கிறாரா என்று அவரது மகன் நேற்று முன்தினம் வீடு முழுவதும் அலசினார். அப்போது, ஃப்ரிட்ஜில் இருந்து முனகல் சத்தம் வருவதை கண்டுபிடித்தார். அதிர்ச்சியுடன் திறந்து பார்த்தார். முகம், கை, கால்கள் முழுவதும் பனி மூடிய நிலையில் வெடவெடவென நடுங்கியபடி இருந்தார் தெரசா.
    உடனடியாக போலீஸ் மற்றும் மீட்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். தெரசா உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
    படுபயங்கரமான சூறாவளி காற்று தாக்கப் போகிறது என்று பயந்து, ஃப்ரிட்ஜில் தெரசா பதுங்கியிருக்கிறார். திறக்க முடியாமல் சிக்கிவிட்டார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. அனேகமாக நாலைந்து நாட்கள் அவர் ஃப்ரிட்ஜில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ச்சியாக குளிர் தாக்கியதில் தோலில் சுருக்கம் ஏற்பட்டுள்ளது. பசி, தாகம், சளியாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    paper news 15-09-2012

    ReplyDelete
  42. ஸ்மிதா!

    //The last para reinforces your point that Islam promotes gender equality.
    But the ground reality is different.//

    ஆணும் பெண்ணும் பல விதங்களில் வேறுபடுகிறார்கள். இதைப்பற்றிய எனது சமீபத்திய பதிவையும் பார்க்கவும்.

    http://suvanappiriyan.blogspot.com/2012/09/blog-post_10.html

    அதே சமயம் இந்த வேறுபாட்டை வைத்து பெண்களை இழிவாக கருதும் மனோ நிலையை இஸ்லாம் கண்டிப்பதாகத்தான் நான் சொன்னது.

    ReplyDelete
  43. சத்துணவிலும் ஜாதி வெறி.

    சேலம் மாவட்டம் காடையாம் பட்டி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் சத்துணவுக்கூடங்களில் சமையல் பணியில் ஈடுபடும் தலித் பெண்கள், சாதி வெறியர் களால் சமூகப்புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    பார்ப்பனி யத்தில் ஊறிப் போன சாதி இந்துக்கள்,தங்கள் வீட்டுக் குழந்தைகளை சத்துணவுக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து பகிரங்கமாக தீண்டாமையை வெளிப்படுத்துகின்றனர்.

    “இந்தப் பெண்கள் சமைத்த உணவை சாப்பிடுவது பாவம்” என்று, அவர்கள் கூறுவதாக ‘இந்து’நாளேடு (செப்டம்பர் 4) செய்தி வெளியிட்டுள்ளது.

    எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ்மாதம் ரூ.1300-லிருந்து 3000 வரை குறைந்த ஊதியத்தில்தான் இந்தப் பெண்கள் பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சுந்தர வனிதா என்ற தலித் பெண், 2012 ஆகஸ்டு 16ஆம் தேதி பணிக்கு நியமிக்கப்பட்டார். பணி நியமன நாளிலிருந்தே, அவர் சமூகப்புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்.

    “நான் அவமானத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்”என்று ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளரிடம் கண்ணீர் மல்க அவர் கூறினார்.

    முதல் நாளிலிருந்தே என்னை கேவலமாகப் பேசுவதும், துன்புறுத்துவதும்தொடங்கிவிட்டது.

    ராசிபுரத்தான் காட்டு வலவு எனும் கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில்நான் பணி நியமனம் செய்யப்பட்டேன்.

    வன்னியர் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் தலித்பெண் சமைத்த மதிய உணவை சாப்பிடுவதை அவமானமாகக் கருதுகிறார்கள்.

    கிராமப்பஞ்சாயத்துத் தலைவர், ‘இதில் தான் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார்.

    அதைத்தொடர்ந்து இந்தப் பெண் அவரது சொந்த கிராமமான மூக்கனூரிலுள்ள ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    சொந்த கிராமம் என்பதால், இவரது சாதி அடையாளம்தெரியும் என்பதால் அங்கே மேலும் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளானார்.

    இவரைப்போல் சத்துணவு சமையல் கூடங்களுக்கு நியமிக்கப்பட்ட தலித் பெண்கள் அனைவரும் இதே போன்ற புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று ‘இந்து’ நாளேட்டின் செய்திகூறுகிறது.

    தீண்டாமையை வெளிப்படையாகப் பின்பற்றும் சாதி ஆதிக்கவாதியர் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

    ஆனால், ஆட்சியோநிர்வாகமோ அதற்குத் தயாராக இல்லை.

    தமிழக கிராமங்களில் பார்ப்பன ‘மனுதர்மமே’ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது.

    சட்டங்களுக்கு சாதி வெறியர்கள் சவால்விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    குறிப்பு: இதை எதிர்த்து, திராவிடர் விடுதலைக் கழகம், சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல்சேகரன் நினைவு நாளான செப்.11-இல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளது.

    நன்றி: திராவிடர் விடுதலைக் கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம்


    THANKS TO INFO: http://www.chelliahmuthusamy.com/2012/09/blog-post_3309.html

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)