Monday, September 17, 2012

திரிஷாவுக்கு பிறந்த நாள் காணும் எட்டயபுர பெரிசுகள்!

உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வெற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் மரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழன் மனமே!
தீடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர் பொருள் முழுவதுமாய் அவையவைதொறும்
உடல்மிசை யுமரெனக் கரந்தெங்கும் பந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே
- (திருவாய் மொழி 1-1)

ஓ என் மனமே! இறைவன் குணங்கள் அற்றவன் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அவன் உருவமற்றவன் என்பதையும் அருவமானவன் என்பதையும் என்னால் ஒப்புக்கொள்ள இயலாது. காலம் ஒன்று சொல்லக்கூடிய நிலைப்பாடு உள்ள மட்டும் மனத்தினாலும் வாக்கினாலும் அளந்து பார்த்து உணர முடியாத வகையில் எட்டாமல் விளங்கும் குணங்களை உடையவன்தான் இறைவன் என்று புரிந்துகொள்.
குழப்பமில்லாமல் நுட்பமான அறிவையுடையவன் இறைவன் என்பதை உணர்ந்து கொள்.
மேன்மையான என்றென்றும் அயர்ச்சி இல்லாத தேவர்களுக்கெல்லாம் அரசனாய் விளங்கக்கூடியவன் இறைவன் என்பதைப் புரிந்துகொள். இப்படி எல்லோருடைய துன்பங்களையும் நீக்கி மெய்ஞ்ஞானத்தை அருளவல்ல ஜெகஜ் ஜோதியானாவனுடைய இறைவனைத் தொழுவது ஒன்று தான் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க ஏதுவாகும்.
இப்படியெல்லாம் நம்மாழ்வார் திருவாய்மொழியில் நமக்கு உணர்த்துகிறார்.

நம் முன்னோர்கள் எந்த அளவு இறைவனைப் பற்றிய ஆழ்ந்த அறிவை பெற்றிருந்தனர் என்பதை இது போன்ற பாடல்கள் நமக்கு அழகாக உணர்த்துகிறது. ஆனால் பின்னால் வந்த பல படையெடுப்புகளின் தாக்கத்தால் இது போன்ற தெளிவான இறை நம்பிக்கையை நம் முன்னோர்கள் இழந்தனர். அது இன்று வரை பெரும்பான்மையோரால் சரி செய்யப்படாமலே இருக்கிறது.

திருவாய் மொழி சொல்லக் கூடிய அதே கருத்துக்களை குர்ஆனும் சொல்வதை பார்த்து ஆச்சிரியப்படுகிறோம். இறைவனுக்கு உருவம் உண்டு. ஆனால் அந்த இறைவன் எப்படி இருப்பான்? என்பது நமது கற்பனைக்கு எட்டாத ஒன்று. அதே போல் அந்த இறைவனை பார்க்கும் திறனும் நமது கண்ணுக்கு கொடுக்கப்படவில்லை. இறைத் தூதர் மோசே அவர்கள் இறைவனை பார்க்க வேண்டும் என்று சொன்ன போது இறைவன் தனது ஒளியை ஒரு மலையில் வீசச் செய்தபோது அந்த அதிர்ச்சியில் மூர்ச்சையாகிப் போன சம்பவம் நாம் படித்ததே! எனவே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை நமது உள்ளத்தில் ஆழமாக பதிய வேண்டும். அவன் எப்படி இருப்பான் என்ற ஆராய்ச்சி நமக்கு தேவையில்லாதது. நமது இறப்புக்கு பிறகு நியாய தீர்ப்பு நாளில் நாம் அனைவரும் பார்க்கும் வகையில் காட்சி தருவதாக இறைவன் கூறுகிறான்.

--------------------------------------------------

இது போன்ற ஆராய்ச்சிகளையெல்லாம் செய்ய வேண்டிய நம் பெரிசுகள் தடம் புரண்டு என்ன மாதிரியான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவை சேர்ந்த விளாத்திகுளம் பகுதியில் 1958-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.,படித்த அன்றைய மாணவர்களும்,இன்றைய ஊர் பெரியவர்களுமான சிலர் ஒன்று சேர்ந்து ஊருக்கும், தங்களுக்கும் பெருமை சேர்க்கும் அருமையான காரியத்தை செய்திருக்கின்றனர்.

அந்த காரியம் என்னவென்றால் நடிகை திரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிரம்மாண்டமாய் ‘பிளக்ஸ்’ பேனர்கள் வைத்துள்ளனர். திரிஷாவின் பெரிய படத்தை போட்டவர்கள் மறக்காமல் திரிஷாவின் படத்திற்கு கீழ் முறுக்கு மீசையுடன் கூடிய தங்களது சிறிய படங்களையும் போட்டுள்ளார்கள். மேலும் ‘திரிஷாவின் சிரிப்பு, திகட்டாத இனிப்பு’ என்று கவிதை படித்து இருக்கிறார்கள் அதுவும் போதாது என்று ‘சினிமா உலகின் சிரிப்பு ராணி’ என்று பட்டம் வேறு கொடுத்து இருக்கிறார்கள். இவர்களின் வயது கிட்டத்தட்ட 68, 70 இருக்கலாம். பேரன் பேத்திகளை எடுத்தவர்கள்.

நம் உறவினர்கள் பார்ப்பார்களே! அட...நம்ம மகனோ மகளோ இந்த போஸ்டரை பார்த்தால் எவ்வளவு சங்கடப்படுவார்கள் என்ற குற்ற உணர்வே கொஞ்சம் கூட இல்லாமல் பெருசுகளே! என்ன இது? நம் தமிழ்நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது?

இனி இந்த பெரிசுகள் இப்படி வசனம் பேசி திரியலாம்....

'உடல் மண்ணுக்கு: உயிர் திரிஷாவுக்கு: இதை உரத்துச் சொல்வோம் உலகுக்கு!' :-)

-----------------------------------------------


இது அடுத்த ஒரு கூத்து. இதை எப்படி அரசு அனுமதிக்கிறது? இந்து மத பெரியவர்கள் இதற்கு ஏன் எந்த கண்டனமும் தெரிவிப்பதில்லை?

தமிழ் நாட்டுக்கு அடுத்த முதல்வரும் கூத்தாடிகள் குழுமத்திலிருந்து தானா? தமிழனான நான் எங்கு போய் முட்டிக் கொள்ள? கொஞ்சம் சொல்லுங்களேன்.



40 comments:

  1. 100 பேருடன் உறவு கொண்ட பெண்

    6 மாத கர்ப்பம்...

    5 பேரில் ஒருவர்தான் அப்பா என்கிறார்!


    இங்கிலாந்து: இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி தாம்ப்சன் இப்போது கர்ப்பமாக இருக்கிறாராம்.

    ஒரு பெண் கர்ப்பமாவது நியூஸ் இல்லை.

    ஆனால் ஜென்னியின் கர்ப்பம் ரொம்ப விசேஷமானது.

    இவர் 100 பேருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டவர்.

    இங்கிலாந்து கால்பந்து ஸ்டார் வேயன் ரூனியுடன் பின்னிப் பிணைந்து நட்பு பாராட்டியவர்.

    இப்போது அவர் கர்ப்பமாகியுள்ளது கூட யாரால் என்பது தெளிவாகத் தெரியவில்லையாம்.

    ஆனால் ஐந்து பேரை சுட்டிக் காட்டி அவர்களில் ஒருவர்தான் என் பிள்ளைக்கு அப்பா என்று கூறுகிறார் ஜென்னி.

    ஜென்னி கதையைக் கேட்டால் உங்களுக்கு ஜன்னியே வந்துவிடும்.

    அப்படி ஒரு அபாரமான பின்னணியைக் கொண்டவர் இந்த ஜென்னி.

    19 வயதிலேயே எஸ்கார்ட் வேலைக்கு வந்தவர் ஜென்னி.

    எஸ்கார்ட் என்றால் ஆண்களுக்குத் துணையாக கூட மாட போய் வருவது. அப்படியே அவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது.

    இத்தனை வருட கால எஸ்கார்ட் அனுபவத்தின் மூலம் 100க்கும் மேற்பட்டோருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக பெருமையுடன் கூறியவர் ஜென்னி.

    அம்மணிக்கு இத்தனைக்கும் வயது 23தான் ஆகிறது.

    இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் பலருடனும் கூட ஜென்னிக்கு நல்ல உறவு உண்டு. அவர்கள், ஒருவரை ஒருவர் எப்படி உறவில் மிஞ்சினார்கள் என்ற கதையையெல்லாம் அம்பலத்தில் விட்டு அவர்களை அலற வைத்தவர் ஜென்னி.

    இங்கிலாந்து வீரர் வேயன் ரூனியின் மனைவி கொலீன் 5 மாத கர்ப்பமாக இருந்தபோது, ஜென்னியுடன் உறவு வைத்துக் கொண்டாராம். அதேபோல ரூனியின் பரம வைரியான மரியோ பலடெல்லியுடனும் அவர் உறவு வைத்துக் கொண்டார்.

    இருவரில் யாரை பெஸ்ட் ஆக நினைக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது பலடெல்லி பல விஷயங்களில் ரூனியை விட பெரிய ஆள்தான் என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறி ரூனியை டென்ஷனாக்கினார்.

    ரூனியை விட பலடெல்லிக்கு நல்ல நகைச்சுவை உணர்வும், ஜாலியான பேச்சும் நிறைய உண்டு என்றும் மேலும் ரூனியை டென்ஷனாக்கினார்.

    பலடெல்லியும், ஜென்னியும் ஐந்து முறை சந்தித்துள்ளனர். அதில் 2 முறை பலடெல்லியின் கேர்ள் பிரண்ட் ரபேலா பிகோ இருக்கும்போதே அவருக்குப் பின்னால் போய் உறவு வைத்துக் கொண்ட கேடி ராணி கில்லாடி ராஜாவாக அசத்தியவர்கள்.

    தனது பத்து காதலர்களில் பலடெல்லிக்கே முதலிடம் என்றும் கூறி பிரளயம் கிளப்பியவர் ஜென்னி. அதேசமயம், ரூனியைப் பற்றிப் பேசினாலே டென்ஷனாகி விடுகிறார் ஜென்னி. 2010ம் ஆண்டு ஒரு நாள் இரவு முழுக்க ஜாலியாக இருக்க தனக்கு 1200 பவுண்டு பணம் கொடுத்தார் ரூனி என்று கூறுகிறார் ஜென்னி.

    இப்படி ஜென்னியின் அனுபவங்கள் நிறைய. அதைச் சொன்னால் தனியாக புக் போட்டு பெரும் காசு பார்த்து விடலாம்.

    இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கும் ஜென்னி அதற்கு யார் காரணம் என்பது சரியாக தெரியாமல் குழம்பியிருக்கிறாராம்.

    இருப்பினும் ஒரு ஐந்து பேரை அவர் சந்தேகிக்கிறார். அவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக எனது குழந்தைக்குத் தந்தை என்று கூறும் ஜென்னி, இதற்காக டிஎன்ஏ சோதனை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

    இங்கிலாந்தில் எல்லாம் எப்படித்தான் மழை பெய்யுதோ தெரியலையே...

    http://tamil.oneindia.in/news/2012/09/17/world-jenny-reveals-she-is-pregnant-father-could-be-one-of-5-161604.html

    ReplyDelete
  2. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் நிர்வாண படங்கள்..

    'ஸ்பெஷல் எடிஷன்' வெளியிடும் இத்தாலி பத்திரிக்கை!


    Published: திங்கள்கிழமை, செப்டம்பர் 17, 2012, 16:25 [IST]
    Posted by: Sudha

    லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் நிர்வாணப் படங்களை சில பத்திரிக்கைகள் லேசு பாசாக போட்ட நிலையில் தற்போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கை, மிடில்டனின் 50 நிர்வாணப் படங்களுடன் கூடிய சிறப்புப் பதிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.

    ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த பத்திரிக்கைகள் மிடில்டனின் நிர்வாண படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்த நிலையில் இத்தாலியின் சி என்ற இதழ், மிடில்டனின் 50 நிர்வாணப் படங்களை தனியாக ஒரு பதிப்பாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

    மொத்தம் 26 பக்கங்களைக் கொண்டதாக இந்த சிறப்புப் பதிப்பு இருக்குமாம்.

    இதற்கு முன்னோட்டமாக தனது லேட்டஸ்ட் இதழின் அட்டையில் மிடில்டனின் நிர்வாணப் படத்தை சி வெளியிட்டுள்ளது.

    இத்தாலிப் பத்திரிக்கையின் இந்த செயலால் இளவரசர் வில்லியம் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளார்.

    இந்தப் படங்களை வெளியிடுவோர், எடுத்தோரை சிறையில் தள்ள வேண்டும் என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

    மேலும் இதுபோன்ற படங்கள் மேலும் வெளியாகாமல் தடுக்க வில்லியமின் வக்கீல்கள் பாரீஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரவுள்ளனர்.

    ஆனால் வில்லியமின் இந்த எதிர்ப்புக்கு சி பத்திரிக்கை ஆசிரியர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    எத்தகைய மிரட்டல் வந்தாலும் நாங்கள் எங்களது திட்டத்தைக் கைவிடப் போவதில்லை.

    இங்கிலாந்து ராணியே போன் செய்து பேசினாலும் கூட படம் வெளியிடப்படுவதை நிறுத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.

    இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் வில்லியம் தனது மனைவி மிடில்டனுடன் சாலமன் தீவுகளுக்கு சுற்றுலாவாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். பின்னர் படகு போல அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வில்லியமையும், மிடில்டனையும் அழைத்துச் சென்றனர்.

    இதில் காமெடி என்னவென்றால் சி பத்திரிக்கையின் ஓனர் வேறு யாருமல்ல,

    இத்தாலியில் செக்ஸ் லீலைகளை தாறுமாறாக புரிந்து அதனால் பதவியை இழந்து ஓடிய இத்தாலியின் முன்னைய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிதான்.

    http://tamil.oneindia.in/news/2012/09/17/world-italians-print-50-kate-photos-161617.html

    ReplyDelete
  3. வருடத்திற்கு மானிய விலையில் 9 சிலிண்டர்கள் அளிக்கும் டெல்லி முதல்வர்: அப்போ ஜெயலலிதா?

    டெல்லி: டெல்லியில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 9 கேஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஷீலா தீக்சித் அறிவித்துள்ளார்.

    இதேபோன்று தமிழக முதல்வரும் அறிவிக்கமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு இல்லதரசிகளின் தலையில் இடியாக விழுந்துள்ளது.

    6 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என்றால் 6 மாதம் சாப்பிட்டுவி்டடு, 6 மாதம் பட்டினிக் கிடக்கச் சொல்கிறதா மத்திய அரசு என்று பெண்கள் குமுறுகின்றனர்.

    சிலிண்டர் விலையைக் கேட்ட பல ஏழைக் குடும்பங்கள் இன்னும் அந்த அதிரிச்சியில் இருந்தே மீளவில்லை.

    இந்நிலையில் டெல்லியில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஷீலா தீக்சித் அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் சுமார் 3.5 லட்சம் குடும்பங்கள் பயனடையும்.

    இந்நிலையில் டெல்லி முதல்வரின் அறிவிப்பைக் கேட்ட தமிழக மக்கள் நம் முதல்வர் ஜெயலலிதாவும் இதுபோன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு நம் வயிற்றில் பாலை வார்க்க மாட்டாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    http://tamil.oneindia.in/news/2012/09/17/india-sheila-announces-9-cylinders-per-year-subsidised-rate-161616.html

    ReplyDelete
  4. சவூதியில் பயங்கர விபத்து - 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி

    ஜூபைல்: சவூதி அரேபியாவின் ஜூபைல் என்ற நகரில் இன்று நடந்த மோசமான சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜூபைல் நகரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    அதில் இந்தியர்கள், நேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்நதவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிறுவன ஊழியர்களுக்காக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    தொழிலாளர்கள் 50 பேருடன் ஒரு பேருந்து நிறுவனத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தது.

    அப்போது வழியில், ஒரு டேங்கர் லாரியுடன் பஸ் மோதிக் கொண்டது.

    இதில் டேங்கர் லாரியும், பஸ்ஸும் தீப்பிடித்து எரிந்தன.

    இதில் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் தீக்காயமடைந்து அலறித் துடித்தனர்.

    மீட்புப் படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.

    இந்தக் கோர விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

    பலியான இந்தியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    http://tamil.oneindia.in/news/2012/09/17/world-13-persons-including-10-indians-kil-161622.html

    ReplyDelete
  5. Raj, Vilathikulam5:59 AM

    Regarding Thrisha Poster.

    This poster was posted 5 years ago and the news was covered in Junior Vikatan or Ananda Vikatan. Those old people did this to teach a lesson to the youngsters. All these old people are hardworkers and have attained a reputed status in their society. They are not politicians but Industrialists. They told, we are printing a poster to teach a lesson to our grandsons and other younger people around, that they should not be after cinema.

    Read the description of the poster in Dinamalar, where it says Vilathikulam in under Ettayapuram Taluk. However, Vilathikulam is bigger town compared to Ettayapuram and Vilathikulam itself is a Taluk Headquarters. Ettayapuram was under Vilathikulam. Stupid Dinamalar guys don't check facts. They simpley keep it for the viewers sake.

    ReplyDelete
  6. திரு ராஜ்!

    //They told, we are printing a poster to teach a lesson to our grandsons and other younger people around, that they should not be after cinema.//

    பேரன்களையும் இளைஞர்களையும் திருத்துவதற்காக கொடுக்கப்பட்ட அறிவிப்பு என்றால் அது வரவேற்கப்பட வேண்டியதே!

    ReplyDelete
  7. இதில் தமாஷ் என்னவென்றால் நடிகனுக்கு ரசிகர் மனறம் வைத்து பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும் (இப்போ பீர் அபிஷேகம்) செய்கின்ற ரசிகர்கள் இதில் குறை காண்கிறார்கள்..

    ஆசைக்கு வயதேது! பெரிசுகளும் போற வழிக்கு புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள்.

    எட்டயபுரம் பெரிசுகளா!

    பின்குறிப்பு: இதற்கும் பாரதிக்கும் எட்டயப்பனுக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை!

    ReplyDelete
  8. கிரானைட் குவாரிகளில் நரபலி:

    மந்திரவாதி "ராடு" குமாருக்கு லாடம் கட்ட தேடும் போலீஸ்


    மதுரை: தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.

    கிரானைட் குவாரிகளில் நடத்தப்பட்ட நரபலி பூஜைகளுக்கு மூளையாக செயல்பட்ட மந்திரவாதி ராடு குமாரைத் தேடிக் கண்டுபிடித்து லாடம் கட்ட போலீஸ் மும்முரம் காட்டி வருகிறது.

    கிரானைட் கொள்ளை அம்பலத்துக்கு வந்தபோதே நரபலி விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது.

    கிரானைட் குவாரிகளில் புதிய இயந்திரங்களை வைத்து இயக்கும் போதும் பூமி பூஜை போடும் போதும் நரபலிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.


    ஒடிஷா இளைஞன் ஒருவன் மீது கிரேனை ஏற்றி பலி கொடுத்த தகவலும் இப்பொழுது போலீஸ் வசம்.

    இந்த இரண்டு நரபலிகளுக்கும் மூளையாக செயல்பட்டவன்தான் மந்திரவாதி ராடு குமார். இவன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும் கேரளம் சென்று மலையாள மாந்திரீகம் கற்றவனாம். இப்பொழுது ராடு குமாரைக் கண்டுபிடித்து லாடம் கட்ட தேடுகிறது போலீஸ்.

    அத்துடன் நரபலிக்காக வடமாநில இளைஞர்களை அழைத்து வரும் மாதேஷ் என்கிற கொலைகார தரகனையும் போலீஸ் தேடுகிறது.

    கொலைகள்?

    நரபலி சம்பவங்களைப் போல பல கொலைகளும் கூட கிரானைட் குவாரிகளில் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    கீழவளவு குவாரியில் மண்ணெண்ணெயைத் திருடி விற்றான் என்ற குற்றத்துக்காக வடநாட்டு பையன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதேபோல் இன்னும் எத்தனை கொலைகள் குவாரிகளில் நடந்திருக்கின்றன என்ற விசாரணையையும் தோண்டியெடுக்கிறது மதுரை போலீஸ்.

    ராடு குமாரு.... லாடம் கன்பார்ம்...


    http://tamil.oneindia.in/news/2012/09/17/tamilnadu-human-sacrifice-madurai-granite-quarreys-161596.html

    ReplyDelete
  9. சகோ சார்வாகன்!

    //மொழிகளுக்கு அனைத்துக்கும் தூதர் என குரானில் இல்லை.
    அடைப்புக்குறியை கவனிக்கவும்!!
    //10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.//

    சமூகம்=[(10:47:2)//

    'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
    -குர்ஆன் 14:4

    இங்கு வெகு அழகாக அனைத்து தூதர்களும் அவரவர் சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பியதாக இறைவன் சொல்கிறான். தமிழ் பழம் பெரும் மொழி என்பதை அறிவோம். எனவே கண்டிப்பாக தமிழ் மொழிக்கு அல்லது திராவிடர்களுக்கு ஒரு தூதர் வந்திருப்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது. நீங்கள் யூதர்கள் புனைந்த பல ஹதீஸ்களை வெளியிட்டு எத்தனை கோல்மால் வேலைகளையும் பண்ணலாம். ஆனால் குர்ஆனில் நடக்காது.
    இப்போ யாருங்கண்ணா பொய் சொன்னது?

    இந்த விஷயத்திலேயே இத்தனை தடுமாற்றம் இருந்தால் நீங்கள் எப்போ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிற தியரியை நிரூபித்து எங்களை எல்லாம் நாத்திகர்கள் ஆக்கப் போறீங்களோ தெரியல. :-)))))))))))))))))

    ReplyDelete
  10. இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்:

    மேலும் ஒரு நடிகை குமுறல்


    வாஷிங்டன்: இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரான படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார்.

    இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட படம் இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்.

    இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலிபோர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா.

    அவர் போதை மருந்து வியாபாரம் செய்து சிறைக்கு சென்று வந்தவர்.

    அவரின் படத்தை எதிர்த்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர்.

    மேலும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த போராட்டம் கலவரமானதில் 7 பேர் பலியாகினர்,

    ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் அந்த படத்தில் நபிகள் நாயகத்தின் இளைய மனைவியாக நடிக்க வைக்கப்பட்ட அன்னா குர்ஜி(21) கூறுகையில்,

    இந்த படம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரானது என்று கூறாமல் நகோலா என்னை ஏமாற்றிவி்ட்டார்.

    படத்தில் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளைய மனைவியாக நடித்தேன்.

    ஆனால் ஜார்ஜ் கதாபாத்திரத்தின் பெயர் முகம்மது என்று மாற்றப்படும் என்று எனக்கு தெரியாது.

    நான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன்.

    மத்திய கிழக்கு நாட்டு மக்கள் என் மீது குற்றம் சுமத்துவார்கள் என்று பயமாக உள்ளது.

    நான் ஒரு கத்தோலிக்கர் என்பதால் நான் வேண்டும் என்றே முஸ்லிம்களுக்கு எதிராக நடந்ததாக அவர்கள் நினைக்கலாம்.

    நான் தூங்குவதற்கு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கிறேன்.

    பல நாட்களாக அழுது கொண்டிருக்கிறேன்.

    அந்த படத்தில் எனது முகம் தெளிவாக உள்ளது.

    படத்தைப் பார்ப்பவர்கள் என்னைப் பார்ப்பார்கள்.

    டெசர்ட் வாரியர்ஸ் என்ற படத்தை எடுப்பதாகத் தான் நானும், சக நடிகர்-நடிகைகளும் நம்பினோம்.

    மதம் பற்றி இயக்குனர் பேசவேயில்லை.

    ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளைய மனைவி ஹில்லரியாக நடிக்க வேண்டும் என்றனர்.

    பண்டைய காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் விழும் வால் நட்சத்திரம் பற்றிய படம் என்றனர்.

    ஒரு நாளைக்கு ரூ.4,000 சம்பளமாகக் கொடுத்தனர். இப்படி படத்தை முடித்த பிறகு இவ்வாறு செய்வார்கள் என்று அதில் நடித்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்றார்.

    http://tamil.oneindia.in/news/2012/09/17/world-director-deceived-me-anti-islam-movie-161597.html

    ReplyDelete
  11. Anonymous7:25 AM

    சுவனப்பிரியன்,

    இலங்கையைச் சேர்ந்த, அகவை 23 ஆன தமிழ்ப் பேசும் முஸ்லிம் மாணவரொருவர் காளான் கறிப்பந்து (mushroom meatball) என்ற புதிய உணவுப் பொருளொன்றைக் கண்டுபிடித்துள்ளார். அவரது பேராசிரியர்களே அக்கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டுகின்றனர். இன்று அதைப் பற்றி அவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. மிக்க அக மகிழ்ந்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும்.

    - பாஹிம்

    ReplyDelete
  12. இப்ப உன்னோட பிரச்சனை என்ன?

    கண்ணுக்கு முன்னாடி மூக்கும் முழியுமாய் இருக்கும் திரிசாவிற்கு ரசிகனாக இருப்பதில் என்ன தப்பு?

    மொகமது என்ற நபர் இருந்தாரா..
    இல்லை அது இட்டுக்கட்டப்பட்ட ஒரு கதையா என்று யாருக்கும் தெரியாது.

    யாரோ சிலர் சொன்னார்கள் என்று அதை நம்புவது பெரிய கோமாளித்தனமே.

    பிராமணர்களும் இப்படித்தான் கதை விடுவார்கள். அந்தப் பருப்பே இங்கு வேகவில்லை.

    அந்த ஆளு இப்ப இருந்தா திரிசாதான் வேண்டும் என்று அடம்பிடிப்பார்.

    ReplyDelete
  13. salam

    ha ha ha....enkae pokirathu muthiyor samuthaayam?

    ReplyDelete
  14. அண்ணாச்சி இந்த 47 வயசிலே ஒங்களுக்கு திரிசா கேக்குதா?

    ஓ.....ஒங்கலோடது மொகமது மார்க்கமாச்சே....கேட்டாலும் கேக்கும்.

    ReplyDelete
  15. தமிழ்மொழிக்கு வந்த இறை தூதர் நானே!

    இல்லையென்று அந்த மொகமது கூறட்டும்.

    ReplyDelete
  16. \\இறைவனுக்கு உருவம் உண்டு. ஆனால் அந்த இறைவன் எப்படி இருப்பான்? என்பது நமது கற்பனைக்கு எட்டாத ஒன்று. \\ இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று சொல்லிவிட்டால் லாஜிக்கலாக மாட்டிக் கொள்வோம், தப்பிக்க ஒரே வழி இதுதான். ஆழ்வார்கள் இறைவனின் வடிவம் விஷ்ணு என்று வணங்கியவர்கள், அவர்கள் பாடலில் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு இன்னொன்றை புறக்கணிப்பது, கோழியின் முட்டை போடும் பின் பக்கம் மட்டும் எனக்கு வேண்டும், அதன் முன் பக்கம் எனக்கு வேண்டாம், ஏனென்றால் தீனி போட முடியாது என்பது போல.

    \\அதே போல் அந்த இறைவனை பார்க்கும் திறனும் நமது கண்ணுக்கு கொடுக்கப்படவில்லை. \\ அவன் இப்படித்தான் இருப்பான் என்ற விவரம் ஏன் கொடுக்கப் படவில்லை?

    ReplyDelete
  17. சின்னக் கணக்கு,

    பெரிசுகளுக்கு தற்போதைய வயது = 2012 - 1958 - 15 (SSLC)
    = 69

    விக்கிப்பீடியபடி த்ரிசா தற்போதைய வயது 29

    அதாவது தன்னைவிட 40 வயது குறைவான பெண்ணுக்கு இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமே, இதை நக்கல் அடிக்க என்ன இருக்கு ?

    //இவர்களின் வயது கிட்டத்தட்ட 68, 70 இருக்கலாம். பேரன் பேத்திகளை எடுத்தவர்கள்.

    நம் உறவினர்கள் பார்ப்பார்களே! அட...நம்ம மகனோ மகளோ இந்த போஸ்டரை பார்த்தால் எவ்வளவு சங்கடப்படுவார்கள் என்ற குற்ற உணர்வே கொஞ்சம் கூட இல்லாமல் பெருசுகளே! என்ன இது? நம் தமிழ்நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது?//

    முகமதுவிற்கு உங்கள் அன்னை ஆயிஷாவை திருமணம் செய்து வைக்கும் பொழுது இருவருக்குமான வயது வேறுபாடுகளை ஒப்பிட்டுப்பாருங்கள், உங்களுக்கு கிண்டல் அடிக்க தோணாது,

    :)

    ReplyDelete
  18. திரு நம்பள்கி!

    ///இதில் தமாஷ் என்னவென்றால் நடிகனுக்கு ரசிகர் மனறம் வைத்து பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும் (இப்போ பீர் அபிஷேகம்) செய்கின்ற ரசிகர்கள் இதில் குறை காண்கிறார்கள்..

    ஆசைக்கு வயதேது! பெரிசுகளும் போற வழிக்கு புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  19. கோவி கண்ணன்!

    //முகமதுவிற்கு உங்கள் அன்னை ஆயிஷாவை திருமணம் செய்து வைக்கும் பொழுது இருவருக்குமான வயது வேறுபாடுகளை ஒப்பிட்டுப்பாருங்கள், உங்களுக்கு கிண்டல் அடிக்க தோணாது,//

    ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதும் திருமணம் முடிக்காமல் பலர் போஸ்டர் அடித்து ஒட்டி ஜொள் விடுவதும் ஒன்றா? மேலும் முகமது நபி அவர்கள அன்னை ஆயிஷாவை திருமணம் முடித்ததால் குடும்ப சட்டங்கள் பல எங்களுக்கு கிடைத்தது. மேலும் இருவரும் கடைசி காலம் வரை சந்தோஷமாகவே இருந்தனர். உலகில் உள்ள 120 கோடி முஸ்லிம்களும் இந்த திருமணத்தை வித்தியாசமாக பார்க்கவில்லை.

    அந்த காலத்தில் சமூகத்தில் இது மிக சர்வ சாதாரணமாக நடந்த ஒன்று. திருமணம் முடிந்து பூப்பெய்தவுடன் பெண்ணை மணமகன் வீட்டுக்கு அனுப்புவது அந்த கால பழக்கம். பாரதியார் கூட திருமணம் முடிக்கும் போது பெண்ணின் வயது ஏழாம். ஆனாலும் புரட்சிக் கவிஞர் என்கிறோம் நாம்.

    ReplyDelete
  20. திரு ஜெய தேவதாஸ்!

    //ஆழ்வார்கள் இறைவனின் வடிவம் விஷ்ணு என்று வணங்கியவர்கள், அவர்கள் பாடலில் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு இன்னொன்றை புறக்கணிப்பது, கோழியின் முட்டை போடும் பின் பக்கம் மட்டும் எனக்கு வேண்டும், அதன் முன் பக்கம் எனக்கு வேண்டாம், ஏனென்றால் தீனி போட முடியாது என்பது போல.//

    பின்னால் வந்தவர்கள் அதற்கு ஒரு உருவத்தை தங்கள் கற்பனையால் கொடுத்திருக்கலாம். ஆனால் முதல் பாடலிலேயே இறைவனுக்குரிய இலக்கணம் என்ன என்பதை அழகாக விளக்கி விடுகின்றார்.

    // அவன் இப்படித்தான் இருப்பான் என்ற விவரம் ஏன் கொடுக்கப் படவில்லை?//

    அதற்கு என்ன அவசியம் வந்தது? இறைவனின் உருவத்தை நாம் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை இந்த உலகில் நமக்கு கிடைத்து விடப் போகிறது? ஒன்றுமில்லை.

    ReplyDelete
  21. //அண்ணாச்சி இந்த 47 வயசிலே ஒங்களுக்கு திரிசா கேக்குதா?

    ஓ.....ஒங்கலோடது மொகமது மார்க்கமாச்சே....கேட்டாலும் கேக்கும்.//

    மப்புல பதிவை படிக்காதீர் ராவணன்.....திரிஷா ரசிகர்களை போஸ்டரில் பார்க்கவும்.

    ReplyDelete
  22. //முகமதுவிற்கு உங்கள் அன்னை ஆயிஷாவை திருமணம் செய்து வைக்கும் பொழுது இருவருக்குமான வயது வேறுபாடுகளை ஒப்பிட்டுப்பாருங்கள், உங்களுக்கு கிண்டல் அடிக்க தோணாது,//

    சகோ.கோவிகண்ணன்

    நபிகள் அவர்கள் இறைதூதராக அனுப்பப்பட்டவுடன் அணைத்து சட்டங்களும் அப்படியே பைண்டிங் செய்த புத்தகமாக தரப்பட வில்லை...சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக இறக்கி அருளப்பட்டது...

    இப்ப ஒரு கேள்வி ...

    கொஞ்சம் கொஞ்சமாக ஏன் தரப்பட வேண்டும்..?குடுத்துட்டு கதைய முடிச்சிட்டு போகவேண்டியதானே ..?

    கோவி.கண்ணன் குழந்தையாக பிறந்தார்.(ஆமா...அது இவர் வீட்ல மட்டும் தான் நடக்கு!!!!)பிறந்தவுடன் அவருக்கு எப்படியும் பின்னால புரோட்டா சாப்பிட தான் போறாரு...அப்பிடின்னு பிறந்த மறு நாளே பிறந்து ஒரு நாள் ஆன கோவி.கண்ணன் வாயிலே புரோட்டாவ திணிச்சா என்ன ஆயிருக்கும் ...கதை முடிஞ்சிரும்...அது போலத்தான் இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றுவதற்கு கடினமானது...அன்றைய மக்களிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது....இது நபிகள் அவர்களின் திட்டம் அல்ல இறைவனின் திட்டம்...சிறிது சிறிதாக இறங்கிய சட்டம் நபிக்கும் பொருந்தும்... நபி அவர்கள் ஆயிஷா அவர்களை திருமணம் செய்யும் போது அத்தகைய திருமணம் அந்த காலத்தில் பழக்கத்தில் இருந்த ஒன்று...பின்னால் அது தடை செய்யபட்டது...இப்போது சிறுமியை திருமணம் செய்ய தடை செய்யபட்டுள்ளது... அதனால் இனியும் இதையே பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்...அறிவுடைய மக்களுக்கு இது போதும்...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  23. சகோ பாஹிம்!

    //இலங்கையைச் சேர்ந்த, அகவை 23 ஆன தமிழ்ப் பேசும் முஸ்லிம் மாணவரொருவர் காளான் கறிப்பந்து (mushroom meatball) என்ற புதிய உணவுப் பொருளொன்றைக் கண்டுபிடித்துள்ளார். அவரது பேராசிரியர்களே அக்கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டுகின்றனர். இன்று அதைப் பற்றி அவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. மிக்க அக மகிழ்ந்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும்.//

    இது பற்றி மேலதிக விபரம் இருந்தால் nazeer65@gmail.com இந்த முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். பதிவாகவே இடலாம்.

    ReplyDelete
  24. //23 வருஷமா ஜிப்ரேல் வர்ராரு .. ஏதேதோ சொல்றாரு .. முகமது அதை வாயால் சொல்ல .. சிலர் எழுத ... இப்படியே 23 வருஷம் போகுது. அந்த 23 வருஷத்தில ஒருத்தர் மொதல்ல இருந்த மாதிரியே கடைசி வர எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தால் அந்த ஆளு எதில் சேர்த்தி?? “அப்படி மக்கான” ஒரு ஆளையா அல்லா தேர்ந்தெடுப்பார்னு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா ...?//

    சகோ.தருமி.

    இந்த சந்தேகம் உங்களுக்கு இருந்துதா ரொம்ப நாளா ....இப்ப முகம்மத் நபி அவர்கள் படிக்க தெரிந்த மேதை என்றால் அவர் கூறிய அணைத்து செய்திகளையும் பொய் ஆக்கி இருப்பார்கள் இறை மறுப்பாளர்கள் . .ஏன் என்றால் மும்தைய வேத செய்திகளைக்கொண்டும் குர் ஆன் இறக்கி அருளப்பட்டது,, அம்மக்கள் அந்த செய்தியை கொண்டுதான் இஸ்லாத்தை ஏற்றார்கள் .. குர் ஆன் அறிவியல் பேசுவதை கொண்டு அல்ல...நபியுடைய அந்த தகுதி அவரை சிறுமை படுத்தவில்லை மாறாக உண்மை படுத்தியது.....

    இதை கோவி கண்ணன் பதிவிலே பதியலாம் தான்..ஆனால் உண்மையை தேடும் மக்கள் வருகின்ற இடத்திலே பதிய விரும்புகிறேன்...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  25. மாஷா அல்லாஹ் ,எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு தனியாக எல்லா விமர்சனங்களையும் எதிர் கொண்டிருந்த சகோ. சுவனப்பிரியன் அவர்களுக்கு துணையாக சகோ. நாகூர்மீரான் வந்திருக்கிறார்.
    இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு மற்றவர்களையும் குழப்பும் அரை வேக்காடுகளின் வேஷத்தை கலைத்து இஸ்லாம் என்பது இனிய மார்க்கம் என்று உலகுக்கு காட்டும் உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வுவை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  26. Mr Raavanan,

    ///தமிழ்மொழிக்கு வந்த இறை தூதர் நானே! ///

    இங்கு வந்து பிதற்றுவதுபோல், வீட்டில் உளறி விடாதீர்கள்.

    உங்கள் தொல்லை தாங்க முடியாது என்று சொல்லி, மனைவி, பிள்ளைகளே உங்களை இழுத்துக்கொண்டுபோய், கீழ்ப்பாக்கத்தில் தள்ளி விடுவார்கள்.

    ReplyDelete
  27. Mr Raavanan,

    ///தமிழ்மொழிக்கு வந்த இறை தூதர் நானே! ///

    இங்கு வந்து பிதற்றுவதுபோல், வீட்டில் உளறி விடாதீர்கள்.

    உங்கள் தொல்லை தாங்க முடியாது என்று சொல்லி, மனைவி, பிள்ளைகளே உங்களை இழுத்துக்கொண்டுபோய், கீழ்ப்பாக்கத்தில் தள்ளி விடுவார்கள்.

    ReplyDelete
  28. நபிகள் நாயகம் குறும்படத்திற்கு இந்தியாவில் தடை:

    அமெரிக்க அரசும் தடை செய்ய வேண்டும்

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிக்கை



    சென்னை, செப்.18-

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகத்தில் உள்ள இஸ்லாமிய சமுதாய மக்கள் மட்டுமல்ல, எல்லா மதத்தினரும் போற்றி மதிக்கின்ற நபிகள் நாயகம் பற்றி வெளியிடப்பட்ட அமெரிக்க குறும்படத்தால் மனவேதனை பெற்றுள்ள இஸ்லாமிய சமுதாய மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.

    இந்த குறும்படத்தை பொருத்தமட்டில் மன்மோகன்சிங்கின் தலைமையில் இருக்கின்ற காங்கிரஸ் அரசு அமெரிக்க தூதரை கூப்பிட்டு இந்தியாவின் கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டது மட்டுமல்லாமல்,

    அந்த குறும்படத்தை கூகுள் வலை தளத்தில் வெளியிடுவதை தடை விதித்துள்ளது. அந்தப்படம் இனிமேல் இந்தியாவில் ஒளிபரப்பப்பட மாட்டாது.

    ஆகவே, இந்திய மக்கள் அனைவரும் இதில் ஒரே கருத்துக் கொண்டுள்ளதால் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அமைதிகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அமெரிக்க அரசும் உடனடியாக இதை தடைசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    http://www.dailythanthi.com/article.asp?NewsID=758995&disdate=9/18/2012


    நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் திரைப்படம்:

    அமெரிக்க அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும்

    டாக்டர் ராமதாஸ் அறிக்கை



    சென்னை, செப்.18-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட நிறுவனம் ஒன்று தயாரித்த இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் (இஸ்லாமியர்களின் அப்பாவித்தனம்) என்ற திரைப்படம் இறைதூதர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    உலக மக்கள் அனைவருக்கும் உன்னத தத்துவங்களை போதித்த இறைதூதரை அவமதிக்கும் வகையில் இப்படி படம் எடுப்பதை எந்த மதத்தை சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள பிறகும் இப்படத்திற்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றும்,

    திரைப்பட தயாரிப்பாளர்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும் அமெரிக்க அரசு கூறியிருப்பது இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயலாகும்.

    இறைதூதரை அவமதிக்கும் திரைப்படத்தை அனுமதித்ததற்காக உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்பதுடன், இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் தடைவிதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    http://www.dailythanthi.com/article.asp?NewsID=758996&disdate=9/18/2012

    ReplyDelete
  29. பேருக்கு தகுந்த மாதிரியே இருக்கான்யா இந்த ராவணன்!.

    //கண்ணுக்கு முன்னாடி மூக்கும் முழியுமாய் இருக்கும் திரிசாவிற்கு ரசிகனாக இருப்பதில் என்ன தப்பு?//

    பத்து தலை மாப்பூ, அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படுறதே உனக்கு பொழப்பா என்ன?.

    ஏன் திரிசாதான் உனக்கு மூக்கு முழியுமா இருக்காளா? உனக்கு உன் பொண்டாட்டி அழகா இல்லையா?.

    பாத்து மாப்பூ, இந்த மாதிரி லூசுத்தனமா அடுத்தவன் பொண்ணுமேல ஆசை வச்சுகிட்டு இருந்தேன்னு வை ஒன் பொண்டாட்டிக்கு எவனாவது ரசிகனா ஆயிரப்போறான். அப்பவும் இதே மாதிரி "என் பொண்டாட்டிக்கு இன்னொருத்தன் ரசிகனா இருக்கிறதில் என்ன தப்புன்னுன்னு உளறாதே" என்ன ஒகேவா.

    ReplyDelete
  30. திரு ராமன்!

    //பேருக்கு தகுந்த மாதிரியே இருக்கான்யா இந்த ராவணன்!. //

    ராவணனை ராமன் சரியாக புரிந்து கொண்டார்.

    ReplyDelete
  31. //அந்த காலத்தில் சமூகத்தில் இது மிக சர்வ சாதாரணமாக நடந்த ஒன்று. திருமணம் முடிந்து பூப்பெய்தவுடன் பெண்ணை மணமகன் வீட்டுக்கு அனுப்புவது அந்த கால பழக்கம்.//

    உங்க மத நூலும், முகமதுவின் வழிகாட்டலும் எந்த காலத்திலும் பொருந்தக் கூடியது என்று பிரச்சாரம் செய்பவர் நீங்கள். இது போன்ற கேள்விகள் எழும் பொழுது மட்டும் உங்களுக்கு காலம் நினைவிற்கு வந்து சப்பைக் கட்டின் கயிறாக மாறிவிடும்.

    முகமது கட்டிக் கொண்டது போல் பல மனைவிகளைக் கட்டிக் கொள்வதும் காலத்திற்கு ஒவ்வாதது என்று தான் சொல்கிறோம், ஆனாலும் தொடர்ந்து நீங்களும் உங்கள் சகாக்களும் பலதார மனம் ஏக காலத்திற்கும் பொருத்தமானவையே என்கிறீர்கள்.

    :)

    உங்க மதக்கொள்கைகள் மட்டும் முகமதுவின் வாழ்கை ஆகியவை எல்லாக் காலத்திற்கும் பொருந்தாது என்று நீங்கள் வாக்குமூலம் அளித்ததாகவே உங்கள் பதிலை நான் காண்கிறேன், சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு தக்க பாராட்டுகள்.

    வலையுலக பீஜே அண்ணன் சுவனப்பிரியன் வாழ்க.

    ReplyDelete
  32. 1958-ல் இருந்து வறட்டி தட்டும் ஆயாக்கள் 'ஆணழகன் ஆர்யாவிர்க்கு' ரசிகைகள் மன்றம் வைக்கும் நன்னாள் எப்போது?

    பெண்கள் கவனிக்க! இந்திய சட்டப்படி ஆணும் பெண்ணும் சமம்!

    ReplyDelete
  33. வணக்கம் சுவனப்பிரியன்
    //கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி
    எல்லா உயிரும் தொழும்.//
    இதன் பொழிப்புரை என்ன என்று அறியலாமா??

    ReplyDelete
  34. வாங்க கமல் பாலன்!

    //வணக்கம் சுவனப்பிரியன்
    //கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி
    எல்லா உயிரும் தொழும்.//
    இதன் பொழிப்புரை என்ன என்று அறியலாமா?? //

    அசைவ உணவை தவிர்த்தால் அந்த மனிதனை எல்லா உயிர்களும் வணங்கும்.

    இது இந்த குறளின் விளக்கம்.

    திருக்குறளிலும் பல குறைகள் உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆர்டிக் பனி பிரதேசத்தில் வாழும் ஒருவனிடம் இந்த குறளை சொன்னால் சொல்பவரையே அடித்து சாப்பிட்டு விடுவான். இன்றைய அறிவியல் உலகத்தில் செடிகளுக்கும் உயிர் உணர்வுகள் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. சில உயிர்களை முழுங்கும் அசைவ தாவரங்களும் உண்டு. எனவே எல்லோராலும் கடைபிடிக்க முடியாத ஒரு குறள் இது.

    ReplyDelete
  35. /////தமிழ்மொழிக்கு வந்த இறை தூதர் நானே! ///

    இங்கு வந்து பிதற்றுவதுபோல், வீட்டில் உளறி விடாதீர்கள்.

    உங்கள் தொல்லை தாங்க முடியாது என்று சொல்லி, மனைவி, பிள்ளைகளே உங்களை இழுத்துக்கொண்டுபோய், கீழ்ப்பாக்கத்தில் தள்ளி விடுவார்கள்//

    1500 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய அரபு மக்களுக்கு கீழ்பாக்கத்தை பற்றி தெரியாமல் போனதால் தான், வியாபாரி ஒருவர் இன்று வரை இறைதூதராக கொண்டாடப்பட்டு வருகிறார். அரபு தேசத்திலேயே அன்று நல்ல மருத்துவர்கள் இருந்திருந்தால் அப்போதே அவருக்கு தெளிய வைத்திருப்பார்கள்.

    ReplyDelete
  36. // நபி அவர்கள் ஆயிஷா அவர்களை திருமணம் செய்யும் போது அத்தகைய திருமணம் அந்த காலத்தில் பழக்கத்தில் இருந்த ஒன்று...பின்னால் அது தடை செய்யபட்டது...இப்போது சிறுமியை திருமணம் செய்ய தடை செய்யபட்டுள்ளது... அதனால் இனியும் இதையே பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்...அறிவுடைய மக்களுக்கு இது போதும்... //

    நல்ல நகைச்சுவை. தேவைப்படும் போதெல்லம் முகமதுவிற்கு வஹீயை இறக்கி கொண்டு இருந்த அல்லா முகமது ஆயிசாவை திருமணம் செய்யும்போது அதை தடுக்காமல் எங்கே போய் இருந்தார். முகமதுவை பழமை வாதத்தை போக்கி மக்களுக்கு நாகரீகம் போதிக்க அல்லா அனுப்பினார் என்பது உங்கள் கூற்று அப்படி இருக்குபோது. தான் அனுப்பிய தூதர் அதே பழமை வழக்கத்தை பின்பற்றி ஒரு குழந்தையை திருமணம் செய்ய போவது எல்லாம் அறிந்த அல்லாவிற்கு தெரியாமல் இருக்குமா. அல்லது குழந்தையை திருமணம் செய்ய மனதில் முகமது விரும்பிய கணமே தெரியாமல் போயிருக்குமா. அவர்தான் இறைவன் ஆயிற்றே, அந்த பழமை வாத பழக்கத்தில் இருந்து தனது தூதரை தடுக்க நேரமா இல்லை. முகமது வாக்கிங் செல்லும் வழியிலா ஆயிசாவை பார்த்து அப்படியே திருமணம் செய்து கொண்டார். இல்லையே! ஆயிசாவை பார்க்கிறார், ஆயிசாவின் தந்தையிடம் சென்று பெண் கேட்கிறார். அவர் முதலில் மறுத்து பிறகு சம்மதம் தெரிவிக்கிறார். இப்படி முகமது ஆயிசாவை ஆசைப்பட்டதற்கும் அவரது திருமணத்திற்கும் இடையில் எத்தனையோ நாட்கள் இருந்திருகின்றன. அப்போதெல்லாம் தடுக்காமல். முகமது தனது ஆசையை நிறைவேற்றி கொண்ட பிறகு அல்லா குழந்தை திருமணத்தை தவறு என்று சொல்கிறாரா? அப்படி என்றால் தனது தூதர் செய்த தவறுக்கு அல்லாவும் துணை நின்றாரா? ஒரு தவறான பழக்கத்தை செய்ய வைத்துவிட்டு பிறகு அதனை தடுப்பது சரியா? அதனை செய்ய விடாமல் தடுத்து தடை செய்வது சரியா? சிந்திக்கும் அறிவு இருந்தால் தான் சிந்திக்க தோன்றும்.

    ReplyDelete
  37. Mr Kovi Kannan,

    ///உங்க மத நூலும், முகமதுவின் வழிகாட்டலும் எந்த காலத்திலும் பொருந்தக் கூடியது என்று பிரச்சாரம் செய்பவர் நீங்கள். இது போன்ற கேள்விகள் எழும் பொழுது மட்டும் உங்களுக்கு காலம் நினைவிற்கு வந்து சப்பைக் கட்டின் கயிறாக மாறிவிடும்.///


    எந்தவொரு பிரதேசத்திலும் வாழும் மக்கள், அவர்களுக்கென்று பிரத்தியேகமான வாழ்வுநெறி, தவறான/நல்ல சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவற்றோடு பின்னிப் பிணைந்தவர்களாக இருப்பார்கள். இதில், அரேபிய மக்களும் விதி விலக்கல்ல.

    தவறான சிந்தனைகள், கொள்கைகள், பழக்கவழக்கங்களோடு வாழ்ந்த மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக இறைவன் உதவியுடன் அந்த மக்களை மாற்றி சீர்திருத்தினார்கள்.

    சீராக்கப்பட்ட கொள்கைகள், போதனைகள்தான் எல்லாக் காலத்திற்கும் பொருந்துகிறது. இதைத்தான் உலக முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்றுகிறார்கள். அன்று வாழ்ந்த அரேபிய மக்களிடம் குடிகொண்டிருந்த பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் அல்ல.

    அதனால்தான், உலகமே எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியவற்றை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்கிறது.

    இந்த யதார்த்தத்தை இப்படி விளங்கினால், சிறு வயது திருமணம், பலதார விவாக வினாக்கள் தங்களுக்கு சப்பை கட்டின கயிறாக மாறாது.

    ReplyDelete
  38. Mr Premkumar,


    ///1500 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய அரபு மக்களுக்கு கீழ்பாக்கத்தை பற்றி தெரியாமல் போனதால் தான், வியாபாரி ஒருவர் இன்று வரை இறைதூதராக கொண்டாடப்பட்டு வருகிறார். அரபு தேசத்திலேயே அன்று நல்ல மருத்துவர்கள் இருந்திருந்தால் அப்போதே அவருக்கு தெளிய வைத்திருப்பார்கள்.///

    நபி (ஸல்) அவர்களை உங்களைப் போல்தான், அன்றும் பலர் விமர்சித்திருந்தனர். அன்று விமர்சித்தார்கள். பின்னர் திருந்தி அவரது வாழ்வு நெறியை ஏற்றார்கள். இன்று 150 கோடியையும் தாண்டி விட்டது அவர்களின் கொள்கையைக் கொண்டவர்கள். புதிது புதிதாக மக்கள் நாளாந்தம் அவர்களின் கொள்கையில் இணைந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    நேர்வழியை தெளிவுடன் ஏற்றுக்கொண்டவர்களுக்கு, மருத்துவர்களின் அவசியம் இல்லை.

    ReplyDelete
  39. //நேர்வழியை தெளிவுடன் ஏற்றுக்கொண்டவர்களுக்கு, மருத்துவர்களின் அவசியம் இல்லை. //

    எனக்கு பைபாஸ்ல போகத்தான் பிடிக்கும். வரட்டா

    ReplyDelete
  40. Mr J Jaganathan,

    ///எனக்கு பைபாஸ்ல போகத்தான் பிடிக்கும். வரட்டா///


    தங்களுக்குப் பிடிக்கும் பாதையில் பயணிப்பதை ஏன் தடுப்பானேன்?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)