Wednesday, November 21, 2012

அஜ்மல் கசாப்புக்கு கொடுத்த தண்டனை சரியா?

அஜ்மல் கசாப்புக்கு கொடுத்த தண்டனை சரியா?

இது இன்று பலராலும் பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் கசாபை தூக்கில் போட்டது சரி என்றும் மற்றும் சிலர் தூக்கில் போடுவதால் குற்றம் குறையப் போவதில்லை என்றும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு கும்பலாக ஒரு அந்நிய தேசத்தவன் புகுந்து 165 பேருக்கு மேல் கொன்றுள்ளான். இதற்கு அவன் தரப்பில் சில காரணங்கள் கூறப்படும். எந்த காரணமாக இருந்தாலும் அப்பாவிகளை இலக்காக்கிய இது போன்ற பயங்கர வாதிகளை தூக்கில் போடுவதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இதை முன்பே செய்திருக்க வேண்டும்.

(கசாபுக்கு கொடுத்த தூக்கு தண்டனையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள்)

பம்பாய் ஆதர் வீதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வட்டாரங்கள், கஸ்ஸாப் “டெங்கு” நோயினால் அவதிப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் அவனது குருதியின் பிளேட்லெட் வெகுவாக இறங்கி சில தினங்களில் இறந்து விடுவான் என வைத்தியர்கள் கூறியதாகவும், அந்த நிலையில் அவன் அப்புறப்படுத்தப்பட்டு புனே எரவாடா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் உள்ள பல விடயங்கள் தொடர்பாக இந்திய அரசு எதனையும் தெரிவிக்கவில்லை. தூக்கு ஏற்றப்படுவதனை பார்வையிட ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவன் கொல்லப்பட்டதன் பின்னரான கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி ஆரவாரங்களை ஊடகங்கள் காட்டின. லாஜிக் புரியவில்லை. டெங்கு நோய் வந்ததற்கு ஆதாரபூர்வமான செய்திகள் இல்லை என்றாலும் இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் இந்த செய்தியையும் புறம் தள்ள முடியாது.

இவனை தூக்கில் இடுவதால் பிரச்னைகள் வரலாம் என்ற வாதமும் தவறானது. ஒரு உண்மையான தேசபக்தி கொண்ட எந்த இந்தியனும் கசாபின் தூக்கை வரவேற்கவே செய்வான். இந்திய முஸ்லிம்களும் கசாபின் தூக்கை வரவேற்கவே செய்வர். மேலும் இவனுக்கு மும்பையின் மீதோ அல்லது இந்திய நாட்டின் மீதோ தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. சில கள்ள முல்லாக்கள் அவனை மூளை சலவை செய்து இந்த வேலைக்கு நன்றாக பயன்படுத்தியுள்ளனர். வாழ வேண்டிய வயதில் தவறான வழிகாட்டுதலால் இன்று எவரும் மதிக்காத ஒரு இழிந்த இறப்பை தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டுள்ளான்.




இவனை இயக்கிய முக்கிய குற்றவாளிகள் பாகிஸ்தானில் இன்று சுதந்திரமாக உள்ளனர். அவர்களுக்கும் தக்க தண்டனை கிடைக்க நமது அரசு முயற்சிக்க வேண்டும. அடுத்து வந்தவர்கள் குறிப்பாக ஹேமந்த் கர்கரேயை கொல்வதில் முக்கிய கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இவர்கள் வர தேர்ந்தெடுத்த வழியும் குஜராத். எனவே இதன் பின்னணியில் நமது நாட்டில் யார் யாரெல்லாம் இந்த கும்பல் இந்தியா வர உடந்தையாக இருந்தனர் என்பதை அரசு மிக உன்னிப்பாக கவனித்து அவர்களையும் கைது செய்து தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.

அதேபோல் மாலேகான் குண்டு வெடிப்பில் தற்போது சிறையில் இருக்கும் சாது பிரக்யாசிங்குக்கும், புரோகித்துக்கும் என்ன தண்டனை என்பதை அரசு தெளிவாக்க வேண்டும். தவறு செய்த முஸ்லிமை தூக்கிலிட்டு விட்டு அதே போன்ற தவறை செய்த இந்துக்களை தண்டிக்காமல் விட்டால் அது இந்துத்வாவுக்கு மேலும் தைரியத்தை கொடுக்கும். மேலும் பல குண்டு வெடிப்புகளை நடத்த முயற்சிப்பர். அதேபோல் பாதிப்படைந்த முஸ்லிம்களில் சிலரும் இந்த நாட்டின் பாரபட்ச போக்கை நினைத்து தீவிரவாதத்தின் பக்கம் செல்ல முயற்சிக்கலாம். எல்லா மக்களும் சந்தோஷமாக வாழ எப்படி அஜமல் கசாபை தூக்கில் இட்டார்களோ அதே போல் மாலேகான் குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும். குஜராத் கலவர குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும்.

-----------------------------------------------------



மேலும் மும்பையில் பால்தாக்கரே இறந்ததற்கு கடை அடைப்பு அவசியமில்லை என்று சொன்ன இரு இளம் பெண்களை கைது செய்த காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கிறேன். மகாராஷ்டிராவையே தனது வன்முறை பேச்சால் இன்று வரை ஆண்டு வந்த ஒருவருக்கு அரசு மரியாதையில் உடல் அடக்கம் நடத்தப்பட்டதும் பலரின் விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அரசின் இந்த செயலும் கண்டிக்கத்தக்கது.

நமது அரசு நேர்மையாக நடக்கிறதா அல்லது பெரும்பான்மையினரின் ஓட்டு வங்கியை கணக்கில் கொண்டு நேர்மையை குழி தோண்டி புதைக்கிறதா என்று நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பார்ப்போம். நம்பிக்கையில்தானே வாழ்க்கை ஓடுகிறது!..

----------------------------------------------------------

ஆஷூரா நோன்பு - முஹர்ரம் மாதம் 9 & 10 ம் நாள்

முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து(பாரோ) இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான்.இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் இறைவன் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1916

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் கடைசி வருடத்திலும் ஆஷூரா நோன்புக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் யூதர்களும், கிறித்தவர்களும் இந்த நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்கப்பட்ட போது அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறியுள்ளனர்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்ட இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான். இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது என்பதை ஏராளமான ஹதீஸ்கள் விளக்குகின்றன. மூஸா நபி காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கத் தான் இந்த நோன்பு நோற்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் சில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் இமாம் ஹுசைன் கொல்லப்பட்டது இந்த நாளில் தான்; எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.

ஹுஸைன் கொல்லப்பட்டதற்கும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மார்க்கத்தில் ஒரு காரியம் கடமையாகவோ, வழிமுறையாகவோ ஆக வேண்டுமானால் நபிகள் நாயகம் அவர்கள் வாழும் காலத்தில் தான் ஆகுமே தவிர அவர்களுக்குப் பின்னால் உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்காக எந்த ஒரு வணக்கமும் மார்க்கத்தில் நுழைய இயலாது.

ஏனெனில் நபிகள் நாயகம் அவர்கள் வாழும் காலத்திலேயே, இம்மார்க்கத்தை இன்று நான் முழுமைப்படுத்தி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) என்று இறைவன் பிரகடனம் செய்து விட்டான்.

20 comments:

  1. எய்தவனை ஒருபோதும் இந்தியா தூக்கில் போடாது. அப்படிப் போடத் துணிந்தால், வாங்கிக் கட்டும்.

    அம்பைத் தான் தூக்கில் போட, இந்தியா லாயக்கு.

    கசாப் இந்துவாக இருந்திருந்தால், இந்நேரம் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பான்.

    ReplyDelete
  2. சகோ யூசுஃப் இஸ்மத்!

    //கசாப் இந்துவாக இருந்திருந்தால், இந்நேரம் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பான்.//

    சரியாக சொன்னீர்கள். பலர் வெளியில் ஹாய்யாக உலவி வருகின்றனர்.

    ReplyDelete
  3. //கசாப் இந்துவாக இருந்திருந்தால், இந்நேரம் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பான்.//

    கசாப் இந்துவாக இருந்திருந்தால், இந்நேரம் முதலமைச்சராக ஆகி இருப்பான்...

    கசாப் இந்துவாக இருந்திருந்தால், இந்நேரம் அவனது உடலுக்கு தேசியக்கொடியை போர்த்தி இருப்பர்..

    ReplyDelete
  4. சலாம் சகோ நாகூர் மீரான்!

    //கசாப் இந்துவாக இருந்திருந்தால், இந்நேரம் முதலமைச்சராக ஆகி இருப்பான்...//

    முன்னுதாரணமாக குஜராத்தில் ஒருவரை இன்று வரை முதலமைச்சராக வைத்து நமது நாடு அழகு பார்க்கவில்லையா? அதுபோலத்தான்....

    ReplyDelete
  5. suvanappiriyan says: Your comment is awaiting moderation.
    November 22, 2012 at 7:24 am

    //கசாப் ஒரு ஞானி, அமைதி மார்க்கத்தின் தென்றல் , பச்சிளம் மனம் கொண்டவர், அம்மாவின் கை பேசி என்று கொஞ்ச நாள் கழித்து இவர்கள் சொல்வார்கள்…//

    சாது பிரக்யாசிங், புரோகித், நரேந்திர மோடி, அவரின் பெண் அமைச்சர் இவர்களுக்கெல்லாம் புனை பெயரிலும், தங்கமணியும் சேர்ந்து பிற் காலங்களில் சிலை வைக்கலாம். பூஜைகள் கூட நடக்கலாம்: அதற்கு நமது அரசு அங்கீகாரமும் தரலாம். இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம். :-(
    Reply

    -----------------

    suvanappiriyan says: Your comment is awaiting moderation.
    November 22, 2012 at 7:31 am

    //சமணர்கள் செய்துகொண்டது தற்கொலை. அது கொலை அல்ல.சமணர்கள் செய்துகொண்டது தற்கொலையாகத்தான் ஆவணமாக்கப்பட்டுள்ளது. கொலை கொலை என்று உங்கள் ஆட்கள் கொலைகள் செய்வதை நியாயப்படுத்த இந்திய வரலாற்றை கேவலப்படுத்தாதீர்கள். திரிக்காதீர்கள்.//

    சமீபத்தில் தர்மபுரியில் நடந்த சாதிக் கலவரத்தில் பெண்ணின் தகப்பனார் தற்கொலை செய்து கொண்டதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொள்ள காரணமாக தலித்களில் ஒரு காவலரும் வன்னியர்களில் அவரது உறவினர்களும் காரணமாக்கப்படுகின்றனர். ‘உன் பெண்ணை அவன் இழுத்துக்கிட்டு போயிட்டான். நாண்டுக்குட்டு சாவுடா’ என்று உசுப்பேற்றியதாலேயே அந்த முதியவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலைக்கு தூண்டுவது கொலைக்கு சமம்தானே தங்கமணி. அந்த முதியவரின் தற்கொலை அவராக ஏற்படுத்திக் கொண்டதா? சிந்திக்க மாட்டீர்களா!

    அதையே சமணர்களின் கழுவேற்றத்திலும் பொருத்திப் பாருங்கள்.
    Reply

    -------------------------------

    suvanappiriyan says: Your comment is awaiting moderation.
    November 22, 2012 at 7:38 am

    //சரி அவுரங்க சீப்பு விவகாரம் பின்னால் நடந்துதான். ஆனால் நீங்கள்தான் நாகரீகமற்ற தமிழர்களுக்கு நாகரிகம் சொல்லிக்கொடுக்க வந்தவர்களாயிற்றே. ஏன் அப்படி அவுரங்கசீப்பும், எல்லா முஸ்லீம் மன்னர்களும் அப்படி நாகரிகம் இல்லாமல் நடந்துகொண்டார்கள்?//

    இது அந்த கால வழக்கம். வெற்றி பெற்ற அரசன் தோல்லியடைந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடிப்பதும், அங்கு தனது கலாசாரத்தை பரப்ப நினைப்பதும் அன்றைய அரசுகள் செய்த வழமையான ஒரு பழக்கம். ஏன் நம் தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்கள் குடி மக்களின் ரத்தத்தை ஓட்டவில்லையா? ஆதாரமாக தமிழ் காப்பியங்கள் இன்றும் உள்ளனவே! கோவில் கருவூலங்களை கொள்ளையடித்தது இந்து மன்னர்கள்தானே! ஆதாரம் வேண்டுமா? பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டனரே! சுட்டி தரட்டுமா?
    Reply

    ReplyDelete
  6. Anonymous2:42 AM

    அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்டது சரியென்கிறீர்கள், இருக்கட்டும். அது உங்களது நாட்டுப் பற்று என்றும் கூறுகிறீர்கள். அப்படியானால், இந்திய நாட்டின் பிரதம மந்தி ராஜீவ் காந்தியையும் பல அப்பாவிகளையும் கொன்ற "தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு" தமிழக அரசாங்கமே தற்போது ஆதரவு கொடுப்பது ஏனோ? அது நீங்கள் கூறும் "இந்திய நாட்டுக்குச்" செய்யும் பச்சைத் துரோகமல்லவா? தமிழக அரசு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகள் சிலவும் தமிழகத்தின் பொதுமக்கள் பலரும் அத்தகையோருக்கு, அதாவது இந்தியாவின் மீது போர் தொடுத்து இந்தியப் பிரதமரையும் பொதுமக்களையும் கொலை செய்த பாதகர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். அப்படிப்பட்டோருக்குச் சிறிதளவேனும் "இந்திய நாட்டுப் பற்று" இல்லாதிருக்கும். ஏனெனில் அவர்கள் இந்தியா தடை செய்த பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள். அஜ்மல் கசாப்புக்குத் தூக்குத் தண்டனை சரியென்றால், ராஜீவ் காந்தியைக் கொன்றோருக்கும் அத்தண்டனை வேண்டும். மாறாக, அவர்களைச் சுகமாக விடுதலை செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்வோர் எவருமிருப்பின் அத்தகைய அனைவரும் ஒன்றில் தேசத்துரோகிகள், அல்லது ஏனையோர் அனைவரும் ஏமாளிகள். சரிதானே.

    -வள்ளுவன்

    ReplyDelete
  7. என்ன பாஸ் சேம் சைடு கோல் போடுறீங்க...? இதை நீங்க பாகிஸ்தானில நிண்டு சொன்னா உங்களைத் தூக்கில போட்டுடுவான்கள்.. :)

    ReplyDelete
  8. என்ன பாஸ் சேம் சைடு கோல் போடுறீங்க...? இதை நீங்க பாகிஸ்தானில நிண்டு சொன்னா உங்களைத் தூக்கில போட்டுடுவான்கள்.. :)

    ReplyDelete
  9. சகோ வள்ளுவன்!

    //அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்டது சரியென்கிறீர்கள், இருக்கட்டும். அது உங்களது நாட்டுப் பற்று என்றும் கூறுகிறீர்கள். அப்படியானால், இந்திய நாட்டின் பிரதம மந்தி ராஜீவ் காந்தியையும் பல அப்பாவிகளையும் கொன்ற "தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு" தமிழக அரசாங்கமே தற்போது ஆதரவு கொடுப்பது ஏனோ? அது நீங்கள் கூறும் "இந்திய நாட்டுக்குச்" செய்யும் பச்சைத் துரோகமல்லவா? //

    கண்டிப்பாக! இறந்து போன ராஜீவ் காந்தியின் இள வயது மனைவியையும் அவரது இரண்டு பிள்ளைகளின் நிலையில் இருந்து நாம் பார்க்க வேண்டும். வன்முறை யார் செய்தாலும் அதற்கு தக்க தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது யார் செய்திருந்தாலும்....

    ReplyDelete
  10. திரு தேன் மதுரன்!

    //என்ன பாஸ் சேம் சைடு கோல் போடுறீங்க...? இதை நீங்க பாகிஸ்தானில நிண்டு சொன்னா உங்களைத் தூக்கில போட்டுடுவான்கள்.. :)//


    எனது நாட்டின் பாதுகாப்பை பற்றித்தானே நான் பேச முடியும்? :-(

    ReplyDelete
  11. திரு தங்கமணி!

    //தற்கொலை படையாக இந்த காலத்திலும் பல முஸ்லீம்கள் அப்பாவி ஷியா பிரிவினர் மசூதிகளிலும், கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் தற்கொலை செய்துகொண்டும், மற்றவர்களை கொன்று சாகிறார்கள். தடுக்க முடிந்தால் தடுக்கலாமே?//

    சுதந்திர இந்தியாவின் முதல் கொலையான காந்தியை கொன்றவர்கள் உங்கள் இனத்தவர். அந்த கோட்சே மகான் என்று கொண்டாடுபவர்களும் உங்கள் இனத்தவர். பாபரி மசூதியிலிருந்து குஜராத் கலவரம் மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வரை நிகழ்த்தியது உங்கள் இனத்தை சேர்ந்த இந்துத்வாவினர். அவர்களிடம் உங்களின் பிரசாரத்தை முதலில் ஆரம்பிக்கலாமே!

    குல்தீப் நய்யாரின் பேட்டியை கொஞ்சம் பாருங்கள்.

    ஆனந்தவிகடன் இதழில் (3.10.2012) பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அளித்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.
    கேள்வி: இந்திய ஜனநாயகத்துக்குச் சவா லான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?
    பதில்: "பசி இன்றைய இந்தியாவில் அரங்கே றும் அத்தனைப் பயங்கரங்களுக்குப் பின்னணி யில் பட்டினியோடு தூங்கப் போகிறவனின் பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்டவற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினை வாதங்கள் இந்தியா முழுக்கத் தலைவிரித் தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விடும். இன் னொரு முக்கிய காரணம் இந்துத் தாலிபான் செயல்பாடுகள். அதுதான் மகாத்மா காந் தியையே பழி வாங்கியது. திட்டமிட்டு அரங் கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான் களால் உருவாக்கப்பட்டவைதானே. சமீப காலமாக திரைக்குப் பின்னால் தென்படும் இந்துத் தாலிபான்

    //இவர்களை ஆதரிப்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இன்னமும் நிறைய பேர் இருக்கிறார்களே?//

    இந்துத்வாவை ஆதரிக்கும் மலர்மன்னன், க்ருஸ்ணகுமார், புனை பெயரில், தங்கமணி, ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் இந்து மதத்திலும் இருக்கிறார்களே! அவர்களை திருத்துவது யார்?

    //சுவனப்பிரியன் இவர்களை தடுக்கலாம். ஆனால் தடுப்பதாக தெரியவில்லையே?//

    நாங்கள் கடந்த 25 வருடங்களாக உழைத்து தீவிரவாத எண்ணம் உடைய எத்தனையோ இளைஞர்களை மாற்றியுள்ளோம். வஹாபியத்தால் தமிழகத்துக்கு விளைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று.

    ஆனால் வளர்ந்து வரும் இந்து தீவிரவாதத்தை கட்டுப் படுத்த தங்கமணி இதுவரை என்ன செய்தார் என்பதை விளக்கினால் நலமாக இருக்கும்.

    ReplyDelete
  12. Anonymous6:35 AM

    அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.சுவனப்பிரியன்

    "இவனை இயக்கிய முக்கிய குற்றவாளிகள் பாகிஸ்தானில் இன்று சுதந்திரமாக உள்ளனர். அவர்களுக்கும் தக்க தண்டனை கிடைக்க நமது அரசு முயற்சிக்க வேண்டும. அடுத்து வந்தவர்கள் குறிப்பாக ஹேமந்த் கர்கரேயை கொல்வதில் முக்கிய கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இவர்கள் வர தேர்ந்தெடுத்த வழியும் குஜராத். எனவே இதன் பின்னணியில் நமது நாட்டில் யார் யாரெல்லாம் இந்த கும்பல் இந்தியா வர உடந்தையாக இருந்தனர் என்பதை அரசு மிக உன்னிப்பாக கவனித்து அவர்களையும் கைது செய்து தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.

    அதேபோல் மாலேகான் குண்டு வெடிப்பில் தற்போது சிறையில் இருக்கும் சாது பிரக்யாசிங்குக்கும், புரோகித்துக்கும் என்ன தண்டனை என்பதை அரசு தெளிவாக்க வேண்டும். தவறு செய்த முஸ்லிமை தூக்கிலிட்டு விட்டு அதே போன்ற தவறை செய்த இந்துக்களை தண்டிக்காமல் விட்டால் அது இந்துத்வாவுக்கு மேலும் தைரியத்தை கொடுக்கும். மேலும் பல குண்டு வெடிப்புகளை நடத்த முயற்சிப்பர். அதேபோல் பாதிப்படைந்த முஸ்லிம்களில் சிலரும் இந்த நாட்டின் பாரபட்ச போக்கை நினைத்து தீவிரவாதத்தின் பக்கம் செல்ல முயற்சிக்கலாம். எல்லா மக்களும் சந்தோஷமாக வாழ எப்படி அஜமல் கசாபை தூக்கில் இட்டார்களோ அதே போல் மாலேகான் குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும். குஜராத் கலவர குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும்."

    "நச்" என்று மண்டையில் ஓங்கி அடித்தது போல கருத்துகளை கூறி இருக்கிறீர்கள்.இனிமேலாவது உரைக்கிறதா என்று பார்ப்போம்
    kalam

    ReplyDelete
  13. சலாம் சகோ கலாம்!

    //"நச்" என்று மண்டையில் ஓங்கி அடித்தது போல கருத்துகளை கூறி இருக்கிறீர்கள்.இனிமேலாவது உரைக்கிறதா என்று பார்ப்போம்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. திரு தங்கமணி!

    //பிரிட்டிஷ் இந்தியாவில் பாகிஸ்தான் என்று தனி நாடு வேண்டும் என்பதற்காக இந்துக்களை லுங்கி அவிழ்த்து பார்த்து கொலைகளை செய்த ஜின்னாவின் டைரக்ட் ஆக்‌ஷன் டேவில் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்களில் யார் தீவிரவாதிகள்?//

    பிரிவினை நேரத்தில் இரண்டு பக்கமும் உயிர் பலி நடந்தேறியது. இதற்கு காரணமாக ஜின்னா, ராஜாஜி, பட்டேல் என்று பலர் காரணமாகின்றனர். ஒரு வகையில் ஜின்னாவை மடையன் என்று கூட கூற தயங்க மாட்டேன். ராஜாஜி போன்றவர்கள் விரித்த வலையில் வீழ்ந்தவர். இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யாது சுய நலத்தோடு நாட்டை பிரித்து கொண்டு போனார். நாடு ஒன்றாக இருந்திருந்தால் பல கசப்புகள் மாறி இந்து முஸ்லிம் ஒற்றுமை சிறப்பாகியிருக்கும். அதை கெடுத்தது ஜின்னாவின் நாடாளும் ஆசை.

    //முஸ்லீம்கள் பாட்டுக்கு வெறியாட்டம் ஆடிக்கொண்டே இருப்பார்கள். இந்துக்கள் வாயையும் கையையும் மூடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூட நான் ஆசைப்படுகிறேன். ஆனால் அப்படி நடப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.//

    ஆஹா..என்ன அருமையாக பூசி மொழுகுகிறீர்கள்? இது வரை நடந்த கலவரங்கள் அனைத்திலுமே பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தான். சுதந்திரத்திற்கு பிறகு சொத்துக்களை இழந்ததும், உயிர்களை இழந்ததும் முஸ்லிம்கள் தான். வெள்ளைக் காரன் எவ்வாறு நம்மை பிரித்தாண்டான் என்பதை மார்க்கண்டேய காட்ஜூவின் சமீபத்திய கட்டுரையை பாருங்கள்..

    பிரித்து ஆளவேண்டும்!
    ஜனவரி 14, 1887 அன்று விஸ்கவுண்ட் க்ராஸ் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் டுஃப்பரின் என்பவருக்கு இவ்வாறு எழுதுகிறார். ‘மத ரீதியிலான இப்படிப்பட்ட பிளவு நமக்குச் சாதகமாக இருக்கும். இந்தியக் கல்விமுறை குறித்தும் பாடப் புத்தகங்கள் குறித்துமான உங்கள் விசாரணை கமிட்டியின் மூலம் சில நன்மைகளை அடையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.’
    ஜார்ஜ் ஹாமில்டன் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் கர்சனுக்கு இவ்வாறு எழுதினார். ‘இந்தியாவை நாம் ஆள்வதற்குத் தடையாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம்தான்… படித்த இந்தியர்களை இரு பிரிவுகளாக (இந்துக்கள், முஸ்லிம்கள்) பிரிக்கமுடிந்தால் நம் பிடியை உறுதிபடுத்திக்கொள்ளமுடியும். இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கும்படியாக நம் பாடப்புத்தகங்களை நாம் திட்டமிட வேண்டும்.’
    இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமை ஏற்படவேண்டுமென்றே இப்படிப்பட்ட திட்டங்கள் 1857க்குப் பிறகு தீட்டப்பட்டன. பல்வேறு வழிகளில் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டது.
    • மதத் தலைவர்களுக்கு லஞ்சம் : பிரிட்டிஷ் கலெக்டர் ரகசியமாக ஒரு பண்டிட்ஜியைச் சந்தித்து, பணம் கொடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசச் சொல்வார். அதே போல் ரகசியமாக ஒரு மௌல்வியைச் சந்தித்து பணம் கொடுத்து இந்துக்களுக்கு எதிராக அவரைப் பேச வைப்பார்.
    • மறைக்கப்பட்ட வரலாறு : தொடக்கத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பல இந்து கோயில்களை இடித்தது உண்மை. ஆனால், பிற்காலத்தில் வந்த கிட்டத்தட்ட அனைவரும் (அக்பர் போன்றவர்கள்) இந்து கோயில்களுக்கு தொடர்ச்சியாக மானியங்கள் அளித்தும் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளில் கலந்துகொண்டும் மத ஒற்றுமையை வளர்த்தனர். ஆனால் நம் குழந்தைகளுக்கு இந்த இரண்டாவது பாகம் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. கஜினி முகமது சோமநாதர் கோயிலை உடைத்தார் என்றுதான் அவர்கள் வரலாற்றில் கற்கிறார்களே தவிர, திப்பு சுல்தான் போன்றவர்கள் இந்து விழாக்களில் பங்கேற்றார்கள் என்பதைக் கற்பதில்லை.
    • தூண்டிவிடப்பட்ட மோதல்கள் : வகுப்புவாத மோதல்கள் அனைத்தும் 1857க்குப் பிறகே உருவாகின. பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது இசை வாத்தியங்களை ஒலிக்கவிடுவது, இந்து விக்கிரகங்களை உடைப்பது என்று மத உணர்வுகளைத் தூண்டிவிடும்படியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
    மார்கண்டேய கட்ஜு எழுதி தி ஹிந்துவில் அக்டோபர் 11 அன்று வெளியான Rid our body politic of communal poison என்னும் கட்டுரை

    http://www.thehindu.com/opinion/lead/rid-our-body-politic-of-communal-poison/article3985402.ece

    அவன் விதைத்த விதை இன்று வரை அறுவடை செய்து கொண்டிரு;கிறோம்.

    ReplyDelete
  15. அஸ்ஸலாம் அலைக்கும் .....சகோ
    கசாப்பின் கூட்டாளிகளின் 9 பேர் சடலங்களை மஹாராஷ்ட்ராவில்
    புதைக்ககூடாது என்று மும்பையின் தலைமை இமாம் சொன்னதுபோல
    கசாபின் சடலத்தையும் இந்தியாவில் எங்கும் புதைத்து இருக்ககூடாது ,படுபாவிங்க பூனாவின் சிறை வளாகத்துக்குள்ளேயே அவனை
    புதைச்சுட்டாங்க ...
    சில நாத்திக பதிவர்கள் கசாபை 10,20 வருடங்கள் சிறையிலே இருக்கச்செய்து நல்லெண்ண தூதுவனாக மாற்றாமல் தூக்கிலே போட்டது குற்றம் என்கிற ரீதியிலே பதிவுகள் , பின்னூட்டங்கள்
    போடுறாங்க ...அதாவது இவர்கள் தூக்கு தண்டனையை எதிர்பவர்களாம் !
    தனக்கு வந்தால் தான் தெரியும் திருகுவலி என்பது போல இவர்கள் வீட்டில் கொலை நடந்திருந்தால் , போலீஸ்காரர்களிடம் ஐயா ,இவரை ஒன்னும் செய்யாதீங்க நல்லெண்ண தூதுவனாக, அன்பின் தூதுவனாக மாத்துங்க என்று சொல்வாங்களா ....????
    காசாபை தூக்கிலிட்டது தாமதமான நியாயம் + தீர்ப்பு இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை ஒருவேளை மாற்றுக்கருத்து இருப்பின் அவர்கள் உண்மையான இந்திய குடிமகன்கள் அல்ல என்பதே என் கருத்து .

    ReplyDelete
  16. சலாம் சகோ நாஸர்!

    //காசாபை தூக்கிலிட்டது தாமதமான நியாயம் + தீர்ப்பு இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை ஒருவேளை மாற்றுக்கருத்து இருப்பின் அவர்கள் உண்மையான இந்திய குடிமகன்கள் அல்ல என்பதே என் கருத்து .//

    உங்கள் கருத்தே எனது கருத்தும். விசாரணையும் பாரபட்சமின்றி நடைபெற்று குற்றம் முழுவதுமாக உறுதியான பின்பே தூக்கில் ஏற்ற வேண்டும். எந்த ஒரு அப்பாவியும் இது போன்ற தண்டனையை அனுபவித்து விடக் கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  17. கசாபுக்கு தூக்கு;

    மற்றவர்களுக்கு?


    எம். தமிமுன் அன்சாரி (ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ்)

    மும்பையில் 2008 நவம்பர் மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

    அதில் காவி தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய தீவிரவாத தடுப்பு படையின் அதிகாரி "தியாகி’ ஹேமந்த் கர்கரேயை இத்தாக்குத-ன் பரபரப்புக்கு மத்தியில் "காவி ஆதரவு உளவாளிகள்’ சுட்டுக் கொன்றதும் அப்போதுதான்!

    வழக்கம்போல் பழி தீவிரவாதிகளின் மீது போடப்பட்டு "அபிநவ் பாரத்’தின் எண்ணங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மும்பையை நிலைகுலைய வைத்த அந்நிய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிரோடு பிடிபட்டான். அவனது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதால் இன்று புனே சிறையில் அவசர அவசரமாக கசாப் தூக்கிடப்பட்டிருக்கிறான்.

    அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் மொத்தப் பிரச்சனைகளும் பின்னுக்குத் தளளப்பட்டு இதுதான் பேசப்படும்.

    மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு,

    எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் அமளி மற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகியவற்றிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை மாற்றியிருக்கிறது.

    இதுதான் அஜ்மல் கசாப் அவசர அவசரமாக தூக்கிடப்படுவதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்.

    எதிர்பார்த்தபடி பாஜக வரவேற்றிருக்கிறது.
    மேலும், பால்தாக்கரேயின் மரணத்தால் அவர்களின் வட்டாரத்தின் மீது உருவாகி இருக்கும் அனுதாப அலையையும் தகர்த்திருக்கிறது காங்கிரஸ்.

    இது சிவசேனா, பாஜகவுக்குப் புரியவில்லை. காங்கிரசின் காய் நகர்த்தலுக்கு ஐ.பி. என்ற உளவு அமைப்பின் மூளை உதவியிருக்கிறது.

    அதிரடியாய், ரகசியமாய் அஜ்மல் கசாபை தூக்கிட்டது போல் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரையோ, அல்லது அப்பாவி அப்சல் குருவையோ இப்படி செய்துவிட முடியாது என்பது அதிகார வர்க்கத்திற்குத் தெரியும்.

    தமிழ்நாடும் காஷ்மீரும் இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதும் புரியும். அது ஒருபுறம் இருக்கட்டும்.

    நீதிமன்றங்களில் அரசியல் குறுக்கீடும் லஞ்சமும் தலைவிரித்தாடும் இந்தியா போன்ற நாடுகளில் மரண தண்டனை முறையை ஏற்கலாமா?
    என்ற வாதம் ஒருபுறம் வலுவடைந்து வரும் நிலையில், சில விவாதங்கள் எழுந்துள்ளன.

    அஜ்மல் கசாப் யார்? அவன் பாகிஸ்தான் கைக்கூலியா?

    அல்லது இந்திய உளவுத்துறையின் தயாரிப்பா? இரண்டாவது கேள்விக்கு அர்த்தம் இருக்கிறது.

    ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அஜ்மல் கசாப் கைதியாக இருந்தான்.

    அப்போது இந்திய உளவுத்துறைக்கும் அவனுக்கும் இடையிலே நெருக்கம் ஏற்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

    அஜ்மலை இந்திய உளவுத்துறை ஏன் பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்விக்கு விடை விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.

    இதுபோன்ற பல கேள்விகள் அவனது மரண தண்டனையோடு முடிந்துவிட்டது.

    அஜ்மல் கசாப் அப்பாவி மக்களைக் கொன்ற கொலைகாரன். அவன் ஒரு குற்றவாளி. ஆனால் அவன் மட்டுமே குற்றவாளி அல்ல.

    அவனுக்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் ஏன் மூடி மறைக்கப்பட்டன?

    சரி, 166 பேரைக் கொன்ற அஜ்மல் கசாபுக்கு தூக்கு!

    ஒரிஸ்ஸாவில் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களையும், அவரது இரு மகன்களையும் உயிரோடு தீவைத்துக் கொளுத்திய பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாராசிங்கிற்கு என்ன வகை தண்டனை?

    பசு மாட்டின் தோலை உரித்ததற்காக ஹரியானாவில் 6 தலித்துகளைக் கொன்ற உயர்சாதி தீவிரவாதிகளுக்கு என்ன வகை தண்டனை?

    மண்டல் கமிஷனுக்கு எதிராகப் போராடிய உயர் சாதியினர் பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் மீது மண்ணெண்ணெயைக் கொட்டி எரித்துவிட்டு அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீக்குளித்துள்ளார்கள் என்று பரப்புரை செய்த பயங்கரவாதிகளுக்கு என்ன வகை தண்டனை?

    பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு, மும்பையில் 2 ஆயிரம் இந்தியர்களைக் கொன்றவர்களுக்கு,

    குஜராத்தில் 3 ஆயிரம் இந்தியர்களைக் கொன்றவர்களுக்கு,

    இந்திரா காந்தியின் கொலைக்கு பதிலடியாக 3 ஆயிரம் சீக்கியர்களைக் கொன்றவர்களுக்கு

    என இதுபோன்ற பயங்கரவாதங்களைச் செய்தவர்களுக்கு என்ன வகை தண்டனைகள் வழங்கப் போகிறார்கள் நீதிமான்கள்?

    பயங்கரவாதத்திற்கு, பயங்கரவாதிகளுக்கு சாதி மதம் இனம் மொழி என வரையறை இல்லை.

    அவர்கள் குற்றவாளிகளே. பயங்கரவாதத்தை உறுதியாக, உளப்பூர்வமாக எதிர்க்கிறோம். அதுபோல் ஆளுக்கொரு நீதி என்பதையும் எதிர்க்கிறோம்.

    - எம். தமிமுன் அன்சாரி (ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ்)

    https://markaspost.wordpress.com/2012/11/21/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0/

    ReplyDelete
  18. இசுலாமியர்களையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தரிக்காதே..!

    இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் இம் மாதம் நவம்பர் 25 தொடங்கி ஒரு தொடர் நிகழ்வாக

    தமிழகம் முழுவதும்

    இசுலாமியர்களையும்,

    மக்கள் போராளிகளையும்

    தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து

    மனித உரிமை போராளிகள்,

    பெரியாரிய அமைப்புகளை சேர்ந்த தோழர்கள்,

    தமிழ்தேசிய ஆற்றல்களை ஒன்றினைத்து மக்களிடம் செல்லும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளது.

    இதன் முதல் நிகழ்வாக திருப்பூரில் எதிர்வரும் 25.11.2012 அன்று முதல் அரங்க கூட்டம் நடை பெற உள்ளது.

    >>> படம் பார்க்க‌ <<<<<


    SOURCE: http://www.periyarthalam.com/2012/11/23/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

    ReplyDelete
  19. //எய்தவனை ஒருபோதும் இந்தியா தூக்கில் போடாது. அப்படிப் போடத் துணிந்தால், வாங்கிக் கட்டும்.
    //

    பாகிஸ்தான் ஆதரவு வெளிப்படையா தெரியுது. சுவனம் இதெல்லாம் ஒரு ...

    ReplyDelete
  20. //இந்துத்வாவை ஆதரிக்கும் மலர்மன்னன், க்ருஸ்ணகுமார், புனை பெயரில், தங்கமணி, ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் இந்து மதத்திலும் இருக்கிறார்களே! அவர்களை திருத்துவது யார்? //

    துலுக்கதுவாவை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களை திருத்துவார் யார் அண்ணே, உங்கள முதலில் நீங்க திருத்தலாமே.

    ///எய்தவனை ஒருபோதும் இந்தியா தூக்கில் போடாது. அப்படிப் போடத் துணிந்தால், வாங்கிக் கட்டும்.
    //

    பாகிஸ்தான் ஆதரவு வெளிப்படையா தெரியுது. சுவனம் இதெல்லாம் ஒரு ...//

    சொந்த நாட்டு பாசம், அப்படிதான் இருக்கும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)