'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, November 08, 2012
இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியமா?
இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியமா?
தற்போது ரவி ஸ்ரீவாசனின் கைது பிரதானமாக பேசப்படுகிறது. கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ட்விட்டரில் அவதூறு பிரசாரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் நாட்டின் பிரதம மந்திரியின் அடுத்த ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுபவரான ப.சிதம்பரத்தின் மகனை பற்றி ட்விட்டரில் ஒரு விஷயத்தைப் பதியும் போது அது உண்மைதானா என்று தெரிந்து கொண்டல்லவா பதிந்திருக்க வேண்டும்? நாட்டின் மிக முக்கியமான குடும்ப உறுப்பினரைப் பற்றி அவதூறாக ஒரு செய்தி வெளியிடும் முன் யோசித்திருக்க வேண்டாமா?. தற்போது பிபிசி எந்த ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு ட்விட்டை பகிர்ந்தீர்கள் என்று கேட்கும் போது அவரால் நேரிடையான பதிலை சொல்ல முடியாது தடுமாறுகிறார்.
எனக்கு ட்விட்டரில் 16 ஃபாலோயர்தான் அப்போது இருந்தனர். இந்த பிரச்னைக்கு பிறகு 800க்கு மேல் ஃபாலோயர்கள் வந்துள்ளதாக சொல்கிறார். பிளாக்கரிலும் கூட ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல அவதூறு செய்திகளை தெரிந்தே வெளியிடும் பல பதிவர்களைப் பார்க்கிறோம். இதனால் அந்த தளத்தின் நம்பகத் தன்மையையும் இழக்கின்றனர் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. சம்பந்தப் பட்டவர்களும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எந்த ஒரு செய்தியையும் பதியும் போது அதற்குரிய ஆதாரத்தை வைத்துக் கொண்டு நாம் செய்தி வெளியிட்டால் பின்னால் வரக் கூடிய பிரச்னைகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
சுப்ரமணியம் சுவாமி தனது தம்பியோடு பேசி 'கவலைபடாதீர்கள் நாங்கள் இருக்கிறோம்' என்று சொன்னதாக வேறு சொல்கிறார். ஆக செய்த தவறை ஒத்துக் கொண்டு இனி அவ்வாறு நடைபெறாது என்று சொல்வதற்கு பதில் அந்த தவறை எப்படியாவது பூசி மெழுகவே பார்க்கிறார்.
அதேபோல் பல பதிவர்களும் ஆபாச படங்களை வெளியிடுவது, ஆபாச கதைகளை வெளியிடுவது என்று சகட்டு மேனிக்கு எழுதிக் குவிக்கிறார்கள். இந்த இணையத்தை பல வயதுடையவர்கள் சிறுவர்கள், குடும்பத்து பெண்கள் என்று அனைவரும் வலம் வருகிறோம். இதை உணர்ந்து நமது பதிவர்கள் ஆபாசமாக எழுதுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
அதே போல் மத சம்பந்தமாக அவதூறுகளையும் எழுதுவதில் பலர் தயங்குவதில்லை. சுப்ரீம் கோர்ட்டே தலையிட்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நமது ஊடகங்களின் நிலை இருக்கிறது. இணைய எழுத்தாளர்கள் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு தங்களின் கருத்துக்களை பதிய வேண்டும்.
நமது அரசு இணைய தளத்திற்கென்று சில விதி முறைகளை வகுக்க வேண்டும். கட்டற்ற சுதந்திரம் ஒரு மனிதனை எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும். எனவே தனி மனித நபர்களைப் பற்றி பிரசுரிக்கும் போது அதற்கான முக்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தால் பல அவதூறு பதிவுகள் வெளி வருவது தடுக்கப்படலாம். அதே போல் அநியாயமாக நிரபராதிகள் தண்டிக்க படுவதையும் தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
ரவி ஸ்ரீநிவாசின் பிபிசி பேட்டி
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121105_twitterarrest.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1
---------------------------------------------------------------------
.
வேலூரில் கடந்த அக்டோபர் 23 ந்தேதி மருத்துவ மனைக்கு அருகில் அரவிந்த ரெட்டி என்ற பாஜக உறுப்பினர் படுகொலை செய்யப்படுகிறார். காவல் துறை 'நிலம் சம்பந்தப்படட முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது' என்று சொல்கிறது. ஆனால் பாஜகவினரோ 'இந்த கொலை நாங்கள் வளர்வதை பொருக்காத இஸ்லாமிய இயக்கங்களால் நடத்தப் பட்டிருக்கலாம்' என்று இணையத்தில் சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள். தேர்தல் வேறு நெருங்குகிறது. பாஜக வை இந்த வகையிலாவது தூக்கி நிறுத்தலாம் என்பது இவர்களின் எண்ணம்.
இந்த இந்துத்வாவினர் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்யக் கூடியவர்கள். பொய்யான காரணத்தைக் கூறி பாபரி மசூதியை இடித்து ரத்த ஆறு ஓட விட்டனர். கோத்ராவில் நடந்த ரயில் விபத்தை 'முஸ்லிம்களின் சதி' என்று கூறி ரத்த ஆறு ஓட விட்டனர். மாலேகானில் குண்டு வைத்து முஸ்லிம்களை கொன்று அதற்கு காரணம் என்று அந்த ஊர் முஸ்லிம்களையே கைது செய்தனர். பிறகு ஹேமந்த் கர்கரே வந்து உண்மையை கண்டறிந்து சாது பிரக்யாசிங்கை உள்ளே தள்ளினார்.
தற்போது அரவிந்த ரெட்டி கொலையை மத சாயம் பூசி தமிழகத்தில் ஓட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது பிஜேபி. அதே போல் மேட்டுப் பாளையத்தில் ஆனந்த் என்பவர் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இவரும் பிஜேபி உறுப்பினர். இதுவும் முஸ்லிம்கள் வேலைதான் என்று பொய்யான காரணத்தை கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். கடைகளை மூடச் சொன்னதோடு அல்லாமல் அரசு பஸ்ஸையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வகையிலாவது கலவரத்தை உண்டு பண்ணி பிஜேபி யை வளர்க்க பார்க்கின்றனர். ஏனெனில் திராவிட இயக்கங்களினால் இந்துத்வா என்பது தமிழகத்தில் கானல் நீராக போய்க் கொண்டிருக்கிறது. மேல்சாதியினரின் ஆதிக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இழந்த அதிகாரங்களை அரசியல் மூலம் பெற இந்துத்வா துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக பிஜேபியை எப்படியாவது வளர்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. இது குஜராத் அல்ல. பெரியார் வாழ்ந்த தமிழகம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். இந்துத்வாவின் குள்ளநரித்தனங்களை தோல் உரித்துக் காட்டுவதில் முஸ்லிம்களை விட திராவிட இயக்கத்தினரே மும்முரமாக நிற்கின்றனர். நடுநிலையாளர்கள் திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு உரிய ஆதரவை நல்க வேண்டும். தமிழக முதல்வரும் இந்துத்வாவின் கோர முகத்தை உணர்ந்து அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனக்கு ஒரு டவுட். ஏன் பெரியார் மாதிரி யாரும் இஸ்லாமிய நாடுகளில் தோன்ற வில்லை?
ReplyDeleteதோன்றினா உடனே பாம் வச்சுடுவீங்களே
ராமர் மோசமானவர்,
ReplyDeleteஅதை விட மோசமானவர் லட்சுமணன்..
'ராம்' ஜேத்மலானி தாக்கு!
Published: Friday, November 9, 2012, 8:23 [IST]
Posted by: Sudha
டெல்லி: பாஜகவுக்குள் இருந்து கொண்டே பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள
ராம்ஜேத்மலானி அடுத்து ராமரைப் போட்டுத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ராமாயணத்தின் நாயகனான ராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார்.
எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது.
ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர்.
சீதை பரிதாபத்துக்குரிய பெண்.
ராமர் இப்படி என்றால்,
அவரது தம்பி லட்சுமணன் இன்னும் மோசம்.
சீதா கடத்தப்பட்டபோது,
லட்சுமணனைப் போய் தேடிப் பார் என்று கூறி அனுப்பினார் ராமர்.
ஆனால் தேடப் போவதற்குப் பதில்,
சீதைப் பிராட்டி எனது அண்ணியார். அவரது முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.
எனவே என்னால் அவரை அடையாளம் காண முடியாதே என்றார் லட்சுமணன்.
எவ்வளவு காமெடி பாருங்கள் என்றார் ஜேத்மலானி.
ராமர்தான் பாஜகவுக்கு முதன்மைக் கடவுள்.
இந்தநிலையில் ராமரையும், லட்சுமணனையும் ஜேத்மலானி கடுமையாக விமர்சித்திருப்பது பாஜகவுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கத்காரிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார் ஜேத்மலானி.
தாவூத் இப்ராகிமையும், விவேகானந்தரையும் கத்காரி ஒப்பிட்டுப் பேசி சமீபத்தில்தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தினார் கத்காரி.
இந்த நிலையில் அதே பாணியில் ராமரைப் போட்டுத் தாக்கிப் பேசியுள்ளார் ஜேத்மலானி.
SOURCE:http://tamil.oneindia.in/news/2012/11/09/india-ram-jethmalani-embarrasses-bjp-says-164396.html
சலாம் சகோ.சுவனப்பிரியன்,
ReplyDeleteஇஸ்லாம் என்றால் அமைதி ...இஸ்லாம் பின்பற்றப்படாத செயல்களில் வேதனை வருவது,அமைதியை இழப்பது ஆச்சர்யம் அல்லவே..!!!
கேள்விபடுவதை எல்லாம் பரப்புவதை இஸ்லாம் எவ்வளவு அழகாக தடை செய்கிறது...
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( முஸ்லிம்: 6 )
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.(33:70,71)
********************************
நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:
• அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
• யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
• "அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்" என்றேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்" என்றனர். (மீண்டும்) "அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது" என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நாவைப் பிடித்து, "இதைத்தான் (பயப்படுகிறேன்)" எனக் கூறினர். (அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
WHAT A WAY SIR'JI ....!!!
நன்றியுடன்
நாகூர் மீரான்
கடைசி வரைக்கும் கட்டுப்பாடு வேணுமா? வேணாமா நு சொல்ல வே இல்லையே!! நீங்கள் சுவனப் பிரியன் அல்ல! மிகக் கவனப் பிரியன்!!
ReplyDeleteதிரு ஜெய்சங்கர்!
ReplyDelete//எனக்கு ஒரு டவுட். ஏன் பெரியார் மாதிரி யாரும் இஸ்லாமிய நாடுகளில் தோன்ற வில்லை?
தோன்றினா உடனே பாம் வச்சுடுவீங்களே//
எப்புடீ....மாலேகான்ல, சம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸுல, மக்கா மஸ்ஜித்ல குண்டு வச்சீங்களே அது மாதிரியா!
திரு சிவா!
ReplyDelete//கடைசி வரைக்கும் கட்டுப்பாடு வேணுமா? வேணாமா நு சொல்ல வே இல்லையே!! நீங்கள் சுவனப் பிரியன் அல்ல! மிகக் கவனப் பிரியன்!!//
அரசும் சரி, பதிவர்களும் சரி இருவருமே தங்களின் பொருப்பை உணர்ந்து புரிந்துணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இருவருமே வரம்பு மீறக் கூடாது.
சலாம் சகோ நாகூர் மீரான்!
ReplyDelete//கேள்விபடுவதை எல்லாம் பரப்புவதை இஸ்லாம் எவ்வளவு அழகாக தடை செய்கிறது...//
உண்மைதான். ஒரு செய்தியை பரப்புவதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை முதலில் சரி பார்ததுக் கொள்ள வேண்டும்.
'பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்பி விடுகின்றனர். அதை இத்தூதரிடமும் தங்களின் அதிகாரம் உள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் அதை ஆய்வு செய்வோர் அறிந்து கொள்வார்கள்'
-குர்ஆன் 4:83
சகோ உண்மைகள்!
ReplyDelete//இந்த நிலையில் அதே பாணியில் ராமரைப் போட்டுத் தாக்கிப் பேசியுள்ளார் ஜேத்மலானி.//
ராம்ஜெத்மலானியிடம் இருந்து இப்படி ஒரு ஸ்டேட்மெண்டா? ஆச்சரியம்தான்.
சகோ சுவனப் பிரியன்,
ReplyDeleteஸலாம். இணையத்தில் கட்டுபாட்டினை சில விதிகள் மூலம் கட்டுப் படுத்த முடியுமா? என்பதில் நம்க்கு ஐயம் உண்டு.ஆபாச இணைய தளங்கள் தடுப்பது எளிது என்றாலும், எது ஆபாசம் என்னும் வரையறைகளில் சில விடயங்கள் சிக்கல் ஆவதும் இயல்பே?.
மிகச்சரியாக் அரசு மட்டும் சட்டம் இயற்றுதலும் முடியாது.ஆனால் சுயக் கட்டுபாடும் அவசியம். திரட்டிகள் ஒரு அள்விற்கு இந்த கட்டுப் பாடு அமல் படுத்தினாலும்,இலவசமாக இச்சேவை தரும் திரட்டிகளில் இக்கண்காணிப்பு நேரம்,பொருள் தேவையையே ஏற்படுத்தும்.
மத அவதூறு என்பதும் ஒவ்வொருவரின் பார்வை வித்தியாசப்படும், அண்ணன் உண்மை அவர்கள் திரு ராம் ஜேத்மலானி இராமன் நல்ல கண்வன் அல்ல எனக் கூறினார் என்றதும் மகிழ்ச்சியில் அதை வெட்டி ஒட்டும் வேலையை செவ்வனே செய்கிறார். இதே போல் என்னாலும் காட்ட முடியும் என்றாலும் ஏதெனும் விவாதத்தில் மிக அவசியம் என்றால் மட்டுமே செய்வது உண்டு.
இன்னும் சில மத விவாதங்களின் சாரம் என்ன என்பதையும் அறிவோம்.ஆகவே இணைய கட்டுபாட்டு வரையறை என்பது மிக மிக சிக்க்லான விடயம். தவறாக பயன்படுத்தும் சாத்தியமே அதிகம்.
கூடுமானவரை சுயக் கட்டுபாட்டுடன் எழுதலாம், ஒருவேளை மாற்றுக் கருத்து வந்தால் விளக்கம் அளிக்கலாம்,சுமுகத் தீர்வு வரவில்லை எனில் திரட்டி அப்பதிவின் மீது முடிவு எடுக்கலாம்.புகார்,காவல்துறை,நீதிமன்றம் என்பது நம்து நாட்டில் என்ன நடக்கும் என்பதும் அறிந்த விடயம்தானே!!!
மற்றபடி கூகிள்,ஃபேஸ் புக்,ட்விட்டர் போன்றவையும் சர்ச்சைக்குறிய சில விடயங்களின் மேல் நீக்கி நடவடிக்கை எடுக்கின்றன.ஆகவே அரசு சார் கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதன் வரையறை என்ன??
நன்றி
சலாம் சகோ சார்வாகன்!
ReplyDelete//கூடுமானவரை சுயக் கட்டுபாட்டுடன் எழுதலாம், ஒருவேளை மாற்றுக் கருத்து வந்தால் விளக்கம் அளிக்கலாம்,சுமுகத் தீர்வு வரவில்லை எனில் திரட்டி அப்பதிவின் மீது முடிவு எடுக்கலாம்.புகார்,காவல்துறை,நீதிமன்றம் என்பது நம்து நாட்டில் என்ன நடக்கும் என்பதும் அறிந்த விடயம்தானே!!!//
நானும் இதைத்தான் சொல்கிறேன். எழுதும் பதிவர்களிடம் சுய கட்டுப்பாடு அவசியம். பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் அல்லது ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். பதிவர்கள் சரியாகி விட்டால் அரசுக்கு வேலை மிச்சம் என்பதே எனது நிலைப்பாடு.
சலாம் ,.
ReplyDelete//இணைய கட்டுபாட்டு வரையறை என்பது மிக மிக சிக்க்லான விடயம். தவறாக பயன்படுத்தும் சாத்தியமே அதிகம்.//
ஒரு முஸ்லிம் என்றால் அவருக்கு குர்ஆன், ஹதீஸ் மேற்கோள் காட்டலாம்..முஸ்லிம் அல்லாதோருக்கு...?
எம்ஜியார் பாடினார் அல்லவா ..! திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...!!!
தனக்கு தானே பாட்டத்தில் பாம் வைத்துக்கொள்வோரை யாராலும் தடுக்க முடியாது...அவர்களை தவிர.. !!!
நன்றி !!!
சகோ.சுவனப்பிரியன்!பொது தளத்தில் மதம் குறித்த கருத்துக்கள் வருவதால் அதை சார்ந்தும்,வெட்டியும் கருத்துக்கள் வருகின்றன.இதற்கான விதைகளை உங்களைப் போன்றவர்களே முதலில் தூவினீர்கள்.அதற்காக எதிர் வாதம் என்ற பெயரில் மதம் குறித்த விமர்சனங்களும் உருவாகின.
ReplyDeleteஇணையத்தில் மதம் தேட வேண்டுமென்று விருப்ப படுவர்களுக்கு நிறைய தகவல்கள் இருக்கின்றன.வேண்டுமென்பவர்கள் தேடிக்கண்டு பிடித்துக்கொள்ளட்டுமே!ஆனால் பதிவுகளில் மதம் பரப்பல் எதிர்வினைகளையே இறுதியில் கொண்டு வருமென நினைக்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் அரேபிய நாடுகளே மதத்தை பின் தள்ளி சமூகம்,அரசியல் சார்ந்த மாற்றங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டிருக்கின்றன.
அரசியல் குறித்த விமர்சனங்கள் வரும் நிலையிலேயே ஆட்டையப் போடும் அரசியல்வாதிகள் கருத்து வெளிப்பாடுகள் இல்லாமல் போனால் அவ்வளவுதான்.
ரவி சீனிவாசன் தனது பாலோயர்களுக்கென்றே ட்விட் செய்துள்ளார்.அதுவும் கூட முன்பு சுப்ரமணியன் சாமி பொதுவில் வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில்.மேலும் இப்பொழுது ஊழல் குறித்தும்,அரசியல்வாதிகள் குறித்தும் விசில்புளோயர்கள் பெரும் கார்பரேட்டுகளும்,அரசியல்வாதிக்கு எதிர் அரசியல்வாதிகளும்,ஊடக வலு கொண்ட அமைப்புகளுமே.ரவி சீனிவாசன் பொதுவில் இருக்கும் குற்றச்சாட்டை திரும்ப ட்விட்டுனதே சொன்னதே அவரது குற்றம்.
பிபிசி தொடுப்புக்கு நன்றி.
சகோ.சுவனப்பிரியன்!பொது தளத்தில் மதம் குறித்த கருத்துக்கள் வருவதால் அதை சார்ந்தும்,வெட்டியும் கருத்துக்கள் வருகின்றன.இதற்கான விதைகளை உங்களைப் போன்றவர்களே முதலில் தூவினீர்கள்.அதற்காக எதிர் வாதம் என்ற பெயரில் மதம் குறித்த விமர்சனங்களும் உருவாகின.
ReplyDeleteஇணையத்தில் மதம் தேட வேண்டுமென்று விருப்ப படுவர்களுக்கு நிறைய தகவல்கள் இருக்கின்றன.வேண்டுமென்பவர்கள் தேடிக்கண்டு பிடித்துக்கொள்ளட்டுமே!ஆனால் பதிவுகளில் மதம் பரப்பல் எதிர்வினைகளையே இறுதியில் கொண்டு வருமென நினைக்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் அரேபிய நாடுகளே மதத்தை பின் தள்ளி சமூகம்,அரசியல் சார்ந்த மாற்றங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டிருக்கின்றன.
அரசியல் குறித்த விமர்சனங்கள் வரும் நிலையிலேயே ஆட்டையப் போடும் அரசியல்வாதிகள் கருத்து வெளிப்பாடுகள் இல்லாமல் போனால் அவ்வளவுதான்.
ரவி சீனிவாசன் தனது பாலோயர்களுக்கென்றே ட்விட் செய்துள்ளார்.அதுவும் கூட முன்பு சுப்ரமணியன் சாமி பொதுவில் வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில்.மேலும் இப்பொழுது ஊழல் குறித்தும்,அரசியல்வாதிகள் குறித்தும் விசில்புளோயர்கள் பெரும் கார்பரேட்டுகளும்,அரசியல்வாதிக்கு எதிர் அரசியல்வாதிகளும்,ஊடக வலு கொண்ட அமைப்புகளுமே.ரவி சீனிவாசன் பொதுவில் இருக்கும் குற்றச்சாட்டை திரும்ப ட்விட்டுனதே சொன்னதே அவரது குற்றம்.
பிபிசி தொடுப்புக்கு நன்றி.
சகோ ராஜ நடராஜன்!
ReplyDelete//.இதற்கான விதைகளை உங்களைப் போன்றவர்களே முதலில் தூவினீர்கள்.அதற்காக எதிர் வாதம் என்ற பெயரில் மதம் குறித்த விமர்சனங்களும் உருவாகின. //
இதுவே முதலில் தவறு. நேசகுமார் முதன் முதலில் இஸ்லாத்தை விமரிசிக்க ஆரம்பித்த போது இந்த அளவு மத சம்பந்தமான பதிவுகளை இஸ்லாமியர்கள் எழுதவில்லை. ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இணையம் முழுக்க இஸ்லாத்தை பற்றிய தவறான செய்திகளையே திட்டமிட்டு பரப்பி வந்தனர். இதை எல்லாம் பார்த்த பிறதான் என்னைப் போன்றவர்கள் அதற்கு விளக்கம் கொடுக்க முற்பட்டோம். இந்த பதில்களினால் முன்பு எழுதியவர்கள் எந்த அளவு பொய்களை எழுதினார்கள் ன்பதை நடுநிலையாளர்கள் கண்டு கொண்டனர்.
இஸ்லாத்தை விமரிசிக்கப் போய் முடிவில் நேசகுமாருக்கு இஸ்லாமிய பழக்க வழக்கங்களின் மேல் ஒரு ஈர்ப்பு வந்ததாக அவரே முன்பு சொல்லியிருக்கிறார். :-) இன்று அவரையும் காணோம். அவரது எதிரப்பு எழுத்துக்களையும் காணோம்.
//இன்றைய காலகட்டத்தில் அரேபிய நாடுகளே மதத்தை பின் தள்ளி சமூகம்,அரசியல் சார்ந்த மாற்றங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டிருக்கின்றன.//
இதுவும் தவறான தகவல். எந்த அரபு நாடு எங்களுக்கு இஸ்லாமிய சட்டம் தேவையில்லை என்று சொன்னது? இதைத்தான் அவதூறு என்கிறோம். :-(
நீங்கள் மதம் வேண்டாம் என்றாலும் உங்களை அது விடாது. எனவே மதத்தை நமது நாட்டின் முன்னேற்றத்துக்கும், மனித குல முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையில் பயன் படுத்தி நமது வாழ்நாளை எவருக்கும் துன்பம் தராமல் கழிக்க முயற்சிக்க வேண்டும்.
//அரசியல் குறித்த விமர்சனங்கள் வரும் நிலையிலேயே ஆட்டையப் போடும் அரசியல்வாதிகள் கருத்து வெளிப்பாடுகள் இல்லாமல் போனால் அவ்வளவுதான்.//
அதனையே உரிய ஆதாரத்தோடு வெளியிடுங்களேன்.
சகோ சார்வாகன்!
ReplyDelete//உலகே இஸ்லாமிய மயமாக் வேண்டும் என்பது தோன்றிய காலம் முதல் இன்றைய சுவனப் பிரியனின் இலட்சியமாக் இருக்கும் போது அதற்கு ஜின்னாவும் விதி விலக்கு இல்லையே. ஆகவே இது முஸ்லிம்களின் சதி அல்ல அல்லாவின் கட்டளை.ஆகவேதான் நாம் எபோதும் முஸ்லிம்களை விமர்சிப்பது இல்லை.மதம் கொள்கை சார்ந்தே விமர்சிக்கிறோம்.//
இது குர்ஆன் இடும் கட்டளை அல்ல. நமது சகோதரர்களின் நலனுக்காக நானாக விரும்பி எடுத்த முடிவு.
'இம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'
-குர்ஆன். 2:256
இந்த வசனத்தின் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள எந்த வற்புறுத்தலும் கூடாது என்கிறது இஸ்லாம். 'இது தவறு. இது சரி' என்று நமது நண்பர்களுக்கு எடுத்து சொல்லலாம். அவர் ஏற்றுக் கொள்வதும் ஏற்காமல் இருப்பதும் இறைவன் புறத்திலும் அந்த மனிதரின் தனிப்பட்ட விருப்பத்திலும் உள்ளது.
இதற்காக திட்டமிட்டு இதே வேலையாக இருக்க வேண்டும் என்று குர்ஆன் எங்களுக்கு கட்டளையிடவும் இல்லை. இஸ்லாமிய ஆட்சியை அமைப்பது என்பதும் குர்ஆனின கட்டளை அல்ல. பலரால் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
சலாம் அண்ணன்...
ReplyDeleteகட்டுப்பாடு தேவையா இல்லையான்னு குழப்பமா இருக்கு... இங்க இருக்க பலர் எழுதிறத பார்த்தா கட்டுப்பாடு தேவை தான் போல் தெரிகிறது.. பொதுவில் ஆபாசாமா எழுதுராங்க..கொஞ்சம் கூட சுய கட்டுப்பாடு இல்ல... என்னமோ இவனுகளுக்கு மட்டும் தான் கெட்ட வார்த்தை தெரியிற மாதிரியும், ஆபாச எழுத்துக்கள் வர்ற மாதிரியும் எழுதுறாங்க.... இந்த மாதிரி ஆட்களுக்கு நிச்சயம் கட்டுப்பாடு போட்டு தான் ஆகணும்
அதே சமயம், ஆழகிய முறையில் விவாதிக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்கள்.. கட்டுப்பாடு வந்தா அப்புறம் போலீஸ் கை ஓங்கிடும்... இவங்களுக்கு பாதிப்பு வரக்கூடாது..
சோ, ஒரு சங்கம் மாதிரி வைக்கலாம்.. பட் அந்தச் சங்கம் பொறம்போக்கு தனமா எழுதுறவனுகளுக்கு உதவக் கூடாது.. பிரச்சனை வந்தா அவனுகளே சமாளிச்சிகட்டும்னு விட்டுடனும்.. ஆனால் கண்ணியமா எழுதுறவங்களுக்கு பிரச்சனைனா களம் இறங்கணும்..அப்படி இருந்தா சங்கம் சாத்தியம்.. இதான் என் கருத்து...
விஸ்வரூபம் படத்தை முஸ்லீம்களிடம் காட்டி விட்டு கமல் வெளியிடட்டும்- தமுமுக
ReplyDeletePublished: Saturday, November 10, 2012, 10:32 [IST]
Posted by: Sudha
சென்னை: விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய மக்களிடமும், அமைப்புகளிடமும் முதலில் காட்டி விட்டே அந்தப் படத்தை கமல்ஹாசன் வெளியிட முன்வர வேண்டும்.
அந்தப் படம் குறித்து வெளியாகும் தகவல்கள் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான ரிபாயி விடுத்துள்ள அறிக்கையில்,
பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார்.
அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
பிழைப்புக்காக இஸ்லாமியர்களை குற்றவாளியாக்குகின்றனர்
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள்.
அமெரிக்கா -இஸ்ரேலைக் கண்டிக்கத் தைரியமில்லை
ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ,
60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை.
குஜராத் அவலத்தை தோலுரிக்க தைரியமில்லை
இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை.
எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.
ஜெ.வை. கமல் சந்தித்தது ஏன்?
கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதல்வ ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.
இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதா என்று அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களும் கமல்ஹாசனிடமே நேரடியாக கேட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து கமல்ஹாசன் பதிலளித்தார்.
இந்த நிலையில் தமுமுக கமல்ஹாசனுக்கு இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது.
SOURCE: http://tamil.oneindia.in/movies/news/2012/11/tmmk-s-appeal-kamal-hassan-164460.html
சலாம் சகோ சிராஜ்!
ReplyDelete//அதே சமயம், ஆழகிய முறையில் விவாதிக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்கள்.. கட்டுப்பாடு வந்தா அப்புறம் போலீஸ் கை ஓங்கிடும்... இவங்களுக்கு பாதிப்பு வரக்கூடாது..
சோ, ஒரு சங்கம் மாதிரி வைக்கலாம்.. பட் அந்தச் சங்கம் பொறம்போக்கு தனமா எழுதுறவனுகளுக்கு உதவக் கூடாது.. பிரச்சனை வந்தா அவனுகளே சமாளிச்சிகட்டும்னு விட்டுடனும்.. ஆனால் கண்ணியமா எழுதுறவங்களுக்கு பிரச்சனைனா களம் இறங்கணும்..அப்படி இருந்தா சங்கம் சாத்தியம்.. இதான் என் கருத்து...//
உங்கள் கருத்தை முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன். ஒரு சங்கம் இருப்பது அவசியம். அதற்கான முயற்சிகளில இறங்கினால் எனது ஆதரவும் கண்டிப்பாக உண்டு.