Wednesday, December 19, 2012

டெல்லி கற்பழிப்புகள் தொடராமல் இருக்க என்ன வழி?

டெல்லி கற்பழிப்புகள் தொடராமல் இருக்க என்ன வழி?

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, 23 வயது மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது. இதில் இரு அவைகளில் பெண் எம்.பி.க்கள் கொந்தளித்து போயினர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசத்துடன் பேசினர். நேற்று காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. ‌எனினும் முக்கிய பிரச்னையாக டில்லி கற்பழிப்பு சம்பவம் குறி்த்து எம்.பி.க்கள் பேசினர்.

ஜெயா பச்சன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கணம் விக்கித்து நின்று கண் கலங்கி விட்டார். இந்த சபையில் நின்று பேசவே வெட்கப்படுவதாகவும் சொன்னது அனைவரையும் உலுக்கி விட்டது. சுஷ்மா சுவராஜ் ஒரு படி மேலே போய் அவர்களை தூக்கில் இட வேணடும் என்று கோரிக்கை வைத்தார். அந்த குற்றவாளியின் தந்தையும் அந்த கயவனை தூக்கில் இட்டாலும் பரவாயில்லை என்று சொல்லியுள்ளார். இந்த மிருகங்களுக்கு உச்சபட்ச தண்டனை எதுவோ அதனை அரசு கொடுக்க வேண்டும்.

இந்நிலையில் நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..



அஸ்ஸாமில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை இந்த காணொளி விவரிக்கிறது. இவ்வளவு தெளிவாக ஆதாரம் கிடைத்தும் சம்பந்தப்பட்ட குண்டர்களை இந்த அரசு என்ன செய்திருக்கும்? இந்த அளவு பத்திரிக்கைகள் அந்த செய்தியை பிரபல்யப்படுத்தியிருக்குமா என்பது கேள்விக் குறியே? இது போன்று இரு அளவு கோல்களை நாம் கடைபிடிப்பது சமூகத்தில் முதலில் மாற வேண்டும்.

நீதியதி மார்க்கண்டேய கட்ஜூ

சம்பவம் குறித்து மார்கண்டேய கட்ஜூ கூறுகையில், "டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்திற்காக, பார்லிமென்ட்டிலும், நாட்டிலும் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள், கண்டனக்குரல்கள், இதே விஷயம் இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் நடக்கும் போது ஏன் எழுப்பப்படுவதில்லை. டில்லி மட்டுமே இந்தியா அல்லவே.

விதர்பா, ஆந்திரா ஆகிய இடங்களில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையில் நாடு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நான் பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தவில்லை. இந்திய தண்டனை சட்டம் 376ன் படி பாலியல் பலாத்காரத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் ஏன் மரண தண்டனை வேண்டும் என கேட்கிறார்கள் என்பது எனக்கு புரிய வில்லை. அதே நேரத்தில் இது மட்டுமே நாட்டின் பிரச்னை அல்ல. இந்தியாவில் அனைத்து பிரச்னைகளுக்கு ஒரே சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் எவ்வளவோ பேர் நாட்டில் உள்ளார்கள். விலைவாசி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கும் இதே போன்ற முக்கியத்துவத்தை அளித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட வேண்டும்" என தெரிவித்தார்.

சபாஷ் கட்ஜூ! உங்களைப் போன்றவர்கள்தான் தற்போது இந்த நாட்டுக்கு தேவை. தினம் தினம் இந்தியாவின் கிராமப்புறங்களில் எத்தனையோ இளம் பெண்கள் கற்பழிப்புக்கும், தீண்டாமைக்கும் உள்ளாகி தினம் செத்து மடிகின்றனர். அங்கெல்லாம் செல்லாத அல்லது கண்டு கொள்ளாத மீடியாக்கள் டில்லியை மட்டும் ஏன் முன்னிலைப் படுத்த வேண்டும்? டெல்லி மட்டும் தான் இந்தியாவா? இங்கு காட்டும் அக்கறையில் பாதியையாவது கிராமப் பகுதிகளிலும் காட்டினால் நமது நாடு என்றோ நிமிர்ந்திருக்கும்.

இதில் மற்றொரு புறத்தையும் நாம் பார்க்க வேண்டும். இரவு 11 மணிக்கு தன்னந்தனியாக வேறொரு ஆடவனுடன் அந்த பெண் ஏன் ஊர் சுற்ற வேண்டும். கேட்டால் காதல் கத்தரிக்காய் என்று சொல்வீர்கள்? தற்போது அந்த மாணவியின் நிலைக்கு யார் பொறுப்பேற்பது? பெற்றவர்களும் வயது வந்த பெண்ணைப் பற்றி எந்த கவலையும் படாமல் தண்ணி தெளித்து விட்டு விடுவதும் முக்கிய காரணம். மேலும் இளம் பெண்கள் சினிமா நடிகைகளைப் பார்த்து அது போன்று உடை அணிய ஆரம்பித்ததும் ஒரு காரணமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் கண்ணியமாக உடை அணிந்து தக்க பாதுகாப்புடன் தந்தை அண்ணன் போன்றவர்களுடன் சென்றால் தவறு செய்ய எவருக்கும் துணிவு வராது. எனவே கூடிய வரை பெண்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் கண்டவனுடன் ஊர் சுற்றாமல் கண்ணியமான உடை அணிந்து தக்க பாதுகாப்போடு வெளியே வந்தால் 90 சதவீதமான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.


தலை அலங்காரம் தேவைதான். அதற்காக இப்படியா பயமுறுத்தறது......

தாய்மை இழிவாக்கப்பட்டால் அந்த சமூகமே இழிவாகி விடும். எனவே தங்களின் பொருப்புணர்ந்து பெண்களும் நடந்து கொள்வார்களாக!

இது போன்ற பாலியல் குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதனை இந்த சம்பவத்துக்கு பிறகாவது நமது பாராளுமன்றம் பரிசீலனக்கு எடுத்துக் கொள்கிறதா என்று பார்ப்போம்.

----------------------------------------------------


(சீரியஸான பதிவை படிச்சுட்டு அதே சீரியஸோட போனா எப்புடீ....அதான் கொஞ்சம் தமாசுக்கு.....)


23 comments:


  1. சபாஷ் கட்ஜூ! உங்களைப் போன்றவர்கள்தான் தற்போது இந்த நாட்டுக்கு தேவை. தினம் தினம் இந்தியாவின் கிராமப்புறங்களில் எத்தனையோ இளம் பெண்கள் கற்பழிப்புக்கும், தீண்டாமைக்கும் உள்ளாகி தினம் செத்து மடிகின்றனர். அங்கெல்லாம் செல்லாத அல்லது கண்டு கொள்ளாத மீடியாக்கள் டில்லியை மட்டும் ஏன் முன்னிலைப் படுத்த வேண்டும்? டெல்லி மட்டும் தான் இந்தியாவா? இங்கு காட்டும் அக்கறையில் பாதியையாவது கிராமப் பகுதிகளிலும் காட்டினால் நமது நாடு என்றோ நிமிர்ந்திருக்கும்.

    இதில் மற்றொரு புறத்தையும் நாம் பார்க்க வேண்டும். இரவு 11 மணிக்கு தன்னந்தனியாக வேறொரு ஆடவனுடன் அந்த பெண் ஏன் ஊர் சுற்ற வேண்டும். கேட்டால் காதல் கத்தரிக்காய் என்று சொல்வீர்கள்? தற்போது அந்த மாணவியின் நிலைக்கு யார் பொறுப்பேற்பது? பெற்றவர்களும் வயது வந்த பெண்ணைப் பற்றி எந்த கவலையும் படாமல் தண்ணி தெளித்து விட்டு விடுவதும் முக்கிய காரணம். மேலும் இளம் பெண்கள் சினிமா நடிகைகளைப் பார்த்து அது போன்று உடை அணிய ஆரம்பித்ததும் ஒரு காரணமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் கண்ணியமாக உடை அணிந்து தக்க பாதுகாப்புடன் தந்தை அண்ணன் போன்றவர்களுடன் சென்றால் தவறு செய்ய எவருக்கும் துணிவு வராது. எனவே கூடிய வரை பெண்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் கண்டவனுடன் ஊர் சுற்றாமல் கண்ணியமான உடை அணிந்து தக்க பாதுகாப்போடு வெளியே வந்தால் 90 சதவீதமான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.//சபாஷ் சகோ சுவனப்பிரியன்

    நான் நினைச்சதெல்லாம் நீங்க சொல்லிட்டீங்க சகோதரரே...மிக்க நன்றி..

    ReplyDelete
  2. That's y Islam offers and order to wear hijab.. Those who are telling Hijab is a symbol of Slave, must think now.

    That's y Islam not allowed for girls to go outside without allowable gents.

    ReplyDelete
  3. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    இந்த காம கொடூரர்களுக்கு இஸ்லாம் குறிப்பிட்டது போல் கல்லெறி தண்டனை கொடுத்து மரண தண்டனை நிறைவேற்றப் படவேண்டும்.அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்களை மறுபடியும் நிகழாமல் பார்த்து கொள்ள முடியும்.குற்றங்களை குறைக்க இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனை மட்டும் தான் ஒரு சிறந்த தீர்வு.

    ReplyDelete
  4. ஏன் சு.பி சாமியாரே, குஜராத்தில மோடி அமோக வெற்றியாமே.... :) மோடி வர்றதுக்கு முன்னமே குயராத் ஏதோ பெரிசா அபிவிருத்தி அடைஞ்சு தான் இருந்துது.... மோடியால எதுவுமே நடக்கேல்ல எண்டு காட்டுக் கத்தல் கத்தினின்களே இப்போ என்ன சொல்றீங்க...? எதுக்கு மூணாவது முறையா தொடர்ந்து மோடியை முதல்வராகியிருக்காங்க...? மோடி பிரதமராக வந்தால் தான் இந்தியா கொஞ்சமாச்சும் உருப்படும்..... நீங்கள் கடைசி வரை முக்கிக்கொண்டே இருக்கவேண்டியது தான்... :)

    ReplyDelete
  5. அஸ்ஸாம் ஆதிவாசிகளின் நிலை இன்னொரு பூலான் தேவியை நினைவுறுத்துகிறது....ஃபாஸிஸத்துக்கு எல்லையற்ற சுதந்திரம் வளர்ந்து கொண்டேயுள்ளது..... :(

    ReplyDelete
  6. நண்பரே ஏன் இந்த இரட்டை வேடம். நபியைப்பற்றி கேள்வி வந்தால் வெளியிட மாட்டேங்களே

    ReplyDelete
  7. ஜெய்சங்கர்!

    //நண்பரே ஏன் இந்த இரட்டை வேடம். நபியைப்பற்றி கேள்வி வந்தால் வெளியிட மாட்டேங்களே//

    முகமது நபி அன்னை ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார், அதனால் இஸ்லாமிய சமூகத்துக்கு எவ்வளவு சிறப்பான சட்டங்க்ள் கிடைத்தன என்பதை எல்லாம் முன்பே விரிவாக விளக்கியாகி விட்டது. எனவேதான் வெளியிடவில்லை.

    அது ஒரு புறம் இருக்கட்டும். நடமாடும தெய்வம் என்று போற்றப்பட்ட ஒரு சாமியார் அனுராதா ரமணன், ஒரு சினிமா நடிகை போன்றவர்களோடு செய்த லீலைகளை எல்லாம் பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக போட்டதே. கொலைக் குற்றம் கூட சாட்டப்பட்டதே! அவர் இன்றும் உங்களுக்கு நடமாடும் தெய்வம்தானே! :-) மறுக்க முடியுமா. இந்த உறவானது திருமணம் அல்லாது வலுக்கட்டாயப் படுத்தப் பட்டது. இன்னும் நித்தியானந்தா கதை பாக்கியிருக்கிறது. சதுர்வேதி, பிரேமானந்தா என்று ஒரு பெரும் லிஸ்டே இருக்கிறது. கண்ணியம் கருதி அதனை வெளியிடவில்லை. எனவெ எதையும் எழுதுவத்றகு முன் யோசித்து விட்டு இனி எழுதவும்.

    ReplyDelete
  8. திரு தேன் மதுரன்!

    //ஏன் சு.பி சாமியாரே, குஜராத்தில மோடி அமோக வெற்றியாமே.... :) மோடி வர்றதுக்கு முன்னமே குயராத் ஏதோ பெரிசா அபிவிருத்தி அடைஞ்சு தான் இருந்துது.... மோடியால எதுவுமே நடக்கேல்ல எண்டு காட்டுக் கத்தல் கத்தினின்களே இப்போ என்ன சொல்றீங்க...? எதுக்கு மூணாவது முறையா தொடர்ந்து மோடியை முதல்வராகியிருக்காங்க...? மோடி பிரதமராக வந்தால் தான் இந்தியா கொஞ்சமாச்சும் உருப்படும்..... நீங்கள் கடைசி வரை முக்கிக்கொண்டே இருக்கவேண்டியது தான்... :)//

    முஸ்லிம்களை எதிர்த்துக் கொண்டு இனி அரசியலில் நெடுங்காலம் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்து தான் இந்த முறை பிரசாரத்துக்கு துணையாக இர்ஃபான் பதான் என்ற முஸ்லிமை துணைக்கழைத்துக் கொண்டு பிரசாரத்தில் சுற்றியது. இந்துத்வா இந்த நாட்டுக்கு எதிராக செய்த தகிடுதத்தங்கள் ஒவ்வnhன்றாக வெளி வருகிறது. எனவே இனி இந்துத்வாவை கைகழுவவே மோடி நினைப்பார். இஸ்லாமியர்களை இனி அரவணைக்க முயல்வார். அதுதான் அவருக்கும் நல்லது.

    யார் வந்தாலும் நாட்டு மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு வேண்டியது.

    ReplyDelete
  9. சகோ ஆஷா ஃபர்வீன்!

    //நான் நினைச்சதெல்லாம் நீங்க சொல்லிட்டீங்க சகோதரரே...மிக்க நன்றி..//

    பின்பற்றுவது ஒரே தலைவரை: பின்பற்றும் மார்க்க நூல் குர்ஆன்: வணங்குவது ஏக இறைவனை: இப்படி பல ஒற்றுமைகள் மூஃமின்களுக்குள் இருக்கும் போது எண்ணமும் ஒத்ததாகவே வரும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. சகோ அன்னு உம்மு உமர்!

    //அஸ்ஸாம் ஆதிவாசிகளின் நிலை இன்னொரு பூலான் தேவியை நினைவுறுத்துகிறது....ஃபாஸிஸத்துக்கு எல்லையற்ற சுதந்திரம் வளர்ந்து கொண்டேயுள்ளது..... :(//

    இவர்கள் இதை எல்லாம் நேக்காமல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று எல்லை கடந்து சென்று அங்கு எங்கோ ஓர் மூலையில் நடக்கும் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு நிகழ்வை கொண்டு வந்து 'பார்த்தீர்களா இஸ்லாம்' என்பார்கள். இதுதான் இது வரை நடந்து வருகிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  11. திரு ராம்!

    //தமிழக அரசு கெஜட்டை இணையத்தில் (http://www.tn.gov.in/stationeryprinting/gazette ) ‘பார்வையிட்டேன்’. இந்த வருடம் (2012), வாரத்திற்கு ஒன்றாக 47 கெஜட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
    இந்த கெஜட்டுகளை டவுன்லோட் செய்து கணக்கிட்டபோது (using simple tools like grep) கிடைத்த மதம் மாறியோரின் எண்ணிக்கை :
    இஸ்லாமிற்கு மாறியவர்கள் : 1536
    கிருஸ்துவத்திற்கு மாறியவர்கள் : 1236
    இந்துவாக மாறியவர்கள் : 662
    புத்த மதத்திற்கு மாறியவர்கள் : 49//

    //இது இருக்கட்டும், ஒரு முஸ்லிம் முதலில் முஸ்லிம் , பிறகுதான் இந்தியன் என்பது உண்மையா? உங்களவில் எப்படி?//

    ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.
    - நூல்: அஹ்மத்

    ஒரு முஸ்லிம் எனது தாய் நாடான இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் அவனுக்கு நான் உதவி செய்தால் நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறேன் என்பது இந்த நபி உணர்த்துகிறது.

    அல்குர்ஆன் 28வது அத்தியாயம் 8வது வசனத்தில்

    “முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.”

    என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

    வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?

    'எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.'

    குர்ஆன் 22:40

    பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவ தற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது

    எனவே சமூக நல்லிணக்கம் இஸ்லாத்தின் ஒரு பகுதியாகவே உள்ளதால் தான் பிறந்த நாட்டை நேசிப்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமை என்பதை உணர வேண்டும். அதே நேரம் தனது தாய் நாட்டின் ஆட்சியாளர் நீதி தவறி தவறான வழியில் சென்றால் அதை தட்டிக் கேட்பதிலும் முதல் ஆளாக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். அந்த எதிர்ப்பையும் அஹிம்சையான முறையில் போராட்டங்கள் மூலம் வென்றெடுக்க வேண்டும். எந்த வகையிலும் தனி ஒரு மனிதன் ஆயும் ஏந்த இஸ்லாம் அனுமதிக்க வில்லை.

    ReplyDelete
  12. ///எனவே இனி இந்துத்வாவை கைகழுவவே மோடி நினைப்பார். இஸ்லாமியர்களை இனி அரவணைக்க முயல்வார். அதுதான் அவருக்கும் நல்லது/// இதை நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன்.... அதைத் தான் அவர் கடந்த ஒரு தசாப்த காலமாகவே செய்து வருகின்றார்.... குஜராத்தை அமைதிப் பூங்காவாக்கியதில் மோடியின் பங்கு அளப்பரியது.....

    ReplyDelete
  13. Anonymous7:10 AM

    "குஜராத்தை அமைதிப் பூங்காவாக்கியதில் மோடியின் பங்கு அளப்பரியது"

    சகோ தேன்மதுரன் உங்கள் காமெடியை ரசித்தேன்.
    kalam.

    ReplyDelete
  14. சங்கராச்சாரியார் மனிதன். மனிதன் தவறு செய்வான். ஆனால் நபியின் ஆல்டர் ஈகோ தான் அல்லா. அதை ஏன் ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்?

    ReplyDelete
  15. //அதனால் இஸ்லாமிய சமூகத்துக்கு எவ்வளவு சிறப்பான சட்டங்க்ள் கிடைத்தன என்பதை எல்லாம் முன்பே விரிவாக விளக்கியாகி விட்டது. எனவேதான் வெளியிடவில்லை.//
    லிங்க தர இயலுமா?

    ReplyDelete
  16. //லிங்க தர இயலுமா?//

    உங்கள் புரிதல் எந்த அளவு தவறானது என்பதை அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஆதாரபூர்வமான ஹதீதைப் பார்த்து தெளிவு பெறுங்கள்:

    இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:


    “அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.


    முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.


    இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.


    மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.


    நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.


    இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.


    சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

    ReplyDelete
  17. Anonymous7:54 AM

    டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:
    இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.
    நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம். - இரவீந்திரநாத் தாகூர்
    -Viduthalai
    27-04-2012

    ReplyDelete
  18. //லிங்க தர இயலுமா?//

    http://suvanappiriyan.blogspot.com/2011/11/blog-post_20.html

    http://www.ethirkkural.com/2010/11/blog-post.html

    http://onlinepj.com/books/kapsa_nilaikuma/

    ReplyDelete
  19. திரு தங்கமணி!

    //சுவனப்பிரியனுக்கு புரியவில்லை என்பதால் மீண்டும்.
    இது வரதட்சிணை அல்ல. மெஹர். பெண்ணுக்கு ஒரு ஆண் கொடுக்கவேண்டிய பணம். அதனை ஆப்கானிஸ்தானில் வால்வார் என்று அழைக்கிறார்கள். ஆகையால் இது நிச்சயம் இந்துக்களிடமிருந்து வந்திருக்கமுடியாது.//

    ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து தன்னை நபி அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி கேட்டார்கள். அதற்கு அவர் 'இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார். அதற்கு நபி அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள்.
    லஹ்ல் பின் ஸஃது அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஆதாரபூர்வமான நபி மொழியாகும் இது.

    இங்கு மஹர் என்பது திருமணம் முடிக்கப் போகும் ஆணிண் பொருளாதாரத்தை ஒத்து உள்ளதை கவனிக்கவும். ஒரு ஆணுக்கு வசதி இல்லை என்றால் சில குர்ஆன் வசனங்களையாவது மஹராக தந்து திருமணம் முடிக்க நபி மொழி வழி காட்டுகிறது. எனவே ஆப்கானிஸ்தானிலும், சவுதி அரேபியாவில் ஆடம்பர மோகத்தினால் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். இஸலாம் மிக எளிய வழியை காட்டித்தர ஏன் இந்த வரட்டு ஆடம்பரம்.

    எனவே தவறு இஸ்லாமிய சட்டத்தில் இல்லை. அதனை தவறாக புரிந்து கொண்ட முஸ்லிம்களிடத்தில் உள்ளது.

    ReplyDelete
  20. இதே போல் மஹர் தொகை பெண்கள் அதிகமாக கேட்டு ஆண்கள் சிரமப்படும் நிலை முன்பும் இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட ஜனாதிபதி உமர் அவர்கள் ஒரு கமிடடியை அமைத்து ஆலோசனை நடத்தினார்.

    உமர் அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள். மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். உடனே ஒரு மூதாட்டி, “”உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

    அம்மூதாட்டி “”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20 வது வசனத்தை நினைவூட்டினார்கள்.
    கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.

    இந்த வரலாற்று சம்பவத்தின் மூலம் பல உண்மைகள் தெரிய வருகிறது. பெண்கள் அன்று மமூதிக்கு அதிகம் வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு ஜனாதிபதியையே எல்லோர் முன்னிலையிலும் கேள்வி கேட்கும் அளவுக்கு பெண்களின் சுதந்திரம் இருந்தது. தன்னையே கேள்வி கேட்ட அந்த பெண்ணை தண்டிக்காது தக்க நேரத்தில் உண்மையை உணர்த்தியதற்காக மூதாட்டியை பாராட்டியதையும் பார்க்கிறோம். இஸ்லாமிய ஜனாதிபதிகள் அந்த அளவு மக்களை மதிப்பவர்களாக இருந்தனர்.

    ReplyDelete
  21. ஸ்மிதா!

    //But how many Godhras have hindus silently suffered? Do you know how many persons (predominantly hindus) lost their lives during 13 bomb blasts in a single day in Coimbatore?//

    கோயமுத்தூர் கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் 18 பேரை போலீஸே சுட்டு கொன்றதால்தான் அதற்கு பதிலடியாக கோவை குண்டு வெடிப்பு நடந்தது. ஆனால் அதனை முஸ்லிம்களே கண்டித்தனர். யாரோ செய்த தவறுக்கு அப்பாவி மக்களை கொன்றதை பல இஸ்லாமிய இயக்கங்களும் கண்டித்தன. குற்றவாளிகள் தண்டனையும் பெற்று வருகிறார்கள் இன்று வரை.

    அதே நேரம் மாலேகானிலிருந்து சம்ஜோதா எகஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை முஸ்லிம்களை கைது செய்தீர்க்ள. இறந்தது முஸ்லிம்கள். கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்கள். முடிவில் குற்றவாளிகள் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அசீமானந்தா வாக்கு மூலத்தின் படி இன்று அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணமான இந்துத்வாவினர் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இரண்டு நாள் முன்பு வரை இந்த கைது படலம் தொடர்கிறது. இதற்கு முன்னால் சந்தேகத்தில் பிடித்து செல்லப்பட்ட முஸ்லிம்களின் சிறை வாழ்வுக்கு யார் பரிகாரம் காண முடியும்? அவர்களின் வலியை யார் போக்குவது? ஸ்மிதா விளக்குவாரா?

    ReplyDelete
  22. //ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல//

    வரதட்சணையாக பெண்ணிடம் பல லகரங்களை வாங்குகிறீர்களே? அதற்கு உங்கள் மதமும் வக்காலத்து வாங்குகிறதே? இதற்கு என்ன பெயரைக் கொடுக்கப் போகிறீர்கள்?

    அடுத்து இந்து மதத்தில் கணவன் மனைவி விவாகரத்து பெற்று விட்டால் மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதா மாதம் கொடுக்க நமது சட்டம் அறிவுறுத்துகிறதே? இதற்கு என்ன பெயரை கொடுப்பதாக் உத்தேசம்

    //ஆனால் சவுதி அரேபியாவில் ஆடம்பர மோகமா? என்ன சொல்கிறீர்கள்? பூலோக சொர்க்கமான சவுதி அரேபியாவை விமர்சிக்கிறீர்களா? :-))//

    80 சதவீதம் நிதானத்தோடு தான் இருப்பார்கள். 20 சதவீதம் தான் பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்பது தெரியாமல் ஆடம்பரத்தில் மூழ்கியுள்ளவர்கள்.

    ReplyDelete
  23. அண்ணாச்சி ரொம்ப டென்சனா இருப்பது நல்லதில்லை.

    சவுதி மன்னர் மோடியை விருந்துக்கு அழைப்பார்....உடன் மலேசிய பிரதமரும் இருப்பார். உடனே சவுதியிலுருந்து ஓடி வந்துவிடுவீர்களா? இல்லை மலேசியாவிலுருந்து உங்கள் சொந்தங்களை திருப்பி அழைப்பீர்களா?

    மோடிதான் இந்தியத் தலைமகன். அவர் பிராமணரில்லை..
    முஸ்லீமில்லை...
    அவர் கிருத்துவருமில்லை.


    நமது ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)