Sunday, December 16, 2012

பூமியின் ஓரங்கள் குறைந்து வருவது உண்மையா?

பூமியின் ஓரங்கள் குறைந்து வருவது உண்மையா?

துருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும், பனிக்குன்றுகளும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் தொடர்கதையாகிறது. அதனால் பூமியின் பருவ நிலைக் கோளாறுகள், முரண்பாடுகள் பெருமளவில் தோன்றி உலக மக்களின் வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து வருகின்றனர். 21 ஆம் நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” (ஹிந்தி நடிகை அல்ல :-)) கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 2012 அக்டோபரில் அடித்த “ஸாண்டி” நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது. கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.

ஓசோன் குறைபாடுகளால் நமது பூமி மிகப் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. நமது பூமியை சூரியனின் கதிர்கள் அளவுக்கதிகமாக தாக்கி விடாமல் தடுப்பவை இந்த ஓசோன் படலங்களே! இந்த பிரதேசத்தில் இயற்கையாக உள்ள வாயுக்களைத் தவிர்த்து பூமியிலிருந்து மனிதர்களால் கரியமில வாயுவும் அளவுக்கதிகமாக இந்த பகுதியை அடைவதால் வாயுக்களின் அடர்த்தியானது மிகைக்கிறது.. இதனால் சூரியனின் தாக்கம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகத் தொடங்குகின்றன. ஆகவே கடலின் மட்டம் உயர்ந்து கடல் நீர் நிலப்பகுதிக்குள் வருகிறது. இந்த உப்பு நீரானது பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களையும் கபளீகரம் செய்து விடுகின்றன. நமது பக்கத்து நாடான பங்களாதேசின் பல பகுதிகள் இன்னும் 50 ஆண்டுகளில் கடலுக்குள் அமிழ்ந்து விடும் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். இந்த ஓசோன் பிரச்னையை தீர்க்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. வழக்கம்போல் அமெரிக்கா எந்த பிடியும் கொடுக்காமல் இந்த விஷயத்தில் நழுவிச் செல்கிறது..


1. பூமியின் வெப்பம் 1900 ஆம் ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூமியின் வெப்பம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி வெப்பம் ஏறியுள்ளது.

2. 20 ஆம் நூற்றாண்டின் ஏழு ஆண்டுகள் வெப்பம் மிகையான காலங்களாக பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் மிகுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு மிகையாகி யிருக்கிறது! கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்..

4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

6. WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வறட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் இறந்து விடுவர் என்று எச்சரிக்கிறது.

டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]



“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிளிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

Reference:

[Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]

An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

S. Jayabarathan

--------------------------------------------------------------------

ஓரங்களில் குறையும் பூமி

"பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் பார்க்கவில்லையா,"
அல்குர்ஆன் 13:41

'பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா நம்மை வெல்பவர்கள்?'
-குர்ஆன் 21:44

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதை மேலே பார்த்தோம். 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது. அதிலும் அந்த மக்களில் பெரும்பாலானோரும் முகமது நபியும் வாழ்ந்த இடங்கள் கடற்கரையை ஒட்டிய நிலப்பரப்பும் அல்ல. இது பற்றிய அதிக அறிவும் அந்த மக்களுக்கு இருந்திருக்க வில்லை.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.



25 comments:

  1. வ இன்னன்னா ஊல்லல்லா

    சுவனம் என்னமோ ஆகிப்போச்சு உங்களுக்கு

    ReplyDelete
  2. //திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.//

    குட்டி நாய் குலைக்குறதுக்கூட குரான்ல அர்த்தம் கண்டுபிடிப்பீங்க போல

    ReplyDelete
    Replies
    1. Sagothara sankara kaluthaiyudan uravu kondu kulandhai petru kollumaru hindhu madha vedhmane rik, matrum sama vedhathil sollapattirukkirathu atharku buthira kameshti yagam endru vera peyar vaiythirukkiraragal. thiru kuraanil appadi oru kasada kidayathu en enil adhu irai vedham unmai sathiyam tharmam niyayam needhi sattam ubedhesam varalaru ariviyal uyiriyal boologeviyal ena manitha valkaikane valvyial tathuvam kuran

      Delete
  3. //குட்டி நாய் குலைக்குறதுக்கூட குரான்ல அர்த்தம் கண்டுபிடிப்பீங்க போல//

    'அவனே இறைவன்: அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் பேரரசன்: தூயவன்: நிம்மதியளிப்பவன்: அடைக்கலம் தருபவன்: ஆதிக்கம் செலுத்துபவன்: பெருகை;குரியவன்: அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் தூயவன்'
    -குர்ஆன் 59:23

    உலக உயிர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்துபவன். அந்த வகையில் ஒரு நாய் குலைத்தாலும் அங்கும் இறைவனின் ஆளுமை இருக்கிறது.

    //வ இன்னன்னா ஊல்லல்லா

    சுவனம் என்னமோ ஆகிப்போச்சு உங்களுக்கு//

    ஹா..ஹா..பதிவை படிப்பவர்களுக்கு தெரியும் யாருக்கு என்ன ஆனது என்று.

    ReplyDelete
  4. சகோ ஃபைஜ் ஜமால்!

    //Excellent article //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. சுவனம்,
    1400 வருஷத்துக்கு முன்னாடி தோன்றிய மதத்தின் தத்துவத்தை இன்றைய வாழ்க்கைக்கு ஏற்ற மாதிரி மாத்துங்க. இல்லைன்னா பின் தங்கி போயிருவீங்க

    ReplyDelete
  6. //1400 வருஷத்துக்கு முன்னாடி தோன்றிய மதத்தின் தத்துவத்தை இன்றைய வாழ்க்கைக்கு ஏற்ற மாதிரி மாத்துங்க. இல்லைன்னா பின் தங்கி போயிருவீங்க //

    இஸ்லாத்தையும் அறிவியலையும் ஒரு சேர கொண்டு செல்லும் சவுதி அரேபியாவை உதாரணமாக கொள்ளலாம். அடுத்து தமிழகத்தில் தற்போது வீட்டுக்கு ஒரு பட்டதாரி சர்வ சாராரணமாக வெளி வருகின்றனர். இன்னும் 10 வருடத்தில் பர்ப்பணர்களுக்கு போட்டியாக இஸ்லாமியர்கள் வருவதை நீங்களே உணர்வீர்கள்.

    ஆனால் இன்றும் சாதி பெயரால் வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் திரியும் உங்கள் இனத்தவரிடம் இதைப் போய் சொன்னால் ஏதாவது பலன் கிட்டும்.

    ReplyDelete
  7. Anonymous7:04 AM

    Dec 17: சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜிந்தர் சௌத்ரிக்கு, ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (N I A ) தெரிவித்துள்ளது.

    2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஹரியாணா மாநிலம் பானிப்பட் அருகே செம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பை சார்ந்த ராஜிந்தர் செளத்ரியை நேற்று சனிக்கிழமை இரவு தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

    இவ்வழக்கில் கைது செய்யப்படும் 4ஆவது நபர் ராஜிந்தர் செளத்ரி. ஏற்கெனவே அசிமனந்தா, லோகேஷ் சர்மா, தேவிந்தர் குப்தா ஆகியோர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த ராஜிந்தர் செளத்ரி பற்றித் தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஹிந்துத்துவா தீவிரவாதியான அவர், தனது பெயரை மாற்றிக் கொண்டு மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி அருகே தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும், வெடிகுண்டை சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தியது ராஜிந்தர் சௌத்ரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவில் நடந்த பல்வேறு மத கலவரங்களுக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் மூல காரணமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத முகம் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகிறது.

    http://www.sinthikkavum.net/2012/12/blog-post_16.html

    ReplyDelete
  8. Anonymous7:12 AM


    ஒரு சில தினங்களுக்கு முன் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள ஒரு பட்டறையில் பல இளம் சிறார்களைக் கொத்தடிமைகள் போலப் பணியில் அமர்த்தி வேலை வாங்கியுள்ளனர் இரக்கமற்ற கொடூரர்கள். காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் மீட்கப் பட்டனர். அவர்களில் ஒரு சில குழந்தைகள் 8 வயதே நிரம்பிய பச்சிளம் பிஞ்சுகள் என்பது வேதனையான உண்மையாகும்.

    அவர்கள் பணியாற்றிய பட்டறை என்பது விலங்குகள் கூடத் தங்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமான சுகாதாரமற்ற, காற்றோட்டம் இல்லாத, இருளறை ஆகும். அவர்கள் யாவரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்து வந்துள்ளனர். கிறிஸ்மஸ் சீசன் நெருங்கிவிட்டதால் அவர்கள் இராப் பகலாகச் சுமார் தினமும் 15 - 19 மணி நேரம் வரை பணியாற்ற கட்டாயப்படுத்த பட்டுள்ளனர்.

    அக்குழந்தைகள் அனைவரும் போதிய ஊட்டச்சத்து இல்லாதத்தால் நோஞ்சான்களாகத் தென்ப்பட்டனர் எனவும், பலர் பலத்த மனநலம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தனர் எனவும் அறிய முடிகின்றது.

    http://www.huffingtonpost.com/2012/12/07/delhi-14-freed-raid-frees-enslaved-indian-children-forced-christmas-decorations_n_2258698.html

    http://www.telegraph.co.uk/news/worldnews/1567849/Gap-sweatshop-children-saved-in-India-raid.html
    http://www.kodangi.com/2012/12/child-labor-problems-in-india.html

    ReplyDelete
  9. Anonymous7:17 AM

    68 பேர் உயிரிழந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த வழக்கில் ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ராஜேந்தர் சௌத்ரி நேற்று முன்தினம் 15.12.12 மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள நாக்தா என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டான்,

    தனது தலைக்கு பரிசு அறிவித்து போலீஸ் தேடிவருவதை அறிந்த ராஜேந்தர் சௌத்ரி தனது பெயரை சமந்தர் சிங் என்று மாற்றிக்கொண்டான்,

    முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா, தேவேந்தர் சிங் ஆகிய மூவர் ஜெயிலில் உள்ள நிலையில், ராம்சந்தர் என்ற ராம்ஜி மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய காவி பயங்கரவாதிகள் தலைமறைவாக உள்ளனர்.

    தற்போது ராஜேந்தர் சௌத்ரி கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த அதே குழு தான், மக்கா மசூதியிலும் குண்டு வைத்ததாக கூறியுள்ளான்,

    2007 பிப்ரவரி 18ல் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்த இவர்கள், 2007 மே மாதம் 18 ந்தேதி மக்கா மசூதியில் குண்டு வைத்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ராஜேந்தர் சௌத்ரி என்ற சமந்தர் சிங்கிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல முக்கியத்தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர் NIA அதிகாரிகள்.

    நன்றி : மறுப்பு தளம்

    ReplyDelete
  10. சுபி அவர்களே. உங்கள் இறை தொண்டு வாழ்க.
    //**"'பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? "**//
    அதாவது காபிர்களை போட்டுத்தள்ளிட்டு அவர்களின் நிலத்தின் ஓரத்தை குறைத்தோம் அப்படிதானே இருக்கு.
    //**இன்னும் 10 வருடத்தில் பர்ப்பணர்களுக்கு போட்டியாக இஸ்லாமியர்கள் வருவதை நீங்களே உணர்வீர்கள்.**//
    இதைதான் நாங்கள் எதிபார்க்குறோம். படிப்போடு கொஞ்சம் பகுத்தறியும் திறனோடு வந்தால் நல்லது.

    ReplyDelete
  11. திரு வாஸ்!

    //அதாவது காபிர்களை போட்டுத்தள்ளிட்டு அவர்களின் நிலத்தின் ஓரத்தை குறைத்தோம் அப்படிதானே இருக்கு.//

    ஆனால் நிலைமை உலகம் முழுக்க தெரிந்த ஒன்றே. பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த நாட்டை இஸ்ரேலியர்களிடம் இழந்து நிற்பதை பார்க்கவில்லையா?

    //படிப்போடு கொஞ்சம் பகுத்தறியும் திறனோடு வந்தால் நல்லது.//

    இஸ்லாம் மார்க்கமானது மூடப் பழக்கங்களை துடைத்தெறிந்த ஒன்று. பகுத்தறிவோடு கூடிய படித்த இஸ்லாமியர்களை இனி வரும் காலங்களில் பார்க்கலாம்.

    ReplyDelete
  12. //உங்கள் இனத்தவரிடம் இதைப் போய் சொன்னால் ஏதாவது பலன் கிட்டும்.//

    ஏன் சுவனம்? மதம் மாறினால் தங்கள் இனமும் மாறிடுமா? ரொம்ப அலட்டாதீர்கள். நீங்களும் தமிழரே

    ReplyDelete
  13. //ஆனால் நிலைமை உலகம் முழுக்க தெரிந்த ஒன்றே. பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த நாட்டை இஸ்ரேலியர்களிடம் இழந்து நிற்பதை பார்க்கவில்லையா?
    //

    சுவனம் இந்தியா மேல் படையெடுத்த கஜினி முகம்மது நாட்டை ஏன் சீரழித்தார்? சும்மானாச்சும் அவர் ஒரு முஸ்லீம் பெயர் தாங்கி என்று கிண்டல் பண்ணாதீர்கள்.

    உலகத்தின் சீரழிவு முஸ்லீம் சமுதாயத்தினால் இருக்கிறது

    ReplyDelete
  14. // இன்னும் 10 வருடத்தில் பர்ப்பணர்களுக்கு போட்டியாக இஸ்லாமியர்கள் வருவதை நீங்களே உணர்வீர்கள்.//

    தமிழகத்தின் இரண்டு எதிரிகளும் போட்டி போட்டால் ஏமாறுவது தமிழனே

    ReplyDelete
  15. //பகுத்தறிவோடு கூடிய படித்த இஸ்லாமியர்களை இனி வரும் காலங்களில் பார்க்கலாம்.//

    அப்படின்னா இதுவரைக்கும் பகுத்தறிவொட எவருமே இஸ்லாமில் இல்லையா?

    ReplyDelete
  16. //ஏன் சுவனம்? மதம் மாறினால் தங்கள் இனமும் மாறிடுமா? ரொம்ப அலட்டாதீர்கள். நீங்களும் தமிழரே//

    நான் தமிழன்தான். திராவிடன்தான். இல்லை என்று எப்போது சொன்னேன்.

    //தமிழகத்தின் இரண்டு எதிரிகளும் போட்டி போட்டால் ஏமாறுவது தமிழனே//

    தமிழன் ஏமாற மாட்டான். அது பற்றிய கவலை தேவையில்லை.

    //அப்படின்னா இதுவரைக்கும் பகுத்தறிவொட எவருமே இஸ்லாமில் இல்லையா?//

    ஆன்பு ஆங்கிலேயனை நாட்டை விட்டு விரட்ட அரசு வேலையை உதறினர் முஸ்லிம்கள். அவனது மொழியான ஆங்கிலத்தை வெறுத்தனர். அது தவறான முடிவு என்பதை தற்போது உணர்ந்து கொண்டுள்ளனர். இனி நிலைமை மாறும்.

    ReplyDelete
  17. முஸ்லிம்கள் என்றால் உங்களுக்கு ஏற்படும் அரிப்பு ஹிந்துத்துவ தீவிரவாதிகள் பிடிபடும்போது ஏற்பட மறுப்பது ஏன்??.


    தீவிரவாதி என போட மறுக்கும் மீடியாக்களின ் பாரபட்சத்தை தோலுரிப்போம்…


    Posted on திசெம்பர்17, 2012 by ஆதம் ஆரிபின்

    திராணியற்ற மீடியாக்களும், பத்திரிக்கைகளும்…!!!

    தீவிரவாதி என போட மறுக்கும் மீடியாக்களின் பாரபட்சத்தை தோலுரிப்போம்…

    எங்கு குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இந்தியன் முஜாஹித், லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முஹம்மது போன்ற இயக்கத்தினர் பொறுப்பேற்றுவிட்டார்கள் என்றெல்லாம் கொக்கரிக்கும் இந்தியா மீடியாக்களே…

    சமஜ்வதா ரயில் குண்டு வெடித்த போதும் இப்படித்தானே தங்கள் மனோ இச்சையின் அடிப்படையிலோ அல்லது சில காவல்துறைகளின் தவறான அறிவிப்புகளாலோ நிமிடத்திற்கு நிமிடம் செய்தி வெளியிட்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொண்டீர்கள்…. !

    தற்போது பார்த்தீர்களா சம்ஜவதா ரயிலில் குண்டுவைத்தது முஸ்லிம்கள் இல்லை ஹிந்துத்துவ தீவிரவாதிகள்தான் என்று நிரூபணமாகிவிட்டது.

    ஏற்கனவே இரு ஹிந்துத்துவ சங் பரிவார தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது முக்கிய தீவிரவாதியும் சிக்கியுள்ளான்.

    இப்போது வாய் திறக்க மறுக்கின்றீர்களே மீடியாக்களே உங்களுக்கு நடுநிலை கிடையாதா….?? மனசாட்சி கிடையாதா….??

    கீழே உள்ள பத்திரிக்கை செய்தியில் கூட முக்கிய குற்றவாளி என்றுதானே குறிபிட்டுள்ளீர்கள்.

    இதுவே முஸ்லிம் பெயராக இருந்தால் தீவிரவாதி, பயங்கரவாதி என குறிப்பிடும் பத்திரிக்கைகளே ஹிந்துத்துவ தீவிரவாதிகள் பிடிபட்டால் உங்களின் பேனாக்கள் தீவிரவாதிகள் என எழுதி காவி தீவிரவாதத்தை தோலுரிக்க மறுப்பது ஏன்?

    முஸ்லிம்கள் என்றால் உங்களுக்கு ஏற்படும் அரிப்பு ஹிந்துத்துவ தீவிரவாதிகள் பிடிபடும்போது ஏற்பட மறுப்பது ஏன்??.

    முஸ்லிம்களை மட்டும் திட்டமிட்டு தனிமைபடுத்தி தீவிரவாத முத்திரை குத்துவது ஏன்???

    - மனிதநேயன் (முத்துப்பேட்டை முகைதீன்)

    ReplyDelete
  18. மோடியின் முகம்


    குஜராத் மாநிலத் தேர்தல்பற்றி பார்ப்பன ஊடகங்கள் விழுந்து விழுந்து எழுதுகின்றன.

    மோடி அமோக வெற்றி பெறுவார் - இந்த வெற்றி குஜராத்தோடு நிற்காது - அவரை டில்லிக் கோட்டைவரை கொண்டு போய்ச் சேர்க்கும் என்று கோரஸ் பாடுகிறார்கள்.

    ஆனால் ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள் என்று சொல்ல முடியாது - தெரியும் - மிக நன்றாகவே தெரியும் -

    மோடி மதச் சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர் மிக முக்கியமான இந்த மய்யப் புள்ளியை அழித்துவிட்டு எழுதுபவர்கள், பிரச்சாரம் செய்பவர்கள், அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக, விளம்பரம் பெற்ற மேதைகளாக இருந்தாலும் அற்பமானவர்கள் என்றுதான் கருதப்படுவார்கள்.

    2002இல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச முறைப் பயங்கரவாதம் மன்னிக்கத் தக்கதா?

    இரண்டு கேள்விகள் இருக்கின்றன.

    ஒன்று, தம் மாநிலத்தில் வாழக் கூடிய மக்கள், அவர்கள் எந்தப் பிரிவினராக இருந்தாலும் அவர்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

    அதனை மோடி செய்தாரா? இல்லை - அவருக்கு அதில் சம்பந்தமேயில்லை என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவார்களேயானால், இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர்.

    மோடி முதல் அமைச்சராக இருக்கக் கூடிய குஜராத்தில் 2000-த்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளார்களே - அதற்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டாமா?

    மிகச் சிறந்த நிருவாகி மோடி என்று மொத்த சங்குகளையும் குத்தகை எடுத்து ஊதுகிறார்களே, இவ்வளவுப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் எப்படி தலை சிறந்த நிருவாகியாக இருக்க முடியும்?

    இந்தக் கேள்விக்கு இதுவரை மோடியோ அவரது வாடகை ஒலிபெருக்கிகளோ நாணயமான முறையில் பதில் கூறியிருக் கிறார்களா?

    அந்த வெறிபிடித்த மனிதர், சிறுபான்மையினர் வேட்டையாடப்பட்டு, அகதி முகாம்களில் தங்கி யிருந்த நிலையில்கூட, அதனைக் கொச்சைத் தனமாக விமர்சித்த ஆபாச மனிதன் அல்லவா!

    மக்கள் தொகையைப் பெருக்க வைக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று நாலாந்தர மனிதனாக வாந்தி எடுக்கவில்லையா?

    இப்பொழுதுகூட பிஜேபி சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டவர்களுள் ஒரே ஒருவர்கூட முசுலிம் இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

    அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அகமது பட்டேலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மோடி தேர்தல் கூடத்தில் எப்படி சொல்லுகிறார்?

    அகமதுமியான் என்று உச்சரிக்கிறார். பொருள் புரியவில்லையா?

    அகமது பட்டேல் அல்ல அவர் ஒரு மியான் - அதாவது முசுலிம் என்று வாக்காளர்களுக்கு தெரியப்படுத்துகிறராம்.

    உலகில் அதிக அளவில் முசுலிம்கள் வாழும் மிகப் பெரிய நாடு இந்தியா அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு இதுபோன்ற இந்து மதவெறியர்தான் பிரதமராக வர வேண்டும் என்று கருதுவதேகூட ஒரு காட்டு விலங்காண்டித்தனம்தான்.

    இந்தியாவின் உச்சநீதிமன்றமே நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டிய ஒரு பேர் வழியா இந்தியாவின் பிரதமர்?

    குஜராத் கலவரத்துக்குப் பின் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி மனந்திறந்து கூறவில்லையா? எந்த முகத்துடன் வெளி நாடுகளில் காலடி எடுத்து வைப்பேன்? என்று கூனிக் குறுகிப் போய் கருத்தினை எடுத்து வைக்கவில்லையா?

    சி.என்.என். அய்.பி.என்., தொலைக்காட்சியில் 5 நிமிடம் உட்கார்ந்து ரெகான்தப்பார் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியேறிய வீராதி வீரர்தான் இந்த நரேந்திர தாஸ், தாமோதர தாஸ் மோடி என்பதை மறக்க வேண்டாம்!

    இங்கே இருக்கும் சோ ராமசாமி போன்ற பச்சை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் மோடியைத் தூக்கி நிறுத்த ஆசைப்படுவதைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

    THANKS TO : VIDUTHALAI.COM

    SOURCE: http://www.viduthalai.in/page-2/51006.html

    ReplyDelete
  19. தோன்றும் திரையின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்

    திருமணத்தில் அநீதி...! அநாச்சாரம்...! வீண் விரயம்...!

    விறுவிறுப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி

    இங்கே சொடுக்கி >>> திருமணத்தில் அநீதி...! அநாச்சாரம்...! வீண் விரயம்...! <<<< காண்கவும்.

    தோன்றும் திரையின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.

    THANKS TO: http://www.samarasam.net/
    .

    ReplyDelete
  20. Anonymous11:49 PM

    "ஆனால் இன்றும் சாதி பெயரால் வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் திரியும் உங்கள் இனத்தவரிடம் இதைப் போய் சொன்னால் ஏதாவது பலன் கிட்டும்."

    ஷியா சுன்னி , சூபி என்று ஆளுக்கு ஆள் குண்டு வைத்து கொல்லும் நீங்க எங்களுக்கு அறிவுரை சொல்லுகின்றீர்களா ?

    ஹஹஹஹஹஹஹஹஹா

    ReplyDelete
  21. Anonymous11:53 PM

    "இஸ்லாம் மார்க்கமானது மூடப் பழக்கங்களை துடைத்தெறிந்த ஒன்று"

    ஹஹஹஹஹ ஹோஹோஹோஹஓஹோ ஹோஹோஹஓஹோ ஹீஹிஹிஹிஹிஹ்

    இஸ்லாமின் அடிப்படையே மூட நம்பிக்கைதான்

    ReplyDelete
  22. Anonymous11:55 PM

    "நான் தமிழன்தான். திராவிடன்தான். இல்லை என்று எப்போது சொன்னேன்."

    அப்போ உங்கள் இனத்தவரிடம் சொல்லுங்கள் என்றால் என்ன கருத்து ???

    இனம் என்றால் என்னவென்று தெரியுமா ???

    துலுக்கர் என்றைக்குமே தங்களை தமிழர்களாகவோ இந்தியர்களாகவோ கருதியதில்லை

    ReplyDelete
  23. Anonymous11:58 PM

    "ஆன்பு ஆங்கிலேயனை நாட்டை விட்டு விரட்ட அரசு வேலையை உதறினர் முஸ்லிம்கள். அவனது மொழியான ஆங்கிலத்தை வெறுத்தனர். அது தவறான முடிவு என்பதை தற்போது உணர்ந்து கொண்டுள்ளனர். இனி நிலைமை மாறும்."

    ஹஹஹஹஹ

    ஆங்கிலேயன் போய் 60 வருஷம் ஆச்சு. அதுக்கு பொறகு படிக்க தொடங்கிய தலித் களே படிச்சு எங்கேயோ போய் விட்டார்கள்.

    நீங்க சும்மா பொழம்பிகிட்டு இருங்க சுவனம். உலக அளவில் முஸ்லிம்களின் கல்வி அறிவு பற்றி யாம் அனைவரும் அறிந்ததே .

    ஹஹஹஹஹஹஹ

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)