Sunday, January 20, 2013

இந்தியாவின் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்வா காரணம் : ஷிண்டே!



இந்தியாவின் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்வா காரணம் : ஷிண்டே!

இந்தியாவின் தேசபக்திக்கு நாங்கள் ஒருவரே ஏக போக உரிமை என்று வாய் கிழிய பேசி வரும் இந்துத்வாவாதிகளே இந்த நாட்டின் பயங்கர வாத செயல்களுக்கு காரணம் என்று நம் நாட்டின் உள்துறை மந்திரியே சொல்லும் அளவுக்கு இவர்களின் தேச பக்தி சந்தி சிரிக்கிறது. சொன்னது சாதாரண காமா சோமா அல்ல. நாட்டின் உள்துறை மந்திரி. தனக்கு கிடைத்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இதனை சொல்வதாக கூறியுள்ளார். இனி பத்திரிக்கை செய்தியை பார்ப்போம்.

Union Home Minister Sushil Kumar Shinde on Sunday accused BJP and RSS of conducting ‘terror training’ camps to spread saffron terrorism in the country.

“Reports have come during investigation that BJP and RSS conduct terror training camps to spread terrorism...Bombs were planted in Samjhauta express, Mecca Masjid and also a blast was carried out in Malegaon.

“We will have to think about it seriously and will have to remain alert,” he said at the AICC meeting in Jaipur.

http://www.thehindu.com/news/national/bjp-rss-promoting-saffron-terrorism-shinde/article4325767.ece?homepage=true

மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அளித்த பேட்டியில், சம்‌ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மலோகான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் இந்து அமைப்புகளின் பயங்கரவாத செயல்களால் தான் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தான் முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டனர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.

ஷிண்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஷிண்டேவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், பயங்கரவாதத்திற்கு நிறம் ஏதும் கிடையாது. இதனை சோனியா ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார் என கூறினார்.

உண்மையை எத்தனை காலம் சாமர்த்தியமாக மறைத்தாலும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும் என்பதற்கு ஷிண்டேயின் பேச்சு நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவை ஆள வேண்டும். ஆட்சி கட்டிலில் அமர வேண்டும். இந்துத்வ கொள்கைகளை சிறுக சிறுக அமுல்படுத்த வேண்டும் என்ற நோக்கததிற்காக நாட்டையே ரண களமாக்க துணிந்த இந்த இந்துத்வாவினரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் நமது நாடு விளங்குமா? இதுதானா உங்களின் தேசபக்தி. உண்மையிலேயே இந்த நாசகார செயல்களை எல்லாம் செய்த நீங்களெல்லாம் ஒரு இந்தியன்தானா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் தனது நாட்டை சீரழிக்கும் எண்ணம் கொள்பவன் ஒரு தேசபக்தனா? தேர்தல் நெருங்க ஆரம்பித்து விட்டது. இனி ராமபக்தியும் இந்த இந்துத்வாவினருக்கு பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கும். 'ராமர் கோவிலை கட்டியே தீருவோம்' என்ற கோஷங்களை இனி இவர்கள் எழுப்பும் தமாஷை தினமும் பார்க்கலாம்.

பாகிஸ்தானின் தீவிரவாதம், நக்ஸல்களின் தீவிரவாதம் போன்றவையும் நமது நாட்டை அச்சுறுத்தி வருகின்றன. இந்த இரண்டையும் அனைத்து மக்களும் நன்றாகவே அறிந்து எதிரிகளை இனம் கண்டு ஒதுக்கி விடுகின்றனர்.. ஆனால் இந்த இந்துத்வாவினரோ தேசபக்தி என்ற போர்வையில் மக்களை நெருங்கி தீவிரவாதத்தை வளர்க்கின்றனர். மற்ற இரண்டை காட்டிலும் நமக்கு பெரும் ஆபத்து இந்த தேசபக்தி என்று பகல் வேஷம் போடும் இந்த இந்துத்வாவினர்களால்தான்.

தென் நாட்டு மக்கள் மிக விழிப்புடனேயே இவர்களின் அராஜகத்தை கண்டு இன்று வரை ஒதுக்கியே வந்துள்ளனர். வட மாநிலங்களில் இவர்களை இன்னும் சரியாக புரிந்து கொள்ளாத மக்களே உள்ளனர். படிப்பறிவு இல்லாததும் ஒரு காரணம். முலாயம் சிங், நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவ், பாஸ்வான் போன்ற தலைவர்கள் இவர்கள் அருகிலேயே செல்ல முயற்சிப்பதில்லை. மோடியை தனக்கு பிரசாரம் பண்ண வர வேணடாம் என்று தடுத்து நிறுத்தி அந்த தேர்தலில் வெற்றியும் பெற்று சாதிதது காட்டினார் நிதிஷ் குமார். மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறையாளர்களை இந்திய அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும். அன்றுதான் இந்தியா ஒரு வல்லரசாக நிமிரும்.

35 comments:

  1. nalla pakirvu ...!

    ReplyDelete
  2. Truth will come out inshaa allah !!

    ReplyDelete
  3. இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம்

    ஹிந்துத்துவா பயங்கரவாதம்



    எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான்.

    எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.

    ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்கள் அப்பாவி இஸ்லாமியர்கள்.

    பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள்.

    மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

    ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான்.

    ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.

    வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை.

    இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது.

    இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை.

    தண்டிக்கப்படவும் இல்லை.

    உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய் திறப்பதுமில்லை.

    இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.

    ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.

    பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.-

    91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது.

    எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது.

    சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும்.

    இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.

    ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன.

    ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது.

    அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது.

    இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை. –

    குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது.

    குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது.

    ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை

    ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள். - VINAVU.

    THANKS TO SOURCE: VINAVU.COM

    ReplyDelete
  4. சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்


    >>>> 1.நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா?
    நீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தரென்றால் உங்களின் கடவுளின் பெயரால் தான் செய்கிறார்கள். சம்மதமா? சம்மதமா?


    >>>> 2.
    இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்



    >>>> 3.
    ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான "இந்தியா டுடே" யில் வெளியான
    “அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்." விடியோக்க‌ள்



    >>>> 4. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ


    >>>> 5.
    முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!


    .

    ReplyDelete
  5. // மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறையாளர்களை இந்திய அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும். அன்றுதான் இந்தியா ஒரு வல்லரசாக நிமிரும். //

    ரொம்ப சரியா சொன்னீங்க... இவங்ககிட்ட ஆட்சியை கொடுத்தா வல்லரசு கனவு தான் காணலாம்.. இப்பவே அது கனவு தான்...

    ReplyDelete
  6. அதானே. உலகத்தில் எங்க பாம் வெடிச்சாலும் அது யூத, இந்துத்துவ சதி தானே. அப்படித்தான் சன்னி மக்கள் ஷியா முஸ்லீம் மசூதில பாம் வைக்குறாங்க. ஷியா சன்னி முஸ்லீம் மசூதில பாம் வைக்குறாங்க
    எப்படியோ அல்லாவையும் குரானையும் காப்பாத்தினா சரிதான்

    ReplyDelete
  7. ஆதாயம் இல்லாமல் பா.ஜா.கா. மற்றும் சங்க் பரிவார் அமைப்பினர் குண்டு வைத்திருக்க மாட்டார்கள். அதேபோல், ஆதாரம் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் இதைக் கூறி இருக்கவும் மாட்டார். ஒரு தேசிய கட்சி, அதுவும் சங்க் பரிவார் துணையுடன் தாங்கள் தேசபக்தர்கள் என்று கூறிக்கொண்டே, நாட்டில் குண்டு வைத்து பொதுமக்களை கொன்று, அதன்மூலம் தேர்தலில் வாக்காளர்களை மிரட்டி ஓட்டு வாங்கும் கோயபல்ஸ் திட்டத்தை, ஒரு சாதாரண கண்டன அறிக்கையோடு நிறுத்திவிடாமல் ஆதாரங்களை அம்பலப்படுத்தி, பா. ஜா.கா., ஆர்.எஸ்.எஸ். சங்க் பரிவார் போன்ற தேச விரோத அமைப்புகளை தடை செய்வதன் மூலம் இந்தியாவில் தேச ஒற்றுமை பாதுகாக்கப்படலாம். (இந்த குண்டு வெடிப்புகள் பற்றிய முந்தைய தினமலர் செய்திகளும், மற்ற ஊடகங்களின் செய்திகளும் கீழே தரப்பட்டுள்ளன. பிரவுசரில் காப்பி... பேஸ்ட்... செய்து படித்து தெரிந்துகொள்ளவும்...அல்லது கூகுள் மூலமாகவும் search செய்து தெரிந்து கொள்ளலாம்...) ://www.dinamalar.com/News_Detail.asp?id=616017 ://www.dinamalar.com/News_Detail.asp?id=606638 ://www.dinamalar.com/News_Detail.asp?Id=560347 ://www.dinamalar.com/News_Detail.asp?id=145054&Print=1 ://www.dinamalar.com/News_Detail.asp?Id=176161&Print=1 ://zeenews.india.com/tags/Malegaon_blast.html ://en.wikipedia.org/wiki/2006_Malegaon_blasts ://timesofindia.indiatimes.com/india/Hindu-fanatics-behind-several-sensational-cases-Govt/articleshow/17976192.cms ://www.firstpost.com/india/malegaon-blast-police-custody-of-accused-exted-592399.html

    ReplyDelete
  8. // மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறையாளர்களை இந்திய அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும். அன்றுதான் இந்தியா ஒரு வல்லரசாக நிமிரும். //

    சரிங்கண்ணா அந்த மத சார்பற்ற மக்கள் யாருங்கண்ணா நீங்களே அதையும் சொல்லிவிடுங்கள் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது ..

    ReplyDelete
  9. முன்னாள் உள்துறை அமைசர் சிதம்பரம் காவி பயங்கிரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் குருபிட்டார்.
    இந்தியாவில நீதித்துறை, காவல்துறை,அரசு அலுவலங்கள், ராணுவம், அனைத்திலும் rss தீவிரவாதிகள் நுழைத்து விட்டனர்.
    இதனால் உலகுக்கு உண்மை எடுத்து சொல்ல ஓரிரு உள்துறை அமைசர்களே உள்ளனர் .

    ReplyDelete
  10. திரு அஞ்சா சிங்கம்!

    //சரிங்கண்ணா அந்த மத சார்பற்ற மக்கள் யாருங்கண்ணா நீங்களே அதையும் சொல்லிவிடுங்கள் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது ..//

    மத சார்பற்றவர்கள் என்ற சொல்லுக்கு அர்த்தம் எந்த மதமும் வேண்டாம் என்று மதத்தை துறப்பவர்கள் என்ற அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. தனது மதமும் வாழ வேண்டும் நமது சகோதர மக்களோடு சந்தோஷமாக அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுத்து சகோதர பாசத்தோடு வாழ வேண்டும்.

    இந்து மதத்தில் கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற மகான்கள் இஸ்லாமியர்களை அழிக்க முயற்சிக்கவில்லை. தங்கள் மதத்தின் பெருமைகளை மாத்திரமே பரப்பி வந்தனர். அவர்களால் இந்திய அரசுக்கு எந்த பிரச்னையும் இதுவரை வந்ததில்லை.

    அதே போல் இஸ்லாத்தில் பி.ஜெய்னுல்லாபுதீன், டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மது, முஹம்மது சலீம், ஜவாஹிருல்லாஹ், ஜாகிர்நாயக் போன்ற இஸ்லாமிய பேச்சாளர்கள் தலைவர்களால் இந்து முஸ்லிம் ஒ;றுமை அதிகரிக்கிறது. இதுதான் தற்காலத்துக்கு தேவை. அதைத்தான் சொல்ல வந்தேன்.

    ReplyDelete
  11. சகோ சிராஜ்!

    //ரொம்ப சரியா சொன்னீங்க... இவங்ககிட்ட ஆட்சியை கொடுத்தா வல்லரசு கனவு தான் காணலாம்.. இப்பவே அது கனவு தான்...//

    இவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் அது இந்து மதத்துக்கும் பின்னடைவு என்பதை போகப் போக உணர்ந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  12. சகோ தீன்!

    //ஆதாயம் இல்லாமல் பா.ஜா.கா. மற்றும் சங்க் பரிவார் அமைப்பினர் குண்டு வைத்திருக்க மாட்டார்கள். அதேபோல், ஆதாரம் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் இதைக் கூறி இருக்கவும் மாட்டார்.//

    ஆதாரம் தங்களிடம் இருப்பதாக அதே பேட்டியில் கூறியும் உள்ளார். இது போல் உண்மையை சொன்ன ஹேமந்த் கர்கரேயை ஒரு வழி பண்ணி விட்டார்கள். ஷிண்டே தனக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு வெளியில் வர வேண்டும். ஏனெனில் இந்த நாசகார கூட்டம் எதையும் செய்ய தயங்காது.

    ReplyDelete
  13. சகோ பீர் முஹம்மது!

    //Truth will come out inshaa allah !!//

    இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  14. சகோ சீனி!

    //nalla pakirvu ...!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. சகோ உண்மைகள்!

    //>>>> 2.
    இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்//

    சிறந்த பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  16. சலாம் சகோ சுவனப்பிரியன்,
    இவ்வளவு விஷயம் வெளியில் தெரிந்த பின்பும் இன்னும் ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்யாமல் நம் இந்திய அரசாங்கம்.மௌனம் காப்பது காங்கிரசும் இவர்களுக்கு சப்போர்ட்டா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  17. கீற்று இணைய தளத்தின் இந்த விடியோவை முழுதுமாக காணுங்கள்.

    படத்தொகுப்பு செல்லையா முத்துசாமி.


    குறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள் ஆகியோரின் கருத்துரை கேட்டு சிந்தியுங்கள்.

    குறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள்
    ஆகியோரின் பேச்சை கேட்டு சிந்தியுங்கள்.

    சுட்டி சொடுக்கி விடியோவை காணுங்கள்
    >>>>>> SITE 1. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்

    >>>>>> SITE:2. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்
    .

    THANKS TO : செல்லையா முத்துசாமி
    http://www.chelliahmuthusamy.com/2013/01/blog-post_21.html

    ReplyDelete
  18. .
    .
    சவூதி அரேபிய அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா குறித்து

    ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள்

    கட்டுக்கதைகளாகவும்,

    உண்மைக்கு புறம்பானதாகவும்

    இருப்பதாக கூறியுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய இயக்கம்,

    இது தொடர்பான அனைவரையும் மக்கள் முன்னிலையிலான பகிரங்க பொது விவாதத்திற்கு அழைத்துள்ளது.

    CLICK HERE >>>>> ஆனந்த விகடன் - நக்கீரன் - பகிரங்க விவாதத்திற்கு முஸ்லிம் அமைப்பு அழைப்பு

    .

    ReplyDelete
  19. Anonymous1:43 AM

    // மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறையாளர்களை இந்திய அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும். //

    இந்த மத சார்பற்றவர்கள் லிஸ்டில் உங்கள் வஹாபி கூட்டம் வருமா சுவனம்

    ReplyDelete
  20. Anonymous1:49 AM

    இந்த பதிவு தேவையா? ஷிண்டே சொல்லி இருபது அவர் அரசியல் ஆதராதிர்காக.

    அவர் சொன்னதை நீங்கள் ஒரு பதிவாக போட்டு ஏற்கனவே பதிவுலகலத்தில் முஸ்லிம்கள் மேல் இருக்கும் வெறுப்பை இன்னும் தான் அதிகமாகிரீர்கள். நாளையே அவர் வெளிபடையாக இப்படி சொல்லி விட்டு அப்பாவி முஸ்லிம்களை பிடித்து ஜெயிலில் போட்டால் என்ன சொல்வீர்கள்?

    -k.rahman

    ReplyDelete
  21. ரஹ்மான் என்ற போலி பெயரில் எழுதுபவருக்கு!

    //இந்த பதிவு தேவையா? ஷிண்டே சொல்லி இருபது அவர் அரசியல் ஆதராதிர்காக.

    அவர் சொன்னதை நீங்கள் ஒரு பதிவாக போட்டு ஏற்கனவே பதிவுலகலத்தில் முஸ்லிம்கள் மேல் இருக்கும் வெறுப்பை இன்னும் தான் அதிகமாகிரீர்கள். //

    ஹி...ஹி...முஸ்லிம்கள் மேல் எவரும் வெறுப்புடன் எல்லாம் இல்லை. கதை கட்ட வேண்டாம். யூத மூளையல்லவா! எனவேதான் இஸ்லாமிய பெயரில் பின்னூட்டம் இட வைக்கிறது. இன்னும் முயற்சியுங்கள். பழைய மாதிரி உண்மைகளை மீடியாக்கள் மறைத்தாலும் இணையத்தின் மூலம் அனைத்தும் வெளி வந்து விடும்.

    ReplyDelete
  22. ஜெய்சங்கர்!

    //அதானே. உலகத்தில் எங்க பாம் வெடிச்சாலும் அது யூத, இந்துத்துவ சதி தானே. அப்படித்தான் சன்னி மக்கள் ஷியா முஸ்லீம் மசூதில பாம் வைக்குறாங்க. ஷியா சன்னி முஸ்லீம் மசூதில பாம் வைக்குறாங்க
    எப்படியோ அல்லாவையும் குரானையும் காப்பாத்தினா சரிதான்//

    இறைவன் கொடுத்திருக்கும் அறிவை கொஞ்சமாவது உபயோகப்படுத்தப் பாருங்கள். இங்கு இந்தியாவில் நடக்கும் குண்டு வெடிப்புகளைப் பற்றி பேசுகிறோம். இவை அனைத்தும் இந்துத்வாவின் வேலைகள் எனபது ஆதாரபூர்வமாக முன்பும் ஹேமந்த் கர்கரேயால் நிரூபிக்கப்பட்டது. தற்போது உள்துறை மந்திரியும் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.

    தேசபக்தி வேஷம் போட்டு உங்களைப் போன்றவர்களை இந்துத்வாவினர் சிந்திக்க விடாமல ஆக்குகின்றனர். உங்களைப் பார்த்தால் கோபம் வரவில்லை. பரிதாபமே வருகிறது.

    பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்வாவை யாரும் காரணமாக்கவில்லையே! இது போன்று திசை திருப்பி இந்துத்வாவினரை மேலும் தவறுகள் செய்ய உங்களைப் போன்றவர்கள் ஊக்குவிக்கின்றீர்கள். இதனால் நஷ்டம நமது நாட்டுக்குத்தான் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

    ReplyDelete
  23. //இந்த மத சார்பற்றவர்கள் லிஸ்டில் உங்கள் வஹாபி கூட்டம் வருமா சுவனம்//

    அட அறிவுக் கொழுந்தே!

    வஹாபிகள் இந்தியாவில் எங்காவது குண்டு வைத்ததாக ஒரு செய்தியை காட்ட முடியுமா?

    'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டு இந்து முஸ்லிம் ஒற்றுமையை கொண்டு வந்தது வஹாபியர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

    ReplyDelete
  24. சலாம் சகோ முஹம்மத்!

    //இவ்வளவு விஷயம் வெளியில் தெரிந்த பின்பும் இன்னும் ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்யாமல் நம் இந்திய அரசாங்கம்.மௌனம் காப்பது காங்கிரசும் இவர்களுக்கு சப்போர்ட்டா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.//

    கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் அதிகார வர்க்கத்தில் உள்ள இந்துத்வாவினர் செயல்பட மாட்டார்கள் என்பது காங்கிரஸூக்கும் தெரியும். பெரும்பான்மையினரின் ஓட்டின் மீதும் ஒரு கண் இவர்களுக்கு உள்ளது. எல்லாம் அரசியல் படுத்தும் பாடு.

    ReplyDelete
  25. Anonymous2:52 AM

    //ரஹ்மான் என்ற போலி பெயரில் எழுதுபவருக்கு//

    உலகத்திலேயே நீங்கள் ஒருவர் தான் உண்மையானவர். மற்ற எல்லாரும் போலிகள் தான். நீங்களும் உங்க சமாளிப்புகளும்.

    k.rahman

    ReplyDelete
  26. Anonymous3:48 AM

    //இந்து மதத்தில் கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற மகான்கள் இஸ்லாமியர்களை அழிக்க முயற்சிக்கவில்லை.//

    உண்மைதாங்க, அவங்க எல்லாம் பெரிய மனுசங்க, பெரிய மனுசதனமா நடந்துகிட்டாங்க.

    // தங்கள் மதத்தின் பெருமைகளை மாத்திரமே பரப்பி வந்தனர். //

    அமாம், யாரையும் தங்கள் மதத்திற்கு வாருங்கள், நாங்களே யோக்கியர்கள், உண்மையானவர்கள் மற்றவை போலிகள் என்று தங்கள் மதத்திற்கு அழைக்கவில்லை.

    //அதே போல் இஸ்லாத்தில் பி.ஜெய்னுல்லாபுதீன், டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மது, முஹம்மது சலீம், ஜவாஹிருல்லாஹ், ஜாகிர்நாயக் போன்ற இஸ்லாமிய பேச்சாளர்கள் தலைவர்களால் இந்து முஸ்லிம் ஒ;றுமை அதிகரிக்கிறது. இதுதான் தற்காலத்துக்கு தேவை. அதைத்தான் சொல்ல வந்தேன்//.

    அப்படி இல்லையே, இவர்கள் தானே எங்க மதம் யோக்கியம், உங்க மதம் தப்பு என்று கூவி கொண்டு திரிகிறார்கள், என்ன இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்தார்கள். உங்க மதம் தப்பு, எங்க மதத்துக்கு வாங்க என்று சொல்வது தான் மத ஒற்றுமையை வளர்ப்பதா? மத ஒற்றுமைக்கான உங்க இலக்கணம் புதுசா இருக்கே. உங்க ஐயாமாரு எந்த விதத்துல சார் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளக்குறாங்க. அவங்க போடுற கூட்டத்துல எல்லாம் 'ஏன் இன்னும் இந்துவா இருக்கீங்க, இஸ்லாமுக்கு வாங்க' என்று தானே கேட்கிராரங்க. இப்படி கேட்டா, நல்ல வளருமே ஒற்றுமை.

    ReplyDelete
  27. Anonymous3:50 AM

    //'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டு இந்து முஸ்லிம் ஒற்றுமையை கொண்டு வந்தது வஹாபியர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.//


    அண்ணே சுவனம், நானும் யோசிச்சு யோசிச்சு பாத்தேன், அண்ணாத்த பீஜே எந்த விதத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை கொண்டு வந்தார் என்று. ஒன்றும் புலப்படவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.

    ReplyDelete
  28. Anonymous7:08 AM

    நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமே உமது கூட்டம் நடத்தும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நாடகமும் அந்த நாடகத்தை வைத்து உமது கூட்டம் நடத்தும் மத மாற்ற வேலைகளும் தான், நல்ல கூத்து, மதம் மாற்றுவதையே பிரதான காரியமாக வைத்திருக்கும் உங்கள் கூட்டம் மத சார்பற்றவர்கள்? நல்ல நகைச்சுவை

    ReplyDelete
  29. Anonymous7:11 AM

    //தனது மதமும் வாழ வேண்டும் நமது சகோதர மக்களோடு சந்தோஷமாக அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுத்து சகோதர பாசத்தோடு வாழ வேண்டும்.//

    சுவன பிரியரே, நீர் உண்மையிலேயே அல்லாவை நம்புபவராக இருந்தால் இந்த பொய்யை எழுதும்போது கண்டிப்பாக உமக்கு கூசி இருக்க வேண்டும். இங்கே எந்த முஸ்லிமும் பிற மத நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. இதுபோன்ற ஜிகினா பொய்களை தயவு செய்து கூற வேண்டாம். உங்கள் வஹாபி கூட்டத்தை பற்றி இங்கு எல்லாருக்கும் தெரியும்

    ReplyDelete
  30. //அப்படி இல்லையே, இவர்கள் தானே எங்க மதம் யோக்கியம், உங்க மதம் தப்பு என்று கூவி கொண்டு திரிகிறார்கள், என்ன இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்தார்கள். உங்க மதம் தப்பு, எங்க மதத்துக்கு வாங்க என்று சொல்வது தான் மத ஒற்றுமையை வளர்ப்பதா? மத ஒற்றுமைக்கான உங்க இலக்கணம் புதுசா இருக்கே. //

    சமீபத்தில் நடந்த ரிசானாவின் தண்டனையை முஸ்லிம்களை விட அதிகம் விமரிசித்தது இந்து பதிவர்களே! ஆக்கபூர்வமான விவாதங்களை யாருமே வைக்கலாம். அது போல்தான் முஸ்லிம்களின் தர்ஹா வணக்கங்களையும் என்னைப் போன்றவர்கள் எதிர்ப்பது. அதே போல் இந்து மதத்தில் உள்ள வேதங்களில் சொல்லப்படாத காரியங்களை செய்யும் போது பலராலும் விமரிசிக்கப்படுகிறது. இந்த விமரிசனங்களை இருபக்கமுமே செய்து வருகிறோம். இதில் சச்சரவுகள் ஏதும் வந்ததில்லை.

    ஆனால் இந்து முண்ணனியும், ஆர்எஸ்எஸ்ஸூம் பிஜேபியும் செய்து வரும் காரியங்கள் இது போன்றல்ல. பாபரி மசூதியில்தான் ராமன் பிறந்தார் என்பதும், சார்மினாருக்கு பக்கத்தில் பாக்யலஷ்மி கோவில் கட்ட முயற்சிப்பதும், விநாயக சர்ர்த்தி என்ற பெயரில் முஸ்லிம் தெருக்களில் நடனமாடிக் கொண்டு ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுவதும், பொய் வழக்கு போட்டு முஸ்லிம்களை கைது பண்ணுவதும் இந்துத்வா வாதிகளால் திட்டமிட்டு செயல்படுத்தப்படுபவை.

    மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித் என்று எங்கு பார்த்தாலும் திட்டமிட்டு குண்டு வைப்பதும், காவல்துறையில் உள்ள காவிகள் அதற்காக முஸ்லிம்களையே கைது செய்வதும் தொடர்ந்து நடந்து வரும் ஒரு நிகழ்வு. இது முன்னேற்றமடைய துடிக்கும் ஒரு நாட்டுக்கு அழகல்ல. இந்து மதத்தை வளர்ப்பதற்கு இது சரியான வழியல்ல என்றே சொல்கிறோம்.

    ReplyDelete
  31. Anonymous7:21 AM


    http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1301/19/1130119014_1.htm

    இஸ்லாம் மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக கருத வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். இவர் உமர்நகர் ஜமாத் தலைவராக உள்ளார். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்ததாவது, நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 30 ஆண்டுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறினோம். எங்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இதனால் இஸ்லாம் மதத்திற்கு மாறிய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்படுகின்றது.

    தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. கேரளாவில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை. இங்கு இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் என சான்றிதழ் அளிக்கின்றனர்.

    இஸ்லாத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராஜாமுகமது என்பவர், டிஎன்பிஎஸ்சி நடத்திய கால்நடை உதவியாளர் தேர்விற்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை ஏன் பொதுப்பிரிவில் பரிசீலிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இஸ்லாம் மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சந்திக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல மனுக்கள் அனுப்பினோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இஸ்லாம் மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

    மனுவை நீதிபதிகள் கே.என்.பாஷா, ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான், வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, டிஎன்பிஎஸ்பி தேர்வுக்கு விண்ணப்பித்த இஸ்லாம் மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராகக் கருத வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மனுவுக்கு பதிலளிக்க தலைமை செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர், டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நான்கு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

    --


    ALAVUDEEN

    ReplyDelete
  32. // அண்ணே சுவனம், நானும் யோசிச்சு யோசிச்சு பாத்தேன், அண்ணாத்த பீஜே எந்த விதத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை கொண்டு வந்தார் என்று. ஒன்றும் புலப்படவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.//

    மாங்கா மடையர்களுக்கு எப்படி சொன்னாலும் விளங்காது ...முதல்லே நீ உண்மையான பெயருள வா,முதுகெலும்பு இல்லாதவனே பேடித்தனமா அனானி பெயருல வந்து கூவாதே .....

    ReplyDelete
  33. //நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமே உமது கூட்டம் நடத்தும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நாடகமும் அந்த நாடகத்தை வைத்து உமது கூட்டம் நடத்தும் மத மாற்ற வேலைகளும் தான்,//

    குண்டு வெடிப்புகளான மூல காரணத்தை உங்கள் வாயாலேயே ஒத்துக் கொண்டதற்கு நன்றி!

    இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் தினம் தினம் தொல்லைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். இத்தனை தொல்லைகள் இரந்தும் ஏன் ஈஸ்லாத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் மதத்தில் உள்ள சாதி வேற்றுமை. மனிதர்களை மதிக்காத தன்மை. எங்கு மனிதத்துக்கு மதிப்பு கிடைக்கிறதோ அதை நோக்கி செல்கிறார்கள். கிறித்துவ மதத்தைப் பொல் பணம் கொடுத்தோ அல்லது திட்டமிட்ட பிரசாரங்களோ முஸ்லிம்களிடம் இல்லை. அவர்களாக விரும்பி வரும்போது முஸ்லிம்கள் என்ன செய்ய முடியும். முதலில் உங்கள் மதத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தாலே மத மாற்றத்தை தடுக்க முடியும். அதை முதலில் செய்ய முயற்சிக்கவும். சாதிகளை ஒழிக்க பாடுபடவும்.

    ReplyDelete
  34. Anonymous3:08 AM

    //குண்டு வெடிப்புகளான மூல காரணத்தை உங்கள் வாயாலேயே ஒத்துக் கொண்டதற்கு நன்றி!//

    இந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற பெயரில் உங்கள் கூட்டம் நாடகம் நடத்துகிறது என்பதை மறுக்காததர்க்கு நன்றி, முதலில் இந்த வெளிவேட நாடகத்தை நிறுத்துங்கள்.

    //இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் தினம் தினம் தொல்லைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். //

    அப்படியா! எந்த விதத்தில் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எந்த வகையான ஏமாற்று வேலை இது. ஊருக்கு ஊர் உங்கள் கூட்டத்தினர் தங்கள் தாவா பணியை சிறப்பாக செய்து வருகின்றனர், அங்கே அவர் இஸ்லாமிற்கு மாறினார் இவர் இங்கே மாறினார் என்று பெருமையோடு விளம்பர படுத்தி கொள்கிறீர்கள். மற்ற எல்லா ஜாதி மத இன மக்களுக்கு கொடுக்கப்பட்டிற்கும் உரிமைதான் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிமையும் இங்கே படிக்க வேண்டாம் என்றோ வேலைக்கு போக வேண்டாம் என்றோ அரசாங்கம் கூறவில்லை. அமெரிக்காவில் முகமதுவை பற்றி படம் எடுத்தால் இங்கே உங்களால் ஆர்ப்பாட்டம் பண்ண முடிகிறது, கலவரம் செய்ய முடிகிறது. உங்கள் அல்லாவின் தேசமான பாகிஸ்தானை விட இங்கே சகல சுதந்திரத்துடன் இருகிறீர்கள். படம் எடுப்பவர்கள் கூட உங்களுக்கு பயந்தே படம் எடுக்க முடிகிறது. இங்கே ஒருவர் இந்து சமயத்தின் மீது பற்று உள்ளவராக இருந்தால் மிக சுதந்திரமாக அவரை காவி பயங்கரவாதி என்கிறீர்கள், இந்துத்துவ வெறியன் என்கிறீர்கள். அதுவே உங்களை மத சார்பற்றவர்கள் என்று கூரிகொள்கிறீர்கள். உங்கள் மதவெறியை விமர்சித்தால் பொங்கி எழுகிறீர்கள். அரசாங்கமா உங்களை படிக்க வேண்டாம் என்று சொன்னது. உங்களை வேலைகளுக்கு முயற்சி செய்ய வேண்டாம் என்று சொன்னதா? இஸ்லாமியர்கள் யாரும் அரசு பணிகளில் இல்லையா? போதா குறைக்கு இந்த நாட்டை இஸ்லாமிய மயம் ஆக்குவோம், ஷரியா கொண்டு வருவோம் என்று வேறு முழக்கமிடுகிறீர்கள், பிறகு எந்த வழிகளில் தொல்லைகளை அனுபவிக்கிறீர்கள்.

    என்னுடையதை பொத்திக்கொண்டு நான் என்வழியில் போனால், அடுத்தவன் எதற்கு எனக்கு தொல்லை தர போகிறான், உன்னுடையது கோணல் என்னுடையது நேராக இருக்கிறது என்று அடுத்தவரை நோண்டும் போது தான் எங்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  35. Anonymous2:52 PM

    //மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறையாளர்களை இந்திய அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும். அன்றுதான் இந்தியா ஒரு வல்லரசாக நிமிரும். //

    அட‌டே, எவ்வளவு அழ‌கான‌ அற்புத‌மான‌ க‌ருத்து. முஸ்லீம்க‌ளை விட‌ ம‌த‌ச்சார்புள்ள‌வ‌ர்க‌ள், மத‌த்தை ம‌ட்டும் அடையாள‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் எவ‌ரும் கிடையாது இந்தியாவில். அப்ப‌டியானால் இந்திய‌முஸ்லீம்க‌ள் எல்லோரும் பார‌தமாதாவைக் கூறுபோட்டு உருவாக்கிய‌ இர‌ண்டு முஸ்லீம்நாடுக‌ளுக்கும் போய்ச்சேரும் வ‌ரை இந்தியா வ‌ல்ல‌ர‌சாக‌ முடியாது என்கிறீர்க‌ள். அப்ப‌டிப்போடு.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)