Saturday, January 12, 2013

பணம் வந்ததால் பிணமான உரூஜ்கான்!


நமது இந்தியாவின் ஹைதரபாத் நகரைச் சேர்ந்த உரூஜ்கான் மிகப் பெரிய செல்வந்தர். சிறு வயதிலேயே அமெரிக்கா சென்று செட்டில் ஆன குடும்பம். தற்போது அவருக்கு 46 வயதாகிறது. திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஒரு பெண் குழந்தையை இறைவன் அவருக்கு கொடுக்கிறான். செல்வம் மேலும் பெருகுகிறது. சில மனத்தாபங்களால் மனைவியை விவாகரத்து செய்கிறார். அடுத்த சில ஆண்டுகளிலேயே வேறொரு பெண்ணை மனைவியாக்கிக் கொள்கிறார். பணம் இருக்கிறது. எனவே திருமணத்தில் எந்த சிக்கலும் இல்லை.

இவரது முக்கிய தொழிலாக சலவை நிலையங்களைச் சொல்லலாம் ஒன்றுக்கு மேற்பட்ட சலவை நிலையங்கள் மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அதோடு சேர்த்து ரியல் எஸ்டேட் தொழிலையும் கவனித்து வந்தார். இத்தனை செல்வங்கள் வந்தாலும் மனிதனுக்கு பணத்தின் மீதுள்ள மோகம் குறையுமா? வழக்கம் போல் இவருக்கும் குறையவில்லை.

லாட்டரியிலும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று அதிலும் பணத்தை முடக்கியுள்ளார். 'குடுக்குற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு குடுக்கும்' என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. இல்லினாய்ஸ் மாநில லாடடரி குலுக்கலில் 1 மில்லியன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இதில் வரி பிடித்தம் போக 425000 டாலரை சன்மானமாக பெற்றார். பரிசு விழுந்த இரண்டு நாள் கழித்து பிணமாக கிடந்துள்ளார் உரூஜ் கான். முதல் நாள் வீட்டில் சாப்பிட்ட குஃப்தா கறியில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாக தற்போதய விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதல் மனைவியின் வேலையா அல்லது பணம் பறிக்கும் கும்பலின் வேலையா என்பது இனி போகப் போகததான் தெரியும்.




உரூஜ் கான், அவரது மனைவி சபானா அன்சாரி, சில ஆண்டுகளுக்கு முன் விவாவகரத்து செய்து விட்ட மனைவிக்கு பிறந்த பெண் ஜாஸ்மின் இவர்கள் மூவரும் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டபோது எடுத்த படம்.



இந்த உணவில்தான் விஷம் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. குஃப்தா கறி.



கோடீஸ்வரனின் ஆடம்பர பங்களா. இருந்து அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை.


உரூஜ்கானுக்கு வாழ்வளித்து வந்த சலவை நிலையம்

ஒரு மனிதனுக்கு தங்கத்தினால் ஆன ஆறு ஒன்று கொடுக்கப்பட்டால் 'இந்த பக்கமும் ஒரு ஆறு ஓடினால் நன்றாக இருக்குமே' எனறு எண்ணுவானாம். முகமது நபி அறிவிக்கும் ஒரு நபி மொழி இவ்வாறு சொல்கிறது. போதுமென்ற மனம் இல்லாத வாழ்வு நிம்மதியாக இருக்காது என்பதற்கு உரூஸகானின் வாழ்வு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.

இதிலிருந்து நமக்கும் படிப்பினை இருக்கிறது. பல செல்வந்தர்கள் மேலும் மேலும் பணத்தை சேர்க்கத்தான் முயற்சிக்கிறார்களே யொழிய தங்களது உறவினர், தங்கள் ஊரில் உள்ள ஏழை மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு அல்லாடிக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் சென்று விடுவர். ஜகாத் என்ற ஒரு அருமையான திட்டம் நம்மிடம் இருந்தும் அதனை செயல்பாட்டுக்கு ஏனோ கொண்டு வருவதில்லை. அந்த திட்டம் பாழ்பட்டதனால்தான் ரிசானா நபீக் போன்ற சகோதரிகள் தங்கள் உயிரை இந்த பாலைவனத்தில் விடும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வதட்சணை கொடுமையை நீக்கவும், கல்வியை சமூகத்தில் ஆர்வமூட்டவும், ஜகாத்தை விரிவுபடுத்தவும் நம்மால் ஆன முயற்சிகளை முன் எடுப்போம்.

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130111148931

6 comments:

  1. mmm...

    nalla pakirvu...

    ReplyDelete
  2. அவர் பேக்கிரவுண்டில் நல்ல வேலைகள் (தான தர்மங்கள்) செய்திருக்கலாமில்லையா?

    உரூஜ் கான் பெரிய கோடீஸ்வரர் என்பதை உங்கள் பதிவைப் படித்து தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  3. //mmm...

    nalla pakirvu...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ சீனி!

    ReplyDelete
  4. //Good article //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஃபைஜி ஜமாலி!

    ReplyDelete
  5. சகோ என்றென்றும் பதினாறு!

    //அவர் பேக்கிரவுண்டில் நல்ல வேலைகள் (தான தர்மங்கள்) செய்திருக்கலாமில்லையா?//

    அவர் நன்மையான காரியங்கள் செய்திருந்தால் அதற்குரிய கூலியை இறைவனிடத்தில் பெற்றுக் கொள்வார்.

    இவ்வளவு சொத்து சுகம் இருந்தும் இஸ்லாம் தடுத்த லாட்டரியின் மூலம் பொருள் தேட முற்பட்டது அவரது தவறல்லவா!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)