Tuesday, January 22, 2013

உலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா?

உலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா?

'ஆஸ்கார் வாங்கி இந்தியாவை தலைநிமிர வைக்கப் போகிறார் என்று முன்பு ஒரே அமர்க்களப்படுத்தினார்கள். ஆனால் வெளியில் சொல்லாமல் அமைதியாக சென்று ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ரஹ்மான் கொண்டு வந்து விட்டார். தற்போது 'உலகநாயனே' என்று பலராலும் போற்றப்பட்டு 'ஐநாவும் உன்னை அழைக்கும்' என்றெல்லாம் ஏகத்துக்கும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். திறமை இருந்து அந்த அங்கீகாரங்களெல்லாம் கிடைத்தால் இந்தியன் என்ற முறையில் எல்லோரும் பெருமைப்படலாம்.

ஆனால் இவரது தொடர்ச்சியான பல படங்கள் ஆன்மீகத்தை குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. இவர் சார்ந்த இந்து மதத்தில் உள்ள குறைகளை படங்களில் சொல்வது அவருக்கு ஓரளவு உரிமை இருப்பதாக சொல்லலாம். ஆனால் இஸ்லாத்தை தனது படங்களில் நுழைக்கும் பொது உண்மை நிகழ்வுகளை கதைக் கருவாக கொண்டால் யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த அனைத்து இஸ்லாமிய அமைப்பினருமே ஒட்டு மொத்த குரலில் 'இந்தியாவில் இதுவரை இந்த அளவு முஸ்லிம்களை கேவலப்படுத்தி ஒரு படம் வந்ததில்லை' என்று சொல்லும் போது அந்த படத்தின் தரத்தைப் பற்றி நாம் ஓரளவு கணித்து விடலாம்.

இவருடைய அப்பா சுதந்திர போராட்டக் காலத்தில் வெள்ளையர்களால் சிறையில் அடைக்கப்பட்டபோது அதே செல்லில் ஹாஸன் என்ற ஒரு முஸ்லிம் பழக்கமாகி இருக்கிறார். சிறைக்கு வெளியேயும் அந்த நட்பு தொடர்கிறது. அவரது அன்பின் ஞாபகார்த்தமாக தனது மூன்று குழந்தைகளுக்கும் சந்திர ஹாஸன், சாரு ஹாஸன், கமல ஹாஸன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார் இவரின் தந்தை. தந்தை இவ்வாறு இருக்க பிள்ளையோ இஸ்லாத்தை எந்த வழியிலாவது கொச்சைப் படுத்த வேண்டும்: அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தனது படத்தில் முஸ்லிம்களை மிகக் கேவலமாக சித்தரிக்க முயல்கிறது. தனது குழந்தைகளுக்கு ஒரு இஸ்லாமியரின் பெயரை வைக்கும் அளவுக்கு அந்த முஸ்லிம் கமலின் தந்தையோடு அன்போடு பழகியிருந்துள்ளார். அதேபோன்று தமிழக கிராமங்களை சென்று கொஞ்சம் பாருங்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் உறவு முறை யோடு அன்போடு நட்பாக பழகி வருகின்றனர். அது பொருக்கவில்லையா தங்களுக்கு. இவ்வாறு சமூகங்களுக்கிடையே பிணக்கை உண்டு பண்ணித்தான் கலை சேவை செய்ய வேண்டுமா கமலஹாஸா! சிந்திக்க மாட்டீரா!

பிஜேபியின் ஊது குழலாக இருந்த இவரது துணைவி கவுதமியின் பேச்சை கேட்டு இப்படி கதையை வைத்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். இந்த கூத்தாடிகள் பணம் பண்ணுவதற்காக எதையாவது சிக்கலான பிரச்னையை கையிலெடுத்து காசு பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். இது போன்ற படங்களை நமது சென்சார் எவ்வாறு அனுமதிக்கிறது? ஒரு சமூகத்தை குற்றவாளிகளாக சிததரித்தால் அதனால் சமூகங்களில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்கு தெரியாதா?

இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் முஸ்லிம்களை கைது செய்வது காவல் துறையின் வேலையாக இருந்தது. 10 வருடங்கள் 20 வருடங்கள் விசாரணைக் கைதிகளாகவே இருந்து பின்னர் விடுவிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தற்போது உண்மை குற்றவாளிகள் அனைவருமே இந்து பாசிச அமைப்புகளை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று புலனாய்வு சொல்கிறது. வரிசையாக உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று கூட நமது உள்துறை அமைச்சர் இந்திய நாட்டின் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு பின்னாலும் ஆர்எஸஎஸ, பிஜேபி உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு ஆதாரங்களும் உள்ளதாக சொல்லியிருப்பது பலரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு குற்றம் எவனோ செய்திருக்க அதன் பலனை முஸ்லிம்கள் இதுவரை அனுபவித்தது பத்தாதா? இன்னுமா முஸ்லிம்களின் ரத்தம் வேண்டும்?

தனது படத்தில் இந்துத்வாவாதிகள் மாலேகானிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸிலும், மக்கா மஸ்ஜிதிலும் எவ்வாறு குண்டு வைத்தாரகள். எவ்வாறு அதை காரணமாக வைத்து முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டனர் என்ற கதையை எடுக்க தைரியம் உள்ளதா? அப்படி எடுத்தால் படத்தை முதலில் சென்சார் போர்டுதான் அனுமதிக்குமா?

சமூகத்தை சீர்திருத்த வருபவன் தனது சொந்த வாழ்வில் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். இந்த யோக்கிய சிகாமணி தனது சொந்த வாழ்விலாவது தூய்மையை கடைபிடித்தது உண்டா? வாணி கணபதி போய், சரிஹா போய் தற்போது உள்ளது கவுதமி. கவுதமியையும் இவர் இதுவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. 'உங்களுக்கு ஆண்மை இல்லையாமே?' என்று ஒரு நிருபர் குதர்க்கமாக கேட்க 'என்னோடு கூட நடித்த நடிகைகளிடம் கேட்டுப் பாருங்கள்' என்று அருள் வாக்கு சொன்னவர்தான் இந்த ஒலக நாயகன். இந்த சூழலில் வளர்ந்த இவர் மகள் இன்று எந்த அளவு உடையை களைய வேண்டுமோ அந்த அளவு களைந்து கலைச் சேவை செய்து வருகிறார். மகளின் திறமையைக் கண்டு தகப்பனுக்கு அவ்வளவு பூரிப்பு. இப்படி தனது சொந்நத வாழ்விலேயே அநேக அசிங்கங்களை சுமந்து கொண்டிருக்கும் இவர் சமூகத்தை எந்த முகத்தோடு திருத்த வருகிறார்? திருத்துவதாக இருந்தாலும் உண்மை நிகழ்வுகளை அல்லவா கதைக் கருவாக அமைக்க வேண்டும்? ஏற்கெனவே இங்குள்ள பத்திரிக்கைகள் முழுவதும் காவி மயமாகி முஸ்லிம்களை தூற்றியே எழுதி வருகின்றன. தற்போதுதான் தகுந்த பதிலடி கொடுக்க ஆரம்பித்தவுடன் தினமலரும், தினமணியும் தங்கள் வாலை சுருட்டிக் கொண்டு நிதானமாக செய்திகளை தருகின்றன. இந்த நிலையில் இந்த உலக நாயகன் திரும்பவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து தனது அரிப்பை தீர்த்து கொள்ள முயற்சிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

முஸ்லிம்கள் வன்முறைக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காமல் சட்டத்தின் துணை கொண்டு இந்த படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க முயற்சிக்க வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் இதனை கமலால் செய்து விட முடியும். முடியவில்லை என்றால் இன்னும் ஒரு வாரம் படத்தை தள்ளி ரிலீஸ் செய்யலாம். ஒரு கலை வியாபாரியான கமல் தனது படத்தின் சில காட்சிகளை மாற்றியே தீர வேண்டும் என்று உரிமையோடு கோரிக்கை வைக்கிறோம்.

--------------------------------------------------------

அடுத்து இவர் உலக நாயனாம். ஹாலிவுட் படங்களையும் இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக கேள்விப்பட்டேன். ஆனால் இவரின் அதிகமான தமிழ் படங்கள் ஹாலிவுட்டிலிருந்து சுட்டவையாகவே உள்ளன. ஒரு கால் ஹாலிவுட் படங்களை இயக்க ஆரம்பித்தால் நம் தமிழ்நாட்டின் பழங் கதைகளையெல்லாம் சுட்டு மோல்டு பண்ணி ஆஸ்கார் வாங்க முயற்சிப்பாரோ...

சமீபத்தில் இணையத்தில் உலா வந்தபோது கமல் எந்தெந்த படங்களிலிருந்தெல்லாம் கதைகளை சுட்டுள்ளார் என்ற விபரத்தைப் பார்த்தேன். மேலதிக தகவலுக்காக அதனைத் தருகிறேன்.


1. பஞ்ச தந்திரம் – Very bad things

2. அன்பே சிவம் – Planes, traines & automobiles

3. அவ்வை சண்முகி – Mrs. doubtfire

4. தெனாலி – What about Bob?

5. மஹாநதி – Hard core

6. இந்திரன் சந்திரன் - Moon over parador

7. மகளிர் மட்டும் – 9 to 5

8. சதிலீலாவதி – She devil

9. சூரசம்ஹாரம் – Witness

10. நள தமயந்தி – Green card

11. நம்மவர் – The Principal

12. ராஜ பார்வை – Butterfiles are free

13. குணா – Tie me up, Tie me down

14. பம்மல் கே சம்பந்தம் – The Bachelor

15. மன்மதன் அம்பு – Romance on the high seas

16. விருமாண்டி – Rashomon, Life of David Gale

17. நாயகன் – God father

18. வாழ்வே மாயம் – Premabhisekham

19. நீல மலர்கள் – Anuraag

20. உன்னைப் போல் ஒருவன் – A Wednesday

21. குருதி புனல் – Drohkaal

22. வசூல் ராஜா எம்பிபிஎஸ் – Munnabhai m.b.b.s

23. எனக்குள் ஒருவன் – Karz (in turn from the reincarnation of Peter proud)

ஹாலிவுட் படங்களையும் மற்ற மொழி படங்களையும் எவ்வாறு திறமையாக காப்பி அடிப்பது என்பதற்கு வேண்டுமானால் ஒரு ஆஸ்கார் விருதை உருவாக்கி அதற்கு நமது கமலை பரிந்துரைக்கலாம். :-)

நான் படிக்கும் காலங்களில் சலங்கை ஒலியையும், ராஜ பார்வையையும், மூன்றாம் பிறையையும் பலமுறை பார்த்துள்ளேன். அந்த அளவு அபிமானத்துக்குரிய நடிகர். தற்போது இணையத்தில் எழுத வந்தவுடன் சினிமா அதிகம் பார்ப்பதும் இல்லை. இன்றும் இவர் மேல் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை பொய்க்காமல் இருக்க ஆட்சேபகரமான சீன்களை நீக்கி விட்டு ஆஸகார் ம்ட்டுமல்ல ஐநாவுக்கே சென்று வரட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை.



24 comments:

  1. // இன்றும் இவர் மேல் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை பொய்க்காமல் இருக்க ஆட்சேபகரமான சீன்களை நீக்கி விட்டு ஆஸகார் ம்ட்டுமல்ல ஐநாவுக்கே சென்று வரட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை.
    //

    ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க அண்ணே....

    ReplyDelete
  2. சகோ சிராஜ்!

    //ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க அண்ணே....//

    சூட்டோடு சூடாக உடன் கருத்தை பதிந்தமைக்கு நன்றி!

    நாம் பண்ற இந்த அளப்பறையில படத்துக்கு விளம்பரம் அதிகமாகி ஓஹோண்டு ஓடிடுமோ! :-)

    ReplyDelete
  3. nalla sollideenga...

    ReplyDelete
  4. விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் -

    முஸ்லிம் தலைவர்கள் 30 பேர் போர்க்கொடி


    Posted by: Shankar

    சென்னை: முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் கொண்ட விஸ்வரூபம் படத்தை திரையிட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர் அறிவித்துள்ளனர்.

    இஸ்லாமிய சமூக மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா தலைமையில், 24-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர், நேற்று மாலை 3 மணி அளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் கூடுதல் கமிஷனர்களை சந்தித்து பேசினார்கள்.

    இந்த பேச்சுவார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. எம்.எச்.ஜவாஹிருல்லாவும் கலந்து கொண்டார்.

    பேச்சுவார்த்தை முடிந்தவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள் கூறுகையில்,

    "நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்' படத்தை பார்த்தோம்.

    அந்த படம் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.

    ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகளைப்போல் சித்தரித்து அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு இந்திய அரசின் உளவு அமைப்பான ரா அமைப்பு அதிகாரி பயிற்சி கொடுப்பதுபோல காட்சிகள் உள்ளன.

    மேலும் இஸ்லாமிய மத கோட்பாடுகளையும் தவறாக அந்த படத்தில் காட்டியுள்ளார் கமல்.

    தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் இந்த படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது.

    இந்த படம் வெளிவந்தால், தேசிய ஒருமைப்பாட்ட நாசமாகிவிடும்.

    ஏற்கெனவே மோசமான நிலையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

    வருகிற 25-ந்தேதி அந்த படத்தை வெளியிடவிடாமல் தமிழக அரசும், மத்திய அரசும் தடை செய்ய வேண்டும்.

    போலீஸ் கமிஷனரிடம் எங்கள் நிலையை எடுத்து கூறிவிட்டோம்.

    அடுத்து உள்துறை செயலாளரை நாளை (இன்று) சந்திக்க உள்ளோம்.

    உயிரைக் கொடுத்தாவது... படத்தை அரசு தடை செய்யாவிட்டால், நாங்கள் உயிரை கொடுத்தாவது, படம் வெளிவரவிடாமல் தடுப்போம்.

    இந்த படத்தை வெளியிட அனுமதி கொடுத்த தணிக்கை குழு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    25-ந் தேதிக்குள் இதற்கு ஒரு நல்ல முடிவு காண அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்," என்றனர்.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/muslim-leaders-urged-ban-viswaroopam-168418.html

    ReplyDelete
  5. விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் :

    முஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு


    Tuesday, 22 January 2013 20:49 administrator
    E-mail Print PDF


    நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.

    இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

    திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.

    தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    இந்தியத் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது.

    தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மாமா, மச்சான் உறவு முறைப் பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்கவல்லது ‘விஸ்வரூபம்’ திரைப்படம்.

    ‘வைதீக பிராமணனை விட, முற்போக்கு பிராமணன் மிகவும் ஆபத்தானவன்’ என்று சொன்ன ஐயா பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது.


    இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தமுமுக உள்ளிட்ட முஸ்லிம்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

    SOURCE: http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2973:2013-01-22-15-21-34&catid=58:2009-10-11-12-42-41

    ReplyDelete
  6. Anonymous10:16 PM

    dheen said...

    பாப்பான் rss தீவிரவாதிகள் திரைப்படங்களின் மூலமாக இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைகளை இந்தியாவில் விதைதான் . சஹீத் பலனிபவா சொன்னார். நல்ல சிந்தனை உடைய . ரஜினிக்கு லதாவையும். கமலுக்கு கவுதமியும்.

    ReplyDelete
  7. 10 தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு: மத்திய உள்துறை செயலாளர்!
    23 Jan 2013
    புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் பங்கேற்ற குறைந்தது 10 தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணையில் இவர்களின் ஆர்.எஸ்.எஸ் உறவு நிரூபணமானதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதுபோல ஏதேனும் தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தொடர்புண்டா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய 10 நபர்களின் பெயரையும் அவர் வெளியிட்டார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளுக்கு சூத்திரதாரியான, ஹிந்துத்துவா தீவிரவாதிகளாலேயே கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் பெயரும் இதில் அடங்கும். 2003-ஆம் ஆண்டு வரை சுனில் ஜோஷி தேவாஸ், மாவு ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்காக பணியாற்றியுள்ளான்.

    தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹிந்துத்துவா தீவிரவாதி. இவன் மாவு, இந்தூர்,வடக்கு காசி, ஸாஜாபூர் ஆகிய இடங்களில் 2006-ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றியுள்ளான். சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்ட லோகேஷ் சர்மா உள்துறை செயலாளர் வெளியிட்ட மற்றொரு தீவிரவாதி ஆவான்.தியோகர் நகர் ஆர்.எஸ்.எஸ் காரியாவாகாக இவன் பணியாற்றியுள்ளான்.சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளில் முக்கிய சூத்திரதாரியான சுவாமி அஸிமானந்தா 2007 வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்பான வனவாசி கல்யாண் பரிஷத்தின் குஜராத் தலைவராக பணியாற்றியவன்.

    சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜேந்தர் என்ற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ் வர்க் விஸ்தாரக்காக பணியாற்றியவன். இவன் கைது செய்யப்பட்டுள்ளான். கோத்ராவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரும், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான முகேஷ் வஸானி, மாவு மற்றும் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றிய தேவேந்தர் குப்தா (மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவன்), 2007-ஆம் ஆண்டு ஷாஜன்பூரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றிய சந்திரசேகர் லிவே (மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவன்), ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான கமால் சவுகான் (சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதானவன்), ஆர்.எஸ்.எஸ் ஸஹசாரி ராம்ஜி கல்சங்கரா (சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் தலைமறைவு குற்றவாளி) ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் வெளியிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் ஆவர்.

    ReplyDelete
  8. விஸ்வரூபம் அல்ல இது விஷரூபம்

    விஸ்வரூபம் திரைப்படம் குறித்து பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு அளித்த பேட்டி (வீடியோ)

    Wednesday, 23 January 2013 12:59

    இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன.

    இந்தப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அவை இன்று செவ்வாய்க்கிழமை மனு ஒன்றைத் தந்துள்ளன.

    முன்னதாக இந்தப் படத்தை கமலஹாசன் வீட்டில் பார்த்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா படத்தின் பல காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருக்கிறது என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

    சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் தமிழகத்தின் கோவையில் ஒரு ஆண்டு இருந்ததகாவும்,

    12 வயதேயான முஸ்லிம் சிறுவன் ஆயுதங்கள் குறித்த அறிவு கொண்டுள்ளதாக காட்டப்பட்டதாகவும்,

    பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரார்த்தனை செய்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

    கலைஞர்களுக்கு ஒரு கலைப் படைப்பை உருவாக்கும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று வாதிடும் ஜவாஹிருல்லா சமூகப் பொறுப்பின்றி இப்படம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


    சுட்டியை சொடுக்கி >>>> பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு விஷ (ஸ்வ) ரூபம் திரைப்படம் அளித்த பேட்டி விடியோ காணுங்கள்.


    source: http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2975:------bbc----&catid=72:tmmk-videos&Itemid=168

    ReplyDelete
  9. Anonymous12:35 AM

    இதே கமல்தான் குருதிப்புனலில் அர்ஜுனுக்கு அப்பாஸ் என்னும் பாத்திரம் அளித்து நல்ல அதிகாரியாக காண்பித்து இருப்பார். அதில் தீவிரவாதம் செய்வது ஒரு முஸ்லிம் அல்ல. ஹே ராமில் ஷாருக்கானையும் மிக நல்லவராகவே சித்தரித்திருப்பார். விக்ரம் என்னும் படத்தில் தீவிரவாதி சுகிர்தராஜா .. முஸ்லிம் அல்ல . இன்னும் எத்தனயோ படங்கள் இந்துக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுத்திருப்பார். அதனை ஒரு படத்தில் வரும் பாத்திரமாக எடுத்துக் கொண்டு எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு இருப்போம். வேட்டையாடு விளையாடு எந்த வில்லனும் முஸ்லிம் இல்லை. விருமாண்டி... வில்லன்கள் தேவர் இனத்தவர்கள். அவர்கள் பொதுவாக உங்களை மாதிரி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர்களும் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் கமல் படங்களில் வரும் எத்தனையோ வில்லன்கள் , வெற்றிவிழா ஜிந்தா , காக்கி சட்டை தகடு தகடு சத்யராஜ் என எவரும் முஸ்லிமாக சித்தரிக்கப் படவில்லை. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். விஸ்வரூபம் ஒரு படம் மட்டுமே . அதனை வைத்து இங்கு யாரும் முஸ்லிம்களை எடை போடுவதில்லை.

    ராஜேஷ்

    ReplyDelete
  10. ஏன் உங்க அல்லாவும் குரானும் நபியும் கமலைப்பாத்து பயப்படுறீங்க?

    ReplyDelete
  11. இது கமலுக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதப்பட்டதல்ல! இந்த இடுக்கை குறித்தும் எழுதப்பட்டதால்., சினிமா சம்பந்தம் என்பதால் நிறைய பேர் இங்கே வர வாய்ப்புண்டு என்பதால் .......


    எனது பக்கத்து வீட்டுக்காரர் ( தற்போதைய சூழலில் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் , சராசரி நல்லவர் )அவரது மதத்தில் , மிக குறைந்த பிரிவினை சேர்ந்தவர். தனது ( மிக மிக அளவான வருமானமுள்ள) சம்பாத்தியத்தில் பத்து சதவீதம் மாதம் மாதம் அவரது வலிபாட்டுதலத்துக்கு அளித்துவருபவர். - இந்த இரண்டையும் தவிர்த்த வேறு எந்த விஷயம் குறித்தும் அவரிடம் பேசலாம். அந்த இரண்டையும் குறித்து பேசினால் அவருக்கு அவரது வழிபாட்டு குரு சொன்ன " சாத்தான் ... உங்களை இந்த மாதிரி மனிதர்கள் மூலம்தான் வழிகெடுப்பான் " என்ற வாக்கியத்தை நினைத்து கொள்வார்! என்னை போன்ற நெருங்கியவரிடம் அதனை சொல்லவும் செய்வார்!

    ReplyDelete
  12. குவைத் தமிழ் இஸ்லாமியச் (K -Tic) சங்கத்தின் உயர்மட்ட குழு நேற்றிரவு அவசரமாக கூடி விஸ்வரூபம் என்ற இழிவான திரைப்படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது.

    குவைத் அரசாங்க அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து இந்த திரைப்படத்தின் கதை குறித்தும், இதனால் விளையப்போகும் மோசமான விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து, குவைத் நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கத்தின் நிர்வாகிகள் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட தமிழக நாளிதழை குவைத்தில் தடை செய்தவர்கள் இந்த அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  13. ** நாம் பண்ற இந்த அளப்பறையில படத்துக்கு விளம்பரம் அதிகமாகி ஓஹோண்டு ஓடிடுமோ! :-)

    ஆமாம் நிச்சயமாக ஓடும்.........
    கனவிலும் கமல் தன படத்துக்கு இந்நிலை வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் ..
    விநியோகஸ்தர்களிடம் எதிர்பார்த்த விலை போகாத காரணத்தினால் தான் DTH இல் விலை பேசி இருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது.

    ReplyDelete
  14. விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்

    உள்துறைச் செயலாளரிடம்

    முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தல்


    இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் இன்று தமிழக உள்துறைச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    "கமலஹாசன் எழுதி இயக்கி நடித்து வெளிவர உள்ள விஸ்வரூபம் திரைப்படம் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் ஏற்கனவே கடந்த 7.1.2013 அன்று தங்களை நேரில் சந்தித்து அச்சத்தையும், ஐயங்களையும் பதிவு செய்திருந்தோம்.

    திரைப்படத்தைப் பார்க்காமல் எந்த முன்முடிவுக்கும் வர இயலாது என்ற காரணத்தினால் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்க அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர்களுக்கு கடந்த 21ஆம் நாள் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு முழுமையாகப் பார்க்கப்பட்டது.

    வழக்கமான ஒரு திரைப்படமாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவிற்கு அப்படம் முழுவதும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் காயப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது எங்களால் உணர முடிந்தது.

    உலகம் முழுவதும் வாழும் 160 கோடி முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்றி வரும் திருக்குர்ஆனையும், முஸ்லிம்களின் வழிபாட்டு முறைகளும் கூட மிக மோசமாக சித்தரிக்கப்பட்டு, இதயங்களை ரணப்படுத்துகிறது.

    உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன், தீவிரவாதக் குழுக்களின் கையேடு புத்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளதை முஸ்லிம் சமுதாயம் எள்முனையளவும் ஏற்றுக்கொள்ளாது.

    சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கிவிட்டு திரையிடப்படும் அளவிற்கு சில வசனங்களில் மட்டும் வலிகளை ஏற்படுத்தாமல், முழுக் கதையின் களங்களும் தளங்களும் காயங்களை உண்டாக்குபவை; உடன்பாடற்றவை; ஆட்சேபத்திற்கு உரியவை.


    விஸ்வரூபம் திரைப்படம் இப்போதுள்ள நிலையிலோ அல்லது சிறிது திருத்தங்களுடனோ வெளியிடப்படும் பட்சத்தில் அது நல்லிணக்கமும், அமைதியும் நிலவும் தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து விடுமோ என்ற எங்கள் அச்சத்தை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறோம்.

    விஸ்வரூபம் திரைப்படம் நாளை மறுநாள் திரையிட திட்டமிட்டிருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இப்படம் திரையரங்குகளிலும் மற்றும் டி.டி.எச்.சிலும் வர இயலாத அளவுக்கு படத்தின் உபகரணங்களைப் பறிமுதல் செய்யும்படி ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.''

    முஹம்மது ஹனீபா

    ஒருங்கிணைப்பாளர்,

    தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள்.

    ReplyDelete
  15. ///அதேபோன்று தமிழக கிராமங்களை சென்று கொஞ்சம் பாருங்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் உறவு முறை யோடு அன்போடு நட்பாக பழகி வருகின்றனர். அது பொருக்கவில்லையா தங்களுக்கு. இவ்வாறு சமூகங்களுக்கிடையே பிணக்கை உண்டு பண்ணித்தான் கலை சேவை செய்ய வேண்டுமா கமலஹாஸா! சிந்திக்க மாட்டீரா! ////

    மிகவும் பொறுப்புணர்வு மிக்க வரிகள்

    ReplyDelete
  16. முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

    இன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: " இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?"

    போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.

    உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.

    இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை.

    தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள்.

    ஒரு மூலையில் கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)

    இப்போது விசயத்துக்கு வருவோம்.

    விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

    இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.

    அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.



    சொடுக்கி படிக்கவும் >>>>>
    முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

    ReplyDelete
  17. Anonymous1:58 AM

    கமலின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் காட்டியிருக்கிறார், இஸ்லாமியர்களை அவமானப்படுத்தியிருக்கிறார் என்றெல்லாம் எழும் குற்றச்சாட்டுகளால் படம் தடை பட்டிருக்கிறது. சரி! இஸ்லாம் என்ற மதத்தை exploit செய்வது யார்? இஸ்லாம் என்ற மதத்தில் இருக்கும் 'ஜிகாத்-புனிதப்போர்' போன்ற 'தத்துவங்களை' exploit செய்வது யார்? அல்லாவின் பேரால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என அப்பாவி மக்களை அல்லாவின் பேரால் கொல்வது யார்? கண்டிப்பாக இன்று கமலுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் யாவரும் இதில் ஈடுபடுவதில்லை, ஆனால் அதில் ஈடுபடுபவர்கள் இஸ்லாமியர்கள் தானே? அப்படித்தானே தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்?? அடுத்து! இப்படி உலகில் இருக்கும் ஒன்றான, நாம் கண்முன் பார்க்கும் ஒன்றான இஸ்லாமிய பயங்கரவாதத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தபின் அந்தப் படத்தை எப்படித்தான் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்? இஸ்லாமிய மதத்தின் பேரால் நடக்கும் பயங்கரவாதங்களைச் செய்பவர்களை கண்டிப்பாக சீக்கியர்களாக காட்டமுடியாது எனும்போது இஸ்லாமியர்களாகத் தானே காட்ட முடியும்??

    கோவையில் உமர் என்ற பெரிய பயங்கரவாதி தங்கியிருந்ததாகக் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது! வரலாற்றுப் புனைவு (Historical Fiction) என்று ஒன்று உண்டு. இருப்பவர்களையும், இருந்தவர்களையும், நிகழ்ந்தவைகளையும் வைத்து கொஞ்சம் கற்பனையைக் கலந்து கதை புனைவதை அப்படிச் சொல்வார்கள். (ஹேராம் கூட வரலாற்றுப் புனைவுதான்.) இந்தக் கதை அப்படிப்பட்டதாய் இருக்கலாம். இதற்கு கூட 'இந்தக் கதை கற்பனையே' என டைட்டில் போடச் சொல்லி போராடவேண்டுமேயொழிய ஒரேடியாய் காட்சிகளை நீக்கு எனப் போராடுவது எவ்வகையில் நியாயம்? (அந்த சம்பவம் உண்மைதான் என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் கமல் கூறியிருக்கிறார். ஆதாரம் இல்லாத பட்சத்தில் 'புனைவு' எனக் குறிப்பிடவேண்டியது அவசியம்)

    இன்று தடைகோரி போராடுகிறவர்கள் என்றாவது, இஸ்லாத்தின் highest authorityயின் மூலம் எந்த அப்பாவியின் உயிரைப் பறிப்பவனும் இஸ்லாமியன் கிடையாது என்று அறிவிக்கச் சொல்லி போராடியிருக்கிறார்களா? அல்லது சானியா மிர்சாவுக்கு 'ஃபத்வா' கொடுத்த அமைப்பு எதேனும் இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்காக எதேனும் இஸ்லாமிய பயங்கரவாதிக்கு 'ஃபத்வா' கொடுத்திருக்கிறதா? அல்லது இஸ்லாமிய பயங்கரவாதங்களை எதிர்த்து, "எங்கள் மதம் இப்படி சொல்லிக்கொடுக்கவில்லை. எங்கள் மதத்தின் பேரால் இப்படிச் செய்பவர்கள் எங்கள் சகோதரர்கள் இல்லை" என மக்களிடம் பரப்புரையேனும் செய்திருக்கிறார்களா? ஆக, நடப்பவை எல்லாம் இஸ்லாத்தின் பேரால் நடக்கும்போது, ஒரு சமகாலத் திரைப்படம் அதைச் சொல்லக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? கமலும், விஜய்யும் கிடைத்தால் அவர்களிடம் சென்று போராடுவதும், உண்மையாகவே மதத்தை இழிவு செய்யும் தீவிர-மதவாதிகளிடம் சென்று போராடாததும் என்ன முரண்???!!!!


    http://www.soundcameraaction.com/articles/item/1392-article-on-ban-on-vishwaroopam-movie-don-ashok

    ReplyDelete
  18. Anonymous2:12 AM

    இன்று தடைகோரி போராடுகிறவர்கள் என்றாவது, இஸ்லாத்தின் highest authorityயின் மூலம் எந்த அப்பாவியின் உயிரைப் பறிப்பவனும் இஸ்லாமியன் கிடையாது என்று அறிவிக்கச் சொல்லி போராடியிருக்கிறார்களா? அல்லது சானியா மிர்சாவுக்கு ‘ஃபத்வா’ கொடுத்த அமைப்பு எதேனும் இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்காக எதேனும் இஸ்லாமிய பயங்கரவாதிக்கு ‘ஃபத்வா’ கொடுத்திருக்கிறதா? அல்லது இஸ்லாமிய பயங்கரவாதங்களை எதிர்த்து, “எங்கள் மதம் இப்படி சொல்லிக்கொடுக்கவில்லை. எங்கள் மதத்தின் பேரால் இப்படிச் செய்பவர்கள் எங்கள் சகோதரர்கள் இல்லை” என மக்களிடம் பரப்புரையேனும் செய்திருக்கிறார்களா? ஆக, நடப்பவை எல்லாம் இஸ்லாத்தின் பேரால் நடக்கும்போது, ஒரு சமகாலத் திரைப்படம் அதைச் சொல்லக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? கமலும், விஜய்யும் கிடைத்தால் அவர்களிடம் சென்று போராடுவதும், உண்மையாகவே மதத்தை இழிவு செய்யும் தீவிர-மதவாதிகளிடம் சென்று போராடாததும் என்ன முரண்???!!!!

    http://www.soundcameraaction.com/articles/item/1392-article-on-ban-on-vishwaroopam-movie-don-ashok

    ReplyDelete
  19. விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக தடை விதித்தது


    கொழும்பு: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது.

    பல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது.

    விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

    இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/vishwaroopam-screening-suspended-168525.html

    ReplyDelete
  20. SALAM,

    எங்கிருந்து சுட்டால் என்ன வியாபாரம் ஆனால் போதும் என்ற மனநிலை உடையவர் கமல்.அதனால் தான் இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு காசுபார்கிறார்.
    -------------------------

    முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
    இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

    கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

    ReplyDelete
  21. We will watch this movie. Something which made you shiver . Hats off to Kamal.

    He has joined the league of Salman Rushdie, Taslima Nasreen and countless people after truth. These people and their truth makes you jitter.

    We will spread the same truth and make sure that you guys are shown your place and sidelined always.

    Thanks for showing your true colors.

    ReplyDelete
  22. Kamal naayku indhiya arasu thooku thandanai kodukkavendum kalavarathai thoondiyatharkaaga

    ReplyDelete
  23. வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. சற்று ஃப்ரீ ஆனவுடன் வழமை போல் சந்திப்போம்.

    போராட்டத்தின் பலனாக தமிழகத்திலும் நாட்டின் பல பாகங்களிலும், உலகில் பல நாடுகளிலும் இந்த படம் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் படிப்பினையைப் பெற்றுக் கொண்டு இந்துத்வா எண்ணங்களை தூரமாக்கி சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் படங்களை கொண்டு வர கமல் முயற்சிக்க வேண்டும். மற்ற கூத்தாடிகளும் முஸ்லிம்களை அவதூறாக சித்தரித்து பணம் பண்ண நினைத்தால் நஷ்டமே ஏற்படும். பணம் பண்ண முடியாது என்பதை உணர வேண்டும்.

    ReplyDelete
  24. பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

    முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

    இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

    சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

    இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

    பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

    இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)