இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன்
’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.
இந்து மதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு.
சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல.
சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது.
சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது.
‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication)
ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்)
சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும்.
அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை.
இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன.
ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது.
இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர்.
ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது.
குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை.
பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.
பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன.
பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர்.
பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை.
கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள்.
கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள்.
கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர்.
சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது.
தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம்.
பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது.
இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.
இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே!
சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது.
ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம்.
இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல.
புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம்.
சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம்.
வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர்.
உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை.
தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை.
சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!
ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும்.
நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன.
- ம.செந்தமிழன்
இதுக்கு பெயர்தான் Divide and Conquer பாலிசியா? நன்றாக இருக்கிறது. எந்த மதம் என்று சொல்லிக்கொண்டால் என்னங்க? நல்லவனாக இருந்தால் போதாதா? ஆரிய வழிபாட்டு முறையோ, இல்லை தமிழ் வழிபாட்டு முறையோ இல்லை இரண்டும் கலந்த முறையோ? அவற்றை என்னளவில் யாருக்கும் தீங்கு செய்யாமல் செய்தால் போதாதா?
ReplyDeleteசரி விட்டுதள்ளுங்க. இப்போ என்ன சொல்ல வர்ரீங்க? தமிழர்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றவா? இல்லை இசுலாமுக்கு வந்துடவா? வந்துட்டா போச்சு.....
அப்புறம் என்னுடைய தாழ்மையான கருத்து. என் மதம் எவ்வளவு மென்மையானது என்று கூறுபவனே மதவாதி. அடுத்தவன் மதம் எவ்வளவு கேவலமானது என்று கூறுபவன் மதவெறியன்.
திரு பாலா!
ReplyDelete//இதுக்கு பெயர்தான் Divide and Conquer பாலிசியா? நன்றாக இருக்கிறது. எந்த மதம் என்று சொல்லிக்கொண்டால் என்னங்க? நல்லவனாக இருந்தால் போதாதா? ஆரிய வழிபாட்டு முறையோ, இல்லை தமிழ் வழிபாட்டு முறையோ இல்லை இரண்டும் கலந்த முறையோ? அவற்றை என்னளவில் யாருக்கும் தீங்கு செய்யாமல் செய்தால் போதாதா?//
தீங்கு செய்யாமல் தங்கள் வழிபாடுகளை செய்து வருபவர்கள் பற்றி யாருமே கவலைப்பட போவதில்லை. ஆனால் இங்கு என்ன நடக்கிறது? இஸ்லாத்தை ஏற்கும் இந்துக்களை தடுப்பதற்காக இஸ்லாத்தின் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. குஜராத்தில் என்கவுண்டரில் இறந்த இர்ஸத் ஜஹான் குற்றமற்றவர் அது ஒரு போலி என்கவுண்டர் என்று சிபிஐ நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. குஜராத்தில் மோடி தலைமையில் 2500 முஸ்லிம்கள் அதுவும் அப்பாவிகள் கொல்லப்படவில்லையா? மாலேகான், அஜ்மீர் குண்டு வெடிப்புளை முஸ்லிம பெயர்களில் நடத்தி விட்டு பிறகு அதனை செய்தது இந்துத்வாவாதிகள் என்ற உண்மை வெளி வந்ததை நாம் மறுக்க முடியுமா? இவை எல்லாம் எதனால் நடைபெறுகிறது. இந்து மதத்தை காப்பாற்ற வேண்டும், அழியும் வர்ணாசிரமத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்று இந்து இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு சிறுபான்மையினருக்கு எதிராக களம் இறக்கப்படுகின்றனர்.
நான மட்டும் உயர்ந்தவன்: மற்ற அனைவரும் சூத்திரர்கள் என்று கூறுவது எந்த வகை நியாயம்? இது மற்றவர்களின் பிறப்பையே கேலிக் கூத்தாக்கிறதல்லவா?
கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் தவறானது என்பதற்கு விளக்கமளிப்பதுதான் முறை. அதை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
//சரி விட்டுதள்ளுங்க. இப்போ என்ன சொல்ல வர்ரீங்க? தமிழர்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றவா? இல்லை இசுலாமுக்கு வந்துடவா? வந்துட்டா போச்சு.....//
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதுதான் தமிழர்களின் பண்டைய வழிபாடாக இருந்துள்ளது. இஸ்லாமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. ஆனால் சில இந்துத்வாவாதிகள் இஸ்லாம் அரேபிய மதம என்றும் இந்த மண்ணுக்கு சொந்தமில்லாத மதம் என்றும் வாதம் வைக்கப்படும் போது இந்து மதமும் இந்நாட்டு மதம் அல்ல என்று சொல்ல வேண்டியது என் போன்றோரின் கடமையல்லவா?
நான் மத வெறியன் அல்ல. இன்றும் எனக்கு அதிகம் இந்து நண்பர்களே... அது தொடரும். மத ஒற்றுமைக்கும், இந்நாட்டு பாதுகாப்புக்கும் என்றுமே முன்னுரிமை கொடுப்பவன் நான்.
இந்த கட்டுரை உங்களின் ஆக்கம் அல்ல. அதை அப்படியே அச்சு பிசகாமல் இங்கே மறுபதிப்பு செய்யவேண்டிய அவசியம் என்ன? உங்களின் நோக்கம் இந்து என்ற பெயரால் மோசடி செய்யும் சிலரை பற்றியா? இல்லை யாருக்கும் தீங்கு செய்யாமல் இந்து என்று சொல்லிக்கொண்டு தனி வழிபட்டு முறை கொண்ட அப்பாவிகளைபற்றியா?
ReplyDeleteஅப்படி இருப்பவர்களின் மனதை இந்த கட்டுரை எவ்வளவு புண்படுத்தும் என்பது தெரியாதா? நான் எந்த இந்துதுவா, ஆர்எஸ்எஸ் கோஷ்டியையும் சேராதவன். இந்த மாதிரி கட்டுரைகளை படிக்கும்போது எங்களின் மனம் புண்படும் என்பது உங்களுக்கு தெரியாதா? தாக்கவேண்டும் என்று நினைத்தால் நேரிடையாக இந்துத்துவவாதிகளை தாக்கவும். இந்தமாதிரி கட்டுரைகளை வெளியிட்டு வெறுப்பை சம்பாதிக்காதீர்கள்.
ஒத்துக்கொள்கிறேன். எங்களின் வழிபாட்டு முறை ஆரிய, தமிழ் வழிபாட்டு முறைகளின் கலவைதான். இன்றும் எங்கள் வீட்டு விசேசங்களில் பிராமணர்களை வைத்து சடங்குகள் செய்வதில்லை. அதனால் தங்களுக்கென்ன வந்தது?
பொதுப்படையாக இப்படி எழுதி கூட்டத்துக்குள் குழப்பம் விளைவிக்கவேண்டியது, எவனாவது கேள்விகேட்டால், உன்னை சொல்லவில்லை, இந்துத்துவ வாதிகளை சொன்னேன் என்று சொல்லவேண்டியது. -தொடரும்
நீங்கள் எப்படி இசுலாமை விரும்பி ஏற்று கொண்டிருக்கிறீர்களோ, அதே போல நாங்களும் இந்த மதத்தை ஏற்று கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteஉன்னை சூத்திரன் என்று பிராமணன் சொல்கிறான் என்று ஏத்தி விடுகிற வேலை எல்லாம் இங்கு வேண்டாம். உங்களை தீவிரவாதி என்று சொன்னால் நீங்கள் அப்படி ஆகிவிடுகிறீர்களா? இல்லையே? அதே போல, அவன் சொன்னால் சொல்லிக்கொண்டு போகட்டும். அவன் சொல்வதால் அப்படி ஆகி விடுவதில்லை. இந்த மாதிரி சொல்வதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி. உங்களைபோன்றவர்கள் இதை நன்றாக பயன்படுத்துகிறீர்கள்.
சரி உங்கள் வழிக்கே வருகிறேன். இந்த கட்டுரையை எழுதியவரின் நோக்கம் பற்றி எனக்கு கவலை இல்லை. இதை காப்பி பேஸ்ட் செய்த உங்களின் நோக்கம் என்ன?
தங்களை இந்து என்று நம்பி கொண்டிருக்கும் தமிழர்களை அவர்களின் வழிபாட்டு முறைக்கே திருப்பி விடுவதா? அல்லது இசுலாமை நோக்கி அழைப்பதா?
ஹிந்து என்ற பெயர் தாங்கிய இந்த மதம் ஆரம்ப காலங்களில் ஒரு இறைவனைத் தான் வழிபடச் சொல்கிறது. நாளடைவில் ஊர் பெரியவர்கள்,மகான்கள்,அரசர்கள் அனைவரையும் கடவுளின் அவதாரமாக்கி, இன்று நாம் பார்க்கும் பல ஆயிரம் தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். இதற்கு ஒரு சில ஆதாரங்களை இந்து மத கிரந்தங்களிலிருந்தே எடுத்தாய்வோம்.
ReplyDeleteஉபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்
'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)
ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)
ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)
ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)
யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'
யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)
யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.
பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'
மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறைவனுக்குரிய இலக்கணங்களை மிக அழகாக சொல்கின்றன. ஆனால் இன்று நமது இந்தியாவில் பின்பற்றப்படும் இறை வழிபாடு இதற்கு முற்றிலும் மாற்றாக உள்ளதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்.
//உன்னை சூத்திரன் என்று பிராமணன் சொல்கிறான் என்று ஏத்தி விடுகிற வேலை எல்லாம் இங்கு வேண்டாம். உங்களை தீவிரவாதி என்று சொன்னால் நீங்கள் அப்படி ஆகிவிடுகிறீர்களா? இல்லையே? அதே போல, அவன் சொன்னால் சொல்லிக்கொண்டு போகட்டும். அவன் சொல்வதால் அப்படி ஆகி விடுவதில்லை. இந்த மாதிரி சொல்வதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி. உங்களைபோன்றவர்கள் இதை நன்றாக பயன்படுத்துகிறீர்கள்.//
ReplyDeleteஅதை இறைவன் சொல்கிறான் என்று வேதங்களில் தங்களின் கருத்துக்களை புகுத்தி அதை இன்று வரை அமுல்படுத்தி வருகின்றனர். முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்வது இந்துத்வாவாதிகள். அது மனிதனின் கருத்து. ஆனால் பிராமணர்களை தவிர மற்றவர்கள் சூத்திரர்கள் என்பது இந்து மத வேதம் சொல்வது. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது நண்பரே...
இஸ்லாமைப் போல இந்து மதமும் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான் என்பதை நிறுவுவதே இந்த கட்டுரையின் நோக்கம். இந்துக்களை பிரித்து அதில் இஸ்லாத்தை வளர்க்க வேண்டிய நிலையில் இஸ்லாம் இல்லை. அப்படி செய்யச் சொல்லி இஸ்லாமும் எங்களுக்கு கட்டளையிடவில்லை.
//சரி உங்கள் வழிக்கே வருகிறேன். இந்த கட்டுரையை எழுதியவரின் நோக்கம் பற்றி எனக்கு கவலை இல்லை. இதை காப்பி பேஸ்ட் செய்த உங்களின் நோக்கம் என்ன?
ReplyDeleteதங்களை இந்து என்று நம்பி கொண்டிருக்கும் தமிழர்களை அவர்களின் வழிபாட்டு முறைக்கே திருப்பி விடுவதா? அல்லது இசுலாமை நோக்கி அழைப்பதா?//
நான் முன்பே சொன்னது போல் இந்து மதம், இஸ்லாமிய மார்க்கம், கிறித்தவ மதம் அனைத்தும் வெளி நாட்டு இறக்குமதிகளே.... தற்போதுள்ள எந்த மதமும் மார்க்கமும் இந்தியாவின் பூர்வீகம் என்று உரிமை கொண்டாட முடியாது என்பதை விளக்குவதற்கே இந்த கட்டுரையை பிரசுரித்தேன்.
//இந்து மதம், இஸ்லாமிய மார்க்கம், கிறித்தவ மதம் அனைத்தும் வெளி நாட்டு இறக்குமதிகளே.... தற்போதுள்ள எந்த மதமும் மார்க்கமும் இந்தியாவின் பூர்வீகம் என்று உரிமை கொண்டாட முடியாது என்பதை விளக்குவதற்கே இந்த கட்டுரையை பிரசுரித்தேன்.
ReplyDeleteஅப்படியானால் கட்டுரையின் தலைப்பு அதற்கேற்றவாறு அல்லவா இருந்திருக்கவேண்டும்?
//அப்படியானால் கட்டுரையின் தலைப்பு அதற்கேற்றவாறு அல்லவா இருந்திருக்கவேண்டும்? //
ReplyDeleteஇந்த கட்டுரையை நான் எழுதவில்லை. இதற்கு தலைப்பும் நான் வைக்கவில்லை. உங்களைப் போன்ற இந்து நண்பர்தான் இதை எழுதியது. இதனை மறு பிரசுரம் செய்தது மட்டுமெ எனது வேலை.
இந்த கட்டுரையை எழுதியவர் வேண்டுமானால் அந்த தலைப்பு வைத்திருக்கலாம்.
ReplyDeleteஉங்களிடம் நான் சொன்னது மற்றும் கேட்டது
//இந்த கட்டுரையை எழுதியவரின் நோக்கம் பற்றி எனக்கு கவலை இல்லை. இதை காப்பி பேஸ்ட் செய்த உங்களின் நோக்கம் என்ன?
தங்களை இந்து என்று நம்பி கொண்டிருக்கும் தமிழர்களை அவர்களின் வழிபாட்டு முறைக்கே திருப்பி விடுவதா? அல்லது இசுலாமை நோக்கி அழைப்பதா?
இதற்கு உங்கள் மறுமொழி
//நான் முன்பே சொன்னது போல் இந்து மதம், இஸ்லாமிய மார்க்கம், கிறித்தவ மதம் அனைத்தும் வெளி நாட்டு இறக்குமதிகளே.... தற்போதுள்ள எந்த மதமும் மார்க்கமும் இந்தியாவின் பூர்வீகம் என்று உரிமை கொண்டாட முடியாது என்பதை விளக்குவதற்கே இந்த கட்டுரையை பிரசுரித்தேன்.//
இந்த கட்டுரை உங்கள் தளத்தில் வெளியாகி உள்ளது. ஆகவே அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. உங்கள் கருத்துப்படி இந்த கட்டுரையில் இருந்து மேற்கோள் காட்டி இருக்கலாம். மற்ற மதங்களை விட்டுவிட்டு, இந்து மதத்தை தாக்கிய கட்டுரையை மட்டும் வெளியிட்டுவிட்டு, எல்லா மதத்தையும்தான் சொன்னேன் என்பது ஊமை குசும்பு + சப்பைகட்டு தானே?(மறுபடி இங்கே உங்கள் ஆழ் மன ஆசைதான் வெளிப்பட்டுள்ளது) முடிந்தால் இஸ்லாம் இந்த மண்ணின் மதமல்ல என்பதற்கு ஒரு கட்டுரையை வெளியிடுங்கள் பார்க்கலாம்)
அப்புறம் உங்க லாஜிக் படியே அவர் ஒரு பெயர்தாங்கி இந்து அவ்வளவே. இதைவைத்து ஒரு இந்துவே இந்து மதத்தை திட்டுகிறார் பார் என்று சைலண்டாக ஊசி சொருக நினைக்கும் உங்கள் பாச்சா பலிக்காது.......
சுவன பிரியரே, நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த கட்டுரையில் தமிழர்களும் இந்தியர்களும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்.' என்ற கொள்கையை பின்பற்றியதாக எங்குமே குறிப்பிடவில்லையே.
ReplyDeleteதிரு
ReplyDeleteபாலா, இவர்களது சூழ்ச்சியை மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்
மகிழ்ச்சி. இவர்களது ஒரே நோக்கம், இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவது, ஆனால்
அதை வெளிப்படையாக சொல்ல இந்த கூட்டத்துக்கு தைரியம் கிடையாது. தலித்துகள்
தான் இவர்களது மத வியாபாரத்தின் முதல் குறி.
சுவனபிரியரே,
ReplyDeleteஉங்கள் கட்டுரையின் அடிப்படையில் இநது சமயம் எந்த வெளி நாட்டில் உருவாகி
இந்தியாவிற்கு வந்தது என்று சொல்ல முடியுமா. ஏதோ இந்து சமயம் இப்படி
இருக்கிறதே என்று வருத்தப்படுபவரை போல ஏன் அடிக்கடி வேடம் இடுகிறீர்கள்.
ஓநாய்களின் அழுகை பற்றீ எல்லாருக்கும் தெரியும்
அனந்தன் கிருஷ்ணன்!
ReplyDelete//சுவனபிரியரே,
உங்கள் கட்டுரையின் அடிப்படையில் இநது சமயம் எந்த வெளி நாட்டில் உருவாகி
இந்தியாவிற்கு வந்தது என்று சொல்ல முடியுமா.//
ஆரியர்களின் பூர்வீகம் எகிப்து மற்றும் இன்றைய ஈரான் மேலும் ரஷ்யாவின் சில பகுதிகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
மேலும் இங்கு நான் பல வருடங்களாக எகிப்தியர்களோடு நெருங்கி பழகியுள்ளேன். அவர்களின் பழக்க வழக்கங்கள் பேச்சுத் திறன், எல்லோரையும் விட தானே அறிவாளி என்ற மமதை இவை அனைத்தும் நம் ஊர் பார்பனர்களை ஒத்து இருக்கும். எந்த கம்பெனியில் சேர்ந்தாலும் எப்படியாவது முதல் இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று அதே எண்ணத்தோடு எந்நேரமும் இருப்பர். அதை சாதித்தும் காண்பிப்பர். சவுதி நாட்டவருக்கு இவர்களை அறவே பிடிக்காது. ஆனால் எகிப்தியர்கள் இல்லாமல் காரியமும் நடக்காது.
இதே நிலைதான் தமிழகத்திலும். பார்பனர்களை இங்குள்ள 80 சதமான இந்துக்களுக்கு பிடிக்காது. ஆனால் அவர்கள் இல்லாமல் இந்து மதத்தில் ஒரு துரும்பு கூட அசையாது. அந்த அளவு இறுக்கமான பிடிப்பு இங்குநாம் பார்க்கிறோம்.
அதே போல் மாட்டை தெய்வமாக வணங்கும் பழக்கம் இங்குள்ள பாரபனர்களுக்கு உண்டு. அதே போல் எகிப்திலும் மாட்டை தெய்வமாக வணங்கியுள்ளனர். அந்த சிலைகள் இன்றும் உள்ளது. குர்ஆனில் கூட இது பற்றிய வர்ணனைகள் வரும். 1400 வருடங்களுக்கு முன்பு அங்கு இஸ்லாம் நுழைவதற்கு முன்பு காளை மாட்டை தெய்வமாக வணங்கியுள்ளனர்.
அதேபோல் ஈரானில் இஸ்லாமிய நாடாக மாறுவதற்கு முன்பு நெருப்பை தெய்வமாக வணங்கியுள்ளனர். இப்பொழுதும் சில பழங்குடியினரிடம் இந்த பழக்கம் உள்ளது. அதே போல் நம் ஊர் பார்பனர்கள் நெருப்பை தெய்வமாக வணங்குவதையும் அதை புனிதமாக கருதுவதையும் பார்க்கிறோம்.
நம் ஊர் பார்பனர்களையும் எகிப்தியர்களையும் உருவம், நிறம், குணங்களில் ஒத்து போவதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
//சுவன பிரியரே, நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த கட்டுரையில் தமிழர்களும் இந்தியர்களும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்.' என்ற கொள்கையை பின்பற்றியதாக எங்குமே குறிப்பிடவில்லையே.//
ReplyDeleteதமிழர் வழிபாடு என்பது முன்பு ஏக தெய்வ வணக்கமாகவே இருந்துள்ளது. பின்னால் வந்த ஆரியர்களின் படையெடுப்பால் அனைத்து வழக்கமும் ஒழிந்து பல தெய்வ வழிபாடு புகுந்து விட்டது. இல்லை என்றால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' , 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற சிவ வாக்கியர் பாடல்கள் சொல்வதுதான் என்ன என்று எனக்கு விளக்குங்களேன்.
திரு பாலா!
ReplyDelete//இந்த கட்டுரையை எழுதியவரின் நோக்கம் பற்றி எனக்கு கவலை இல்லை. இதை காப்பி பேஸ்ட் செய்த உங்களின் நோக்கம் என்ன?
தங்களை இந்து என்று நம்பி கொண்டிருக்கும் தமிழர்களை அவர்களின் வழிபாட்டு முறைக்கே திருப்பி விடுவதா? அல்லது இசுலாமை நோக்கி அழைப்பதா?//
மூன்று தலைமுறைக்கு முன்னால் எனது மூதாதையர்களும் ஒரு பாலவாகவோ, ஒரு கிருஷ்ணனாகவோதான் இருந்திருப்பார்கள். இன்று எந்த சாதியிலிருந்து எனது முன்னோர்கள் மதம் மாறினார்கள் என்ற விபரம் எனக்கு தெரிய வில்லை. அந்த அளவு சாதியை மறக்கடித்துள்ளது இஸ்லாம். நான் பெற்ற சுகம் எனது பழைய சொந்தங்களும் பெறட்டுமே என்ற ஆசையாகவும் இருக்கலாம். கத்தியின்றி ரத்தமின்றி சாதியை துறக்க தற்போது நம் முன் உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.
அல்லது 'இந்து ராஷ்ட்ரா அமைப்போம்', 'நரேந்திர மோடியை பிரதமராக்குவோம்' என்ற கோஷம் வலிந்து வைக்கப்படுகிறது. இந்து ராஷ்ட்ரா என்பது எந்த அளவு போலியானது என்பதை விளங்கிக் கொள்வதற்காக இதனை பிரசுரித்தேன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது ஆரிய மாயையிலிருந்து விலகி நம் பண்டைய தமிழ் கலசாரமான 'ஒன்றே குலம் ஒருவனே தேவனுக்கு' என் பழைய சொந்தங்களை திருப்புவதற்காக இந்த பதிவை பதிந்தேன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சுவனப்ரியன், ஆரியர்கள் வரும்போதே இந்து மதம் என்ற ஒன்றை உருவாக்கி கொண்டு வந்து அதை இங்கே பரப்பவில்லை, இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கை, மற்றும் ஆரியர்களின் மத மற்றும் கலாச்சாரம் இரண்டும் ஒன்றிணைந்து பிற்காலத்தில் அதற்கு வழங்கப்பட்ட பெயர் தான் இந்து சமயம் என்பது, உங்களது கட்டுரையும் அதை தான் கூறுகிறது, வெளிநாட்டில் இந்து சமயம் என்ற ஓன்று உருவாகி அதை பரப்ப இங்கே அவர்கள் வந்தார்கள் என்றால் நீங்கள் கூறுவது ஏற்று கொள்ளலாம். உங்கள் மதத்தை பரப்ப தயவு செய்து கண்டபடி உளறாதீர்கள்.
ReplyDelete//தமிழர் வழிபாடு என்பது முன்பு ஏக தெய்வ வணக்கமாகவே இருந்துள்ளது. பின்னால் வந்த ஆரியர்களின் படையெடுப்பால் அனைத்து வழக்கமும் ஒழிந்து பல தெய்வ வழிபாடு புகுந்து விட்டது. இல்லை என்றால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' , 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற சிவ வாக்கியர் பாடல்கள் சொல்வதுதான் என்ன என்று எனக்கு விளக்குங்களேன்.//
நல்லது, அந்த ஏக தெய்வ வழிபாடு எப்படி நடைபெற்றது, எந்த கடவுளை எப்படி வணங்கினார்கள், எந்த வேதத்தை பின்பற்றினார்கள் என்று விளக்க முடியுமா. உங்கள் கட்டுரையும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் தெய்வ வழிபாட்டு முறையைத்தான் சொல்கிறது. சும்மா சிவா வாக்கியர், திருமூலர் என்று கூறி கொண்டிருக்காமல் தமிழரின் ஏக தெய்வ வழிபாட்டை கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்.
//நான மட்டும் உயர்ந்தவன்: மற்ற அனைவரும் சூத்திரர்கள் என்று கூறுவது எந்த வகை நியாயம்? இது மற்றவர்களின் பிறப்பையே கேலிக் கூத்தாக்கிறதல்லவா? //
இஸ்லாமியன் மட்டுமே உயர்ந்தவன் மற்றவன் காபிர், என்று கூறுவது எவ்வளவு கேவலமானதோ அது போல சூத்திரன் என்று கூறுவது நியாயம் இல்லை என்பதை ஒத்து கொள்கிறேன்
//நல்லது, அந்த ஏக தெய்வ வழிபாடு எப்படி நடைபெற்றது, எந்த கடவுளை எப்படி வணங்கினார்கள், எந்த வேதத்தை பின்பற்றினார்கள் என்று விளக்க முடியுமா. உங்கள் கட்டுரையும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் தெய்வ வழிபாட்டு முறையைத்தான் சொல்கிறது. சும்மா சிவா வாக்கியர், திருமூலர் என்று கூறி கொண்டிருக்காமல் தமிழரின் ஏக தெய்வ வழிபாட்டை கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்//
ReplyDeleteநல்வழி தரும் தமிழ் நூல் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் 1330 குறளையும் தேடி பாருங்கள்..
அதிலிருந்து அவர் என்ன ஜாதி,என்ன மதம்,என்ன இனம் என்று முடிந்தால் கண்டுபிடியுங்கள்..
முடியாது..
அப்படிப்பட்ட அவரே தன்னுடைய முதல் குறளிலேயே
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு "என்று தான் குறிப்பிட்டுள்ளார்...
இது தானே தமிழனின் வழிமுறை?இது தானே தமிழனின் மதம்?
இதை விட்டு விட்டு எங்கு சென்றுகொண்டு இருக்கிறோம் நாம்?
இன்று வழக்கத்திலுள்ள சாமிகளான பிள்ளையார், முருகன், வெங்கடாஜலபதி, சரஸ்வதி என்று எண்ணற்ற பல தெய்வ வணக்கங்களைப் பற்றி திருக்குறளில் எங்குமே பார்க்க முடியவில்லையே... அந்த காலத்தில் இந்த வழக்கங்கள் இருந்திருந்தால் அந்த கடவுள் சிலைகளின் உருவங்களின் பெயர் முக்கியமாக இடம் பெற்றிருக்க வேண்டும். அது எதுவும் இல்லாததால் பின்னால் வந்த அனைத்து உருவ ழிபாடுகளும் ஆரியர்களின் இறக்குமதி என்பதை அறிந்து கொள்ளலாம்.
அடுத்து சமணர்களோடும், பவுத்தர்களோடும் ஆரியர்கள் பெரும் போர் செய்துள்ளனர். அந்நாளைய வழக்கப்படி தோற்றவர்களின் கலாசாரங்களை முடிந்த வரை அழித்து விடுவார்கள. அது போல் நம் முன்னோர்கள் எழுதிய காலத்தால் அழியாத பல காவியங்கள் தீக்கிரையாக்கப்பட்டன: ஆறுகளில் வீசப்பட்டன: அதிலிருந்து தப்பிப் பிழைத்தவைகளே திருக்குறள், மணிமேகலை போன்ற ஒன்றிரண்டு நூல்கள். இது பல தளங்களில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
//இஸ்லாமியன் மட்டுமே உயர்ந்தவன் மற்றவன் காபிர், என்று கூறுவது எவ்வளவு கேவலமானதோ அது போல சூத்திரன் என்று கூறுவது நியாயம் இல்லை என்பதை ஒத்து கொள்கிறேன்//
ReplyDeleteகாபிர் என்ற சொல் சூத்தினைப் போல் இழிவு படுத்தப்பட்ட சொல் என்பதை குர்ஆனைக் கொண்டு நீங்கள் நிரூபித்து விட்டால் நான் எழுதுவதையே விட்டு விடுகிறேன். :-(
அரபியில் காபிர் என்றால் இறை மறுப்பாளன் என்று பொருள் வரும். எந்த இடத்திலும் காபிர் என்பவர் இழி பிறவி என்று குறிக்கப்படவில்லை.
மாறாக உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் மூலம் ஒரு தாய் தந்தையர்தான் என்று குர்ஆன் கூறுகிறது. நெற்றியில் பிறந்தேன், தொடையில் பிறந்தேன் என்று மனிதர்களை பிளக்கவில்லை. குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை ஒரு முறை படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.
'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும்: நேர் வழியைத் தெளிவாகக் கூறும்: பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்: '
-குர்ஆன் 2:185
இது முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல: முழு மனித குலத்துக்கும் சொந்தமானது இந்த குர்ஆன்.
//பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.//
ReplyDeleteசுவனப்ப்ரியரே, உங்கள் கட்டுரையில் உள்ளவைதான் இவை, தொன்று தொட்டு தமிழர்கள் ஒரே இறைவனை வணங்கினார்கள் என்றா கூறப்பட்டு உள்ளது.
//நல்வழி தரும் தமிழ் நூல் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் 1330 குறளையும் தேடி பாருங்கள்..
அதிலிருந்து அவர் என்ன ஜாதி,என்ன மதம்,என்ன இனம் என்று முடிந்தால் கண்டுபிடியுங்கள்..//
திருவள்ளுவர் ஒரு புலவர், மத பிரச்சாரம் செய்தவரோ, இறை தூதர் என்று தன்னை கூறி கொண்டவரோ அல்ல, திருக்குறள் ஒரு அற நெறி கூறும் நூல்தானே தவிர, ஜாதி, மதம் பரப்பும் நூல் அல்ல.
//அப்படிப்பட்ட அவரே தன்னுடைய முதல் குறளிலேயே
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு "என்று தான் குறிப்பிட்டுள்ளார்...//
இது தானே தமிழனின் வழிமுறை?இது தானே தமிழனின் மதம்?
இதை விட்டு விட்டு எங்கு சென்றுகொண்டு இருக்கிறோம் நாம்?///
நல்லது, அப்படி என்றால் திருக்குறளை வேத நூலாக ஏற்று கொள்ளுங்கள், திருவள்ளுவரை இறை தூதராக ஏற்று கொள்ளுங்கள், ஒரே இறைவனை வணங்குங்கள். உங்கள் நாட்டிலேயே ஒரே இறைவன் கொள்கை இருக்கும்போது என்ன வழிகிறது என்று அரபு நாட்டு ஏமாற்று பேர்வழி முமதுவின் குரானை தூக்கி பிடித்து கொண்டு அலைகிறீர்கள்.
//இன்று வழக்கத்திலுள்ள சாமிகளான பிள்ளையார், முருகன், வெங்கடாஜலபதி, சரஸ்வதி என்று எண்ணற்ற பல தெய்வ வணக்கங்களைப் பற்றி திருக்குறளில் எங்குமே பார்க்க முடியவில்லையே... அந்த காலத்தில் இந்த வழக்கங்கள் இருந்திருந்தால் அந்த கடவுள் சிலைகளின் உருவங்களின் பெயர் முக்கியமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.//
இல்லைதான், சரி இப்போது உங்கள் கூட்டத்தார் என்ன செய்யலாம் என்று இருக்கிறீர்கள், கொஞ்சம் என்ன நினைப்பு உங்கள் மனங்களில் ஓடுகிறது என்று தெளிவாக விளக்க முடியுமா. இந்த வழிபாடுகளை எல்லாம் ஒழித்து கட்டிவிட்டு, எல்லாரையும் இஸ்லாமியர்களாக மாற்றி விடலாமா? தமிழர்களை இஸ்லாமியர்களாக அதாவது ஒரே இறைவனை பின்பற்றுவபர்கலாக மாற்ற உங்கள் கூட்டம் என்ன திட்டங்கள் வைத்துள்ளது என்பதையும் கொஞ்சம் கூறினால் நன்றாக இருக்கும்.
ஓன்று கேட்கிறேன் நாங்கள் பிள்ளையார், முருகன், வெங்கடாஜலபதி, சரஸ்வதி என்று எண்ணற்ற பல தெய்வ வணக்கங்களை செய்வதால் என்ன மண்ணாங்கட்டிக்கு உங்களுக்கு பத்திக்கிட்டு வரணும், நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சொல்வதற்கு துலுக்கன் யார்? இந்து சமயம் ஆரிய இறக்குமதியாகவே இருக்கட்டும், நீர் மட்டும் அரபு இறக்குமதியை பிடித்து தொங்கி கொண்டு இருக்கவில்லையா? உங்கள் வேலையை பார்த்து கொண்டு போகாமல் உங்களுக்கெல்லாம் ஏன் அரிக்கிறது. எங்கள் மதத்தில் மூட பழக்க வழக்கங்கள் இருந்தால் அதை ஒழிக்க எங்களுக்கு தெரியும், அதற்கு அரபு அடிமைகளின் அறிவுரை தேவை இல்லை.
//அடுத்து சமணர்களோடும், பவுத்தர்களோடும் ஆரியர்கள் பெரும் போர் செய்துள்ளனர். அந்நாளைய வழக்கப்படி தோற்றவர்களின் கலாசாரங்களை முடிந்த வரை அழித்து விடுவார்கள. அது போல் நம் முன்னோர்கள் எழுதிய காலத்தால் அழியாத பல காவியங்கள் தீக்கிரையாக்கப்பட்டன: ஆறுகளில் வீசப்பட்டன: அதிலிருந்து தப்பிப் பிழைத்தவைகளே திருக்குறள், மணிமேகலை போன்ற ஒன்றிரண்டு நூல்கள். இது பல தளங்களில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.//
அப்படியா? அந்த தளங்களின் முகவரி தர முடியுமா? தமிழர்களின் ஒரே இறைவன் கொள்கையை "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற ஒற்றை வரியை மட்டுமே வைத்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அனால் உமது இந்த கட்டுரை அதை பற்றி எதுவுமே கூறவில்லை. இந்த ஒற்றை வரியை தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் அடியோடு அழித்து விட்டார்களா, நம்ப முடியவில்லையே. மேலும் மணிமேகலை ஒரு புத்த சமய நூல், அப்படி என்றால் புத்தர் தான் அந்த ஒரே இறைவன் என்றா கூறுகிறீர்கள். தயவு ]செய்து விளக்கவும்