'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, April 30, 2014
அகோரிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!
எங்கும் பிணங்கள் எரியூட்டப்பட்டு வரும் புகை காசியின் பல இடங்களை ஆக்கிரமிக்கிறது. அந்த புகைகளோடு அகோரிகள் அடிக்கும் கஞ்சா புகையும் சேர்ந்து கொள்கிறது. இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு பிறகு எரிந்த மற்றும் எரிந்து கொண்டிருக்கின்ற மனித உடல்களை தின்பதற்காக அகோரிகள் மெல்ல தங்கள் இடத்தை விட்டு வெளியேறுகின்றனர். உடல் முழுக்க சாம்பலை பூசிக் கொண்டு பிறந்த மேனியாக கைகளையும் கால்களையும் வித விதமாக ஆட்டிக் கொண்டு பிணங்களை நெருங்கி அதனை ருசித்து சாப்பிடுகின்றனர். அந்த மனிதக் கறி செரிப்பதற்காக கஞ்சாவையும் உள்ளே தள்ளுகின்றனர். அகோரிகளின் பழக்கத்தால் சுற்று வட்டாரத்தில் பல இளைஞர்கள் இந்த கஞ்சாவுக்கு அடிமையாகி விட்டார்கள். பல பெற்றோர்கள் புகார் செய்த வண்ணம் உள்ளனர். ஆனால் கேட்பதற்கு ஆளில்லை.
இதில் ஒரு அகோரிக்கு குடும்பம் வேறு இருக்கிறதாம். இரண்டு குழந்தைகள் வேறு. பாவம் இவருக்கு வாழ்க்கைப் பட்ட அந்த பெண்மணி. தனது குழந்தைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறாரோ! ஆனால் இந்த அகோரியோ நன்றாக கஞ்சா அடித்து விட்டு இசையை ரசித்து விட்டு மனித பிணங்களை தின்று விட்டு காசியின் தெருக்களில் உருள்கிறார்.
நரேந்திர மோடி கொண்டு வரப் போகும் இந்துத்வா ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு காசியின் இந்த நேரடிக் காட்சிகளே சாட்சியாக உள்ளது. காசியை உலக மக்களின் புண்ணியத் தலமாகவும் மாற்றப் போகிறாராம். கடவுளின் அருள் என்றும் 'நானே கடவுள்' என்றும் பித்துக்குளி தனமாக இது போன்ற அகோரிகள் மோடியின் ஆட்சியில் தமிழகத்துக்கும் வந்து இந்து மதத்தை பரப்ப வரலாம்.
எனவே ஆனந்த் சாகர் போன்றவர்களுக்கு இனி மகிழ்ச்சிதான். இளைஞர்களுக்கு அம்மா ஏற்கெனவே அரசு செலவில் மது பான கடைகளை திறந்து சேவை செய்து வருகிறார். இனி இவரது நண்பர் மோடியின் தயவால் கஞ்சா, அபின், மற்றும் நர மாமிசம் தின்னும் பழக்கத்தையும் இந்துத்வ அரசு சிறுக சிறுக புகுத்தி விடும். வாழ்க இந்தியா! வளர்க அதன் புகழ்.
நமது நாட்டில் இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஸ்லாத்தை நோக்கி இந்து மக்கள் சாரை சாரையாக வருவது ஏன் என்பதன் சூட்சுமம் இப்போதுதான் விளங்குகிறது. உபி அரசு இது போன்ற சட்டத்துக்கு புறம்பாக மனிதர்களின் உடலை தின்னும் பழக்கத்துக்கும், கஞ்சா அடிக்கும் பழக்கத்துக்கும் நிர்வாணமாக சுற்றித் திரியும் பழக்கத்துக்கும் தடையை விதித்து பல இளைஞர்களின் வாழ்வை வளப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
--------------------------------------------------------
நபிகள் நாயகம் அவர்களது வீட்டுக்கு சில நபித் தோழர்கள் வந்து நபிகளாரது வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களின் மனைவியிடம் கேட்டனர் . அதற்கு நபியவர்களின் மனைவியர் கூறிய பதில் திருப்தியளிக்காததால் 'நாங்களும் நபியவர்களும் ஒன்றா? நாமோ பாவிகள். அவர்களோ முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் . எனவே நாம் நபிகளாரை விட அதிகம் வணக்கம் புரிய வேண்டும்' எனமுடிவெடுத்தனர். அவர்களில் ஒருவர் 'நான் இன்று முதல் இரவில் தூங்கவே மாட்டேன். இரவு முழுக்க தொழுது கொண்டிருப்பேன்' என்றும் மற்றவர் 'நான் இனிமேல் காலமெல்லாம் நோன்பு நோற்றுக் கொண்டிருப்பேன்' என்றும் மூன்றாமவர் 'இனி நான் மனைவியிடம் நெருங்கவே மாட்டேன்' என்றும் சத்தியம் செய்து கொண்டனர். இந்தச் செய்தி நபியவர்களின் காதுக்குச் சென்றதும் நபியவர்கள் இம்மூவரையும் அழைத்து "நீங்கள்தானா இவ்வாறெல்லாம் சத்தியம் செய்து கொண்டவர்கள்??. அறிந்து கொள்ளுங்கள் . அல்லாஹ்வின் மீது சத்தியமாக நானே உங்கள் அனைவரை விடவும் அல்லாஹ்வுக்கு மிகப் பயப்படுபவனும் இறை நம்பிக்கை உடையவனுமாவேன். இருப்பினும் நான் இரவில் தொழவும் செய்கின்றேன் தூங்கவும் செய்கின்றேன், சில நாள் பகலில் நோன்பும் நோற்கின்றேன், சில நாள் நோன்பை விட்டு சாப்பிடவும் செய்கின்றேன், பல மனைவியரை மணந்து இன்பம் அனுபவிக்கவும் செய்கின்றேன். எனவே இதுதான் எனது வழிமுறை, எனதுவழிமுறையைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவனல்ல என நபியவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் புகாரி 4675 முஸ்லிம் 2487)
இதுதான் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை. பணம் சம்பாதிக்கவும் வேண்டும்: மனைவி குழந்தைகளோடும் உற்றார் உறவினரோடும் இன்பமாக காலத்தை கழிக்க வேண்டும்: அதே நேரம் இறைவனை அவன் சொன்ன முறையில் வணங்கவும் வேண்டும். இதனால் சமூகத்துக்கோ, பெற்ற தாய் தந்தையருக்கோ, பிறந்த குழந்தைகளுக்கோ, நாம் வாழும் சமூகத்துக்கோ எந்த பிரச்னையும் இல்லை. இப்படிப்பட்ட அழகிய மார்க்கத்துக்கு சொந்தமான தாய் தந்தையருக்கு பிள்ளையாய் என்னை பிறக்க வைத்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும்.
உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும் நீங்கள் அறியாத தகவல்கள்
ReplyDeleteநிர்வாண சாமியார்கள்.
பிணந்திண்ணி சாமியார்கள்.
பரத நாட்டியம்.
கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை.
>>>> மேலும் படிக்க <<<
.
//கடவுளின் அருள் என்றும் 'நானே கடவுள்' என்றும் பித்துக்குளி தனமாக இது போன்ற அகோரிகள் மோடியின் ஆட்சியில் தமிழகத்துக்கும் வந்து இந்து மதத்தை பரப்ப வரலாம். //
ReplyDeleteஅகோரிகளை எந்த ஹிந்துவும் தங்கள் வாழ்க்கைக்கு `முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதில்லை, மற்ற எவரும் அகோரிகளை பார்த்து ஹிந்துவாக மாறுவதும் இல்லை.
//எனவே ஆனந்த் சாகர் போன்றவர்களுக்கு இனி மகிழ்ச்சிதான்.//
ReplyDeleteஇஸ்லாம் உலகத்திலிருந்து முற்றாக ஒழிந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. பக்தி என்ற பெயரால் மிருகத்தனமாக, ஒழுங்கீனமாக நடந்து கொள்பவரைக்கண்டு மகிழ்ச்சி அடையும் மனநிலை எங்களுக்கு இல்லை.
//இளைஞர்களுக்கு அம்மா ஏற்கெனவே அரசு செலவில் மது பான கடைகளை திறந்து சேவை செய்து வருகிறார். இனி இவரது நண்பர் மோடியின் தயவால் கஞ்சா, அபின், மற்றும் நர மாமிசம் தின்னும் பழக்கத்தையும் இந்துத்வ அரசு சிறுக சிறுக புகுத்தி விடும். வாழ்க இந்தியா! வளர்க அதன் புகழ்.//
கஞ்சா அடியுங்கள், நர மாமிசம் உண்ணுங்கள், நிர்வாணமாக திரியுங்கள் என்று ஹிந்து மதம் சொல்லவில்லை. சிலர் அவ்வாறு நடந்து கொண்டால், அதற்கு ஹிந்து மதம் பொறுப்பல்ல. இது இந்தியர் அனைவருக்கும் தெரியும். எனவே உங்களுடய கோயபல்ஸ் பொய் பிரச்சாரம் உங்கள் கூட்டத்துக்கு எந்த பலனும் அளிக்காது.
//நமது நாட்டில் இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஸ்லாத்தை நோக்கி இந்து மக்கள் சாரை சாரையாக வருவது ஏன் என்பதன் சூட்சுமம் இப்போதுதான் விளங்குகிறது.//
ReplyDeleteஇப்படியே பிதற்றிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.
//உபி அரசு இது போன்ற சட்டத்துக்கு புறம்பாக மனிதர்களின் உடலை தின்னும் பழக்கத்துக்கும், கஞ்சா அடிக்கும் பழக்கத்துக்கும் நிர்வாணமாக சுற்றித் திரியும் பழக்கத்துக்கும் தடையை விதித்து பல இளைஞர்களின் வாழ்வை வளப்படுத்த முயற்சிக்க வேண்டும். //
ReplyDeleteஇதை ஆமோதிக்கிறேன்.