Tuesday, June 03, 2014

நண்பர் பாலாவின் சந்தேகங்களுக்கு விளக்கம்!

நண்பர் பாலா!

//ஆனால் என் சந்தேகம் என்னவென்றால் இன்று விஞ்ஞானம் வளர்ந்து நவீன கருவிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இத்தனை கோள்களைப்பற்றியும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே சித்தர்களும் வானவியல் சாஸ்த்திர நிபுணர்களும் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் அதன் தன்மைகளையும் சொல்லியிருக்கிறார்களே.. அது எப்படி சாத்தியமானது..
இன்று தான் விண்கலம் அனுப்பி செவ்வாய் செம்மண் நிறம் கொண்டது என்கிறார்கள். ஆனால் அன்றே அந்த கோளுக்கு செவ்வாய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்..
அந்த திறமை எல்லாம் எந்த அடிப்படையில் சாத்தியமானது என்பதை நாத்திகம் பேசும் தோழர்கள் மட்டுமல்ல விபரமறிந்தவர்களும் விளக்கலாம்..
தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14:4


இந்த வசனத்தின் படி உலக மூல மொழிகள் நமது தமிழ் மொழி உட்பட அனைத்து மொழிகளுக்கும் இறைத் தூதர் வந்துள்ளார். இறை வேதமும் வந்துள்ளது என்பதை அறிகிறோம். திருக்குறள் கூட நமது மொழிக்கு வந்த வேதமாக இருக்கலாம். ஆனால் மனிதர்கள் காலப் போக்கில் அந்த வேதத்தில் தங்கள் கருத்துக்களையும் கலந்து விடுவதால் அது நாளடைவில் மதிப்பிழந்து போகிறது.

முகமது நபிக்கு சில நூறு ஆண்டுகள் முன்பு வந்த ஏசுவை கிறித்தவர்கள் கடவுளாக்கியதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஏசுவை கடவுளாக வணங்குவதற்கு எந்த ஆதாரத்தையும் கிறித்தவர்களால் சமர்ப்பிக்க முடியாது. முகமது நபியை போன்று ஒரு மனிதராக வாழ்ந்த இறைத் தூதரே ஏசு. பைபிளின் பல கருத்துக்களும் அதைத்தான் உறுதி செய்கிறது. அதே போல் வருடா வருடம் திருத்தப்பட்ட பதிப்பு என்று பைபிளை நமது தமிழகத்திலேயே வெளியிடுவதை பார்க்கிறோம். மேலும் இந்து மத வேதங்களான ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் கருத்துக்கள் 70 சதவீதமானவை குர்ஆனோடு ஒத்துப் போவதை நாம் ஆச்சரியத்தோடு பார்க்கிறோம்.

இனி குர்ஆனுக்கு வருவோம். 23 வருடங்களாக முகமது நபி சிறு சிறு அத்தியாயங்களாக அருளப்பட்ட குர்ஆனானது கோள்களைப் பற்றியும், சூரியன் நகர்வதைப் பற்றியும், குழந்தை பிறப்பு பற்றியும், பல அரிய தகவல்களை இன்றைய அறிவியலோடு எந்த வகையிலும் மோதாமல் நமக்கு சொல்கிறது.

குர்ஆனைப் பொன்று இதே தனித்துவத்தோடுதான் பைபிளும், தோராவும், ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் முற்காலத்தில் இருந்திருக்க வேண்டும். அன்றைய மக்களை நல்வழிப்படுத்த வந்த இறைத் தூதர்கள் மூலமாக பல அறிவியல் விபரங்களை இறைவன் கூறியிருக்கக் கூடும். குர்ஆனும் அதை உறுதிப்படுத்துகிறது. அந்த அறிவியல் விபரங்களை நமது சித்தர்களும் யோகிகளும் இறை வேதத்திலிருந்து கற்று அதனை நமக்கு தந்துள்ளார்கள். எனவே தான் ஆரியபட்டர், சித்தர்களின் பல அரிய கணிப்புகள் இன்றைய அறிவியலுக்கு முரணாகாமல் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக அந்த அரிய சுவடிகள், இறை வேதங்கள் பல காலத்தால் அழிந்து விட்டன: மற்றும் சிலரால் வேண்டுமென்றே கொளுத்தப்பட்டன.

'அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதனை மாற்றி விட்டனர்'
-குர்ஆன் 2:75

'அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும் ஏடுகளையும் ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்'
-குர்ஆன் 35:25


மேற்கண்ட வசனங்களின் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் இறை வேதமும் இறைத் தூதர்களும் வந்துள்ளரென அறிய முடிகிறது. அதில் உள்ள அறிவியல் கருத்துக்களைத்தான் நமது சித்தர்கள் நமக்கு தந்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் காலப் போக்கில் அந்த வேதங்களில் மனிதக் கரங்கள் புகுந்ததால் அதன் உண்மைத் தன்மையை சிறுக சிறுக இழக்க ஆரம்பித்தது. மாசுபடாமல் நம்மிடம் எஞ்சியிருப்பது தற்போது குர்ஆன் மட்டுமே!


12 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்!
    நல்லா அருமையான விளக்கங்கள்.

    ReplyDelete
  2. ஆனந்த் சாகர்2:33 AM

    //இந்த வசனத்தின் படி உலக மூல மொழிகள் நமது தமிழ் மொழி உட்பட அனைத்து மொழிகளுக்கும் இறைத் தூதர் வந்துள்ளார். //

    நபிமார்கள், இறை தூதர்கள் என்பதெல்லாம் பொய். கடவுள் அப்படி தூதர்களை எல்லாம் அனுப்பியதே இல்லை. தங்களை இறை தூதர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லோரும் சக மனிதர்களை ஏமாற்றிய கபட வேடதாரிகள்.

    ReplyDelete
  3. ஆனந்த் சாகர்2:40 AM

    //இனி குர்ஆனுக்கு வருவோம். 23 வருடங்களாக முகமது நபி சிறு சிறு அத்தியாயங்களாக அருளப்பட்ட குர்ஆனானது கோள்களைப் பற்றியும், சூரியன் நகர்வதைப் பற்றியும், குழந்தை பிறப்பு பற்றியும், பல அரிய தகவல்களை இன்றைய அறிவியலோடு எந்த வகையிலும் மோதாமல் நமக்கு சொல்கிறது.//

    இது பச்சை பொய். குரான் சொல்வது அனைத்தும் அறிவியலுக்கு முரணாக உள்ளன. அறிவியலுக்கு முற்றிலும் முரணாக குரான் சொல்வதையெல்லாம் அறிவியல்பூர்வமானது என்று முஸ்லிம்கள் பொய் பிரச்சாரம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. சுவனப்பிரியன் அந்த பாமர மக்களை ஏமாற்றும் கலையை பிழைப்பாக கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  4. ஆனந்த் சாகர்2:42 AM

    //ஆனால் காலப் போக்கில் அந்த வேதங்களில் மனிதக் கரங்கள் புகுந்ததால் அதன் உண்மைத் தன்மையை சிறுக சிறுக இழக்க ஆரம்பித்தது. மாசுபடாமல் நம்மிடம் எஞ்சியிருப்பது தற்போது குர்ஆன் மட்டுமே!//

    முகம்மதுவின் அர்த்தமற்ற உளறல்களை சுவனப்பிரியன் அப்படியே வாந்தி எடுக்கிறார்.

    ReplyDelete
  5. ஆனந்த் சாகர்2:50 AM

    //அந்த அறிவியல் விபரங்களை நமது சித்தர்களும் யோகிகளும் இறை வேதத்திலிருந்து கற்று அதனை நமக்கு தந்துள்ளார்கள். எனவே தான் ஆரியபட்டர், சித்தர்களின் பல அரிய கணிப்புகள் இன்றைய அறிவியலுக்கு முரணாகாமல் உள்ளன.//

    சுவனப்பிரியனை மூளை சுத்தமாக செல்லரித்து விட்டது. அதனால்தான் அவர் இப்படியெல்லாம் உளறுகிறார்.

    எமது சித்தர்களும் யோகிகளும் தியானத்தில் கண்ட ஆன்மிக உண்மைகளை எழுதி வைத்தார்கள். அது வஹி மூலம் எல்லாம் கொடுக்கப்படவில்லை. வஹி என்பதெல்லாம் சுத்த புருடா. எவர் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் ஆன்மீக உண்மைகளை தியானம் பழகி அறிந்து கொள்ளலாம். அதற்கு எவரும் இறை தூதர், நபி என்றெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. தூதர், நபி என்பதெல்லாம் பொய்யர்களின் ஏமாற்று வேலை.

    ReplyDelete
  6. To Anada Sahar
    at 2.33 Am/2.40Am/2.42Am/2.50Am

    You are proving again and again your adamant nature not to search the truth and rather just argue arbitrarily . In your off time don't you think to search why these muslims always come with Quraan or life examples from Prophet Muhmmad ( Peace and Blessing Upon Him).

    Quran is a book of signs not the science. The signs indicated in Quran are proved 100% true by the modern standard of science. So Quran contains thousands of scientific facts which are proved to be 100% correct by modern science. "Holy Quran" contains established facts which are proved to be 100% correct by science.
    I don't have to tell all these if you are wise enough to search.
    See bellow some examples :
    ...................................................................
    https://www.youtube.com/watch?v=b9C3D174gdA
    ...................................................................
    https://www.youtube.com/watch?v=r5h6CNhtVls
    ...................................................................

    Dr.Laurance Brown
    http://www.ethirkkural.com/search/label/Dr.%20Laurence%20Brown

    Dr. Jeffrey Lang
    http://www.ethirkkural.com/search/label/Dr.Jeffrey%20Lang

    Dr.Jerald Dirks
    http://www.ethirkkural.com/search/label/Dr.Jerald%20Dirks

    Dr. Maurice Bucaille
    http://www.islamicbulletin.org/newsletters/issue_6/embraced.aspx

    Prof. Milan from Czech Republic converted to islam after reading the Holy Quran. Scientist converts to Islam.


    Prof. Milan from Czech Republic
    https://www.youtube.com/watch?v=0IspK651RpY

    https://www.youtube.com/results?search_query=Europian+scientst+converted+to+islam

    So you are intelligent and these scientist are fools. Oh boy......

    ReplyDelete
  7. @ ஆனந்த் சாகர் said...
    //இந்த வசனத்தின் படி உலக மூல மொழிகள் நமது தமிழ் மொழி உட்பட அனைத்து மொழிகளுக்கும் இறைத் தூதர் வந்துள்ளார். //

    நபிமார்கள், இறை தூதர்கள் என்பதெல்லாம் பொய். கடவுள் அப்படி தூதர்களை எல்லாம் அனுப்பியதே இல்லை. தங்களை இறை தூதர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லோரும் சக மனிதர்களை ஏமாற்றிய கபட வேடதாரிகள்.#

    இறை தூதர்கள் மனிதர்களே அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இறை தூதுவரை இறைவன் தேர்தேடுத்தான். இறைவன் மனித பிறவியில் வந்து நம்மளை போல் சாப்பிட்டு, குடித்தது, போண்டு, மூத்திரம் பொய் என்று சொல்லி இறைவனை கேவலபடுத்தவில்லை இஸ்லாம். இதில் இருந்தே விளங்கலாம், கடவுள் மனித வுருவில் வரவில்லை என்று.

    ReplyDelete
  8. @ ஆனந்த் சாகர் said...
    //இனி குர்ஆனுக்கு வருவோம். 23 வருடங்களாக முகமது நபி சிறு சிறு அத்தியாயங்களாக அருளப்பட்ட குர்ஆனானது கோள்களைப் பற்றியும், சூரியன் நகர்வதைப் பற்றியும், குழந்தை பிறப்பு பற்றியும், பல அரிய தகவல்களை இன்றைய அறிவியலோடு எந்த வகையிலும் மோதாமல் நமக்கு சொல்கிறது.//

    இது பச்சை பொய். குரான் சொல்வது அனைத்தும் அறிவியலுக்கு முரணாக உள்ளன. அறிவியலுக்கு முற்றிலும் முரணாக குரான் சொல்வதையெல்லாம் அறிவியல்பூர்வமானது என்று முஸ்லிம்கள் பொய் பிரச்சாரம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. சுவனப்பிரியன் அந்த பாமர மக்களை ஏமாற்றும் கலையை பிழைப்பாக கொண்டிருக்கிறார்.#
    உனக்கு திராணி இருந்தால் நீ சொன்னதை நிரூபிக்கவும், மூடன் போல் உளற வேண்டாம், உங்கள் மனுதர்மத்தை பத்தி பேசினால் இந்த blogspot ஏ நாறிடும், அந்த கொடுமை குரானில் இல்லை.

    ReplyDelete
  9. @ ஆனந்த் சாகர் said...
    //அந்த அறிவியல் விபரங்களை நமது சித்தர்களும் யோகிகளும் இறை வேதத்திலிருந்து கற்று அதனை நமக்கு தந்துள்ளார்கள். எனவே தான் ஆரியபட்டர், சித்தர்களின் பல அரிய கணிப்புகள் இன்றைய அறிவியலுக்கு முரணாகாமல் உள்ளன.//

    சுவனப்பிரியனை மூளை சுத்தமாக செல்லரித்து விட்டது. அதனால்தான் அவர் இப்படியெல்லாம் உளறுகிறார்.

    எமது சித்தர்களும் யோகிகளும் தியானத்தில் கண்ட ஆன்மிக உண்மைகளை எழுதி வைத்தார்கள். அது வஹி மூலம் எல்லாம் கொடுக்கப்படவில்லை. வஹி என்பதெல்லாம் சுத்த புருடா. எவர் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் ஆன்மீக உண்மைகளை தியானம் பழகி அறிந்து கொள்ளலாம். அதற்கு எவரும் இறை தூதர், நபி என்றெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. தூதர், நபி என்பதெல்லாம் பொய்யர்களின் ஏமாற்று வேலை. #

    தியானம் என்றால் என்ன, தியானத்தின் மூலம் எல்லாவற்றையும் அடைய முடியும் என்றால், இறைவன் யார்? நம்மை படைத்தது யார்? இறைவனுக்கு நம் மேல் சக்தி இல்லை என்றல்ல ஆகிறது. நமக்கு தெரிந்த விசயங்கள் அனைத்தும் இறைவனிடம் இருந்து வந்தது என்று நம்பினால் தான் இறைவன் இருக்கிறான் என்று அர்த்தம்

    ReplyDelete
  10. ஆனந்த் சாகர்2:47 AM

    @ஆஷாக்,

    //இறை தூதர்கள் மனிதர்களே அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை,??

    ஆப்ரஹாமிய மதங்களில் இறை தூதர்கள் என்று சொல்லிக்கொண்ட பலர் மிருகங்களைவிட மிக கொடியவர்களாக, கொடூரமானவர்களாக, பைத்தியக்காரர்களாக, பொறுக்கிகளாக மிக கேவலமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
    அவர்களில் முதன்மையாக இருப்பவர் சாட்சாத் உங்கள் நபி முஹம்மதுதான்.

    //ஆனால் இறை தூதுவரை இறைவன் தேர்தேடுத்தான். //

    இது இஸ்லாமிய புனையல், பொய்.

    //இறைவன் மனித பிறவியில் வந்து நம்மளை போல் சாப்பிட்டு, குடித்தது, போண்டு, மூத்திரம் பொய் என்று சொல்லி இறைவனை கேவலபடுத்தவில்லை இஸ்லாம். இதில் இருந்தே விளங்கலாம், கடவுள் மனித வுருவில் வரவில்லை என்று.//

    கடவுள் பற்றிய அறிவில் முஹம்மது ஒரு ஞான சூன்யம். கடவுள் என்றால் எது என்பதே அவருக்கு தெரியவில்லை. அதனால்தான் அவர் கண்டபடி குர்ஆனில் உளறி இருக்கிறார். அதை கண்மூடி பின்பற்றும் உங்கள் கூட்டம் இப்படிதான் பேசுவீர்கள்.

    ReplyDelete
  11. ஆனந்த் சாகர்2:56 AM

    @ ஆஷாக்,

    // உனக்கு திராணி இருந்தால் நீ சொன்னதை நிரூபிக்கவும், மூடன் போல் உளற வேண்டாம், உங்கள் மனுதர்மத்தை பத்தி பேசினால் இந்த blogspot ஏ நாறிடும், அந்த கொடுமை குரானில் இல்லை. //

    உனக்கு இஸ்லாத்தை பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று தெரிகிறது. உனக்கு இஸ்லாமிய அறிஞர் எவராவது தெரிந்தால் அவரை என்னுடன் விவாதத்திற்கு வர சொல்.

    இஸ்லாத்தை பற்றி விவாதிப்பதற்கும் மனு தர்மத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? மனு ஸ்மிருதியை கடைப்பிடியுங்கள் என்று நான் சொன்னேனா?

    ReplyDelete
  12. ஆனந்த் சாகர்3:35 AM

    @ ஆஷாக்,

    //தியானம் என்றால் என்ன,//

    சிந்தனையற்ற நிலைக்கு(thoughtless state ) மனம் செல்வதே தியானம். நமக்கு உள்ளே நாம் பிரயாணம் செய்வது(journey within ) என்று இதை கூறலாம்.

    // தியானத்தின் மூலம் எல்லாவற்றையும் அடைய முடியும் என்றால், இறைவன் யார்?//

    தியானத்தின் மூலம் நாம் எல்லாவற்றையும் அடைகிறோம் என்று சொல்வதைவிட நாம் எல்லாமுமாக இருக்கிறோம் (We are everything ) என்பதை தெரிந்து கொள்கிறோம் என்பதுதான் சரியானது. இந்த கடல், மலைகள், தாவரங்கள், விலங்குகள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று இருக்கின்ற எல்லாமுமாக நாம்தான் இருக்கிறோம் என்பதை நாம் தியானத்தில் அறிந்து கொள்கிறோம். இதை நாம் கற்றுக்கொள்வதில்லை, இதை நாம் அறிந்து கொள்கிறோம்(it is not our learning, but it is our knowing).

    இந்த உண்மைகளை பற்றி திறந்த மனதுடன் சிந்தித்து பார்க்கவும் மேலும் உண்மைகளை அறிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் உங்களுககு பக்குவம் இருந்தால் இறைவன் யார் என்று கூறுகிறேன்.

    // நம்மை படைத்தது யார்?//

    படைப்பு என்று பொதுவாக கருதப்படும் பொருளில் கூறுவதென்றால், நம்மை யாரும் படைக்கவில்லை. நமக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. நாம் என்றென்றுமாக இருந்து வருகிறோம். நாம் நித்தியமானவர்கள்.

    // இறைவனுக்கு நம் மேல் சக்தி இல்லை என்றல்ல ஆகிறது.//

    இறைவன் நம்முடைய செயல்களில் தடையிடுவதில்லை. அது நமக்கு தீர்ப்பு வழங்குவதும் இல்லை.

    // நமக்கு தெரிந்த விசயங்கள் அனைத்தும் இறைவனிடம் இருந்து வந்தது என்று நம்பினால் தான் இறைவன் இருக்கிறான் என்று அர்த்தம்//

    இறைவனுக்கு தெரிந்ததெல்லாம் நமக்கும் தெரியும். ஒவ்வொரு அணுவுக்கும் தெரியும். நமக்கு வெளியே பிரபஞ்சம் இல்லை. முழு பிரபஞ்சமும் நமக்குள்தான் இருக்கிறது.

    முஸ்லிம்களால் இந்த உண்மைகளை புரிந்துகொள்ள முடியாது என்பதை அறிவேன். அவர்கள் சுதந்திரமாக சிந்திக்கும் திறனை இழந்தவர்கள். முஹம்மது போட்டுள்ள விலங்குகளை உடைத்தெறிந்து வெளியே வர எந்த முஸ்லிம்களுக்கு மனோதிடம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே உண்மைகளை காண முடியும். மற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)