Sunday, January 04, 2015

இந்து நண்பரின் இந்த வாதத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.!

இந்து நண்பரின் இந்த வாதத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.!

மதம் மாறிவிட்டு, குறிப்பாக முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டு நாங்கள் அந்த ஜாதியில் இருந்து மதம் மாறினோம் என்று சொல்லிக்கொண்டு, வேர்களை தேடுகிறேன் என்ற பெயரில் தன் மனதில் ஒளிந்திருக்கும் ஹிந்து மத ஜாதியை தூக்கிக்கொண்டு அலைவதற்கு பதில் ஹிந்து மதத்திற்கு மாறி தன்னை ஒரு பேன்ட பரம்பரை சிங்கம், புலி, கரடி, பண்ணி என்று சொல்லிக்கொண்டு திரியலாம்.

முடிந்தால் முஸ்லீமாக வாழுங்கள். இப்படி வேர்களைத் தேடுகிறேன் என்ற பெயரில் ஹிந்து ஜாதியை முன்னிறுத்தி பைபிள் படிக்கும் ஹிந்துக்களான இந்திய கிருத்துவர்கள் போல "குரான் படிக்கும் ஹிந்துக்களாக" வாழாதீர்கள். காயிதே மில்லத் மீது இருந்த மரியாதை குறைய காரணமே அவர் தன்னை ஒரு "முஸ்லீம் மறவராக" காட்டிக்கொண்டு வாழ்ந்து மறைந்ததுதான்.
அதனால், தயவுசெய்து இப்படி வேர்களைத் தேடுகிறேன் என்ற பெயரில் உங்களை ஹிந்து ஜாதியுடன் இணைத்து இந்திய முஸ்லீம்கள் மீது இருக்கும் மரியாதையை கெடுத்துவிடாதீர்கள்.

-Balasubramanian Saraswathy

அருமையான வார்த்தை. இந்த இந்து சகோதரரின் இஸ்லாத்தில் சாதி இல்லை என்ற வார்த்தைகளை முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால் காயிதே மில்லத் இவ்வாறு சொன்னாரா என்பதை தெரிந்தவர்கள் விளக்கலாம்.

1 comment:

  1. காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் என் குடும்பத்தை சேர்ந்தவர்,
    என் அம்மம்மாவின் பெரியப்பா மகன் தான் அவர்கள்.

    கண்டிப்பாக தெரியும் எங்கள் முன்னோர்கள் மறவர்கள் அல்ல,

    காயிதே மில்லத் அவர்கள் சாதிபாகுபாடு பார்க்காதவர், இதை பற்றி வரலாற்றி
    சம்பவங்களை காண முடியும்.

    அனைத்து மக்களுடன் எளிமையாக பழகக்கூடியவர்,
    திருநெல்வேலியில் எனது ஊரான பேட்டையில் வாழும் ஜம்பது வயதை கடந்த மாற்று
    மதத்தவர்களிடம் கேட்டு பாருங்கள்..
    சாதிபாகுபாடு பார்ப்பவரா என்று?

    மறவர் என்பதற்கு வீரர் என்று பொருள் உண்டு, இஸ்லாமிய வீரனாக வாழ்ந்து இருக்கலாம்..

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)