Thursday, April 16, 2015

சமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை?

//சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும். அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.// - ம. வெங்கடேசன்


தலித் சமுகத்தை சார்ந்தவர்கள் சமஸ்க்ருதம் கற்றுக்கொள்வதால் என்ன பயன் அவர்களுக்கு. ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர் நன்றாக சமற்க்ருதம் பேசுகிறார், வடமொழி மந்திரங்களை நன்கு உச்சரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு தாழ்த்தப்பட்டவர் என்கிற கரை நீங்கி ,கருவறை வரை சென்று இறைவனின் திருமேனியை தொட்டு பூஜிக்கும் அர்ச்சகர் ஆகும் பணி கிடைத்து விடுமா? தலித் என்கிற சமுக இழிவு நீங்கி விடுமா கூறுங்கள்!!!!! நன்றாக வடமொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை பார்த்து ” ஆஹா!! இந்த ஆதி திராவிட இளைஞன் ஆதி சங்கரரை காட்டிலும் அற்புதமாக சமற்க்ருத மொழியை பேசுகிறானே என்று புளங்காகிதம் அடைந்து எந்த பிராமணனாவது அல்லது மேல் சாதி இந்துவாவது தன் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முன்வருவானா? இப்படி எதற்குமே பயனில்லை என்றால் பின்பு எதற்க்காக ம.வெங்கடேசன் அம்பேத்கரின் பெயரால் இங்கு வந்து சமஸ்க்ருதத்தை “Marketing” செய்ய வேண்டும்?.ஆகவே,அம்பேத்கர் கூறிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதற்க்கு திரு.ம. வெங்கடேசன் அவர்கள் திறந்த மனதோடு நேர்மையாக பதில் அளித்தால் மிக உத்தமமாக இருக்கும்.

-தாயுமானவன்

தாயுமானவன் நியாயமான கேள்விகளைக் கேட்டுள்ளார். சமஸ்கிரத ஆர்வலர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வெண்டும்.

1 comment:


  1. அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு இந்திய தேசத்தின் மகிமைகுறித்து அக்கறையில்லை. சமஸ்கிருதம் இந்தியாவைச் சோ்நத செமமொழிகளில் ஒன்று. சமயம் மருத்துவம் கட்டடக்கலை மற்றும் பலதுறைகளிலும் சிறந்த நூல்கள் சமஸ்கிருதத்தில் உள்ளது. பண்டைய நாகரீகம் குறித்த விசயங்களும் நிறைய உண்டு.அனைத்து இந்தியா்களும் குறைந்த பட்ச சமஸ்கிருத அறிவை பெறவேண்டியது அவசியம். அழியும் நிலையில் உள்ளது. தக்க வைக்க சில முயற்சிகளை செய்யலாம்.தலீத் களுக்கு என்ன நன்மை என்பது விவாதத்தை குறுக்கிப்போடுவது. சென்னையில் கூலி தொழில் செய்யும் ஒரு முஸ்லீம் ஏன் அரபிப்பாடசாலைக்கு தனது குழந்தையை அனுப்புகின்றான் ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)