Monday, August 17, 2015

தலித் பாதிக்கப்பட்டால் இந்துத்வாவாதிகள் மவுனம் காப்பதேன்!



வீடு கொளுத்தப்பட்டு பாத்திரம் பண்டங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டு அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடும் இந்த இளைஞன் நம் தமிழகத்தை சேர்ந்தவர்தான். விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரத்தை சேர்ந்தவர். சாதி என்ற வெறியால் எழுந்த கோர தாண்டவமே இது.

நரேந்திர மோடி, அமீத் ஷா, ராமா கோபாலன், அர்ஜூன் சம்பத், தமிழிசை சவுந்தர்ராஜன், பொன் ராதா கிருஷ்ணன், ஹெச். ராஜா போன்ற இந்து மத காவலர்களெல்லாம் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள். பூணூல் அறுத்ததற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் இன்று மண்ணின் மைந்தன் வாழ்வாதாரம் இன்றி அழுது புலம்புகிறான். அவனது கண்ணீரை துடைக்க மாட்டீர்களா? ஓ.... அவன் தலித் சமூகத்தை சேர்ந்தவனோ? அவனுக்காகவெல்லாம் நீங்கள் குரல் கொடுக்க மாட்டீர்களோ?

இஸ்லாமியர்களை ஒழிப்பதற்கு பல இடங்களில் இந்துத்வாவாதிகள் பயன்படுத்திக் கொள்வது தலித் மக்களைத்தான். இன்று அந்த தலித் பாதிக்கப்படும் போது இந்துத்வாவாதிகள் யாரும் வாய் திறப்பதில்லை. இனியாவது உங்களின் சகோதரன் இஸ்லாமியன் என்பதை தலித் சகோதரர்கள் புரிந்து கொண்டு முஸ்லிம்களை தங்கள் சகோதரர்களாக பாவிப்பார்களாக! இந்துத்வாவாதிகளின் சதி வலையில் வீழாதிருப்பார்களாக!

1 comment:

  1. ஆம்புாில் கலவரம் ஏற்பட்டபோது இந்து இயக்கங்கள் அதிக அளவில் செயல்பட்டன. திரு.இராஜா அவர்கள் வழக்கு தொடா்ந்துள்ளாா்கள். அங்கே தாக்குதல் நடத்திய முஸ்லீம்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டது. சங்கராமபுரத்தில் அரசம் அரசு இயந்திரமும் நியாயமான முறையில் நடைபெற்று வருகின்றது. பிரச்சனையில் தீா்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படமு். எனவே இந்து இயக்கங்களுக்கு வேலை இல்லை. இருபபினம் தாங்கள் சொல்வதுபோல் இந்து இயக்கங்கள் செயல் பட வேண்டும். சமூக ஒற்றுமைதங்கள் கருத்து சாிதான் .

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)