دَرَّسَ என்ற எழுத்தை முழுவதுமாக எழுத வேண்டுமானால் دَرْرَسَ என்றுதான் எழுத வேண்டும். ر என்ற எழுத்தானது இங்கு இரண்டு முறை வந்துள்ளது. இங்கு ஷத்த என்ற குறியை பயன்படுத்தி அந்த வார்த்தையை மூன்று எழுத்துக்களாக சுருக்கியுள்ளோம். இதே போல் அட்டவணையில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் படித்து மனனம் செய்து கொள்ளுங்கள். அட்டவணையில் உள்ள எழுத்துக்களை முறையே ஃபர்ருன், லல்லுன், பBர்ருன், ஸத்துன் என்று வரிசையாக படித்து பழகி வாருங்கள்.
'ألله' அல்லாஹ் என்ற வார்த்தையில் 'ல்லா' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.
مُحَمَّدٌ முஹம்மதுன் என்ற வார்த்தையில் 'ம்ம' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.
الرَّسُوْلُ 'அர்ரசூலுன்' என்ற வார்த்தையில் 'ர்ர' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.
الرَّحِيمِ 'அர்ரஹீம்' என்ற வார்த்தையில் 'ர்ர' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.
الرَّحْمَٰنِ 'அர்ரஹ்மான்' என்ற வார்த்தையில் 'ர்ர' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.
இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

Prakash Mohan
ReplyDelete//அய்யா பத்து கை என்பது கையோட தன்மையை தான் குறிக்கும்.
பத்து தலை இராவணன் என்பதற்கு அர்த்தம் பத்து விதமான பொருள் படும்படி சொன்னது.... //
ஆனால் நடைமுறையில் அவ்வாறு பாமர இந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை.
கிராமங்களில் சாமி சிலைகளுக்கு கையில் கத்தியை கொடுத்து கர்ண கொடூரமாக வடிவமைத்துள்ளனர். இறைவன் கருணையே வடிவானவன். இதைத்தான் இஸ்லாம் போதிக்கிறது.
இந்து மத வேதங்களும் ஏக இறைக் கொள்கையையே பறை சாற்றுகிறது.
//அல்லாஹ்வுக்கு பல பெயர் இருக்கும் போது ஏன் பாங்குல எந்த பெயரையும் உச்சரிப்பதே இல்லை//
'அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர்' 'இறைவன் மிகப் பெரியவன்..... இறைவன் மிகப் பெரியவன்' என்று பல முறை பாங்குகளில் சொல்லப்படுகிறதே. இறைவனின் மற்ற பெயர்களான கருணையாளன், கொடை வள்ளல், போன்ற 99 தன்மைகளை குர்ஆன் முழுக்க நீங்கள் காணலாம்.
Prakash Mohan
ReplyDelete//உங்கள் அல்லாவே அழிக்க ஆள் வைத்து இருக்கும் போதும் காபீர்களை கண்ட இடத்தில் வெட்டி கொலை செய்ய தானே சொல்லுறான்.
பிறகு எப்படி அல்லா கருணையுள்ளவனாயிருப்பான். //
'ஏக இறைவனையே வணங்குங்கள், விபசாரம் புரியாதீர்கள், வட்டி வாங்காதீர்கள், திருடாதீர்கள்' என்று சொன்ன இந்த காரணங்களுக்காகவே சொந்த நாட்டை விட்டு விரட்டினர். சுடு மணலில் கிடத்தி மேலே பாறாங்கற்களை வைத்தனர், வீடு வாசல்களை அபகரித்துக் கொண்டனர். இந்த கொடுமை தாங்காமல் ஊரை விட்டு வெளியேறி மதினாவில் தஞ்சம் புகுந்தனர் முஸ்லிம்கள். அங்கும் அவர்களை கொல்ல படை திரட்டி வந்தனர் மக்கா வாசிகள். அப்போது தங்கள் உயிரைக் காக்க பொர் அவசியமானது. அப்போது இறங்கிய வசனமே நீங்கள் சுட்டிக் காட்டியது.
பகவத் கீதையிலும் போர்க்கள வசனங்களை படித்துப் பாருங்கள். இதே போல்தான் இருக்கும்.
Rajendracholan Narayanasivam
ReplyDelete//விபச்சாரம் அப்படின்னா என்னவென குர்ஆன் வரையறுத்து உள்ளதா?//
“ நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. ”
- (திருக் குர்ஆன்-17:32)
“ அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். ”
- (திருக் குர்ஆன்-25:68)
Prakash Mohan
ReplyDelete//இந்துமமத்தில் ஏக இறைவனையே பறைசாற்றுதுனா
நான் என்னை படைத்த என் அம்மா அப்பாவை வணங்குறேன்.
அடுத்தவங்களை வணங்கலையே இதுவும் சரிதானே//
பெற்ற தாய் தந்தையை மதித்து அவர்களை கண் கலங்காமல் காப்பாற்றுங்கள். அதைத்தான் இறைவனும் விரும்புகிறான்.
வணங்குதல் என்பது உங்களையும் உங்கள் பெற்றோரையும் படைத்த இறைவனுக்கே உரித்தானதாகும். மறதி, உறக்கம், பசி போன்ற மனிதனுக்குரிய பலஹீனங்கள் இல்லாதவன்தான் இறைவனாக இருக்க முடியும். மரியாதை என்பதையும் வணக்கம் என்பதையும் போட்டு குழப்பிக் கொண்டதால் நீங்கள் சற்று தடுமாறியிருக்கிறீர்கள்.