'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, October 05, 2015
இறந்த முஹம்மது இஹ்லாக்கின் மகன் சர்தாஜ் பேட்டி
இறந்த முஹம்மது இஹ்லாக்கின் மகன் சர்தாஜ் தற்போது சென்னையில் விமானப் படையில் பணியாற்றி வருகிறார். கவலைக் கிடமான நிலையில் உள்ள தன் தம்பியை பார்த்து வர தற்போது உபி வந்துள்ளார். அவரை என்டிடிவி பேட்டி எடுத்த போது அவர் சொன்ன வார்த்தை...
"Saare Jahaan se Accha, Hindustan Hamara, Mazhab Nahin Sikhaata, Aapas Mein Bair Rakhna," said Sartaj on NDTV's
அதாவது 'உலகில் உள்ள அனைத்து நாடுகளைக் காட்டிலும் எனது நாடு சிறந்த நாடு' என்று கோடிட்டு காட்டினார்.
இவரை பேட்டியெடுத்த நிருபர் பர்காதத் அவரிடம் 'உங்கள் தந்தையை கொன்று உங்கள் தம்பியை கவலைக்கிடமாக மாற்றிய பிறகும் இந்தியா சிறந்த நாடு என்கிறீர்களா?' என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சர்தாஜ்....
'ஆம்... ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த சமூகத்தை எவ்வாறு குற்றம் காண முடியும்? அவர்களில் நல்லவர்களும் உள்ளனர். பல வருடங்களாக அக்கம் பக்கத்தில் உள்ள இந்து வறிய குடும்பங்களுக்கு நாங்கள் உதவியே வந்துள்ளோம். இது வரை எனது குடும்பம் யாரிடமும் எந்த பிரச்னையையும் வைத்துக் கொண்டதில்லை. அப்படி இருந்தும் எதிர்பாராத விதமாக இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது. இதனை மேலும் பெரிதாக்கி அரசியலாக்காமல் அமைதி திரும்ப நாட்டு மக்கள் ஒத்துழையுங்கள். குழந்தைகளின் கல்வி, அன்றாடங் காய்ச்சிகளின் வருமானம் என்று நிறைய பாதிப்புகளை தற்போது எனது கிராமம் சந்தித்து வருகிறது.
எனது தம்பி பூரண உடல் நலம் பெற அனைவரும் பிரார்த்தியுங்கள். நன்றி'
என்று முடித்துக் கொண்டார். மிகவும் கண்ணியமான பேட்டி.
இன்னா செய்த இந்துத்வ கும்பலை அவர் நாண நன்னயம் செய்துள்ள சர்தாஜ்ஜூக்கும் அவரது குடும்பத்துக்கும் இறைவன் மேலும் கண்ணியத்தை அதிகப்படுத்துவானாக! கொன்ற இந்துத்வ வெறியர்கள் இவரது பேட்டியை பார்த்து வெட்கித் தலைகுனிவார்களாக!
இறைவா! மனித மாமிசம் தின்னும் இந்த இந்துத்வ வெறிக் கும்பலிடமிருந்து எனது நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவாயாக!
தகவல் உதவி
NDTV
05-10-2015
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)